லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
ஜெய் ஆஞ்சநேயா..!!
ஆஞ்சநேயர் படம் முன்னால் நின்று கண்ணை மூடி துதித்துக்கொண்டிருந்த ரணதீரன் இருந்த அறைக்குள் “அண்ணே அண்ணே..!!” என்று கத்திக்கொண்டு வந்த சின்னாவின் குரல் கேட்டு கண்ணை திறந்து அவனை முறைத்து பார்த்தான் தீரன்..
“ஏன்டா உனக்கு எம்மாம் தடவ சொல்றது நான் ஆஞ்சநேயர் சாமியை கும்பிடும் போது ஊடால பூந்து என் தவத்தை கலைக்காதன்னு.. உனுக்கு எத்தினி தபா சொன்னாலும் அறிவு வராதா டா..? கரடிக்கு பொறந்தவனே..”
ஏக வசனத்தில் அவனை சரமாரியாய் வசை பாடினான் ரணதீரன்..
“ஐயோ அண்ணே.. அங்க ஷாட்டுக்கு டைம் ஆயிடுச்சுன்னு டைரக்டர் கத்திக்கிட்டே இருக்கிறாருண்ணே.. உனக்காக அந்த ஹீரோ ஹீரோயின் எல்லாரும் வெயிட்டிங்ல இருக்குறாங்கண்ணே.. அந்த ஆள் டென்ஷன்ல எல்லாரையும் உண்டு இல்லைன்னு பண்ணிக்கினு இருக்கிறாருண்ணே..”
“ஆஹான்.. டேய்.. எவனா இருந்தாலும் என் ஆஞ்சநேயருக்கு அப்புறம் தான் டா.. சரி சரி.. இன்னும் அஞ்சே நிமிட்ல இந்த தீரன் அங்க இருப்பான்னு போய் சொல்லு போ..”
அவனிடம் சொல்லி அனுப்பிவிட்டு ஆஞ்சநேயர் படத்திற்கு முன்னால் இருந்த செந்தூரத்தை எடுத்து தன் நெற்றியில் இட்டுக்கொண்டு அந்த ஷாட்டுக்கு தேவையான உடுப்பை மாட்டிக்கொண்டு படபிடிப்பு தளத்துக்கு தன் அறையில் இருந்து கிளம்பி சென்றான் ஸ்டண்ட் மாஸ்டர் ரணதீரன்..
அதுவரை அந்தப் படப்பிடிப்பு தளத்தையே மிரட்டி கொண்டிருந்த டைரக்டர் தூரத்திலிருந்து அதிரடியாக இடிகளாக அடிகளை வைத்து மதயானை போல் நடந்து வரும் தீரனை கண்ட நொடி அப்படியே அடங்கி போனார்..
“வா தீரா.. எனக்கு தெரியும் தீரா.. நீ சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துருவேன்னு.. இருந்தாலும் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்துட்டாங்களா..? அதான்..”
அசிஸ்டன்ட் டைரக்டர் பாண்டி அவன் அருகில் வந்து அவனை இளித்தபடி பவ்யமாய் வரவேற்க “அதெல்லாம் வுடு.. நேத்து நீ என் கிட்ட இன்னா டைம்க்கு வர சொன்ன..?”
“அது.. பத்து மணிக்கு..”
“ம்ம்.. இப்ப டைம் இன்னா ஆவுது..?”
“அது.. ஒன்பதே முக்கா தான் ஆவுது..”
“அப்படியே அந்த ஆளு அதான் அந்த டைரடக்கரு என்னமோ ரொம்ப தான் ரவுஸூ வுட்டுன்னு இருக்கிறானாம்.. சின்னா பய சொன்னான்.. என் ஆஞ்சநேயரை சரியா கும்பிட கூட விடாம இப்படி அந்த டங்காமாரி டைரக்டரு.. என்னை இஸ்துக்கினு வர சொல்லி பேஜாரு பண்ணிட்டானாமே..”
அவன் சத்தமாய் பேச அந்த அசிஸ்டன்ட் டைரக்டருக்கோ மண்டையே வெடித்தது.. “ஏதோ தப்பு நடந்து போச்சு தீரா.. தயவு செஞ்சு எனக்காக டென்ஷன் ஆகாத.. கொஞ்சம் அமைதியா இரு.. அந்த ஆளு செய்யறதெல்லாம் பார்க்கும்போது எனக்கே அந்த ஆளை கிழிச்சு தொங்க விடனும் போல தான் கோவம் வருது.. ஆனா என்ன செய்ய..? இப்ப நீ பேசறது காதுல விழுந்தா உன்னை வேணாம்னு சொல்லிட்டு வேற ஆளை பார்க்க சொல்லிடுவாரு.. எனக்கு தெரியும்.. இந்த படம் இல்லைன்னா உனக்கு நூறு படம் வரிசை கட்டி நிக்குது.. உன் வேலை அப்படி.. ஆனா எனக்கு அப்படி இல்லை.. உன்னை அனுப்பிட்டு உன்னை மாதிரியே இன்னொரு ஆளை பார்க்க சொன்னாருன்னா அந்த அளவுக்கு பர்ஃபெக்ட்டா வேலை செய்ற ஆளை தேடறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடும்.. எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தீரா..”
அவனிடம் ரகசியமாக கெஞ்சினார் அந்த அசிஸ்டன்ட் டைரக்டர்.. “சரி சரி.. ரொம்ப ஆக்ட்டு வுடாத.. நீ அந்த பக்கம் போனின்னா என்னை பத்தி இன்னா இன்னா பேசுவேன்னு ஆல் டீடைல்ஸ் ஐ நோ.. சரி சரி இன்னிக்கு இன்னா ஸ்டன்டு பண்ணனும்னு டீடீலா சொல்லு.. இங்க வேலையை முடிச்சுட்டு 12 மணிக்கு அந்த பரணி ஸ்டூடியோக்கு போவணும்..”
“சரி சரி.. டென்ஷனாகாத தீரா..” என்று அன்று அவன் செய்ய வேண்டிய சாகசத்தை விளக்கி கூறிக் கொண்டிருந்தார் அவர்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரே டேக்கில் அவர் சொன்ன அத்தனை சாகசங்களையும் செய்து முடித்திருந்தான் தீரன்.. ஒரு சிறு கீறல் கூட மேலே படாது லாவகமாக செய்து முடித்துவிட்டு அந்த அசிஸ்டன்ட் டைரக்டரிடம் வந்தான்.. அவன் டூப்பாக இருந்து செய்து கொடுத்த காட்சிகளை இறுதியில் அந்த ஹீரோவின் முகத்தை காட்டி முடித்திருந்தார் டைரக்டர்..
அவருக்கு அந்த காட்சிகளில் படு திருப்தி.. அந்த ஹீரோ சண்டை முடித்தது போல் போஸ் கொடுப்பதற்கு பத்து டேக்குகள் எடுத்து கொண்டான் ..அதில் தான் அந்த டைரக்டர் கொஞ்சம் கடுப்பாகி கொண்டிருந்தார்..
“இன்னா பாண்டி.. எல்லாம் சரியா வந்திருக்குதா? நான் ஜகா வாங்கிக்கவா..”
தீரன் கேட்க “எல்லாம் பர்ஃபெக்ட்டா செஞ்சிருக்க தீரா.. அதுதான் நீ.. ஒரு நிமிஷம் இரு.. நான் டைரக்டர் கிட்ட சொல்லிட்டு உனக்கு இன்னைக்கு குடுக்க வேண்டிய பேமெண்ட்டை கொடுத்துடுறேன்..” என்றவர் நேராக டைரக்டர் இடம் சென்று விஷயத்தை சொல்லி பக்கத்திலேயே அமர்ந்து இருந்த புரொடியூசரிடம் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டு வந்து தீரன் இடம் கொடுத்தான்..
அங்கே அந்த ப்ரொடியூஸரும் தீரன் செய்த சாகசங்களை எல்லாம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர் “ஏன்யா டைரக்டரு.. இந்த பையன் பார்க்கவும் நல்லா இருக்கான்.. நல்ல வாட்டசாட்டமா ஹீரோ மாதிரி இருக்கான்.. பேசாம இவனையே இந்த படத்துக்கு ஹீரோவா போட்டு இருக்கலாமே.. கொஞ்சம் இவனோட உடுப்பு எல்லாம் ஸ்டைலா மாத்திட்டா இப்ப நடிக்கிறானே அந்த சொத்தை ஹீரோ. அவன் எல்லாம் இவன் கிட்ட பிச்சை வாங்கணுமேயா.. அவன் உடம்பை பாருடா.. சும்மா தேக்குல செஞ்சு வச்ச மாதிரி அப்படியே தெனவெடுத்து இருக்கு.. அனாவசியமா இந்த சொத்தை ஆளுக்கு எதுக்கு இவ்வளவு பணத்தை கொட்டி கால்ஷீட் வாங்கி வேஸ்ட் பண்ணனும்..”
“ம்ம்.. ஆமா சார்.. நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. அவன் நல்ல ஹீரோ மெட்டீரியல் தான்.. ஆனா அவன் மூஞ்சியை பாத்தீங்களா.. அந்த மூஞ்சில வந்ததிலிருந்து ஒரு இஞ்ச் சிரிப்பை பார்க்க முடிஞ்சுதா? சிரிக்கிறதுன்னா என்னன்னே தெரியாது அந்த பயலுக்கு.. அவனை சிரிக்க வெக்கற ஒரே ஆளு அவன் தம்பி மட்டும் தான்.. அவன் தம்பி வந்தா மட்டும் தான் அவன் முகத்தில கொஞ்சமா சிரிப்பை பார்க்கலாம்.. மத்தபடி எப்பவும் முகத்தை உர்ருன்னு ஒன்னு கோவமா இல்லன்னா யாரையாவது முறைச்சு பார்த்துட்டு இருப்பான்.. நான் காதல் கவிதைன்னு ஒரு படம் எடுத்தேன்.. ஞாபகம் இருக்குதா..? அந்த படத்துல இவனை ஹீரோவா போடலாம்னு எனக்கும் தோணிச்சு.. சரின்னு ஹீரோவா போட்டேன்.. இந்த மாதிரி ஸ்டண்ட் சீனு ஃபைட்டு சீனு இதெல்லாம் செமையா பிச்சு உதறிட்டான்.. அதெல்லாம் பார்த்தப்போ நான் கூட படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னு சந்தோஷப்பட்டேன்.. ஆனா படத்துக்கு காதல் கவிதைன்னு பேரை வெச்சுட்டு ஒரு ரொமான்டிக் சீன் கூட இல்லைன்னா எப்படி? இவனை வச்சு அப்படி ஒரு சீன் கூட பண்ண முடியல.. ரொமான்ஸ்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பான்.. அந்த பொண்ணை காதலா பாருடான்னு சொன்னா அடுத்த நிமிஷம் அந்த பொண்ணு மண்டைய பொளந்து கொலை செய்ய போற மாதிரியே பார்த்துக்கிட்டு இருந்தான்.. அப்புறம் எங்க அவனை ஹீரோவா போடுறது..? அதான் எப்பா சாமி.. நீ ஸ்டண்ட் பார்ட்டியாவே இரு.. உனக்கு நடிப்பு எல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லி வேற ஹீரோவை போட்டு படத்தை எடுத்தேன்.. இவனுக்கு மட்டும் கொஞ்சம் ரொமான்ஸ் வந்திருந்துச்சுன்னா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிருக்கும்.. ஆனா அந்த ஹீரோவை போட்டு படம் சுமாரா தான் வந்துச்சு.. என்ன செய்ய..? கடவுள் அழகை குடுத்து இருக்கான்.. ஆனா அவனுக்கு அந்த அழகுக்கேத்த ஃபீலிங்ஸை கொடுக்கலையே.. கோபத்தை மட்டும் தான் கொடுத்து இருக்கான்..”
“அது சரி.. மொத்தத்தில என் பணம் எல்லாம் நஷ்டம் ஆகணும்னு என் தலையில எழுதி இருக்கு.. இந்த ஹீரோ நடிக்கிற நடிப்பை பார்த்தா அப்படி ஒன்னும் படம் ஓடும்னு தோணல.. பேசாம நடிப்பு வரலன்னாலும் அவனையே போட்டு இருக்கலாம்.. அவன் சும்மா வந்து நின்னாலே அவனை பாக்குறதுக்காக பொண்ணுங்க கயூல வந்து நிப்பாங்க போல”
“படத்துக்கு பொண்ணுங்க வருவாங்க.. ஆனா இவனோட நடிக்கறதுக்கு ஹீரோயின் ஒத்துக்கனும் இல்ல..? அவங்க படத்துல இவன் ஸ்டண்ட் பண்ணா இவனோட அழகை பார்த்து மயங்கி நிக்கிறாங்களே தவிர இவனோட நடிக்கறதுக்கு எந்த ஹீரோயினும் ம்ஹூம் சான்சே இல்ல.. ஏன்னா சாருக்கு அவ்வளவு கோவம் வரும்.. பொண்ணுங்களை கண்டாலே ஆகாது..”
“ஆமா.. அவன் தம்பியை பார்த்தா மட்டும் சிரிப்பான்னு சொல்றே.. அப்படி என்னய்யா அவன் தம்பி மட்டும் அவ்வளவு ஸ்பெஷல்..?”
“ஸ்பெஷல் தான். சின்ன வயசிலேயே அவங்க அப்பா இறந்துட்டாரு.. அவங்க அம்மா கிட்ட தான் ரெண்டு பிள்ளைகளும் வளர்ந்தாங்க.. அவங்க அம்மா கஷ்டப்பட்டு வேலை செஞ்சு அவங்க ரெண்டு பேருக்கும் வயறு நெறைய சாப்பாடு போட முடிஞ்சதே தவிர அவங்களுக்கு அவங்களை படிக்க வைக்க முடியல.. அதனால இந்த தீரன் தான் தன்னோட படிப்பை நிறுத்திட்டு நிறைய சின்ன சின்ன வேலைகளை பார்த்து தான் தம்பியை படிக்க வச்சான்.. இன்னிக்கு அவன் தம்பி இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்து படிக்கறான்.. இவனுக்கு அப்படியே நேர் எதிர் அவன்.. நல்லா டிரஸ் பண்ணறது.. தன்னோட காலேஜ் பசங்களோட ஊர் சுத்துறது..ன்னு கஷ்டப்பட்டு எந்த வேலையும் செய்யாம அண்ணன் முதுகல சவாரி செஞ்சுக்கிட்டு இருக்கான்.. அவனும் இவனை மாதிரியே தான் பார்க்க நல்லா இருப்பான்.. ஆனா இவனை விட கொஞ்சம் ஹைட்டு வெயிட் எல்லாம் கம்மி.. பொண்ணுங்க அவன் காலேஜ்ல அவன் பின்னாடியும் சுத்துதுங்க.. ஆனா அண்ணன் மனசு கஷ்டப்படக்கூடாதுங்கறதுக்காக கொஞ்சம் படிக்கவும் செய்யறான்.. இவன் மேல பெரிய மதிப்பு வெச்சிருக்கிறான்.. தம்பிக்கு அண்ணன்னா உயிர்.. அண்ணனுக்கு தம்பி தான் உலகமே.. அவனுக்கு ஒன்னுனா துடிச்சு போயிடுவான் தீரன்.. ஆனா அந்த புள்ள உருப்படனும்னா கொஞ்சமாவது அவனுக்கு கஷ்டம் தெரியணும்ன்னு ஒவ்வொரு நாளும் அவங்க அம்மா சொல்லிக்கிட்டு தான் இருந்தாங்க.. பெரிய புள்ள கல்யாணத்தையாவது பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்தாங்க.. இவன் எங்க..? கல்யாணம் பண்ணாமயே பெறாத புள்ளையா தம்பியை நினைச்சுக்கிட்டு அவனுக்காகவே வாழ்ந்து காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கான்.. இப்பதான் ரெண்டு வருஷம் முன்னாடி இவனுக்கு கல்யாணம் ஆகலையே.. புள்ளைங்க வாழ்க்கை என்ன ஆகுமோன்ற கவலையிலயே அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க.. இவன் எங்க புரிஞ்சுக்கிறான்..? அந்த புள்ளையை செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்குறான்..”
ஒரு பெருமூச்சோடு சொல்லி முடித்தார் அந்த டைரக்டர்..
“இவனை பார்த்தா ஒரு 28 வயசு கிட்ட சொல்லலாம் போலயே.. இவனுக்கு இன்னும் கல்யாணம் ஏன் ஆகலை? இவ்வளவு அழகா இருக்குறவனுக்கு இன்னுமா எந்த பொண்ணும் அமையல? இவனை எல்லாம் 20 வயசுலேயே பொண்ணுங்க சுத்த ஆரம்பிச்சு இருப்பாங்களே”
அவர் கேட்ட கேள்வியில் தீரனை பார்த்தபடி “ம்ம்.. சுத்தாம என்ன? அவங்க அருமை தெரியாதவன் பின்னாடி சுத்தி என்ன பிரயோஜனம்? நம்ம பின்னாடி சுத்தி இருந்தா.. “அந்த டைரக்டர் ஏக்க பெருமூச்சோடு சொல்ல
“ஹான்.. இந்நேரம் அந்த பொண்ணுங்க எல்லாம் சீரழிஞ்சு போய் இருப்பாங்க..”
அந்த தயாரிப்பாளர் நக்கலாய் சொல்ல அவரை தீவிரமாய் முறைத்தார் டைரக்டர்..
லவ்.. ❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! -2
“அதை ஏன் கேக்குறீங்க? இவன் செட்டுக்கு வந்தான்னா ஹீரோவை விட இவன் பின்னாடி சுத்துற பொண்ணுங்க தான் ஜாஸ்தி.. ஆனா இவனுக்கு தான் பொண்ணுங்கனாலே அலர்ஜி.. தீவிர ஆஞ்சநேயர் பக்தன்.. வாழ்க்கையில தன் அம்மாவை தவிர எந்த பொண்ணும் கிடையாதுன்னு தீர்மானமா இருக்கான்.. இவன் தம்பி அப்படியே உல்டா.. ஊர்ல இருக்குற அத்தனை பொண்ணுங்களோடையும் சுத்துறான்.. இப்படியும் ஒரு அண்ணன் தம்பிங்க..”
டைரக்டர் சொன்னதை கேட்டு வியப்பு மேலிட “எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு அவன் வாழ்க்கைல வரத்தானே வேணும்? அப்படி யாராவது வந்தா இவன் மாறிடுவான்னு தோணுதுயா..” என்று சொன்னார் அந்த தயாரிப்பாளர்..
“அதுக்கு இவன் தன் வாழ்க்கையில அந்த மாதிரி ஒரு பொண்ணை வர விடனும் இல்ல..? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை..” சத்தியம் செய்யாத குறையாக சொன்னார் அந்த டைரக்டர்.. “அது மட்டும் இல்லை அவனுக்கு இப்ப வயசு 25 இல்ல 30..”
“30 ஆ.. நானே இருபத்தஞ்சுன்னு ரொம்ப அதிகமா சொல்லிட்டனோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. என்னயா பார்க்க இவ்ளோ சின்ன பையனா இருக்கான்..?”
“ஆமா.. அவன் ஃபிட்னஸ் அப்படி.. அவன் உடம்பை கவனிச்சுக்கறதுக்காக அப்படி பாடுபடுவான்.. நம்மளால எல்லாம் அப்படி ஒரு வொர்க் அவுட் பத்தி எல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது..”
அவர் சொல்ல சொல்ல அந்த ப்ரொடியூசர் தன் தொப்பையை குனிந்து தடவிப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டார்..
அப்போது தீரன் கிளம்பிவிட
பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு பெண் தீரனை நோக்கி ஓடி வந்தாள்.. அவனோ அவள் பக்கம் பார்வையை கூட திருப்பாமல் நாலே எட்டில் தன் பைக்கை அடைந்து ஸ்டைலாக வண்டியில் ஏறி அமர்ந்து ஒரு வட்டமடித்து கிளப்பி போய் இருந்தான்..
அவன் செல்லும் அழகை அப்படியே பார்த்து மெய் மறந்து போய் நின்றிருந்தாள் அந்த பெண்..
அவளோடு வந்திருந்த அவளுடைய மற்ற தோழிகள் எல்லாரும் ஹீரோவிடமும் ஹீரோயின் இடமும் கையெழுத்து வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள்..
கையெழுத்து வாங்கி அவர்களுடன் புகைப்படம் பிடித்துக் கொண்டு அந்தப் பெண்ணின் அருகில் வந்து “ஏய் மலரு.. என்னடி.. அங்கே பார்த்துக்கிட்டு இருக்க? நீ ஹீரோ கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கல..”
“ஆமா.. அந்த டப்பா ஹீரோ கிட்ட யாருக்கு ஆட்டோகிராஃப் வேணும்.. இதோ போறானே என்னோட ஹீரோ.. இவன்கிட்ட தான் எனக்கு ஆட்டோகிராஃப் வேணும்.. அதுவும் இங்கே..” தன் இதயத்தில் கை வைத்து ஒரு ஏக்கப் பார்வையோடு சொன்னவள் “எப்படியும் ஒரு நாள் இந்த தீரன் கிட்ட நான் ஆட்டோகிராஃப் வாங்குவேன்..”
அவள் அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டு சொன்னாள்..
அவளுடைய தோழி நவீனா “காலேஜ்ல முக்கியமான லெக்சர் இருக்கு.. என்னைக்கும் இல்லாத அதிசயமா காலேஜ்ல ஒரு ஹவர் கூட மிஸ் பண்ணாம.. உடம்பு முடியலன்னா கூட கஷ்டப்பட்டு காலேஜுக்கு வர்றவ.. இப்படி முக்கியமான கிளாஸை கட் பண்ணிட்டு காலேஜ் பக்கத்தில ஷூட்டிங்க்னு தெரிஞ்சுக்கிட்டு இங்க வந்து இருக்கே.. நான் கூட நீ ஹீரோவை பார்க்க தான் வந்துருக்கன்னு நினைச்சேன்.. கடைசில இந்த ஸ்டண்ட் பார்ட்டி தான் உன்னோட கனவு கண்ணனா..”
“ஆமா டி.. இவன் தான்டி என் ட்ரீம் பாய்.. இவனை ஒரு டிவி இன்டர்வியூல பார்த்தேன்.. பார்த்ததிலிருந்து என் கண்ணில இருந்து போகவே மாட்டேங்குறான் டி.. என் மனசு முழுக்க நிறைஞ்சிருக்கான்.. எப்படியும் அவன் கூட பேசி அவனோட பெஸ்ட் ஃபிரென்ட் ஆகி காட்டுவேன்.. இந்த அழகன் இந்த மலரழகிக்கு மட்டும் தான்..”
உறுதியாக அவன் போன திசையையே பார்த்தபடி சொன்னாள் அவள்.. அவளுடைய தோழி நவீனா “அவனை பார்த்தா எப்பவும் உர்ருன்னு இருக்குற மாதிரி இருக்கு.. அவனுக்கு வயசு கூட ரொம்ப அதிகமா இருக்கும் போல.. அவன் கூட நீ எப்படிடி ஃப்ரெண்டாக முடியும்.. பொண்ணுங்க பக்கம் கூட திரும்ப மாட்டேன்கிறான் அந்த ஆளு..”
“ஏய்.. ஆளு கீளுன்ன.. பல்லு உடைஞ்சுடும்.. அவர் எனக்கு மட்டும்தான் ஆளு.. உங்களுக்கெல்லாம் அண்ணன்.. புரிஞ்சுதா?” மிரட்டியவள் தன் கனவுக்கண்ணனின் நினைவிலேயே தன் கழுத்திலிருந்த சங்கிலியை வாயில் வைத்து மென்மையாய் தன் முத்து பற்களால் கடித்தபடி புன்னகை பூத்த முகத்தோடு வேறு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்க.. இவளுக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையோடு அவளை பார்த்து விழித்து கொண்டு இருந்தார்கள் அவளுடைய தோழிகள்..
🎵🎶🎼
மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஒரம்..
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்..
போதும் என்று தோன்றும்..
காலை வந்தால் என்ன…
வெயில் எட்டி பார்த்தால் என்ன..
கடிகாரம் காட்டும் நேரம்..
அதை நம்ப மாட்டேன் நானும்…!!🎵🎶🎼
அந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இறக்கையில்லா குறையாக சீறிப் பாய்ந்து பறந்து வந்து அந்த கல்லூரி வாசலில் ஒரு வட்டமிட்டு நின்றது.. அதை ஓட்டி வந்த இளம் யுவனை இறுக்க அணைத்தபடி அவன் பின்னால் அமர்ந்திருந்தாள் ஒரு இளம் யுவதி..
ஒரு நீல நிற டெனிம் ஷாட்ஸூம் மேலே உடம்பை இறுக்கி பிடித்தாற் போல் ஒரு வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தவள் வண்டி நின்ற பிறகும் அந்த இளைஞனை விடாமல் இறுக கட்டி அணைத்தபடியே அவன் வேகத்தில் பயந்து கண்களை மூடி அவன் முதுகில் சாய்ந்திருந்தாள்..
“ஹே பேபி.. காலேஜ் வந்துருச்சு.. என்ன பயத்துல தூங்கிட்டியா?”
“பயமா தான் டா இருந்தது.. ஆனா உன்னை கட்டி புடிச்சிகிட்டா பயமே தெரியல.. டேய் நான் அப்படியே உன்னை கட்டி பிடிச்சுட்டு வரேன் டா.. இப்படியே நீ என்னை டிரைவ் கூட்டிட்டு போயிட்டே இரு.. நம்ம எங்கேயாவது போய்க்கிட்டே இருக்கலாம்.. அப்படியே ஏதாவது மூவி டேட் போய் ஜாலியா மூவி பாத்துட்டு பீச்சுக்கு போயிட்டு ஈவினிங் அங்க ரிசார்ட்ல..”
அந்தப் பெண் இளமை மயக்கத்தில் கிறக்கமாய் பேசிக்கொண்டே போக அவனோ “சாரி பேப்ஸ்.. அது மட்டும் என்னால முடியாது.. எனக்கு இப்ப காலேஜுக்கு போயே ஆகணும்.. இந்த டைமை மட்டும் நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீ கிளம்பி போ.. நாளைக்கு பார்க்கலாம்.. நாளைக்கு காலைலயும் இன்னிக்கு மாதிரி அந்த ஐஸ்கிரீம் பார்லர்லயே மீட் பண்ணலாம்.. நாளைக்கு மூவி போலாம்.. இன்னிக்கு மாதிரி 11 மணிக்கு எல்லாம் காலேஜ் வர வேண்டாம்.. ஒரு 12 மணிக்கு மேல வந்தா போதும்..”
அவள் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினாள்..
“என்னடா இப்படி டீல்ல விடுற?”
விழிகளில் ஏக்கத்தோடும் கிறக்கத்துடனும் அவளா கேட்க “சாரி பேப்ஸ்.. எனக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சு.. இப்போ உன்னோட பேசறதுக்கு டைம் இல்ல.. பாய்..” சொல்லிவிட்டு காலேஜ் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக தன் வகுப்பிற்கு சென்றான் அவன்..
அவன் இந்தர்..
நிஜமாகவே பெயருக்கேற்றார் போல் இருபது வயது இந்திரனாகவே இருந்தான் அவன்.. ஆறடி உயரத்தில் உடலின் எந்த பாகத்திலும் ஒரு துளி மிகையான சதை இல்லாத ஒட்டிய வயிறும் அகண்டு விரிந்த தோள்களும் என பார்த்த உடனேயே பெண்களை விட்டில் பூச்சிகளாய் அவன் அழகு என்னும் நெருப்பு மயக்கி விழ வைத்தது.. அவனோ அவர்களுக்கு எப்போதுமே எட்டா கனியாய் தான் இருந்தான்..
அழகான பெண்கள் எல்லோரையும் தன் நட்பு வட்டத்திற்குள் இணைத்திடுவான் தான்.. ஆனால் எவரிடமும் எல்லை மீற மாட்டான்.. அதே சமயம் ஆண் நண்பர்களுடன் வெளியே சுற்றுவதை விட அழகான பெண் நண்பர்களோடு சுற்றுவதில் அதிக நேரம் செலவழித்தான்..
அவனுடைய ஆண் நண்பர்கள் அது குறித்து கேட்டால் “அவங்களோட போறதுல ஒரு கிக் இருக்குடா.. எங்க போனாலும் எல்லாரோட பார்வையும் நம்மள சுத்தியே இருக்கும்.. அந்த கியூரியஸான அட்டென்ஷன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டா.. அதுல ஒரு திரில் இருக்குடா மச்சி.. அவங்க எல்லாரும் இது தப்புன்னு சொல்ல சொல்ல அதையே தான் பண்ணனும்னு தோணுது..”
அவன் சொல்லும்போது அவனுடைய நண்பர்கள் “அப்படி பார்த்தா உனக்காக என்ன வேணா செய்யறதுக்காக அவ்வளவு பொண்ணுங்க காத்துகிட்டு இருக்காங்க.. ஆனா ஒருத்தரையும் ஓரளவுக்கு மேல உன்னை நெருங்க விட மாட்டேங்கறியே..”
அவர்களுக்கெல்லாம் அவனுக்கு அமைவது போல் தங்களுக்கு நண்பிகள் அமைந்திருந்தால் இத்தனை நேரம் ஒரு நாலு பேரையாவது கரெக்ட் செய்திருப்போமே என்ற ஏக்கமும் பொறாமையும் உள்ளுக்குள்..
அவனோ அவனுடைய இளமைக்கும் அழகுக்கும் பரிசாய் கிடைக்கும் இந்த பொக்கிஷ தருணங்களை இப்படி வீணாக்கி கொண்டிருக்கிறானே என்ற ஆதங்கமும் சேர்ந்து கொள்ளும் அவர்களுக்கு..
அவர்கள் அப்படி கேட்கும் போது “அவங்களும் உங்களை மாதிரி எனக்கு ஃப்ரெண்ட்ஸா இருக்கற கேர்ள்ஸ்.. அவ்வளவுதான்.. யாரும் என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் கிடையாது.. என்னோட கேர்ள் ஃபிரண்டா இருக்கணும்னா அதுக்கு தகுதி இருக்கிறது ஒரே ஒரு ஆளுக்கு தான்.. வேற யாரும் அந்த இடத்தை நெருங்க கூட முடியாது..”
சொல்லிவிட்டு அந்தப் பெண் யார் என்று சொல்லாமலேயே அப்படியே மழுப்பி கடந்து விடுவான்.. இது தினந்தோறும் அவனுக்கு வாடிக்கையாகவே போயிருந்தது..
கல்லூரி வாயிலில் தன்னுடைய பைக்கில் நின்று கொண்டு மற்ற நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் இந்தரின் நெருங்கிய நண்பன் ரகு..
“டேய் ரகு.. இந்த இந்தருக்கு என்னடா ஆச்சு? தினமும் காலேஜுக்கு வந்துடறான்.. என்னைக்காவது ஒரு நாள் காலேஜ் முழுசா கட் அடிச்சிட்டு ஃபுல் டே நம்ம கேர்ள்ஸோட ஊரு சுத்தலாம்னு சொன்னா அதுக்கு மட்டும் ஒத்துக்கவே மாட்டேங்குறான்.. இவன் ஏன்டா இப்படி இருக்கான்? நம்ம எல்லாம் பொண்ணுங்க கிட்ட இருந்து ஒரு பார்வைக்கு கூட வழியில்லாம இருக்கோம்.. இவனை பார்த்தவுடனே பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து கட்டிக்கிட்டு முத்தம் கொடுக்கறதுன்னு எல்லாத்துக்கும் ரெடியா இருக்காங்க.. ஆனா அதுக்கு எல்லாம் அசைஞ்சு கொடுக்காம எல்லாரையும் கொஞ்சம் தள்ளியே நிக்க வைக்கறான்.. அவனுக்கு எல்லாம் ஈசியா கிடைக்குதுல்ல..? அதன்டா அதோட அருமை அவனுக்கு புரியல.. ம்ம்.. என்கிட்ட மட்டும் பொண்ணுங்க இப்படி நடந்துக்கிட்டாங்கன்னா இந்நேரம் நான் இருக்கிற ரேஞ்சே வேற.. எத்தனை பொண்ணுங்களை இவ்வளவு நேரம் மடிச்சிருப்பேன்.. தெரியுமா..?”
இந்தரின் மற்றொரு நண்பன் ரகுவிடம் புலம்ப “அதாண்டா உன்னை கடவுள் அவனை மாதிரி படைக்கல.. பொண்ணுங்க எல்லாம் பாவம் இல்ல.. அப்புறம் தப்பி தவறி கூட இந்தர் முன்னாடி இந்த மாதிரி பேசி வைக்காத.. அவன் பொண்ணுங்களோட ஊர் சுத்தறானே தவிர அவங்களை ரொம்ப மதிக்கிறான்.. நீ இப்படி பேசினது தெரிஞ்சது உன் ஃப்ரெண்ட்ஷிப்பை இப்பவே கட் பண்ணிடுவான்…”
ரகு சொன்னதைக் கேட்டு “ஐயையோ இவனோட ஃப்ரெண்டா இருக்கறதனால தான் ஏதோ ஒன்னு ரெண்டு பொண்ணுங்களாவது நம்ம பக்கம் பார்க்குது.. அதுக்கும் வேட்டா? இனிமே இப்படி பேசவே மாட்டேன் டா..” பம்மினான் அந்த நண்பன்..
“ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.. டேய்.. அவன் தினமும் காலேஜுக்கு வர்றதே ஒருத்தரை பாக்குறதுக்காக தான்.. அது யாருன்னு அவன் வெளிப்படையா சொல்லலன்னாலும் அது யாருன்னு எனக்கு தெரியும் டா..” என்றான் ரகு
“யாருடா அது?”
“அவன் எந்த கிளாஸ்க்கு கட் அடிக்காம காலேஜ் ரெகுலரா வரான்னு கவனிச்சு இருக்கியா? மதியழகி மேம்.. அவங்க கிளாஸை அவன் இதுவரைக்கும் கட் பண்ணதே இல்ல.. ஏன் தெரியுமா? அவங்களை தினமும் பார்க்கலன்னா பையனுக்கு அன்னைக்கு நாளே ஓடாது..”
ரகு சொன்னது கேட்டு வாயை பிளந்தான் அந்த நண்பன்..
“மதியழகி மேமா?”
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 3
“மதியழகி மேமா? டேய்.. அவங்க நம்மள எல்லாம் விட அட்லீஸ்ட் ஒரு அஞ்சாறு வயசாவது பெரியவங்களா இருப்பாங்களேடா..”
ரகுவிடம் இந்தரின் இன்னொரு நண்பன் அவன் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் கேட்க
“ஆமா.. அது உனக்கு தெரியுது.. எனக்கு தெரியுது.. ஆனா அவனுக்கு தெரியலையே.. சொல்லுவாங்க இல்ல? காதலுக்கு கண் இல்லைன்னு.. அவனுக்கு கண்ணு தெரியாம போய் ரொம்ப நாள் ஆகுது டா..”
“ஓ.. பையன் இப்படி ஏடாகூடமா சிக்கிட்டானா? அதானா வேற யாருகிட்டயும் சிக்க மாட்டேங்குறான்..? பார்ப்போம்.. அது சரி.. வீக் எண்ட்ல காலேஜ் கிடையாதேடா.. அப்ப என்ன பண்ணுவான்..?”
“அந்த ரெண்டு நாள் அவன் வேற யாரோடயும் இருக்க மாட்டான்.. அந்த ரெண்டு நாள் அவங்க அண்ணனுக்கு மட்டுமே சொந்தமான நாள்.. முழுக்க முழுக்க அவங்க அண்ணனோட தான் இருப்பான்.. அவங்க அண்ணனும் சனி ஞாயிறுன்னா எந்த ஷூட்டிங்கும் போகாம அவனோட தான் ஃபுல்லா ஸ்பெண்ட் பண்ணுவார்.. அப்படி ஒரு பாசம் அண்ணன் தம்பிக்குள்ள..”
“இவன் இப்படி ஏடாகூடமா சிக்கி இருக்கிறது தெரிஞ்சா.. பாவம்.. தீரன் அண்ணா என்ன பண்ணுவாரு..?”
“ஆமாண்டா.. அதை நினைச்சா எனக்கும் ரொம்ப கவலையா தான் இருக்கு.. அவன் மதி மேம் மேல அவனுக்கு இருக்கறது லவ்வுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கானோ என்னவோ தெரியல.. எனக்கு தெரிஞ்சு அது ஒரு இன்ஃபேக்சுவேஷன் அவ்வளவுதான்.. அவனுக்கு அது புரிஞ்சா நல்லது.. புரியலன்னா.. என்ன என்ன சிக்கல்ல மாட்ட போறானோ தெரியல..” பெருமூச்சை விட்டு கொண்டு சொன்னான் ரகு..
மதியழகியின் வகுப்பு நேரத்திற்கு சற்று முன்னதாகவே வகுப்பில் டாண் என்று ஆஜராகி இருந்தான் இந்தர் என்று அழைக்கப்படும் இந்திரஜித்..
அந்த வகுப்பு மாணவர்களை பொறுத்த வரை அது தினமும் நிகழும் நிகழ்வு தான்.. மற்ற வகுப்புகளில் வாரத்திற்கு இருமுறை கூட வராமல் கட்டடித்துவிட்டு ஊர் சுற்றும் இந்தர் மதியழகியின் வகுப்பிற்கு மட்டும் ஒரு நாள் கூட தவறாமல் சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவான்..
தன் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தவன் தலையை இந்த பக்கம் அந்த பக்கம் திருப்பாது வாயிலிலே கண் பதித்து தன் நினைவில் நிறைந்திருந்தவளை எதிர்நோக்கி காத்திருந்தான்..
அவன் நினைவை அப்படி முழுவதுமாய் ஆக்கிரமித்து இருந்தவள் மதியழகி..
மற்ற மாணவர்களால் ‘மதி மேம்.. மதி மேம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அழகி.. அவள் செய்யும் எதிலும் ஒரு நேர்த்தி.. ஒரு அழகு இருக்கும் அவளை போலவே.. படிய வாரி பின்னலிட்ட கூந்தல் இடை வரை நீண்டிருக்க செவிகளில் சின்ன தோடும் அதற்கேற்ற சிறிய ஜிமிக்கியும் ஆடிக்கொண்டிருக்க முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் புருவங்களுக்கிடையே சிறிய நட்சத்திரமாய் ஒரு சிகப்பு திலகப்பொட்டும் கழுத்தில் மெல்லிய சங்கிலியும்.. விசிறிவாழையாய் மடிப்பு எடுத்து நேர்த்தியாய் கட்டிய காட்டன் புடவையும் இயல்பாகவே மாணவர்களை அவள் புறம் ஈர்த்தது..
அவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை ஆகி போனாள் அந்த கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே..
அவள் பாடம் சொல்லிக் கொடுக்கும் அழகு.. அவளின் அமைதியாக பேசும் இயல்பு.. எதையும் பொறுமையாக கையாளும் பண்பு.. மாணவர்களிடம் பொதுவாக அவள் காட்டும் அன்பு.. ஏதேனும் தவறு செய்தால் அந்த தவறை சுட்டி காட்டி அதை திருத்திக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அவள் பார்க்கும் உறுதியான பார்வை.. இது எல்லாமே இந்தருக்குள் அவளை பார்த்த முதல் நாளே அப்படியே அச்சாய் பதிந்து விட்டன..
மாடர்ன் மங்கைகளாய் அவனை சுற்றி மொய்க்கும் பெண்களுக்கு நடுவில் பார்த்தவுடன் மரியாதையும் மதிப்பும் தனிச்சையாய் தோன்றும்படி நேர் கொண்ட பார்வையும்.. யாருக்கும் அஞ்சாத துணிவும் நேர்மையும்.. எதையும் அடுத்தவருக்கு புரியும் படி சொல்வதில் நிதானமும்.. தெளிவும்.. நேர்த்தியும்.. மொத்தத்தில் ஏதோ ஒரு தனித்துவம் அவள் புறம் அவனை கட்டி இழுக்க மதியழகி இந்தரின் தாய்க்கு அடுத்த படியாய் அவனை ஆள்வதற்கான தகுதி பெற்ற ஒரே பெண்ணாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள்..
தாய்க்குப் பின் தாரம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தாய் இல்லாத தனக்கு தாரமாக வரக்கூடிய தகுதி பெற்றவள் அவள் ஒருத்தி தான் என்று முடிவு கட்டியிருந்தான் அவன்..
இன்று அவளை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. அவள் வருவதற்கு முன் அவளின் பிரத்யேக மணம் நாசியை தீண்ட கண்ணை மூடி அவளின் வாசத்தை சுவாசித்து தனக்குள் நிரப்பி அனுபவித்துக் கொண்டிருந்தான்..
அதை முழுதாய் அனுபவித்து முடிக்கும் முன் வகுப்பினுள்ளே வந்தவள் தன் செங்கனி வாய் திறந்து “மார்னிங் கைஸ் அண்ட் கேர்ள்ஸ்.. எப்படி இருக்கீங்க எல்லாரும்..?” என்க அவள் வாசத்தை சுவாசிப்பதிலும், வார்த்தைகளை வாங்கிக்கொள்வதிலும் நாசிக்கும் செவிக்கும் போட்டி நடக்க இவை இரண்டையும் அடக்கி வைத்து விழிகளோ அவளை கண்டு அவள் அழகை வாசிக்க ஏக்கம் கொண்டது..
மூன்றுக்கும் நடந்த போட்டியில் கண்களே வெற்றி கண்டது.. அவளின் கனிவான கண்களின் நேர்பார்வை.. அவளின் செவ்விதழின் தேன்மொழிகள்.. அவள் கைகளில் இருந்த பிஞ்சு வெண்டை விரல்களின் அபிநயங்கள்.. அவள் முன்னும் பின்னும் நகரும்போது சரசரத்த அவளின் சேலை மடிப்பு.. செவியில் அவள் அசைவுக்கேற்ப நடனமாடி கொண்டிருந்த குட்டி ஜிமிக்கிகள் என அவனின் பார்வை அவளையே கவனத்தில் முழுதாய் வைத்திருந்தது..
அவள் நடத்திய பாடம் எதுவுமே அவன் கவனத்தில் இல்லை.. வெளிர் கத்திரிப்பூ நிற காட்டன் சேலை அப்படியே அவள் உடலுக்கேற்றார் போல் பொருந்தி நிற்க அவள் நேர்த்தியாய் அந்த புடவையை அணிந்திருந்த பாணியையும் அவளுடைய கம்பீரமான தோற்றத்தையும்.. அவளின் தைரியத்தோடு கூடிய ஆளுமையையும்.. தன்னம்பிக்கையோடு கூடிய வித்யா கர்வத்தையும்.. அதே சமயம் ஒரு சிறு கறை இல்லாத தெளிவான ஒளிர்முகத்தையும் கண்களாலேயே மெச்சி ரசித்து கொண்டிருந்தான் இந்தர்.. கண்களை வேறு புறம் நகர்த்த முடியவில்லை அவனால்..
மதியழகி அந்தக் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே அவளுக்கான மாணவ விசிறிகள் மிகவும் அதிகம்.. பேசும்போது ஒரு தோழியாய் கனிவோடு பேசும் அவளின் இதமான பேச்சு எல்லோரையும் அவளுக்கு எளிதில் நண்பர்கள் ஆக்கிவிடும்.. ஆனால் வகுப்புக்குள் பாடம் எடுக்க வந்துவிட்டால் அவள் ஒரு ஆசிரியையாக மொத்தமாய் அவதாரம் எடுத்து விடுவாள்.. அந்த நேரத்தில் அவளைப் போன்ற கராரான கண்டிப்பான ஆசிரியை உலகத்திலேயே இல்லை என்பது போல் தான் நடந்து கொள்வாள்.. அதே நேரத்தில் மாணவர்கள் எத்தனை முறை அவளை திரும்ப திரும்ப சந்தேகங்கள் கேட்டாலும் சரி.. நடத்திய பாடத்தை திரும்பவும் நடத்த சொன்னாலும் சரி.. அவர்களுக்காக கொஞ்சம் கூட தயக்கம் இன்றி மீண்டும் முழுவதுமாய் அந்த பாடத்தை பொறுமையாக கற்றுக் கொடுப்பாள்..
இந்தர் அவளோடு ரொம்பவும் பேசமாட்டான்.. ஆனால் வகுப்பை எடுக்கும்போது அவள் மீது மதிப்பையும் மரியாதையையும் இயல்பாய் வரவழைக்கும் அவளின் நடை உடை பாவனை எல்லாம் இன்னும் இன்னும் அவனுக்கு அவளை பிடிக்க வைத்தது..
ஒரு நிலையில் அந்தப் பிடித்ததை காதல் என்று எண்ணிக்கொண்டான் அவன்.. இப்போது அந்த காதல் உணர்வு ஒரு பிடிவாதமாகவே மாறி இருந்தது அவனை பொறுத்தவரை..
ஆனால் மதியழகியோ எப்போதும் போல பாடத்தை முடித்து விட்டு மாணவர்களை கேள்வி கேட்கும் நேரம் இந்தரை பார்த்து “இந்தர்.. கேன் யூ எக்ஸ்ப்ளெயின் த ஸ்டேஜஸ் ஆப் டிசைன் திங்கிங் பிராசஸ்?” என்று பட்டென கேட்டுவிட அவனோ அப்போதும் அவள் பேசும்போது அவள் இதழ் அசைவதையும் அவளின் அழகு முக பாவனைகளையும் மட்டுமே ரசித்துக் கொண்டு மௌனமாய் அமர்ந்து இருந்தான்.. அவளிடம் மொத்தமாய் தன்னை இழந்திருந்தான் பையன் அவன்..
“ஹலோ இந்தர்.. உங்களை தான் கேட்கிறேன்.. நான் கேக்குறது காதுல விழுதா.. இல்ல.. க்வெஸ்டின் புரியலையா? டு யூ வாண்ட் மீ டு ரீஃப்ரேஸ் த க்வெஸ்ட்டின்..?”
அப்போதும் அவன் அப்படியே அவளை கண்ணிமைக்காமல் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க அவன் அப்படி குறுகுறுவென பார்த்ததே அவளுக்கு தர்ம சங்கடமாகி போனது..
“இ..ந்..தர்..” சற்று குரலை உயர்த்தி அவள் அழைக்கவும் இந்தரின் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவன் அவனை உலுக்கி அவன் கனவுலகத்தில் இருந்து அவனை எழுப்பி விடவும் சரியாக இருந்தது..
“டேய் இந்தர்.. எங்கடா இருக்க..? உன்னை தான்டா கேக்குறாங்க..?” அவன் அப்படி கேட்டு உலுக்கவும் தான் தன்னிலை உணர்ந்தான் இந்தர்..
சற்றே அதிர்ந்தவன் திருதிருவென விழித்துக் கொண்டு “சாரி.. என்னை ஏதாவது கேட்டீங்களா?” என அது நேரம் வரை அந்த வகுப்பில் தான் அவன் இருந்தானா என்று எல்லோரும் சந்தேகிக்கும் படி கேட்டான் அவன்..
அவனுடைய அந்தக் கேள்வியில் பொறுமை இழந்த மதியழகி அவனை முறைத்தப்படி “ஏன் இவ்வளவு நேரமா இங்க தான உட்கார்ந்து இருந்தீங்க? உங்களை நான் கேள்வி கேட்டேனா இல்லையான்னு கூட உங்களுக்கு தெரியலையா? அப்படி என்ன சார் பண்ணிட்டு இருந்தீங்க என் கேள்வி கூட காதுல கேட்காத அளவுக்கு?”
கையை குறுக்காக கட்டிக்கொண்டு அழுத்தமான குரலில் அவள் கேட்க அவளுடைய அந்த அழகான திமிரோடு கூடிய பாவனையை மறுபடியும் ரசிக்க தொடங்கினான் கள்வன் அவன்..
“இதுல என்ன டவுட்? உங்களையே தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. உங்க அழகை தான் ரசிச்சிட்டு இருக்கேன்.. அதனால தான் நீங்க கேட்டது எதுவுமே என் காதுல விழல..” தெளிவாக பதில் சொன்னான் இந்தர்..
மதியழகி கேட்ட கேள்விக்கு இந்தர் சொன்ன பதிலில் கொஞ்சம் தடுமாறித் தான் போனாள் மதியழகி..
ஆனால் சட்டென தன்னை தானே சுதாரித்துக் கொண்டு “இங்க என்ன ஃபேஷன் ஷோவா நடக்குது? நான் என்ன கேட் வாக்கா பண்ணிட்டு இருக்கேன் உங்க எல்லார் முன்னாடியும்? என்னை பார்த்து ரசிச்சிட்டு இருக்கீங்கன்னு சொல்றீங்க..? ரசிச்சு தான் ஆகணும்னா அதை கிளாசுக்கு வெளியில் பண்ணுங்க.. இந்த கிளாஸ்க்குள்ள பாடம் கவனிக்கிறது இருந்தா மட்டும் இருங்க.. அழகை ரசிக்கிறது தப்பில்ல.. ஆனா அது நம்ம செய்ய வேண்டிய கடமையை அஃபெக்ட் பண்ண கூடாது.. அழகை தான் ரசிக்கணும்னா அதுக்கு இந்த உலகத்துல நிறைய இடம் இருக்கு.. ஆனா இந்த இடம் அதுக்கு இல்ல.. ப்ளீஸ் லீவ் மை கிளாஸ் நவ்..”
மதி கோவமாய் கையை வகுப்புக்கு வெளிப்புறமாய் நீட்டி சொல்ல “கரெக்ட் தான்.. அழகை ரசிக்கறதுக்கு இந்த உலகத்துல எவ்வளவோ இடம் இருக்கு.. ஆனா எனக்கு உங்க அழகை மட்டும் தானே ரசிக்கணும்.. அதுக்கு இந்த கிளாசை விட்டா வேற இடம் என்ன இருக்கு? வேணும்னா நான் ஸ்டாஃப் ரூம் வந்து நாள் முழுக்க உங்க எதிர்ல உக்காந்து உங்களை பாத்துட்டு இருக்கட்டுமா? இல்ல உங்க வீட்டுக்கு வரட்டுமா?”
அவன் சொன்னதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவந்தது மதியழகிக்கு..
🎵🎶🎼ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே..
பல வருட பரிச்சயம் போலிருக்கும்..
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்..
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..
மரகத சோம்பல் முறிப்பாளே..
புல்வெளி போலே சிலிர்ப்பாளே..
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே..
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே..
அவள் கன்னத்தின் குழியில்…
சிறு செடிகளும் நடலாம்..
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்..
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்..
ஏதோ ஏதோ.. தனித்துவம்.. அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே..
மகரந்தம் தாங்கும் மலர்போலே..
தனி ஒரு வாசம் அவள்மேலே..
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்..
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்..
அவள் கடந்திடும்போது..
தலை அனிச்சையாய் திரும்பும்..
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்..
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள்புறமாய்..
என்ன சொல்ல.. என்ன சொல்ல..
இன்னும் சொல்ல.. மொழியினில் வழி இல்லையே..🎼🎶🎵
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 4
“எனக்கு உங்க அழகை மட்டும் தானே ரசிக்கணும்.. அதுக்கு இந்த கிளாசை விட்டா வேற இடம் என்ன இருக்கு? வேணும்னா நான் ஸ்டாஃப் ரூம் வந்து நாள் முழுக்க உங்க எதிர்ல உக்காந்து உங்களை பாத்துட்டு இருக்கட்டுமா? இல்ல உங்க வீட்டுக்கு வரட்டுமா?”
இந்தர் சொன்னதைக் கேட்டு கோபத்தில் முகம் சிவந்தது மதியழகிக்கு..
மற்ற மாணவர்களோ தங்களுக்குள் ரகசியமாய் கிசுகிசுவென பேசவும் சிரிக்கவும் தொடங்கினார்கள்..
“கிளாஸ்.. சைலன்ஸ்..” அவளின் அதட்டலான சத்தம் கேட்டு அப்படியே அந்த வகுப்பு மயான அமைதி கொண்டது..
“இ..ந்..த..ர்.. ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் அண்ட் கெட் அவுட் ஆப் திஸ் கிளாஸ் ரைட் நவ்..” கோவமாய் உச்சஸ்தாயியில் அவள் கத்த..
“ஓகே ஓகே.. டென்ஷன் ஆகாதீங்க.. ஆனா ஒரு விஷயம்.. நீங்க கோவப்பட்டாலும் ரொம்ப அழகா தான் இருக்கீங்க மதி..” கூலாக சொல்லிவிட்டு அந்த வகுப்பை விட்டு வெளியே நடையை கட்டினான் இந்தர்..
அவன் சென்ற பிறகு தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்ள கண்ணை மூடித் திறந்தவள் தனக்கு இருந்த கோபத்தை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.. சிறிது நிதானத்திற்கு வந்த பிறகு வகுப்பின் பக்கம் திரும்ப அங்கு இருந்த மற்ற மாணவர்களின் பார்வை மொத்தமாய் மாறி இருந்தது..
“ஓகே ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு நடந்தது இனிமே ரிப்பீட் ஆகாதுன்னு நினைக்கிறேன்.. ஐ டோன்ட் வான்ட் சச் அண்வான்டட் பிஹேவியர் இன் மை கிளாஸ்.. வேற யாரும் இந்த மாதிரி பிஹேவ் பண்ண மாட்டீங்கன்னு நான் நம்புறேன்..”
எப்போதும் மலர்ந்த முகத்துடனே பாடம் நடத்துபவள் இறுகிய முகத்தோடு அதற்கு மேல் பாடம் நடத்த முடியாமல் கொஞ்சம் திணறித்தான் போனாள்..
அதன் பிறகு மாணவர்களிடம் ஒரு கேள்வியை சொல்லி அதற்கு பதில் எழுத சொல்லிவிட்டு தலையில் கை வைத்து இருக்கையில் அமர்ந்து விட்டாள் மதியழகி..
சற்று நேரத்தில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஜன்னல் வழியாய் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இந்தரின் முகம் மேலும் எரிச்சல் ஊட்டியது..
“ஐயோ.. இவனை..” பல்லை கடித்தவளை அவனோ புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான்..
அவன் அப்படி சிரிப்பதை பார்க்கும்போது அவனுடைய வெள்ளந்தியான முகம் கோபிகைகளை சீண்டும் கண்ணனை போல தான் இருந்தது.. அவனை ரொம்பவும் கோபிக்க கூட முடியவில்லை அவளால்.. ஏனோ அவனைப் பார்க்கும்போது அடம்பிடிக்கும் சிறு குழந்தை போல தான் தோன்றினான் அவளுக்கு..
அந்த வகுப்பிற்கான நேரம் முடிந்துவிட “ஓகே ஸ்டுடென்ட்ஸ்.. நாளைக்கு வந்து உங்க அன்சர்ஸ் எல்லாம் செக் பண்றேன்.. சீ யூ” என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு வெளியே சென்றாள்..
அந்த வகுப்பை விட்டு வெளியே வந்து எதிர் பக்கத்தில் இருக்கும் ஸ்டாஃப் ரூமுக்கு போக வெட்டவெளி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தாள் மதி.. தனக்கு பின்னால் யாரோ தன்னை தொடரும் காலடி ஓசை கேட்கவும் சட்டென திரும்பி பார்த்தவள் அங்கேயும் இந்தர் அவளை பின்தொடர்ந்து நடந்து வருவதை பார்த்து இன்னும் எரிச்சல் கொண்டாள்..
“இப்ப எதுக்கு இந்தர் என் பின்னாடியே வந்துகிட்டு இருக்க.. போ.. உனக்கு அடுத்த கிளாஸ் ஆரம்பிச்சிருக்கும்..”
அவள் சொன்னது எதுவுமே தன் காதில் விழாதது போல அவன் நின்றிருக்க “இப்ப போறியா இல்லையா இந்தர்?” குரலை உயர்த்தி கேட்டாள் அவள்..
“நான் எதுக்கு கிளாஸ்க்கு போகணும்? நீங்க தானே சொன்னீங்க.. அழகை கிளாஸ்க்கு வெளியில ரசிக்கலாம்ன்னு.. அதான் ரசிக்க வந்து இருக்கேன்..”
அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி சொன்னவனை முறைத்தவள் “இங்க பாரு.. உனக்கு இதெல்லாம் விளையாட்டு போல இருக்கலாம்.. நீ ஒரு ஸ்டுடன்ட்.. உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு இதெல்லாம் விளையாட்டில்ல.. நான் செய்யற வேலை எனக்கு என் உயிருக்கு சமம்.. இந்த புனிதமான டீச்சிங் ப்ரொஃபஷன்ல ஏதாவது தப்பு நடந்து என் மேல ஒரு சின்ன பிளாக் மார்க் வந்ததுன்னா கூட அதை என்னால தாங்கிக்க முடியாது.. நீ இப்ப விளையாட்டா பண்றது எல்லாம் அப்படி ஒரு நிலைமையில தான் என்னை கொண்டு போய் நிறுத்தும்.. அப்படியே ஏதாவது நடந்ததுன்னா அது என் உயிரே போகிறத்துக்கு சமம்.. நீ என்னை அழகா இருக்கேன்னு சொல்றதுக்காகவோ இல்ல என் அழகை ரசிக்கிறேன்னு சொல்றதுக்குக்காகவோ அப்படியே சந்தோஷப்பட்டு துள்ளி குதிக்கறதுக்கு நான் ஒன்னும் டீன் ஏஜ் பொண்ணு கிடையாது.. எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ இந்தர்.. ப்ளீஸ்.. பிஹேவ் யுவர் செல்ஃப்..”
அவள் அவனுக்கு புரியுமாறு மெதுவாக எடுத்துச் சொன்னாள்.. அவனோ அடம் பிடிக்கும் சிறு பிள்ளையாய் “நான் என்ன தப்பா பிஹேவ் பண்ணிட்டேன்..? நீங்க அழகா இருக்கீங்க.. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. அதைதான் நான் சொன்னேன்.. இதுல என்ன தப்பு இருக்கு? இன் ஃபேக்ட் ஐ லவ் யூ.. எங்க அம்மாக்கு அப்புறம் நான் ரொம்ப நேசிக்கிற பொண்ணு.. என் மனசு முழுக்க நிறைஞ்சிருக்கற பொண்ணு.. நீங்க தான்.. சோ.. எனக்கு டவுட்டே இல்லை.. ஐ லவ் யூ மதி..”
மற்ற மாணவர்களை போல் மதி மேம் என்று கூட சொல்லாமல் நேரடியாக ஏதோ அவனோடு பழகும் விடலை பெண்களிடம் சொல்வது போல் ஐ லவ் யூ மதி என்று கூலாக சொன்னவனை ஓங்கி அறைந்திருந்தாள் மதி..
“இந்தர் தட்ஸ் தி லிமிட்.. உன்னை விட நான் எட்டு வயசு பெரியவ.. உன்னால எப்படி என்னை பத்தி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது? உனக்கு கடவுள் அறிவுன்னு ஒன்னை வைக்கவே இல்லையா? இங்க பாரு.. நீ விளையாடுறதுக்கு நான் ஆள் இல்ல.. இந்த பிராங்க் பண்றது எல்லாம் வேற யார்கிட்டயாவது போய் வச்சுக்கோ.. எனக்கு நிறைய வேலை இருக்கு..”
அவளால் இன்னும் கூட அவன் உண்மையைத் தான் சொல்கிறான் என்று நம்ப முடியவில்லை.. அவளை பொறுத்தவரை படிக்க விருப்பம் இல்லாததால் ஏதோ வயது கோளாறினால் தன்னோடு வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறான் என்று நினைத்தாள் அவள்..
விடு விடு என அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நடந்தவள் பின்னாலேயே “மதி.. மதி,.. நில்லு.. ப்ளீஸ்..” என்றவனை நம்ப முடியாமல் திரும்பி பார்த்தாள் அவள்..
“இந்தர் கால் மீ மேம்… என்னை பேர் சொல்லி கூப்பிடாதே..”
இறுகிய குரலில் அவள் மிரட்டலாய் சொல்ல அவனோ அதற்கு சிறிதும் அசைந்து கொடுக்காமல் முற்றிலுமாய் அவள் சொன்னதை அலட்சியப்படுத்திவிட்டு “மதி.. நான் உன்னை லவ் பண்றேன்.. இதுல என்ன தப்பு இருக்கு? என்னால உன்னை மேம்னு எல்லாம் கூப்பிட முடியாது.. ஒரு 20 வயசு பொண்ணு 28 வயசு பையனை கல்யாணம் பண்ணிக்கலாம்னா ஏன் ஒரு 20 வயசு பையன் ஒரு 28 வயசு பொண்ணு கிட்ட பிரபோஸ் பண்ண கூடாது..? அதுல என்ன தப்பு இருக்கு? நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன்.. எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா அது நீதான்.. உன்னால மட்டும் தான் எங்க அம்மா கொடுத்த மாதிரி ஒரு அன்பை எனக்கு கொடுக்க முடியும்.. உன்னை எப்படியும் நான் கல்யாணம் பண்ணியே தீருவேன்”
“உன்னை பெத்த அந்த அம்மாவையும் உங்க அப்பாவையும் கட்டாயம் நான் பார்க்கணும்.. இந்த மாதிரி ஒரு வரைமுறையே இல்லாம ஒரு க்ளாஸ் ரூம்ல எப்படி நடக்கணும்.. ஒரு குருவை எப்படி பார்க்கணும்னு கூட தெரியாத ஒரு பிள்ளையை பெத்த அந்த அதிசயமானவங்களை… நான் பார்த்து தான் ஆகணும்..”
“எங்க அம்மா அப்பா எல்லாம் நல்லவங்க தான்.. ஆனா அவங்க இப்போ உயிரோட இல்ல..”
“நெனச்சேன்.. அவங்க உயிரோட இருந்திருந்தா நீ இப்படி இருந்திருக்க மாட்ட.. கேக்க ஆளே இல்லாம இருக்கறதனால தான் நீ இப்படி உன் இஷ்டத்துக்கு எது தப்பு எது சரின்னு தெரியாம நடந்துக்குற.. நீ தப்பு பண்ணும்போது உன் மண்டைல ஓங்கி ஒரு அடி போட்டு உன்னை வழி நடத்துற ஆளு ஒருத்தர் வீட்ல இருந்திருந்தா நீ இந்த மாதிரி இருக்க மாட்டே.. சரி.. அப்பலருந்து நான் லவ் பண்றேன்.. நான் லவ் பண்றேன்னு சொல்றியே.. நீ லவ் பண்ணா போதுமா? எனக்கு புருஷனா வர்றவனுக்கு என்னை விட ஒரு வயசாவது அதிகமா இருக்கணும்கிறது என்னோட விருப்பம்.. என்னை கல்யாணம் பண்ணியே தீருவேன்கிற.. எனக்கு அதுல விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்காம அதை எப்படி நீயே முடிவு பண்ணுவ? ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நீ மட்டும் விரும்பினா போதுமா? அவ விருப்பம் அவசியம் இல்லையா? “
அவனை தீர்க்கமாய் பார்த்து அவள் கேட்க அவனோ விடா கொண்டனாய் “தேவை இல்லை.. கல்யாணம் பண்ணி ஒரு ரெண்டு மாசம் என்னோட இருந்தனாலே உனக்கு என்னை ரொம்ப பிடிச்சு போயிரும்.. அப்புறம் நீயும் என்னை உன் புருஷனா பார்க்க ஆரம்பிச்சுடுவே.. அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை.. அப்புறம் நீ சொல்ற மாதிரி கேக்கறதுக்கு ஆள் யாருமே இல்லாம இங்க யாரும் திரிஞ்சுகிட்டு இல்ல.. எங்க வீட்ல எங்க அண்ணன் இருக்காரு.. அவரு என்னை பாசமா பார்த்துக்கிறாரு.. நமக்கு கல்யாணம் நடந்த அப்புறம் நீ அந்த வீட்டுக்கு வருவ இல்லை..? அப்ப நீயே அவரை பத்தி தெரிஞ்சுப்ப.. ஆமா.. நான் இப்ப என்ன தப்பு பண்ணிட்டேன்னு இவ்ளோ கோவப்படுற..? லவ் பண்றது தப்பா?”
“இல்ல.. லவ் பண்றது தப்பே இல்ல.. ஆனா நீ இப்ப பண்ணிட்டு இருக்கியே.. அது லவ் இல்ல.. அது வெறும் ஒரு அட்ராக்சன்.. ஒரு இன்ஃபேக்ஷூவேஷன்.. உன்னோட ஒரு பிடிவாதம்.. அவ்வளவுதான்.. என்னால அதை எந்த காலத்திலயும் என்டர்டைன் பண்ண முடியாது.. உங்க அண்ணன் உன்னை இப்படி அலைய விட்டுட்டு என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காரு..? இதுதான் அவர் உன்னை பாசமா பாத்துக்குற லட்சணமா? மே பி என்னோட பாடி லாங்குவேஜ்.. நான் எல்லாரோடயும் பழகுற விதம்.. பேசுற விதம்.. இதெல்லாமே உங்க அம்மா மாதிரியே இருக்கலாம்.. அதனால உனக்கு என்னை புடிச்சு போய் இருக்கலாம்.. ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.. மொதல்ல நீ இந்த காலேஜ்ல என்ன பண்ற? ஏது பண்ற? எதையாவது கவனிக்கிறாரா உங்க நொண்ணன்.. அண்ணனாம் அண்ணன்.. உனக்கு ஒரு கிளாஸ் தான் நான் எடுக்கிறேன்.. ஆனா இங்க இருக்கிற அத்தனை ஸ்டாஃப்பும் உன்னை பத்தி கம்ப்ளெயின்ட் மேல கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. நீ எந்த கிளாஸும் அட்டென்ட் பண்றது இல்ல.. என் கிளாஸ் மட்டும் தான் அட்டென்ட் பண்ற.. மத்த கிளாஸ்ல எல்லாம் அட்டெண்டன்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. இதை எல்லாம் கவனிக்காம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்குறாரு உங்க அண்ணன்.. அவரை வேற பாசமான அண்ணன்னு நீ புகழாரம் வேற பாடிகிட்டு இருக்கே.. இந்த மாதிரி ஒரு அண்ணன் இருக்கிறதுக்கு பேசாம இல்லாமயே இருந்திருக்கலாம்.. நீ கொஞ்சம் உருப்புட்டிருப்பியோ என்னமோ?”
அவ்வளவுதான் எங்கிருந்து தான் அவனுக்கு அவ்வளவு கோவம் வந்ததோ தெரியவில்லை.. மதியின் முன்னால் ஒற்றை விரலை நீட்டி “ஏய்..” என்று கர்ஜித்தவன் “எங்க அண்ணனை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசினே.. நடக்கிறதே வேற.. அவரு எனக்கு தெய்வம்.. அவரை பத்தி தப்பா பேசாத.. அதுக்கப்புறம் நீ என்னோட லவ்வர்ன்னு கூட பார்க்க மாட்டேன்..” கோவமாய் சீறினான் அவன்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 5
இந்தர் மேலும் மேலும் அவளை லவ்வர் என்று சொல்லி பேசிக் கொண்டே போக மதியோ அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் தளர்ந்து போனாள்..
“இன்காரிஜிபிள் யூ ஆர்..”( திருத்த முடியாதவன் நீ) என்று அவனை திட்டி விட்டு விடு விடு என தன் ஸ்டாஃப் ரூமுக்கு நடந்து சென்று விட்டாள்..
ஸ்டாஃப் ரூமுக்கு போய் தனக்கென இருந்த மேஜையில் தலையை கவிழ்த்து அமர்ந்தபடியே படுத்தாள்..
அப்போது அவளைப் போலவே அந்த கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் சேகர் அவள் அருகில் வந்து மேஜையை லேசாக தட்ட நிமிர்ந்து பார்த்தாள்..
“ஹலோ சேகர் சார்.. சொல்லுங்க..”
எப்போதும் அவளிடம் காணப்படும் உற்சாகம் குரலில் இல்லாமல் போயிருக்க அவள் மிகவும் சோர்ந்து போய் இருப்பதை பார்த்த சேகர் “என்ன ஆச்சு..? ஏன் இப்படி இருக்கீங்க மதி மேம்.. ஏதாவது பிரச்சனையா? வீட்லயா? காலேஜ்லயா? சொல்ல இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்.. ஆனா என்கிட்ட சொல்லக்கூடிய பிரச்சனைனா சொல்லுங்க.. ஏதாவது செஞ்சு சால்வ் பண்ண முடியுமான்னு பார்க்கலாம்..”
இந்த சேகர் 90களில் பிறந்து இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் 30 வயதுக்கு மேல் ஆன பேரிளைஞன்.. அழகு அறிவு பண்பு என சகல குணங்களும் நிறைந்திருந்த மதியழகியை தன் வாழ்க்கை துணையாய் பெற்றால் தான் இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த அதிர்ஷ்டக்காரன் ஆகிவிடுவோம் என்று நினைப்பவர்களில் இவனும் ஒருவன்..
அவன் சொன்னதைக் கேட்டு மதி அழகி சிறிது தயக்கத்துடனே அன்று நிகழ்ந்தது முழுவதையும் அவனிடம் சொன்னாள்..
“இதான் பிராப்ளமா? இது ரொம்ப சிம்பிள்.. டீனேஜ் முடிஞ்சு இப்பதான் அடல்ட் ஹூட்க்கு உள்ள காலடி எடுத்து வைக்கிற இந்த மாதிரி விடலை பசங்க எல்லாம் இப்படி நடந்துக்கறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. பேசாம நாளைக்கு அவன் மறுபடியும் இதே மாதிரி நடந்துக்கிட்டானா நான் சொல்ற மாதிரி சொல்லுங்க.. எல்லாம் சரியாயிடும்..” என்று சிறந்த யோசனை என நினைத்து ஒரு யோசனையை சொன்னான் அவன்..
அந்த யோசனை அவள் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை எல்லாம் நிகழ்த்தப் போகிறது என்று தெரியாமல் அவளும் “ட்ரை பண்ணி பார்க்குறேன் சார்..” என்றாள்..
ஆனா எனக்கு என்னவோ இது வொர்க் அவுட் ஆகும்னு தோணல.. அவன் கொஞ்சம்..” என்று நிறுத்தியவள் ஒரு பெருமூச்சை விட்டு “கொஞ்சம் இல்ல.. ரொம்பவே பிடிக்காதகாரனா இருக்கான்.. நான் நிறைய பேசி பாத்துட்டேன்.. எனக்கு என்னவோ அவன் அவ்வளவு லேசுல புரிஞ்சுப்பான்னு தோணல.. சரி சார்.. எனக்கு அடுத்த கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு.. பிரேக் டைம் முடிஞ்சிடுச்சு.. நான் அந்த கிளாசுக்கு போறேன்..” என்றவள் சோர்ந்த முகத்துடனேயே அடுத்த வகுப்புக்கு சென்றாள்..
“இந்த மேட்டரை வச்சே இவளை நம்ம லைஃப் பார்ட்னர் ஆக்கிக்க வேண்டியதுதான்..” இப்படி எண்ணமிட்டு கொண்டே போகும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்..
####################
வீட்டு வாசலில் தன்னுடைய ஸ்கூட்டி பெப்பை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த மலரழகியை பார்த்த அவளுடைய தந்தை “அம்மா மலரு..? என்ன இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்ட போல? காலேஜ்ல சீக்கிரம் விட்டுட்டாங்களா?”
“இல்லப்பா.. அது.. அப்பா.. நான் ஒன்னு சொல்றேன்.. ஆனா எனக்கு நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும்.. அக்கா கிட்ட அதை சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணீங்கன்னா சொல்றேன்..” என்றவளை முறைப்பாய் சந்தேக பார்வை பார்த்தவர் “என்ன..? நீ ஏதாவது தில்லு முல்லு செஞ்சிருந்தா தானே இந்த மாதிரி ப்ராமிஸ் கேப்ப.. என்ன செஞ்சுட்டு வந்த இன்னைக்கு? முதல்ல உங்க அக்காக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அதை ஏன் செஞ்ச?”
அவர் சரியாய் அவள் நாடி பிடித்து கேட்க தலையை குனிந்து கொண்டு தன் கைவிரல்களை அளைந்தபடி “அது.. ரொம்ப ஆசையா இருந்துச்சு பா.. அதான் போயிட்டேன்.. எங்க காலேஜ் பக்கத்துல இன்னிக்கி ஒரு சினிமா ஷூட்டிங் நடந்தது பா.. எனக்கு ரொம்ப நாளா சினிமா பட சூட்டிங் பார்க்கணும்னு ரொம்ப ஆசை பா.. புது பட ஷூட்டிங் பா அது.. ஃப்ரெண்ட்ஸூம் ஃபோர்ஸ் பண்ணாங்கப்பா.. அதான்.. ஆசையில கிளாஸ் கட் அடிச்சிட்டு அங்க போயிட்டேன்ப்பா.. என் ஃபிரெண்ட்ஸ் கூட போயிருந்தேன் இல்ல? நான் அங்க அந்த ஷூட்டிங் முடிஞ்சு திரும்பி காலேஜ்க்கு வரலாம்னு தான் நினைச்சேன்.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து படத்துக்கு போலாம்னு சொன்னாங்க.. அதான் ஒரு படத்துக்கும் போயிட்டு வந்தோம்பா..”
காலையில் அந்த படப்பிடிப்பு முடிந்து தீரன் அங்கிருந்து சென்றவுடன் தன் நண்பிகளுடன் சேர்ந்து ஏதோ ஒரு ஹீரோவுக்கு டூப்பாய் அவன் சண்டை சாகசம் செய்திருந்த ஒரு படத்திற்கு எல்லோரையும் கிளப்பிக் கொண்டு போய் விட்டு வந்தவள் தன் தந்தையிடம் இப்படி ஒரு கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்..
“ஏன் மா.. உங்க அக்கா உன்னை படிக்க வைக்க எவ்வளவு பாடுபட்டுட்டு இருக்கா.. நான் ஒரு நல்ல கம்பெனியில் மேனேஜரா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.. நான் அந்த வேலையிலேயே இருந்திருந்தா நீ எப்படி இருந்தாலும் படிப்பை முடிச்சு நீ ஒரு டாக்டரா ஆனா போதும்னு நானும் விட்டு இருப்பேன்.. ஆனா நம்ம விதி.. அந்த கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க.. எனக்கும் 50 வயசுக்கு மேல ஆயிட்டதனால நல்ல வேலை எதுவும் கிடைக்கலயேடா தங்கம்.. இப்ப பிரைவேட்டா ஒரு கம்பெனியில சூப்பர்வைசரா சொற்ப சம்பளத்துக்கு ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்.. உங்க அக்கா அந்த இன்ஜினியரிங் காலேஜ்ல நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை செஞ்சு சம்பாதிக்கிறா.. அவ சம்பாதிக்கறதுனால தான் ஒன்னை டாக்டருக்கு படிக்க வைக்க முடியுது.. அவ இப்படி உன்னோட ஃப்யூச்சர பத்தி நெனச்சு மாடா உழைச்சிட்டு இருக்கா.. இப்படி இருக்கும் போது நீ உன் முழு கவனத்தை படிப்புல வச்சு ஒழுங்கா படிக்க வேண்டாமா டா தங்கம்? உங்க அக்கா உன்னை பத்தி நிறைய கனவு கண்டுக்கிட்டு இருக்கா.. அதான் ஒவ்வொரு நாளும் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம பாடு பட்டுக்கிட்டு இருக்கா.. எந்த காரணத்துக்காகவும் அவ கனவை பொய்யாக்கிடாதடா..”
அவர் கவலையோடு தன் சின்ன மகளுக்கு அறிவுரை சொல்ல “அப்பா.. ஒரே ஒரு நாள் ஒரு சினிமாக்கு போனதுக்காக ஏம்பா இவ்வளவு ஃபீல் பண்றீங்க? எனக்கு தெரியாதாப்பா அக்கா எவ்வளவு கஷ்டப்படறான்னு.. நான் நல்லா தான் பா படிக்கிறேன்.. இப்பவே நான்தான் பா க்ளாஸ் டாப்பர்.. இன்னிக்கி நான் வெளியில் வந்தப்போ என் ஃபிரண்ட்ஸே நீ கிளாசே கட் பண்ண மாட்டியே.. இன்னிக்கு எப்படி கட் பண்ணன்னு சொல்லி ஆச்சரியமா கேட்டாங்கன்னா பார்த்துக்கங்க.. எனக்கும் பொறுப்பு இருக்குப்பா.. எல்லாத்துக்கும் மேல ஒரு நல்ல டாக்டராகி என் அக்காக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கணும்னு மனசு நிறைய ஆசை இருக்கு.. எதோ இன்னைக்கு தோணுச்சு பா.. போய்ட்டேன்.. இனிமே போக மாட்டேன்.. நீங்க அக்கா கிட்ட சொல்லாதீங்க பா..”
அவள் கெஞ்சி அவர் நாடியில் கை வைத்து கொஞ்சி கொஞ்சி கேட்க ஆசை மகள் அப்படி கேட்கும் போது எந்த தந்தையால் மறுக்க முடியும்..?
“சரி.. நான் சொல்லல.. ஆனா உங்க அக்காவே கண்டுபிடிச்சிட்டான்னா நான் பொறுப்பில்லை.. உன் திருட்டு முழியை வச்சி அவ நிச்சயமா கண்டுபிடிச்சுடுவா..” சிரித்தபடி அவர் சொல்ல முகத்தை குழந்தை போல உம் என்று வைத்துக் கொண்டு “போங்கப்பா.. அதெல்லாம் நான் அவளை கண்டு பிடிக்க விட மாட்டேன்.. எப்படி சமாளிக்கிறன்னு பாருங்க..” என்றாள் இல்லாத காலரை தூக்கி விட்டபடி..
“ஆனா அக்காக்கு சாயங்காலம் நாலு மணிக்கு எல்லாம் காலேஜ் முடிஞ்சிடுது.. பஸ் ஏறி டிராஃபிக்ல வீட்டுக்கு அஞ்சு மணிக்கு வரா.. அப்புறம் நம்மளுக்கு காஃபி டிஃபன் கொடுத்துட்டு நைட்டுக்கு டின்னர் ரெடி பண்ணி வெச்சிட்டு அவளும் டிஃபன் எடுத்துட்டு மறுபடியும் அவசரமா அரக்கபறக்க 6:00 மணிக்கு கிளம்பி எங்கயோ போறா.. கேட்டா எங்க போறேன்னு கூட சொல்ல மாட்டேங்குறா.. அதுக்கப்புறம் நான் தூங்கின அப்புறம் தான் வீட்டுக்கு வர்றா.. அப்படி எங்க தான் போறா பா அக்கா?”
“அது எனக்கும் சரியா தெரியல டா.. ஏதாவது கேட்டா ஏதோ தன்னோட திறமையை வளர்த்துக்கறதுக்காக ஈவ்னிங் காலேஜ் நடக்குற கிளாசுக்கு போறேன்னு சொல்றா.. நானும் மாத்திரை போடுறதனால சீக்கிரம் தூங்கி போயிடறேன்.. அவ எப்ப வீட்டுக்கு வர்றான்னே எனக்கு தெரிய மாட்டேங்குது..”
“ஆமாம்பா.. ஒரு நாள் நான் கஷ்டப்பட்டு 11 மணி வரைக்கும் முழிச்சிட்டு இருந்தேன்பா.. அன்னிக்கு கூட அக்கா 11:00 மணி வரைக்கும் வரவே இல்ல பா.. அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்.. ஏன்னா அடுத்த நாள் எனக்கு முக்கியமான எக்ஸாம் இருந்தது.. ஆனா பாவம் பா அக்கா.. நமக்காக கஷ்டப்பட்டு வேலையும் பார்த்துட்டு அப்புறம் அவசிய வாழ்த்துக்கள் எங்கேயோ போய் படிச்சிட்டு ரொம்ப லேட்டா தான் படுக்குறா.. எவ்ளோ டயர்டா இருக்கா தெரியுமா? காலையில் எழுந்திருக்கிறதுக்கு கூட ரொம்ப கஷ்டப்படுறா.. ஆனாலும் அஞ்சு மணிக்கு எழுந்து பரபரன்னு என்னையும் கிளப்பி அவளும் கிளம்பி.. பாவம் பா அக்கா..”
“என்னமா செய்ய..? அவ பிடிவாதம் அப்படி.. நம்ம ரெண்டு பேரையும் எந்த வேலையும் செய்யவும் விட மாட்டேங்குறா.. ஏதாவது கேட்டா எனக்கு வயசு ஆயிடுச்சுங்கறா..”
“ஆமாம்பா.. உங்களுக்கு தான் வயசாயிடுச்சு.. நான் செய்யலாம் இல்ல..? ஏதோ ஒரு நாள் சமையல் செய்றேன்னு கைய சுட்டுக்கிட்டேன்.. அதிலிருந்து சமையல் ரூம் பக்கமே நீ வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி அவ இல்லாதப்போ நம்ம எங்கேயாவது வேலை செய்ய போறோன்னு சமையல் ரூம் கதவை பூட்டிவிட்டு கீயை கையோட எடுத்துட்டு போயிடறா.. இதெல்லாம் ரொம்ப டூ மச் பா..”
“அவ அப்படி தான்டா.. அவளை மாத்த முடியாது.. சரி நீ போய் ஃபிரஷ் ஆயிட்டு வா.. அதுக்குள்ள அக்காவும் வந்துருவா.. எல்லாரும் ஒண்ணா டிஃபன் காஃபி சாப்பிடலாம்..”
உள்ளே சென்றவள் அடுத்த அரை மணி நேரத்தில் வரவேற்பறைக்கு வர அதற்குள் மதியழகி கல்லூரியில் இருந்து வந்திருந்தாள்..
தங்கைக்கு வசதியாய் கல்லூரி சென்றுவர ஸ்கூட்டி பெப் ப்ளஸ் வாங்கி கொடுத்திருந்தவள் தான் எப்போதும் பேருந்திலேயே பயணம் செய்திருந்தாள் எல்லா இடத்திற்கும்.. தனக்காக தன் வசதிக்காக கூட மிகையாக ஒரு செலவும் செய்து கொள்ள அவள் மனம் ஒப்பாது.. தன்னுடைய உழைப்பு.. அன்பு.. தான் ஈட்டும் பொருள்.. எல்லாமே தன் தந்தைக்கும் தங்கைக்கும் உரியது என்றே நினைத்திருந்தாள் அவள்..
அதனால்தான் இதுநாள் வரை தன் திருமணம் என்ற ஒன்றைப் பற்றி அவள் யோசித்தது கூட கிடையாது.. அவளுடைய தந்தை தமிழ்வாணன் அதைப்பற்றி பேச்சு எடுத்தால் ஏதேதோ பேசி அந்த பேச்சை மாற்றி விடுவாள் அவள்..
சமையலறையில் அவள் மணக்க மணக்க ஏதோ சிற்றுண்டி செய்யும் வாசம் வரவும் ஓடிச்சென்று அவளை தோலை கட்டிக் கொண்ட மலரழகி “என்னக்கா பண்ற இன்ட்ரஸ்டிங்கா.?” என்று வாசம் பிடித்துக் கொண்டே கேட்டாள்..
“என் தங்கத்துக்கு பிடிக்கும்ன்னு பணியாரம் பண்ணிட்டு இருக்கேன்.. ஆமா இன்னைக்கு காலேஜ்ல நீ என்ன பண்ண?”
அவள் கேட்டது தான் உடனேயே மலரழகி உளற ஆரம்பித்து இருந்தாள்.. “அதுவா.. அது.. அ..து.. காலையில காலேஜுக்கு போனேனா.. பேனேனா.. அதுக்கு அப்புறம் முதல்ல ஃபிசியாலஜி கிளாஸ் இருந்ததா? அதுக்கப்புறம் .. அதுக்கப்பறம்.. ஐயோ அக்கா.. அதை விடு.. நீ சமைச்சாலே வாசனை தெரு வரைக்கும் வருது கா.. உன் கையில அப்படி என்ன மாய மந்திரம் இருக்குன்னு தெரியல என்று பேச்சை மாற்ற அந்த ஒரு உளறலிலேயே அவளின் திருட்டு தனத்தை கண்டு பிடித்தாள் மதி..
“அழகி.. இன்னைக்கு என்ன சேட்டை பண்ண? ஒழுங்கா சொல்லு.” மதி மிரட்டலாக கேட்டாள்..
லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 6
“அழகி.. இன்னைக்கு என்ன சேட்டை பண்ண? ஒழுங்கா சொல்லு.” மதி மிரட்டலாக கேட்க அதற்கு மேல் அவளிடம் உண்மையை மறைக்க முடியாது “அது வந்துக்கா.. எங்க காலேஜ் பக்கத்துல ஒரு ஷூட்டிங் நடந்தது.. சினிமா சூட்டிங் கா.. அதுக்கு கட் அடிச்சுட்டு..”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை மதியழகி ஏகத்துக்கு முறைக்க “சாரிக்கா.. இன்னிக்கு ஒரு நாள் தான்.. நாளைலருந்து ஒழுங்கா காலேஜ் போயிடுவேன்.. அப்படியே என்னோட ஃபேவரிட் ஆக்டர் மூவிக்கும் போயிட்டு வந்தேன்.. இனிமே போகமாட்டேன் கா..”
“இங்க பாரு அழகி.. நீ சூட்டிங் பார்க்க போறது பத்தியோ சினிமாக்கு போறதை பத்தியோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா காலேஜ் கட் அடிச்சிட்டு போகாத டா.. எதுவா இருந்தாலும் லீவு நாள்ல போ.. வீக் என்ட் ஃபுல்லா நீ எங்க போனாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன்.. ஆனா காலேஜ் கட் அடிக்கிறது.. எக்ஸாம்க்கு படிக்காம போறது.. இதெல்லாம் நீ பண்ணாத தங்கம்.. ஏன்னா உன் அக்கா ஒரு காலேஜ் ப்ரொஃபசர்.. நான் மத்த பிள்ளைகளுக்கு எப்படி எப்படி நடக்கணும்னு சொல்லி தர்றவ.. என் தங்கை நீயே இப்படி நடந்துக்கிட்டா அப்புறம் எல்லாரும் என்னை எப்படி மதிப்பாங்க சொல்லு..”
அவள் அமைதியாய் அன்பாய் அதே சமயம் உறுதியான குரலில் கேட்க “சாரிக்கா..” என்று இரண்டு காதுகளையும் பிடித்து மன்னிப்பு கேட்ட மலரழகி “இனிமே நிச்சயமா இந்த மாதிரி பண்ண மாட்டேன்.. மதர் பிராமிஸ்.. சாரி.. சாரி.. அக்கா ப்ராமிஸ்.. நான் இந்த மாதிரி பண்ணவே மாட்டேன்..” என்றவளின் தலையை வாஞ்சையாய் வருடிவிட்ட மதியழகி “சரி.. பணியாரம் ரெடி ஆயிடுச்சு.. நீயும் சாப்பிட்டு அப்பாக்கு குடு.. நான் கிளாசுக்கு கிளம்பனும்..” என்றவள் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வர அதே சமயம் மலர் அழகியை பார்த்து தமிழ்வாணன் கிண்டலாய் சிரித்து கொண்டிருந்தார்..
“நீயே உன் வாயால மாட்டிக்கிட்டியா?” அவர் கேலியாய் கேட்க அவரைப் பார்த்து முகத்தை வெட்டி விட்டு “அப்படியே உங்களுக்கு குளுகுளுன்னு இருக்குமே” என்று விட்டு பணியாரத்தோடு வரவேற்பறையில் சென்று அமர்ந்து கொண்டாள் கோபமாக.. ஆனாலும் பணியாரம் மட்டும் அதன் பாட்டுக்கு அவள் வாய்க்குள் போய்க்கொண்டிருந்தது..
அவளைப் பார்த்து சத்தமாய் சிரித்த தமிழ்வாணன் மதி பக்கம் திரும்பி “இன்னும் இவ குழந்தையாவே இருக்கா டா.. ஏன்மா மதி.. அது என்ன..? நாங்க எல்லாம் அவளை மலரு மலருன்னு கூப்பிடறோம்.. நீ மட்டும் அவளை அழகினு கூப்பிடுறே..?”
“என்னை பொறுத்த வரைக்கும் அவ அழகி தான் பா.. அவ மட்டும் தான் அழகி.. இந்த உலகத்திலேயே.. அதனால நான் எப்பவும் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன்.. அப்புறம் அப்பா.. நைட்டுக்கு சப்பாத்தி குருமா பண்ணி வெச்சிருக்கேன்.. மிச்சம் வைக்காம சாப்பிடணும்.. எனக்கு நான் கையில எடுத்துட்டு போறேன் சரியா?” அரக்க பறக்க தன்னரைக்குச் சென்று வேகமாய் உடை மாற்றிக் கொண்டு தங்கையிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டாள் மதி..
அவள் பகலில் கல்லூரி வேலையை முடித்துவிட்டு மாலையில் ஒரு கால் சென்டரில் இரவு 12 மணி வரை வேலை செய்கிறாள்.. வீட்டில் தன் தந்தையிடமும் தங்கையிடமும் இதைச் சொன்னால் அவர்கள் அவளை போக வேண்டாம் என்று தடுத்து மரிப்பார்கள் என்று தான் ஏதோ ஒரு வகுப்புக்கு செல்வதாக சொல்லி சென்றாள்..
அவள் தன் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஏதோ வகுப்பு செல்வதாய் சொல்லவும் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் தமிழ்வாணன் அவள் அந்த வகுப்பில் சேர்வதற்கு சம்மதம் கொடுத்திருந்தார்.. அவள் வேலைக்கு போவது தெரிந்தால் அவர் தன்னால் தன் மகள்களுக்கு சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்படுவார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. அதனால் தான் வேலைக்கு போவது அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தாள் அவள்..
தன் கம்பெனியை இழுத்து மூடியதிலிருந்து உடலாலும் மனதாலும் நொடிந்து போயிருந்தார் அவளின் தந்தை.. தாய் இறந்த பிறகு தன் குடும்பத்தை அப்படியே விட முடியாமல் அந்த பாரத்தை தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று முழுதாய் நம்பியவள் அதை மனமுவந்து சுமக்க தயாரானள்.. அவளைப் பொறுத்தவரை அவளுடைய தங்கை அவளுடைய பெறாத மகள் தான்.. அவளுக்காக எந்த சுமையையும் இன்முகத்தோடு தாங்குவதற்கு தயாராகத்தான் இருந்தாள் அவள்..
அவள் தந்தைக்கும் தங்கைக்கும் தான் அவள் மாலையில் வேலைக்குப் போகும் விஷயம் தெரியாமல் இருந்ததே தவிர எப்போதும் அவள் நினைவு உடனே இருக்கும் ஒருவனுக்கு அவள் மாலையில் வேலைக்குப் போகும் விஷயம் நன்கு தெரிந்தே இருந்தது.. சரியாக அவள் அந்த கால் சென்டர் கம்பெனிக்கு வாயிலில் வந்து நுழையும் நேரம் அந்த கட்டிடத்தின் எதிரில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் வாசலில் நின்று அவளை கவனிப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்தான் இந்தர்..
வேலை முடித்து 12 மணிக்கு அவள் வெளியில் வரும் வரை அங்கேயே காவலுக்கு நின்று கம்பெனி கேபில் ஏறி அவள் வீட்டுக்கு செல்லும் வரை அவளை தன் வண்டியில் பின் தொடர்ந்து வந்து அவள் வீட்டுக்குள் சென்ற பிறகுதான் தன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தான் அவன்..
மதியழகியை சந்தித்த இரண்டாவது நாளிலிருந்து அவளின் வீடு.. கல்லூரியில் வேலை முடிந்த அவள் எங்கு செல்கிறாள்.. மாலைகளில் அவள் என்ன செய்கிறாள்..என்பது போன்ற அவளின் தினசரி செயல்பாடுகள் குறித்த எல்லா விவரங்களையும் தேடி அறிந்தவன் அதன் பிறகு அவள் போகும் இடமெல்லாம் அவளை தொடர்ந்து போவதை வழக்கமாகவே கொண்டிருந்தான் இந்தர்..
ஆனால் கடந்த ஒரு மாதமாக கால் சென்டருக்கு அவள் போகும்போது அவளை பின்தொடர முடியாமல் தவித்து போனான் அவன்..
ஒரு மாதத்திற்கு முன் அவன் அவளை கால் சென்டர் வரை பின் தொடர்ந்து அவள் உள்ளே சென்றதும் வழக்கம் போல எதிரே இருக்கும் சிற்றுண்டி கடையிலே சென்று அமர்ந்திருந்த நேரத்தில் அவனுடைய அண்ணன் ரணதீரன் அங்கு வந்து சேர்ந்தான்..
தொலைவிலிருந்தே தன் அண்ணன் வருவதை கண்டு கொண்டவன் அந்த கடைக்குள் சென்று சமையலறை பக்கம் மறைந்து கொண்டான்..
அந்த கடையின் முதலாளி அவனை ஒரு மாதிரி பார்த்தவர் அவனுடைய அண்ணன் அந்த கடையை விட்டு சென்ற பிறகு வெளியே வந்தவனிடம் “என்னப்பா தம்பி? என்ன விவகாரம்? அந்த ஆளை பார்த்து ஓடி ஒளியுற? வட்டிக்கு கடன் ஏதாவது வாங்கிருக்கியா என்ன அவர்கிட்ட?”
அவர் சந்தேகமாய் கேட்க “ஐயோ அண்ணே.. அவர் என்னோட கூட பொறந்த அண்ணன் தான்.. ரொம்ப கஷ்டப்பட்டு என்னை இன்ஜினியரிங் படிக்க வைக்கிறார்.. நான் இப்படி ஊர் சுத்திட்டு இருக்கேன்னு தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவாரு… அதான் அவர் மனசு வருத்தப்பட வேண்டாமேன்னு மறைஞ்சுக்கிட்டேன்..”
வெளிப்படையாக சொன்னவனை புரியாமல் பார்த்தார் அந்த கடைக்காரர்..
“ஏம்பா.. அண்ணன் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறே.. அப்ப ஊர் சுத்தாம இருக்கணும் இல்ல? நான் பாக்குற நாளா நீ தினமும் இந்த கடைக்கு வர.. எதிர்ல அந்த ஆஃபீஸ்க்கு ஒரு பொண்ணு போவுது.. அது உள்ள போகும்போது வர்ற.. திரும்ப அந்த ஆஃபீஸை விட்டு அந்த புள்ள கிளம்பும்போது அதோட பின்னாடியே போற.. நானும் உன்னை கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா பார்த்துகிட்டுதானப்பா இருக்கேன்.. நாலஞ்சு மணி நேரத்துக்கு மேல இந்த கடையில சீட்டு புடிச்சு உக்காந்துக்குற.. ஒன்னும் வாங்கி திங்கறதும் கிடையாது.. பேசாம இந்த கடைக்கு செக்யூரிட்டி வேலை பாக்குறியா? உனக்கு பணமாவது கிடைக்கும்..”
அவர் கேலியாய் கேட்க அவரைப் பார்த்து முறைத்தவன் “என்ன கடைக்காரரே.. கிண்டலா..? என்னோட லவ்வர் அந்த பொண்ணு.. அந்த ஆஃபீஸ்ல ஒர்க் பண்றா.. அவளை பார்க்கத்தான் நான் வரேன்.. ஆனா அண்ணா கிட்ட போய் நான் லவ் பண்றேன்னு இப்ப சொன்னா காலேஜ் படிக்கும் போது லவ் எதுக்குன்னு ஒரு மாதிரி வருத்தப்படுவாரு.. அதனாலதான் அவர்கிட்ட சொல்ல வேண்டாம்னு பாக்குறேன்..”
“அது சரி.. நீ என்னத்தையோ பண்ணிட்டு போ.. ஆனா குறைஞ்ச பட்சம் கடைக்கு வரப்போ ஏதாவது நாலு தீனியை வாங்கி தின்னு பா.. ஒரு டீயாவது வாங்கி குடி.. அப்பதானே எனக்கும் பொழப்பு ஓடும்.. சும்மாவே தினமும் வந்து உட்கார்ந்துட்டு போற.. நானும் கொஞ்சம் லாபம் பார்க்க வேண்டாமா?”
அவனுக்குப் புரிந்தது.. அவர் அவன் அந்த கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.. அடுத்த நாளிலிருந்து அவனும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்..
தன் அண்ணன் அன்று ஒரு நாள் மட்டும் அந்த பக்கம் வந்திருப்பார் என்று நினைத்திருந்தவன் அடுத்த நாள் ஏதோ சிற்றுண்டி வாங்கி மேஜையில் அமர்ந்து நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சரியாக அதே நேரம் அவனுடைய அண்ணன் இன்னும் இரண்டு பேருடன் அந்த கடைக்குள் நுழைய தீரனிடம் வசமாய் சிக்கிக்கொண்டான் பையன்..
அவனைப் பார்த்த மறுகணமே “டேய் இந்தரு.. இங்க இன்னாடா பண்ணினு கீற ராஜா.. உங்க காலேஜ் தான் நாலு மணிக்கே முட்ஞ்சிடும் இல்ல..? உன் காலேஜ் கூட அந்த பக்கம் தானே கீது.. வூட்டுக்கு போகாம இங்க வந்து என்னய்யா பண்ணினு இருக்க?”
அக்கறையோடு தீரன் கேட்டான்.. வாயில் பெரிய வடை துண்டு அடைப்பட்டிருக்க என்ன பதில் சொல்வது என்று விளங்காமல் திருதிருவென விழித்தான் இந்தர்.. “அஜூ வஞ்சுண்ணா..” வாயில் வடையோடு அவன் பேசவும் வார்த்தைகள் குழறிப் போய் வந்தது..
“அட மொள்ளமா தின்னு.. பொறை ஏறிக்க போவுது டா தம்பி.. அதை முழுங்கிக்கின்னு பொறவு சொல்லு..”
அவன் தலையை வருடி விட்ட படி தீரன் சொல்ல “முழுங்கிட்டு பொறவு சொல்லனுமா? அப்புறம் மட்டும் நான் என்ன சொல்றது?” புரியாமல் திண்டாடினான் இந்தர்..
