இவ்வரிகள் சாதாரணமாக உருவானது அல்ல. ஆதி காலம் முதல் இன்று வரை இவை உயிருடன் உலாவிக்கொண்டு உள்ளது.
ராமாயனத்தில் ராவணன் தங்கை சொல்லைக் கேட்டுத்தான் சீதையின் மீது ஆசை கொண்டார். இப்படி ஆனானப்பட்ட சான்றோர்களே இவ்வரிகளுக்கு உதாரணமாக இருக்கையில்.
சாதாரண மனிதன் துருவ் இதிலிருந்து தப்பிக்க முடியுமா?…
ஆனால் ராவணன் சீதையின் விசயத்தில் தவறான வழிகளில், சீதையை அசிங்கப்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை.
ஆனால் துருவ்…? எப்படி நடந்துகொள்வான்?…
எந்த தவறுமே செய்திடாதவள். கண்ணுக்கு தெரியாத உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காத அன்பான பெண் நளிராவும் காலத்தில் வலையில் மாட்டிக்கொண்டாள்.
நாகமானது மகுடியின் திசைக்கு ஏற்ப அசைந்தாடும். அதுபோல இக்கதையானது மேற்கண்ட பழமொழிக்கு ஏற்ப செல்லுமா அல்லது காலத்தின் மாறுதலால் அன்பின் வழியில் செல்லுமா பார்ப்போம்.
……….
சைத்ரா ஓங்கி அடித்த விசையில், ஒரு செக்கன் இமைகளை மூடித் திறந்தவனின் கரம் தானாக கன்னத்தில் படிந்தது.
ஒரு கரம் கன்னத்தில் படிந்திருக்க மறுகரத்தின் விரல்கள் ஒன்றோடு ஒன்று இறுக, நகங்கள் உள்ளங்கயில் பதிந்தது. மணிக்கட்டின் தசைகள் இறுக நரம்புகள் அப்பட்டமாய் வெளித்தெரிந்தது. அடிவயிற்றிலிருந்து பொங்கி எழுந்த சினத்தினை நெஞ்சுக்குள் அப்படியே அடக்கி வைத்தவனின் விழிகள் சிவந்துதான் போனது.
இதுவரைக்கும் யாரிடமும் அடியே வாங்கியது இல்லை என்று அவனது இந்த செயலில் நளிராவுக்கு நன்கு புரிந்து போனது. அவன் விழிகளில் அப்பாவித்தனம் கலந்த அதிர்ச்சியைக் கண்டவளின் மனதில் குற்ற உணர்வு சுருக்கென ஊசியாய்க் குத்தியது.
அவன் விழிகளில் மிதந்த அறியாமை சில நொடிகளுக்குத்தான், ஆனால் அடுத்த கணம் அவன் கண்களில் சிவப்பு நரம்புகள் ஓட, கோபத்தில் விழி ஒரத்தில் நீர் தேங்கியது. செந்தனலாக இருவிழிகளும் ஜொலிக்க, அதை வெகு அருகில் கண்ணுற்ற நளிராவுக்கு நடுக்கம் பிறந்தது.
தன் கழுத்து வரைக்கு மட்டுமே உயரத்தில் இருப்பவளை சற்றே தலை தாழ்த்திதான் பார்த்தான் துருவ்.
இவன் சாக்லேட் பாய்? ரக்கிடு பாய், வெரி கைண்ட் ஆஃப் பர்சன்? பயந்த சுபாவம் கொண்டவன்? சில நேரம் அப்பாவி முழியைக் கொண்டு ஏமாற்றும் ஆள்மயக்கி? என்று யாருக்கும் புரியாத புதிர் அவன். எப்போதுமே எதையும் விளையாட்டாகத்தான் அணுகுவான்.
நோ செண்டிமெண்ட்ஸ். அந்த அளவுக்கு யார்கிட்டையும் பழகவும் மாட்டான். பொண்ணுங்களை சைட் அடிப்பான் தவிர நெருங்க மாட்டான். அழகா இருக்கானே அவன் விளையாட்டுத்தனம் ரசிக்கிற மாதிரி இருக்கே என்று எந்தப் பெண்களாவது ப்ரபோஸ் பண்ணப் போனால், அவன் கேட்கும் கேள்விகளில் நாலு சாபமாவது கொடுத்துவிட்டுத்தான் போவார்கள்.
