லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 54

5
(6)

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 54

 

“அழகி வேணாண்டி.. அப்பா ரொம்ப உடைஞ்சு போய்டுவார்.. சொன்னா கேளு..”

 

மலர் வீட்டை விட்டு போயே தீருவேன் என்று அடம்பிடிக்க அவளை அப்படி போகவிடாமல் தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள் மதி..

 

“இல்லக்கா.. அவர் கிட்ட சொல்லு.. டாக்டர் மலரழகியா நான் அவரை வந்து பாப்பேன்னு.. அப்ப நிச்சயமா அவருக்கு  கஷ்டம் தெரியாது.. இந்த வைராக்கியம் தான் என் கோலை நான் அடையறதுக்கு என்னை மோட்டிவேட் பண்ணிக்கிட்டே இருக்கும்.. உங்களை சீக்கிரம் வந்து பார்க்கணுங்கறதுக்காகவே என் கோலை நோக்கி நான் வேகமாக ஓடுவேன்.. ப்ளீஸ் கா என்னை புரிஞ்சுக்க.. என்னதான் இருந்தாலும் இப்போ அப்பா என்னால அவமானப்பட்டு கூனி குறுகி தான் இருக்காரு.. என்ன இருந்தாலும் தீரா மாமாவ உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நான் டார்ச்சர் பண்ணது இல்லன்னு ஆகாது இல்ல? அந்த நினைப்பு என்னை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு கஷ்டத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும்.. அந்த கஷ்டத்தை போக்கணும்னா என்னை பத்தின ஒரு நல்ல நினைவு அவருக்கு வேணும்.. அது நான் இந்த எம்பிபிஎஸ் முடிச்சு ஒரு நல்ல டாக்டர் ஆகி அவர் முன்னால வந்து நிற்கும் போது தான் நடக்கும்.. நிச்சயமா நடக்கும் அக்கா. அதுவரைக்கும் ஒரு அவமான சின்னமா நான் அவரை பார்க்க விரும்பல.. அவரை நான் டாக்டரா வரப்போற அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க சொல்லு.. நிச்சயமா நான் வந்துருவேன்..”

 

அப்போது இந்தர் கண் முழித்து விட்டதாக ஒரு செவிலி வந்து சொல்ல தீரன் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தான்..

 

உள்ளே நுழைந்த தீரன்  “இந்தர் கண்ணு” என்று அழைத்தது தான் தாமதம்.. கண் திறந்து தன் அண்ணனை பார்த்த உடனேயே கண்கள் குளமாக “அ.. அண்..ணா..!!??” என்று குரல் தழுதழுக்க அழைத்தவன் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் ஜீவனற்ற பார்வையோடு “ஏன்ணா இப்படி பண்ணிட்டே..?” இந்த கேள்வி விழிகளில் தொக்கி நிற்க தீரனை ஆதங்கத்தோடு பார்த்தவனை ஓடி சென்று அனைத்து கொண்டான் தீரன்..

 

ஒரே ஒரு அணைப்புதான் அண்ணன் பேசியது அத்தனையும் மறந்து போனான் இந்தர்..

 

“அண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணலணா.. நான் தப்பு பண்ண மாட்டேன்ணா.. ஏன்னா நான் உன் தம்பிணா.. நான் உன் தம்பி தானே..?” என்று அழுதழுது கேட்டவனை இன்னும் இறுக்க அனைத்து கொண்டவன் “நீ ஏன் தம்பி டா.. பெருமையா சொல்றேன்டா‌‌.. நீ என் தம்பி இந்தர்.. நான் வளர்த்த என் சிங்கக்குட்டி டா நீ.. இந்த அண்ணனை மன்னிச்சுடுடா.. வயசு கோளாறுல நீ செஞ்ச ஒரு தப்பை மனசுல வச்சுக்கிட்டு உனக்கு பெரிய தண்டனையை கொடுத்துட்டேன்.. இந்த அண்ணனை கொன்னு போட்டுடுடா.. நீ இந்த மாதிரி ஒரு அண்ணனுக்கு தம்பியா கூட இருக்க வேண்டாம்..”

 

அவன் சொன்னதை கேட்டவன் பதறிப் போய் அவனை தன்னில் இருந்து விலக்கி அவன் வாயில் கைவைத்து மூடி “வேணாம்னா.. அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க.. ரொம்ப வலிக்குதுணா.. நீங்க வேணா இன்னும் என்னை நாலு அடி கூட அடிச்சுக்கோங்க.. ஆனா உங்க தம்பி இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்கணா.. அதை என்னால தாங்கவே முடியல..”

 

அங்கே ஒரு பாச போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது.. 

