அவனை நீண்ட நேரம் காக்க வைக்காது அவனுடைய காரில் ஏறிக் கொண்டவளுக்கு அவன் மீது அத்தனை கோபமாக இருந்தது.
ஒரு மனிதனுக்கு இப்படி அளவற்ற கோபம் கூடாது அல்லவா..?
என்னதான் பிடிக்காது என்றாலும் உதவி செய்தவனிடம் ஒற்றை வார்த்தையில் நன்றி கூறினால் குறைந்தா போய் விடுவான்..?
நன்றிதான் கூறவில்லை பணத்தையாவது கொடுத்து விட்டுச் சென்றிருக்கலாமே.
அவனுக்குத்தானே மருத்துவம் பார்க்கப்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு சுயநலவாதியை அவள் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் கண்டதில்லை.
இவனைக் காப்பாற்றுவதற்கென கௌதமை அழைத்து அவனையும் பிரச்சனையில் சிக்க வைத்ததுதான் மிச்சம் என எரிச்சலோடு எண்ணிக் கொண்டவள் எதுவும் பேசாது வீதியை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டிற்கு செல்லும் வரை அவள் அவனுடைய முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
காரில் இருந்து இறங்கி அறைக்குள் நுழைந்தவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டான் விநாயக்.
“நான் எனக்கு பீட்சா ஆர்டர் பண்ணப் போறேன்.. உனக்கு என்ன வேணும்..?” என அவன் கேட்க,
அவளோ பதில் ஏதும் கூறாமல் அமைதியாக நின்றாள்.
“ஏய் இப்போ எதுக்கு உன்னோட முகத்தை முழு நீளத்துக்கு தூக்கி வெச்சுக்கிட்டு இருக்க..? என்ன பிரச்சனை உனக்கு..?” என அதட்டலாகக் கேட்டான் அவன்.
“ஒன்னும் இல்ல..” எனக் கூறிவிட்டு விலகி நடக்க முயன்றவளின் கரத்தை இன்னும் அழுத்தமாகப் பிடித்து தன்னருகே இழுத்தவன்,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போ..” என்றான்.
“உங்ககிட்ட நான் எப்படி சார் பேச முடியும்..? நீங்க பெரிய ஆளு.. நாங்க அப்படி இல்லையே..” என்றாள் அவள்.
அவளுடைய வார்த்தைகளில் அவனுடைய விழிகள் கூர்மையாகி அவளைத் துளைத்தன.
“இதோ பார் பேபி.. என்கிட்ட இப்போ பொறுமை கொஞ்சம் கூட இல்ல.. நீ எது பேசுறதா இருந்தாலும் ஸ்ட்ரைட்டா பேசு.. இப்படி சுத்தி வளைச்சுப் பேசி என்னக் கோபப்படுத்தாத..” எச்சரித்தான் அவன்.
“ஐயோ மன்னிச்சிடுங்க சார்… உங்ககிட்ட பேசி உங்கள கோபப்படுத்தி நீங்க மறுபடியும் என்ன பழி வாங்குறேன்னு கிளம்பிட்டா நான் என்ன பண்றது..? இருக்கிற ஒரு மாசத்துக்கு நான் என் வேலையை பார்த்துட்டு அமைதியா இருந்துட்டுப் போயிடுறேன்..” என்றாள் அவள்.
“இப்போ என்ன ஆச்சுன்னு நீ இப்படி பிஹேவ் பண்ற…?”
“என்ன ஆகல.. உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னுதானே கௌதம் ஹெல்ப் பண்ண வந்தான். அவன்கிட்ட ஒரு தேங்க்ஸ் சொல்லலனா கூட பரவால்ல.. ஆனா பில்ல கூட பே பண்ணாம ஹெல்ப் பண்ண பாவத்துக்கு அங்க அவன சங்கடத்தோட நிக்க வச்சுட்டு வந்துட்டீங்களே… நீங்க எல்லாம் என்ன மனுஷன்..? நன்றி உணர்வுன்னா என்னன்னு தெரியுமா..?”
