‘அச்சோ போச்சு போச்சு அப்ப எல்லாம் கனவு தான் போல, அவர் என்கிட்ட பேசவே இல்லையா, இப்புடி எல்லாமா கனவு வரும்’ என வழக்கம் போல் விஷ்ணு பாப்பா தனக்கு தானே குழப்பி கொண்டது,
அதை கண்ணாடி வழியே பார்த்த ப்ரதாப்போ ‘இது எல்லாம் கடைசி வரை திருந்தவே திருந்தாது எல்லாம் என் நேரம்’ என கையில் வைத்திருந்த சீப்பால் நெற்றியில் அடித்து கொண்டவன்,
‘முட்டாள் கொஞ்ச நேரத்திற்கு புலம்பிட்டே இரு’ என சொல்லி கொண்டவன் அதன் பின்பும் பேசவில்லை... மெரூன் கலர் சர்ட் அதற்கு தகுந்த போல பேன்ட் அணிந்து கொண்டு தயாராக,
அவனையே பார்த்து கொண்டு சிலையாக நின்று இருந்தவளுக்கு வழக்கம் போல கண்ணீர் எட்டி பார்க்க, முகத்தை பக்கவட்டாக திரும்பி கொண்டாள்,
“விஷ்ணு” என ப்ரதாப் குரல் காதில் விழ, ‘அப்போ எதுவுமே கனவு இல்லை… எல்லாமே நிஜம் தானா’ என்ற சந்தோஷத்துடன் வேகமாக கண்ணை துடைத்தப்படி விஷ்ணு திரும்பி பார்க்க,
ப்ரதாப்போ வாரிய தலையை மீண்டும் கலைத்து கையால் சரி செய்து கொண்டு இருந்தான்…
‘அப்போ இதுவும் கனவா, பகல்ல முழிச்சிட்டு இருக்கும் போது கூடவா கனவு வரும்’ அச்சோ பாவம் குழந்தை புள்ள குழம்பி போய் நிற்க, குழப்பி விட்ட கள்வன் அவனோ கண்ணாடி வழியே அதை பார்த்து சிரித்து கொண்டான்.. ஆனால் முகத்தில் அதை வெளிக்காட்டாது நின்று கொண்டு இருந்தான்..
இப்புடியே நின்று குழம்பிட்டே இருக்க போறியா, இல்லை போய் குளிச்சுட்டு கோவிலுக்கு போக ரெடியாக போறியா ப்ரதாப் குரல் மீண்டும் கேட்க,
தலை குனிந்து நின்று கொண்டு இருந்த விஷ்ணுவோ ‘இதுவும் கனவு தான் வேணாம்ம் வேணாம் எதுவும் வேண்டாம் நான் யாரை பத்தியும் நினைக்க மாட்டேன் எந்த கனவும் எனக்கு வேணாம்’ என கண்ணை மூடி கொண்டே திரும்பி நின்று சொன்னவள் கண்ணை திறக்க,
மெத்தையின் மீது இரவு ப்ரதாப் கொடுத்த நெக்லஸ் பாக்ஸ் அதன் அருகே இப்போது அவள் அணிவதற்கான புத்தம் புது சல்வார் இருந்தது..
“அப்ப எதுவும் கனவு”…
“இல்லைங்க வாசுகி மேடம்” என்று ப்ரதாப் குரலில் மீண்டும் அவன் புறம் திரும்பி பார்க்க ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது ஸ்டைலாக சாய்ந்து நின்று கன்னத்தின் உள்பக்கமாக நாக்கை சுழற்றியபடி என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க,
“நீங்க ரொம்ப மோசம் எப்ப பாரு இப்புடி தான், ஏன் இப்புடி பண்றீங்க?” என ப்ரதாப்பை நெருங்கி சிணுங்களோடு நெஞ்சில் குத்த,
“நானா? நான் என்னடி பண்ணுனேன், விடிய விடிய அவ்ளோ விளக்கம் கொடுத்தும், காலையிலே குழம்பிட்டு நின்னுட்டு, என்ன அடிக்க வேற செய்றியா?,நியாயப்படி பார்த்த நான் தான்டி என்னை சந்தேகப்பட்டதுக்கு உன்னை அடிக்கனும்… நீ அடிக்கடிற ராஸ்கல்” என செல்லமாக ப்ரதாப் மிரட்ட,
“ஆ… நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம் என்னை குழப்பி விட்டிங்க தானே”
“நான் என்னடி பண்ணுனேன்”…
“நான் சிரிச்ச அப்ப நீங்க முறைச்சீங்க தானே” அதான் நான் குழம்பிட்டேன் என சிணுங்கியவளை மீணடும் முறைத்தவன்,
“நான் முறைசச்துக்கு இது தான் காரணம்” என சட்டை பட்டனை விலக்கி விட்டு காட்ட, கழுத்தில் தொடங்கி மார்பு பகுதி வரை நேற்றைய கூடலில் அவள் நகத்தால் வரைந்த கோலங்கள் தென் பட்டன..
