Mr and Mrs விஷ்ணு 73

4.8
(52)

பாகம் 73

இந்த விஷயம் கேள்விப்பட்டு ப்ரதாப் அமைதியாக தான் இருந்தான்.. தேவகி தான் “அய்யோ என்ன இது அப்ப என் பொண்ணோட வாழ்க்கை.. நான் போய் மறுபடியும் பேசி பார்க்கிறேன்” என கூற, பவித்ரா தடுத்து விட்டாள்.. 

“அம்மா வேண்டாம்.. நான் பார்த்திக்கிட்ட எதிர்பார்க்கிறது மன்னிப்பு மட்டும் தான்.. மறுபடியும் அவனோட சேர்ந்து வாழனுங்கிற எண்ணம் இல்லை.. அதை விட தகுதி இல்லை”.. 

“அவன் என் மேல்ல அன்பை கொட்டுனான்.. அதை புரிஞ்சிக்காமா  தூக்கி வீசிட்டேன்.. மறுபடியும் அவன்கிட்ட அதை எதிர்பார்க்கிற தகுதி எனக்கு இல்லை.. என்னால் அவன் நிறையவே கஷ்டப்பட்டுட்டான்.. இனி மேலாவது அவனுக்கு நல்ல அவனை புரிஞ்சிக்கிற வாழ்க்கை அமைஞ்சு  அவன் சந்தோஷமா இருக்கட்டும்.. அதை தடுக்காதீங்க” என்று சொல்லி விட்டாள்.. 

அது விஷ்ணு மூலமாக கல்யாணியை வந்து அடைந்து அவர் மூலமாக இவன் காதுக்கு வந்து சேர்ந்தது.. 

பார்த்தி இன்னோரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கட்டும் என்று சொன்னது வேறு இன்னும் கோவத்தை தூண்டியது.. 

அடுத்து என்ன செய்ய அவனுக்கு குழப்பமாக இருந்தது.. பவித்ரா மீது கோவம் இன்னும் அப்புடியே இருக்கின்றது.. அவளோடு திரும்ப சேரும் எண்ணம் இல்லை அதே வேளை அவள் இடத்தில் இன்னோரு பெண்ணா, அந்த  நினைப்பே கசந்தது.. அவனால் அது  முடியவே முடியாது.. 

 என்ன செய்ய என அன்றைய நாள் முழுவதும் வேலையில் கூட கவனம் செலுத்தாது அதே சிந்தனையில் இருந்தான்.. சாயங்காலம் எப்புடியாவது ஏதாவது செய்து அம்மா கை காலில் விழுந்து கெஞ்சியாவது பொண்ணு வீட்டிற்கு போக விடாமல் தடுக்க வேண்டும் என மணி 6 ஆனதும் அவசர அவசரமாக வீட்டிற்கு கிளம்பினான்.. 

காரில் வீட்டை நோக்கி வேகமாக சென்று கொண்டு இருந்தான்.. போகும் வழியில் சாலையின் ஓரம் ஒரு கார் நின்று இருந்தது.. புருவம் சுருக்கி காரை உற்று பார்த்தான்.. அது பவித்ராவுடைய காரே தான்..  

இங்கு ஏன் இவள் கார் நிற்கின்றது என்ற யோசனையோடு வண்டியிலிருந்து இறங்கி காரை பார்க்க, காருக்குள் ட்ரைவர் சீட்டில் தலைசாய்த்து கண்மூடி உட்கார்ந்து இருந்தாள்.. 

ஆள் அரவம் அற்ற பெரியதாக போக்குவரத்து அதிகம் இல்லாத  சாலை இது.. இங்கு கார் நிற்கின்றது என்றால் கண்டிப்பாக காரில் ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது..

கார் கண்ணாடியை பார்த்தி தட்ட, அதில் பதறியவள் படக்கென கண் விழித்து பார்த்தாள்.. அந்த பார்வையே சொன்னது வேறு யாரோவென பயந்து விட்டாள் என, பார்த்தி என்று அறிந்த பின்பு தான் நெஞ்சில் கை வைத்து நீவி ஆசுவாசப்படுத்தி கொண்டு கார் கண்ணாடியை இறக்கினாள்..  

“பார்த்தி கார் கார் கார்”… 

“ரிப்பேரா” பார்த்தி கேட்க..  ஆம் என தலை ஆட்டினாள்.. 

