லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38

4.8
(6)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 38

 

தீரனின் மேல் கையில் ஆழமாக பாய்ந்த கத்தி அவனை நன்றாக பதம் பார்த்திருக்க அந்தக் காட்சியை கண்ட நொடி உயிர் துடித்து போய் “தீரா..ஆஆஆஆ” என்று கத்தியபடி அவனிடம் ஓடி வந்திருந்தாள் அவனின் மதி..

 

அவள் கண்களில் இருந்து நிற்காத அருவியாய் உவர் நீர் வழிந்து கொண்டிருக்க பதறிய நெஞ்சத்தோடு அவன் கையில் இருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்தும் வழி தெரியாமல் அழுது கதறி புலம்பினாள் பெண் அவள்..

 

“என்ன தீரா இது? கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மாட்டீங்களா? வாங்க.. உடனே ஹாஸ்பிடல் போகலாம்.. ரத்தம் நிக்கவே இல்ல.  எவ்ளோ பெரிய காயம்..?! இனிமே இந்த வேலையே வேண்டாம்.. இன்னியோட இந்த அடிதடி வேலைக்கு முழுக்கு போடுங்க.. பட்டினியா கடந்தாலும் பரவாயில்லை.. வேற ஏதாவது ஆபத்து இல்லாத வேலையை தேடிக்கலாம்.. என்னால தினம் தினம் உங்களை இப்படி பார்க்க முடியாது.. கையில பாஞ்ச கத்தி வேற எங்கேயாவது பாஞ்சு இருந்ததுன்னா.. ஐயோ.. கடவுளே.‌. நெனச்சு பாக்கவே முடியல என்னால.. அந்த செகண்ட் நான் செத்தே இருப்பேன்.. ஒரு நிமிஷம் என் உயிரே என்கிட்ட இல்ல தீரா..”

 

அவள் அவனுக்கு அடிபட்டுவிட்டது என்ற கவலையில் மனதில் தோன்றியதை சொல்லி புலம்ப அந்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் அவள் தீரனை அந்த வேலைக்கு முழுக்கு போட சொல்லியது மட்டும் அழுத்தமாய் காதில் விழுந்து அவர்களை பெரும் கலவரத்திற்கு உள்ளாக்கியது.. இருவருமே அரண்டு தான் போனார்கள் அவள் சொன்னதை கேட்டு..

 

“ஐயையோ.. என்னய்யா இந்த பொண்ணு.. மொத்தமா நமக்கு ஆப்பு வச்சிடுவா போல இருக்கே.. இந்த பையன் ஆஞ்சநேயர் பக்தனா இருந்ததே பரவாயில்லை போலயே.. இன்னும் இந்தப் படத்துல தீரன் முடிக்க வேண்டிய ரெண்டு மூணு ஸ்டண்ட் ஸீன் பாக்கி இருக்கே.. இந்த பொண்ணு அவனை அதை எல்லாம் முடிக்க விட மாட்டா போலயே.. இந்த நிலைமையில வேற யாரையாவது ஸ்டன்ட் மாஸ்டரா போட்டோம்னா நம்ம ரெண்டு பேரு தலைலயும் துண்டு தான்..” 

 

அந்த இயக்குனர் விட்டால் அழுது விடுவார் போல இருந்தது..

 

இங்கே தீரனும் “அய்யோ மதி.. ஒன்னும் இல்ல எனக்கு.. நிறைய முறை இந்த மாதிரி காயப்பட்டு இருக்கு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நாளைக்கு பாரு.. இந்த அடி பட்ட சுவடே தெரியாம ஐயா மறுபடியும் வந்து இங்கே எப்படி ஸ்டண்ட் பண்றேன்னு..”

 

அவன் உற்சாகமாய் பேசிக்கொண்டே போக அவளோ அவனை தீவிரமாய் முறைத்தாள்..

 

“நான் இங்க ஒருத்தி கையில அடிபட்டு இருக்கேன்னு கவலைப்பட்டு பேசிக்கிட்டு இருக்கேன்.. இதுல நாளைக்கு வேற இந்த அடிதடி பண்ண வருவீங்களா? இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க வீட்டை விட்டு அந்த பக்கம் இந்த பக்கம் நகர கூடாது.. இந்த கை நல்லா குணமாகி டாக்டர் நீங்க வேலைக்கு போகலாம்னு சொன்ன அப்புறம் தான் நீங்க வீட்டை விட்டே நகரணும்.. அப்ப கூட இந்த வேலைக்கு அனுப்பனுமாங்கிறதை பத்தி யோசிச்சு முடிவு பண்ணிக்கலாம்..”