“சரியான பொறுக்கி. வாயைத் திறந்தா அசிங்கமா கொட்டுது” எனும் அளவுக்கு பெண்கள் வட்டாரத்தில் அவன் புகழ் பரவி இருந்தது.
ஆனால் உண்மையில் அவன் பெண்கள் விசயத்தில் பக்கா ஜெண்டில்மென். பார்வையோடு நிறுத்திக் கொள்வான் தவிர அசிங்கமான வகையில் பார்க்கவும் மாட்டான்.
பக்கத்தில் இருக்கும் ஆத்மா ரவிக் ரெண்டு பேருக்கு மட்டுமே அவனைப் பத்தி நன்கு தெரியும். எப்ப என்ன ரியாக்சன் தருவான் என்று.
கையில் செருப்பு வீற்றிருக்க, அடித்த வேகத்துக்கு இருக்க வேண்டிய ஆவேசமோ கண்களில் கோபமோ இல்லாமல் பயத்தில் கண்கள் உருள, அப்பாவியாக நின்ற நளிர்ப் பெண்ணைப் பார்த்தவனுக்கு இதழ் ஓரம் இகழ்ச்சி சிரிப்பு நெளிந்தது.
‘ஆளையே அடிச்சு சாய்ச்சுட்டு எப்பிடி நிக்கறான்னு பார்த்தியா’ மவளே உனக்கு இருக்குடி’ மனதுக்குள் அவளை வாட்டி எடுத்தவாறே, அவளையே ஆராய்ந்தவன் இடது கையால் கன்னத்தை பிடித்தவாறே மறு கரத்தை அலட்சியமாக ஆத்மாவின் தோளில் போட்டான் ஸ்டைலாக.
“மச்சி கன்னத்துல இருந்து கையை எடுத்து தொலைடா. அசிங்கமா இருக்கு எங்களுக்கே” ஆத்மா துருவ் காலை மிதிக்க.
சரியாக நளிரா கால் மீது செருப்பை போட்டு, ஹீல்ஸ் குத்திய இடத்தின் மீதே அவன் மிதித்திருக்க, பல்லைக் கடித்து அந்த வலியையும் மறைத்தான்.
‘தாடிமாடே காலை எடுத்து தொலையேண்டா’ மனதுக்குள் கத்திக் கதறி கூப்பாடு போட, அவன் கதறல் கடவுள் செவியை அடைந்துவிட்டதோ என்னமோ, ஆத்மா நகர்ந்து நின்னான் ஏதோ ஒரு நினைப்பில்.
“ஏய்!” துருவ் எதிரில் இருப்பவள் மீது கோபத்தை காட்ட தயாராக.
“மச்சி அவசரப்படாதடா. என் மாமா எப்ப வேணாலும் இங்க வருவாரு” ஆத்மா துருவ் காதில் மெல்ல ஓதிவிட.
“அந்த ஒரு ரீசன்காகத்தாண்டா இவ இன்னும் உசுரோட நின்னுகிட்டு இருக்கா. முழியப் பாரேன் அப்பாவி மாதிரி. கண்ணை புடுங்கி அவ கையிலேயே தரனும்டா” அவனும் அதே குரலில் நண்பனுக்கு பதில் தந்தான்.
அதே நேரம் அவளை பார்வையால் அளவிட, தன் முன்பு, தேகம் பயத்தில் நடுங்கிப்போய் குழந்தையாய் நின்றவளைப் பார்த்தவனுக்கும் நம்பவே முடியவில்லை. புள்ள பூச்சி மாதிரி இருக்கா இவளா அடிச்சா? சேச்சே இருக்கவே இருக்காதே என்று இருந்தது.
ஆம் பார்க்குக்குள் வரும்போதே ஆத்மா ரவிக் துருவ் மூவரையும் பார்த்துவிட்டாள் நளிர்.