தன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்கள் வெளியே வந்து விழுந்து விடுமோ என்று தோன்றும் அளவிற்கு விழிகளை உருட்டி விழித்துக் கொண்டு இருந்தவன் அண்ணனிடம் சொல்லி சமாளிப்பதற்கு ஏதுவான சிறந்த பதிலை யோசித்துக் கொண்டே
வடையை மெதுவாக மென்று தின்று கொண்டிருந்தான்..
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 7
சிரமப்பட்டு வாயில் இருந்த வடை துண்டை விழுங்கி விட்டு “அது வந்துண்ணா.. என் ஃப்ரெண்டு வரேன்னு சொல்லி இருந்தான்.. அவனுக்கு இன்னைக்கு பிறந்தநாளு.. அதான் இங்க ஒரு சின்ன பார்ட்டி வைக்கிறேன்னு சொல்லி இருந்தான்.. நான் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கேன்.. அவன் வரவே இல்லைண்ணா.. அதான் பசிக்குதுன்னு ரெண்டு வடை சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போலாம்னு நினைச்சேன்..”
“அதான பார்த்தேன்.. தபாரு கண்ணு.. இந்த மாதிரி ஃபிரண்டுகளோட ஊர் சுத்திக்கினு படிப்பை கோட்டை வுட்றாத இந்தரு.. படிப்புல சூதானமா கீறணும்டா.. அப்பால இருக்கவே இருக்கிறானுங்க இந்த தோஸ்து பயலுக.. அவுனிங்களோட எப்ப வோனா ஜாலி பண்ணிக்கினு சுத்தலாம். இன்னா.. இந்த அண்ணன் சொல்றது பிரியுதா இல்லியா உனிக்கு?”
“ஹா.. ஹான்.. புரியுதுண்ணே.. தெனமும்லாம் இங்க வர மாட்டேன்ணே இன்னிக்கி ஃப்ரென்ட் பர்த்டேனு தான்..”
“அதான் காண்டி பார்த்தேன்.. ஆனா நல்லா துன்னுடா ராஜா.. நல்லா உடம்பை தேத்தி சோக்கா வச்சிக்கிட்டா தான் சூப்பரா பட்ச்சிக்க முடியும்.. நீ துன்னுடா கண்ணு.. ஏ மாரி.. வா நம்ம அப்பாலேக்கா போலாம்.. புள்ள துன்னுறதுல கண்ணு பட்டுட போவுது..”
“ஏன்ணா.. நீங்க எங்க இந்த பக்கம்? ஏதாவது ஷூட்டிங்கா..?”
அவன் கேட்டதும் தீரனின் கூட வந்திருந்தவர் சொன்னார் “ஆமா.. இங்க அந்த கால் சென்டர் இருக்குதுல்ல.. அதுக்கு பக்கத்துல புதுசா ஒரு பில்டிங் கட்டிட்டு இருக்காங்க இல்ல..? அந்த பத்து மாடி கட்டிடத்துல ரெண்டு மூணு ஆக்சன் சீன் எடுக்குறாங்க.. அது கொஞ்சம் கஷ்டமான சீன்.. அதான் எவ்வளவு நாளுன்னு சொல்லாம இப்போதைக்கு பத்து நாள் ஷெட்யூல் போட்டுட்டு வந்து இருக்காங்க.. முடிக்க எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல.. நம்ம தீரனுக்கே ரொம்ப சவாலா இருக்கு அந்த சீன் எல்லாம்.. பத்தாவது மாடில சுவர் விளிம்பில நின்னு சண்டை போடுறதுன்னா சும்மாவா? நம்ம தீரனை விட்டா அதை பர்ஃபெக்ட்டா யாரால பண்ண முடியுது சொல்லு.. இங்க பாரு நேத்து செஞ்ச ஸ்டன்ட்ல கைல எவ்வளவு பெரிய அடி பட்டு இருக்குது பாரு.. அது தீரனுக்கே அவ்வளவு பெரிய சவாலான சீனா இருந்துச்சு.. ஆனா அந்த அடி பட்டதை பத்தி எல்லாம் கவலையே படல அவரு.. அதை அப்படியே அசால்ட்டா தட்டிவிட்டுட்டு எழுந்து அடுத்த ஷாட்டுக்கு போயிட்டாரு.. கையில ரத்தமா கொட்டிட்டு இருக்கறதை பார்த்து நான் தான் ஒரு பிளாஸ்திரி வாங்கி போட்டேன் அதுல.. அவரு கண்டுக்க கூட இல்லை..”
தீரனின் கையை தூக்கி அடி பட்ட இடத்தை காட்டினார் அவன் கூட வந்தவர்.. தீரனை பற்றி அவர் பெருமையாக சொல்ல சொல்ல இந்தருக்கோ அதை ரசிக்க முடியவில்லை.. தன் அண்ணன் ஒரு ஒரு ரூபாய் ஈட்டுவதற்கும் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று புரிந்தது அவனுக்கு.. அவர் இப்படி ரத்தம் சிந்தி சம்பாதிப்பதை வீணாக்கி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டான் அவன்..
“அண்ணா நிச்சயமா சொல்றேண்ணா.. நீ எவ்ளோ சிரமப்பட்டு ரத்தம் சிந்தி சம்பாதிச்சு என்னை படிக்க வைக்கிற? நான் நல்லபடியா படிச்சு உன் பேரை காப்பாத்துறேண்ணா..”
அவன் சொன்னதைக் கேட்ட தீரன் அவன் தோளில் தட்டி அவனை தன்னோடு சேர்த்து அணைத்து தன் கூட வந்த ஆளிடம் “பாத்தியா மாரி.. என் தம்பியை.. இவன்காண்டி அந்த படிப்பை முடிச்சிட்டு பெரிய ஆள் ஆகட்டும்.. அப்புறம் பாரு.. என்னை பேஜார் பண்ற இந்த டைரடக்கரு எல்லாம் இன்னா கதிக்கு ஆளாவறானுங்கன்னு.. கஸ்மாலம்.. நேத்து இன்னா பேச்சு பேசுறான் தெரியுமா அந்த ஆளு..”
அவன் தன் தொழிலைப் பற்றி புலம்ப அதைக் கேட்டுக் கொண்டிருந்த இந்தருக்கோ தன் அண்ணனை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது..
“அண்ணா நான் சொல்றதை கேளு அண்ணா.. உன்னால ரொம்ப முடியலன்னா இந்த வேலையை விட்டுடுண்ணா.. நான் இந்த கால் சென்டர்ல நைட் ஷிஃப்ட் வேலை பார்த்து சம்பாதிச்சு என் காலேஜ் ஃபீஸ்லாம் கட்டிக்கிறேண்ணா.. இப்பல்லாம் நிறைய பேர் இந்த மாதிரி பார்ட் டைம் ஜாப் எல்லாம் படிக்கும்போதே சைட்ல பார்க்கிறாங்கண்ணா..”
“ம்.. ஹூம்.. டேய் தம்பி.. பணம் சம்பாதிக்கறது உன்னோட இந்த அண்ணாத்தையோட வேலை.. படிக்கிறது மட்டும்தான் உன் வேலை.. அத்த சும்மா சோக்கா பண்ணிடு.. இதெல்லாம் ஒண்ணியுமே இல்ல டா.. சும்மா தூசி கணக்கா ஊதி தள்ளிடுவான் உன் அண்ணன்..”
சொல்லிவிட்டு அவன் முழுதாய் சாப்பிடும் வரை அங்கேயே இருந்து அவனை வண்டி ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் தீரன் தன் நண்பரோடு சாப்பிட்டான்..
அவ்வப்போது அங்கு ஷூட்டிங் முடிந்து விட்டதா இல்லையா என்று கேட்டுக் கொண்டிருந்த இந்தர் ஒரு மாதம் ஆகியும் அந்த படப்பிடிப்பு முடியாமல் இருக்கவே வேறு வழியின்றி மதியழகியை கல்லூரியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டான்..
மாலை வேலைகளில் அவளை காண முடியாமல் தவித்திருந்தவன் அன்று வகுப்பில் அவள் கேள்வி மேல் கேள்வி கேட்கவும் தன் மனதில் இருந்ததை அவளிடம் வெளிப்படையாக சொல்லி இருந்தான்..
அன்று இரவு வீட்டுக்கு வந்து படுத்தவன் மறுநாள் கல்லூரிக்கு சென்று எப்படியும் அவளிடம் தன் காதலுக்கு பதில் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு உறங்கி போனான்..
அன்று கல்லூரியில் நடந்ததை நினைத்து பார்த்தபடி படுத்திருந்த மதியழகிக்கோ உறக்கம் எட்டாக்கனி ஆகி போனது.. தினமும் 12 மணிக்கு வந்து வீட்டில் படுக்கும் போது அசதியில் ஐந்து நிமிடங்களுக்குள் உறங்கி விடுபவள் அன்று இரண்டு மணி ஆகியும் உறங்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தாள்..
அடுத்த நாள் சேகர் சொல்லியது போல் இந்தரிடம் சொன்னால் அது வேலைக்கு ஆகுமா? அவன் மனதை மாற்ற முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே படுத்திருந்தவள் வெகு நேரம் விழித்திருந்து விடியல் நெருங்கும்போதுதான் உறங்கி இருந்தாள்..
ஆனால் மறுநாள் காலை வேலைக்குப் போக வேண்டுமே.. எப்போதும் போல அலாரம் அடித்தவுடன் எழுந்து விடுவிடுவென வேக வேகமாக வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் உணவு சமைத்து விட்டு தானும் எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள்..
அன்று முதல் வகுப்பிலேயே இந்தருடைய வகுப்புக்கு தான் செல்ல வேண்டி இருந்தது.. கல்லூரிக்கு சென்றவுடன் ஒரு பெருமூச்சை விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெதுவாக அவன் வகுப்புக்கு சென்றாள் மதி..
ஆனால் அன்று அவன் தன் வகுப்பில் இல்லை.. இது என்ன..? இடியே விழுந்தாலும் தன் வகுப்பை.. தன்னை பார்க்கும் வாய்ப்பை தவற விட மாட்டானே இந்த இந்தர் என்று யோசித்தாள் மதி.. ஆனால் அவன் இல்லாதது ஒருவித நிம்மதியை அவளுக்கு தந்திருக்க வேகவகமாய் அன்றைக்கான பாடத்தை நடத்த ஆரம்பித்தாள் அவள்..
அன்றைய பாடத்தை முடித்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டவள் அடுத்ததாய் அன்றைய பாடத்தில் மாணவர்கள் சந்தேகங்களை கேட்க அவர்களை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை எதேச்சையாய் ஜன்னல் பக்கம் பட அங்கே ஜன்னலுக்கு வெளியே சாய்ந்து நின்றபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் இந்தர்..
அதை கண்ட நொடியே அவளை பதற்றம் சூழ்ந்து கொண்டது.. வேகவேகமாய் மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஏனோதானோவென பதில் இறுத்துவிட்டு அந்த இறுதி பத்து நிமிடங்களை சிறிது பதட்டத்துடனே கழித்து விட்டு வகுப்பை விட்டு வெளியே வந்தவளை அன்றும் தொடர்ந்தான் இந்தர்..
“மதி நேத்து நான் உன்கிட்ட சொன்னதுக்கு எந்த பதிலும் நீ சொல்லல.. எனக்கு ஒரு பதில் சொல்லு மதி.. நீ பதில் சொல்லிட்டா நான் பாட்டுக்கு நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்திடுவேன்.. எங்க அண்ணாவுக்கு என் படிப்பு பத்தி ரொம்ப கனவு இருக்கு.. அவர் சினிமால ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கிறார்.. என்னை படிக்க வைக்க ஒவ்வொரு நாளும் ரத்தம் சிந்தி சம்பாதிக்கிறார்.. அவருக்காக நான் நல்லபடியா படிச்சு பெரிய ஆள் ஆகணும்.. ஆனா அதே சமயம் எனக்கு நீயும் வேணும்.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா நான் பாட்டுக்கு நிம்மதியா என் படிப்புல முழு மூச்சா இறங்கிடுவேன்.. படிச்சு முடிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்த அப்புறம் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.. ப்ளீஸ் மதி.. எனக்கு ஒரு பதில் சொல்லு..”
அவன் சொன்னதை கேட்டபடியே நடந்து கொண்டிருந்தவள் சட்டென நின்று அவன் புறம் திரும்பி “இப்ப என்ன..? உனக்கு பதில் தானே வேணும்.. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.. முதல்ல என்னால உன்னை லவ் பண்ணவே முடியாது.. ஏன் தெரியுமா..? நான் ஏற்கனவே வேற ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு 28 வயசு ஆகுது.. இதுவரைக்கும் என்னை யாருமே லவ் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நீ நினைக்கிறியா?”
“லவ் பண்றியா? யாரை லவ் பண்ற..? எனக்கு நிச்சயமா தெரியும் அப்படி யாரும் கிடையாது.. உன்னை பத்தி எல்லா விஷயமும் அணு அணுவா எனக்கு தெரியும்.. நீ அப்படி எல்லாம் யாரையும் லவ் பண்ணல.. சும்மா எனக்காக பொய் சொல்லாதே..”
“இல்ல.. நான் உண்மையா தான் சொல்றேன்.. இப்பதான் ஒரு ஒரு மாசமா லவ் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா அவரு என் மேல உயிரையே வெச்சிருக்கிறார்.. எனக்கும் அவரைதான் பிடிச்சிருக்கு.. என்னை விட ரெண்டு வயசு பெரியவர்.. நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..”
சேகர் சொன்னதை அப்படியே அவனிடம் ஒப்பித்தாள் மதி.. எப்படியும் இந்தர் அவளுடைய காதலன் யார் என்று கேட்பான்.. அப்போது தன்னையே அவளுடைய காதலன் என்று சொல்ல சொன்னால் போகப்போக அதையே உண்மையாக்கி விடலாம் என்று திட்டம் போட்டே அந்த யோசனையை அவளிடம் சொல்லியிருந்தான் சேகர்..
ஆனால் இந்தரோ அவள் சொன்னதை நம்பினால் தானே அந்த காதலன் யார் என்று கேட்க… அவள் எவ்வளவு பொறுப்பானவள் என்று அவன் அறிவான் தானே.. அவள் சொன்னதை அவன் கிஞ்சித்தும் நம்பவே இல்லை..
இங்கே மலரழகியின் கல்லூரியில் மலரழகியின் தோழிகள் முந்தைய நாள் அவள் வகுப்பை புறக்கணித்து படப்பிடிப்புக்கு சென்றதற்கு அவள் வீட்டில் ஏதும் சொன்னார்களா என்று விசாரிக்க அவளும் தன் வீட்டில் நிகழ்ந்ததை சொல்லி இனிமேல் கல்லூரி நாட்களில் அப்படி போக கூடாது என்று தீர்மானம் செய்து விட்டதாகவும் சொன்னாள் தன் தோழிகளிடம்..
“அப்போ உன்னோட டார்லிங்கை ரொம்ப மிஸ் பண்ணுவியேடி.. எப்படி அவனை பார்ப்ப..? அந்த சிக்ஸ் பேக் தீரனை பாக்காம உன் கண்ணு பூத்து போயிருமே..”
தோழிகள் அவளை கேலியாக கேட்க “இல்ல.. காலேஜ் டேஸ்ல தான் நான் அவரை போய் பார்க்க மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா வீக் எண்டு இருக்குல்ல..? அக்கா வீக் என்ட்ல நீ என்ன வேணா பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க.. அதனால இனிமே எல்லா வீக் எண்டும் என் டார்லுவோட தான்..” முடிவாக சொன்னாள் அவள்..
🎶🎼🎵நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்..
நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்..
நீ தான் மனம் தேடும் ஆண்பாலன்.
பூவாய் எனையேந்தும் பூபாளன்
என் மடியின் மணவாளன் என தோன்றுதே..
செந்தூரா ஆ..ஆ.. சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ..ஆ.. செங்காந்தள் பூ
உன் தேரா ஆஆஆ
மாரன் அம்பு ஐந்தும் வைத்து..
ஒன்றாய் காற்றில் எய்தாயா..
நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்..
விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்..
காலை எழும் போது நீ வேண்டும்..
தூக்கம் வரும் போதும் தோள் வேண்டும்..
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்🎵🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 8
“இல்ல.. எனக்கு நிச்சயமா தெரியும்.. நீ யாரையும் விரும்பி இருக்க மாட்டே.. ஏன்னா உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. உன்னோட தங்கை டாக்டருக்கு படிச்சிக்கிட்டு இருக்கா.. அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் நிச்சயமா நீ யாரையும் காதலிக்கவும் மாட்ட.. கல்யாணம் பண்ணவும் மாட்ட.. அது தெரிஞ்சதனால தான் உன்னை இப்போதைக்கு என் லவ்வை அக்செப்ட் பண்ணு.. நான் படிச்சு முடிச்சு ஒரு நல்ல நெலமைக்கு வந்தப்பறம் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள உன் தங்கையும் படிச்சு முடிச்சு நல்ல நெலமைக்கு வந்துடுவா.. உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் என்கிட்ட பொய் சொல்லாதே.. நீ என்ன சொன்னாலும் நீ என் லைஃப் பார்ட்னர் ஆகறதை யாராலயும்.. ஏன்.. உன்னால கூட தடுக்க முடியாது”
மதியழகி பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்தான் இந்தர்..
அவன் மனதை மாற்ற முடியவில்லை என்றால் கூட குறைந்தபட்சம் குழப்பவாவது முடியும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போய்க் கொண்டிருந்தது மதிக்கு..
“நீ சொல்றது எல்லாமே சரிதான்.. எனக்கு என் குடும்பம் தான் ரொம்ப முக்கியம்.. அதனால தான் இப்ப வரைக்கும் எனக்கு எத்தனையோ பேர் ப்ரொபோஸ் பண்ணி இருந்தாலும் அது எதையுமே நான் அக்செப்ட் பண்ணிக்கிட்டது கிடையாது.. எனக்கு இருக்கற பொறுப்பை எல்லாம் முடிச்சுட்டு அப்பறம் தான் என் கல்யாணத்தை பத்தியே யோசிக்கணும்னு நெனைச்சிட்டிருந்தேன்.. என் தங்கை டாக்டர் ஆகற வரைக்கும் கூட இல்லை அவளுக்கு கல்யாணம் ஆகி அவ லைஃப்ல செட்டில் ஆனப்பறம் தான் என் கல்யாணத்தை பத்தி யோசிக்கணும் நெனைச்சிட்டு இருந்தேன்..”
அவள் ஒரு இக்கு வைத்தபடியே பேசிக்கொண்டு போக அவனோ பொறுமையின்றி “ம்ம்.. அப்பறம்? அப்புறம் ஏன் மா இப்ப முடிவை மாத்திட்ட.. சொல்லு சொல்லு உன் கதையை கண்டினியூ பண்ணு” என்று என்ன சொன்னாலும் அவளை தான் நம்ப போவதில்லை என்பது போல் தலை சாய்த்து அவளையே ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் இந்தர்..
“ஆனா இப்போ நான் லவ் பண்றவரு கொஞ்சம் வித்தியாசமானவரு.. அவருக்கும் குடும்ப பொறுப்பு இருக்கிறதுனால என் பொறுப்பை எல்லாம் முடிச்சு வர வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொல்லி இருக்காரு.. அவரை ஒரு மாசம் முன்னாடி தான் மீட் பண்ணேன்.. அதனால உனக்கு அவரை தெரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பில்லை.. நாங்க ரொம்ப வெளியில மீட் பண்ணிக்கிட்டதில்ல.. ஆனா அவரு என்னை சந்திச்ச முதல் நாளே என்னை ரொம்ப பிடிச்சு போயி அடுத்த ரெண்டே நாள்ல எனக்கு ப்ரொபோஸ் பண்ணாரு.. என் கன்டிசனுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டதுனால நானும் யோசிச்சு பார்த்து மனசார தான் அவர் லவ்வை ஏத்துக்கிட்டேன்.. நீ நம்பலைங்கறதுக்காக நான் லவ் பண்ணறேன்கிறது பொய் ஆயிடாது.. நீ நம்புனா நம்பு.. நம்பாட்டி போ..”
அவள் தெளிவாய் சொன்னதை கேட்ட இந்தர் சற்றே யோசிக்க தொடங்கினான்.. ஒரு மாதமாய் அவள் கால் சென்டருக்கு போய் இருக்கும் போது தான் அங்கு இல்லை என்பது அப்போதுதான் அவனுக்கு மின்னல் வெட்டுவது போல் அவன் நினைவில் வெட்டியது..
ஒருவேளை இந்த ஒரு மாசத்துல நம்ம இல்லாதப்ப யாரையாவது லவ் பண்ணி இருப்பாளா?
“ஆமா.. அது யாரு..? நீ அது யாருன்னு சொல்லு.. அப்புறம் நீ சொல்றதை நம்பலாமா வேண்டாமான்னு நான் யோசிக்கிறேன்..” விடாகொண்டனாய் பேசிக்கொண்டு இருந்தான் அவன்..
“ஆமா.. நான் எதுக்கு உன்கிட்ட என்னோட லவ்வர் யாருன்னு சொல்லணும்.. அது என்னோட பர்சனல்… உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ கேட்டே.. அது என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஏன்னா நான் இன்னொருத்தர் காதலிக்கிறேன்னு அதுக்கான காரணமும் சொல்லிட்டேன்… அதோட என் பதில் முடிஞ்சுது.. இதை தாண்டி நான் யாரை லவ் பண்றேன்னு உனக்கு எதுக்கு நான் சொல்லணும்..?
அப்படி யாராவது இருந்தால் தானே சொல்வதற்கு? என்ன என்னவோ சொல்லியும் அவனை சமாளிக்க முடியாமல் திணறினாள் மதியழகி..
“அதானே பார்த்தேன்.. அப்படி ஒருத்தன் இருந்தா தானே நீ சொல்ல முடியும்? அப்படி யாருமே இல்ல.. அதனால தானே சொல்ல மாட்டேங்குற?” என்ன சொன்னாலும் அவன் நம்புவதாய் இல்லை..
“ஓ.. அப்ப நீ நம்ப மாட்ட இல்ல..? சரி அவர் யாருன்னு இப்ப உன்கிட்ட சொல்லணும்.. அவ்வளவுதானே? அப்படி சொல்லிட்டா என்னை நம்புவ இல்ல? அவர் யாருன்னு சொல்றது என்ன.. அடுத்த ஞாயித்துக்கிழமை உனக்கு என் லவ்வரை நேராவே காட்டுறேன்.. நாங்க ரெண்டு பேரும் நெக்ஸ்ட் சண்டே ஒரு சின்ன டேட் போறோம்.. ஆனா அவர் என்னை எங்க கூட்டிட்டு போறார்ன்னு எனக்கே தெரியாது.. டேட்டிங் கூட்டிட்டு போறேன்னு மட்டும் தான் சொல்லி இருக்காரு.. அழகான ஒரு கூலான எடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இருந்தாரு.. நீதான் என்னை எப்பவும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்னு சொல்றியே.. அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னை ஃபாலோ பண்ணு.. உனக்கே தெரியும் அவர் யாருன்னு..” அவள் தெளிவாய் சொல்லிவிட்டாள் தான்..
ஆனால் அவளுக்கு தானே தெரியும்.. அவன் யார் என்று கேட்க பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் அவனிடம் இப்படி சொல்லி தன் பொய்யான காதலனை தயார் செய்ய ஒரு வாரம் வாய்தா வாங்கி இருக்கிறாள் என்று..
அவனுக்கோ இப்போது அவள் சொன்னதை நம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.. நேரில் காட்டுகிறேன் என்கிறாளே.. ஒருவேளை நிஜமாகவே யாரையாவது விரும்புகிறாளோ.. அது யாராக இருந்தாலும் சரி.. அவனை போட்டு தள்ளிட்டு தான் மறு வேலை.. மனதிற்குள் அந்த கண்ணுக்கு தெரியாத நபரின் மேல் வன்மத்தோடு மனதிற்குள் சொல்லி கொண்டான்..
இப்படி அவன் மதியை பற்றி வில்லத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தான் இந்தர்..
“உன் பதில் உனக்கு கிடைச்சிருச்சுனா நான் கிளம்புறேன்..” என்று சொன்னவள் தன் வழியை பார்த்து போய் விட்டாள்..
“ஒரு ஒரு மாசம் அண்ணா வராருன்னு இவளை கவனிக்காம விட்டதுக்கு அந்த கேப்ல ஒரு பாய் ஃப்ரெண்டை பிடிச்சிட்டாளே.. அழகான பொண்ணு கிடைச்சா போதும்.. மடக்கி போட ரெடியா காத்துகிட்டு இருப்பாங்க போல இருக்கு.. சரியான அலைஞ்சானுங்க..”
தானும் அதே வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் எவனோ ஒருவனை 30 வயதில் மதியழகியை விரும்பியதற்காக திட்டிக் கொண்டிருந்தான் இந்தர்
அன்று முழுவதும் மதியழகிக்கு கொஞ்சம் நிம்மதியாகவே சென்றது.. சேகர் பேராசிரியர்கள் அறைக்கு வந்தவுடன் “ரொம்ப தேங்க்ஸ் சேகர் சார்.. உங்க ஐடியா நிஜமாவே ஒர்க் அவுட் ஆயிடுச்சு.. முதல்ல அவன் நம்பல.. அப்புறம் இந்த ஒரு மாசமா தான் லவ் பண்றேன் அது எதுன்னு சொன்னவுடனே நம்பிட்டான்..”
“ஓ.. சூப்பர்.. மதி மேடம்..” என்று மதியிடம் சொன்னவன் “என்ன இந்த பய? யாரு உன் லவ்வர்ன்னு கேட்டு தொலைச்சிருப்பான்னு பார்த்தா இவ்வளவு ஈஸியா அவ சொன்னதை நம்பிட்டான்.. சே.. இவ்வளவுதானா இவன்..?” இந்த இப்படி எல்லாம் கேட்காததுக்காக மனதிற்குள்ளேயே அவனை திட்டி தீர்த்தான்..
“ஆனா இன்னொரு பிரச்சனை வந்திருக்கு சார்.. என் லவ்வர் யாருன்னு அவன் பெரெல்லாம் கேட்டான்.. என்ன சொல்லி அவனை நம்ப வெக்கறதுன்னு தெரியாம அவனுக்கு என் லவ்வரை நேராவே காட்டுறேன்னு சொல்லி இருக்கேன்.. இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கு.. எப்படி என் லவ்வர்னு ஒரு ஆளை ஒரு வாரத்துக்குள்ள ஏற்பாடு செஞ்சு காட்ட போறேன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையே வலிக்குது சேகர் சார்..”
அவள் சொன்னதை கேட்டு சற்று நிம்மதியானது சேகருக்கு..
ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டவன் “என்ன மேடம் இப்படி யோசிக்குறீங்க? கையில் வெண்ணெயை வெச்சுக்கிட்டு யாராவது நெய்க்கு அலைவாங்களா?” என்று கேட்க
அவளுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.. “வெண்ணெயா..? யாரு வெண்ணெய்..?” அவள் கேட்டவுடன் “நான் தான் அந்த வெண்ணெய்” என்று சட்டென சொல்வதற்கு அவனுக்கு வாய் வரவில்லை..
“ஏன் மேடம்..? ஒரு பேச்சுக்கு பழமொழி சொன்னா இப்படியா அதுக்கு கேள்வி கேப்பீங்க? இங்கயே உங்க பக்கத்துலயே கல்யாணம் ஆகாத 30 வயசு ஆளு நான் இருக்கும்போது நீங்க எதுக்கு வேற யாரையாவது வெளில போய் தேடனும்.? ஏன் கவலைப்படுறீங்க? நீங்க என்னை தான் லவ் பண்றீங்கன்னு இப்பவே போய் சொல்லிருங்க அந்த பையன் கிட்ட..”
சேகர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள் மதியழகி.. “என்ன சார் சொல்றீங்க? உங்களை லவ்வர்ன்னு சொல்லவா? இல்ல சார்.. அது மட்டும் என்னால முடியாது.. அது சரியா வராது.. காலேஜ்ல படிப்பு சொல்லி கொடுக்குற இடத்துல இருக்கற நான் இங்கயே என் கூட வொர்க் பண்ற ப்ரொஃபஸரை லவ் பண்றேன்னு ஒரு ஸ்டூடன்ட் கிட்ட போய் சொன்னா அதை விட தப்பான விஷயம் வேறெதுவும் இருக்காது.. அது தப்பு சார்.. அது பொய்தான்னாலும் என்னை பத்தி அப்படி ஒரு தப்பான விஷயத்தை என் ஸ்டுடன்ட்ஸ்க்கு சொல்ல மாட்டேன்.. நான் என் ஸ்டுடென்ட்ஸ்க்கு ஒரு மாடலா இருக்கணும்னு நினைக்கிறேன்.. ப்ளஸ் என் ப்ரொஃபஷன்ல எந்த காரணத்தை கொண்டும் ஒரு ப்ளாக் மார்க் வந்துடக்கூடாது.. என் கூட ஒர்க் பண்ற ப்ரொஃபசரை நான் லவ் பண்றேன்னு சொன்னா அது என் ரெபுடேஷனை ஃபுல்லா காலி பண்ணிடும் சார்..”
.அவள் உறுதியாய் சொல்லிவிட அவனோ “ஐயோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல மேடம்.. ஊர் உலகத்துல ஒரே காலேஜ்ல லெக்ச்சரஸா இருக்க ரெண்டு பேர் இது வரைக்கும் லவ் பண்ணினதே கிடையாதா?”
அவன் எப்படியாவது அவளை தன் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று முயன்று கொண்டிருக்க அவளோ “மத்தவங்களை பத்தி எனக்கு தெரியாது சார்.. என்னை பொறுத்த வரைக்கும் அது ரொம்ப தப்பு..” என்றாள் தீர்மானமாக..
“அது மட்டும் இல்லாம.. அவன் கிட்ட ஓவர் பில்டப் எல்லாம் கொடுத்து டேட்டிங் அது இதுன்னு வேற சொல்லி இருக்கேன்.. அப்புறம் அவரை ஒரு மாசம் முன்னாடி தான் நான் மீட் பண்ணேன்னு வேற சொல்லி இருக்கேன்.. உங்களை தான் எனக்கு ரெண்டு மூணு வருஷமா தெரியுமே.. அப்புறம் நான் எப்படி அவன் கிட்ட உங்களை என் லவ்வர்ன்னு சொல்ல முடியும்..?”
அவள் கேட்ட கேள்வியில் முழுவதுமாய் ஏமாற்றமடைந்தான் சேகர்.. “மதி.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் உங்களை அவன்கிட்ட என்னை உங்க லவ்வர்னு சொல்ல சொன்னதே எப்படியாவது நெஜமாவே வாழ்க்கைல உங்க லவ்வர் ஆயிடணும்கற ஆசைல தான்.. உங்களை மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை விட அதிர்ஷ்டக்காரன் வேற யாருமே இருக்க முடியாது.. ப்ளீஸ் மதி.. என் பிரபோஸலை அக்செப்ட் பண்ணிக்கோங்க..”
அவன் கெஞ்ச ஆரம்பிக்க அவளுக்கோ அவன் நடவடிக்கை அருவருப்பாய் இருந்தது..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 9
“நான் ஒரு ப்ரொஃபசர்.. நீங்களும் ஒரு ப்ரொஃபசர்.. இப்படி எனக்கு இந்த பிரபோஸல் பிடிக்கலன்னு தெரிஞ்சப்பறமும் இப்படி கேக்கறதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்ல.? இந்த பேச்சை இதோட விடுங்க.. இல்லைன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்..”
அவள் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு கராராய் செல்ல அவனோ சட்டென அவள் முன்னால் மண்டியிட்டான்..
“ப்ளீஸ் மதி.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நான் இங்க வேலையை விட்டுட்டு வேற காலேஜ்ல கூட வேலை தேடிக்கறேன்.. ப்ளீஸ் மதி.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மட்டும் சொல்லுங்க.. நான் உங்களை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்..” விடாமல் மேலும் மேலும் கெஞ்சினான் அவன்..
“மிஸ்டர் சேகர்.. என்ன பண்றீங்க நீங்க…? திடீர்னு வந்து என்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்னு சொல்றீங்க..? அது எப்படி..? இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு திடீர்னு உங்களுக்கு என் மேல லவ் வரும்..? சரி.. அப்படியே நீங்க லவ் பண்ணாலும் எனக்கு உங்க மேல லவ் வரணும் இல்ல..? எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.. இன் ஃபேக்ட் இப்போ உங்க கூட ஃப்ரெண்டா இருக்கிறது பத்தி கூட நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.. இஷ்டம் இல்லாத ஒரு பொண்ணை உங்களை லவ் பண்ண சொல்லி ஃபோர்ஸ் பண்றீங்க? அதுவும் ஏதோ வெடலை பையன் மாதிரி இப்படி எல்லாம் பண்ணாதீங்க.. ஸ்டூடண்ட்ஸ் யாராவது பார்த்தாங்கன்னா என்னை பத்தி என்ன நினைப்பாங்க? ஒரு ப்ரொஃபசர் நடந்துக்குற மாதிரியா நடந்துக்கிறீங்க? முதல்ல எழுந்திரிங்க.. இல்ல.. நான் கிளம்பி வெளியே போயிட்டே இருப்பேன்..”
அவள் பொறுமை இழந்து கொஞ்சம் அழுத்தமாய் கத்தி சொல்ல அவனோ அந்த அறையை விட்டு திரும்பி செல்ல எத்தனித்தவளை கையை பிடித்து நிறுத்தி “மதி ப்ளீஸ்..” என்று கெஞ்ச அவன் பக்கம் திரும்பியவள் அவனை தீயாய் எரிப்பது போல் முறைத்து “மரியாதையா கையை விடு..” என்றாள்..
அவளின் மரியாதை ஒருமைக்கு தாவி விட அவனுக்கும் ஆண் என்கிற கர்வம் தலையெடுத்தது…
“என்னடி.. கொஞ்சம் இறங்கி போயி கெஞ்சுனா ஓவரா ஆடுற.. இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லாரும் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா..? கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் விரும்பிக்கோ.. அதான் நான் லவ் பண்றேன்னு சொல்றேன்ல..? அது போதாதா உனக்கு? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னடி உனக்கு? எனக்கு என்னடி கொறச்சல்..? இங்க பார்.. நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும்.. இல்ல.. நீ என்னை லவ் பண்ணலன்னாலும் பரவாயில்லை.. ஆனா என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.. உனக்கு நான் வேற ஆப்ஷனே கொடுக்கல..” கையை நன்றாக அழுத்தியபடி அவன் சொல்ல அவளுக்கோ கையில் வலி எடுக்க ஆரம்பித்தது..
அவளுக்கு இந்தருக்கும் சேகருக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவுமே தெரியவில்லை.. இரண்டு ஆண்களுமே அவர்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்க வேண்டும் என்று தான் நினைத்தார்களே தவிர அவள் மனதை பற்றி துளியும் கவலை கொள்ளவில்லை..
இப்படி அவர்களுக்குள் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அந்த அறையின் வாசல் பக்கமாய் வந்த இன்னொரு பேராசிரியை பார்கவி மதியழகி சேகர் கையில் மாட்டிக்கொண்டு அவனை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டு உள்ளே வேகமாக ஓடி வந்து மதியின் கையை விடச் சொல்லி அவனை அடிக்க தொடங்கினாள்..
அவனோ அப்போதும் மதியின் கையை விடாமல் இருக்க “ஏய்.. இது எங்க பிரச்சனை.. இதுக்குள்ள நீ வராத.. போயிரு மரியாதையா..” என்க அவளோ “டேய்.. என்னடா.. கூட வொர்க் பண்ற பொண்ணு கிட்ட எப்படி மிஸ்பிஹேவ் பண்ற..? முதல்ல கையை விடுடா.. இல்ல.. நான் இப்ப போய் பிரின்ஸ்பல் கிட்ட சொல்லி எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுவேன்..”
எப்படியும் தன் வேலை போகப்போகிறது என்ற தைரியத்தில் பார்கவி பேசியதை கண்டு கொள்ளாமல் “மதி.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு.. என் காதலை ஏத்துக்க மதி.. இல்லை இப்படியே உன் கையை ஒடச்சிடுவேன்.. அப்புறம் உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்கறான்னு நானும் பாக்குறேன்..” என்று கர்ஜிக்க மதியழகிக்கோ ஏற்கனவே கை பயங்கரமாய் வலிக்க தொடங்கி இருந்தது..
எங்கே கையை உடைத்து விடுவானோ என்று அரண்டு போய் இருந்தாலும் தை காட்டிக் கொள்ளாமல் “நீ என்ன பண்ணாலும் சரி.. நான் அப்படி சொல்லவே மாட்டேன்.. அதுவும் என்கிட்ட நீ இப்படி முறை தவறி நடந்துக்கிட்ட அப்பறம் உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை லவ் பண்றேன்னு என் வாயால நான் சொல்லவே மாட்டேன்.. கனவு கூட காணாத..” அவளும் பதிலுக்கு இரைந்தாள்..
அவள் கையை மேலும் மடக்கி உடைக்க போகும் சமயம் அவளுக்கு வலியில் உயிரே போய்விடும் போலிருக்க அந்த அறை வாசலை கடந்த இந்தர் அந்த காட்சியை பார்த்த நொடி புயலாய் உள்ளே வந்து சேகரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்..
“நீ என்ன பண்ணாலும் சரி.. நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லவே மாட்டேன்.. அதுவும் என்கிட்ட நீ இப்படி முறை தவறி நடந்துக்கிட்ட அப்பறம் உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை லவ் பண்றேன்னு என் வாயால நான் சொல்லவே மாட்டேன்.. கனவு கூட காணாத..” சேகர் கேட்டதற்கு பதிலுக்கு இரைந்தாள் மதி..
அவள் கையை மேலும் மடக்கி உடைக்க போகும் சமயம் அவளுக்கு வலியில் உயிரே போய்விடும் போலிருக்க “என் கை வலிக்குது.. கைய விடுங்க..”
அவள் முகத்தை சுருக்கி அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள போராட அவனோ அப்படியே அவள் கையை முறுக்கி பின்னால் கொண்டு வந்து இழுத்து அவளை நெருங்கி நின்றவன் “என்னடி.. ரொம்ப பத்தினி வேஷம் போடுற..? சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ராத்திரி 12 மணி வரைக்கும் கால் சென்டர்ல வேலை செய்றேன்னு சொல்றியே.. நெஜமாவே நீ கால் சென்டருக்கு தான் போறியானு யாருக்குடி தெரியும்?”
அவன் சொன்னதை கேட்டவள் அருவருப்பாய் தீயை மிதித்தது போல் கொதித்து போனாள்..
“நீ எல்லாம் ஆம்பளையாடா? பொறுக்கி.. நீ சொன்னதை கேக்கலன்னு என் கேரக்டர் பத்தி தப்பு தப்பா பேசுற.. சீ.. மரியாதையா இப்ப கைய விடுறியா இல்ல நான் பிரின்சிபல் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணவா?”
அப்போது சரியாக அந்த அறை வாசலை கடந்த இந்தர் அந்த காட்சியை பார்த்த நொடி புயலாய் உள்ளே வந்து சேகரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
அந்த அதிரடியான குத்தில் அந்த அறையின் மூலையில் போய் சுருண்டு விழுந்த சேகர் அந்த அடியில் வாயோரம் கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டிருக்க “என்னையாடா அடிச்ச? உன்னை என்ன செய்யறன்னு பாரு..” என்று சீறி கொண்டு சிரமப்பட்டு எழுந்து பதிலுக்கு இந்தரை அடிக்க அவனை நோக்கி பாய்ந்து வந்தான்..
இந்தரோ “என்ன தைரியம் இருந்தா என் மதியோட கையை உடைக்க பார்ப்ப.. கொன்னுடுவேன்டா உன்னை..” மிரட்டலாய் சொன்னபடி தன்னை நோக்கி பாய்ந்து வந்த சேகரை காலால் எட்டி உதைத்தான்..
அவன் தான் ஸ்டண்ட் மாஸ்டரின் தம்பி ஆயிற்றே.. அவனிடம் சண்டைக்கு போனால் என்ன கதிக்கு ஆளாவோம் என்று தெரியாமல் அவன் மேல் கை வைக்கப் போன சேகர் கிழிந்த நாராய் அந்த அறையின் மூலையில் மறுபடியும் போய் விழுந்து இருந்தான்..
மதிக்கோ சேகர் அடி வாங்கியது ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் இன்னொரு புறம் இந்தர் “என் மதி” என்று அவளை விளித்தது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.. சேகரை அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்து வைத்தவள் இந்தர் பக்கம் திரும்பி அவனை முறைத்துக் கொண்டுதான் இருந்தாள்..
அவனோ அவள் முறைப்பை கண்டு கொள்ளாமல் “கை ரொம்ப வலிக்குதா மதி.. கை ஒன்னும் ஆகல இல்ல? ரொம்ப அடிபட்டுச்சா?” என்று அவள் கையை பிடித்து வைத்து நீட்டியும் மடக்கியும் பதட்டத்தோடு பார்த்தவனை ஆச்சரியமாக ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள் பார்கவி..
அவளுக்கு இந்தரின் நடவடிக்கை எதுவுமே பிடிப்படவில்லை.. “இவன் என்ன மதி என்னவோ இவனுக்கு ரொம்ப குளோஸ் மாதிரி நடந்துக்குறான்..”
இப்படி எண்ணி இருந்தவள் எண்ணியதோடு நிற்காமல் “மதி.. என்ன இது? இவன் ஸ்டுடென்ட் தானே? அவன் உன்னை பேர் சொல்லி கூப்பிடறான்.. இவ்வளவு உரிமையோட உன் கைய புடிச்சு டாக்டர் மாதிரி என்னவோ வைத்தியம் பார்த்துட்டு இருக்கான்..?
அவள் அவள் விழிகளில் வியப்பு அகலாமல் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் “அது..” என்று விளக்க தொடங்கிய மதியை பதில் சொல்ல விடாமல் “இப்ப இது ரொம்ப முக்கியமா? அவங்க கிடக்குறாங்க விடு மதி.. டாக்டர் கிட்ட போலாமா? கை ரொம்ப வலிக்குதா? இரு முதல்ல இந்த நாயை நான் கவனிச்சிட்டு வரேன்..”
சேகர் பக்கம் கோவமாய் திரும்பியவனை கை பிடித்து இழுத்து தன் பக்கம் திருப்பி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் மதி.. கன்னத்தில் கையை வைத்து தாங்கி அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்னால் தன் சுட்டு விரலை நீட்டி
“வாயை மூடு.. எல்லாம் உன்னால தான் டா.. என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு நடந்துப்பியா? உன்னை கேக்க ஆளே இல்லைன்னு நினைச்சியா? முதல்ல நீ இங்க இருந்து வெளில போ.. இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க நின்னுட்டு இருந்த நான் இந்த காலேஜ்லருந்து வேலையை விட்டுட்டு போயிருவேன்.. போடா.. முளைச்சு மூணு இலை விடல.. அதுக்குள்ள படிச்சுட்டு இருக்கும் போதே லவ்வு.. அதுவும் உன்னை விட வயசு அதிகமா இருக்குறவ கிட்ட.. அப்படியே சப்புனு இன்னொரு அறை அறைஞ்சேன்னு வையி உனக்கு செத்து போன உங்க அம்மா ஞாபகம் வந்துடும்.. அவங்க இருந்து இருக்கணும்.. இந்த நேரம் நான் கொடுத்த இந்த அடியை அவங்க கொடுத்து உன்னை ஒரு வழி ஆக்கிருப்பாங்க..”
“இல்ல மதி.. நான் சொல்றதை கேளு..” அவன் மறுபடியும் ஏதோ சொல்ல வர “இன்னொரு வார்த்தை பேசினா நான் நிஜமா சொல்றேன்.. நான் இந்த காலேஜை விட்டு போறதுக்கு முன்னாடி உன்னையும் இந்த காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்ண வச்சுருவேன்.. நீ சொல்லி இருக்க இல்ல..? உங்க அண்ணாவோட கனவை பத்தி.. அப்புறம் அது எல்லாமே பாழா போயிரும்.. நீ என் லைஃப்ல பண்ண டேமேஜ் எல்லாம் போதும்.. முதல்ல இங்கிருந்து வெளியே போ..”
வாசல் பக்கமாக கையை நீட்டிக்கொண்டு கண்ணை மூடி சொன்னவளை பார்த்தபடியே திரும்பி சேகரை முறைத்த படி அந்த இடத்தை காலி செய்தான் இந்தர்..
அவன் சென்றதும் சேகர் பக்கம் திரும்பியவள் “அந்த அரை க்ராக்கு போயிடுச்சு.. இந்த அரை க்ராக்குக்கு ஒரு வழி பண்ணுவோம் வா..”
பார்கவியிடம் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னவள் அவளை அழைத்துக் கொண்டு நேராக கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்று “எக்ஸ்கியூஸ் மீ மேடம்” என்று உள்ளே செல்ல அனுமதி கேட்க அவர் உள்ளே வருமாறு தலையை அசைக்கவும் “மேம்.. மிஸ்டர் சேகர் பத்தி நான் ஒரு கம்ப்ளைன்ட் பண்ணனும்..” என்றாள்..
அவரும் அங்கு எதிரே இருந்த இருக்கையை அவர்கள் இருவரையும் அமரச் சொல்லி காட்டியபடி “சொல்லுங்க..” என்றார்..
சேகர் தன்னிடம் நடந்து கொண்டது பேசிய முறை தன் கையை முறுக்கி துன்புறுத்தியது என நடந்த எல்லாவற்றையும் அவரிடம் முழுவதுமாய் சொன்னாள் மதியழகி..
ஆனால் அவள் செய்த தவறு இதில் இந்தர் பெயரை இழுக்க வேண்டாம் என்று எண்ணி அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை சொல்லாமல் மறைத்தது தான்.. அவனைப் பற்றி சொன்னால் அவன் படிப்பு பாதியிலேயே நிறுத்த பட்டு பாழாகிவிடும் என்று அவனுக்காக கவலைப்பட்டு அவன் செய்ததை சொல்லாமல் மறைத்தாள் அவள்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 10
கல்லூரி முதல்வரும் பியூனை அனுப்பி சேகரை அழைத்துக் கொண்டு வர சொன்னார்.. ஐந்து நிமிடங்கள் கழித்து சேகர் முகத்தில் ரத்த காயத்தோடு வர அவனைப் பார்த்து அதிர்ந்து போனார் அந்தக் கல்லூரி முதல்வர்..
“என்ன மிஸ்டர் சேகர்? யார் உங்களை இப்படி அடிச்சாங்க?” என்று கேட்க “மேடம் அந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் தான் என்னை இப்படி அடிச்சுட்டான் மேடம்.. இதோ இங்க உக்காந்து உங்க கிட்ட வந்து என்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்காங்களே.. இந்த மதி.. இவங்களும் அந்த பையனும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்க மேடம்.. அதை பத்தி நான் அவங்க கிட்ட நான் கேட்டேன்.. அவங்களை ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? ஒரு காலேஜ்ல ப்ரொஃபஸரும் ஸ்டுடென்ட்டும் இப்படி எல்லாம் நடந்துக்கலாமான்னு கேட்டேன்றதுக்காக தான் என்னை அந்த பையன் இப்படி அடிச்சிட்டான் மேடம்..”
வாய்க்கு வந்தாற் போல் பொய்களை அள்ளி விட்டு இருவர் மீதும் மொத்தமாக பழியை போட்டான் சேகர்..
அவன் சொன்னதைக் கேட்டு கல்லூரி முதல்வர் மதியின் பக்கம் திரும்பி கேள்வியாய் பார்க்க அவளோ “இல்ல மேடம்.. இவன் பொய் சொல்றான் மேடம்.. அந்த பையன் என்னை லவ் பண்றேன்னு சொன்னது உண்மைதான்.. ஆனா நான் அவன் லவ்வை அக்ஸப்ட் பண்ணல.. அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டு தான் வந்தேன்.. அவன் என்னை விட ரொம்ப சின்ன பையன் மேடம்.. நான் எப்படி அவன் லவ்வை அக்ஸ்ப்ட் பண்ணுவேன்? நீங்க வேணா அவனையே கூப்பிட்டு கேளுங்க மேடம்..”
அவள் சொன்னவுடன் இந்த்ரஜித்தை அழைத்து வர சொன்னார் கல்லூரி முதல்வர்..
அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கே வந்த இந்த்ரஜித்திடம் “இந்தர்.. நீ எதுக்கு சேகரை அடிச்ச..? அவர் உன்னோட ப்ரொஃபசர்.. அந்த மரியாதை கூட இல்லாம இப்படி உதடு கிழியற அளவுக்கு கண்ணு மண்ணு தெரியாம அடிச்சி இருக்க?” என்று கேட்க “மேடம்.. இந்த ஆளை அடிச்சதோட விட்டனேன்னு சந்தோஷப்படுங்க.. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவனை கொன்னே போட்டு இருப்பேன்.. இவன் எல்லாம் ஒரு ப்ரொஃபசரா? ஒரு ப்ரொஃபசர் செய்ற வேலையா இவன் செஞ்சான்? அவன் என்ன வேலை பண்ணிட்டு இருந்தான் தெரியுமா மேடம்? என் மதியை கையை முறுக்கி பின்னாடி பிடிச்சு இழுத்து அவளை ஹர்ட் பண்ணிட்டு இருந்தான்.. அதான் அடிச்சேன்.. இதுல என்ன தப்பு இருக்கு?” அலட்சியமாய் கேட்டான் அவன்..
அதைக் கேட்டு அப்படியே அதிர்ந்து போனார் அந்த கல்லூரி முதல்வர்..
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்.. எது நடந்தாலும் நீங்க இங்க வந்து என்கிட்ட சொல்லி இருக்கணும்.. செகண்ட்லி.. மதி இஸ் யுவர் ப்ரொஃபஸர்.. மதி மேடம்னு சொல்லு.. அது என்ன மதி மதின்னு என்னவோ நீ தான் அவங்களுக்கு பேர் வச்ச மாதிரி கூப்பிடுற? காலேஜுக்கு படிக்க தான வர? படிக்கிற வேலையை விட்டுட்டு ப்ரொஃபஸரை லவ் பண்ணுவியா நீ? அதை கேட்டா அவங்களை போட்டு அடிப்பியா? இப்ப நான் கூடத்தான் கேட்கிறேன்.. என்னையும் அடிச்சிடுவியா நீ? நீ என்ன பெரிய ரவுடின்னு நினைப்பா உனக்கு?”
கல்லூரி முதல்வர் கேட்டதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அலட்சியமாய் நின்று கொண்டிருந்தான் இந்தர்..
இந்தரை சுட்டி காட்டி “மேடம்.. இவன் மட்டும் இல்ல மேடம்.. மதியும் இவனை லவ் பண்றாங்க.. அவன் லவ் சொன்னப்போ மதி அவன் லவ்வை அக்செப்ட் பண்ணி இருக்காங்க.. நான் அதை பத்தி கேள்வி கேட்டதுக்காக தான் இவன் என்னை அடிச்சான்.. மதியும் இவனும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க மேடம்..”
அப்படியே தட்டை தலைகீழாய் திருப்பி போட்டான் சேகர்..
அதைக் கேட்டு அது உண்மை இல்லை மதி தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல வாய் எடுத்த இந்தர் சற்று நிறுத்தி வார்த்தைகளை தனக்குள்ளேயே இழுத்துப் பிடித்து நிதானமாக யோசித்தான்.. அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தான்..
“ஆமாம் மேடம்.. நான் மதிக்கு ப்ரொபோஸ் பண்ணேன்.. அவளும் என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கிட்டா.. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்..”
மதியை தீர்க்கமாய் பார்த்தபடி அவன் சொல்ல மதியோ அவன் அப்படி பொய் சொன்னதை நம்ப முடியாமல் அப்படியே அவன் பக்கம் திரும்பி பார்த்தபடி ஸ்தம்பித்து சிலை ஆகி போனாள்.. தன் காலுக்கு அடியில் பூமி நழுவி விழுவது போல் இருந்தது அவளுக்கு..
கல்லூரி முதல்வரிடம் இந்தர் சொன்னதை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து தன் செவிகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த மதி பேச்சற்று போனாள் அந்த நொடி..
இந்தர் தன்னிடம் அப்படி நடந்து கொண்டாலும் தன் பணியையோ தன் மரியாதையையோ பாதிக்கும் விஷயத்தை செய்ய மாட்டான் என்று முழுவதுமாக நம்பி இருந்தாள் அவள்..
ஆனால் இப்படி ஒரு பொய் சொல்லி தன்னை நிலை குலைய செய்தவனின் செயலை எப்படி ஜீரணித்துக் கொள்வது என்று தெரியாமல் எதுவும் கேட்க கூட தோன்றாது அவனை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..
இந்தரோ அவள் கண்களை சந்திக்க முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டான்.. அவள் அவனின் அந்த தலை கவிழ்ப்பிலேயே அவனின் மனநிலை என்ன என்று புரிந்து கொண்டாள்.. சட்டென தன் நிலை மாற்றி உறுதியான பார்வையோடு கல்லூரி முதல்வர் பக்கம் திரும்பினாள்..
அவள் மனதில் ஓடியதோ “பொய் சொல்லும் இவனுக்கே அதை சொல்லும் போது நா கூசாத போது உண்மை மட்டுமே பேசும் நான் எதற்கு இவர்கள் முன் தலை குனிந்து பேசுவதற்கு தயங்கிக் கொண்டு இருக்க வேண்டும்” என்ற எண்ணம் தான்..
அந்த கல்லூரி முதல்வரோ “என்னம்மா மதி.. நீ இந்தர் ப்ரொபோஸ் பண்ணப்போ அக்செப்ட் பண்ணலன்னு சொன்னே.. வேணும்னா அவனையே கேட்டு பாருங்கன்னு அவ்வளவு கான்ஃபிடன்ட்டா சொன்னே.. ஆனா இப்ப அவன் என்னடானனா அவன் உன்னை லவ் பண்றதா சொன்னப்போ நீ அதை அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்னு சொல்றான்..”
“மேம்.. நான் என்ன செஞ்சேன்னு எனக்கு தெரியும்.. நான் எந்த தப்பும் பண்ணல.. நான் அவன் ப்ரொபோஸலை அக்சப்ட் பண்ணல.. இன் ஃபேக்ட் ஒரு ஸ்டூடண்டா இந்த மாதிரி பேசறது தப்புன்னு தான் அவனுக்கு நான் அட்வைஸ் பண்ணினேன்.. ஆனா அவன் எவ்வளவு கேட்டு பார்த்தும் நான் ஒத்துக்காததுனால இப்படி உங்க முன்னாடி வந்து சொன்னா வேற வழி இல்லாம நான் அக்செப்ட் பண்ணுவேன்னு நினைக்கிறான்.. ஆனா அது எப்படி இருந்தாலும் நடக்காது.. என் உயிரே போனாலும் நான் அந்த தப்பை பண்ண மாட்டேன்.. அவன் என்னோட ஸ்டூடண்ட்.. நான் அவனோட டீச்சர்.. அவ்வளவுதான்..”
அதற்குள் பார்கவி “ஆமாம் மேடம்.. சேகர் இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றதை பத்தி கேட்டதுனால தான் அவரை அடிச்சாங்கன்னு சொன்னாரு இல்ல.. அது முழுக்க முழுக்க பொய் மேடம்.. ஆக்சுவலா நான் பார்க்கும் போது சேகர் தான் மதி கைய புடிச்சு பின்னாடி இழுத்து முறுக்கி ரொம்ப கொடுமையா அவகிட்ட நடந்துக்கிட்டு இருந்தார்.. அதை தடுக்க போன என்னை கூட தள்ளிவிட்டார்.. அது மட்டும் இல்லாம அவ கிட்ட அவர் காதலை அக்செப்ட் பண்ணிக்கணும்னு கேட்டுகிட்டு இல்ல இல்ல மேடம் மிரட்டிக்கிட்டு இருந்தாரு..”
அப்படி அவள் சொன்னது தான்.. சேகரின் பக்கம் திரும்பிய இந்தர் “உனக்கு என்ன தைரியம் இருந்தா என் மதியை காதலிக்கிறேனு சொல்லுவ..?” என்று மறுபடியும் அடிக்கப் போக அவனை அந்த கல்லூரியின் பியூன் வந்து இழுத்து பிடித்து தடுத்தார்..
சேகரோ அமைதியாக இல்லாமல் “ஏன்டா.. அவளை விட 10 வயசு சின்னவன் நீ.. அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணுவ.. நான் அவளை விட ரெண்டு வயசு பெரியவன்.. நான் அவளை லவ் பண்றேன்னு சொல்ல கூடாதா? அதுல என்னடா தப்பு..? படிக்கிற வயசுல பொறுக்கி மாதிரி பாடம் எடுக்கிற டீச்சர் கிட்ட லவ் சொல்லிட்டு என்னை அடிக்க வரியா நீ? கொன்னுடுவேன்டா உன்னை..” என்று அது கல்லூரி முதல்வரின் அறை என்பதை கூடமறந்து பதிலுக்கு பதில் பேசினான்..
கல்லூரி முதல்வருக்கோ பொறுமை பறந்து போனது “ஷட் அப் போத் ஆஃப் யூ.. என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் இந்த காலேஜை பத்தி? இது காலேஜா.. இல்ல.. உங்களோட லவ்வர்ஸ் பார்க்கா..? ரெண்டு பேரும் ஒரு டீச்சர் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணதும் இல்லாம அவங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குறீங்க..? அசிங்கமா இல்ல உங்களுக்கெல்லாம்..? மிஸ் மதி.. எனக்கு என்னவோ இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறதிலிருந்தே நீங்க சொன்னது தான் உண்மையா இருக்கும்னு தோணுது..”
அங்கு நடந்த கலவரத்திலிருந்து உண்மையை உணர்ந்து கொண்டார் அந்த கல்லூரி முதல்வர்.. பல மனிதர்களை கடந்து வந்தவர் ஆயிற்றே.. அத்தனை வருட அனுபவம் அவருக்கு எளிதில் உண்மையை கண்டடைய உதவியது..
“ஆமா மேடம்.. இந்த இந்தர் நான் ஸ்டாஃப் ரூம்க்கு போய் ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சு தான் மேடம் வந்தான்.. அதுவரைக்கும் இந்த சேகர் மதியோட கையை முறுக்கி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஆகணும்னு மிரட்டிக்கிட்டு இருந்தான்..”
மதியழகி பார்கவியின் கையைப் பிடித்து அழுத்தி அவளுக்கு பார்வையாலேயே நன்றி சொன்னாள்.. அவளோ “விடு மதி.. நடந்ததை தானே நான் சொல்றேன்.. இந்த ஆம்பளைங்க எல்லாம் என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்களோ தெரியல.. அவங்க ஒன்னு நினைச்சுட்டாங்கனா அது நடந்தே ஆகணும்.. நம்ம மனசை பத்தி எல்லாம் அவங்க யோசிக்கிறதே கிடையாது..”
சேகர் இந்தர் இருவரையும் மாறி மாறி முறைத்துக் கொண்டே சொன்னாள் பார்கவி..
“சேகர்.. உங்களை இந்த வேலையில இருந்து இதோட டிஸ்மிஸ் பண்ணறேன்.. உங்களோட டிஸ்மிஸல் ஆர்டர்ல நீங்க செஞ்ச தப்பை எல்லாம் மென்ஷன் பண்ண போறேன்.. அப்பதான் வேலை செய்ற இடத்துல பொண்ணுங்க கிட்ட இப்படி நடந்துக்குறவங்களுக்கு எல்லாம் ஒரு பாடமா இருக்கும்..”
கல்லூரி முதல்வர் சொன்னதை கேட்ட மதியழகி “மேடம்.. எனக்கு சேகர் ஃபேமிலியை பத்தி தெரியும் மேடம்.. அவங்க வீட்ல அவர் சம்பளத்தை நம்பி நிறைய பேர் இருக்காங்க.. நீங்க அவரை வேலையை விட்டு அனுப்புறது சரியான தண்டனை தான்.. ஆனா அவர் செஞ்ச தப்புக்கு அவங்க ஃபேமிலியை தாண்டிக்காதிங்க மேடம்.. நீங்க அவரை டிஸ்மிஸ் பண்ணாதீங்க மேடம்.. அவரையே ரெசிக்னேஷன் கொடுத்துட்டு போக சொல்லுங்க.. இதனால அவருக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்த மாதிரி இருக்கும்.. வேற இடத்துல அவருக்கு வேலை கிடைக்கும்.. ஆனா போற இடத்துல நல்லவிதமா நடந்துக்க சொல்லுங்க அவரை..”
அவள் சேகரை முறைத்த படி சொல்லவும் கல்லூரி முதல்வர் “என்ன சேகர்.. இப்பவும் மதி உங்க ஃபேமிலியோட வெல்பீயிங் பத்தி யோசிக்கிறாங்க.. நீங்க அவங்களுக்கு அவ்வளவு கொடுமை பண்ணியும் அவங்க உங்க ஃபியூச்சரை பத்தி யோசிக்கிறாங்க.. அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்றீங்களோ இல்லையோ.. இனிமே அவங்கள இந்த மாதிரி தொந்தரவு பண்ணாம இருங்க.. என்ன ரெசிக்னேஷன் கொடுக்குறீங்களா இல்ல நான் டிஸ்மிஸ் பண்ணவா?” என்று கேட்க “இல்ல மேடம்.. நானே ரெசிக்னேஷன் கொடுக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு தன் ராஜினாமா கடிதத்தை எழுத அங்கு இருந்து வெளியே போய் விட்டான்..
இந்தர் பக்கம் திரும்பிய கல்லூரி முதல்வர் “என்ன இந்தர் ஒன்னையும் டிஸ்மிஸ் பண்ணிடலாமா?” என்று கேட்டார்..
🎵🎼🎶நீ பார்த்துட்டு போனாலும்..
பாக்காம போனாலும்..
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்.. உன்னை..
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்..
நீ பேசிட்டு போனாலும்..
பேசாம போனாலும்..
பேசிக்கிட்டே தான் இருப்பேன்..
நான்..
பேசிக்கிட்டே தான் இருப்பேன்..
நீ அமைதியா பார்த்தாலும்..
கோவமா பாத்தாலும்..
ரெண்டையுமே நான் ரசிப்பேன்..
அந்த
ரெண்டையுமே நான் ரசிப்பேன்..
நீ சிரிச்சுட்டு போனாலும்..
சிரிக்காமல் போனாலும்..
ரசிச்சுக்கிட்டே தான் இருப்பேன்..
நான்..
ரசிச்சுக்கிட்டே தான் இருப்பேன்..
உன்னை கனவில பார்த்தாலும்..
நேரில பார்த்தாலும்..
நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன்.. உன்னை..
நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன்..🎵🎼🎶
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 11
“எதுக்கு மேடம்? நான் என்ன தப்பு செஞ்சேன்..? எனக்கு அவங்களை பிடிச்சிருந்தது.. அவங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ப்ரொபோஸ் பண்ணேன்.. இதில என்ன தப்பு இருக்கு..? இத்தனைக்கும் நான் இப்பவே கல்யாணம் பண்ணனும்னு சொல்லல.. நான் படிச்சு முடிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.. ஏன் கம்மி வயசுக்குற பையன் தன்னை விட அதிகமா வயசு இருக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா.. இல்ல ஒரு ஸ்டூடன்ட் ஒரு டீச்சரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா நம்ம நாட்டுல..? அப்படி ஏதும் ரூல்ஸ் இருக்கிறதா எனக்கு தெரியல.. நான் மதிக்கிட்ட எதுவும் முறை தவறியும் நடக்கல.. நான் நாகரீகமா தான் என் விருப்பத்தை அவங்க கிட்ட சொன்னேன்.. அஃப்கோர்ஸ் அவங்க என் ப்ரொபோஸலை அக்செப்ட் பண்ணல.. அக்சப்ட் பண்ணிட்டாங்கன்னு நான் உங்ககிட்ட சொன்னது பொய்.. அது மட்டும் தான் நான் செஞ்ச தப்பு.. அதுக்கு வேணா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. ஆனா நீங்க டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு நான் எதுவும் தப்பு செஞ்சதா எனக்கு தெரியல..”
தைரியமாய் கல்லூரி முதல்வர் கண்களை பார்த்து பதில் சொன்னான் இந்தர்..
“நீ என்னைக்கு ஃபர்ஸ்ட் மதி கிட்ட ப்ரொபோஸ் பண்ண..?”
“நேத்து பண்ணினேன் மேடம்..”
“அப்போ அவங்க என்ன சொன்னாங்கன்னு என்கிட்ட சொல்ல முடியுமா?”
“அவங்க எனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்லை.. என்னால உன் ப்ரொபோஸலை அக்செப்ட் பண்ண முடியாதுன்னு தான் சொன்னாங்க.. இன் ஃபேக்ட் எங்க வீட்ல எங்க அம்மா அப்பா எங்க அண்ணா என்னை வளர்த்த விதத்தை பத்தி தப்பா பேசினாங்க.. நான் செய்யறது தப்புன்னு எனக்கு அட்வைஸ் பண்ணாங்க”
“அதெல்லாம் விடு.. அதெல்லாம் கோவத்துல பேசுறது.. ஆனா உன் ப்ரொபோஸலை அக்சப்ட் பண்ண முடியாதுன்னு நேத்து மதியம் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டாங்க இல்ல..? ஆமா.. அதுக்கு அப்புறம் நீ மறுபடியும் மதி கிட்ட பேசுனியா?”
“பேசினேன் மேடம்.. இன்னிக்கு காலைல பேசினேன் மேடம்.. மறுபடியும் மதி கிட்ட என்னை அவங்களுடைய லைஃப் பார்ட்னரா ஏத்துக்க சொல்லி கேட்டேன்.. ஆனா அவங்க வேற யாரையோ விரும்புறதா என்கிட்ட சொன்னாங்க.. அவங்களோட வயசு அதிகமானவரை விரும்புறதா சொன்னாங்க.. ஆனாலும் நான் அதை நம்பல.. ஏன்னா மதியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அவங்க ஈவினிங் ஒரு பார்ட் டைம் ஜாப் பண்றாங்கன்றது கூட எனக்கு தெரியும்.. அவங்க குடும்பத்தை பத்தியும் எனக்கு தெரியும்.. அவங்க தன்னோட தங்கச்சி வாழ்க்கை செட்டில் ஆகாம கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க எனக்கு நல்லாவே தெரியும்”
“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்? எல்லா இடத்துக்கும் அவங்களை ஃபாலோ பண்ணி போனியா?”
புருவம் நெறித்து கல்லூரி முதல்வர் கேட்க “இதில என்ன டவுட் மேடம்? ஃபாலோ பண்ணாம எனக்கு எப்படி அவங்களை பத்தி எல்லா டீடெயில்ஸூம் தெரியும்.. ஆமா.. அவங்களை நான் அவங்கள பார்த்த நாளா ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்..”
அவன் தெனாவட்டாய் பதில் சொல்ல கல்லூரி முதல்வரோ “முதல்ல இஷ்டம் இல்லாதவங்களை உன் லவ்வை அக்செப்ட் பண்ண சொல்லி ஃபோர்ஸ் பண்ணி இருக்கே.. அவங்களை இவ்வளவு நாளா ஸ்டாக் பண்ணி இருக்கே.. உன் மேல மதி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாங்கன்னா உன் வாழ்க்கையே அழிஞ்சிடும்.. நான் தப்பே பண்ணல தப்பே பண்ணலைன்னு சொல்றியே.. உன் மேல இஷ்டம் இல்லன்னு சொல்ற பொண்ணை.. இன்னொருத்தரை விரும்பறேன்னு சொல்ற பொண்ணை.. நீ உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி ஃபோர்ஸ் பண்றது தப்பு கிடையாதா? உங்க ஊர்ல இதுக்கு பேரு தப்பு இல்லையாப்பா..?”
“இல்ல மேடம்.. மதிக்கு நிச்சயமா என் மேல விருப்பம் இருக்கு.. ஆனா தன்னைவிட எட்டு ஒன்பது வயசு சின்ன பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த சமூகம் என்ன சொல்லுமோன்ற பயத்துல தான் அவங்க என் பிரபோசலை அக்செப்ட் பண்ணிக்க தயங்குறாங்களே தவிர இந்த சொசைட்டி இந்த மாதிரி ஒரு கல்யாணத்தை அக்னாலேஜ் பண்ணா அவங்களும் என் ப்ரொபோஸலை இந்நேரம் அக்செப்ட் பண்ணி இருப்பாங்க.. அவங்க வேற ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்றதும் பொய்.. என்னை சமாளிக்கறதுக்காக அவங்க சொல்ற பொய் அது.. இது எனக்கு நல்லாவே தெரியும்.. அதனாலதான் என்னைதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி அவங்களை நான் ஃபோர்ஸ் பண்ணேன்..”
அவன் தெளிவாய் சொன்ன நேரம் அப்படியே கண்ணை மூடி பெருமூச்சு விட்டாள் மதியழகி.. கல்லூரி முதல்வருக்கும் அவன் பிடிவாதம் புரிந்தது..
“சரி.. இனிமே உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல.. நாளைக்கு உங்க அண்ணாவை என்னை பாக்க வர சொல்லு.. நான் எதுவா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கிறேன்.. அவரையே கேட்ட ஒரு முடிவுக்கு வரலாம் நீ செஞ்சது தப்பா இல்லையான்னு..”
இந்த வார்த்தையில் இந்தர் கொஞ்சம் பதட்டமானான்..
பயத்தில் எச்சில் விழுங்கிய படி “அண்ணாவா? அண்ணா எதுக்கு மேடம்?” என்று கேட்டவனை பார்த்த கல்லூரி முதல்வர் “பரவாயில்ல.. பய சிக்கிட்டான்.. இவனோட வீக்னெஸ் என்னன்னு தெரிஞ்சிருச்சு.. இனிமே இவனை வழிக்கு கொண்டு வந்துடலாம்.” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்..
“அவரை எதுக்கு கூப்பிடுறீங்க மேடம்..? உங்களுக்கு என்ன இப்ப..? நான் மதியை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அவ்வளவு தானே? சரி மேடம்.. இனிமே நான் அவங்களை இந்த காலேஜ்குள்ள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. அவங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கவும் மாட்டேன்.. இந்த காலேஜ்க்குள்ள அவங்க கிட்ட நான் பேசக்கூட மாட்டேன்.. ஆனா எங்க அண்ணாவை எல்லாம் நான் கூட்டிட்டு வர மாட்டேன்.. அவர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணதா எனக்கு தோணல.. அப்படி உங்களுக்கு டிஸ்மிஸ் பண்ணி தான் ஆகனும்னா என்னை டிஸ்மிஸ் பண்ணிக்கோங்க.. நான் அதை பத்தி எங்க அண்ணா கிட்ட எப்படியாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. ஆனா எந்த காரணத்தை கொண்டும் எங்க அண்ணா இது விஷயமா காலேஜுக்கு வர மாட்டாரு..”
உறுதியான குரலில் சொன்னவனுக்கோ உள்ளுக்குள் தன் அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வேதனை படுவார் என்று எண்ணுகையில் பெரிய கலவரமே மூண்டது அவன் மனதில்..
“அப்போ எனக்கு உன்னை டிஸ்மிஸ் பண்றதை தவிர வேற ஆப்ஷனே இல்ல..”
இந்தர் சொன்னதைக் கேட்டு ஒரு பெருமூச்சை விட்டு இடம் வலமாய் தலையாட்டிய படி அந்த கல்லூரி முதல்வர் சொல்ல மதியோ “வேண்டாம் மேடம்.. அவன்தான் சொல்றான்ல.. இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்னு.. நீங்க முடிஞ்சா அவங்க அண்ணாவையே கூப்பிட்டு பேசுங்க.. எனக்கு தெரிஞ்சு அது தான் மேடம் சரியா வரும்..” என்றாள் இந்தரை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்த படி..
“ஓகே மேடம்.. எனக்கு கிளாஸ் இருக்கு.. ஏற்கனவே 10 15 மினிட்ஸ் லேட் ஆயிடுச்சு.. நான் போகணும்.. நான் கிளம்பவா..?”
அவள் முதல்வரை அனுமதி கேட்க அவரும் “போமா.. எனக்கு உன்னை பத்தி நல்லாவே தெரியும்.. இந்த காலத்து பசங்களை பத்தியும் தெரியும்.. நான் உன்னை எதுவுமே தப்பா நினைக்கல.. ஆனா இனிமே சுத்தி இருக்கிறவங்களை கொஞ்சம் வாட்ச் பண்ணி பார்த்து நடந்துக்க.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..”
“ஓகே மேடம்.. தேங்க்யூ வெரி மச்..” , அங்கிருந்து வெளியேறினாள் மதியழகி..
இன்னொரு முறை இந்தருக்கு எச்சரிக்கை விடுத்து அவனுடைய வகுப்புக்கே அனுப்பி வைத்தார் கல்லூரி முதல்வர்..
அன்று மாலை கால் சென்டர் வேலைக்கு கிளம்பி வீட்டுக்கு வெளியே வந்த மதியை பின் தொடர்ந்தான் இந்தர்..
“மதி.. கொஞ்சம் நில்லு..” என்று நடந்து சென்று கொண்டிருந்தவளை பின்னிருந்து அவன் அழைக்க அவளோ அவன் பிடிவாதத்தை எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டே “நீ இன்னும் கூட என் பின்னாடி வரியா? ஏன் பிரின்ஸ்பல் மேடம் என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இல்லையா உனக்கு?” என்று கேட்க “ஏன் உனக்கு ஞாபகம் இல்லையா? அந்த காலேஜுக்குள்ள உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்னு தான் நான் பிரின்சிபல் கிட்ட சொன்னேன்.. இது காலேஜும் கிடையாது.. இங்க உன்னை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு எனக்கு எந்த ரூலும் கிடையாது.. எனக்கு என்ன தோணுதோ நான் பண்ணலாம்..”
அவன் அவளை தீர்க்கமாய் பார்த்து சொல்ல “ஐயோ இந்தர்.. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.. எனக்கு உன் மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை.. வரவும் வராது.. நான் இன்னொருத்தரை விரும்பறேன்னு சொல்றேன் இல்ல? அது உண்மைதான்.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ..”
“அப்படியா.. அப்படின்னா சரி.. நீ சொன்ன இல்ல..? அடுத்த வாரம் உன்னோட அந்த இமேஜினரி லவ்வரோட எங்கேயோ டேட்டிங் போறேன்னு.. எங்க போறீங்கன்னு அவரு கிட்ட கேட்டு சொல்லு.. நான் அங்க வந்து உன் லவ்வரை மீட் பண்ணிக்கிறேன்..”
“நீ எதுக்கு அவரை மீட் பண்ணனும்..?”
“ஏன்.. நான் அவரை மீட் பண்ணி பேசினா உன் லவ்வர் உன்னை விட்டுட்டு போயிடுவாரா? அப்ப அப்படி உன் மேல நம்பிக்கை இல்லாம போறவரு நிஜமாவே உன்னை லவ் பண்றாருன்னு நீ நினைக்கிறியா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவர் என்னை சந்தேகப்படவே மாட்டாரு.. அதுவும் உன்னை மாதிரி ஒரு சின்ன பையனோட வச்சு.. இப்ப என்ன..? உனக்கு அவரை மீட் பண்ணனும்.. அவ்வளவுதானே? சரி.. அடுத்த வாரம் நிச்சயமா என் லவ்வரை மீட் பண்ணலாம்.. ஆனா ஒரு கண்டிஷன்.. அது வரைக்கும் நீ என்னை தொந்தரவு பண்ண கூடாது.. ஒருவேளை என் லவ்வரை மீட் பண்ணி நான் நிஜமாவே லவ் பண்றேன்னு உனக்கு புரிஞ்சிடுச்சுன்னா அதுக்கப்புறமும் நீ என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.. இதுக்கு ஓகேனா அடுத்த வாரம் நீ என் லவ்வரை மீட் பண்ணலாம்..”
அவள் சொன்னதைக் கேட்டவன் உடனடியாக யோசிக்காமல் அதற்கு ஒப்புக்கொண்டான்..
“ஓகே.. தென்.. லெட்ஸ் மீட் அகெய்ன் நெக்ஸ்ட் வீக்..” சொல்லிவிட்டு அங்கிருந்து அவளை திரும்பியும் பாராமல் நடந்தான் அவன்..
இப்போது மதி இன்னும் குழப்பத்துக்கு ஆளானாள்.. தன்னுடைய காதலன் என்று அவன் முன்னால் யாரை கொண்டு போய் நிறுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நடுச்சாலையில் நின்றாள் அவள்..
🎶🎼🎵நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…
நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…
ஓம் சாந்தி சாந்தி ஓம் சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…
ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…
என்னோடு வா வீடு வரைக்கும்…
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…
இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே…
இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே..🎶🎼🎵
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 12
சிறிது நேரம் குழம்பிக் கொண்டு நின்று கொண்டிருந்த மதி சட்டென பார்கவிக்கு தன் கைபேசி மூலம் அழைத்தாள்..
பார்கவியிடம் என்ன நடந்தது என்று விவரமாக சொன்னவள் இந்த பிரச்சனை தீர என்ன செய்வது என்று தெரியவில்லை என்று புலம்பி தள்ள அன்று மாலை அந்த கால் சென்டர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருமாறு அவளிடம் சொன்னாள் பார்கவி..
“எதுக்கு பார்கவி..? இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டா கூட லாஸ் ஆஃப் பே ஆயிடும்..”
“சரி.. நான் சொல்றதை கேளு.. நீ நாளைக்கு வீட்டுக்கு வா.. நாளைக்கு சனிக்கிழமை லீவு தானே? நான் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு நல்ல ஐடியா சொல்றேன்.. அப்புறம் நீ உன் வேலையை நிம்மதியா பார்க்கலாம்.. இல்லன்னா உன் மனசுல இந்த பிரச்சனை தான் எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும்.. உன்னால ஒழுங்கா வேலை கூட பார்க்க முடியாது.. முதல்ல இந்த இந்தர் பையனை ஆஃப் பண்ணணும்.. அதுக்கான வழியை நாளைக்கு டிசைட் பண்ணுவோம்.. நீ வீட்டுக்கு வா.. நம்ம பேசலாம்..”
அவள் சொன்னதை கேட்டவள் அதுவும் சரிதான் என்று எண்ணி பார்கவியின் வீட்டிற்கு மறுநாள் மாலை வருவதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்..
அன்று சனிக்கிழமை.. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுவதுமாய் தன் தம்பியோடு மட்டுமே செலவிடுவான் ரணதீரன்.. எவ்வளவு கோடி கொடுக்கும் படப்பிடிப்பு வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு போவதில்லை அவன்..
அன்றும் அதே போல காலையில் சற்று தாமதமாகவே எழுந்தவன் தன் தம்பி எழுவதற்குள் அவனுக்கு சுட சுட மணக்க மணக்க ஃபில்டர் காஃபியை கலந்து எடுத்துக் கொண்டு போய் அவர்கள் அறைக்கு சென்று காபி கோப்பையை மேஜையில் வைத்துவிட்டு “டேய் இந்தரூஊஊ.. எந்திரிடா கண்ணூஊஊ.. இதோ பாரு.. விடிஞ்சு சூரியன் உச்சிக்கு வரப்போவுதுடா தம்பி.. இப்படி நேரங்காலம் இல்லாம பட்டினி கெட்ந்தா உடம்பு இன்னாத்திக்கு ஆகும்..? அம்மாம் தூக்கம் வந்திச்சின்னாலும் இந்த காபியை ரவ குடிச்சிட்டு அப்புறம் கவுந்து படுத்துக்கினு தூங்குடா.. எந்திரி டா ராசா.. வவுத்தை எம்ப்டியா போடாத..”
தீரன் அப்படி கொஞ்சி கெஞ்சி எழுப்பவும் மெதுவாக சோம்பல் முறித்துக் கொண்டு கண் விழித்த இந்தர் “அண்ணா.. காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டீங்களாண்ணா.. ஆனா எனக்கு தூக்கம் தூக்கமா வருதே.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கவா? ப்ளீஸ்ணே..”
“இன்னாது.. இன்னும் தம்மா நேரம் தூங்கணுமா..? சரி.. தூங்கிக்க.. ஆனா இந்த காப்பியை குட்ச்சிட்டு அப்புறம் கவுந்தட்ச்சு பட்த்துக்க..”
“ஐயோ.. அண்ணா ப்ளீஸ்.. காபி குடிச்சா தூக்கம் கலஞ்சிடும்.. நான் அப்புறமா குடிச்சுக்கிறேன்ணா..”
அவன் மறுபடியும் போர்வைக்குள் புகுந்து கொள்ள போர்வையை இழுத்து விலக்கி தலையை இடவலமாய் ஆட்டி “த பாரு.. எம்மா நேரம் வேணா நீ தூங்கு.. ஆனா வவுத்தை காலியா போடக்கூடாது.. பாரே.. இப்புடி எதுவுமே துன்னாம படுத்துக்கினே இருந்தினா அப்புறம் சீக்காயிருவ டா ராஜா.. எந்திரிச்சு இந்த காப்பியை மொதல்ல குடிச்சுக்கோடா தம்பி..”
“வேற வழி..” என்று மெதுவாக எழுந்தவன் அந்த காபியை மெல்ல அரை தூக்க கண்ணோடு ஏனோதானோவென்று மெல்ல பருகி ஒரு மிடறு விழுங்கியதும் அது நாவின் சுவை மொட்டுக்களை தீண்டி அதை தாண்டி தொண்டை வழி வயிற்றுக்குள் சென்ற நொடி தான் அவன் வயிறு எவ்வளவு காலியாய் இருந்தது என அவனுக்கு எடுத்துக்காட்டியது.. நிஜமாகவே வயிறு ரொம்பவும் தான் பசித்தது அவனுக்கு..
“அண்ணா நெஜமாவே பசிக்குதுண்ணா..”
“அதான் நான் அப்பவே சொல்லிக்கின்னேன்ல.. சரி.. போ.. போய் பல்லை விலக்கிட்டு வா.. உனக்கு நாஸ்தா ரெடியா கீது.. சீக்கிரம் வந்து துன்னு..”
“அண்ணா.. முதல்ல வந்து டிஃபன் சாப்பிட்டுட்டு அப்புறமா பல்லு வெலக்குறேனே ப்ளீஸ்..”
“அதெல்லாம் முடியாது.. உடம்பு சீக்காப்போவும்.. நீ போய் பல்லு விலக்கிட்டு வா.. அண்ணன் மாதிரி சும்மா இஷ்டாங்கா இருக்கணும் டா.. பாரு எப்படி நோஞ்சாங் கணக்கா கீரன்னு..”
அதற்கு மேல் அவன் அண்ணனிடம் பேசி சமாளிக்க முடியாது என்று புரிந்தவன் மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து குளியல் அறைக்கு சென்றான்..
அதற்குள் ரணதீரன் கீழே வந்து ஒரு தட்டில் தான் செய்து வைத்திருந்த தோசைகளையும் அதற்கு தொட்டுக்கொள்ளும் பக்க உணவுகளாய் இரண்டு விதமான சட்னி.. சாம்பார்.. கூடவே மிளகாய் பொடி.. என விதவிதமாய் எடுத்து வைத்தான்..
அவன் அப்படித்தான்.. சனி ஞாயிறு இரண்டு நாளும் முழுக்க முழுக்க தானே சமைத்து தம்பிக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளிப்பதில் கவனமாய் இருப்பான்..
வார நாட்கள் முழுவதும் தம்பி எங்கே எங்கேயோ வெளியில் உண்கிறானே என்ற வருத்தம் அவனுக்கு மேலோங்கி நிற்கும்..
அதனால் அவன் உடல் நிலை கெட்டுப் போய்விடப் போகிறதே என்ற வருத்தத்தோடு இருந்தாலும் வார இறுதி நாட்களில் தானே தன் கையால் சமைத்து அவனுக்கு ஊட்டி விட்டு திருப்திப்பட்டு கொள்வான் ரணதீரன்..
தம்பியும் வார இறுதியில் அண்ணன் சமைத்து தரும் அவனுடைய கைப்பக்குவம் நிறைந்த உணவுக்காக வாரம் முழுதும் காத்துக் கொண்டுதான் இருப்பான்.. அப்படி அவனை பாசத்தில் கட்டி போட்டிருந்தான் ரணதீரன்..
ஒவ்வொன்றையும் அவனுக்கு பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான் தீரன்.. ஆனால் இப்படி அவன் கேட்பதையெல்லாம் செய்வதனால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று புரியாமல் செய்து கொண்டிருந்தான் அவன்..
தன் அறையிலிருந்து வெளி வந்த இந்தர் காலை உணவின் கம கம வாசம் மூக்கை துளைக்க அப்படியே அந்த வாசத்தை கண்ணை மூடி நுகர்ந்து கொண்டே “அண்ணா.. சான்சே இல்லண்ணா.. எப்படிண்ணா இப்படி சமைக்கிறீங்க? என் பசி இன்னும் அதிகமாயிடுச்சு..”
“இந்தரு.. மணி ஏற்கனவே 10 ஆயிடுச்சு.. நாஸ்தா எல்லாம் காலையில 7:00 மணிக்கு துன்னனும்டா.. இப்படி 10 மணிக்கு துன்னா உடம்பு இன்னாத்துக்கு ஆவுறது? இவ்ளோ நேரம் வவுத்தை கொலப்பட்டினி போட்டின்னா உன் உடம்பு பாழா பூடும் டா ராசா.. நேரா நேரத்துக்கு நீ நல்லா சாப்ட கொள்ள உன் உடம்பை அண்ணன் மாதிரியே சும்மா கன்னா வெச்சிக்கினு இருந்தா தானே அண்ணனுக்கு நிம்மதியா இருக்கும்டா தம்பி.. இல்லின்னா உன்னை ஒழுங்கா கண்டுக்காம நோஞ்சான் பயலாக்கிக்கினேன்னு அண்ணனுக்கு பேஜாரா பூடும்டா..”
தன் அன்ணன் புலம்பியதைக் கேட்டான் “ஐயோ அண்ணா.. இனிமே காலையில் 7:00 மணிக்கு எல்லாம் எழுந்துடறேன்னா.. நீங்க கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.. சரி வாங்க சாப்பிடலாம்..” என்று சொன்னவனை சாப்பாட்டு மேஜை முன்னால் அமர வைத்து தானே தோசையை விண்டு சாம்பாரில் தோய்த்து அவன் வாயில் ஊட்டி விட்டான் தீரன்..
இது ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் அவர்களுக்குள் நடக்கும் வழக்கமான அழகான அன்பான விஷயம் தான்.. ஆனால் ஒவ்வொரு முறை தீரன் அவனுக்கு உணவை ஊட்டும் பொழுதும் கலங்கித்தான் போவான் இந்தர்..
தந்தை இறந்ததிலிருந்து தனக்கு ஒரு தந்தையாகவே மாறி விட்டிருந்த அவனின் அண்ணன் தாயும் இறந்த பிறகு தான் தான் பெற்ற குழந்தையாகவே இந்தரை பாவிக்க தொடங்கி விட்டிருந்தான்..
ஒவ்வொரு முறையும் ரணதீரன் தன் அன்பில் இந்தரை திக்குமுக்காட வைக்கும் போது இந்தர் அந்த நேரங்களில் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு போவான் தன்னையும் மீறி..
இதில் தாய் தந்தை போல தான் சரியாக இந்தரை கவனிக்கவில்லையோ என்று அவ்வப்போது தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாக வேறு சொல்லுவான் ரணதீரன்..
அதைக் கேட்க இந்தருக்கோ ரொம்பவும் வேதனையாக இருக்கும்.. எத்தனையோ முறை தன் அண்ணனிடம் சொல்லி இருக்கிறான்..
“அண்ணா ஒருவேளை நீ எனக்கு முன்னாடி பொறக்காமயே போயிருந்தா நான் ஒத்த புள்ளயா அம்மா அப்பாக்கு பொறந்து இருந்தேன்னா இத்தனை நேரம் எங்கேயோ ஒரு இடத்துல பிச்சை எடுத்துட்டு தான் இருந்திருப்பேன்ணா.. ஆனா அம்மா அப்பா இல்லாத குறை தெரியாம நீ என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கறேண்ணா.. உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம்.. நீ என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறே.. அம்மா அப்பா இருந்து இருந்தா கூட என்னை இவ்வளவு நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாங்க.. நான் எது கேட்டாலும் எனக்கு உடனே வாங்கி தர்ற.. உனக்குன்னு தனி வண்டி கார் எதுவுமே இல்லை.. ஆனா எனக்கு வண்டி வாங்கி கொடுத்து இருக்கே.. எனக்கு எவ்ளோ நல்ல டிரஸ் வாங்கி கொடுக்கிற.. தினமும் பணக்கார வீட்டு பிள்ளைங்க மாதிரி செலவுக்கு கை நிறைய பணம் கொடுத்து அனுப்புற.. இதைவிட எனக்கு வேற என்னண்ணா வேணும்..? அம்மா அப்பா இருந்திருந்தா கூட எனக்கு இவ்வளவு செஞ்சிருக்க மாட்டாங்க.. என்னை பொறுத்த வரைக்கும் நீ எனக்கு அம்மா அப்பாக்கும் மேல ணா..” குரல் தழுதழுக்க சொல்லுவான் இந்தர்..
இப்போது அவனுக்கு தோசை ஊட்டிக் கொண்டிருந்த ரணதீரனுக்கு தானும் தோசையை எடுத்து ஊட்டினான் இந்தர்.. வாராவாரம் அந்த வீட்டில் நடக்கும் பாச பரிமாற்ற காட்சி தான் இது.. ஆனால் இருவருக்கும் இப்படி அன்பை காட்டுவதில் சலிப்பே ஏற்படுவதில்லை..
அடுத்து மதிய உணவை அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சமையலறையை ஒரு ஒரு வழியாக்கி நளபாகம் முடித்து மதியமும் ஒன்றாக உணவு உண்பார்கள்..
உணவு உண்ணும் நேரத்தில் அந்த வாரம் முழுதும் இந்தரின் கல்லூரி கதைகளை பற்றி கேட்டுக் கொண்டிருப்பான் ரணதீரன்.. அதேபோல ரணதீரனின் படபிடிப்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சுவாரசியமாக கேட்டு தெரிந்து கொள்வான் இந்தர்..
ஆனால் ஒரு நாளும் தன் அண்ணனிடம் தான் கல்லூரிக்கு சரிவர செல்லாது பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை பற்றி சொன்னதே இல்லை இந்தர்..
மதியின் வகுப்பை தவிர மற்ற வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்ல மாட்டானே தவிர எப்படியோ படித்து எல்லா பாடங்களிலும் தேர்வாகி விடுவான் இந்தர்.. காப்பியடிப்பது.. பிட் அடிப்பது என்று இப்படி எந்த தப்பான செயலிலும் ஈடுபட மாட்டான் அவன்.. ஆனாலும் எல்லா பாடங்களிலும் தேறி விடுவான்..
இதனால் தான் அவன் கல்லூரிக்கு பாதி நேரம் போகாமல் இருப்பது இதுவரை அவன் அண்ணனுக்கு தெரியாமல் இருந்தது.. அப்படி போகாமல் இருந்தால் அவன் எப்படி தேர்வுகளில் இப்படி மதிப்பெண்கள் பெற முடியும் என்று எண்ணி இருந்தான் தீரன்..
மதிய உணவிற்கு பிறகு இருவரும் வண்டி ஏறி லாங் டிரைவ் போய்விடுவார்கள்..
வெளியே போய் ரோட்டோர கடையில் மாங்காய் துண்டு.. ஐஸ்கிரீம்.. மிளகாய் பஜ்ஜி.. என்று அவனுக்கு பிடித்தது எல்லாம் வாங்கி இருவரும் கடற்கரையில் போய் அமர்ந்து சிறிது நேரம் அலைகளோடு அளவளாவி விட்டு தீரன் நடித்த ஏதாவது ஒரு திரைப்படத்திற்கு போய் பார்த்துவிட்டு தான் வருவார்கள்… அதில் தீரன் செய்கின்ற சாகசங்களை பற்றி அவ்வப்போது இந்தர் பாராட்டு மழை பொழிய அதில் நனைந்து ஆனந்தமாய் இருப்பான் தீரன்..
இரவு இருவரும் நேரம் கழித்து வீட்டுக்கு வருபவர்கள் அம்மா பிள்ளை போல கட்டி அணைத்துக் கொண்டு உறங்கி விடுவார்கள்.. இது சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இன்று வரை இருவரும் பின்பற்றி வரும் நடைமுறை.. எதற்காகவும் இந்த நடைமுறையில் எந்த மாறுதலும் இதுவரை இருந்திருக்கவில்லை..
அந்த வாரமும் அப்படியே இருவரும் சனிக்கிழமை மாலை கடற்கரைக்கு போயிருந்த வேளையில் அங்கே அவர்களை பின்தொடர்ந்து தன் தோழியுடன் வந்து சேர்ந்தாள் மலரழகி..
அதே நேரத்தில் மதியழகி தன் தோழி பார்கவி வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்..
இரண்டு பெண்களும் இரண்டு இடங்களில் அவரவர் பிரச்சினைகளை பார்த்துக் கொண்டிருக்க வீட்டில் தனியாக இருந்த அவர்களின் தந்தை தமிழ்வாணனை சந்திக்க அங்கு வந்திருந்தான் சேகர்..
🎵🎼🎶நம்மை போல நெஞ்சம் கொண்ட..
அண்ணன் தம்பி யாரும் இல்லை..
தன்னைப் போல என்னை எண்ணும்..
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை..
தம்பி உந்தன் உள்ளம் தானே..
அண்ணன் என்றும் வாழும் எல்லை..
ஒன்றாய் காணும் வானம் என்றும்..
ரெண்டாய் மாற நியாயம் இல்லை..
கண்ணோடு தான் உன் வண்ணம்..
நெஞ்சோடு தான்
உன் எண்ணம்..
முன்னேறு நீ மென்மேலும்..
என் ஆசைகள் கை கூடும்..
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க..🎼🎶🎵
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 13
கடற்கரையில் தன் தம்பியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இரணதீரன் “டேய் தம்பி வரியாடா? தம்மா நேரம் அலைல நீஞ்சி விளையாடலாம்..”
அலையோடு விளையாட அவன் தன் தம்பியை அழைக்க அதே நேரத்தில் அங்கே தன் தோழியோடு வந்திருந்த மலரழகி அந்த இருவரிடமிருந்து நான்கு ஐந்து அடி இடைவெளியில் அமர்ந்து அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாள்..
“ஹூம்.. இங்க ஒருத்தி காலம் முழுக்க உன்னோட விளையாட காத்திருக்கேன்.. அது புரியாம தம்பியோட போய் விளையாடுறேன்கறியேடா..” உள்ளுக்குள் புலம்பினாள் அவள்..
அவளின் தோழியோ “ஏய் மலரு.. என்னடி உன் ஆளு.. பீச்சுக்கு கூட தம்பியோட தான் வருவான் போலயே.. ரொம்ப கஷ்டம் டி.. இவனுக்கு எல்லாம் ரொமான்ஸை புரிய வச்சு.. காதல் வர வச்சு.. நீ காதலிச்சு.. கல்யாணம் பண்ணிக்கிட்டு.. இதெல்லாம் நடக்கிற காரியமா டி..? நிஜமாவே உனக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமாடி..?”
அவள் கேட்ட வேகத்தில் அவள் பக்கம் திரும்பி முறைத்த மலரழகி “ஏய்.. ஏதாவது ஏடாகூடமா பேசினே.. அவ்வளவு தான்.. உன் கழுத்தை அப்படியே நெரிச்சு கொன்னுடுவேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு என் தீரன் தான் வேணும்.. வேற யாரும் வேணாம்.. என் தீரனை எப்படி என்னை பார்க்க வைக்கணும்னு எனக்கு தெரியும்..”
அதற்குள் சகோதரர்கள் இருவரும் தங்கள் மேல் உடையை களைந்து விட்டு கடல் அலை அருகில் ஷாட்ஸோடு குதித்து அலையில் போட்டி போட்டு நீந்த தொடங்க மலரழகியோ தீரனை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள்..
ஏற்கனவே பலமுறை படப்பிடிப்புகளில் அவனுடைய தேக்கு மர தேகத்தின் திமிறி நிற்கும் அழகையும் அதன் வண்மையையும் திண்மையையும் பார்த்து ரசித்திருந்தவள் இப்போது நீரில் நனைந்த கிரேக்க சிற்பமாய் அவன் அலையை எதிர்த்து நீந்திக் கொண்டிருக்க அவனையே வைத்த கண்ணை விலக்காமல் பார்த்து ரசித்திருந்தாள் பேதை அவள்..
அடுத்த சில நொடிகளில் தோழியின் காதில் ஏதோ சொன்ன மலர் அவள் கையையும் பிடித்துக் கொண்டு அலையை நோக்கி போனாள்..
இங்கே தம்பியோடு நீந்தி கொண்டு வந்த இரணதீரன் சிறிது தூரம் கடலுக்குள் சென்றதும் இந்தரிடம் “போதும் இந்தரு.. ரொம்ப உள்ள போக வோணாம்.. இப்படியே கரைக்கு திரும்பிக்லாம்..” என்று சொல்லி மறுபடியும் கரை பக்கம் தம்பியோடு நீந்த ஆரம்பித்தான்..
மலரழகி தன் தோழியோடு விளையாடிக் கொண்டிருந்தவள் அவள் காதில் மறுபடியும் ஏதோ கிசுகிசுக்க அவளோ “ஐயோ வேணாண்டி.. இந்த விபரீத விளையாட்டு.. சொன்னா கேளு..” எனவும் அவளோ “அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி.. என் தீரன் இருக்கான்.. அவன் பாத்துப்பான்..” என்று சொல்லி திடீரென தண்ணீருக்குள் நடந்து கடலுக்குள் செல்ல தொடங்கினாள்..
