முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46

4.7
(12)

அரண் 46

அருகில் இருந்த மெஷினில் அனைத்தும் நீளமான கோடுகளாய் ஓடிக்கொண்டிருக்க இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்களை அவை சரியாக காட்டவில்லை என்பது துருவனுக்கு நன்கு புரிந்தது.

அவளது அசைவற்ற உடலையும் அந்த மெஷின்களின் செயற்பாட்டையும் கவனத்தப் பின்பு துருவனுக்கு ஏதோ மனதிற்குள் தவறாக அனைத்தும் நடப்பது போல துணுக்குற தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. உடனே டாக்டரின் அருகில்  சென்று,

“வட் ஹேப்பண்ட் டாக்டர்  என்னோட அற்புதத்துக்கு என்ன ஆச்சு ஏன் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருக்கா சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ் டெல் மீ..” என்று நீங்கள் எனக்கு உடனே பதில் சொல்லியாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கேட்டான்.

துருவனின் நிலையைப் பார்த்து டாக்டர் ஒரு நிமிடம் தடுமாறியவர் எப்படி வள்ளியின் நிலையை விளக்குவது என்று புரியாமல்,

“மிஸ்டர் துருவன் ப்ளீஸ் கொஞ்சம் வெளியே இருங்க எங்களோட வேலையை முதல் செய்ய வருமா செய்ய விடுங்க உங்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க எனக்கு இப்ப நேரம் இல்லை ப்ளீஸ் கெட் அவுட்..” என்று திடமாகக் கூற,

“இல்ல நான் அற்புதத்தை விட்டு எங்கேயும் போக மாட்டேன் ப்ளீஸ் டாக்டர் நான் இங்கேயே இருக்கேன் என்னால அவளை விட்டு போக இயலாது ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ் நான் உங்களுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் செய்ய மாட்டேன்…” என்று துருவன் கெஞ்சி கேட்க,

இப்போது துருவனுடன் வாதிட நேரமற்றதால் டாக்டர் உடனே அலைபேசியை எடுத்து எதையோ எடுத்து வரும்படி எதையோ யாருடனோ பேச, உடனே இரண்டு நிமிடங்களில் அங்கு சார்க் ட்ரீட்மெண்ட்டிற்கான உபகரணங்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டன.

துருவனும் அருகில் இருந்து அவளது கையை விடாமல் அழுத்திப் பிடித்து அதனை முத்தமிட்டபடி,

“இதெல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அற்புதம் ப்ளீஸ் அற்புதம் என்னை விட்டு போகாத நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது

நான் உன்ன விட்ட எங்கேயும் போக மாட்டேன் நீ என்னோட டாக்குமெண்ட்ல டீ ஊத்தினா நான் இனிமே பேச மாட்டேன் நீ என்ன தப்பு செஞ்சாலும் நான் உனக்குத் திட்ட மாட்டேன் ப்ரோமிஸ்ஸா சொல்றேன்

உனக்கு தினமும் மறக்காம படிக்கிறதுக்கு சொல்லித் தாரேன் உனக்கு படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டமில்ல இனிமே உன்னோட தான் இருப்பேன் எப்பவுமே உனக்கு பக்கத்துல இருந்து பாடம் சொல்லி தாரேன் எழுந்து என்ன பாரு அற்புதம் ப்ளீஸ் என்னை விட்டுப் போகாத ப்ளீஸ் டி ப்ளீஸ்..” என்று அவளது கையை வருடியபடி புலம்பிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திலேயே இரண்டு கைகளிலும் வைத்தியர் அந்த ஷாக் கொடுக்கும் உபகரணத்தை எடுத்து வைத்து அதில் ஏதோ கிரீமை பூசி தேய்த்தபடி வள்ளியின் நெஞ்சில் அதனை வைத்து எடுத்தார்.

அந்த மின்சார பாய்ச்சலின் அதிர்வால் வள்ளி மேல் எழுந்து மீண்டும் மெத்தையில் விழுந்தாள்.