அய்யோ என வாயில் கை வைத்தவளுக்கு வெட்கமும் வேறு வந்து விட்டது,
“என்னடி பண்ணி வச்சு இருக்க, பத்து நாள் பட்னியா கிடந்தவன் சாப்பாடு பொட்டலத்தை வெறி கொணடு பிரிப்பானே அது போல நகத்தை வச்சு இப்புடி கீறி கீறி வச்சு இருக்கக இங்க மட்டும் இல்ல உடம்பு முழுகக், குளிக்கும் போது சோப் கூட போட முடியலை எரியுதுடி”,
“அதுக்கு நான் முறைச்சா, நீ உன் இஷ்டத்திற்கு கணட்மேனிக்இஉ கற்பனை பண்ணிட்டு என்மேல் பழி போடுறியா” ப்ரதாப் முறைக்க,
“ஹா ஹா சாரி” என அசடு வழிய சிரித்தவளை முறைத்தவன்
“என்ன பண்ணினாலும் நாய் வாலை நிமிரத்த முடியாதுன்னு சொல்லுவாங்க அது உண்மை தான் போல,
“என்னை நாய்ன்னு சொல்றீங்களா”,
“ச்சே ச்சே இல்ல இல்ல நாய் வாலுன்னு தான் சொன்னனேன்” என்ற ப்ரதாப் சிரித்தான்..
“உங்களை” என எக்கி அவன் கன்னத்தில் கடிக்க போக,
“போடி அந்த பக்கம் குளிக்காம பண்ணாம டெர்ட்டி கேர்ள் என்னை எச்சை பண்ணாத” என பர்தாப் முகத்தை அங்குமிங்குமாக திருப்பினான்..
அவன் கால் மீது ஏறி தாடையை அழூந்த பற்றி ப்ரஸ் பண்ணாம கிஸ ்பண்ணுனா தான் புருஷன் பொண்டாட்டி க்குள் சண்டை வராம அவங்க ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங்க் ஆகும்ன்னு யாரோ ஒருத்தவங்க சொன்னாங்க என்றவள இதழில் மூத்தமிட்டு விலக,
அவளை விலக விடாது பிடித்த ப்ரதாப் “இப்புடி உதட்ட ஒத்தி எடுத்தா எப்புடி டி ஸ்ட்ராங்காகும்.. உறவு ஸ்ட்ராங்கா இருக்கனும்னா முத்தமும் ஸ்ட்ராங்கா இருக்க வேணாமா?” என கேட்டவன் அவள் இதழை அழுத்தமாக பற்றி கொள்ள, முத்தத்தோடு முற்று பெறுமா என்ன? மீண்டும் ஒரு முறை கட்டிலை தங்கள் காதலால் அலங்கரித்தவர்கள் குளித்து கோவிலுக்கு செல்வத்திற்கு தயாராகி வெளியே வந்தனர்..
விஷ்ணு அவன் கையோடு கை கோர்த்து கொண்டு நடக்க, கையை பிரித்து விட்டு நடக்க ஆரம்பித்தான்..
அவளிடம் காட்டும் அன்னோனியம் கேலி கிண்டல் அனைத்தும் அறைக்குள் மட்டுமே, அது அனைத்தும் அவளுககானது அவர்களுக்கானது..
அறையை விட்டு வெளியேறினால் உணர்வுகளை அவ்வளவு சீக்கிரம் வெளிக்காட்டாத அதே ப்ரதாப் தான்.. அவளிடமும் சற்று தள்ளியே தான் நிற்பான்..