அவள் தோழி “ஏய் மலரு.. அடியேய்.. மலரூஊஊஊ.. வேணாம்டி.. நில்லுடி..” என்று கத்த கத்த அலைகளை எதிர்த்து கடலுக்குள் மெல்ல நகர்ந்தவள் ஒரு சில நொடிகளிலேயே அலையின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்..
இதைப் பார்த்த அவள் தோழிக்கு இதயம் படப்படவென துடிக்க தொடங்கியது.. ஒரு நொடி செயலற்று நின்று மறுபடியும் அப்போது தான் கரைக்கு நீந்தி வந்து கொண்டிருந்த தீரனும் அவன் தம்பி இந்தரும் கரையை நெருங்கி இருக்க அவர்கள் பக்கம் திரும்பி சத்தமாக கத்தினாள்..
“சார் சார்.. என் ஃப்ரெண்ட்டை அலை அடிச்சிட்டு போகுது சார்.. அங்க பாருங்க சார்.. ரொம்ப தூரம் உள்ள இழுத்துட்டு போயிட்டுது சார்.. கொஞ்சம் காப்பாத்துங்க சார்.. அவளுக்கு நீச்சல் கூட தெரியாது சார்..” எனவும் அந்த தண்ணீர் பரப்புக்குள் திரும்பி பார்த்தவன் அங்கே மலரழகி தண்ணீரில் மூச்சு திணறிக்கொண்டு இன்னும் இரண்டு மூன்று நிமிடங்களில் முழுகி விடும் ஆபத்தில் இருந்ததை பார்த்தான்..
வேகவேகமாக அண்ணன் தம்பி இருவரும் மலரழகியை காப்பாற்ற அவளை நோக்கி நீச்சல் அடித்து சென்றார்கள்.. மலரழகி தீரன் வந்து தன்னை காக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆப்த்தான செயலை செய்திருக்க ஆனால் இந்தர் அவனை விட வேகமாக நீந்தி சென்று மலரழகியை காப்பாற்றி கரைக்கு இழுத்து வர முயன்றான்.. அவளோ அவன் கையில் இருந்து நழுவி விடுபட்டு போக போராட தொடங்கினாள்..
அதை புரிந்து கொண்டவன் “ஹலோ.. என்ன பண்றீங்க? இப்படி போனீங்கன்னா செத்து போயிருவீங்க.. என்ன..? சூசைட் அட்டெம்ப்ட் ஏதாவது பண்றீங்களா? அதெல்லாம் ரொம்ப தப்பு மேடம்.. முதல்ல வாங்க.. எதுவா இருந்தாலும் கரைக்கு போய் சரி பண்ணிக்கலாம்..” என்றவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் காற்றோடு கரைந்து போனது.. அவள் செவிக்குள் ஒரு வார்த்தை கூட நுழைந்து இருக்கவில்லை..
அதற்கு மேல் அவளிடம் பேசி பயன் இல்லை என்று புரிந்து கொண்டவன் அவள் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து வர அவளுக்கோ முடி ஏகத்துக்கும் வலித்தது..
“ஐயோ.. வலிக்குது.. விடுங்க..” என்று கத்தியவளை “அப்போ பேசாம அமைதியா என் கூட கரைக்கு வரணும்.. என் கையில இருந்து நழுவி போகக்கூடாது.. உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான் அவன்..
அவளோ எரிச்சலோடு “தெரியாது.. ஆனா நீங்க எதுக்கு என்னை காப்பாத்துனீங்க..? உங்களை யாரு என்னை காப்பாத்த வர சொன்னா..?”
“தற்கொலை பண்ணிக்கிறவங்க எல்லாரும் இப்படி சொல்றது சகஜம் தான்.. ஆனா தற்கொலை எதுக்குமே தீர்வு கிடையாது..” என்று சொன்னவன் கடலில் இருந்து சிறிது வெளி பக்கமாக வந்ததும் அவளை இரு கையில் ஏந்தி கரைக்கு நடந்து வந்தான்..
அவளோ இந்தரின் வெற்று மார்போடு அவள் உடல் அங்காங்கே பட்டு உரசி கொண்டிருக்க அவளை அவன் கையில் ஏந்தி தூக்கி வந்தது சுத்தமாக பிடிக்காமல் அவன் கையில் நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருந்தாள்..
ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஆகி இருந்தால் அவள் முழுகி இருப்பது நிச்சயம்.. அலை அடித்துப் போன வேகத்தில் உடம்பு முழுவதும் வலி எடுக்க லேசாக மயக்கம் வந்தது அவளுக்கு.. அப்படியே கரைக்கு வருவதற்குள் அவன் கைகளிலேயே மயங்கி அவள் சரிய “ஹலோ.. மேடம்.. என்ன ஆச்சு? இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு தானே இருந்தாங்க? அண்ணா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கண்ணா..” என்று தன் அண்ணனுக்கும் குரல் கொடுத்தான் இந்தர்..
கரையில் அவளை மண் தரையில் படுக்க வைத்தான்..
அவளைப் பார்த்து “தண்ணி குட்ச்சி இருப்பாங்கடா..” என்று சொன்ன தீரன் அவளின் தோழியை பார்த்து “ஏங்க.. இன்னா அப்படியே பார்த்துக்கினு கீறிங்க? அவங்க வவுத்தை அமுக்கி தண்ணிய வெளியே எடுக்க மொயற்சி பண்ணுங்க..” என்று அவளை அவசரப்படுத்த அவளோ அவன் பேசிய பாஷையில் அதிர்ந்து போய் அப்படியே அவனைப் பார்த்தபடி சிலையாக நின்றாள்..
“ஏம்மா கண்ணு.. இன்னா வச்ச கண்ணி வாங்காம அப்படியே என்னியே பார்த்துக்கினு கீறே.. இன்னா.. உனிக்கு ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்டா?” என்று கேட்க சில நொடிகள் தடுமாறியவள் பிறகு தன்னை தானே சுதாரித்து கொண்டு அவன் சொன்னபடியே மலரின் வயிற்றை மெதுவாக அமுக்கினாள்..
கொஞ்சம் கொஞ்சமாக தான் விழுங்கிய தண்ணீர் எல்லாவற்றையும் வெளியே உமிழ்ந்த மலரழகி லேசாக கண்ணை திறந்து பார்க்க எதிரில் நின்று கொண்டிருந்த தீரனை பார்த்தவள் அதன் பிறகு தன் பக்கத்திலே அமர்ந்திருந்த இந்தரை பார்த்து ஓ என அழ தொடங்கினாள்..
அவள் நினைத்தது ஒன்று.. ஆனால் அங்கு நடந்தது ஒன்று.. அவளால் அதை தாங்கவே முடியவில்லை..
“அதான் என் தீரன் இருக்காரு இல்ல? அவர் என்னை காப்பாத்தி இழுத்துட்டு வந்திருப்பாரு இல்ல? நீங்க என்னை காப்பாத்தலன்னு இங்க யாரு அழுதாங்க..? நீங்க என்னை காப்பாத்தி உங்க கையில தூக்கிட்டு வந்ததுக்கு நான் அப்படியே கடலோடயே போய் இருக்கலாம்..”
அவளுடைய திட்டம் தவிடு பொடி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம் அவளுக்கு.. அந்த எரிச்சலை முழுவதுமாய் இந்தர் மேல் கொட்டினாள் அவள்..
ஆனால் அவளை புருவம் சுருக்கி பார்த்த தீரனோ “என்ன உளறிக்கினு இருக்கற..? டேய் தம்பி.. இவ இன்னாடா சொல்றா?” என்று புரியாமல் கேட்க மலரழகி “உண்மையா தான் சொல்றேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் உங்களை விரும்புறேன்.. கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா உங்களை தான் கட்டிக்குவேன்.. இல்ல இப்படியே காலம் முழுக்க இருந்திடுவேன்.. உங்களுக்கு எப்படியாவது என் காதலை புரிய வச்சிரணும்னு தான் நான் உங்க சூட்டிங்க்கு கூட வந்தேன்.. ஆனா நீங்க தான் பொண்ணுங்க பக்கம் திரும்பவே மாட்டேங்கிறீங்களே.. அதான்.. உங்களை என் பக்கம் திரும்ப வைக்க இன்னைக்கு..” அவள் சொல்லி முடிக்கும் முன்னால் அவளின் கன்னம் பழுத்திருந்தது..
இந்தர் தான் அவளை அடித்திருந்தான். “அறிவு இருக்கா உனக்கு? மூளையை கழட்டி வச்சிட்டு வந்து இருக்கியா? எங்க அண்ணாவை காதலிக்கிறேனா அவர்கிட்ட நேரா வந்து சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு இப்ப நீ பண்ண வேலையில உன் உயிர் போயிருந்தா யாரு பதில் சொல்றது? ஒருவேளை எங்களால உன்னை காப்பாத்த முடியாம நீ செத்து கித்து போயிருந்தன்னா உன் ஃப்ரெண்டு ஸ்டேஷன்ல போய் எங்க அண்ணன் பேரை சொல்லி அவருக்காக தான் நீ உயிரை விட்டன்னு சொன்னா.. எங்க அண்ணன் வாழ்க்கை என்னத்துக்காவறது..? என் அண்ணனை காதலிக்கிற நீ அவர்கிட்ட உன் காதலை கூட சொல்லாம நீ பாட்டுக்கு தண்ணில அடிச்சுட்டு போய் செத்துப் போயிருந்தன்னா அப்புறம் எப்படி எங்க அண்ணனை கல்யாணம் பண்ணி இருப்ப? இன்னும் ரெண்டு நிமிஷம் லேட்டாகி இருந்தாலும் உன் உயிர் போய் இருக்கும் டி லூசு..”
சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தான் இந்தர்.. அதற்குள் அவன் அருகில் வந்த இரணதீரன் “இந்தர் நீ வுட்றா தம்பி.. நான் பேசிக்றேன்..” என்றான்..
“நான் கூட எவனையோ நம்பி காதல்ல தோத்துட்டா போல.. அதான் தற்கொலை பண்ணிக்க கடல்ல விழுந்துட்டா போலன்னு நினைச்சேன்.. கடைசில பார்த்தா உங்ககிட்ட தன்னோட காதலை சொல்லணும்ங்கிறதுக்காக உயிரை விட போய் இருக்கா.. இந்த கிராக்கு.. என்னால இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா.. காதல் வந்தா இவ்வளவு பைத்தியமாவா ஆயிடுவாங்க?” என்றவன் உள்ளுக்குள் “நான் கூட தான் காதலிக்கிறேன்.. அதுக்காக பைத்தியக்காரத்தனமா என் உயிரை எல்லாம் கொடுக்க மாட்டேன்.. பிடிவாதம் பிடிச்சு எப்படியாவது என் காதல்ல ஜெயிக்கணும்னு தான் பார்ப்பேன்.. இந்த பொண்ணு என்னன்னா கடல்ல குதிச்சு அல்மோஸ்ட் சொர்க்கலோகத்தை பார்த்துட்டு வந்திருக்கா..”
இப்படி பேசுபவன் தான் எதிர்காலத்தில் ஒரு நாள் இந்த காதலால் தானும் இதே தவறை தான் செய்து எல்லோரையும் கவலையில் மூழ்கடிக்க போகிறான்..
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 14
இந்தரை தள்ளி நிறுத்திவிட்டு மலரழகியின் அருகில் வந்த தீரன் “தா பாரு.. உன்னை பாத்தா ரொம்ப சின்ன பொண்ணா தெரியுற.. தம்மாத்தூண்டு இருந்துக்கினு இந்த வயசுல இந்த மாதிரி காதலு கீதலு அது இதுன்னு புரியாம பேசிக்கினு கீற.. உனிக்கு என் உருவத்தை பார்த்து ஒரு இது வந்துக்கினு இருக்கும்.. அந்த இதுக்கு பேரு லவ்வெல்லாம் இல்ல.. நீயே அப்படி எல்லாம் நெனச்சுக்கினு உன் வாய்க்கையை கெத்துக்காத.. இன்னியும் ஒரு நாலஞ்சி வருஷம் ஓடிச்சின்னா உனக்கே எல்லாம் க்ளியராயி பூடும்.. தோ பாரு.. என்னை விட சிறுசா நம்ம இந்தர் மாறி சும்மா ஹீரோ கணக்கா எவனியாவது ஒரு டீஜன்டான ஆளு கிடைச்சா நீ இப்படி வெச்சிருக்கிறியே இந்த லவ்வு அது இருக்கிற இடம் தெரியாம காணாம பூடும்.. அப்போ உனிக்கு புரியும்.. உண்மையான காதல்னா என்னன்னு.. அதாங்காட்டியும் இல்லாம என் வாய்க்கையில பொண்ணுங்களுக்கு எடமே கிடையாது.. நான் தீவிர ஆஞ்சநேயர் பக்தன்.. கடைசி வரைக்கும் இந்த தீரன் ஒண்டிக்கட்டையா தான் இருப்பேன்.. இத்தை யாருமே மாத்த முடியாதி.. என் வாய்க்கையில எங்க அம்மாவை தவிர எந்த லேடியும் கிடையாது.. இப்போ அவங்களும் இல்லை.. அதனால என் வாய்க்கையை பொருத்தவரைக்கும் எனக்கு என் தம்பி மட்டும்தான்.. அதனால இந்த பச்சப்புள்ளத்தனமா நடந்துக்கினு இருக்காம ஒயுங்கா போய் படிக்கிற வேலையை பாரு.. உன்னை பார்த்தாலே தெரியுது.. காலேஜ் படிக்கிற பொண்ணுன்னு.. நல்லா பட்ச்சு பெரிய ஆளா ஆயிக்கினன்னு வை.. என்னை விட நல்ல ஆளா உனிக்கு ஏத்தவனா தானே தேடி வந்து உன்னை கண்ணாலம் செஞ்சுக்குவான்.. போ போய் உருப்படற வயியை பாரு..”
“முடியாது.. என்னை பொறுத்த வரைக்கும் நான் வெச்சிருக்கறது உண்மையான காதல் தான்.. நீ மட்டும் தான் எனக்கு புருஷன் ஆக முடியும்.. நான் மட்டும் தான் உனக்கு பொண்டாட்டி.. வேற யாரையும் உனக்கு பொண்டாட்டியா வர விடமாட்டேன்.. ஆஞ்சநேயர் பக்தனா இருக்கிற நீ கூடிய சீக்கிரம் ராம பக்தனா ஆயிரு.. அப்போ ஏக பத்தினி விரதனா காலம் முழுக்க என்னை கட்டிக்கிட்டு சந்தோசமா வாழலாம்..”
“இங்க பாரு.. அப்படியே நான் ஆஞ்சநேயர் சாமி சொல்லி என் விரதத்தை வுட்டாலும் உன்னை கண்ணாலம் பண்ணிக்க மாட்டேன்.. தம்மாத்தூண்டு பொண்ணு நீ.. எனக்கு 30 வயசு ஆவுது.. உனிக்கு 18 வயசு தான் இருக்கும் போல.. என்னால உன்னோட கண்ணாலங்கறதை எல்லாம் நென்ச்சு கூட பார்க்க முடியாது.. போய் படிப்பை பாரு.. இந்த நெனைப்பை இத்தோட வுட்டுடு..” அவன் சொல்ல சொல்ல அவள் பிடிவாதமோ கூடிக் கொண்டே போனது..
தீரன் தான் சிடுசிடுவென அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தானே தவிர இந்தருக்கோ அவள் பிடிவாதம் ரொம்ப பிடித்திருந்தது.. தான் மதியழகியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது போல் காதல் கொண்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள் என்பதை அவனால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது..
அதே நினைப்பில் “ஏன்ணா.. இதுல என்ன தப்பு இருக்கு? வயசை பார்த்து காதல் வராது.. 18 வயசு பொண்ணா இருந்தா என்ன..? உங்களை பிடிச்சிருக்கு அவளுக்கு.. அதுதான் முக்கியம்… நீங்க அவ கூட வாழ்க்கை முழுக்க வரணும்னு எதிர்பார்க்கிறா.. அவ அதை சொல்றதுக்கு எடுத்து கிட்ட முறை வேணா தப்பா இருக்கலாம்.. ஆனா அவ காதல் தப்பு கிடையாதுண்ணா.. நீங்க ஆஞ்சநேயர் பக்தர்.. அதனால யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்கன்னு ரீசன் சொல்லலாம்.. ஆனா அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அதுக்கு ஒரு காரணம் சொல்றீங்க பாருங்க.. அதை என்னால ஒத்துக்க முடியாது.. அதுக்காக நீங்க இவளை வேணான்னு சொல்றது நியாயமே கடையாதுண்ணா….”
“ஏய் இந்தரு.. என்னடா பேசற..? இதெல்லாம் ரொம்ப பெரிய பேஜாராயிடும்டா.. நீ கொஞ்சம் கம்முனு கட..” என்று சொல்லி “இங்க பாரு.. நீ ஆசைப்பட்டது நடக்காது.. அவ்ளோதான்.. போய் உன் வேலைய பாரு.. எனக்கு நிறைய வேலை கீது.. உன்னை பாத்துட்டு கீறது எனக்கு வேலை இல்லை..” என்று கடற்கரைக்கு வெளியே போக நடக்க தொடங்கியவன் அவள் குரலில் மறுபடியும் அப்படியே சிலையாக நின்றான்..
“போங்க போங்க.. நீங்க இந்த ரோட்டை தாண்டறதுக்கு முன்னாடி நான் இந்த கடலுக்குள்ள போய் சமாதியாகி இருப்பேன்.. நான் உங்களை விரும்பினேன்.. நீங்க என் காதல ஏத்துக்கல.. அதனால நான் காதல் தோல்வில செத்து போயிட்டேன்னு என் ஃபோன்ல போலீஸ்க்கு மெசேஜ் போட்டுட்டு நான் போறேன்..” என்று திரும்பி கடலுக்குள் போக போனவளை வேக வேகமாக வந்து இழுத்து பிடித்து திருப்பி ஓங்கி அறைந்திருந்தான் தீரன்..
மலரழகியை தீரன் அறைந்ததில் அங்கிருந்த மற்ற இருவரும் அதிர்ந்து போனார்கள்.. மலரழகிக்கோ கன்னம் அப்படி ஒரு எரிச்சல் எடுத்தது.. பின்னே.. ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு என்பது போல் அது என்ன வெறும் கையா.. ஏதோ உலக்கையால் அடித்தது போல் வலித்தது அவளுக்கு..
“ஏய் ஏதோ சின்ன பொண்ணுன்னு நானும் கம்முனு கெடந்தா ரொம்ப ஓவரா தான் துள்ளிக்கினு கீற? உனிக்கெல்லாம் அறிவே கிடையாதா? உயிரை விடறேன்னு அவ்ளோ அசால்டா சொல்லிக்கினியே.. உன் வாய்க்கையில நான் மட்டும்தானா கீறேன்.. உன்னை பெத்தவங்க.. வளர்த்து ஆளாக்குனவங்க.. உனக்காக கவல படுற மனுஸங்க இவங்க எல்லாரையும் பத்தி எல்லாம் யோசிச்சிக்க மாட்டியா? இதோ உன் தோஸ்து அது உன் மேல எம்மாம் பிரியத்தோட உன்னோட ஜாலியா இருக்கணும்னு வந்து கீது. சுத்தி இருக்கிற யாரைப் பத்தியுமே யோசிக்காம ஏதோ ஒரு உதாருக்காக உயிரை வுடுறேன்னு சொல்லிக்கினு கீறியே.. உனுக்கு கொஞ்சமாவது ஹார்ட்டுன்னு ஒன்னு கீதா? அப்படியே இருந்தாக்க உன் மேல இம்மாம் அக்கறை வச்சிருக்கவங்கள எல்லாம் நீ நென்ச்சு பார்த்திருப்பே.. நேத்து பார்த்த எனுக்காக அத்தினி பேரையும்.. ஒதுக்கீட்டு உயிரை வுடறேன்னு சொல்லின்னுக்கற? படிக்கிற வயசுல இது இன்னாடி வேலை..? வெக்கமா இல்ல உனுக்கு..?”
அவன் சரமாரியாக வைது தீர்க்க அவள் கண்களிலோ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.. அதே சமயம் அந்த விழிகளில் வைராக்கியமும் தெரிந்தது அவனுக்கு.. இந்தப் பெண் என்ன செய்தாலும் தன் சொல் பேச்சு கேட்க மாட்டாள் என்று முடிவாக தெரிந்தது தீரனுக்கு அவளின் தீர்க்கமான பார்வையில் இருந்தே..
“ஏம்மா அந்த புள்ள தான் சொல்ச்சுன்னா நீயும் வந்து அவளுக்கு தற்கொலை பண்ணிக்க ஹெல்ப் பண்ணிக்கினிருக்கியா? உனக்கு தெரிய வோணாம்..? இது எவ்வளவு பெரிய பிரச்சனைல போய் முடியும்னு..” என்று மலரின் தோழியை கேட்க “சார்.. நான் எவ்வளவோ சொன்னேன்.. இவ தான் கேட்கவே இல்லை.. ஐ அம் சாரி சார்.. ஏய்.. வாடி போலாம்..”
அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த கடற்கரையை விட்டு வெளியேற போனாள் உமா..
“இங்க பாருங்க.. நீங்க அடிச்சதுனாலயும் பேசுனதுனாலயும் நான் அமைதியா போயிட்டதா நினைச்சு சந்தோஷ படாதீங்க… இனிமே தினமும் வருவேன்.. உங்ககிட்ட வந்து என் காதலை சொல்லுவேன்.. எனக்கு பதில் சொல்லியே ஆகணும் நீங்க..”
அவளை தரதரவென்று அவள் தோழி இழுத்துப் போக அவனை திரும்பி பார்த்து சத்தமாக சொல்லிக் கொண்டே போனாள் மலரழகி..
🎼🎵🎶உன்னை விட மாட்டேன்
காதல் வரம் கேட்டேன்
தந்திடு கண்ணா..
சின்னஞ்சிறு மாது
கண்ணில் விடும் தூது
வந்திடு கண்ணா..
உயிர் காதலன் நீயாக..
உந்தன் காதலி நானாக..
இன்பங்கள் தேனாக..
இங்கு பொங்கட்டும் தானாக..
பனிவாடையில் வாடுது
வாசனைப் பூச் செண்டு..🎼🎵🎶
தீரன் புருவத்தை நீவி விட்டபடி “டேய்.. இந்தரூ.. இது இன்னாடா புது பிரச்சனை? இந்த பொண்ணு ஏன்டா இப்படி ரவுசு பண்ணுது? ஒரே பேஜாரா இருக்குதுடா எனக்கு..”
“அண்ணா கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாயிடும்.. ஆனா நான் ஒரு விஷயம் சொன்னா கோவிச்சுக்காம கேக்குறீங்களா? அந்த பொண்ணு சொல்றதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கண்ணா.. பாவம்ணா அவ.. சின்ன பொண்ணுங்கறதுக்காக அவ உங்களை விரும்பறது சரி கிடையாதுன்னு நீங்க எப்படிண்ணா சொல்றீங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க அண்ணா..”
முதல்முறையாக தம்பியை தீவிரமாக முறைத்தான் தீரன்.. “அப்படியே ஒன்னு வுட்டேன்னு வையி.. செவுளு கிவுளு எல்லாம் திரும்பிக்கும்.. தா பாரு நீ ஒன்னும் அவளுக்கு ஒத்தி ஊத வோணாம்.. அவ பெரிய பொண்ணா சின்ன பொண்ணா இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டிரே இல்லை.. நான் ஆஞ்சநேயர் சாமி கும்பிடுறவேன்.. என் மனசுல எப்பவும் அனுமார் மட்டும்தான் இருப்பாரு.. வேற யாருக்கும் அந்த ப்ளேஸை குடுக்கமாட்டான் இந்த தீரன்..”
“ஓ.. அப்ப எனக்கு கூட அங்க இடம் கிடையாதா?”
அவன் வேண்டும் என்றே சீண்டுவது போல் கேட்க “டேய்.. ஆஞ்சிநேயருக்கு என் ஹார்ல மட்டும்தான்டா இடம் குட்த்துகுறேன்.. இந்த தீரன் மேலருந்து கீய வரிக்கும் சப்ஜாடா உனக்கு தான் டா.. இந்தரு கண்ணூ..”
அவன் சொன்னதை கேட்ட இந்தர் உணர்ச்சிவசப்பட்டு தன் அண்ணனை இறுக தழுவி கொண்டான்..
இங்கே பார்கவி வீட்டுக்கு வந்த மதியழகியிடம் பார்கவி காபி கோப்பையை கையில் கொடுத்துவிட்டு “இப்ப சொல்லுடி.. என்னதான் பிரச்சனையாம் அந்த இந்தருக்கு..?”
“அதே பிரச்சினை தாண்டி. அவன் என்னை தான் லவ் பண்றானாம்.. என்னை தான் கல்யாணம் கட்டிக்குவானாம்.. வேணாம்னு எவ்வளவோ பேசி பாத்துட்டேன்.. வழிக்கே வர மாட்டேங்குறான்.. அவன் பிடிவாதத்திலேயே நிற்கிறான்..”
“ஓ.. அதுக்காக தான் அந்த சேகர் சொன்னதை கேட்டு நீ இன்னொருத்தனை லவ் பண்றேன்னு அவன் கிட்ட உளறி வச்சியாக்கும்..”
“வேற என்னடி பண்ண சொல்ற? எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேங்கிறான்..? எனக்கு வேற வழி தெரியல.. சரி.. அப்படி சொன்னாலாவது லவ் பண்ணற எண்ணத்தை மாத்திக்குவான்னு நெனைச்சேன்.. ஆனா எல்லாமே தலகீழ ஆயிடுச்சு.. இன்னிக்கி நீ மட்டும் வந்து உண்மையை சொல்லலன்னா பிரின்ஸ்பல் என்னை தப்பா தாண்டி நினைச்சு இருப்பாங்க..”
“அதுவும் சரிதான்.. உனக்கு இதுக்கு ஒரு ஐடியா சொல்றேன்.. இப்ப எப்படியும் அந்த இந்தர் கிட்ட நீ அடுத்த சண்டே உன் ஆளோட டேட்டுக்கு போறதா சொல்லி இருக்கே இல்ல..? அப்போ அதுக்குள்ள உனக்கு ஒரு லவ்வர் வரணும்..”
அவள் சொல்லவும் அவளை தீவிரமாய் முறைத்தாள் மதி..
“என்னடி.. என்னை வச்சு காமெடி பண்றியா?”
மதி அவளைப் பார்த்து கண்ணை சுருக்கி முறைத்தபடி கேட்க “வேற என்னடி பண்ண முடியும்? நீ தானே அவன் கிட்ட அப்படி சொல்லி வச்சிருக்க..? உனக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு.. ஒன்னு ஒரு வாரத்துக்குள்ள யாராவது ஒரு நல்ல ஆளா பார்த்து லவ் பண்ணு.. இல்ல பேசாம உன் ஆளா நடிக்கிறதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிடு..”
“என்னது நடிக்கறதா? நானா?” ஏதோ கொலை பாதகம் செய்ய சொன்னது போல் அரண்டு விழித்தாள் மதி..
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 15
பார்கவி சொன்ன விஷயத்தை கேட்டு விழிகளில் அதிர்ச்சியோடு
“என்னது நடிக்கறதா? நானா? விளையாடுறியா நீ? அது எப்படி ஒருத்தர் லவ்வரா நடிக்க முடியும்..? அதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி.. அதெல்லாம் கஷ்டம் டி.. முன்ன பின்ன யாருனே தெரியாத ஒரு ஆளை எப்படி என் லவ்வர்னு சொல்லிக்கிட்டு.. அதெல்லாம் சரிப்பட்டு வராது கவி..” என்றாள் மதி..
“ஓ.. அப்படியா? அப்போ யாராவது ஒரு நல்லவரா.. உனக்கு ஏத்தவரா பார்த்து ஒரு வாரத்தில லவ் பண்ணிடு..”
“ஏய்.. நீ இப்ப என்கிட்ட அடி தான்டி வாங்க போற.. ஏதாவது நடக்கிற காரியமா சொல்றியா? வேற ஏதாவது யோசி டி..”
“இது ரெண்டையும் விட்டா ஒரே ஒரு வழி தான் இருக்கு..”
பார்கவி சொன்னதும் விழிகளை விரித்து “என்னடி..? சொல்லு சொல்லு..” என்று மதி ஆர்வமாய் கேட்டாள்..
“பேசாம அந்த இந்தர் பயலையே நீ லவ் பண்ணிடு..”
இன்னும் தலையில் ஓங்கி தட்டியவள் “ஐடியா கொடுன்னா என்னை மாட்டிவிட பார்க்கிறயா நீ..?” கோவமாய் கேட்டாள்..
“பின்ன என்னடி..? நீதான் எந்த ஐடியா கொடுத்தாலும் கட்டையை போடுறியே..?!”
“அதுக்குன்னு.. நடிப்பெல்லாம் எனக்கு செட் ஆகாதுடி.. அதெல்லாம் சரிபட்டு வராது.. நீ வேற ஏதாவது சொல்லு..”
அவசரமாய் மதி மறுக்க “என்னடி சரிப்பட்டு வராது..? நம்ம காலேஜ் டிராமால பசங்களும் பொண்ணுங்களும் சும்மா லவ்வர்ஸா ஆக்ட் பண்றது இல்ல..? அதே மாதிரி தாண்டி இதுவும்.. இந்தர் வந்து பார்க்கும்போது ஒரு ஒன் ஹவர் நீ அந்த ஆள் கூட கொஞ்சம் க்ளோசா இருக்குற மாதிரி நடிச்சா போதும்.. ஒன்னும் இல்ல.. சும்மா கையை பிடிச்சுக்கிட்டு கொஞ்சம் ஆசையா பேசுற மாதிரி நடிச்சா போதும்.. அதுக்கு அப்புறம் இந்தர் இந்த ஜென்மத்துக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்..”
“அடியே.. அவன் என்னோட லவ்வர் யாருன்னு பார்த்து அவரை மீட் பண்ணி பேச போறேன்னு வேற சொல்றான் டி.. அப்படி மீட் பண்ணும் போது அது இன்னும் பிரச்சனையாகாது..? அது மட்டும் சொதப்பிச்சு மொத்தமா அவன் கிட்ட மாட்டிப்பேன்டி நான்..”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. யார் உன்னோட நடிக்க வர்றாரோ அவர் கிட்ட இந்தர் கிட்ட என்ன என்ன சொல்லணும்.. எப்படி பேசணும்.. அப்படிங்கறதை எல்லாம் முன்னாடியே சொல்லிட்டா.. அவர் அப்படியே பேசிட்டு போறாரு.. அந்த இந்தர் மட்டும் அவர் பேசறதை நம்பிட்டான்னா உனக்கு ஒரு தொல்லை விட்டுப் போகும் இல்ல..?”
சற்றே யோசித்தவன் “சரி.. நீ சொல்றதும் சரிதான்… ஆனா எனக்கு என்னவோ பயமா இருக்குடி.. தலைவலி போய் திருகு வலி வந்த மாதிரி இந்த பிரச்சனை போய் வேற ஏதாவது பிரச்சனை வந்திட போகுதுன்னு..”
“அதெல்லாம் எதுவும் வராது.. உனக்கு தான் தெரியும் இல்ல..? என் ஹஸ்பண்ட் சினிமால அசிஸ்டன்ட் டைரெக்ட்டரா இருக்காரு.. அவர் சினிமாக்கு காஸ்டிங்க் ஏற்பாடு பண்றவரு தான்.. அவர் கிட்ட சொன்னா உன்னோட நடிக்க யாராவது ஒரு ஆளை கூட்டிட்டு வந்துருவாரு.. நம்ம அந்த ஆள் கிட்ட பேசி கரெக்ட் பண்ணிக்கலாம்.. என்ன ஓகேவா?”
“என்ன..? கரெக்ட் பண்ணிக்கலாமா..? என்னடி.. உன் பேச்சே ஒரு மார்க்கமா இருக்கு.. ஐயோ.. கடவுளே.. இது எங்க போய் முடிய போகுதோ தெரியலயே.. சரி.. ஏற்பாடு பண்ணு..”
“ஏற்பாடு பண்றேன்.. ஆனா இன்னைக்கு நாளைக்கு முடியாதுடி.. அவர் வெளியே ஷூட்டிங் போயிருக்காரு.. திங்கட்கிழமை தான் வருவாரு.. அன்னிக்கு சாயந்திரம் அவர் வந்த உடனே அவர் கிட்ட விஷயத்தை சொல்றேன்.. அடுத்த நாளே அவர் யாரையாவது ஆள் புடிச்சு கொடுத்துருவாரு.. அதுக்கப்புறம் மிச்சம் இருக்குற நாலு நாள்ல அவரை ட்ரெயின் பண்ணிக்கலாம்..”
“அவரை ட்ரெயின் பண்றதா? ஆக்டர் தானேடி அவரு.. நான் தான்டி ட்ரெயின் பண்ணிக்கனும்.. எனக்கெல்லாம் நடிக்கவே வராது.. நீ வேணா பாரு.. அந்த டேட்டிங் சீன்ல ஆக்ட் பண்ற நேரத்துல எனக்கு கை காலெல்லாம் உதறி எதுவும் பேச முடியாம ஏதாவது உளறி சொதப்ப போறேன்..”
“கவலைப்படாத டி.. உனக்கும் சேர்த்து டிரைனிங் கொடுத்துட்டா போச்சு.. என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னா அவரே உனக்கும் சேர்த்து ட்ரைனிங் கொடுத்துடுவாரு.. இப்போ ஓகேவா?”
“ஏதோ ஃபிசிகல் எக்சர்சைஸ் ட்ரைனிங் மாதிரி சாதாரணமா சொல்றே.. ஆக்டிங் டி.. சரி.. கேட்டு வை பார்க்கலாம்.. என்னதான் நடக்குதுன்னு..”
அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் ஊர் கதையெல்லாம் பேசி கொண்டு இருக்க சற்று இருட்டி விடவும் அங்கிருந்து கிளம்பினாள் மதி..
கதவை தட்டிய சத்தம் கேட்டு வாயிற்கதவைத் திறந்தார் தமிழ்வாணன்.. அங்கே சேகர் நின்று இருப்பதை பார்த்து “நீங்க..?” என்று இழுக்க “ஹலோ சார்.. நான் உங்க பொண்ணு மதியழகி வேலை செய்ற காலேஜ்ல அவங்க கூட ஒர்க் பண்ற ப்ரொஃபசர்..”
அவன் சொன்னவுடன் முகம் மலர்ந்து “ஓ அப்படியா.. ப்ளீஸ் உள்ள வாங்க.. உக்காருங்க..” என்று இருக்கையில் அமர வைத்து உபசரித்தார் அவனை..
“இப்ப மதி இல்லையே.. வெளியில அவ ஃப்ரெண்டை பார்க்க போய் இருக்கா.. ஒன் ஹவர் கழிச்சு தான் வருவா.. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா நீங்க வேணா அவளுக்கு ஃபோன் பண்ணி பேசுறீங்களா?”
“இல்ல சார்.. நான் மதியை பாக்க வரல.. உங்களை பாக்க தான் வந்தேன்..”
“என்னையா.. என்னை எதுக்கு பாக்கணும் நீங்க? நான் இதுக்கு முன்னாடி உங்களை மீட் பண்ணது கூட கிடையாதே..”
“மதி விஷயமா தான் சார் உங்களை பாக்க வந்தேன்.. உங்ககிட்ட மதியை பத்தி ஒரு சில விஷயங்கள் சொல்லணும்.. நீங்க வீட்டிலேயே இருக்கிறதால அவங்களை பத்தி எந்த விஷயமும் தெரியாம இருக்கீங்க..”
“என்ன.. விஷயம் தெரியாம இருக்கேன்..? என் பொண்ணை பத்தி ஏதாவது தப்பா பேச போறீங்கன்னா தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்பிடுங்க.. எனக்கு அவளை பத்தி நல்லாவே தெரியும்.. அவ எந்த தப்பும் பண்ண மாட்டா..”
“இப்படியே நீங்க நம்பிட்டு வீட்டிலேயே இருக்கீங்க.. உங்க பொண்ணு என்னன்னா காலேஜ்ல ஒரு பையன்.. வெளியில் ஒரு ஆளுன்னு.. ரெண்டு பேரை லவ் பண்றதா சொல்லி ஏமாத்திட்டு இருக்காங்க..”
“மிஸ்டர்.. மொதல்ல இங்க இருந்து வெளியே போங்க.. இதுக்கு மேல நீங்க சொல்ற எந்த வார்த்தையும் கேட்க எனக்கு பொறுமை கிடையாது..”
தன் இருக்கையை விட்டு எழுந்து வாசல் பக்கம் கையை காட்டி சேகரை விரட்டினார் தமிழ்வாணன்..
ஆனால் சேகரோ தன் முயற்சியை விடுவதாக இல்லை..
“சார் சார் உங்க கோபம் எனக்கு புரியுது.. நீங்க பெத்த பொண்ணை பத்தி தப்பா சொல்லும் போது உங்களுக்கு கோவம் வர்றது ரொம்ப நார்மல் தான்.. ஆனா நீங்க கோபப்படுறீங்கங்கறதுக்காக உங்ககிட்ட என்னால விஷயத்தை சொல்லாம இருக்க முடியல.. ஏன்னா இதை நான் உங்க பொண்ணுக்காக பண்ணல.. என் காலேஜ்ல என்கிட்ட படிக்கிற ஒரு ஸ்டூடண்டோட ஃப்யூச்சர் நல்லா இருக்கணுங்கறதுக்காக பண்றேன்.. ஒரு ஸ்டுடென்ட் உங்க பொண்ணு பின்னாடி பைத்தியமா திரியுறான்.. உங்க பொண்ணு அவனுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு இருக்காங்க.. அது மட்டும் இல்லாம வெளியில இன்னொரு ஆளோடயும் பழகிட்டு இருக்காங்க.. அடுத்த வாரம் அவரோட டேட்டிங் போக போறாங்க உங்க பொண்ணு.. உங்களுக்கு தெரியுமா?”
“யோவ்.. ஏதோ ப்ரொஃபசர்ன்னு சொன்னியேன்னு மதிச்சு உள்ள விட்டா உன் இஷ்டத்துக்கு பேசிகிட்டே போறே.. முதல்ல வெளியில போயா..” என்றார் தமிழ்வாணன் அவனை கொன்று விடும் பார்வையோடு..
அவன் முதுகில் கை வைத்து வெளி பக்கமாய் அவர் பிடித்து தள்ள “சொல்ல வேண்டியது என் கடமை சொல்லிட்டேன்.. நாளைக்கு அந்தப் பையன் அந்த ஆளு உங்க பொண்ணு மூணு பேரையும் வச்சு ஊருக்குள்ள கதை பேசும்போது அவமானப்பட்டு நிற்பீங்க இல்ல? அப்ப தெரியும்.. நான் ஏன் வந்து இப்படி உங்ககிட்ட கத்தி கத்தி உங்க பொண்ணை பத்தி சொன்னேன்னு..”
அதை சொல்லி முடிப்பதற்குள் அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளி இருந்தார் தமிழ்வாணன்…
அவனோ ஒரு வில்லத்தனமான கோணல் சிரிப்புடன் “என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னேல..? அடுத்த வாரம் யாரோ ஒருத்தனை டேட் பண்ண போறேன்னு அந்த இந்தர் கிட்ட சொல்லி வச்சிருக்க இல்ல..? எப்படியும் நீ வேற யாரையும் ஒரு வாரத்துல லவ் பண்ணவும் மாட்டே.. வேற வழி இல்லாம அவன் மனசை மாத்தறதுக்காக யாராவது ஒரு ஆளை புடிச்சு நீ லவ்வர்னு அவன்கிட்ட சொல்லுவ.. ஆனா அந்த காட்சியை இந்தர் மட்டும் பார்த்தா போதாது.. உங்க அப்பாவும் பார்க்கணும்.. அப்பதான் எனக்கு நடந்த அவமானத்துக்கு ஈடாக உனக்கும் வலி கிடைக்கும்.. உன்னை எவ்வளவு கெஞ்சினேன் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி.. உன் கண்ணுக்கெல்லாம் நான் தெரியவே இல்லல்ல? இப்ப தெரிவேன்டி..”
மதியை எண்ணி உருமினான் சேகர்..
பார்கவியின் கணவன் சரவண பாண்டியன்.. அவன் திங்கள் வரும் வரை பொறுக்க முடியாமல் அவசரமாக சனிக்கிழமை இரவே அவனை கைபேசியில் தொடர்பு கொண்டாள் அவள்..
“பவி குட்டி.. என்னடி.. மாமனை விட்டு ரெண்டு நாள் கூட இருக்க முடியலையா? அதுக்குள்ள கால் பண்ணிட்டே.. எனக்கு கூட நீ என் கைக்குள்ள இல்லாம தூக்கமே வர மாட்டேங்குதுடி..”
“யாருக்கு..? உனக்கு..? சும்மா அளந்து வுடாத.. நீ ஷூட்டிங்னு போய்ட்டா என் ஞாபகம் எல்லாம் உனக்கு இருக்கவே இருக்காது.. எத்தனை வருஷமா உன்னோட குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.. என்கிட்ட அளக்காத சரவணா..”
“ஏ ஜிங்கிடி.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி செல்லம்.. என்னதான் ஷூட்டிங்ல இருந்தாலும் 24 மணி நேரமும் மாமனுக்கு உன் நெனப்பு தான்.. நம்புடி என்னை.. அதை விடு.. என்ன பண்ணிட்டு இருக்க இப்போ.. அதான் மாமனை பிரிஞ்சி இருக்க முடியாம ஃபோன் பண்ணிட்ட இல்ல..? அப்படியே உன்னை மறுபடியும் பார்க்கிற வரைக்கும் தாங்கற மாதிரி கிளுகிளுப்பா மாமனுக்கு சும்மா கீழருந்து மேல வரைக்கும் ஜிவ்வுன்னு ஏறி கிக்காக்கற மாதிரி அழுத்தமா ஒரு இச்சு குடுடி ஜிலேபி..”
அவன் ஏதோ நினைத்து பேசிக் கொண்டே போக அவளோ “வீக் என்ட் அதுவுமா என்னை விட்டுட்டு ஷூட்டிங் போயிட்டு உனக்கு இச்சு வேற கேக்குதா.. அதெல்லாம் ஒன்னும் கெடையாது.. இங்கே யாரும் ரொமான்ஸ் பண்றதுக்காக உனக்கு ஃபோன் பண்ணல.. நான் வேற ஒரு முக்கியமான விஷயமா உனக்கு ஃபோன் பண்ணேன்..”
“வேற விஷயமாவா? என்னடி விஷயம்?” ஆவலோடு கேட்டான் பாண்டி..
🎶🎵🎼பன்னென்டு வயசில்
மனசில் பட்டாம்பூச்சி
பறக்குமே
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே
கண்ணை
பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில்
கவுந்து படுக்கும்போது
உன் கனவிலே
கிளியோபட்ரா
வந்தா லவ் இல்லே
ஜவுளிக்கடை
பொம்மைய பாக்கும்போது
உன் புத்திக்குள்ள
கவுளி கத்தும்
அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசிர
கொடுக்கணும்
எது நிஜம்
புரிஞ்சி நடக்கணும்
காதல்
ஒன்னியும் கடவுள்
இல்லையடா
இந்த இழவு
எல்லாம் ஹார்மோன்
செய்யும்
கலகம் தானடா🎶🎵🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 16
“என்னடி விஷயம்?” பாண்டி பார்கவியை ஆவலோடு கேட்க “அது என் காலேஜ்ல என்னோட வேலை செய்றா இல்ல மதி..”
“ஆமாமா.. ஞாபகம் இருக்கு.. நான் கூட உன்னை ஒரு வாட்டி காலேஜ்ல விட வரும்போது அந்த பொண்ணை பார்த்து இருக்கேன்.. அழகா சினிமா ஹீரோயின் மாதிரி இருக்குமே.. சூப்பர் ஃபிகரு..”
“யோவ்.. ஃபோன்ல தானே பேசுறோம்.. இவ நம்மள அடிக்க மாட்டான்ற தைரியத்தில தானே பேசிகிட்டு இருக்க..?”
“அய்யோ.. உனக்கு என்னடி செல்லம் இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது..? அது நான் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல ..?அந்த கண்ணோட்டத்தில பார்த்தனா..? அதான் தங்கச்சியையும் அப்படி சொல்லிட்டேன்..”
“ஓ.. அ…ப்புடி.. ஆமா.. எந்த ஊர்லயா தங்கச்சியை சூப்பர் ஃபிகர்ன்னு சொல்றாங்க..?”
“ஹி..ஹி.. அது ஒன்னும் இல்ல பேபி.. பழக்க தோஷத்துல கொஞ்சம் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு..”
“ஆஹான்.. டங்க் ஸ்லிப் ஆயிடுச்சா? நீ வீட்டுக்கு வா.. உனக்கு டங்கே இல்லாம பண்றேன்..”
“அடி கள்ளி.. உனக்கு மாமா மேல எவ்ளோ லவ்வு டி? டங்கே இல்லாம போற அளவுக்கு மாமனுக்கு முத்தம் கொடுக்கப் போறியா.. கேட்கும்போதே எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுதே.. இதுக்காகவே டைரக்டர் கிட்ட எப்படியாவது பேசி திங்ககிழமைக்கு பதிலா நாளைக்கு மதியமே வீட்டுக்கு வந்துர்றேன்.. மாமனை நல்லா கவனிச்சுடு தங்கம்..”
“கவனிப்பு தானே..? நீ வா.. வா.. உன்னை நல்லா கவனிக்கிறேன்..”
“நீ ஆசையா சொல்றது கூட எனக்கு கோவமா சொல்ற மாதிரியே இருக்கு டி செல்லம்.. சரி.. இன்னும் நீ என்ன முக்கியமான விஷயம்னு சொல்லவே இல்லையே..”
அதற்கு மேல் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவள் கைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு நேராக வந்து அடிப்பாள் என்று தோன்றியது அவனுக்கு.. அதனால் நேரம் கடத்தாமல் பேச்சை மாற்றி விஷயத்துக்கு வந்தான்..
அவளும் மதிக்கு இருந்த பிரச்சனையையும் அதற்கு தீர்வாய் அவன் செய்ய வேண்டிய வேலையை பற்றியும் சொல்ல “இவ்வளவுதானா மேட்டரு.. நான் பாத்துக்குறேன்.. விடு தங்கம்.. டயலாக் குடுத்தா சும்மா பின்னி பெடலெடுக்கற மாதிரி ஒரு சூப்பர் ஆளை கூட்டிட்டு வரேன் பாரு..”
“நீ மொதல்ல ஆளை கூட்டிட்டு வா.. அவர் சூப்பரா இல்லையான்னு நான் சொல்றேன்..”
“சரிடி பவி கண்ணு.. அதான் மாமா நீ சொல்ற வேலையை பண்றேன்னு சொல்லிட்டேன் இல்ல.. இப்பவாவது மாமனுக்கு ஒன்னு கொடுக்க கூடாதா..?”
“முதல்ல ஆளை கூட்டிட்டு வா.. அதுக்கப்புறம் எல்லாமே கொடுக்கிறேன்..”
அவள் முறுக்கி கொள்ள “அடியே.. ரொம்பத்தான் பண்ற டி.. ஃபோன்ல தானே கேக்குறேன்.. என்னை பாத்தா பாவமாவே இல்லையா உனக்கு..?”
அவன் குரலின் ஏக்கத்தை கேட்டு நிஜமாகவே அவளுக்கு பாவமாய் இருக்க “யோவ்.. வீடியோ கால்ல வாயா.. நிறைய கொடுக்கிறேன்..” வெட்க சாயலோடு சொன்னவளை அப்பொழுதே தனக்குள் அடக்கி கொள்ள வேண்டுமென தோன்றியது அவனுக்கு..
அவள் சொன்னது தான் தாமதம்.. மனைவியிடம் தான் செய்யப் போகும் வேலைக்கான பரிசை வாங்க வீடியோ காலுக்கு தாவினான்..
இரண்டு நாளுக்கும் சேர்த்து வைத்து ஆசை தீர கைபேசி மூலமாக கேட்டது எல்லாம் அவனுக்கு கொடுத்தாள் பார்கவி..
பின்னே சினிமா துறையில் அனுதினமும் பல நடிகைகளையும் பெண்களையும் சந்திப்பவன் எவரிடமும் மனம் தடுமாறாமல் தன்னை காதலித்த நாளிலும் சரி.. திருமணம் செய்த பிறகும் சரி.. தன் ஒருத்தியை மட்டுமே மனதில் சுமந்து கொண்டிருக்கும் அவளின் ஆருயிர் காதல் கணவனாயிற்றே.. அவன் ஆசையாய் கேட்கும் போது அவள் எதையுமே மறுத்ததில்லை..
இப்படியே இரண்டு நாட்களும் ஓடி விட படப்பிடிப்பு தாமதமாகி இன்னும் ஒரு நாள் கழித்தே முடிய திங்கட்கிழமை நேராக வீட்டுக்கு வர முடியாமல் வேறு ஒரு படப்பிடிப்பிற்கு போய்விட்டான் பாண்டி என்ற பொதுவாக சினிமா உலகத்தில் அழைக்கப்படும் அசிஸ்டன்ட் டைரக்டர் சரவண பாண்டியன்..
அது மதியழகி வேலை செய்யும் கால் சென்டர் பக்கத்தில் இருந்த 11 மாடி கட்டிடத்தில் நடந்த படப்பிடிப்பு தான்.. அதே படபிடிப்பிற்கு தான் ஸ்டண்டு காட்சிகள் செய்ய வந்திருந்தான் தீரனும்..
அன்று எடுக்க வேண்டிய சண்டை காட்சிகள் ஏனோ சரியாக எடுக்க முடியாமல் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது பாண்டியை.. டைரக்டர் வேறு ருத்ர மூர்த்தியாய் மாறி கத்திக் கொண்டிருந்தார் அவனிடம்..
“என்னையா இது மூணு மணி நேரமா இந்த ஷாட்டை எடுத்துகிட்டு இருக்கேன்.. என்னதான் ஆச்சு இந்த தீரனுக்கு.. எக்ஸ்ட்ரா பேமென்ட் ஏதாவது எதிர்பார்க்கிறானா..? இத்தனை டேக் வாங்கிட்டு இருக்கான்.. டைம் வேற போயிட்டே இருக்குது.. ஏற்கனவே அந்த ஹீரோ கால்ஷீட் பிரச்சனையினால இந்த படத்தோட ஷூட்டிங் இழுத்துகிட்டே போகுது.. இதுல இந்த தீரன் வேற எதுக்கு இப்படி கழுத்தறுக்கறான்..?
“இல்ல சார்.. எப்பவும் எந்த ஷாட்னாலும் அரை மணி நேரத்துல அசால்ட்டா ஊதி தள்ளிட்டு போய்டுவான் தீரன்.. இன்னைக்கு என்னன்னு தெரியல.. அவனுக்கு கவனமே இங்க இல்லை.. நான் போய் அவன் கிட்ட பேசி பார்க்கிறேன் சார்..”
“பேசு பேசு.. இந்த ஷாட் எல்லாம் அவனை விட்டா பண்றதுக்கு சரியான ஆள் கிடையாது.. ஏதாவது எக்ஸ்ட்ரா பேமென்ட் வேணும்ணாலும் கொடுத்துடலாம்.. சீக்கிரம் ஒழுங்கா பண்ணி முடிக்க சொல்லு..”
உடனே தீரனிடம் ஓடினான் பாண்டி.. “என்ன தீரா ஆச்சு உனக்கு? இவ்ளோ டேக் எடுக்கவே மாட்டியே நீ..? டைரக்டர் வேற கத்திக்கிட்டு இருக்காரு தீரா.. உன்னை பத்தி எனக்கு தெரியும்.. நீ ஒரு வேலைன்னு ஒத்துக்கிட்டேனா கரெக்டா செஞ்சுடுவே.. என்ன ஆச்சு உனக்கு இன்னிக்கி.. உன் கவனமே வேலைல இல்லை.. அந்த திமிர் பிடிச்ச டைரக்டர் வேற பணம் எக்ஸ்ட்ரா வேணுமாங்கற மாதிரி என்னை கேக்கறாரு.. என்னாச்சு தீரா.. ஏதாவது பிரச்சனையா?”
“என்னது..? எக்ஸ்ட்ரா துட்டு கொடுக்கறாராமா..? அந்த ஆளு இந்த தீரனை பத்தி என்ன நினைச்சுக்கினு கீறாரு.. தீரன் ஒரு தபா வாக்கு கொடுத்துட்டா அப்புறம் உசுரே போனாலும் அவன் அதை தாண்ட மாட்டான்.. ஆனா இன்னைக்கு கொஞ்சம் பேஜாரா தான் கீறேன் பாண்டி…”
“ஏன் தீரா.. ஏதாவது பெரிய பிரச்சனையா? நம்ம தம்பி ஏதாவது பிரச்சனையில மாட்டிக்கினானா?”
“இல்ல இல்ல.. அவனால ஒரு பிரச்சனையும் இல்ல.. அவன் சொக்க தங்கம் டா.. ஆனா வேற ஒரு சங்கதி.. அது.. கொஞ்ச நாளா என் பின்னாடி ஒரு ஃபிகரு சுத்தினு கீது.. ரொம்ப சின்ன பொண்ணு.. தம்மாதூண்டு கீது.. என்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணுது அந்த பொண்ணு..”
“ம்ம்.. எனக்கெல்லாம் இருக்கிற ஒன்னே மதிக்க மாட்டேங்குது.. உனக்கு பாரு.. எத்தனை பொண்ணுங்க மேல வந்து விழுது.. அதுவும் சின்ன பொண்ணா தான் பார்க்குது உன்னை.. உனக்கு உடம்பு முழுக்க மச்சம் இருக்கு தீரா..”
“த சீ வாய மூடுயா கஸ்மாலம்.. உனக்கு தான் என்னை பத்தி தெரியும் இல்ல.. நான் ஆஞ்சநேயர் சாமி கும்பிடுறவேன்.. என்கிட்ட வந்து தேவையில்லாம அந்த பொண்ணு லவ்வு கிவ்வுன்னு பேசின்னு கீது.. நான் அதை ஏத்துக்கலைன்னா உயிரை வுட்ருவேன்னு சொல்லி என்னை மேர்சலாக்குது யா.. பெரிய சிக்கல்ல மாட்டி வுட்ரும் போல என்னை.. அதுக்குத்தான் இன்னா செய்யறதுன்னு தெரியாம மூச்சிக்கினு கீறேன் பாண்டி..”
“இதான் உன் பிரச்சனையா? இரு இரு…” என்று சொல்லி சற்று யோசித்தவனுக்கு தன் மனைவி சொன்ன பிரச்சனையும் இதே போல தானே இருந்தது என்று தோன்ற அடுத்த நொடியே அவனுக்குள் ஒரு மின்னல் வெட்டியது..
“தீரா.. நான் சொல்றதை கேளு.. நான் சொல்றபடி செஞ்சனா உன் பிரச்சனையும் தீர்ந்திடும்.. இன்னொரு பொண்ணோட பிரச்சனையையும் தீர்த்திடலாம்..”
“மறுபடியும் பொண்ணா.. டேய் வோணான்டா.. இந்த பொண்ணுங்க சமாச்சாரமே நமக்கு வோணாம்..”
தீரன் சற்று தயங்க “தீரா.. அதெல்லாம் உனக்கு எந்த பயமும் வேணாம்.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான்.. நீயே அது கிட்ட தப்பா நடக்கணும்னு நினைச்சாலும் அது வுடாது.. அது நெருப்பு.. அதுக்கும் உன்னை மாதிரியே பிரச்சனை தான்..” என்று மதியழகியின் பிரச்சனை பற்றிய முழு விவரத்தையும் தீரனிடம் தெரிவித்தான்..
“ம்ம்.. பிரியுது.. இப்போ இதுக்கு என்ன பண்ணலாம்ன்கிற..?”
“தீரா.. இங்க பாரு.. இப்போ அந்த பொண்ணு அந்தப் பையன் தொல்லை தாங்காம தனக்கு ஏற்கனவே லவ்வர் இருக்காருன்னு சொல்லிடுச்சு.. அதே மாதிரி தான் உன்னையும் இந்த பொண்ணு ரொம்ப தொந்தரவு பண்ணுது இல்ல..? அது கிட்டயும் உனக்கும் ஏற்கனவே ஒரு லவ்வர் இருக்காங்கன்னு சொல்லிடு.. அந்த பொண்ணுக்கு லவ்வரா நடிக்க ஒரு ஆள் தேவை.. நீயே அந்த லவ்வரா நடிச்சா அந்த சின்ன பையன் இந்த சின்ன பொண்ணு ரெண்டு பேருமே மனசு மாறி வேற வழியில போயிடுவாங்க.. நீங்க ரெண்டு பேருமே நிம்மதியா இருக்கலாம்..”
“அது சரி பாண்டி.. நாம ஸ்டன்ட்ல என்னதான் சிங்கமா இருந்தாலும் ஆக்டிங்ல கொஞ்சம் வீக் ஆச்சே.. “
தீரனும் மதியை போலவே கவலை கொள்ள “தீரா.. ஃப்ரியா விடு.. அந்த பொண்ணும் ஒன்னும் பெரிய ஆக்டர் எல்லாம் இல்ல..நல்லா படிச்ச பொண்ணு வேற.. நடிப்பெல்லாம் வராதாம் அதுக்கு.. அந்த பொண்ணுக்கு சொல்லிக் கொடுக்கும் போது நானே உனக்கு ஆக்டிங் ட்ரைனிங் கொடுத்துடுறேன்.. அப்புறம் ஓகே தானே..?”
இரண்டு நிமிடம் யோசித்தவன் “நீ சொல்றதும் சரிதான்.. எப்படியும் இன்னைக்கு அந்த சின்ன பொண்ணு என்கிட்ட பேச வரும்.. எனக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் இருக்கான்னு அவகிட்ட கர்ட் & ரைட்டா சொல்லிடுறேன்.. ஆனா என்ன பிராப்ளம்னா அந்த பொண்ணுகிட்ட நான் ஆஞ்சநேயர் பக்தன்.. பொண்ணுங்க பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்னு உதார் விட்டு வெச்சி கீறேன்.. இப்ப நான் இன்னொரு பொண்ணை லவ்வாங்கி பண்றேன்னு சொன்னா அந்த பொண்ணு நம்பிக்கணுமே..”
“அந்த பொண்ணை எப்படி சமாளிக்கறதுன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன்.. அதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல.. நீ ரெடியா இரு.. நாளைக்கு காலைல என் வீட்டுக்கு போலாம்.. அந்த பொண்ணையும் வர சொல்லிடறேன்.. “
மறுநாள் காலை எவ்வளவு பெரிய குழப்பத்தின் முதல் படியில் காலை வைக்கப் போகிறோம் என்று தெரியாமல் பாண்டியிடம் தலையசைத்து விட்டு தான் செய்ய வேண்டிய ஸ்டண்ட் ஷாட்டை செய்யப் போனவன் ஒரே டேக்கில் அந்த ஷாட்டை முடித்து இருந்தான்..
சொன்னது போல் அன்று மாலை படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சேர்ந்தாள் மலரழகி தீரனை தேடி..
அங்கே தீரன் தன்னை அறிவாளால் தாக்க வந்த நான்கு பேரை சரமாரியாக அடித்து துவைத்து கொண்டிருந்தான்.. ஒவ்வொருவனாய் அடித்து வீழ்த்தி விட்டு கம்பீரமாய் வீர நடை போட்டு அடுத்தவரை நோக்கி கழுகு பார்வையோடு மதயானை போல் வீறு கொண்டு வந்தவனின் அடுத்த அடி எதிரே இருந்தவனின் தலை மேல் இடி என இறங்க ஒரே அடியில் சுருண்டு விழுந்தான் அந்த மாமிச மலை..
அந்த வீரனின் தீரத்தில் தீரனின் வீரத்தில் மயங்கி போய் தான் நின்றாள் மாதவள்..
🎼🎵🎶தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குறுவாளா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குறுவாளா
சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயாய் போர்க்களமாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா..🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 17
படப்பிடிப்பில் சண்டைக்கு நடுவே ஒரு அரிவாளின் முனை தீரனின் புஜத்தில் கீறி விட அதை ஏதோ நகக்கீரல் போல் தூசி தட்டி விட்டவன் அடுத்தவனை நோக்கி பாய்ந்தான்.. இந்த சண்டை எல்லாமே ஒரு கட்டிடத்தின் மதில் மேல் நடந்து கொண்டு இருந்தது.. கீழே விழாமல் லாவகமாய் நகர்ந்தபடி சண்டை போட்டுக் கொண்டிருந்தான் தீரன்..
எதிரில் தன்னை தாக்க வந்தவர்களை சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தவனை கண்கொட்டாமல் பார்த்து விழுங்கிக் கொண்டிருந்தாள் மலரழகி..
“ஐயோ தீரு குட்டி.. எவ்வளவு அழகா ஸ்டைலா சண்டை போடுற டா..? ஃபேக் சண்டை தான்.. ஆனா கூட நீ பண்ணும் போது பாக்குறதுக்கு அவ்வளவு ரியலா இருக்குடா.. உன்னோட ஹைட்.. பாடி பில்ட்.. உன்னோட அந்த சிக்ஸ் பேக் உடம்பு.. உன்னோட ஆக்சன்.. ஸ்டைல்.. இதெல்லாம் பார்க்கும் போது அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கிட்டு அழுத்தமா ஒரு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு..”
மனதிற்குள் பேசிக் கொண்டவளிடம் அவள் மனசாட்சியோ “அடியேய்.. அவன் ஒரு ஆஞ்சநேயர் பக்தன்.. அப்படி நீ ஏதாவது செஞ்சா முதல்ல உனக்கு கன்னம் பழுக்க அன்னைக்கு விழுந்த மாதிரி அடி தான் விழும்..” என்று சொல்லி எச்சரிக்கை செய்தது..
“அறைஞ்சா அறையட்டும்.. எப்படியாவது அவன் கை என் மேல பட்டா சரி..” என்று அதற்கும் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்..
ஷாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த தீரன் தனது இருக்கையில் அமரும்போது மலர் அழகியை பார்த்து விட்டிருந்தான்..
ஒரு பெருமூச்சை விட்டு கண்ணை மூடி திறந்தவன் அவளை ஒரு அலுப்பான பார்வை பார்க்க துள்ளி குதித்து அவன் அருகே ஓடியவள் “ஹாய் தீரா.. நீ என்னை எப்படி வேணா பாத்துக்கோ.. ஆனா நான் அன்னிக்கு சொன்னதை தான் தினமும் செய்வேன்.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலன்னாலும் நான் உன்னை லவ் பண்றது மாறாது.. உன்னை ஒரு நாள் நிச்சயம் கல்யாணம் பண்ணியும் காட்டுவேன்.. உன் மனசை மாத்திக்கறதுக்கு ரெடியா இரு..” என்று சொன்னவள் அவன் கன்னத்தில் கை விரல்களை குவித்து கொஞ்சுவது போல் எடுத்து முத்தம் கொடுக்க அவனோ அவளை தீவிரமாய் முறைத்தான்..
“ஏய் சின்னகுட்டி.. த பாரு.. இது ஷூட்டிங் ஸ்பாட்டு.. இங்க நீ இப்பிடி அல்லாம் நடந்துக்கினு இருந்தா என் மானம் தான் போவும்.. சொன்னா கேட்டுக்க.. என்னால உன்னை லவ்வாங்கி அல்லாம் பண்ண முடியாது.. நான் ஒரு காரணமா தான் இது அல்லாம் சொல்லிக்கினு கீறேன்..”
“என்ன காரணம்.. மாத்தி மாத்தி எப்பவும் நீ அறைக்கிற அதே புளிச்ச மாவை தானே திரும்பவும் அறைக்க போறே.. நான் ரொம்ப சின்ன பொண்ணு.. நீ ரொம்ப வயசானவன்.. அதனால உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. நீ ஒரு ஆஞ்சநேயர் பக்தன்.. இதைதானே சொல்ல போற? கேட்டு கேட்டு புளிச்சு போச்சு தீரா.. அதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பொண்டாட்டியோட வாழ்ந்தா உன் ஆஞ்சநேயரு ஒன்னும் சொல்ல மாட்டாரு.. எப்ப நம்ம கல்யாணம்..? நீ அதை மட்டும் சொல்லு.. நீ ஓகே சொன்னா எத்தனை வருஷம் வேணா வெயிட் பண்றதுக்கு நான் ரெடியா இருக்கேன்.. ஆனா என்ன..? இப்பவே உனக்கு 30 வயசு ஆகுது.. இன்னும் லேட் பண்ணா உனக்கு அறுபதாம் கல்யாணம் பண்ற வயசாயிடுமேன்னு பார்க்கிறேன்.. ஆனா எவ்வளவு வயசானாலும் என் செல்ல குட்டி இப்படியே தான் டா அழகா இருப்பே நீ.. எனக்கு தெரியும்..”
மறுபடியும் அவள் கொஞ்சவது போல் செய்ய சுற்று முற்றும் பார்த்த தீரன் பல்லை கடித்தான்..
“இதா பாரு.. கட்ச்சியா ஒன்னு சொல்றேன்.. நான் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ்வாங்கி பண்ணிக்கினு கீறேன்.. உன்னை அல்லாம் கட்டிக்கிட்டு என்னால அதுக்கு துரோகம் பண்ண முடியாது.. அதால இதோட போய் படிக்கிற வேலைய பாத்துக்க..”
அவன் சொன்னதைக் கேட்டவள் சத்தமாக சிரித்தாள்.. “ஓ.. லவ் பண்றியா? ஆமா.. இந்த ஐடியா உனக்கு யார் கொடுத்தா? இதை நான் நம்புவேன்னு நீ நினைக்கிறியா? அன்னிக்கு நான் கடல்ல விழ போனப்ப கூட நீ இப்படி லவ் பண்ணறதா ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல.. இப்போ என் தொந்தரவு தாங்காம எப்படி கழட்டி விடுறதுன்னு தெரியாம இப்படி நீ சொன்னா நான் நம்பிடுவேனா..? அதுக்கு வேற ஆளை பார்.. இங்க பாரு.. நான் உன்னை லவ் பண்றது பண்றது தான்.. உன்னை தான் கட்டிப்பேன்..”
அவள் குரலில் இன்னும் உறுதி அதிகமாய் தெரிய அவனுக்குள் கவலை குடி கொண்டது..
“அட இன்னாமே நீ.. நான் எம்மா தூரம் சொல்லிக்கினு கீறேன்.. கொஞ்சம் கூட காதுல வாங்காம நீ பேசினதையே பேசிக்கினு கீற.. அன்னைக்கு நான் ஏன் சொல்லலனா நான் லவ் பண்ணுறது இங்கே எவனுக்குமே தெரியாது.. அந்த பொண்ணு இப்போதைக்கு என்னை கண்ணாலம் கட்டிக்க முடியாதுன்னு சொல்லி கீது.. அதனால கண்ணாலம் கட்டிக்கிற டைம் வர வரைக்கும் இந்த மேட்டரு யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்லி கீது.. அதான் அன்னைக்கு நான் உன்கிட்ட சொல்லல.. ஆனா அன்னைக்கு நட்ந்ததை போய் அது கிட்ட சொல்லவும் அதுதான் மேட்டரை உன்கிட்ட சொல்ல சொல்லுச்சு.. சொல்லறதை கேட்டுக்க.. என்னை மறந்துட்டு போய் உருப்படியா டாக்டராவற வேலைய பாரு..”
“சொல்லு சொல்லு.. நீ என்ன வேணா பேசு.. நான் கேட்கிறேன்.. ஆனா சத்தியமா நம்ப மாட்டேன்..” அவள் இன்னும் அழுத்தமாய் சொல்ல “அப்போ என் வார்த்தையை நம்பிக்கிட மாட்டே.. சரி.. அடுத்த நாயித்துக்கியமை நானும் அந்த பொண்ணும் வெளியில சும்மா ஜாலியா போவ போறோம்.. எங்க போறோம்னு உன்கிட்ட சொல்றேன்.. அங்கே வந்து பார்த்துக்க.. இப்ப எட்த்தை காலி பண்ணு..”
இப்போது அவள் முகத்தில் சிறு மாற்றம் தெரிந்தது. அதுவரை உறுதியாக பேசிக் கொண்டிருந்தவள் சற்று அமைதியாக இருக்கவும் அந்த இடைவெளியை அவன் பயன்படுத்திக் கொண்டான்..
“த பாரு.. நான் மெய்யாங்காட்டியும் தான் சொல்றேன்.. உனக்கு நம்பிக்கை இல்லைன்னா அடுத்த வாரம் நீயே வந்து பாரு.. எனக்கு ஷாட்க்கு டைம் ஆவுது.. நீ கெள்ம்பு..” என்றவன் எழுந்து இயக்குனர் அழைக்காமலேயே அடுத்த காட்சிக்கு போய் தயாராக நின்று கொண்டான்..
முகத்தில் வண்டி வருத்தம் அப்பட்டமாக எதிரொலிக்க அங்கிருந்து ஒரு யோசனையுடனே நகர்ந்தாள் மலரழகி..
அவள் முகத்தில் இருந்த வருத்தத்தை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஒரு நிம்மதி படர்ந்தது.. அந்த நிம்மதியுடன் அடுத்த ஷாட்டை அமர்க்களமாக செய்து முடித்து இருந்தான் அவன்..
அடுத்த நாள் சொன்னது போலவே பார்கவியின் வீட்டில் பார்கவி பாண்டி மதியழகி தீரன் நால்வரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்..
இருவரையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்கள் பார்கவியும் பாண்டியும்..
அவனை கண்ட நொடி மதியழகிக்குள் ஒரு வித பதட்டம் சூழ்ந்து கொண்டது.. அவன் படங்களில் கதாநாயகனின் நகலாக நடிப்பவன் என்று பார்கவி சொல்லி இருக்க அவனோ ஒரு கதாநாயகன் என்றே சொல்லும் படி ஆணழகனாய் இருந்தான்..
அவனுடைய உயரத்தையும் உடற்கட்டையும் முகவெட்டையும் கண்டவளுக்கு அவனோடு நடிப்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் உதறல் எடுத்தது.. ஒரு பழுப்பு நிற டி-ஷர்ட்டும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து பார்ப்பதற்கு அப்படியே அக்மார்க் சினிமா கதாநாயகன் போல் இருந்தவனை கண்டவளுக்கு பேச கூட நா எழாமல் மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது..
ஆனால் இங்கே தீரனோ வேறு ஒரு அவஸ்தையில் இருந்தான்.. மதியை பார்த்த நொடி அவனுக்குள் என்னென்னவோ உணர்வுகள்..
அந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் தவித்தான் அவன்.. அவளோடு இணையாக தான் நடிக்க போகிறோம் என்ற நினைப்பே அவனுக்குள் ஏதோ ஒரு இனிப்பான உணர்வை விதைத்தது..
ஊதா நிற காட்டன் புடவை நேர்த்தியாக அவள் மேனியோடு உறைந்து போய் இருக்க அதிக ஒப்பனை இல்லாத வட்ட முகத்தில் வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழ் அம்பாய் பாயும் அலைபாயும் விழிகளோடு கூடிய பளிச்சிடும் விண்மீன் கண்கள்.. கூரான நாசி.. செம்மாதுளை சாறு எடுத்து செய்து வைத்த இனிப்பு துண்டமாய் இரு உதடுகள்.. கேள்வியாய் வளைந்திருந்த செவிகள்.. அவற்றின் மேல் அணிகலனாய் இருந்த மகிழ்ச்சியில் குதூகலமாய் துள்ளி ஆடிக்கொண்டிருந்த சிறிய ஜிமிக்கி.. பிறை நெற்றியில் அழகாய் சிறியதாய் வட்டமான பொட்டு.. நடு முதுகு வரை அழகாய் பின்னலிட்ட கூந்தல்.. கதிரின் ஒளியை தாங்கியது போல் மஞ்சள் நிற அழகு மேனி என்று அவள் அழகை ஒவ்வொன்றாய் விழிகளால் அளந்தபடி இருந்தவன் மெல்லிய அவளின் சங்கு கழுத்தை பிரமிப்பாய் பார்த்தபடி விழிகள் மேலும் கீழ இறங்க அதன் அத்துமீறலை தடுக்க வேண்டி தன் பார்வையை அவளிடம் இருந்து படாத பாடுபட்டு அகற்றிக் கொண்டான்..
அவள் அழகை அவன் அங்குலம் அங்குலமாய் ரசித்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் அவன் மனசாட்சி அவனை ஏகத்துக்கும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தது..
“அடேய் தீரா.. நீ ஆஞ்சநேயர் பக்தன் டா.. உன் விரதத்தை இந்த பொண்ணு காலி பண்ணிடும் போலயே..”
மாறி மாறி மனசாட்சி மிரட்டவும் தன் விரதத்தை எப்படி பாதுகாக்க போகிறோம் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்..
முதல் பார்வையிலேயே ஒரு ஆஞ்சநேயர் பக்தனை தலைகீழாய் கவிழ்த்து போட்டிருந்தாள் பெண்ணவள்..
இருவருமே நேருக்கு நேர் கண் கொண்டு பார்ப்பதையே தவிர்த்து இருந்தார்கள்..
கண்கள் கலக்கும் போது அவன் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவள் உள்ளே ஊடுருவும் பார்வை பார்க்க அந்தப் பார்வையை சமாளிக்க முடியாமல் திணறிப் போனாள் பெண்ணவள்.. இமைகளை தாழ்த்தி தரையை பார்த்துக் கொண்டிருந்தவள் மறந்தும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை..
அவனோ அவள் பார்வைக்காக ஏங்க ஆரம்பித்தான்.. அவளின் அழகான மீன் விழிகளை சந்தித்தவன் அந்த விழிகளின் ஆழத்தில் மீண்டும் மீண்டும் விழ ஆசை கொண்டான்..
ஆனால் அவளோ அதுவரை சேகரின் காம பார்வை.. இந்தரின் காதல் என்று நினைத்துக் கொண்டு பாசமும் மதிப்பும் கலந்து பார்க்கும் பார்வை.. என இப்படிப்பட்ட பார்வைகளை தான் ஒரு ஆணிடம் எதிர் கொண்டு இருக்கிறாள்..
ஆனால் இந்தப் பார்வையோ அவளுக்குள் என்னென்னவோ செய்தது..
🎵🎶🎼பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ..
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ..
சிரிப்பு மல்லிகைப்பூ..
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ..
அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
பன்னீர்ப்பூ..
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ…
மணக்கும் சந்தனப்பூ..
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ
தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட
மயங்கும் பூங்கொடி
சித்திரை மாத நிலவொளி அவள்
சில்லென தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட
பிறந்த மோகனம்🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 18
பார்கவி “ரெண்டு பேரும் என்ன இப்படி அமைதியா இருக்கீங்க?! ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கலைன்னா அப்புறம் எப்படி ஒன்னா சேர்ந்து நடிப்பீங்க.. உங்க பிரச்சனைகளை பேசிகிட்டு எப்படி நடிக்க போறீங்க.. நீங்க எங்க மீட் பண்ணதா சொல்ல போறீங்க.. உங்களுக்குள்ள எப்படி லவ் வந்துச்சுன்னு கேட்டா அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க..?இதெல்லாம் பேசிக்கிட்டா தானே உங்க பின்னாடி சுத்துற அந்த பிள்ளைங்க முன்னாடி நடிக்கும் போது உங்களுக்கு ஈசியா இருக்கும்..”
அவள் சொன்னதைக் கேட்ட மதிக்கோ இன்னும் படபடப்பாய் ஆனது.. “ஏய் பவி.. என்னால முடியாதுடி.. நான் பேசாம வேற ஏதாவது வழியில அந்த பையனை சமாளிச்சுக்கிறேன்.. அவரை அவர் சூட்டிங் ஸ்பாட்டில ஏதாவது ஒரு துணை நடிகை இல்லன்னா ஹீரோயின் யாரையாவது பார்த்து அவங்களோட ஆக்ட் பண்ணி அந்த பொண்ணை சமாளிச்சுக்க சொல்லு.. என்னால இப்படி எல்லாம் நடிக்க முடியும்னு தோணலை. இது எனக்கு சரி வராது.. நான் கிளம்புறேன் டி..” என்று எழுந்து நின்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள் அவள்..
அங்கிருந்த மற்ற மூவரும் அவள் சொன்னதை கேட்டு அப்படியே அவளை அதிர்ச்சியோடு பார்த்திருந்தார்கள்.. அதிலும் தீரனுக்கோ உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல் இருந்தது.. அவளுடன் ஒரு நாளாக இருந்தாலும் ஜோடியாக இணைந்து நடிக்கப் போகிறோம் என்று ஆனந்தத்தில் களித்திருந்தவன் அவள் சொன்ன அந்த வார்த்தையில் அப்படியே பதறி போனான்..
அவள் பெயர் மதியழகி என்று தெரிந்த கணமே அந்தப் பெயர் மிகப் பொருத்தமாக அவளுக்கு வைக்கப்பட்டிருந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தான். அப்படி ஒரு அழகை கொண்டு இருக்கும் அந்த தேவதையுடன் ஒரு நாள் செலவிட்டாலும் அது தன் வாழ்வில் இன்பத்தின் எல்லையை கொடுக்கும் என்று எண்ணி இருந்தவனுக்கு அவள் சொன்ன வார்த்தை ஏனோ கையில் புதையல் கிடைத்த மறுநொடியே அது மாயமானதை போன்ற ஏமாற்றத்தை கொடுத்தது..
எழுந்து நின்றவளை அவளின் தோள்பட்டையை அழுத்தி அமர வைத்தாள் பார்கவி..
தீரனோ அவள் சொன்ன வார்த்தையில் தவித்து போனான்..
“ஐயோ.. இவங்க ஏன் இப்படி சொல்றாங்க..? ஒருவேளை நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டாங்களோ..? நான் ஏதாவது தப்பா நடந்துக்குவேன்னு பயப்படுறாங்களோ..”
இப்படி யோசித்தவன் சற்றும் தாமதிக்காமல் உடனேவே அவளிடம் “மேடம்.. என்னிய பார்த்தா உங்களுக்கு ஒரு காண்டி வில்லங்கம் புட்ச்ச ஆள் மாறி இருக்குதோ இன்னாவோ.. ஆனா நம்ம செய்ற இந்த டகாலிட்டி வேலையில என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.. நான் உங்களாண்ட ஏதாவது சில்மிசம் பண்ணிக்குவேன்னு பயந்துக்குனீங்களா? அப்படி எல்லாம் நீங்க பயந்துக்கவே வோணாம்.. இந்த தீரன் ஒரு பக்காவான அனுமார் சிஷ்யன்.. எதுக்காகவும் என் ஆஞ்சநேயர் சாமிக்கு கெட்ட பேரு வர மாதிரி இந்த தீரன் என்னிக்கும் நடக்க மாட்டான்..”
கதாநாயகன் கணக்காய் அழகாய் இருந்தவன் வாயிலிருந்து அப்படி ஒரு பாஷையை எதிர்பார்க்கவில்லை மதி.. அவன் பேச்சைக் கேட்ட நொடி அப்படியே ஸ்தம்பித்து உறைந்து போய் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
தீரன் பேசிய விதத்தை கேட்டு மதியழகி முகம் போன போக்கை பார்த்ததிலேயே பார்கவிக்கு அவள் நிலை புரிந்தது..
ஆனாலும் அப்போதைக்கு தீரனை சமாளிக்க முனைந்தவள் “அண்ணா.. உங்களை பத்தி தப்பா எதுவும் நினைச்சு இருக்க மாட்டாண்ணா அவ.. அவளுக்கு ஏதோ அவளால நடிக்க முடியுமான்னு சந்தேகம் இருந்திருக்கும்.. அதனால அப்படி சொல்லி இருப்பா.. நீங்க ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க.. நான் அவளை கூட்டிட்டு போய் பேசி சரி பண்ணி கூட்டிட்டு வரேன்..”
தீரனிடம் சமாதானமாய் நான்கு வார்த்தைகள் சொல்லிவிட்டு மதியின் கையைப் பிடித்து எழுப்பி அவளை உள்ளே இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்றாள் பார்கவி..
“ஏய் பாண்டி.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா? அந்த பொண்ணு ஏதோ என்னை பத்தி கலீஜா நினைச்சுட்டு இருக்கு போல.. நம்ம பாஷை தான் இப்படி.. ஆனா நம்ம ஆளு ரொம்ப ரீஜெண்டுன்னு நீ அந்த புள்ளை கிட்ட சொல்லிக்கலியா..?”
“எல்லாம் சொல்லி இருக்கேன்.. பார்கவிக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும்.. ஆனா அவ மதி சிஸ்டர் கிட்ட சொல்லல போல.. அந்த பொண்ணு நீ பேச ஆரம்பிச்சப்புறம் அப்படியே ஷாக் ஆகி உட்கார்ந்துருச்சு.. பார்க்கலாம்.. திரும்பி வரும் போது என்ன சொல்லிட்டு வருதுன்னு..”
அதைக் கேட்ட பிறகு தீரனுக்கு மனதில் நிம்மதி இல்லாது போனது.. ஒருவேளை திரும்பி வரும்போது இந்த திட்டங்கள் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பரிதவித்த மனதோடு இருதயம் விட்டுவிட்டு துடிக்க அவர்கள் சென்ற அறையின் வாயிலையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் தீரன்..
இங்கே அறைக்குள் வந்த பார்கவி “ஏய் மதி.. என்னடி திடீர்னு இப்படி சொல்ற..? உன்னை நம்பி அவர் வேற அவர் பின்னாடி சுத்துற பெண்ணை கழட்டி விடுறதுக்கு பிளான் பண்ணி வந்துட்டாரு.. இப்ப முடியாதுன்னு சொன்னேன்னா உனக்கு மட்டும் இல்ல.. அவருக்கும் கஷ்டம் தான்.. இப்ப எதுக்கு வேணாங்குற..?”
“ஏய் பவி.. அவருக்கும் எனக்கும் எப்படிடி ஒத்து போகும்? அவர் பேசுற பாஷையை பார்த்த இல்ல? சத்தியமா எனக்கு அதுல பாதி வார்த்தைங்க புரியவே இல்லை.. வேணாம்டி.. ஒரு மாதிரி ரௌடிங்க பேசற மாதிரி பேசறாருடி.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.. சொன்னா கேளு பவி.. பேச்சே இப்படி இருக்குதுன்னா ஆள் எப்படி டீசண்டா இருப்பாரு..? வேணாம் பவி.. எனக்கு ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு..”
“ஏய்.. லூசு மாதிரி உளறாதேடி.. அவர் சின்ன வயசிலருந்தே அந்த ஷூட்டிங் ஸ்பாட்லயே எல்லா விதமான ஆளுகளோடயும் கலந்து பழகிக்கிட்டு எப்போவும் அவங்களோடயே இருக்கறதுனால அவங்க பேசற பாஷை அவருக்கு ஒட்டிக்கிச்சு.. அதான் இப்படி பேசறாரு.. ஆமா நீ ஒரு ப்ரொபசர் இப்படி பேசுற ஆளுங்க எல்லாம் ரௌடிங்களா தான் இருப்பாங்க… டீசன்டா இருக்க மாட்டாங்கன்னு நீயா எப்படி முடிவு பண்ணிட்ட.. யுவர் பீயிங் வெரி ஜட்ஜ்மென்டல்.. ஆனா அவரு ரொம்ப நல்ல குடும்பத்தில இருந்து.. அதுவும் நம்மள மாதிரி ஒரு டீசன்ட்டான குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து வந்தவரு தான்டி.. அவர் தம்பி இன்ஜினியரிங் காலேஜ்ல தர்ட் இயர் படிக்கிறான்.. இவர்தான் அவனை படிக்க வைக்கிறாரு.. ரொம்ப பொறுப்பான மனுஷன் டி.. அது மட்டும் இல்லாம அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தன்.. தன் வாழ்க்கையில பொண்ணுங்களுக்கு இடமே கிடையாதுன்னு சொல்லிட்டு இருக்குறவரு.. எந்த காரணத்தை கொண்டும் உன் கிட்ட தப்பா நடந்துக்க மாட்டாரு.. நீ அவரோட தைரியமா நடிக்கலாம்.. என்ன.. வாயில வர பாஷை தான் இப்படி வரும்.. அதை மட்டும் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.. ஆனா மத்தபடி வேற எந்த தொந்தரவும் உனக்கு இருக்காது.. அவரை பார்த்த இல்ல.. ஹீரோ கணக்கா எப்படி இருக்கிறார்னு.. அவருக்காக எத்தனை பொண்ணுங்க அவரோட ஒரு பார்வை கிடைக்காதான்னு காத்துகிட்டு இருக்கு தெரியுமா? அப்படிப்பட்டவர் உன்னோட நடிக்கிறேன்னு வந்து இருக்காரு.. அதுக்கு ஒரே காரணம் அவரை ஒரு பொண்ணு தொந்தரவு பண்ணுது.. அந்த பொண்ணை கழட்டி விடணுன்றது தான்.. நீ 100% இல்ல 150% அவரை நம்பி நடிக்கலாம்.. அதுக்கு நான் கியாரண்டி.. என் பாண்டி கூட எப்பயாவது தடுமாறிடுவானோ என்னவோ எனக்கு தெரியாது.. ஆனா தீரா அண்ணன் தடுமாறவே மாட்டார்.. அப்படி ஒரு ஜெம் ஆஃப் எ பெர்சன் டி அவரு..”
அவள் அவ்வளவு தூரம் சொல்லவும் அவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உண்டானது மதிக்கு.. ஆனாலும் அவனை பார்க்கும் போதே ஏதோ ஒரு கலவையான உணர்வு அவளுக்குள் தோன்றுவது அவளுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தையே ஏற்படுத்தியது..
“இல்லடி.. எனக்கு பயம்னு கூட சொல்ல முடியாது.. அவர் நல்லவர் தான்.. ஆனா அவரை பார்க்கும்போதே எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்குடி.. அவரோட நடிச்சா ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவேனோனு பயமா இருக்கு.. நிச்சயமா என்னால அவரோட சாதாரணமா நடிக்க முடியும்னு தோணலை… எதையாவது உளறி கொட்டுனா அதோட அவருக்கும் பிரச்சனையாகிடும்.. அதுக்கு தான் யோசிக்கிறேன்..”
“இங்க பாரு.. அது.. இப்பதானே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்கீங்க.. அதனால கொஞ்சம் அன் ஈஸியா இருக்குமா இருக்கும்.. அங்க ஒரு நாள் தான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க போறீங்க.. அதுக்கப்புறம் அவங்க தொல்லை விட்டு போய்டும்.. அப்படியே இல்லனாலும் அதுக்கப்புறம் இன்னும் ஒரு ரெண்டு மூணு தடவை மீட் பண்ண வேண்டியதா இருக்கலாம்.. அதுக்கப்புறம் நீ அவரை பார்க்க போறது கூட கிடையாது.. இந்த நாலு நாள் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிக்கறதுக்கு ப்ராக்டிஸ் பண்ண போறீங்க.. அப்போ ரெண்டு பேரும் கம்ஃபர்டபுள் ஆயிடுவீங்கடி.. இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு சொல்லிக்கிட்டு இருக்காத.. இவ்வளவு தூரம் வந்தாச்சு.. இனிமே தைரியமா செய்ய வேண்டியதை செஞ்சு அந்த இந்தர் பயலை கொஞ்சம் அடக்கி வை..”
“சரிடி.. நான் ட்ரை பண்றேன்.. ஆனா ஒன்னு.. சனிக்கிழமைக்குள்ள என்னால சரியா நடிக்க முடியலன்னா நம்ம இதை டிராப் பண்ணிடலாம்.. அங்க போய் ஏதாவது சொதப்பினா கஷ்டமாயிடும்.. அட்லீஸ்ட் நான் இல்லனா அவர் வேற ஏதாவது பொண்ணை வச்சு நடிச்சு அந்த சின்ன பொண்ணை அட்லீஸ்ட் டைவர்ட் பண்ண முடியும் இல்ல..”
அவள் சொன்னதை கேட்ட பார்கவி “ஏய்.. நீயாடி இப்படி பேசுற? எந்த நேரத்திலயும் பாசிட்டிவா பேசுற நீ ஏண்டி இந்த விஷயத்துல மட்டும் இப்படி நெகட்டிவா பேசுற? நிச்சயமா சனிக்கிழமைக்குள்ள நீங்க ரெண்டு பேருமே நல்லா நடிப்பீங்க.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு வா..”
அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனவள் “சரவணா மதிக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வெச்சுட்டேன்.. அவளுக்கும் இந்த பிளான்ல ஓகே தான்.. ஆனா எதுவும் சொதப்பல் ஆகாம அவங்களுக்கு நல்லபடியா சொல்லிக் கொடு.. நீ நெஜமாவே நல்ல அசிஸ்டன்ட் டைரக்டர் தானே..? இப்ப நீ இவங்களை நடிக்க வைக்க போறதுல தான் நீ ஒரு நல்ல டைரக்டரா இல்லையான்னு எனக்கு தெரிய போகுது..”
“ம்ம்.. அது சரி.. ஏய் பொண்டாட்டி.. இத்தனை நாளா எவ்ளோ படத்துல அசிஸ்டென்டா இருக்குறேன்.. இப்பதான் ஒரு ப்ரொடியூசர் படம் டைரக்ட் பண்ண என்னை அப்ரோச் பண்ணி இருக்காரு.. இந்த நேரத்துல மாமனுக்கு சவாலா..? எப்படி நடிக்க வைக்கிறேன் பாருடி அவங்களை.. நிஜ லவ்வர்ஸே தோத்துடுற அளவுக்கு பெர்ஃபார்மன்ஸ் இருக்கும் பாரு….”
பாண்டி சொன்னதை கேட்டு அப்படியே அதிர்ச்சியில் விழி விரித்தாள் மதியழகி.. மாறாக தீரனோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான் அவன் சொன்னதை கேட்டு..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 19
மதியழகி தன் தோழியை தனக்கு நெருக்கமாக இழுத்து ரகசியமாக “ஏய் என்னடி.. உன் புருஷன் லவ்வர்ஸ் அது இதுன்னு என்னென்னமோ சொல்லிட்டு இருக்காரு.. பாரு.. நான் அவ்வளவு நெருக்கமால்லாம் நடிக்க மாட்டேன்.. ஏதோ பார்த்து பேசுறது அது வரைக்கும் போதும்..”
அவள் சொன்னதைக் கேட்டு அவளை முறைத்த பார்கவி “ம்ம்.. உனக்கு அது வரைக்கும் போதும்.. ஆனா உன் பின்னாடி சுத்துறானே அவனுக்கு அது போதாது.. நீ மட்டும் சரியா நடிக்கலைன்னா அவன் சந்தேகம் போகாம மறுபடியும் உன்னை தேடி வந்துக்கிட்டே இருப்பான்.. அண்ணனுக்கும் அதே நிலைமைதான்.. சொன்னா புரிஞ்சுக்கடி.. ஒரு நாள் தானே..? கொஞ்சம் கைய புடிச்சுகிட்டு ஆசையா பாக்குற மாதிரி நடிக்கிறதுல உனக்கு என்னடி பிரச்சனை? எதோ ட்ராமால நடிக்கிறோம்னு நினைச்சுக்கிட்டு முடிஞ்ச உடனே அத்தனையும் மறந்துடுடி..”
அவள் சொன்னதை கேட்டதும் மதியழகிக்கு இன்னும் படபடப்பு கூடிக் கொண்டே போனது..
இரண்டு பேருமே ஒரு மாதிரி பதட்ட நிலையில் இருக்க அவர்களை கண்ட பாண்டி “சரி.. இன்னிக்கு முதல் நாள்.. ரெண்டு பேருமே டென்ஷனா இருக்கீங்க.. அதனால இன்னைக்கு நடிக்க வேண்டாம்.. நம்ம என்னென்ன பேசணும்.. என்ன கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லணும்.. இதை மட்டும் ப்ராக்டிஸ் பண்ணி வச்சுக்கலாம்.. ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என்ன பேசினாலும் ஒரே மாதிரி பேசணும்.. அது மட்டும் இல்லாம இப்போ உங்க பின்னாடி சுத்துற பையனும் பொண்ணும் ஒருவேளை மீட் பண்ணிட்டாங்கனா அவங்களுக்குள்ள பேசிக்கிட்டா கூட ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் உங்க லவ் விஷயம் தெரிஞ்சு இருக்கணும்.. ஏன்னா நீங்க ரெண்டு பேரும் மீட் பண்றதை அவங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில தான் வந்து பார்க்க போறாங்க.. அவங்க ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.. அதனால நம்ப என்ன பண்ண போறோம்.. எப்படி பண்ண போறோங்கறதை சரியா பிளான் பண்ணி வைக்கிறது முதல் வேலை.. அதை சரியா பண்ணிட்டோம்னா அதுக்கப்புறம் நம்ம பிளான் பண்ணதுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறது ரொம்ப ஈஸி தான்..”
அவன் சொல்வதைக் கேட்டவர்களுக்கு இப்போதே ஆயாசமாக இருந்தது..
“சரி.. நானே தொடங்கி வெக்கிறேன்.. முதல்ல நீங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணீங்க..? அப்புறம் எவ்வளவு நாளா லவ் பண்றீங்க? நீங்க இப்ப என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு ஏன் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது? இதெல்லாம் இப்பவே நல்லா தீர்மானமா பேசி வச்சுக்கோங்க..”
பார்கவி பேச்சை தொடங்க “எனக்கு இதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. மதி சிஸ் ஒரு கால் சென்டர்ல வர்க் பண்றாங்க.. இப்போ நம்ம ஷூட்டிங் எடுக்கிறோமே அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு அந்த கால் சென்டர்..” பாண்டி சொன்னான்..
“நம்ம பில்டிங்காண்ட கீதே அதா..?”
தீரன் கேட்க அவன் ஒவ்வொரு முறை பேசும்போதும் முகத்தை சுளித்தாள் மதி.. பார்கவி பக்கம் பாவமாய் அவள் பார்த்து வைக்க அவளோ கண்களாலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி என்பது போல் கெஞ்சினாள்..
“அதே தான் தீரா.. அங்கதான் இவங்க ஈவ்னிங்ல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்காங்க..”
“ஆமா.. அதுக்கு நேர பார்த்தாப்புல ஒரு டீக்கடை கீது இல்ல..?”
“ஐயோ.. அது டீக்கடை இல்ல தீரா.. அது ஃபாஸ்ட்ஃபுட்..”
“அதான்.. அது ஏதோ ஒரு ஃபுட்டு.. அந்த கடையில நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கிணோம்னு சொல்லிக்கலாமே..”
“நல்ல ஐடியா தான்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ஏன் புடிச்சதுங்கறதுக்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் தேவையில்லை.. ஏன்னா ரெண்டு பேருமே ரொம்ப அழகானவங்க தான்.. ஹீரோ ஹீரோயின் மாதிரி பக்காவா இருக்கீங்க.. அதனால ஒருத்தரோட ஒருத்தர் அழகை பாத்து பிடிச்சு போச்சுன்னு நம்ம சொல்லிக்கலாம்..”
“நெசம் தானே அது..” என்று சட்டென தீரன் வாயை விட மதி புருவம் சுருக்கி பார்க்கவும் “இல்ல இல்ல.. ரெண்டு பேருமே ஹீரோ ஹீரோயின் கணக்கா நல்லா கீறோம் தானேன்னு சொல்ல வந்தேன்.. நீங்க ஒன்னியும் என்னை தப்பா ஃபீல் பண்ணிக்காதீங்க..”
மதியழகிக்கோ அவன் பேசுவதை கேட்க கேட்க அவனோடு நடிக்கப்போவதை நினைத்து ஒரு மிரட்சியே உண்டானது..
“ஐயோ.. இந்த பாஷையை கேட்டாலே இந்தர் நம்ப மாட்டான் இந்த ஆளை நான் லவ் பண்ணினேன்னு.. இப்ப என்ன பண்ணறது..?”
அவள் யோசனையுடன் இருக்க பார்கவி அவள் பக்கம் திரும்பி “என்னடி.. தீவிரமா யோசிக்கிற..?” என்று கேட்க “இந்தர் நான் இந்த ஆள லவ் பண்றேன்னு நம்பவே மாட்டான்டி.. இந்த மாதிரியே இந்த ஆளு பேசிகிட்டு இருந்தா இந்தர் நிச்சயமா இவனை நான் லவ் பண்ணி இருக்க சான்சே இல்லன்னு ஒரேடியா முடிவு கட்டிருவான்..”
அவள் சொன்னதைக் கேட்டவளுக்கு அவள் சொன்னதிலும் நியாயம் இருப்பதாக பட்டது..
“சரவணா.. மதி ஒரு விஷயம் சொல்றா.. எனக்கும் அது கரெக்ட்னு தான் படுது.. அண்ணன் கொஞ்சம் மெட்ராஸ் பாஷையில பேசுறாரே.. அப்படியே அவரு அன்னைக்கும் பேசினாருன்னா மதி இவரை லவ் பண்ணி இருப்பாருன்னு என்னாலயே நம்ப முடியாது.. அப்புறம் அந்த பையன் எப்படி நம்புவான்..? நம்ப சும்மா அவனை கழிச்சு கட்டறதுக்காக பொய் சொல்றோன்னு தான் நினைப்பான்.. இது கொஞ்சம் சரியா வருமா..?”
பார்கவி சந்தேகமாக கேட்க “அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. விடு.. தீரா.. உனக்கு என்ன சாதாரண தமிழ்ல பேச வராதா? நீ வழக்கமா காலையில சாமிக்கு ஒரு மந்திரம் சொல்லுவியே அதை சொல்லு.. அதுக்கப்புறம் இவங்க இப்படியே பேசிகிட்டு இருக்காங்களான்னு நான் பார்க்கிறேன்..”
அவனும் அஞ்சிலே ஒன்றை தாவி என்று ஆஞ்சநேயர் பற்றிய துதி பாடலை பாட ஆரம்பிக்க அப்படியே மெய்மறந்து கேட்டிருந்தாள் மதியழகி..
