சென்னை நகரில் இரண்டு இடத்தில் இருந்த நாயுடு ஜீவல்லர்ஸ் அரசாங்காத்தால் இழுத்து மூடப்பட்டது.. அரசுக்கு தெரியாத கணக்கு காட்டாது கடத்தல் தங்கத்தை பதுக்கி வைத்து இருந்ததாலும், அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமத்து கடையை கட்டி உள்ளதாலும், இந்த நடவடிக்கை என அனைத்து நியூஸ் சேனல்களிலும் மாறி மாறி இந்த செய்தியே வந்து கொண்டு இருந்தது..
அதை பார்த்து சாலா வாய்விட்டு அழுதார்.. ஒரே நாளில் அவர்கள் நிலை இப்புடியாகி விட்டதே என்று, இப்போது அவர்கள் இருக்கும் வீடு தவிர வேறு எந்த சொத்துமே இப்போது அவர்களிடம் இல்லை.. ஒரே நாளில் தலைகீழானாது அவர்கள் வாழ்க்கை..
இதற்கு எல்லாம் யார் காரணமாக இருப்பார்கள் சாட்சாத் விஷ்ணு ப்ரதாப் தான்..
ஷ்யாம் மருத்துவமனையில் இருக்கும் போதே அவனின் அடுத்த கட்ட நடவடிக்கையை தெரிந்து கொள்ள அவன் பி.ஏ.வை விலைக்கு வாங்கி இருந்தான் ப்ரதாப்...
அவன் மூலமாக தான் விஷ்ணுவை ஆக்சிடென்ட் செய்ய போகும் விஷயமறிந்து தெய்வாதீனமாக அதை தடுத்து விட்டான்..
ஆனால் அவன் மனைவியையும் குழந்தையையும் தொட நினைத்தவர்களை சும்மா விடுவானா?
இவ்வளவு நாள் நாயுடுவின் நல்ல மனதுக்காகவும் ராம்வாகவும் பொறுத்து கொண்டு இருந்தான். எப்போது அவன் மனைவி மீது, அதுவும் கர்ப்பினி என்று கூட பாராது இப்புடி செய்ய துணிந்து விட்டாரோ, இனி விடுவானா அவன்?, அதான் பணம் சொத்து இது எல்லாம் தானே சாலாவின் இந்த ஆணவத்திற்கு காரணம். அதான் ஒரே நாளில் அதை ஒன்றும் இல்லாத செய்து விட்டான்..
சாலாவை மட்டுமா? ஷ்யாமின் நிலை இதை விட மோசம்.. சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருக்கின்றான்…
அவனின் பி.ஏ வை வைத்து இவ்வளவு நாளும் அவன் தொழிலில் செய்த சில தில்லுமுல்லு வேலை.. பெண்கள் விஷயத்தில் அவன் செய்த அயோக்கியத்தனம் அனைத்தையும் தோண்டி எடுக்க, அதன் பட்டியலோ ரொம்ப பெரிதாக இருந்தது...
அதை காவல் துறையிடம் கொடுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கையில் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருக்கின்றான்…
விஷயமறிந்து லீலாவை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்து இருந்தான் ராம்…
அவனை பார்த்த சாலா “அந்த ப்ரதாப் கூட சேர்ந்து எல்லாம் பண்ணிட்டு இப்ப ஒன்னும் தெரியாதவன் போல நலன் விசாரிக்க வந்துட்டியா?”என கத்த,
லீலா ராமை முறைத்தாள்.. ‘அவங்க செஞ்சதுக்கு சரியான தண்டனை தான், நான் வர மாட்டேன்’ என்றவளை,
‘என்ன இருந்தாலும் அவங்க பொண்ணு நீ, இந்த சூழ்நிலையில் நாமா தான் ஆறுதலா நிற்கனும்’ என சொல்லி வலுக்கட்டாயமாக ராம் அழைத்து வந்து இருந்தான்..
“உன் முதலாளியை நா சும்மா விட மாட்டேன். அந்த ப்ரதாப்பை நான்” என்ற சாலா கன்னத்தில் ஒரு அறை விட்ட நாயுடு,
“கர்ப்பமாக இருக்க பொண்ணை எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா கொலை பண்ற அளவுக்கு நீ போய் இருப்ப?”