வெகுநாட்களாகவே சிவன் பூஜைக்கு சாம்பிராணி புகை போடும் போதெல்லாம். சந்தனக்கட்டை வாங்கி அதை உரசி வரும் மரத் தூளில் புகை போடலாமே. அதில் இருந்து வரும் வாசனை ஆளையே மயக்குமே என்று ஆசைப்படுவாள்.
இந்த ஆசை வருவதற்கு காரணம் ஒரு விளம்பரம்தான். அதில் சந்தனகட்டையை உரசி அதில் இருந்து வரும் தூளை மண்ணால் ஆனா பவுலில் நிரப்பி அதில் அவங்க லோகோவை பதிவு செய்வாங்க. பிறகு அதில் சின்ன கணலை வைக்க அதில் இருந்து மெதுவாய் சந்தன புகையானது சுருள் சுருளாக பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.
அந்த விளம்பரம் வந்தாலே டிவி முன் நின்றுவிடுவாள் பார்ப்பதற்கு.
அதனால் இப்பொழுதும் ஆத்மா கையில் உள்ள சந்தன கட்டையை பார்த்தாள். அதோடு அவர்கள் பேச்சும் சிரிப்பையும் ரசித்தாள். நண்பர்கள் பேசிக்கொள்ளும் போது அவர்கள் பேச்சும் சிரிப்பும் ரசிக்கும் விதத்தில்தானே இருக்கும். ஒருவரை ஒருவர் கேலி செய்து கலாட்டா செய்வதும்.
ஒரு டீக்கு நண்பனை எதிர்பார்த்து அதற்கு அவன் “இதுக்கு கூட காசு தர மாட்டியாடா எப்ப பாரு ஓசி டீயே குடி” அப்படின்னு கேட்டுட்டே வாங்கி தருவதும்.
அதற்கு அவன் கோபமே படாமல் வெகுமதி கிடைப்பது போல சிரித்தவாறே அதை வாங்கி குடிப்பதும் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.
ஆண்களால் மட்டும் எப்படித்தான் இது போன்ற நக்கல் நையாண்டி பேச்சுக்களை ரசிக்க முடிகிறது. கொஞ்சம் கூட ரோசமே வராதா அவர்களுக்கு. ஒரு டீக்கு காசு கொடுத்து குடிக்க மாட்டாங்களான்னு யோசிப்பாள்.
ஆனால் குட்டி டம்ளரில் அரைவாசியே இருக்கும் ஒரே டீயை நாலு பேர் சேர்ந்து சண்டை போட்டு குடிப்பதில் ஒரு சுகம் இருக்கும் அவர்களுக்கு. இதுக்கு நிறைவாய் தனித்தனியாக வாங்கி குடிக்கலாமே அங்கும் இவள் யோசனை நிற்கும்.
மொத்தத்தில் ஆண்களின் நட்பை பார்த்து பொறாமைப்படும் ஜீவன்தான் நளிரா.
ஆர்த்தி விடாமல் அதையும் இதையும் சைத்ராகிட்ட பேசிக்கிட்டே வர சைத்ரா அதற்கு உம் கொட்டியவாறே செல்ல இருவரும் நளிராவுக்கு முன் நடந்து சென்றார்கள்.
ஆர்த்தி நளிராவின் பேரை இழுத்து பேசிய பேச்சில் நளிராவுக்கு கோபம் வர, சைத்ரா வேறு அதற்கு ஆர்த்தியை அதட்டாமல் சிரித்துவிட்டாள். அதனால் அவர்களிடம் சண்டை போட்டவள் அவர்களுக்கு பின்தங்கி நடந்தாள்.
ஆத்மா கையில் இருக்கும் கட்டயையும் அவர்கள் அதைப் பற்றி பேசும் லட்சணத்தையும் கண்டவளுக்கு யாரவாது கோபக்கார பொண்ணுங்க இதை அரையும் குறையுமா கேட்டா நிச்சயம் இவங்களுக்கு அடிதான் விழும் என்று நினைத்தவள் அறியவில்லை அந்தப் பொண்ணு தன் உடன்பிறந்த அக்காவாக இருப்பாள் என்று.