அவன் பாடி முடித்ததும் பாண்டி பார்கவி பக்கம் திரும்பி “தமிழ் எவ்வளவு சுத்தமா வருது பாத்தியா அவனுக்கு? அவன் நெனச்சா நல்லாவே தமிழ் பேச முடியும் அவனால.. இது அவனுக்கு சுலபமா வர்றதனால இப்படி பேசிகிட்டு இருக்கான்.. நடிப்புக்காக இப்படி தான் பேசணும்னு சொல்லி கொடுத்தா அவன் அந்த டயலாக்கை நம்ம சொல்ற படியே பேசுவான்.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. அதனால இந்த கவலையை விடுங்க.. என்ன தீரா.. நான் சொல்றது சரிதானே..?”
மதியழகிக்காக அவனை இப்போது நெருப்பிலே குதிக்க சொன்னாலும் தலையாட்டும் நிலையில் இருந்தவன் சரவணன் என்ன கேட்டான் என்று கூட காதில் வாங்காமல் “அதல்லாம் மாஸ் பண்ணிக்கலாம் பா..” என்றான் உடனடி பதிலாய்..
அவன் சொன்ன ஆஞ்சநேயர் துதிக்கும் இப்போது அவன் பேசிய வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை பார்த்து இது எங்கே போய் முடியப் போகிறதோ என்று ஒரு பெருமூச்சு விட்டாள் மதியழகி..
“அப்புறம் தீரா அவங்க சாயங்காலத்துக்கு கால் சென்டர் போறாங்க.. பகல்ல என் வைஃப் வேலை செய்யற காலேஜ்ல ப்ரோஃபசரா இருக்காங்க..” பாண்டி சொன்னது தான் அதைக் கேட்ட தீரனின் உடலில் ஒரு அதிர்வு தெரிந்தது மதியழகிக்கு..
இவ்வளவு நேரம் அவளைப் பற்றி மனதில் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அவள் ஒரு பேராசிரியர் என்று தெரிந்ததும் அவனுடைய கனவு கற்பனை அத்தனையும் இருட்டறைக்குள் சிக்கிக் கொண்டது..
அவன் படிக்காதவன்.. அந்த பெண்ணுக்கு இணையாக நடிப்பதே தவறு என்று தோன்றியது அவனுக்கு இப்போது.. அந்தப் பெண்ணுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இப்போதைக்கு இதை செய்தாலும் வேலை முடிந்த பிறகு அவள் பக்கம் பார்க்கும் தகுதி கூட தனக்கு இல்லை என்று முடிவு கட்டியவனுக்கு இப்போது மதியழகியின் அதே நிலைதான்.. அவளை நிமிர்ந்து பார்க்கவும் தயங்கினான் அவன்..
ஆனால் எவ்வளவுதான் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை..
தீரன் பொதுவாக அவனைப் பற்றிய மேலோட்டமாக விஷயங்களை படப்பிடிப்பு தளங்களில் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருந்தானே ஒழிய அன்றைய நாள் வரை இந்தரை ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு கூட அவன் அழைத்துச் சென்றதில்லை.. இந்தர் எப்படி இருப்பான் என்பது கூட அவன் வேலை செய்யும் படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கும் அதுவரை தெரிந்திருக்கவில்லை..
படித்து முடித்து இந்தர் நல்ல நிலைக்கு வரும் வரை தான் படப்பிடிப்பில் சந்திக்கும் கஷ்டங்களின் நிழல் கூட அவன் மீது படிய கூடாது என்று முடிவாக இருந்தான் அவன்..
அந்த ஒரு நாள் அவனை அந்த உணவு விடுதியில் சந்தித்தபோது கூட அவனுக்கு அந்த சந்திப்பே ஏன் தான் நிகழ்ந்ததோ என்று இருந்தது.. அதுவும் தான் ஒவ்வொரு சண்டை சாகசத்தையும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறோம்.. எப்படி எல்லாம் தனக்கு அடிபடுகிறது என்று அன்று தீரனுடன் வந்த அந்த நபர் இந்தரிடம் சொல்ல அதைக் கேட்டு இந்தர் முகத்தில் வலியின் ரேகைகள் தெரிந்ததையும் சட்டென அவன் முகபாவம் மாறி போனதையும் அவன் கவனித்து தான் இருந்தான்..
அவன் தீரன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் என்றும் தான் அந்த கால் சென்டரில் வேலை செய்து படிப்பு செலவினை சமாளித்து கொள்கிறேன் என்றும் சொன்னபோது அத்தனை நாள் தன்னுடைய எந்த வலியும் அவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தது எல்லாம் வீணாக போய்விடுமோ என்று சிறிது பதட்டம் தான் அடைந்தான் தீரன்..
அதனாலேயே பாண்டி போன்றவர்களுக்கு கூட தீரனுக்கு ஒரு தம்பி இருக்கிறான்.. அவனை தீரன் பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கிறான் என்று தெரியுமே தவிர அவன் தம்பி யார் என்றோ எந்த கல்லூரியில் பயில்கிறான் என்றோ அவன் அதுவரை எவரிடமும் பகிர்ந்ததில்லை..
எப்படி தம்பியின் விவரங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கிறானோ அதேபோல் தான் மற்றவர்களிடமும் அவர்கள் பற்றிய விவரங்களை மறந்தும் கேட்க மாட்டான் தீரன்.. அவன் படப்பிடிப்பு தளங்களில் பேசுவது ரொம்பவும் அரிது தான்.. அதுவும் அவன் வேலை சம்பந்தமாக மட்டுமே இருக்கும்.. என்ன வேலை செய்ய வேண்டும்.. அன்று என்ன என்ன சாகசங்கள் செய்ய வேண்டும் என்பதை மட்டும் கேட்டு வேலையை முடித்துவிட்டு செல்வதே அவன் வழக்கமாய் இருந்தது..
அதனால் தான் பாண்டியின் மனைவி பார்கவி வேலை செய்வதும் தன் தம்பி இந்தர் படிப்பதும் ஒரே கல்லூரியில் தான் என்பது அவனுக்கும் பாண்டிக்கும் இதுவரை தெரியாமலே இருந்தது..
இருவரில் யாராவது ஒருவருக்கு மற்றவரை பற்றி தெரிந்திருந்தால் கூட இவ்வளவு நேரம் மதியழகியை காதலிப்பதாக சொல்லி தொந்தரவு செய்து கொண்டிருப்பது தன் தம்பி தான் என்பது தீரனுக்கு விளங்கி இருக்கும்.. ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போனது
🎵🎶🎼முதன் முதலில்
பார்த்தேன் ..
காதல் வந்ததே..
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே..
என்னில் இன்று
நானே இல்லை..
காதல் போல
ஏதும் இல்லை..
எங்கே எந்தன்
இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா..?
நந்தவனம் இதோ
இங்கேதான்..
நான் எந்தன்
ஜீவனை நேரினில்
பார்த்தேன்..
நல்லவளே
அன்பே
உன்னால்தான்
நாளைகள் மீதொரு
நம்பிக்கை
கொண்டேன்..
நொடிக்கொரு தரம்
உன்னை
நினைக்க வைத்தாய்..
அடிக்கடி என்னுடல்
சிலிர்க்க
வைத்தாய்..
முதல் பார்வை
நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே
உயிர் வாழுமே…🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 20
பாண்டி வீட்டில் சந்தித்த முதல் நாள் தீரன் மதி இருவருக்கும் ஒருவர் பார்வையை இன்னொருவர் தவிர்ககும் முயற்சியிலும் அது முடியாமல் பார்வைகள் சந்திக்கும் வேளையில் பார்வையோடு மனதும் மற்றவர் புறம் தாவி ஓடுவதை தடுக்க முடியாத தவிப்பிலுமே முடிந்து போனது..
அவரவர் வீடு வந்து சேர்ந்த பிறகும் மற்றவரின் நினைவு அகலாமல் துரத்திக் கொண்டே வர அதோடு நிற்காமல் அவர்கள் உறக்கத்தையும் திருடிக் கொண்டு போனது அந்த நினைவு..
அடுத்த நாள் மாலை மறுபடியும் பாண்டி வீட்டில் நால்வரும் குழுமியிருக்க பாண்டி அடுத்த கட்ட வேலைகளை தொடங்க வேண்டும் என்று சொல்லவும் இருவருக்கும் மறுபடியும் உள்ளுக்குள் ஒரு வித பதட்டம் தோன்ற தொடங்கியது..
அன்றைய நாள் அவர்கள் காதலர்கள் போல் நடித்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்கு இன்பமும் இல்லாமல் துன்பமும் இல்லாமல் ஒருவித இனம் புரியாத அவஸ்தையான உணர்வாய் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பொங்கி வழிந்தது..
பாண்டி முதலில் அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து சென்று “தீரா.. மதி சிஸ்டர்.. ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.. இப்போ எங்க வீட்டு டைனிங் டேபிள் தான் நீங்க மீட் பண்ண போற ஹோட்டலோட ஒரு டின்னர் டேபிள்.. இந்த டைனிங் ரூமுக்குள்ள வரும்போது நீங்க ரெண்டு பேரும் பார்த்தவுடனே எப்படி ரியாக்ட் பண்ணனும்.. அப்புறம் இங்க வந்து இந்த சேர்ல எப்படி உட்காரணும்.. உட்கார்ந்து எப்படி பேசணும்.. இது எல்லாத்துக்கும் தான் இப்ப ட்ரைனிங் எடுத்துக்க போறீங்க.. இப்ப மொதல்ல தீரா.. நீ இங்க சேர்ல உக்காரு..”
தீவினை அழைத்து அந்த நாற்காலி இல்லாமல் சொல்ல அவனும் சட்டென வந்து சடாரென அமர்ந்தான்..
மதி பக்கம் திரும்பிய பாண்டி “மதி சிஸ்டர்.. நீங்க வெளியில் இருந்து உள்ள வாங்க..”என்க மதிய உடனேயே அந்த அறைக்கு வெளியே போய் நின்று கொண்டாள்..
“மதி உள்ள வந்த உடனே நீ அவங்களை போய் ஆசையா கூட்டிட்டு வந்து இங்க உன் பக்கத்தில் இருக்கற சேர்ல உக்கார வைக்கணும்.. புரியுதா..?”
தீரனை பாண்டி கேட்க “ஓகே பாண்டி.. இப்ப கவுன்ச்சுக்க நீ என் நடிப்பை.. என் நடிப்புல அப்படியே மெர்சலாவ போற பாரு நீ” என்றவன் பட்டென அந்த நாற்காலியில் நேராக விரைப்பாக அமர்ந்திருக்க “அது சரி.. நீ உட்கார்ந்த விதத்திலேயே நான் முழுசா மெர்சலாயிட்டேன் தீரா.. என்ன தீரா இப்படி சொதப்புற..? இப்படி தான் நீ திரும்பி நேரா அதுவும் கஞ்சி போட்ட காட்டன் சட்டை மாதிரி உட்கார்ந்து இருப்பியா? உன் லவ்வர் வர போறாங்க.. எவ்வளவு ஆசையா வாசலை பார்த்துட்டு அவங்களுக்காக எதிர்பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கணும் நீ?”
பாண்டி கேட்க “ஓ.. இப்போ அப்புடியா?” என்றவன் தன் நாற்காலியில் அந்த அறை வாசலை நோக்கி திரும்பி அமர்ந்து மதி எப்போது உள்ளே வருவாள் என்று நிஜமாகவே ஆவலோடு பார்ப்பது போல் பார்த்தான்.. உண்மையாகவே அவனுக்கு மதியின் முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் தான் தோன்றியது.. அதில் அவன் பார்வையும் இயற்கையாகவே காதலியின் வரவை எதிர்பார்த்து இருக்கும் ஒரு காதலனின் பார்வை போலவே இருந்தது..
அவனைப் பார்த்த பாண்டி “சூப்பர் தீரா.. அப்படியே இருக்க லவ்வர் மாதிரி.. கலக்கிட்ட போ.. இப்படியே பாத்துட்டு இரு..” அறையின் வாயிலை நோக்கி “மதி சிஸ்டர்.. உள்ள வாங்க..” என்க.. மதி அடி மேல் அடி வைத்து தயக்கத்துடனே ஒரு திருட்டு விழி விழித்தபடி உள்ளே வர தீரன் பார்வையை சந்தித்த நொடி சட்டென தலையை குனிந்து கொண்டாள்..
“என்ன மதி சிஸ்டர்.. உள்ள வந்த உடனே ஆசையா தீரன் எங்க இருக்காருன்னு தேட வேணாமா நீங்க..? இப்படி தலையை கவுத்துக்கிட்டீங்கன்னா எப்படி.. உங்க ரியாக்சன் தீரனை இதுவரைக்கும் நீங்க பார்த்ததே இல்லங்கற மாதிரியும் இப்ப தான் முதல் முதல்ல அவர் உங்களை பொண்ணு பார்க்க வந்திருக்கற மாதிரியும் இருக்கு.. லவ்வர்ஸ் எல்லாம் இப்படி இருக்க மாட்டாங்க சிஸ்டர்.. நீங்க உள்ள வரும்போது தீரன் எங்க உட்கார்ந்து இருக்காருன்னு தேடிட்டே வரணும்.. புரியுதா? உங்க கண்ணு தீரனை தேடி உள்ள வந்த உடனே அப்படியே அலை பாயணும்..”
பாண்டி சொல்லவும் அவளோ முகத்தில் ஒரு தர்ம சங்கடமான பாவனையை காட்டி “கிழிஞ்சுது.. பவி பேசாம விட்டிரலாம் டி.. வேற எதாவது செஞ்சு சமாளிச்சுக்கலாம்.. இது ரொம்ப கஷ்டமா இருக்கு டி..” என்க பார்கவி “இங்க பாரு.. இவ்வளவு தூரம் வந்தாச்சு.. உன்னால முடியும்.. இப்படி எல்லாம் பேசி என் மானத்தை வாங்காதே.. பாரு.. தீரா அண்ணன் எவ்ளோ அழகா ரியாக்ஷன் காட்றாரு.. ஒரு நாள் தானடி.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பண்ணுடி..”
பார்கவி சொன்னதை கேட்டவள் மறுபடியும் வெளியே போய் உள்ளே வந்த நேரம் பாண்டி சொன்னபடி அந்த அறை முழுதும் ஏதோ நிறைய மேஜைகள் இருந்தாற் போல கண்களை சுழட்டி அலை பாய்ந்த விழிகளை தீரனிடம் கொண்டு வந்து நிறுத்தினாள்..
மறுபடியும் அவன் விழிகளை பார்த்த நொடி சட்டென அவள் பார்வையை தழைக்கவும் “ஐயோ சிஸ்டர்.. நீங்க தேடுனதெல்லாம் சரிதான்.. ஆனா அவனை பார்த்துட்டு உங்க கண்ணுல அப்படியே சந்தோஷம் தெரியணும்.. உங்க லவ்வரை ஒரு வாரம் கழிச்சு பாக்குறீங்க.. புரியுதா?”
அவன் சொன்னதை கேட்டவள் மறுபடியும் வெளியில் இருந்து உள்ளே வந்து அவன் சொன்னது போலவே தேடி தீரனை கண்டதும் மிகவும் சிரமப்பட்டு விழிகளை தழைக்காமல் ஒரு அரை நிமிடம் அவன் பார்வையோடு தன் பார்வையை கலக்க செய்ய அந்த அரை நிமிடத்திற்கு மேல் ஒரு நொடி கூட அவளால் அந்த விழி கலப்பினை எதிர்கொள்ள முடியவில்லை.. அவனுடைய பார்வை தைக்கும் ஊசியாய் உள்ளே ஊடுருவி துளையிட்டுச் சென்று மனதை தைத்தது அவளுக்கு..
அவஸ்தையாய் மறுபடியும் அவள் தலையை குனிய அவள் அப்படி தலையை குனிவதற்கு முன் “சிஸ்டர்.. சிஸ்டர்.. சிஸ்டர்.. அப்படியே டயலாக் பேசிடுங்க.. அப்போ ஒன்னும் பிராப்ளம் வராது..”
பாண்டியன் அவசரமாக சொல்ல அவளோ “ட,.. டயலாக்கா?” என்று திணறியவளிடம் “ப்ச்.. அவனை கூப்பிடுங்க சிஸ்டர்..”
பாண்டி மறுபடியும் அவசரமாய் அவளுக்கு செய்ய வேண்டியதை சொல்ல “எ..என்ன.. கூப்பிடனுமா..?” என்றவள் முகம் சுருக்கி தயங்கி தயங்கி “ஹ… ஹலோ.. ச..சார்..” என்று தீரனை பார்த்து அழைக்க பாண்டி பார்கவி இருவரும் தலையில் கை வைத்து அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்கள்..
“சுத்தம்.. என்ன சிஸ்டர்.. சார்னு கூப்பிடுறீங்க..? அவன் உங்க லவ்வர்.. நீங்க அவனை பேபி செல்லம்னு எல்லாம் கூப்பிடலனாலும் அட்லீஸ்ட் தீரான்னு பேர் சொல்லியாவது கூப்பிடனும் இல்ல..?” என்று கேட்க பார்கவி வந்து “என்னடி இப்படி சொதப்பற? யாராவது லவ்வரை சார்ன்னு கூப்பிடுவாங்களா?” என்று கேட்க “ஏய்.. நான்தான் எனக்கு இதெல்லாம் வராதுன்னு சொன்னேன் இல்ல..? வேண்டாம்.. நாம இதை இங்கேயே முடிச்சுக்கலாம்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு தோணல..” அழும் நிலைக்கே சென்று விட்டாள் மதியழகி..
“சரி.. ஒன்னு பண்ணலாம் பவிமா.. அவங்க வந்து நிக்கட்டும்.. தீரனை பார்த்ததும் அவங்க சந்தோஷமா இருக்கிற மாதிரி எக்ஸ்பிரஷன் மட்டும் பண்ணட்டும்.. தீரா.. அவங்க உள்ள நுழைஞ்ச உடனே நீ நேரா எழுந்து போய் அவங்களோட பேசி அவங்களை கூட்டிட்டு வந்து உன் பக்கத்துல உட்கார வெச்சுக்க சரியா..?”
பாண்டியே அதற்கு ஒரு தீர்வு சொல்ல இப்போது மதிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..
ஆனால் இப்போது தீரனை படபடப்பு சூழ்ந்து கொண்டது.. ஒரு பெருமூச்சை விட்டவன் “ஓகே.. நான் ரெடி பா..” என்று எப்போதும் சண்டை காட்சிக்கு தயார் என்று இயக்குனரிடம் சொல்வது போல அவன் சொல்ல பாண்டி அவனை கலவரமாய் தான் பார்த்தான்..
மதியழகி அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அறை முழுதும் கண்களை சுழற்றி அலை பாய விட்டு அவனைக் கண்டவுடன் சிரமப்பட்டு விழி விரித்து ஏதோ ஆனந்த படுவது போல் ஒரு உணர்வை காண்பிக்க தீரன் எழுந்து வேகமாக அவள் அருகே சென்றான்..
அவசரமாய் அருகில் சென்றவனுக்கோ அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.. பிறகு கடினப்பட்டு அவள் பெயர் சொல்லி மதி என்று அழைக்க முனைந்தவன் “ம.. ம வாங்க.. ஹலோ ஹலோ.. ம.. ம..” என்று குரல் தடுமாற “மதி” என்று அழைக்க வந்தவன் அவளை அப்படி அழைக்க முடியாமல் “ஹலோ மேடம்.. வாங்க.. உள்ள வாங்க..” என்க பாண்டி தலையில் அடித்துக் கொண்டு பார்கவியை அலுப்பாய் ஒரு பார்வை பார்த்தபடி “மேட்டர் ஓவர்..” என்றான்..
பார்கவி பாண்டியை தீவிரமாய் முறைத்தாள்.. “இதுதான் நீங்க மாஸ் பண்ற லட்சணமா? என்ன பாண்டி.. அவ சார்ங்கறா.. அண்ணன் மேடம்ங்கிறாரு.. நம்ம கிட்ட ரொம்ப நேரமும் இல்லை.. ஞாயிற்றுக்கிழமைக்குள்ள இதை பண்ண முடியுமா சரியா?”
பார்கவிக்கு ரொம்பவும் சந்தேகமாக இருந்தது.. இந்த திட்டம் நடைமுறையில் ஒழுங்காக வருமா என்று..
“இல்ல.. மதி சிஸ்டர் இப்படி பண்ணறது ஒரு அளவுக்கு எனக்கு புரியுது.. ஆனா தீரன் ஏன் இவ்வளவு தடுமாறாரு.. அவர் சினிமால ஸ்டன்ட் பண்றவர்தானே..? நிறைய அங்க நடிக்கிறவங்களை எல்லாம் பார்த்து இருக்காரு.. அப்படியும் ஏன் இப்படி சொதப்பறாருன்னு தெரியலையே..”
அவன் நெற்றியை விரலால் நீவி விட்டபடி யோசனையாய் சொல்லிக் கொண்டிருக்க அவன் அருகே வந்த தீரன் “பாண்டி.. அவங்க ரொம்ப பட்ச்சவங்களா இருக்காங்க.. சட்டுனு நம்மளால அவங்கள மருவாதி இல்லாம பேர் சொல்லி கூப்ட மிடியலை பா.. தன்னாலே நாக்குல மேடம் வந்து ஒட்டிக்கிது.. இன்னொரு தபா எனக்கு சான்ஸ் குடு.. இப்போ நெஜமாவே மாஸ் காட்டறேன்.. பாத்துக்க..”
அவன் சொன்னதை கேட்ட பாண்டிக்கு அவன் சொன்னது புரிந்தது.. மதி ஒரு பேராசிரியர் என்று சொல்லி இருக்கவும் அவள் மேல் அவனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் வந்துவிட்டது என்று புரிந்தது..
“சரி.. எனக்கு புரியுது.. ஆனா இந்த முறை ஒழுங்கா பண்ணிடுவே இல்ல..?” என்று கேட்டவனிடம் நாலா பக்கமும் தலையை ஆட்டினான் தீரன்..
“மறுபடியும் பண்ணலாம்..” என்றவன் மதியிடம் “சிஸ்டர்.. நீங்க போய் மறுபடியும் வாங்க. நீங்க எதுவும் பேச வேண்டாம்.. தீரன் பார்த்துப்பாரு.. நீங்க கொஞ்சம் ஒரு அந்நியன் ஒருத்தரை பாக்குற மாதிரி பாக்காம லவ்வரை பார்க்கிற மாதிரி பார்த்தா மட்டும் போதும்..”
அவன் சொன்னதைக் கேட்ட அவளின் மனசாட்சி “உனக்கு அவனை பாக்கவே முடியல.. அவனை பார்த்தாலே உனக்கு பதறுது ஒதறுது.. இதுல லவ்வா வேற பார்க்க சொல்றாங்க.. இப்படி சொதப்பறியே மதி..” என்று கேலி செய்ய அவளோ “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எப்படியாவது கஷ்டப்பட்டு நான் பார்த்துடறேன்.. அவரும் மனுஷன் தானே..? அவரை பார்த்து எனக்கு என்ன பயம்? தயக்கம்? அது மட்டும் இல்லாம அவர் ஒரு ஸ்டண்ட் பார்ட்டி.. அதனால கொஞ்சம் தயக்கமா இருக்கு.. இந்த முறை பாரு.. நான் எப்படி நடிக்கிறேன்னு” என்று தன் மனசாட்சிக்கு கவுண்டர் கொடுத்துவிட்டு வேலையில் இறங்கினாள் மதி..
மறுபடியும் அந்த காட்சியை அரங்கேற்ற முயற்சி செய்ய இம்முறை அந்த அறையில் தேடி தீரனை கண்டு கொள்ளும் வரை சரியாக முகத்தில் அவள் உணர்வுகளை பிரதிபலித்தாள்.. அவனும் அவளை கண்ட நொடி எழுந்து அவள் அருகில் சென்று “ஹாய் மதி.. வாங்க.. உள்ள வாங்க..” என்க மறுபடியும் அவனை பார்வையில் வெறி கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாண்டியும் பார்கவியும்..
🎵🎶🎼மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி
வந்ததே..
லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக
பூத்ததே..
உன் வார்த்தை
தேன் வார்த்ததே..
மௌனம் பேசியதே..
குளிர் தென்றல்
வீசியதே..
ஏழை தேடிய
ராணி நீ என்
காதல் தேவதையே..🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 21
தீரனை கோபவெறி கொண்டு பார்த்து கொண்டிருந்த பார்கவியையும் பாண்டியையும் பார்த்த பிறகும் தான் எவ்வளவு லட்சணமாக நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று விளங்கவில்லை தீரனுக்கு..
இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தவன் “புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் இன்னாத்துக்கு இப்படி என்னிய மொறைச்சி பாத்துக்கினுக்கீறீங்கோ?”
அவன் நிஜமாகவே புரியாமல் கேட்க “ம்ஹூம்.. இது சரியா வராது..” என்ற பாண்டி “பவி குட்டி.. இனி இவங்க ரெண்டு பேரையும் நம்பி புண்ணியம் இல்ல.. நம்மளே நேரா களத்துல குதிக்க வேண்டியது தான்..” என்று சொல்லவும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று பார்கவிக்கே புரியவில்லை..
“என்ன சரவணா.. என்ன சொல்ற நீ? இதுல நம்ம என்ன பண்ணமுடியும்?”
அவள் புரியாமல் விழிக்க “ம்ம்ம்.. நம்ம கல்யாணத்துக்கு முன்ன லவ்வர்ஸா சுத்திட்டு இருந்தோம் இல்ல? அந்த நேரத்தை மறுபடியும் கொண்டு வந்து இவங்க ரெண்டு பேருக்கும் லவ்வர்ஸ்னா எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு காட்டணும்..” என்றான்..
அவன் சொன்னதை கேட்ட பார்கவி முகத்தில் அடுத்த கணம் காதலும் வெட்கமும் கலந்த புன்னகை தோன்ற ஆசையும் நேசமும் கலந்த பார்வையோடு ஒரு நொடி அவனை பார்த்தவள் அடுத்த நொடி விழி தழைத்தாள்..
பார்கவியின் அருகே சென்ற பாண்டி அவள் தோள்களை தன் இரு கைகளால் பிடித்து புருவத்தை ஏற்றி இறக்கி “என்ன பேபிமா.. லவ் பண்ணி காட்டலாமா?” என்றவன் முகத்தை பார்த்து குப்பென வெட்கத்தில் முகம் சிவக்க “ஹையோ.. என்ன சரவணா இது..? அவங்க முன்னாடி.. வரவர உனக்கு விவஸ்தையே இல்லாம போச்சு..”
அவன் மார்பில் செல்லமாய் அடித்தவள் இன்னும் வெட்கப்பட்டு சிணுங்கினாள்..
“அடியே ஜாங்கிரி.. என்னடி இது? இப்படி செவக்கற? இன்னும் புது பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுக்கிட்டு உன் வெக்கத்தாலேயே மாமனை கெறங்கடிக்கிறியேடி.. இதுதாண்டி உன்னை தினம் தினம் எனக்கு புது அழகோட காட்டுது.. உன் மாமனை வேற பக்கம் திரும்ப கூட விட மாட்டேங்குது.. அப்படியே இரும்பை தன்னோட இழுத்து வெச்சுக்கற மேக்னட்டை மாதிரி என்னை உனக்குள்ள இழுத்து வெச்சு கொல்றியேடி..” ரகசியமாக அவள் காதை கடித்தான் பாண்டி..
தீரனும் அதே நேரம் மதியழகியை பார்க்க அவளோ பார்கவி பாண்டியன் இருவருடைய அழகான காதல் பேச்சுக்களை கேட்டு உதித்த எழிலான குறுநகையோடு யோசனையில் இருந்தாள்..
“ஏ பாண்டி.. போதும் பா.. உங்க ரெண்டு பேரோட ரொமான்ஸூம் பார்க்க அழகா தான் கீது.. ஆனா எங்களுக்கு ரொம்ப டைமில்லியே.. எங்க மேட்டரை கொஞ்சம் கவன்ச்சிக்க பா..”
அவனைப் பார்த்த பார்கவி “அண்ணா.. நீங்க இந்த மாதிரி பேசும் போது எனக்கு நீங்க டயலாக் பேசும்போதும் உங்களோட இந்த மெட்ராஸ் பாஷை நடுவுல தப்பி தவறி வந்தடுமோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு ணா.. நீங்க எங்க கூட இப்ப பேசும்போது சாதாரணமா எங்களை மாதிரியை பேச ட்ரை பண்ணுங்களேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு தன் புருவம் உயர்த்தி தலையை சொரிந்தபடி அவளை சங்கடமாக பார்த்த தீரன் “இதுல இப்படி ஒரு மேட்டர் வேற கீதா..? நீ சொல்ற மாதிரி டக்குனு நம்ம பாஷை ஊடால வந்துச்சுன்னா ரொம்ப பேஜாரா தான் பூடும்.. சரி தங்கச்சிமா.. நீ சொல்ற மாதிரியே பண்ணிக்கிறேன்..”
என்றவனை மூவரும் தீவிரமாய் முறைக்க “சரி சரி.. சாரி.. எல்லாரும் காண்டாவாதீங்கோ..” என்றவன் அவர்களின் முகபாவனையை பார்த்து நாக்கை கடித்துக் கொண்டு “சரி.. எல்லாரும் கோவப்படாதீங்க.. நான் இனிமே இப்படியே பேசுறேன்..”
“அப்பா.. அண்ணா இப்ப நீங்க பேசுறதை கேட்கிறப்போ எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? நீங்க இப்படியே பேசுனா மதிக்கும் உங்களோட நடிக்க கொஞ்சம் தைரியம் வரும்.. இல்லைன்னா எனக்கு என்னவோ அவ உங்க பாஷையை கேட்டு தான் உங்க பக்கத்துல வந்து நடிக்கிறதுக்கே தயங்குறானு தோணுது..”
பார்கவி சிரித்துக் கொண்டே சொல்ல அதைக் கேட்டவன் “டேய் தீரா.. அந்த பொண்ணு அம்மாம் மெர்ஸல் ஆவுது இல்ல? உன் மெட்ராஸ் பாஷையை கண்ட்ரோல் பண்ணுடா..” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் “சரிமா.. இனிமே இப்படியே பேசுறேன்..”
சாதாரண தமிழில் பேசினானே தவிர யோசித்து யோசித்து மிகவும் மெதுவாய் தான் பேசினான் தீரன்..
அவன் தனக்காக தான் இப்படி பேச முயற்சி செய்கிறான் என்ற எண்ணம் மதியின் மனதில் அவனைப் பற்றிய ஒரு மதிப்பான அபிப்பிராயத்தை கோர்த்தது.. அவனைப் பார்த்தாலும் பாவமாய் தான் இருந்தது.. இயல்பாய் இருக்க முடியாமல் எதையோ தூக்கி பாரமாய் தலையில் வைத்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறான் அவன்..
“சரி.. ஜில்லு.. வா.. நம்ம போய் அவங்களுக்கு லவ்வர்ஸ்னா எப்படி இருக்கணும்னு காட்டி கிளாஸ் எடுக்கலாம்.. நம்ப நிஜத்திலயே அப்படித்தான்.. அதை பார்த்து அவங்க அதே மாதிரி நடிச்சுகிட்டம்” என்று பாண்டி சொல்ல “அது சரி ..” என்று தலையை ஆட்டியபடி அந்த அறைக்கு வெளியே போய் நின்று கொண்டாள்..
மதியழகி முழுவதுமாக அவள் முகத்தின் முகபாவனைகளை பின்பற்ற ஆரம்பித்தாள்..
அறைக்கு வெளியே இருந்து உள்ளே வந்து கண்களை அலைபாய விட்டு சாப்பாட்டு மேஜை எதிரில் அமர்ந்திருந்த பாண்டியிடம் வந்து பார்வையை நிலைக்க வைக்க அவனோ அதுவரை அந்த அறை வாயிலையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தவன் பார்கவி உள்ளே வந்த நொடி கண்களை பெரிதாய் விரித்து முகம் மலர்ந்து “ஹாய் பவி பேபி..” என்றபடி ஓடிவந்து அவளை அழுத்தமாய் தன்னோடு அணைத்துக் கொண்டான்..
மதியழகியும் தீரனும் கண்களில் இருந்த கருவிழிகள் வெளியே வந்து விழுந்து விடும் போல அவர்களை அதிர்ச்சியோடு பார்த்திருந்தார்கள்..
பாண்டியோ வெகு இயல்பாக பார்கவி தோளை சுற்றி கையை வளைத்து போட்டவன் “ஏய் ஜில்லு.. நீ எப்ப வருவன்னு பார்த்துக்கிட்டே இருந்தேன்.. கொஞ்சம் லேட் ஆன உடனே எங்க வராம போய்டுவியோன்னு அப்படியே என் ஹார்ட்டு படபடன்னு அடிச்சுக்க தொடங்கிருச்சு.. இங்க பாரு..” என்று பார்கவியின் கையை எடுத்து உள்ளங்கையை விரித்து தன் மார்பில் வைத்துக் காட்டினான்..
அவளோ கண்களில் காதல் ஒழுக அவன் கன்னத்தை தன் கையில் தாங்கி “அதுதான் வந்துட்டேனேடா..” என்றாள் அவனை கூர்ந்து நோக்கியபடி..
கன்னத்தில் இருந்த அவளின் கை மீது தன் கையை பதிய வைத்தவன் அதை எடுத்து அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து
மேஜை வரை அவளை அப்படியே தோளணைத்தார் போல் அழைத்துப் போனவன் அவளை அங்கே நிற்க வைத்துவிட்டு நாற்காலியை பின்னே இழுத்து சேவகன் போல் வளைந்து நின்று நாற்காலியை ஒரு கையால் காண்பித்து அவளை அமரச் சொன்னான்..
அதுவரை அங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் வாயை மூடி பார்த்துக் கொண்டிருந்த மதியழகி “ஏய் பவி.. என்னடி இது..? என்னால இப்படி எல்லாம் பண்ண முடியாது.. நான் கிளம்புறேன்..” அவள் மனம் விட்டு போய் வீட்டுக்கு போக திரும்பினாள்..
பார்கவி நாற்காலியில் அமர போனவள் வேகமாய் மதியழகியின் அருகில் ஓடி வந்து அவள் முன்னே வழி மறித்தார் போல நின்று கொண்டு “ஏன்டி.. மறுபடியும் என்னடி பிரச்னை? என்ன ஆச்சு? திடீர்னு எதுக்கு கெளம்புறேங்கற?” புரியாமல் கேட்டாள் ..
அவளோ “என்னடி விளையாடுறியா? அவரு என்னவோ உன்னை கட்டிக்கிறாரு.. அப்புறம் உன்னை அணைச்சா மாதிரி கூட்டிட்டு போய் உட்கார வைக்கிறாரு.. உன் கையை எடுத்து அவரு நெஞ்சில் வச்சுக்கறாரு.. கைல முத்தம் கொடுக்கறாரு.. நீங்க புருஷன் பொண்டாட்டி.. உங்களுக்குள்ள இதெல்லாம் ஒன்னும் இல்லாத விஷயமா இருக்கலாம்.. ஆனா நாங்க எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடியும்? என்னால முடியாது.. நான் கிளம்புறேன்..” என்று தலையை உதறிய படி அவள் சொல்ல அவள் கையை பிடித்து தடுத்தாள் பார்கவி..
“அடியேய்.. நாங்க பண்ற மாதிரி அப்படியே பண்ணனும்னு உங்களை சொல்லலடி.. உங்களால முடிஞ்ச வரைக்கும் சகஜமா எவ்வளவு தூரம் பண்ண முடியுமோ பண்ணலாம்.. பாண்டி மாதிரி நான் ஒன்னும் தீரன் அண்ணனை உன்னை இறுக்கமா அணைச்சுக்க சொல்லல.. ஆனா உன் தோள் மேல லேசா கையை போட்டு அழைச்சிட்டு போய் உட்கார வைக்கலாம் இல்ல..? அதே மாதிரி தான் நெஞ்சில கை வைக்கிறதும்.. என் கையை எடுத்து என் பாண்டி அவன் நெஞ்சில அழுத்தமா வச்சுக்கிட்டான்.. தீரா அண்ணா கையை லேசா வைக்கட்டும்.. அவர் சட்டை மேல உன் கை லேசா படுறதுனால உன் கை ஒன்னும் தேஞ்சு போகாது..” அவள் நிஜமாகவே கோபப்பட்டாள் மதியழகியிடம்..
பாண்டியும் கூட வந்து “சிஸ்டர் நீங்க நடிக்க போறது லவ்வர்ஸா.. ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிக்கிறவங்களே இந்த காலத்துல இப்படித்தான் நடந்துக்கிறாங்க.. அப்படி இருக்கும்போது லவ்வர்னு சொல்லி நீங்க அதுல ஒரு 10% கூட பண்ணலேன்னா எப்படிம்மா..? கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா..”
அவன் பங்குக்கு அவனும் கெஞ்சினான்.. அதற்குள் அங்கே வந்த தீரன் பாண்டியை கண்ணை மூடி திறந்து ஆசுவாசப்படுத்திவிட்டு மதியழகியிடம் “நான் சொல்றதை கேளுங்க மதி மேடம்.. நான் நிச்சயமா உங்க கையெல்லாம் அழுத்தி பிடிக்க மாட்டேன்.. சும்மா அவங்களுக்கு காட்டுறதுக்காக உங்க தோள்ல அணைச்ச மாதிரி லேசா கை வெச்சுக்குவேன்.. அந்த மாதிரி நடிக்க போறேன்.. அவ்வளவுதான்.. என் கை உங்க தோள்ல லேசா பட்டிருக்கும்.. இப்ப நீங்க பஸ்ல போகும்போது பஸ் கூட்டமா இருந்தா உங்க மேல அடுத்தவங்க கை படற மாதிரி தான் இதுவும்.. அந்த ஒரு நாள் நம்ம அட்ஜஸ்ட் பண்ணி நடிச்சிட்டோம்னா அதுக்கப்புறம் நிம்மதியா இருக்கலாம்..”
அவன் மிகவும் சிரமப்பட்டு மெதுவாக தன் சென்னை தமிழ் இடையில் வராமல் விட்டுவிட்டு தயங்கி தயங்கி பேசினான்..
அவளும் அவன் சொன்னதை கேட்டு சிறு கலக்கத்துடனே “சரி நடிக்க ட்ரை பண்ணலாம் வாங்க..” எனவும் மறுபடியும் அங்கே நாடக ஒத்திகை துவங்கியது..
இந்த முறை தீரன் அப்படியே பாண்டி செய்ததை அக்ஷரம் பிசகாமல் முகத்திலும் சரி வார்த்தைகளிலும் சரி எந்தவித மாற்றங்களும் இல்லாமல் ஒரு நிஜமான காதலனின் உணர்வுகளை அழகாக முகத்திலும் செய்கையிலும் பிரதிபலித்தான்..
அவள் அருகில் வந்து அவள் தோளில் அணைத்தார் போல் பட்டும் படாமல் கை வைத்தவன் மெல்ல அவளோடு நடந்து அவள் அமர வேண்டிய இருக்கையை பின்னால் தள்ளி அவளை அமரச் சொல்லவும் அவளும் ஏதோ ஒரு எந்திர பதுமை அமர்வது போல ஒரு சிறு படபடப்புடனே அந்த நாற்காலியில் அமர்ந்தாள்..
அவளை திட்ட வேண்டும் என்று பார்கவி ஏதோ சொல்ல வாய் எடுக்க அவளை கையமர்த்தினான் பாண்டி..
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 22
“இப்ப நீ ஏதாவது சொன்னேனா அவங்க கிளம்பி போயிருவாங்க.. வேணாம்.. இப்படியே கண்டினியூ பண்ணிக்கட்டும்.. இன்னும் மூணு நாலு நாள் இருக்கு இல்ல? பாத்துக்கலாம்..” என்று ரொம்பவும் தழைந்த குரலில் அவளிடம் சொல்ல அவளுக்கும் அவன் சொன்னது சரிதான் என தோன்றவும் அப்படியே அமைதியாகி போனாள்..
“ம்ம்.. ஓகே தான்.. மதி சிஸ்டர்.. நீங்க இன்னும் கொஞ்சம் நேச்சுரலா சகஜமா பதட்டம் இல்லாம இருக்க ட்ரை பண்ணுங்க.. நீங்க அப்படி இருந்தாலே மிச்சத்தை தீரன் பாத்துக்குவான்..”
பாண்டி சொல்ல அவள் முகத்தில் கவலையின் ரேகை அதிகரித்திருந்தது..
“சரி.. இப்ப இது முடிச்சிட்டோம்.. அடுத்தது சேர்ல உக்காந்த பிறகு என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?”
பாண்டி கேட்க “இல்லண்ணா.. எனக்கு வீட்டுக்கு போக டைம் ஆயிடுச்சு.. நான் கிளம்புறேன்.. நாளைக்கு வந்து மிச்சத்தை பாத்துக்கலாமே..” இப்போதைக்கு அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்றால் போதும் என்பது போல் இருந்தது அவளுக்கு..
“சரிங்க சிஸ்டர்.. நீங்க கிளம்புங்க.. ஆனா நாளைக்கு வந்த உடனே நடிச்சு பாக்குறதுக்கு முன்னாடி சாப்பாட்டுல.. கலர்ஸ்ல.. அப்புறம் மத்த எல்லா விஷயங்கள்லயும் உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் என்னென்னன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி நல்லா ஞாபகத்தில வெச்சுக்கோங்க.. ஏன்னா அடுத்து நீங்க டின்னருக்கு ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணும்போது ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணனும்.. நீங்க போட்டுட்டு வர டிரஸ் இது எல்லாமே ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிச்சதா இருக்கணும்..”
“சரி நாளைக்கு நான் ஒரு பேப்பர்லயே எல்லாத்தையும் எழுதிக்கிட்டு வர்றேன்..” என்றாள் மதி..
தீரனோ “என் கையெழுத்து எல்லாம் நல்லா இருக்காது.. புரியவும் புரியாது.. கோழி கிளறுன மாதிரி இருக்கும்.. நான் வேணா இங்க வந்தப்பறம் வாயிலேயே சொல்லிக்கறேன்..” எனவும் பார்கவியும் மதியும் களுக்கென சிரித்தார்கள் அதை கேட்டு..
அவன் வெட்கத்தோடு முகத்தில் அசடு வழிய தலை குனிந்து அமர “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ வாயாலே சொல்லு தீரா..” என்று சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தான் பாண்டி..
அதன் பிறகு ஒருவழியாய் மதி தன் வீடு வந்து சேர்ந்தாள்..
இரவு முழுவதும் அவளால் உறங்கவே முடியவில்லை.. என்ன என்னவோ எண்ணங்கள்.. உறங்கிய பிறகும் என்னென்னவோ கனவுகள்.. எல்லாவற்றிலும் தீரன் மட்டுமே நிறைந்திருந்தான்..
காலையில் எழுந்ததும் “எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் அவரைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கேன்..? என்னன்னே தெரியலை.. ரொம்ப டென்ஷனா இருக்கு..” என்று தனக்குள்ளேயே புலம்பி கொண்டவள் கல்லூரி செல்ல வேண்டும் என்ற நினைப்பு வரவும் வேகவேகமாய் காலை வேலைகளை பார்த்து முடித்து கல்லூரிக்கு கிளம்பினாள்..
இங்கே தீரனுக்கும் அதே நிலைதான்.. இரவு முழுவதும் கண்ணில் உறக்கம் அண்டாமல் மதி முகத்தை மட்டுமே மனதில் தாங்கி இருந்தான் அவன்.. எங்கு பார்த்தாலும் அவள் முகமே அவன் கண் முன் வந்து நின்று அவனின் தவிப்பான நிலையை பார்த்து கைகொட்டி சிரித்தது…
அப்படியே புரண்டு புரண்டு படுத்திருந்து எழுந்தவன் மறுநாள் பத்து மணிக்கு படப்பிடிப்பு என்று சொல்லி இருக்க அதிகாலையிலேயே கிளம்பி ஏழு மணிக்கே படபிடிப்பு தளத்திற்கு வந்திருந்தான்..
யாரும் இன்றி அந்த இடத்தை பெருக்கும் தொழிலாளி ஒருவர் மட்டும் பெருக்கிக் கொண்டிருக்கவும் அவர் தீரனை பார்த்து “ஏன்பா இன்னும் யாருமே வரலையேப்பா.. நீ என்ன இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்க? எல்லாம் ஒன்பது மணிக்கு மேல தான் வருவாங்கன்னு பேசிக்கிட்டாங்களே..”
“ஆமா ணே.. எனக்கு இந்த பக்கம் வேற ஒரு வேலை இந்துது.. அதுக்காக வந்தேன்.. அப்படியே அது முடிஞ்சா மாறிக்கு மறுபடியும் வூட்டுக்கு போய் வர ஒரே சோம்பலா இருந்திச்சுண்ணே.. அதான் இங்கே வந்து குந்திக்கிலாம்னு வந்துட்டேன்..”
எதையோ சொல்லி அவன் சமாளிக்க அவரும் தலையாட்டி கொண்டே போய்விட்டார்..
இங்கே கல்லூரிக்கு வந்த மதியழகிக்கோ பாடம் எடுப்பதில் மனம் செல்லவே இல்லை.. எதை செய்தாலும் தீரனின் முகம் வந்து கண்முன் நின்று அவளை தடுமாற வைத்தது.. பாடம் எடுக்கும் போது கூட இரண்டு மூன்று இடங்களில் அவள் ஏதோ தவறாக சொல்லி விட அதை மாணவர்கள் சுட்டிக்காட்டி அவளை திருத்தும் அளவிற்கு அவள் நிலை போய் இருந்தது..
“சாரி ஸ்டூடண்ட்ஸ்.. அம் நாட் ஃபீலிங் ஓகே.. நீங்க உங்க ப்ராஜெக்ட் வேலையை பாருங்க.. நான் நாளைக்கு கிளாஸ் எடுக்கிறேன்..” என்ற மதி தன் இருக்கையில் வந்து தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்..
இந்த கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து பாடம் எடுக்க முடியாமல் அவள் தடுமாற்றம் அடைந்தது இதுவே முதல் முறை.. மாணவர்களுக்கே அவள் அப்படி தடுமாறியது ஆச்சரியமாக இருந்தது..
அந்த வகுப்பு முடிந்து விரிவுரையாளர் அறைக்கு வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்து விட்டாள்.. அடுத்த வகுப்புக்கு கூட செல்லாமல் வேறு ஒரு ஆசிரியரை அந்த வகுப்பை எடுக்க சொல்லி அனுப்பிவிட்டு அப்படியே அந்த மேஜையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்..
மாலை தன் வகுப்புகளை முடித்துவிட்டு அந்த அறைக்குள் நுழைந்த பார்கவி மதியழகியை பார்த்து “ஹேய்.. என்னடி ஆச்சு? இப்போ உனக்கு கிளாஸ் இருக்குல்ல? போகலையா?” என்று கேட்க “இல்லடி.. என்னவோ மனசு சரியில்ல அதான் இங்க வந்து படுத்துட்டேன்..”
அவள் சொல்லி முடிக்கும் நேரம் அந்த அறைக்குள் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லியபடி நுழைந்தான் இந்தர்..
அவனைப் பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டு “வந்துடுச்சு.. அடுத்த தலைவலி..” எனவும் அவனோ “மதிக்கு தலை வலிக்குதா? நான் வேணா ஏதாவது மெடிசன் வாங்கிட்டு வரட்டுமா வெளியில் போய்..”
அவன் பார்கவியை கேட்க “ம்ம்ம்.. இந்த தலைவலி எந்த மெடிசினாலயும் சரியா போகாது.. இவன் என்னை விட்டு ஒரேடியா போயிட்டான்னா தன்னால இந்த தலைவலி காணாம போயிடும்.. ஏன் தான் இப்படி என்னை துரத்துறானோ தெரியலை.. நான் தான் சொல்றேன் இல்ல..? என்னால அவனை லவ் பண்ண முடியாதுன்னு.. தயவு செஞ்சு என்னை விட்டுட சொல்லு பார்கவி.. என்னை கேம்பஸ்க்குள்ள தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொன்னவன் இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கான்..?”
அவள் கேட்கவும் அவனோ “நான் யாரையும் தொந்தரவு பண்ண வரல.. இந்த அசைன்மென்ட்டை சப்மிட் பண்ணலாம்னு தான் வந்தேன்.. இந்தாங்க.. இதை மதி கிட்ட கொடுத்துடுங்க..”
பார்கவி கையில் அந்த காகிதக் கற்றையை கொடுத்தவன் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தான்..
மதியின் மேஜையில் அவன் கொடுத்ததை வைத்த பார்கவி “என்ன ஆச்சுடி உனக்கு? ஏன் இப்படி இருக்க? அதான் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு இல்ல?” என்று கேட்க “என்னடி நல்லபடியா போயிட்டு இருக்கு? எனக்கு ரொம்ப பயமா இருக்கு பார்கவி.. இந்த சின்ன பையனால ஏதாவது பெரிய பிரச்சனை வந்துருமோன்னு ரொம்ப கவலையா இருக்குடி.. நிச்சயமா அப்படி ஏதோ நடக்க போகுதுன்னு என் மனசுல தோணிக்கிட்டே இருக்கு.. அந்த தீரனோட என்னால நடிக்கவும் முடியலடி.. ஏதோ ஒரு மாதிரி இருக்குடி..”
“என்னடி இப்படி சொல்ற நீ? ஏற்கனவே நம்ம காலேஜ் ஆனுவல் டேல டீச்சர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு டிராமா ஆக்ட் பண்ணும் போது அந்த சேகரோடையே ஜோடியா நடிச்சவ தானடி நீ? அப்பெல்லாம் உனக்கு அது ஒன்னும் கஷ்டமா இல்லையே.. தீரன் அண்ணாவோட நடிக்கறதுக்கு உனக்கு என்னடி அவ்வளவு தயக்கம்? அவரு பார்க்க பழக ஒரு மாதிரி இருக்காரே தவிர ரொம்ப நல்ல மனுஷன் டி.. அந்த சேகர் மாதிரி ஆளு கூட நடிச்ச உனக்கு அவரோட நடிக்கிறதுல தயக்கமே இருக்க வேண்டாம்..”
“எனக்கு புரியுதுடி.. இன்ஃபேக்ட் அவர் ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்.. ஆனா அவரை பார்த்தாலே எனக்கு கை கால் எல்லாம் உதறுதுடி.. உனக்கு அதை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியலை.. என்னால அவர் கண்ணை பார்த்து பேச கூட முடியல டி..”
அவள் சொன்னதைக் கேட்ட பார்கவி யோசனையாய் புருவம் சுருக்கினாள்.. மனதிற்குள் “இல்லையே.. இது வேற ஏதோ பிரச்சனை போல தெரியுது.. ஒருவேளை இவளுக்கு தீரா அண்ணன் மேல..” என்று யோசித்தவள் “ம்ஹூம்.. நம்பளா இந்த மாதிரி ஏடாகூடமா எதுவும் நினைக்க வேண்டாம்.. அப்படி இருந்தா அது தெரியாமயா இருந்திருக்கும் அவளுக்கு.. அதுவும் தீரன் அண்ணன் மாதிரி படிக்காதவர்.. முரட்டு ஆள்கிட்டலாம் இவளுக்கு அப்படி எல்லாம் எந்த எண்ணமும் வராது..”
தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டவள் “அதெல்லாம் இந்த ரெண்டு நாள் அவரோட சேர்ந்து நடிச்சா அதெல்லாம் சரியாயிடும் டி.. நீ கவலைப்படாத.. சரி.. நான் ஒன்னு சொல்லவா.. வா.. கேண்டீன் போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்.. எல்லாம் சரியா போயிடும்..” என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு கேன்டினுக்கு சென்றாள் பார்கவி..
அன்று மாலை மறுபடியும் நால்வரும் பார்கவியின் வீட்டில் குழும தீரன் கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தான்.. ஆனால் மதியழகி முகத்திலோ குழப்பம் மற்றும் கவலைகளின் கலவையான ரேகைகள்..
பார்கவி சமையல் அறைக்கு சென்று அவர்களுக்கு சிற்றுண்டியும் குடிக்க காப்பியும் தயார் செய்ய.. பாண்டி அவளுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவளுக்கு சின்ன சின்ன காதல் சீண்டல்கள் மூலம் உபத்திரவங்கள் செய்து கொண்டிருந்தான்..
வரவேற்பறையில் படபடப்போடு அமர்ந்திருந்த மதியழகியின் முகத்தை பார்த்த தீரனுக்கு அவள் ஏதோ பெரிய குழப்பத்தில் இருக்கிறாள் என்பது புரிந்து தான் போனது..
அவள் அருகே வந்தவன் “ஏதாவது பிராப்ளமா? உங்களால முடியலனா நம்ம இதை விட்டுடலாம்.. வேண்டாம்.. உங்களை கஷ்டப்படுத்தி நடிக்க வைக்கிறதுல எனக்கும் விருப்பம் இல்லை.. நான் அந்த பொண்ணை வேற எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்.. உங்களை தொந்தரவு பண்ற பையன் யாருன்னு சொல்லுங்க.. என் ஸ்டைல்ல அவனுக்கு நாலு காட்டுகாட்டி மிரட்டி அடக்கி வைக்கிறேன்..”
அவளிடம் காதல் சொல்லி அவளுக்கு வலியை கொடுப்பவன் தன் தம்பி தான் என்று அறியாது பேசிக் கொண்டிருந்தான் தீரன்..
அவ்வளவு தூரம் தீரன் பேசிய பிறகு அவளால் அதற்கு மேலும் பிடிவாதமாய் இருக்க முடியவில்லை..
“எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புதுசா இருக்கு.. வேற ஒன்னும் இல்ல.. பரவால்ல.. நம்ப நடிச்சு பார்க்கலாம்.. பார்கவி சொல்ற மாதிரி இந்த மூணு நாள் பிராக்டிஸ் பண்ணா ஒரு வேளை நம்ப நல்லா நடிச்சுருவோமோ என்னவோ.. இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை.. அதனால கொஞ்சம் சங்கடமா இருக்கு..” அவன் முகத்தை பார்க்காது தலை குனிந்தபடியே பேசினாள் மதியழகி..
அவனுக்கோ அவள் அப்படி அவன் முகம் பாராமல் பேசியதே மனதில் எங்கோ ஒரு மூலையில் வலித்தது..
🎵🎶🎼
உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே..
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே..
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்..
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன் ..
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே..
ஏன் பிறந்தேன் என்று
நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன்
உண்மை நான் அறிந்தேன்..
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான்
கண்டு கொண்டேன்..
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை.. இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை..
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
ஏ ஏ ஏ ஏ
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ..
🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 23
“இன்னிக்கு நடிக்கறதுக்கு ட்ரை பண்ணி பார்ப்போம்.. முடியலைன்னா விட்டுடுவோம்.. ஓகேவா? நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இன்னிக்கு இது முடியலன்னா நான் அந்த பையனை மிரட்டி ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.. சரியா?”
அவன் அவளுக்காகவே பார்த்து பார்த்து தன் இயல்பான பாஷை நடுவில் தப்பி தவறி கூட நுழைந்து விடாமல் தயங்கி தயங்கி ஆறுதல் சொல்லி அவளை ஊக்கப்படுத்துவது போல் பேச அதற்கு மேலும் அவனை நிமிர்ந்து பாராமல் இருக்க மனம் வராமல் ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.. அவன் கண்களை பார்த்த நொடி அதிலேயே தொலைந்து போனாள் பெண்ணவள்..
அவனுடைய இரண்டு விழிகளையும் சந்தித்த நொடி அவளுடைய இரு கருவிழிகளும் பெண்டுலம் போல இடவலமாய் ஆடிய படி அந்த ஆழ்ந்த பார்வையில் இருந்து மீள முடியாமல் போக தவித்து போய் இமைகள் படபடத்து மறுபடியும் அவசரமாய் விழி தழைத்து தலை குனிந்து அமர்ந்தாள் அவள்.. அவள் இதயமோ எக்ஸ்பிரஸ் வேகத்தில் படபடவென அடித்துக் கொண்டிருந்தது அந்த நொடி..
“என்ன நடக்குது எனக்கு?” புரியாமல் தவித்து போனாள் அவள்.. அவனுக்கும் ஒரு நொடி தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் குழப்பமே மேலோங்கி நின்றது..
சட்டென அவன் அங்கிருந்து நகர்ந்து சற்று தள்ளி அமர அவளுக்கோ அப்போதுதான் கொஞ்சம் சீராக மூச்சு விட முடிந்தது.. நினைவு தெளிவாகி தன் பையில் இருந்து ஒரு தாளை எடுத்தவள் “இந்த பேப்பர்ல எனக்கு என்ன என்ன பிடிக்கும்னு எழுதி வெச்சிருக்கேன்.. இந்தாங்க.. இதை பார்த்து படிச்சுக்கோங்க..”
அவள் அப்படி சொல்லவும் அந்த காகிதத் துணுக்கை வாங்கியவன் “அப்படின்னா நானும் எனக்கு என்ன பிடிக்கும்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. நல்லா கவனிச்சுக்கோங்க..” தனக்கு பிடித்த உணவு.. தனக்கு பிடித்த உடை.. தனக்கு பிடித்த நிறங்கள்.. என பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தான் அவன்..
அதை கேட்டு நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டவள் தனக்கு பிடித்தவைகளும் அவனுக்கு பிடித்தவைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதை எண்ணி வியந்து போனாள்..
“மதி மேடம்.. இதோட நம்ம ஃபேமிலில யார் யார் இருக்காங்க.. அவங்க என்ன பண்றாங்க.. இதெல்லாமும் தெரிஞ்சுக்குவோம்… எனக்கு ஒரு தம்பி இருக்கிறான்.. அவனை தவிர குடும்பம்னு சொல்லிக்க எனக்கு வேற யாரும் கிடையாது..”
அவன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து வந்த பாண்டி “என்ன தீரா ரெடியா? அடுத்த சீன் எப்படின்னு பாக்கலாமா?” என்று கேட்க இருவரும் தாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து அவன் புறம் திரும்பினார்கள்..
பாண்டிக்கோ அவர்கள் இருவரும் அப்படி சகஜமாக பேசிக் கொண்டிருந்த விதத்தில் நிச்சயம் அவர்கள் இரண்டு நாட்களில் நன்கு பழகி ஓரளவுக்கு இந்த நாடகத்தை சிறப்பாக நடத்தி விடுவார்கள் என்று நம்பிக்கை வந்தது..
“ரெண்டு பேரும் ஏதாவது முக்கியமா பேசிகிட்டு இருக்கீங்களா? அது.. டிஃபன் ரெடி ஆயிடுச்சு.. நீங்க ரெண்டு பேரும் வந்தீங்கன்னா நம்ம டிராமா பிராக்டிஸ் பாத்துக்கிட்டே அப்படியே டிஃபன் சாப்பிட்டு முடிச்சிடலாம்..” என்று அவன் சொல்லவும் “முக்கியமால்லாம் ஒன்னும் இல்ல பாண்டி.. எங்க ஃபேமிலி பத்தி தெரிஞ்சுக்கணும் இல்ல..? அதுதான் ஒருத்தருக்கு ஒருத்தர் அதை பத்தி பேசிகினு இருந்.. சாரி பே..சி..க்..கிட்டு இருந்தோம்..” அவனுடைய இயல்பான பேச்சு வழக்கு நடுவில் வந்துவிட மிகவும் சிரமப்பட்டு அதை திருத்திக் கொண்டான்..
“அதை பத்தி பேசலாம்னு தொடங்கச்சே தான் நீ வந்துட்டே..”
“ஹோ.. நானே அதை பத்தி பேச சொல்லணும்னு நெனச்சேன்.. ஆனா இப்போ டிஃபன் சூடு ஆறிடும்.. அதனால முதல்ல நம்ம பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டே அதையெல்லாம் காலி பண்ணிட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஃபேமிலி பத்தி எல்லாம் பேசிடலாம்.. ஓகேவா?”
அவன் சொன்னதும் இருவரும் சரி என தலையாட்டி விட்டு அவனோடு உணவறைக்கு நடந்தார்கள்..
முதல் நாள் செய்தது போலவே தீரன் உணவறையில் அமர்ந்திருக்க மதியழகி வரவேற்பறையில் இருந்து மெல்ல நடந்து உள்ளே வந்து கண்களால் தீரனை தேடுவது போல் நடித்து அவன் முகத்தில் தன் பார்வையை கொண்டு வந்து நிலை படுத்தினாள்..
அவனோ எந்த உணர்வையும் தவறவிடாமல் இயல்பாகவே அவளைக் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட முகமலர்ச்சியை வெளிப்படுத்தி வேகமாக எழுந்து வந்து “ஹாய் கண்ணம்மா.. வந்துட்டியா?” என்றபடி அவள் தோளில் பட்டும் படாமல் அணைத்தாற் போல் கை வைத்து தன் இன்னொரு கையால் அவள் வல கையை பிடித்து அழைத்துப் போகவும் அவளுக்கோ எதோ மூச்சு அடைத்தது போல் திணறலாய் இருந்தது அவன் அணைப்பில்..
அவனுடைய அந்த மெல்லிய அணைப்பிலேயே அவள் தேகம் நடுங்கி நெளிந்து கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.. மேஜைக்கு அருகில் வந்ததும் அவளை விட்டு அவன் விலகவும் அவளையும் அறியாமல் ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது..
அதைக் கண்ட பாண்டி தலையை இடவலமாய் ஆட்டி “ஐயோ பாண்டி.. உனக்கு ரொம்ப பெரிய சேலஞ்சா இருக்கும் போல இருக்கே இது.. இவங்க ரெண்டு பேரையும் லவ்வர்ஸா நடிக்க வச்சுட்டா இந்த ஊர்லயே நீ தாண்டா பெரிய டைரக்டர்..” தனக்குள் சொல்லிக் கொண்டான்..
தீரனோ சற்றுக் குழப்பமான முகத்துடனேயே நாற்காலியை பின்னால் இழுத்து அவள் விழி பார்த்து அமரச் சொல்ல அவளும் முதல் நாள் செய்தது போலவே பட் என அமர்ந்திருந்தாள் அந்த இருக்கையில்.. இவ்வளவு நேரமும் அவன் முகம் பார்க்க கூட அவளுக்கு துணிவு வரவில்லை.. அவளுடைய நடவடிக்கைகளில் தீரனும் கொஞ்சம் கலங்கித் தான் போனான்..
அவள் அருகில் அமர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என பாண்டியை கேள்வியாய் பார்க்க “என்ன தீரா பாக்குற? அதான் இங்க ஒரு வெயிட்டர் ரெடியா இருக்கனே.. கூப்பிட்டு ஆர்டர் குடு.. ஆர்டர் கொடுக்கும் போது மதி சிஸ்டருக்கு என்னென்ன பிடிக்குமோ அதைத்தான் நீ ஆர்டர் பண்ணனும்.. சரியா?”
அவள் கொடுத்த தாளில் இருந்த அவளுக்கு பிடித்த உணவுகளை அப்போதுதான் படித்து பார்த்தவன் ஆச்சரியத்தில் விழி விரித்தான்.. கிட்டதட்ட அவளுக்கும் அவனுக்கும் ஒரே உணவு வகைகள் தான் பிடித்திருந்தன..
அவன் ஒவ்வொரு உணவின் பெயரையும் சொல்லவும் “தீரா.. உனக்கு பிடிச்சதை சொல்லாத.. மதி சிஸ்க்கு புடிச்சது சொல்லுன்னு தானே சொன்னேன்.. நீ எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுறதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கே..?” பாண்டி சொன்னதை கேட்டு தன் இதழுக்குள் சிரித்து கொண்டாள் மதியழகி..
பாண்டி அவர்களை புதிராய் பார்க்க “பாண்டி.. அவங்களுக்கும் இதுதான் புடிக்கும்.. அதனாலதான் இதெல்லாம் கொண்டு வர சொன்னேன்..” தீரன் சொல்ல இப்போது பாண்டிக்கு வியப்பில் புருவங்கள் உயர்ந்தன..
அவனுக்கு என்னவோ இந்த சந்திப்பு தங்களால் எதுவும் நிகழவில்லை.. இவர்கள் இருவரும் சந்தித்ததே விதியின் விளையாட்டுதானோ என்று தோன்றியது..
“சரி.. நான் போய் எடுத்துட்டு வரேன்.. நீங்க அன்னைக்கு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணும்போது இது எல்லாமே கிடைக்கும்.. எங்க வீட்ல என் அருமை பொண்டாட்டி என்ன பண்ணி வச்சிருக்காளோ அதைத்தான் கொண்டு வருவேன்.. ஓகேவா.. அவ இப்போ வாழைக்காய் உருளைக்கிழங்கு பஜ்ஜி மட்டும் தான் போட்டு இருக்கா.. ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணி அதையே நீங்க ஆர்டர் பண்ண ஐட்டங்களா நெனச்சு சாப்பிடணும்.. சரியா?”
பொறுப்பான கணவனாய் அவன் சொன்னதைக் கேட்ட இருவருமே மனம் விட்டு சிரித்தார்கள்.. “பவிக்கண்ணூ.. அந்த பஜ்ஜியும் காபியும் எடுத்துட்டு வாம்மா..”
பாண்டி சமையலறைக்குள் எட்டி பார்த்து அழைக்க பார்கவி உள்ளிருந்து “இதோ.. இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம்.. அது வரைக்கும் ரெண்டு பேரையும் ஏதாவது ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க சொல்லுங்க..”
கண்ணடித்து அவள் சொல்லவும் அவனும் இதழ் விரித்து சிரித்தபடி வெளியே வந்து “என்னப்பா பார்கவி சொன்னது காதுல விழுந்துதில்ல..? அடுத்த சீனை ஆரம்பிங்க..”
என்க என்ன செய்ய வேண்டும் என்பது போல் பார்த்தான் தீரன்..
“லவ்வர்ஸ் எல்லாருமே ஒரு சின்ன கேப் கிடைச்சா கூட ஒருத்தர் கைய இன்னொருத்தர் புடிச்சுகிட்டு ரொமான்டிக்கா லுக்கு விட்டுகிட்டு ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக்கிட்டு தான் இருப்பாங்க.. இப்ப நீங்களும் அதைதான் பண்ணனும்.. அப்புறம் தீரா.. சட்டுனு நீயா அவங்க கைய புடிக்க கூடாது.. நீ உன் கையை நீட்டி அவங்க கைய குடுக்க சொல்லு.. அவங்க அவங்க கையை கொடுத்த அப்புறம் அந்த கைய இதமா வருடி அவங்களை ரொமான்டிக்கா பார்க்கணும்..”
தீரன் அவன் சொன்னதைக் கேட்டு மதியழகியின் முகத்தை தான் பார்த்தான்.. அவள் முகமோ பாண்டி சொன்னதைக் கேட்டு வெளுத்து போய் இருந்தது பயத்தில்..
ஆனால் பாண்டியோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “சிஸ்டர் தொடங்கலாமா?” என்றவன் “ஸ்டார்ட் பண்ணு தீரா.. அப்புறம் டிஃபன் வேற ஆறி போயிடும்.. நல்லா இருக்காது.. இப்போ பஜ்ஜி வர்ற ரெண்டு நிமிஷத்துக்குள்ள நீங்க என்ன பண்றீங்கன்னு நான் பார்க்கிறேன்..”
அவன் சொல்லவும் தீரன் மெதுவாக அவள் முகம் பார்த்தான்.. அவளோ கலங்கிய விழிகளோடு அவனை பார்க்க அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக கண்ணை மூடித் திறந்தவன் தன் கையை எடுத்து மேஜை மேல் வைத்து அவள் கையை தருமாறு கேட்க அவளும் வேகமூச்சு எடுத்துக் கொண்டே நடுங்கும் விரல்களை அவன் விரல்கள் மீது மெல்ல லேசாக தீண்டுவது போல் வைக்க அந்த ஒரு நொடியில் மொத்தமாய் விதிர்விதிர்த்துப் போனாள் அவள்..
அந்த ஒரு தீண்டல் அவளுள் என்ன என்னவோ மாற்றங்களை கொண்டு வந்தது.. இதயம் அடுத்தவருக்கு வெளியே தெரியும்படி அதிர்ந்து கொண்டிருக்க பாதத்திலிருந்து தலைவரை நாடி நரம்புகளில் ஓடிய ரத்தம் சூடு ஏறி கொதிகலனில் வைத்த நீராய் கொதிக்க ஒரே நொடியில் சரேலென தன் கையை அவன் கையில் இருந்து எடுத்துக் கொண்டவள் “இல்லை.. இல்லை.. இது என்னால முடியாது.. சார்.. ரொம்ப சாரி சார்.. நீங்க வேற ஏதாவது பொண்ணை பாத்து வர சொல்லி உங்க லவ்வர்ன்னு சொல்லி உங்க பின்னாடி வர்ற அந்த பொண்ணை சரி பண்ணிக்கோங்க.. நான் வேற ஏதாவது வழி பாத்துக்குறேன்.. என்னால இது முடியாது.. நான் கிளம்புறேன்.. பார்கவி கிட்ட சொல்லிருங்க..” என்று படபடப்பாக சொல்லிவிட்டு அவசரமாய் அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள் மதியழகி..
🎵🎶🎼
தீண்டாய்
மெய் தீண்டாய்..
தாண்டாய்
படி தாண்டாய்..
ஒரு விரல் வந்து
என்னைத்
தீண்டியதே..
என் நரம்போடு
வீணை
மீட்டியதே..
மனம் அவன்தானா
இவன் என்று
திடுக்கிட்டதே….
விழியோடும்
தீண்டல் உண்டு
விரலோடும்
தீண்டல் உண்டு
இரண்டோடும்
பேதம் உள்ளது..
விழித்தீண்டல்
உயிர் கிள்ளும்
விரல் தீண்டல்
உள்ளம் கிள்ளும்
அதுதானே
நீ சொல்வது…
உனைத் தேடி
மண்ணில் வந்தேன்
எனைத்தேடி நீயும்
வந்தாய்
உன்னை நானும்
என்னை நீயும்
கண்டு கொண்டோம்..
பல பேர்கள்
காதல் செய்து
பழங்காதல்
தீரும்போது
பூமி வாழப்
புதிய காதல்
கொண்டு வந்தோம்..
உறவின் உயிரே
உயிரே..
என்னைப் பெண்ணாய்ச்
செய்க…
அழகே அழகே
உன் ஆசை வெல்க..
🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 24
மதி அந்த வீட்டை விட்டு வெளியே போவதை இரு ஆண்களும் அவளை தடுத்து நிறுத்த எதுவும் செய்ய இயலாமல் அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
உள்ளே இருந்து பஜ்ஜியோடு வெளியே வந்த பார்கவி “சரவணா.. எங்க மதியை காணோம்..?” என்று புருவம் சுருக்கி கேட்க அவளுடைய சரவணன் நிகழ்ந்த அனைத்தையும் அவளிடம் விவரித்தான்..
“சரவணா.. எனக்கு என்னவோ அவளுக்கு அண்ணன் கூட நடிக்கிறதுலதான் ஏதோ பிரச்சனைனு தோணுது.. அவ காலேஜ்ல டிராமால எல்லாம் வேற ப்ரொஃபஸரோட ஜோடியா ஆக்ட் பண்ணி இருக்கா சரவணா.. ஆனா அண்ணன் கூட நடிக்கும் போது தான் அவ இப்படி ஆயிடறா.. என்னன்னே தெரியல.. சாரி அண்ணா.. நான் சொன்னதை நம்பி அவளோட லவ்வரா நடிச்சு அந்த பொண்ணை மனசு மாற வைக்கலாம்னு நெனைச்சீங்க… ஆனா அப்படி எதுவும் நடக்கல.. இவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல..” குழப்பமான முகத்தோடு சொன்னாள் பார்கவி..
“சிஸ்டர்.. என்னிய மாதிரி ஆளு கூட அவங்க எல்லாம் பேசறதே பெரிய விஷயம்.. இதுல என்கூட நடிக்கணும்னா அவங்களுக்கு ஒரு மாதிரி இருந்திருக்கும் தானே..? நான் படிக்காதவன்.. கொஞ்சமும் நாகரிகம் தெரியாதவன்.. அவங்க காலேஜ்ல அங்க வேலை செய்யறவங்களோட நடிச்சாங்கன்னா அவங்களாம் படிச்சவங்களா இருப்பாங்க.. பெரிய பெரிய ஆளுங்களா இருப்பாங்க.. ரீஜண்டா இருப்பாங்க.. அவங்களும் நானும் ஒன்னும் ஆயிடுவமா..? அதான் அவங்களுக்கு என்னோட நடிக்க பிடிக்கல போல.. பரவால்ல சிஸ்டர்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. எனக்கு தோதா ஏதாவது ஒரு துணை நடிகை கெடைப்பாங்க.. அவங்களை வச்சு அந்த பொண்ண சமாளிச்சுக்குவேன்..” விரக்தியான குரலில் தீரன் சொல்ல அதை கேட்ட பார்கவியின் முகம் மாறியது..
அவன் சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தம் கொண்டாள் அவள்..
அதை கவனித்த பாண்டி “சரி விடு பவி குட்டி.. நம்ம வேற ஏதாவது பொண்ணை வச்சு தீரும் பின்னாடி சுத்துற அந்த பொண்ணை சமாளிக்கலாம்.. ஆனா இப்போ காலேஜ்ல அந்த பையனை தான் எப்படி சமாளிக்க போறீங்கன்னு தெரியல..”
“இல்ல இல்ல.. அதுக்குள்ள நம்ம அந்த முடிவுக்கு வர வேண்டாம்.. நாளைக்கு மதி காலேஜ்க்கு வருவா இல்ல..? நான் அவ கிட்ட பேசி பார்க்கிறேன்.. ஒருவேளை மனசு மாறி நாளைக்கு திரும்பியும் அவ பிராக்டிஸ் பண்ண வந்தாலும் வருவா.. அண்ணா நீங்க எதுக்கும் நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க.. அவ வந்தா நம்ம மறுபடியும் இதை கண்டினியூ பண்ணலாம்..”
பார்கவி சொல்ல அதுவும் சரியாகத்தான் தோன்றியது தீரனுக்கு.. அவள் அப்படி தன்னோடு சேர்ந்து நடிக்க விரும்பவில்லை என்றாலும் தான் அவள் பிரச்சனை தீர்வதற்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வேரூன்றி இருந்தது மனதில்..
ஆனால் அடுத்த நாள் கல்லூரிக்கு வரவில்லை மதியழகி.. பார்கவி அவளை கைபேசி மூலம் அழைத்து கேட்கவும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி அதிகம் பேசாமல் இணைப்பை துண்டித்து விட்டாள் அவள்.. பார்கவி அவளுக்கு மனம் சரியில்லை என்று புரிந்து கொண்டாள்..
“சரி.. முன்னாடி முடிவு பண்ண மாதிரி அண்ணாவை வேற ஆள் பார்த்துக்க சொல்லலாம்..” என்று எண்ணி அவள் பாண்டிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்..
இங்கே மலரழகியோ தினமும் தீரனின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று அவனிடம் ஒரு முறை தன் விருப்பத்தை சொல்லி அவன் முறைப்பை பதிலாக வாங்கிக் கொண்டு வருவதை தன் வழக்கமாகவே வைத்திருந்தாள்.. அவன் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அதெல்லாம் காற்றோடு தான் போனது அவளை பொறுத்தவரை..
அவன் மறுபடி மறுபடி தான் இன்னொரு பெண்ணை விரும்புகிறேன் என்று சொல்ல அவளோ “அதான் ஞாயிற்றுக்கிழமை நேராவே வந்து பார்க்க போறேன் இல்ல? அப்ப தெரிஞ்சுட போகுது.. நீ எதுக்கு தீரா தினம் தினம் கஷ்டப்பட்டு பொய் சொல்லி என் மனசை மாத்த ட்ரை பண்ற.. நீ எவ்வளவுதான் சொன்னாலும் உன் பேச்சை நான் நம்ப மாட்டேன்” என்று சொல்லிவிட்டு சென்று விடுவாள் அவள்..
தீரனுக்கு அலுப்பாக இருந்தது.. “இந்தப் பொண்ணுக்கு என்ன சொல்லி தான் புரிய வைப்பேன்..” அவள் சின்ன பெண் என்று மட்டும் எண்ணி அவள் மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவன் இப்போது தன் நினைவில் முழுதாய் மதியே குடி கொண்டிருக்க இன்னும் தீர்க்கமாய் அவள் மனதை மாற்றும் வேலையில் இறங்கி இருந்தான்..
அடுத்த நாளும் கழிந்து போக பாண்டிக்கு அழைத்து “ஏய் பாண்டி.. அந்த பொண்ணு கிட்ட நான் இன்னொருத்தியை லவ் பண்றேன்.. அவளோட டேட் பண்ண போறேன்னு சொல்லி இருக்கேன்.. ஞாயிற்றுக்கிழமை அவ அங்க வந்து பாப்பா.. பேசாம நானும் போகாம இருந்திடவா? இப்பதான் அங்க யாரும் வரப்போறதில்லையே..”
தீரன் கேட்க பாண்டியோ “இல்ல இல்ல தீரா.. நீ போயிட்டு வா.. யாரும் வரலைன்னாலும் நீயும் போகாம இருந்தா நீ பொய் சொல்றன்னு அந்த பொண்ணுக்கு உறுதியா தெரிஞ்சு போயிடும்.. அது வேண்டாம்.. மதி சிஸ்டர் வரலைன்னா என்ன? நம்ப அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை ஏற்பாடு பண்ணிக்கலாம்.. உன்னோட லவ்வரா நடிக்க ஒரு பொண்ணை தேடி கண்டுபிடிக்கிற வரைக்கும் உன் பின்னாடி வர்ற அந்த பொண்ணு நீ யாரையோ லவ் பண்றேன்னு நம்பணும்.. அதுக்கு இந்த வாரம் நீ அந்த ஹோட்டலுக்கு போ.. அங்க இருக்கும்போது நான் உனக்கு ஃபோன் பண்றேன்.. அந்த பொண்ணு தான் ஃபோன் பண்ணி உடம்பு சரியில்லை.. வரலைன்னு சொன்னதா சொல்லி அன்னைக்கு சமாளிச்சுட்டு வந்துரு.. அடுத்த வாரம் மறுபடியும் வேற பொண்ணை பார்த்து நம்ம நடிக்க வச்சுக்கலாம்.. என்ன ஓகேவா?”
அப்போதைக்கு வேறு வழியும் இல்லை என்பதால் அவனும் சரி என்று சொல்லி இருந்தான் அந்த திட்டத்திற்கு..
இரண்டு நாட்கள் இப்படியே கழிந்து இருக்க சனிக்கிழமை முழுதும் எப்போதும் போல தன் தம்பியோடு செலவிட்டவன் அன்று மாலை இந்தரோடு கடற்கரைக்கு சென்றிருந்தான்.. மணல் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவன் எதிரில் வந்து நின்ற மலரழகியை பார்த்து திடுக்கிட்டு தான் போனான்..
“வந்துட்டாளா.. இவளை..!!?” பல்லை கடித்து சொன்னவன் “கிளம்பலாமா இந்தர்?” என்றான் அவளை கண்டு கொள்ளாது..
“அண்ணா பாவம்ணா அந்த பொண்ணு..” இந்தர் அவளுக்கு பரிந்து பேச அவனை தீவிரமாய் முறைத்து விட்டு சட்டென எழுந்து தன் மேல் படிந்திருந்த மணல் துகள்களை தட்டி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியே சாலை நோக்கி நடக்க தொடங்கினான் அவன்..
மலர் அழகியின் முகமோ அவன் செய்ததை கண்டு வாடி போனது.. அதை பார்த்த இந்தர் அவள் அருகில் வந்து “நீ ஒன்னும் கவலைப்படாதே.., நீ இவரை துரத்தி துரத்தி லவ் பண்ற மாதிரியே நானும் இன்னொருத்தியை லவ் பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா அவளும் இப்படித்தான் என் வயசை காரணம் காட்டி என் பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறா.. ஆனா நிச்சயமா அவ மனசை மாத்திடுவேன்.. அதே மாதிரி நீயும் நம்பிக்கையோட இரு.. அண்ணா மனசு கட்டாயமா மாறும்..”
அவன் பேசியதை கேட்டு அவளும் சட்டென தன் உற்சாகத்தை முகத்தில் திருப்பிக் கொண்டாள்..
“எனக்கு தெரியுமே.. அதனாலதான் உங்க அண்ணா என்னை எவ்வளவு விரட்டினாலும் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன்.. நீ வேணா பாரு.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அவரை என் பின்னாடி சுத்த வைக்கிறேன்..” என்று நம்பிக்கையோடு சொன்னவளை பார்த்து சிரித்தவன் “தட்ஸ் த கான்ஃபிடன்ஸ்.. நிச்சயமா எங்க அண்ணா உன் பக்கம் திரும்புவார் பார்.. அது அவ்வளவு ஈஸி இல்ல தான்.. ஆனா மிஷன் இம்பாஸிபிள் இல்ல.. முயற்சி பண்ணா எதுவுமே பாஸிபிள் தான்..” என்று சொல்லிவிட்டு அவள் கைக்குலுக்கி “ஆல் தி பெஸ்ட்..” என்று வாழ்த்து சொன்னவன் தன் அண்ணனை தொடர்ந்து நடக்க தொடங்கினான்..
ஆனால் அங்கு நடந்த அத்தனையும் சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன இரு கண்கள்..
வீட்டிற்கு வந்தவுடன் இந்தர் தீரனிடம் “அண்ணா.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” என்று தொடங்க தீரனோ “நானும் தான்டா சொல்லணும்.. சரி நீ சொல்லு.. நான் அப்புறம் உனக்கு என்ன விஷயம்ன்னு சொல்றேன்..” என்றான்..
இந்தர் “அண்ணா.. எதுக்காகவும் வீக் என்ட்ல ரெண்டு நாளும் உங்களோட நான் ஸ்பென்ட் பண்ற டைம விட்டுக் கொடுத்ததே இல்லை இதுவரைக்கும்.. ஆனா நாளைக்கு சாயந்தரம் என்னால உங்களோட இருக்க முடியாதுண்ணா.. நாளைக்கு டின்னருக்கு ஒரு ஃப்ரென்ட்டை பார்க்க ஹோட்டலுக்கு போறேன்.. அவன் ரொம்ப அடம் பிடிக்கறான் ணா.. ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்.. நாளைக்கு ஒரு நாள் மட்டும் நான் போயிட்டு வரவா ?”
“இந்தரு.. நானே உன் கிட்ட இது பத்தி தான் சொல்லிக்கணும்னு நினைச்சேன் டா.. நாளைக்கு எனக்கும் முக்கியமான ஒரு வேலை கீது.. நான் ஒருத்தவங்கள பாக்க ஒரு எட்த்துக்கு போவணும்.. இதுவரைக்கும் இப்படி எதுவும் நான் பண்ணிக்கினது இல்லையா? அதான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு ரோசனையா இருந்திச்சு.. அதான் இப்ப நீயே சொல்லிக்கின இல்ல? நானும் நாளைக்கு ஒரு நாள் மட்டும் போய்க்கினு வரேன் டா தம்பி..”
அவன் சொன்னதை கேட்ட இந்தர் “அதெல்லாம் பரவால்லண்ணா.. நீ இப்படி எல்லாம் எங்கேயும் போக மாட்டே என்னை விட்டு.. முதல் தடவையா யாரையோ பார்க்க வெளிய போறேன்னு சொல்ற.. நீ போயிட்டு வா அண்ணா..” என்றான்..
அடுத்த நாள் காலையில் பாண்டி தீரனை அழைத்திருந்தான்.. “என்ன பாண்டி.. இந்த டைம்ல நீ நம்மள கூப்பிட மாட்டியே.. என்ன ஏதாவது பிரச்சனை ஆயிருச்சா.. எதா இருந்தாலும் சொல்லு.. சும்மா பூந்து விளையாடிடுவோம்..”
தீரன் சொன்னதைக் கேட்ட பாண்டி “அதெல்லாம் ஒன்னும் இல்ல தீரா.. நம்ம தம்பி பேரு இந்தரு தானே..?” என்று அவன் கேட்க “ஆமா.. ஆனா நான் யார்கிட்டயும் சொன்னதே இல்லையே உனக்கு எப்படி டா தெரியும்?” தீரன் கேட்க “நீ சொன்னது இல்ல தீரா.. ஆனா உன்னை பத்தி செட்டில சில பொண்ணுங்க முழு ஆராய்ச்சியே பண்ணி வச்சிருக்காங்க.. என்னதான் நீ மறைச்சாலும் உன்னை பத்தி எல்லா டீடைல்ஸும் அவங்க சொல்லிருவாங்க.. அவ்வளவு லவ்வு உன் மேல..”
அவன் கிண்டலாய் சொல்லி சிரிக்க தீரன் “அது லவ் இல்லடா.. அதுக்கு பேரு வேற.. சரி விடு.. அதான் ஏற்கனவே என் கழுத்தை புடிச்சிட்டு ஒன்னு தொங்கிக்கிட்டு இருக்குதே.. முதல்ல அதுக்கு என்ன வழியை பண்ண போறேன்னு தெரியல.. இன்னிக்கு சாயந்திரம் நீ சொன்ன மாதிரி அங்க போய் உட்கார்ந்துட்டு வரேன்.. அந்த பொண்ணு நம்புதோ இல்லையோ..?”
அவன் சொன்னதைக் கேட்ட பாண்டி “எல்லாம் நல்லபடியா நடக்கும் தீரா.. கவலைப்படாதே..” என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டான்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 25
அன்று மாலையும் வந்தது.. தீரன் அவன் முன்னமே சொல்லி இருந்த உணவு விடுதிக்கு சென்று தான் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த மேஜைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்..
சுற்றி சுற்றி அவன் நாலா புறமும் பார்வையால் அளைந்து கொண்டு இருக்க சரியாக அப்பொழுது அந்த விடுதிக்குள் நுழைந்தான் இந்தர்..
நுழைந்தவுடனேயே தன் அண்ணன் எதிரில் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டவன் “இங்கதான் யாரையோ மீட் பண்ண போறேன்னு சொன்னாரே.. அவங்க வரப் போறாங்களா? என்ன பார்த்தாருன்னா நான் செத்தேன்.. நான் எதுக்கு வந்து இருக்கேன் தெரிஞ்சா என்னை பொளந்து கட்டிடுவாரு.. அவரு கண்ல படாம எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கோடா இந்தரு..” என்று வேகமாக சென்று தீரன் பார்வையில் படாதவாறு மறைவாக இருந்த ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்..
அடுத்ததாக அந்த விடுதிக்குள் நுழைந்தவள் மலரழகி.. அவள் நுழைந்ததும் எதிரிலேயே தீரன் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்தவள் “ஹேய்.. தீரா.. ஐ லவ் யூ பேபி” என்று அவனை கொஞ்சுவது போல் பாவனை செய்ய அவன் அவளை முறைத்து பார்த்து “இங்க பாரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல என் லவ்வர் இங்க வரப்போறா.. நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருந்தா அவளுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. நீ முதல்ல இங்கிருந்து போ.. அவ இருக்கும் போது என் கண்ணில் கூட படாத.. நானே அவ கிட்ட மெதுவா சொல்லி அப்புறம் உன்னோட பேச வைக்கிறேன்.. அதுவரைக்கும் இங்க வந்து நின்னுகிட்டு இந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத..” என்றவனை முகம் சுருக்கி பார்த்தாள்..
“இன்னும் கூட நீ அப்போ சொன்ன பொய் உண்மைன்னு சாதிச்சுட்டு இருக்க இல்ல? பண்ணு பண்ணு.. சரி.. நான் போய் அப்படி உட்கார்ந்துக்குறேன்.. அங்க இருந்து உன்னை வாட்ச் பண்ணிக்கிறேன்.. அப்படி யாரு தான் வராங்கன்னு நானும் பாக்குறேன்..” என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றவள் தீரனுக்கு தெரியாமல் மறைந்தாற் போல் வேறு ஒரு இடத்தில் ஒளிந்து அமர்ந்திருந்த இந்தரை பார்க்கவும் “ஹேய் இந்தர்.. நீ என்ன இங்க உக்காந்து இருக்க..? உங்க அண்ணன் அங்க தானே இருக்காரு.. அவரோட உட்காராம தனியா வந்து உட்கார்ந்திருக்க..?”
அவள் கேட்கவும் “ம்ம்.. நான் சொன்னேன் இல்ல.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு.. அவளுக்காக தான் இங்க வந்து இருக்கேன்..”
“ஓ.. நீ அவளை பார்க்கும் போது நான் இங்க கரடி மாதிரி இருக்க வேண்டாம்.. நான் வேணா பக்கத்து டேபிள்ல போய் உட்கார்ந்துகிறேன்..” என்று அவள் சொல்ல “இல்ல இல்ல.. நான் தான் சொன்னேனே.. அவ என்னை அவாய்ட் பண்றான்னு.. இன்னொருத்தரை மீட் பண்ண இங்க வரேன்னு சொல்லி இருக்கா.. அதான் அவளை பார்க்கறதுக்கு நான் இங்க வந்தேன்..”
முழு விவரத்தையும் ஏனோ மலரழகியிடம் பகிர அவனுக்கு மனம் வரவில்லை.. அது தன்னுடைய சொந்த விஷயம் என்று எண்ணினான் அவன்..
இருவரும் எதிரெதிரில் அமர்ந்து தீரன் அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கவும் தீரனோ பாண்டியின் அழைப்பை எதிர்பார்த்து தன் கைபேசியை உற்றுப் பார்த்து இருந்தவன் திடீரென தனக்குள் ஏதோ உந்தி தள்ள விடுதியின் வாயில் பக்கம் பார்வையை திருப்பினான்..
அங்கே அழகு மயிலாய் வந்து நின்று கண்களை அந்த விடுதியை சுற்றி அலையவிட்ட மதி தீரனில் வந்து தன் கண்களை நிலைக்க விடவும் அவனோ அவளைப் பார்த்து முதலில் திடுக்கிட்டு அதிர்ந்து பிறகு ஆனந்தமாய் ஆச்சரியப்பட்டு முகம் மலர்ந்து போனான்..
அவன் கண்களை நேராகப் பார்த்தவள் அந்தக் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டு ஆசையாக பார்க்கவும் அவன் அவளின் அந்த பார்வையில் மொத்தமாய் சொக்கி செயலிழந்து போனான்..
அவனைக் கேட்காமலேயே அவன் கால்கள் தன்னிச்சையாய் மதியழகியை நோக்கி நடந்தன.. தன்னை மறந்த நிலையில் மதியழகிக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை மெல்ல கடந்திருந்தான் தீரன்..
மதியழகியின் அருகில் போய் நின்றவனை ஏற்கனவே தந்த அதிர்ச்சிக்கு மேல் இன்ப அதிர்ச்சியாக சட்டென கலங்கிய கண்களோடு அவனை மென்மையாய் அணைத்து மார்பில் தலை சாய்த்தாள் மதியழகி..
தன்னை கட்டி அணைத்து தன் மீது தலை சாய்த்திருந்த மதியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.. ஓரிரு நிமிடங்கள் அவனுக்கு உடலிலும் நினைவிலும் எந்த அசைவும் இல்லை.. நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை நம்ப முடியாமல் அப்படியே உறைந்து இருந்தான் அவன்..
சில நொடிகளில் தன் உரைநிலையில் இருந்து வெளியே வந்தவன் அவள் நாடியில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி அவள் கண்களோடு தன் பார்வையை கலக்க விட்டவன் “வரமாட்டேன்னு சொன்னீங்க?” அவள் காதில் மட்டும் கேட்கும்படியாக ரகசியமாய் கேட்க அவளோ “வேற வழியில்லாமல் வர வேண்டியதா போச்சு.. இனிமே உங்களை தவிர எனக்கு வேற வழி கிடையாது.. ப்ளீஸ்.. இதுக்கு மேல இப்ப எதுவும் கேட்காதீங்க.. எதுவா இருந்தாலும் நம்ம இங்கிருந்து கிளம்பினப்பறம் நான் விவரமா சொல்றேன்..”
சொன்னவளை கண்களில் இன்னும் வியப்பு விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தோளில் கை வைத்து அணைத்தார் போல் அவளை அழைத்துக் கொண்டு நடக்க தொடங்கவும் அவளோ அவன் வயிற்றை சுற்றி தன் கைகளால் வளைத்து அவனோடு தன்னை இன்னும் இறுக்கிக் கொண்ட படி நடந்தாள்..
அவளுடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு வரிசையாக வியப்பையும் ஆச்சரியத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தது.. மெல்ல அவளை அழைத்து போய் இருக்கையில் அவளை அமர வைக்க அவன் கையை விட்டு தன் கையை விலக்கினாள் இல்லை அவள்..
ஏனோ அவனை உடும்பு பிடியாய் பிடித்துக் கொள்ளும் எண்ணத்தில் வந்திருப்பது போலவே காட்சி தந்தாள் அவள்..
தீரனுக்கே அவ்வளவு நேரத்திற்கு பிறகும் பிரமிப்பு அகலாமல் இருக்க அங்கே அமர்ந்திருந்த இன்னும் இருவருக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் யாரோ ஒரு கூடை நெருப்பு கனலை தூக்கி தங்கள் தலையில் கொட்டினார் போல் உடம்பெல்லாம் எரிந்தது அந்த காட்சியை பார்த்து..
இந்தர் மலரழகி இருவரும் தாங்கள் பார்த்ததை நம்ப முடியாமல் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் எதிரில் நடந்து கொண்டிருந்த காட்சியை தெளிவாக பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்..
இங்கே தீரன் அருகில் இருந்த விடுதியின் சிப்பந்தியை அழைத்து இருவருக்கும் பிடித்த உணவாக எடுத்து வரச் சொல்லிக் கொண்டிருந்தான்..
அந்த சிப்பந்தி அவைகளை எடுத்து வர செல்ல தீரன் தன் கையை எடுத்து மேஜை மேல் வைக்க இயல்பாக தன் கை விரல்களை அவன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டாள் மதி.. அவளுக்கோ அவனோடு அப்படி அன்னியோன்யமாக நடந்துக் கொள்ள.. ஒரு இம்மி அளவு தயக்கம் கூட இல்லை..
அவர்கள் சொல்லி வைத்திருந்த உணவு மேஜை தேடி வந்துவிட அதை எடுத்து இரண்டு தட்டுகளிலும் பரிமாறியவள் தன் முன்னே தன் தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து மசாலாவில் தோய்த்து அவன் வாய்க்கு நேரே நீட்டவும் அவனோ தான் பூலோகத்தில் தான் இருக்கிறோமா என்பது போல் பெரிதாக விழிகளை விரித்து உருட்டினான்..
“என்ன தீரா.. சாப்பிடுங்க.. நான் எவ்வளவு ஆசையா கொடுக்கிறேன்.. வாங்கிக்க மாட்டீங்களா?”
அவள் அப்படி கேட்ட பிறகு அதை மறுப்பதற்கு தீரன் என்ன இப்போது பழைய ஆஞ்சநேயர் பக்தனா.. இல்லையே.. ஆஞ்சநேயரிடம் அவன் தன் பிரம்மச்சர்ய விரதத்தை விடுவதாக சொல்லி மன்னிப்புக் கோரி கிட்டதட்ட நான்கைந்து நாட்களாகின்றன..
என்று மதியை கண்ணால் கண்டானோ அன்றே ஆஞ்சநேயர் படத்திற்கு முன் நின்று தன் மனம் அலை பாய்வதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டவன் ஆனால் அதை தடுக்க முடியவில்லை.. என்றும் இனிமேலும் தடுக்க முடியாது என்றும் இறுதியாக அவரிடம் முறையிட்டிருந்தான்..
அவளே உணவை அவனுக்கு ஊட்டிய பிறகு அவனுக்கு இருந்த அத்தனை தயக்கமும் பறந்தோடி போனது.. அவன் தட்டில் இருந்த பிரியாணியை கொஞ்சமாக எடுத்து அவள் வாய்க்கு நேராக நீட்டினான்.. அவளோ மொத்தமாய் அவன் கை விரல்கள் நாவில் படுமாறு அவன் கொடுத்த சாப்பாட்டை தன் வாய்க்கு உள்ளே இழுத்துக் கொண்டாள்..
நாடி நரம்புகள் எல்லாம் மதியழகியின் இதழ்கள் மற்றும் நாவின் ஸ்பரிசம் ஒரு புது சிலிர்ப்பை உண்டாக்க உடம்பில் ஏதோ புது ரத்தம் பாய்ந்தது போல் ஒரு நொடி காதல் உணர்வுகளின் எல்லையை தீண்டி வந்தான் தீரன்..
அதன் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டும் கலகலவென்று பேசிக்கொண்டும் உண்டு முடித்தார்கள்..
“உங்களை தொந்தரவு பண்றதா சொன்னிங்களே அந்த பையன் வந்திருக்கானா? நம்ம நடந்துக்கறதெல்லாம் பாக்கறானா?” என்று மெதுவாய் ரகசியமாய் தீரன் கேட்க அவளோ “அவன் மட்டும் இல்லை.. உங்களை தொந்தரவு செய்யறதா சொன்னீங்களே அந்த பொண்ணும் வந்து இருக்கா..”
எந்த அதிர்வும் இல்லாமல் சாதாரண குரலில் சொல்ல அவனோ “நான் உங்ககிட்ட அந்த பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லையே.. உங்களுக்கு எப்படி அவளை தெரியும்?” என்றான்..
“தெரியும்.. நீங்க சொல்லல.. ஆனா நான் அவளை பாத்துட்டேன்..”
“எப்ப பாத்தீங்க எப்படி பார்த்தீங்க?” அவன் கேட்க “இங்க பாருங்க.. அவங்க ரெண்டு பேரும் நம்மளையே தான் பாத்துட்டு இருக்காங்க.. நீங்க எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்து பேசாதீங்க.. சாதாரணமா நீ வா போ னே பேசுங்க.. அதுதான் சரியா இருக்கும்.. நம்ம இப்ப ரகசியமா பேசறது அவங்க காதுல விழாம இருக்கலாம்.. ஆனா இதுல ஏதாவது ஒரு வார்த்தை காதில விழுந்தாலும் அவங்க உஷார் ஆயிடுவாங்க.. நம்ம ரெண்டு பேரும் காதலிக்கறதை நம்ப மாட்டாங்க.. தயவு செஞ்சு பாண்டி அண்ணன் சொன்ன மாதிரி சாதாரணமா நீ வா போனே கூப்பிடுங்க..”