“வம்சிக்கோ வீட்டிற்கோ யாருக்காவது கால் பண்ணி வேற கார் எடுத்துட்டு வர சொல்ல வேண்டியது தானே, அதை விட்டுட்டு அறிவே இல்லாம நடு ரோட்டில் காரை போட்டுட்டு தூங்கிட்டு இருக்க” என கோவப்பட,

“மொபைல்ல சார்ஜ் இல்ல அதான்” என்றதும் அவளை பயங்கரமாக முறைத்தவன்

“வெளியே வரும் போது மொபைல் சார்ஜ் இருக்கா, காரில் எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிட்டு கிளம்பவே மாட்டியா, அன்னைக்கும் இப்புடி மொபைல்ல சார்ஜ் இல்லாம அந்த பார்ட்டிக்கு போனதோட விளைவு தான்..  இன்னைக்கு இரண்டு பேரும் இப்புடி நிற்கிறோம்” என அவளை திட்டி கொண்டே தன் மொபையிலிருந்து வம்சிக்கு அழைத்தான்… 

இரண்டு மூன்று முறை அழைத்தும் கூட அவன் அழைப்பை ஏற்கவில்லை.. 

ச்சே இவன் ஒருத்தன் என சலித்தான் பார்த்தி.. 

தனியே விட்டு செல்ல மனம் இல்லை.. அதனால் “என்னோட வா நான் ட்ராப் பண்றேன்” என்றான்..

அவள் அப்புடியே நிற்க,

“ஏய் இங்க பாரு வரதுன்னா சீக்கிரம் வா.. உன்ன கெஞ்சிட்டு எல்லாம் இருக்க முடியாது.. டைமாகுது, உனக்கே தெரியும் சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு  போகனும், அம்மாவும் ப்ரியாவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றான்  அவளை கஷ்டப்படுத்த வேண்டுமென்றே தான் சொன்னான்.. 

அவன் நினைத்த போலவே தான் அவளும் கலங்கிய கண்ணை கஷ்டப்பட்டு வெளிக்காட்டாமல் உள்ளடக்கியபடி “நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்” என்றாள் தழுதழுத்த குரலில்

“என்னோட வாழ்க்கையில்லே ஒன்னா வர விருப்பமில்லைன்னு சொன்னவ, வண்டியில் ஒன்னா வான்னு சொன்னா வரவா போற” பார்த்திபன் சொல்ல, 

அதன் பின்பு நிற்பாளா வேகமாக சென்று அவன் காரில்  ஏறி அமர்ந்து கொண்டாள் பவித்ரா.. 

பார்த்திபன் காரை  ஒட்டியபடி ஓரக்கண்ணால் அருகே அமர்ந்து இருந்தவளை பார்க்க, பவித்ராவோ தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.. 

இவ்வளவு நேரம் பேசும் போது கூட அவன் முகத்தை அவள் பார்க்கவில்லை… எங்கோ பார்த்தபடி தான் பதில் சொல்லி இருந்தாள்.. அவ்வளவு ஆகி போச்சா பார்த்திபனுக்கு கோவம் வந்தது..‌ 

ம்க்கும் குரலை செருமியவன் “பார்த்தி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லைன்னு சொன்னியாமே தாங்க்ஸ்” என்றான்.. 

அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,

“ஏன் சொல்றேன்னா, நீ அப்புடி சொல்லலாமா இருந்திருந்தா.. அங்க இருக்க என் தங்கச்சிக்கு பிரச்சினை தானே, அதான் தாங்க்ஸ்” என்றான் மறுபடியும் அவள் தன்னை வேற கல்யாணம் பண்ண சொல்லிய கோவத்தில்,

மேலும் “நீயும் இப்படியே இருக்காத பவித்ரா..  உனக்கு பிடிச்ச போல ஒரு பையனை பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ..  இல்ல்னா நான் வேணா பார்க்கட்டுமா.. ஏன்னா உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்கு தானே தெரியும்”.. 

“பார்த்தி ப்ளீஸ் இப்புடி பேசாத, எனக்கு கஷ்டமா இருக்கு.. நான் என்னைக்குமே உன்னை தவிர வேற யாரையும் யோசிச்சது இல்லை பார்த்தி,  உன் மேல் இருந்த கோவத்தில் தான் டீவோர்ஸ் வாங்குனேன்.. 

அந்த ஷ்யாம் பத்தி தெரியாம இருந்திருந்தாலுமே, நான் இன்னோரு கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன் பார்த்தி.. என்னால் அது முடியவே முடியாது.