 

அவள் பேசியது தீரனுக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்தாலும் அவனுடைய மனைவியாய் அவள் உரிமையாய் அவனை அத்ட்டி மிரட்டி உருட்டியது உள்ளுக்குள் அவனுக்கு தேன்மாரி பொழிந்தது போன்ற இன்பத்தை தந்து இருந்தது..

 

மதியழகியோ அதோடு நிறுத்தாமல் அந்த இயக்குனர் பக்கம் திரும்பி “ஏன் சார்.. என்ன சார் படம் எடுக்குறீங்க? உங்க படத்துல நடிக்கிற ஆளுங்க எல்லாம் கொன்னு போட்டுட்டு போயிடுவீங்க போல.. அடுத்த படத்தில் நடிக்கறதுக்கு அவங்கள உயிரோட விட மாட்டீங்களா? அவர்தான் ஏதோ தெரியாம கொஞ்சம் கவன குறைவா இருந்துட்டார்னா அதுக்காக அந்த ஆள் வந்து அவரை குத்திடுவாரா..? அவர் உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க பதில் சொல்வீங்களா? உங்களுக்கு என்ன.. இந்த படத்துல வர பணத்தை சுருட்டிட்டு நீங்க அடுத்த படத்தை பார்க்க போயிருவீங்க.. அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா அவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறே எங்க நிலைமை எல்லாம் என்னன்னு யோசிச்சீங்களா? இந்த மாதிரி ஆபத்தான ஸ்டண்ட் சீன் பண்ணும் போது ஒரு டம்மி கத்தியை வெச்சு பண்ணணாம்னு கூட உங்களுக்கு தெரியாதா?”

 

அவள் அந்த இயக்குனரை பார்த்து படபடவென பொரிய தீரனோ அவள் சொன்ன “அவரை உயிருக்குயிரா நேசிக்கற எங்க நெலமை…” என்ற வார்த்தைகளிலேயே உறைந்திருந்தான்.. ஒரு வேகத்தில் அவள் மனதில்  இருந்தது எல்லாம் வார்த்தைகளாய் சிதறி இருந்தது அங்கே.. தீரனோ அந்த வார்த்தைகளிலிருந்து வெளிவர முடியாமல் அதிலேயே மூழ்கி திளைத்திருந்தான்..

 

அவள் பேசியதை கேட்ட இயக்குனரோ அப்படியே வார்த்தைகளின்றி ஸ்தம்பித்து போயிருந்தார்.. என்னவென்று சொல்லுவார் அவர் அவளிடம்.. முதலில் எல்லாம் போலி கத்தியை வைத்து தான் இது போன்ற காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. தீரன் தான் அதற்கெல்லாம் ஒன்றும் அவசியம் இல்லை.. உண்மையான கத்தியை வைத்து விளையாடுவது தான் தன் வீரத்திற்கான சவாலாய் அமையும் என்று சொல்லி அந்த நிகழ் முறையை மாற்றினான்..

 

ஆனால் இப்போது அந்த நியாயத்தை எல்லாம் அவர் பேசினால் அதை கேட்பதற்கு கூட மதியழகிக்கு பொறுமை இருப்பதாக அங்கு இருந்த யாருக்குமே தோன்றவில்லை..

 

“சரி.. அந்த ஏற்பாடெல்லாம் தான் பண்ணல.. அட்லீஸ்ட் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸாவது வச்சிருக்கீங்களா இல்லையா செட்டில? குறைஞ்ச பட்சம் அதையாவது எடுத்து குடுங்க..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் பாண்டி முதலுதவி பெட்டியை அவள் கையில் கொண்டு வந்து கொடுத்தான்..

 

அவனையும் முறைத்தபடியே அதை வாங்கியவள் தீரனின் காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டாள்.. அவனோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாது வலிக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாத வண்ணம் அமைதியாய் இருந்தான்..