மீண்டும் டாக்டர் அந்த உபகரணத்தால் வள்ளி என் நெஞ்சின் மீது தீண்ட மீண்டும் அதே போல் மேல் எழுந்து விழுந்தாள்.

மூன்றாவதாக டாக்டர் ஜீசஸ் என்று கூறியபடி நெஞ்சில் வைத்து எடுக்க மீண்டும் அதே போல் மேல் எழுந்து கீழே விழுந்தவள் எந்த அசைவு மற்றும் அப்படியே கிடந்தாள்.

வைத்தியரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

அற்புதத்தின் கையினை தனது நெஞ்சுக்குள் பொத்தி வைத்து அழுது கொண்டிருந்த துருவனுக்கு கண்முன்னே நடப்பது அனைத்தும் கனவாக இருக்கக் கூடாதா என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

அவன் நடப்பதனை பார்க்க திராணி அற்றவனாய் அவளது கைகளைப் பற்றி அழுது கொண்டே இருந்தான்.

டாக்டர் எதுவும் செய்யாமல் துருவனையே பார்த்துக் கொண்டிருக்க துருவன் நிமிர்ந்து பார்த்து,

“என்ன டாக்டர் சும்மா இருக்கீங்க ஏதாவது செய்ங்க அவளுக்கு ஒன்னும் ஆகல ஏதாவது ஊசி போடுங்க அற்புதத்துக்கு சரியாகிவிடும் அவள் நல்லாத்தான் இருக்கா அவளோட முகத்தைப் பாருங்க டாக்டர் அவள பாருங்க அவள பாருங்க டாக்டர் ப்ளீஸ்  ஏதாவது செய்ங்க செய்து என்னோட அற்புதத்தின் கண்ணைத் திறங்க..” என்று துருவன் கதறி அழுததே விட்டான்.

ஆண்களின் அழுகை எவ்வளவு பொக்கிஷம் என்று இன்னொரு ஆணுக்குத் தெரியாததா..? ஆண்கள் அவ்வளவு சீக்கிரம் தனது துன்பத்தை வெளிக்காட்ட மாட்டார்கள்.

அதிலும் தனக்கு பிரியமானவர்களுக்கு ஏதாவது நடந்து விட்டால் அவர்களால் தாங்கவே முடியாது. பாசத்தை மனதில் வைத்து சுமந்தாலும் பிரியமானவர்களுக்கு சிறிது துன்பம் நேர்ந்தால் மனம் தாங்காது துடி துடித்து விடுவர்.

அந்த ரகத்தில் துருவனை மெச்சிக்க இங்கு யாரும் இல்லை என்றே கூறலாம். துருவன் துன்பத்தால் துடிதுடித்து அழுவதும், தவிப்பதும், சோகத்தில் மூழ்கி எழுவதும் அங்கு பணிபுரியும் அனைவரும் இந்த 24 மணி நேரத்தில் கண்டறிந்ததே.

இருந்தும் டாக்டரால் அவனிடம் உனது மனைவி இறந்துவிட்டார் என்று எவ்வாறு சொல்வது இப்படி மிகவும் பிரியத்துடன் தனது மனைவி மேல் அதீத காதல் கொண்டவன் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வான் என்ற பயம் வேறு டாக்டரை ஆட்கொண்டது.

என்னதான் இருந்தாலும் தனது கடமையிலிருந்து தவற முடியாதல்லவா நோயாளியின் நிலைமையை அவரது உறவினர்களுக்கு கட்டாயமாக தெரியப்படுத்தவே வேண்டும் அதுவும் இந்நிலைமை முக்கியமானது அதனால் தன் கடமையை நிறைவேற்ற உசிதம் கொண்ட டாக்டர்,

“இல்ல துருவம் நீங்க கொஞ்சம் மனசு திடப்படுத்திக் கொள்ளுங்கள் சி இஸ் நோ மோர்..” என்று அழுகாமல் குலுங்காமல் துருவனின் நெஞ்சில் வேலை பாய்ச்சினார்.

