“விவாகரத்து நோட்டீஸ்ல சைன் பண்ணும் போது அவ ரொம்ப ஃபீல் பண்ண தானே” காரில் ஏறிய பின்பு வம்சி சைத்தன்யாவிடம் கேட்க,
“ம்ஹும் உன் தொல்லை விட்டுச்சுன்னு சந்தோஷமா சைன் பண்ணுன போல தான் இருக்கு” என சொல்லி சிரித்தாள் சைத்தன்யா…
நிவேதா பேச்சில் பயங்கர கோவம் வம்சிக்கு இருந்த போதும்.. அவளை விட்டு இன்னோரு வாழ்க்கையா நிச்சயம் அவனால் அது முடியாது… அவனுக்கு வேறு பொண்ணுன்னு திருமணம் என்றாலவது நிவேதா மனம் மாறுவாளோ என்ற நப்பாசையில் தான் விசாலாட்சி வந்து கேட்டவுடன் சம்மதம் என கூறினான்…
சைத்தன்யாவை பார்க்க போன சமயமே அவளிடம் அனைத்தும் சொல்லி விட்டான்.. அவளுக்கும் இப்போது திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை என்பதால் உதவி பண்ணுகிறேன் என ஒப்பு கொண்டாள்..
ராமிடம் கூட இதை சொன்னால், அவன் நடவடிக்கையை பார்த்து நிவேதா கண்டுபிடித்து விடுவாள் என்பதால் அவனிடம் கூட எதையும் சொல்லாது சண்டை போடுவது போல் காட்டி கொண்டான்...
ஆனால் கல்யாண விஷயம் தெரிந்தும் ஏன் நிச்சயத்தார்த்தம் போதும் நிவேதா அமைதியாக தான் இருந்தாள்.. வம்சிக்கே என்னடா இது என்றாகி போனது..
இதோ திருமணப் பத்திரிக்கை அடித்து ஊர் முழுக்க வைத்தும் கூட அவள் அப்புடியே கல்லு போல இருக்க, அதில் கடுப்பாகி தான் அவளுக்கு ஒரே பத்திரிக்கையும் அவர்களின் திருமண சான்றிதழ் கிழித்து அனுப்பி இருந்தான்..
எதுக்கும் நிவேதா அசைவேனா என்று இருக்க போய் தான் விவாகரத்து பத்திரத்தை நீட்டினான்.. ஆனால் அதிலும் கையெழுத்து போட்டு விட்டாள்…
நிவேதா கையெழுத்தை பார்க்கும் போது அவனுக்கு அவ்வளவு கோவம் வந்தது.. கையெழுத்து போட மாட்டாள் என நம்பி கொண்டு இருந்தான்… ஆனால் போட்டு விட்டாள்..
“சைன் பண்ண மாட்டாங்கன்னு சொன்ன பண்ணிட்டாங்க… அடுத்து என்ன பண்ண போற வம்சி” சைத்தன்யா கேட்க,
“தெரியலை” என்றான்..
“தெரியலையா? இன்னும் ஒன் மன்த் தான் இருக்கு மேரேஜ்க்கு”,
“ஒன் மன்றத் இருக்குல்ல அதுக்குள்ள அவ மனசு மாறிடுவா” என்றான்.. அது தனக்கு தானே அவன் சொல்லி கொள்ளும் சமாதானம்...
“இவ்வளவு நாளா மாறாதவங்க… இனி மாறுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை… அப்புடி அவங்க மனசு மாறலைன்னாலும் பிர்ச்சினை இல்ல.. நானே உனக்கு வாழ்க்கை தரேன் வம்சி.. உன்னை மாதிரி ஒருத்தனை மேரேஜ் பண்ணிக்க கசக்கவா செய்யும்” என கண்ணடித்தாள் சைத்தன்யா..
“போடி லூசு இருக்க பிர்ச்சனையில் இவ வேற” என்றவனுக்கு நிச்சயம் நிவேதா மாறி விடுவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது..
ஆனால் இதோ ஒரு மாதம் கடந்து விட்டது.. இன்று வம்சியின் திருமணம்.. அக்கினி குண்டத்தின் முன்பு ஐயர் சொல்லும் மந்திரங்களை உயிரை வெறுத்து சொல்லி கொண்டு இருந்தான்..
இதோ இன்னும் பத்து நிமிடத்தில் முகூர்த்தம்..
நிவேதாவோ அவனின் அத்தனை முயற்சியையும் முறியடித்து அழுத்தமாக அதே நிலையில் தான் இருந்தாள்..
வம்சி திருமணத்தை ப்ரதாப் சாதரணமாக நடத்தவில்லை… ரொம்ப க்ராண்ட்டா பிரம்மாண்டமாக நடந்துக்கிறான்… அவன் திருமணத்திற்காகவே கடற்கரை ஒட்டிய வில்லேஜ் ஒன்று வாங்கப்பட்டு திரைப்படம் போல பிரம்மாண்டமாக செட் போட்டு டெக்கரேஷன் எல்லாம் செய்து பிரம்மாண்டமான ஏற்பாடு தான்..
“மேரேஜ் சிம்பிளா வச்சிட்டு ரிஷப்சன் க்ராண்டடா பண்ணிக்கலாம் அண்ணன்ய்யா” என வம்சி சொல்ல,
“போடா பைத்தியம் போல் உளறிட்டு” என்ற ப்ரதாப் தம்பி திருமணத்தை விழா போல நடத்தினான்…
வம்சிக்கு இப்போது என்ன செய்வது என தெரியாது நெருப்பில் நிற்பது போல் இருந்தது… இவ்வளவு தூரம் இந்த கல்யாணம் வரும் என அவன் நினைக்கவில்லை… அதற்கு முன்பே அவன் நிவேதா மனம் மாறிவிடுவாள் என நினைத்தான்.. அது நடக்கவில்லை..
