முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43

4.6
(10)

அரண் 43

வசுந்தரா துருவன் இருவரும் வைத்தியரின் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தனர்.

ஆனால் வைத்தியர் சொல்ல வரும் விடயத்தை சொல்லாமல் தயங்கி நிற்க துருவன் பொறுமை இழந்து மனதில் பெரும் பயத்துடன்,

“என்ன டாக்டர்..?  என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க ப்ளீஸ்..” என்று துருவன் கூறியதும்,

நெற்றியை தனது இரு விரல்களாலும் நீவி விட்ட வண்ணம்,

“மிஸ்டர் இவங்க உங்களுக்கு என்ன வேணும்..?”

“மை வைஃப்..”

“ஆஹ்… ஓகே.. உங்க வைஃப்புக்கு தோட்டா நெஞ்சில லங்ஸ் மேல்முனையில் தாக்கி இருக்கு அதனால அவங்களால இப்போ மூச்சு விடுறது ரொம்ப கஷ்டம் அதற்காக செயற்கை சுவாசம் கொடுத்து இருக்கு இன்னும் 24 மணி நேரத்துக்கு அப்புறம் தான் எதனாலும் சொல்லலாம் அதோட அவுங்களுக்கு கூடுதலா பிளட்டும் லாஸாகிருக்கு ஒரு பக்கம் பிளட் ஏத்திக்கொண்டு இருக்கிறோம்

இப்போதைக்கு அவங்க கொஞ்சம் கிரிட்டிக்கலான கண்டிஷன்ல தான் இருக்காங்க எதன்னாலும் 24 மணி நேரத்துக்கு பிறகு தான் சொல்லலாம் எதுக்கும் கடவுளை வேண்டிக்கோங்க இதுக்கு மேல எல்லாம் அவனோட கையில ஜீசஸ் என்று வைத்தியர் தன்னுடைய தெய்வத்தை வணங்கி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முற்பட,

துருவன் வைத்தியரை இடைமறித்து,

“அவங்கள இப்போ பார்க்கலாமா..?” என்று மனதினுள் பெரும் வேதனையுடன் அவளை அவ்வாறு பார்க்கும் மன தைரியம் இருக்குமா என்று கூட எண்ணாமல் வைத்தியரிடம் கேட்க,

“நோ வே அதுதான் சொன்னேனே மிஸ்டர் அவங்க ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க அதனால இப்போதைக்கு அவங்கள பார்க்க முடியாது சம் டைம் நாளைக்கு வேணும்னா ஒரு டென் மினிட்ஸ் உங்களை பார்க்க அனுமதிக்கிறேன்…” என்று கூறிவிட்டு மிக வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

வசுந்தராவோ வைத்தியர் கூறும் ஒவ்வொரு விடயத்தையும் மனதினுள் உள்வாங்கவே மிகவும் வேதனையாக இருந்தது. தலையில் கை வைத்தபடி அருகில் இருக்கும் இருக்கையில் அப்படியே அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.

துருவனால் வைத்தியர் கூறும் விடயங்களை ஜீரணிக்கவே முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு மெதுவாக நடந்து சென்று வள்ளி இருக்கும் அறைக்கு முன்பு இருக்கும் இருக்கையில் அமர்ந்து அவளது அறை வாயிலேயே கண் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த அறையின் உள்ளிருந்து வந்த தாதியர் கதவை திறந்து வெளியேறும் போது அந்த இடைவெளியில் வள்ளியின் முகம் நன்றாகத் தெரிந்தது.

அவளுக்கு செயற்கை சுவாசம் பொருத்தி அங்கு இங்கு என்று ஏதேதோ வயர்கள் எல்லாம் மாட்டி இதயத்துடிப்பு, சுவாசம் என்று எத்தனையோ மெஷின்களை அவளுடலில் பொறுத்தி இருப்பதை பார்க்க சில நிமிடங்கள் அவனுக்கு மூச்சு எடுப்பதே சிரமமாக இருந்தது.

“அற்புதம் என்னால தான் உனக்கு இதெல்லாம் என்னால தான் என்னால தான்…” என்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அவனது கண்கள் மெது மெதுவாக மேல் நோக்கி சொருகத் தொடங்கின. பின்பு தலையை உழுப்பி தன்னை திடப்படுத்திக் கொண்டு வேகமாக எழுந்து வைத்தியசாலைக்கு வெளியே வந்தான்.