அவர் கூறிய அந்த வார்த்தை “சி இஸ் நோ மோர்.. சி இஸ் நோ மோர்.. சி இஸ் நோ மோர்..” என்று அவனது மனதினுள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

அப்படியே தொப் என்று கதிரையில் விழுந்த துருவன் அத்தனை வலியையும் விழிகளில் தேக்கி டாக்டரை நிமிர்ந்து பார்க்க, அவருக்கும் மிகவும் சங்கடமாகிப் போனது.

உடனே டாக்டரிடம் ஓடி வந்து டாக்டரின் காலரைப் பிடித்து,

“நோ டாக்டர் அப்படி சொல்லாதீங்க என்னோட அற்புதம் என்ன விட்டுப் போக மாட்டா ப்ளீஸ் உங்களுக்கு டிரீட்மென்ட் செய்ய தெரியலன்னா தெரியலன்னு சொல்லுங்க நான் வேற எங்கேயாவது ஸ்பெஷலிஸ்ட்ட காட்டி என்னோட அற்புதத்தை காப்பாத்திக்கிறேன் இப்படி நீங்க பொய் சொல்லாதீங்க உங்களுக்கு ட்ரீட்மென்ட் செய்ய தெரியல நான் என்னோட அற்புதத்தை எங்க கொண்டு போயாவது காப்பாற்றுவேன் எனக்கு உடனே அற்புதத்தை டீச்சார்ஜ் பண்ணித் தாங்க நான் வேற நல்ல ஹாஸ்பிடல் பார்த்து கொண்டு போறேன்..” என்று மனம் துடிதுடிக்க டாக்டரை பார்த்து மிரட்டினான்.

“என்ன துருவன் இது இப்படி பிஹேவ் பண்றீங்க படிச்சவங்க போல பேசுங்க அங்க பாருங்க ஹாட் பீட் நின்னு போச்சு அதற்காகத்தான் சார்க் ட்ரீட்மென்ட் கொடுத்தோம்

ஆனால் அதுவும் சரி வரல இனி எதுவுமே செய்ய முடியாது வேணுமென்றால் நீங்கள் வேறு ஹாஸ்பிடல் கொண்டு போய் பார்க்கிறேன்னா பாருங்க ஆனா எனக்கு டிரீட்மென்ட் பார்க்கத் தெரியலைன்னு மட்டும் சொல்லாதீங்க

உங்களோட வயசு என்னோட அனுபவம் நான் இதைப்போல எத்தனை கேஸ்களைப் பார்த்திருக்கேன் உங்களுக்கு சில விஷயங்களை ஏத்துக்க முடியாது தான் அதுக்காக எங்களோட படிப்பையும் தொழிலையும் கேவலப்படுத்தாதீங்க ப்ளீஸ்..” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முற்பட,

உடனே அவரது இரண்டு கைகளையும் பிடித்த துருவன்,

“டாக்டர் நான் பேசினத மனசுல வச்சுக் கொள்ளாதீங்க ஐ அம் ரியலி வெரி சாரி டாக்டர் ப்ளீஸ் அற்புதத்திற்கு ட்ரீட்மென்ட் செய்யுங்க ப்ளீஸ் டாக்டர்..” என்று கதறினான்.

அவரோ துருவனின் செயல் கண்டு கோபத்துடன் அவன் பிடித்திருந்த கையை உதறியபடி அந்த அறையை விட்டு மின்னல் வேகத்தில் வெளியேறினார்.

டாக்டர் சென்ற பின் வேறு வழி தெரியாது அற்புதத்தினை திரும்பிப் பார்க்க வேரோடு பிடுங்கிய கொடி போல கட்டிலில் கிடந்த அற்புதத்தை பார்க்க முடியாமல் கண்கள் சொருகின.