 ப்ளீஸ் என்னை இந்த மாதிரி பேசி கஷ்டப்படுத்தாத” என அழுகையோடு சொல்லி விட்டு சீட்டில் சாய்ந்து கண்மூடி கொண்டாள்.. 

பார்த்திபனும் அதன் பின்பு எதுவும் பேசவில்லை.. 

கார் நின்றது.. பவித்ரா கண் திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.. பார்த்திபன் அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தான்.. 

பவித்ரா அவன் முகத்தை பார்த்தபடி அமர்ந்து இருக்க, “இறங்குற ஐடியா இல்லையா” பார்த்திபன் கேட்டான்.‌..

“பார்த்தி வீட்டுக்கு”… 

“இதுவும் வீடு தானே.. ஏன் இங்க வர விருப்பமில்லையா? விருப்பம் இல்லைன்னா சொல்லு உன் வீட்டில் கொண்டு போய் இறக்கிறேன்” என்றதும்… 

“இல்ல இல்ல விருப்பம் தான் விருப்பம் தான்” என்று வேகமாக கூறியவள், பின்பு “உண்மையாவே என்னை மன்னிச்சுட்டீங்களா பார்த்தி” என கேட்டாள்..

“மறந்துட்டேன்.. வேற என்ன பண்றது தலை எழுத்து,  என்னாலையும் உன்னை தாண்டி யோசிக்க முடியலை” என்றவன் காரிலிருந்து இறங்கி “வா” என அவளை அழைத்து கொண்டு  வீட்டுக்குள் செல்ல,

“டேய் பார்த்தி வர மாட்டேன்னனு நினைச்சேன்.. பரவாயில்லை வந்துட்டியே, சரி சரி நீயும் வா பொண்ணு வீட்டுக்கு போகலாம்” என்ற கல்யாணி, 

அவன் பின்னே வந்த பவித்ராவை பார்த்து, “என்ன பார்த்தி பொண்ணு வீட்டுக்கு போற நேரம் இந்த பொண்ணு வந்து இருக்கு, பிரச்சினை ஏதும் பண்ண வந்து இருக்கோ”, 

“பவித்ரா பவித்ரா எந்த பிரச்சனையும் பண்ணிடாதமா, இப்ப தான் உங்க இரண்டு பேருக்கும் நடுவில் எதுவுமில்லையே, பிரச்சினை பண்ணாமா வீட்டுக்கு போம்மா” 

“ம்மா ம்மா ரொம்ப பண்ணாதீங்க.. இதுக்காக, அவ இந்த வீட்டுக்கு வரனும் தானே இந்த பொண்ணு பாக்க போறேன் உறுதி பண்ண போறேங்கிற ட்ராமா” பார்த்திபன் இடுப்பில் கை வைத்து கல்யாணியை முறைத்தப்படி கேட்க,

கல்யாணியோ அய்யயோ கண்டுபிடிச்சிட்டானே அசடு வழிய நிற்க,

பவித்ராவோ அதிர்ந்து அப்புடியா என்பது போல் கல்யாணியை பார்க்க, ஆமா என இரண்டு கண் சிமிட்டியவர், எப்புடி என மருமகளிடம் சைகையால் கேட்க,

“ரொம்பபபபபபப சூப்பர்” என கோவமாக சொன்னான் பார்த்திபன்.. “இந்த ஐடியா யார் அவளோடது தானே”, தங்கச்சிக்காரி திட்டமாக தான் இருக்கும் என சரியாக கணித்து கேட்க,

“யாரோடதா இருந்தா என்னடா, அதால் நல்லது நடந்து இருக்கு தானே, அப்புறம் என்ன அதை விடுடா, நீ பர்ஸ்ட் பவித்ராவை அவங்க வீட்டில் விட்டுட்டு வா” என்றதும்,

“ஏ ஏ‌ ஏ”…‌பார்த்தி பவித்ரா இருவருமே ஒரு சேர கேட்டனர்… 

“ ஒரு நல்ல நாள் பார்த்து அதுக்கு அப்புறமா” கல்யாணி சொல்லி முடிக்கும் முன்பு, 

“இந்த நாளுக்கு என்ன குறை.. இதே நல்ல நாள் தான்” என்றான் பார்த்திபன்.. 

