அன்று அலுவலகம் நேரம் முடிந்தும் கூட பூரணி கிளம்பவில்லை…
காரணம் வம்சி தான்.. ராமிடம் சொல்லி இன்று அவளுக்கும் அஸ்வினுக்கும் மட்டும் வேலை கொடுத்து அனைவரும் சென்றபின்னும் இருக்கும்படி செய்து விட்டான்..
வேலை கொடுத்த ராமையும் பக்கத்தில் சீட்டில் அமர்ந்து வேலை செய்கிறேன் என்று பெயரில் அவளை சைட் அடித்து கொண்டு இருந்த அஸ்வினையும் திட்டிய படியே கொடுத்த வேலையை முடித்து விட்டு கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பியவள் முன்பு தன் இருக்கையிலிருந்து எழுந்து வழியை மறித்தபடி நின்றான் அஸ்வின்…
அவனை முறைத்து விட்டு நகர போனவள் வழியை மீண்டும் மறைத்த அஸ்வின் “நானும் உன்கிட்ட சாரி மன்னிச்சுகோன்னு பல வழியில் சொல்லிட்டேன்.. ஆனா நீ சமாதானம் ஆகுற போல தெரியலை.. அதான் உன்னை சாமதானம் பண்ண பிரம்மாஸ்திரம் ஒன்னை கையில் எடுத்துட்டேன்” என்றவன் இன் பண்ணி இருந்த சட்டையை ஃபேன்டிலிருந்து வெளியே எடுத்து விட்டு, கை பட்டனை அவிழ்த்து சட்டையை மேலே மடித்து விட்டு காலரையும் சரி செய்ய,
பூரணிக்கு தான் என்ன செய்ய போகிறான்னோ என பயத்தோடு அவனை பார்த்து கொண்டு இருந்தவள் “அஸ்வின் என்ன இது என்ன பண்ற” என பதறினாள் அவன் செய்த காரியத்தால்
ஏனெனில் அஸ்வின் “சாரி பூரணி” என அவள் காலில் சாஷ்டமாக விழுந்து இருந்தான்…
வம்சி நேற்று கொடுத்த ஐடியா இது தான்.. ‘தப்பு உன் மேல்ல தான் அதனால் யோசிக்கமா விழுந்திரு’ என்றிருந்தான்..
“அய்யோ அஸ்வின் எழுந்திருடா, என்ன பண்ற? அவனின் கைப்பிடித்து மேலே எழுப்பி விட முயன்றபடி பூரணி கேட்க..
“மாட்டேன் மாட்டேன் நீ என் சாரியை அக்சப்ட் பண்ணி பழைய மாதிரி என் கூட பேசுறதா இருந்தா தான் எழுந்திருப்பேன்” அஸ்வின் சொல்ல,
“அஸ்வின் மானத்தை வாங்காத டா இது ஆபிஸ் யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”..
“என்ன வேணா நினைச்சிட்டு போகட்டும் .. எனக்கு அதை பற்றி கவலை இல்ல.. நீ என்னை மன்னிக்கனும் அதான் வேணும்” என்றான்.. பூரணிக்கு அவனின் செய்கை சங்கடமாகி போனது..
“சரி மன்னச்சுட்டேன் எழுந்திரு” என அவள் சொன்ன பின்பும் அவன் அதே நிலையில் இருக்க,
“மன்னிச்சா மட்டும் போதாது, என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கனும் அப்ப தான்”
“முடியாது அஸ்வின்”..
“அப்ப என்னாலையும் எழுந்துக்க முடியாது”..
“அஸ்வின்” என பூரணி முறைக்க…
“பூரணி உண்மையாவே உன்னை ரொம்ப லவ் பண்றேன்டி…. அதை எப்புடி உனக்கு புரிய வைக்கிறதன்னு தான் எனக்கு தெரியலை”..