 

ஆனால் மதியழகியோ அவன் காயத்தை துடைக்கும் போதும் அதில் மருந்திடும் போதும் ஏதோ அவளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது போல “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று முகம் சுருக்கி முனகியபடி “ரொம்ப வலிக்குது இல்ல?” என்று அவனுக்கு தோன்றாத வலியை அவள் உணர்ந்து கேட்டபடி “இதோ.. ரெண்டே நிமிஷம்.. ஆயிடுச்சு..” என்று அவன் ஏதோ வலிக்கிறது என்று சொன்னது போல அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்..

 

ஒருவழியாய் பல அக்கப்போர்களுடனும் புலம்பல்களுடனும் அவன் ரத்தத்தை ஓரளவுக்கு நிறுத்தி இருந்தாள்..

 

அடுத்து சற்று தள்ளி சென்றவள் தன் கைபேசி எடுத்து படப்படவென யாருக்கோ அழைப்பு விடுத்து ஏதோ சொல்லிவிட்டு மறுபடியும் தீரனின் அருகில் வந்து அவனை முறைத்தப்படி இருக்க அவனோ வழக்கமாய் இயக்குனரோடும் தயாரிப்பாளரோடும் பாண்டியோடும் மெட்ராஸ் பாஷையில் வாய் அடிப்பவன் மனைவிக்கு பயந்த கணவனாய் பம்மியபடி அமர்ந்திருந்தான்..

 

எவருக்கும் பயப்படாமல் தான் எது செய்தாலும் நெத்தியடியாய் செய்து முடித்துவிட்டு எப்போதும் ஏகத்தாளமாய் பேசி தெரியும் தீரனா இவன் என்று அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது..

 

மதியழகியின் பார்வைக்கு பெட்டி பாம்பாய் அடங்கியிருந்தான் அவன்..

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த தளத்திற்குள் ஒரு மருத்துவ ஊர்தி நுழைந்தது..

 

அதைக் கண்ட தீரனோ தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்..

 

“ஐயையோ.. இவ என்ன ஆம்புலன்ஸை வர வெச்சிருக்கா.. ரொம்ப படுத்தறாளே.. இவளை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலையே.. இவளோட அன்பு தொல்லைக்கு அளவே இல்லாம போச்சு..”

 

மனதிற்குள் சற்றே கலக்கமடைந்தவனின் அருகில் வந்தவள் “எழுந்திருங்க.. வாங்க ஹாஸ்பிடலுக்கு போலாம்.. அதுக்கு தான் ஆம்புலன்ஸ் வர வச்சிருக்கேன்..”

 

“ஐயோ மதி.. எனக்கு அவ்வளவு பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல.. லேசா தான் காயம் பட்டு இருக்கு.. அப்படியே டாக்டர்கிட்ட போனாலும் இங்க பக்கத்துல இருக்குற க்ளினிக்ல ஒரு இன்ஜெக்ஷன் போட்டா ரெண்டு நாள்ல ஆறி போற காயம் இது.. நீ எதுக்கு மதி இதை இவ்வளவு பெரிய விஷயம் ஆக்குற?”

 

அவன் மெதுவாய் அவளைக் கேட்க “என்னது.. நான் இவ்ளோ பெரிய விஷயம் ஆக்குறேனா? உங்க கைய பாருங்க.. ஓஹோ எப்போவும் இப்படித்தானா? உங்கள கவனிக்கவே மாட்டீங்களா? அடிபட்ட கையோட நீங்க வேலை செஞ்சிட்டு இருக்கீங்க.. இரக்கம் இல்லாத மனுசங்க இவங்க எல்லாம் உங்களை வேலை வாங்கிட்டே இருப்பாங்களா? உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..?” அவனிடமிருந்து பார்வையை அவர்களை எல்லோரும் நோக்கி திருப்பியவள் அவனுக்காக நியாயம் கேட்க அவனோ அந்த இயக்குனரை பார்த்து பார்வையாலேயே சற்று தனக்காக அவளை பொறுத்து இருக்குமாறு கெஞ்சினான்..

 

“சரி.. இப்ப என்ன உனக்கு ஹாஸ்பிடல் போகணும்.. அதுவும் இந்த ஆம்புலன்ஸில போகணும்.. அவ்வளவு தானே? சரி வா.. போலாம்..” என்று வேகமாக எழுந்தவனை சட்டென கையை பிடித்து “இருங்க.. எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க? ரத்தம் நிறைய போயிருக்கு.. தலை சுத்த போகுது.. என்னை பிடிச்சுக்கோங்க..” என்று சொல்லி அவன் கையை எடுத்து தன் தோளில் வைத்துக் கொண்டு அவனை அணைத்தார் போல் அந்த வண்டி அருகே அழைத்து சென்றாள்..

