“நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போறேன்னே, உன் எலுமிச்சை பழ நிற இடுப்பில் கிறங்கி போறேனே” என ஆபிஸ் டேபிளில் தாளம் தட்டி பாடியவனை முறைத்தவள்
“வம்சி தி இஸ் டூ மச்” என்று அவள் பொய் கோபம் கொள்ளவும்…
“நான் என்ன பண்ணட்டும்மா? சேரியில் நீ தேவதை மாதிரி இருக்கும் போது தானா பாட்டு வருதும்மா, நான் என்ன பண்ணட்டும் என்றவன் தலையில் சிரித்தப்படி கொட்டிய பூரணி தன் இருக்கையில் அமர்ந்தாள்..
அவளின் வலது புறம் நிவேதா அமர்ந்து இருக்க.. இடது புறம் அஸ்வின் அமர்ந்து இருந்து வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள்..
அஸ்வின் நிவேதா இருவருக்குமான இடைப்பட்ட இடத்தில் பூரணியிடம் பேசுவதற்காகவே சேர் போட்டு அமர்ந்து இருந்தான் வம்சி..
“சேரி கட்டிட்டு வந்ததால் இந்த பாட்டா? பூரணி கேட்க,
வம்சி ம்.. என தலை அசைத்தான்…
“நான் சேரி கட்டாம வந்திருந்தா என்ன பாடி இருப்பீங்க” என அவள் கேட்க,
“வம்சி” என்றவள் அவன் தோள்பட்டையில் அடிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு தெரியுமே வம்சியின் பேச்சிலும் எண்ணத்திலும் எந்த விகல்பமும் இல்லை.. அனைத்துமே விளையாட்டுக்கு தான் என்பது..
அலுவலகத்துக்கு வம்சி வந்த புதிதில் ஹாய் பூரி டார்லிங் என்ற அவன் விளிப்பில் அவளும் சற்று பயந்து தான் போனாள்.. ஆனால் போக போக அவன் குணம் புரிந்தவளுக்கு ப்ரதாப் தம்பியா இது என சிரிப்பு தான் வரும்..
வம்சி அவளிடம் மட்டுமில்லை அலுவலகத்தில் இருக்கும் அனைத்து பெண்களோடும் இதை போல் தான் நட்போடு பழகுவான்.. நட்பு அதை தாண்டி அவன் போனதில்லை...
“ஏன் வம்சி பசங்க கூட பேசவே மாட்டிங்களா?” என கேட்டால்,
“ச்சே ச்சே பசங்க கூட பேசுனாலே கடுப்பா வரும்.. எனக்கு இருக்கிற ஒரே பசங்க பிரண்ட் இவன் ஒருத்தன் தான்.. இவனையும் எப்புடிடா கழட்டி விடுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்மா நீ வேற” என ராமை காட்டுவான்..
“ஆ… விடு வலிக்குது.. நீ தானடி சேரி கட்டாம வர போறேன் சொன்ன இப்ப என்னை ஏன்டி அடிக்கிற”
“சுடிதார் போட்டுட்டு வந்திருந்தான்னு சொல்ல வந்தேன்.. ஆனா நீங்க” என அவன் கையில் பூரணி மறுபடியும் கிள்ள,
“ராட்சசி” என தன் கையை தடவியவன், “சுடிதார் போட்டுட்டு வந்திருந்தா சுடிதார் அணிந்து வந்த சொர்கமேன்னு பாடி இருப்பேன்.. ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு வந்திருந்தா ஸ்டைலிஷ் தமிழச்சின்னு பாடி இருப்பேன்... நீ எந்த ட்ரெஸ் போட்டாலும் தேவதை தான் டார்லிங்” என கன்னத்தில் கை வைத்து ரசித்தபடி சொல்ல,
“யாரு நானா? உங்களுக்கு கண்ணு சரியா தெரியலை வம்சி என்னை போய் அழகு தேவதைன்னு எல்லாம் சொல்றீங்க” என அவள் தன் பூசினாற் போல தேகத்தை பார்த்து ஒரு மாதிரி குரலில் சொல்ல,
“ஏன்? ஏன்? உனக்கு என்னடா பூரி குறைச்சல்?.. நல்லா ஆப்பிள் போல கன்னம், முட்டை கண்ணுன்னு அப்புடியே வெண்ணிலா ஐஸ்கிரீம்ல செஞ்ச சிலை போல இருக்கியே.. பேசாம நான் உன்னையே லவ் பண்ணிடலான்னு யோசனையில் இருக்கேன்” என வம்சி கண் அடிக்க,
“உங்களை” என பூரணி மீண்டும் அடிக்க என இவர்கள் இருவர் செய்யும் அலப்பறலயில்,
அங்கு வேறு இருவர்க்கு புகைந்து கொண்டு இருந்தது..