 

“அடிக்கணும் டா உன்னை.. அடிக்கத்தான் போறேன்.. உன்னை தப்பா நினைச்சு ஏதோ பேசிட்டேன்கிறதுக்காக என்னை விட்டுட்டு ஒரேடியா போயிடுவியா நீ? உனக்கு எப்படி டா தைரியம் வந்தது? பெரிய இவன் மாதிரி கைய அறுத்துக்கிட்ட? உயிரே போயிடுச்சுடா எனக்கு உன்னை ஸ்ட்ரெச்சர்ல பார்த்தப்போ.. என் தம்பிடா நீ.. இந்த மாதிரி கோழைத்தனமான முடிவை எப்படிடா எடுத்த? ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் என்னோட பேசி புரிய வச்சி இருக்கலாம் இல்ல இந்தர்..?”

 

இந்தரை கையால் செல்லமாய் கன்னத்திலும் மார்பிலும் அடித்தபடி அவன் சொல்ல ஆனால் அடுத்த அவன் கண்கள் கலங்கி இருந்தன.. 

 

“இனிமேல் எந்த காலத்திலயும் இப்படி பண்ண மாட்டேன்ணா.. சாரி அண்ணா..” என்று மறுபடியும் தன் பலமற்ற கைகளால் அண்ணனை இழுத்து அணைத்துக் கொண்டான்..

 

அதன் பிறகு அண்ணனும் தம்பியும் உணர்வு போராட்டத்தில் வெகு நேரம் பேசாமல் ஒருவர் மற்றொருவரை குளமாய் மாறிய கண்களோடு  அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.. 

 

தீரனின் கைகள் மட்டும் இந்தரின் தலையை வாஞ்சையாய் வருடிவிட்டபடியே இருந்தது..

 

தீரன் மெதுவாக வாய் திறந்தான்..

 

“இந்தர்.. உங்க அண்ணி உன் மேல அசையாத நம்பிக்கை வெச்சிருந்தாடா.. நீ இந்த தப்பை பண்ணி இருக்கவே மாட்டேன்னு உறுதியா சொன்னா.. நான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பணும்னு சொன்னப்ப கூட இந்தர் இந்த வீட்டு பிள்ளை.. அவனுக்கு நான் அண்ணி.. அவனோட அம்மா இடத்துல இருக்கேன்.. அவனை ஒரு காலமும் இந்த வீட்டை விட்டு அனுப்ப மாட்டேன்.. அப்படி செஞ்சா உங்க அம்மாவோட ஆத்மா என்னை மன்னிக்காதுன்னு உனக்காக என்னோட சண்டை போட்டா டா..”

 

“ஆமான்ணா.. நான் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவங்களை டார்ச்சர் பண்ணப்பவும் சரி அதுக்கப்புறமும் சரி.. எப்பவுமே எனக்கு ஒரு அம்மாவா வழி நடத்திக்கிட்டு தான் இருந்திருக்காங்க.. அதனால தான் அவங்களுக்கு என்னை புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈஸியா இருந்திருக்கு..” என்று சில நொடிகள் மௌனமாய் இருந்தவன் “அண்ணா.. நான் அந்த பைப்பில் ஏறுனதுக்கு காரணம்..”

 

அவன் ஏதோ சொல்ல தொடங்க “தெரியும்டா.. மலர் எல்லாத்தையும் சொல்லிட்டா.. என்னை மன்னிச்சிடுடா.. நீ மாமாக்கு விஷயம் தெரிஞ்சா அதிர்ச்சியில எதுவும் ஆயிட போகுதுன்னு அந்த விஷயத்தை சொல்லாம இருந்திருக்க.. ஆனா நான் தான் புரிஞ்சுக்காம உன்னை குற்றவாளி ஆக்கிட்டேன்.. சாரி டா இந்தரு..” தீரன் முகத்தில் டன் கணக்காய் குற்ற உணர்ச்சி தெரிந்தது..

 

“பரவாயில்லை அண்ணா.. இப்பதான் புரிஞ்சிக்கிட்டிங்களே.. மலர் மொதல்ல என்னை அங்க பார்த்துட்டு அலரினா.. ஆனா அப்புறம் அவ புரிஞ்சுகிட்டா.. அதனாலதான் நான் எந்த தப்பும் பண்ணலன்னு அவ சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருந்தாண்ணா..”

 

“அதுவும் தெரியும்டா.. எனக்குள்ள அந்த நேரத்துல என்ன ஆயிடுச்சுன்னு தெரியல.. நான் எப்படி உன்னை பத்தி அவ்வளவு தப்பா நினைச்சேன்னு புரியல.. உன்கிட்ட எவ்வளவு தடவை சாரி கேட்டாலும் தீராதுடா.. இந்த அண்ணனை முடிஞ்சா மன்னிச்சுடுடா.. இல்ல நல்லா நான் அடிச்ச மாதிரி நாலு அடி வெச்சிடு..”  இந்தரின் கையை பிடித்து தன் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டான் தீரன்..