அவள் சொல்லவும் “சரி மதி.. அப்ப கெளம்பலாமா கண்ணம்மா..?”
அன்றும் அவன் அப்படித்தான் அவளை அழைத்தான்.. ஏனோ அவன் அப்படி தன்னை கண்ணம்மா என்று அழைக்கும் போது அந்த ஒரு வார்த்தையில் உயிரே உருகி விடுவது போல் ஒரு உணர்வு அவளுக்கு..
கண்கள் பனித்து விட இமை சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவள் “நீங்க இப்படி கண்ணம்மான்னு என்னை கூப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எப்பவும் என்னை இப்படியே கூப்பிடுவீங்களா?”
அவள் கேட்டதும் அவனோ “இது ஒரு நாள் நடிப்பு தானே? அதுக்கப்புறம் அப்படி கூப்பிடுறதுக்கு எனக்கு எங்க வாய்ப்பு கிடைக்கப் போகுது..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே “உனக்கு பிடிச்சிருக்குன்னா அப்போ காலம் முழுக்க உன்னை அப்படியே கூப்பிடுறதுக்கு கூட நான் ரெடி தான்..”
அவன் சொன்னதை கேட்டவள் இடம் மறந்து அவனை அணைத்து மறுபடியும் அவன் மார்பில் சாய்ந்தாள்..
ஓா் பாா்வை பாா்த்தே
உயிா்தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில்
கொஞ்சம்
வலிவந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை
பல தாண்டி
வேராக வந்தேன்
கண்ணாளன்
முகம் பாா்க்கவே
என் கடுங்காவல்
பல தாண்டி
காற்றாக வந்தேன்
கண்ணா உன்
குரல் கேட்கவே
அடடா அடடா
இன்று கண்ணீரும்
தித்திக்கின்றதே..
உயிரே உயிரே
வந்து
என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே
என்னை
உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே
இந்த
விண்ணோடு கலந்துவிடு..
மழைபோல் மழைபோல்
வந்து
மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம்போல் மனம்போல்
உந்தன்
ஊனோடு உறைந்துவிட்டேன்
உயிரே உயிரே
இன்று
உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு
நிறைந்துவிட்டேன்..
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 26
மதியழகி இடம் மறந்து தீரனை அணைத்து அவன் மார்பில் சாய அவனுக்கோ தான் ஏதோ இன்ப லோகத்துக்கு நிஜமாகவே போய்விட்டோமோ என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது..
“சரி.. நம்ப போய் அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணலாமா?”
கேட்டவளை புரியாமல் பார்த்தவன் “அவங்க எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்க “நல்லா தெரியும்.. உள்ள நுழையும் போதே பாத்துட்டேன்.. வாங்க..” என்று அணைத்தாற் போலவே அவனோடு இந்தர் மலரழகி இருந்த மேஜையை நோக்கி நடந்தாள்..
அங்கே இந்தரும் மலரழகியும் நேரெதிர் நாற்காலிகளில் அமர்ந்து இருக்க அவர்கள் அருகே போனதும் “மலர்.. நீ கொஞ்சம் தள்ளி அந்த பக்கம் உட்கார்ந்துக்கிறாயா? நான் என் தீரனோட பக்கத்தில தான் உட்கார்ந்துப்பேன்..”
மலரழகியை அர்த்தமாய் பார்த்துக் கொண்டே உரிமையோடு அவள் கேட்க மலரோ இன்னும் கூட தன் உடன் பிறப்பை அந்த இடத்தில் கண்ட அதிர்ச்சியிலிருந்து விலகாமல் அப்படியே விழி விரித்தவள் “ஹான்.. ஹா..ஹான்.. இதுல உட்கார்ந்துக்கறியா கா?” சட்டென்று சொல்லவும் அதைக் கேட்டு இந்தர் தீரன் இருவருமே வாயை பிளந்தார்கள்..
தீரனுக்கு ஏற்கனவே மலர் அழகியின் மேல் படிக்கும் வயதில் அவள் நடந்து கொள்ளும் விதத்தை எண்ணி அதிகமான கோபம் இருக்க இப்போது அவள் மதியழகியின் தங்கை என்று தெரிந்ததில் இன்னும் அதிகமாக கோபப்பட்டான்.. அவனுக்கு தான் தெரியுமே அவளைப் படிக்க வைக்க மதி அழகி இரவு பகல் பாராமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்று..
அப்படி இருக்கும்போது இந்தப் பெண்ணுக்கு எப்படி காதல் அதுவும் தன்னைவிட 12 வயது மூத்தவனை விரும்ப தோன்றியது..
முழுமூச்சாக படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டும் அல்லவா அவள்.. இப்படி மலர் அழகியின் மீது அவ்வளவு கோபம் பொங்கி எழுந்திருக்க அங்கே தன் தம்பியை கண்டவனுக்கோ தான் காண்பது ஏதேனும் கனவு காட்சியோ என்று தோன்றியது..
இந்தர் இப்படி ஒரு வேலையை செய்திருப்பான் என்ற எண்ணத்தை கூட அவன் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
“என்னடா இது..? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற… என் வளர்ப்பா நீ.. உன்னால எப்படி இப்படி யோசிக்க முடிஞ்சது? வெக்கமா இல்ல.. சோமாரி.. பேமானி”
அவன் பேசியதை கேட்ட மதி அவன் கையை இறுக்கிப்பிடித்து “இருங்க தீரா.. சாருக்கு நான் புரிய வைக்கிறேன்.. நான் உன்கிட்ட சொன்னப்ப நீ நம்பல.. நல்லா பாத்துக்கோ.. இவர்தான் தீரன்.. என்னோட லவ்வர்.. நான் இவரைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..” என்றவள் தீரன் பக்கம் திரும்பி கொஞ்சலாய் “என்ன தீரா? எனக்காக உங்க பாஷைல பேச மாட்டேன்னு சொல்லி இருந்தீங்க இல்ல..? அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” என்று கேட்க தீரனோ அதிர்ச்சியில் இருந்தவன் இவளால் எப்படி இந்த சூழ்நிலையில் இவ்வளவு சகஜமாக நடிக்க முடிகிறது என்ற யோசனையில் ஆழ்ந்து விட்டிருந்தான்..
அப்போதைக்கு அவனால் அவ்வளவு இயல்பாக நடிக்க முடியவில்லை.. உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த பதைபதைப்போடு இந்தர் பக்கம் திரும்பியவன் “டேய் நீ மதியை தொந்தரவு பண்ணியா? அவளை லவ் பண்றேன்னு சொன்னியா?” என்று கேட்க அவனோ பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்று இருந்தான்..
அவன் சட்டையை கொத்தாக பிடித்தவன் அவன் கன்னம் மாறி கன்னம் நான்கு அறை வைத்தவன் “என் தம்பியாடா நீ? இதுக்கு நீ செத்துப் போய் இருக்கலாமேடா.. ஒரு பொண்ணுக்கு எவ்வளவு வலி தந்திருக்க நீ.. அவளை விரும்பினது கூட தப்பில்லடா.. அவ இஷ்டம் இல்லைன்னு சொன்ன அப்புறம் அவளை திரும்பத் திரும்ப தொந்தரவு பண்ணி இருக்க இல்ல.. எப்படிடா உனக்கு மனசு வந்தது.. சீ.. இனிமே என்னை அண்ணன்னு கூப்பிடாத..”
மதி தீரனின் கையைப் பிடித்து இந்தரிடமிருந்து விலக்கிவிட்டு “தீரா நீங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு தெரிஞ்சிருச்சில்ல? இனிமே அவங்க சரியா நடந்துப்பாங்க.. என்ன இந்தர்.. என்ன மலர்.. நான் சொல்றது சரிதானே..?”
அவள் கேட்க மலரழகியோ அவள் கேள்வியில் விக்கித்துப் போனாள்.. முதல் முறையாக தன்னை அழகி என்று அழைக்காமல் தன் உடன் பிறந்தவள் மலர் என்று மற்றவர்களைப் போலவே அழைத்திருக்கிறாள்..
அது அவளுக்கு அதிக வலியை கொடுக்க “அக்கா நீ என்னை அழகின்னு தானே கூப்பிடுவ.. ஏன் கா இப்ப எல்லாரும் கூப்பிடுற மாதிரி மலர்னு கூப்பிடற?” என்று குரலில் வருத்தம் சொட்ட சொட்ட கேட்க அவளைக் கூர்ந்து பார்த்த மதி “என்ன செய்ய மலர்.. நீ செஞ்ச வேலை அழகானதா இல்லையே.. இந்தர் எனக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தானோ அதைதானே நீ தீரனுக்கு பண்ணி இருக்கே.. நீ தீரனை விரும்புனதை கூட நான் மன்னிச்சிடுவேன்.. ஆனா அவரை துரத்தி துரத்தி வலுக்கட்டாயமா உன்னை ஏத்துக்கிட்டே ஆகணும்னு அவரை நிம்மதி இல்லாம பண்ணி இருக்க பாரு.. அதை என்னால மன்னிக்கவே முடியாது.. ஒருத்தரை விரும்புறதுக்கு உனக்கு முழு சுதந்திரம் உண்டு.. ஆனா அவர் உன்னை திரும்ப விரும்பி தான் ஆகணும்னு சொல்றது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.. காதல் விருப்பம் இதெல்லாம் இயல்பா வரணும்.. எப்ப அது தீரனுக்கு உன் மேல வரலையோ அப்பவே நீ உனக்குள்ள உன் காதலை வச்சுக்கிட்டு தனியா இருக்கேன்னு சொல்லி இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன்.. ஆனால் அவர் காதலிச்சு தான் ஆகணும்னு அவரை வற்புறுத்தனதை என்னால மன்னிக்கவே முடியல மலர்.. இனிமேலும் உன்னை அழகினு நான் கூப்பிட மாட்டேன்.. ஏன்னா என்னை பொறுத்த வரை மனசால நீ அழகாய் இருந்த காலம் முடிஞ்சு போயிடுச்சு..”
மலரழகி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்..
“அக்கா.. நீ இவரை லவ் பண்றேன்னு எனக்கு தெரியாது அக்கா.. தெரிஞ்சிருந்தா அவர் பக்கம் கூட நான் திருப்பி இருக்க மாட்டேன்.. உன் அன்பு இல்லாம நான் ரொம்ப கஷ்டப்படுவேன் அக்கா.. ப்ளீஸ் அக்கா என்னை வெறுத்துறாத..”
“அது மட்டும் என்னால முடியாதுடி.. நான் செத்தே போனாலும் நான் சாகறதுக்கு முன்ன உயிரோட இருக்கிற அந்த கடைசி நிமிஷத்துல கூட என் இதயம் உனக்காக தான் துடிச்சிட்டு இருக்கும்.. ஏன்னா நான் என்னைக்குமே உனக்கு அக்காவா இருந்தது இல்லையே.. அம்மாவா தான் இருந்து இருக்கேன்.. அம்மாவால என்னிக்கும் தன் பிள்ளைகளை வெறுக்க முடியாது..”
அதற்குள் தீரனின் கைகளை இறுக பற்றியவள் “உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் உறுதியா சொல்லிக்கிறேன்.. கேட்டுக்கோங்க.. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.. கூடிய சீக்கிரம் கல்யாணமும் பண்ணிக்க போறோம்.. இதுல எந்த மாற்றமும் இல்லை.. இதுக்கு அப்புறம் எங்க ரெண்டு பேர்ல யாரை நீங்க தொந்தரவு பண்ணாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்.. அதுக்கப்புறம் நடக்கிற எல்லா விளைவுகளுக்கும் நீங்கதான் பொறுப்பு..”
சொன்னவள் தீரனின் கைப்பிடித்து அந்த இடத்தை விட்டு விலக திரும்ப அங்கே வந்து அவர்கள் எதிரில் நின்றவனை பார்த்து அப்படியே ஒரு நொடி மூச்சடைத்து சிலையாகி விட்டாள் மதி..
அவர்கள் எதிரில் வந்து நின்றான் சேகர்..
ஒரு வில்லத்தனமான புனனகையோடு அவர்கள் எதிரில் வந்து நின்றவனை பார்த்து “இப்ப இவன் எதுக்கு இங்கே வந்திருக்கிறான்?” என்ற யோசனையோடு நின்றிருந்தாள் மதியழகி..
இந்தரோ விட்டால் அவனைக் கொன்று விடுவான் போல எரிபார்வையை அவன் மீது வீசிக் கொண்டிருந்தான்..
“ஹலோ மதி.. ஹாய் இந்தர்.. எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்? உங்களுக்கு என்ன? நீங்க நல்லா தான் இருப்பீங்க.. உங்களால நான் தானே வேலையை இழந்துருக்கேன்.. நான்தான் வேலை இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.. அது சரி.. என்ன மதி அப்புறம் உன் பிளான் எல்லாம் எப்படி இருக்கு?”
அவன் கேட்க மதிக்கோ அதீத பதட்டம் சூழ்ந்து கொண்டது அவன் கேள்வியில்..
அவன் முகத்திற்கு நேராக சுட்டுவிரலை நீட்டியவள் “ஏய் உன்னை யாருடா இங்க கூப்பிட்டாங்க? நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு.. நீ செஞ்ச வேலைக்கு உன்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்காம அந்த வேலையை விட்டு அனுப்ப மட்டும் செஞ்சேன் இல்ல.. அதுக்கு சந்தோஷப்படு.. இன்னொரு முறை என் முன்னாடி வந்து நின்ன நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. நெஜமாவே உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்..”
“என்னடி போலீஸ் ல பிடிச்சு கொடுத்துடுவேன்னு பூச்சாண்டி காட்டுறியா எனக்கு?”
அவன் திமிராய் கேட்க தீரன் மதியழகியை பார்த்து “யார் மதி இவன்..? இவனை நீ எதுக்கு வேலையை விட்டு அனுப்பி வச்ச? உன் கூட வேலை செய்றானா?”
சேகரை முறைத்துக் கொண்டே அவன் எதிரில் வந்து நின்றவனிடம் இந்தர் அவசர அவசரமாக “அண்ணா இவன் ஒரு கேடு கெட்டவன்ணா..” என்று ஏதோ சொல்ல தொடங்க அவனை ஒரே ஒரு தீப்பார்வையால் பேச்சிழக்க செய்தான் தீரன்..
“நீ என்னை அண்ணன்னு கூப்பிடாத.. அவ்வளவுதான்.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”
மதி பக்கம் திரும்பி “நீ சொல்லு மதி.. யார் இவன்?” என்று கேட்க “அது.. தீரா.. இவன் என் காலேஜ்ல வேலை செஞ்சவன் தான்.. என்னை விரும்பறதாவும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னும் சொன்னான்.. நான் அதுக்கு ஒத்துக்கலைன்னு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும்னு என்னை அடிச்சு கையை முறுக்கி என்னென்னவோ கொடுமை பண்ணான்.. அது பொறுக்க முடியாம தான் நான் பிரின்ஸ்பல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இவனை வேலையை விட்டு எடுக்க வெச்சேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு ஆத்திரம் பொங்க அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் தீரன்.. அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடவும் உதடு கிழிந்து ரத்தம் வந்தது அவனுக்கு..
அப்படியும் கொஞ்சமும் சலிக்காமல் கீழே விழுந்திருந்தவன் மெதுவாய் கை ஊன்றி எழுந்து “என்ன மதி டார்லிங்.. பாதி கதையை மட்டும் சொல்றே.. மீதி கதையை யார் சொல்வா.. பாரு.. அவங்க எல்லாம் என்னை மட்டுமே தப்பா பாக்குறாங்க. மீதி கதையை நான் சொல்லட்டுமா..?” என்று கேட்க “ஏய் நீ எதுவும் பேச வேண்டாம்.. முதல்ல இங்கே இருந்து போ.. ஒரு வார்த்தை மதியை பத்தி தப்பா பேசினே உன்னை கொன்னே போடுவேன்டா” தீரன் அவனை மிரட்டினான்..
“பிரதர் பிரதர்.. கூல் டவுன் பிரதர்.. நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு போயிடறேன்.. நான் வேற எதுவும் பண்ண மாட்டேன்.. அப்படியே மதியை நான் எதாவது பண்ணா நீங்க என்ன என்னை சும்மா விடுவீங்களா? எனக்கும் என் உயிர் மேல ஆசை இருக்குல்ல..? அதனால நான் மதியை எதுவும் பண்ண மாட்டேன்.. நான் என்ன சொல்லணுமோ அதை அஞ்சே நிமிஷத்துல சொல்லிட்டு இங்கிருந்து போயிருவேன்.. அது சொல்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க பிரதர்..”
அவன் சொன்னதை கேட்டவன் நொடி நேரம் அமைதியாகிவிட அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் சேகர்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 27
சேகர் தொடர்ந்து மதியை பற்றி பேச தொடங்கினான்..
“ஏன் மதிமா.. நான் உன்னை லவ் பண்றேன்னு எப்ப சொன்னேன்..? நல்லா ஞாபகப்படுத்தி பாரு.. நான் அதை சொல்லவா.. என் லவ்வை சொல்ற மாதிரி சிச்சுவேஷன் எப்படி வந்ததுன்னு.. நான் லவ் பண்றேன்னு சொன்னவ அதையும் சொல்லனும் இல்ல? இது என்ன ஓரவஞ்சனை?” என்றவன் இந்தர் பக்கம் திரும்பினான்..
“நீ மதியை லவ் பண்றேன்னு சொன்னேல? உன்னை ஆஃப் பண்ணறதுக்கு என்கிட்ட வந்து மதி மேடம் ஐடியா கேட்டாங்க.. அப்ப நான் சொன்னது தான் இந்த லவ்வரா நடிக்கிற ஐடியா.. உன்கிட்ட அதை சொல்லியும் நீ உன்னோட லவ்வரை காட்டுன்னு கேட்டுட்டியா? யாரை காட்டுறதுன்னு தெரியாம மறுபடியும் என்கிட்ட புலம்புனாங்க இந்த மதி மேடம்.. அப்பதான் நான் தான் லவ்வர்ன்னு சொல்லுன்னு சொன்னேன்.. அதுக்கு மதி மேடம்.. இல்ல.. என் கூட இந்த காலேஜ்ல வேலை பாக்குற உங்களை இத்தனை நாளா நான் லவ் பண்றேன்னு தெரிஞ்சா என் மரியாதை மானம் கெட்டுப் போயிடும்.. அதனால அதுக்கு வேற யாராவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்னு இவங்க தான் சொன்னாங்க.. அவங்க அப்படி சொன்ன அப்புறம்தான் எனக்கு கோவம் வந்துச்சு.. எனக்கு என்ன குறைச்சல்.. இதோ இந்த தீரன் படிக்காதவன் சினிமால ஸ்டன்ட் பார்ட்டி.. இவனை எல்லாம் லவ்வருன்னு பெருமையா சொல்லிப்பாளாம்.. ஆனா படிச்சு ஒரு பெரிய ப்ரொஃபஷன்ல இருக்கேன்.. என்னை அவளோட லவ்வர்னு சொல்றதுக்கு அவளுக்கு கசக்குதாம்.. உங்க எல்லாருக்கும் ஒரு நல்ல ஆம்பள உடம்பு தானடி வேணும்.. அது என்கிட்ட இல்லன்னு தானே என்னை வேணாம்னு சொன்ன..” என்று கேட்ட நொடி அவன் முகத்தில் இடியாய் இன்னொரு அடி விழுந்தது..
தீரன் அவன் பேசியதை அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனை அடி வெளுத்திருந்தான்.. ஆனால் இந்தரும் மலரழகியும் இப்போது அவர்களை கேள்வியாய் பார்த்திருந்தார்கள்..
இந்தர் மதியழகியை பார்த்து “வேற யாரையாவது உன்னோட லவ்வர்னு சொன்னா நான் நம்ப மாட்டேன்னு எங்க அண்ணாவையே உன் லவ்வர்னு சொல்லி நடிக்கிறியா?” என்று கேட்க “ஆமா இந்தர்.. இந்த தீரன் உன்னோட அண்ணன்னு எங்க அக்காவுக்கு தெரிஞ்சிருச்சு.. மதியக்கா என்னோட கூட பொறந்தவன்னு தீரனுக்கு தெரிஞ்சிருச்சு.. அதான் ரெண்டு பேரும் சேர்ந்து சூப்பரா பிளான் பண்ணி லவ் பண்ற மாதிரி நடிக்கிறாங்க நம்ம கிட்ட.. இப்ப விஷயம் வெளிய வந்துருச்சு.. நம்ம சேகருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.. அக்கா இப்படி எல்லாம் இன்னொரு ஆம்பளையை உன் லவ்வர்னு சொல்லி நடிக்கிறியே.. உனக்கு வெட்கமா இல்ல..?” மலர் கேட்க அவள் முன்னே தன் சுட்டு விரலை நீட்டி அவளை எரிப்பது போல் பார்த்திருந்தான் தீரன்..
“அவ்வளவு தான் உனக்கு மரியாதை.. நீ என்னை தொந்தரவு பண்ணப்ப கூட நான் உன்னை தப்பா பேசினது இல்ல.. ஆனா மதியழகி மாதிரி ஒரு பொண்ணை பார்த்து தப்பா பேசினே.. நீ பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன்.. பல் எல்லாம் பேத்து கைல கொடுத்துடுவேன்.. ஞாபகம் வச்சுக்க..”
அவன் மிரட்ட “ஏன்ணா நீங்க மலரை மிரட்டறீங்க? அவ கேட்கிறதுல என்ன தப்பு? ஆஞ்சநேயர் பக்தன் ஆஞ்சநேயர் பக்தன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு என்னையும் ஏமாத்தி கடைசில இப்போ ஒரு பொண்ணை தள்ளி வைக்கிறதுக்காக யாருன்னே தெரியாத ஒரு பொண்ணை லவ்வர்னு சொல்லி கேவலமா நடிக்கிறீங்களே.. இதுதான் நீங்க உங்க ஆஞ்சநேயருக்கு செய்ற பெருமையா?”
மதியழகி இப்போது பொங்கி எழுந்து விட்டாள்..
“வாயை மூடு இந்தர்.. யாரு நடிக்கிறாங்க.. இங்கே யாரும் நடிக்கல.. ஆமா.. நீ என்னை கால் சென்டர்ல ஃபாலோ பண்ணிட்டு இருந்தியே.. இப்பவும் தினமும் கால் சென்டர்க்கு வந்துட்டு இருக்கியா..?” அவள் கேட்க இல்லை என்பது போல் தலையாட்டினான் இந்தர்..
“ஏன்.. ஏன் இப்ப எல்லாம் நீ என்னை ஃபாலோ பண்றது இல்ல?”
“அது அண்ணாக்கு அந்த பில்டிங் பக்கத்துலயே ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு.. ஒரு ஒன்னரை மாசமா அந்த ஷூட்டிங் நடக்கிறதுனால அண்ணன் அங்க வந்துட்டு போயிட்டு இருக்காரு.. அதான் நான் இப்ப எல்லாம் வர்றதில்லை..”
“ம்ம்ம்ம்.. அந்த ஒன்றரை மாசமா நான் தினமும் உங்க அண்ணாவை பாத்துட்டு தான் இருந்தேன்.. நீ உட்கார்ந்திருப்பியே அதே கடையில.. அவர் அழகு.. அவர் ஸ்டைலு.. இதெல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது.. ஒரு நாள் அவர் ஷூட்டிங்க்கு கூட போயிருந்தேன்.. எவ்வளவு அழகா சண்டை போடுறார் தெரியுமா? அவருடைய ஆண்மைக்காகவே அவர் கிட்ட விழுந்துட்டேன் நானு..”
“இதை நான் நம்பனுமா? அவர் பேசறதை பார்த்தாலே..” என்று அவன் ஏதோ தொடங்க “டேய்.. உனக்கு மூளையே இல்லையா? இப்ப அவர் எப்படி பேசினார் உன்கிட்ட? கொஞ்சமாவது மெட்ராஸ் பாஷை அவர் வாயில வந்துச்சா? அதை நீ கவனிக்கவே இல்லையா? இவ்வளவு தூரம் ஒரு மனுஷன் மாறனும்னா அது யாருக்காக இருக்கும்ன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா? அது அவரோட உயிர்க்கு உயிரா இருக்கற ஒருத்திக்காக மட்டும் தான் இருக்கும்.. அந்த லவ்வர் நான்தான்.. உயிரா நினைக்கிற தம்பிக்காக கூட தான் பேசுற ஸ்டைலை மாத்தாதவர் எனக்காக மாத்தினார்.. அப்போ இதிலருந்தே அவர் என்னை எவ்வளவு விரும்புறார்னு புரியலையா உனக்கு..?”
இந்தர் கொஞ்சம் குழப்பமாய் பார்க்க அதே நேரம் தீரனும் மதியைதான் கண் அசைக்காமல் பார்த்திருந்தான்..
ஆனால் மலர் அழகி “ஒன்றரை மாசம் முன்னாடி நீ உன் கால் சென்டர் கிட்ட தீரனை பார்த்தேங்கறதை நான் நம்புறேன்.. ஆனா இவர் பாஷையை உன்னை லவ் பண்ணதனால தான் மாத்திக்கிட்டார்னு நீ சொன்ன பாரு.. அது சுத்த பொய்.. நீ ஒரு ப்ரொஃபசர்.. நீ நெனச்சா நல்ல தமிழ்ல எப்படி பேசுறதுன்னு அவருக்கு நாலே நாள்ல சொல்லிக் கொடுக்க முடியும்.. அப்படி சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்துருப்ப.. ரெண்டு பேரும் நல்லாவே நடிக்கிறீங்க.. நீ என்ன வேணா முயற்சி பண்ணிக்கோ எங்களை நம்ப வைக்க.. ஆனா நான் நம்ப மாட்டேன்.. தீரன் என்னை லவ் பண்ணலன்னாலும் பரவால்ல.. நான் அவரை தான் லவ் பண்றேன்.. நான் அவரைதான் கல்யாணம் கட்டிப்பேன்.. நீ என்ன பண்ணாலும் நீ ஒருத்தரை லவ் பண்றேன்கிற விஷயத்தை நான் நம்பவே மாட்டேன்.. நீ எப்படி குடும்பத்துக்காக மாடா உழைச்சிட்டு இருக்க? எந்த டிஸ்ட்ரக்ஷனும் இல்லாம முழு மூச்சா உன் வேலை உண்டு நீ உண்டுன்னு இருப்பேன்னு உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.. நீ சொல்ற இந்த கதையை நான் நம்பவே மாட்டேன்.. அதுவும் சேகர் சொன்ன விஷயத்தை கேட்டப்பறம் எனக்கு நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு சுத்தமா நம்பிக்கை இல்லை..”
அவள் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி அப்படியே சிலையாக நின்றவள் “நாங்க லவ் பண்றோம்னு உன்னால நம்ப முடியல இல்ல..? சரி..”
தீரன் பக்கம் திரும்பி “என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா? உங்க தம்பியும் என் தங்கச்சியும் நம்ம லவ் பண்றோம்னு நம்பணும்னா அதுக்கு ஒரே வழி நம்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. சொல்லுங்க.. உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” அலைபாயும் விழிகளோடு அவள் கேட்க தீரனுக்கோ யாரும் தன்மீது தேன் மாரி பொழிந்தது போல் இருக்க தன்னையும் அறியாமல் சம்மதம் என்று தலையசைத்திருந்தான் மேலும் கீழுமாய்..
மதியழகி சொன்னதை கேட்டு இந்தர் தன் இடத்தில் அப்படியே அதிர்வோடு நிற்க மலர் அழகியோ சத்தமாக சிரித்தாள்..
“என்னடி பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு?”
மதியழகி கேட்க “எனக்கு இல்ல.. உனக்கு தான் புடிச்சிருச்சு.. நீ இப்படி கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னவுடனே ஐயையோ நம்ம அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறாரு.. அதனால நான் இனிமே அவரை லவ் பண்ண மாட்டேன்.. இனிமே அவரு அவளுக்கு மட்டும் தான் சொந்தம் அப்படின்னு சொல்லிட்டு நான் விட்டுக் கொடுத்துடுவேன்னு நினைச்சியா? எனக்கு தெரியாது நீ என்ன பண்றேன்னு? கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு நான் மனசு மாறின உடனே ரெண்டு பேரும் கல்யாணத்தை தள்ளி போடுவீங்க.. அப்படியே தள்ளி போட்டு தள்ளி போட்டு ஒரு ஸ்டேஜ்ல கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க.. என்னையும் வேற யாருக்காவது மனசை மாத்தி கல்யாணம் பண்ணி வச்சுருவே.. இதானே உன்னோட பிளான்.. இதெல்லாம் நம்புறதுக்கு வேற ஆளை பாரு..”
அவள் உறுதியான குரலில் சொல்ல இந்தர் இப்படி ஒரு கோணம் இருக்கிறதோ என்று யோசிக்க தொடங்கினான்..
“ஓ.. உனக்கு இப்ப கன்ஃபர்மேஷன் வேணுமா?” என்றவள் தீரன் பக்கம் திரும்பி “தீரா.. நாளைக்கு உங்க உறவுக்காரங்களோட வந்து என் வீட்டுல உங்களால என்னை பொண்ணு கேட்க முடியுமா? முடியாதா?”
அவள் ஒரே வார்த்தையில் அவன் பதிலை கேட்க அவனோ “நாளைக்கேவா?” என்று சற்றே நடுங்கிய குரலில் வினவினான்..
அந்த நடுங்கிய குரல் இந்தருக்கு ஏதோ சொல்ல அவனுக்கும் இப்போது அவர்கள் விரும்புகிறார்கள் என்ற விஷயத்தில் நம்பிக்கை குறைந்தது..
“ஏன் தீரா.. உடனே என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு ஏதாவது கஷ்டம் இருக்கா? ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க.. நாம யோசிக்கலாம்.. ஆனா நம்ம யோசிக்க யோசிக்க இவங்க ரெண்டு பேருனால நம்மளோட பிரச்சனைகள் அதிகமாயிட்டே தான் போகும்..”
அவள் சொன்ன விஷயத்தை அப்போதுதான் கிரகித்துக் கொண்டான் தீரன்.. அவள் சொன்ன விஷயம் புரிய தனக்காக இல்லை என்றாலும் அவளை இந்தர் அதற்கு மேல் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக இந்த விஷயத்தை தான் செய்து தான் ஆக வேண்டும் என்று உணர்ந்தவன் ஆனால் அவளை திருமணம் செய்து கொள்ளும் தகுதி தனக்கு இருக்கிறதா என்ற யோசனையிலேயே சற்று தயங்கினான்..
ஆனால் அவளோ “சொல்லுங்க தீரா.. நான் உங்க பதிலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நீங்க என்னை லவ் பண்றீங்க தானே? அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதில உங்களுக்கு என்ன இவ்வளவு தயக்கம்?” என்று கேட்கவும் அதற்கு மேல் தாமதித்தால் அவள் எங்கே உடைந்து விடுவாளோ என்று தோன்ற “நாளைக்கு எங்க உறவுக்கார அத்தை ஒருத்தவங்க இருக்காங்க.. அவங்களை கூட்டிட்டு உங்க அப்பா கிட்ட பொண்ணு கேட்க வரேன்..” என்றவனை திருப்தியாக பார்த்து புன்னகைத்தாள்..
மலரழகி பக்கம் திரும்பி “நாளைக்கு தீரன் வந்து நம்ம அப்பா கிட்ட பொண்ணு கேட்பார்.. அதுக்கப்புறம் அடுத்த முகூர்த்தத்திலேயே எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்.. இப்பவும் நீ பிடிவாதமா தான் இருப்பேனா இரு.. ஆனா நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் அவரை விரும்புறேன்னு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..
அந்த சேகருக்கு சொன்னதுதான் உனக்கும்.. என் புருஷனை இன்னொரு பொண்ணு தப்பா பார்க்கிறதை என்னால அனுமதிக்கவே முடியாது..” என்றவள் தீரன் கையைப் பிடித்த படி வெளியே நடக்க அவர்களையே அப்படியே அதிர்ந்த கண்களோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள் இந்தரும் மலரழகியும்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 28
அந்த உணவு விடுதியை விட்டு தீரனோடு வெளியே வந்த மதி ரகசிய குரலில் “தீரன் சார்.. என்னை கூட்டிட்டு போய் எங்க வீட்ல விட்டுடறீங்களா..?” என்று கேட்க முகத்தில் ஒரு குழப்ப முடிச்சுடனேயே “ஓகே மதி..” என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு நினைவு வந்தவனாக “சாரி.. மதி மேடம்.. வாங்க போலாம்..” என்றான்..
தான் வந்த டாடா சுமோ கார் கதவை திறந்து விட அவளும் ஏறி அமர்ந்தாள்.. ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தவன் வண்டியை வேகமாக எடுத்துக் கொண்டு அங்கு இருந்து நகர்ந்தான்..
சிறிது தூரம் அந்த நெடுஞ்சாலையில் பயணித்ததும் ஒரு இடத்தில் ஓரமாக வண்டியை நிறுத்த சொன்னாள் மதி..
“என்ன மதி மேடம்? என்ன ஆச்சு? ஏதாவது உடம்பு சரியில்லையா? வாமிட் வர மாதிரி இருக்கா?” என்று அவன் கேட்க “இல்ல உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் சார்.. வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டுங்க..”
அவள் சொன்னதை கேட்டவன் வண்டியை ஓரமாய் நிற்க வைத்து தன்னிருக்கையை விட்டு இறங்கவும் அதற்குள் மதியழகியும் வண்டியை விட்டு இறங்கி இருந்தாள்..
அது ஒரு ஏரி கரை அருகே இருந்தது.. அந்த ஏரியை வெறித்து பார்த்தபடி எதிர் பக்கம் திரும்பி கையை கட்டி நின்றவள் “நான் பாட்டுக்கு வந்து ஒரு லவ்வர் மாதிரி உங்களோட ஆக்ட் பண்ணி என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களான்னு நேரா கேட்டு இருக்கேன்.. நீங்களும் சரின்னு சொல்லி இருக்கீங்க.. அதுக்கப்புறம் வண்டி ஏறி நம்ப இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.. உங்களுக்கு நான் ஏன் இப்படி எல்லாம் சொன்னேன்னு கேக்கணும்னு தோணவே இல்லையா?”
“இப்போ நான் கேட்காததுனால நீங்க சொல்லாம இருந்துட்டீங்களா? அதை சொல்றதுக்கு தானே இறங்கி வந்து இருக்கீங்க? நீங்களே சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்துதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. சொல்லுங்க.. இந்தர் என் தம்பின்னும் என்னை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்த பொண்ணு உங்க தங்கச்சி தான்னும் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.?”
அவனின் பழைய பேச்சு வழக்கு இடையில் வராமல் இப்போது அவன் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தவளுக்கு மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு சின்ன மகிழ்ச்சி பூ பூத்திருந்தது..
அவன் விஷயத்தை நேரடியாக கேட்க அவள் ஒரு சிறிய புன்னகையோடு “சனிக்கிழமை சாயந்திரம்.. நீங்க அந்த பீச்சுக்கு போயிருந்தப்ப நானும் அங்க தான் இருந்தேன்.. மனசு அமைதியா இல்லாம இருந்தது.. உங்களோட நடிக்க முடியாம வீட்டுக்கு வந்தப்பறம் என்னால எதிலயுமே கான்சென்ட்ரேட் பண்ண முடியல.. மன அமைதிக்காக தான் நான் அங்க வந்தேன்.. ஆனா அங்க வந்த நேரம் என்னோட அமைதி மொத்தமா தொலைஞ்சு போச்சு..”
குரல் தழுதழுக்க கலங்கிய கண்களோடு அவள் சொல்லவும் அந்த கண்ணீரை துடைத்து விட அவன் கை பரபரக்க கையை எடுத்தவன் அதை பின்னால் இழுத்துக் கொண்டான்..
தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கை குட்டையை எடுத்து அவளிடம் நீட்டி “அழாதீங்க.. அதை பார்த்தப்போ உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்திருக்கும்ன்னு எனக்கு புரியுது.. ஆனா அதுக்காக நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது எனக்கு புரியல..”
“இப்ப நம்மளுக்கு வேற வழி இல்ல சார்.. உங்க தம்பி நல்லா படிக்கணும்.. என் தங்கச்சியும் நல்லா படிக்கணும்.. நிச்சயமா நம்ப ரெண்டு பேரும் அவங்களுக்கு சரியான ஜோடிங்க கிடையாது.. அவங்களுக்கு இப்போ வெறும் அவங்களோட அட்ராக்சன் மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.. ஒரு பத்து வருஷம் போன அப்புறம் ரெண்டு பேருக்கு நடுவுல இருக்குற ஜெனரேஷன் கேப் பூதாகரமா தெரியும் அவங்க கண்ணுக்கு.. அப்போ வாழ்க்கை ரணமா ஆயிடும்.. வாழ்க்கையில எதுவும் பிடிக்காம எதுலயும் மனசு போகாம தற்கொலை வரைக்கும் போனவங்க கூட இருக்காங்க.. அவங்க அந்த வாழ்க்கை வேணான்னு விவாகரத்து பண்ணிட்டா கூட அது ஓகே தான்.. ஆனா தன்னை கல்யாணம் பண்ணிட்டவங்களை மறக்கவும் முடியாம மன்னிக்கவும் முடியாம.. சுத்தி இருக்கிறவங்க என்ன சொல்லுவாங்கன்ற நினைப்புல வேற ஏதாவது முடிவுக்கு போயிட்டாங்கனா அது எவ்வளவு பெரிய ஆபத்தாயிரும்.. அது நடக்காம கூட இருக்கலாம்.. ஆனா ஒவ்வொரு நாளும் அது நடந்திருமோன்னு நம்ம ரெண்டு பேரும் தான் செத்து செத்து பொழைக்கணும்.. அது வேண்டாம்.. அதனாலதான் அந்த முடிவை விட இந்த முடிவு ஈஸியா இருக்கும்ன்னு எனக்கு தோணுச்சு..”
“ஆனா நான் ஒரு படிக்காதவன்.. நீங்க நல்லா படிச்சவங்க.. என்னோட பழக்க வழக்கம் உங்களோட பழக்க வழக்கம் இதெல்லாம் ஒத்தே போகாது.. அப்படி இருக்கும் போது நாம் இரண்டு பேரும் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதுவும் விபரீதம் தானே..?”
தீரன் கேட்க “உங்க கேள்வி சரியா தான் இருக்கு.. ஆனா நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் வாழ்க்கையை அவங்களை விட அதிகமா பார்த்திருக்கோம்.. அனுபவம் அதிகம்.. அதனால எல்லா விஷயத்தையும் கொஞ்சம் மெச்யூர்டா ஹேண்டில் பண்ணலாம்.. இந்த கல்யாணம் கூட என் தங்கையும் உங்க தம்பியும் ஒரு நிலைக்கு வர வரைக்கும் தான்.. அதுக்கப்புறம் விவாகரத்து பண்ணிட்டு நம்ப நம்ப வழியை பார்த்து போயிடலாம்.. எனக்கு இதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்கனும்னு எந்த எண்ணமும் இருந்ததில்லை.. நான் இப்படியே இருந்துட்டு எங்க அப்பாவை பாத்துக்கிட்டு என் தங்கை வாழ்க்கையை செட்டில் பண்ணிட்டு அவ நல்லா வாழறதை சந்தோஷமா பார்த்துட்டு தனியாவே இருந்திடலாம்னு தான் முடிவு பண்ணி இருந்தேன்.. இப்போவும் அதே முடிவு தான்.. ஆனா நடுவுல கொஞ்ச காலம் உங்க மனைவின்கிற பேரில உங்களோட வாழ வேண்டியதா போகப்போகுது.. நான் உங்களைப் பத்தி யோசிச்சேன்.. நீங்க ஒரு ஆஞ்சநேயர் பக்தர்.. அதுவும் நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னும் பிரம்மச்சாரியா தான் இருக்கணும்னும் முடிவு எடுத்து இருக்கிறதா பாண்டி அண்ணா சொன்னதுனால தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.. இல்லன்னா உங்களுக்கும் சேர்த்து நான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டேன்.. என் தங்கையும் உங்க தம்பியும் ஒரு நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் நம்ம இந்த கல்யாணம் நாடகத்தை நடத்துவோம்.. ஏன்னா அவங்க மனசு மாறுறதுக்கு காதல் நாடகம் மட்டும் போதல.. கல்யாண நாடகமும் வேண்டி இருக்கு.. அவங்க நல்ல நிலைமைக்கு வந்ததும் நம்ம ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிக்கிட்டு அவங்க அவங்க வழியை பார்த்து போயிடலாம்.. இது உங்களுக்கு ஓகேவா?”
அவள் தன்னை விரும்புகிறேன் என்று சொல்லி அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொல்லி விட மாட்டாளா என்ற ஒரு நப்பாசை அதுவரை தீரனுக்கு இருந்தது.. அந்த நப்பாசை இப்பொழுது கை நழுவி போய் இருக்க ஒரு தீர்க்கமான குரலில் “புரியுது.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. நாம அப்படியே பண்ணிடலாம்.. நாளைக்கு எங்க அத்தையை கூட்டிட்டு நான் உங்க அப்பா கிட்ட எனக்காக உங்களை பொண்ணு கேட்க வரேன்.. சரி.. நம்ம கிளம்பலாமா..?” அவன் கேட்க தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் சட்டென காரில் ஏறி அமர்ந்தாள்..
முன்பக்கமாய் கவிழ்ந்து படுத்து வீடு வரை குலுங்கி குலுங்கி அழுது கொண்டே வந்தாள் அவள்.. தீரனுக்கு அவள் வலியை கண்டு மனம் ஏகத்துக்கும் வலித்தது.. அவளை சமாதானப்படுத்த இரண்டு மூன்று முறை அவளை அணைத்து ஆறுதல் படுத்துவதற்காக கைகளை எடுத்துக் கொண்டு போனவன் ஏதோ தடுக்க தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்..
அவன் கண்களும் அவள் நிலை கண்டு கலங்கி தான் போயிருந்தன.. அவள் வீடு வந்தவுடன் “மதி, மதி” என்று அவள் தோள் தட்டி அழைக்கவும் தடாலென நிமிர்ந்தவள் “சொல்லு தீரா..” என்றவள் பிறகு தன் தலையை உதறி “சாரி சாரி.. சொல்லுங்க தீரன் சார்..” என்க அவன் “பரவால்ல.. நீங்க என்ன தீரானே கூப்பிடுங்க.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நீங்க சொன்ன அட்ரஸ் வந்துடுச்சு.. இங்க உங்க வீடு எங்க இருக்கு?”
“அதோ இந்த வீட்டுக்கு பக்கத்துல இருக்கே.. அந்த வீடுதான்.. நான் இறங்கி போயிடறேன்.. ரொம்ப தேங்க்ஸ் தீரா.. நீங்க பண்ணிட்டு இருக்குற இந்த விஷயத்தை எல்லாம் என்னால எந்த ஜென்மத்திலயும் மறக்க முடியாது..”
“இதுல என் சுயநலமும் இருக்கே மதி.. நான் உங்களை அப்படி கூப்பிடலாமா?” என்று அவன் கேட்கவும் “தாராளமா.. நான் உங்களை விட சின்னவதான்.. நீங்க என்னை பேர் சொல்லி தாராளமா கூப்பிடலாம்..”
கண்களை எட்டா புன்னகையோடு அவள் சொல்ல “நாம ரெண்டு பேருமே நம்ம கூட பிறந்தவங்களுக்காக தான் இதை பண்றோம்.. அதனால இந்த தேங்க்ஸ் சாரி இதெல்லாம் வேண்டாமே..” என்றான் தீரன்..
“ஓகே டன்.. என்னதான் நம்ம வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிக்க போறோன்னாலும் கல்யாணத்துக்கு நம்ம குணங்கள் ஒத்துப்போகாதுனாலும் நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருக்குறதுக்கு நம்ம எப்படி இருந்தாலும் ஓகே தானே..? நம்ம ஃபிரண்ட்ஸா இருக்கலாம் இல்ல..?” அவள் கேட்க “தாராளமா..” என்றவன் தன் கையை அவளுக்கு முன் நீட்ட அவளோ அவன் கையைப் பிடித்துக் குலுக்கி “இனிமே ஃபிரண்ட்ஸ்..” என்று விரிந்த புன்னகையோடு கூறினாள்..
அவள் வீட்டிற்குள் செல்வதை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் சென்றதும் வண்டியில் ஏறி தன் வீட்டிற்கு பயணப்பட்டான்.. இது ஒரு நாடக கல்யாணம் என்றாலும் அவள் இன்னும் சில வருடங்கள் தன்னோடு ஒரே கூரையின் கீழ் இருப்பாள் என்ற நினைப்பு அவனுக்கு தித்திப்பாக தான் இருந்தது..
தன் வீட்டிற்கு வந்த மதி தன் அன்னையின் படத்தை கையில் எடுத்து வைத்து தன் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்து தன் அன்னை முகத்தைப் பார்த்து அன்று நிகழ்ந்த அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள்..
அன்றும் கடற்கரையில் தீரனோடு இந்தரையும் தன் தங்கையையும் பார்த்தபோது இப்படித்தான் வீட்டுக்கு வந்தவுடன் தன் அன்னையிடம் புலம்பித் தீர்த்து இருந்தாள்..
தீரனிடம் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு வந்ததிலிருந்து அவனைத் தான் விரும்புகிறோமோ என்ற சந்தேகம் அவளுக்குள் அதிதீவிரமாய் ஊடுருவி இருக்க அதற்கு விடை கிடைக்காமல் குழப்பத்தில் மன அழுத்தம் அதிகமாகி சற்று தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொள்ள கடற்கரைக்கு சென்று இருந்தாள் அவள்..
கடற்கரை மணலில் அமர்ந்தபடி அந்த சில்லென்ற உப்பு காற்றில் தன்னை தானே மறந்தபடி கண்ணை மூடி அமர்ந்திருந்தவள் கண் முன் தீரன் தான் வந்து நின்றான்.. திடுக்கிட்டு கண் விழித்தவள் இன்னும் குழப்பத்துக்குள் செல்ல அப்போது சோதனையாக தீரனின் குரல் கேட்டு சட்டென குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள்..
20 அடி தள்ளி தீரன் அமர்ந்திருந்தான்..
ஆனால் அவனோடு கூட யாரது..? இந்தர்..?!
தன் கண்களை நம்ப முடியாமல் ஒரு நொடி அசைவின்றி ஸ்தம்பித்து போயிருந்தாள் அவள்..
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 29
தீரன் கடற்கரையில் சற்று தள்ளி அமர்ந்திருப்பதை பார்த்த மதி வியந்து போக அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த உருவமும் தெரிந்தாற் போல் இருக்க அது யாரென பார்த்தவள் தான் கண்ட காட்சியில் அதிர்ந்தே போனாள்..
“இந்தர்..?! இவன் எப்படி தீரனோடு..!!” யோசனையில் இருந்தவள் தீரன் “தம்பி.. இன்னும் தம்மா டைம்க்கு இங்கயே இருந்துட்டு வூட்டுக்கு லேட்டா போவலாம்டா..” என்று சொன்னதில் உண்மையை விளங்கிக் கொண்டாள்.. சட்டென தன் புடவை தலைப்பை எடுத்து தலை மேல் சுற்றி தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்..
தீரனின் உடன் பிறந்த சகோதரன் இந்தர்.. ஐயோ கடவுளே இது என்ன விளையாட்டு.. இந்தரை சமாளிக்க அவன் அண்ணனுடன் காதலியாய் நடிக்க இருந்தேனா? நிஜமாகவே அப்படி நடித்திருந்தால் இந்தர் எவ்வளவு உடைந்து போய் இருப்பான்? ஆனால் இப்போது தான் தீரனை விரும்புகிறோமோ என்ற சந்தேகம் இன்னும் வலுக்க அவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது..
தன் மனதை கட்டுக்குள் வைக்காமல் அது தீரன் பின்னால் செல்வதை தடுக்க முடியாமல் இப்படி இருதலைகொள்ளி எரும்பாய் தான் மாட்டிக் கொண்டிருப்பதை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டாள் மதியழகி..
அண்ணன் தம்பி இருவரும் அலையில் ஆடுவதற்காக எழும்ப எதிரில் வந்து நின்ற மலரழகியை பார்த்தவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்று போனது.. ஏற்கனவே அவளை பார்த்த அதிர்வில் கல்லாய் சமைந்திருந்தவள் அவள் பேசிய பேச்சில் உயிர் வெறுத்துப் போனாள்..
என் கூட பிறந்த தங்கையா இப்படி? அவள் இன்னொரு ஆண் பின்னால் படிக்கும் காலத்தில் அதுவும் தன்னைவிட 10 வயது மூத்தவனிடம் காதலை சொல்லி திரிந்து கொண்டிருக்கிறாள்.. அவன் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் அவனை வற்புறுத்தி தன் காதலை ஏற்க சொல்லி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. அங்கேயே கடலுக்குள் புகுந்து செத்து விடலாமா என்று தோன்றியது மதிக்கு..
அதற்கு மேல் அந்த காட்சியை காண சகியாமல் கடல் அலை பாய்ந்தது போல் அவள் மனதிலும் துன்ப அலைகள் பாய்ந்து கொண்டிருக்க எழுந்து வீட்டிற்கு வந்திருந்தாள் மதி..
அன்றும் இப்படித்தான் தன் அன்னையின் படத்தை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு கதறி கதறி அழுது கொண்டிருந்தாள்..
“அம்மா.. நான் என்னம்மா பண்ணுவேன்..? எங்கம்மா என் வளர்ப்பு தப்பா போச்சு? நீ போன அப்புறம் அழகிக்கு ஒரு அம்மாவா இருந்து அவளை கண்ணும் கருத்துமா பார்த்து பார்த்து தானே வளர்த்தேன்.. அவ எங்கம்மா இப்படி பாதை மாறி போனா.. இந்த வயசுல படிப்புல திறமைல கவனம் செலுத்த வேண்டியவ இப்படி காதல் கத்திரிக்கான்னு சிக்கி கிட்டு தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்காளேம்மா.. அவ மனசை எப்படி மா மாத்த போறேன்..? தலைகீழ நின்னாலும் அவ நினைச்சது நடக்காதுமா.. தீரன் நிச்சயமா அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டார்.. அப்படி அந்த காதலும் கிடைக்காம இந்த ஸ்டேஜ்ல அவ படிப்பும் பாழாயிட்டா அவ லைஃப் என்னம்மா ஆகும்? எனக்கு ரொம்ப பயமா இருக்குமா.. எப்படி மா அவளை சரி பண்ணுறது? பாவம்.. அந்த தீரனுக்கு அவர் தம்பியை பத்தி இன்னும் விஷயம் தெரியாது.. என்னை தொந்தரவு செய்ற ஆளு அவர் தம்பி தான்னு தெரிஞ்சா என்னை விட அதிகமா உடைஞ்சு போயிடுவாரு.. எனக்காவது அப்பான்னு ஒருத்தர் இருக்காரு.. அவருக்கு அதுவும் கிடையாது.. ஒத்தையா தம்பியை பார்த்து பார்த்து கவனிச்சு அப்படியே தலையில தூக்கி வெச்சு கொண்டாடி வளர்க்கிறார்.. அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா ரொம்ப வலிக்கும்மா.. அந்த வலியை தான்மா நானும் அனுபவிச்சிட்டு இருக்கேன்.. பாவம் அவர்.. அம்மா ஒரு விஷயம் தெரியுமா? தீரனை நான் விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.. என்னால அவரோட லவ்வரா நடிக்க முடியாதுமா.. ஏன்னா நான் நிஜமாவே அவரை மனப்பூர்வமா விரும்புறேன்.. நான் அப்படி அவரோட லவ்வரா நடிச்சு எல்லாம் சரியான பிறகு அவரை விட்டு விலகணும்னா என் மனசு ரெண்டா உடைஞ்சிடும்மா.. ஏற்கனவே அழகி அவரை விரும்பறதா சொன்னப்போ என்னோட தீரன் மேல உரிமை கொண்டாடற இன்னொரு பொண்ணா தான் மா அவளை பார்த்தேன்.. அவ மேல எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு மா.. எனக்கே என்னை நெனச்சு ஆச்சரியமா இருந்தது மா.. அவர் விஷயத்துல நான் எவ்வளவு பொசசிவா யோசிக்கறேன்… எனக்கு அப்போதாம்மா புரிஞ்சது.. நான் அவரை லவ் பண்றேன்மா.. ஆனா அவர்கிட்ட நான் இதை சொல்ல முடியாது.. ஏற்கனவே அழகி அவருக்கு ரொம்ப பிரச்சினையை கொடுத்துக்கிட்டு இருக்கா.. இதுல நானும் போய் அவரை விரும்புறேன்னு நின்னா என்னை அவர் எப்படி பார்ப்பாரு.. நான் என்னம்மா பண்றது? சொல்லுமா.. இதுக்கு என்ன தான் மா முடிவு..?”
அன்னையின் படத்தின் மேலேயே கவிழ்ந்து கதறிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென ஏதோ பொறி தட்டியது.. “அவர் தம்பின்னு சொன்னாரு.. ஆனா கூட பொறந்தவங்களை தான் தம்பின்னு சொல்லணுமா என்ன? ஏன் நமக்கு தெரிஞ்சவங்க யாரையோ பார்த்தா கூட தான் தம்பின்னு சொல்லுவோம்..” என்று வேகமாக தன் கண்ணை துடைத்துக் கொண்டு கைபேசி மூலம் பார்கவியை அழைத்தாள்..
அவள் அழைப்பை ஏற்ற பார்கவி “சொல்லு மதி.. என்ன.. தீரன் அண்ணாவோட நடிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? இப்ப கூட சொல்லு.. அவரு நாளைக்கு உன்னோட அங்க நடிக்க ரெடியா இருக்காரு..”
அவள் சொன்னதை கேட்டவள் “இல்லடி.. உன்னை ஒரு விஷயம் கேக்கணும்னு தான் ஃபோன் பண்ணேன்.. எனக்கு தீரன் சாரோட தம்பி பேர் என்னன்னு கேட்டு சொல்றியா?”
“சரிடி கேக்குறேன்.. அவர் எங்கேயோ வெளில போயிருக்காரு.. நைட்டு தான் வருவாரு.. நான் கேட்டுட்டு காலைல உனக்கு ஃபோன் பண்றேன்..”
இந்த விவரம் தெரிவதற்கு காலை வரை காத்திருக்க வேண்டுமே என்று தோன்றினாலும் இந்தர் தீரனின் தம்பி இல்லை என்று தெரிந்தால் கிடைக்கப் போகும் நிம்மதிக்காக அந்த அமைதி இல்லாத காத்திருப்பை சமாளிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு..
அடுத்த நாள் மதியம் வரை பார்கவியிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை.. மதியழகியோ தவிப்போடு காத்துக் கொண்டிருந்தாள்.. சரியாக 3:00 மணிக்கு பார்கவி அவளை அழைத்து இருந்தாள்..
“சொல்லு பவி.. கேட்டியா..?”
அவள் அவசரமாய் கேட்க அவளை விட பதட்டம் நிறைந்த குரலில் “அந்தப் பையன் பேரு இந்தர் டி.. அந்த இந்தரா அவன்.. தெரிஞ்சி தான் கேட்டியா நீ..?” என்று அவள் கேட்க அப்படியே இருந்த இடத்திலேயே தரையில் மடிந்து தொப்பென அமர்ந்தாள் மதி..
எதைக் கேட்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ அந்த செய்தி காதில் விழவும் சுக்கு நூறாய் உடைந்து போனாள் அவள்.. அவளுக்கு மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது..
“நான் உன்னோட அப்பறம் பேசுறேன்டி..” என்று சட்டென கைபேசியை இணைப்பை துண்டித்து இருந்தாள்..
வெகு நேரம் அப்படியே எதிரில் இருந்த சுவற்றை உறுத்து பார்த்தபடி விரக்தியாய் அமர்ந்து இருந்தவள் ஏதோ தோன்ற கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வேக வேகமாய் தன்னையே அழகாய் தயார் செய்து கொண்டு தீரனோடு தான் காதலியாய் நடிக்கவிருந்த உணவு விடுதிக்கு கிளம்பிச் சென்றாள்..
அங்கு நிகந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இப்போது அவளுக்கும் தீரனுக்கும் திருமணம் என்ற நிலையில் வந்து அவர்களை நிறுத்தி இருக்கிறது விதி..
அடுத்த நாள் சொன்னது போலவே தன் அத்தையோடு பெண் கேட்க வந்திருந்தான் தீரன்.. அவனோடு இந்தரும் வந்து இருக்க அவர்களை பார்த்த மலரழகியோ சற்று திடுக்கிட்டு தான் போனாள்..
தங்களை சமாளிக்க கல்யாணம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள் என்று எண்ணியவள் இப்போது நிஜமாகவே திருமணம் பேச தீரன் வந்திருக்க வாயடைத்துப் போனாள் அவர்கள் செய்கையில்..
மதியழகி ஒரு தேவதையாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு டிஃபன் காஃபி தட்டோடு வந்து நின்றாள்.. முதல் நாளே தன் தந்தையிடம் விஷயத்தை கூறியிருந்தாள் அவள்.. மதியழகி ஒருவரை விரும்பி இருக்கிறாள் என்று தெரிந்த கணமே தன் மகளுக்காக அந்த தந்தை தன் வாழ்வில் பெரும் ஆனந்தம் கிடைத்தது போல் பூரித்து போனார்..
மதி அழகி ஒருவரை மனதார விரும்பி இருக்கிறாள் என்றால் அவர் நிச்சயமாக ஒரு பத்தரை மாத்து தங்கமாக தான் இருக்க வேண்டும் என்று முடிவே செய்துவிட்டார் அவர்.. தீரனை பற்றி வேறு ஏதும் விசாரிக்க கூட இல்லை அவர்..
அவன் என்ன வேலை பார்க்கிறான் என்று மட்டும் கேட்டுக்கொண்டு “அவங்க பேச வரட்டும்மா.. இந்த கல்யாணத்தை கூடிய சீக்கிரம் நடத்தி முடிச்சிடலாம்..” என்று அவர் சொல்லவும் மதியிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளி வந்தது..
தீரனும் மதியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று சொல்லி இருந்ததால் அதிகம் தாமதிக்காமல் அடுத்த முகூர்த்தத்திலேயே அவர்கள் திருமணத்தை வைத்து விடுவது என்று முடிவு செய்து அந்த வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தம் இருக்க அருகில் இருந்த கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று பேசி வைத்தார்கள்..
தீரனின் அத்தையும் மதியின் தந்தையும் தாம்பூலம் மாற்றிக் கொள்ள எளிமையாய் அந்த திருமண நிச்சயதார்த்தம் மதியின் வீட்டிலேயே முடிவடைந்தது..
திருமண நாளான அந்த வெள்ளிக்கிழமை வந்தது.. தன் மகளை திருமண கோலத்தில் என்றைக்காவது பார்த்து விடமாட்டோமா என்று ஏக்கத்தோடு இருந்த தமிழ்வாணன் மதியின் கல்யாண கோலத்தைக் கண்டு அப்படியே மனம் உருகிப்போய் கண்களில் ஆனந்த கண்ணீர் நிறைந்திருக்க தன் மகளை வாஞ்சையாய் வருடினார்..
“இந்த நாளை நாம் பார்ப்பேனான்னு நெனச்சேன் டா.
நீ வேற வேலை குடும்பம் தங்கச்சி அவ படிப்புன்னு ஓடிக்கிட்டே இருந்தே.. நீ களைச்சு ஓய்ஞ்சு போனா இளைப்பாற உனக்கும் ஒரு இடம் வேணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. பரவால்ல தீரன் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்கணும்னு இருந்திருக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு.. நல்லா இருக்கணும் நீ.. மாப்ளையோட ஒன்னா வாழ்ந்து குழந்தை குட்டிகளோட தீர்காயுசா இருக்கணும் மதிமா..”
அவரை கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தவள் தன் மனதில் இருந்த சோகத்துக்கு வடிகாலாய் அப்படியே அவர் நெஞ்சில் சாய்ந்த படி இருக்க ஐயர் அவளை மணமேடைக்கு கூட்டி வரச் சொல்லவும் அவளை தன்னில் இருந்து விலக்கி அவள் கண்களை துடைத்து விட்டார் தமிழ்வாணன்..
“ம் போடா போ.. போய் உன் வாழ்க்கையை நல்லபடியா வாழணும்.. எப்போவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்.. இதுதான் நீ அழற கடைசி அழுகையா இருக்கணும்.. உன்னை எப்பவுமே தீரன் சந்தோஷமா வச்சிருப்பாருங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லடா.. மணவறையில கூப்பிடுறாங்க பாரு..” அவள் தலையை வருடி அனுப்பி வைத்தார் தமிழ்வாணன்..
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 30
என்னதான் தீரனை விரும்பினாலும் தன் அக்காளை உள்ளே வந்து மணக் கோலத்தில் பார்த்த மலரழகிக்கு நெஞ்சம் நிறைந்து ஆனந்தத்தில் விம்மி புடைத்தது..
“அக்கா நீ ரொம்ப அழகா இருக்க அக்கா.. ஒரு பக்கம் என் தீரனை என்கிட்ட இருந்து பறிக்க பாக்குறேன்னு கஷ்டமா இருந்தாலும் இன்னொரு பக்கம் உன்னை இந்த கோலத்துல பார்க்கறப்போ இதே மாதிரி என்னைக்கும் நீ சந்தோஷமா இருக்கணும்னு தோணுது அக்கா.. நீ சொல்ற மாதிரி என் தீரனும் நீயும் உண்மையா விரும்பி இருந்தா நீங்க நல்லபடியா இருங்க.. ஆனா ஒருவேளை இந்த காதல் பொய்யா இருந்தா அது இன்னும் உனக்கு கஷ்டத்தை தான்கா கொடுக்கும்..”
மலரழகியின் கன்னத்தை தன் கைகளில் தாங்கியவள் “நீ அதை பத்தி கவலைப்படாத மலரு.. நான் தீரனை மனசார விரும்பறேன்.. அதனால இந்த கல்யாணத்துல என்னை பொறுத்த வரைக்கும் எந்த தப்பும் இல்லை.. நான் யாரை உயிருக்குயிரா அதிகமா விரும்புறேனோ அவரைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. எனக்கு இன்னும் நல்ல சந்தோஷத்தை கொடுக்கணும்னு நீ நெனைச்சா உன் படிப்பில கவனத்தை செலுத்தி ஒரு நல்ல நிலைமைக்கு வா.. அது எனக்கு ஆயிரம் மடங்கு சந்தோஷத்தை கொடுக்கும்..”
நடிக்காமல் மனதில் இருந்த உண்மையை சொல்லிவிட்டு மனமேடையை நோக்கி நகர்ந்தவளின் தோளை பிடித்து மனதில் ஒருவித பாரத்தோடு அழைத்து வந்தாள் மலரழகி.. கூடவே பார்கவியும் இன்னொரு பக்கம் அவள் கையை பிடித்தபடி மனம் நிறைந்திருக்க தன் தோழி அவளவனோடு இணைய போவதை காணும் ஆவலோடு அழைத்து வந்தாள்..
ஐயர் கூப்பிட்டதிலிருந்து மணமகளின் அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்த தீரன் மாலை செங்கதிராய் அரக்கு நிற பார்டர் கொண்ட மாம்பழ நிற புடவையில் விசிறி வாழை மடிப்புக்கள் மெல்ல முன்னே ஆட மிதமான நகைகளுடன் அதிக ஒப்பனை இல்லாமலேயே அழகு தேவதையாய் மெல்ல நடந்து வந்தவளை கண்ணசைக்காமல் பார்த்திருந்தான்..
தன் தம்பியை தவிர வேறு உலகம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு புது உலகத்தை காட்ட மணப்பெண்ணாய் அவன் வாழ்வில் இன்னுமோர் அர்த்தமுள்ள உறவாய் நுழைய வந்து கொண்டிருந்தாள் மதியழகி..
அவன் பக்கத்தில் அவள் வந்து அமரவும் இந்த உலகத்தை வென்று விட்டதாய் உணர்ந்தான் தீரன்.. அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவள் அவனுக்குள் நிறைந்து விட தன் மனது அவள் புறமே ஓடிக் கொண்டிருக்க அதுவரை பிரம்மச்சரிய விரதத்திற்காக ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவன் அந்த நொடியில் இருந்து மதியழகியை தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைப்பதில்லை என்று தீர்மானமாய் முடிவெடுத்துக் கொண்டான்..
என் வாழ்வில் மனைவி என்ற சொல்லுக்கு உரியவள் மதியழகி.. என் பாதியாய் அவள் மட்டும் தான் இருக்க முடியும்.. இப்படி எல்லாம் அவன் மனம் நினைத்தாலும் அவனுக்கு படிப்பு இல்லாதது.. அவன் அவளைப் போன்ற நாகரீகமான நடை உடை பாவனை இல்லாமல் இத்தனை நாளாய் ஒரு அடிதடி செய்யும் ஆளாகவே பிறருக்கு தோன்றிக் கொண்டிருப்பதாலும் தான் அவளுக்கு ஏற்ற ஜோடி இல்லை என்று உள்ளுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தான் அவன்..
அதனால் அவளிடம் தன் அன்பை சொல்லிவிட முடியாவிட்டாலும் இன்று அவள் தன் மனைவியாக போகிறாள்.. அவள் தன்னை காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை.. தன் முழு காதலையும் அன்பையும் நேசத்தையும் அவள் மீது அக்கறையாக பொழிந்து ஒரு நல்ல தோழனாக இனிமேல் அவளோடு வாழ வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன்..
இப்படி யோசனைகளில் இருந்தவனை ஐயரின் குரல் அதிலிருந்து மீட்டது.. தாலியை எடுத்து அவனிடம் கொடுத்தவர் அதை மதியழகியின் கழுத்தில் கட்ட சொல்லவும் அவளின் கயல் விழிகளை பார்த்தபடி அவன் மங்கள நாணை அவள் கழுத்தில் கட்ட அவளுக்கோ தன் காதல் திருமணத்தில் நிறைவேறிய ஆனந்தத்தில் கண்கள் குளமாகின..
அதைக் கண்டவன் அதையும் அவள் வேதனையில் கண்ணீர் உகுக்கிறாள் என்று தவறாகவே புரிந்து கொண்டு “சாரி மதி..” என்று அவள் காதுகளில் மட்டும் கேட்குமாறு ரகசிய குரலில் மன்னிப்பு கேட்க அவளை அந்த வார்த்தை ரெண்டாய் கூறு போட்டு அதீத வலியை கொடுத்தது..
“”நான் வேதனைல அழல தீரா.. என் காதல்.. நான் யாரை உயிருக்குயிரா காதலிக்கிறேனோ.. அவரே என் கணவனா கிடைச்ச சந்தோஷத்தில அழறேன்.. வேண்டாம்.. சாரி சொல்லி என்னை கொல்லாதடா..” மானசீகமாக பேசிக்கொண்டிருந்தாள் அவனிடம்.. இந்த வார்த்தைகளை வெளிப்படையாக அவனிடம் சொல்ல தைரியம் இல்லாது உள்ளுக்குள்ளேயே வேண்டிக் கொண்டாள்..
அவனும் அடுத்ததாய் அவளை அணைத்தார் போல் அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் இட அப்போது மானசீகமாக அவளுக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தான்..
“எனக்கு தெரியும் மதி.. நான் உன்னை மனசார விரும்புறேன்.. ஆனா நீ என்னை காதலிக்கலைன்னு எனக்கு தெரியும்.. வேற வழியில்லாம தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறே.. நீ அன்னைக்கு சொன்ன மாதிரி இந்த கல்யாண வாழ்க்கையில நான் உனக்கு ஒரு நல்ல தோழனா இருப்பேன்.. என்னைக்கும் ஒரு கணவன்ற உரிமையை நான் உன்கிட்ட எடுத்துக்க மாட்டேன்.. சில வருஷங்களுக்கு பிறகு நாம பிரியும்போது நீ எப்படி இப்ப ஒரு புத்தம் புது பூவா எனக்கு கிடைச்சிருக்கியோ.. அதே மாதிரி தான் இந்த கல்யாண வாழ்க்கையிலிருந்தும் வெளியே போவே.. எந்த மன வருத்தமோ உறுத்தலோ இல்லாம உனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கணும்னா தாராளமா நீ சந்தோஷமா அமைச்சுக்கலாம்.. இது இந்த தீரன் உனக்கு கொடுக்கிற வாக்கு..”
அக்னியின் முன்னால் அமர்ந்தபடி மானசீகமாக இப்படி சத்தியம் செய்திருந்தான் தீரன்..
அதன் பிறகு திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து அவர்கள் திருமணத்தை பதிவு செய்து முடித்திருந்தனர்..
கொஞ்சம் கொஞ்சமாக மலரழகி இந்தர் இருவரின் மனமும் மாறிக்கொண்டிருக்க அதை மாறவிடாமல் கல்யாணம் நடந்து கொண்டிருந்த கோவிலுக்கும் வந்து சேர்ந்திருந்தான் சேகர்..
அந்த திருமணத்தை காண வரவில்லை அவன்.. மதியழகி தீரனுடன் திருமணச் சடங்குகளை முறையாக செய்து கொண்டிருக்க அவனோ அவர்கள் கண்களில் படாமல் நேராக சென்று இந்தர் மற்றும் மலரழகியை சந்தித்திருந்தான்..
ஆனால் இருவரும் அவனை கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை.. அதை உணர்ந்தவன் “என்ன ரெண்டு பேரும் அதுக்குள்ள சமாதானம் ஆயிட்டீங்களா? இனிமே ஒன்னும் பண்ண முடியாதுன்னு முடிவுக்கு வந்துட்டீங்களா?”
அவன் கேட்ட கேள்வியில் அவனை இளக்காரமாய் பார்த்த இந்தர் “வேற என்ன பண்ணுவாங்க.. அதான் பார்த்தே இல்ல..? ரெண்டு பேருக்கும் கல்யாணமே முடிஞ்சிடுச்சு.. இனிமே நாங்க என்ன பண்ண முடியும்? கல்யாணம் பண்ணிக்கிட்டது என் அண்ணாவும் இவளோட அக்காவும்.. இதுக்கு அப்புறமா நாங்க எப்படி அவங்கள வேற கண்ணோட்டத்தில பார்க்க முடியும்? நீ பேசாம உன் வேலையை பாத்துட்டு போ.. நீ மதியழகி கிட்ட.. சாரி.. என் அண்ணி கிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்கு உன்னை அங்கேயே அடிச்சு கொன்னு இருப்பேன்.. ஆனா நீ எங்களுக்காக தான் வந்து எதோ சொல்லிட்டு இருந்தேன்னு உன்னை சும்மா விட்டுட்டேன்..”
அவன் சற்றே கோவமாய் பேசவும் “பேசி முடிச்சிட்டியா? நீ அடிக்கலன்னா என்ன..? அதுதான் உங்க அண்ணன் என்னை அடி பின்னி எடுத்து அந்த குறையை தீர்த்து வச்சிட்டானே.. இப்ப கூட அதனால தான் அவன் பார்வையில படாம ஒளிஞ்சு ஒளிஞ்சு உங்களை பார்க்க வந்தேன்.. உங்க அண்ணன் அக்கா இவங்க ரொம்ப உத்தமம் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க.. உங்களையும் வாழ விடாம அவங்களும் வாழாம எல்லார் வாழ்க்கையும் நாசம் பண்ணி வச்சிருக்காங்க.. ரெண்டு பேரும் உண்மையிலேயே விரும்பல.. சும்மா உங்க மனசை மாத்தறதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காங்க..”
மறுபடியும் ஏற்கனவே பாடிய பாட்டை அவன் மறு ஒலிபரப்பு செய்யவும் இருவருக்கும் எரிச்சல் மண்டியது அவன் பேச்சில்..
“ஓ அப்படியா? சரி.. அப்படியே இருக்கட்டும்.. நீ கிளம்பு..” குரலில் எரிச்சலோடு சொன்னான் இந்தர்..
மலரழகியோ அவன் பக்கம் திரும்பவே இல்லை.. வேறு பக்கம் பார்த்து சலிப்பான முக பாவனைகளை காட்டிக் கொண்டிருந்தாள்.. மொத்தமாய் அவனை அலட்சியப் படுத்திக் கொண்டிருந்தாள் அவள்..
“நான் இப்போ சொல்ல போற விஷயத்தை கேட்டீங்கன்னா உங்களுக்கு அவங்க எவ்ளோ துரோகம் செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு புரியும்..”
எப்படியும் எதையாவது சொல்லி அவர்கள் இருவரின் மனதை கலைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேச தொடங்கினான் அவன்..
எனக்கு நிச்சயமா தெரியும்.. மதியழகி தீரன் மாதிரி ஒரு ஆளை எந்த ஜென்மத்திலயும் விரும்ப மாட்டா.. அதனால அங்க ஹோட்டல்ல அவ சொன்னதுல நம்பிக்கை இல்லாம ஹோட்டலுக்கு வெளியே தான் காத்துக்கிட்டு இருந்தேன்.. தீரன் வண்டியில அவ போக போறான்னு தெரிஞ்சதும் அவன் வண்டி பின்னால ஃபாலோ பண்ணிக்கிட்டு போனேன்.. கொஞ்ச தூரம் அமைதியா போனவங்க ஒரு இடத்துல இறங்கி தனியா பேசினாங்க.. நானும் இறங்கி அவங்க என்ன பேசுறாங்கன்னு மறைஞ்சு நின்னு கேட்டேன்..” என்று கதை சொன்னவன் அவர்கள் பேசிய அத்தனை விஷயத்தையும் மொத்தமாய் இந்தரிடமும் மலரழகியிடமும் சொல்லி முடித்திருந்தான்..
“இப்ப புரியுதா? ரெண்டு பேரும் எவ்வளவு கேவலமான வேலை பண்ணி இருக்காங்கன்னு.. உங்க காதலை உங்களுக்கு கிடைக்க விடாம பண்ணறதுக்காக அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருக்காங்க.. அதுவும் பொய் கல்யாணம்.. அந்த பய சினிமாவுல் நடிக்கறவன் தானே.. அதான் சினிமா கல்யாணம் மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டான்.. ஒன்னு கேக்குறேன்.. இந்த மாதிரி ஒரு பொய் கல்யாணத்துக்காக நீங்க எதுக்கு உங்க காதலை விட்டுக் கொடுக்கணும்..? பேசாம அவங்க கல்யாணத்தை ஒரு பொருட்டாவே மதிக்காம நீங்க உங்க காதலை கண்டினியூ பண்ணுங்க..” அவன் மிகவும் சாதாரணமாக சொல்ல இந்தருக்கும் மலரழகிக்கும் அதைக் கேட்க கூட பிடிக்கவில்லை..
“அவங்க காதலிச்சாங்களோ இல்லையோ அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. காதலிக்கலைன்னாலும் இது ஒரு அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரி எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் ஒண்ணா வாழலாம் இல்ல..?”
இந்தர் சொன்னதைக் கேட்டு தலையை இடவலமாய் ஆட்டிய சேகர் “நிச்சயமா மாட்டாங்க.. ஏன்னா உங்க அண்ணனுக்கு தான் படிக்காதவன்.. மதியழகிக்கு பொருத்தமானவன் இல்லைன்கிற தாழ்வு மனப்பான்மையும் இருக்கு.. அது மட்டும் இல்லாம அவன் ஆஞ்சநேயர் மேல் வச்சிருக்கிற பக்தி உண்மையானது..அது மாறவே மாறாது.. அவன் அவனோட பிரம்மச்சரிய விரதத்தை எதுக்காகவும் மாத்திக்க மாட்டான்.. மதியழகி இந்த நாடகத்துக்கு அவனை சூஸ் பண்ணதுக்கு காரணமே கல்யாணத்துல ஈடுபாடு இல்லாதவன்கிறதுனாலதான்..”
அவன் சொன்னதைக் கேட்டு ஏனோ அவன் சொ
ல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றே தோன்றியது இருவருக்கும்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 31
சேகர் சொன்னதைக் கேட்டு ஏனோ அவன் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றே தோன்றியது இந்தர் மலர் இருவருக்கும்..
ஆனால் அப்படியும் கல்யாணம் முடிந்த பிறகு தாங்கள் என்ன செய்ய முடியும் என்ற யோசனை இருக்கவும் “இருந்தாலும் இப்ப கல்யாணம் ஆனப்புறம் நாங்க ஒன்னும் பண்ண முடியாது.. நீ இங்க வந்து பேசறதெல்லாம் வேஸ்ட்.. முதல்ல நீ அவங்க பேசுனதை ஒட்டு கேட்டதா சொல்றதே பொய்யோன்னு எனக்கு தோணுது.. நீ முதல்ல கிளம்பு” என்றாள் மலரழகி..
“உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலைன்னா நான் ஒன்னு சொல்றேன்.. ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் நிஜமாவே கல்யாணம் பண்ணிட்டதனால புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா நீங்க அவங்களை பத்தி நினைக்கவே வேண்டாம்.. ஆனா ஒருவேளை அந்த மாதிரி வாழ ஆரம்பிக்கலைன்னா அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை முழுக்க அவங்க பேசிக்கிட்ட மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருந்தாங்கன்னா.. உங்க அண்ணனோட ஃப்ரெண்டை நீ காதலிக்கிறதுல என்ன தப்பு..? அதே மாதிரி உங்க அக்காவோட ஃப்ரெண்ட்டை நீ லவ் பண்றதுல ஒரு பாதகமும் இல்லையே.. அவங்க கொஞ்ச நாளைக்கு அப்புறம் டிவோர்ஸ் பண்ணும் போது உங்க மனசு என்ன பாடு படும்னு யோசிங்க..”
“சரி.. அப்படியே அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழலனா அது எப்படி எங்களுக்கு தெரியும்?”
இந்தர் கேட்க “அதை தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கு.. இன்னிக்கு நைட் அவங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கும் இல்ல..? நீ வேணா அங்க போய் பாரு..” அவன் சொன்ன மறுநொடி அவன் கழுத்தை நெரித்து இருந்தான் இந்தர்..
“என்னடா நெனச்ச.? உன்னை மாதிரி நானும் கேடு கெட்டவன்னு நெனைச்சியா? சீ போ.. இங்க இருந்து..” என்று அவன் உறும மலரழகியோ “எனக்கு என்னவோ எங்க அக்கா நிம்மதியா இருக்கறது பிடிக்காம நீ எதோ சதி பண்றதுக்காக இதெல்லாம் சொல்றியோன்னு தோணுது.. அனாவசியமா எங்ககிட்டயும் அடி வாங்காம கிளம்பி போ..”
“நான் சொல்றதை சொல்லிட்டேன்.. கேட்கிறதும் கேட்காததும் உங்க இஷ்டம்.. தேவையில்லாம உங்களோட காதலையும் உங்க நல்ல வாழ்க்கையையும் இழக்கறீங்களோன்னு தோணுது.. எனக்கு தான் என் காதல் கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.. நீங்களாவது அதுக்கு முயற்சி பண்ணலாமேன்னு தான் நான் சொன்னேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..” சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் சென்று விட்டான்..
ஆனால் அவன் சொல்லிவிட்டு சென்ற விஷயங்கள் இருவர் மனதிலும் உறுத்திக் கொண்டே இருந்தது..
சேகர் போன பின் இந்தரும் மலரழகியும் வெளியே வரவும் அங்கே பாண்டியும் பார்கவியும் சேகரை வழிமறித்து ஏதோ விசாரணை நடத்தி கொண்டிருந்தார்கள்..
இந்த திருமணத்திற்கான நிகழ்வுகள் எல்லாவற்றிலுமே இருவருமே ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தார்கள்.. பின்னே..? தீரன்.. மதி.. இருவரும் இணைவதற்கான முக்கிய காரண கர்த்தா அவர்கள் தானே..
தங்களின் தம்பி தங்கையின் நல்வாழ்வுக்காக வேறு வழியின்றி நிர்பந்தத்திற்காக மட்டுமே மதியும் தீரனும் இந்த திருமண முடிவை எடுத்திருக்கிறார்களே தவிர அவர்களின் திருமணத்திற்கு காதலோ நேசமோ இப்படி எந்த காரணியும் அச்சாரம் இடவில்லை என்று அவர்களுக்கு மட்டும் தானே தெரியும்..
எதற்காக இருந்தாலும் அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அவர்களின் நலம் விரும்பிகளான இந்த தம்பதிக்கு பேருவகையையே தந்திருந்தது..
அந்த ஞாயிறன்று தீரன் பாண்டியை அழைத்து விஷயத்தை சொன்ன நொடியே அவன் முகம் பிரகாசமாய் விரிந்தது..
அவன் முகமலர்ச்சியை பார்த்த பார்கவி “என்னாச்சு சரவணா.. திடீர்னு இவ்ளோ சந்தோஷமா இருக்க?” ஆர்வத்த
“ஏய் பவி செல்லம்.. நான் சொல்லப் போற விஷயத்தை கேட்டா உன்னால நம்பவே முடியாது.. நம்ம தீரனுக்கும் மதிக்கும் கல்யாணம்..”
“என்ன சொல்ற சரவணா?” முகத்தில் ஆனந்தம் கொப்பளிக்க கேட்டவளை சந்தோஷத்தில் இழுத்து அணைத்து கொண்டான் சரவண பாண்டியன்..
“ஆமாம்டி.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கு.. தீரன் அந்த ஹோட்டலுக்கு போறேன்னு சொன்னான்ல அங்க நம்ம மதியும் போய் இருக்கா..”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பார்கவிக்கும் மதியிடம் இருந்து அழைப்பு வந்தது..
மதியை அவள் வீட்டில் இறக்கி விட்ட மறுநிமிடமே பாண்டிக்கு விஷயத்தை அழைத்து சொல்லி இருந்தான் தீரன்..
இப்போது மதியும் அழைக்கவும் அழைப்பை ஏற்ற பார்கவியிடமா உணவகத்தில் நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் மதி..
பார்கவிக்கோ தன் செவிகளை நம்பவே முடியவில்லை..
“திடீர்னு என்னடி இவ்ளோ பெரிய சேஞ்ச் உன்கிட்ட.. ஒருவேளை தீரா அண்ணனை நிஜமாவே நீ..”
அவளுக்கு ஏற்கனவே ஒருவேளை மதி தீரனை விரும்புகிறாளோ என்று சந்தேகம் இருக்கவும் இப்போது அந்த சந்தேகம் இன்னும் வலுக்க அவளை வாய் திறந்து கேட்டே விட்டிருந்தாள் பார்கவி..
மதியோ “இல்லடி.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அது என்னை தொல்லை பண்றது அவரோட தம்பின்னு தெரிஞ்சப்புறம் இந்த முடிவு என் மேல இந்தருக்கு இருக்குற நெனப்பை முழுசா அழிச்சிடும்கிற யோசனைல தான் இப்படி முடிவு எடுத்தேன்.. எப்படி நாங்க காதலிக்கிறதா நாடகம் போட்டோமோ அதே மாதிரி தான் இந்த கல்யாணமும்.. இதுவும் ஒரு நாடகம் தான்டி.. மலர் இந்தர் ரெண்டு பேரும் செட்டிலான பிறகு நாங்க இந்த கல்யாணத்துலருந்து லீகலா பிரிஞ்சுருவோம்.. மத்தவங்க கண்ணுக்கு நாங்க புருஷன் பொண்டாட்டி.. எங்களை பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ்.. அவ்வளவுதான்..”
அவள் சொன்னதைக் கேட்ட பார்கவிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.. இருவரையும் காதலர்களாக நடிக்க சொன்ன போது தீரனுக்கான மதியினுடைய எதிர் வினைகள் எல்லாமே மதி அவனை விரும்புகிறாளோ என்ற சந்தேகத்தை ஆழமாக பார்கவியினுள் விதைத்திருந்தது..
ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ என்று உள்ளுக்குள் கொஞ்சம் நப்பாசையோடு தான் அந்த கேள்வியை கேட்டிருந்தாள் அவள்.. ஆனால் அப்படி இல்லை என்று மதி சொல்லிவிடவும் அப்படியே புஸ் என்று ஆனது அவளுக்கு..
ஆனாலும் எதிர்காலத்தில் இருவர் இடையே இருக்கும் பிணைப்பு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று தோன்றவும் மதி தீரனின் இந்த நல்ல முடிவுக்காக சந்தோஷப்பட்டாள் பார்கவி..
பாண்டிக்கும் அதே நிலைதான்.. அதே எதிர்பார்ப்பு தான்.. எப்படியும் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அவனுக்கும் வலுவாக தோன்றியிருந்தது..
அதன் பிறகு இருவரும் அவர்களின் திருமண வேலைகளில் தீவிரமாகவே ஈடுபட்டிருந்தார்கள்.. அதுவும் அன்று காலை முதல் அந்த திருமணத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும்..
திருமணம் முடிந்து எல்லாவற்றையும் ஏறக்கட்டி ஒரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்ட வேளையில் அங்கே சேகரை பார்த்து இருவரும் திடுக்கிட்டார்கள்..
பார்கவி நேராக அவனிடம் சென்று “டேய்.. நீ எதுக்கு இங்க வந்த? அன்னைக்கு ஹோட்டல்ல செமையா வாங்கினியா? அப்ப கூட உனக்கு புத்தி வரலையா? மறுபடியும் இங்க என்ன குழப்பம் பண்ண வந்திருக்க..?”
அவர்கள் கேட்க “நான் ஒன்னும் குழப்பம் எல்லாம் பண்ண வரல.. உண்மையை சொல்ல தான் வந்தேன்.. ஏன்.. அந்த உண்மை உங்களுக்கும் தெரியும் தானே? நீங்க தானே அவங்க நாடகத்துக்கு எல்லாம் கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதிக் கொடுக்கறது..?”
சேகரின் பேச்சில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள் பார்கவி.. ஆனாலும் சளைக்காமல் தன் முகத்தில் இருந்த அந்த உணர்வுகளை அவனிடம் இருந்து மறைத்து “என்ன மிரட்டுறியா? நீ என்ன வேணா பண்ணிக்கோ.. ஆனா இந்த கல்யாணம் உண்மையான கல்யாணம் தான்..”
அவள் அடித்து சொல்ல அவனோ சத்தமாக சிரித்தான்..
“எது..? உண்மையான கல்யாணமா? இதோ உன் புருஷன்.. அந்த தீரன் பய எல்லாம் சினிமாவில நடிக்கிறவங்க தானே..? அப்போ இதையும் சினிமா கல்யாணம் மாதிரி தான் பண்ணி இருப்பாங்க.. எல்லாம் எனக்கு தெரியும்.. சும்மா என் கிட்ட நடிக்காதீங்க.. இப்ப கூட இதைதான் போய் அந்த இந்தர்கிட்டயும் மலரழகி கிட்டயும் சொல்லிட்டு வரேன்.. ஆனா ரெண்டும் சரியான ட்யூப்லைட்டா இருக்குங்க.. நான் சொன்னதை நம்பாம அவங்க அக்காவும் அண்ணாவும் அப்படியே உத்தமங்கன்னு ஏதோ பேசிட்டு இருக்காங்க.. ஆனா அவங்களுக்கு உண்மையை தெரியப்படுத்தாம விடமாட்டேன்.. நான் மறுபடி மறுபடி அவங்களை மீட் பண்ணி அவங்களுக்கு உண்மையை தெரிய வப்பேன்.. என்னை வேணாம்னு சொல்லி என் வாழ்க்கையையே அழிச்சிட்டு அவ மட்டும் நல்லா நிம்மதியா வாழ்வாளா?”
“நீ என்ன வேணா பண்ணிக்கோ.. நீ நல்லது செஞ்சா நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும்.. நீ அடுத்தவங்க குடியை கெடுக்கணும்னு யோசிக்கிற இல்ல? அந்த நினைப்பே உன்னை அழிக்கும்.. வா பவி.. இந்த மாதிரி ஒரு கேடு கெட்டவன் கிட்ட எல்லாம் பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்.. இவன் நம்மளோட இவ்ளோ டைம்க்கு வர்த்தே கிடையாது..” இப்படி சொல்லி பார்கவியின் கைப்பிடித்து அழைத்துச் சென்றான் பாண்டி..
சேகரும் தானே அங்கு வந்து அவ்வளவு பேசியும் எதுவும் நடக்காமல் போய்விட்டதே என்று ஏமாற்றத்தோடு அங்கு இருந்து வெளியேறினான்..
இதற்குள்ளாக பெண் மாப்பிள்ளை இருவரும் வீட்டுக்கு ஜோடியாக கிளம்ப அவர்கள் வண்டி அருகே நின்றிருந்தார்கள் அனைவரும்….
தீரன் மதியை பார்க்கும் பார்வையில் இந்தருக்கு அதீத காதல் தெரிய அவனால் சேகர் சொன்னது உண்மை என நம்பவே இயலவில்லை..
மலரழகியின் எண்ண ஓட்டமும் அப்படி தான் இருந்தது.. தீரனை போல் மதி அவனை வெளிப்படையாய் காதலாய் பார்க்கவில்லை என்றாலும் அவன் அவளை பார்க்காத போது அவனை ஆசையோடு பார்வையால் தீண்டியிருந்தாள் பெண் அவள்..
அவர்கள் கிளம்புவதை பார்த்துக் கொண்டே இருந்த மலர் அவர்கள் அருகில் வந்து “மாமா..” என்று ராகமாய் அழைக்க அந்த புதிய அழைப்பில் திடுக்கிட்டு அவளை திரும்பி பார்த்தான் தீரன்..
மதியோ அவளுடைய அழைப்பில் ஆச்சரியப்பட்டு போனாள்..
அதற்குள் தன் வியப்பிலிருந்து வெளி வந்த தீரன் “சொல்லு மலரு.. என்ன வேணும்..?” என்று கேட்க “ஏன் தீரா மாமா.. இவ்வளவு நாள் எங்க அக்கா எங்க கூட இருந்தா.. இப்ப இப்படி நீங்க எங்க அக்காவை எங்க கிட்டருந்து பிரிச்சு உங்க வீட்டுக்கு மொத்தமா கூட்டிட்டு போறீங்களே.. இப்ப அக்கா இல்லாம எங்க வீட்டுல நானும் அப்பாவும் மட்டும் இருக்க எவ்வளவு கஷ்டமா இருக்கும்..? ஒரு பேச்சுக்காவது என்னையும் எங்கப்பாவையும் உங்க வீட்டுக்கு வந்து எங்க அக்காவோட ஒரு பத்து நாள் தங்கி இருக்க சொன்னீங்களா?”
அவள் மாமனோடு மச்சினி என்ற உரிமையோடு சண்டையிட மதிக்கும் தீரனுக்கும் அவளுடைய அந்த மாற்றம் மிகவும் பிடித்திருந்தது.. ஆனால்
மதிக்கோ உள்ளுக்குள் அவள் நிஜமாகவே மாறிவிட்டாளா என்று சந்தேகம் உருத்தி கொண்டே இருந்தது..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 32
மலர் தன் மாமனிடம் உரிமையோடு அவன் வீட்டில் தங்க வேண்டும் என கேட்க “அதுக்கு என்ன? பத்து நாளில்லை.. எவ்வளவு நாள் வேணும்னாலும் உங்க மனசு நிறையற வரைக்கும் அங்க இருங்க.. இல்ல எங்க கூடவே வந்து நிரந்தரமா இருந்திருங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..”
அவன் சாதாரணமாய் சொல்லிவிட தமிழ்வாணனுக்கோ மிகவும் சங்கடமாகி போனது..
“ஏய் மலரு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? அவங்க வீட்ல அண்ணனும் தம்பியுமா ஒண்ணா இருக்காங்க.. பொண்ணு குடுத்துட்டு நம்மளும் அவங்க வீட்டுல போய் உட்கார முடியுமா? ஏதாவது ஏடாகூடமாவே பேசிக்கிட்டு.. மாப்பிள்ளை இந்த கிறுக்கி ஏதோ உளறிக்கிட்டு இருக்கா.. நீங்க மதியை கூப்பிட்டுக்கிட்டு கிளம்புங்க மாப்பிள்ளை..”
“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா.. மலர் சொல்றது சரிதான்.. ஒரே குடும்பமா ஆயிட்டோம் நாம.. எதுக்கு தனி தனியா இருக்கணும்..? எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்.. இப்பவே எங்களோட வந்து பத்து நாள் தங்குங்க.. பத்து நாளுக்கப்பறம் உங்க வீட்ல இருக்குற சாமான் எல்லாம் கொண்டு வந்து எங்க வீட்டிலேயே எங்களோட தங்கிக்கோங்க.. எங்க வீட்ல எங்க ரெண்டு பேர் ரூம் தவிர இன்னும் ரெண்டு ரூம் இருக்கு.. நீங்க தாராளமா வந்து தங்கிக்கலாம்.. நீங்க வந்து தங்கினா மதிக்கும் சந்தோஷமா இருக்கும்..”
மதியும் “ஆமாம்பா.. நீங்க எங்களோடயே வந்துடுங்க..” என்று அவனுக்கு ஒத்து ஊத மதியிடம் “ஒரு நிமிஷம் என்னோட வாம்மா..” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு தனியாக போய் “அம்மாடி.. அது எப்படிடா அந்த வீட்டுல உன் தங்கையையும் கூட்டிட்டு போய் வச்சிருக்க முடியும்..? அவங்க ரெண்டு பேரும் வயசு பிள்ளைங்க.. அவங்க சரியா இருந்தாலும் ஊர் என்ன பேசும் சொல்லு.. ஊர் வாய்க்கு அவலிட வேணாம்மா கண்ணு.. இது வேண்டாம்.. சொன்னா கேளு..”
ஆனால் மதியோ அவரிடம் “அப்பா தீரனை விட 20 மடங்கு அதிகமா நான் இந்தரை நம்பறேன்.. அவனால எந்த பிரச்னையும் வராது.. ஊர் பேசறதுக்கெல்லாம் பயந்தா அதுக்கெல்லாம் வரைமுறையே கிடையாதுப்பா.. அதை எல்லாம் கண்டுக்காதீங்க பா.. நம்மள பத்தி நமக்கு தெரியும்..” என்றவள் அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட காதில் வாங்காமல் தீரனிடம் சென்று “தீரா.. நம்ப அப்பாவையும் மலரையும் நம்மளோடயே கூட்டிட்டு போலாம்..” என்று சொல்ல தீரனும் தலையாட்டி தன் மாமனார் தோளில் கை போட்டு தன் வண்டிக்கு அழைத்துச் சென்றான்…
அதன் பிறகு தமிழ்வாணனை ஒரு வார்த்தை பேச விடவில்லை அவன்..
மதியழகியின் முகம் ரொம்பவும் பிரகாசமாக இருந்தது.. மலர் ந்த வீட்டுக்கு வந்து தங்கவேண்டும் என்று சொன்னது சிறு உறுத்தலை தந்திருந்தாலும் தீரனை அவள் மாமா என்று உறவு வைத்து அழைத்தது ஏனோ அவளுக்குள் ஒரு வித நிம்மதியை படர விட்டு இருந்தது..
மாமனாரை வண்டியின் கதவை திறந்து ஓட்டுனர் பக்கத்து இருக்கையில் அமர்த்தியவன் ஓட்டுநர் இருக்கைக்குச் சென்று தான் அமரப்போக அவனை வந்து தடுத்திருந்தான் இந்தர்..
தீரன் அவனை கேள்வியாய் பார்க்க “அண்ணா நீங்க போய் அண்ணியோட உக்காந்துக்கோங்க பின்னாடி.. நான் வண்டி ஓட்டுறேன்..”
இந்தர் அப்படி சொல்லவும் ஆச்சரியத்தில் மதி தீரன் இருவரும் விழி விரித்தார்கள்..
“என்ன அண்ணா பாக்குற? போண்ணா..” தீரன் கையில் இருந்து வண்டி சாவியை வாங்கியபடி சொன்னான் அவன்..
பின் இருக்கையில் மதியோடு வந்து அமர்ந்தான் தீரன்.. வண்டியின் பின்னால் திருமணத்திற்கு எடுத்து வந்த சாமான்களை நிறைத்திருக்க அங்கு இருவர் மட்டுமே அமர இடம் இருந்தது..
அங்கே தீரனின் அத்தையும் மலரழகியும் இருவரும் ஏற்கனவே இடுக்கிக் கொண்டு அமர்ந்திருக்க பார்கவிக்கும் பாண்டிக்கும் அமர இடமில்லாமல் முன்னே வந்தார்கள்.. மதியை பார்த்து “மதி வண்டியில இடம் இல்லை.. நாங்க வேணா ஆட்டோ பிடிச்சு வந்துடறோம்.. நீங்க கிளம்புங்க..” என்றாள்..
மதிக்கோ அவளை எப்படி விட்டு செல்வது தர்ம சங்கடமாய் இருந்தது.. கல்யாண வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தவர்களை இடமில்லை என்று சொல்லி கோவிலிலேயே விட்டு செல்ல என்னவோ போல இருக்க தீரன் பக்கம் திரும்பி பார்த்தாள் அவள்..
அவனும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்க அந்நேரம் தமிழ்வாணன் “அது எதுக்கு மா இன்னொரு ஆட்டோ புடிச்சு வரணும்? ரெண்டு பேரும் மதியும் மாப்பிள்ளையும் உட்கார்ந்து இருக்கிற சீட்லயே ரெண்டு பக்கம் ஏறி உக்காந்துக்கோங்க.. இதோ ஒரு அரை மணி நேரத்துல வீட்டுக்கு போயிரலாம்..” என்றார்..
