உயிராய் உணர்வில் உறைந்தவளே…(5)

4.8
(5)

என்னடி ஏன் அப்பா பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொன்ன என்ற குந்தவையிடம் எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சுருக்கு என்றாள் சங்கவி. வாவ் சூப்பர் யாருடி அது என்ற குந்தவையிடம் எல்லாம் உன் ஆளோட அசிஸ்டென்ட் அந்த கார்முகிலன் தான் என்றாள் சங்கவி. அந்த ஆளா உங்களுக்குள்ள எப்படி லவ் செட் ஆச்சு என்றவளிடம் இன்னும் செட் ஆகலை சீக்கிரமே செட் ஆகிரும் என்றாள் சங்கவி. அடிப்பாவி ஒன்சைடு லவ்வா என்ற குந்தவையிடம் அந்த ஆளுக்கும் என் மேல ஒரு க்ரஸ் இருக்கு பட் இன்னும் சொல்லலை என்றாள்  சங்கவி. அவளைப்  பார்த்து நல்லாவே அப்டேட் ஆகிட்டிங்க வக்கீல் மேடம் என்றாள் குந்தவை. நான் தான் இன்னமும் இப்படியே இருக்கேன் போல என்றவளிடம் நீயும் எதாவது ட்ரை பண்ணுக்கா அத்தானை எப்படியாவது இம்ப்ரஸ் பண்ணு என்றாள் சங்கவி. உன் அத்தானை இம்ப்ரஸ் வாய்ப்பில்லை செல்லம் அந்த மனுசன் காக்கிக்கு மட்டும் தான் கஞ்சி போட்டு அயன் பண்ணுறாரா இல்லை வாய்க்கு உள்ளே இரண்டு டம்ளர் ஊத்திக்கிறாரானு தெரியலை. எப்போ பாரு பச்சை மிளகாய் தின்னது மாதிரி வெரப்பா திரியுறாரு என்ற குந்தவையைப் பார்த்து சிரித்தாள் சங்கவி. அக்கா பாவம் அத்தான் உன்னை எப்படித் தான் சமாளிச்சாரோ என்ற சங்கவியை தேவகி அழைக்கவும் கிளம்பினாள்.

 

குந்தவை தன் மனதில் தங்கை கூறிய வார்த்தையை சிந்தித்து பார்த்தாள். ஆமாம் என்னை எப்படி எல்லாம் சமாளிச்சாரு என்றவள் தன் கணவனின் போட்டோவை எடுத்துப் பார்த்தாள். ஐயம் சாரி எழில் நான் உங்களை சரியாவே புரிஞ்சுக்கலை அதான் இப்போ கஷ்டப் படுறேன் என்று நினைத்து விட்டு எழுந்தவளின் போன் இசைத்தது. அதை எடுத்துப் பேசிய பிறகு அவள் எப்போதும் போல லேப்டாப்பிலே மூழ்கி விட்டாள்.

 

உதிரன் மனம், மூளை இரண்டுமே அந்த மர்டர் கேஸில் மூழ்கிப் போய் கிடந்தது. அவன் சக்கரவர்த்தியின் அறையில் கண்டெடுத்த பெண்களின் அந்தரங்க படங்கள் அடங்கிய  புத்தகத்தில் மூன்று பெண்களின் புகைப்படம் இருந்தது. பள்ளி மாணவிகளின் புகைப்படம். அதனுடன் இரண்டு மாணவர்களின் புகைப்படமும் இருந்தது. யாரு இவங்க இவங்களுக்கும் , சக்கரவர்த்திக்கும் என்ன சம்மந்தம் என்று நினைத்த உதிரன் இவர்களைப் பற்றி ஒருவேளை குந்தவைக்கு தெரிந்திருக்கலாமே என்று நினைத்தவன் அவளுக்கு போன் செய்ய நினைத்தான். ஆனால் அவளிடம் சென்று உதவி கேட்க அவனது ஈகோ தடுத்தது. சக்கரவர்த்தி வீட்டில் இப்படி ஒரு புத்தகம் இருப்பதை பள்ளியில் வேறு யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால்  அவனைப் பற்றி நல்ல விதமாக கூறிய ஆசிரியர்கள் வழக்கை திசை திருப்ப போலீஸ் சதி செய்கிறது என்று கூறி விட்டாள் என்ன செய்வது வேறு வழி இல்லை குந்தவைக்கு போன் செய்தான்.