அருகில் பெரிய சர்ச் இருப்பதை பார்த்ததும் ஏதோ மனதில் தோன்ற உடனே சர்ச் வாசலின் முன் கண்களை மூடி நிற்க,

அவனது அலைபேசி உடனே சினுங்கியது. சற்று நேரத்திற்கு முன் தான் வசுந்தரா அவனிடம் அவனது அலைபேசியை ஒப்படைத்திருந்தாள்.

அதில் தனது அன்னை வைதேகியிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்திருந்தன.

அதில் ஒரு அழைப்பாகவே இப்போது வைதேகி இடம் இருந்து வர,  அவருடன் பேச மனமின்றி என்ன செய்வது என்று புரியாமல் அதன் திரையையே உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட மூன்று அழைப்புகள் தொடர்ந்து வர தன்னை திடப்படுத்திக் கொண்டு மூன்றாவது அழைப்பினை எடுத்து அழுத்திப் பேசினான்.

“ஹலோ..”

“ஹலோ துருவன் என்னப்பா எத்தனை தடவை உன்னை போன்ல கூப்பிடுறது கொஞ்சம் எடுத்து பிஸியா இருந்தா பிஸியா இருக்கேன்னு சொல்லிட்டு வைக்க வேண்டியதுதானே அம்மா ரொம்ப பயந்துட்டேன்..” என்று வைதேகி கவலையுடன் கூற,

“இல்லம்மா நான் போன சைலன்ட்ல போட்டு இருந்தேன் அதோட மீட்டிங் டைம்ல நீங்க எடுத்து இருக்கீங்க அதனால நான் அதை கவனிக்கல சாரிமா..” என்று அவரை சமாளிக்கும் எண்ணம் கொண்டு பொய்களை வாரி இறைத்தான்.

“பரவால்லப்பா இப்போ எங்க இருக்க ரூம்லயா பக்கத்துல வள்ளி இருக்காளா..?” என்று கேட்டதும் சடுதியாக துருவனின் கண் கலங்கியது, வார்த்தைகள் தடுமாறின.

“இல்லம்மா நான் வெளியே நிக்கிறேன் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு இப்போதான் வெளியே வந்தேன் ஏதாவது வள்ளி கிட்ட சொல்லனுமா சொல்லுங்க நான் சொல்லிக்கிறேன்…”

“டேய் படுவா நான் என் மருமகளோட என்ன வேணும்னாலும் பேசுவேன் அதெல்லாம் உன்கிட்ட சொல்லனுமா அது சீக்ரெட் நான் அவகிட்ட தான் சொல்லுவேன் ரூமுக்கு எப்போ போவ சொல்லு நான் அப்போ கால் பண்ணிக்கிறேன் அவளோட போனுக்கு நான் ட்ரை பண்ணினா ரீச் ஆகல ஏன் என்ன ஆச்சு..?”

“சரி சரி அவளோட போன் கீழ விழுந்து டிஸ்ப்ளே போயிட்டு நான் போனதும் எடுத்து கொடுக்கிறேன் சரியா இப்போ நான் போன வைக்கவா எனக்கு அடுத்த மீட்டிங் இருக்குமா..”

“இல்லடா நான் உன்கிட்ட ஒரு டென் மினிட்ஸ் பேசணும்..”

“என்னமா ஏதாவது பிரச்சனையா..?” என்று துருவனுக்கு ‘நடந்த விபரீதமான சம்பவங்களிலே ஏதாவது அம்மாவுக்கு தெரிந்திருக்குமோ அதுதான் இப்படி கேட்கிறார்களோ..!’ என்று மனதிற்குள் பயம் வந்து தானாகவே குடி கொண்டது.

“இல்ல துருவன் காலங்காத்தால வள்ளியப் பத்தி ஒரு கெட்ட கனவு கண்டேன் அதுதான் மனசுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்துச்சு அவளோட குரலை கேட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..” என்று கூறியதும் துக்கம் துருவனின் தொண்டையை அடைத்துவிட்டது அவனால் பேசவே முடியவில்லை.

“துருவா லைன்ல இருக்கியாப்பா..?”