அவர் சொன்னதைக் கேட்டு தீரனையும் மதியையும் பார்த்து தலையை ஒருவிதமாய் ஆட்டியபடி “அதுவும் சரிதான்.. சரவணா.. நீ அந்த பக்கம் போய் அண்ணன் பக்கத்துல உக்காந்துக்கோ.. நான் மதி பக்கத்துல உட்காருறேன்.. அப்படியே கொஞ்சம் இடுக்கிக்கிட்டு அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா ஒக்காந்தாங்கன்னா நாமளும் அட்ஜஸ்ட் பண்ணி இந்த வண்டிலயே போகலாம்..”
யாருக்கும் தெரியாமல் பாண்டியை பார்த்து கண்ணடித்தப்படி அவள் சொல்ல மதி அவளை பார்த்து முறைத்தாள்..
அவளோ அதை கண்டு கொள்ளாமல் தன் இதழுக்குள் தோன்றிய சிரிப்பை மறைத்துக் கொண்டு சொன்னபடி வண்டிக்குள் ஏறி அமர்ந்தாள்..
அந்தப் பக்கம் பாண்டி தீரனை நெருக்கிக் கொண்டு அமர இந்த பக்கம் பார்கவி மதியழகியை தீரன் பக்கம் தள்ளியபடி அமரவும் சட்டென அவள் தள்ளியதில் நிலை தடுமாறி தீரன் மேல் விழுந்தாள் மதி..
அவன் மார்பில் அவள் சாய்ந்து இருக்க தீரனும் எதிர்பாராமல் ஏதோ ஒரு பூக்குவியல் தன்மேல் விழுந்தது போல் ஒரு நொடி மலர்ந்து போனவன் அடுத்த நொடி தங்களையே எல்லோரும் பார்வையால் அளைந்து கொண்டு இருப்பதை பார்த்து மதியின் தோள்களை பற்றி அவளை நேராக அமர வைத்தான்..
அப்போது அவள் காந்த விழியை அவன் விழிகள் சந்தித்து விட அவளோ அந்த பார்வையிலும் நெருக்கத்திலும் சங்கடமாய் நெளிந்த படி அவன் பார்வையை சந்திக்க முடியாமல் விழி தாழ்த்தினாள்..
பாண்டி அவன் பக்க கார் கதவை மூடுவதற்காக தீரன் பக்கம் சாய இப்போது தீரனின் தோள் மதியின் தோளில் மோத அவளோ வலியில் “ஸ்ஸ்ஸ்..” என முனகினாள்..
“என்னடா பண்ற?” தீரன் பல்லை கடித்துக் கொண்டு பாண்டியை கேட்க “என்ன பண்றேன்.. கார் கதவை சாத்த முடியல.. அதான் கொஞ்சம் தள்ளி உக்காந்தேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படுற?” என்று கேட்க மதி பக்கம் திரும்பிய தீரன் “சாரி மதி..” என்க வண்டி கிளம்பவும் இருவரின் தோள்களும் மேலும் மேலும் இடித்துக் கொண்டே இருக்க இருவருக்குமே வசதியாக அமர முடியாமல் ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது..
சட்டென தீரன் மதி பக்கம் இருந்த தன் கையை எடுத்து மதியின் தலையின் பின்னால் கொண்டு போய் சீட்டின் மேல் வைக்க அவளுடைய வலப்பக்கம் முழுவதுமாய் அவன் மார்போடு உரச அதில் சிலிர்த்து போனவள் நிமிர்ந்து அவனை ஏறிட்டு பார்க்க இருவரின் கண்களும் அவர்களின் அனுமதி இல்லாமலேயே கலந்து காதல் பேசிக்கொள்ள தொடங்கின..
வண்டி வீடு வந்து சேர்ந்ததும் வரவேற்பறையில் எப்போதும் இருப்பது போல் ஒரு அமைதியும் இறுக்கமும் தனிமையும் இல்லாமல் மாறாக கலகலவென்று இருந்தது.. தீரனின் அத்தையோடு சேர்ந்து ஆறு பேரும் அங்கே அமர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்திருக்க தீரனுக்கு ஏதோ வெகு நாளைக்கு பிறகு தனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைத்ததாய் ஒரு நிறைவு தோன்றியது..
அந்த நிறைவு தந்த மகிழ்ச்சியில் மதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் தன்னையும் அறியாமல் அவள் தோளை சுற்றி அணைத்தாற் போல் யதார்த்தமாய் கை வைக்க அவளோ அந்த திடீர் தீண்டலில் சற்று திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தாள்..
அவனோ அவள் தோளை சுற்றி அவளை அணைத்தபடி பல நாட்களாய் உண்மையாகவே அவளை விரும்பி திருமணம் செய்தவன் போல் சகஜமாக இயல்பாக அமர்ந்து அந்த பிரக்ஞையே இல்லாமல் மற்றவர்களோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தான்..
ஆனால் வெகு நேரமாய் மதி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்ற சட்டென திரும்பி அவள் முகம் பார்த்தவன் அப்போதுதான் தன் கை அவள் தோளில் இருக்க அவள் அவஸ்தையாய் நெளிந்து கொண்டு அமர்ந்திருப்பதை உணர்ந்தான்..
அடுத்த நொடி பதறிப் போய் தன் கையை அவள் தோளில் இருந்து விலக்கினான்.. அங்கு சுற்றி அமர்ந்திருப்பவர்களை பார்வையாலேயே அவள் காட்ட புரிந்து கொண்டு அவளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டான்..
அவன் ஒரு தோழனாய் தான் தன்னை தோளணைத்திருப்பான் என்றாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவனின் அந்த அணைப்பு கேலிக்கு இடமளித்துவிடும் என்று எண்ணி கொண்டிருந்தாள் பேதை அவள்.. ஆனால் அவன் பார்வையில் காதல் பொங்கி வழிந்ததை அங்கிருந்த மற்ற அனைவருமே கண்டு கொண்டிருந்தார்கள்..
இப்படியே அந்த நாள் கழிந்து விட கதிரவன் மறைந்து நிலாமகள் முகத்தை காட்டினாள்.. மாலையிலேயே பாண்டிக்கு ஏதோ படபிடிப்பு இருக்கிறது என்று அவன் சரி சென்று விட பார்கவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவும் அவளும் பாண்டியோடு வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்..
தீரனின் அத்தை இந்தரையும் மலரழகியையும் அழைத்து தீரன் மதியின் முதலிரவு அறையை அலங்காரம் செய்ய சொல்ல இருவரும் அதிர்ந்து போய் ஒரே சமயத்தில் கோரசாக “நாங்களா..?” என்று அலறிக் கொண்டு ஒருவரை ஒருவர் விழி விரித்து பார்த்துக் கொண்டார்கள்..
“அக்கா ரூமை டெக்கரேட் பண்ணனுமா? அதுவும் இவனோடயா? என்னாலல்லாம் முடியாது..”
பட்டென மலர் சொல்லிவிட அதைக் கேட்டவன் அவளை தீவிரமாய் முறைத்தபடி “ஓய்.. என்ன கொழுப்பா? உனக்கு பண்ண இஷ்டம் இல்லனா இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டு போ.. அது என்ன? என்னோட பண்றதுக்கு அவ்வளவு யோசனை? அப்படி என்ன செஞ்சுட்டேன் நானு.. இல்ல அந்த ரூமை உன்கூட வந்து டெக்கரேட் பண்ணா அப்படி என்ன செஞ்சிடுவேன் உன்னை நான்..?”
அவன் புருவம் உயர்த்தி அவளை கேட்க அவளோ அவசரப்பட்டு ஏதும் உளறி விட்டோமோ என்று ஒரு நொடி யோசித்தவள் அடுத்த கணமே இயல்பான ஒரு கல்லூரி பெண்ணின் துடுக்குத்தனம் வெளிவர குரலை தழைத்து அவன் காது அருகில் குனிந்தவள்
“நான் சொன்னதுல என்ன தப்பு? நீ இப்பதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கே.. அதுவும் எங்க அக்கா மாதிரி உன்னை விட அவளோ வயசானவங்களை லவ் பண்றேன்னு சொல்லி பின்னாடி சுத்துனவன் தானே நீ? அது மட்டும் இல்ல.. அன்னைக்கு நான் ஒரு ஃப்ரெண்டோட பீச்சுக்கு வந்து இருந்தேன் இல்ல? அவ கூட சொல்லி இருக்கா.. உன்னை நிறைய பொண்ணுங்களோட பார்த்து இருக்கான்னு.. அதை எல்லாம் கேட்ட அப்புறமும் நான் எப்படி அதுவும் ஃபர்ஸ்ட் நைட் ரூமை உன்னோட சேர்ந்து டெகரேட் பண்ண முடியும்? அங்க என்கிட்ட ஏதாவது நீ தப்பா நடந்துகிட்டா நான் என்ன செய்யறது?”
“அடியேய் ஒழுக்க சிகாமணி.. அடக்கி வாசிடி.. எங்க அத்தைக்கு இங்க நடந்த ஒரு விஷயமும் தெரியாது.. அவங்க காதுல தப்பி தவறி ஏதாவது என்னை பத்தியோ அண்ணா பத்தியோ தப்பா ஒரு விஷயம் விழுந்துது பெரிய ப்ரளயமே வந்துரும்டி இந்த வீட்ல..”
பல்லை கடித்துக் கொண்டு அவள் கையைப் பிடித்து அழுத்தி சொன்னான் அவன்..
🎵🎶🎼இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது
பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி
மறைத்தது
தானாக பூத்து
வருகுது
தேடாமல் தேடி
கிடைத்தது
இங்கே
இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய
தாங்காமலும்
தூங்காமலும்
நாள் செல்லுதே.
இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….
அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்..
என் நெஞ்சமோ
உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத
தோற்றம்
இது நிரந்தரம்
அல்ல
மாறிவிடும் மன
நிலை தான்..
மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உறவுகள்
திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
தேகம் இப்போது
உணர்ந்தது
தென்றல் என்
மீது படர்ந்தது
மோகம்
முன்னேறி வருகுது
முன்னே..🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 33
மலரோடு தீவிரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த இந்தர் அவனுடைய அத்தையின் குரல் கேட்டு அவர் பக்கம் திரும்பினான்..
“என்ன பிள்ளைங்களா.. நான் இங்க அந்த ரூமை டெக்கரேட் பண்ண சொல்லி உங்க ரெண்டு பேரையும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ரெண்டு பேரும் என்னவோ நான் ஏதோ மலையை திருப்புங்க.. வானத்தை வளைச்சு போடுங்கன்னு பெரிய வேலை சொன்ன மாதிரி நாங்களா பண்ணனும்னு கேக்குறீங்க? அந்த வேலை சொன்னாலும் இந்த இளவயசுல செய்ய தயாரா இருக்கணும் நீங்க.. ஹான்.. இந்த காலத்து புள்ளைங்க எங்க.. பார்க்க அழகா அலங்காரம் பண்ணிக்கிறீங்களே தவிர உள்ள ஒரு சத்தும் இல்ல? நம்ம தீரனை பாரு.. அவன் தான் நம்ம வீட்டு பிள்ளை.. அப்படியே உங்க தாத்தா மாதிரி கம்பீரமா கட்டுமஸ்தானமா சும்மா கிண்ணுனு இருக்கான் பாரு புள்ள.. நீயும் இருக்கியே..”
அவர் கூறியதை கேட்டு மலர் “ஏன் பாட்டி.. இந்தர்க்கு என்ன? நல்லா தானே இருக்கான்.. இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல பாருங்க.. மாமா மாதிரியே அவனும் நல்லா ஆயிடுவான்..” என்றாள்..
அவள் சொன்னதை கேட்டவன் பெருமையாய் காலரை தூக்க அவன் அருகே குனிந்து ரகசியமாய் “ரொம்ப சீன் போடாதடா.. உன்னோட லுக்ஸ் பத்தி மட்டும் தான் நான் சொன்னேன்.. அதுக்காக உன்னையே நீ அப்படியே மாமா மாதிரின்னு நினைச்சுக்காத.. உன்னால எல்லாம் குணத்துல மாமா கிட்ட கூட நெருங்க முடியாது.. மாமா எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பாக்காத பக்கா ஜென்டில்மேன்.. ஆனா நீ..? ஹி..ஹி.. அதை வேற எதுக்கு நான் என் வாயால சொல்லிக்கிட்டு..”
எல்லா பல்லையும் காட்டி இளித்து அவனுக்கு அழகு காட்டியபடி அவள் சொல்ல “அடிப்பாவி கிராதகி.. உயரத்துல கொண்டு போய் நிக்க வெக்கற மாதிரி பெருமையா பேசிட்டு அடுத்த செகன்டே அங்கே இருந்து அதல பாதாளத்துல போட்டுட்டியேடி.. இதுக்கு நீ என்னை பத்தி பெருமையா பேசாமயே இருந்திருக்கலாம்” என்றான் அவன் சலிப்பான குரலில்..
“அப்பப்ப என்னவோ ரெண்டு பேரும் கிசுகிசுன்னு பேசிகிட்டு இருக்கீங்க.. என்ன இது..? இந்த காலத்து வயசு பிள்ளைகளே இப்படித்தான் இருக்கீங்க..”
இந்தர் இதற்கு மேல் அத்தையை பேச விட்டால் பூமி தாங்காது என்று எண்ணி “அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை.. அது எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற டேஸ்டா..? ரூம் டெக்கரேட் பண்றதுக்கு ஐடியா ஒத்து போகணும் இல்ல.? அதுக்கு தான் நான் சொல்றபடி தான் ரூமை டெக்கரேட் பண்ணனும்னு நான் சொல்லிட்டு இருந்தேன்.. அவ சொல்றபடி தான் டெகரேட் பண்ணனும்னு அவ சொல்லிட்டு இருந்தா.. அதான் பேசிகிட்டு இருந்தோம்.. வேற ஒன்னும் இல்ல.. நாங்களானு கேட்டது வேற யாராவது வெளியில் இருந்து ஆளுங்க வந்து பண்ணுவாங்கன்னு நினைச்சு தான் அப்படி கேட்டோம்..” ஏதேதோ சொல்லி சமாளித்தான் அவன்..
“இல்லப்பா.. அது தீரனை கேட்டப்போ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டான்.. ஆனாலும் புதுசா கல்யாணம் ஆனவங்களை அப்படி எந்த அலங்காரமும் இல்லாத ரூம்க்கு முதல் நாள் அனுப்ப முடியாது இல்ல..? அதான்.. நீங்கதான் வயசு பிள்ளைங்களா இருக்கீங்க.. நான் வயசானவ.. நான் என்ன செய்ய முடியும்..? சொல்லு.. அதான் உங்க ரெண்டு பேரையும் பண்ண சொன்னேன்..”
“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க அத்தை.. உங்களுக்கு என்ன..? நைட்டுக்குள்ள ரூம் டெக்கரேட் ஆகி இருக்கணும்.. அவ்வளவுதானே..? அந்த ரூமை அழகா டெக்கரேட் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு.. நீங்க இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க.. ரூம் சூப்பரா பக்காவா டெக்கரேட் ஆகியிருக்கும்..”
“அப்படின்னா சரிப்பா.. நான் முதல்ல அந்த பாண்டியும்.. அவன் சம்சாரம்.. அந்த பொண்ணு பேரு என்ன?”
“பவி அக்காவா..?”
“ஹான்.. பார்கவி.. அந்த பொண்ணையும் பண்ண சொல்லலாம்னு தான் நினைச்சேன்.. எனக்கு அவ்வளவு தூரம் அவங்களை எல்லாம் பழக்கம் இல்லை.. அது மட்டும் இல்லாம அந்த புள்ள வேற சாயந்தரம் ரொம்ப உடம்பு முடியாம இருந்துச்சு.. அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க.. நீ நம்ம வீட்டு பிள்ளை.. அதான் உன் கிட்ட சுலபமா கேட்டுட்டேன்.. உங்களால ஒன்னா செய்ய முடியலன்னா யாராவது ஒருத்தராவது ரூமை அலங்காரம் பண்ணிடுங்க.. மறந்துடாதீங்க.. அந்த ரூமுக்கு வேண்டிய பூவெல்லாம் இனிமேதான் கடையிலிருந்து வாங்கிட்டு வரணும்.. நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வந்து பண்ணிருவீங்களா?”
அத்தை கேட்க யோசனையுடனேயே நாலா பக்கமும் தலையை ஆட்டினான் இந்தர்..
அத்தை அங்கிருந்து நகர்ந்த பிறகு அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மலர் அழகியை பார்த்தவன் “என்ன முறைக்கிற? இப்ப என்ன.. என்னோட கடைக்கு வரியா..? இல்ல நானே போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டான்..
“உன்னை நம்பி தனியா அனுப்புறதுககு யோசனையா தான் இருக்கு.. எங்க அக்கா தன்னோட வாழ்க்கையை தொடங்க போற ரூம்.. அது நல்லபடியா அழகா டெகரேட் ஆகி இருக்கணும்.. நீ ஏதாவது சொதப்பி வச்சிட்டனா..? எனக்கு என்னவோ உன் டேஸ்ட் அவ்வளவு நல்லா இருக்கும்னு தோணல.. இரு.. நானும் வரேன்..” என்றவள்
உள்ளே சென்று வேறு இயல்பான உடையை மாற்றிக்கொண்டு வர புடவையில் அவ்வளவு நேரம் சிலை போல வலம் வந்தவள் திடீரென ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் போனி டெய்ல் என ஐந்தே நிமிடங்களில் உரு மாறி வரவும் அவளைக் கண்டு அரண்டு போனான் அவன்..
“என்னடி..? உள்ள அப்படியே குடும்ப குத்து விளக்கு மாதிரி போன..? வெளியே வரும் போது ஏதோ ரிவால்வர் ரீட்டா மாதிரி வர..? எப்படி டி இது..?”
அவன் ஆச்சரியமாய் புருவம் உயர்த்தி கேட்க “ப்ச்.. அதெல்லாம் அப்படித்தான்.. ஹலோ.. நானும் காலேஜ் தான் படிக்கிறேன்.. நாங்க எல்லாம் ஒரு நாளைக்கு 10 காஸ்ட்யூம் கூட சேஞ்ச் பண்ணுவோம்.. அதுக்கு ஏத்த மாதிரி ஹேர் ஸ்டைல் ஜுவல்லரி எல்லாமே பக்காவா இருக்கும்.. என்னை என்ன நெனச்ச நீ? இப்படி நீ ஆன்னு பாக்கறதுல இருந்தே தெரியுது உன்னோட டேஸ்ட் எவ்வளவு கேவலமா இருக்கும்னு..” அவள் அலட்சியமாய் முகத்தை திருப்பி உதட்டை சுழித்து சொல்ல அவனுக்கோ அவள் பேச்சில் கோபம் மூண்டது..
அவள் பேசியதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக “அது சரி.. அப்படியே உங்க அக்காக்கு நேர்மாறா இருப்ப போல.. அண்ணியை பார்க்கும்போதெல்லாம் அவங்க எப்படி டிரஸ் பண்ணி இருந்தாலும் கை எடுத்து கும்பிடணும் போல தான் தோணும்.. அவங்க மேல பார்த்த ஒரே நிமிஷத்துல மதிப்பும் மரியாதையும் வரும்.. நான் அப்படி அவங்க கிட்ட நடந்துக்க காரணம் கூட அவங்க பாக்க எங்க அம்மா மாதிரியே இருந்தாங்க.. அதனாலதான்.. எங்க அம்மா மாதிரி எனக்கு ஒரு லைஃப் பார்ட்னர் கிடைக்கணும்னு நினைச்சேன்.. மே பி அது தான் என்னை அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு அடம் பிடிக்க வச்சதுன்னு நெனைக்கிறேன்.. எங்க அம்மா இருந்த இடத்துல அவங்களுக்கு பதிலா என் கூடயே அண்ணி இருக்கணும்னு நினைச்சேன்.. அதை எப்படி பண்றதுன்னு தெரியாம தான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அது நடக்கும்னு நான் அவங்ககிட்ட அப்படி நடந்துகிட்டேன்.. ஆனா இப்ப அவங்க அண்ணியா எனக்கு வந்தது எனக்கு சந்தோஷம் தான்.. எப்படியோ எங்க அம்மா மாதிரியே ஒருத்தங்க என் வீட்ல என்னை பார்த்துக்க வந்துட்டாங்க.. அது போதும் எனக்கு..”
அவன் சொல்லிவிட்டு நிறுத்த அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு தன் அக்காளை நினைத்து பெருமையாக இருந்தாலும் தன்னை பற்றி அவன் ஏதோ கிண்டலாய் பேசுவது போல் தோன்ற இடுப்பில் கைவைத்து “எங்க அக்காவை பாத்தா அப்படியே கையெடுத்து கும்பிடணும் போல இருக்குன்னா எங்களை பார்த்தா எப்படி இருக்குது..?”
அவள் கேட்ட அடுத்த நொடி யோசிக்காமல் “ம்ம்.. கண்ணடிச்சு என் கேர்ள் ஃப்ரெண்டா வரியானு கேக்கணும் போல இருக்குது..” அவன் பட்டென சொல்லிவிட அவள் முறைக்கவும் தான் தான் என்ன சொல்லி விட்டோம் என எண்ணி பார்த்து நாக்கை கடித்துக் கொண்டான் அவன்..
“இருக்கும் இருக்கும்.. என் ஃப்ரெண்டு உமா கரெக்டா தான் சொன்னா.. கொஞ்சம் கொஞ்சமா உன்னை பத்தி அவ சொன்னது கரெக்ட் தான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டே இருக்கே நீ..”
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே அதை நம்பி இப்படி ரியாக்ட் பண்றே.. உன்னை எல்லாம் பார்த்து கேர்ள் ஃப்ரெண்டுன்னு சொல்லி எவனாவது வான்டடா ஒரு புதைகுழில சிக்கிக்குவானா? அது தனக்கு தானே சூனியம் வெச்சுக்கறது மாதிரி.. உன்னை மாதிரி அராத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைக்கிறது தான் எப்பவுமே நல்லது.. எங்கேயாவது ஒரு பொண்ணா அடக்கமா இருக்கியா? எப்ப பாரு எகிறி எகிறி பேசிகிட்டு ஏதாவது ஏடாகூடமா செஞ்சுகிட்டு சரியான கிறுக்கி டி நீ..'”
“ஓ நாங்க அராத்தா? கிறுக்கியா? இருடா.. இனிமே இந்த அராத்தை அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கும் இல்ல..? நெஜமாவே ஒரு கிறுக்கி என்னெல்லாம் பண்ணுவான்னு உனக்கு லைவ் டெமோ காட்டுறேன்.. வாடா வா.. இப்ப முதல்ல போய் பூ வாங்கிட்டு வரலாம்..”
இருவரும் கிளம்பி முதல் இரவு அறைக்கு அலங்காரம் செய்ய பூ வாங்க சென்றார்கள்.. அந்த பூக்கடைக்காரர் ஒரு நிலையில் அழுது புலம்பிய படி தலையை பிடித்து கொண்டு தளர்ந்து அமர்ந்து விட்டார் அவர்கள் இருவரும் செய்த அக்கப்போரில்..
இந்தர்: உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்..
மலர்: என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்..
“அம்மாடி.. கடைய மூடணும்மா.. எந்த பூவை வாங்க போறீங்கன்னு தயவு செஞ்சு ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாங்க.. உங்க ரெண்டு பேரோட மாத்தி மாத்தி பேசி பேசி எனக்கு வாய் வலியே வந்துருச்சு..” புலம்பி தள்ளினார் அந்த பூக்கடைக்காரர்..
இந்தரும் மலரழகியும் அவரைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..
இந்தர்: ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கேன்..
மலர்: தங்க பாப்பா நானு
தகர டப்பா பையன் நீயு
தங்க பஷ்பம் நானு
துரு பிடித்த கம்பி நீயு
இந்தர்: உன் வீட்டு கண்ணாடி
ரொம்ப பாவமடி
மலர் : போடா
இந்தர்: வாய் விட்டு கதருதடி
பாதரசம் பின்னாடி
மலர்: என் பின்னால் அலையிறியே
நீ என்ன மானம் கெட்டவனா
இந்தர்: என் உயிரை எடுக்குறியே
நீ என்ன வெட்கம் கெட்டவளா
மலர்: தினம் திங்கிற சோத்துலதான்
நீ உப்பே போடலையா
இந்தர்: ஹே அதிகம் பேசாதே
உன் மண்டைய பொளந்திடுவேன்
இந்தர்: ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே
மலர் : அந்த இடம் கோவிந்தா தான்..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது..!! – 34
“நான் தான் சொல்றேன் இல்ல..? ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரோஸ் வாங்குனா தான் நல்லா இருக்கும்.. ரெட் ரோஸ் தான் எல்லாரும் வாங்கி டெக்கரேட் பண்ணுவாங்க.. நான் சொல்றதை கேளுடா..”
“உனக்கு ஒண்ணுமே தெரியலடி.. இப்பல்லாம் ரெட் ரோஸோட அதிகமா வேற கலர் ஃபிளவர்ஸ் தான் யூஸ் பண்றாங்க.. லைட் பர்ப்பிள் அப்புறம் பிங்க் கலர் ரோஸஸ் இதெல்லாம் யூஸ் பண்ணா கண்ணுக்கு மைல்டா இதமா இருக்கும்.. நீ என்னடான்னா நல்ல ப்ரைட்டா ரெட் கலர்ல.. எல்லோ கலர்ல.. எல்லாம் பூ வாங்கலாம்னு சொல்றே.. கொஞ்சமாவது அறிவு இருக்கா டி உனக்கு.. நீயும் உன் டேஸ்ட்டும்..”
“ஏய்.. என் பேரே மலரழகி.. எனக்கு பூ எப்படி வாங்கணும்னு நீ சொல்லி குடுக்கறியா?”
“அது தான்டி எனக்கும் ஆச்சரியமா இருக்கு.. உனக்கு போய் மலரழகின்னு இப்படி ஒரு மென்மையான பேரை எப்படி வச்சாஙகன்னு.. அதுக்கு ஆப்போசிட்டா பாராங்கல்லழகி இல்லனா மொரட்டு அழகினு உனக்கு பேர் வச்சு இருக்கணும்.. பூங்கறது எவ்வளவு சாஃப்டான விஷயம்.. போயும் போயும் உன்னை மாதிரி ஒரு ஆளுக்கு அந்த பேரை வச்சிருக்காங்க பாரு.. அந்த பேரை உனக்கு வச்சவங்களுக்கு அப்ப ஏதாவது மூளை குழம்பி இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஏதாவது ஒரு விஷயம் நீ சாஃப்டா அந்த மாதிரி டீல் பண்ணி இருக்கியா? எப்பவும் அதிரடியா தான் எதையும் பண்ற? உன் பேருக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு மூலையிலயாவது உங்கிட்ட மென்மை நளினம் இப்படி ஏதாவது ஒண்ணு இருக்கா..? எங்க அண்ணன் கிட்ட நீ அவரை லவ் பண்றேன்னு சொல்லும் போது கூட உன் முகத்தில ஒரு சின்ன வெட்கம் தயக்கம்னு எதோட ரேகையும் கிடையாது.. ஏதோ கடையில போய் ஐஸ்க்ரீம் வாங்கும்போது எனக்கு இந்த ஃபிளேவர் தான் புடிச்சிருக்குன்னு சொல்லி வாங்கிக்கிற மாதிரி தானே எங்க அண்ணனையும் புடிச்சி இருக்குன்னு சொன்னே.. நான் நினைக்கிறேன்.. கடவுள் முதல்ல உன்னை ஆம்பளையா படைக்கணும்னு தான் நினைச்சு இருப்பாரு.. நமக்கெல்லாம் டைப்போ எரர் வர மாதிரி அவருக்கும் உன்னை படைக்கும் போது ஏதோ டைப்போ எரர் வந்திருச்சு போல..”
அவன் சொன்னதைக் கேட்டு அவனை தீவிரமாய் முறைத்த மலர் “டேய் ரொம்ப பேசுற டா நீ.. இதுக்கெல்லாம் நீ ரொம்ப வருத்தப்படுவ..”
இருவரும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருக்க அந்த கடையின் பூ வியாபாரியோ தலையை பிடித்துக் கொண்டு அப்படியே தன் இருப்பிடத்திலேயே அமர்ந்துவிட்டார்..
எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாரோ தெரியவில்லை.. எவ்வளவு நேரம் ஆகியும் இவர்கள் சண்டை முடியாது தொடர பொறுமை இழந்தவர் அவர்கள் இருவர் அருகே வந்து “இப்ப என்ன..? பேசாம கடையை உங்க கிட்டயே கொடுத்துட்டு போயிடவா? நீங்களே ஒரு வழியா முடிவு செஞ்சு பூவை எடுத்துட்டு மூடிட்டு போயிடுறீங்களா?” என்று கேட்டவர் வேகவேகமாய் ஒரு கூடை இந்தர் சொன்ன பூக்களையும் ஒரு கூடை மலர் சொன்ன பூக்களையும் கொண்டு வந்து கடைக்கு வெளியே வைத்துவிட்டு கடையின் கதவை மூடி பூட்டிவிட்டு அவர்கள் பக்கம் திரும்பினார்..
“தம்பி.. எனக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு.. இதுக்கு மேல லேட்டா போனா என் பொண்டாட்டி என்னை வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டா.. நீ நம்ப தீராவோட தம்பி தானே..? நீ இந்த ரெண்டு பூக்கூடையையும் எடுத்துட்டு போ.. ரெண்டு பூக்கூடைக்கும் நாளைக்கு காலைல நான் வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டார் அவர்..
மலரழகியும் இந்தரும் ஒருவரை ஒருவர் முறைத்த படி அவர் வைத்திருந்த கூடையில் அவரவருக்கு பிடித்த மலர்கள் அடங்கிய கூடையை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்கள்..
காரின் பின் இருக்கையில் அந்த பூ கூடைகளை வைத்துவிட்டு முன் இருக்கையில் மலர் ஏறி அமர அவளை முறைத்த படி வண்டி ஏறி வீட்டுக்கு ஓட்டி சென்றான் இந்தர்..
இரண்டு பேரும் வீட்டுக்குள் வந்தவர்கள் இரண்டு கூடைகளையும் எடுத்துக்கொண்டு மாடியிலே இருந்த தீரனின் அறைக்கு சென்று அங்கே ஒரு மேஜையில் இரண்டு கூடைகளையும் எதிர் எதிர் புறமாய் வைத்தார்கள்..
அங்கே வந்ததும் கட்டிலில் பூவை எப்படி நிறைக்க வேண்டும் என்பதில் மறுபடியும் இருவருக்கும் பிரச்சனை தொடங்கியது..
(அடங்கொக்கமக்கா நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு முடிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும் போலயே.. அப்புறம் எங்கடா தீரனுக்கும் மதிக்கும் ஃபர்ஸ்ட் நைட்டு நடக்கறது..?)
இந்தர் கட்டிலில் அவர்கள் இருவரின் பெயரையும் பூக்களாலேயே எழுத வேண்டும் என்று சொல்ல மலர் அழகியோ கட்டிலில் பூக்களால் இருதயம் வரைந்து அம்புக்குறி போட வேண்டும் என்று சொல்ல பத்து நிமிட வாக்குவாதத்திற்கு பிறகு ஒரு வழியாக இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்..
இருவரின் பெயரையும் மேலும் கீழுமாய் பூக்களால் எழுதி அதற்கு நடுவில் இருதயத்தில் அம்புக்குறி போல பூக்களால் வரைந்து விடலாம் என்று முடிவுக்கு வந்து அப்படியே செய்து கொண்டு இருந்தார்கள்..
பூக்களை அடுக்கும்போது எதேச்சையாக இருவர் கையும் மற்றவர் மேல் பட ஒருவரை ஒருவர் முறைத்தபடியே ஒரு வழியாக கட்டிலை அழகாக அலங்கரித்து முடித்து இருந்தார்கள் இருவரும்..
இந்தர் தேர்வு செய்த வெளிர் நிற பூக்களும் மலரழகி தேர்வு செய்த அடர் நிற பூக்களும் மாறி மாறி வரிசையாய் மாலையாய் பின்னலாய் என விதவிதமாய் அடுக்கப்பட்டு அலங்கரித்து இருக்க அந்த பூக்களின் அலங்காரம் அந்த கட்டிலையும் அந்த அறையையுமே ஏதோ இயற்கை எழில் கொஞ்சும் கனவு லோகம் போல் காட்சி அளிக்க வைத்தது..
இருவருக்கும் அறையைப் பார்த்து திருப்தி ஏற்பட ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டவர்கள் கண்கள் ஒரு நொடி அடுத்தவரை மெச்சினாலும் அடுத்த நொடியே அவர்களின் இறுமாப்பு அதை தொடர்ந்து செய்ய விடாமல் புருவம் உயர்த்தி எகத்தாளமாய் பார்க்க வைத்தது..
இருவரும் முகத்தை வெட்டியபடி அறையை விட்டு வெளியேறி சென்று இருந்தார்கள்..
பின்னிரவில் தீரன் அறைக்கு ஏற்கனவே சென்று இருக்க மதியிடம் பால் சொம்பை கொடுத்து அழைத்துக் கொண்டு போய் அறை வாசலில் விட்டு வந்திருந்தார் தீரனின் அத்தை..
அறை கதவை மெல்ல திறந்து உள்ளே சென்ற மதி அங்கே தீரன் கட்டிலில் கைகட்டி தலையணையில் சாய்ந்து அமர்ந்திருக்க அவனை கவனிக்காது அந்த கட்டிலிலும் அறையிலும் செய்திருந்த அலங்காரத்தையே பிரமிப்போடு பார்த்திருந்தாள்.. அந்த அறையே அவளுக்கு தேவலோகமாய் காட்சி அளித்தது..
“வா.. மதி.. உள்ள வா..” என்று தீரன் அவளை அழைக்கவும் தான் அவள் அவன் புறம் திரும்பினாள்..
“என்ன அப்படி பார்க்கிற.. ஓ… இந்த அலங்காரம்லாம் பார்த்தப்போ எனக்கும் ஆச்சரியமா தான் இருந்தது.. வீட்ல அத்தை வயசானவங்க.. அவங்களை தவிர வீட்ல இந்தரும் மலரும் தான் இருக்காங்க.. இந்த அலங்காரம் எல்லாம் யார் பண்ணாங்கன்னு தெரியல.. அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தான் பண்ணி இருக்கணும்.. நானும் உள்ள வரும்போது இந்த அலங்காரத்தை பார்த்துட்டு அப்படியே மெர்சல்..” என்றவன் நாக்கை கடித்துக் கொண்டு “சாரி.. தவறி போய் பழைய பாஷை வந்திடுச்சு.. இந்த அலங்காரத்தை பார்ந்து அப்படியே ஆச்சரியப்பட்டு போயிட்டேன்.. அதை தான் அப்படி சொன்னேன்” தன்னை தானே திருத்திக் கொண்டான் தீரன்..
“ஐயோ.. இங்க பாருங்க தீரா.. நீங்க பேசும்போது தப்பி தவறி அந்த மாதிரி பேசிட்டீங்கன்னா பரவாயில்லை.. அதுக்காக ஃபீல் பண்ண வேண்டாம்.. நீங்க பேசறதை மாத்தவும் வேணாம்.. இட்ஸ் ஓகே.. நீங்க எப்பவும் கன்டினியூசா அந்த மாதிரி பேசும் போது தான் எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.. ஒன்னு ரெண்டு வார்த்தை நடுவுல அந்த மாதிரி வந்துச்சுன்னா பரவால்ல.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல”
அவள் சொன்னதை கேட்டவன் மனதார புன்னகைத்து “ரொம்ப தேங்க்ஸ் மதி.. ஆனா ரொம்ப நாளா என் தம்பி கூட சொல்லிக்கிட்டு இருக்கான் இந்த பாஷையை மாத்திக்க சொல்லி.. அவன் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் பேசும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்குன்னு சொல்லி இருக்கான்.. அவன் தப்பா நினைக்கலனாலும் அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் கிண்டல் பண்றாங்க போல இருக்கு.. அதனால இவனுக்கு கோவம் வந்துருது.. என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கான்.. என்னை யாரு தப்பா பேசினாலும் பொறுத்துக்க மாட்டான்.. ஸ்டன்ட் மாஸ்டர் தம்பி வேற இல்லையா? உடனே அடிதடின்னூ இறங்கிடறான்.. அதனால நானே என் பாஷையை மாத்திக்கணும்னு தான் நினைச்சேன்.. இப்போ நீங்களும் சொல்லவும் இதுதான் வாய்ப்புன்னு மாத்திக்கிட்டேன்..”
“சரி.. எவ்வளவு நேரம் தான் அங்கேயே நின்னுக்கிட்டு இருப்பீங்க? உள்ள வாங்க..”
அவளும் மெல்ல மெல்ல உள்ளே நகர்ந்து சென்று மேஜையில் பாலை வைத்துவிட்டு அதன் பக்கத்திலேயே நின்று கொண்டாள்..
“ப்ளீஸ் உட்காருங்க மதி.. நான் என்ன ஸ்கூல் மாஸ்டரா? வெறும் ஸ்டன்ட் மாஸ்டர் தான்.. எனக்கு எல்லாம் இவ்வளவு மரியாதை குடுக்க தேவை இல்லை.. உட்காருங்க மதி..” என்க மதியும் அவனுக்கு எதிர்ப்புறமாய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..
கட்டிலின் ஒரு பக்கத்தில் அவனும் இன்னொரு பக்கத்தில் அவளும் அமர்ந்திருக்க அவன் மேலே பேச்சை ஆரம்பித்தான்..
“இங்க பாருங்க மதி.. நமக்குள்ள இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப்ல நான் எப்பவுமே எல்லை தாண்ட மாட்டேன்.. இந்த ரூம்ல நம்ம ரெண்டு பேரும் எதுவரைக்கும் ஒண்ணா இருக்கமோ அது வரைக்கும் ஃப்ரெண்ட்ஸா மட்டும் தான் இருப்போம்.. அதனால கவலைப்படாம நிம்மதியா தூங்குங்க.. நான் இந்த தலகாணி போர்வையை எடுத்துக்கினு” என்றவன் தொண்டையை செருமி “ம்க்கும்.. சாரி.. எடுத்துக்கிட்டு கீழே படுத்துக்கிறேன்..” என்று சொன்னவன் தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டு தரையில் விரித்து படுத்த அடுத்த நொடி நிம்மதியாக உறங்கி இருந்தான்..
அவனின் நிம்மதியான உறக்கத்தை அவன் சீரான மூச்சு பறை சாற்றிக் கொண்டிருந்தது..
அவளும் குளியலறை சென்று உடைமாற்றி வரலாம் என்று எழுந்தவள் அப்போதுதான் தன் உடைகள் அடங்கிய பையை அந்த அறைக்கு கொண்டு வரவே இல்லை என்று நினைவு கொண்டாள்..
மெதுவாக நகர்ந்து போய் சத்தம் எழுப்பாமல் கதவில் மெல்ல தாழ்ப்பாளை நீக்கி வெளியே போனவள் அங்கே ஏதோ சந்தை கடை போல் சலசலவென கீழே வரவேற்பறையில் சத்தம் கேட்க கீழே எட்டிப் பார்த்தாள்.. அங்கே இந்தரும் மலரழகியும் ஏதோ தீவிரமாய் வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்க பதட்டமாக கீழே இறங்கி ஓடினாள் மதி..
🎼🎶🎵மனசுக்குள்
ஒரு புயல் மையம்
கொண்டதே
அதன்
பெயர்தான் என்ன..?
புயலுக்கு காதல் என்று
பேர் சொல்கின்றாய்
அடுத்த
நிலைதான் என்ன..?
இந்தப் புயல்
இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன
ஆகும்..?
என்னென்ன ஆகும்..?
பூகம்பம் நேரும்.. பூவில்
பூகம்பம் நேரும்..
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
எனக்கென்று பெயரில்லை
அன்பே
என் உடலில்லை
இங்கே
என் உயிரில்லை
உயிரே
என்ன புதுமை அட
தூக்கம் என் இடக் கண்ணில்
கனா என் வலக் கண்ணில்
நிஜமா..?
மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று திரும்புதல்
போல உன் மடியில்
சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன் மடி வாழ்க
மேற்கில்
போன பறவை ஒன்று
மே மாதத்தில் எனக்கொரு
கன்னிப் பெண் வருமென்று
காதில் பண் பாடிவிட்டுச்
சென்றது
என்ன வியப்பு
அந்தப் பாடல்
பண் தேயும்
முன்னே
கண்ணே என்
கண்கள் உன்னைக்
கண்டது
பருவத்திலே ஒரு
முறை பூத்தேன்
பார்த்ததிலே
மறுமுறை பூத்தேன்
உன் மார்பின்
மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான்
வாழ்ந்திட வேண்டும்..🎼🎶🎵
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 35
“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க..?” கேட்டுக்கொண்டே கீழே இருந்த வரவேற்பறைக்கு வந்தாள் மதி..
“அக்கா.. பாரு அக்கா இவனை.. அப்பாவும் நானும் கீழே இருக்கிற இந்த ரூம்ல படுத்துக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா கீழ ஒரு பெட்ரூம் தான் இருக்கு… தீரா மாமாவோட அத்தையும் இருக்காங்கல்ல..? இந்தர் ரூம் மாடியில இருக்குல்ல? அங்க கூட்டிட்டு போய் அவனோட ரூம்ல இன்னைக்கு ஒரு நாள் அவங்க படுத்துக்கட்டும்னு சொன்னா என் ரூம்ல யாருக்கும் இடம் கொடுக்க முடியாதுன்னு அடம் பிடிக்கிறான் கா..” புகார் பெட்டியாய் மாறி இருந்தாள் மலர்..
“திடீர்னு அவன் ரூமுக்குள்ள இன்னொருத்தர் வந்து படுக்கிறதுன்னா அவனுக்கும் கஷ்டமா தானடா இருக்கும்? மலர்.. நான் சொல்றதை கேளு.. இந்த ரூம்ல நீயும் அவங்க அத்தையும் படுத்துக்கோங்க.. இன்னிக்கு ஒரு நாள் அப்பா ஹால்ல சோஃபால படுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கட்டும்..”
அதற்கு மேல் சண்டை வேண்டாம் என்றெண்ணி அவள் அதை தீர்வாய் சொல்லிவிட அதே நேரம் இந்தர் நிமிர்ந்து பார்க்க மாடியில் அவர்கள் அறை வாசலில் தீரன் நின்று கொண்டு இந்தரை தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
தன் குடும்பத்தினரால் இந்தருக்கு எந்த ஒரு தொந்தரவும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் சொல்ல அடுத்த நொடியே இந்தர் “இல்ல அண்ணி.. நானே சோஃபால படுத்துக்கிறேன்.. அத்தை என் ரூம்ல படுக்கட்டும்.. நீங்க அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..”
இப்படி சொல்லிவிட்டு அவன் மறுபடியும் மேல் நோக்கி தன் அண்ணனை பார்க்க அவன் பார்வை சென்ற திசையை கவனித்த மதி தானும் நிமிர்ந்து பார்த்தாள்..
அங்கு தீரனை கண்டதும் “இவர் எழுந்து வந்துட்டாரா? சத்தம் போடாம தானே கதவை திறந்தேன்?” என்று எண்ணியவள் “சரி.. நீ இன்னைக்கு படுத்துக்கோ.. நாளைக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கலாம்..”
மலர் அழகி பக்கம் திரும்பி “மலர்..” என்று அவள் அழைக்க மலரழகியின் முகம் அந்த அழைப்பில் வாடித்தான் போனது..
தன்னை அழகி என்று மட்டுமே அழைத்து கொண்டிருந்த தன் சகோதரி தீரன் விஷயம் தெரிந்த அன்றிலிருந்து இப்படி அழைப்பதும் அதற்கு அவள் கூறிய காரணமும் இப்போது மலரழகியின் மனத்தில் தோன்றி அது ஆழமாய் அவளுக்குள் தீராத காயத்தை ஏற்படுத்தியது..
மறுபடியும் தன் அக்காளை பழையபடி தன்னை அழகி என்று அழைக்க வைக்க வேண்டும் என மனதிற்குள் கங்கணம் கட்டி கொண்டாள் அவள்..
அவளின் முகமாற்றத்தை கவனித்த மதி “என்ன மலர்.. என்ன அப்படி ஒரு தீவிரமான யோசனை உனக்கு?” அவளை கூர்ந்து பார்த்தபடி விசாரித்தாள்..
“ஒன்னும் இல்லக்கா..” என்று சொல்லி அமைதியாக அவள் தலை குனிந்து நின்றிட சிறு வயதில் இருந்து அவளுக்கு தாயாய் இருந்து வளர்த்தவளுக்கு அவள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை..
“உன்னை அழகின்னு கூப்பிடாம மலர்ன்னு கூப்பிடுறது எனக்கும் ஒன்னும் சந்தோஷமா இல்ல மலர்.. ஆனா நீ செஞ்ச தப்பு என் வளர்ப்பை என்னை சந்தேகப்பட வெச்சுடுச்சு.. மறுபடியும் என் வளர்ப்பு தப்பா போகலைன்னு எனக்கு நம்பிக்கை வர்ற வரைக்கும் உன்னை அப்படி கூப்பிடனும்னு எனக்கு தோணாது.. அந்த நம்பிக்கையை வர வைக்க வேண்டியது இப்ப உன் கைல தான் இருக்கு..”
மதி உறுதியான குரலில் சொல்லிவிட மலருக்கு தன் அன்பு சகோதரி தன் மீது கோபம் இருந்தாலும் தன்னை நிரூபிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள் என்பது மகிழ்ச்சியையே தந்தது..
இவர்களின் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்த இந்தருக்கும் உள்ளுக்குள் வேதனை அவன் நெஞ்சை அறுக்க ஆரம்பித்தது.. தானும் தன் அண்ணனுக்கு இதே போன்ற ஒரு துயரை தானே பரிசளித்திருக்கிறோம்.. என்ற எண்ணம் நடு மண்டையில் அவனை ஓங்கி அடித்தது போன்ற வலியை அவனுக்கு கொடுத்தது..
கீழிருந்து தன் அண்ணனை மேல் நோக்கி பார்த்தவன் அப்படியே அந்தப் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டான்..
மலரழகி தனக்கு தன் உடன்பிறந்தவள் கொடுத்த அந்த சிறு நம்பிக்கைக்கு பதிலாக “நிச்சயமா கூடிய சீக்கிரம் உன்னை அழகின்னு கூப்பிட வெப்பேன்கா..” என்று உறுதியான குரலில் கூறவும் அவள் தோளில் தட்டி “ம்ம்ம்.. நானும் நம்பறேன் டி.. நீ என்னை அப்படி கூப்பிட வெப்பன்னு.. சரி.. இப்ப நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்… என்னோட டிரஸ் எல்லாம் இருந்த பேக்கை நீதானே எடுத்துட்டு வந்த?”
அவள் கேட்டு முடிக்கும் முன் “என்ன கா என்கிட்ட வந்து கேட்டுகிட்டு இருக்க? அதை அப்பவே மாமா என்கிட்ட இருந்து வாங்கிட்டு போய் அவர் ரூம்ல வச்சுக்கிட்டாரேக்கா..”
அவள் சொன்னதை கேட்டு அப்படியே திரும்பி தீரனை பார்த்தவளிடம் “நான் சாயங்காலமே உங்க..” என்றவன் சுற்றி நின்றவர்களை பார்த்தவுடன் தன் தவறை உணர்ந்து தொண்டையை செறுமி கண்ணை மூடி திறந்து “உன் பேக்கை எடுத்துட்டு வந்து இங்க நம்ம ரூம்ல இருக்கற வார்ட் ரோப்ல உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டேன் மதி… சரி நீ வா.. இந்தர் சோஃபால படுத்துக்குவான்..”என்றவன் இந்தரை பார்த்து “என்னடா.. நீ படுத்துகிறியா? இல்லை அத்தையை மதியோட என் ரூம்ல படுக்க சொல்லிட்டு நான் வந்து படுக்கவா சோஃபால..?”
தீரன் கேட்ட கேள்வியில் இந்தர் பதறி போய் “ஐயோ அண்ணா.. நீங்க எதுக்கு அண்ணா.. அதுவும் இன்னைக்கு..? தெரியாம முதல்ல சண்டை போட்டுட்டேன்.. சாரி.. இனிமே சண்டை போட மாட்டேன்.. இவங்க எல்லாம் இங்க இருக்கற வரைக்கும் நான் சோஃபாலயே படுத்துக்கறேன்..” சடாரென பக்கத்திலிருந்த மெத்திருக்கையில் எதிர்பக்கமாய் திரும்பி கவிழ்ந்து படுத்து கொண்டான் இந்தர்..
மதிக்கோ அவன் செய்ததைப் பார்த்து சிரிப்பு வர உதட்டுக்குள் அதை அடக்கி கொண்டவள் திரும்பி மலர் அழகியை பார்த்து முறைக்க “நான் அப்பவே ரூம்க்கு போய் படுத்துட்டேன்கா.. குட் நைட்..” என்று அவசரமாய் சொல்லியபடி தன் அறைக்குள் ஓடி சென்றுவிட்டாள்..
இப்போது தீரன் மேலிருந்து வாய் விட்டே சிரித்தான் பெரிதாக.. அவனின் சிரிப்பொலி கேட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்த மதியழகி அவனுடைய சிரித்த முகத்தின் அழகில் ஒரு நொடி மெய் மறந்து தான் போனாள்..
கண்ணகற்றாமல் அவனையே அவள் ஆழ்ந்து பார்த்திருக்க ஒரு நொடி அவளின் அந்த அகலாத ஆழ்ந்த பார்வையில் ஆடவன் அவனுக்கும் அழகாய் வெட்கம் பூக்க வேறு பக்கம் தலையை திருப்பி புன்னகைத்துக் கொண்டான்..
அவளோ அவனின் அழகான வெட்கத்தையும் ரசித்தவள் புன்னகைத்த படி தன் விழியை தாழ்த்திக் கொள்ள அதன் பிறகுதான் தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பது பற்றியே யோசித்தாள்..
“ஐயையோ.. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்..? இப்படி கண்ணு கொட்டாம பார்த்து வெச்சிருக்கேன் அவரை.. அவரு என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாரு.. சே.. மதி.. வர வர உனக்கு விவஸ்தையே இல்லாம போயிட்டு இருக்கு..” என்று தன்னை தானே கடிந்துக் கொண்டவள் வேக வேகமாய் மாடிப்படி ஏறி தீரனின் அறை வாசலுக்கு சென்றாள்..
அங்கு நின்றவன் அறையின் வாயிலை கையால் காண்பித்து அவளை உள்ளே போகுமாறு ஜாடை செய்ய அவளும் மெல்ல அறையினுள் நுழைந்தாள்..
“சாரி மதி..” அறைக்குள் வந்தவுடன் சொன்னவனை கேள்வியாக பார்த்தாள் மதி..
“எதுக்கு தீரா?”
“இல்ல.. உங்க டிரஸ் எல்லாம் நான் எடுத்துட்டு வந்தது உங்களுக்கு ஒரு வேளை பிடிக்கலையோ என்னவோ? ஆனா மத்தவங்க நமக்குள்ள ஒரு நல்ல பிணைப்பு இருக்குன்னு நினைக்கணும்ங்கறதுக்காக தான் அப்படி பண்ணேன்.. தப்பா நினைச்சுக்காதீங்க மதி..”
அவன் சொன்னதைக் கேட்டவள் “ஐயோ.. இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க செஞ்சது கரெக்ட் தான்.. நான் ஒன்னும் தப்பா நினைக்கல.. நீங்க நிம்மதியா படுத்து தூங்குங்க.. அப்புறம் இன்னொரு விஷயம்.. மறுபடியும் நான் சொல்றேன்.. என்னை நீங்க வாங்க போங்கன்னு மரியாதை குடுத்து கூப்பிடாதீங்க.. நீ வா போனே சொல்லுங்க.. ஏன்னா இங்க ரூமுக்குள்ள நீங்க அப்படி கூப்பிடுறதுனால தான் வெளியில போனாலும் உங்களுக்கு அப்படியே பேச தோணுது.. நான் உங்களை விட வயசுல சின்னவ தான்.. நீங்க என்னை ஒருமையில கூப்பிட்டா தப்பு கிடையாது..”
“ஓகே மதி.. நீங்க.. சாரி.. நீ சொல்ற படியே கூப்பிடுறேன்..”
அவன் அப்படி சொன்னதும் அழகாய் புன்னகைத்து அவன் அறையில் இருந்த அலமாரியை திறந்து அதனுள் தன் உடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து விழிகளை விரித்தாள் அவள்.. ஆடைகளை நேர்த்தியாக மடிப்பு கலையாமல் அழகாய் அடுக்கி வைத்திருந்தான் அவன்..
தன் ஆடைகளை அவன் கைகளால் தொட்டெடுத்து அந்த அலமாரியில் அடுக்கி இருக்கிறான் என்ற நினைவே அவளுக்குள் ஒரு சொல்லில் அடங்காத சிலிர்ப்பான உணர்வையும் நாணத்தையும் ஒருங்கே உண்டாக்கியது..
தான் மாற்ற வேண்டிய உடைகளை கையில் எடுத்துக் கொண்டவள் அந்த அழகான நினைவுகளோடு வெட்கப்பட்டுக் கொண்டே அலமாரியின் கதவை மூட தன் படுக்கைக்கு மிக அருகில் அவள் நின்று கொண்டிருக்க அவள் நகர்வதற்காக காத்திருந்த தீரன் அவள் முகத்தில் தோன்றி கொண்டிருந்த அழகான உணர்வு மாறுதல்களை ரசித்துக்கொண்டு அவளையே உருத்து பார்த்தபடி நின்று இருந்தான்..
அதைப் பார்த்தவள் ஒரு நொடி ஒரு இனிமையான பதட்டத்தின் உச்சிக்கே போயிருந்தாள்..
தன் பதட்டத்தை மறைக்க அவசர அவசரமாய் தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் மதி..
அவளின் அழகான பதட்டத்தை கண்டவனுக்கோ உள்ளுக்குள் ஏதேதோ தோன்ற தன் கேசத்தை வேகமாய் முன்னிருந்து பின் பக்கமாய் கோதி கொண்டு “அய்யோ தீரா.. நீ இன்னிக்கு தூங்குன மாதிரி தான்டா..” என்று சொல்லிக் கொண்டே தரையில் தான் விரித்திருந்த படுக்கையில் விட்டத்தை பார்த்தபடி படுத்தவன் இதழில் அவ்வப்போது ஒரு மென் சிரிப்பு வந்து வந்து போனது..
மதிக்கும் இதே நிலைதான்.. உடை மாற்றி வந்து கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் கண்ணை எட்டவே இல்லை..
எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் இருவரும் உறங்கி இருக்க எப்போதும் போல காலை 4 மணிக்கு எல்லாம் மதிக்கு விழிப்பு தட்டியது..
கண் விழித்தவள் எழுந்து தீரன் படுத்திருந்த இடத்தை பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்..
அவனைப் பார்த்து புன்னகைத்தவள் தன் போர்வையை மடித்து தலையணை படுக்கையை சீர் செய்தாள்..
குளியல் அறைக்கு தன் உடைகளை எடுத்துக் கொண்டு செல்ல எண்ணியவளுக்கு அது அலமாரியில் இருக்கிறது என்ற நினைவு வர அப்போதுதான் அந்த அலமாரியின் பக்கத்தில் தீரன் படுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தாள்..
உடை எடுக்கப் போனால் அவனை எழுப்ப வேண்டி இருக்குமே என்று குளியலறை சென்று தன் காலை கடன்களை மட்டும் முடித்துவிட்டு வெளியே வந்தவள் அப்படியே கட்டிலில் அமர்ந்து அவன் எழுவதற்காக காத்திருந்தாள்..
🎵🎶🎼யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில்
என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை
இல்லை
ஊமை ஆகின்றதோ
மனம் மனம்
எங்கிலும் ஏதோ
கனம் கனம்
ஆனதே
தினம் தினம்
ஞாபகம் வந்து
ரணம் ரணம்
தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமோ இனி
சேர்வோமா..
மிக மிகக் கூர்மையாய்
என்னை
ரசித்தது உன்
கண்கள்தான்
மிருதுவாய் பேசியே
என்னுள்
வசித்தது உன்
வாா்த்தை தான்
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா ..
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும்
வெறும் கானலா..🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 36
மதியினுடைய அசைவுகளின் அரவம் கேட்டு லேசாக கண் விழித்து பார்த்த தீரன் அவள் அமர்ந்திருந்த விதத்தை கண்டு “எழுந்துட்டீங்களா மதி..?” என்றவனை அவள் முறைக்கவும் அப்போதுதான் என்ன கேட்டோம் என்பதை உணர்ந்து சட்டென ஒருமைக்கு மாறினான்..
“சாரி சாரி.. என்ன நீ..? இவ்வளவு சீக்கிரம் எழும்பிட்டே..?”
“நான் எப்பவும் நாலு மணிக்கு எழுந்திருவேன்.. இன்னிக்கும் அதே மாதிரி நாலு மணிக்கு எல்லாம் முழிப்பு தட்டிருச்சு.. எல்லாருக்கும் காலைல சமைச்சு கொடுத்துட்டு அப்புறம் காலேஜ் கிளம்பனும் இல்ல? அதான் சீக்கிரம் எழும்பிடுவேன்..”
அவள் சொன்னது அவனுக்கும் புரிந்தது.. தன்னையும் தன் தம்பியையும் போல அவர்கள் சென்ற இடத்தில் எதையாவது சாப்பிட்டு ஏனோதானோ என்று வாழ்பவர்கள் கிடையாது என்பது அவனுக்கு தெரியும் தானே?..
“சரி.. போய் குளிச்சிட்டு கிளம்புறது தானே? எதுக்கு இப்படி உக்காந்து இருக்கே? அப்புறம் உனக்கு நேரம் ஆகிட போகுது..”
அவன் அக்கறையோடு கேட்க “அது.. ஷெல்ஃபை திறந்து டிரஸ் எடுக்கணும்.. நீங்க அதுக்கு கீழ படுத்திட்டு இருந்தீங்க.. அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு..”
அவள் சொன்ன பிறகு தான் அவன் உறக்கத்திலிருந்து எழுவதற்காக அவள் காத்திருந்திருக்கிறாள் என்பதே அவனுக்கு புரிந்தது..
“ஓஹ்.. சாரி மதி..” என்று சொல்லி வேகமாக எழுந்து தன் படுக்கையை சுருட்டி மூலையில் வைத்தவன் “நீ டிரஸ் எடுத்துட்டு குளிக்க போ.. நான் கீழ இருக்கிற காமன் பாத்ரூம்ல குளிச்சுக்குறேன்” என்றான்..
தலையாட்டி “தேங்க்யூ..” என்றவள் தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்..
குளித்துவிட்டு வெளியே வந்தவள் நேர்த்தியாய் எப்போதும் போல புடவை உடுத்திக் கொண்டு காலையில் வேலை செய்வதற்கு ஏதுவாக தலைமுடியை தூக்கி முடித்துக் கொண்டு கீழே வர அங்கே சமையல் அறையில் யாரோ ஏதோ செய்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கவும் அதன் உள்ளே சென்று எட்டி பார்த்தாள்..
அங்கே தீரன் ஏற்கனவே இருவருக்கும் காபி கலக்கும் வேலையில் இறங்கி இருந்தான்..
“ஐயோ.. நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? நீங்க தள்ளுங்க.. நான் காஃபி கலக்குறேன்..”
தன் புடவை முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு உள்ளே வந்தவளை பார்த்தவன் “கவலைப்படாத.. இந்த வேலை எல்லாம் எனக்கும் பழக்கம் தான்.. என் தம்பிக்கு இத்தனை நாளா நான் தான் லீவு நாள்ல சமைச்சு கொடுத்துட்டு இருக்கேன்.. ஒரு அளவுக்கு சமைக்க தெரியும்.. இனிமே நீ தனியா இதை எல்லாம் பண்ண வேண்டாம்.. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் வேலையை பார்க்கலாம்..”
அவன் சொன்னதை கேட்டவளுக்கு எவ்வளவு அற்புதமான மனிதன் அவன் என்று தோன்றியது.. எத்தனை பேர் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் என்று நினைப்பார்கள்.. ஏன் இவ்வளவு பாசமாக இருக்கும் அவள் தந்தை கூட சமையல் வேலையில் உதவி எல்லாம் செய்யமாட்டாரே..
அவனுக்குள் இப்படி ஒரு அழகான புரிதல் நிறைந்த ஆண்மகனை கண்டவள் அவனை திருமணம் செய்து கொண்டதற்காக அந்நேரம் உள்ளுக்குள் ஆனந்தப்பட்டாள்..
ஆனால் அடுத்த கணமே அவள் எண்ணம் வேறுவிதமாய் பயணித்து அவளுக்கு வேதனையை கொடுத்திருந்தது..
இது ஒன்றும் நிஜமான திருமணம் இல்லையே.. தம்பி தங்கைக்காக செய்து கொண்ட ஒரு நாடகத் திருமணம் தானே.. அவர்கள் வாழ்க்கை சரியான பாதையில் சென்றவுடன் இந்த திருமணத்திலிருந்து இருவருமே விடுபட்டு விடுவோமே..
அந்த நினைவு அவளுக்குள் பெரு வலியை தந்தது.. ஆனால் அடுத்த நொடியே திருமண பந்தம் இல்லை ஆயினும்.. அவனுக்கு மனைவியாக அவளால் வாழ்நாள் முழுதும் இருக்க முடியவில்லை எனினும்.. அவனுடைய தோழியாய் இருக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததையே தன் வாழ்வின் சிறந்த பொக்கிஷ நிகழ்வாய் தன் மனதில் வைத்து கொண்டாட தொடங்கினாள் அவள்..
அப்படியே யோசனையில் இருந்தவள் முன் தீரன் காபி கோப்பையை கொண்டு வந்து நீட்டி “காஃபி எடுத்துக்கோ மதி.. வா.. ரெண்டு பேரும் அங்க டேபிள்ல உட்கார்ந்து கொஞ்சம் நிதானமா மஜாவா காபி குட்ச்சிட்டு அதுக்கு அப்புறம் வேலை பண்ணலாம்..” என்க காபி கோப்பையை கையில் வாங்கினாள் அவள்..
அவன் என்னதான் மதிக்காக மிகவும் சிரமப்பட்டு சென்னை பாஷையின் சாயல் தன் பேச்சில் வராமல் பார்த்துக் கொண்டாலும் எப்போதாவது அவன் பேச்சில் அது எட்டிப் பார்ப்பதை உணர்ந்தவள் ஒரு சின்ன புன்னகையோடு தன் கையில் இருந்த காபியை குடித்துக்கொண்டிருந்தாள்..
அவன் தனக்காக எவ்வளவு மெனக்கெடுகிறான் என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது.. அவனுக்கு இப்படி ஒரு சிரமத்தை கொடுப்பதற்கு காரணமாய் தன் தங்கை இருந்து விட்டாளே என்று ஒரு சிறு வருத்தமும் முதலில் இருந்தது அவளுள்..
இப்போதும் சில நேரங்களில் அவனை இயல்பாக சென்னை தமிழிலேயே பேச சொல்லி விடலாமா என்று அவள் யோசித்தது உண்டு.. ஆனால் ஒவ்வொரு நாளும் அவனோடு நேரம் செலவிட செலவிட அவள் எண்ணத்தில் பெரிய மாற்றமே வந்திருந்தது.. இப்போதெல்லாம் தங்கை மீது பெரிய அளவில் கோவம் கூட இல்லை அவளுக்கு..
அவள் இப்படி ஒரு ஏடாகூட வேலையை செய்ய போக தானே தீரன் போன்ற ஒரு அழகான அற்புதமான மனிதனோடு பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது.. அந்த எண்ணமே விட்டால் மலரழகி செய்த அறியா தவறுக்காக அவளிடம் நன்றி சொல்லிவிடும் அளவுக்கு அவள் மனதை தலைகீழாய் மாற்றி இருந்தது..
தான் எந்த மாதிரி கணவனை அடைய வேண்டும் என கனவும் கற்பனையும் கண்டு வைத்திருந்தாளோ.. படிப்பு வேலை இதை தவிர மற்ற விஷயங்களில் கிட்டத்தட்ட தீரன் அவளுக்கான கணவனின் இலக்கணத்தை முழுமையாக பெற்றிருந்தான்..
கொஞ்சம் கொஞ்சமாக அவனை.. தன்னையும் அறியாமல் தன் கணவன் என்ற நிலையில் வைத்து ரசிக்க தொடங்கியிருந்தாள் அவள்.. இப்போது அவன் சென்னை பாஷையில் பேசினாலும் அவன் மீது அவளுக்கு பூத்திருந்த நேசம் ஒன்றும் அழிந்து விட போவதில்லை..
அவள் அவன் மனதின் அழகை பார்க்கத் தொடங்கியிருந்தாள்.. அவன் பேசும் விதமோ அவன் முகமோ அவன் உடையோ அவனுக்கான அவளுடைய அன்பின் அளவீட்டை இனிமேல் தீர்மானிக்க போவதில்லை..
ஆனாலும் இப்போது “எனக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டு நல்ல தமிழ்ல பேசட்டுமே.. இப்படி பேசினா எல்லாருக்கும் பிடிக்குது தானே.. அதனால எனக்காக மாத்திக்கிட்டாரோ எதுக்காக மாத்திக்கிட்டாரோ அவர் இப்படியே பேசி பழகட்டும்.. இந்தருக்கும் இவர் சென்னை பாஷைல பேசறது கஷ்டமா தான் இருக்குன்னு அவரே சொன்னாரே.. அதனால இவரு இப்படி பேசுறது அவர் வாழ்க்கைக்கும் நல்லது தான்..” என்று அவனிடம் ஒரு மனைவிக்கான உரிமையோடு அவன் மாறுதலை அவசியமானதாக பார்த்திருந்தாள்..
ஒரு கணவனாக தனக்காக அவன் இதை செய்துதான் ஆக வேண்டும் என்ற மனநிலையில் அவள்.. அவனும் இதே மனநிலையில் தான் இருந்தான்.. அவள் தன்னுடைய மனைவி.. அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்ற எண்ணமே அவனையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தது..
ஆனால் இருவருமே மேலோட்டமாக நடித்து கொண்டு இருந்ததாய் தான் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்..
திருமணம் என்ற பந்தம் அவர்களை ஒரே நேர் கோட்டில் இணைத்து விட்டிருந்த இந்த ஒரே நாளில் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த இந்த மாற்றங்கள் அவர்கள் இருவருக்குமே வியப்பை தான் தந்தது..
இந்த உறவு என்றும் தொடர வேண்டும் என்ற வேட்கை இருவருக்குள்ளும் இருந்தாலும் அதை மற்றவரிடம் வெளிப்படையாக சொல்ல விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது.. தன் மனத்தின் உணர்வுகளை சொல்ல போய் அது மற்றவரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி விடுமோ என்று இருவருமே தங்கள் மனதில் இருந்த காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள தயங்கினார்கள் என்பதே உண்மை..
ஆனால் அது அத்தனையுமே இக்கணம் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அக்கறை என்ற உருவில் வெளிப்பட்டது..
காஃபியை மெல்ல பருகியவள் “ம்ம்.. காஃபி சூப்பரா இருக்கு..”
அவள் சொன்னதும் அழகாய் புன்னகைத்தவன் “தேங்க்ஸ் மதி.. உன் வாய்லருந்து இதை கேக்கறதுக்கு ரொம்ப மஜாவா தான் இருக்குது..” என்றான்..
“சரி.. தினமும் நான் எங்க வீட்டு வாசல்ல விடிய காலைலயே கோலம் போடுவேன்.. இங்கே எப்படி.. யாராவது வந்து போடுவாங்களா?”
“இல்லை மதி.. காலையில இங்கே யாரும் வர மாட்டாங்க.. மதியமா ஒரு அக்கா வந்து வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு போவாங்க.. அப்ப வெளில சில நாள் சின்னதா கோலம் போட்டுட்டு போவாங்க.. நாங்க ரெண்டு பேருமே வெளியில போயிடுவோங்கறதனால அவங்க கிட்ட ஒரு வீட்டு சாவியை கொடுத்து வச்சிருக்கோம்.. அவங்க உள்ள வந்து வேலையை முடிச்சிட்டு வீட்டை பூட்டிட்டு போயிருவாங்க..”
“அப்படின்னா தினமும் சாப்பாடு நீங்க தான்..”
“இல்ல இல்ல.. தினமும் சாப்பாடு எங்க ரெண்டு பேருக்கும் வெளில தான்.. எங்கம்மா எங்களை விட்டு போனதிலருந்து வெளியில தான்.. லீவு நாள்ல மட்டும் நான் இந்தரோட வீட்ல இருந்து அவனுக்கு சமைச்சு கொடுத்து முழு நாளும் அவனோட செலவழிப்பேன்.. அஞ்சு நாள் அவனை கவனிக்காததுக்கு சேர்த்து வெச்சு அன்னிக்கு கவனிப்பேன்.. இல்லனா நான் ஏதோ ஒரு அண்ணனா செய்ய வேண்டிய கடமையை செய்யாத மாதிரி ஒரு ஃபீல்..”
“நீங்க ரொம்ப வித்தியாசமானவரா இருக்கீங்க.. ஒரு வயசுக்கு மேல தம்பி தங்கை எல்லாம் எக்கேடோ கெட்டு போகட்டும்ன்னு நினைக்கிறவங்க மத்தியில உங்க வாழ்க்கையையே உங்க தம்பிக்காக தான்னு வாழ்ந்துகிட்டு இருக்கீங்களே.. ரொம்ப கிரேட் தான் நீங்க..”
அவள் சொன்னதை கேட்டவன் சிரித்து “இதை சொல்றவங்க யாரு? தன் தங்கைக்காகவும் அப்பாக்காகவும் 24 மணி நேரமும் நேரம் காலம் பார்க்காம உழைக்கற நீ என்னை க்ரேட்னு சொல்றியா..? நீ செய்யறதை பார்க்கும்போது நான் செய்யறது எல்லாம் ஒண்ணுமே இல்ல..”
“சரி சரி..போதும் போதும்.. ரொம்ப ஓட்டாதீங்க என்னை.. நீங்க என்னை கலாய்க்கிறீங்கன்னு தெரியுது..”
அவள் பேசியதும் அவளை கூர்ந்து பார்த்து “என்ன ப்ரொஃபசர் மேடம்.. கலாய்க்கிறீங்க அப்படி இப்படின்னு உன் வாயில சென்னை பாஷை எல்லாம் வருது..?”
அவன் கிண்டலாய் கேட்டான் அவளை.. தன்னோடு பேசுவதற்கு பாண்டி வீட்டில் அவ்வளவு தயக்கம் காட்டியவளா இந்த மதி..? என்று உள்ளுக்குள் வியந்தபடி தான் இருந்தான் அவன்..
🎵🎶🎼விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில்
தொலைவினில்
தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென
வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே
பூ போன்ற கன்னித் தேன்
அவள் பேர் சொல்லித் தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித் துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டுத் தடுமாறும் ஓ யே
கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்..
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது
ஓ யே🎼🎶🎵
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 37
“இப்போ இந்த வார்த்தை எல்லாம் சாதா பாஷையிலே கலந்துட்டது.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாருமே உங்க ஃபேவரிட் சென்னை பாஷையில பேசினா கூட ஆச்சரியப்படுத்தறதுக்கு இல்ல..”
தீரன் கிண்டலாய் கேட்ட கேள்விக்கு புன்னகைத்த படி பதில் சொன்னாள் மதி..
“ம்ம்.. அதுவும் சரிதான்..”
“சரி நான் அப்போ வெளியில் போய் கோலம் போடுறேன்.. கோலமாவு எங்க இருக்கு..?”
“அந்த அக்கா அங்க தான் வெரான்டால வெச்சி இருப்பாங்க.. வா.. நான் எடுத்து தரேன்..”
அவன் சொன்னதும் வேகமாக கீழே இருந்த குளியல் அறைக்கு சென்று ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அதை தூக்கிக் கொண்டு அவள் வர அவன் வந்து அந்த தண்ணீர் வாளியை தன் கையில் வாங்கிக் கொண்டான்..
“நீ போ நான் தூக்கிட்டு வரேன்”
அவளோடு வாளியை தூக்கிக் கொண்டு வந்தவன் வெளியே எட்டி பார்க்க இன்னும் இருள் விலகாமல் முழுதுமாய் விடியாமல் இருக்க “மதி இன்னும் வெளிச்சம் வரல.. கொஞ்ச நேரம் கழிச்சு விடிஞ்சப்பறம் கோலம் போட்டுக்கலாம்..” என்றான்..
“இல்லை தீரா.. எங்க வீட்டில் விடியற்காலைல கோலம் போட்டு பழக்கம் தான் எனக்கு.. இப்பவே போட்டுடறேனே.. அப்புறம் ரொம்ப நேரம் ஆயிடும்..”
அவள் சொன்னதை கேட்டவன் “சரி போடு..” என்று அவளிடம் தண்ணீர் வாளி விளக்குமாறு இரண்டையும் கொடுத்து கோலமாவையும் எடுத்து கொடுத்துவிட்டு அங்கேயே படியில் அமர்ந்து கொண்டான்..
“நீங்க உள்ள போங்க தீரா.. நான் கோலம் போட்டுட்டு வரேன்..”
“இல்ல.. இவ்ளோ இருட்டுல தனியா கோலம் போடறது அவ்ளோ சேஃப்டி இல்லை மதி.. நான் இங்கேயே உட்காந்துக்குறேன்.. நீ கோலம் போட்டுட்டு வா.. ரெண்டு பேரும் உள்ள போலாம்..” அவன் அக்கறையில் கொஞ்சம் திக்கு முக்காடி போனாள் அவள்..
ஒரு இரண்டு நொடி அவனையே பார்த்து நின்றவளை பார்த்து “என்ன மதி? கோலம் போட்டுட்டு வா” என்று அவன் சொல்லவும் திடுக்கிட்டு சுயத்திற்கு வந்தாள் அவள்..
அவளும் வேலையில் இறங்கினாள்..
அழகாய் தெருவடைத்து அவள் போட்ட கோலத்தை பார்த்து “சூப்பர் மதி.. கோலம் ரொம்ப அழகா இருக்கு.. அது சரி.. நீ எது செஞ்சாலும் உன்னை மாதிரியே அதுவும் அழகா தான் இருக்கும் போல..” அவன் சாதாரணமாக சொல்லிவிட அவளுக்கோ அதைக் கேட்டு உள்ளுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெட்டியது..
எத்தனையோ பேர் அவளை அழகாக இருக்கிறாள் என்று சொல்லி அவள் அழகை மெச்சி இருக்கிறார்கள்.. ஆனால் அப்போது எல்லாம் தோன்றாத ஏதோ ஒரு சிலிர்ப்பும் குறுகுறுப்பும் ஆனந்தமும் இப்போது தீரன் சொன்ன ஒரு வார்த்தையில் அவளுக்குள் மின்னல் பூவாய் பூக்க அதன் மலர்ச்சி அவள் முகத்தில் தெரிந்ததை தீரனும் கவனிக்க தவறவில்லை..
தீரன் சொன்ன வார்த்தைகள் மதிக்குள் ஒரு அழகான இன்ப அதிர்வை ஏற்படுத்தியிருந்தது..
அவன் பாராட்டியதற்கு பதிலாய் “நம்ம மேல அக்கறை காட்டறவங்க கூடவே இருந்து நம்மள பாத்துக்கிட்டா நம்ம செய்ற வேலை எல்லாம் நிதானமா டென்ஷன் இல்லாம அழகா தான் செய்வோம் நான் இப்போ கோலம் போட்ட மாதிரி..”
இப்போது இன்ப அதிர்வுகள் தீரனின் மனதில்.. நாணமா.. நேசமா.. மகிழ்ச்சியா எது என்று பிரித்துக் கூற முடியாத படிக்கு அவள் முகத்தில் ஒரு அழகான மலர்ச்சியான பாவனை குடியேறி ஒளிர வைத்திருக்க அதை பார்த்து ரசித்து இருந்தவன் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்திலேயே ஆழ்ந்து நிலைத்திருக்க அந்தப் பார்வை பார்த்த விழிகளின் ஊடுருவலை ஒரு சில கணங்களுக்கு மேல் தாங்க முடியாதவள் தலையை குனிந்த படி “போய் சமைச்சிட்டு கிளம்பனும்.. வாங்க.. உள்ள போலாம்..” என்று சொல்லிவிட்டு காலியான வாளியை தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே நடந்தாள்..
தீரனோ வேறு எந்த நினைவும் இல்லாமல் அவள் பின்னாலேயே காந்தத்தால் இழுபட்ட இரும்பு போல் அவளை தொடர்ந்து சென்றான்.. சமையல் அறைக்குச் சென்று அவள் சமையல் வேலையில் இறங்கி இருக்க அவள் வேலை செய்யும் அழகையும் நேர்த்தியையும் கண்டு வியந்த படி கண்கொட்டாமல் அவளையே பார்த்திருந்தான் தீரன்..
“ஆமா.. மஞ்ச பொடி.. மிளகா தூள்.. இதெல்லாம் எங்க இருக்கு?” அவள் கேட்கும் போது தான் மதி என்னும் காந்தத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளிவந்தான் தீரன்..
“ஹ..ஹான்.. மஞ்ச பொடியா? இதோ இங்க இருக்கு..” என்று அவள் ஒவ்வொன்றாக கேட்க அவனும் அவள் கேட்டதை எல்லாம் அவளுக்கு எடுத்துக் கொடுத்தான்..
“ஏதாவது காய் அரிஞ்சு கொடுக்கணும்னா சொல்லு மதி.. நான் அரிஞ்சு கொடுக்கிறேன்..”
அவன் சொன்னதும் அன்று அவள் என்னென்ன சமைக்க போகிறாள் என்று சொன்னவள்.. அதற்கு வேண்டிய காய்களை அவனை அரிந்து தர சொல்ல அவனும் அந்த வேலையில் இறங்கினான்..
அவன் மெல்ல காய்கறிகளை அரிய தொடங்க அவளும் சமையல் வேலையில் தீவிரமாக இறங்கினாள்.. சற்று நேரத்தில் அவன் புறம் வந்தவள் அவன் அழகழகாய் பொடி பொடியாய் ஒரே வடிவத்தில் காய்கறிகளை நறுக்கி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள்..
“அட.. எவ்ளோ அழகா நறுக்கி இருக்கீங்க? ஒரே சீரா சின்ன சின்னதா ஒரே ஷேப்ல நறுக்கி இருக்கீங்க..!! எனக்கெல்லாம் காலையில அவசர சமையல்ல ஏறக்குறைய ஒரே அளவா இருக்கிற மாதிரி நறுக்கறதே பெரிய சேலஞ்சா இருக்கும்.. நீங்க எப்படி வேகமாவும் நறுக்கறீங்க அதே சமயம் இவ்வளவு சீராவும் நறுக்கறீங்க..!!”
அவள் ஆச்சரியமாக கேட்க “அது அப்படித்தான்.. நேரம் இருக்கும் போது அப்பல்லாம் எங்க அம்மா சமைக்கும்போது காய் நறுக்கி கொடுத்து உதவி செய்வேன்.. இந்த காய்கறி அரிய ஆரம்பிச்சப்பவே பார்த்து பார்த்து ஒரே அளவா இருக்கிற மாதிரி நறுக்குவேன்.. அம்மாவும் இப்படித்தான் ஆச்சரியப்பட்டு போவாங்க அப்பலாம்.. அப்புறம் நாளாக நாளாக அதையே கொஞ்சம் வேகமாவும் செய்ய பழகிட்டேன்.. இப்போ சனி ஞாயிறுன்னா தம்பிக்கும் எனக்கும் என்னோட நளபாகம் தான்.. அதனால இப்போ இது நல்லாவே பழகிருச்சு..”
“ஹ்ம்ம்.. எங்க வீட்ல சமைக்கும் போது எனக்கு இந்த காய்கறி அரியற வேலை தான் பெரிய வேலை.. இதை முடிச்சுட்டா பாதி சமையல் வேலை முடிஞ்ச மாதிரி ஒரு நிம்மதி கிடைக்கும்.. இங்க நீங்க பண்ணி குடுக்கறதுனால பாருங்க எப்பவும் சமையல் முடிக்க ஒரு ஒரு மணி நேரம் ஆகும் இன்னிக்கு அரை மணி நேரத்திலேயே அல்மோஸ்ட் சமையல் முடிஞ்சு போச்சு..”
சந்தோஷமாய் சொல்லிவிட்டு மறுபடியும் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறி விட செல்ல அவளையே பார்த்துக் கொண்டே கையில் இருந்த வெண்டைக்காயை அரிய அந்த கத்தி அவன் விரலில் பாய்ந்தது.. அவன் தான் இதை விட ஆழமான காயங்களை படப்பிடிப்பு தளத்தில் தன் சிறந்த வேலைக்கு கிடைத்த பதக்கங்களாக பெற்றிருக்கிறானே..
அதனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெட்டு பட்ட விரலை ஒதுக்கியபடி சிரமப்பட்டு மீதம் இருந்த கொஞ்சம் வெண்டைக்காய்களை நறுக்க முயன்றான்.. ஆனால் எவ்வளவு லாவகமாக நறுக்கியும் அவன் கையில் இருந்து சிந்திய ரத்தம் அந்த காய்கறியில் பட்டுவிட அந்த காய்கறியை ஒதுக்கி வைத்துவிட்டு அதற்கு மேல் எப்படி மீதமிருந்த நான்கைந்து வெண்டைக்காய்களை வெட்டுவது என்று தெரியாமல் விழித்தான்..
ரத்தக்கறை படிந்த அந்த வெண்டைக்காய் துண்டுகளை காய்கறி வெட்டிய கழிவுகளோடு எடுத்து குப்பை பையில் போட்டவன்.. தன் கையை மறைத்து வைத்த படி மதியிடம் “மதி.. இது போதுமா பாரு..” என்று கேட்க அங்கே மீதம் இருந்த நான்கு வெண்டைக்காய்களை பார்த்தவள் “இந்த நாலஞ்சு வெண்டைக்காயை மட்டும் எதுக்கு மீதம் வச்சிருக்கீங்க? அதையும் சேர்த்து கட் பண்ணிடுங்க.. சரியாதான் இருக்கும்..”
அவள் சொன்னதும் “சரி.. அரிஞ்சு கொடுக்கிறேன்..” என்று சொல்லியபடி அப்படியே அமர்ந்து இருந்தவனை பார்த்து “மத்த சமையல் எல்லாம் ஆயிடுச்சு.. இந்த வெண்டைக்காய்க்கு தான் வெயிட்டிங்.. நீங்க அரிஞ்சு கொடுத்தீங்கன்னா அதை அடுப்பில போட்டு வதக்கி எடுத்துருவேன்..”
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் தயங்கியபடியே “அது கையில கத்தி பட்டிடுச்சு.. அது ஒன்னும் ப்ராப்புலம் இல்ல.. ஆனா காய் எல்லாம் ரத்த கறை ஆவுது.. அதான்..” என்று சொல்லிய படி தான் மறைத்து வைத்த கையை வெளியே எடுக்க அதை பார்த்தவள் பதறி போனாள்..
“என்ன..? இவ்வளவு ஆழமா வெட்டி இருக்கு.. இப்படிதான் கவனம் இல்லாம வேலை செய்வீங்களா? கொஞ்சம் இருங்க..” என்றவள் வேகமாய் அலமாரியில் ஏதோ தேடினாள்..
“பரவால்ல மதி.. இதெல்லாம் ஒன்னும் பெரிய அடி இல்ல.. கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியா போயிடும்.. ரத்தம் கூட நின்னுடுச்சு பாரு..”
அவன் ரொம்பவும் அலட்சியமாய் சொல்ல “எங்க நின்னுச்சு.. வந்துகிட்டு தான் இருக்கு.. இருங்க வரேன்..” என்றவள் வேகமாக சென்று சக்கரை டப்பாவை எடுத்து அதிலிருந்து கொஞ்சம் சர்க்கரை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து அவனுடைய வெட்டிய விரலை அந்த சக்கரையில் வைத்து அழுத்தினாள்..
“என்ன செய்ற மதி..?” அவன் கேட்க “இப்ப ரத்தம் நின்னுருக்கும் பாருங்க..” அவள் சொன்னது போலவே அவனுக்கு இரத்தம் வருவது நின்று இருந்தது..
“ம்ம்.. பரவாயில்லையே ஒரே செகண்ட்ல ரத்தத்தை நிறுத்திட்டே.. நான்லாம் இந்த மாதிரி அடி எல்லாம் பட்டா வேகமா கரடு முரடா இருக்கிற செவத்துல கைய ஒரு நாலு தபா தேச்சிக்கினா அது அப்படியே நின்னுரும்..”
அவன் சொன்னதை கேட்டு “ஸ்ஸ்ஸ்” என புருவம் சுருக்கி சொன்னவள் “ஐயோ.. எப்படி அதை இவ்வளவு கூலா சொல்றீங்க? எனக்கு நினைச்சு பார்க்கும்போதே வலிக்குது..”
அவளின் பயந்த முக பாவனையை பார்த்து அவன் சிரிக்க “ஹ்ம்ம்.. என்னை பார்த்தா உங்களுக்கு காமெடியா இருக்கு இல்ல..? அது சரி.. நீங்க தான் ஸ்டன்ட் மாஸ்டர் ஆச்சே.. உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.. நான் எல்லாம் அடிதடி சினிமாவே பார்க்க மாட்டேன் பா.. எனக்கு வயலென்சே பிடிக்காது..”
“அது சரி.. ஸ்டண்ட் மாஸ்டரோட பொண்டாட்டிக்கு வயலன்ஸ் பிடிக்காதா? ம்ம்ம்ம்.. நம்ம வாழ்க்கை வித்தியாசமா தான் போயிட்டு இருக்கு..” மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான்..
மிச்சம் மீதி வெண்டைக்காயை அவளே நறுக்கி அடுப்பில் போட்டு வதக்கி எடுத்தாள்.. அதன் பிறகு அடுப்பில் அவள் பாலை வைக்க “அதான் நம்ம காபி குடிச்சாச்சே.. இந்தர் எழும்ப ரொம்ப நேரம் ஆகும்.. ஒரு வேளை இப்ப மலரும் உங்க அப்பாவும் எழுந்து வந்துருவாங்களா? அவங்களுக்காக காஃபிக்கு பால் வச்சிருக்கியா?”
அவன் கேட்டதும் “இல்ல.. பால் பாயசம் பண்ணலாமேன்னு..”
அவள் சொன்னதும் அவன் வியப்பில் விழி விரிக்க “இல்ல.. இந்த வீட்டுக்கு வந்து முதல் முதல்ல நான் சமைக்கிறேன்.. புது மருமக முதல் முதல்ல சமைக்கும் போது ஸ்வீட் பண்ணனும்னு சொல்வாங்க.. அதான்..”
அவனோ உள்ளுக்குள் சந்தோஷ தாண்டவம் ஆடினான் அவள் வாயிலிருந்து அவள் அந்த வீட்டின் மருமகள் என்று சொன்னதைக் கேட்டு..
ஆனால் அந்த சந்தோஷம் இரண்டு நிமிடம் கூட நிலைக்கவில்லை..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 38
அவள் தன்னை அந்த வீட்டின் மருமகள் என்று சொன்னதில் தீரன் அடைந்திருந்த சந்தோஷத்தை மொத்தமாக உடைத்து தள்ளுவது போல் “அது.. வீட்ல உங்க அத்தை இருக்காங்க.. அவங்க இதெல்லாம் எதிர்பாப்பாங்க இல்ல..? நமக்குள்ள இருக்கிற விஷயம் எல்லாம் அவங்களுக்கு தெரியாது இல்ல? அதான் நாமளே செஞ்சிடலாமேனு..” மதி சொல்லி முடிக்கும்போது அவன் முகம் வாடிய மலராய் சுருங்கியதை அவளும் கவனித்தாள்..
சட்டென சுதாரித்தவன் “ம்ம்ம்ம்.. என்னோட லவ்வரா நடிக்கிறதுக்கு திணறின மதியா இது..? இப்ப இந்த வீட்டோட புது மருமகளா நடிப்பில பின்னி பெடல் எடுக்கிற..?”
அவன் அதை இயல்பாய் கேலி பேசுவது போல் சொல்லிவிட அவளுக்கு அவன் சொன்ன நடிப்பு என்ற வார்த்தை உள்ளுக்குள் ஒரு சிறு வலியை கொடுக்க அந்த வலியின் சாயல் கண்களில் தெரிவதை அவளால் அவனிடமிருந்து மறைக்க முடியவில்லை..
“ஆக்சுவலா நான் இதை அவங்களுக்காக மட்டும் செய்யல.. உங்களுக்கும் இந்தருக்கும் என் கையால முதல் முதல்ல சாப்பாடு செஞ்சு கொடுக்கிறேன்.. அதுக்காகவும் தான்..”
அவள் சட்டென உதடு சுழித்து கொஞ்சம் இறுக்கமான கோவமான முகத்தோடு சொல்லிவிட்டு அடுத்த நொடியே ஒரு வேளை தான் சொன்னதை தான் ரொம்பவும் அவர்களிடம் உரிமை எடுத்து கொள்வதாக அவன் தவறாக நினைத்துக் விடுவானோ என்று தோன்ற அவசரபட்டுவிட்டோமோ என்று தன் உள்ளங்கையை பிரித்து பார்த்தபடி அவள் தவிப்பாய் யோசித்து கொண்டிருக்க அவனோ அவள் அருகில் சென்று அவள் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தி பார்த்தவன் “தேங்க்ஸ் மதி..” என்றான் இதழில் ஒரு சிறு புன்னகையோடே..
அவளுக்கோ அவனுடைய அந்த நெருக்கமும் கண்களின் வழி அவள் இதயத்தை அதிரடியாய் தாக்கும் அவன் பார்வையும் சொல்லொணா உணர்வுகளை அவள் உடலுக்குள் மின்சாரமாய் பாய்ச்சிட அந்த உணர்வுகளின் தாக்குதலை தாங்க இயலாது அவனிடமிருந்து சற்றே விலகி நின்றாள் அவள்..
அவளின் விலகலில் அவள் நிலையை புரிந்து கொண்டவன் “சாரி மதி..” என்றுவிட்டு வெளியே வந்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு தன் செயலுக்காக தன்னையே திட்டிக்கொண்டான்..
“உனிக்கு இன்னாடா.. அவ்ளோ கன்ட்ரோலு இல்லாம பூட்ச்சி.. அந்த பொண்ணு இன்னா நெனைச்சுக்கினு இருக்கும் உன்னிய பத்தி?”
அவன் மனசாட்சி அவனை திட்டி தீர்க்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து போனான் அவன்..
இங்கே மதியோ அவன் கோவம் கொண்டுவிட்டானோ என்று எண்ணி தவித்து போயிருந்தாள்.. சிறு கலக்கத்துடனேயே பால் பாயசத்தை செய்ய துவங்கி இருந்தாள் அவள்..
நெய்யில் வறுபட்ட முந்திரியுடன் சுண்ட காய்ச்சிய பாலும் சேர்ந்த வாசத்தில் அந்த வீடே மணமணக்க அந்த வீட்டில் உறங்கி கொண்டு இருந்த ஒவ்வொருவரையும் அந்த வாசம் கட்டி இழுத்தது.. எல்லோரும் எழுந்து பத்து நிமிடங்களுக்குள் காலை கடன்களை முடித்து வேகமாக குளித்துவிட்டு வந்திருந்தார்கள்..
ஒருவழியாக பால் பாயசத்தோடு சமையலை செய்து முடித்தாள் மதியழகி..
பால் பாயசத்தின் மணம் தீரனின் நாவின் சுவை மொட்டுக்களை தூண்டி விட உடனே அவள் பின்னால் சென்று நின்றவன் “மதி நான் கொஞ்சம் பால் பாயசத்தை டேஸ்ட் பண்ணலாமா?” என்று கேட்க “இதோ ஒரு நிமிஷம்..” என்றவள் ஒரு குவளையில் அந்த பால் பாயசத்தில் இருந்து கொஞ்சமாக ஊற்றினாள்..
அவள் தனக்குத்தான் அதை தரப்போகிறாள் என்று எண்ணி தீரன் கையை நீட்ட அவளோ அந்த குவளையை அவன் கையில் இருந்து எட்டி வைத்து “ம்ஹூம்.. இது உங்களுக்கு இல்ல வேற ஒருத்தருக்கு முதல்ல அவங்க குடிக்கட்டும் அதுக்கப்புறம் உங்களுக்கு கொடுக்கிறேன்..” எனவும் அவனுக்கோ ஏமாற்றமாய் போனது..
அவள் அதை எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேற தீரனோ அவள் யாருக்கு அதை எடுத்துப் போகிறாள் என்று விளங்காமல் குழப்பத்தோடு அவள் பின்னாலேயே தொடர்ந்து சென்றான்..
மதி அந்த வீட்டின் பூஜை அறைக்கு அதை எடுத்து வந்து விளக்கேற்றி சுவாமி முன்னால் குவளையை வைத்துவிட்டு கண்ணை மூடி ஏதோ தீவிரமாய் வேண்டிக் கொண்டாள்..
அதைப் பார்த்தவனுக்கு அவளைப் போலவே எந்த இனிப்பு செய்தாலும் சாமிக்கு படைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த தன் அன்னையின் நினைவு வந்தது..
எவ்வளவு நாள் இந்தர் இனிப்பையும் பலகாரத்தையும் பார்த்து வாயூற கெஞ்சி கெஞ்சி தன் அன்னையிடம் உடனே தனக்கு அந்த பலகாரம் வேண்டும் என்று அடம்பிடிக்க சுவாமிக்கு படைத்துவிட்டு தான் அவனுக்கு தருவேன் என்று சொல்லி அவன் பொறுமையை சோதித்து இருக்கிறார் அவர்களுடைய தாய்..
இப்போது அந்த தாயின் உருவத்தை தன்னவளில் பார்த்தான் ஒரு நொடி..
அதே நேரம் அந்த சமையலின் வாசம் இந்தரை தவிர அந்த வீட்டில் இருந்த அனைவரையும் சுண்டி இழுக்க அத்தனை பேரும் எழுந்து குளித்து முடித்து சுவாமி அறைக்கு வந்திருந்தார்கள்..
மலர் தமிழ்வாணன் தீரனின் அத்தை தீரன் என எல்லோரும் மதியழகியோடு சாமியை கும்பிட அப்போது வரவேற்பு அறையில் தடார் என ஏதோ சத்தம் கேட்கவும் எல்லோரும் பூஜை அறையில் இருந்து ஓடி சென்று அங்கே பார்த்தார்கள்..
இந்தர் தான் படுத்திருந்த மெத்திருக்கையில் இருந்து அதற்கும் மேஜைக்கும் இடையில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்திருந்தான்..
தீரன் அவனை தூக்கி விடலாம் என்று குனிய அப்போது “ஏய் மலரு ஓடாதடி.. நில்லுடி.. எனக்கு வேணும்டி.. குடுடி.. மரியாதையா குடுடி..” என்று சத்தம் போட்டபடி கையை காற்றில் ஆட்டி ஆட்டி முன்னே எதையோ பிடிக்க நீட்டுவது போலும் காலை ஓடுவது போல் உதைத்து பாவனை செய்து கொண்டிருக்க அவன் செய்ததை பார்த்து அங்கிருந்த அத்தனை பேருமே திடுக்கிட்டு போனார்கள்..
மற்ற எல்லோரும் சேர்ந்து மலரை பார்க்க அவளோ தன் முகத்திலும் திகைப்பை சுமந்த படி “என்ன ஆச்சி இவனுக்கு..? தூக்கத்துல என் பேரை சொல்லி உளறிக்கிடடு இருக்கான்..” என்றவள் தன் தந்தையும் தன்னை முறைப்பதை பார்த்து சங்கடமாக நெளிந்தாள்..
“பைத்தியக்கார பையன் என்ன கனவு கண்டு தொலைச்சானோ தெரியல.. தூக்கத்தில ஏடாகூடமா ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கானே.. எழுப்பி கேட்டாங்கன்னா எக்கு தப்பா எதுவும் சொல்லாம இருக்கணும்.. இவங்க எல்லாரும் வேற என்னை ஏதோ தப்பு செஞ்ச மாதிரியே குறுகுறுன்னு பாக்குறாங்களே..”
இப்படி யோசித்தபடியே கீழே விழுந்து கிடந்த இந்தரை முறைத்துக் கொண்டிருந்தாள் மலர்.
தீரன் இந்தர் அருகில் உட்கார்ந்து அவன் தோளை உலுக்கி “ஏய்.. இந்தரு.. எழுந்திருடா.. என்னடா உளறிக்கினு இருக்கே.. எழுந்துருடா..”
அவனை உலுக்கி உலுக்கி எழுப்ப சட்டென கண்ணை திறந்தவன் இன்னும் உறக்க கலக்கத்திலேயே இருக்க “அண்ணா.. அவளை கொடுக்க சொல்லுங்கண்ணா.. கொடுக்க சொல்லுங்க.. எல்லாத்தையும் அவளே தூக்கிட்டு ஓடுறா..”
அவன் மறுபடியும் அதே போலவே கத்த “டேய் இந்தரு முழச்சிக்கடா.. போதும்டா நீ கனவு கண்டது.. மானம் போவுது எனிக்கு..” மறுபடியும் அவன் கன்னத்தை தட்டி அவனை அவன் கனவுலகத்தில் இருந்து நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தான் தீரன்..
அப்போதுதான் தன்னை சுற்றி நின்றவர்களை பார்த்து தான் இவ்வளவு நேரம் கண்டது கனவு என்பதை உணர்ந்த இந்தர் தன் அண்ணனை பார்த்து பெரிதாக இளித்தபடி “சாரிண்ணா.. அது எங்கிருந்தோ பால் பாயாசத்தோட வாசனை வந்துச்சா? அதை போய் குடிக்கலாம்னு போகும்போது இந்த மலரில்ல.. அப்படியே சட்டியோட பால் பாயசத்தை தூக்கிட்டு போயிட்டாண்ணா.. அதை முழுக்க அவ தான் குடிப்பாளாம்.. அதான் அவளை துரத்தி பிடிக்க ஓடுனேனா..?” என்றவனை தீரன் முறைக்க “பாயசத்தை வாங்க தான்ணா.. அதுவும் கனவுல.. அதான் கீழ விழுந்துட்டேன் போல..”