“வாய மூடு தூரி..” எனக் கர்ஜித்தான் அவன்.
இவ்வளவு நேரமும் அவள் தன்னை எதிர்த்து சண்டை போடுவது கௌதமனுக்காக என்பது தெரிந்ததும் அவனுடைய கோபத்தீயில் பெட்ரோலை ஊற்றியது போலத்தான் இருந்தது.
ஆத்திரத்தோடு எழுந்து அவனுடைய கரங்களை பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டவன் “அந்த டேஷ்க்காக என்கிட்ட சண்டை போடுறியா..?” எனக் கேட்டுவிட அதிர்ந்து போனாள் அவள்.
அவளுடைய நண்பன் அவனுக்கு டேஷ்ஷா..?
கோபம் கோபமாக வந்தது.
“வேணாம் விநாயக் நீங்க என்னப் பத்தி என்ன வேணும்னாலும் சொல்லுங்க… அவனப் பத்தி பேசாதீங்க… அவனப் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.. பணத்தைக் கொடுத்து நீங்க என்ன மட்டும்தான் அடிமையா வாங்கி இருக்கீங்க.. என்ன எவ்வளவு வேணாலும் கஷ்டப்படுத்திக்கோங்க.. அவனை விட்டுருங்க..”
அவள் அவனுக்காகப் பேசப் பேச அவனுக்கோ நெருப்பின் மீது நிற்கும் நிலைதான்.
“அடிமையா..? அடிமைன்னா உனக்கு என்னனு தெரியுமா..? அடிமைய எப்படி நடத்துவாங்கன்னு தெரியுமா..? நான் இதுவரைக்கும் உன்ன அப்படி நடத்தவே இல்லையே.. இங்கே இருக்க எல்லாரும் எனக்கு தர மரியாதையை உனக்கும் தர்றாங்க… இங்கே நீ எந்த வேலையும் பாக்குறது கிடையாது.. உனக்கு தேவையான எல்லாமே உன்னத் தேடி வரும்..
நான் உன்ன இதுவரைக்கும் உடல் ரீதியா துன்புறுத்தினது கூட இல்லை..” என அவன் கூறிக் கொண்டே போக கசப்பாக சிரித்தாள் அவள்.
“உங்க வீட்ல வேலை பாக்குறவங்க என்ன மரியாதையா பாக்கல… உங்களோட வப்பாட்டியாதான் பாத்தாங்க.. அதுக்கு கிடைச்ச மரியாதைதான் அது.. நீங்க என்ன உடல் ரீதியா அடிச்சு துன்புறுத்தவே இல்லதான்.. ஒத்துக்கிறேன்… ஆனா மனரீதியா நான் நொறுங்கிப் போயிட்டேன்..
எந்த உரிமையும் இல்லாம என்னை நீங்க ஹக் பண்ணும் போதும் கிஸ் பண்ணும் போதும் ட்ரஸ் இல்லாம பார்க்கும்போது எவ்வளவு துடிச்சு போறேன்னு உங்களுக்குத் தெரியுமா..?
நீங்க எனக்கு இவ்வளவு பண்ணியும் நான் எதுக்காக நேத்து உங்களுக்காக துடிச்சேன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியல.. என்ன நினைச்சா எனக்கு வெறுப்பா இருக்கு..” என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு அவன் முன்பு நில்லாமல் விலகிச் செல்ல அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டான் அவன்.
“பேபி நானும் தப்பு பண்ணி இருக்கேன்.. நீயும் தப்பு பண்ணி இருக்க.. அதை சரி பண்ணிடலாம்..”
“இனி சரி பண்ணி என்ன ஆகப்போகுது..?” என்றவள் விம்மி விட்டாள்.
அழுகை பெருகியது.
