உல்லாசமா இருப்பேன். ரகிட… ரகிட…” என்று பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தியாழினி.
“தியா! ஜாலியா இருக்க போல. ஆஃபீஸ்ல வேலையெல்லாம் ஈஸியா இருக்கா? உங்க பாஸ் வேற சிடுமூஞ்சின்னு கேள்விப் பட்டேன். ஆனால் நீ இவ்வளவு ஹேப்பியா இருக்க.” என்று வர்ஷிதா தோழியைப் பார்த்து வினவ.
கையில் இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்த தியாழினி, அங்கிருந்த பேப்பரை எடுத்து தோழியின் தலையில் தட்டியவள், “ நான் ஹேப்பியா இருந்தா உனக்கு ஏன்டி அவ்வளவு வருத்தமா இருக்கா?” என.
“ நீ பாவம்! வேலையை முடிச்சிட்டு டயர்டா இருப்பேன்னு வந்து அக்கறையா கேட்டா, என்னையவே குறை சொல்ற பார்த்தியா?” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு கூறினாள் வர்ஷிதா.
“உன்னைப் பார்த்தா அப்படி தெரியலையே!” என்று நக்கலாக சிரித்தாள் தியாழினி.
“ உனக்காக காலையிலேயே கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தேன் பாரு! இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ.” என்றாள் வர்ஷிதா.
” எங்க அண்ணனை பார்க்குறதுக்கு ஏதாவது ஒரு காரணம் வேணும். அதுக்காக எனக்காக வந்தேன்னு சொல்லிட்டு இருக்காதே. காலையிலே வந்த, இப்போ வேற வந்திருக்க. உன்னை ஆன்ட்டி எதுவுமே சொல்ல மாட்டாங்களா? என்று தியாழினி வம்பு வளர்க்க.
அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த நேத்ரனோ, அங்கு நடக்கும் களேபரத்தைப் பார்த்து, “தியா! வர்ஷு! வாட் ஹேப்பண்ட்?” என்று அதட்ட.
“இவ என்ன கொல்லப் பார்க்குறா அண்ணா?” என்று தியாழினி, வர்ஷிதாவை கைக் காட்ட.
” இவளோட ஃபர்ஸ்ட் டே ஆஃபிஸ் எப்படி போச்சுன்னு அக்கறையா விசாரிச்சா, இவ என்னை கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா.
“உன் அக்கறை தான் நல்லா தெரியுதே!” என்று வம்பு வளர்த்தாள் தியாழினி.
“ஏன் என் அக்கறையில் என்ன குறைச்சல்?” என்று வர்ஷிதாவும் அவளுக்கு ஈடு கொடுத்து சண்டை போட.
“இப்போ ரெண்டு பேரும் வாயை மூடுறீங்களா? இல்லையா?” என்று நேத்ரன் போட்ட சத்தத்தில், இருவரும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தனர்.
“தியா! கொஞ்சம் பொறுப்பா இருக்க ட்ரைப் பண்ண பாரு. எப்பப்பாரு விளையாட்டுத்தனமா இருக்க. அந்த ரித்திஷ் வேற, ரொம்ப ஷார்ப். கொஞ்சம் உன் மேல சந்தேகம் வந்தா கூட, நாம போட்ட ப்ளான் சொதப்பலாகிடும். நீ அந்த ஆஃபீஸ்ல நல்ல டெடிகேஷனா வொர்க் பண்ணி, எல்லார் கிட்டேயும் நல்ல பாண்டிங் கிரியேட் பண்ணு? என்ன நான் பாட்டுக்கும் பேசிட்டு இருக்கேன். நீ வாயைத் தொறக்காமல் இருக்க.” என்று தங்கையைப் பார்த்தான் நேத்ரன்.
அவளோ சைகையில் மேலையும், கீழையும் வேக, வேகமாக கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
“டேய் அண்ணா! நீ தானே வாயை மூட சொன்ன.” என்று தியாழினி சொல்லி முடிக்கக் கூட இல்லை, அதற்குள் களுக்கென்று நகைத்தாள் வர்ஷிதா.
“ இப்போ எதுக்கு சிரிக்குற? முதல்ல உன்னை யாரு இப்போ வர சொன்னா?” என்று வர்ஷிதாவைப் பார்த்து பல்லைக் கடித்தான் நேத்ரன்.
இந்த முறை தியாழினியிடமிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது.
இருவரையும் மாறி, மாறி பார்த்த நேத்ரன் தலையில் கை வைத்து சோஃபாவில் உட்கார்ந்துக் கொண்டான்.
“ பார்த்தீங்களா நீங்களும் அவளை மாதிரியே ஏன் வந்தேன்னு கேட்குறீங்க. தியாவோட பாஸ் வேற டெரர்னு சொன்னீங்களேன்னு, அக்கறையா விசாரிக்க வந்தா, என்னை ஏன் வந்தேன்னு கேட்குறீங்க. நான் போறேன்…” என்று கண்கள் கலங்க அங்கிருந்து கிளம்ப முயன்றாள் வர்ஷிதா.
“வர்ஷி!” என்று தியா சமாதானம் படுத்த வர.