ரொம்ப்த்தான் உதடு சுழித்தபடி அவன் பின்னே நடந்து வர,
.வம்சி தன் அறையிலிருந்து வெளி வந்தான்..
அண்ணன் மற்றும் விஷ்ணு இருவரின் முகத்திலிருந்த பொலிவே சொன்னது.. அவர்களுக்குள் இது நாள் வரை இருந்த பிரச்சினை சரியாகி விட்டது என்று,
அப்புறம் பேபி என் அண்ணனை கவுக்குறேன்னு சொல்லி என்கிட்ட கட்டுன பேட்ல ஜெயிச்சிட்ட போலயே விஷ்ணுவை பார்த்து வம்பு இழுக்கவே நக்கலாக கேட்டான் வம்சி..
அதில் ப்ரதாப் திரும்பி விஷ்ணுவை தீயாய் முறைத்தபடி நடக்க,
அச்சச்சோ இல்ல இல்ல பொய் பொய் என்றவள்
“அய்யா சாமி வம்சி நான் உங்களுக்கு அப்புடி என்னய்யா பாவம் பண்ணுனேன்.. இப்புடி கோர்த்து விடுறீங்களே, ரொம்ப கஷ்டப்பட்டு குரங்கு வித்தை எல்லாம் காட்டி கீழே இறக்கி இருக்கேன்.. திரும்ப மலையேத்தி விட்டுறாதீங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகும்” என விளையாட்டாய் கையெடுத்து கும்பிட,
சிரித்த வம்சியோ “மாட்டேன் மாட்டேன் என்சாய் என்சாய்” என சொல்ல,
“எல்லாம் என் நேரம், எனக்கு ஒரு டைம் வரும் அப்ப உங்களை பார்த்துக்கிறேன் வம்சி” என ப்ரதாப் முன்ன நடக்க, பின்ன இவர்கள் இருவரும் பேசி ஒருவரை ஒருவர் நக்கலடித்தபடி மாடியிலிருந்து மூவரும் கீழ் இறங்கி வந்தனர்..
விஷ்ணுவிற்கு பிறந்த நாள் என்பதாலும், அது மட்டுமில்லை இத்தனை நாள் பிரிந்து இருந்த பார்த்தி பவித்ரா சேர்ந்ததுக்காக குடும்பமாக கோவிலுக்குள் சென்று வரலாம் என ரங்கநாயகி பாட்டி அழைத்து இருக்க,
உதயகுமார் கல்யாணி பார்த்தி பவித்ரா என் குடும்பமாக வந்து இருந்தனர்..
“வாங்க” என ப்ரதாப் ஒற்றை வார்த்தையில் அனைவரையும் வரவேற்க,
அவர்களை பார்த்த விஷ்ணுவிற்கு சந்தோஷம் பொங்கியது. அம்மா என கூவியபடி கல்யாணி அருகே சென்றாள்...
ப்ரியா என முதலில் சிரித்தவர் முகம் பின்பு கடுமையாக மாறியது..
குழம்பிய விஷ்ணு என்னம்மா என கேட்க,
அவர் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.. ஆனால் ம்.. ம்… என கண்ணால் ஏதோ ஜாடை காட்ட அவளுக்கு புரியவில்லை.. என்னம்மா சொல்ற புரியலை என கிசுகிசுப்பாய் கேட்டாள்..
அவள் அருகே நின்று இதை கவனித்த ப்ரதாப்பிற்கும் என்ன சொல்றாங்க என முதலில் ஒன்னும் புரியவில்லை… ஒரு நொடி கழிந்து புரிய சொதப்பிட்டோம் என நெற்றியை தன் விரல் கொண்டு கீறி கொண்டான்…
தன்னை சுட்டி காட்டி தான் ஏதோ சொல்ல வருகிறார்.. பொட்டை தான் கவனிக்காமா கோணையா வச்சிட்டம்மோ என நெற்றியை தொட்டு பார்த்து அப்புடியே கம்மல் சரியாக இருக்கின்றதா என காதை வருடி விட்டு எல்லாம் சரியா தானே இருக்கு, இன்னும் இந்த அம்மா சொல்லாமலே லிவிங்ஸ்டன் மாதிரி ம்.. ம்ன்னு எதை தான் சொல்றாங்க என மனதிற்குள் புலம்பியபடி கழுத்துக்கு வந்தவளுக்கு விஷயம் புரிந்து விட்டது…
சற்று முன்பு நடந்த கூடலின் போது கழற்றிய தாலி கொடியை இருவருமே மறந்து விட்டு கீழ் வந்தது.. விஷ்ணு திரும்பி ப்ரதாப்பை முறைக்க, அவனும் இவளை தான் முறைத்து கொண்டு நின்று இருந்தான்..
