லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39

4.8
(6)
லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 39
இரண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக் கொள்ளலாம் என்று மதி சொன்ன வார்த்தைகளை கேட்டு சில நொடிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து நின்று இருந்தான் தீரன்.. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை..
“இல்லை மதி.. எனக்கு தெரியும்.. எனக்கு கையில அடிபட்டு இருக்கு.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ இப்படி சொல்ற.. ஆனா உனக்கு என் பக்கத்துல படுக்குற சிரமம் வேண்டாம்.. அது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும்.. சொன்னா கேளு.. நான் கீழேயே..”
அவன் மறுபடியும் பழைய பல்லவியையே பாடத் தொடங்கிட அவளோ அவனை இடையில் நிறுத்தி “அதெல்லாம் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை.. நான் கட்டில்ல அந்த பக்கம் படுக்க போறேன்.. நீங்க இந்த பக்கம் படுக்க போறீங்க.. அது மட்டும் இல்லாம எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு.. எந்த நேரத்திலும் நீங்க தப்பா எதுவும் பண்ண மாட்டீங்க.. உங்களை பத்தி நான் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்.. தயவு செஞ்சு அடம் பிடிக்காம கட்டில்லயே படுத்துக்கோங்க..” 
சொல்லியவள் அதோடு நிற்காமல் கட்டிலின் அந்த பக்கம் சென்று அவனுக்கு எதிர்புறமாய் திரும்பி ஒருக்களித்து படுத்துக் கொண்டாள்..
தீரனும் தயங்கி தயங்கி மெல்ல கட்டிலின் இன்னொரு ஓரத்தில் ஒருக்களித்து படுக்க முனைய அவன் ஒருக்களித்த பக்கம் கையில் அடிபட்டு இருக்கவும் அதிலீ நன்றாக வலி எடுத்தது.. ஆனாலும்  அப்படியே படுத்திருந்தான்..
ஐந்து நிமிடங்கள் கழித்து தீரன் பக்கம் திரும்பிய மதி அவன் படுத்திருக்கும் விதத்தைப் பார்த்து சட்டென எழுந்து அமர்ந்தவள் அவன் இடது கையை பிடித்து நேராக திருப்பி “ஏன் தீரா இப்படி பண்றீங்க..? உங்களுக்கு கொஞ்சம் கூட உங்க மேல அக்கறையே கிடையாதா? அந்த கையில தான் அடிபட்டு இருக்குல்ல..? அந்த சைடு திருப்பி படுத்திட்டீங்களா கையில இருக்கிற காயம் எப்படி ஆறும்..? உங்களுக்கு நேரா படுக்க முடியலன்னா ஒருக்களிச்சு தான் படுக்கணும்னா இந்த பக்கம் திரும்பி படுங்க.. அந்த கைல ஸ்டிரெயின் ஆகாம கொஞ்சம் பாத்துக்கோங்க.. தீரா..” சொன்னவள் அவனை கோவமாய் முறைத்துக் கொண்டிருக்க அவனும் மெதுவாக அவள் புறம் திரும்பி படுத்துக் கொண்டான்..
அவள் அவனை முறைத்தபடியே எதிர்பக்கமாய் திரும்பி படுக்க அவள் பின்புறத்தை பார்த்துக் கொண்டு படுத்திருந்தவனின் கண்கள் அவன் அனுமதி இல்லாமலேயே  அவள் பின்னழகில் அவற்றின் இஷ்டம் போல பயணிக்க தொடங்கியது..
அவளின் அழகான வளைந்த கழுத்தில் சரிந்து தோள்களில் வழிந்து அவள் ஜாக்கெட்டுக்கு மேல் தெரிந்த பளிங்கு போன்ற வெண்ணிற முதுகுப் பரப்பில் பயணித்து அவள் கொடி இடையில் வழுக்கி அவள் வாழைத்தண்டு கால்களில் சறுக்கி வெள்ளி கொலுசு கொஞ்சிக் கொண்டிருந்த அவளின் வெண்மையான கணுக்காலில் வந்து நிலைத்து நின்றது..