“ஆரம்பத்திலிருந்தே உன்னோட சின்ன சின்ன தப்பை நான் கண்டிக்கமா விட்டதது தான் பெரிய தப்பு.. அதான் நீ இவ்ளோ ஆடுற, பர்ஸ்ட் நீ கிளம்பு, இனி நீ இங்க ஆகவே ஆகாது” என்றவர்,
ராமின் புறம் திரும்பி “எங்களுக்கு விஜயவாடாவில் பூர்வீக வீடு ஒன்னு இருக்கு.. அங்க இவளை கூட்டிட்டு போறேன்... இனியும் இவ இங்க இருந்தா யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டா.. என்ன பண்றது கல்யாணம் பண்ணிட்டேன் நல்லவளோ கெட்டவளோ கடைசி வரை வச்சு பார்த்துக்கனுமே,அதான் கூட்டிட்டு போறேன்” என தலையில் அடித்து கொண்டவர்,
“என் பொண்ணுக்காக அத்தனை சொத்தும் பார்த்து பாத்து சேர்த்தது… இப்ப இந்த ஒரு வீடு மட்டும் தான் மிஞ்சி இருக்கு..இதை லீலா பேரில் எழுதி வச்சு இருக்கேன் வாங்கிகோங்க” என நாயுடு ராம் கையில் கொடுக்க..
ராம் மறுக்க, சாலா மீண்டும் எகிறி நாயுடு கையால் அடி வாங்கி அமைதியாகி விட, நாயுடு எது ஏதோ சமாதானம் சொல்லி ராம் லீலா கையில் கொடுத்து விட்டு சாலாவை அழைத்து கொண்டு விஜயவாடா சென்றார்…
அதை பிரித்து பார்த்தவளுக்கோ பயங்கர அதிர்ச்சி.. அதோடு நெஞ்சில் மெல்லிய வலி ஒன்று பரவியது…
அதில் ஒரு திருமண பத்திரிக்கை வம்சி கிருஷ்ணா வெட்ஸ் சைத்தன்யா தேவி என்று இருந்தது…
அன்று நிவேதாவிடம் இனி என் வாழ்க்கையில் நீ இல்லை என கோவமாக கத்தி விட்டு சென்ற வம்சி… அதன் பின் நிவேதாவை எந்த தொந்தரவும் செய்வது இல்லை.. ஏன் அவளை பார்ப்பது கூட இல்லை..
அதற்காக சோகமாக முகத்தை வைத்து கொண்டும் திரியவில்லை எப்போதும் போல் ஜாலியாக தான் உலா வந்தான்..
‘இவ்வளோ தான் இவனோட லவ்வு’ என அதற்கும் அவனை குற்றம் சொல்லி, ரொம்ப சந்தோஷம் எனக்கு, என மனதில் சொல்லி கொண்டு திரிந்தாள்..
அந்த நிலையில் தான் விசாலாட்சி ‘ஒரு பொண்ணு உனக்கு ஒத்து வர போல இருக்கு வம்சி, போட்டோ வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கேன்.. பிடிச்சு இருக்குன்னா சொல்லு பேசி முடிச்சிரலாம் என சொல்ல,
எனக்கு ஓகே என வம்சி ஒரே வார்த்தையில் முடித்து கொள்ள, அது இப்போது இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் என்ற நிலைக்கு வந்து இருக்கிறது..
பத்திரிகையில் இருந்த வம்சி கிருஷ்ணா என்ற எழுத்தில் நிவேதா அறியாமல் மனதின் வலி தாங்காது கண்ணிலிருந்து வந்த கண்ணீர் துளி பட்டு தெறித்தது..
அவனை வாழ்க்கையை விட்டு போ போ என்று விரட்டினாள்.. இப்போது இந்த பத்திரிகையை பார்க்கும் போது ஏதோ ஒன்று உள்ளே உடைவது போல் இருந்தது… நிற்க கூட முடியவில்லை கால்கள் துவழ அப்புடியே கீழே விழ பார்க்க ராம் வந்து பிடித்து கொண்டான்…
அவனும் அப்போது தான் அலுவலகம் செல்ல வெளியே வந்தவன் நிவேதா எதையோ வெறித்து கொண்டு இருப்பதை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை கண்டுகொண்டு என்னவென்று கேட்க அருகே வந்தவன் கீழே விழ போனவளை பிடித்து அருகே இருந்த கல் மேடையில் அமர வைத்தான்..