அவளுடைய கண்ணீரைக் கண்டதும் அவ்வளவு நேரமும் இருந்த கோபம் முழுதாக கரைந்து விட அவளுடைய கன்னங்களைத் தாங்கிக் கொண்டவன்,
“எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு தூரி… ட்ரஸ்ட் மீ.. எல்லாத்தையும் நான் சரி பண்ணுறேன்..”
“எப்படி பண்ணுவீங்க..? இந்த உலகம் முழுக்க என்னப் பத்தி இப்போ எப்படி நினைக்குதுன்னு உங்களுக்குத் தெரியும்ல.. பணத்துக்காக உங்க கூட இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல இருக்கேனுதான் இப்போ வரைக்கும் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க..
நான் கஷ்டப்பட்டவ தான்.. ஆனா இதுவரைக்கும் என் மேல சின்ன கறை கூட விழ நான் விட்டதில்லை.. ஆனா இப்போ சகதில புரண்ட மாதிரி இருக்கு.. இனி என்ன பார்க்கிறவன் எல்லாம் அவனுக்கும் நான் வேணும்னு கேட்க மாட்டான்னு என்ன நிச்சயம்..?
இங்கிருந்து போனதுக்கு அப்புறமா அந்த சேகர் கூட உங்களோட கோட்டோ முடிஞ்சா நான் அவளை வச்சுக்கவான்னு உங்க கிட்டயே கேட்பான்.. அதுக்கு என்ன சொல்லுவீங்க..?”
“*****தா அவனைக் கொன்னுருவேன்..” கர்ஜித்தான் அவன்.
தன் விழிகளை அழுத்தித் துடைத்துக் கொண்டவள்,
“அதப் பத்தி எல்லாம் உங்களுக்கு எங்க கவலை இருக்கப் போகுது..? உங்கள பொறுத்த வரைக்கும் என்ன பழி வாங்கணும்.. நான் அசிங்கப்படணும்… நான் வருத்தப்படணும்.. இதெல்லாம் நடந்தாலே உங்களுக்கு திருப்தி.. அதானே..? நல்லா சந்தோஷப்பட்டுக்கோங்க.. நீங்க நினைச்ச எல்லாமே நடந்துடுச்சு..”
“ஸ்டாப் இட்.. இப்போ உனக்கு இதுதானா பிரச்சினை..? இத நான் பாத்துக்குறேன்.. நாம ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்..” என அவன் கூற இவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
திகைத்துப் போனாள் செந்தூரி.
“என்னோட கீப்னு சொன்னாதானே உன் கிட்ட வாலாட்டத் தோணும்..? என்னோட வைஃப்னு சொன்னா எவனும் உன்கிட்ட வர மாட்டான்ல..? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. நான் எல்லாத்தையும் சரி பண்றேன்…” என்றான் அவன்.
“இது எப்படி இருக்கு தெரியுமா..? ரேப் பண்ண பொறுக்கியையே அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற மாதிரி இருக்கு..” என அவள் கூறி முடித்த அடுத்த நொடி அவனுடைய ஒற்றைக்கரம் உயர்ந்து வேகமாக அவளுக்கு அருகே இருந்த சுவற்றில் குத்த ஸ்தம்பித்து போனாள் அவள்.
இரண்டு இன்ச் தள்ளி அவன் குத்தியிருந்தால் கூட அவளுடைய முகம் நிச்சயமாக சுவற்றோடு புதைந்து போயிருக்கும்.
நடுங்கிப் போய்விட்டாள் அவள்.
பயத்தில் மேலும் கண்ணீர் வடிந்தது.
சுவற்றில் குத்திய தன்னுடைய கரத்தை அவன் எடுத்ததும் அந்தக் கரத்திலோ குபுகுபுவென இரத்தம் வரத் தொடங்கியது.
“ஐயோ, நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா..? இப்போ தானே மருந்து கட்டிட்டு வந்தோம்… அதுக்குள்ள இப்படி பண்றீங்களே…” எனப் பதறியவள் அவனுடைய அடிபட்ட கரத்தை பிடிக்க முயற்சிக்க,
“ஏய் தொடாதடி.. உன்னால தான் என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுல்ல… ரேப் பண்ணவனும் நானும் ஒன்னுதானே..?” என்றவன் கரத்தை உதற அவனுடைய கரத்தில் இரத்தம் அதிகமாக வழியத் தொடங்கியது.
