லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41

4.8
(9)

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 41

 

இந்தர் மலரழகி இருவரும் அவன் வண்டியில் ஒன்றாக மலரழகியின் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.. வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது வழியில்  வேக தடைகளும் பள்ளங்களும் மேடுகளும் வரும்போது எதார்த்தமாய் அவன் பிரேக்கை பிடிக்க அவளோ அந்த இழுசக்தியில் அவன் மேல் இடித்து விடுவது போல் முன்னால் சாய தன்னை தானே கட்டுப்படுத்தி அவன் மேல் தன் மேனி படாதவாறு நேராக அமர்ந்திருந்தாள்..

 

இரண்டு மூன்று முறை இப்படி நடக்கவும்  “டேய்.. நிறுத்துடா வண்டியை.. என்னடா நெனைச்சிட்டிருக்க நீ..? உன் காலேஜ் பொண்ணுங்களை உன் வண்டி பின்னாடி உட்கார வச்சு ஊர் சுத்தும் போது அப்பப்ப  சடன் ப்ரேக் போட்டு அவங்களை உன் மேல விழ வைக்கிறது.. ரோட்டில அவ்வளவு இடம் இருக்கும்போது வேணும்னே  மேடுலயும் பள்ளத்துலயும் ஏறி இறங்குறது.. இந்த மாதிரி வேலை எல்லாம் அவங்களோடவே வச்சுக்கோ.. என்கிட்ட இப்படியெல்லாம் பண்ணனும்னு நினைச்சே அப்புறம் நடக்கிறதே வேற.. கைவசம் சேஃப்டி பின் வச்சிருக்கேன்.. எடுத்து நறுக்குன்னு குத்திடுவேன் முதுகில..”

 

அவள் அப்படி சொல்லவும் அவனுக்கு இவளை போய் தன் வண்டியில் ஏற்றி வந்தோமே என்று சலிப்பு தோன்றியது..

 

“ஆமாண்டி.. உன்னை பத்தி தெரிஞ்சும் உன்னை எல்லாம் என் வண்டில ஏத்திட்டு வந்தேன் பாரு.. என் தலையெழுத்து.. என்னை பத்தி என்ன தாண்டி நெனச்சிக்கிட்டு இருக்க நீ..? இந்த அம்மா பெரிய ரதி.. அப்படியே மேல வந்து விழணுங்கறதுக்காக பிரேக் போடுறாங்க.. அடச்சே.. நீயும் உன் கற்பனையும்.. ம்ம்.. எனக்கு என்ன தோணுதுன்னா என்னை மாதிரி ஒரு அழகான பையனை பார்த்ததும் ஒருவேளை நீ கண்ட்ரோல் இல்லாம வேணும்னே என் மேல விழறியோன்னு தோணுது.. அப்படி வேணா இருக்கலாம்..”

 

அவளுடைய குற்றச்சாட்டுக்கு பதிலாய் அவளை சீண்டும் விதமாக பேசினான் அவன்..

 

“உன் மேல.. யாரு..? நான்..? போடா போ.. நெனப்பு தான் உனக்கு பொழப்பை கெடுக்க போகுது.. இங்க பாரு.. ஏதோ என் வண்டி வேணுமேங்குறதுக்காக வேற வழி இல்லாம உன்னோட வரேன்.. இல்லன்னா உன் வண்டியில எல்லாம் இந்த ஜென்மத்துக்கு ஏறனும்னு நினைக்க கூட மாட்டேன் நான்‌… என் மாமாக்கு மட்டும் உடம்பு நல்லா இருந்தா  அவர் கிட்டயே சொல்லி அவரோடயே போய் என் வண்டியை எடுத்துட்டு வந்து இருப்பேன்..”

 

அவள் சொன்னதும் அவன் அவளை முறைத்தபடி “ஓ அப்படியா..? முதல்ல என் வண்டிலருந்து இறங்குடி.. அப்படியே பொடி நடையா உன் வீட்டுக்கு போய் உன் வண்டியை எடுத்துட்டு வா.. உனக்கு என் வண்டியில ஏறுறது அவ்ளோ கேவலமா இருக்குன்னா நீ ஒன்னும் என் வண்டியில் வர வேண்டாம்..”