“பார்த்து நிவி” என்ற லீலா ராம்க்கு கொடுக்க கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை நீட்டினாள்.. ‘வேண்டாம்’ என தலை அசைத்தாள் நிவேதா..
நிவேதா கையிலிருந்ததை இருவருமே பார்த்தனர்…
ராம்க்கு அதை பார்க்கையிலே அவ்வளவு கோவம்…. இந்த கல்யாண விஷயம் கேள்விப்பட்டு “என்னடா இது? அப்ப நிவியை ஏமாத்த பார்க்கிறியா” என கோவப்பட,
“ஆமா அந்தம்மா என் கூட தான் வாழுவேன்னு ஒத்த கால்ல நிற்கும் போது நான் அவங்களை ஏமாத்திட்டு வேற கல்யாணம் பண்ண போறேன்.. போய்ருடா ஒழுங்கா அந்த பக்கம் அவ பேச்சை எடுத்துக்கிட்டு வராதா அவ்வளவு தான்” வம்சியும் கோபப்பட,
“வம்சி என்னடா என்ன ஆச்சு? அவ சின்ன பொண்ணுடா கொஞ்ச நாள் பொறுமையா”,
“எத்தனை நாள் பொறுயையா இருக்க முடியும் ராம் சொல்லு, அப்புறம் அதுவா சின்ன பொண்ணு, வாய் வங்களா விரிகுடா வரை நீளுது.. உன் சின்ன நொள்ளை என்ன பார்த்து என்ன பேசிச்சு தெரியுமா?”என்றவனுக்கு அன்றைய கோவம் இன்னும் இருந்தது..
மேலும் “உன் சின்ன பிள்ளைக்கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்ண வேண்டியது தானே, அவகிட்ட உன்னால் பேச முடியுமா? சரியான பைத்தியம் அது” என் நிவியை திட்டியவன்,
“அந்த வேதாளம் இந்த ஜென்மத்தில் முருங்கை மரத்தை விட்டு இறங்காது.. அதுக்காக என் வாழ்க்கையை அப்புடியே விட முடியுமா?
“ஓ.. அப்ப உனக்கு நிவி பத்தி அவ மனசு நிலைமை பத்தி கவலை இல்ல..உனக்கு தேவை பொம்பளை சுகம் அதான் இந்த கல்யாணத்திற்கு ஓகே சொல்லி இருக்க” ராமும் கோவத்தில் வார்த்தையை விட,
“ஆமாடா இப்ப என்னங்கிற”,
“இனிமே என்னோட பேசவே பேசாத முகத்தில் கூட முழிக்காத”,
“சேம் டூ யு” என வம்சியும் சொல்லி விட, இந்த ஒரு மாத காலமாக ராம் வம்சி இருவரும் பேசி கொள்வதால்லை..
இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட இருவரும் பேசாமல் இருந்தது இல்லை. ராம் சண்டை போட்டு பேசாமல் இருந்தாலாவது கல்யாணத்தை மறுப்பான் என ராம் நினைக்க அதுவோ பத்திரிக்கை அடித்து ஊர் முழுக்க அழைத்து அடுத்த மாதம் திருமணம் என்ற அளவு வந்து விட்டது.. வம்சி எதுவும் பண்ணுவதாக தெரியவில்லை.. அவன் புது வாழ்க்கைக்கு தயாராகி விட்டான்… ராம்க்கு பயங்கர கோவம் வந்தது. ப்ரதாப்பிடம் சொல்லி விடலாமா என்ற ஒரு எண்ணம் கூட வந்தது…ஆனால் நம்பியை இப்புடி மாறி விட்ட பின்பு சொல்லி என்ன பயன் என்பதால் அமைதியாக இருக்கின்றான்..