 

குந்தவை  தன்னுடைய டியூசன் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள். சுதர்சன் என்ன பண்ணிட்டு இருக்க என்ற குந்தவையிடம் அக்கா நான் அமைதியா பாடம் தான் கவனிச்சேன் என்றான். என்ன சௌமியா அவன் பாடம் தான் கவனிச்சானா என்ற குந்தவையிடம் அக்கா என்று அவள் இழுக்க குந்தவை அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு சரி உட்காருங்க என்று விட்டு பாடத்தை தொடர்ந்தாள்.

 

டார்லிங்  என்ற ரேயானிடம் என்னடா வந்தியத்தேவா என்றாள் குந்தவை. உன் ஆளு காக்கி போன் பண்றாரு என்று போனை அவளிடம் நீட்டிட அதை வாங்கிக் கொண்ட குந்தவை ஹலோ எழில் என்றிட உன் கிட்ட கொஞ்சம் அந்த மர்டர் கேஸ் பத்தி விசாரிக்கனும் என்றான். அதைப் பத்தியா அதைப் பத்தி விசாரிக்க என்ன இருக்கு நான் தான் எனக்கு தெரிஞ்ச எல்லாமே சொல்லிட்டேனே என்றாள் குந்தவை. இல்லை உன் கிட்ட நான் பேசியே ஆகனும் இப்பவே உன் வீட்டு பக்கத்தில் உள்ள அந்த காபி ஷாப்க்கு வா என்றவன் போனை வைத்தான். இந்த ஆளை என்று நினைத்தவள் சுதர்சன் என்று அழைக்க வந்தான் சுதர்சன்.

 

நீ இவங்களை பார்த்துக்கோ. நான் வெளியில் கிளம்புறேன் அதனால டெஸ்ட் பேப்பர் எல்லாம் கொடுத்துட்டு எல்லோரும் போகட்டும் நீங்க ஐந்து பேரும் இங்கேயே இருங்க என்று கூறி விட்டு கிளம்பினாள். சரிங்க அக்கா என்ற சுதர்சன் தன் நண்பர்களின் அருகில் சென்றான்.

 

என்ன அக்கா பயங்கரமா ரெடியாகுற என்ற சங்கவியிடம் எழில் என்னை காபி ஷாப்க்கு வரச் சொன்னாரு என்றாள் குந்தவை. வாவ் சூப்பர் என்ற சங்கவியிடம் அந்த மர்டர் கேஸ் பத்தி விசாரிக்கவாம் என்ற குந்தவை கிளம்பிட சங்கவிக்கு தான் புஸ் என்று ஆனது.

 

எழில் என்ற குந்தவையைப் பார்த்தவன் உட்காரு என்றான். என்ன சாப்பிடுற என்ற உதிரனிடம் கோல்டுகாபி என்றாள். உனக்கு தான் அது பிடிக்காதே என்றவனிடம் என் புருசனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றவளை கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டு கோல்டுகாபி ஆர்டர் செய்தான். அவளிடம்   இந்த போட்டோவில் இருக்கிறது யாருனு தெரியுமா என்று அந்த ஐந்து போட்டோவையும் நீட்டினான். அந்த போட்டோக்களைப் பார்த்த குந்தவையின் கண்கள் ஒரு நொடி உறைந்து மீண்டதை உதிரன் கவனிக்கத் தவறிவிட்டான் அந்த நேரம் ஆர்டர் செய்த கோல்டுகாபி வந்ததால் அவன் திரும்பினான்.

