லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52

5
(5)

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52

மருத்துவர் சொன்னதை கேட்டு அங்கிருந்த மூவரின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது..

தீரன் மலரழகியின் கையைப் பிடித்து தன் நெற்றியில் வைத்து “மலர்.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல.. நீ செஞ்ச உதவி எவ்வளவு பெருசுன்னு உனக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா நீ இந்தர் உயிரை காப்பாத்தி என் உயிரையும் காப்பாத்தி இருக்க.. என்னை பொறுத்த வரைக்கும் நீ மனுஷ உருவத்தில வந்த கடவுள்.. அவனுக்கு ஏதாவது நடந்திருந்தா.. ஐயோ.. அதை நினைச்சு பார்க்கும்போதே எனக்கு குலை நடுங்குது.. வாழ்நாள் முழுக்க உன்னோட இந்த உதவியை நான் மறக்கமாட்டேன்‌.. உனக்கு நான் ரொம்ப கடன் பட்டுருக்கேன் மலர்.. நீ இன்னைக்கு செஞ்ச உதவிக்கு பதிலா என் உயிரை வேணும்னாலும் கேளு.. கொடுக்கிறேன்”

அவன் குரல் தழுதழுக்க அவள் கைகளில் கண்ணீரால் அபிஷேகம் செய்தபடி பேசிக் கொண்டே போக “மாமா.. நான் டாக்டராக போறவ. இது என்னோட கடமை.. எதிரியாவே இருந்தாலும் உயிருக்கு போராடும் போது ஒரு டாக்டரா அவரை காப்பாத்துவேன்.. இந்த உதவிக்கு பிரதிபலனா நீங்க ஏதாவது செய்யணும்னு நெனச்சா தயவு செஞ்சு இனிமே எந்த காலத்திலயும் உங்களை சுத்தி இருக்கிற நல்ல மனுஷங்க மேல சந்தேக படாதீங்க.. இதுதான் நீங்க எனக்கு கொடுக்கிற பெஸ்ட் ரிவார்டா இருக்கும்..”

வாய்ப்பு கிடைத்த போது ஈட்டி போன்ற வார்த்தைகளால் குத்தி கிழித்தாள் தீரனை மலரும்..

அதே நேரம் தமிழ்வாணனின் அறையில் இருந்து செவிலி வந்து அவர் கண்விழித்து விட்டதாக சொல்லவும் மூவரும் அவர் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள்..

மதியையும் தீரனையும் பார்த்த தமிழ்வாணனின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அடுத்ததாய் உள்ளே நுழைந்த மலரை பார்த்தவர் ருத்ரமூர்த்தி ஆகி போனார்..

முகம் இறுகி கண்கள் சிவக்க “ஏய்.. நீ எங்கடி வந்த..?! வெளியே போடி.. என் கண்ணு முன்னாடி நிக்காத.. மரியாதையா போயிரு..  உன்னை என் மகன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.. இப்படி ஒரு கேவலமான வேலையை பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டதும் இல்லாம இப்போ மதியோட வாழ்க்கையையும் கெடுத்துட்டு நிக்கிறியேடி.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.. எங்கேயாவது போய் செத்து தொலை..”

மலரோ தன் தந்தை பேசியது கேட்டு விக்கித்து போய் நின்றிருந்தாள்..

அவர் அதிகமாக கத்த மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அவருக்கு மறுபடியும் நெஞ்சு வலி வருவது போலாக அங்கே வந்த செவிலியர் “ஏன்மா.. வெளியில அவ்வளவு தூரம் சொன்னேன் இல்ல..? அவரை டென்ஷன் படுத்தாம இருங்கன்னு.. உங்களுக்கு எல்லாமா சொன்னா புரியாதா? மறுபடியும் அவருக்கு அட்டாக் வந்தா உயிருக்கே ஆபத்தாயிடும்.. முதல்ல எல்லாரும் வெளில போங்க..”அந்த செவிலி அவர்களிடம் கரோராய் பேசி அவர்களை அங்கிருந்து துரத்தினாள்..

மதியழகி அந்த செவிலியிடம் “ஒரு அஞ்சு நிமிஷம்.. நாங்க எங்க அப்பா கிட்ட பேசிட்டு போயிடறோம்.. ப்ளீஸ் சிஸ்டர்..” என்று கெஞ்சினாள்..

எப்படியாவது மலரழகியின் மீது எந்த தவறும் இல்லை என்று அவருக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாள் அவள்..

“சரி.. ஒவ்வொருத்தரா வந்து பேசுங்க.. மொத்தமா இங்க கூட்டம் போட்டுட்டு நிக்க வேண்டாம்.. அவருக்கு உடம்பு சரியில்லமா.. ரொம்ப எமோஷனல் ஆக கூடாது.. பார்த்துக்கங்க..”