 

அவன் வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கி அவளை முறைத்த படி சொல்லவும் “போ.. நான் ஒன்னும் உன் வண்டில வரணும்னு காத்துட்டு இருக்கல.. இப்ப என்ன..? நீ என்னை உன் வண்டியில ஏத்திக்கிட்டு போகலைன்னா நான் ஒரு ஆட்டோ வச்சிட்டு போய் என் வண்டியை எடுத்துக்கிறேன்.. இங்கே யாரும் உன் வண்டியில தான் வரணும்னு தவம் கெடக்கல.. போடா.. இந்த மாமாக்கு சரியான அதுக்கப்புறம் அவரோடயே வண்டியில வந்து என் வண்டியை எடுத்துட்டு இருக்கலாம்.. அவசரப்பட்டு வண்டி எடுக்கலாங்கற ஆசையில உன்னோட வந்தது தப்பா போச்சு”

 

அவளை மேல் கண்ணால் சந்தேகமாய் பார்த்தவன் “ம்ம்.. எனக்கு ஒரு டவுட் டி.. நீ இன்னும் உன் மனசுல எங்க அண்ணனை நெனச்சுக்கிட்டு இருக்கியா?”

 

அவன் கேட்டதும் அவனை முறைத்தவள் “ஏன்.. நீ இன்னும் உன் மனசுல எங்க அக்காவை நினைச்சுட்டு இருக்கியா? அதான் என்னையும் இப்படி கேக்குறியா?”

 

அவள் கேட்டதும் அவனுக்கு முனுக்கென கோபம் வந்தது..

 

“என்னை பாத்தா எப்படிடி தெரியுது உனக்கு..? நான் என்னிக்கோ சொல்லி இருக்கேன்.. அண்ணி எங்க அம்மா மாதிரின்னு.. இப்ப எங்க அம்மாவா தான் அவங்களை பார்க்கிறேன்.. அப்புறம் அவங்க எப்படிடி வேற மாதிரி நான் தப்பா பார்க்க முடியும்? நான்லாம் நல்ல குடும்பத்துல வளர்ந்தவன்.. அந்த மாதிரி எல்லாம் தப்பா யோசிக்க மாட்டேன்”

 

“அப்போ நான் மட்டும் என்ன கேடுகெட்ட குடும்பத்தில இருந்து வந்தவளா? நாங்களும் உன்னை மாதிரிதான் எங்க அக்கா புருஷனை லவ்வரா பாக்குற அளவுக்கு கேவலமானவ கிடையாது..”

 

“நீ சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இப்ப கூட எங்க மாமா நல்லா இருந்தார்னா அவரோட வண்டியில போயிருப்பேன்னு சொல்றியே.. அது தான் டி சந்தேகமா இருக்கு.. அங்க வீட்ல என்னெல்லாம் லூட்டி அடிக்கிற நீ? எங்க அண்ணனுக்கு ஊட்டி விடுறேன்கிற.. அவரை பார்த்துக்க நீ லீவ் போடுறேன்னு சொல்றே.. அதுவும் அன்னிக்கு உன் காலேஜ் ஃப்ரெண்டு கிட்ட எங்க அண்ணனை நீ சொந்தமாக்கிட்டேன்னு சொல்ற.. அந்த வீட்ல நீ மட்டும் தான் அவரை புரிஞ்சு வச்சிருக்கேன்னு சொல்ற..? என்னடி இதெல்லாம்..? இதை எல்லாம் கேட்கறப்பவும் பார்க்கிறப்பவும் நீ எங்க அண்ணனை உன் அக்கா புருஷனா பாக்குற மாதிரி தெரியல..  உன்னோட..”

 

அவன் சொல்லி முடிக்கும் முன் “டேய் அவ்வளவு தாண்டா உனக்கு மரியாதை.. இன்னொரு வார்த்தை பேசின மரியாதை கெட்டுடும்..”