“இவ்வளவு நாளா நானே அதை உணராம தான் இத்தனை தப்பு பண்ணிட்டேன்… வம்சி வந்த அப்புறம் தான் எனக்கே என் லவ் புரிஞ்சுது… அந்த வம்சி கூட நீ பேசும் போது எனக்கு எவ்ளோ கோவம் வரும் தெரியுமா? “
“அதுவும் அவன் உன்னை டார்லிங் டார்லிங் கூப்பிடும் போது எல்லாம் அவன் வாய் கீயை எல்லாம் அடிச்சு உடைக்கனும்ங்கிற அளவு அவ்ளோ வெறி வரும்”...
“வரும்டா வரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் வாய் கீய்யோடா பல்லையும் சேர்த்து உடைக்கிறான்னா இல்லையான்னு பாரு, பாவம்ன்னு ஹெல்ப் பண்ணுனா என் வாயையே உடைப்பேன் சொல்லுவியா நீ?,.. ஆபிஸை விட்டு வெளிய வாடா, உனக்கு இருக்கு, அஸ்வின் காதில் மாட்டியிருந்த ப்ளூடுத் வாயிலாக இவ்வளவு நேரம் வசனம் சொல்லி கொடுத்து கொண்டு இருந்த வம்சி, கடைசியாக அஸ்வின் வம்சி இருப்பதை மறந்து சொந்தமாக பேசிய வசனத்தில் கடுப்பான வம்சி திட்ட,
‘அய்யயோ இவன் இருக்கிறதை மறந்துட்டேன்னே’ என மனதிற்குள் அலறியவன் அப்புடியே பூரணி பார்க்காதவாறு ப்ளுடூத்தை ஆஃப் செய்து விட்டு மீண்டும் பூரணியை சமாதானம் செய்ய வசனத்தை அள்ளி வீச,
“சேட்டையை பார்த்தியா இவனுக்கு” இங்கு நடப்பதை சிசிடிவி கேமரா மூலமாக பார்த்து கொண்டு இருந்த வம்சி அருகே சிரித்து கொண்டு இருந்த ராமிடம் சொல்ல அவனோ இன்னும் பயங்கரமாக சிரித்தான்….
“ துரோகி நண்பன் என் வாயை ஒருத்தன் உடைப்பேன்னு சொல்றான் சிரிக்கிற நீ.. நீ எல்லாம் ஒரு நண்பனா டா,?..
“ஆமாடா உயிர் நண்பன் அதான் சிரிக்கிறேன்” என்ற ராம் மீண்டும் சிரித்தான்..
“எனக்கே ஆச்சர்யமா இருக்கு பூரணி நான் உன்னை இவ்வளோ லவ் பண்றான்னானு…. ப்ளீஸ்டி நம்புடி”..
“காலேஜ் படிக்கிற டைம்ல மெர்ச்சூட்டி இல்லாத வயசில் சினிமாவை பார்த்துட்டு ஏதேதோ சொல்லி இருப்பேன்டி.. அதை பெரிசா எடுத்துக்கிட்டு என்னை வேணா சொல்லாத பூரணி”..