அத்தனை அழகையும் அவள் அனுமதி இல்லாமலே கண்களால் பருகி எச்சில் விழுங்கியவன் அதற்கு மேல் அந்த அழகியலின் தாக்கத்தை தாங்க முடியாமல் நேராக நிமிர்ந்து விட்டத்தை பார்த்து படுத்துக் கொண்டான்..
எப்படியாவது உறங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தவன்  அவள் பக்கம் பார்க்காத போதும் கூட அவளின் அழகு அவன் கண்களுக்குள் ஒரே அடியாய் பசை போட்டு ஒட்டிக் கொண்டார் போல் காட்சி கொடுத்து அவனை இம்சை செய்ய உறக்கம் அவனுக்கு எட்டா கனி ஆகிப்போய் இருந்தது..
வெகு நேரம் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் ஒரு வழியாய் தன்னை தானே சமன்படுத்தி மெது மெதுவாய் உறக்கத்தை தழுவி இருந்தான்..
உறங்கி விட்டானே தவிர கனவிலும் அவனுக்கு அவள் முகம் தான்.. ஒரு காதலியாய் காதல் மனைவியாய் அவனை கொஞ்சி கெஞ்சி அணைத்து முத்தமிட்டு காதலித்துக் கொண்டிருந்தாள் அவனின் மதியவள்.. அவன் கனவில் அவளை கண்டு கொள்ளை கொள்வதற்கு அவனுக்கு அவளுடைய அனுமதியே தேவை இருக்கவில்லையே..
ஆனால் எதிர்ப்புறம் திரும்பி படுத்து இருந்த மதி நடு இரவில் அவன் புறம் திரும்பிப் படுக்கவும் கண்ணை திறந்தவள் அவன் சீரான மூச்சோடு நன்கு உறங்கிக் கொண்டிருக்க புன்னகை முகமாய் அவன் அமைதியாய் படுத்து இருந்த கோலம் கண்டு அப்படியே மெய் மறந்து போனாள்..
அவன் தான் கனவில் அவளோடு காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தானே.. அப்புறம் புன்னகை முகமாய் இல்லாமல் இருப்பானா?
அவன் கன்னத்தை வாஞ்சையாய் வருடியவள் ஆசை தீர அவன் வதனத்தையே பார்த்தபடி அவன் நெற்றியில் மென்மையாய் தன் இதழ் பதித்தாள்..
“என் பக்கத்துல நீ படுத்தா நான் எங்க மனசு கஷ்டப்படுவேனோன்னு என்னை பத்தி எவ்வளவு யோசிக்கிற டா நீ? இதுக்காகவே சீக்கிரம் உன்னை விரும்புறேன்னு உன்கிட்ட சொல்லி உன் விருப்பத்தையும் தெரிஞ்சுக்கணும்னு தோணுது.. உன் கண்ணை பார்க்கிறப்போ நீ என்னை விரும்புற மாதிரி தான் எனக்கு தெரியுது.. ஆனா எங்க நீ என்னை ஃபிரண்டா மட்டும் தான் பார்க்கிறேன்னு சொல்லிடுவியோன்னு பயமா இருக்குடா.. என்னை ரொம்ப படுத்தாம சீக்கிரம் நீ என்னை விரும்புறேன்னு என்கிட்ட சொல்லிடு தீரா.. ப்ளீஸ்..” என்றவள் அவன் முகத்தையே ஆழமாக பார்த்தபடி அவன் கன்னத்தில் வைத்த கையை எடுக்க கூடத் தோன்றாமல் அப்படியே உறங்கி போனாள்..
உறக்க கலக்கத்தில் அவள் கை அவன் கன்னத்தில் இருந்து நழுவி அவன் கழுத்தின் மேல் அப்படியே குடி கொண்டு இருக்க அதிகாலையில் அவளுக்கு முன்னாலேயே கண் விழித்த தீரன் அவள் கை தன் தோளில் இருப்பதை பார்த்து அப்படியே கண் விரித்து அதிசயித்து போனான்..