அவன் சொன்னதை கேட்டு அங்கிருந்த அத்தனை பேருமே பக் என சிரித்து விட்டார்கள்..
மலரோ “அட பரங்கி மண்டையா.. உனக்கு கனவு காணறதுக்கு வேற ஆளே கிடைக்கலையா? நான் தான் கிடைச்சனா? என்னை பாத்தா ஒரு சட்டி பால் பாயஸத்தை அப்படியே ஒத்தையா குடிக்கிற மாதிரியா தெரியுது? கொன்னுருவேன்டா உன்னை..”
பொரிந்து தள்ளினாள் அவள் அவனிடம்..
அப்போது தமிழ்வாணன் “மலரு.. என்ன பேச்சு இது? வாயை அடக்கு..” என்று அவளை அடக்க தீரன் “மாமா அவளை எதுவும் திட்டாதீங்க மாமா.. இவ்வளவு நேரம் இந்தர் பேசினதை கேட்டு நம்ப எல்லாரும் மலரை தானே ஒரு மாதிரி பார்த்தோம்..”
அவன் சொன்னதைக் கேட்ட மலர் “அப்படி சொல்லுங்க மாமா.. ஒரு நிமிஷம் எல்லாரும் என்னை தப்பா நினைச்சுட்டாங்க இந்த கிராக்கு மண்டையனால..”
“ஏய் யாருடி கிராக்கு மண்டையன்.. நீதான்டி கிறுக்கச்சி..” என்று பொங்கி எழுந்தவனை மதி “இந்தர்.. விடு.. நீ முதல்ல போயி பல்லு தேச்சு குளிச்சிட்டு வா.. எல்லாரும் சாமி கும்பிட வந்திருக்கிறாங்க.. நீயும் வந்து சாமி கும்பிடு..”
“சாமி கும்பிடணுமா?” சோம்பலான பாவனையோடு இந்தர் கேட்க தீரன் “ரெண்டு வருஷமா அந்த பூஜை ரூம் பக்கமே திரும்பல.. பாவம் வேலை செய்ற சாந்தி அக்கா தான் அதை வந்து சுத்தப்படுத்தி தினமும் விளக்கேத்தி விட்டு போவாங்க.. இப்ப மதி சொன்னதும் உனக்கு பூஜை ரூமுக்கு வர்றதுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குதா? போடா.. போய் குளிச்சிட்டு வா.. மதி தான் சொல்றா இல்ல..?”
தீரன் கொஞ்சம் முறைப்பாய் சொல்ல அதை கேட்ட இந்தர் “சரிண்ணா.. அண்ணி சொன்னா செய்ய வேண்டியது தான்..” என்றதும் வேகமாக இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடியில் இருந்த தன் அறைக்கு சென்றான்..
இதற்காக காத்திருந்த நேரம் தீரனின் அத்தை.. “ம்ம்.. இந்த வீடு இது மாதிரி சமையல்.. பூஜை.. அப்படின்னு இருந்து கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகுது.. என்னைக்கு இவங்க அம்மா சரோஜா போய் சேர்ந்தாளோ அன்னையலருந்து இந்த வீடு கவனிப்பார் யாரும் இல்லாம ஏனோ தானோன்னு தான் நடக்குது..” என்று சலித்துக் கொண்டார்..
தீரனும் “அதான் இப்ப எல்லாம் நல்லா நடக்குது இல்ல அத்தை.. விடுங்க.. அதையே ஏன் சொல்லிக்கினு..” என்றான்..
“அதுவும் சரிதான்..” என்று அத்தை சொல்லவும் இந்தர் தன் அறையிலிருந்து கீழ இறங்கி வரவும் சரியாக இருந்தது..
சுவாமி அறைக்கு எல்லோரையும் அழைத்து போய் தீபாராதனை காட்டி ஒவ்வொருவராக ஆரத்தி எடுத்துக்கொள்ளச் சொல்லி நீட்டினாள்..
தீரனிடம் தட்டை நீட்டும் போது அவனின் அத்தை “டேய் தீரா.. மருமக நெத்தியிலயும் மாங்கல்யத்திலும் அந்த குங்குமத்தை எடுத்து வை டா.. ” என்க அவனும் தன் மோதிர விரலையும் கட்டை விரலையும் கொண்டு குங்குமத்தை எடுத்து அவள் வகுட்டிலும் மாங்கல்யத்திலும் வைத்து விட்டான்.. அந்த அழகான கணங்களுக்குள் இருவர் கண்களும் ஒரு நொடி நேச உணர்வோடு கலந்து மீண்டன..
அடுத்ததாய் மலரிடம் வந்தவள் திருநீரையும் குங்குமத்தையும் அவள் நெற்றியில் இட்டுவிட்டு அது கண்களில் விழாமல் இருக்க அவள் புருவத்திற்கு நேராய் தன் கையை வைத்து ஊதி விட்டாள்..
இந்தரிடம் வரும் பொழுதும் அவனுக்கும் திருநீர் வைத்து அதே போல செய்ய அவனோ அந்த ஒரு நொடி தன் அண்ணியின் உருவில் தன் தாயை கண்டு நெகிழ்ந்து போனான்.. தீரனையும் நெகிழ்வோடு கூடிய மதி மீதான ஒரு நேச உணர்வு ஆட்கொண்டது அந்த நொடியில்..
🎵🎶🎼என் வீட்டு தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டு பார்
என் வீட்டு தென்னங்கீற்றை
இப்போதே கேட்டு பார்
என் நெஞ்சை சொல்லுமே
வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டம் எல்லாம்
பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால்
வண்டுக்கே கேட்காது
ஆடிக்கு பின்னாலே
காவேரி தாங்காது
ஆளான பின்னாலே
அல்லி பூ மூடாது
ஆசை துடிக்கின்றது
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்தத்துக்கும்
தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 39
“ம்ம்.. நான் அப்பப்ப ஊர்ல இருந்து வந்து பார்க்கும் போது கூட ரெண்டு பயலுகளும் ஏதோ ஹோட்டல் ரூமுக்கு வந்து தங்கிட்டு போற மாதிரி தான் இந்த வீட்டில இருப்பாங்க.. இப்படி எல்லாம் கூட இந்த வீடு இருக்குமான்னு நான் நெனச்ச நேரம் உண்டு.. இந்த வீட்டுக்கு நல்ல காலம் வந்துருச்சு போல.. அதான் இந்த வீட்டுக்கு அந்த மஹாலக்ஷ்மியா நீயே மருமகளா கிடைச்சிருக்க..” சுவாமி ஆரத்தியை கொண்டு வந்து நீட்டியவளின் கன்னத்தை வாஞ்சையாய் வருடி சொன்னார் தீரனின் அத்தை..
தன் மகள் முதல் நாள் அன்றே புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்கி விட்டாள் என்பது அவள் தந்தைக்கு பெருமிதத்தை தந்தது..
கண்கள் குளமாக நெகிழ்ந்து போய் தன் மகளை பார்த்தவர் அவள் பூஜை தட்டை தன் முன்னே நீட்டவும் அவள் தலையை வாஞ்சையாய் வருடி “நீயும் மாப்பிள்ளையும் நல்லா சந்தோஷமா இருக்கணும்மா.. அந்த கடவுள் உங்க ரெண்டு பேரையும் காலம் முழுக்க நல்லா வெச்சுருக்கணும்..” என கரகரத்த குரலில் சொல்லவும் அதை கேட்டு மதியும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு தான் போனாள்..
பூஜை அறையில் இருந்து தீரனுக்கு பாயசம் கொடுக்கலாம் என எண்ணி சமையல் அறைக்கு வந்த மதியழகி இன்னொரு குவளையில் பாயசத்தை எடுத்து தீரனுக்கு கொடுப்பதற்காக அவனிடம் நீட்ட அங்கே வந்த இந்தரோ நடுவில் கையை நீட்டி பாயசத்தை மதி அழகியின் கையில் இருந்து பறித்தான்…
தீரன் தன் மார்பு சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை எப்போதும் போல திறந்து விட்டிருக்கவும் அப்போது அவன் மார்புக்கு முன்னால் நீட்டி இருந்த குவளையிலிருந்த பாயசம் கொஞ்சமாய் அவன் மார்பில் பட்டு தெறித்தது..
இந்தரோ அதை எல்லாம் கவனிக்காமல் ஏதோ பாயசம் குடிக்கவே பிறந்தவன் போல பாயசத்தை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்று அமர்ந்து அதை ரசித்து ருசித்து குடிக்க தொடங்கிவிட்டான்..
பாயசம் இன்னும் ஆறாமல் சூடாக இருக்க அது தீரனுடைய நெஞ்சில் லேசாய் சுட்டுவிட “ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று அவன் முனகவும் மதியழகி தன்னிச்சையாக தன் கையால் அவன் மார்பு பகுதியில் பாயசம் சிந்திய இடத்தில் தடவி விட்டு “ஐயோ.. ரொம்ப சுட்டுடுச்சா? ரொம்ப எரியுதா?” என்று கேட்க அதற்கு பதில் கொடுக்காமல் அவன் அமைதியாய் இருக்கவும் கேள்வியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
அவன் மார்பில் அவள் கை தீண்டல் உண்டாக்கிய வெப்பத்தின் எதிரொலி அவன் ஊடுருவும் விழிப்பார்வையின் கிறக்கத்தில் தெரிய தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அந்த நொடி விளங்கிக் கொண்டவள் பட்டென தன் கையை அவன் மார்பில் இருந்து எடுத்திருந்தாள்..
“ஸ.. சாரி.. சாரி தீரா.. அது உங்களுக்கு சுட்டுருச்சேன்னு ஒரு பதட்டத்துல..”
அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்கவும் அவள் சாதாரணமாய் பதட்டத்தில் தீண்டியதை தான் வேறு விதமாய் உணர்ந்ததை நினைத்து சங்கடப்பட்டு போனான் தீரன்.. அவள் தன்னை மறுபடியும் தவறாக நினைத்திருப்பாளோ என்று கலங்கினான் அவன்..
தீரனின் நெஞ்சில் தெறித்த பாயசத்தை துடைத்து விட்டதற்காக மதி மன்னிப்பு கேட்க அவனும் சங்கடமாக “இ..இல்லை.. பரவால்ல மதி..” என்றான் அவன்..
அந்த தர்ம சங்கடமாக நிலையிலிருந்து வெளியேறுவதற்காக மதியழகி “நான் எல்லாருக்கும் போய் பாயசம் கொடுத்துட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு ஒரு தட்டில் குவளைகளை அடுக்கி அதில் பாயசத்தை விட்டு ஒரு குவளையை தீரனிடம் நீட்டினாள்..
அவனும் அதை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ் மதி..” என்றவன் அப்படியே அந்த சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு நின்றபடி அந்த பாயசத்தை சுவைக்கலானான்..
ஒரு வாய் சுவைத்தவன் “அப்படியே எங்க அம்மா செய்யற பால் பாயாசம் மாதிரியே இருக்கு மதி.. ரொம்ப நல்லா இருக்கு..”
அவனுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு பாயச குவளைகள் அடங்கிய தட்டை வெளியே எடுத்து வந்த மதி தீரனின் அத்தை.. தன் தந்தை.. மலரழகி.. என்று ஒவ்வொருவராக பாயசத்தை கொடுக்க எப்படி தீரனிடம் பாயசத்தை கொடுக்கும்போது இந்தர் பிடுங்கி சென்றானோ அதேபோல மலரழகியை பாயசத்தை எடுத்துக்கொள்ள சொல்லி மதி அவள் முன் தட்டை நீட்டிட இடை புகுந்து அந்த பாயசத்தை தான் எடுத்துக் கொண்டான் இந்தர்..
“டேய்.. நீ தான் ஏற்கனவே குடிச்சிட்ட இல்லடா.. இப்ப மறுபடியும் எனக்கு கொடுத்த பாயாசத்தையும் ஏன்டா எடுக்கிற..?”
“ம்ம்.. பாயசம் நல்லா இருக்கு.. எனக்கு புடிச்சிருக்கு.. இப்ப என்ன..? இன்னொரு க்ளாஸ் பாயசம் குடிக்க போறேன்.. உனக்கு வேணும்னா நீ உள்ள போய் எடுத்து குடிச்சுக்கோ..”
அவன் அலட்சியமாய் சொல்லவும் அவன் அடாவடியில் மலரழகிக்கு கோபம் பொங்கி எழுந்தது..
“அது சரி தான்.. நான் உள்ள போயி டீசன்டா எனக்கு கிளாஸ்ல பாயசத்தை எடுத்து குடிச்சிக்கிறேன்.. ஏன்னா உன்னால அப்படி எல்லாம் பண்ண முடியாதில்ல? நாங்க எல்லாம் மனுஷங்களா மாறி ரொம்ப யுகங்கள் ஆகுது.. நீதான் இன்னும் மனுஷனா மாறாம நம்ம மூதாதையரை மாதிரியே இருக்க போலயே.. என்ன வாலு தான் மிஸ்ஸிங்.. உனக்கு எல்லாத்தையும் புடுங்கி திங்குற வியாதி இருக்கிறது ஒன்னும் ஆச்சரியம் இல்ல.. டீசண்டா கேட்டு வாங்கி குடிக்கிறது எல்லாம் உனக்கு சுட்டு போட்டாலும் வராது..”
அவள் நக்கலாய் சொல்லவும் “ஏய் யாரை பாத்துடி குரங்குங்கற.. நீ தாண்டி பிசாசு.. ஒரு க்ளாஸ் பாயசம் எடுத்ததுக்கு இந்த பேயாட்டம் ஆடற..?”
இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்து மதியழகி மலரிடம் “ஏய் மலரு.. இப்ப என்ன? அவன் எடுத்துகிட்டா நீ உள்ள போய் இன்னொரு டம்பளர் பாயசம் எடுத்துக்கோ.. எதுக்கு அவனோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கே..?”
இவர்களின் கூச்சலை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த தீரன் “மதி.. எதுக்கு நீ மலரை திட்டிகிட்டு இருக்க? அவ சொல்றது கரெக்ட் தானே? உள்ள எனக்கு கொடுக்க வந்த பாயசத்தை பிடிங்கிட்டு வந்தான்..? அதான் அவன் அதை குடிச்சிட்டான் இல்ல..? இப்ப அவளுக்கு கொடுக்க போற பாயசத்தையும் புடுங்கினா என்ன அர்த்தம்? என்ன இந்தர்? உனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்னா உள்ள வந்து எடுத்து குடிக்க முடியாதா? இல்லை மதியை கேட்டா அவ எடுத்து கொடுக்க போறா.. இது என்ன பழக்கம்.. அடுத்தவங்களுக்கு கொடுக்கும் போது பிடுங்கிக்கறது..?”
தீரன் சொன்னதைக் கேட்டு “ஓ.. அங்க வேற புடுங்கி தின்னியா? அப்ப நான் உன்னை பத்தி சொன்னது கன்ஃபார்ம்ட் தான்.. சரியா தான் சொல்லி இருக்கேன்..”
மலர் சொன்னதை கேட்டு பல்லை கடித்தான் இந்தர்.. ஆனால் அருகில் தீரன் இருக்கவும் கோபத்தை காட்ட முடியாமல் தன் கையில் இருந்த பாயசத்தை குடிக்காமல் அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து விடுவிடுவென தன் அறைக்கு சென்று விட்டான்..
தீரன் செல்லும் அவனையே முறைத்துக் கொண்டிருக்க மதி மலரிடம் “உனக்கு என்னடி? இப்ப உன் சொத்து பாழா போச்சு.. அவன் ஒரு கிளாஸ் பாயசம் தானே குடிச்சான்.. அதுக்கு போய் எதுக்குடி அவனோட இப்படி சண்டை போடுற.. பாரு.. அவன் கோவத்துல அந்த பாயசத்தை கூட குடிக்காம போயிட்டான்..”
“போனா போகட்டும்… அந்த பாயசத்தை நான் குடிச்சுக்குறேன்.. சும்மா நீ எப்ப பாரு அவனுக்கே சப்போர்ட் பண்ணாதக்கா.. அவன் செஞ்சது கரெக்ட்டா?’
அப்போது தீரனின் அத்தை மலரழகியின் அருகில் வந்து “அம்மாடி.. அது அப்படி இல்லடா.. இத்தனை நாள் அண்ணனும் தம்பியும் ஏனோதானோன்னு வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.. இப்பதான் பொறுப்பா ஒரு பொம்பள புள்ள வந்து இந்த வீட்ல புழங்க ஆரம்பிச்சி இருக்கா.. ரெண்டு வருஷம் கழிச்சு அவனோட அம்மா செய்யற மாதிரி பால் பாயசம் மாதிரியே சுவையா இருக்கற பாயசத்தை குடிச்சதும் அவனுக்கு அதை நிறைய குடிக்கணும்னு ஆசை வந்து இருக்கும்.. அதான் அப்படி உனக்கு கொடுத்த பாயசத்தையும் வாங்கி இருப்பான்.. அவனை தப்பா நினைக்காத டா..”
மலரின் கன்னத்தை வருடி சொல்லிவிட்டு மறுபடியும் பூஜை அறைக்குப் போய் அமர்ந்து கண்ணை மூடி நமச்சிவாய நாமத்தை ஜெபம் செய்ய தொடங்கினார் தீரனின் அத்தை..
தீரனின் அத்தை சொன்னது மலருக்கு புரிந்ததோ என்னவோ அவர் சொன்னது மதியழகிக்கு நன்றாகவே புரிந்தது.. அவன் அன்னை போனதிலிருந்து அன்னையின் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான் அவன் என்பது தெள்ளத் தெளிவாக இனி தான் அந்த வீட்டில் இருக்கும் வரை தன் அன்னை இல்லாத குறை அவனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள் மனதில்..
தமிழ்வாணன் மலரிடம் “மலர்மா.. நம்ம இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருக்க போறோம்.. நீ எதுக்கு இப்படி மாப்பிள்ளையோட தம்பி கிட்ட வம்பு வளர்த்துக்கிட்டு இருக்க.. இருக்கிற வரைக்கும் அமைதியா இருந்துட்டு போலாம்.. வர வர உனக்கு வாய் ரொம்ப நீளமா ஆயிடுச்சு.. சரி.. உனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு இல்ல? நீ போய் காலேஜுக்கு கிளம்பு.. இங்க உன்னோட ஸ்கூட்டி இல்ல.. பஸ்ல தான் போகணும்.. நான் வேலைக்கு போகும் போது உன்னை உன் காலேஜூக்கு போற பஸ்ல ஏத்தி விட்டுட்டு போறேன்..”
தமிழ்வாணன் சொன்னதை கேட்டு தீரன் சட்டென “இல்ல மாமா.. இன்னைக்கு என் கார்லயே எல்லாரையும் நான் கூட்டிட்டு போறேன்.. உங்களை உங்க வேலை பண்ற இடத்துல விட்டுட்டு மலரை அவ காலேஜ்ல விட்டுட்டு இந்தரையும் மதியையும் அவங்க காலேஜ்ல இறக்கி விடுறேன்.. அப்புறம் நான் ஷூட்டிங்க்கு போறேன்..”
“இல்ல மாப்ள.. எங்களையெல்லாம் அழைச்சுட்டு போய் விட்டுட்டு போறதுக்குள்ள உங்களுக்கு உங்க ஷூட்டிங்க்கு லேட் ஆகிட போகுது..”
“இல்ல மாமா.. இன்னைக்கு ஷூட்டிங் கொஞ்சம் லேட்டா தான் தொடங்குது.. பத்து மணிக்கு மேல.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா..”
“சரி மாப்ள.. அப்ப நான் போய் வேலைக்கு கிளம்புறேன் மாப்ள..” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டார் தமிழ்வாணன்..
மதி உள்ளிருந்து ஒரு குவளை பாயசத்தை எடுத்துக் கொண்டு இந்தரின் அறைக்கு சென்றாள்.. அதை கவனித்த தீரனுக்கு தன் தம்பியை அன்னையாய் மாறி கவனித்துக் கொள்ளும் ஒருத்தி அந்த வீட்டிற்கு வந்து விட்டாள் என்ற எண்ணம் வலுப்பட மனதிற்குள் வெகு நாளைக்கு பிறகு ஒரு வித நிறைவை உணர்ந்தான்..
சரியாக அப்போது அவனுடைய கைபேசி ஒலித்தது.. அதை எடுத்து பார்க்க திரையில் சின்னாவின் பெயர் தோன்றவும் உடனே அழைப்பை ஏற்றான்..
🎶🎼🎵புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்…
வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவை கூடுது…
🎼🎶🎵
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 40
“அண்ணே என்னண்ணே.. மணி ஏழரை ஆவுது? வழக்கமா எட்டு மணிக்கு ஷூட்டிங்னா 7:00 மணிக்கு எல்லாம் இங்க ஸ்பாட்ல இருப்ப.. இன்னிக்கு என்னன்ணே இன்னும் ஆளையே காணோம்.. ட்ராஃபிக்குல மாட்டிக்கினியா?”
“டேய்.. அந்த டைரக்டர் கிட்ட சொல்லிரு.. இனிமே இந்த தீரன் பத்து மணிக்கு தான் செட்டுக்கு வருவான்..”
“எது? 10:00 மணிக்கா.. அண்ணே.. உங்களுக்கு அந்த ஆளை பத்தி தெரியாதாண்ணே.. அந்த ஆள் கத்து கத்துன்னு கத்துவான்ண்ணே..”
“கத்துனா கத்தட்டும்டா.. அப்புறம் உனக்கு ஒரு சூப்பர் மேட்டர் ஒன்னு சொல்றேன்.. கேட்டா அப்படியே ஸாக் ஆயிருவ.. இந்த அண்ணனுக்கு கண்ணாலம் ஆயிருச்சுடா..”
கொஞ்சம் வெட்கம் கலந்த குரலில் அவன் சொல்ல “என்ன..? என்ன சொல்றண்ணே.. கண்ணாலம் ஆயிருச்சா.. இந்த அதிசயம் எப்பண்ணே நட்ந்துது..?”
“அதெல்லாம் அப்படித்தான்டா.. இதை பாரு.. நான் குடும்பஸ்தன் ஆயிட்டேன்.. இனிமே முன்னாடி மாதிரி எப்பவும் செட்டிலயே வந்து குந்திகினு இருக்க முடியாது.. வீட்ல வேலை எல்லாம் முட்ச்சுட்டு தான் வருவேன்.. அப்படி ஒத்து வராதுன்னா வேற ஆளை பார்த்துக்க சொல்லு உங்க தலைய.. நான் பாண்டி கிட்ட பேசிக்கிறேன்..”
அவன் கராராய் சொல்ல “சரி சரிண்ணே.. நீ ரொம்ப கோவப்பட்டுக்காதே.. அந்த ஆள் கொஞ்சம் காட்டு கத்து கத்தினாலும் அதுக்கப்புறம் ஒன்னும் சொல்ல மாட்டாரு.. ஏன்னா உன்னை விட்டா அந்த ஆளுக்கு வேற ஆள் கிடையாது..”
“சரி.. எனக்கு வேலை இருக்குதுடா.. நான் ஃபோனை வச்சுடறன்டா சின்னா..”
அவன் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டு திரும்ப அங்கே மதி இடுப்பில் கையை வைத்து படி அவனை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்..
“என்ன மதி? எதுக்கு இப்படி முறைக்கிற?”
அவன் யோசனையோடு கேட்க “இப்ப எதுக்கு ஷூட்டிங்க்கு 10:00 மணிக்கு தான் வருவேன்னு சொல்றீங்க? எங்க அப்பாக்கு தெரிஞ்சுதுன்னா இங்க தங்கவே மாட்டாரு.. உங்க வேலைக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு சொல்லி இப்பவே கிளம்பி வீட்டுக்கு போயிடுவாரு.. பேசாம நீங்க ஷூட்டிங் போங்க.. நாங்க எல்லாரும் பஸ்ல போய்க்கிறோம்..”
அவள் முடிவாய் சொல்ல “இல்லை மதி.. உங்க அப்பா வீட்டுக்கு போனாலும் நான் பத்து மணிக்கு தான் ஷூட்டிங் போவேன்.. இது உங்க அப்பாக்காகவோ வேற யாருக்காகவோ எடுத்த முடிவு இல்ல.. இது நான் இந்தருக்காக எடுத்த முடிவு.. இத்தனை நாளா அவன் ஒழுங்கா காலேஜ் போய் படிச்சிட்டு இருக்கான்னு நினைச்சேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு அவனை பத்தி ரொம்ப கவலை இல்லாம இருந்தேன்.. ஆனா அப்படி நான் அவனை கண்டுக்காம இருந்ததுனால தான் அவன் இவ்வளவு பெரிய தப்பு பண்ண துணிஞ்சுட்டான்.. அதனால இனிமே தினமும் வேற யாருக்காக இல்லனாலும் அவனுக்காக அவனை காலைல நான் காலேஜ்க்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு சாயந்திரம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து கொஞ்சம் அவனோட செலவழிக்கிற நேரத்தை அதிகப்படுத்தனும்னு நினைக்கிறேன்..”
அவன் சொன்னதும் நியாயமான விஷயமாகப் பட்டது மதிக்கு.. அதன் பிறகு அந்த விஷயமாக அவள் விவாதிக்கவில்லை..
ஆனால் தீரனோ மனதிற்குள் “இந்த முடிவு இந்தருக்காக மட்டும் இல்லை மதி.. உனக்காகவும் தான்.. உனக்காகன்னா உனக்காக மட்டும் இல்லை.. உன் குடும்பத்துக்காக.. இப்போ ஒண்ணா இருக்குற நம்ம குடும்பத்துக்காக.. நம்ம குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா கலகலன்னு பேசிகிட்டு சிரிச்சுகிட்டு இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. வேலை வேலைன்னு போயி இந்த அழகான நேரங்களை இழக்க நான் தயாரா இல்லை..”
அப்படி தனக்குள் எண்ணி கொண்டு புன்னகைத்த படியே “அது சரி.. எங்க எல்லாருக்கும் பாயசம் கொடுத்த.. நீ குடிச்சியா?” என்று கேட்க அவள் “இதோ இனிமேதான்..” என்றாள் அவள்..
உள்ளே சென்று ஒரு குவளையில் பாயசத்தை எடுத்து அவளுக்கு கொடுத்தான் தீரன்..
சமையலறையில் ஒரு பக்கம் மேடையில் அவன் சாய்ந்து நின்று இருக்க இன்னொரு புறம் அவள் சாய்ந்து நின்று கொண்டு தன் கையில் இருந்த குவளையில் இருந்த பாயசத்தை மெது மெதுவாக உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தாள்..
பாயசம் நிறைந்த குவளையை பார்த்தபடி அவள் குடித்துக் கொண்டிருந்தாலும் தன் முகத்திலேயே அதுவும் இதழிலேயே அவன் பார்வை ஊறி கிடப்பதை அறிந்து தான் இருந்தாள் பெண் அவள்.. அந்தப் பார்வையின் தாக்குதலில் அவளுடைய கன்னங்கள் செங்கொழுந்தாய் சிவந்து போயின..
அந்நேரம் வாயிலில் “தீரா.. வீட்ல இருக்கியா பா?” என்று யாரோ கேட்டுக் கொண்டு வர வாயிலை எட்டிப் பார்த்தவன் அங்கே நின்று இருந்தவரை பார்த்து “அட பூ கடைக்கார அண்ணன்.. என்ன அண்ணே.. நீங்க இந்த பக்கம்..? நம்ம வீட்டு பக்கம் எல்லாம் நீங்க வர மாட்டீங்களே.. என்னைக்காவது பூவுக்கு ஆர்டர் பண்ணா கூட நேரா செட்டுக்கு வந்து தானே குடுப்பீங்க..”
அவன் கேட்க “செட்டுககு ஆர்டர் பண்ணா செட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கலாம் தம்பி.. இப்போ உங்க வீட்டுக்கு இல்ல பூ ஆர்டர் பண்ணி இருக்கே..”
அவர் சொன்னதை கேட்டு புரியாமல் புருவத்தை சுருக்கினான் அவன்..
“வீட்டுக்கு பூ ஆர்டர் பண்ணோமா? என்ன அண்ணே சொல்றீங்க..?”
அந்த வீட்டில் இருந்து பூ கொடுக்க சொல்லி யார் அவரிடம் சொல்லி இருப்பார்கள் என்ற யோசனையில் தீரன் இருக்க அப்போது வீட்டின் கேட்டை திறந்து கொண்டு அந்த பூக்கடைக்காரர் அருகில் வந்து நின்றார் அவரின் மனைவி..
“ஏன்யா.. உன்னை எங்கல்லாம்யா தேடுறது..? அங்க மூணாவது வீட்டில பூ கொடுத்துட்டு வரேன்னு சொன்னேன் இல்ல? உன்னை வெளியில தானே நிக்க சொன்னேன்.. அதுக்குள்ள இங்க வந்துட்ட.. நான் வீடு வீடா போய் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. என் புருஷன் வந்தானா வந்தானான்னு.. நம்ம தீரா தம்பி வீட்டுக்கு தான் வரேன்னு என்கிட்ட சொல்லிட்டு வரலாம் இல்ல..?”
கணவனை சரமாரியாக திட்டிக் கொண்டே வந்தார் அந்த பெண்..
தீரனை பார்த்ததும் “என்ன தம்பி.. நல்லா இருக்கியா? உனக்கு கல்யாணம் ஆகிட்டுதாமே.. இது சொல்லி தான் தெரிஞ்சுச்சு.. எங்க கிட்ட எல்லாம் சொல்லாமே சைலன்டா செலவில்லாம ஜோலியை முடிச்சிட்ட போல..”
“அது.. வந்துக்கா” என்று தீரன் பேச தொடங்கும் போதே தீரனின் பின்னால் மதி வந்து நிற்க “ஓ.. இதுதான் புது பொண்ணா..? மகாலட்சுமி கணக்கா நல்லா இருக்குதுப்பா.. உங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் பார்க்க அந்த சிவன் பார்வதியையே ஒண்ணா பார்த்த மாதிரி இருக்கு.. வூட்ல பெரியவங்க யாராவது இருந்தா கண்ணேறு கழிக்க சொல்லுயா.. ரெண்டு பேரும் இதே மாதிரி ஜோடியா நல்லபடியா ரொம்ப நாள் வாழனும்.. இந்தாப்பா.. இந்த பூவை அந்த பொண்ணு தலையில வச்சு விடு..”
அவர் கையில் இருந்த கூடையில் இருந்து ஒரு சிறிய பூச்சரத்தை எடுத்து அவன் கையில் கொடுக்கவும் அவனோ ஒரு நிமிடம் திகைத்து போனான்..
மதியும் திடுக்கிட்டபடி அவனை பார்க்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவனிடம் “இன்னாப்பா.. அப்படி பாக்குற.. உன் பொண்டாட்டி தானே..? நேத்து உங்க விசேஷத்துக்காக தான் உன் தம்பியும் இன்னொரு பொண்ணும் கடைக்கு வந்து பூ வாங்கிட்டு வந்தாங்கன்னு அது சொல்லிச்சே.. ஹான்.. கல்யாணத்துக்கு தான் எங்களை எல்லாம் கூப்பிடாம காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சுட்ட..” அவர் சொன்னதை கேட்டு மதிக்கு முகம் எங்கும் நாணத்தில் குப்பென செவ்வாப்பை பூசிக் கொண்டது..
அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டும் தானே தெரியும்.. ஆனால் அந்த பெண்மணி பேசும் போது மதியையும் தீரனையும் குறு குறு என்று பார்த்து கொண்டிருந்தது மதியையும் தீரனையும் கொஞ்சம் சங்கடமாய் நெளிய தான் வைத்தது..
அந்த சூழ்நிலையை இயல்பாக்க “இல்லக்கா… கண்ணாலத்துக்கு யாரையுமே கூப்பிடல.. திடீர்னு நடந்தது..” என்றவன் மதி பக்கம் திரும்பி பார்க்க அவளோ தான் அப்படியே நின்று இருந்தால் அந்த பெண்மணி இன்னும் பதில் சொல்ல முடியாத நிறைய கேள்விகளை கேட்பாள் என்று யோசித்தவள் அவன் அருகில் நடந்து வந்து அவனுக்கு எதிர்ப்புறமாய் முதுகு காட்டி நின்று கொண்டாள்..
தலையில் இருந்து தோள் வரை முடியை கொஞ்சம் தளர்வாக விட்டு அதன் பிறகு நீண்ட பின்னலிட்டு இடை வரை நீண்டு ஆடிக் கொண்டிருந்த சடையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் மெல்ல அவள் பின்னழகையும் அவன் அனுமதி இல்லாமலேயே ரசிக்க தொடங்கியது..
சட்டென தன்னிலை உணர்ந்தவன் “ஊஃப்..” என ஊதி பெருமூச்சை விட “ஏம்பா.. அதான் அந்த பொண்ணு வந்து உன் முன்னாடி பூ வச்சி விட சொல்லி நிக்குதில்ல..? இன்னும் என்ன ரோசனை…? இந்த பூவை வாங்கி அது தலையில வச்சு விடப்பா..”
அந்த அம்மாள் மறுபடியும் சொல்ல மதியின் செய்கையில் அவள் ஒப்புதலை அறிந்து கொண்டவன் வேறு வழியின்றி மெதுவாக புன்னகைத்த படி அந்த பெண்மணி கொடுத்த பூவை அவள் தலையில் சூட்டி விட்டான்..
வெளியில் கொஞ்சம் தயங்கினாலும் மானசீகமாக இருவருமே அந்த இனிய தருணத்தை தாங்கள் அனுபவிப்பதற்கு காரணமாய் இருந்த அந்த பூக்கடைக்காரருக்கும் அவர் மனைவிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்..
பூ வைத்ததும் மதி வாயில் புறமாய் திரும்பி நிற்க அவளுக்கு திருஷ்டி கழித்தாள் அந்த பூக்கார அம்மாள்..
“அம்மாடி.. உன் பேர் என்னம்மா..?”
“என் பேரு மதியழகிக்கா..”
“அழகான பேரு.. தீரனுக்கு ஏத்த மதி தான் நீ..”
அவர் அப்படி சொன்னது தீரனுக்கும் மதிக்கும் தித்திக்கும் தேனாய் இனித்தது..
அதற்குள் அவ்வளவு நேரம் அவர்கள் வெளியே நின்றே பேசிக் கொண்டிருக்கவும் “அக்கா.. உள்ள வாங்களேன் அக்கா.. வெளியே ரொம்ப நேரமா நின்னு பேசிகிட்டு இருக்கீங்க..” என்றாள்..
“அதெல்லாம் வேண்டாம்மா.. இன்னும் நிறைய வீடுகளுக்கு போய் பூ கொடுக்கணும்.. இந்த ஆளு இன்னைக்கு உங்க வீட்ல பூ கொடுத்ததுக்கு பணம் வாங்கிட்டு வரணும்னு சொன்னாரு.. அதான் புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளை பார்த்துட்டு போலாமேனு வந்தேன்..”
அவர் சொன்னதும் சட்டென மதி “ஒரு நிமிஷம் அக்கா.. இங்கேயே இருங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்..
அவள் எதற்கு அப்படி ஓடுகிறாள் என்று தெரியாமல் தீரன் புருவம் சுருக்கி அவள் போன திசையிலேயே பார்த்திருந்தான்..
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 41
இரண்டு நிமிடங்களில் இரண்டு குவளைகளில் பாயசத்தை எடுத்துக்கொண்டு வந்தவள்
“அக்கா.. இன்னைக்கு முதல் முதல்ல வீட்டில சமையல் பண்ணேன்.. அதனால பாயசம் செஞ்சேன்.. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன அப்புறம் எங்க வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி நீங்க தான்… இந்த பாயசத்தை குடிங்க கா.. உள்ள வாங்க.. உள்ள வந்து குடிச்சிட்டு போங்க.. அஞ்சு நிமிஷத்துல ஒன்னும் நேரம் ஆகிறாது..”
அவள் சொன்னதும் சிரித்தபடி “வாயா போலாம்.. அந்த புள்ள அவ்வளவு வருத்தி வருத்தி கூப்பிடுது இல்ல..?” என்று சொல்லி கணவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அந்த பெண்..
வரவேற்பறையில் அவர்களை அமர வைத்து பால் பாயசம் கொடுத்ததும் “இந்த பிள்ளைக்கு நல்லா சமைக்கவும் தெரியும் போல.. கொடுத்து வெச்சவன் தான் தீரா நீ.. இவளும் சமைக்கிறாளே.. வாயில வைக்க வணங்கல.. இத்தனைக்கும் 20 வருஷமா சமைச்சுக்கிட்டு இருக்கா..” பூக்கடைக்காரர் சொல்லவும் அவர் கன்னத்தில் இடித்தார் அவருடைய மனைவி..
“சொல்லுவயா சொல்லுவே.. ஒரு வேளை கூட உன்னை பட்டினி போடாம பார்த்து பார்த்து வாய்க்கு ருசியா வக்கணையா சமைச்சு கொடுக்கிறேன் இல்ல.. இப்படி தான் பேசுவே.. ரவைக்கு வீட்டுக்கு வா.. வயித்துல ஈர துணி போட்டு வெளியில் படுக்க வைக்கிறேன்..”
அவர்களுக்குள் நடந்த அழகான செல்ல சண்டையை தீரன் மதி இருவரும் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்..
அப்போது உள்ளிருந்து கல்லூரிக்கு தயாராகி இந்தரும் மலரும் வெளியே வர அவர்களை பார்த்து அந்த பூக்கடைக்காரர் “வந்துட்டீங்களா? எம்மாடி.. இவங்க ரெண்டு பேரையும் வீட்டில எப்படி தான் சமாளிக்கிறீங்களோ? நேத்து ஒரு நாள் என் கடைக்கு வந்ததுக்கே எனக்கு நாக்கு தள்ளிருச்சு.. ரெண்டு பேரும் ஓயாம அப்படி எலியும் பூனையுமா சண்டை போட்டுக்குறாங்க.. கடைசி வரைக்கும் என்ன பூ வேணும்னு தீர்மானம் பண்ணி சொல்லவே இல்ல.. ரெண்டு பூக்கூடையையும் வெளியில் வெச்சுட்டு நான் கடையோட கதவை பூட்டிக்கிட்டு போயிட்டேன்னா பாத்துக்கோ..”
அவர் சொன்னதைக் கேட்டு தீரன் இந்தரை முறைக்க மதி மலரை முறைத்துக் கொண்டிருந்தாள்..
அதற்குள் அந்த பெண்மணி தன் கூடையிலிருந்து இன்னொரு பூச்சரத்தை எடுத்து “ஏம்மா காலேஜுக்கு போறியா? இந்தா.. இந்த பூவை வெச்சுக்கிட்டு போ..”
அவர் சொல்லவும் சங்கடமாய் விழித்த மலரழகி “அக்கா.. நான் குர்தி ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருக்கேன்.. இதுக்கு பூவெச்சா நல்லா இருக்காதுக்கா..” என்றாள் சிணுங்கலாய்..
மதி “இது என்ன பழக்கம் மலர்? அவங்க ஆசையா கொடுக்குறாங்க.. அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி வேணாம்னு சொல்ல கூடாது.. வாங்கி வச்சுக்கோ..” என்றாள் கறாராக..
அதற்குள் இந்தர் “அக்கா நீங்க என்ன முல்லை பூ கொடுக்குறீங்க..? பேய்க்கெல்லாம் மல்லி பூன்னா தான் ரொம்ப பிடிக்கும்.. நீங்க மல்லிப்பூவை கொடுங்களேன்.. அவ நிச்சயமா வாங்கி வச்சுக்குவா..” என்று மலரழகியை வம்பு இழுக்க அவள் பல்லை கடித்துக் கொண்டு இந்தரை தீவிரமாக முறைத்தாள்..
அதற்குள் தீரன் “மதி.. அவளுக்கு பூ வைக்க இஷ்டம் இல்லன்னா விடு.. அந்த அக்கா ஒன்னும் நெனச்சுக்க மாட்டாங்க.. அக்கா.. அது சின்ன புள்ள.. ஏதோ கொஞ்சம் நாகரீகமா ட்ரஸ் பண்ணிட்டு போக நினைக்குது.. பூ வச்சா அந்த டிரஸ்க்கு நல்லா இருக்காதுன்னு நினைக்குது.. தப்பா எடுத்துக்காதிங்க அக்கா..”
“ஹே.. மாமான்னா மாமா தான்.. இனிமே நீங்க இருக்கும் போது எனக்கு கவலையே இல்லை மாமா.. நீங்க தான் எனக்கு ஏத்த ஆளு..”
அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் முகம் சுருக்கி அவளை முறைத்தாள் மதியழகி..
“ஹான்.. இப்பவே கொழந்தியாளுக்கு ரொம்ப தான் பரிஞ்சு பேசற.. சரி சரி.. நான் ஒன்னும் தப்பா நினைக்கல.. ஆனா உன் பொண்டாட்டிக்கும் கொழுந்தியாளுக்கும் சண்டை வராம பார்த்துக்க..”
அந்த பூ விற்கும் பெண்மணி கேலியாய் சொல்ல “அதெல்லாம் வரவே வராது.. ஏன்னா எனக்கு அவரைப் பத்தி தெரியும்.. அவர் மனசு எல்லா பொண்ணுங்களையும் தாயா தங்கச்சியா மகளா பார்க்குமே தவிர வேற கண்ணோட்டத்தில பார்க்கவே பார்க்காது.. எப்பேர் பட்ட அழகியா இருந்தாலும் அவர் மனசை கலைக்க முடியாது..”
“ம்ம்.. பார்ரா புருஷன் மேல எம்புட்டு நம்பிக்கை.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க போல.. அதான் தீரன் அவ்வளவு அவசர அவசரமா உன்னை கட்டிக்கிட்டான் போல.. எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்..” என்றார்..
தீரனோ பெருமை பொங்கிய விழிகளோடு மதியை பார்க்க அவளும் அவன் புறம் கனிவான ஒரு பார்வையை வீசினாள்..
இந்தர் பக்கம் திரும்பிய தீரன் “இந்தர் நீ எதுக்கு மலரை வம்பு பண்ணிக்கிட்டு இருக்க..? அந்த அக்கா கேட்டதுக்கு அவ பதில் சொல்லிக்கிட்டு இருக்கா.. நீ நடுவுல எதுக்கு என்னவோ பேசி அவளை வம்புக்கு இழுக்கிறே.. இன்னொரு தடவை இந்த மாதிரி அவ கிட்ட வம்பு வச்சுக்கிட்ட அப்புறம் அவ்வளவு தான்.. சொல்லிட்டேன்..”
அவன் இந்தரை கண்டிப்புடன் பார்த்து சொல்ல இந்தர் ‘சாரிண்ணா” என்று அமைதியாக இருந்து கொண்டான்..
மலர் தன் குர்த்தி காலரை தூக்கி விட்டு அவனை ஏளனமாக திமிர் பார்வை பார்க்க அதை கவனித்துவிட்ட மதி “மலரு.. போதும்” என்று சொல்ல அப்படியே அடங்கி போனாள் மலர்..
“சரிப்பா.. எனக்கு நேரம் ஆகுது.. இன்னும் பத்து பதினஞ்சு வீட்டுக்கு வேற போகணும்.. நேத்து பூ வாங்கிட்டு வந்ததுக்கு பணத்தை கொடுத்துட்டீங்கன்னா நான் கிளம்பிடுவேன்ப்பா..”
தீரன் “எவ்வளவுண்ணா ஆச்சு?” என்று கேட்க அவர் ஒரு தொகையை சொல்லவும் அந்த தொகையை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்..
அவர்கள் சென்ற பிறகு தீரனின் அத்தை மட்டும் வீட்டில் இருக்க எல்லோரும் தீரனோடு கிளம்பினர்..
காரில் தீரனும் மதியழகியும் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்க பின் இருக்கையில் இந்தர் ஒரு ஓரமும் மலரழகி ஒரு ஓரமுமாக அமர்ந்திருக்க நடுவில் தமிழ்வாணன் அமர்ந்திருந்தார்..
தமிழ்வாணன் வண்டியை விட்டு இறங்கும் வரை வண்டி அமைதியாக தான் சென்று கொண்டிருந்தது..
தமிழ்வாணனை அவர் வேலை பார்க்கும் இடத்தில் இறக்கி விட இப்போது இந்தரும் மலரழகியும் அருகருகே அமர்ந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு கதவு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்..
தீரனுக்கும் மதியழகிக்கும் அவர்களின் நடவடிக்கையை பார்த்து சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அடுத்ததாக மலர் அழகியின் கல்லூரிக்கு சென்றார்கள்..
கல்லூரி வாசலில் மலரழகி இறங்கவும் அவள் பின்னாலேயே தீரனும் வண்டியிலிருந்து இறங்க கல்லூரி வாசலிலேயே நின்று கொண்டிருந்த அவளுடைய தோழிகள் அவளை தீரன் கொண்டு விடுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு போய் “மலரு சொன்ன மாதிரியே உனக்கு பிடிச்ச அந்த ஆறு அடி ஆளை உனக்கே சொந்தமா ஆக்கிக்கிட்டியா..?”
தீரன் இறங்கியதும் தானும் வண்டியிலிருந்து இறங்கிய மதியழகியின் செவிகளில் மலரழகியின் அந்த வார்த்தைகள் விழ அவள் மட்டும் இன்றி அதை கேட்டு தீரனும் கொஞ்சம் கலங்கி தான் போனான்..
தன் தோழியிடம் மலரழகி “ஆமா.. என் தீரா மாமாவை நான் எனக்கு சொந்தமாக்கிக்கிட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அவள் தன் தோழியிடம்..
“என்னடி சொல்ற? அப்படின்னா அந்த தீரனை நீ..” அவள் தோழி உமா கேள்வியாக அவளை பார்க்க “ஆமா.. தீரா மாமா எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அப்போ அவர் எனக்கு சொந்தம் ஆயிட்டாரு தானே?”
தன் தோழியின் தோளை தன் தோளால் இடித்து மலரழகி சொல்லவும் “என்னது அந்த தீரன் உங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? என்னடி சொல்ற..? நீதானடி அவர் மேல ஆசையா இருந்த? கட்டிக்கிட்டா அவரை தான் கட்டிப்பேன்னு அவர் பின்னாடி துரத்தி துரத்தி சுத்திக்கிட்டு இருந்தே..”
“ஆமாண்டி.. சுத்திகிட்டு இருந்தேன் ஆனா அவரும் எங்க அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.. அது தெரிஞ்சும் நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்க முடியும்..? அதான்.. எங்க அக்காவுக்கு போனா போகுதுன்னு அவரை விட்டு கொடுத்துட்டேன்.. இதுவரைக்கும் எங்க அக்கா ஆசைப்பட்டு எதுவுமே தனக்குன்னு செஞ்சுகிட்டது இல்லடி.. எங்களுக்காகவே வாழ்ந்தவ அவ.. அவ மனசார ஆசைப்பட்டது தீரா மாமாக்காக மட்டும்தான்.. அதான் அவரை அவளுக்கே அவளுக்குன்னு கொடுத்துட்டேன்..”
அதைக் கேட்ட மதியழகிக்கோ ஏனோ இன்னும் மனதில் கலக்கம் சேர்த்துக் கொண்டது.. இன்னும் மலரழகி தீரனை பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறாளோ என்ற யோசனை அவளுக்குள் ஒரு ஓரமாய் உறுத்திக் கொண்டே இருந்தது..
“அடி அம்மா.. உன் அக்கா பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு.. எப்படியோ இனிமே உன் ஆறடி அழகனை பார்க்கறதுக்கு ஷூட்டிங் அங்க இங்கன்னு கிளாஸ் கட் அடிச்சிட்டு அலைய தேவையில்லை.. அதான் தினமும் உன் தீரா மாமாவை வீட்டுலயே பாத்துட்டு இருக்க போற இல்ல..?”
“ஆமாமா.. அது மட்டும் இல்லாம தீரா மாமாக்கு எப்பவுமே இந்த கொழுந்தியா ஸ்பெஷல் தான்.. என் அக்கா என்னை திட்டுனா கூட என் மாமா என் அக்காவை என்னை திட்டவே விடறதில்லை.. தெரியுமா? இன்னைக்கு காலையில கூட எனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணாரு தெரியுமா? எனக்கு என்னவோ எங்க அக்காவை விட எங்க மாமாக்கு நான் தான் செல்லம்னு தோணுது..”
அவள் அப்படி சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவள் பின்னால் வந்து நின்றான் தீரன்..
அவள் தலையில் ஆதுரமாய் கை வைத்து வருடி “ஆமா எனக்கு எப்பவும் மலர் ரொம்ப ஸ்பெஷல் தான்.. அவ அப்பாக்கு அவ எவ்வளவு ஸ்பெஷலோ அதே மாதிரி எனக்கும் ஸ்பெஷல் தான்.. அவளோட அப்பா ஒரு மகளா அவளை எவ்ளோ பத்திரமா பாத்துப்பாரோ அதே மாதிரி நானும் பாத்துப்பேன்.. சரி மலரு.. கிளாசுக்கு டைம் ஆச்சு இல்ல..? போ.. போய் நல்லா படிச்சு பெரிய டாக்டரா வரணும்.. என் கொழுந்தியா பெரிய டாக்டர் ஆனா எனக்கு இன்னும் ஸ்பெஷல் ஆயிடுவா.. கரெக்டா.. இந்த மாமனுக்கு அதுதான் ரொம்ப பெருமையை கொடுக்கும்..”
அவன் சொன்னதை கேட்டு தன் தோழியின் பக்கம் திரும்பியவள் தன் குர்தியின் கழுத்து பட்டையை பெருமையாய் தூக்கி விட்டபடி “பாத்தியாடி.. நான் சொல்லல..” என்றவள் தீரன் பக்கம் திரும்பி அவன் கன்னத்தைக் கிள்ளி “யூ ஆர் சோ ஸ்வீட் மாமா..” என்று கொஞ்சி விட்டு தோழிகளோடு வகுப்பை நோக்கி நடந்தாள்..
மதியழகிக்கோ மலரழகியினுடைய நடவடிக்கைகள் ஏனோ மனதிற்குள் கொஞ்சம் நெருடலாய் தான் இருந்தது.. அது மட்டும் மதியின் கலக்கத்திற்கு காரணமாக இல்லை.. தான் உயிராய் விரும்புபவனை இன்னொரு பெண் அது தன் தங்கையாகவே இருந்தாலும் அவ்வளவு உரிமையாய் சொந்தம் கொண்டாடுவது அவள் மேல் மதிக்கு கொஞ்சம் பொறாமையையும் கிளப்பி விட்டு இருந்தது..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 42
“இந்த பொண்ணு இன்னும் தீராவை மனசுல நினைச்சுகிட்டு இருக்காளோ? எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்துச்சுன்னா அதுக்கப்புறம் அவர் நினைப்பை சுத்தமா மனசுல இருந்து அழிச்சுடுவான்னு நெனச்சேன்.. ஆனா அவ ஏதோ அவரை மறக்க முடியாமல் தவிக்கிற மாதிரி இருக்கே..”
தன் கழுத்தில் இருந்த சங்கிலியை விரல்களால் வருடியபடி யோசனையோடு நின்று கொண்டிருந்தவள் அருகில் வந்த தீரன் “என்ன மதி.. அவ்வளவு யோசனை?” என்று கேட்டான்..
“அது.. மலர் பேசுனதை கேட்டா அவ இன்னும் உங்களை..” என்று சொல்லி நிறுத்தியவளை கூர்ந்து பார்த்தவன் ‘”இங்க பாரு.. நீ பயப்பட வேண்டாம்.. மலரை பத்தி எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு.. அவ மனசுல எந்த கள்ளமும் இல்லை.. அவ இதெல்லாம் என்னை மாமான்னு அதாவது தன் அக்காவோட புருஷன்னு நினைச்சு தான் சொல்றா.. நிச்சயமா வேற எந்த மாதிரி நினைப்பும் அவ மனசுல இல்லன்னு நான் அடிச்சு சொல்லுவேன்.. உன் தங்கச்சியை நம்பு.. அவ தப்பு பண்ண மாட்டா.. அவ உன்னோட வளர்ப்பு.. நெனைச்சாலும் அவளால தப்பு பண்ண முடியாது.. உங்க காலேஜ்க்கு நேரமாச்சு.. இதெல்லாம் போட்டு மனசுல குழப்பிக்காம தெளிவா இரு.. ஆமா ரொம்ப நேரமா இந்த இந்தர் பையன் காருக்குள்ளேயே உட்கார்ந்து இருக்கான்.. அப்படி என்னதான் பண்றான்?”
அவளிடம் யோசனையாய் கேட்டபடி தன் மகிழுந்துவிற்குள் எட்டிப் பார்க்க அங்கே இந்தர் “இதோ காலேஜூக்கு தான் வந்துட்டே இருக்கேன் பேபி.. ஆனா இன்னைக்கு எங்கயும் வெளில போக முடியாது செல்லம்.. எங்க அண்ணன் கார்ல வந்துகிட்டு இருக்கேன்..”
ஏதோ ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்..
“இந்தர்.. என்னடா இது? என்னடா பேசிக்கிட்டு இருக்க..”
அவன் கேட்டதும் சட்டென தன் கைபேசி இணைப்பை துண்டித்தவன் “அது.. அது வந்துண்ணா.. அது என்னோட கிளாஸ் மேட் அண்ணா..”
“கிளாஸ் மேட்டா? கிளாஸ் மேட்டை பேபின்னு கூப்பிடுவியாடா? என்னடா இதெல்லாம்? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று தீவிரமாய் முறைத்தவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் இந்தர் திருதிருவென விழித்திருந்தான்..
மதி அவன் அருகே வந்து “தீரா.. அது.. இந்த காலத்து பசங்க பொண்ணுங்களை அப்படித்தான் கூப்பிடுறாங்க.. அதுக்கு தப்பா எதுவும் அர்த்தம் இல்லை.. சும்மா ஜாலியா கூப்பிடுறது தான்.. இந்தர் எந்த பொண்ணையும் தப்பா பார்க்க மாட்டான்.. எனக்கு தெரியும்.. நீங்க எப்படி மலரை 100% நம்பலாம்னு சொன்னீங்களோ அதே மாதிரி தான் இந்தரையும் 100% நம்பலாம்.. அவன் நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து வளர்த்த புள்ள.. தப்பா எதுவும் பண்ண மாட்டான்..”
இந்தரை அர்த்தமாய் பார்த்துக் கொண்டே தீரனிடம் சொன்னவளை நன்றி கலந்த விழிகளோடு பார்த்தான் இந்தர்..
“ஆனாலும் இவன் எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உன் கிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சானோ அப்போலிருந்து எனக்கு இவன் மேல கொஞ்சம் நம்பிக்கை குறைஞ்சு தான் இருக்கு.. அவனோட ப்ரொஃபஸர் நீ.. உன்கிட்டயே அப்படி நடந்துக்கிட்டவன் அவன் வயசு பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துப்பான்னு என்னால யோசிக்க கூட முடியல..”
தீரன் மேலும் மேலும் இந்தர் மேல் நம்பிக்கை இல்லாமலேயே பேசிக் கொண்டிருக்க “இல்ல.. எங்களுக்கு அவனை பத்தி காலேஜ்ல பொண்ணுங்க சைடுல இருந்து இதுவரைக்கும் ஒரு கம்ப்ளைன்ட் கூட வந்தது இல்லை.. அவன் எப்பவுமே பொண்ணுங்களுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் இருந்திருக்கான்..”
மதி உறுதியாய் சொல்ல “நீ எதோ சொல்ற.. பார்க்கலாம்.. இனிமே இவன் நடந்துக்க போற விதத்துல தான் இவன் எப்படின்னு எனக்கு தெரியபோகுது..”
“சரி.. காலேஜ்க்கு டைம் ஆகுது.. உங்களை கொண்டு போய் டைமுக்கு விடறேன்..”
தீரனின் குரலில் கொஞ்சம் விரக்தி கலந்திருக்க அது மதிக்கும் கொஞ்சம் கவலையை தான் தந்தது..
இந்தருக்கு தன் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது என்று தீரன் சொன்ன வார்த்தை உள்ளத்தில் முள்ளாய் தைத்தது.. எப்படியாவது அந்த நம்பிக்கையை மீண்டும் பழையபடி பெற வேண்டுமென்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான் அவன்..
கல்லூரியில் இந்தர் காரை விட்டு இறங்கியது தான் அவன் அருகில் வந்த ஒரு பெண் “ஹே.. இந்து டியர்.. ஏன் இன்னிக்கு காரில வந்துட்ட? உன்னோட வண்டியில போற அந்த ஃபீலே தனி டா.. அப்போ இன்னைக்கு அது கிடையாதா?”
அவள் இந்தருடன் கொஞ்சலாய் அவன் தோள் மீது கை வைத்து பேசிக் கொண்டிருக்க அவனோ தன் பின்னாலேயே நின்று தன்னை கவனித்துக் கொண்டிருந்த அண்ணனையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்த படி காவலரிடம் வசமாய் மாட்டிக்கொண்ட திருடன் போல விழித்துக் கொண்டு இருந்தான்..
இந்த முறை மதியழகியும் அவன் உதவிக்கு எதுவும் செய்ய முடியவில்லை..
“ஷாலினி.. நான் சொல்றதை கேளு..” என்று அவன் ஏதோ சொல்ல தொடங்க “ஹேய்.. என்ன நீ.. அசிங்கமா என் ஃபுல் நேம் சொல்லி கூப்பிடுற.? நீ எப்பவும் ஷாலு பேபின்னு தானே கூப்பிடுவே.. அப்படியே கூப்பிடுறா.. அதுல தான்டா ஒரு கிக் இருக்கு..”
“கிக்கா? அடிப்பாவி.. நீ இப்ப பேசுன பேச்சுல எங்க அண்ணா கிட்டருந்து எனக்கு ஒரு பெரிய கிக் கிடைக்கப் போகுது..”
மனதிற்குள் புலம்பியவன் அவளை பாவமாய் பார்த்து வைக்க அவளோ பேசிக்கொண்டே போனாள்..
இன்னும் இரண்டு நிமிடம் அவள் பேசினால் தன் அண்ணன் அந்த இடத்திலேயே படத்தில் அவர் காட்டும் அத்தனை சண்டை சாகசங்களையும் காட்டி தன்னை அடித்து துவைத்து விடுவார் என்று புரிந்து போனது அவனுக்கு..
ஆனால் அந்தப் பெண்ணை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்..
அப்போது சரியாக அவனின் துணைக்கு அவனுடைய நண்பன் ரகு வந்தான்..
தூரத்திலிருந்து இந்தர் தன்னுடைய அண்ணன் தீரனோடு வந்திருப்பதையும் ஷாலினி எப்போதும் போல அவனோடு கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தவன் அவர்கள் அருகில் வந்து “ஏய்.. ஷாலு பேபி.. தினமும் நான்தானே உன்னை வண்டியில கூட்டிட்டு போவேன்.. அன்னைக்கு ஒரு நாள் ஏதோ நான் வரலைன்னு அவன் உன்னை அவசரத்துக்கு கூட்டிட்டு போய்ட்டான்.. அதுக்காக தினமும் நான் அவனையே உன்னை பிக்கப் பண்ண விட்டுடுவேனா.. எப்பவும் போல நீ என்னோடயே வா.. நான் வண்டியில தான் வந்து இருக்கேன்..” என்றவன் அவள் ஏதோ சொல்ல வர அவளை பேசவிடாமல் அவள் கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக்கொண்டு வேறு பக்கம் போனான்..
இந்தர் அதன் பிறகுதான் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டான்..
அவன் அருகில் வந்து தீரன் “டேய் இந்தரு.. அந்த பையன் உன் ஃப்ரெண்டு தான?” என்று கேட்க “ஆமாண்ணா.. என் ஃப்ரெண்டு ரகு.”. என்றான் அவன்..
தலையை குனிந்த படி தீரனின் பார்வையை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்து இருந்தான் இந்தர்..
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது அவனுக்கு..
தீரனோ “இங்க பாரு.. அவனுக்கு நீ ஒரு நல்ல ஃப்ரெண்டுன்னா முதல்ல அவன் இந்த மாதிரி காலேஜை கட் அடிச்சிட்டு ஊர் சுத்தறதை நிப்பாட்டிக்க சொல்லு.. படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் அழகே இல்ல.. அப்புறம் இந்த பொண்ணுங்களை என்ன என்னவோ கூப்பிடுறீங்களே.. அது என்னது.. பேபி டியர்.. இதெல்லாம் நல்லா இல்ல இந்தரு… இத்தோட நிப்பாட்டிக்கோ.. சரி.. உனக்கு கிளாசுக்கு நேரமாவது இல்ல..? நீ போ..”
அவனை வகுப்புக்கு அனுப்பி விட்டு திரும்பிப் பார்க்க அவன் அருகில் மதி அழகி வந்து நின்று இருந்தாள்..
“சரி.. அப்ப நானும் கிளாஸ்க்கு போறேன் பாய்…” என்று கல்லூரிக்கு போக திரும்பியவளின் கையை பிடித்தான் தீரன்..
அவ்வளவுதான்.. அதுவரை அமைதியாக இருந்த அவளின் இதயம் ஏனோ படபடவென அடித்துக் கொள்ள தொடங்கியது..
தன் இன்னொரு கையை படபடக்கும் நெஞ்சில் வைத்து தன் படபடப்பை குறைக்க முனைந்த மதி அதில் மொத்தமாய் தோல்வியுற்று தான் போனாள்..
அவனோடு நிகழ்ந்த முதல் சந்திப்பில் என்னவென்றே புரியாத உணர்வுகளோடு போராடியவளுக்கு இப்போது அவன் பால் தன் மனம் முழுவதுமாய் சாயத் தொடங்கி இருப்பது தெரிந்தது.. அவன் மொத்தமாய் தன்னை வேரோடு களவாடிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.. அந்த காதல் உணர்வுகளின் பொருள் அவளுக்கு விளங்கிட இப்போது அந்த உணர்வுகளின் தாக்கம் இன்னும் பன்மடங்காக அவளிடம் பெருகிக் தான் போனது..
அவள் அவனை சந்தித்த போது தனக்குள் நிகழ்ந்த அழகான தவிப்பான மாற்றங்களின் விவரம் எதுவும் புரிந்திடாத முதல் சில நாட்களில் அந்த உணர்வுகள் உள்ளுக்குள் இருந்து உடைத்து பொங்கி எழுந்தாலும் அதை வெளியே மற்றவர்க்கு தெரியாமல் தனக்குள்ளேயே அவளால் கட்டுப்படுத்தி வைக்க முடிந்தது..
ஆனால் இப்போதோ அவன் பார்வை தன்னை தீண்டும் போதே தனக்குள் நிகழும் ரசாயன மாற்றங்களை அடுத்தவருக்கு தெரியாமல் மறைத்து வைக்க பெரும்பாடு பட்டு போகிறாள் பாவை அவள்..
அப்படி இருக்க அவன் கை தீண்டலில் அவள் உடலில் அமைதியாய் இருந்த அத்தனை அணுக்களும் உயிர்த்து எழுந்தது போல் ஒரேயடியாய் சதிராட்டம் போட அதை அவன் கண்களுக்கு தெரியாமல் எப்படி தனக்குள்ளேயே புதைத்து வைப்பது என்ற வித்தை புரியாமல் விதிர்த்து போனாள் பெண் அவள்..
அவள் இப்படி தன்னுள் நிகழும் சிருங்கார மாற்றங்களில் சிலிர்த்து போயிருக்க அவளுடைய இந்த இனம் புரியா அவஸ்தைகளை பற்றிய தகவலை அவள் கைகளை பற்றி இருந்த தீரனுக்கு பனிக்கட்டியாய் சில்லிட்டு போயிருந்த அவளின் உள்ளங்கைகள் கூவி கூவி பறை சாற்றி கொண்டிருந்தன..
அவளின் கையை விடாமல் தொடர்ந்து பிடித்த படியே அவள் முன்னால் வந்து நின்று அவள் முகம் பார்த்தவன் அவள் நெற்றியில் முத்து முத்தாய் வியர்த்திருக்க படபடக்கும் இதயத்தோடு அவள் வேக மூச்சுகளை விட்டுக் கொண்டிருக்க அவள் நிலை கண்டு சிறிது அதிர்ந்து தான் போனான்..
அவளின் மனதில் அவன் பால் ஏற்பட்டு இருந்த காதல் தவிப்புகளை அவள் உடல் மொழி வெளிப்படுத்திக் கொண்டிருக்க அவனோ அதை வேறு மாதிரி புரிந்து கொண்டான்..
தான் அவள் கையைப் பிடித்ததை அவள் தவறாக எண்ணிக்கொண்டு தன்னுடைய செய்கையினால் ஏற்பட்ட பயத்தையும் அருவருப்பையும் தன்னிடம் காட்ட முடியாமல் இப்படி உணர்வுகளால் வெளிப்படுத்துகிறாள் என்று புரிந்து கொண்டான் அவன்..
இந்த தவறான புரிதல் நிகழ்ந்த அடுத்த நொடியே அவள் கையை சட்டென அவன் விடுவித்து விட அவளோ அவனுடைய விலகலில் கொஞ்சம் பதறித்தான் போனாள்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 43
சட்டென தன் கைகளில் இருந்து விலகிய தீரனின் கைகளை பிடித்த மதி தலையை வேகமாய் இடவலமாய் ஆட்டவும் அவளுடைய எண்ணத்தை அந்த ஒரே தலையசைப்பில் புரிந்து கொண்டான் அவன்..
அழகாய் புன்னகைத்தபடி அவள் உள்ளங்கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதித்து கொண்டவன்
“தேங்க்ஸ் மதி.. எங்க நீ என்னை தப்பா நினைச்சுட்டியோன்னு நெனச்சேன்.. அதனாலதான்..” என்று நிறுத்தியவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களை அப்போதும் சந்திக்க முடியாமல் சட்டென விழி தாழ்த்தினாள்..
தன் மனதில் இருப்பது காதல் தானா என்று இன்னும் அவளுக்கே பிடிபடாமல் இருக்க அதற்குள் அவனுக்கு எந்த தவறான புரிதலும் ஏற்படுவதற்கு தான் காரணமாக இருந்து விடக்கூடாது என்று தோன்ற “இல்ல.. ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டோட கைய புடிச்சா அதை ஏன் தப்பா நினைக்க போறாங்க.. அதெல்லாம் யாரும் தப்பா நினைக்கல..”
அவள் ஒரு சின்ன ஏளன புன்னகையோடு சொன்னதைக் கேட்டு தன் இதழ் விரித்து சிரித்தவன் “ரொம்ப தேங்க்ஸ் மதி… இவ்வளவு படிச்ச ப்ரொஃபஸர் நீ இந்த படிக்காத ஸ்டண்ட் மாஸ்டரை உன்னோட ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டது என்னை பொறுத்த வரைக்கும் எனக்கு ரொம்ப பெரிய அவார்டு கிடைச்ச மாதிரி.. தீரன் ரொம்ப குஜாலாயிட்டேன்”
தன் பழைய பேச்சு வழக்கு இடையில் புகுந்து விட சொல்லிவிட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டவனை அவசரமாய் நிமிர்ந்து பார்த்தவள் “இல்ல தீரா.. நீங்க படிச்சு இருக்கீங்களோ இல்லையோ.. உங்ககிட்ட பணம் இருக்கோ இல்லையோ.. நீங்க ரொம்ப நல்லவரா நேர்மையானவரா இருக்கீங்க.. பொண்ணுங்களை மதிப்போடயும் மரியாதையோடயும் நடத்துறீங்க.. அந்த ஒரு தகுதி போதும்.. என்னோட ஃப்ரெண்டா இருக்கறதுக்கு..”
அவள் சொன்னதை கேட்டவன் அவளின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி தன் பார்வையாலேயே தன் நன்றிகளை சொல்லிக்கொண்டிருந்தான் அவளிடம்..
பிறகு தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து இருவரும் இயல்பாகி விட அப்போதும் அவள் கைகளை விடாமல் இன்னும் இறுக பற்றியவன் “மதி.. பார்கவி என்கிட்ட உங்க காலேஜ் பிரின்சிபல் இந்தரோடயும் உன்னோடயும் அந்த சேகரோடயும் என்னென்ன பேசினாங்கன்றதை பத்தி எல்லாம் சொன்னாங்க.. என்னோட கொஞ்சம் இப்ப பிரின்ஸிபல் ரூமுக்கு வந்துட்டு அப்புறம் கிளாசுக்கு போ.. ரெண்டு நிமிஷம் தான்..”
அவன் சொன்னதைக் கேட்டவுடன் புருவம் முடிச்சிட “அது முடிஞ்சு போன விஷயம்.. இப்ப எதுக்கு தீரா அதை பத்தி பேசிக்கிட்டு..” என்க “இல்ல மதி.. அவங்களுக்கு கொஞ்சமா சந்தேகம் இருந்தா கூட அதை சுத்தமா போக்க வேண்டியது நம்மளோட கடமை.. அதான் சொல்றேன்.. வா.. அவங்களை போய் பார்க்கலாம்..”
“ஓகே.. வாங்க போலாம்” என்று சொல்லி அவள் கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடக்க அவனும் அவளை பின் தொடர்ந்தான்.. அவள் கையை அவன் அப்போதும் விடவில்லை..
அவள் கையைப் பிடித்த படியே கல்லூரி முதல்வரின் அறைக்கு அவளோடு சென்றவன் அறைக்குள் நுழைய அனுமதி கேட்க கல்லூரி முதல்வர் புருவம் சுருக்கி அவன் யார் என கேள்வியாய் பார்த்தார்.. அவன் கையைப் பிடித்த படி மெதுவாய் அவன் பின்னிருந்து மதி முன்னே வரவும் “உள்ள வா மதி.. இது யாரு?” அவனை தெரியாமல் கேட்டார் அவர்..
“மேடம்.. அது வந்து..” அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க “மன்னிக்கணும் மேடம்.. நான் சொல்றேன்.. நான் இங்க படிக்கிற இந்தர்ங்கற ஸ்டுடென்டோட அண்ணா.. இப்போ மதியோட புருஷனும் கூட.. எங்க ரெண்டு பேருக்கும் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுச்சு.. இந்தருக்கும் மதிக்கும் நடுவுல இருந்த பிரச்சனை பத்தி எனக்கு எல்லாம் தெரியும்.. இனிமே அப்படி ஒரு பிரச்சனை இந்தரால நடக்காதுன்னு சொல்றதுக்கு தான் நான் இங்க வந்தேன்..”
அவன் சொன்ன விஷயத்தை புரிந்து கொண்ட கல்லூரி முதல்வர் ஒரே நாளில் திருமணத்தை முடித்துக் கொண்டு வந்து நிற்கும் மதியை ஆச்சரியமாக பார்த்தார்..
“கங்கிராட்ஸ்.. வாட் எ சர்ப்ரைஸ் மதி..? ஆமா உங்க பேரு..?” தீரனை பார்த்து அவர் கேட்க “என் பேரு தீரன்.. இரணதீரன்.. நான் சினிமால ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கேன்..”
அவன் பட்டென சொல்லிவிட அவருக்கோ அதை கேட்டு இன்னும் வியப்பு மேலிட்டது.. புருவம் உயர்த்தி மதி பக்கம் திரும்பியவர் “இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப ரேர் காம்பினேஷனா இருக்கே.. எனிவேஸ் உங்களுக்கும் கங்கிராட்ஸ்.. மே காட் ப்ளெஸ் யூ போத் வித் எ ஹாப்பி மேரீட் லைஃப்.. ஆனா என்னை தப்பா நினைக்காதீங்க.. ஒரு க்யூரியாசிட்டியில தான் கேட்கிறேன்.. உங்களோடது லவ் மேரேஜா?”
அவர் இருவரையும் குறுகுறுவென பார்த்த படி கேட்க தீரனும் வேறு வழி இல்லாமல் “ஆமா மேடம்.. லவ் மேரேஜ் தான்..” கொஞ்சம் அசடு வழிந்த படி தான் சொன்னான் அவன்.. மதிக்கோ அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை…
தலை குனிந்த படி அமர்ந்திருந்தவளை நம்ப முடியாமல் பார்த்தவர் “மை காட் என்னால நம்பவே முடியல.. வாட் எ கோயின்ஸிடன்ஸ்.. இப்படி கூட நடக்குமா? இங்க பிரச்சனை நடந்தப்ப இந்தர் தீரனோட தம்பின்னு உனக்கு தெரியாதா மதி..?”
“இல்ல மேடம்.. தெரியாது.. நாங்க ரெண்டு பேரும் ஒரு மாசமா தான் லவ் பண்றோம்.. எனக்கு இந்தர் இப்படி எல்லாம் பண்ணான்னு தெரிஞ்சதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.. அவனுக்காக நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன் மேடம்..”
தீரன் பேச பேச அந்த கல்லூரி முதல்வருக்கோ வியப்பு அடங்கவே இல்லை “இன்ட்ரஸ்டிங்.. ஆமா.. மதி ரொம்ப அமைதியான பொண்ணு.. நீங்க ஸ்டண்ட் மாஸ்டர்ன்னு சொல்றீங்க.. அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில லவ் எப்படி..?”
அவர் வியப்பு குறையாமல் கேட்க “மேடம்.. காதல்.. பாசம்.. அன்பு.. நேசம்.. எந்த உணர்வா இருந்தாலும் நம்ம மனசை அதுவா வந்து ஆட்டுவிக்கும் மேடம்.. அது இப்ப வரும்.. அப்ப வரும்.. அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது.. அந்த உணர்வு நம்ம உயிருக்குள்ள போய் நம்மளை முழுசா தலைகீழ போட்டு புரட்டி எடுத்து அவங்க இல்லாத உலகத்துல நம்மளால வாழவே முடியாதுன்கிற ஒரு நிலைமைக்கு நம்மள தள்ளிடும்.. ஒருத்தரோட நமக்கு அந்த மாதிரி ஒரு பிணைப்பு ஏற்படுறதுக்கு அந்த உணர்வு மட்டும் போதும் மேடம்.. படிப்பு அறிவு அழகு பணம் இது எதுவுமே தேவையில்லை.. அந்த உணர்வு வெறும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு வர ஈர்ப்பா இல்ல வாழ்க்கை முழுக்க தொடர போற உறவோட அடித்தளமான்னு நாம தான் மேடம் புரிஞ்சுக்கணும்”
தீரன் பேச பேச அவனை விழி விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள் மதி.. முழுக்க முழுக்க ஆஞ்சநேயர் பக்தனாய் இருந்தவனா இவன்? காதல் பற்றிய பெரிய விரிவுரையே நடத்திக் கொண்டிருக்கிறானே.. என்று எண்ணியபடி விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை..
அதை கவனித்த கல்லூரி முதல்வர் தன் தொண்டையை செரும அதில் தன் நிலை உணர்ந்தவள் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் மறுபடியும் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்..
பதட்டமான குரலில் அவசரமாய் “உங்க டைம் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு.. நான் போகவா?”
மதி கேட்க “ஓகே மதி.. நீங்க கிளாஸ்க்கு போங்க..” என்றவர் தீரன் பக்கம் திரும்பி “நான் உங்களோட கொஞ்சம் பேசணும் தீரன்..” என்க மதிக்கோ அவர் என்ன பேச போகிறாரோ என்று கலக்கமாய் இருந்தது..
மதியை வகுப்புக்கு போக சொல்லி கண்ணை காண்பித்து விட்டு தீரன் கல்லூரி முதல்வர் பக்கம் திரும்பினான்.. வேறு வழி இன்றி அரை மனதாய் தன் வகுப்புக்கு கிளம்பினாள் மதி..
அவர் எதுவும் பேசும் முன் மெதுவாக பேச்சை தொடங்கினான் தீரன்..
“இந்தர் நல்ல பையன் தான் மேடம்.. அவனால வந்த இந்த பிரச்சனை உங்களுக்கு எவ்வளவு கோபத்தை கொடுத்திருக்கும்னு எனக்கு தெரியும்.. தயவு செஞ்சு அவனை இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க.. அவன் மறுபடியும் இந்த மாதிரி தப்பு பண்ணாம நான் பார்த்துக்குறேன்.. மத்தபடி அவன் காலேஜ்ல வேற எதுவும் தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு எனக்கு தெரியும்..”
அவன் அவ்வளவு நம்பிக்கையோடு சொல்ல அதை உடைக்க மனதிற்கு கஷ்டமாய் தான் இருந்தது அந்த கல்லூரி முதல்வருக்கு.. ஆனால் தாய் தந்தை இல்லா இந்தரை கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் தீரனிடம் உண்மையை மறைக்க அவர் மனம் ஒப்பவில்லை..
“மிஸ்டர்.தீரன்.. உங்க தம்பி மதி விஷயத்துல மட்டும் தப்பு பண்ணல.. அவன் மத்த விஷயங்கள்லயும் இர்ரெகுலரா தான் இருக்கான்.. அவனோட அட்டெண்டென்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. கிளாஸை எல்லாம் கட் அடிச்சுட்டு அவன் கிளாஸ் மேட்ஸோட பர்டிகுலரா கேர்ள்ஸோட தினமும் ஊர் சுத்திட்டு இருக்கான்.. மதியை அவனுக்கு பிடிக்கும்.. அதனால அவங்க கிளாஸ்ல மட்டும் 100% அட்டன்டன்ஸ் வச்சிருக்கான்.. மத்த எல்லா கிளாஸ்லையும் அவன் அட்டென்டன்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. மத்த ஸப்ஜெக்ட்ல எல்லாம் எக்ஸாம் எழுதுறதுக்கு தேவையான 65% அட்டென்டன்ஸை எப்படியாவது மெயின்டைன் பண்ணிடறான்.. நல்லா படிச்சு எல்லா சப்ஜெக்ட்ஸ்லயும் எப்படியோ பாஸ் பண்ணிடறான்.. அது வேற விஷயம்.. ஆனா அவனால இன்னும் நல்லா படிக்க முடியும்.. இன்னும் நல்லா பெர்ஃபார்ம் பண்ண முடியும்.. இன்னும் கிளாஸ்சஸ் எல்லாம் ரெகுலரா அட்டென்ட் பண்ணா அவன் கிளாஸ்லையே டாப்பரா அவன் தான் இருப்பான்.. கிளாஸ்ல மட்டும் இல்ல காலேஜ்ல டாப்பரா வர்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.. நான் எவ்வளவோ தடவை அவனை கூப்பிட்டு இதெல்லாம் சொல்லி வார்ன் பண்ணி இருக்கேன்.. ஆனா நோ யூஸ்..”
அவர் சொன்னதைக் கேட்டு அவர் பேசுவது தன் தம்பியை பற்றி தானா.. தான் ஏதாவது கனவு கண்டு கொண்டிருக்கிறோமா.. என்ற யோசனையில் அப்படியே உறைந்து அமர்ந்திருந்தான் தீரன்..
“மேடம்.. நீங்க என் தம்பி இந்தர் பத்தி தான் நெஜமாவே சொல்றீங்களா?”
நம்ப முடியாமல் அவன் மறுபடியும் கேட்க “ஆமாம் சார்.. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்.. உங்க தம்பி இந்தர் பத்தி தான் சொல்றேன்.. மதி கிட்ட வம்பு பண்ணது உங்க தம்பி இந்தர் தானே?”
“ஆமாம் மேடம்..”
அவன் தயக்கமாய் சொல்ல “அப்படின்னா நான் இப்ப சொன்னது எல்லாமே உங்க தம்பி இந்தர் பத்தி தான்..”
அவர் உறுதியாக சொல்ல தீரனோ அதை கேட்டு முழுதாய் நொறுங்கி போனான்..
“இந்தரா இப்படி.. என் தம்பி இந்தரா..?*
அதிர்ச்சியில் அவனுக்கு அடுத்து எதுவும் பேச நா எழவில்லை..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 44
அன்று அந்த விரிவுரையாளர் தான் பூமியில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தில் உழன்று கொண்டிருந்தார்..
அன்று அவருக்கு அந்த சந்தேகம் வந்ததற்கான காரணம் இந்தர்..
மதியழகியின் வகுப்புக்கு அடுத்த வகுப்பாகவோ இல்லை அவள் வகுப்புக்கு முன்னதான வகுப்பாகவோ இருந்தால் மட்டுமே ஏதோ போனால் போகிறது என்று அவர்கள் வகுப்புகளில் ஆஜராவான் இந்தர்..
ஆனால் அன்றைய நாளுக்கான முதல் வகுப்பு அவருடைய வகுப்பு தான்.. அடுத்ததாய் மதி அழகியினுடைய வகுப்பும் இல்லை.. அப்படி இருக்க இந்தர் அந்த வேளையில் கல்லூரிக்குள் இருந்ததே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.. இதில் மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்து அவன் பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்ததை பார்த்தவருக்கு லேசான மயக்கத்தயே வரவழைத்தது அந்த காட்சி..
என்ன ஆயிற்று இவனுக்கு.. வாழ்க்கையில் ஏதாவது பெரும் பிரச்சனை வந்துவிட்டதோ.. இல்லை நான் தான் ஏதாவது கனவு கண்டு கொண்டிருக்கிறேனோ என்றெல்லாம் எண்ண தொடங்கினார்.. அவர் அந்த எண்ணத்தினூடே கொஞ்சம் யோசனையாகவே பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார் அவர்..
அப்போது அந்த வகுப்பறையின் வாயிலில் வந்து நின்ற தீரன் “மன்னிச்சுக்கங்க சார்.. நான் இந்தரோட அண்ணா.. அவனோட கொஞ்சம் பேசணும்.. ஒரு அஞ்சு நிமிஷம் இந்தரை என் கூட அனுப்பி வைப்பீங்களா?”
தீரன் கேட்டது தான் தாமதம்.. அவர் முகபாவனை பழையபடி மாறி இருந்தது..
“அதானே பார்த்தேன்.. தப்பி தவறி என் கிளாசுக்கு வந்துட்டானேன்னு பார்த்தேன்.. வெளியில கூட்டிட்டு போறதுக்கு ஆளை செட் பண்ணிட்டு தான் வந்திருக்கான் போல.. இவனுங்கள எல்லாம்..”
இப்படி எண்ணிக் கொண்டிருந்தவர் “இந்தர்.. என்ன.. போறியா..? என்னவோ தினமும் என் பர்மிஷன் கேட்டு தான் வெளியே போற மாதிரி நல்ல பிள்ளையாட்டம் இப்படியே உட்கார்ந்து இருக்க போறியா? நீ இதுவரைக்கும் நடிச்சது எல்லாம் போதும்.. எப்படியும் மறுபடியும் நீ இங்க திரும்பி வர மாட்ட.. இதோட மதியோட க்ளாஸ் எப்பவோ அப்பதான் வருவே.. கெளம்பு கெளம்பு..”
விரிவுரையாளரின் முறைப்பைத் தாண்டி தன் அண்ணனின் முறைப்பையும் வாங்கிக் கொண்டு தலையை குனிந்த படி வகுப்பை விட்டு வெளியே வந்தான் இந்தர்..
அவனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் போய் எதிர்பக்கமாய் திரும்பி நின்று கொண்டிருந்த தீரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது..
அங்கே வந்து நின்றதும் இந்தர் “அண்ணா.. அது வந்து..” என்று ஆரம்பிக்க “வாயை மூடு இந்தர்.. உன்னை நம்புனதுக்கு இப்படி என் கழுத்தை அறுப்பேன்னு நினைக்கவே இல்ல.. ஏற்கனவே நீ மதி கிட்ட பண்ண விஷயம் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு.. நீ செஞ்ச வேலைன்னால அவ முன்னாடி தலை குனிஞ்சு தான் நிக்கிறேன் நானு.. இப்போ உன் பிரின்ஸ்பல் முன்னாடியும் தலை குனிஞ்சு நின்னேன்.. இன்னும் எத்தனை பேர் முன்னாடி என்னை தல குனிஞ்சு நிக்க வைக்க போற? உன்னை படிக்க வைக்கணும்.. பெரிய ஆளாக்கனும்னு நினைச்சதுக்கு நீ எனக்கு கொடுக்கிற பரிசா இது..?”
அவனால் அவன் தம்பியை திட்ட கூட முடியவில்லை.. கண்ணுக்குள் வைத்து பார்த்து வளர்த்த தம்பி ஆயிற்றே.. இப்போது திடீரென அவனை கரித்துக் கொட்ட வாய் வர மாட்டேன் என்கிறது..
“அண்ணா சாரி அண்ணா.. என்னதான் நான் கிளாஸ்லாம் கட் பண்ணாலும் எக்ஸாம் எல்லாம் நல்லா படிச்சு பாஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்.. நான் நிச்சயமா இன்ஜினியரிங்கை கிளியர் பண்ணிடுவேன் ணா.. என்னை நம்பு ணா..”
“ஏற்கனவே உன்னை நம்பி நம்பி தானே இந்த நிலைமையில வந்து நிற்கிறேன்.. இன்னும் உன்னை நம்பணுமா? இல்ல.. வேண்டாம்.. நீ என்னவோ பண்ணிட்டு போ.. ஆனா உன் மேல எனக்கு போன நம்பிக்கையை உன்னால திருப்பி மீட்டு கொடுக்க முடியுமா? உன் மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன் நீ படிச்சு பெரிய ஆளா வருவேன்னு.. உங்க பிரின்ஸிபல் என் கிட்ட சொல்றாங்க நீ நெனச்சா இந்த காலேஜ்லயே முதல் மார்க் வாங்க முடியும்னு.. ஆனா உனக்கு கொஞ்சமாவது புரியுதா அது..? உனக்கு அவ்வளவு திறமை இருக்கு.. எல்லாத்தையும் இப்படி நாசமாக்கிட்டு இப்ப என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டு தலைக்குனிஞ்சு நிக்கிறே.. வெக்கமா இல்லையாடா உனக்கு?”
அவன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க இந்தர் ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டு “அண்ணா.. ஏதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன் ணா.. இனிமே அப்படி எல்லாம் போக மாட்டேன்.. சாரி ணா ப்ளீஸ்..”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் நண்பன் ரகு தீரன் அருகில் வந்து “அண்ணா எனக்கு தெரியும் ணா இந்தர் பத்தி.. நானும் எவ்வளவோ தடவை இவன் கிட்ட சொல்லி இருக்கேன்.. ஆனா அவன் எல்லாத்தையும் கொஞ்சம் விளையாட்டா எடுத்துகிட்டான்.. இனிமே எல்லாத்தையும் சீரியஸா எடுத்து படிப்பான் ணா.. அவன் இனிமே சரியா படிப்பாங்கறதுக்கு நான் உங்களுக்கு கேரன்டி கொடுக்கிறேன்.. நீங்க அடுத்த முறை இந்த காலேஜுக்கு வரும்போது இந்தர் காலேஜ்க்கு ரெகுலரா வரான்.. எல்லா சப்ஜெக்ட்லயும் நல்ல மார்க் வாங்குறான்னு பிரின்சிபல் மேடமே சொல்லுறதை நீங்க கேட்பீங்க.. அவன் ஒன்னும் கெட்டு போன பையன் எல்லாம் இல்லை ணா.. நல்லவன் தான்.. கொஞ்சம் ஜாலியா இருக்கணும்னு நினைச்சிட்டான்.. அவ்வளவுதான்.. அப்படி நினைச்சாலும் அவன் எந்த தப்பும் பண்ணல ணா.. எங்க கூட எல்லாம் எப்படி ஃப்ரெண்ட்லியா பழகுவானோ அதே மாதிரி தான் பொண்ணுங்க கிட்டயும் பழகினான்.. அவன் யார் கிட்டயும் தப்பா நடந்துக்கிட்டது இல்ல.. நீங்க அவனை தாராளமா நம்பலாம் ணா..”
அவன் சொன்னதைக் கேட்டு தீரன் “இத்தனை நாளும் அப்படித்தான் பா நம்பிகிட்டு இருந்தேன்.. சரி.. என்ன இருந்தாலும் என் தம்பியாச்சே.. இப்பவும் நம்புறேன்.. ஆனா ஒடஞ்ச என் நம்பிக்கை திரும்பி மீண்டு வர வரைக்கும் இவன் ஒரு சின்ன தப்பு பண்ணா கூட இவன்கிட்ட இருந்து என்னோட நம்பிக்கை மொத்தமாக போயிரும்.. அதுக்கப்புறம் என் தம்பின்னு கூட பாக்க மாட்டேன்.. அதோட எனக்கும் இவனுக்கும் இருக்கிற உறவே முடிஞ்சு போயிரும்..”
அவன் சொன்னதை கேட்ட இந்தர் பதறி போனான்.. “அண்ணா.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணா… நிச்சயமா அதுக்கு வாய்ப்பே வராது.. நான் நீங்க வளர்த்த உங்க தம்பி இந்தர் தான்னு உங்களை பெருமை பட வெப்பேன் ணா..”
இந்தர் நிஜமான வருத்தத்தோடு சொன்னதை கேட்டு அவனையும் அறியாமல் தீரனின் நெஞ்சில் ஒரு நிம்மதி படர்ந்தது..
கலங்கிய தன் கண்களை அவனுக்கு தெரியாமல் துடைத்துவிட்டு “சரி சரி.. நீ கிளாசுக்கு போ.. நான் கிளம்புறேன்..” சொல்லிவிட்டு தம்பியை திரும்பியும் பாராமல் நேராக கல்லூரிக்கு வெளியே நடந்தான்.. இந்தர் அவன் போவதையே கண் இமைக்காமல் பார்த்தபடி மெல்ல தன் வகுப்பறைக்கு சென்றான்..
அன்று முழுவதும் இந்தர் எல்லா வகுப்புகளிலும் தவறாமல் ஆஜராகி பேராசிரியர்களை வியப்புக்குள் ஆழ்த்தினான்..
மாலையில் வகுப்புகள் முடிந்து மதி அழகி பார்கவியோடு ஒரு புறம் கல்லூரியின் வாயில் கதவை நோக்கி நடந்து கொண்டிருக்க அவள் பின்னாலேயே நடந்து வந்து கொண்டிருந்தான் இந்தர்..
அப்போது இன்னொரு பேராசிரியர் அவள் அருகில் வந்து “ஹலோ மதி மேடம்.. என்ன ஒரே அதிசயமா இருக்கு..? உங்க ஃபேவரிட் ஸ்டுடென்ட் இப்போ எங்க கிளாஸ் எல்லாம் கூட அட்டென்ட் பண்றாரு.. ஏன் நீங்க போர் அடிச்சிட்டீங்களா அவருக்கு..?” என்று ஒரு எள்ளல் பார்வையுடன் கேட்டவள் “சாரி சாரி.. நீங்க கிளாஸ் எடுக்கறது அவனுக்கு போர் அடிச்சுடுச்சான்னு கேட்டேன்..” அந்தப் பேராசிரியை குரலில் அவ்வளவு கேலியும் கிண்டலும் நிறைந்து இருந்தது..
மதி அவரை நேருக்கு நேர் பார்த்து “ஆமா இந்தர் என்னோட ஃபேவரைட் ஸ்டுடென்ட் தான்.. இந்தர் மட்டும் இல்ல என் கிளாஸ்ல இருக்குற அத்தனை ஸ்டுடென்ட்ஸூமே எனக்கு ஃபேவரட் தான்.. இப்ப என்ன அதுக்கு..? பசங்களுக்கு பாடத்தில ஆர்வத்தை தூண்டுற மாதிரி கத்துக் கொடுக்க வேண்டியது ஒரு லெக்ச்சரோட கடமை.. நான் அதை சரியா செஞ்சிருக்கேன்.. அதான் என் கிளாஸை எல்லா பசங்களுமே தவறாம அட்டென்ட் பண்றாங்க.. ஃபுல்லா ஃபாலோ பண்றாங்க.. நல்லா ஸ்கோரும் பண்றாங்க..”
அவள் சொன்னது அத்தனையும் உண்மை.. அந்த கல்லூரியில் அவள் பாடம் எடுக்கும் விதம் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்க அவள் வகுப்பு என்றால் எல்லோரும் ஆர்வத்துடன் கவனித்து நன்கு படித்து அதிக மதிப்பெண்களும் எடுத்து விடுவார்கள்.. இதெல்லாம் மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு சிறு பொறாமையை தான் அவள் மேல் ஏற்படுத்தியது.. அதன் விளைவு தான் இந்த கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சுக்கள்..
மதியை பற்றி தெரிந்திருந்தும் அந்த பேராசிரியை “பசங்களுக்கு இன்ட்ரஸ்ட் வர வைக்க பாடம் மட்டும் நல்லா நடத்துனா போதும்னு நாங்க எல்லாம் நினைச்சோம்.. கொஞ்சம் அழகாவும் இருக்கனும்னு எங்களுக்கு என்ன தெரியும்? அழகா இருக்குற ஹீரோயினை பாக்குறதுக்காக படத்துக்கு நெறைய பேர் போற மாதிரி அழகா இருக்குற டீச்சரை பார்க்கிறதுக்காக பசங்க எல்லாம்..” என்று ஏதோ சொல்ல வந்தவளை தன் சுட்டு விரல் காட்டி தடுத்து நிறுத்தினாள் பார்கவி..
“ஹலோ மேடம்.. நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரியுதா? முதல்ல இந்தர் யாருன்னு தெரியுமா? இந்தர் மதியோட ஹஸ்பண்ட்டோட தம்பி.. மதி அவனோட அண்ணி.. யாரைப் பத்தி என்ன பேசுறதுன்னு சென்ஸ் இல்லையா உங்களுக்கு? என்ன வம்புக்கு அலையறீங்களா? உங்களையும் அந்த பரத் சாரை பத்தியும் நான் எடுத்து விடவா? பேசணும்னு நினைச்சா யார் வேணா யார பத்தி வேணா என்ன வேணா பேசலாம்.. கொஞ்சம் யாரு என்ன எப்படின்னு சுத்தி முத்தி பார்த்து அதுக்கப்புறம் பேசுங்க..” பொரிந்து தள்ளினாள் பார்கவி படபடவென..
“என்ன..? மதி மேடம்ககு கல்யாணம் ஆயிடுச்சா?”
“ஏன்.? அவங்களுக்கு கல்யாணம் ஆனதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு அவங்க கழுத்துல இருக்குற தாலியை எடுத்து காட்டுனா தான் நம்புவீங்களா? இப்படி அடுத்தவங்க விஷயத்தில மூக்கை நுழைக்கிறதை விட்டுட்டு நீங்க எப்படி நல்லா பாடம் நடத்தி பிள்ளைங்களை உங்க கிளாசுக்கு வர வைக்கிறதுங்கறதை பத்தி யோசிங்க.. தள்ளுங்க காத்து வரட்டும்..”
சொன்னவள் மதியழகியையும் இழுத்துக் கொண்டு விடு விடு என முன்னே நடந்தாள்..
மதியழகியின் பின்னால் நடந்து வந்த இந்தர் இது அத்தனையையும் கேட்டு மனதிற்குள் ரொம்பவும் புழுங்கிப் போனான்.. தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்பது அவனுக்கு இப்போது தான் விளங்கியது..
ஒவ்வொரு முறையும் மதி இந்த வேலையை நான் மிகவும் புனிதமாக நினைக்கிறேன்.. இதில் ஏதாவது தப்பு நடந்தால் என்னால் அதை தாங்க முடியாது என்று சொன்னதின் அர்த்தம் இப்போது அவனுக்கு விளங்கியது..
ஆனால் இப்போது விளங்கி என்ன பயன்.? எல்லாம் ஏற்கனவே கை மீறி போய் இருந்தது.. கல்லூரி முழுவதும் மதியழகியின் வகுப்புக்கு இந்தர் தவறாமல் போவதை பற்றி பல வேறு மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள்.. இந்தப் பேச்சுக்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியாமல் திணறினான் இந்தர்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 45
மதியழகியும் பார்கவியும் வாயில் கதவை அடைவதற்கும் தீரனின் மகிழுந்து அங்கே வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது..
வண்டியில் இருந்து இறங்கியவன் பார்கவியை பார்த்து புன்னகைத்து “எப்படி இருக்கீங்க பார்கவி..? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க “அட பரவாயில்லையே.. ஃபுல்லா உங்க பேச்சை தலைகீழ மாத்திக்கிட்டீங்க போல.. அந்த பழைய ஸ்லாங் எட்டி கூட பாக்குறது இல்ல போல..”
குறுகுறுவென மதியழகியையும் தீரனையும் பார்த்தபடி அவள் கேட்க அதற்கும் ஒரு புன்னகையையே பதிலாய் அளித்துவிட்டு “வாங்க.. உங்களையும் கூட்டிட்டு போய் உங்க வீட்ல விட்டுடறேன்” என்று அழைத்தான் பார்கவியை..
“இல்ல இல்ல.. பாண்டி வரேன்னு சொல்லி இருக்கான்.. இன்னைக்கு கொஞ்சம் வெளியில போயிட்டு வீட்டுக்கு போறேன்..”
அவள் முகத்தில் சிறு வெட்கம் தெரிய மதியழகி “என்னடி புதுசா வெட்கப்படுற? என்ன விஷயம்?” ஏதோ அவள் வித்தியாசமாய் தோன்றவும் தோண்டி துருவி கேட்டாள் மதியழகி..
“அது..” என்று இன்னும் வெட்கப்பட்டவள் மதியழகியின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்..
“அடியேய்.. இப்படி இந்த குட் ந்யூஸை இவ்ளோ லேட்டா சொல்ற? முதல்ல இதை தானே நீ சொல்லி இருக்கணும்.. அதான் நேத்திக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப தலை சுத்தல்.. மயக்கம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களா மேடம்?”
மதி “எங்க வீட்டுக்கு” என்று சொன்னதில் தீரன் சற்று இன்பமாய் அதிர்ந்திருக்க அவள் கேட்ட கேள்வியில் வெட்கத்தோடு தலையை மேலும் கீழுமாய் ஆட்டிய பார்கவி நெளிந்த படி முகத்தை மூடிக்கொள்ள தீரனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை..
“என்ன விஷயம்?” என்று சத்தம் இல்லாமல் வாயசைத்து கேட்டான் மதியழகியை..