 

தன் அண்ணன் அப்படி மனம் ஒடிந்து அழுவதை பார்க்க முடியாமல் இந்தர் பதறிப் போனான்..

 

“அண்ணா.. என்ன பண்றீங்க? கைய விடுங்கணா ப்ளீஸ்.. நான் அதெல்லாம் மறந்துட்டேன்ணா.. நீங்களும் மறந்துடுங்க.. விடுங்க..”

 

“எதைடா மறக்க சொல்ற? மாமாவுக்கு எதுவும் ஆயிட கூடாதுங்கறதுக்காக நீ எவ்ளோ யோசிச்சு அந்த உண்மையை மறைச்சு பேசி இருக்கே.. ஆனா நான் வயசுல தான் உன்னோட பெரியவனா இருக்கேன்.. எனக்கு  கொஞ்சம் கூட பக்குவமே இல்லடா இந்தரு.. என்னோட அந்த கோபத்தினால் உன்னையே மொத்தமா இழந்து இருப்பேனேடா..  உன்னை இழந்தப்பறம் என் வாழ்க்கையில என்னடா இருந்திருக்கும்..”

 

தீரன் சொன்னதைக் கேட்டவனுக்கு “அதான் உங்களை டார்ச்சர் பண்ண மறுபடியும் வந்துட்டேனேண்ணா.. இப்படியே உங்களை டார்ச்சர் பண்ணிட்டு தான் இருப்பேன் கடைசி வரைக்கும்..”

 

“டேய் நீ டார்ச்சர் இல்லடா

எனக்கு கிடைச்ச பொக்கிஷம்..” என்றவனை மலர்ந்த இதழோடு பார்த்தவன் “அண்ணா.. உங்களை நான் ஒன்னு கேட்பேன்.. உண்மையை மட்டும் சொல்லணும்..”

 

“இந்தர்.. இப்போ நீ கேட்டு நான் பொய் வேற சொல்லுவேனா? கேளுடா..”

 

“நீங்களும் அண்ணியும் கல்யாணம் ஆகியும், புருஷன் பொண்டாட்டியா நடிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கும் மலருக்கும் தெரியும்ணா..”

 

“மலர் சொன்னாடா..”

 

“ஆனா நீங்க அண்ணியை விரும்புறீங்க தானே..? உண்மையை சொல்லுங்க.. “

 

அவன் கேட்க கண்ணீரும் புன்னகையுமாய் ஒரு சிறு வெட்கச் சாயலும் முகத்தில் பூத்திருக்க தலையை குனிந்த தீரன் தன் விரல்களில் பார்வையை மேயவிட்டபடி “ஆமாண்டா.. அவ எப்ப என் உயிருக்குள்ள புகுந்தான்னே எனக்கு தெரியல.. அவ இல்லாம வாழ்க்கை இல்லைன்னு அவளை பார்த்த முதல் நிமிஷத்தில் இருந்தே எனக்கு தோண ஆரம்பிச்சுடுச்சு.. ஆனா..”

 

“ஆனா உங்களுக்கு படிப்பு இல்ல அண்ணி நிறைய படிச்சிருக்காங்க.. அவங்க பெரிய ப்ரொஃபசர்.. அதனால உங்க காதலை அவங்க ஏத்துக்க மாட்டாங்கன்னு நீங்களா நினைச்சுக்கிட்டு அவங்க கிட்ட எதையும் சொல்லாம இருக்கீங்க.. சரியா?”

 

இந்தர் சரியாக கேட்டு விட “அப்படி நினைச்சுக்கிட்டு தான் நான் அமைதியா இருந்தேன்.. ஆனா..”

 

“என்னண்ணா ஆனா..”

 

“அது.. நேத்து நான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பணும்னு சொன்னப்போ கோவத்துல மதி என்னை விரும்புறதா சொன்னாடா..”

 

“நெஜமாவா அண்ணா.. எனக்காக நடந்த சண்டையில அண்ணி உங்களுக்கு ப்ரபோஸே பண்ணிட்டாங்களா..? சூப்பர்ணா.. ரெண்டு பெரும் எங்க உங்க காதல சொல்லாமலேயே இருந்திருவீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. பரவால்ல.. அண்ணி கொஞ்சம் தெளிவு தான்..”

 

“அவ மனசுல இருந்த காதலை அவ சொல்லிட்டா தான்.. ஆனா காதலை சொல்லிட்டு அவ விவாகரத்து கேட்டிருக்காடா என்கிட்ட..”