ஒன்று நமக்கே தெரியும் நிவேதா என, ‘பொறுக்கி பொறுக்கி எப்புடி கடல் வறுக்கான்’ என அவள் மனதிற்குள் பொறுமி கொண்டு இருந்தாள் என்றால்,
இன்னொன்று அஸ்வின் தான்.. வம்சி பூரணியிடம் பேசுவதில் வெந்து நொந்து கொண்டு இருந்தான்…
அவனுக்கு வம்சியை கண்டாலே பிடிக்கவில்லை… அவன் பேச்சு நடவடிக்கை எதுவும் பிடிக்கவில்லை.
முக்கியமாக பெண்களிடம் இல்லை இல்லை பூரணியிடம் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை...
அவளிடம் பேசுவதால் தான் வம்சியை பிடிக்கவில்லையோ என்னவோ,
ஆரம்பத்திலே பூரணியிடம் ‘அவனோட பேசாத’ என சொல்ல,
ஏன்டா? என கேட்டாள்..
அதை தான் தனக்கு தானே கேட்டு கொண்டான் அஸ்வின்.. ஏன் பூரணி அவனோட பேசினால் எதுக்கு எனக்கு பிடிக்கவில்லை..
நான் மட்டும் மற்ற பெண்களோடு நட்பாக பேசும் போது.. அவள் மட்டும் வம்சியிடம் நட்பு கொள்வதை எதனால் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை..
அந்த வம்சி மீது ஏன் இவ்வளவு கோவம் இல்ல இல்ல கொலை வெறி வருகின்றதே, எதுக்கு? ஏன்? என தனக்கு தானே கேட்டு கொண்டவனுக்கு கிடைத்த பதிலில் உண்மையில் ஆடி போய் விட்டான்..
காதல்..
பூரணியின் மீது தனக்கு காதலா? இல்ல இல்ல அவ என் ஃப்ரெண்ட், அவள் மீது எனக்கு இருக்கும் உணர்வு நட்பு மட்டும் தான் என பிதற்றியவன் தலையில் நங்கென்று கொட்டு வைத்து இது காதல் தான்டா மரமண்டையா என்றது அவனின் மனமும் உள்ளூணர்வுகளும்,
ஆ… அவளை பக்கத்தில் வைத்து கொண்டே எனக்கான காதலை வெளியே வேறு எங்கோ தேடி இருக்கிறேனே நான் ஒரு பைத்தியம் என தன்னை நொந்து கொண்டவன்,
அது மட்டுமா ப்ரியா மேல் வந்த ஈர்ப்பை காதல் என நம்பி பூரணியையே தூது போக சொன்னேனே, இத்தனை கூத்தையும் செய்து விட்டு இப்போது உன்னை காதலிக்கிறேன் என சொல்லி அவள் முன்பு போய் நிற்க முடியுமா?
அவள் ஏற்பாளா? உன்னை நண்பனா மட்டும் தான் பார்க்கிளேன் என மறுத்து விடுவாளோ? என அவனுக்குள் பல யோசனைகளும் குழப்பங்களும் வந்து மோத, மனதில் காதலை வைத்து கொண்டு சொல்லாமல் மருகி நிற்கின்றான் அஸ்வின்.. பூரணியை போன்றே,
ஆனால் நாளுக்கு நாள் வம்சி பூரணியை மிகவும் நெருங்குவது போல் ஒரு மாயை.. தன்னிடமிருந்து பூரணியை பறித்து விடுவானனோ என்ற பயம்.. இதுக்கு மேல் முடியாது… இன்று காதலை சொல்லியே ஆக வேண்டும் என்ற முடிவோடு இரவு அவள் வீட்டிற்கே சென்று இருந்தான்..