“நான் உன்னை என்னைக்குமே உருவத்தை வச்சு… அச்சோ என் மனசில் இருந்து அப்புடி எல்லாம் நினைச்சதே இல்ல டீ.. ஆனா என்னை அறியாம நான் பேசுன வார்த்தை உன்னை இந்தளவு பாதிச்சு இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை.. சாரி பூரணி.. சாரி சாரி.. உண்மையாவே உன்னை லவ் பண்றேன்டீ”…
“நான் என்ன பண்ணுனா நம்புவ.. என் அம்மா மேல்ல சத்தியமா” என்றவன் வாயை அடைத்தவள் நம்புறேன் எனும் விதமாக தலை அசைத்தாள்…
இவ்வளவு நேரம் அவன் பேசூம் போது அவன் கண்களில் தெரிந்த தவிப்பே அவன் காதலை எடுத்து கூற, அவளுக்கும் அது தானே தேவை அதனால் எல்லாத்தையும் மறந்து விட்டாள்
‘ஜெயிச்சிட்டடா அஸ்வின்னு’ மனதிற்குள் குதூகலித்தவன் இன்னும் எழாமல் அதே நிலையில் இருக்க
“எழுந்திரு அஸ்வின்” பூரணி சொல்ல,
மாட்டேன் என தலை அசைத்தவன் “ஐ லவ் யூ சொல்லு அப்ப தான் எழேந்திருப்பேன்” என்றான்
“படுத்துற அஸ்வின்” என சலித்து கொண்டாலும்
“ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ போதுமா” பூரணி கேட்க,
‘போதும் போதும் ஐ லவ் யூ டூ டி பூரணி” என எழுந்தவன் அவளின் கன்னத்தை கிள்ள,
அதை தட்டி விட்டவள் மீண்டும் முறைக்க,
அதில் பயந்தவன் “என்னாச்சு பூரணி?” என கேட்க,
“அது என்ன பூரணி, எப்பவும் பூசணி தானே கூப்பிடுவ அப்பேடியே கூப்பிடு” என்றாள்..
“இல்ல இல்ல அது வேணாம் வேற செல்லப்பேர் ஒன்னு வைக்கிறேன்” அஸ்வின் மறுக்க..
“ஏன் வேணாம்?”..
“வேண்டாம் டி, நான் அப்புடி கூப்பிட போய் தான் நீ.. வேணாமே” அஸ்வின் கெஞ்சலாக சொல்ல,..
“நீ பூசணின்னு தான் கூப்பிடனும் இல்லைன்னா ப்ரேக்ப் அப் தான்” என்றாள்..
அதூல் பதறியவள் “அய்யோ ஆத்தா பூசணி, புடலைங்காய், முருங்கைகாய்ன்னு நீ எப்புடி சொல்றயோ அப்புடியே கூப்பிடுறேன், அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத என்றதும்,
பூரணி வாய்விட்டு சிரிக்க ஆரம்பிக்க.. சிரித்த அஸ்வினும் அவளை அணைத்து கொண்டான்.. உச்சியில் முத்தம் ஒன்றே வேறு பதிக்க,
மங்கை அவள் பல நாள் கண்ட கனவு நனவான சந்தோஷ மிகுதியில் அவளும் அவன் மார்பில் பாந்தமாக புதைந்து கொண்டாள்..
“பார்த்தியா எப்புடி சேர்த்து வச்சேன்னு” வம்சி காலரை தூக்கி பெருமையாக சொல்ல,
ராம் எதுவும் சொல்லாது முகத்தை வேறு கவலையாக வைத்து இருக்க,
“என்னடா கவலை?” வம்சி கேட்க,
“இப்புடி ஊரார் காதலை எல்லாம் அங்கிள் வேலை பார்த்து சேர்த்து வைக்கிற உன் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே நண்பா, கடைசி வரை இப்புடி மொட்டை பையனாவே இருந்திருவியோங்கிற கவலை தான்” என நக்கல் செய்த ராமை முறைத்த வம்சி,
என்ன நக்கலாடா? என் கேட்க
ஆம் என ராம் தலையசைத்தான்..
“டேய் எனக்கு முன்னமே அப்பாவாகிட்டேங்கிற ஆணவத்தில் ஆடாதடா”,
“அப்புடி தான் ஆடுவேன்டா” என்ற ராம் ஆடி வேறு வெறுப்பேற்ற,
‘இதுக்கு எல்லாம் வேதாளம் நீ தான்டி காரணம் வரேன் உனக்கு’ என்றவன்
மறுநாளே நிவேதா வீட்டிற்கு சென்றான்…
அலுவலகத்திற்கு தாமதமான காரணத்தால் அவசர அவசரமாக வீட்லிருந்து நிவேதா கைப்பையை தோளில் மாட்டியபடி வாசலுக்கு வர,
“ஆன்டி இருக்காங்களா?” என்ற குரல் கேட்டது..