“ம்ம்.. சொல்லுங்கம்மா..”

“அவ நம்ம குலதெய்வம் மாரியம்மன்  படம் ஒன்று கொண்டு வந்து பூஜை அறையில வச்சு எப்பவுமே கும்பிடுவா அந்த படம் சரிந்து கீழே விழுந்து உடைகிற மாதிரி கனவு கண்டேன்.

அப்புறம் எனக்கு நித்திரை வரவே இல்லை நேரத்துக்கே எழும்பி  குளிச்சிட்டு போய் சாமியாறையில பார்த்தா உண்மையிலேயே அந்த படம் நான் எப்படி கனவுல கண்டனோ அப்படியே விழுந்து உடைந்து கிடக்கு என்னால நம்பவே முடியல இப்ப சொன்னாலும் எனக்கு உடம்புல புல்லரிக்குது

அவளுக்கு எதுவும் நடந்திருச்சோன்னு மனசுக்கு ரொம்ப பயமா இருக்குடா ஏதாவது பிரச்சனையா உண்மைய சொல்லு துருவன் அவ நல்லாத்தானே இருக்கா..”

“இல்லம்மா அவளுக்கு ஒன்னும் இல்ல அவன் நல்லாத்தான் இருக்கா இப்போ கூட காலைல வெளியே கூட்டிட்டு போய் சாப்பிட்டுவிட்டு  ஐஸ்கிரீம் குடிச்சிட்டு நான் ரூம்ல போய் இருந்துட்டு மதியத்துக்கு அப்புறம் தான் நான் வெளியே வந்தேன்…”

“ஓகேடா, வசுந்தராவும் கால் அட்டென்ட் பண்றா இல்ல அது தான் நான் கொஞ்சம் கனவையும் இதையும் நினைச்சு குழம்பிட்டேன்…”

“சரிமா நான் வைக்கிறேன்..”

“என்னடா எடுத்ததுல இருந்து வைக்கிறேன்னு சொல்லிக் கொண்டு இருக்க உன்னோட குரலும் சரி இல்லையே துருவன் அம்மாகிட்ட ஏதும் மறைக்கிறியா..?” என்று தாய்மனம் தனது மகனைப் பற்றி சரியாக ஊகித்துக் கொண்டது.

நெஞ்சில் பல நூறு ஊசிகளால் யாரோ குத்துவது போல துருவனுக்கு வலித்தது இருந்தும் அனைத்தையும் கண்கள் மூடி அடக்கிக் கொண்டு,

“சேச்சே இல்லம்மா என்ன இப்படி சொல்றீங்க எனக்கு காலையிலிருந்து ரொம்ப தலைவலியா இருக்கு நான் சீக்கிரமா இந்த மீட்டிங்க முடிச்சிட்டு ரூமுக்கு போவோம் என்று பார்க்கிறேன் அங்க அற்புதம் தனியா வேற இருப்பா அதுதான்..”

“சரிப்பா ஆனா துருவன் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..” என்று வைதேகி தயங்கினார்.

“சொல்லுங்கம்மா இது என்ன புதுசா கேட்டுக்கிட்டு தயங்காம சொல்லுங்கம்மா..”

“இல்லப்பா வள்ளிய எனக்கு 15 வயசுல இருந்தே தெரியும் நான் ந சின்ன வயசுல பிறந்ததும் எங்க ஊர்ல காதுகுத்தி மொட்டை போட்டு பொங்கல் வைக்க அப்போ உங்க மாமாவ பாக்குற ஆர்வத்துல தான் ஊருக்கே போனேன்

ஆனா உங்க மாமா நான் வந்தேன்னு அறிஞ்சதிலிருந்து அந்த கோயில் பக்கமே வரவில்லையாம் அவ்வளவு கோபம் உங்க மாமாக்கு அப்புறம் நீ பிறந்து ஒரு மூணு வருஷத்துக்கு அப்புறமா தான் அவங்களுக்கு  பொண்ணு பிறந்ததா எனக்கு அங்க ஊர்ல ராமசாமின்னு உங்க மாமாவோட நண்பர் இருக்கார்

அவர் எனக்கு ஊர்ல நடக்கிற எல்லா தகவலையும் சொல்லிடுவாரு முக்கியமா உங்க மாமாவை பத்தி. அவருக்கு நான் நிறைய உதவி செய்திருக்கேன் அதனால என்னோட அவர் ரொம்ப இஷ்டம் அப்படி அங்கு நடக்கிற எல்லா விஷயத்தை எனக்கு கால் பண்ணி சொல்லுவாரு.