“இல்லடா மாப்பிள்ளை வீட்ல சொல்லாமா கொள்ளலாம இப்புடி கூட்டிட்டு”,

“நீங்க போன் பண்ணி சொல்லிடுங்கம்மா அவ்ளோ தான்” என்றவன்,

“நீ வா” என அவளை அழைத்து கொண்டு அறைக்கு சென்றான்…

“வச்சா குடுமி அடிச்சா மொட்டைங்கிற கதையா போச்சு இவனோட” கல்யாணி உதயகுமாரிடம் சலித்து கொள்ள,

“எதா இருந்தா என்ன, நல்லது தானே நடந்து இருக்கு அதில் உனக்கு சந்தோஷம் தானே” 

“ரொம்ப சந்தோஷம்” என்றார் கல்யாணி..  

அறைக்குள் வந்த பார்த்தி குளிக்க பாத்ரூம் சென்று விட, பவித்ராவால் சாதரணமாக நார்மலாக அந்த அறையில் இருக்க முடியவில்லை..

அவள் வாழ்ந்த அறை தான்.. பழைய இனிமையான நினைவுகளோடு சேர்ந்தே கசப்பான உண்மைகளும் வந்து போனது.. அந்த குற்ற உணர்வில் அவள் ஒரு வித சங்கடத்தோடு அமர்ந்து இருக்க,

பாத்ரூமிலிருந்து வெளி வந்த அவளை பார்த்த பார்த்திபனோ,  “பவி ஏன் இப்புடி இருக்க, நார்மலா எப்பவும் போலவே இரு”,

“இல்ல பார்த்தி நான் உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்ல சாரி” என்றவள் அருகே வந்து உதட்டின் மீது விரல் வைத்து பேசாதே என தலை அசைத்தவன்,

“பழைசை எதுவும் பேசாத, மறந்திடுவோம், நம்ம லவ் பண்ண நாட்களை மட்டும் நியாபகத்தில் வச்சுக்கோ.. இடையில் கல்யாணமான அந்த ஒரு வருஷ நியாபகம் நமக்கு வேணாம்.. அதை பத்தியே பேச கூடாது.. ஏன் நினைக்கவே நினைக்காது” என்றான்..  

“இல்ல பார்த்தி உன்னை புரிஞ்சிக்காமா நான் நிறையவே த”…. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள் முற்று பெறாதாவாறு அவள் இதழை தன் வசப்படுத்தி இருந்தான் பார்த்திபன்.. 

இத்தனை நாள் பிரிவு, வலி, கோவம், ஆதங்கம் அனைத்துக்குமான மருந்தாக, இனி தொடங்க போகும் புது வாழ்க்கைக்கான அச்சாரமாக நீண்ட நெடிய  முத்தம்.. ஆழமாக அழுத்தமாக முத்தமிட்டு கொண்டே மாராப்பில் கை வைக்க,

அதில் உணர்பெற்று அவனிடமிருந்து விலகினாள் பவித்ரா.. 

“என்னடி ஆச்சு”,

“பார்த்தி நம்ம இப்ப சட்டப்படி புருஷன் பொண்டாட்டி இல்ல, இப்ப இது எல்லாம் பண்ணுனா இல்லீகல் அஃபர்ல” சேருமே,

“பரவாயில்லைடி என்னால் கண்ட்ரோல்லா இருக்க முடியாது..‌ இன்னைக்கு ஒரு நாள் இல்லீகல் அஃபர் வச்சிக்கலாம்.. நாளைக்கு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணிட்டு அப்புறம் லீகல் அஃபர் வச்சிக்கலாம்” என்றான்.. ,

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றவளோடு கட்டிலில் சரிந்து இத்தனை நாள் ஏக்கத்தை அவளிடம் தீர்த்து கொண்டான்.. 

சொன்னது போலவே மறுநாள் திருமணத்தை பதிவு செய்து கொண்டான்.. அத்தோடு கல்யாணி புது தாலிக்கொடி வாங்கி இருக்க.. இரு வீட்டினர் முன்பும் வீட்டில் வைத்தே அதை அவள் கழுத்திலும் அணிவித்து விட்டான்… 

தேவகிக்கு வெங்கடேஷ் பாட்டி அனைவருக்கும் இப்போதும் தான் நிம்மதியாக இருந்தது… 

 ப்ரதாப்புக்கும் மகிழ்ச்சியே, ஆனால் எப்போதும் போல அதை வெளிக்காட்டாது அமைதியாக இருந்தான்.‌ 

விஷ்ணு அவளை சொல்லாவா வேண்டும்.. அவளும் வம்சியும் பார்த்தி பவித்ரா இருவரையும் கேலி கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.. 