இந்த முடிவுக்கு அவன் வர இன்னோரு காரணமும் உள்ளது.. மதியம் அவசரமான வேலை ஒன்று மாலைக்குள் அவன் முடிக்க வேண்டும்.. அப்போது பார்த்து அவன் கணினி கோளாறு செய்ய,
பூரணியை ப்ரதாப் சைட் விசிட்டிங் ஒன்றுக்காக அனுப்பி இருந்தான்.. அதனால் அவள் கணினியில் வேலை பார்த்து மெயில் அனுப்பும் போது தான் ஒன்றை கவனித்தான்.. அவள் கணினியின் பாஸ்வேர்ட்டாக அவன் பிறந்த தேதியை வைத்து இருப்பதை, அதோடு அவன் பெயரில் ஒரு போல்டர் இருக்க அதை திறந்து பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி.. அதில் அவன் போட்டோ அதுவும் அவனுக்கு தெரியாமலே எடுத்து வைத்து இருந்தாள்.. ஒவ்வொரு போட்டோவின் மேலும் ஐ லவ் யூ என வேறு எழுதி வைத்திந்திருந்தது,
பார்த்த அஸ்வினுக்கு அவனும் என்ன காதலிக்கிறாளா? உள்ளுக்குள் அவ்வளவு குதூகலம்.. ஏன் சொல்லவே இல்ல? என்ன காரணம்? என்னை போல் அவளும் நினைத்து விலகி இருக்கிறாளோ? சொல்லி இருக்கலாமே டி பூரணி, நீ சொல்லலைன்னா பரவாயில்லை நான் சொல்றேன் என வந்து விட்டான்…
“வாடா, என்ன இந்த பக்கம்? ஃப்ரெண்ட் யாரையாவது பார்க்க வந்தியா? இன்னும் சாப்பிடல தானே, டிபன் சேர்த்து செஞ்சிடுறேன் என சாதரணமாக பேசிய பூரணி சமையலறை பக்கம் சென்று விட்டாள்..
இவளால் மட்டும் எப்புடி லவ்வை மனசுக்குள் வச்சிட்டு இவ்வளோ சாதரணமாக என்கிட்ட பேச முடியுது.. என்னால் முடியலையே என புலம்பியவன், காதலை எப்புடி சொல்வது என மீண்டும் ஒரு ஒத்திகை பார்த்து கொண்டு இருக்க, பூரணியும் சமைத்து முடித்து விட்டாள்..
“அஸ்வின் சாப்பிடுடா என்னாச்சு? சாப்பிடமா சப்பாத்திக்கு தடவி கொடுத்துட்டு இருக்க டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடாமல் இருந்தவனை பார்த்து அவள் கேட்க,
ம்.. சாப்பிடுறேன் என்றவன் மீண்டும் சாப்பிடாமலே அமர்ந்து இருக்க,
“குருமா பிடிக்கலையாடா? காரமான இருக்கா? ஜேம் வேணா எடுத்து வரட்டுமா? என எழுந்த பூரணியின் கை பிடித்து அஸ்வின் தடுக்க,
“ஜேம் வேணாமா?” பூரணி கேட்க,
வேண்டாம் என தலை அசைத்தான் அஸ்வின்..
வேற என்னடா வேணும் பூரணி கேட்க,
பெருமூச்சு ஒன்றை விடுத்து தைரியத்தை வரவழைத்து கொண்டவன், “நீ தான் வேணும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியாடி பூசணி” என்றான் அவள் விழிகளை பார்த்தவாறு,
அதில் முதலில் அதிர்ந்த பூரணி.. உண்மையா? அவன் தான் கேட்டதா இல்ல எனக்கு தான் தப்பா ஏதும் காதில் விழுந்து விட்டதா? என அசையாது அவனை பார்த்து கொண்டு இருந்தவள்,
இல்ல இருக்காது அவனை பற்றியே நினைத்து கொண்டு இருந்தால் எனக்கு தான் அப்புடி கேட்கிறது என சுயம் அடைந்தவள்
“அஸ்வின் வர வர உனக்கு எல்லா விஷயத்திலும் விளையாட்டு தான்டா என அந்த பேச்சை சகஜமாக்கும் பொருட்டு சிரித்தவள் தன் கையை உருவ முயல,
“நான் விளையாடல ரொம்ப சீரியஸ்ஸா சொல்லிட்டு இருக்கேன்டி.. ஐ லவ் யூ பூசணி” என்றான் உருவ முயன்ற கையை இறுக பற்றி கொண்டு,
இந்த வார்த்தையை இவன் வாயில் இருந்து வராதா? எத்தனை நாள் ஏங்கி தவித்து இருக்கின்றாள்.. இந்த ஜென்மத்தில் நடக்காது இவன் என்னை ஏற்க மாட்டான் என இவனிடம் காதலை சொல்லாது மனதிற்குள் மறைத்து வைத்து தினம் தினம் எவ்வளவு அழுது கரைந்து இருப்பாள்..
