அரண் 38
ருத்ர பிரசாத்தின் அரைகூவலான பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துருவன் அவன் கூறும் விடயங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டான்.
துருவனை முறைத்துப் பார்த்தபடி நெஞ்சில் இருக்கும் வஞ்சங்களை வாய் வழியாக கொட்டத் தொடங்கினான் ருத்ர பிரசாத்.
“உங்க அப்பன் தான் எங்க அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணம் அது உனக்குத் தெரியுமா..? உன்னோட உயர்திரு மரியாதை மிகு தனபாலுக்கு இது எல்லாமே தெரியும். ஆனா இருந்தும் அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பணத்துக்காக சொந்த நண்பனேயே உயிருக்கு போராட வச்ச ஒரு கேவலமான பிறப்பு உங்க அப்பா..” என்று ருத்ர பிரசாத் பொங்கி எழ துருவனுக்கு அனைத்தும் இருண்டு போனது.
“என்ன சொல்ற என்னோட அப்பாவா நோ வே..” என்று தந்தையின் மீது உள்ள பாசத்தில் அவரைப் பற்றி இழிவாக நினைக்க மனம் சற்றும் அனுமதிக்கவில்லை. அதனால் அவனை மீறியே வார்த்தைகள் எரிமலை போல் வெடித்து வெளியே வந்தன.
துருவனை இலக்கரமாக பார்த்து ஒரு ஏளனப் புன்னகை உதிர்த்து விட்டு,
“ஆமா உன்னோட அப்பன் தான்டா..” என்று வார்த்தைகள் மூலம் இடித்து உரைத்தான் ருத்ர பிரசாத்.
அவனது ஆணித்தனமான பேச்சிலும் சிவந்து செங்கனல் போல் இருக்கும் கண்களிலும் எங்கு தேடியும் பொய் என்பதையே காணவில்லை.
அவனது உணர்வுகளை புரிந்து கொண்ட துருவன் எச்சிலைக் கூட்டி விழுங்கிய படி,
“உங்க அப்பாக்கு என்ன ஆச்சு..?”
“இன்னும் உயிரோட தான் இருக்காரு ஆனா…” என்று அவன் எதனையோ சொல்ல எண்ணியவன் அதனை சொல்ல முடியாமல் உதடுகள் நடுங்க பெரும் தவிப்பால் ஆட்கொள்ளப்பட்டு நிற்க திராணியற்று அருகில் இருந்த தூணை பிடித்துக் கொண்டு மனதில் பொங்கும் வேதனைகளை சமாளிக்க படாத பாடு பட்டான்.
அவனது தவிப்பை பார்த்த துருவனுக்கும், அருகில் அறையில் இருந்து ஜன்னல் வழியாக நடப்பவை அனைத்தையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வள்ளிக்கும் மற்றும் அங்கு கூடியிருக்கும் சில அடியாட்கள் என இவர்கள் யாவரும் ருத்ர பிரசாத் கூறப்போகும் அடுத்த சொற்களுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அப்படி ருத்ர பிரசாத்தின் தந்தைக்கு இறப்பை விட மோசமான சம்பவம் என்ன நடந்திருக்கும் என்று அனைவரும் தங்களது மனம் போகும் போக்கிற்கு மிகவும் மோசமாக சிந்திக்க துருவனுக்கோ நடந்தது என்ன என்று அறிய முடியாமல் மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
ரேகா ருத்ர பிரசாத்தின் அருகில் வந்து “அண்ணா..” என்று அவனை ஆறுதலாக அணைத்துக் கொள்ள அவளது அணைப்பை ஏற்றுக்கொண்டு விடுவித்த ருத்ர பிரசாத் குரலை செருமிக் கொண்டு,
“இன்னும் உயிரோட தான் இருக்காரு ஆனா… இருந்தும் என்ன பயன் உடம்புல உயிர் இருந்தும் ஜடமாத்தான் திரிகிறார் அவர் அப்படி அசைவற்ற மரம் போல இருந்து என் கண் முன்னே சித்திரவதை படுவதை விட இறந்தே போய்விடலாம் ஒரு மகனா நான் இப்படி சொல்றேன்னா உனக்கே புரிஞ்சிருக்கும் அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்ன்னு..” எனக் கூறிய ருத்ர பிரசாத்தின் இடது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கீழே விழுந்தது.
அதனை பார்த்த துருவன் மிக மெல்லிய குரலில் ருத்ர பிரசாத்தை பார்த்து,
“ஏன்..? என்ன ஆச்சு..?” என்று நடந்த விடயங்களை கண்டறிய ஆர்வமாகக் கேட்டான்.