 

மிரட்டலாய் சொன்னவள் “நீங்க ஆம்பளைங்க எல்லாம் எப்பவுமே இப்படித்தான் அவசர அவசரமா முடிவெடுப்பீங்களா? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா? இதிலயும் மாமா தான்டா பெஸ்ட்டு.. அவர் பாரு எவ்வளவு நிதானமா உனக்காக எங்க அக்காக்காக எனக்காக ஏன் எங்கப்பா சைட்லருந்து கூட யோசிச்சு முடிவெடுக்கிறாரு.. நீ ஏண்டா இவ்வளவு ஜட்ஜ்மெண்ட்டலா இருக்க.. நான் செய்யறது எல்லாம் பார்த்தவுடனே மாமா மேல ஆசை இருக்கு எனக்கு.. அதனால தான் நான் இப்படி எல்லாம் செய்றேன்னு முடிவுக்கு வந்துட்டே இல்ல.. போடா கூமுட்டை..” 

 

அவள் அவனை எரிப்பது போல் பார்த்து சொல்ல “பின்ன.. நீ செய்யறது எல்லாம் பாத்தா வேற மாதிரியா தோணுது.. அப்படித்தான் தோணுது..”

 

அவன் இன்னும் அழுத்தி சொல்லவும் “வேணாம் டா.. ரோடுன்னு கூட பாக்க மாட்டேன்.. அடி பின்னிடுவேன்..”

 

அவள் மறுபடியும் மிரட்ட “என்னடி மிரட்டுறியா? செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு இப்போ வந்து சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்கே.”

 

“உனக்கெல்லாம் மூளையே வேலை செய்யாதாடா? ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதா தானே சொல்றாங்க..? ஆனா கல்யாணம் ஆன நாளா அவங்களை கவனிச்சியா? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்குள்ள இருக்குற அன்னியோன்னியம் எங்க அக்காவுக்கும் உன் அண்ணனுக்கும் நடுவுல இருக்கா? என்னிக்காவது இதை யோசிச்சு பாத்திருக்கியா நீ..?”

 

அவள் சொன்னதும் தான் யோசிக்க தொடங்கி இருந்தான் அவன்..

 

“இப்ப யோசி.. நான் எல்லாம் முதல் நாளே இதை புரிஞ்சுகிட்டேன்.. அவங்க ரெண்டு பேரும் சேகர் சொன்ன மாதிரி ஏதோ ஒரு அக்ரிமெண்ட் மாதிரி கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அவங்க நடந்துக்கறது எல்லாம் பார்த்தா எங்க நம்பளுக்காக இப்படி ஒரு கல்யாணத்துல இருந்துட்டு கொஞ்ச நாள் கழிச்சு சேகர் சொன்ன மாதிரி பிரிஞ்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு..”

 

“என்னடி சொல்ற? பிரிஞ்சிடுவாங்களா..?”

 

“ஆமாடா.. அந்த சேகர் சொன்னான் இல்லே? நம்ம ரெண்டு பேரும் செட்டில் ஆனப்பறம் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியணும்னு முடிவு எடுத்து இருக்காங்கன்னு.. ஆனா நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணேன் டா.. அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா ஒரு அன்யோனியத்தோட நடந்துக்கலையே தவிர அவங்களுக்குள்ள காதல் இல்லாம இல்ல.. அவங்க ஒருத்தரை ஒருத்தர பார்க்கற பார்வையிலே அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சிருக்காங்கன்னு தெரியுது.. ஆனா ஏதோ ஒரு விஷயம் அவங்களை அதை சொல்ல விடாம தடுக்குது..”

 

“என்னடி.. என்னென்னவோ சொல்ற.. நீ ஒன்னும் இல்லாத விஷயத்துல என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிறேன்னு நினைக்கிறேன்.. அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது.. ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க..”

 

“டேய்.. நான் ஒரு டாக்டர் ஆகப்போறவ டா.. எனக்கு தெரியாதா புருஷன் பொண்டாட்டி எப்படி இருப்பாங்கன்னு..  அந்த அளவுக்கு கூட உலகம் தெரியாதவ கிடையாது நானு.. அதுக்கு தான்.. அவங்க மனசுல இருக்குற காதல வெளியில கொண்டு வரணுங்கறதுக்காகத்தான் நான் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்.. எங்க அக்கா நிச்சயமா என்னை சந்தேகப்பட மாட்டா.. அதே சமயம் நானும் ஒரு பொண்ணு தானே..? மாமாவோட நான் க்ளோசா இருக்கிறது அவளுக்குள்ள நிச்சயமா ஒரு பொறாமையை கிளப்பி விடும்..  அந்த பொறாமை வளர்ந்து வெளியில வரப்போ அவ ஓப்பனா தன்னோட காதல அவர் மேல தனக்கு இருக்கிற பொஸஸ்ஸிவ்நெஸ்ஸை வெளிப்படையா காட்டுவா.. அது வெளிய வந்துச்சுன்னா ஆட்டோமேட்டிக்கா தான் காதலை மாமா கிட்ட சொல்லுவா..”