ஆனால் இன்று அவனே உன்னை காதலிக்கின்றேன் என சொல்லி விட்டானே, சந்தோஷமிகுதியில் அழுகை தான் வரும் போல இருந்தது.. விழி கலங்க அவன் கையை பற்ற போனவள்,
‘எனக்கும் லவ்வுக்கும் செட் ஆகாது போலடி.. எந்த பொண்ணும் எனக்கு ஓகே சொல்ல மாட்டேங்குது. போற போக்கை பார்த்தா உன்னை தான் நான் கல்யாணம் பண்ணனும் போலயே, என் தலை எழுத்து அது தான் போல’ விஷ்ணுப்ரியா விஷயத்தில் சோகமாக இருந்தவன் அன்று சொன்னது இன்று அவளுக்கு நியாயபகம் வந்தது..
ஒருவேளை யாருமே ஒத்து வரவில்லை.. வேறு வழியில்லை என இப்புடி சொல்கிறானோ, அப்புடி தான் இருக்கும் இல்லைன்னா அவன் எதிர்பார்ப்புக்கு சற்றும் பொருந்தாத என்னிடம் அப்புடி கேட்பானா என்ற தவறான எண்ணம் பூரணிக்கு தோன்ற..
“ஏய் பூரணி அது எல்லாம் இல்லைடி, உண்மையாவே லவ் பண்றேன்டி.. அதுக்கு உன் பதில் என்ன?” என கேட்டான்.. அவளும் அவனை விரும்புகிறாள் என்பதால் ஆம் என்ற பதிலை தான் தருவாள் என்ற நம்பிக்கையுடன் அவள் முகத்தை பார்க்க...
“இல்ல அஸ்வின் எனக்கு அந்த மாதிரி, நான் உன்னை ஃப்ரெண்ட்டா மட்டும் தான்டா பார்க்கிறேன்” என பொய் சொன்னாள் அவனை பார்க்காது வேறு எங்கோ பார்த்தபடி,
லவ் பண்ணிட்டு இல்லைன்னு ஏன் பொய் சொல்றா? என இந்த பதில் அஸ்வினுக்கு கோவத்தை கொடுத்தது..
“பொய் சொல்லாத நீயும் என்னை லவ் பண்ற தானே எனக்கு தெரியு”ம் என்றான் அஸ்வின்..
எப்புடி தெரியும் என பூரணி அதிர்ந்தாலும் “இல்லைடா உன்கிட்ட யார் சொன்னா”, என்றவள் முன்பு
அவள் கணினியில் இருந்து எடுத்த போட்டோக்களை காட்ட,
ஓ.. நான் காதலிக்கிறேன் என தெரிந்ததால்.. பாவப்பட்டு எனக்காக இப்புடி பேசுகிறானோ என மீண்டும் தவறாக நினைத்த பூரணி, “இல்ல அது அப்போ ஏதோ, இப்ப இப்ப எதுவும் இல்ல” என தட்டு தடுமாறி மீண்டும் பொய் சொன்னாள்..
“இப்ப ஏன் இல்ல பூரணி.. என்னை விட அழகா திறமையா பணக்காரன்னா வம்சி இடையில் வந்ததால் இப்ப இல்லாம போய்ட்டாடி” என கோவமாக கேட்டான்.. மீண்டும் மீண்டும் இல்லை இல்லை என பொய் சொல்கிறாளே, தன்னை நிராகரிக்கிறாளே என்ற கோவத்தில் வார்த்தையை விட்டான்..
அதை கேட்டு உண்மையில் துடித்து போனாள் பூரணி..
“என்னடா சொன்ன”? என ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தவள்,
“என்னை பார்த்து எப்புடி டா உன்னால் இப்புடி பேச முடிஞ்சது” என்றவள் கண்ணில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.