“ஆ.. உள்ள தான் இருக்காங்க” என்றவள் குரலுக்கு சொந்தக்காரனை பார்க்கவில்லை..
‘தண்ணிகேன் போட வந்த பைய்யன்னா இருக்கும்’ என கைப்பையில் டிபன் பாக்சை வைக்கும் முனைப்பில் கவனிக்கவில்லை..
“தாங்க் யூ” என்ற போது தான் குரல் மூளைக்கு எட்டியது.. ‘வம்சி’ என பதறியவள்
நிமிர்ந்து பார்க்க வம்சி வீட்டிற்குள்ளேயே ஒரு கால் எடுத்து வைத்து விட்டான்..
வேகமாக அவன் கைப்பிடித்து தடுத்தவள் “எங்க போறீங்க?” என கேட்க,
“ஆன்டியை பார்க்க” என்றான்..
“எதுக்கு”
“எதுக்கோ” அலட்சியமாக தோளை குலுக்க,
“வம்சி எத்தனை தடவை தான் உங்ககிட்ட சொல்றது வேண்டாம்னு உங்க மரமண்டை” என சொல்ல வந்தவள் வம்சி பார்த்த பார்வையில் சொல்லாமல் முழுங்கி கொண்டாள்..
“நானும் எத்தனை தடவை தான் வேணும், நீ தான் வேணும்ன்னு சொல்றது உன் மரமண்மையில் ஏன்டி உரைக்கவே மாட்டேங்குது” என கேட்டான்…
“நீ சரிப்பட்டு வர மாட்ட ஒத்து, நான் ஆன்டி கிட்ட பேசிக்கிறேன்” என வம்சி உள்ளே போக பார்க்க,
‘அச்சோ வம்சி மட்டும் தன் அம்மாவிடம் அனைத்தையும் சொல்லி விட்டால் தனக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்து விட்டாலே என வருந்துவார், அதோடு வம்சியோட சேர்ந்து வாழ தன்னையும் கட்டாயப்படுத்துவார்.. அது சரி வராது.. திருமண பந்ததை நினைத்தாலே தந்தையின் துரோகம் தான் கண்ணுக்கு முன் வந்து நிற்கான்றது.
வேண்டாம் வேண்டாம் கல்யாணம் காதல் எதுவும் வேண்டாம் மறுபடியும் மனம் அதே நிலையில் வந்து நிற்க,
“வம்சி” என கோவமாக அழைத்தவள்,
“உங்களுக்கு கொஞ்சம் கூட சூடு சொரனை எதுவும் இல்லையா.. நான் தான் உங்களை எனக்கு பிடிக்கலை. அது ஏதோ வயசு கோளாறு, அப்ப லவ் பண்றேன் சொல்லி, உங்க அம்மா வீடு நம்மளை பிரிச்சுருவாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டுட்டேன், அது விவரம் இல்லாத வயசில் பண்ணிட்டேன்.. இப்ப தான் வேண்டாம்ன்னு சொல்றேன்னே விட வேண்டியது தானே, மீண்டும் மீண்டும் தொந்தரவு பண்ணி எரிச்சலை கிளப்பிட்டு” என கோவமாக கத்தினாள்…
அதில் வம்சிக்கு சுறுசுறுவென கோவம் ஏறினாலும் கையை மடக்கி கட்டுப்படுத்தியவன் “போடி அந்த பக்கம்” என்றபடி மீண்டும் வீட்டுக்குள் போக பார்க்க,