 

“அது எப்படி.. அவ்வளவு உறுதியா சொல்ற?

 

“அது அப்படித்தான்.. தன்னோட புருஷன் லவ்வர் பொருத்தவரைக்கும் பொம்பளைங்க எல்லாம் ரொம்ப பொஸ்ஸிவ்.. அதுவும் நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு அடம் பிடிச்சவ.. நான் மாமாவோட நெருங்கி இருக்கிறது அவளுக்கு ரொம்ப உறுத்தும்.. நிச்சயமா என்னை மாமா கிட்ட நெருங்க விடக்கூடாதுன்னு அவளோட காதலை ஏதாவது ஒரு விதத்துல அவ வெளிப்படுத்துவா.. அப்ப கொஞ்சம் பிரச்சனையாகும் தான்.‌. எனக்கு திட்டு மட்டும் இல்லாம ஒன்னு ரெண்டு அடி கூட விழலாம்.. ஆனாலும் பரவால்ல.. எங்க அக்கா வாழ்க்கைக்காக நான் இதை சகிச்சுக்க தயாரா இருக்கேன்.. ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள நெருக்கம் அதிகரிக்கணும்.. இன்னிக்கு நான் சாப்பாடு ஊட்டுறேன்னு சொல்லலன்னா நிச்சயமா அவ லீவு போட்டு இருக்க மாட்டா.. நான் சாப்பாடு ஊட்டுறேன்னு சொன்னது தான் அவளுக்கு லீவு போட்டு மாமாவ பாத்துக்கணும் அப்படிங்கிற எண்ணத்தை கொண்டு வந்துச்சு.. எங்க அக்காவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அவ அனாவசியமா காலேஜ்க்கு லேட்டா கூட போக மாட்டா.. லீவ் எடுத்துக்க எல்லாம் சான்சே இல்ல.. ஆனா இன்னைக்கு நான் பிகேவ் பண்ணதை பாத்து அவ நாலு நாள் லீவ் போட்டிருக்கான்னா பாத்துக்கோ.. நம்ம ஆக்டிங் எவ்வளவு தூரம் வொர்க் அவுட் ஆயிருக்குன்னு..”

 

அவள் சொன்னதை கேட்டவன் அவளை பிரமிப்பாய் பார்த்து இருந்தான்.. 

 

“நீ சொல்லும்போது தான் நானும் யோசிக்கிறேன்.. அவங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆன ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி நடந்துக்கல இல்ல..? சரிதான்..”

 

“கரெக்ட்.. இப்போ அக்கா லீவு போட்டு வீட்ல இருக்காளா? அவங்க ரெண்டு பேரும் தனியா ஒண்ணா இருக்கறதுக்கு ஒரு சான்ஸ் கெடைச்சிருக்கு.. இந்த நாலு நாளும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற காதல் வெளியில வந்து ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதுக்கு நல்ல ஆப்பர்ச்யூனிட்டியா இருக்கும்.. அதுக்கு தான் நான் இப்படி பண்றேன்.. இனிமேலும் நான் இப்படித்தான் நடந்துக்குவேன்.. உனக்கு இரிட்டேடிங்கா இருந்தா நீ பாக்காத..”

 

“சரிதான்.. ஆனா உன்னை மாதிரி நடிப்புக்காக கூட அண்ணி கிட்ட என்னால அந்த மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாது.. ஏன்னா அவங்களை என் அம்மாவா பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நான்..”