அவனால் இந்த கல்யாணத்தை ஏற்க முடியாது.. அதே நேரம் இந்த நிலை வரை இழுத்து கொண்டு வந்து விட்டு முடியாது என்று சொன்னால் சைத்தன்யா நிலை..
இத்தனை பேர் முன்பு அவன் அண்ணன், குடும்பம் அவமானபடும் சூழல் வரும்…
ப்ரதாப்பிடம் சொல்லலாம் என்றால், பயமாக இருந்தது.. இவ்வளவு நாள் அமைதியாக இருந்து விட்டு கடைசி நிமிஷத்தில் சொன்னால் அண்ணனால் மட்டும் என்ன செய்ய முடியும்…
ஆ…இப்போது என்ன செய்ய? செய்வதறியாது மனம் அலறியது..
இத்தனைக்கும் காரணமானவளோ இப்போதும் கல்லு போல இதோ மேடைக்கு கீழே போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து இருக்கிறாள்…. அவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு, கோவம் கோவமாக இல்லை எழுந்து சென்று ஏன்டி ஏன் இப்புதிய சாவடிக்கிற என கழுத்தை நெறிக்குமளவு கொலை வெறி எழுந்தது…
அவன் காதல் அவளை பாதிக்கவில்லையா? அவன் அவளுக்கு வேண்டாமா? உண்மையாகவே அவள் அவனை அவன் காதலை மறந்து விட்டாளா? பல யோசனை ஓடிக் கொண்டு இருக்க,
நிமிர்ந்து பார்த்தான் மேடையில் அவன் குடும்பத்தினர் அனைவரும் நின்று இருந்தனர்… விசாலாட்சி முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி… விஷ்ணு மட்டும் இல்லை பொண்ணை அழைத்து வர சென்று இருந்தாள்…
வம்சி பொண்ணு வருது பாரு தேவகி சொல்ல, அந்த ஹால் முழுவதும் ஏ.சி.. இருந்தும் வம்சிக்கு வேர்த்து ஊற்றியது உச்சக்கட்ட அழுத்ததில்..
அவன் அருகே சைத்தன்யா அமரும் அரவம் கேட்டது.. திரும்பி பார்க்கவில்லை.. ரொம்ப குற்ற உணர்வாக இருந்தது.. அந்த பெண்ணையும் இப்புடிபட்ட இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தி விட்டோமே என,
இவ்வளவு தூரம் வரும்மென அவன் நினைக்கவே இல்லை.. தெரிந்து இருந்தால் அப்புடி ஒரு பைத்தியக்கார திட்டத்தை போட்டே இருக்க மாட்டான்..
ஆனால் இப்போது கூட சீரியலில் நடப்பது போல் கடைசி நொடியில் நிவேதா வந்து நிறுத்தி விட மாட்டாளா என வெக்கம் கெட்ட மனம் ஏங்க தான் செய்கிறது..
மாங்கல்யம் ஆசிர்வதிக்கப்ட்டு வம்சி முன்பு நீட்டபட்டது... அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது.. கண்ணை இறுக மூட மனம் கலங்குவது போல் விழியும் கலங்கியது… பெருமூச்சு ஒன்றை விட்டு இது தான் விதியென தன்னை சமாதானப்படுத்து கொண்டு, கண்ணை திறந்து எதிரே நீட்டப்பட்டு இருந்த மாங்கல்யத்தை கையில் வாங்க, கெட்டிமேளம் கெட்டிமேளம் என ஐயர் சொல்ல, அர்ச்சதை தூவபட, அருகே இரூந்தவளின் கழுத்தில் மாங்கலய்ம் கட்ட போனவனுக்கு பயங்கர அதிர்ச்சி…
வம்சி அருகே மணக்கோலத்தில் நிவேதா…
சுற்றி அவன் குடும்ப்த்தினர் சிரித்த ப்ளடி அர்ச்சதை தூவி கொண்டு இருக்க,
அப்ப இதூ கனவு தான் இன்னும் தூக்கத்தில் இருந்து எழும்பலையோ என்ற குழப்பத்தில் கழுத்தை சுற்றி தாலியை பிடித்தப்படி முடிச்சிடாமல் வம்சி முழித்து கொண்டு இருக்க,
வம்சி கனவு இல்லை நிஜம் தான் என அவன் தோளில் கிள்ளி, சீக்கிரமா முடிச்சு போடுங்க… ரொம்ப நேரமா தலை குனிஞ்சு நிவிக்கு கழுத்து வலிக்க போகுது விஷ்ணு சொல்லி சிரிக்க,
அப்ப இது கனவு இல்லையா? நிஜமா? எப்புடி?
எப்படி? என்ற அதிர்ச்சியோட முடிச்சிட்டு ராம் சொல்லி இருப்பானோ என அவனை பார்க்க, வம்சியை விட பயங்கர அதிர்ச்சியில் அவன் இருந்தான்..
அருகே இருந்தவளை நீயா என்ற கேள்வியோடு பார்க்க, அவள் முகத்தில் இருந்த குழப்பமே அவளுக்கும் இதே அதிர்ச்சி தான் என்பதை சொன்னது..
பின்ன இது எப்புடி சாத்தியம் என்றவன் கண்ணில் ப்ரதாப் பட்டான்… அவனோ உனக்கு நான் அண்ணன்டா என்கிட்டயேவா என்பது போல் கையை கட்டியபடி வம்சியை பார்த்து கொண்டு இருந்தான்…