“என் வீட்டுக்குள்ள போகாதீங்கன்னு சொல்றேன்ல, இப்ப என்ன பண்ணுனா என்னை நீங்க விடுவீங்கன்னு சொல்லுங்க… உங்க கூட ஒரு டைம் படுத்தா என்னை விட்…” அதற்கு மேல் பேச முடியவில்லை நிவேதாவால் தலையே சுற்றுவது போல் இருந்தது.. பிடகயானத்திற்கு அருகே இருந்த சுவரில் சாய்ந்து கொண்டாள்.. கன்னம் தீயாய் எரிந்தது கண்ணிலிருந்து வலியின் காரணமாக கண்ணீர் வர தொடங்கியது வம்சி அடித்த அடியில்,
அவன் கண்களோ அக்னி ஜீவாலையாக கோவத்தூல் மினி அவளை எரிக்க,
அப்போதும் அடங்கவில்லையே நிவி அவ யார் நம்ம விஷ்ணு ஃப்ரெண்ட்டாச்சே அடங்குவாளா,
“இப்ப எதுக்கு ரொம்ப யோக்கியன் போல இவ்வளோ சீன்னு, 18 வயசிலே என்கிட்ட ட்ரை பண்ணினவர் தானே நீங்க.. அன்னைக்கு மட்டும் எல்லாம் முடிஞ்சு இருந்ததுன்னா நீங்க எப்பவோ என்னை கழட்டி”… மீண்டும் அவளால் பேச முடியவில்லை..
வம்சி அவள் கழுத்தை அழுத்தமாக பற்றி இருந்தான் அடக்க முடியாத கோவத்தில்,
ஆம் அன்று உணர்வு மிகுதியில் எல்லை மீற முயற்சித்தான் தான்.. அதுவும் இவள் முத்தமிட்டதால் எழுந்த உணர்வுகளால் நடந்தது.. அதுவும் முதலில் சுதாரித்து விலகியவனும் அவன் தான்..
இதை அவன் சொல்லவில்லை.. சொல்லி காட்டி அவர்கள் உறவை அசிங்கப்படுத்த விரும்பவில்லை..
அது இவர்களின் காதல் வாழ்க்கையில் நினைத்தது சந்தோஷப்பட வேண்டிய பொக்கிஷமான நிகழ்வுகள்,
அவனை அசிங்கப் படுத்துக்கிறேன் என்ற பெயரில் அந்த நிகழ்வையும் கொச்சைப்படுத்துகிறாள் என்றால் அவனும் அதை செய்ய விரும்பவில்லை..
அவனை எவ்வளவு தூரம் தாழ்த்தி பேசி விட்டாள்… எத்தனை வருஷம் எத்தனை நாள் எத்தனை வார்த்தையை தான்
பொறுத்து போவது…
‘உன் அப்பாவை போல நினைச்சுட்டியாடி’ என கேட்க துடித்த நாவை அவளை போல வார்த்தையை விட கூடாது என கட்டுப்படுத்தி நின்று இருந்தவனை பயங்கரமாக பேசி தூண்டி விட்டாளே என கோவமான கோவம் வந்தது..
கோவத்தில் அவன் நிதானமாக இல்லை.. அதனால்
“வம்…சி வி…டு..ங்க” என நிவேதாவோ பேச முடியாமல் திக்கி திணறி கண்முழி பிதுங்கிய நிலையில் மூச்சுக்கு சிரமப்பட்டு கொண்டு இருப்பதை உணராது அதே நிலையில் நின்று இருந்தவனை,
அவள் கண்ணிலிரூந்து வழிந்த கண்ணீர் துளி கைகளில் பட்டு உணர்த்தியது..
அப்போது தான் அவள் கோலத்தை பார்த்தான்.. ச்சே வம்சி என தன்னை கடிந்தவனுக்கு வலித்தது.. வேகமாக கையை விலக்க, அப்புடியே கீழே சரிந்து அமர்ந்து தொண்டையை பற்றியபடி இரூம ஆரம்பித்தாள்..