அவனால் டாக்டர் கூறிய விடயத்தை நம்பவே முடியவில்லை. அப்படியே சரிந்து தொப் என்று வள்ளியின் நெஞ்சின் மீது விழுந்தான். அவன் விழுந்த வேகத்திலும், அவனது உடல் பாரத்திலும் வள்ளியின் இதயத்தின் ஓரம் பலமான அடி விழுந்தது.

அந்த அடியின் வேகத்தினாலும், தாக்கத்தினாலும் வள்ளி உடல் ஒரு முறை தூக்கி வாரிப்போட்டது.

என்ன அதிசயம் வள்ளியினது உடலில் சிறு அசைவு ஏற்பட்டது. நெஞ்சில் விழுந்த துருவன் அப்படியே நெஞ்சிலே சாய்ந்து கிடந்தான்.

இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது ஆம் அவளது துடிப்பை துருவனால் உணர முடிந்தது. அவனது கண்கள் மெல்ல திறந்து அந்த துடிப்பை மீண்டும் உணர முயற்சி செய்தது.

அவன் உடனே வள்ளியின் நெஞ்சில் இருந்து எழுந்து நடுங்குகின்ற கையை நெஞ்சில் வைத்து மீண்டும் அதை உணர முயற்சித்தான்.

வள்ளியினது விரல்கள் மெல்ல மெல்ல அசைந்தன. விரல்கள் அசைவதை பார்த்து பூரிப்புடன் சிரித்தவன்,

“டா..டாக்டர்.. டாக்டர்..” என்று சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் அந்த அறையில் இருந்து கொண்டே கத்தினான் துருவன்.

எங்கு வள்ளியை விட்டு மீண்டும் சென்றாள் அவள் மீண்டும் அசைவற்றவளாகிப் போய் விடுவாள் என்று பயந்த துருவன்,

“டாக்டர்… டாக்டர்..” என்று அழைக்க அப்போதுதான் அந்த அறைக்கு பொறுப்பான தாதி வாஷ்ரூம் போய்விட்டு வந்தாள்.

அவன் பதற்றத்துடன் டாக்டர் என்று அழைப்பதைப் பார்த்து ஓடி வந்து பார்த்தால் வள்ளிக்கு பூட்டி இருந்த மெஷின்கள் எல்லாம் கழன்று கிடக்கின்றன.

“யார் இதெல்லாம் கழட்டியது..?” என்று துருவனுக்கு பேசிவிட்டு அதனை எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் பொருத்தி விட்டு பார்க்க, அவளது இதயத்துடிப்பு சீராக துடித்தது.

அந்தத் தாதிக்கு தான் எதுவுமே தெரியாதே..! அவள் வாஸ்ரூம் போற நேரத்துக்குள் நடந்த விபரீதங்கள் அனைத்தும் தெரியாத காரணத்தினால் துருவன் தான் இப்படி செய்ததோ என்று துருவன் மீது கோபமாக இருந்தாள் அந்தத் தாதி.

அனைத்தையும் பரிசோதித்து விட்ட தாதி துருவனை நிமிர்ந்து பார்க்க துருவனுக்கு நெஞ்சுக்குள் இருக்கும் இதயம் தொண்டை வழியாக வெளியே வருவது போல இருந்தது.

அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காக அவனது உயிரே உருக்குழைந்து போய் நின்றது.

“ஹி ஸ் ஓகே.. பல்ஸ் இப்போ முதல் இருந்தத விட நார்மல் ஆயிட்டு..” என்று கூற இன்ப வெள்ளத்தில் மூழ்கி எழுந்தவன் போல மூச்செடுக்க சிரமப்பட்டு கொண்டு, திடீரென தாதியை கட்டியணைத்து விடுவித்தான் துருவன்.

அவனது உதடுகள் சிரித்துக் கொண்டிருந்தாலும் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் நிற்கவேயில்லை. தாதியோ துருவனை ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

உடனே தாதி டாக்டரிடம் விடயத்தை தெரியப்படுத்த அதை டாக்டர் நம்பவே இல்லை.