என்னடி இது என கல்யாணி மகளை சன்னக்குரலில் கண்டிக்க,
இது ஒன்னும் புதுசு இல்ல. உங்க பொண்ணுக்கு தாலி எப்பவும் உறுத்தும் போல அப்ப அப்ப இப்புடி தான் கழட்டி வச்சுருவா.. இந்த கூத்து இந்த வீட்டில் அடிக்கடி நடக்கும்.. கொஞ்ச நாள் இல்லாம இருந்தது இப்ப மறு.. என பேசி கொண்டே போன விசாலாட்சி ப்ரதாப் பார்த்த பார்வையில் மேலும் பேசாமல் அமைதியாகி விட,
உனக்கு எத்தனை தடவை சொல்றது விசா ப்ரியா விஷயத்தில் தலையிடாதுன்னு என தேவகியும் சத்தம் போட,
மம்மி தாலி பொட்டு மூன்று க்ரின்ஞ்சா பேசாபா அமைதியா இருங்க என வம்சியும் சத்தம் போட்ட வம்சி,
தாலியை கழட்டி வச்சதுக்கே இவ்வளோ பேசுறியே மம்மி அங்க உன் மருமக கல்யாணமானதையே மறைச்சிட்டு சிங்கிள்ன்னு சொல்லி சுத்திட்டு இருக்கா, அந்த விஷயம் தெரிஞ்சா என்ன எல்லாம் பேச போறீயோ வம்சி தன் நிலையை எண்ணி புலம்பி கொள்ள
என்னமோ பண்ணுங்க என விசாலாட்சி உள்ளே சென்று விட்டார்..
இதுக்கு எல்லாம் நீங்க தான் காரணம் என கணவனை முறைத்தவாறு தாலிக்கொடியை எடுக்க அறைக்கு செல்ல போனவளை நான் எடுத்து வரேன் அங்குமிங்கும் அலையாதே எனும் விதமாக தடுத்த ப்ரதாப் மாடியேற,
ஷ்…. ஆ…. விஷ்ணு அலறல் சத்தம் நான்கு மாடியேறிய ப்ரதாப் பதறியபடி திரும்பி பார்க்க,
“உன்னால் பாருடி சம்மந்தி வீட்டு முன்ன எவ்ளோ அசிங்கமா போயிட்டு” என விசாலாட்சி பேசிய கோவத்தில் கல்யாணி தான் மகளை கிள்ளி வைக்க அதில் தான் விஷ்ணு அலறி இருந்தாள்….
மாமியாரை முறைத்தவாறே விறுவிறுவென கீழ் இறங்கி வந்த ப்ரதாப் கல்யாணி அருகே நின்று இருந்த மனைவியையும் அவனோடு அறைக்கு அழைத்து சென்றான்..
மாடிப்படி ஏறும் போதும் மாமியாரை முறைப்பதை நிறுத்தவில்லை ப்ரதாப்..
“பார்த்தி மாப்பிள்ளை ஏன்டா என்னை இவ்வளோ கோவமா பார்க்கிறார்”..
“பின்ன என் அண்ணாவோட செல்லாகுட்டியை நீங்க காயப்படுத்தி இருக்கீங்க அத்த… முறைக்கிறதோட விட்டாரேன்னு சந்தோஷப்படுங்க.. இதே இடத்தில் நானோ மாமாவோட இருந்திருந்தோம் இந்நேரம் மசாலா பேக்டரி தான்” வம்சி சொல்லி சிரிக்க
பார்த்திபனும் “ஆமா ஆமா” என்றான் சிரித்தப்படி,
“அத்த என் அண்ணா கிட்ட நீங்க இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டீங்க” பவித்ராவும் கல்யாணியை விளையாட்டாக பயமுறுத்தினாள்..