 

அவனுக்கும் அவளோடு அப்படி சொல்வது சுகமாக இருந்தாலும் தனக்குப் பின்னால் அவள் பேசிய பேச்சை எல்லாம் கேட்டுவிட்டு அவள் செய்த அலப்பறையில் கண்களிலும் காதுகளிலும் தீப்பொறி பறக்க நின்று கொண்டிருப்பவர்களை எண்ணிப் பார்த்தபோது கொஞ்சம் பாவமாய் தான் இருந்தது.. 

 

அது மனத்தில் அவனுக்கு லேசாய் ஒரு உறுத்தலை தோற்றுவித்திருக்க “மதி.. இருந்தாலும் நீ அவங்களையெல்லாம் அப்படி பேசி இருக்க கூடாது.. பாவம் மதி அவங்க எல்லாம்.. அது அந்த கத்தி மேட்டர் கூட நான் சொல்லித்தான்..”

 

அவன் ஏதோ சொல்ல வர அதை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் “என்ன.. என்ன பேசிட்டாங்க இப்ப.. அவங்க செஞ்ச வேலைக்கு இவ்வளவு நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கணும்.. அவங்கள நாலு கேள்வி கேட்டதோட விட்டேன் இல்ல..? இருங்க வர்றேன்..” என்றவள் மறுபடியும் அவர்கள் புறம் திரும்ப பார்க்க அவனோ பதறியபடி “ஐயோ ஆத்தா.. இல்ல இல்ல.. வேணாம் வேணாம்.‌ நீ எதுவும் கேட்க வேணாம்.. ஹாஸ்பிடல் போலாம்.. எனக்கு கை ரொம்ப வலிக்கிற மாதிரி இருக்கு..” என்று கை ரொம்பவுமே வலிப்பது போல் பாசாங்கு செய்தான் அவன்..

 

அவ்வளவுதான் மீண்டும் பதறிப் போனவள் அவனை அழைத்துக் கொண்டு அந்த மருத்துவ ஊர்தியில் அவனை ஏற்றி தானும் அவன் கூட ஏறி மருத்துவமனைக்கு பயணப்பட்டாள்..

 

அவர்கள் சென்ற பிறகு அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் அப்பாடா என்று ஆகியது.. அஞ்சு நிமிஷத்துல செட்டையே பத்த வச்சுட்டு போன மாதிரி படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டாளே இந்த பொண்ணு என்றார் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே அந்த இயக்குனர்..

 

அந்த தயாரிப்பாளரோ “காயம் கையில பட்டுச்சு.. அதனால அந்த பொண்ணு கத்துனதோட போச்சு.. ஒருவேளை வேற எங்கேயாவது தீரனுக்கு பெருசா காயம் பட்டு இருந்தது.. அவனை குத்துனானே அந்த கத்தி அதை எடுத்து நம்ம ரெண்டு பேரையும் போட்டு தள்ளிட்டு போயிருக்கும் போல அந்த பொண்ணு..” 

 

பாண்டி அவர்களிடம் வந்து “அதென்ன போட்டு தள்ளிட்டு போயிருக்கும் போலன்னு சந்தேகமா சொல்றீங்க..  நிச்சயமா கன்ஃபர்ம்டா போட்டு தள்ளி இருப்பாங்க.. மதி தீரன் மேல உயிரையே வச்சிருக்காங்க..” என்று அந்த மருத்துவ ஊர்தி சென்ற திசையை பார்த்து சொன்னவன் “ஆனா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறது மத்தவங்களுக்கு தெரியாம நடிச்சுக்கிட்டு இருக்காங்க.. என்னைக்கு ரெண்டு பேருமே அவங்க காதலை உணர்ந்து ஒன்று சேர்வாங்களோ என்று எண்ணியபடி ஒரு பெருமூச்சையும் உதிர்த்தான்..

 

மருத்துவமனைக்கு சென்று அவன் கையில் இருந்த காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னிரவில் தான் வீடு திரும்பினார்கள் மதியும் தீரனும்..