“ஓ மேடம்.. தூக்க கலக்கத்துல கைய என் மேல போட்டீங்களா?” என்றவன் அவள் கையை தன்னில் இருந்து விலக்க போக சட்டென ஏதோ தோன்ற அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் முத்தமிட்டவன் அவள் முகம் பார்த்து அவள் கன்னத்தை வருடி “மதி.. உனக்கு புருஷனா நடிக்கிறேனு ஒத்துக்கிட்டேன்.. ஆனா என்னால அப்படி நடிக்கவே முடியல.. நிஜமாவே மனசால உனக்கு புருஷனா தான் இருந்துக்கிட்டு இருக்கேன்..  என் மனசு உன்னை பொண்டாட்டியா பார்க்க ஆரம்பிச்சிருச்சு.. உன் கிட்ட வீராப்போட பெருசா ஃபிரெண்டா இருக்கேன்னு சொல்லிட்டேன்.. ஆனா காலம் முழுக்க என்னால அப்படி இருக்க முடியுமான்னு தெரியல.. என்னோட மனசு நீ எனக்கு சொந்தமானவன்னு சொல்லிக்கிட்டே இருக்கு.. உன் கண்ணுலையும் எனக்கான காதல் தெரியிற மாதிரி தான் எனக்கு தோணுது.. ஆனா உன் படிப்பு.. உன்னோட வேலை.. உன்னோட தகுதி.. இதெல்லாம் உன்கிட்ட என் காதலை சொல்ல விடாம என்னை தடுக்குது.. உன்கிட்ட என் காதலை சொல்லி நீ  உனக்கு என்ன தகுதி இருக்கு என்னை காதலிக்க.. இல்ல எனக்கு புருஷனா இருக்கன்னு கேட்டுட்டேன்னா அந்த நிமிஷம் நான் உடைஞ்சே போயிடுவேன் மதி.. அப்படி ஒருவேளை உனக்கு இதெல்லாம் ஒரு தடை இல்லனா தயவு செஞ்சு நீயே என் கிட்ட உன் காதலை சொல்லிடு மதி.. அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்..”
அவள் பேசியது போலவே அவனும் உறங்கிக் கொண்டிருந்த மதியோடு பேசிக் கொண்டிருந்தான்.. இருவரையும் அவரவர் காதலை சொல்லவிடாமல் ஏதோ ஒன்று தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.. அந்த தடையை உடைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக் கொள்ளும் வேளையில் அவர்களின் காதலை கொண்டாடும் நிலை அப்போது இருக்குமோ என்னவோ..? விடை விதிக்கு தான் தெரியும்..
அவள் கையை அவள் மீதே வைத்து விட்டு தன் இடத்தை விட்டு சற்று சிரமப்பட்டு எழுந்து கொள்ள.. அவன் அசைந்த அரவத்தில் மதி கண் விழித்திருந்தாள்..
அருகில் அவன் சிரமப்பட்டு எழும்பிக்கொண்டிருந்ததை பார்த்து “ஏன் அதுக்குள்ள எழும்பிட்டிங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோங்க..” என்க “இல்லை மதி.. இனிமே எப்படியும் தூக்கம் வராது.. நான் போய்  பல் விலக்கி குளிச்சிட்டு வர்றேன்” என்றான் அவன்..
ம்ம்.. சரி..
அவன் தன் அலமாரியிலிருந்து ஒரு துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று விட அவள் அதற்குள் படுக்கையையெல்லாம் சரி செய்துவிட்டு அந்த அறையின் பால்கனிக்கு சென்று நின்று வெளியே பார்த்திருந்தாள்..
விடிந்தும் விடியாத காலை பொழுதில் சுவற்றுக்கோழி சத்தத்தோடு அந்த இருளில் வெளியே இருந்து சில்லென்று வீசி உடலை தீண்டிய காற்றை சிலிர்த்து அனுபவித்தபடி நின்றிருந்தாள் அவள்..