ராம்க்கு வம்சி மீது மட்டுமல்ல நிவி மீதும் தான் அவ்வளவு கோவம்.. வம்சி எத்தனை சமாதான பண்ண முயற்சி செய்தான்.. அப்போது கண்டதை போட்டு மனதை குழப்பி அவனையும் எடுத்தெறிந்து பேசி விட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பயன் என்று கோவம் எழுந்தது…
அந்த கோவம் நிவி மீது லீலாவுக்கும் உள்ளது.. ஆனாலும் இப்போது அதை காட்ட கூடாது என
“நிவி ஃபீல் பண்ணாத, இப்ப கூட ஒன்னும் கெட்டு போகலை.. வம்சிக்கிட்ட போய் பேசு.. நீ பேசுனாலே”,
“நான் ஏன் போய் பேசனும்? அவனுக்கு கல்யாணம் ஆனா என்ன? ஆகலைன்னா எனக்கு என்ன? நான் ஃபீல் பண்றேன்னு உன்கிட்ட வந்து சொன்னனா? நீயா எதையும் கற்பனை பண்ணிட்டு பேசதா லீலா” என பத்திரிக்கையை பார்த்து அதிர்ந்தவள் லீலா பேச்சில் தெளிந்து பழைய நிவேதாவாக மாறி சத்தம் போட,
“ஃபீல் பண்றேன்னு சொல்லி தான் தெரியனுமா அதான் உன்னை பார்த்தாலே தெரியுதே” ராம் சொல்ல,
“அது அது” என இழுத்தவள் வாசல்ல வண்டி புழுதியை கிளப்பிட்டு போனதில் கண்ணில் தூசி பட்டு கலங்கிருச்சு, காலையில் டிபன் சாப்பிடலை வெயில் வேற ஜாஸ்தியா இருக்கிறதால் கொஞ்சம் தடுமாறிட்டேன், உடனே நீங்க இரண்டு பேரும் எதையாவது கற்பனை பண்ணி உளறிட்டு” என்றவள் கையிலிருந்த பத்திரிகையை கீழே வீச,
லீலா ராம் இருவருக்குமே இவ்வளவு நடந்தும் அழுத்தமாக இல்லை என நடிப்பவள் மீது கோவமே எழுந்தது….
“என்ன இன்னும் நின்னு என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க. போங்க போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க” என்றாள்..
“அதான் மேடம் சொல்றாங்களேப்பா போங்க போய் வேலையை பாருங்கப்பா” என்ற குரலில் மூவருமே திரும்பி பார்த்தனர்..
வம்சி தான் நின்று இருந்தான் அருகே அவன் விரைவில் திருமணம் செய்யவிருக்கும் சைத்தன்யா தேவியும் நின்று இருந்தாள்.. வம்சி சைத்தனாயா தோளில் கை போட்டாவாறு வேறு நின்று இருந்தான்…
அந்த கையில் தான் மூவரின் பார்வையும் இருந்தது.. நிவிக்கோ அந்த கையை உடைச்சு அடுப்பில் போடும் அளவு கோவம் வந்தது..
‘ஏன் கோவப்படற? ஏன் ஃபீல் பண்ற? அவன் எப்ப சான்ஸ்ன்னு எதிர்பார்த்துட்டு இருந்தான்.. வாய்ப்பு கிடைச்சதும் தன்னோட ஆம்பிளை புத்தியை காட்டிட்டான்.. நல்ல வேளை அவனை நீ நம்பலை’ என கலங்கிய தன் மனதுக்கு எப்போதும் போல் தப்பு தப்பான அறிவுரை கொடுத்தது அவளின் மூளை…
“ஹாய் கைஸ்” என்றபடி இவர்கள் அருகே வம்சி வர,
அவன் மீது ஏற்கெனவே கோவத்தில் இருந்த ராம் இப்போது அவன் செயலில் இன்னும் கோவம் வர அந்த இடத்தில் இருந்து நகர பார்க்க,
அவனை வழிமறித்த வம்சி டார்லிங் “இவன் என்னோட முன்னாள் நண்பன்” என அறிமுகப்படுத்த,
“முன்னாள் நண்பனா அப்ப இப்ப இல்லையா” என சைத்தன்யா கேட்டாள்..
,
“இல்ல இல்ல இப்ப எனிமி ஆகிட்டான்” என்றான் வம்சி..
“அதான் எனிமி ஆகியாச்சே.. அப்புறம் என்ன சோலி இந்த பக்கம்” ராம் நக்கலாக கேட்க,
“உன்னை எவன்டா வெண்ணெய் பார்க்க வந்தது.. நான் வந்த வேலை வேற, பார்க்க வந்த ஆளும் வேற”, என்றவன் பார்வை நிவியை தொட்டது….