 

வீட்டிலிருந்த அனைவரும் உறங்கி போயிருக்க அவனை நகர விடாது தாங்கி பிடித்துக் கொண்டு உள் நுழைந்தவள் சாப்பாட்டு மேஜையின் முன் அவனை அமர வைத்து தாங்கள் செய்து எடுத்துக் கொண்டு போன இரவு உணவை ஒரு தட்டில் பரிமாறி எடுத்து வந்து ஒரு கவளத்தை எடுத்து அவன் வாய்க்கருகே நீட்டவும் அவனோ “இல்ல.. எனக்கு ஒன்னும் இல்ல மது.. நான் சாப்பிட்டுக்ககிறேன்..” என்று பட்டென சொல்லிவிடவும் அவளுக்குத்தான் ஒரு மாதிரியாகி போனது..

 

“சாரி உங்களுக்கு அடிபட்டு இருக்கேன்னு கொஞ்சம் உரிமை எடுத்துட்டேன்.. உங்களுக்கு கை வலிக்கும்.. இன்னிக்கு ஒரு நாள் கஷ்டப்பட்டு நான் ஊட்டி விடறதை சாப்பிடுங்க.. என்னை ஒரு நர்ஸா நெனைச்சிக்கோங்க.. நாளைலிருந்து நீங்களே சாப்பிடலாம்.. கொஞ்சம் காயம் ஆறட்டுமே..” அவள் தயக்கத்தோடு சொல்ல அவனோ அவளுக்கு சிரமமாக இருக்க போகிறதே என்று எண்ணி தான் மறுத்ததை அவள் இப்படி தவறாக எடுத்துக் கொண்டு விட்டாளே என்று வருந்தினான்..

 

“இல்லை மதி.. நீயே குடு.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்றவன் அவள் கையில் இருந்த உணவுக் கவளத்தை தன் வாயில் வாங்கிக் கொண்டான்.. இருவர் கண்களுமே அவர்களுக்குள் இருந்து பொங்கி வழிய காத்திருந்த காதல் பிரவகத்தின் மீதூறலில் கலங்கி போயிருந்தன..

 

வழக்கமாய் சண்டைக்காட்சிகளில் தீரனுக்கு படும் காயங்களை விட இன்றைய காயம் கொஞ்சம் ஆழமாய் தான் இருந்தது.. ஆனாலும்  மதி இல்லாமல் போயிருந்தால் இதையும் எப்போதும் போல அதிகமாய் கவனம் செலுத்தாமல் சாதாரண காயமாய் எண்ணி கடந்து போய் இருப்பான்..

 

ஒரு வருடத்திற்கு முன் இதே போன்ற ஒரு காயம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்டு விட அது சரியாக ஆறுவதற்கு முன்னரே அடுத்த நாளே இன்னொரு சண்டை காட்சியை சிரமப்பட்டு நடித்துக் கொடுத்தவன் அதை அப்படியே கவனிக்காமல் விட்டிருந்தான்.. 

 

அதனால் இப்போதும் அவ்வப்போது அவனுக்கு அடிபட்ட அந்த கீழ் முதுகு பகுதியில் சிறிதான வலி எடுப்பதுண்டு.. ஆனால் அதைப்பற்றி அவன் எவரிடமும் பெரிதாய் சொன்னதில்லை.. பாண்டிக்கு மட்டுமே அவனுக்கு அங்கு அடிக்கடி வலி எடுப்பது தெரியும்.. பாண்டியும் எவ்வளவோ முறை மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையை எடுக்க சொல்லி இருக்க அதை செவிமடுத்தான் இல்லை அவன்..

 

மருத்துவமனைக்கு சென்றடைந்த பிறகு படப்பிடிப்பு தளத்தில் இருந்து மதியழகிக்கு அழைத்த பாண்டி அந்த காயத்தை பற்றியும் அவளிடம் சொல்லிவிட அதற்கும் சேர்த்து திட்டு விழுந்தது தீரனுக்கு..

 

தீரனோ பாண்டியை மனதில் நினைத்து “இப்படி பத்த வச்சுட்டியேடா பாண்டி..” என்று வசை பாடி அர்ச்சித்துக்கொண்டு இருந்தான்..

