வேந்தன் 15 

5
(3)
வேந்தன் 15 

 

honeys❤️ உங்களை சந்திப்பதில் சந்தோசம் எனக்கு.

எனக்கு share பண்ணவே டைம் இல்லடா. so என்னால் முடிந்த நேரத்தில் கதைகளை அப்டேட் பண்ணிட்டே இருக்கேன். நீங்க விருப்பமிருந்தால் சனிக்கிழமை டைம் ஒதுக்கிப் படிங்க.  முடிந்தால் விருப்பமிருந்தால் இங்கே ஒரு ரேட்டிங்ஸ் ⭐இருக்கே டச் பண்ணுங்க. உங்க கமெண்ட் இங்கயே தாங்க. எனக்கு சந்தோசமாக இருக்கும்.

“மச்சி இங்க எதுக்காக வந்திருக்கோம்?” சற்றுமுற்றும் பார்த்த ஆத்மா ரவிக் இருவருக்கும் நன்றாகவே புரிந்து போனது. 
தாங்கள் இந்த ஊருக்கு வந்தது நிச்சயம் தொழில் நிமித்தமாக இல்லையென்று. 
இதுபோன்ற டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்கு வந்தே அறியாத நண்பர்கள் மூவருக்குமே ஏதோ புதிய உலகத்திற்குள் வந்தது போலத்தான் இருந்தது. அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத நடையுடை பாவனையில் கடைக்குள் சுற்றிய வாலிபர்கள் மூவரையும் அங்கிருப்போர் வேடிக்கை பார்த்தபடியே தங்கள் வேலையைப் பார்த்தனர். 
அரிசி பருப்பு, புளி இதையெல்லாம் கண்ணை விரித்து விரித்து அதிசயத்தை பார்ப்பது போலப் பார்த்தார்கள். 
“மச்சி இதெல்லாம் என்னடா” ஆத்மா செங்காந்தல் நிறத்தில் செக்கச் சிவந்து பார்த்தவுடனே கடித்து சாப்பிட்டுவிடலாம் போலத் தோன்றிய மிளகாயை எடுத்து முன்னும் பின்னும் திருப்பித் திருப்பிப் பார்த்தான். 
“சாப்பிடுற திங்க்ஸ்தான்டா” குரல் சொன்னாலும் பார்வை அங்கே கேஸ்கவுண்டரில் அமர்ந்திருக்கும் நளிர் பெண்ணின் மீதுதான் இருந்தது. 
“வாவ்!” சாப்பாட்டு பிரியன் அதை அப்படியே கடித்து மென்றுவிட, “ஐயோ அம்மா” அலறிவிட்டான் காரம் தாங்க முடியாது. 
அவனது சத்தம் காதில் விழ, கவனித்த நளிரா, “என்னாச்சு” என்று கேட்டவாறே இருந்த இடத்திலிருந்து எழுந்து வந்தாள். 
“நத்திங், நத்திங் சிஸ்டர்” சொன்னவன் அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான். 
அவன் முகமெல்லாம் சிவந்து, கண்ணெல்லாம் கலங்கி இருக்கவும், அவர்கள் நின்றிருந்த இடத்தையும் பார்த்து, என்ன நடந்திருக்குமென யூகித்து ஒருநிமிடம் சிரிப்பும் வந்துவிட, அதை அடக்கியவள் அவர்களை ஒரு முறை முறைத்துவிட்டே தன் இடத்தில் வந்தமர்ந்தாள்.  
தன் இடத்தில் அமர்ந்தவளுக்கு அங்கே நின்ற நெடியவனை எங்கோ பார்த்தது போலவே இருக்கவும், அவனைக் கூர்ந்து பார்த்தாள், 
ஆனால் கன்னத்தில் லேசாய் ட்ரிம் பண்ணிய தாடியும், இறுகிய தாடையும், பிறருடன் சிரிப்பை பகிர்ந்து கொள்ளவே விரும்பாத கழுகு விழிகளும், அழுத்தமான உதடுகளும், நிமிர்ந்து நின்ற தோரணையிலயே காட்சிப்பிழை போல ஆனது நளிராவுக்கு. 
தவிர அன்று பார்க்கில் பயந்து நடுங்கி நின்றவள் எதிரே நின்றவனின் தோற்றத்தை முழுதாக ஆராயவும் இல்லையே. ஒரே ஒருமுறை மட்டுமே அவனை நிமிர்ந்து பார்த்தவள்தான். 
கடையில் வேலை செய்யும் ஒரு பையனைத் தன் அருகே வருமாறு அழைத்தவள், “அவங்களுக்கு என்னாச்சுன்னு பாருடா” என்று அனுப்பி வைத்தாள். 
அதற்குப் பின் அவளுக்கு வேலைகள் சரியாக இருக்க யாரையும் கவனிப்பதற்கு இல்லை.  
அங்கே இருந்து வெளியே வந்தவர்கள் சிபினின் வாகனத்தில் ஏறியமர, ஆத்மா இன்னும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தான். பழகாத காரம் அவனைக் கொன்று தீர்த்தது.
“ஏன்டா இப்படி பண்ணே?” கேட்டவனுக்கு கேட்க மட்டுமே முடிந்தது. தங்களை விடவும் பலசாலி முன் தன் பலம் எடுபடாதே. 
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன். அது சாப்பிடுற பொருள்தான்” சிபின் அலட்சியமாய் சொல்லிவிட்டு, காரை ஸ்டார்ட் பண்ணியவன், படுவேகத்தில் காரை சாலையில் செலுத்தினான். ஒன்வே என்பதால் உயிர்தப்பியது, பெருமூச்சு விட்டார்கள் நண்பர்கள் இருவரும். 
கார் “சரிடா நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்” 
“ஒண்ணாவே போலாம் சிபின்” ஆத்மா ரவிக் இருவரின் பார்வையில் அவர்கள் எண்ணவோட்டத்தைக் கணித்துவிட்டான் சிபின். 
“டேய் நானொன்னும் அந்தப் பொண்ணு பின்னாடி அலையப் போறது இல்ல. கிளம்புங்கடா” அவர்களை அரட்டி உருட்டி அனுப்பி வைத்தான்.
மனதே இல்லாமல் கிளம்பிப் போனார்கள் அவர்களும். 
ஆனால்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!