 

“என்னண்ணா.. ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னீங்கன்னு பார்த்தா பின்னாடியே இப்படி ஒரு இடியை தூக்கி போடுறீங்க?”

 

அதிர்ந்து கேட்டான் இந்தர்..

 

“அது எனக்கு நானே தோண்டி கிட்ட குழிடா.. இந்த விவாகரத்துன்கிற பேச்சை ஆரம்பிச்சதே நான்தான்.. மாமாவையும் மலரையும் அவங்க பழைய வீட்டுக்கு அனுப்புறேன்னு அவ சொன்னப்போ நான் அனுப்ப முடியாதுன்னு கோவப்பட்டேன்.. ஆனா அவ உன்னை எந்த காரணத்தை கொண்டும் அந்த வீட்டை விட்டு அனுப்ப கூடாதுன்னும் மாமாவும் மலரும் வீட்டை விட்டு போய் ஆகணும்னு முடிவு எடுத்துட்டதா சொன்னப்போ எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு.. அவ அவ குடும்பத்துக்கான முடிவுகளை நான் எடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறா.. எனக்கு அவங்களை பத்தி எந்த முடிவும் எடுக்கறதுக்கு உரிமை இல்லைன்னு சொல்றான்னு தோணுச்சு.. மதிக்கு புருஷனா அவங்க வீட்டு மாப்பிள்ளையா எனக்கு அவங்களை பத்தி முடிவு எடுக்கிற எல்லா உரிமையும் இருக்குதுன்னு எனக்குள்ள ஒரு நினைப்பு இருந்தது.. ஆனா அவ தான் அவங்களை பத்தி முடிவு எடுப்பேன்னு சொன்னப்போ அந்த நினைப்பை மொத்தமா அழிச்ச மாதிரி இருந்தது.. அந்த கோவத்துல விவாகரத்து பண்ணி ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்னு முதல்ல சொன்னது நான்தான்..”

 

“என்னண்ணா சொல்றீங்க? ஏன்ணா?”

 

“தப்பு தான்டா.. இப்ப புரியுது.. இப்ப புரிஞ்சு என்ன பிரயோஜனம்? ஆனா அப்பதான் அவ தன் மனசுல இருக்குற காதலை எனக்கு சொன்னா.. எனக்கும் அவ என்னை விரும்புறான்னு தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷமா தான்டா இருந்தது.. ஆனா அடுத்த நிமிஷமே உன்னை சந்தேகப்பட்ட மாதிரி அவளையும் காலம் முழுக்க நான் சந்தேக கண்ணோட தான் பார்ப்பேன்னு சொல்லி அவ விவாகரத்து கேட்டப்போ என் உயிரே போயிடுச்சுடா.. அப்பதான் நான் அந்த வார்த்தையை சொன்னப்போ அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும்னு புரிஞ்சுது.. உனக்கு மட்டும் இல்ல மதிக்கும் நான் தப்பு பண்ணி இருக்கேன்டா இந்தரு..”

 

“அவ்வளவு தானேணா.. ஏதோ கோவத்துல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனா உங்களுக்குள்ள இருக்கிற காதல் உங்களை பிரிய விடாதுண்ணா… நீங்க போயி அண்ணிக்கிட்ட உங்க காதலை சொல்லுங்க.. மறு நிமிஷமே அவங்க நிச்சயமா உங்ககிட்ட வந்து சேர்ந்திடுவாங்க..”

 

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குடா.. அவ அன்புக்கு பதிலா அன்பை மட்டுமே கொடுக்க தெரிஞ்சவ.. அவ மனசு மாறிடும்னு எனக்கு தெரியும்.. ஆனா அதை எப்படி மாத்தறதுன்னு தான் தெரியல.. இப்பவே ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் கோபமா வருத்தமா  ஒரு மாதிரி வெறுப்போட தான் பார்க்கிறா..”

 

“அதெல்லாம் வெளியில அப்படித்தான் இருப்பாங்க.. ஆனா உள்ளுக்குள்ள உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க.. நீங்க முதல்ல உங்க காதலை அவங்க கிட்ட சொல்லுங்க.. அதுக்கப்புறம் நிச்சயமா அவங்களால உங்ககிட்ட கோவத்தை காட்டவே முடியாது..”

 

“தேங்க்ஸ் டா இந்தரு.. அப்புறம் எனக்காக நீ இன்னொரு ஹெல்ப் பண்ணனும்.. இதை நான் பண்றதை விட நீ பண்றது தான் சரியா இருக்கும்னு எனக்கு தோணுது..”

 

“சொல்லுங்க அண்ணா..” என்றான் இந்தர்..

 

அவனிடம் சில விஷயங்களை சொன்ன தீரன் அந்த அறையின் உள்ளிருந்து வெளியே வந்தான்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!