“ஏன்… ஏன்… ஏனுன்னு எவ்வளவு சர்வசாதாரணமா நீ அந்தக் கேள்வியை கேட்டுட்டே ஆனா அதுக்கான பதிலை சொல்லுறதுக்குள்ள என்னோட மனசு எவ்வளவு வேதனையை சந்திக்கும்னு உனக்குத் தெரியுமா…? எல்லாரும் வாழ்க்கையிலையும் அவங்களுக்குன்னு ஒரு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல், ஹீரோன்னு யாராவது இருப்பாங்க
எனக்கு எல்லாமே எங்க அப்பா தான் அவரு எப்பவுமே எனக்கு அப்பாவா நடந்துக்கிட்டதே இல்லை என்னோட பெஸ்ட் பிரண்டு தான் நான் எல்லார்கிட்டயும் அப்படித்தான் அவரை இன்டெர்டியூஸ் பண்ணி வைப்பேன் என்னோட எல்லாமே அவரு தான்.
எப்பவுமே என்னோட அட்டாச்சா தான் இருப்பார் சின்ன வயசிலேயே அம்மா இனம் தெரியாத ஒரு நோய்வாய்ப்பட்டு இறந்து போயிட்டாங்க அதுக்கு அப்புறம் எங்க ரெண்டு பேரையும் வளர்த்தது என்னோட அப்பா தான் அம்மா இறக்கும் போது அப்பாக்கு 32 வயது எனக்கு 12 வயது ரேகாக்கு எட்டு வயசு அந்த நேரம் அவர சொந்த பந்தமெல்லாம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரை கட்டாயப்படுத்தினாங்க.
ஆனா அப்பா எங்களுக்காக எங்களுடைய எதிர்காலத்திற்காக அதை பண்ணிக்கல வர்ர சித்தி எங்களை கொடுமைப்படுத்தி வாங்களோ என்ற பயத்திலேயே அப்பா திருமணத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை எங்களுக்காக அல்லும் பகலும் உழைச்சு எங்களோட சந்தோஷத்துக்காக அவரு ரொம்ப கஷ்டப்பட்டார்
அப்போ அப்பா அம்மா நகைகள் எல்லாத்தையும் கொண்டு போய் வித்து அந்த காசுல சுயமா தொழில ஆரம்பிச்சாங்க அந்த தொழில்ல பார்ட்னரா வந்தவர்தான் உங்க அப்பா.
ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா ஒண்ணா அந்த தொழில்ல முன்னேறிக் கொண்டு வந்தாங்க.
அப்போ ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே வளர்த்துக் கொண்டு வந்தாங்க இந்த மும்பை நகரத்துல தொழிலாளர்கள் பெரும்புள்ளிகளா அவங்க வளர்ந்து வரும் போது அவர்களது நட்பை பார்த்து இந்த ஊரே மெச்சிச்சு எப்படி அவர்கள் நட்பு குலைக்கனும்னு பல பேர் பல திட்டங்கள் போட்டாங்க ஆனா ஒண்ணுமே சரி வரல
இவங்களும் தங்களுக்குள்ள இருக்கிற நட்பை அனைவரும் பார்த்து பொறாமை படற அளவுக்கு அவ்வளவு அன்னியோன்யமா இருந்தாங்க
ஒரு ஏலம் நடக்குதுன்னா வீரா தனபால்னு சொன்னாலே யாருமே அந்தப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டாங்க.
எங்க பார்த்தாலும் அவங்களுக்கு தான் வெற்றி கொடிகள் எல்லா இடமும் அவங்களோட பேர்தான் முட்டி மோதி திரிந்தது.
அப்போதான் அவங்களோட வாழ்க்கையில மறக்க முடியாத அந்த சம்பவம் நடந்துச்சு.