 

கலங்கிய தன் கண்களை கட்டுப் படித்திக் கொண்டவள் இவங்கள் போட்டோ எப்படி உங்க கிட்ட என்றாள் குந்தவை. இவங்களை உனக்கு தெரியுமா என்றான் உதிரன். தெரியும் என்னோட ஸ்டூடண்ட்ஸ் ஐந்து பேருமே ரொம்ப திறமையான ஸ்டூடண்ட்ஸ் சிலம்பம் சுத்துறதில் எக்ஸ்பர்ட் என்ற குந்தவை என் கிட்ட சிலம்பம் கத்துகிட்டதிலே பெஸ்ட் இவங்க ஐந்து பேர் தான். யுவராணி, ருத்ரன், கபிலன், மீனாட்சி, சௌதாமினி என்றாள் குந்தவை. ஓஓ அப்படியா அப்போ இவங்களும் உன் ஷ்கூல்ல தான் படிக்கிறாங்களா என்ற உதிரனிடம் இல்லை இவங்க ஐந்து பேரும் காணாமல் போயிட்டாங்க. எங்கே போனாங்கனே தெரியலை எக்‌ஸாம் லீவுக்கு ஹாஸ்டல் வெக்கேட் பண்ணி போனவங்க தான் திரும்பி வரவே இல்லை வீட்டுக்கும் போகலையாம் என்றாள் குந்தவை.

 

வாட் காணாமல் போயிட்டாங்களா என்ன சொல்ற குந்தவி என்றவன் சாரி குந்தவை என்றான். கம்ப்ளையன்ட் கொடுத்திங்களா என்றவனிடம் அவங்க பேரண்ட்ஸ் கஷ்டப்படுறவங்க இவங்க ஐந்து பேருமே ஸ்காலர்சிப்ல இந்த ஸ்கூல்ல ஜாயின்ட் பண்ணுனவங்க அதனால் பசங்க மிஸ் ஆனது வெளியில் தெரிந்தால் ஸ்கூலோட ரெபிட்டேசன் குறைந்து போயிரும்னு பணத்தை கொடுத்து அவங்களை அடக்கிட்டான் ஸ்கூலோட கரஸ்பாண்டன்ட் விமலனாதித்யன் என்றாள்  குந்தவை.

 

என்ன சொல்ற குந்தவை இந்த மர்டர் கேஸ் பத்தி விசாரிக்க வந்தால் நீ வேற புதுக் கதை சொல்ற என்றான் உதிரன். எழில் இங்கே கல்வி பெரிய வியாபாரம். உங்களுக்கு புரியாது. நீங்க வந்த கேஸ் பத்தி மட்டும் விசாரிங்க இந்த பசங்க கேஸ் திரும்ப எடுத்தால் விமலேஷ் பெரிய குடைச்சல் கொடுப்பான்னு நினைக்கிறேன் என்ற குந்தவையிடம் உன்கிட்ட கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு என்னை இது செய்யாதே அது செய்யாதேனு சொல்லுற உரிமை உனக்கு கிடையாது என்ற உதிரன் தாங்க்ஸ் உன்கிட்ட பேசியதில் எனக்கு இன்னும் கொஞ்சம் தகவல்  கிடைச்சுருக்கு என்று கூறி விட்டு கிளம்பினான்.

 

உங்க காரியம் முடிஞ்சதும் கிளம்புறிங்களா எழில் என்றவளிடம் நான் உன்னை வரச் சொன்னதே இந்த கேஸ் பத்தி பேசத் தானே என்றவன் கிளம்பிட அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டவள்

 

வாழ்க்கை நாடகமா….

என் பொறப்பு

பொய் கணக்கா….

தினந்தோறும்

வெறும் கனவா….

என் விதியை எழுதையிலே

அந்த சாமியும் தூங்கியதோ…

 

என்று நினைத்துக் கொண்டு வெளியே சென்றாள். அவள் சென்ற நேரம் உதிரன் போன் பேசிக்கொண்டே சாலையைக் கடந்த நேரம் அவனை மோதுவது போல ஒரு கார் வந்தது. அதை அவன் கவனிக்கவில்லை ஆனால் குந்தவை பார்த்தவள் எழில் என்று கத்திக் கொண்டே ஓடிச் சென்றவள் அவனைப் பிடித்து தள்ள அவனை இடிக்க வந்த  வாகனம் அவளை இடித்துச் சென்றது.