அவள் வீசிய வார்த்தையில் கோவம் மட்டும் அடங்கவே இல்லை.. அதனால் அவளின் முடியை பற்றி, “இனிமே உன் பின்னாடி வந்தா என்னை செருப்பால் அடிடீ, இந்த ஜென்மத்தில் என் வாழ்க்கையில் நீ இல்லவே இல்லடி” என கோவமாக உரைத்து விட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றான்..
அவனையே கண்ணில் வழியும் நீரோடு பார்த்தாள்.. என் வாழ்க்கையை விட்டு போ போ என்றவளுக்கு போகின்றேன் என அவன் கூறி விட்டு சென்ற போது பயங்கரமாக வலித்தது...
ப்ரதாப், பார்த்தி மாமன் மச்சான் புண்ணியத்தில் ஒரு மாதம் காலம் ஆஸ்பத்திரியில் சேர்ந்து குணமாகி வீடு வந்த ஷ்யாம்க்கு மனம் கொதித்தது..
ஏனெனில் அவனை ஹாஸ்பிடலில் பார்க்க வந்த தொழில் வட்டார நண்பர்தள் எல்லாம் ப்ரதாப் அடித்ததை வைத்து கேலி செய்ய, போத குறைக்கு அவன் கம்பெனி ஷேர் எல்லாம் அதாள பாதாளத்திற்கு போய் விட்டது.. அதுக்கு எல்லாம் ப்ரதாப் தான் காரணம்.
‘அந்த ப்ரதாப்பை சும்மா விட கூடாது’ என்ற வன்மம் கொழுந்து விட்டு எரிந்தது.. என்ன பண்ணலாம் என தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கையில் அவனை பார்க்க வந்தார் சாலா..
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூட்டணியில் அவர்கள் போட்ட திட்டம் தான் விஷ்ணுவை வைத்து ப்ரதாப்பை அடிக்க வேண்டும் என்பது...
ஆனால் விஷ்ணுவை ப்ரதாப் வெளியே எங்களையும் விடுவதில்லை.. அப்புடி வெளி வந்தாலும் அவனோடு தான் அழைத்து வருவான்...
அதனால் விஷ்ணு ப்ரதாப் இல்லாது தனியே எங்கு வருகிறாள் என கண்காணித்தவர்களுக்கு கிடைத்த தகவல் தான்..
விஷ்ணு தினமும் மாலை அவர்கள் வீட்டிற்கு சற்று தொலைவில் இருக்கும் அந்த பார்க்கிற்கு நடந்து வருவாள்.. அவள் துணைக்கு ரஙீகராயகி பாட்டி வருவார் என்பது,
அருகில் இருக்கும் பார்க் தானே அதோடு டாக்டர் வேறு வாக்கிங் போக சொல்லி இருக்க ப்ரதாப் ஒன்றும் சொல்வதில்லை..
இன்றும் அதே போல் பார்கிற்கு விஷ்ணுவும் பாட்டியும் வந்து இருந்தார்கள்…
“அண்ணே அந்த பார்க்கில் ஆரெஞ்சு கலர் கவுன் போட்டு இருக்கே அந்த பொண்ணு தானா” என பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டு இருக்கும் விஷ்ணுவை கை காட்டி காரின் டிரைவர் சீட்டில் இருக்கும் ஒருவன் கேட்க..
“ஆமாடா அந்த பொண்ணு தான்.. வெளிய வந்த உடனே வேகமாக காரை ஓட்டிட்டு போய் இடிச்சிட்டு நிற்காமா போய்ட்டே இரு” என்றான் அருகில் இருந்தவன்..
“அண்ணோ மாசமா இருக்கு போல அண்ணே அந்த புள்ள” ட்ரைவர் சீட்டில் இரூந்தவன் விஷ்ணுவின் வயிற்றை பார்த்து தயங்க,
“டேய் கை நீட்டி காசு வாங்கியாச்சு, இந்த சென்டிமென்ட்டை மூட்டைகட்டி வச்சிட்டு மூடிட்டு சொன்ன வேலையை பாரு அருகே இருந்தவன் அதட்டினான்..