கால் பண்ணினா வைக்கவே மாட்டாரு அவ்வளவு விஷயத்தையும் சொல்லிட்டு தான் வைப்பார் அப்போதான் சொன்னாரு உங்க மாமாக்கு மகள் பிறந்திருக்காங்கன்னு அப்புறம் எனக்கு பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு ஆனால் போகணும் என்று நினைச்சேன் உங்க அப்பா தடுத்துட்டாரு

போய் மனசு கஷ்டப்படுவதை விட நீ இங்கே இருக்கலாம் என்று சொல்லிட்டாரு அதுவும் சரிதான் என்று நான் போகல போனா மட்டும் உங்க மாமா தூக்கி இந்தா உன் மருமகள் என்று காட்டவா போறாரு அதனால உங்க அப்பாவையும் மீறி எனக்கு போகவும் மனசு இல்ல

அடுத்த போய் மனசு கஷ்டப்பட்டு சங்கடப்படுவதை விட தூர இருந்து மருமகள் பிறந்துட்டான்னு சந்தோஷப்பட்டு வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் அன்னைக்கு தடபுடலாக சமைச்சு போட்டு நம்ம வீட்டு வேலைக்காரங்க எல்லாருக்கும் துணிமணி எடுத்து கொடுத்து அப்படியே என் சந்தோசத்தை நான் கொண்டாடினேன்

அப்புறம் கொஞ்ச வருஷம் போனதும் ராமசாமி அண்ணன் கிட்ட பேசும் போது அவர் சொன்னாரு உங்க மருமக வயசுக்கு வந்துட்டான்னு எனக்கு சந்தோஷம் தாங்க முடியல இப்பவே அவளை பாக்கணும் போல இருந்துச்சு அதோட உன் மருமக ரொம்ப அழகா இருக்கான்னு ஒரு வார்த்தை சொன்னாரு.

அதை கேட்டதிலிருந்து அவளோட முகத்தை நான் ஒவ்வொரு ஒவ்வொரு விதமா கற்பனை பண்ணி பார்க்கத் தொடங்கிட்டேன் அவள அவள பாத்தே ஆகணும்னு என் மனசுக்கு தோனிக் கொண்டே இருந்தது.

அப்போ உங்க மாமா வள்ளி வயசுக்கு வந்ததை கொண்டாட்டமா வச்சாரு அப்ப நான் போய் பாக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கும்போது உங்க அப்பா வெளி ஊருக்கு பிசினஸ் விஷயமா போயிட்டார் அதோட உனக்கும் ஸ்கூல் ட்ரிப் நீங்க ரெண்டு பேரும் போனதும் நான் உங்களுக்கு தெரியாம கிராமத்துக்கு போய் அந்த விருந்துல யாருனே தெரியாம சேலையால முக்காடு போட்டு இருந்து சாப்பிட்டு மருமகளை கண் குளிர பார்த்துட்டு வந்தேன்.

அது உங்க மாமிக்குத் தெரியும் ஆனா மாமாக்கு தெரியாது மாமி பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க அழைக்காமயே வந்து என் மனச குளிர வச்சிட்டீங்க என்று அப்போதான் கூப்பிட்டு முதன் முதலா உங்க மாமி மருமகள காட்டினாங்க

ஒஅப்ப பார்த்ததும் எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருச்சு உன் முகத்தையும் அவன் முகத்தையும் வைத்து மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுக்கிட்டேன் அப்பவே நினைச்சேன் இவதான் என்னோட வீட்டு மருமகன்னு ஆனா உனக்கு அப்போ சின்ன வயசு தானே அதால உன்கிட்ட அதை பேசக்கூடாதுன்னு அந்த ஆசைய மனசுக்குள்ளே வச்சு சந்தோஷப்பட்டு கிட்டே இருந்தேன். அதுக்கப்புறம் தான்..” என்று வசுந்தரா தயங்கி நிற்க, துருவனின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டன

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!