அவளுக்கு உள்ளமெல்லாம் படபடத்துப் போனது.
அந்த நொடி அவனுடைய உதிரப்போக்கை நிறுத்தி விட வேண்டும் எனத் துடித்தவள் வேகமாக அவனுடைய கரத்தைப் பற்றி கட்டி இருந்த கட்டை அவிழ்க்கத் தொடங்க
“நீ ஒரு மண்ணும் பண்ணிக் கிழிக்க வேணாம்.. இங்க இருந்து போடி..” என்றான் அவன்.
“ரொ… ரொம்ப பிளீடிங் ஆகுது….” அழுது விட்டாள் அவள்.
அவள் தனக்காக கண்ணீர் வடிக்கின்றாள் என்பதை உணர்ந்தவனின் கோபம் சற்று மட்டப்பட்டது.
அவனுடைய கரத்தைச் சுற்றிக் கட்டி இருந்த வெண்ணிற பேண்டேஜ் முழுவதும் இரத்தத்தால் தோய்ந்து போயிருக்க வேகமாக அந்த பேண்டேஜை அவனுடைய கரத்திலிருந்து முழுவதுமாக அகற்றியவள் அவனுடைய காயத்தை பார்த்து பயந்து போனாள்.
அவனுடைய பிளவு பட்ட காயம் இன்னும் பெரிதாக இருக்க இவளுக்கோ மனம் பொறுக்கவில்லை.
“கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுமையே கிடையாதா..? உங்களால அமைதியாக இருக்கவே முடியாதா..? அப்படி என்ன கோபம்..? தன்னைத்தானே காயப்படுத்துறவன் சைக்கோ.. நீங்க என்ன சைக்கோவா..?” எனக் கோபத்தில் தன்னை மீறி அவள் அவனைத் திட்டிவிட,
இம்முறை அவள் மீது அவனுக்கு கோபம் பிறக்கவில்லை.
அவளுடைய கோபம் கண்ணீர் அனைத்தும் அவனுக்காக என்பதை புரிந்து கொண்டவன் அவளுடைய மென் கரங்களில் தன்னுடைய கரத்தை வைத்து விட்டு அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
“காயத்தை வாஷ் பண்ணனும்.. என்கூட வாங்க..” என்றவள் அவனை இழுக்காத குறையாக குளியல் அறைக்குள் அழைத்துச் செல்ல அவளுடைய பலமற்ற இழுப்புக்கு ஏற்றவாறு அவளுடன் சென்றான் அவன்.
காயத்தை நன்றாக நீரில் கழுவியவள் அவனுடைய சுருங்கிய முகத்தைக் கண்டதும் வலிக்குதா என கவலை பொங்கக் கேட்டாள்.
வேண்டுமென்றே ஆம் என்றான் அவன்.
அவனுடைய காயத்தை தன்னுடைய உதடுகளுக்கு அருகே கொண்டு வந்து உதடுகளை குவித்து காற்றை ஊதியவள் “ப்ளீஸ் இனி இப்படி பண்ணாதீங்க…” என வேதனையுடன் கூற சம்மதமாக ஆடியது அவனுடைய தலை.
அவனை வெளியே அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்தவள்,
முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து அவளுக்குத் தெரிந்தவாறு மருந்து போடத் தொடங்கி விட தன்னுடைய கரத்தை அவளிடம் ஒப்படைத்து விட்டு தன்னருகே அமர்ந்திருந்தவளின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான் அவன்.
அவளோ ஒருகணம் அசைவற்றுப் போனாள்.
“ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா நான் என்னோட நீரும்மாவ உன்கிட்ட உணர்றேன்..” என்றான் அவன்.
Interesting epiiii ❤️❤️❤️❤️❤️