“நான் இப்போதான் வந்து பார்த்தேன் அவங்களுக்கு உயிர் போய் கிட்டத்தட்ட 20 மினிட்ஸ்க்கு மேல ஆகிட்டு நீங்க சொல்ற மாதிரி நடந்து இருக்க வாய்ப்பே இல்லை..” என்று டாக்டர் தனது கருத்தை ஆணித்தனமாகத் தெரிவித்தார்.

தாதி கூறுவதைக் கேட்டு சந்தேகத்துடன் நேரில் வந்து பார்த்த டாக்டருக்கே பெரும் பிரமிப்பாகப் போய்விட்டது.

“இப்போதுதான் இறந்துவிட்டாள் என ரிப்போர்ட் எழுதி கொடுத்துவிட்டு சென்ற அற்புதவள்ளியா இது இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்..” என்றவர் உடனே வள்ளியின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு துருவனிடம் நிமிர்ந்து,

“கோட் இஸ் கிரேட் துருவன் நீங்க கும்பிட்ட தெய்வம் உங்களை கைவிடவில்லை போன உயிர் திரும்பி வந்தது போல வள்ளி மீண்டும் உயிர் பெற்று விட்டாள் இனி கவலைப்பட தேவையில்லை அவங்க கிரிட்டிகலான கண்டிஷன தாண்டி வெளியே வந்துட்டாங்க இனி பயப்பட தேவையில்லை கொஞ்சம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் அவங்க கூடவே இருந்து பார்த்துக் கொள்ளுங்க..” என்று தாதியிடம் கூறிவிட்டு டாக்டர் குழப்பத்துடனையே வெளியே சென்று விட்டார்.

துருவனுக்கு இப்போது தான் மீண்டும் உடலுக்குள் உயிர் வந்தது போல மனமும் உடலும் லேசாக இருந்தது. பள்ளி கண் விழிப்பதற்காக காத்திருக்க அவனது காத்திருப்பை மேலும் கூட்டாமல் ஒரு மணி நேரத்திற்குள் அற்புதவள்ளி கண் மலர்ந்தாள்.

அவளது அப்பழுக்கற்ற வதனத்தை பார்த்த துருவன் இடைவிடாது வதனமெங்கும் முத்த மலை பொழிந்து அவள் முகம் பார்த்து,

“என்னை ரொம்ப சோதிச்சிட்டடி..” என்று கூறிவிட்டு சிரித்தான். அங்கு காதல் இதயங்கள் ஒன்றே ஒன்று கண்களால் பார்த்து தனது துன்பங்களை பரிமாறிக் கொண்டன.

அவளது உடல் நிலையை பார்த்து வேறு எதுவும் பேசாமல் அவளை கண்ணிமைக்காமல் பார்த்திருக்க, மெலிதாக சிரித்த வண்ணம்,

“உங்களுக்கு எதுவும்..” என்று இழுத்தாள்.

“எனக்கு ஒன்னும் இல்ல இதுவரைக்கும் நடை பிணமாக தான் திரிந்தேன் இப்போ ஐ அம் ஆல்ரைட்..” என்று அற்புத வள்ளியை கட்டி அணைத்தான்.

அவனது கண்கள் அவனது உடல் அசதியை நன்கு வெளிப்படுத்தின. இருக்கையில் இருந்து கொண்டே வள்ளியின் மடியில் சாய்ந்தவன் அப்படியே சில நிமிடங்களிலே உறங்கியும் போனான். அவனது சிறுபிள்ளைத்தனமான உறக்கத்தை பார்த்து தலைகோதி துருவனை காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி.

காதல் இதயங்களுக்குள் பிரிவென்பது பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் அந்தப் போராட்டங்களில் முடிவில் யுத்தம் நடந்து ஓய்ந்தது போல மனங்கள் இரண்டும் அன்பயே யாசிக்கும்.

பல போராட்டங்களின் பின் இணையும் காதல் இனிமையானது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!