தன்னையா எதுக்கு என்ற கேள்வியோடு நிவியும் வம்சியை பார்த்தாள்..
சைத்து டார்லிங் இது தான் என்னோட முன்னால் காதலி அண்ட் மனைவி என நிவேதாவை கை காட்ட,
முன்னாள் காதலி என்றதிலும் சைத்தனயா தோளில் போட்டு இருந்த கை மட்டும் இன்னும் அப்புடியே இருந்ததிலும் கோவமாக நிவேதா அவனை முறைத்தப்படி இருந்தாள்..
“ஆஹா அப்புறம் என் முன்னால் காதலி திஸ் இஸ் மை ஃப்யான்சி”.. என சைத்தன்யாவை காட்டியவன்
“உன்னை விட அழகான அறிவான அதை விட முக்கியம் அமைதியான பொண்ணு” என சைத்தன்யாவை வர்ணித்து நிவியை வெறுப்பேற்றிய வம்சி..
“நேம் சைத்தன்யா” என முடிக்க
“என்ன சைத்தானா”?
“அது நீ டி, என்னை பிடிச்ச வேதாளம் சைத்தான் எல்லாம் நீ தான்டி… உன்னை விட அழகா இருக்காளேன்னு பொறாமையில் பொசுங்குதடி, உன்னை ஒரேயடியா ஒழிச்சு கட்ட தான் நான் இப்ப வந்து இருக்கிறதே” என்றவன் போட்டு இருந்த கோர்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்..
அது விவாகரத்து பத்திரம் பார்த்த நிவி மேலும் அதிர்ந்தாள்…
“என்ன பார்க்கிற இதுல சைன் பண்ணு.. என்னா தீடிர்ன்னு என் கல்யாணத்து அன்னைக்கு வந்து இவன் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டான் சொல்லி பிரச்சினை பண்ணிட்டா என்ன பண்றதுன்னு” என் டார்லிங் ஃபீல் பண்றா..
“எனக்கு அப்புடி பிரச்சினை பண்ணனும்ங்கிற எந்த தேவையும் இல்லை”…
“தேவை இல்லைல அதான் சொல்றேன் சைன் பண்ணு” என்றதும் கோவமாக அவனிடமிருந்து அந்த பத்திரத்தை பிடுங்கி கையெழுத்து இட போக, ஏனோ அந்த நேரம் நான்கு வருடம் முன்பு திருமணத்தை பதிவு செய்ய கையெழுத்திட்டது கண்முன் வந்து போக, கையில் சிறு நடுக்கம் ஏற்பட்டது, இருந்தும் சுற்றி இருப்பவர்கள் அதை கவனிக்கும் முன்பு கையெழுத்திட்டு வம்சி மீது விசிறியடித்தாள்..
ராம்க்கோ உச்சபட்ச அதிர்ச்சி.. மனதில் ஏதோ ஒரு மூலையி இந்த கல்யாணம் நடக்காது வம்சி அப்புடி நிவியை விட்டு போக மாட்டான் என்று நம்பிக்கை ஒட்டி கொண்டு கொண்டு இருந்தது… ஆனால் இதை எல்லாம் பார்க்கும் போது அவனுக்கு நிவியை வாழ்க்கையை நினைத்து பயமாக இருந்தது.. வம்சியை ராம் முறைக்க…
அதை பார்த்த வம்சியோ “டார்லிங் இங்க ஒரே நெகடிவ் வைப்பா இருக்கு.. ரொம்ப நேரம் நிற்க கூடாது நீ வாடா தங்கம் நாமா போகலாம்” என சைத்தன்யாவை அதே போல் தோளில் கைப்போட்டு அழைத்து சென்றான்..
இதை பார்த்த நிவிக்கோ கோவம் வருத்தமும் இரண்டுமே வந்தது வம்சி மீது.. அவன் மற்ற பெண்களை எல்லாம் டார்லிங் பேபி என முன்பே அழைப்பான் தான்.. அப்போது எல்லாம் கோவம் மட்டுமே வரும்… ஆனால் சைத்தன்யாவை அவன் டார்லிங் என அழைக்கும் போது எல்லாம் நிவிக்கு என்னவோ போல் எதையோ அவளிடமிருந்து உருவி எடுப்பது போல் இருந்தது..
Super aappu niviku konja nal nalla alatum