எவ்வளவு பெரிய வார்த்தையை அவள் மீது வீசி இருக்கிறோம் என அஸ்வினுக்கும் புரிந்தது.. கஷ்டமாகி போனது..
“பூசணி அது வந்து டி” என அவளை சமாதானம் செய்ய அருகே செல்ல கை நீட்டி எடுத்தவள்,
“காலேஜ்ல உன்னை என்னைக்கு முத தடவை பார்ததேன்னோ அன்னைக்கே நீ என் மனசில் வந்துட்டடா”,
“எத்தனை நாள் உன்கிட்ட லவ்வை சொல்ல வந்து, சொல்லமா, சொன்னா வேண்டாம்ன்னு சொல்லிடுவியோ, என்னோட பேசாம போய்டுயோன்னு பயந்து சொல்லாமலே மனசுக்குள்ள வச்சு புழுங்கி இருக்கேன் தெரியுமா?”
ஏன்? என கேட்டான் அஸ்வின்..
“ஏன்னா உனக்கு தான் ஒல்லியா அழகா இருக்க பொண்ணுங்களை தானே அஸ்வின் பிடிக்கும்.. நான் தான் குண்டா இருக்கன்னே, என்னை பக்கத்தில் வச்சிட்டே அந்த பொண்ணை பார் ஸ்லிம்மா அழகா இருக்கான்னு எவ்வளவு தடவை சொல்லி இருப்ப, அப்புடி இருக்கும் போது நான் எப்புடி டா சொல்ல முடியும் என பூரணி அழ,
“ஆனாலும் என் மனசு மாறவே இல்லை. உன்னை தான் சுத்தி சுத்தி வரும்.. காலேஜ் முடிஞ்சு நீ வேலைக்கு இங்க வந்த அப்புறம், என்னால் ஊர்ல உன்னை பார்க்காமல் இருக்கவே முடியலை.. உனக்காவே உன் பக்கதில் இருக்கனும்னே இந்த வேலைக்கு வீட்டில் போகாதன்னு அவ்ளோ தடுத்தும் கூட இங்க வந்தேன்…. அப்புடி பட்ட என்னை போய் இவ்வளோ அசிங்கமா நினைச்சுட்டல, அவ்ளோ மோசமானவளா உன் கண்ணுக்கு நான் தெரியுறேன்”..
“நீ ப்ரியாவை லவ் பண்றேன் ஹெல்ப் பண்ணுனு நீ சொல்லும் போது என் மனசு அவ்ளோ வலிச்சுது.. நிறைய வருத்தப்பட்டேன் அழுதேன்.. ஆனா அப்ப கூட உன்னை ஏன் லவ் பண்ணுனேன் ஃபீல் பண்ணுனதே இல்லை…
“பூரணி சாரிடி ஏதோ” என்றவனை பேசாத என வாயில் விரல் வைத்து சைகை செய்தவள்
“இனி என் முகத்தில் கூட முழிக்காத” என அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்..
பூரணி சாரிடி சாரிடி.. உண்மையாவே உன்னை லவ் பண்றேன்டி.. அதான் நீ வேண்டாம்ன்னு சொன்ன கோவத்தில் அப்புடி பேசிட்டேன் டி.. சாரி என பலமுறை மன்னிப்பு கேட்டு கதவை தட்டியும் கூட அவள் திறக்கவில்லை.…
அவனுக்கு அப்போது தான் அவன் விளையாட்டை பேசியது அவளை எந்த அளவு பாதித்து இருக்கின்றது என்பது புரிந்தது.. உண்மையில் அவன் அவளை அப்புடி நினைத்ததே இல்லை.. ஆனால் அவன் வார்த்தைகள் அவளை தாழ்வு மனப்பான்மையை கொடுத்து இருக்கின்றது இப்போது புரிந்தது..அதற்காக இப்போது வருந்தவும் செய்கின்றான்..