 

மருத்துவரிடம் அதற்கும் சேர்த்து சிகிச்சை பார்க்க சொல்ல அவர் சில உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து இப்போது பட்டிருக்கும் காயம் இரண்டு நாட்களில் ஆறிய பிறகு பதினைந்து நாட்களுக்கு அந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும் என்றும் அதுவரை வேலைக்கு செல்லக்கூடாது எனவும் கண்டிப்பாக சொல்லி இருந்தார்..

 

தீரன் மதியழகியிடம் ஒரு வாரம் கழித்து தான் படப்பிடிப்புக்கு செல்வதாக கெஞ்சி கூட பார்த்து விட்டான்.. அவளோ மிகவும் பிடிவாதமாக மருத்துவர் சொன்ன 15 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு தான் அந்த வேலைக்கு செல்லலாம்.. ன்றும் மறுபடியும் அந்த வேலைக்கு அவனை அனுப்பலாமா வேண்டாமா என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள் அவனிடம் இறுதியாக..

 

இப்போது அவனோ 15 நாட்களுக்குப் பிறகு அவனை அந்த படப்பிடிப்புக்கு அனுப்பி விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான்.. இந்த வேலைக்கு முழுக்கு போடுவது என்றால் கூட அந்த படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அதன் பிறகு தான் முழுக்கு போட முடியும் என்பதை மட்டும் தீர்மானமாக சொல்லி இருந்தான் மதியிடம்..

 

இருவரும் ஒன்றாக படியில் ஏற மாடியில் இருந்த தங்கள் அறைக்கு மெதுவாக அவன் தோள் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அவனை அமர வைத்தவள் “நீங்க அப்படியே படுத்துக்கோங்க.. ஏதாவது வேணும்னா என்னை கேளுங்க..” என்றதும் “இல்ல மதி.. நான் கீழேயே படுத்துஅகிறேன்.. என்னால படுக்க முடியும்.. நீ கட்டில்ல படுத்துக்கோ..” என்றான்..

 

அவன் சொன்னதைக் கேட்டவள் கோவமாய் அவனை பார்த்து “நீங்க உங்க கையில் இந்த அடியோட கீழே படுத்துப்பீங்க.. நான் ஜாலியா கட்டில் மேல படுத்துக்கணுமா? என்ன..? என்னை ராட்சசி இல்லனா அவ்வளவு கொடுமைக்காரின்னு நெனைச்சுட்டீங்களா? எதுவும் சொல்லாமல் பேசாம கட்டில்ல படுங்க.. நான் கீழே படுத்துக்கிறேன்..”

 

அவள் தீர்க்கமாய் சொல்லிவிட அவனோ “இல்ல.. நீ என்ன சொன்னாலும் சரி.. நீ கீழ தரையில படுக்கறதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்..” என்றான் அழுத்தமாக..

 

“ஓ.. சரி.. அப்படின்னா ரெண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக்குவோம்..” பட்டென சொன்னாள் அவள்..

 

🎵🎶🎼

இதயத்தை ஏதோ ஒன்று…

இழுக்குது கொஞ்சம் இன்று…

இதுவரை இதுபோலே நானும் இல்லையே…

 

கடலலை போலே வந்து…

கரைகளை அள்ளும் ஒன்று…

முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…

 

இருப்பது ஒரு மனது…

இதுவரை அது எனது…

என்னைவிட்டு மெதுவாய் அது…

போக கண்டேனே…

 

இது ஒரு கனவு நிலை…

கலைத்திட விரும்பவில்லை…

கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…

 

எனக்கென்ன வேண்டும் என்று…

ஒரு வாா்த்தை கேளு நின்று…

இனி நீயும் நானும் ஒன்று…

என சொல்லும் நாளும் என்று…

 

மலா்களை அள்ளி வந்து…

மகிழ்வுடன் கையில் தந்து…

மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன்…

 

தடுப்பது என்ன என்று…

தவிக்குது நெஞ்சம் இன்று…

நதியினில் இலை என நான்…

தோய்ந்து செல்கின்றேன்…

 

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்…

ஆயிரம் ஆண்டா

க பழகிய தோற்றம்…

 

ஒரு வெள்ளி கொலுசு போல…

இந்த மனசு சினுங்கும் கீழ…

அணியாத வைரம் போல…

புது நாணம் மினுங்கும் மேல…

🎼🎶🎵

 

தொடரும்..

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!