அந்த செவிலி திட்டவட்டமாய் சொல்ல தமிழ்வாணன் அவரிடம் “சிஸ்டர் இவங்க ரெண்டு பேரும் என்னோட பேசட்டும்.. அந்த மலரை முதல்ல வெளிய அனுப்புங்க.. அவ முகத்தை பார்க்க கூட எனக்கு இஷ்டம் இல்ல.. ஒருவேளை உங்களால அவளை அனுப்ப முடியாதுன்னா நான் இந்த ஹாஸ்பிடல்ல விட்டு வெளியில போயிடுறேன்.. அவளை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகி என் பக்கத்துலயோ என் பொண்ணு பக்கத்துலையோ இருக்க கூடாது..”

அவர் பேசியதைக் கேட்டு மூவருமே வாய் அடைத்துப் போனார்கள்.. உண்மை தெரியாமல் படபடவென அவர் பேசி விட்டார்.. ஏற்கனவே நொறுங்கிப் போயிருந்த மலரழகி இவர் பேசியதெல்லாம் கேட்ட பிறகு இன்னும் என்ன செய்வாளோ என்று சிறிது அச்சமாகவே இருந்தது மதிக்கு..

மலரழகியோ அந்த செவிலிக்கு ரொம்பவும் வேலை வைக்காமல் தானே அந்த அறையை விட்டு அமைதியாய் கண்ணீர் நிறைந்த கண்களோடு வெளியே சென்று இருந்தாள்..

அவள் பின்னாலேயே சென்ற தீரன் “மலர் உங்க அப்பாக்கு ஒன்னும் தெரியாது.. அதனால கோவத்தில ஏதோ பேசிட்டாரு.. நீ தப்பா நினைக்காதே.. ப்ளீஸ்..”

“ஏன் மாமா.. உண்மை தெரியறது.. தெரியாதது இருக்கட்டும் மாமா.. அவரோட பொண்ணு தானே நானு..? என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா மாமா.. ஆமாம் மாமா.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி காலேஜ் கட் அடிச்சிட்டு உங்களை பார்க்க வந்தேன்.. ஆனா என் காலேஜ்ல போய் நான் எப்படி படிப்பேன்னு கேட்டு பாருங்க மாமா.. அந்த ஒரே ஒரு நாள் உங்க ஷூட்டிங் பார்க்க வந்தவ அக்கா எந்த காரணத்தை கொண்டும் காலேஜ் கட் அடிக்க கூடாதுன்னு சொன்னதுக்காக ஒரு நாள் கூட நான் காலேஜ் கட் அடிச்சது கிடையாது.. என்னை பொறுத்த வரைக்கும் என் அக்கா வார்த்தைக்கு நான் அவ்வளவு மதிப்பு கொடுத்துக்கிட்டு இருந்தேன்.. ஏன் மாமா காலேஜ் டைம்ல எவ்வளவோ பொண்ணுங்களுக்கு கிரஷ் இருக்கிறது இல்லையா? தன்னோட ஃபேவரிட் ஹீரோவோட ஷூட்டிங் நடக்குதுன்னா காலேஜ் கட் அடிச்சிட்டு போய் பாக்குற பொண்ணுங்க இல்லையா? சாக்லேட் பாய்ன்னு சொல்லி அவங்க மேல பைத்தியமா திரியறது இல்லையா..? ஆனா அதுக்கப்புறம் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் என்னோட ஃபர்ஸ்ட் க்ரஷ்னு சொல்லிக்கிறது இல்லையா? அந்த மாதிரி தான் மாமா நான் உங்களை பார்த்தேன்.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு சூப்பர் ஹீரோ.. ஆனா எப்ப நீங்க எங்க அக்காவை கல்யாணம் பண்ணிட்டீங்களோ அதுக்கப்புறம் உங்களை என் மாமாவா.. இன்ஃபாக்ட் என்னோட வெல்விஷரா என்னோட ஒரு கைடா தான் பார்த்து இருக்கேன்.. உங்க மேல இருந்த ஒரு பிரமிப்பு மட்டும் எனக்கு போகல.. அது இன்னும் கூட அப்படியே தான் இருக்கு.. ஆனா அதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனப்புறம் நான் உங்களை எங்க அக்கா கிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி அவங்களால நினைக்க முடிஞ்சது மாமா..? இல்ல மாமா.. நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் நான் அதை ஒத்துக்க மாட்டேன்..”

இல்ல மா.. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு.. நீ எங்களுக்காக பண்ண ஒவ்வொரு வேலையும் உங்க அக்காவை உன் மேல சந்தேகப்பட வெச்சிடுச்சு.. உங்க அப்பா ஒருவேளை நீ அந்த சேகரோட பேசறதை கேட்டிருந்தா உன்னை சந்தேகப்பட்டு இருப்பாரான்னு எனக்கு தெரியாது.. ஒருவேளை நேரடியா உன்கிட்ட கேட்டு கிளியர் பண்ணி இருந்திருக்கலாம்.. ஆனா நீ அந்த சேகர் கிட்ட அப்படி பேசினேன்னு சொல்லி நீ மனசுல இன்னும் என்னை அடையணும்னு நினைச்சு இருக்கேன்னு சொன்னது உங்க அக்கா.. மதியே அப்படி சொல்லவுந்தான் அவர் சந்தேகமே இல்லாம உன்னை தப்பா நினைச்சு இருக்காரு..”