உங்க அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் முரண்பாடு வந்துட்டு அது எப்படியும் சமாளிக்கிற மாதிரி சமாளித்து விடலாம் என்று நினைத்தவர்கள் இரண்டு பேரும் இணைந்து செய்த பிசினஸ் ஒன்னுல எல்லா விஷயமும் அத்துமீறிப் போக அவங்கள அறியாம பெரிய நஷ்டம் வந்திருச்சு
அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பல கோடி ரூபாய் தேவை அந்த நஷ்டம் எங்க அப்பாவினால் தான் வந்ததுன்னு உங்க அப்பா அதுக்கு காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாரு அதுல பெரிய பிரச்சனையாகி அன்னையிலிருந்து ரெண்டு பேரும் தனித்தனியாக பிசினஸ் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க
உங்க அப்பாவையும் எங்க அப்பாவையும் பிரிக்கோனும் என்று சுத்திட்டு இருந்த கழுகு கூட்டத்திற்கும் நரி கூட்டத்திற்கும் பெரிய சந்தோஷம்
எல்லோரும் கைகொட்டி சிரிக்க தொடங்கினாங்க ரெண்டு பேரும் பிசினஸ தனியா செய்ய ஆரம்பிச்சு சில காலம் அவங்களோட சேர்ந்த மத்த நரி கூட்டங்கள் அவங்களுக்குள்ள இருந்த சின்ன விரிசல பெருசாக்கத் தொடங்கினாங்க
அவங்களுக்குள்ளே இருந்த கோபதாபங்களை அதிகரிக்கும்படி பல வதந்திகளை பரப்பினாங்க அதன் மூலமா ரெண்டு பேரும் பிசினஸ்ல நேருக்கு நேர் மோத ஆரம்பிச்சாங்க
உங்க அப்பா நடந்த பிரச்சனைக்கு நஷ்ட ஈடு கேட்டு எங்க அப்பா மேல கோர்ட்ல கேஸும் பதிஞ்சுட்டாரு அந்த நேரம் எங்கப்பா வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள்ல ஒருவராய் இருந்தாரு
அப்படியே முன்னேறிக் கொண்டு வரும்போது தனபாலும் அதே வேகத்துல ஒவ்வொருத்தரையும் வீழ்த்திக் கொண்டு மேலும் மேலும் முன்னேறி அப்பாவுக்கு இணையா வந்து நின்னாரு
அப்படியே கோர்ட்ல கேசும் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் எங்கப்பா ரொம்ப டென்ஷனா வந்தாரு வந்ததும் போன் எடுத்து,
“தனா நீ இப்படி செய்தது சரி இல்ல நான் உன்கிட்ட நேர்ல பேசணும் என் மேல எந்த தப்பும் இல்லை நாம கொஞ்சம் நேர்ல பேசுகிறது நல்லது நான் அப்படி செஞ்சி இருப்பேன்னு நீ நம்புறியா நான் எதுக்கும் முழுசா விசாரிச்சிட்டு உன்கிட்ட பேசுறேன் அதுவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இரு இத பத்தி யார்கிட்டயும் சொல்லாத அதோட எந்த நடவடிக்கையும் எடுக்காத ப்ளீஸ் எனக்காக..” என்று கெஞ்சினார் எங்க அப்பா.
அப்பாவை பார்க்கவே பாவமா இருந்துச்சு உங்க அப்பா அந்த பக்கத்தில் இருந்து என்ன சொன்னாரோ தெரியாது நான் ரூம்ல இருந்து படிச்சுக்கிட்டு இருந்தேன்
அப்பா ரொம்ப சத்தமா “நான் தான் சொல்றேன்ல்ல நீ அப்படி செய்தா பிறகு நடக்கிறது வேற..” என்று ஆக்ரோஷமாக கத்தினார்.
அவர கத்தல், கதறல் எல்லாமே இப்பவும் என் காதில் ஒளிச்சுக் கொண்டுதான் இருக்கு, கொஞ்சம் கூட இரக்கமற்ற நயவஞ்சகன் உங்க அப்பா.
ஏதோ ஒரு போராட்டத்துக்குள்ள எங்கப்பா சிக்கி தவிச்சு கொண்டிருந்தேர்.
உடனே போன உங்க அப்பா கட் பண்ண திரும்பவும் அவருக்கு அழைப்பு எடுத்து,
“ப்ளீஸ் தனா முதல் நான் சொல்றதை கேளு உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தாரேன் இப்படி செய்யாத..” என்று முதல் கோபமாக எழுந்து வார்த்தைகள் பின் இயலாமையாக தோன்றி அவரது கண்களில் இருந்து மாறாக நீர் பெருக்கெடுத்தது.
“நீ செய்ற விஷயத்தால என்னோட ஒட்டுமொத்த தொழில் சாம்ராஜ்யமும் அழிஞ்சு போயிரும் அதனால ப்ளீஸ் இப்படி செய்யாதே..” என்று தேம்பித் தேம்பி அழுதாரு
எங்க அப்பா அம்மா செத்ததுக்கு கூட அழுததில்லை கண்ணுல இருந்து கண்ணீரை வரல
ஆனா உங்க அப்பா என்ன செஞ்சாரோ என்ன சொன்னாரோ தெரியல அப்படியே அழுதபடி மயங்கி விழுந்தவர் தான்.