தனக்கு பின்னால் ஏதோ அரவம் கேட்கவும் திரும்பியவள் அங்கு தீரன் இடையில் கட்டிய துவாலையோடு ஒற்றை கையால் சட்டையை அணிந்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது..
ஒரு நிமிஷம் தீரா நான் வரேன் இருங்க என்று சொன்னவள் வேகமாக அவன் கையில் இருந்து சட்டையை வாங்கி அதை அணிவதற்கு அவனுக்கு உதவி செய்தாள்.. சட்டையின் கையை கட்டு போடாத ஒரு கையில் நுழைத்து இன்னொரு கை பக்கம் கொண்டு வந்து மேலே இருந்த இரண்டு பொத்தான்களை விட்டு மூன்றாவது பொத்தானை போடுவதற்காக கையெடுத்தவள் அவனுடைய பரந்து திரண்ட மார்பிலும் சட்டைக்குள் அடங்காமல் திமிறி கொண்டிருந்த புஜங்களிலும் ஒட்டி இருந்த வயிற்றிலும் ஓடிய கண்கள் அங்கேயே தங்கிவிட சில நொடிகள் அவன் உடல் அழகை பார்த்து அதிசயித்தபடி நின்றிருந்தாள்..
தன்னை மறந்து அவன் மார்பில் தன் கை விரல்களை வைத்து லேசாய் பார்வையில் ஒருவித ரசனையோடு வருட அந்த வருடல் அவனை ஒருவித கிறக்கத்தில் தள்ளி விட்டது..
அவள் விரல்கள் செய்த மாயத்தில் அவன் வேகமான அனல் மூச்சுகளை விட்டபடி  தன் மார்பில் படர்ந்து இருந்த அவள் கைவிரல்களை அழுத்தமாய் பிடிக்க அவனின் அந்த செய்கையில் ஒரே நொடியில் அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன அவன் மார்பில் இருந்து தன் கையை சரேலென உருவி கொண்டவள் அதற்கு மேல் அவன் ஊடுருவும் பார்வையையும் சந்திக்க முடியாது கண்களை தரையை நோக்கி தாழ்த்திக் கொண்டாள்..
அவனும் அவளின் அந்த நொடி நேர பாவனை மாற்றங்களை உணர்ந்தவன் தானும் சுதாரித்து “பரவாயில்லை.. நானே போட்டுக்குறேன் மதி..” என்க அவளோ இட வலமாய் தலை அசைத்து “நானே போட்டு விடறேன்..” என்று தரை பார்த்தே சொல்லிவிட்டு வேகவேகமாய் அந்த பொத்தான்களை போட்டுவிட்டு அவனிடமிருந்து விலகினாள்..
மறுபடியும் அவள் பால்கனிக்கே சென்று  நின்று கொண்டு சற்று முன் தான் செய்த செயலை எண்ணி சங்கடப்பட்டு தவித்திருந்தாள்..
🎶🎵🎼
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை
இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை
இன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில்
மாட்டிக்கொண்டு
இது
தத்தளித்து துடிக்கிறதே..
காயம் யாவையும்
தேற்றிக்கொண்டு
இது
மறுபடியும் நினைக்கிறதே..
உள்ளுக்குள்ளே
துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ
கடலை இது விழுங்கும்..
வேண்டும் வேண்டும்
என்று கேட்கையிலே
வேண்டாம்‌ வேண்டாம்
என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம்
என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும்
என்று துள்ளுமே..
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரிமலையா இதை
அறிந்தோர் யாருமில்லை..
உள்ளத்திலே அறை உண்டு
வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ
திரும்பவில்லை..
தூங்கும் போதும்
இது துடித்திடுமே
ஏங்கும் போதோ
இது வெடிக்கும்..
தீண்டும் விரல் என்று
தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே
இது நடிக்கும்..
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை..
இதயம் இல்லை என்றால்
என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை
மதி இழக்கும்..
🎼🎵🎶
தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!