அதன் பின் வந்த நாட்களிலும் அஸ்வின் எவ்வளவு முயன்றும் பூரணியை அவனால் சமாதானம் பண்ண முடியவில்லை.. அவள் இவனை ஏறிட்டு பார்க்காமல் இருக்க, வெறுப்பாகி போனவன் உதவிக்கென போய் நின்றது வம்சியிடம்,
“ம்… வாய் வாய் வாய் உன் வாய்க்கு உனக்கு இது தேவை தான்டா”வம்சியும் சொல்ல,
“தெரியாம பண்ணிட்டேன் சார்.. நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்” அஸ்வின் கேட்க,
‘இருக்க இம்சை பத்தாதுன்னு இவன் வேற’ என சலித்து கொண்ட வம்சி, “டேய் பொதுவா பொண்ணுங்க சின்ன விஷயத்தையே பெரிசாக்கி சண்டை போட்டு கோவிச்சுப்பாங்க.. இதில் நீ வேற இப்புடி பெரிய சம்பவம் பண்ணி வச்சு இருக்கியேடா”,
“பொண்ணுங்களை பத்தி எனக்கு எப்புடி சார் தெரியும்... உங்களை போல் எனக்கு பொண்ணுங்க கூட கடலை போட்டு பழக்கம் இல்லை” என்றான் பூரணியை அவன் டார்லிங் என விழிக்கும் கடுப்பில்,
அதை கேட்டு முறைத்த வம்சி,
“நக்கலு, பொண்ணுங்க கூட கடலை போட தெரியாது.. ஆனா சார்க்கு அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஐ லவ் யூ சொல்ல மட்டும் நல்லா தெரியும்.. உன்னை என் அண்ணன் விட்டது தப்புடா” என்றதும் அஸ்வின் முகத்தை தொங்க போட்டு கொள்ள,
“பாவமேன்னு ஹெல்ப் பண்ணலாம் பார்த்தா ஓவர் வாய்டா உனக்கு, உன் பிரச்சினையை நீயே பார்த்துக்கோ” என வம்சி நகர,
“சார் சார் ப்ளீஸ் ப்ளீஸ் தெரியாம சொல்லிட்டேன்.. உங்களை தான் மலை போல் நம்பி இருக்கேன்.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என பாவமாய் முகத்தை வைத்து கெஞ்ச,
“சரி சரி பண்ணி தொலைக்கிறேன்.. அதுக்குன்னு முகத்தை இவ்வளோ கேவலமான வச்சு சாவடிக்காத” என்ற வம்சியும் பூரணியை சமாதானம் படுத்த ஒரு வழியை சொல்ல,
அடுத்த நாளே அலுவலகத்தில் யாரும் இல்லாத இடத்தில் பூரணி முன்பு போய் நின்றான் அஸ்வின்..
இன்னோரு பக்கமோ “வம்…சி வி…டு..ங்க” என நிவேதாவோ தன் கழுத்தை அழுத்தி பிடித்திருந்த வம்சியின் கையை அகற்ற முடியாது.. கண்முழி பிதுங்கிய நிலையில் மூச்சுக்கு சிரமப்பட்டு கொண்டு இருக்க,
அதை உணர்ந்து தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அவளை விடுவித்த வம்சி, கண்ணில் நீர் வழிய கழுத்தை பிடித்து இருமி கொண்டு இருந்தவள் முடியை பற்றி, “இனிமே உன் பின்னாடி வந்தா என்னை செருப்பால் அடிடீ, இந்த ஜென்மத்தில் என் வாழ்க்கையில் நீ இல்லவே இல்லடி” என கோவமாக உரைத்து விட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றான்..
“அண்ணே அந்த பார்க்கில் ஆரெஞ்சு கலர் கவுன் போட்டு இருக்கே அந்த பொண்ணு தானா” என பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டு இருக்கும் விஷ்ணுவை கை காட்டி காரின் டிரைவர் சீட்டில் இருக்கும் ஒருவன் கேட்க..
“ஆமாடா அந்த பொண்ணு தான்.. வெளிய வந்த உடனே வேகமாக காரை ஓட்டிட்டு போய் இடிச்சிட்டு நிற்காமா போய்ட்டே இரு” என்றான் அருகில் இருந்தவன்.. இருவருமே பார்க்க கரடு முரடான தோற்றம் கொண்டவர்கள் பார்க்கவே ரௌடி போல் தான் இருந்தார்கள்..
விஷ்ணுவும் பாட்டியும் பார்க்கை விட்டு வெளியே வந்து பாதசாரிகளுக்காக போட்ட பாதையில் நடந்து வர,
விஷ்ணுவை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது அந்த கார்…