 

“இப்ப யாரு ஒன்னை அந்த மாதிரி எல்லாம் நடிக்க சொன்னா.. எங்க அக்காவை கெளப்பி விட்டு கொளுத்தி போட்டாலே போதும்.. அதெல்லாம் நடக்க வேண்டியது தன்னால நடக்கும்.. எங்க அக்கா ஆரம்பிச்சா அதுக்கு அப்புறம் மாமா அவர் காதலை அழகா கொண்டு போய்டுவார்.. நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.. எங்க மாமா பக்கா சூப்பர் ஹீரோ.. சரி.. அதைவிடு.. இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தி வச்சிருக்க..?”

 

“ஏன் மேடம்.. இவ்வளவு நேரம் கதை பேசினதுல நீங்க என்ன சொன்னீங்கன்னு மறந்து போச்சா? நான் என்னவோ திட்டம் போட்டு நீ என் மேல வந்து விழணும்கற எண்ணத்தோட தாறுமாறா வண்டி ஓட்டறேன்னு சொன்ன இல்ல..? நீ எப்படியாவது போய்க்கோ.. நான் கிளம்புறேன்..”

 

“சரி சரி.. கோவிச்சுக்காதே.. நான் உன்னை நம்புறேன்.. வா போலாம்..” சட்டென்று அவள் சமாதானமாய் பேசவும் அவனும் “இன்னொரு முறை இந்த மாதிரி பேசினே.. அவ்வளவுதான் அப்படியே இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. நீ நினைக்கிற மாதிரி ஆளு நான் கிடையாது.. உனக்கு யாரோ என்னை பத்தி தப்பு தப்பா சொல்லி வச்சிருக்காங்க.. நீ என்ன பண்ற.. எங்க காலேஜ்க்கு ஒரு நாள் வா.. என் ஃபிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் என்னை பத்தி கேளு.. ஒரு பொண்ணு என்னை பத்தி தப்பா ஏதாவது சொன்னா அப்புறம் நீ சொல்ற அத்தனை கம்ப்ளைன்ட்டையும் நான் ஒத்துக்கறேன்..”

 

“ஆமா இவரு உலகத்திலேயே இல்லாத உத்தமருன்னு தெரிஞ்சுக்கறதுக்காக இவர் காலேஜ் வந்து இவர் ஃபிரெண்டோட எல்லாம் நாங்க பேசுறோம்.. அடச்சே.. எனக்கு வேற வேலை இல்லன்னு நெனச்சியா? போடா போ.. வீட்டுக்கு போ சீக்கிரம்.. வண்டி எடுத்துட்டு நான் காலேஜ் போகணும்.. நீ வேற உன் வீட்டுக்கு போய் அப்பாவை கூட்டிட்டு வரணும்.. ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு.. இங்க ரோட்ல நின்னு வெட்டி கதை பேசிகிட்டு இருக்கே..”

 

அவள் சட்டென அப்படி சொல்லிவிடவும் “யாரு..? நானு..? அது சரி.. நல்லா வருவீங்கடி நீங்க எல்லாம்”

 

அலுத்து கொண்டவன் வண்டியை அவள் வீட்டை நோக்கி செலுத்தினான் அங்கே சென்றதும் வண்டியில் இருந்து இறங்கிக்கொண்டவள் “சரி.. அப்போ நீ கிளம்பு வீட்டுக்கு.. அப்பாவை கூட்டிட்டு போ.. நான் என் வண்டியை எடுத்துட்டு கிளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் டிரஸ் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும்.. அதெல்லாம் எடுத்துட்டு நான் கொஞ்சம் நிதானமா கிளம்புறேன்.. காலேஜூக்கு நிறைய டைம் இருக்கு..”

 

சொல்லிவிட்டு அவள் திரும்பி சென்று விட போகும் அவளையே பார்வையில் ஒரு ரசனையோடு பார்த்திருந்தான் இந்தர்.. 

 

“ம்ம்..படப்படன்னு பேசறா..  சண்டை போடுறாளே தவிர எல்லாரை பத்தியும் கவலை படுறா..‌‌ தனக்கு கெட்ட பேர் வந்தாலும் பரவால்லன்னு அண்ணா அண்ணிக்காக என்ன எல்லாம் செய்றா… ம்ம்.. நல்ல பொண்ணு தான் போல..”

 

மனதிற்குள் சொல்லியபடியே தன் வண்டியை கிளப்பி வீட்டை நோக்கி செலுத்தினான்..

 

தொடரும்.‌.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!