சைத்ரா காலில் இருக்கும் செருப்பை கழட்டுவதைப் பார்த்துக் கூட கால்ல கடிச்சிருக்கும் போல அதான் கழட்டுகிறாள் என்று நினைத்தாள். ஆனால் அடுத்து நடந்த காரியம் பார்த்து, “அச்சோ அக்கா” ஓடிப்போய்த் தடுக்கும் முன் அவன் கன்னத்தில் செருப்படி விழுந்துவிட்டது.
நளிரா இழுத்த வேகத்தில் சைத்ராவும் அவள் கையைப் பற்றியவாறே நின்ற ஆர்த்தியும் சற்று தள்ளி விழுந்துவிட்டனர்.
செருப்பை பிடுங்கிய அவன் முன் குற்றவாளியாக தெரிந்தாள்.
“டேய் பண்ணுறதை பண்ணிட்டு முறைக்கிறியா?” சைத்ரா ஆர்த்தியை விலக்கிவிட்டுட்டு அங்கே வர,
எதிரில் நின்றவனின் எரிப்பது போன்ற பார்வையில் அரண்டு போனவள், “சாரி சாரி வெரி சாரி சார்”
அவசர அவசரமாக மன்னிப்பைக் கேட்டவள், சைத்ரா வந்து தேரை இழுத்து தெருவில் விழும் முன்,
“அவர்கள் போனதும் அதிர்ந்து நின்ற ஆத்மாவும் ரவிக்கும். அதிர்ச்சி விலகாமல் கண்களை விரித்தவாறே கன்னத்தை இடது கையால் பற்றியவாறே நின்ற நண்பனைப் பார்த்து குபீர் என்று சிரித்தே விட்டார்கள்.
“டேய் மச்சி என்னடா இது?” வயிற்றை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் நடந்து சிரித்தவர்களைப் பார்த்தவனுக்கு வெறும் சாரி கேட்டதோடு திரும்பித் திரும்பிப் பார்த்து ஓடும் நளிர்பெண்ணை பார்க்கையில் கடுப்பாய் வர பல்லைக் கடித்தவன்,
“டேய் இப்ப வாய மூட முடியுமா முடியாதா?” சத்தம் போட்டான். ஒரு பக்க கன்னம் சுரீர்ன்னு வலியடுக்க, கால் வேறு நண்பன் என்ற காட்டெருமை மிதித்ததால் அதுவேறு வலி உயிர் போனது. ஒரு மனுஷனுக்கு எங்கிருந்தெல்லாம் ஆபத்து வருதுன்னு பாரேன், அவன் முகம் அப்பட்டமாய் வலியை காட்டிட. ரவிக் ஐஸ் கட்டியோடு அங்கே வந்தான்.
“எங்கே திரும்புடா, இதை வச்சா வீக்கம் போகும்” சொல்லிட்டே அவனுக்கு ஒத்தடம் தந்தவனுக்கு எப்படி அடக்கினாலும் சிரிப்பு சிரிப்பா வந்தது.
“சரி சரி வா மச்சி. இன்னைக்கு சரக்கு என் செலவு, சைட் டிஷ் ஆத்மாவுது” எதைச் சொன்னால் துருவ் கோபம் அடங்கும் எனத் தெரிந்து ரவிக் சொல்ல.
“சரி கிளம்புங்க போகலாம்” அப்போதே நடந்ததை மறந்து அவர்களோடு நடந்தான் துருவ். மறந்தானா? என்று கேட்டால் அது வடுவாக பதிந்து போனது என்றுதான் சொல்லணும். இதையே நினைத்து டென்ஷன் ஆனால் ஒன்று அறிவுரை சொல்ல முனைவார்கள் அல்லது அதையே சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள், அதில் இரண்டுமே தப்பில்லையே.
அதனால் நண்பர்கள் கேலிச் சிரிப்பில் இருந்து தப்பிக்க மறப்பது போல நடித்தான் என்று சொல்வதுதான் சரியாகும்.
செலவு தங்களுடையது என்று சொல்ல அவனும் அவர்களோடு நடந்தான்.