நேத்ரனோ, வர்ஷிதாவை கை நீட்டி இழுத்து தனக்கருகே அமர வைத்தவன், “ வர்ஷி டார்லிங்! உனக்காகத் தான் இவ்வளவு பெரிய ரிஸ்க்கே நாங்க எடுக்குறோம். நீ அடிக்கடி இங்கே வந்தா உங்க வீட்ல உள்ளவங்களுக்கு சந்தேகம் வந்துடப் போகுது. இந்த ப்ராஜெக்டை எப்படியாவது நான் கைப்பற்றிட்டானா என் லெவலே வேற. அப்புறம் என்ன கெத்தா பொண்ணு கேட்டு, உன்னை இந்த வீட்டுக்கு பர்மனென்டா கூட்டிட்டு வந்துடுவேன். அப்புறம் நீ தான் இந்த வீட்டோட ஓனர்.” என்றுக் கூறி புன்னகைக்க.
அவன் கையில் சிக்கிருந்த வர்ஷிதாவின் முகம் சிவந்திருந்தது.
“அடப்பாவி அண்ணா! அப்போ எனக்கு?” என்று தியாழினி வந்து அவன் தலையை தட்ட.
“என் பொண்டாட்டிக்கு அப்புறம் தான் உனக்கு…” என்று சொல்ல.
“சரி! பொழைச்சுப்போங்க…” என்று இருவரையும் பெரிய மனசு பண்ணி மன்னித்தாள் தியாழினி.
“சரி! சரி! நான் கிளம்புறேன். அப்புறமா அண்ணனும், தங்கச்சியும் பாசமழை பொழிஞ்சுக்கோங்க” என்றுக் கூறய வர்ஷிதா இருவருக்கும் கையாட்டி விட்டு கிளம்பினாள்.
“பார்த்து போ!” என்று அண்ணன், தங்கை இருவரும் ஒரு சேர கூற.
புன்னகையுடனே விடைப்பெற்றாள் வர்ஷிதா.
அவள் கிளம்பியதும் தங்கையைப் பார்த்து புன்னகைத்த நேத்ரனோ, “ சரி சொல்லுடா! அந்த கே. ஆர் எப்படி? ஓகேவா? உனக்கு வொர்க் கம்பர்டபுளா இருந்ததா?” என்று வினவ.
“ யாருக்குத் தெரியும்.” என்று தோளைக் குலுக்கினாள் தியாழினி.
“தியா! விளையாடதே! வேலைக்கு போகலையா?” என்று நேத்ரன் கண்டிப்புடன் வினவ.
“ நான் கரெக்டா ஆபிஸுக்கு போயிட்டேன். அந்த கே.ஆர் தான் ஆஃபிஸூக்கு வரலை”
“ சும்மா சொல்லாத தியாமா! உண்மையிலே அந்த கே.ஆர் வரலையா?” என்று நம்பாமல் நேத்ரன் வினவ.
“ப்ச்! நான் சொல்றதை நம்பாமல் திரும்பத் திரும்ப கேட்குற. உனக்கு அந்த கே. ஆர் மேல ரொம்பத் தான் நம்பிக்கை..” என்று தியாழினி முகத்தை சுருக்க.
“உன்னை நம்பாமல் இல்லை டா. அந்த கே.ஆர் தலைப் போற காரியமா இருந்தாலும் ஆபிஸுக்கு வராமல் இருந்ததே இல்லை. அதனால தான் டா கேட்குறேன்.”
“தலை போற விஷயம் இல்லைண்ணா. கால் போற விஷயம்.”
“என்ன சொல்ற தியாமா! புரியலையே?” என்று நேத்ரன் வினவ.
“ அது அந்த கே ஆர் க்கு கால் கட்டு போட்டு இருக்காங்க. அதான் ஆஃபீஸ்க்கு வரலை.”
“வாட் கே ஆர்க்கு கல்யாணமா? ஒரு தகவலும் வரலையே. பிரம்மாண்டமா தானே பண்ணுவாங்க. ஒரு வேளை ரகசியமா பண்றாங்களா? ஏன் எதுவும் லவ் மேட்டரா? ச்சே ! ச்சே!இருக்காது.” என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்த நேத்ரனைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தாள் தியாழினி.
“எதுக்குடா சிரிக்குற? இல்லன்னா கால் கட்டுனா, உடனே கல்யாணம் தானா? அந்த கே.ஆர் உண்மையிலேயே கால்ல அடிப்பட்டு கட்டு போட்டுருக்கறதால ஆஃபிஸுக்கு வர முடியலை. அதனால அவங்க அப்பா தான் வந்தாரு. அவரு ரொம்ப நைஸ் பர்சன். அவங்க வொஃய்பும் ரொம்ப ஜோவியல். அவங்களுக்கு என்ன ரொம்ப புடிச்சு போயிடுச்சு.”
“தேங்க் காட்!”
“அந்த கே. ஆருக்கு அடிப்பட்டதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றியா? இல்லை அவங்க அப்பா, அம்மாக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு நன்றி சொல்றியா?”