 

அவள் தள்ளி விட்டதில் கீழே விழுந்தவன் எழுந்து திரும்பி பார்க்க இரத்த வெள்ளத்தில் கிடந்தவளைக் கண்டு அவனது மனம் பதபதைத்தது. குந்தவி என்றவன் அவளை தன் மடியில் கிடத்தி என்னைப் பாருடி என்று அவளது கன்னம் தட்டினான் குந்தவி குந்தவி என்று அவன் கதறிட எழில் என்று கஷ்டப்பட்டு பேசியவள் ஐ லவ் யூ அன்ட் ஐ யம் வெரி ஸாரி எழில் நான் கோபத்தில் தான் அப்படி பண்ணுனேன் என்றவளிடம் பேசாதே குந்தவி என்றவன் அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் அவளை கிடத்தி அவளுடன் மருத்துவமனைக்கு சென்றான்.

 

இருவரும் ஒரே கலரில் உடை அணிந்திருந்தனர். அவள் அவனுக்கு பிடித்த நீல நிறத்தில் உள்ள அவன் அவளுக்காக வாங்கிக் கொடுத்த அந்த புடவையை எடுத்து கட்டிக் கொண்டு வந்தாள். அவனும் அதே நிறத்தில் சட்டை அணிந்திருக்க இவளுக்கு அப்படி ஒரு சந்தோசம். இருவரின் உடை முழுவதும் குந்தவையின் இரத்தம் படிந்திருந்தது.

 

குந்தவி குந்தவி என்னைப் பாரு உனக்கு ஒன்றும் இல்லை என்று அவளது கன்னம் தட்டிய உதிரனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. அவள் அதைக் கண்டு எக்கி அவனது நெற்றியில் முத்தமிட்டு அப்படியே மயங்கிப் போனாள்.

 

அவளை தூக்கிக் கொண்டு டாக்டர் டாக்டர் என்று கத்திக் கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தவனின் பதற்றத்தைக் கண்ட மருத்துவர்கள் குந்தவையை அட்மிட் செய்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அதே மருத்துவமனையில் தான் அருண்மொழி வேலை செய்கிறான். சட்டை முழுவதும் மனைவியின் இரத்தம் நிறைந்திருக்க நின்றிருந்தவனிடம் அத்தான் நீங்க என்றான் அருண்மொழி. அருண் குந்தவிக்கு ஆக்சிடென்ட் என்றவனால் வேறு எதுவுமே பேச முடியவில்லை. என்னதான் அவள் மீது வெறுப்பு, கோபம் இருந்தாலும் ஆழ்மனதில் அவள் மீது கொண்டிருந்த காதல் அவனை அறியாமலே வெளிப்பட்டு விட்டது. அவளை உயிருக்கு உயிராக நேசித்தவனாயிற்றே அதிகப்படியான அன்பு தானே அவளை வெறுக்கவும் காரணம் . அவன் குந்தவைக்கு ஆக்சிடென்ட் என்றதுமே அருண் வேகமாக அவசரசிகிச்சை பிரிவுக்கு சென்று விட்டான்.

 

அவன் என்னைக் காப்பாத்தனும்னு ஏன்டி இப்படி பண்ணுன என்று நினைத்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். சார் அவங்க திங்க்ஸ் என்று செவிலியர் அவனிடம் அவளது நகைகள், பர்ஸ் எல்லாவற்றையும் கொடுத்தனர். அடிபட்ட இடத்தில் கிடந்த அவளது ஹேன்ட்பேக்கை ஆட்டோக்காரர் கொடுத்து விட்டுச் சென்றார்.

 

அவளது நகைகளில் அவன் கட்டிய தாலி தவிர அனைத்தும் இருந்தது. அவளது மொபைல் ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தவன் சங்கவியின் எண்ணைக் கண்டு போனை அட்டன் செய்து தகவலைச் சொல்லிட அவள் துடித்துப் போனாள். உடனே வரேன் என்று போனை வைத்தாள்.

 

அவளது போனில் இருந்த அவனது போட்டோவைக் கண்டவன் மனம் ஏனோ வாடியது. ஏன்டி என் வாழ்க்கையில் வந்ந என்றவன் தன் மனைவியுடனான தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நினைக்க ஆரம்பித்தான்.

 

அவள் மீது அவனுக்கு அப்படி என்ன தான் வெறுப்போ 🤔🤔 அதையும் ப்ளாஸ்பேக்கில் பார்ப்போம்.

 

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!