“வம்சி பார்த்தீங்களா என் திட்டத்தோடு பலனை, உங்களாலையும் உங்க அண்ணய்யாவாலையும் முடியாததை நான் பண்ணி காட்டிட்டேன்”.. 

“இந்த திட்டத்தை சொல்லும் போது உங்க அண்ணா மட்டமான கேவலமான திட்டம்ன்னு சொன்னார்.. நீங்க கூட என்னை நம்பலையே, பார்த்தீங்களா என் திட்டத்தோட மகிமையை” பார்த்திபன் பவித்ராவை சுட்டி காட்டி கணவனை எப்போதும் போல்  சீண்டினாள் விஷ்ணு.. 

அவனோ எப்போதும் போல் அவளை வெளியே முறைத்தாலும், மனதிற்குள் மெச்சி கொண்டான்.. அவள் இப்புடி பண்ணலாம் என சொல்லும் போது இது என்ன முட்டாள் தனமா திட்டம் எல்லாம் போடுறது என அவன் நினைத்தாலும், அதனால் தங்கை வாழ்க்கை சீக்கிரம் சரியாகி இருக்கின்றதே,மனைவியை மனதிற்குள் மெச்சி கொண்டான்.. 

அதோடு ஐந்து மாத மேடிட்ட வயிற்றோடு, அதனால் கன்னம் உப்பி உடம்பு கொஞ்சம் வைத்து, கர்ப்பமான பொலிவு என முன்பை விட அழகாக இருந்தவளை ரசித்தும் இல்லை சைட் அடித்தும் கொண்டான்.. 

இன்னும் அவன் அவளிடம் பேசுவதில்லை.. அவளும் அவனை சீண்டுவதை நிறுத்தவில்லை.. அவர்கள் வாழ்க்கை அப்படியே செல்கின்றது.. 

“வம்சி இனி மேலாவது நீங்களும் உங்க அண்ணாவும் என் கிட்ட பார்த்து நடந்துக்கோங்க”.. 

“அச்சோ மகா பிரபு உங்க மகிமையை தெரியாம சிறுவர்கள் பிழையா பேசிட்டோம் மன்னச்சிடுங்க” என வம்சி கை எடுத்து கும்பிட,

“ஓகே ஓகே இந்த ஒரு டைம் சின்ன பசங்க உங்களை மன்னிச்சு விடுறேன்” என்றதும் ப்ரதாப் இன்னும் முறைக்க,

“அதில் பயந்தவள் இங்க அனல் காத்து அதிகமா அடிக்குது வாங்க வம்சி நாமா அந்த பக்கமா போய் பேசிட்டு இருக்கலாம்” என நகர, ப்ரதாப் இதழுக்குள் சிரித்து கொண்டான்.. 

அவளோடு வந்த வம்சியும் “மகா பிரபு மத்தவங்க வாழ்க்கையில் எல்லாம் பயங்கரமா திட்டம் போட்டு விளக்கு ஏத்தி வைக்கிறீங்க.. உங்க வாழ்க்கை இப்புடி டல் அடிக்குதே” என சிரித்து கேலி செய்ய,

அவனை முறைத்தவள் அ”துக்கும் ஒரு பயங்கரமான ப்ளான் வச்சு இருக்கேன் வம்சி.. நாளைக்கே அதை செயல்படுத்துறேன்.. அதுக்கு அப்புறம் பாருங்க உங்க அண்ணா மாலா மாலான்னு ச்சே விஷ்ணு விஷ்ணுன்னு என் பின்னாடி சுத்த போறார் என்றார்.. 

“ஆல்ரெடி அப்பபுடி தானே சுத்துறார்.. பேசுறது மட்டும் தான் இல்ல.. மத்தபடி விஷ்ணு விஷ்ணு தான் அவர் ஜெப மந்திரம்” என வம்சி சொல்லி சிரிக்க, விஷ்ணுவும் சிரித்து கொண்டாள்..

சொன்னது போலவே அடுத்த நாள் அவள் திட்டத்தை செயல்படுத்தினாள்.. அதில் ப்ரதாப் அவளிடம் பேசினானா? இல்லை அதனால் மீண்டும் அவனின் கோவம் அதிகமானதா? 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 52

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!