“அந்த கே ஆருக்கு அடிப்பட்டதுக்கு தான் சொன்னேன். அவங்க அப்பா, அம்மாவுக்கு உன்னை பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன? நீ என்ன அவங்க வீட்டு மருமகளாவா போகப் போற?” என்று அலட்சியமாக கூறினான் நேத்ரன்.
“டேய் அண்ணா! உனக்கு அந்த கே. ஆரை பிடிக்கலைங்குறதுக்காக அவருக்கு அடிப்பட்டதுகாகாக கடவுளுக்கு நன்றி சொல்றது எல்லாம் டூமச்.”
“அட லூஸே! உன் நல்லதுக்காகத் தான் நான் அப்படி சொன்னேன். அந்த கே. ஆர் கண்ணுல மண்ணைத் தூவுறது ரொம்ப கஷ்டம். கடவுளா பார்த்து உனக்கு உதவியிருக்கார். நீ அந்த கே. ஆர் ஆஃபிஸ் வர்றதுக்குள்ள போன வேலையை முடிச்சிடு. இது தான் நல்ல சான்ஸ்.” என்று நேத்ரன் திட்டம் தீட்ட.
இருவரது எண்ணத்தையும் பொடி, பொடியாக்கும் விதமாக மறுநாள் காலையில் ஆஃபிஸுக்கு கிளம்பி கொண்டு இருந்தான் ரித்திஷ்பிரணவ்
வழக்கம் போல் காலையில் எழுந்த ரித்திஷ்ப்ரணவ் கால்வலியை பெரிதுப்படுத்தாமல், ஃப்ரெஷ்ஷப்பாகிவிட்டு வந்தவன், ஆஃபிஸுக்கு தயாராக முயன்றான்.
தனது கஃபோர்டிலிருந்து பார்மல் ட்ரெஸ்ஸான ஷர்ட் மற்றும் பேண்டை எடுத்தவன், யோசனையில் ஆழ்ந்தான்.
‘இப்போ கட்டுப்போட்டிருப்பதால இந்த பேண்டை போட முடியாது. ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு எப்படி ஆஃபிஸுக்கு போறது.’ என்று யோசிக்க.
அவனது யோசனையை தடை செய்தான் உதவிக்கு வந்திருந்த செவிலியர்.
“ சார்! ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?” என்று வினவ.
“குமார்! நான் இப்போ ஆஃபிஸுக்கு கிளம்பணும். எனக்கு இந்த பேண்ட்டை போட்டு விடணும். உங்களால முடியுமா?” என்று இடக்காக வினவினான் ரித்திஷ்ப்ரணவ்.
“சார்! நீங்க ரெஸ்ட் எடுக்கலையா? இந்த கால்வலியோட ஆஃபிஸுக்கா போகப் போறீங்க.” என்று அதிர்ச்சியாக வினவினான்.
“ப்ச்! நான் ஆஃபிஸுக்கு தானே போறேன். என்னமோ கொள்ளையடிக்கப் போறேன்னா சொன்னேன். இவ்வளவு ஷாக்காகுற?”
“இல்லை சார்! டாக்டர்…” என்று குமார் ஏதோக் கூற வர.
“அதெல்லாம் உங்க டாக்டர் கிட்ட நான் பேசிட்டேன். நடந்தா வலி இருக்கும்னு சொன்னார். நான் மேனேஜ் பண்ணிக்கிறேனு சொல்லிட்டேன். சோ! நான் ஆஃபிஸுக்கு போறேன். இல்லை! இல்லை! ஆஃபிஸுக்கு போறோம். உனக்கு என்னை கவனிக்கிறது தானே வேலை. இனி நீ என்னோட ஆஃபிஸுக்கு வர.” என்று கட்டளையாகக் கூற.
‘ஐயோ! நானே வந்து இவர் கிட்ட சிக்கிட்டேனே. நான் பாட்டுக்கும் ஹாஸ்பிடல்ல டாக்டரோடையும், நர்ஸூங்களோடும் பேசி சிரிச்சிக்கிட்டு ஜாலியா இருந்தேனே!’ என்று புலம்பிக் கொண்டிருக்க.
அவன் முன்பு சொடக்கிட்டான் ரித்திஷ்ப்ரணவ்.
“சார்!”என்று குமார் பதற.
“என்ன என் கூட ஆஃபிஸுக்கு வர தானே.”
“வர்றேன் சார்.”
“ ஓகே! அப்போ எனக்கு ஏதாவது ஐடியா சொல்லு. இந்த கட்டை ரிமூவ் பண்ணிட்டு, பேண்ட் போட்டதுக்கு அப்புறம் மறுபடியும் போட்டுக்கலாமா?” என்று ரித்திஷ்பிரணவ் வினவ.
“அப்படி எல்லாம் பண்ண முடியாது சார்.” என்று வேகமாக மறுத்தான் குமார்.
“அப்போ நான் எப்படி ஆஃபிஸுக்கு வர்றது. ஷார்ட்ஸோடவா?” என்று அவன் வினவ.
ஒரு நிமிடம் கற்பனை பண்ணிப் பார்த்த குமாரோ ஜெர்க்காகி நின்றான்.