இருவருமே பார்க்க கரடு முரடான தோற்றம் கொண்டவர்கள் பார்க்கவே ரௌடி போல் தான் இருந்தார்கள்.. சாலா ஷ்யாம்மால் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தவர்கள்,
விஷ்ணுவை ஆக்சிடென்ட் செய்ய வேண்டும்.. அதில் அவள் தப்பி தவறி பிழைத்தாலும் கவலை இல்லை… ப்ரதாப்பை கலங்க வைக்க இந்த ஆக்சிடென்ட் போதும் நிச்சயம் அவன் வாரிசு கை சேராது..
இடித்து விட்டு நிற்காது செல்ல வேண்டும்.. போலீஸில் சிக்கினால் காரில் பிரச்சினை அதானால் ஏற்பட்டு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்.. எக்காரணத்தை கொண்டும் தங்கள் பெயர் வெளி வர கூடாது என கை நிறைய பணத்தை வைத்து சாலா ஷ்யாம் இரூவரும் சொல்ல,
பணத்திற்காக இந்த இருவரும் ஒப்பு கொண்டனர்..
விஷ்ணுவும் பாட்டியும் பார்க்கை விட்டு வெளியே வந்து பாதசாரிகளுக்காக போட்ட பாதையில் நடந்து வர,
விஷ்ணுவை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது அந்த கார்…
விஷ்ணுவை நெருங்க சில அடி தூரமே இருக்க, தீடிரென கார் சடென் ப்ரேக் போட்டு நின்றது.. தீடிரென ப்ரேக் பிடித்ததில் ட்ரைவர் சீட் அருகே இருந்தவன் தலை டேஷ் போர்டில் பலமாய் மோதியது..
ஏனெனில் விஷ்ணுவிற்கும் அந்த காருக்குமான இடைவெளியில் ஒரு கார் வந்து நின்றது.. அந்த காரில் மோதி விட கூடாது என அவசரமாக ப்ரேக் பிடித்தான் அந்த ட்ரைவர் சீட்டில் இருந்தவன்,
“என்னங்க இவ்வளோ நேரமா ஆபிஸிவலிருந்து வந்துட்டீங்க என குதூகல குரலில் இடையில் நின்ற காரிலிருந்தவனை கேட்டவாறு காருக்குள் ஏறி அமர்ந்தாள்..
இடையில் வந்து நின்ற கார் வேறு யாருடையதாக இருக்கும் ப்ரதாப் தான்..
பாட்டியும் காரில் ஏறி விட, ப்ரதாப் கார் நகர்ந்தது.. ஆனால் ப்ரதாப் அந்த காரிலிருந்து இருவரையும் அழுத்தமாக பார்த்தப்படி காரை மெதுவாக ஓட்ட,
அவர்கள் இருவரோ பீதியாகி விட, ப்ரதாப் கார் நகர்ந்த அடுத்த செகண்ட் விஷ்ணுவை இடிக்க வந்த இருவரையும் ப்ரதாப் ஏற்பாடு செய்து இரூந்த ஆட்கள் சூழ்ந்து கொண்டனர்..
அதன் பின்பு அவர்கள் நிலையை சொல்ல வேண்டுமா, இரத்தம் சொட்ட மூக்கு வாய் உடைந்து நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..
உங்களை யார் ஏவியது என்ற கேள்வியே அங்கு கேட்கப்படவில்லை. ஏனெனில் ப்ரதாப்புக்கு நன்கு தெரியும் யாரென,
அம்புக்கே இந்த நிலை என்றால் எய்திய வர்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா,
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 47
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,313
1 thought on “Mr and Mrs விஷ்ணு 78”
Deepti
Wowwwwwwww vera level epiii….. Super…… Pavum Vamsi……
Wowwwwwwww vera level epiii….. Super…… Pavum Vamsi……