“இல்ல மாமா.. யார் என்ன சொன்னாலும் இப்படி எல்லாம் நான் பண்ணுவேனான்னு யோசிச்சு இருந்தாலே அவருக்கு தெளிவாகி இருக்குமே மாமா.. ஹூம்.. விடுங்க மாமா.. எல்லா மனுஷங்களுமே இப்படித்தான் போல இருக்கு.. மதி அக்கா அவரு பொண்ணுன்னா நானும் அவரு பெத்த பொண்ணு தானே மாமா? அப்போ மதியக்கா சொன்னாங்கன்னு என்னை பத்தி அவர் எப்படி மாமா அவ்வளவு தப்பா நினைக்கலாம்? இவ்ளோ பேசுறீங்களே என்னை கூப்பிட்டு எங்க அப்பா ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல..? மதி இப்படி சொல்றாளே.. உண்மையான்னு.. கேட்டாரா..? இல்லையே மாமா.. இப்ப அவர் படுத்திருக்கிற ரூமுக்குள்ள போன உடனே என்னை ஏதோ ஒரு கேவலமான புழு பூச்சியை பார்க்கிற மாதிரி பார்த்து இல்ல விரட்டி விட்டிருக்கிறார்.. நான் என்ன தப்பு பண்ணேன் மாமா..? உங்களுக்கும் கல்யாணம் ஆகல.. நான் ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு.. உங்க மேல இருந்த இன்ஃபெக்ஷூவேஷனை காதல்னு நினைச்சுட்டு உங்க பின்னாடி சுத்தினேன்.. அது என்ன அவ்வளவு பெரிய பாவமா அதுக்கு எனக்கு எதுக்கு மாமா எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை..?”

விரக்தியாய் சொல்லி சிரித்தவளை கவலையோடு பார்த்திருந்தான் தீரன்..

“சரி மலரு.. எனக்கு புரியுது.. உங்க அக்கா அப்பா ஏன் நான் கூட  நீ அந்த மாதிரி தப்பு பண்ணி இருப்பியோன்னு ஏதோ ஒரு நேரத்துல நம்பிட்டேன்.. எல்லாரும் உன்ன பத்தி தப்பா நினைச்சது உனக்கு ரொம்ப வலிக்கும்.. எனக்கு தெரியும்.. ஆனா எனக்கு நீ ஒரே ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கணும்.. “

“என்ன மாமா?”

இந்தர் மாதிரி எந்த தப்பான முடிவையும் எந்த காரணத்தைக் கொண்டும் உன் வாழ்க்கையில எடுக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு..”

அவன் கை மேல் கை வைத்து சத்தியம் செய்தவள் “நிச்சயமா அந்த மாதிரி ஒரு வேலையை நான் பண்ண மாட்டேன் மாமா.. ஆனா அதுக்காக இந்த வார்த்தைகளை சகிச்சுக்கிட்டு நான் அட்ஜஸ்ட் பண்ணி போவேன்னு எதிர்பார்க்காதீர்கள்.. அடுத்து நான் என்ன பண்ணுவேன்னு தெரியல.. ஆனா நிச்சயமா இனிமே யாருக்கும் பாரமா இந்த மலரழகி இருக்க மாட்டேன்..”

அவள் பேச்சு போகும் திசை தீரனுக்கு அதிர்வை தந்தது..

“யாருக்கும் பாரமா இருக்க மாட்டேனா என்ன சொல்ல வர மலரு..?”

“நான் எங்கேயாவது வெளியில போய் தனியா இருக்க போறேன் மாமா.. என் டாக்டர் படிப்பு முடிக்கிற வரைக்கும் தனியா இருந்து என் சொந்த உழைப்புல சம்பாதிச்சு டாக்டராகி என் ஃபீல்டில் சாதிச்ச அப்புறம் தான் நான் மறுபடியும் அந்த வீட்டுக்கு வருவேன்.. நிச்சயமா நான் சாகமாட்டேன் மாமா.. நல்லபடியா வாழ்ந்து காட்டுவேன்.. அதுவும் இண்டிபெண்டன்டா என் கால்ல நான் நின்னு காட்றேன்.. இது இந்த மலரழகி உங்களுக்கு செய்ற சத்தியம்..”

அவள் சொன்னதைக் கேட்டு ஒரு புறம் அவள் தனியாக இருக்கிறேன் என்று சொல்கிறாளே என்று வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் தீரனுக்கு அவளின் தன்னம்பிக்கையை எண்ணி மகிழ்ச்சியாக தான் இருந்தது.. அவளை அந்த நேரம்  பிரமிப்பாய் தான் பார்த்து இருந்தான் தீரன்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!