அதன் பின்பு ப்ரதாப் விஷ்ணு கீழே வந்த பின்பு அனைவரும் கோவிலுக்கு ஒன்றாக குடும்பமாக சென்றனர்..
ஆனால் கோவிலில் ப்ரதாப் மனைவியை கல்யாணிகிட்ட கூட அனுப்பவில்லை… தன் பக்கமே வந்து இருந்தான்..
“அவ என் பொண்ணு அவளை திட்டவோ கிள்ளவோ எனக்கு உரிமையில்லையா இது எல்லாம் ரொம்ப அந்நியமா இருக்கு” கல்யாணி சொல்ல,
“அத்த இதென்ன ப்ரமாதம் இதை விட பயங்கரமான அநியாயத்தை எல்லாம் பொண்டாட்டியை லவ் பண்றேங்கிற பேர்ல் எங்கண்ணா பண்ணி இருக்கார்,அவர் ஒரு காதல் தீவிரவாதி அப்புடி தான் இருப்பார் கண்டுக்காதீங்க” வம்சி சொல்ல, அவன் கையில் அடித்த தேவகி,
ப்ரியான்னா அவனுக்கு அவ்ளோ இஷ்டம் அதான் இப்புடி தப்பா எடுத்துக்காத கல்யாணி என தேவகி சொல்ல,
“அப்புடி எல்லாம் இல்ல அண்ணி.. இப்புடி என் பொண்ணை தாங்கும் மாப்பிள்ளையை நான் எப்புடி தப்பா எடுத்துப்பேன்.. எனக்கு உண்மையாவே ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கு” என்றார் கல்யாணி.. உதயகுமாரின் நிலையும் இதுவே..
“எதிர்த்த வீட்டு பொண்ணா அவளை எனக்கு சுத்தமா பிடிக்காது.. கல்யாணம் பண்ண மாட்டேன்னு சண்டை போட்ட எங்கண்ணாவா இதுன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு” ஒரு புறம் பவித்ரா சொல்ல,
“பவிக்கா பிடிக்காம கல்யாணம் பண்ணதுக்கே இவ்ளோ அநியாயம் பண்றாரே.. ஒரு வேளை பிடிச்சு மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தா நம்ம நிலைமை எல்லாம் அதோ கதி தான்” வம்சி சொல்ல தூரத்தில் நின்று இருந்த ப்ரதாப் விஷ்ணு இருவரையும் பார்த்து அனைவரும் சிரித்தனர்..
அதன் பின்பு ப்ரதாப் விஷ்ணு அவர்கள் வாழ்க்கையும் எந்தவித பிரச்சினைமின்றி மகிழ்ச்சியாக இரண்டு மாதம் கடந்து இருந்தது.. விஷ்ணுவிற்கு ஏழாம் மாதம் மாதம்..
அப்புடியே மகிழ்ச்சியாக இருக்க விடுவோமா என லீலா அம்மா சாலாவும், ப்ரதாப் கையில் அடிவாங்கி ஹாஸ்பிடல் வரை மாதகணக்கில் இருந்து வந்த ஷ்யாம் இருவரும் கூட்டாக சேர்ந்து ப்ரதாப்பை பழி வாங்க விஷ்ணுவை ஏதாவது செய்ய வேண்டும் என பயங்கரமான திட்டம் ஒன்றை தீட்ட,
இன்னோரு புறம் நிவேதா தன் முன் இருந்த பார்சலை வெறித்து கொண்டு இருந்தாள்.. அதில் திருமண பத்திரிக்கை ஒன்றை வைத்து இருந்தது… வம்சி கிருஷ்ணா வெட்ஸ் வைஷ்ணவி தேவி என்று அதில் இருந்தது.. இன்னோரு கையில் அவளுக்கும் வஞ்சிக்கும் நடந்த திருமண பதிவு சான்றிதழை சுக்கு சுக்காக கிழித்து குப்பையாக இருந்தது..இரண்டையும் வம்சி தான் அனுப்பி இருந்தான்…. அவனை அப்புடி செய்ய தூண்டி இருந்தது நிவேதாவின் வாய்…
அப்படி என்ன தான் மா பேசுன