“பாண்டி பிரதர் அப்பாவாக போறாரு.. அதுதான் மேட்டர்.. “
அவள் சொன்னதை கேட்டவன் தன் நண்பன் பாண்டிக்காக நிஜமாகவே சந்தோஷப்பட்டான்..
“இன்னிக்கி அதுக்கு தான் டாக்டரை பார்க்க போறோம்.. அவர் வந்து என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு..”
பார்கவி மெதுவாக சொல்ல “கங்கிராஜுலேசன்ஸ்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்களுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் கழிச்சு ஒரு சந்தோஷமான விஷயம் உங்க வாழ்க்கையில் நடக்குது.. இது லைஃப் டைம் ஃபுல்லா நீடிக்கணும்..”
பார்கவியின் தலையை வருடியபடி சொன்ன மதி.. “சரி.. அப்ப நான் கிளம்பவா? பத்திரமா போயிட்டு வா.. நான் வேணா பாண்டி அண்ணன் வரவரைக்கும் உன் துணைக்கு இருக்கவா..?”
அவள் கேட்டு முடிக்கும் முன் அங்கே தன் வண்டியோடு வந்து நின்றிருந்தான் பாண்டி..
அவனை பார்த்த தீரன் அவனை சென்று அணைத்துக் கொண்டு “வாழ்த்துக்கள் பாண்டி.. பார்கவி விஷயத்தை சொன்னாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு பா..” என்க “நானே எதிர்பார்க்கலை.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்ச ராசிதான்.. எங்களுக்கு இப்படி ஒரு கிஃப்ட் கிடைச்சிருக்கு.. வீட்டுக்கு போய் அவ கன்ஃபார்ம் பண்ணி சொன்னப்போ எனக்கு சந்தோஷத்துல இந்த உலகத்தையே சுத்தி வந்த மாதிரி இருந்துச்சு..”
அவன் சந்தோஷத்தின் உச்சத்தில் பேச தீரன் “உனக்கு புள்ள பொறக்க போகுது.. நீ வேற டைரக்டர் ஆக போற.. வாழ்க்கையில எல்லா நல்ல விஷயமும் நடக்குது.. கூடிய சீக்கிரம் நீ பெரிய டைரக்டர் ஆகி உன் படத்துல நான் ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கணும்..”
அவன் சொன்னதைக் கேட்ட பாண்டி “ஸ்டன்ட் மாஸ்டர் என்ன ஸ்டண்ட் மாஸ்டர்.. என் படத்துல உன்னை ஹீரோவாவே போடுவேன்.. இப்ப நான் டைரக்ட் பண்ண போற படத்துல உன்னை மாதிரி கட்டு மஸ்தான ஹீரோ தான் தேவைப்படுது.. பேசாம அந்த படத்திலே நீயே ஹீரோவா நடிச்சுறேன் தீரா..”
அவன் சொன்னதைக் கேட்டவன் சத்தமாக சிரித்தான்..
“என்னை பத்தி இவ்ளோ தெரிஞ்சும் மறுபடியும் என்னை கலாய்க்கிறீயா..? நீ போயி இப்போ நம்ம செய்ற படத்தை டைரக்ட் பண்றாரு இல்ல? அவர்கிட்ட கேட்டு பாரு.. ரத்தக்கண்ணீர் விடுவார் என் நடிப்பை பத்தி சொல்லி.. எனக்கெல்லாம் ரொமான்ஸ் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது.. சண்டை போட சொல்றியா? எத்தனை மணி நேரம் வேணாலும் போடுவேன்.. ஆனா லவ் பண்றதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லைடா ராஜா..”
அவன் பேசியதை கேட்ட மதி.. “ஏய் பவி.. வீட்டுக்கு போனப்பறம் எனக்கு ஃபோன் பண்ணுடி.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்றாள்..
“என்ன விஷயம் டி” பார்கவி கேட்க “ராத்திரி ஃபோன்ல சொல்றேன்.. இப்ப நீ டாக்டர் வீட்டுக்கு கிளம்பு.. லேட் ஆகிப்போச்சு..” என்றவள் அவளை அழைத்து போய் பாண்டியனின் மகிழுந்துவில் அமர வைத்தாள்..
அவளும் ஏறி அமர பாண்டியும் வண்டியை ஓட்டி போக அதற்குள் இந்தர் அங்கே வந்திருந்தான்..
இந்தர் மதி இருவரையும் முறைத்தப்படி தீரன் “ரெண்டு பேரும் வண்டியில ஏறுங்க..” என்று விரைப்பாக சொல்லிவிட்டு ஓட்டுனர் இருக்கையில் சென்று அமர்ந்தான்..
மதியும் இந்தரும் வண்டிக்குள் ஏறியதில் இருந்தே முகத்தை உம்மென்று வைத்திருந்தான் தீரன்.. இந்தருக்கோ தன் அண்ணனின் பார்வையை சந்திக்கவே முடியவில்லை..
மதியும் தீரனிடம் ஏனோ கோபமாகத்தான் இருந்தாள்.. இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் முகத்தை திருப்பிய படி தான் உட்கார்ந்து இருந்தார்கள்..
அடுத்ததாய் மலரழகியை வண்டிக்குள் ஏற்றிக்கொள்ள அந்த மகிழுந்துவில் அவள் ஏறிய போது இருந்த நிசப்தம் அவளுக்கு ஏதோ சந்தேகத்தை கிளப்பியது..
“ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு போலயே.. மூணு பேரும் நார்மலாவே இல்லயே.. என்னன்னு தெரியலையே.. உடனே தெரிஞ்சுக்கலன்னா எனக்கு மண்டை வெடிச்சிருமே.. யார் கிட்ட கேட்கிறது..?”
யோசனையுடனேயே அமர்ந்து வந்தவள் தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு அடுத்ததாய் தமிழ்வாணனும் வண்டியில் ஏறிவிட வீடு போய் சேரும் வரை அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றி கேட்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தாள்..
தன் தந்தை இருக்கும் போது அதைப்பற்றி பேச வேண்டாம் என முடிவு எடுத்துக் கொண்டாள் அவள்..
மகிழுந்து வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் மதியழகி அதிலிருந்து இறங்கி வேக வேகமாய் உள்ளே செல்ல தீரன் இந்தரை ஒரு அனல் பார்வை பார்த்துவிட்டு அவளை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்று விட்டான்..
தமிழ்வாணன் நிகழ்ந்தது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் காலையில் இருவரும் ஒற்றுமையாக தானே வந்தார்கள் என்று மதியழகியையும் தீரனையும் பற்றி நினைத்த போது அவர்களுக்குள் இருந்த அப்போதைய கோவம் அவருக்கு கவலையை தந்தது..
ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையில் தான் தலையிடக்கூடாது என்ற நாகரீகத்தை கருதி அவர் அமைதியாகவே இருந்து கொண்டார்..
அவரும் இறங்கி உள்ளே சென்றுவிட கடைசியாக இறங்கிய மலரழகி இந்தரை பார்த்து “ஏய் இந்தர்.. என்னடா பிரச்சனை? எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க..? உன்னால ஏதாவது ப்ராப்ளமா?”
அவனோ அவளை கோவமாய் பார்த்து “அப்படியே இருந்தாலும் நான் எதுக்கு அதை உன்கிட்ட சொல்லணும்? அதெல்லாம் சொல்ல முடியாது.. உனக்கு வேற ஏதாவது உருப்படியான வேலை இருந்தா அதை பாரு போ..” எடுத்தெறிந்து பேசினான் அவன்..
“நல்லா கழுவி ஊத்திட்டியா? உன் கோவம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சா? இப்ப சொல்லு என்ன பிரச்சனை?”
அவள் அவன் திட்டியதை புறம் தள்ளிவிட்டு மீண்டும் பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டாள்..
அதற்கு மேலும் அவளை எடுத்தெறிந்து பேச மனம் இல்லாமல் “அது.. நான் காலேஜ் கட் அடிச்சுட்டு ஃப்ரெண்ட்ஸோட சுத்துனது அண்ணாக்கு தெரிஞ்சு போச்சு.. இப்ப அண்ணா என் மேல ரொம்ப கோவமா இருக்காரு.. என் மேல இருக்குற நம்பிக்கை சுத்தமா போயிடுச்சுன்னு சொல்றாரு.. அவருக்கு மறுபடியும் என் மேல நம்பிக்கை வர வெக்கறதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல..”
அவன் சொன்னதைக் கேட்டவள் “அடச்சே.. இவ்வளவுதான் மேட்டரா? இதுக்கா இவ்வளோ ஃபீலிங்கு? இது என்னிக்கா இருந்தாலும் உங்க அண்ணனுக்கு தெரிய தானே போகுது.. இப்ப என்ன நீ காலேஜ் கட் அடிச்சிட்டு ஊர் சுத்துன.. அது தெரிஞ்சு உங்க அண்ணன் கோபமா இருக்காரு.. அதானே.. அந்த கோபத்தை சரி பண்ணனும்னா காலேஜுக்கு இனிமே ஒழுங்கா போ.. நீ ஒரு ஆறு மாசம் அப்படி போனாலே உங்க அண்ணன் பழையபடி உன்னோட பேச ஆரம்பிச்சுடுவாரு.. அவரை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அவர் மனசு ரொம்ப இளகுன மனசு.. அவரால ரொம்ப நாள் கோவமா எல்லாம் இருக்கவே முடியாது.. பெரிய ஸ்டண்ட் மாஸ்டர்ன்னு தான் பேரு.. ஆனா அவருக்கெல்லாம் கோபமே வராது தெரியுமா?” ஏதோ பலகாலமாக தீரனுடன் இருந்தவள் போல் பேசினாள் அவள்..
தன் பையை வண்டியிலேயே விட்டு விட்டு போயிருந்த மதி மீண்டும் அதை எடுக்க வரவும் மலரழகி பேசியதெல்லாம் அவள் காதில் விழுந்தது..
வெளியே வந்தவளை பார்த்து மலரழகி “என்ன கா..? மறுபடி வந்து இருக்க.. ஏதாவது விட்டுட்டு போயிட்டியா கார்ல…?” என்று திரும்பி பார்க்க அவள் பை காருக்குள் இருந்ததை பார்த்து அதை எடுத்து அவளிடம் நீட்ட வெடுக்கென அவளை முறைத்துக் கொண்டே அதை அவளிடம் இருந்து பறித்து கொண்டு போனாள் மதி..
“நம்மள எதுக்கு அக்கா இப்படி முறைக்கிறா.. என்னன்னே புரியலையே.. நான் என்ன பண்ணேன்..?”
யோசித்தபடி செல்லும் அவளையே பார்த்து இருந்தாள் மலரழகி..
“இந்தர்.. எங்க அக்கா என்னடா மாமாவையும் முறைக்குது.. என்னையும் முறைக்குது.. மாம்ஸ் என்னடான்னா உன்னையும் அக்காவையும் மாறி மாறி முறைச்சுட்டு இருக்காரு.. என்னடா பிரச்சனை உங்க மூணு பேருக்குள்ளயும்..”
“தெரியலடி.. அண்ணா என்கிட்ட தான் கோவமா பேசினாரு.. அண்ணிகிட்ட என்ன கோவம்னு தெரியலயே..”
“சரி வா.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தானே.. புருஷன் பொண்டாட்டி தானே.. இன்னைக்கு அவங்களுக்குள்ள அடிச்சிகிட்டாலும் நாளைக்கு அவங்களே சேர்ந்திடுவாங்க.. நாம நம்ம வேலையை பார்க்கலாம்..”
அவனின் சோர்ந்திருந்த முகத்தை பார்த்து அவனிடம் “இங்க பாரு.. ரொம்ப அப்படியே மூஞ்சியை ஃப்யூஸ் போன பல்பு மாதிரி தொங்க போட்டுட்டு இருக்காத.. கூடிய சீக்கிரம் நீ உங்க அண்ணன் வளர்த்த புள்ளையா ரெகுலரா காலேஜ் போயி இந்த ரெண்டு வருஷத்துல நல்லா ஸ்கோர் பண்ணவும் ட்ரை பண்ணு.. அப்புறம் அவரு ஏன் உன் மேல கோவமா இருக்க போறாரு..? அவருக்கு வேண்டியது நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகணும்ங்கறது தானே..? அதை செஞ்சிட்டா அப்புறம் உன் மேல இருக்குற கோவம் எல்லாம் அப்படியே பஞ்சா பறந்து போயிட போகுது.. இதுக்கு போய் எதுக்கு இவ்ளோ கவலை படுற? ஃபிரீயா விடு.. பாத்துக்கலாம்..”
அவள் சொன்னதை கேட்டவன் “என் அண்ணன் என் மேல கோவமா இருக்காரு.. உங்க அக்கா உன் மேல கோவமா இருக்காங்க.. இவங்களை எப்படி சரி செய்ய போறோம்னே தெரியலையே..” என்றான் முகத்தில் குழப்பத்தோடு..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 46
வீட்டிற்கு உள்ளே வந்த பிறகு “சரி நான் என் ரூம்க்கு போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்..” மலரிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான் இந்தர்..
மலரழகியோ ஏதோ யோசனையிலேயே இருந்தாள்..
யோசித்தபடியே தன்னறைக்கு சென்றவள் “இந்த அக்கா எதுக்கு நம்ம மேல கோவமா இருக்குது..? என்னன்னே விளங்கலையே.. நான் எதுவுமே பண்ணலையே.. நான் ஒழுங்கா காலேஜ் தானே போயிட்டு வரேன்.. என்னடா இது?” யோசித்தவளுக்கு தான் எதுவும் தவறு செய்ததாக சின்ன விஷயம் கூட மனதிற்கு புலப்படவில்லை..
“சரி சரி.. அக்காவே சொல்றாளான்னு பார்ப்போம்..” என்று கவலை மறந்து தன் அடுத்த வேலையில் இறங்கினாள்..
அறைக்கு வந்த மதியழகி கோவமாய் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு தன் கைப்பையை கட்டிலின் மேல் விட்டு எறிந்தாள்..
அப்போதுதான் குளியலறையில் இருந்து வெளியே வந்த தீரன் அவளை முறைத்து விட்டு தன் கைபேசியை எடுத்து அதில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு பொறுமை பறந்து போனது..
“தீரா.. என்ன கோவம் உங்களுக்கு என் மேல..? எதுக்கு இப்படி என்னை முறைச்சுக்கிட்டே இருக்கீங்க..? நான் என்ன தப்பு பண்ணேன்?”
அவள் கேட்கவும் அவள் அருகே வந்தவன் “என்ன மதி.. தெரியாத மாதிரி கேக்குற..? இந்தர் காலேஜை கட் அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு இருந்திருக்கான்.. அதை பத்தி ஒரு வார்த்தை கூட நீ என்கிட்ட சொல்லல.. அவன் அந்த பொண்ணோட ஃபோன்ல கார்ல பேசிட்டு இருந்தப்ப கூட நான் கேட்டேன் இல்ல..? அப்ப கூட அவனை பத்தி எதையும் சொல்லாம மறைச்சிட்ட தானே..? அவன் தப்பு பண்ணவன்.. தான் செஞ்ச தப்பை சொல்ல தைரியம் இல்லாம அவன் மறைச்சது கூட எனக்கு பெரிய விஷயமா தெரியல.. ஆனா அதை என் கிட்ட இருந்து நீ மறைச்ச பாரு.. அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அப்படி என்ன அவனை என்கிட்டே இருந்து காப்பாத்தணும் உனக்கு..? இப்படி என்கிட்ட விஷயத்தை மறைச்சு அவனை காப்பாத்தி விட்டா அவன் எப்படி நல்ல வழிக்கு வருவான்..? இதே மாதிரி தான் கடைசி வரைக்கும் தப்பு பண்ணிட்டே இருந்திருப்பான்.. நீ ஒரு ப்ரொஃபஸர் தானே..? ஏன் உனக்கு இது புரியவே இல்லையா?”
அவன் படபடவென்று பேசிக் கொண்டே போக “தீரா நான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம மறைச்சது இந்தரை உங்க கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக இல்லை.. அவன் திட்டு வாங்க கூடாதுங்கறதுக்காகவும் இல்லை.. நான் இந்த விஷயத்தை உங்ககிட்ட மறைச்சதுக்கு காரணம் நீங்கதான்.. உங்களுக்காக தான் மறைச்சேன்”
அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது “எனக்காகவா? என்ன சொல்ற மதி? எனக்கு புரியல..”
அவன் அவளை குழப்பத்தோடு பார்க்க “இந்தர் விஷயத்தை உங்ககிட்ட சொன்னா நீங்க எவ்ளோ உடைஞ்சு போவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஏன்னா என் தங்கையை பத்தி அன்னைக்கு பீச்ல உங்க விஷயம் தெரிஞ்சப்போ நான் முழுசா நொறுங்கி போயிட்டேன்.. ஏற்கனவே இந்தர் என்கிட்ட நடந்து கிட்ட விதத்துல நீங்க ரொம்ப மனசு வருத்தத்துல இருந்தீங்க.. இப்ப மறுபடியும் இந்த விஷயத்தையும் சொல்லி உங்களை ரொம்ப நோகடிக்க வேண்டாம்னு தான் நான் சொல்லல..”
அவள் விளக்கமாய் சொல்ல அந்த விளக்கம் தீரனுக்கு இன்னும் கோவத்தை தான் உண்டாக்கியது.. அவன் தான் தன்னை விட பல மடங்கு அதிகமாய் தன் தம்பியை நேசிப்பவனும் அவனை பற்றியே யோசிப்பவனும் ஆயிற்றே..
“அப்படின்னா அவன் எக்கேடு கெட்டு போனாலும் பரவால்ல.. என் மனசு நோகாம பாத்துக்கணும்னு நெனச்சியா? என்ன மதி பேசுற? இப்படியே அவன் காலம் முழுக்க என்னை ஏமாத்தறதா நினைச்சுகிட்டு தன்னை ஏமாத்திட்டு இருந்தான்னா அவன் வாழ்க்கை என்னாகும்? இப்ப நம்ம கல்யாணம் பண்ணிட்டதனால அவன் உனக்கு உறவாகி இருக்கான்.. இதுக்கு முன்னாடி அவன் உன்னோட ஸ்டூடன்ட்.. அந்த முறையில பார்த்தாலும் அவனை பத்தி நீ என்கிட்ட சொல்லி இருக்கனும் தானே..? எனக்காக யோசிச்சு அவன் இப்படியே பாழா போகட்டும்னு விட்டுடுவியா? ஒரு டீச்சரா உன்னோட கடமை அவனை பத்தி என்கிட்ட சொல்லறதுன்னு உனக்கு தெரியலையா?”
அவன் கேட்ட கேள்வியில் இருந்த நியாயம் அவளுக்கு புரிந்தாலும் அவள் ஏன் அப்படி செய்தாள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் படபடவென அவளை குற்றம் சாட்டியவன் மேல் கொஞ்சம் உரிமையாய் கோபப்பட்டாள் அவள்..
“கரெக்ட்டு இல்ல..? நம்ம கல்யாணம் நாடக கல்யாணம் தானே..? நான் என்ன நெனச்சேனனா உங்க மனசை நோகடிக்காம அவனை நானே வழிக்கு கொண்டு வந்துடலாம்.. இப்ப நான் அவனோட அண்ணி தானே? எனக்கு அந்த கடமை இருக்கேன்னு பைத்தியக்காரத்தனமா நினைச்சுட்டேன்.. சாரி.. நம்ம கல்யாணம் ஒரு நாடக கல்யாணம்கிறதை ஒரு ஒரு செகண்ட் மறந்து போயிட்டேன்.. நான் உங்ககிட்ட சொல்லி இருக்கணும்.. எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு டீச்சரா நான் எப்பவும் அவன் கிட்ட சொல்லிட்டு தான் இருந்தேன்.. ஆனா இப்போ அவனோட அண்ணியா சொல்லும் போது அவன்கிட்ட நிச்சயமா சேஞ்ச் இருக்குமனு எனக்கு தெரியும்.. அதனால தான் உங்க கிட்ட சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம்.. நானே இதை பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன்.. அப்படி உரிமையா நெனைச்சது தப்புதான்.. சாரி தீரா..”
அவள் ரொம்பவும் உடைந்த குரலில் சொல்லிவிட்டு லேசாக கலங்கிய விழிகளோடு தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு போக திரும்பவும் அவள் கையை பிடித்தான் தீரன்..
“சாரி மதி.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. நீ இப்படித்தான் நினைச்சிருப்பேன்னு எனக்கு..” என்று எதோ சொல்ல வந்தவன் கையில் இருந்து தன் கையை விடுவித்தவள் “இல்ல பரவால்ல.. இருக்கட்டும் தீரா.. என்ன இருந்தாலும் நான் யாரோ தானே..? நான் என் லிமிட்டுக்குள்ள இருந்திருக்கணும்.. இனிமே உங்க தம்பி காலேஜ்ல என்ன பண்றாருனனு நான் உங்ககிட்ட வந்து சொல்லிடறேன்.. நீங்களே அவரை பார்த்துக்கோங்க..” சொல்லிவிட்டு விடுவிடுவென குளியலறைக்குள் சென்றாள் அவள்..
“மதி.. ப்ளீஸ்.. மதி.. சாரி” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க அவளோ ஏற்கனவே கோவமாய் குளியறைக்குள் நுழைந்து இருந்தாள்.. அவன் குரல் அறைந்து மூடிய கதவில் பட்டு திரும்பியது..
தீரனுக்கு ரொம்பவும் சங்கடமாய் போனது..
“டேய் தீரா.. உனக்கு எதுக்குடா இந்த வேலை..? மதி இந்தரோட அண்ணியா அவனை சரி பண்ணி வழிக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறா.. அதை புரிஞ்சுக்காம அவசரப்பட்டு திட்டி ஏதேதோ பேசி கோவப்பட்டு.. ஐயோ.. நீ ஏன்டா இப்படி இருக்க..?” தன் முகத்திற்கு நேராய் சுட்டுவிரலை நீட்டி தன்னை தானே கேட்டுக் கொண்டான் தீரன்..
“சே.. நீ ஒரு பொறம்போக்குடா.. எதுவுமே யோசிக்காம மனசுல தோணுனதை அப்படியே சொல்லிட வேண்டியது..”
முன்னிருந்து பின்னாக தலையை கோதியபடி பல்லை கடித்துக் கொண்டு தன்னை தானே நொந்து கொண்டிருந்தான் தீரன்..
உள்ளே சென்ற மதியும் குளித்துவிட்டு உடையை அணிந்து கொண்டு குளியல் அறையின் கதவை திறக்க அதுவோ அவள் இழுப்பிற்கு திறந்து கொடுக்காமல் முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தது..
கதவு இறுகிப்போய் வாயிற்காலோடு பிணைந்து கொண்டிருந்தது.. பலமுறை இழுத்து திறக்க முயற்சி செய்தும் அவளால் கதவை திறக்கவே முடியவில்லை..
கதவை ஓங்கி அழுத்தமாய் அடித்து கீழே திறக்க முயற்சி செய்ய அப்போதும் அது திறக்காமல் போக களைப்போடும் சலிபோடும் தளர்ந்து போய் “ப்ச்..” என்று உச்சு கொட்டியவள் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டாள்..
இரு நிமிடங்கள் தன்னையே ஆசுவாசப்படுத்தி கொண்டவள் மறுபடியும் கதவை நோக்கி வேகமாய் படை எடுத்தாள்.. இப்போது கதவை ஓங்கி தட்டி தட்டி கதவை திறக்க முயல அந்த சத்தம் கேட்டு தீரன் “மதி என்ன ஆச்சு? கதவு திறக்க வரலையா?” என்று கேட்க அவன் கேட்ட நேரம் அவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் அப்படியே வடிந்து போயிருந்தது..
“ஆமா தீரா.. நானும் எவ்வளவு நேரமா கதவை திறக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. கதவு நல்லா இறுகி போய் புடிச்சுகிட்டு இருக்கு.. திறக்கவே வரல..” அவள் சொன்னதை கேட்டவன் “இரு.. நான் முயற்சி பண்ணி பாக்குறேன்..” என்று அந்த தாழ்ப்பாளை பிடித்து அழுத்தி திருகி தள்ள கதவு சடாரென அந்க கணமே வேகமாய் திறந்து கொண்டது..
திறந்த வேகத்தில் கதவோடு வேகமாய் உள்ளே இழுத்து செல்லப்பட்டவன் அதன் பின்னே நின்று கொண்டிருந்த மதிமேல் விழ அப்படியே இருவருமாக அந்த குளியலறையின் தரையில் சரிந்து இருந்தார்கள்..
விழுந்த வேகத்திலும் அவள் தலையில் அடிபட்டு விடக்கூடாது என்று ஒரு கையால் அவள் பின்னந்தலையையும் இன்னொரு கையால் அவள் முதுகு புறத்தையும் அணைத்து பிடித்திருந்தவன் கீழே விழும் போது அவனையும் அறியாமல் அவள் இதழ் மேல் அவன் இதழை பொருத்தி இருந்தான்..
இதை சற்றும் எதிர்பாராத மதி திடுக்கிட்டு போய் புருவங்களை உயர்த்தி விழிகளை பெரிதாய் வட்டமாக விரித்து அவன் முகத்தையே உறைந்து போய் பார்த்திருந்தாள்.. இருவரின் இதயமும் படபடக்கும் சத்தம் இருவருக்கும் கேட்டதோடு அவரவர் மேனியின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த துடிப்புகளை உணர்ந்து கொண்டிருந்தார்கள் அந்த ஜோடி கிளிகள்..
இருவருமே தங்களின் திடீர் இதழ் ஒற்றலில் தீவிர அதிர்ச்சிக்கு உள்ளாகி விழிகள் பிதுங்கி தெறித்து வெளியே வந்து விழுந்து விடும் அளவு கண்களை அகலமாய் விரித்து ஒருவரை ஒருவர் பார்த்திருந்தார்கள்..
இருவருமே படபடப்போடு பதறிப் போய் இருந்தாலும் இருவருக்குமே தங்கள் இதழை மற்றவரிடம் இருந்து பிரித்தெடுக்கும் எண்ணமே இல்லை..
சில நொடிகள் ஒருவர் கண்ணை மற்றவர் ஆழ்ந்து மிரண்டு போய் பார்த்து இருக்க மெல்ல மெல்ல அந்தப் பார்வையில் ரசனை கூடி போனது..
அவள் இதழின் துடிப்பை தன் இதழில் உணர்ந்து கொண்டவனுக்கு அவன் உடலில் இருந்த அத்தனை மோக முடிச்சுகளும் அவிழ்ந்து அவள் இதழோடு மேலும் மேலும் ஒன்றி கலந்து கொள்ள உந்தி தள்ள ஏதோ ஒரு தயக்கம் அப்படி செய்வதிலிருந்து தடுத்து அவனை ஒரு பரிதாபமான நிலைக்கு தள்ளி கொண்டு இருந்தது..
அந்த தயக்கத்திற்கும் அவள் மீது தனக்கு ஏற்பட்டிருந்த மயக்கத்திற்கும் இடையே சிக்கித் தவித்தான் காளை அவன்..
🎵🎶🎼
இதழில் கதை எழுதும்
நேரமிது
இதழில் கதை எழுதும்
நேரமிது
இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….
மனதில் சுகம்
மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ…..
மனதில்
சுகம் மலரும் மாலையிது
இளமை அழகை
அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி
அணைப்பதற்கே
இரு கரம்
துடிக்குது
தனிமையும் நெருக்கிட
இனிமையும் பிறக்குது..
🎵🎶🎼
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 47
மதியின் இதழில் இருந்து தன் இதழை பிரிக்கவும் முடியாமல் இரு உதடுகளும் உரசிக் கொண்டிருந்த நிலையில் மேற்கொண்டு முன்னேறவும் முடியாமல் தவித்துப் போனான் தீரன் அவன்..
அவள் நிலையோ அதைவிட கவலைக்கிடமாய் இருந்தது.. அவன் கண்களில் இருந்தே தன் பார்வையை கூட அகற்ற முடியாமல் ஏற்கனவே தன் தலையையும் இடையை சுற்றியும் வளைத்து பிடித்திருந்த அவன் கைகளுக்குள் இன்னும் வாகாய் இயைந்து அடங்கிப் போகச் சொல்லி ஏதோ வசிய மருந்து உட்கொண்டது போல் அவள் இதயம் அவளை அவன் பால் தள்ளிக் கொண்டிருந்தது..
ஆனால் அவளின் மூளையோ “வேண்டாம் இது தவறு” என்று அவ்வப்போது எச்சரிக்கை மணி அடித்த படி அவன் உடலோடு அவள் உடலை ஒன்றி போக விடாமல் தடையாய் நின்று தடுத்துக் கொண்டு இருந்தது..
இந்த இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு என்ன செய்வது என்று விளங்காமல் முதலில் அவன் கண்களுடன் ஏற்பட்டிருந்த தொடர்பை பிரிக்க எண்ணி கண்ணை மூடி கொண்ட நொடி உள்ளுக்குள் அவன் இதழோடு இணைப்பை ஏற்படுத்தியிருந்த தன் உதடுகளின் தாப உணர்வு பூதாகாரமாய் உடைப்பெடுத்து வெடிக்க அவள் உதடுகள் அவனுடைய இதழ்களின் அழுத்தமான தீண்டலுக்காய் வேண்டி இன்னும் அதிரடியாக துடிக்க தொடங்கின..
அந்தத் துடிப்பினை தன் அதரங்களில் உணர்ந்தவனுக்கோ அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனது.. அவள் இதழுக்குள் தன்னை மறந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்க தொடங்க சரியாக அதே நேரம் படுக்கையில் வீசியிருந்த மதியழகியின் பையிலிருந்து அவளுடைய கைபேசி கூவி கூவி அவளை அழைக்க தொடங்கியது..
அதில் தங்கள் நிலை உணர்ந்து இருவரும் பதறி போக தீரன் அவள் மேலிருந்து எழ முயல அவன் சட்டையை அவள் இறுக்கமாய் பிடித்திருந்ததால் அவள் மேலேயே மீண்டும் இழுபட்டு தாறுமாறாய் விழுந்தான்..
“ஓ.. சாரி.. சாரி..” என்று அவன் சட்டையிலிருந்து அவள் தன் கையை எடுத்து கொள்ள.. மெல்ல அவளினின்று எழுந்தான் அவன்..
அவளும் எழ அவள் முன்னிருந்து நகர்ந்து நின்று அவளுக்கு வழி விட்டு நின்றான்.. அவளும் தன் கைபேசியை எடுக்க அவசரமாய் செல்ல குளியலறை வாயிலில் தடுக்கி விழ போனாள்..
மறுபடியும் அவள் விழாமல் இடை வளைத்து பிடித்த தீரன் “பாத்து போ மதி.. என்ன அவசரம்..? யார் ஃபோன் பண்ணாங்கன்னு பார்த்து திரும்ப கூப்பிட்டுக்கலாம்.. மெதுவா போ” என்றவன் மெல்ல அவளை தன் கைகளிலிருந்து விடுவித்தான்..
அவனை பார்த்து விழிகளில் ஏதோ ஒரு வித தடுமாற்றத்தோடு “தேங்க்ஸ்” என்றுவிட்டு சென்றாள் அவள்..
கட்டிலுக்கு சென்றவள் தன் கைப்பையை திறந்து யார் அழைத்தது என்று கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.. அதில் பார்கவி அழைத்திருப்பதாக காட்டவும் தாமதிக்காமல் அவளுக்கு உடனே அழைப்பு விடுத்தாள்..
அழைப்பை ஏற்ற பார்கவி “ஹேய் மதி.. எனக்கு கன்ஃபார்ம் ஆயிடுச்சு டி.. டாக்டர் பேபி ரொம்ப நல்லா ஹெல்த்தியா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா நான் தான் ரொம்ப வீக்கா இருக்கேன்னு சொன்னாங்க.. ஹாஸ்பிட்டல்லருந்து கெளம்புனதிலிருந்து சரவணன் என்னை ஒரே திட்டிக்கிட்டே இருக்கான்.. ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. ஒழுங்கா உடம்பை கவனிக்கறது இல்ல.. இப்ப பாரு.. உடம்பு எவ்வளவு வீக்கா இருக்குன்னு ரொம்ப திட்டறான்டி.. கஷ்டமா இருக்கு..”
அவள் அழுவது போன்ற குரலில் பேசிக்கொண்டே போக மதியோ இங்கே சற்று முன் நிகழ்ந்த இதழ் கலப்பில் அவளுள் விளைந்திருந்த படபடப்பு சிறிதும் குறையாமல் தன்னை தானே அந்த துடிப்பிலிருந்து ஆசுவாசப்படுத்தி கொள்ள போராடி கொண்டிருந்தாள்..
“ஹ்ஹா.. ஹான்.. குழந்தை ந்ந.. நல்லா இருக்கா..” குரலில் தடுமாற்றத்தோடு கொஞ்சம் படபடவென மூச்சு வாங்கியபடி கேட்டாள் அவள்..
“ஹேய்.. மதி.. என்னடி உனக்கு இப்படி மூச்சு வாங்குது.. இந்த டைம்க்கு எங்கயாவது ஜாகிங் போயிட்டு வந்தியா என்ன?”
மதியோ அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி போனாள்..
ஒரு மணி நேர உடற்பயிற்சி உடலுக்குள் செய்யமுடியாத மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாத எரிசக்தி இழப்பையும் இரண்டு நிமிட இதழ் கலப்பு அவளுக்குள் ஏற்படுத்தி இருந்ததே..
தன் நிலையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவள் தன்னை தானே அந்த பதற்ற நிலையில் இருந்து சமன் செய்த படி “அது.. அதெல்லாம் ஒன்னும் இல்லடி.. ஃபோன் அடிக்கும் போது பாத்ரூம்ல இருந்தேனா.. ஃபோனை எடுக்க அவசரமா ஓடி வந்தேன்.. அதான் மூச்சு வாங்குது..” எதையோ சொல்லி சமாளித்தாள்..
அவள் பேசியதை கேட்டுக் கொண்டே வந்த தீரனுக்கும் சற்றுமுன் அவர்களுக்குள் நடந்த காதல் கலவரத்திற்கு பிறகு அவள் முகத்தைப் பார்த்து பேசுவது சங்கடமாக இருந்தது..
அவள் கண்களை சந்திக்க சங்கடப்பட்டு அவளை தனிமையில் பேச விட்டு விட்டு சட்டென அறையில் இருந்து வெளியேறினான்..
அவன் தலை குனிந்த படி வெளியேறுவதை பார்த்துக் கொண்டே இருந்தவள் பார்கவியின் அழைப்பில் கைபேசியில் கவனத்தை செலுத்தினாள்..
இப்போது அவளின் பதற்றம் குறைந்திருக்க கொஞ்சம் நிதானமாக தெளிவாக பேசினாள் அவள்..
“ஏய் பவி.. பாண்டி அண்ணன் உன் மேல இருக்கிற அக்கறையில தானடி அப்படி சொல்றாரு.. அவருக்கு உன் மேல அவ்ளோ லவ்.. அதுல தான் உடம்பை கவனிக்கணும்னு அக்கறையா சொல்றாரு.. அதை புரிஞ்சுக்காம அவர் திட்டுறாருன்கிற? அவர் சொல்ற மாதிரி நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துடி.. இப்போ உன்னை நம்பி ஒரு குழந்தையும் உன் வயித்துல வளருதுல? அப்புறம்..? உனக்காக இல்லனாலும் அந்த குழந்தைக்காக நீ நல்லா சாப்பிட்டு உடம்பை பாத்துக்கணும்.. நான் அண்ணாவுக்கு தான் சப்போர்ட்.. அவர் சொல்றது ரொம்ப கரெக்ட்..”
“ஏய்.. உன்கிட்ட போய் சொன்னேன் பாரு.. என்னை சொல்லணும்.. நீ எப்பவும் உன் அண்ணனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ? சரி அதை விடு.. ஆமா.. சாயந்திரம் கிளம்புறப்ப என்னை எதுக்கோ நைட் ஃபோன் பண்ண சொன்ன இல்ல..? எதுக்கு பண்ண சொன்ன?”
ஞாபகமாக பார்கவி கேட்கவும் “அது.. தீரன் விஷயமா தான்டி நான் உன்னை ஃபோன் பண்ண சொன்னேன்.. பாண்டி அண்ணா தீரனுக்கு அவர் எடுக்க போற படத்துல ஹீரோவா சான்ஸ் கொடுக்கிறேனு சொன்னார் இல்ல..? தீரன் கூட எனக்கு நடிக்க வராது. வேண்டாம்.. ஸ்டண்ட் மாஸ்டராவே இருக்கிறேன்னு சொன்னாரே..? ஆனா எனக்கு என்னவோ தீரனால நல்லா நடிக்க முடியும்னு தோணுது.. பாண்டி அண்ணா கிட்ட சொல்லி அவருக்கு ஹீரோவாவே சான்ஸ் கொடுக்க சொல்லுடி..”
“நான் கூட நினைச்சேன்.. தீரன் அண்ணா எனக்கு தெரிஞ்சி கொஞ்சம் சொல்லி கொடுத்தா நல்லா நடிப்பார்ன்னு தான் தோணுது.. இங்க முதல் நாள் கொஞ்சம் திணறினாரு.. ரெண்டாவது நாள் உன் கூட அவர் சூப்பரா நடிக்க தொடங்கிட்டாருடி. நீ தான் ரொம்ப சொதப்புன.. நான் சரவணா கிட்ட பேசி பார்க்கிறேன்.. எனக்கு என்னவோ சரவணனும் அவரை ஹீரோவா நடிக்க வைக்க ஓகே சொல்லுவான்னு தான் தோணுது..” என்றவளின் பின்னால் நின்று சரவணன் என்ன விஷயம் என்று புருவம் உயர்த்தி இறக்கி கேட்டான் அவளிடம்..
“சொல்றேன்.. இருங்க சொல்றேன்..” என்பது போல் கைகாட்டியவள் “சரிடி.. நான் ஃபோனை வச்சுடறேன்.. நான் சரவணன் கிட்ட பேசிட்டு அப்புறம் உனக்கு சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்..
பார்கவியிடம் என்ன விஷயம் என்று பாண்டி கேட்க “அது ஒன்னும் இல்ல சரவணா.. தீரன் அண்ணனை நீ உன் படத்துல ஹீரோவா போடுறேன்னு சொன்னதுக்கு ஸ்டண்ட் மாஸ்டராவே இருக்கேன்னு சொன்னாரு இல்ல..? அதை பத்தி தான் மதி பேசிட்டு இருந்தா.. அவரை ஹீரோவாவே போட முடியுமான்னு ஒன்ன கேட்க சொன்னா..”
அவள் சொன்னதைக் கேட்ட பாண்டி “ஆமா பவிக்குட்டி.. நான் கூட சொன்னேன்.. ஆனா டைரக்டர் கிட்ட இதை பத்தி சொன்னப்போ தீரன் ரொமான்ஸ் ஸீன் நடிக்க கொஞ்சம் கஷ்டப்படுவான்னு தான் சொன்னார்.. அவனுக்கு சுத்தமா எந்த பொண்ணை பார்த்தாலும் நடிப்பே வராது.. இங்கேயே மதி சிஸ்டர் கூட நடிக்க அவன் எவ்வளவு சிரமப்பட்டான்னு பார்த்தே இல்ல..”
“நீ சொல்றது சரிதான் சரவணா.. ஆனா அப்புறம் அவர் மதி கூட நல்லா நடிக்க தொடங்கிட்டார் இல்ல..?”
“ஆமா நீ சொல்றதும் ஓகே தான்.. ஆனா மதி கூட நடிச்ச மாதிரியே மத்த பொண்ணுங்க கிட்டயும் நடிப்பானான்னு தெரியலையே.. என்னோட முதல் படம்.. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு..”
“நீங்கதான் அந்த ஸ்கிரீன் டெஸ்ட், ஆடிஷன் எல்லாம் எடுப்பீங்க இல்ல..? அந்த மாதிரி தீரா அண்ணனை ஒருவாட்டி எடுத்து பாரு.. சரிப்பட்டு வந்தா நடிக்க வை.. சரி வரலன்னு தோணுச்சுன்னா விட்டுடு..”
அவள் சொன்னதும் சரியான யோசனையாக படவே “சரி.. நீ சொல்றதனால ட்ரை பண்ணி பாக்குறேன்.. தீரா மாதிரி ஒரு அழகான ஹீரோ கிடைச்சா எனக்கு என்ன கசக்குதா படத்துல போடுறதுக்கு? அவன் மட்டும் நல்லா நடிச்சிட்டான் படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டு தான்.. பார்க்கலாம்..”
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு மனம் நிறைந்திட அழகாய் புன்னகைத்தாள் அவள்..
அவள் முகத்தை பார்த்தவன் “இல்லைன்னாலும் இப்படி என் புள்ளையை வயத்துல சுமந்துக்கிட்டிருக்கிற இந்த டைம்ல நீ கேட்கிற.. அதுக்காகவே எப்படியாவது தீராவை என் முதல் படத்தில நடிக்க வச்சே தீருவேன்.. இந்த நேரத்துல என் ஜிங்லி கேட்டு அதை செய்யாம இருக்கறதுக்கு இந்த மாமனுக்கு மனசு ஒப்பலடி..”
சொன்னவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து தன் மகவு அவள் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் செய்தி கேட்ட அந்த தருணம் தந்த மகிழ்ச்சியை அவளோடு பகிர்ந்து கொண்டிருந்தான்..
இங்கே மதியழகி அடுத்து தான் தகவல் அழைப்பு மையத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது நினைவுக்கு வர வேக வேகமாய் சமையல் அறைக்கு சென்றாள்..
ஆனால் அங்கே தீரன் ஏதோ செய்து கொண்டிருக்க அதை பார்த்தவள் “தீரா.. என்ன பண்றீங்க?” என்க அவனோ சற்று முன் நிகழ்ந்த அழகிய கவிதை நிகழ்வின் தாக்கத்திலிருந்து வெளி வர முடியாமல் ஏற்கனவே அவஸ்தையில் இருந்தான்.. அவளின் கண்களை சந்திக்க முடியாமல் தான் செய்து கொண்டிருந்த வேலையில் பார்வையையும் கவனத்தையும் செலுத்தியபடி பேசினான் அவளிடம்..
“நீ கால் சென்டருக்கு போகனும் இல்ல..? அதுக்கு தான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் மதி.. நேத்தே நீ உன் கால் சென்டர் போகல.. இன்னைக்கும் போகலைன்னா பிரச்னை ஆக போகுது.. அதனால இப்ப சாப்பிடறதுக்கு லைட்டா ஸ்னாக்ஸ் பண்ணிட்டு நைட்டுக்கும் டிஃபன் பண்ணி வைக்கலாம்னு வந்தேன்..”
அவன் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 48
அவள் அதுவரை தன் வீட்டிலும் சரி தன்னை சுற்றி இருந்த தோழிகள்.. உறவினர்கள்.. அண்டை வீட்டுக்காரர்கள்.. யார் வீட்டிலும் இவனை போன்ற ஒரு ஆணை கூட பார்த்தது இல்லை..
தான் ஆண் என்ற எந்த கர்வமும் இன்றி ஒரு பெண்ணுக்கு சரிசமமாய் அந்த வீட்டில் தனக்கும் பொறுப்பு இருக்கிறது என்று எண்ணுபவன் ஒரு சிறந்த ஆண் மகனுக்கு இலக்கணம் என்று தோன்றியது அவளுக்கு..
ஏனோ அந்த நொடி அவளுக்கு ஓடி சென்று அவனை கட்டி அணைத்து அழுத்தமாய் அவனுக்கு ஒரு இதழ் முத்தத்தை பரிசாய் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது..
தன் நினைப்பு போகும் விதத்தை எண்ணி நாணம் கொண்டவள் இதழை கடித்துக் கொண்டு தன் தலையில் தட்டிக் கொண்டாள்..
சமையல் செய்து கொண்டிருந்த தீரன் அவ்வப்போது அவள் தன்னை பார்க்காத போது ஓரக்கண்ணால் அவள் முகபாவனைகளின் மாறுதல்களை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.. தீரன் அவள் கொண்ட குறும்பும் சிரிப்பும் கொஞ்சம் விஷமமும் காதலும் வெட்கமும் கலந்த முக பாவங்களை பார்த்து தன்னை பற்றி தான் ஏதோ நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டான்..
“என்ன மதி.. உன்னை நீயே அடிச்சுக்குற..? என்னை பத்தி ஏதாவது கேவலமா திட்டுறியோ..? என்னடா இது.. ஆம்பளையா கிளம்பி வேலைக்கு போகாம சமையல் ரூம்ல வந்து சமைச்சுக்கிட்டு இருக்கான்னு..”
அவன் பேசிக் கொண்டே போக அவளோ “இல்ல.. அதுக்கு ஆப்போசிட்டா தான் நெனச்சேன்.. ஆம்பளைங்கல இப்படியும் ஒருத்தர் கூட இருப்பாரான்னு.. இந்த மாதிரி ஒருத்தர் எனக்கு புருஷனா கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்னு..” என்று சொல்லி நிறுத்தியவள் எதையோ உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள்..
“சாரி.. என்னோட ஃப்ரெண்டா கிடைக்குறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்னு நினைச்சேன்..”
அவள் தான் சொன்னதை திருத்தி சொல்ல அவனுக்கோ அதை அவள் திருத்தாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது..
“சரி அதை விடு மதி.. நான் என்னோட ஸ்பெஷல் பணியாரம் பண்ணி இருக்கேன்.. எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பார்த்து சொல்லு..”
“தாராளமா.. இந்த மாதிரி எனக்கு ஒருத்தர் சமைச்சு கொடுத்து நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.. தேங்க்ஸ் தீரா..”
அவள் உற்சாகமாய் சொல்லவும் “அதுக்கு என்ன..? இனிமே தினமும் சமைச்சு கொடுத்துட்டா போச்சு.. நீ நல்லா கால் மேல கால் போட்டுட்டு அப்படி டைனிங் டேபிள்ல உக்காந்து என்ன வேணுமோ ஆர்டர் பண்ணு.. நான் உனக்கு செஞ்சு கொடுக்கிறேன்.. காலம் முழுக்க இப்படியே உனக்கு செஞ்சு கொடுக்க கூட நான் ரெடி தான்..”
அவன் அவளை ஆழ்ந்து பார்த்தபடி சொன்ன வார்த்தையில் சற்று நிமிர்ந்து அவன் கண்களை அவள் பார்க்கவும் பார்வைகளின் ஒரு சில நொடி நேர அழகிய மௌனமான காதல் பரிபாஷை பரிமாற்றங்களுக்கு பிறகு சற்றே சுதாரித்தான் அவன்..
“கவலைப்படாதே.. இதுக்கு பதிலா வேற எதுவும் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்க மாட்டேன்.. ஒரு ஃப்ரெண்டாவே இருந்து காலம் முழுக்க உனக்கு இப்படியே செஞ்சு கொடுப்பேன்..”
அவன் அப்படி சொன்னதும் அவள் முகமோ புஸ்ஸென்று போனது.. அதையும் தன் மனதில் குறித்துக் கொண்டான் அவன்..
“ஏன்.. என் புருஷனா இருந்து இதெல்லாம் செஞ்சு குடுக்கறேன்னு சொல்லக்கூடாதா? இது மட்டுமில்ல.. எல்லாமே நீ எனக்கு ஒரு புருஷனா செய்யணும்னு தோணுது தீரா.. ஏன்டா ஃப்ரெண்டு ஃப்ரெண்டுன்னு சொல்லி என்னை படுத்தற?” மனதிற்குள் வறுத்தெடுத்தாள் அவனை..
அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகம் சுருங்கியதை கவனித்திருந்தான் தீரன்..
அந்த முக சுணக்கம் அவன் முகத்தில் ஒரு மலர்ச்சியை உண்டாக்கி இருந்தது..
அதன் பிறகு வேகவேகமாய் சிற்றுண்டி இரவுக்கு உணவு எல்லாவற்றையும் இருவரும் சேர்ந்து செய்துவிட்டு கிளம்பினார்கள்..
தானே அவளை வேலைக்கு கொண்டு விடுவதாக அவன் சொல்லவும் “இல்ல தீரா.. நீங்க காலையில தான் உங்க ஷூட்டிங்க்கு எல்லாம் போயிட்டு டயர்டா வந்து இருப்பீங்க.. இப்பயும் என்னோட வேலை செஞ்சிட்டு இருந்தீங்க.. வேண்டாம் விடுங்க.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நான் பஸ்ல போய்க்கிறேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு “ஹலோ மதி மேடம்.. வேலைக்கு ஈவினிங் நீங்க மட்டும் போகல.. நானும் தான் போறேன்.. ஒரு ஷூட்டிங்ல ஸ்டன்ட் செஞ்சுக்கிட்டு இருந்தேன் இல்ல..? கால் சென்டருக்கு பக்கத்துல.. ஞாபகம் இருக்குதா..? அந்த ஷூட்டிங்கு ஏற்கனவே நேத்து போகல.. இன்னைக்கு வந்தே ஆகணும்னு எனக்கு அப்பவே ஃபோன் வந்துருச்சு.. அதனால எனக்கு ஒன்னும் சிரமமில்ல.. நான் என் ஷூட்டிங் போகும் போது தான் உன்னை கூட்டிட்டு போறேன் கிளம்பு..”
அவன் கொஞ்சம் கோபமாய் சொல்லவும் அவளும் உதட்டை சுழித்தபடி “சரி சரி.. வரேன்.. கோபப்படாதீங்க..” என்று சொல்லி அவனோடு வேலைக்கு செல்ல கிளம்பினாள்..
அவளுடைய வேலை இடமான தகவல் அழைப்பு மையத்திற்கு கொண்டு வந்து விட்டவன் அவள் உள்ளே சென்றதும் வண்டியை எடுக்க அதுவோ கிளம்பாமல் சதி செய்தது.. அங்கேயே நின்று தானே வண்டியை சரி செய்து விட்டு எடுத்துக் கொண்டு போகலாம் என்றால் படப்பிடிப்பு தளத்துக்கு செல்வதற்கு நேரம் ஆகிவிடும்..
அதனால் வண்டியை பழுது பார்க்க கம்மியரை ( மெக்கானிக்) கைபேசி மூலமாக அழைத்து அவரிடம் வண்டியின் பழுது பற்றி பேசிக் கொண்டிருந்தவன் சொல்லிவிட்டு கைபேசி இணைப்பை துண்டித்து திரும்ப தன் பணியிடத்திற்கு சென்ற மதி அழகி அந்த அலுவலக வாயிலில் திரும்ப வந்து கொண்டிருந்தாள்..
“என்ன ஆச்சு மதி? ஏன் திரும்பி வந்துட்ட? உடம்பு ஏதாவது சரியில்லையா?” அவன் அக்கறையோடு விசாரிக்க “இல்ல.. இந்த வேலையே வேண்டாம்ன்னு சொல்லி விட்டுட்டு வந்துட்டேன்..” என்றாள் அவள்..
“ஏன்..? என்ன ஆச்சு..?” புரியாமல் கேட்டான் தீரன்..
அவளோ அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேலையை விட்டு விட்டு வந்து இப்போது தன் புலம்பலை ஆரம்பித்திருந்தாள்..
“இப்ப என்ன பண்றதுன்னு தெரியல.. இந்த வேலையில நிறைய சம்பளம் கிடைச்சுது.. அவசரப்பட்டு வேலையை விட்டுட்டேன்.. கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம்..”
அவள் முகத்தில் ஏகப்பட்ட வருத்தத்தோடு சொல்ல “நீ கோவப்பட்டயா? ஆச்சரியமா இருக்கே.. நீயே கோபப்பட்டன்னா அப்போ ஏதோ பெரிய தப்பா நடந்து இருக்கணும் அங்க.. என்ன ஆச்சு சொல்லு..”
அவன் அப்படி பேசியது அவள் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..
“அது.. போன வாரம் அந்த சனிக்கிழமை நான் பீச்சுக்கு வந்தேன் இல்ல..? அன்னைக்கு சொல்லாம கொள்ளாம லீவ் போட்டுட்டேன்.. அப்பவே மேனேஜர் செம திட்டு எனக்கு.. அதுக்கு சாரி கேட்டுட்டேன்.. அதுக்கப்புறம் அந்த மாதிரி லீவ் போட மாட்டேன்னு சொல்லி இருந்தேன்.. நம்ம கல்யாணத்துக்கு லீவு போட்டப்போ என்னோட முக்கியமான வேலை எல்லாம் இன்னொருத்தி கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு தான் வந்தேன்.. அந்த பொண்ணு நான் செய்ய சொன்னதை ஒழுங்கா நோட் பண்ணிக்காம வேலையில ஏதோ தப்பு பண்ணிட்டா.. அதனால அந்த க்ளையன்ட் டென்ஷன் ஆகி ரிப்போர்ட் பண்ணிட்டாங்க போல.. அதான் மேனேஜர் என்னை கூப்ட்டு நான்தான் அந்த பொண்ணுக்கு ஒழுங்கா எக்ஸ்பிளைன் பண்ணலன்னு சொல்லி என்னை கன்னாபின்னான்னு காய்ச்சி எடுத்துட்டான்.. சரியான ராட்சசன்.. ரொம்ப ஓவரா கத்துறான் அந்த ஆளு.. அதுவும் எல்லார் முன்னாடியும்.. எனக்கு ஒரே அசிங்கமா போச்சு.. ஒரு ஸ்டேஜுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியல.. போயா.. நீயும் உன் வேலையும்னு சொல்லி இந்த வேலையே வேண்டாம்ன்னு விட்டுட்டு வந்துட்டேன்..”
அவள் சோகமாய் முகத்தை வைத்து கொண்டு சொல்ல அவனுக்கோ ஏதோ சின்ன குழந்தை ஒன்று தன் பொம்மை உடைந்து விட்டது என்று சொல்லி அழுவது போல தான் இருந்தது.. அதையும் ரசித்திருந்தான் அவன்..
“சரி.. அதனால என்ன..? வேலை போனா போகட்டும்.. ஒரு உண்மையை சொல்லவா..? எனக்கே நீ இந்த வேலையை பண்றது அவ்வளவா புடிக்கல.. பட சூட்டிங் போற நானே நைட் 10 மணிக்கு மேல வேலை செய்யறதில்லை.. ஆனா நீ.. இந்த கால் சென்டர்ல 12 மணி வரைக்கும் வேலை செய்ற.. திரும்பி காலையில காலேஜுக்கு போயிட்டு வரே.. உன் ஹெல்த் என்ன ஆகும்.. இந்த வேலை போனா போகுது விட்டு தொலை.. நீ இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு அவ்வளவு நல்ல வேலை எல்லாம் ஒன்னும் இல்ல இது..”
அவன் சொன்னதை கேட்டவளுக்கு அவன் அக்கறை புரிந்தாலும் உள்ளுக்குள் அவளை வேறு ஒரு கவலை அரித்துக்கொண்டு இருந்தது.. “அதில்ல தீரா.. இந்த வேலையில கொஞ்சம் நிறைய சம்பளம் கிடைச்சுட்டு இருந்தது.. இப்ப அது இல்லன்னா கை உடைஞ்ச மாதிரி இருக்கும்.. மாச செலவுக்கு..”
முழுதாய் சொல்ல முடியாமல் அவள் இழுக்க “மதி.. நான் ஒத்துக்குறேன்.. நம்ப ஒரு நாடகத்துக்காக தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டு இருக்கோம்.. ஆனா அதுக்காக நீ பணம் இல்லாம கஷ்டப்படும் போது நான் அதை வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா? புருஷனா மட்டுமல்ல ஒரு ஃப்ரெண்டாவும் அப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன்.. செலவெல்லாம் நான் பாத்துக்குறேன்.. அதுக்காக நீ இனிமே வேலைக்கு போக வேண்டாம்னு நான் சொல்லல.. ஒன்பது மணிக்குள்ள முடியிற மாதிரி வேற ஏதாவது வேலை பாத்துக்கலாம்.. நீ இப்ப கிளம்பி வீட்டுக்கு போ..” என்றான்..
அவனோடு பேசியதில் ஓரளவு அமைதி அடைந்தவள் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் வீட்டிலிருந்து வந்த வழியே திரும்ப நடக்க “எங்க போற?” தீரன் கேட்க “இது என்ன கேள்வி? பஸ் ஸ்டாண்டுக்கு தான் போறேன்.. பஸ் ஏறி வீட்டுக்கு போகணும் இல்ல..” என்றாள்..
“இல்ல.. பஸ்ல எல்லாம் போக வேண்டாம்.. நான் ஆட்டோ புக் பண்றேன்..”
கைபேசியின் மூலம் அதற்கான செயலியில் அவன் பதிவு செய்ய போக “ஒரு நிமிஷம் தீரா.. ப்ளீஸ்.. நான் கேக்குறதை தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் உங்க கூட உங்க ஷூட்டிங் பார்க்க வரலாமா? நான் இதுவரைக்கும் ஷூட்டிங் பார்த்ததே இல்லை.. ஆசையா இருக்கு..”
அவள் கண்ணை சுருக்கி தலை சாய்த்து அவனிடம் கேட்க அவளின் அந்த அழகான பாவனையில் சொக்கி போனான் அவன்..
“ஐயோ படுத்தறாளே.. இவ சாதாரணமா பேசினாலே தீரன் ஃப்ளாட்டு.. அதுல இப்படி அழகா கொஞ்சி கொஞ்சி கேட்டா.. ஐயோ.. என் மனசு என் கண்ட்ரோல்ல நிக்கவே மாட்டேங்குதே.. நான் என்ன செய்வேன்..”
உள்ளுக்குள் புலம்பியபடியே “அதுக்கென்ன மதி.. தாராளமா வரலாம்.. வா போலாம்..” என்று இயல்பாக அவள் கைப்பிடித்து அந்த கட்டிடம் நோக்கி நடந்தான் அவன்..
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது..!! – 49
மதியின் கைபிடித்து அவன் அந்த படப்பிடிப்பு தளத்தினுள் நுழைய உள்ளே சென்றதுமே அனைவரும் அவர்களை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தீரன் அதுவும் ஒரு பெண்ணோடு உரிமையாய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வருவதெல்லாம் உலக அதிசயமாயிற்றே.. மதிக்கும் அவர்கள் அப்படி ஒரு விதமாய் குறுகுறு என தங்களை பார்த்தது என்னவோ போல சங்கடமாய் இருந்தது..
அவர்களை பார்த்த பாண்டிக்கோ மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை..
அந்த படத்தின் இயக்குனர் பாண்டியிடம் “யாரு பாண்டி அந்த பொண்ணு..? இவ்வளவு பொறுமையா தீரன் கைய புடிச்சு கூட்டிட்டு வர்றான்.. ஒரே அதிசயமா இல்ல இருக்கு..?”
பாண்டியோ அந்த கேள்விக்காகவே காத்திருந்தவன் போல் “அது தீரனோட வைஃப் சார்.. நேத்து தான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சுச்சு..” என்று சொல்ல அப்போது அந்த இயக்குனர் மட்டுமல்ல பக்கத்தில் அமர்ந்து இருந்த தயாரிப்பாளரும் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்..
“தீரனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்னய்யா? ஏதாவது கனவு எதுவும் கண்டியா? அவன் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்ததையே எங்களால நம்ப முடியல.. இதுல நீ என்ன கல்யாணம் அது இதுன்னு ஏதோ கதை விட்டுகிட்டு இருக்க..?”
பாண்டி பொய் தான் சொல்கிறான் என்று தீர்மானமே செய்து விட்டிருந்தார் அவர்..
“ஐயோ சார்.. நீங்க என்னை நம்பலைனா தீரனையே கூப்பிட்டு கேளுங்க..”
பாண்டி சொல்லி முடிக்கவும் தீரன் மதியை அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு அவர்கள் அருகில் வந்து பாண்டியிடம் “பாண்டி.. இன்னைக்கு என்ன சீன் பாண்டி.. சொன்னா வேகமா முடிச்சுட்டு கிளம்பிடுவேன்.. மதி வேற வந்துருக்கா.. செட்டில ரொம்ப நேரம் இருக்க முடியாது..”
அவன் பேசிய பேச்சு வழக்கில் இன்னும் அதிர்வுக்குள்ளாகி இருந்தனர் அந்த இயக்குநர் தயாரிப்பாளர் ஜோடி..
அந்த இயக்குனர் தீரனை பார்த்து “யோவ் தீரா.. என்னையா ஆளே மாறிட்ட.. பாஷை எல்லாம் சுத்தமா மாறிடுச்சு..? முந்தா நேத்து செட்டுக்கு வரும்போது கூட அப்படியே என் காது கிழியறா மாதிரி தரை லோக்கல் பாஷையில பேசிக்கிட்டு இருந்தே.. இப்ப என்னடான்னா இவன் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கறான்.. நீ ஒரு பொண்ணோட செட்டுக்கு வர்ற.. ஏற்கனவே இதையே நம்ப முடியாம நாங்க திணறிக்கிட்டு இருந்தோம்.. இப்ப பார்த்தா நீ வந்து இவ்வளவு டீசண்டா பேசுற? தப்பா நினைச்சுக்காத.. நான் ஒன்னை ஒரு முறை கிள்ளி பாத்துக்கிறேன்..” என்று சொல்லி அவன் கையை நறுக்கென அந்த இயக்குனர் கிள்ளிவிட அவனோ “யோவ் டைரக்டர்.. ஏன்யா?” என்று கத்த “அட.. டைரடக்கரு கூட டைரக்டரா மாறிடுச்சு.. கலக்கறியே தீரா..”
“யோவ்.. நீ ரொம்ப ரீலை ஓட்டாதயா.. ஆமா.. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தான்.. அது ரொம்ப திடீர்னு முடிவு எடுத்துட்டதனால யாரையும் என் கல்யாணத்துக்கு கூப்பிட முடியல.. பாண்டி மட்டும் தான் என் கல்யாணத்துக்கு வந்திருந்தான்..”
“மம்.. பொண்ணு பெரிய இடமா இருக்கும் போல இருக்குது.. பார்க்க படிச்ச புள்ள மாதிரி தெரியுது..”
அந்த தயாரிப்பாளர் கேட்க அதற்குள் பாண்டி இடை புகுந்து “அவங்க என் வைஃப் வேலை செய்யறாங்க இல்ல அந்த காலேஜ்ல ப்ரொஃபஸரா இருக்காங்க.. அந்த காலேஜ்ல தான் நம்ம தீரனோட தம்பியும் படிக்கறான்..”
“ஓ.. தம்பியோட ப்ரொஃபஸரையே கல்யாணம் கட்டிக்கிட்டியாக்கும்.. பெரிய ஆளு தான் தீரா நீ.. படிச்ச பொண்ணு.. அதை கூட கவுத்துட்ட.. பாவம் படிச்ச பொண்ணு படிப்பு வாசனையே இல்லாத உன்னை கட்டிக்கிட்டிருக்குது.. என்ன எல்லாம் கஷ்டப்பட போகுதோ?”
அந்த இயக்குனர் கண்களில் இவனுக்கெல்லாம் அந்த வாழ்வை பார் என்பது போன்று ஒரு பொறாமை தெரிய அதை முழுதுமாய் வெளிப்படுத்த முடியாமல் ஏளனமாய் பேச.. பாண்டியோ “ஏன் தீரனுக்கு என்ன குறைச்சல்.. அவனுக்கு படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைக்கல.. குடும்பத்தை சுமக்க வேண்டிய நிலைமையில இருந்ததுனால அவன் படிக்கல.. ஒரு வேளை அவன் படிச்சிருந்தா இப்ப எங்கேயோ இருந்திருப்பான்..”
அவனுக்காக அவர்களிடம் சத்தமாய் பேசி விட்டு தீரனின் தோளில் கையை போட்டு வேறு பக்கம் அழைத்துக் கொண்டு போனவன் “நீ வா தீரா.. உனக்கு இந்த சீன் என்னன்னு சொல்றேன்.. முடிச்சிட்டு நீ மதியை கூட்டிட்டு கிளம்பு.. இவனுங்களோட எல்லாம் பேசிட்டு இருந்தா தேவையில்லாதது எல்லாம் பேசி உன்னை வம்பிழுத்துக்கிட்டு இருப்பானுங்க.. சரியான பொறாமை பிடிச்சவனுங்க..”
அந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும் முறைத்த படி பாண்டி தீரனுக்கு ஆதரவாய் ஆறுதலாய் பேசிக்கொண்டே போக “அதை விடு பாண்டி.. நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆவற? இதெல்லாம் நான் கண்டுக்கறதே இல்ல.. ஆனா அவங்க சொல்றதும் உண்மை தானே பாண்டி.. படிப்பு விஷயத்துல மதிக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது தானே பாண்டி… அதுவும் நாலு பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்து படிக்க வைக்கிற ப்ரொஃபஸர் அவ.. தன்னோட புருஷன் படிக்காதவன்னு நாளைக்கு வெளியில சொல்லிக்கிறப்ப அவளுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்..? அவங்க சொல்ற மாதிரி என்னை கட்டிக்கிட்டதனால அவ கஷ்டம் தான் பட போறா..”
அவன் வருத்தத்தோடு சொன்னதைக் கேட்ட பாண்டி “படிப்பு என்ன படிப்பு தீரா.. இப்ப எல்லாம் எந்த வயசிலயும் படிக்கலாம்.. இப்ப கூட நீ நெனச்சா படிக்க முடியும்..”
“ரொம்ப சுளுவா சொல்லிட்ட பாண்டி.. ஆனா நினைச்சு பாரு.. போன வருஷம் ஒரு ஹிந்தி படத்தில ஸ்டன்ட் பண்ண போயிருந்தோம் இல்ல..? அங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்..? இங்கிலீஷ்லயும் பேச முடியாம ஹிந்தியிலயும் பேச முடியாம அவங்களுக்கு அந்த ஸ்டன்டை சொல்லி குடுத்து செஞ்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.. அப்பதான் எப்படியாவது கஷ்டப்பட்டு கொஞ்சம் படிச்சிருக்கலாமோன்னு தோணுச்சு பாண்டி..” அவன் குரலில் ஏகமாய் வருத்தம் இழையோடியது..
“அதெல்லாம் நினைக்காத தீரா.. இங்க பாரு.. மதி ரொம்ப நல்ல பொண்ணு.. அவங்க அப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டாங்க.. அவங்க ஒரு மனுசனோட குணத்தைப் பார்த்துதான் அவங்கள மதிப்பிடுவாங்கன்னு எனக்கு தோணுது.. என் பவி குட்டி மாதிரி தான் அவங்களும்.. அதனால அதை பத்தி எல்லாம் கவலைப்படாம நீ இன்னைக்கு வேலையை சீக்கிரம் முடிக்க பார்..” என்று அவனுக்கு அன்று அவன் நடிக்க வேண்டிய காட்சியை விளக்க ஆரம்பித்தான் பாண்டி..
அங்கே தனியாக மதியை அமர்த்திவிட்டு தீரன் வந்துவிட அவளை எல்லோரும் யார் இது என்று ஒரு மார்க்கமாய் பார்த்து வைக்க அவளுக்கு அந்தப் பார்வைகளில் சங்கடமாய் போனது..
அந்த வினோத பார்வைகளுக்கிடையே அமர முடியாமல் தீரன் எங்கு போனான் என்று தேடிக் கொண்டு நடக்க தீரனும் பாண்டியும் ஒன்றாய் அந்தப் பக்கமாய் வருவதைப் பார்த்து அவர்களை நோக்கி சென்றாள்..
அதே சமயம் அவர்கள் அருகில் வந்ததும் இருவரும் பேசியது அவள் காதில் விழ அங்கிருந்த ஒரு கேரவன் வண்டியின் பின்னால் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை கேட்டிருந்தாள்..
தீரன் பேசியதை கேட்டு அவளுக்கு மனதிற்கு சங்கடமாய் இருந்தது.. அந்த நொடி ஏதோ ஒரு முடிவு எடுத்துக் கொண்டவள் தீரன் பார்க்காத நேரத்தில் அவன் அவளை அமர வைத்து விட்டு வந்த அதே இடத்தில் போய் மறுபடியும் அமர்ந்து கொண்டாள்..
அன்று தீரன் செய்ய வேண்டிய சண்டை காட்சியின் படி அவன் ஒரு உருளையான பீப்பாயின் மேல் நின்று உருட்டி கொண்டே வரும்போது அவனை கத்தி வைத்து தாக்க வரும் நான்கு பேரை லாவகமாக தவிர்த்து அவர்களை அடித்து வீழ்த்த வேண்டும்..
அவன் உருளையின் மேல் ஏறி தன்னையே நிலை நிறுத்திக் கொண்டு இந்தப் பக்கமும் அந்த பக்கமும் சமநிலைக்காக ஆட்டியபடி நின்று கொண்டிருக்க அவனைத் தாக்க நான்கு பேர் நான்கு இடங்களில் மறைவாக கத்தியை வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்கள்..
அதை பார்த்த மதியழகி பதறிப்போய் அமர்ந்திருக்க அவள் புறம் திரும்பி பார்த்துக் கொண்டே உருளையின் மேல் சமநிலையில் நின்று கொண்டிருந்தவன் அவள் முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்து தலையை இடவலமாய் ஆட்டியபடி புன்னகைக்க அவளோ மிகுந்த பதற்றத்துடனேயே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவன் அந்த இயக்குனர் ஆக்சன் என்று சொன்னவுடன் அந்த உருளையை உருட்டிக் கொண்டே சமநிலையில் முன்னேற முதலில் ஒரு ஆள் கத்தியோடு அவன் முன்பக்கம் இருந்து பாய லாவகமாய் அவன் கையைப் பிடித்து தடுத்தவன் அவனை அப்படியே கையால் சுழட்டி அடித்து வேறு பக்கமாய் காலால் உதைத்து தள்ளியிருந்தான்..
இந்த ஒரு நிகழ்வு நிகழ்வதற்குள் அந்த ஆள் தீரனை கத்தியால் குத்த வந்த போதே திகைத்துப் போய் கண்களை படபடவென அடித்துக்கொண்டு தீரன் அவனோடு சண்டையிடும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு பதட்டத்தோடு பார்த்திருந்தவள் அவன் அந்த ஆளை பிடித்து வேறு புறம் தள்ளியவுடன் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்..
ஆனால் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அடுத்த ஆள் பக்கவாட்டில் இருந்து ஒரு பெரிய அரிவாளோடு அவனை தாக்க வர அதை கண்டு “தீரா..ஆஆஆ” என அரண்டு போய் கத்தியே இருந்தாள் பெண் அவள்..
அதில் அவள் புறம் திரும்பியவன் அப்போதும் தன் கவனம் சிதறாது அந்த உருளையில் சம நிலையில் இருந்த படியே அந்த ஆள் கையில் இருந்த அரிவாளை பிடித்து தடுத்து அவன் முகத்திலேயே ஒரு குத்து விட அவன் நான்கடி பின்னால் பறந்து போய் சுருண்டு விழுந்தான்..
பாண்டி இயக்குனர் பக்கம் இருந்து ஓடி சென்று மதியிடம் “மதிமா.. அவனுக்கு ஒன்னும் ஆகாது.. இதெல்லாம் அவனுக்கு ரொம்ப ஈஸி மதிமா.. லெஃப்ட் ஹேன்டாலேயே நாலு பேரை தூக்கி அடிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பான்.. அவனுக்கு ரெண்டு கை கூட வேண்டாம்.. நீ ஏம்மா இவ்வளவு பயப்படுற..? அமைதியா இரு.. இங்க பாரு.. டைரக்டர் ஏற்கனவே நீ தீரான்னு கத்துனதுல டென்ஷனாகி என்னை தான் முறைச்சிட்டு இருக்காரு.. இன்னொரு வாட்டி நீ இப்படி சத்தம் போட்டேனா எனக்கு தான் அடி விழும்… கொஞ்சம் அமைதியா இருமா ப்ளீஸ்..”
மதி தீரா என்று அழைத்தது தீரனுக்கு ஏற்கனவே காதில் விழுந்திருக்க அங்கே பாண்டியன் அவளோடு பேசி கொண்டிருப்பதை பார்த்து ஓரளவு நிம்மதியானான் அவன்.. ஆனால் பாண்டி நகர்ந்தவுடன் அவள் மறுபடியும் அவனை பதைபதைத்து படபடக்கும் கலங்கிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் அவளுக்காக கவலை கொண்டான்..
மூன்றாமவன் தீரனை குத்த வர அவளோ முகத்தை மூடிக்கொண்டு இரண்டு விரல்களுக்கு இடையில் ஒரு வித பயத்தோடும் இறுக்கத்தோடும் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க அவனையும் சமாளித்து அடித்து வீழ்த்தி இருந்தான் தீரன்..
மூன்றாமவனை சமாளித்து முடித்ததும் அவள் பக்கம் திரும்பியவன் அவள் இன்னும் முகத்தை மூடி கைவிரல் இடுக்கின் வழியாய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படி அவனை பார்த்துக் கொண்டிருக்க தனக்காக அவள் கொண்ட பதட்டமும் பயமும் அவன் அதரங்களில் அழகிய புன்னகையை புகுத்தி இருந்தது..
அந்த உணர்விலேயே மூழ்கி இருந்தவன் அடுத்து ஒரு ஆள் பின்பக்கத்தில் இருந்து தாக்க வர அந்த ஒரு நொடியில் அந்த கத்தி குத்தை சமாளிக்க தவறினான்..
அவனின் மேல் கையில் அந்த ஆளின் கத்தி கொஞ்சம் ஆழமாக பாயவும் அரண்டு போய் “தீரா..ஆஆஆஆ” என்று கத்தியபடி தீரனிடம் பதறி போய் ஓடி வந்திருந்தாள் அவனின் மதி..
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 50
தீரனின் மேல் கையில் ஆழமாக பாய்ந்த கத்தி அவனை நன்றாக பதம் பார்த்திருக்க அந்தக் காட்சியை கண்ட நொடி உயிர் துடித்து போய் “தீரா..ஆஆஆஆ” என்று கத்தியபடி அவனிடம் ஓடி வந்திருந்தாள் அவனின் மதி..
அவள் கண்களில் இருந்து நிற்காத அருவியாய் உவர் நீர் வழிந்து கொண்டிருக்க பதறிய நெஞ்சத்தோடு அவன் கையில் இருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்தும் வழி தெரியாமல் அழுது கதறி புலம்பினாள் பெண் அவள்..
“என்ன தீரா இது? கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மாட்டீங்களா? வாங்க.. உடனே ஹாஸ்பிடல் போகலாம்.. ரத்தம் நிக்கவே இல்ல. எவ்ளோ பெரிய காயம்..?! இனிமே இந்த வேலையே வேண்டாம்.. இன்னியோட இந்த அடிதடி வேலைக்கு முழுக்கு போடுங்க.. பட்டினியா கடந்தாலும் பரவாயில்லை.. வேற ஏதாவது ஆபத்து இல்லாத வேலையை தேடிக்கலாம்.. என்னால தினம் தினம் உங்களை இப்படி பார்க்க முடியாது.. கையில பாஞ்ச கத்தி வேற எங்கேயாவது பாஞ்சு இருந்ததுன்னா.. ஐயோ.. கடவுளே.. நெனச்சு பாக்கவே முடியல என்னால.. அந்த செகண்ட் நான் செத்தே இருப்பேன்.. ஒரு நிமிஷம் என் உயிரே என்கிட்ட இல்ல தீரா..”
அவள் அவனுக்கு அடிபட்டுவிட்டது என்ற கவலையில் மனதில் தோன்றியதை சொல்லி புலம்ப அந்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் அவள் தீரனை அந்த வேலைக்கு முழுக்கு போட சொல்லியது மட்டும் அழுத்தமாய் காதில் விழுந்து அவர்களை பெரும் கலவரத்திற்கு உள்ளாக்கியது.. இருவருமே அரண்டு தான் போனார்கள் அவள் சொன்னதை கேட்டு..
“ஐயையோ.. என்னய்யா இந்த பொண்ணு.. மொத்தமா நமக்கு ஆப்பு வச்சிடுவா போல இருக்கே.. இந்த பையன் ஆஞ்சநேயர் பக்தனா இருந்ததே பரவாயில்லை போலயே.. இன்னும் இந்தப் படத்துல தீரன் முடிக்க வேண்டிய ரெண்டு மூணு ஸ்டண்ட் ஸீன் பாக்கி இருக்கே.. இந்த பொண்ணு அவனை அதை எல்லாம் முடிக்க விட மாட்டா போலயே.. இந்த நிலைமையில வேற யாரையாவது ஸ்டன்ட் மாஸ்டரா போட்டோம்னா நம்ம ரெண்டு பேரு தலைலயும் துண்டு தான்..”
அந்த இயக்குனர் விட்டால் அழுது விடுவார் போல இருந்தது..
இங்கே தீரனும் “அய்யோ மதி.. ஒன்னும் இல்ல எனக்கு.. நிறைய முறை இந்த மாதிரி காயம் பட்டு இருக்கு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நாளைக்கு பாரு.. இந்த அடி பட்ட சுவடே தெரியாம ஐயா மறுபடியும் வந்து இங்கே எப்படி ஸ்டண்ட் பண்றேன்னு..”
அவன் உற்சாகமாய் பேசிக்கொண்டே போக அவளோ அவனை தீவிரமாய் முறைத்தாள்..
“நான் இங்க ஒருத்தி கையில அடிபட்டு இருக்கேன்னு கவலைப்பட்டு பேசிக்கிட்டு இருக்கேன்.. இதுல நாளைக்கு வேற இந்த அடிதடி பண்ண வருவீங்களா? இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க வீட்டை விட்டு அந்த பக்கம் இந்த பக்கம் நகர கூடாது.. இந்த கை நல்லா குணமாகி டாக்டர் நீங்க வேலைக்கு போகலாம்னு சொன்ன அப்புறம் தான் நீங்க வீட்டை விட்டே நகரணும்.. அப்ப கூட இந்த வேலைக்கு அனுப்பனுமாங்கிறதை பத்தி யோசிச்சு முடிவு பண்ணிக்கலாம்..”
அவள் பேசியது தீரனுக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்தாலும் அவனுடைய மனைவியாய் அவள் உரிமையாய் அவனை அத்ட்டி மிரட்டி உருட்டியது உள்ளுக்குள் அவனுக்கு தேன்மாரி பொழிந்தது போன்ற இன்பத்தை தந்து இருந்தது..
மதியழகியோ அதோடு நிறுத்தாமல் அந்த இயக்குனர் பக்கம் திரும்பி “ஏன் சார்.. என்ன சார் படம் எடுக்குறீங்க? உங்க படத்துல நடிக்கிற ஆளுங்க எல்லாம் கொன்னு போட்டுட்டு போயிடுவீங்க போல.. அடுத்த படத்தில் நடிக்கறதுக்கு அவங்கள உயிரோட விட மாட்டீங்களா? அவர்தான் ஏதோ தெரியாம கொஞ்சம் கவன குறைவா இருந்துட்டார்னா அதுக்காக அந்த ஆள் வந்து அவரை குத்திடுவாரா..? அவர் உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க பதில் சொல்வீங்களா? உங்களுக்கு என்ன.. இந்த படத்துல வர பணத்தை சுருட்டிட்டு நீங்க அடுத்த படத்தை பார்க்க போயிருவீங்க.. அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா அவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறே எங்க நிலைமை எல்லாம் என்னன்னு யோசிச்சீங்களா? இந்த மாதிரி ஆபத்தான ஸ்டண்ட் சீன் பண்ணும் போது ஒரு டம்மி கத்தியை வெச்சு பண்ணணும்னு கூட உங்களுக்கு தெரியாதா?”
அவள் அந்த இயக்குனரை பார்த்து படபடவென பொரிய தீரனோ அவள் சொன்ன “அவரை உயிருக்குயிரா நேசிக்கற எங்க நெலமை…” என்ற வார்த்தைகளிலேயே உறைந்திருந்தான்.. ஒரு வேகத்தில் அவள் மனதில் இருந்தது எல்லாம் வார்த்தைகளாய் சிதறி இருந்தது அங்கே.. தீரனோ அந்த வார்த்தைகளிலிருந்து வெளிவர முடியாமல் அதிலேயே மூழ்கி திளைத்திருந்தான்..
அவள் பேசியதை கேட்ட இயக்குனரோ அப்படியே வார்த்தைகளின்றி ஸ்தம்பித்து போயிருந்தார்.. என்னவென்று சொல்லுவார் அவர் அவளிடம்.. முதலில் எல்லாம் போலி கத்தியை வைத்து தான் இது போன்ற காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. தீரன் தான் அதற்கெல்லாம் ஒன்றும் அவசியம் இல்லை.. உண்மையான கத்தியை வைத்து விளையாடுவது தான் தன் வீரத்திற்கான சவாலாய் அமையும் என்று சொல்லி அந்த நிகழ் முறையை மாற்றினான்..
ஆனால் இப்போது அந்த நியாயத்தை எல்லாம் அவர் பேசினால் அதை கேட்பதற்கு கூட மதியழகிக்கு பொறுமை இருப்பதாக அங்கு இருந்த யாருக்குமே தோன்றவில்லை..
“சரி.. அந்த ஏற்பாடெல்லாம் தான் பண்ணல.. அட்லீஸ்ட் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸாவது வச்சிருக்கீங்களா இல்லையா செட்டில? குறைஞ்ச பட்சம் அதையாவது எடுத்து குடுங்க..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் பாண்டி முதலுதவி பெட்டியை அவள் கையில் கொண்டு வந்து கொடுத்தான்..
அவனையும் முறைத்தபடியே அதை வாங்கியவள் தீரனின் காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டாள்.. அவனோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாது வலிக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாத வண்ணம் அமைதியாய் இருந்தான்..
ஆனால் மதியழகியோ அவன் காயத்தை துடைக்கும் போதும் அதில் மருந்திடும் போதும் ஏதோ அவளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது போல “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று முகம் சுருக்கி முனகியபடி “ரொம்ப வலிக்குது இல்ல?” என்று அவனுக்கு தோன்றாத வலியை அவள் உணர்ந்து கேட்டபடி “இதோ.. ரெண்டே நிமிஷம்.. ஆயிடுச்சு..” என்று அவன் ஏதோ வலிக்கிறது என்று சொன்னது போல அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்..
ஒருவழியாய் பல அக்கப்போர்களுடனும் புலம்பல்களுடனும் அவன் ரத்தத்தை ஓரளவுக்கு நிறுத்தி இருந்தாள்..
அடுத்து சற்று தள்ளி சென்றவள் தன் கைபேசி எடுத்து படப்படவென யாருக்கோ அழைப்பு விடுத்து ஏதோ சொல்லிவிட்டு மறுபடியும் தீரனின் அருகில் வந்து அவனை முறைத்தப்படி இருக்க அவனோ வழக்கமாய் இயக்குனரோடும் தயாரிப்பாளரோடும் பாண்டியோடும் மெட்ராஸ் பாஷையில் வாய் அடிப்பவன் மனைவிக்கு பயந்த கணவனாய் பம்மியபடி அமர்ந்திருந்தான்..
எவருக்கும் பயப்படாமல் தான் எது செய்தாலும் நெத்தியடியாய் செய்து முடித்துவிட்டு எப்போதும் எகத்தாளமாய் பேசி தெரியும் தீரனா இவன் என்று அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது..
மதியழகியின் பார்வைக்கு பெட்டி பாம்பாய் அடங்கியிருந்தான் அவன்..
அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த தளத்திற்குள் ஒரு மருத்துவ ஊர்தி நுழைந்தது..
அதைக் கண்ட தீரனோ தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்..
“ஐயையோ.. இவ என்ன ஆம்புலன்ஸை வர வெச்சிருக்கா.. ரொம்ப படுத்தறாளே.. இவளை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலையே.. இவளோட அன்பு தொல்லைக்கு அளவே இல்லாம போச்சு..”
மனதிற்குள் சற்றே கலக்கமடைந்தவனின் அருகில் வந்தவள் “எழுந்திருங்க.. வாங்க ஹாஸ்பிடலுக்கு போலாம்.. அதுக்கு தான் ஆம்புலன்ஸ் வர வச்சிருக்கேன்..”
“ஐயோ மதி.. எனக்கு அவ்வளவு பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல.. லேசா தான் காயம் பட்டு இருக்கு.. அப்படியே டாக்டர்கிட்ட போனாலும் இங்க பக்கத்துல இருக்குற க்ளினிக்ல ஒரு இன்ஜெக்ஷன் போட்டா ரெண்டு நாள்ல ஆறி போற காயம் இது.. நீ எதுக்கு மதி இதை இவ்வளவு பெரிய விஷயம் ஆக்குற?”
அவன் மெதுவாய் அவளைக் கேட்க “என்னது.. நான் இவ்ளோ பெரிய விஷயம் ஆக்குறேனா? உங்க கைய பாருங்க.. ஓஹோ எப்போவும் இப்படித்தானா? உங்கள கவனிக்கவே மாட்டீங்களா? அடிபட்ட கையோட நீங்க வேலை செஞ்சிட்டு இருக்கீங்க.. இரக்கம் இல்லாத மனுசங்க இவங்க எல்லாம் உங்களை வேலை வாங்கிட்டே இருப்பாங்களா? உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..?”
அவனிடமிருந்து பார்வையை அவர்கள் எல்லோரையும் நோக்கி திருப்பியவள் அவனுக்காக நியாயம் கேட்க அவனோ அந்த இயக்குனரை பார்த்து பார்வையாலேயே சற்று தனக்காக அவளை பொறுத்து இருக்குமாறு கெஞ்சினான்..
“சரி.. இப்ப என்ன உனக்கு ஹாஸ்பிடல் போகணும்.. அதுவும் இந்த ஆம்புலன்ஸில போகணும்.. அவ்வளவு தானே? சரி வா.. போலாம்..” என்று வேகமாக எழுந்தவனை சட்டென கையை பிடித்து “இருங்க.. எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க? ரத்தம் நிறைய போயிருக்கு.. தலை சுத்த போகுது.. என்னை பிடிச்சுக்கோங்க..” என்று சொல்லி அவன் கையை எடுத்து தன் தோளில் வைத்துக் கொண்டு அவனை அணைத்தார் போல் அந்த வண்டி அருகே அழைத்து சென்றாள்..
அவனுக்கும் அவளோடு அப்படி சொல்வது சுகமாக இருந்தாலும் தனக்குப் பின்னால் அவள் பேசிய பேச்சை எல்லாம் கேட்டுவிட்டு அவள் செய்த அலப்பறையில் கண்களிலும் காதுகளிலும் தீப்பொறி பறக்க நின்று கொண்டிருப்பவர்களை எண்ணிப் பார்த்தபோது கொஞ்சம் பாவமாய் தான் இருந்தது..
அது மனத்தில் அவனுக்கு லேசாய் ஒரு உறுத்தலை தோற்றுவித்திருக்க “மதி.. இருந்தாலும் நீ அவங்களையெல்லாம் அப்படி பேசி இருக்க கூடாது.. பாவம் மதி அவங்க எல்லாம்.. அது அந்த கத்தி மேட்டர் கூட நான் சொல்லித்தான்..”
அவன் ஏதோ சொல்ல வர அதை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் “என்ன.. என்ன பேசிட்டாங்க இப்ப.. அவங்க செஞ்ச வேலைக்கு இவ்வளவு நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கணும்.. அவங்கள நாலு கேள்வி கேட்டதோட விட்டேன் இல்ல..? இருங்க வர்றேன்..” என்றவள் மறுபடியும் அவர்கள் புறம் திரும்ப பார்க்க அவனோ பதறியபடி “ஐயோ ஆத்தா.. இல்ல இல்ல.. வேணாம் வேணாம். நீ எதுவும் கேட்க வேணாம்.. ஹாஸ்பிடல் போலாம்.. எனக்கு கை ரொம்ப வலிக்கிற மாதிரி இருக்கு..” என்று கை ரொம்பவுமே வலிப்பது போல் பாசாங்கு செய்தான் அவன்..
அவ்வளவுதான் மீண்டும் பதறிப் போனவள் அவனை அழைத்துக் கொண்டு அந்த மருத்துவ ஊர்தியில் அவனை ஏற்றி தானும் அவன் கூட ஏறி மருத்துவமனைக்கு பயணப்பட்டாள்..
அவர்கள் சென்ற பிறகு அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் அப்பாடா என்று ஆகியது.. அஞ்சு நிமிஷத்துல செட்டையே பத்த வச்சுட்டு போன மாதிரி படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டாளே இந்த பொண்ணு என்றார் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே அந்த இயக்குனர்..
🎵🎶🎼
இதயத்தை ஏதோ ஒன்று…
இழுக்குது கொஞ்சம் இன்று…
இதுவரை இதுபோலே நானும் இல்லையே…
கடலலை போலே வந்து…
கரைகளை அள்ளும் ஒன்று…
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…
இருப்பது ஒரு மனது…
இதுவரை அது எனது…
என்னைவிட்டு மெதுவாய் அது…
போக கண்டேனே…
இது ஒரு கனவு நிலை…
கலைத்திட விரும்பவில்லை…
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…
எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வாா்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
என சொல்லும் நாளும் என்று…
மலா்களை அள்ளி வந்து…
மகிழ்வுடன் கையில் தந்து…
மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன்…
தடுப்பது என்ன என்று…
தவிக்குது நெஞ்சம் இன்று…
நதியினில் இலை என நான்…
தோய்ந்து செல்கின்றேன்…
அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்…
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்…
ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…
🎼🎶🎵
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 51
தீரனும் மதியும் அந்த மருத்துவ ஊர்தியில் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே சென்று விட அந்த தயாரிப்பாளரோ “காயம் கையில பட்டுச்சு.. அதனால அந்த பொண்ணு கத்துனதோட போச்சு.. ஒருவேளை வேற எங்கேயாவது தீரனுக்கு பெருசா காயம் பட்டு இருந்தது.. அவனை குத்துனானே அந்த கத்தி அதை எடுத்து நம்ம ரெண்டு பேரையும் போட்டு தள்ளிட்டு போயிருக்கும் போல அந்த பொண்ணு..”
பாண்டி அவர்களிடம் வந்து “அதென்ன போட்டு தள்ளிட்டு போயிருக்கும் போலன்னு சந்தேகமா சொல்றீங்க.. நிச்சயமா கன்ஃபர்ம்டா போட்டு தள்ளி இருப்பாங்க.. மதி தீரன் மேல உயிரையே வச்சிருக்காங்க..”
அந்த மருத்துவ ஊர்தி சென்ற திசையை பார்த்து சொன்னவன் “ஆனா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறது மத்தவங்களுக்கு தெரியாம நடிச்சுக்கிட்டு இருக்காங்க.. என்னைக்கு ரெண்டு பேருமே அவங்க காதலை உணர்ந்து ஒன்னு சேர்வாங்களோ?” என்று எண்ணியபடி ஒரு பெருமூச்சையும் உதிர்த்தான்..
மருத்துவமனைக்கு சென்று அவன் கையில் இருந்த காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னிரவில் தான் வீடு திரும்பினார்கள் மதியும் தீரனும்..
வீட்டிலிருந்த அனைவரும் உறங்கி போயிருக்க அவனை நகர விடாது தாங்கி பிடித்துக் கொண்டு உள் நுழைந்தவள் சாப்பாட்டு மேஜையின் முன் அவனை அமர வைத்து தாங்கள் செய்து எடுத்துக் கொண்டு போன இரவு உணவை ஒரு தட்டில் பரிமாறி எடுத்து வந்து ஒரு கவளத்தை எடுத்து அவன் வாய்க்கருகே நீட்டவும் அவனோ “இல்ல.. எனக்கு ஒன்னும் இல்ல மது.. நானே சாப்பிட்டுக்கிறேன்..” என்று பட்டென சொல்லிவிடவும் அவளுக்குத்தான் ஒரு மாதிரியாகி போனது..
“சாரி உங்களுக்கு அடிபட்டு இருக்கேன்னு கொஞ்சம் உரிமை எடுத்துட்டேன்.. உங்களுக்கு கை வலிக்கும்.. இன்னிக்கு ஒரு நாள் கஷ்டப்பட்டு நான் ஊட்டி விடறதை சாப்பிடுங்க.. என்னை ஒரு நர்ஸா நெனைச்சிக்கோங்க.. நாளைலிருந்து நீங்களே சாப்பிடலாம்.. கொஞ்சம் காயம் ஆறட்டுமே..”
அவள் தயக்கத்தோடு சொல்ல அவனோ அவளுக்கு சிரமமாக இருக்க போகிறதே என்று எண்ணி தான் மறுத்ததை அவள் இப்படி தவறாக எடுத்துக் கொண்டு விட்டாளே என்று வருந்தினான்..
“இல்லை மதி.. நீயே குடு.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்றவன் அவள் கையில் இருந்த உணவுக் கவளத்தை தன் வாயில் வாங்கிக் கொண்டான்.. இருவர் கண்களுமே அவர்களுக்குள் இருந்து பொங்கி வழிய காத்திருந்த காதல் பிரவாகத்தின் மீதூறலில் கலங்கி போயிருந்தன..
வழக்கமாய் சண்டைக்காட்சிகளில் தீரனுக்கு படும் காயங்களை விட இன்றைய காயம் கொஞ்சம் ஆழமாய் தான் இருந்தது.. ஆனாலும் மதி இல்லாமல் போயிருந்தால் இதையும் எப்போதும் போல அதிகமாய் கவனம் செலுத்தாமல் சாதாரண காயமாய் எண்ணி கடந்து போய் இருப்பான்..
ஒரு வருடத்திற்கு முன் இதே போன்ற ஒரு காயம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்டு விட அது சரியாக ஆறுவதற்கு முன்னரே அடுத்த நாளே இன்னொரு சண்டை காட்சியை சிரமப்பட்டு நடித்துக் கொடுத்தவன் அதை அப்படியே கவனிக்காமல் விட்டிருந்தான்..
அதனால் இப்போதும் அவ்வப்போது அவனுக்கு அடிபட்ட அந்த கீழ் முதுகு பகுதியில் சிறிதான வலி எடுப்பதுண்டு.. ஆனால் அதைப்பற்றி அவன் எவரிடமும் பெரிதாய் சொன்னதில்லை.. பாண்டிக்கு மட்டுமே அவனுக்கு அங்கு அடிக்கடி வலி எடுப்பது தெரியும்.. பாண்டியும் எவ்வளவோ முறை மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையை எடுக்க சொல்லி இருக்க அதை செவிமடுத்தான் இல்லை அவன்..
மருத்துவமனைக்கு சென்றடைந்த பிறகு படப்பிடிப்பு தளத்தில் இருந்து மதியழகிக்கு அழைத்த பாண்டி அந்த காயத்தை பற்றியும் அவளிடம் சொல்லிவிட அதற்கும் சேர்த்து திட்டு விழுந்தது தீரனுக்கு..
தீரனோ பாண்டியை மனதில் நினைத்து “இப்படி பத்த வச்சுட்டியேடா பாண்டி..” என்று வசை பாடி அர்ச்சித்துக்கொண்டு இருந்தான்..
மருத்துவரிடம் அதற்கும் சேர்த்து சிகிச்சை பார்க்க சொல்ல அவர் சில உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து இப்போது பட்டிருக்கும் காயம் இரண்டு நாட்களில் ஆறிய பிறகு பதினைந்து நாட்களுக்கு அந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும் என்றும் அதுவரை வேலைக்கு செல்லக்கூடாது எனவும் கண்டிப்பாக சொல்லி இருந்தார்..
தீரன் மதியழகியிடம் ஒரு வாரம் கழித்து தான் படப்பிடிப்புக்கு செல்வதாக கெஞ்சி கூட பார்த்து விட்டான்.. அவளோ மிகவும் பிடிவாதமாக மருத்துவர் சொன்ன 15 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு தான் அந்த வேலைக்கு செல்லலாம்.. என்றும் மறுபடியும் அந்த வேலைக்கு அவனை அனுப்பலாமா வேண்டாமா என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள் அவனிடம் இறுதியாக..
இப்போது அவனோ 15 நாட்களுக்குப் பிறகு அவனை அந்த படப்பிடிப்புக்கு அனுப்பி விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.. இந்த வேலைக்கு முழுக்கு போடுவது என்றால் கூட அந்த படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அதன் பிறகு தான் முழுக்கு போட முடியும் என்பதை மட்டும் தீர்மானமாக சொல்லி இருந்தான் மதியிடம்..
இருவரும் ஒன்றாக படியில் ஏற மாடியில் இருந்த தங்கள் அறைக்கு மெதுவாக அவன் தோள் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அவனை அமர வைத்தவள் “நீங்க அப்படியே படுத்துக்கோங்க.. ஏதாவது வேணும்னா என்னை கேளுங்க..” என்றதும் “இல்ல மதி.. நான் கீழேயே படுத்துக்கிறேன்.. என்னால படுக்க முடியும்.. நீ கட்டில்ல படுத்துக்கோ..” என்றான்..
அவன் சொன்னதைக் கேட்டவள் கோவமாய் அவனை பார்த்து “நீங்க உங்க கையில இந்த அடியோட கீழே படுத்துப்பீங்க.. நான் ஜாலியா கட்டில் மேல படுத்துக்கணுமா? என்ன..? என்னை இரக்கமே இல்லாத ராட்சசி இல்லனா அவ்வளவு கொடுமைக்காரின்னு நெனைச்சுட்டீங்களா? எதுவும் சொல்லாமல பேசாம கட்டில்ல படுங்க.. நான் கீழே படுத்துக்கிறேன்..”
அவள் தீர்க்கமாய் சொல்லிவிட அவனோ “இல்ல.. நீ என்ன சொன்னாலும் சரி.. நீ கீழ தரையில படுக்கறதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்..” என்றான் அழுத்தமாக..
“ஓ.. சரி.. அப்படின்னா ரெண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக்குவோம்..” பட்டென சொன்னாள் அவள்..
மதி சொன்ன வார்த்தைகளை கேட்டு சில நொடிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து அமர்ந்து இருந்தான் தீரன்.. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை..
“இல்லை மதி.. எனக்கு தெரியும்.. எனக்கு கையில அடிபட்டு இருக்கு.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ இப்படி சொல்ற.. ஆனா உனக்கு என் பக்கத்துல படுக்குற சிரமம் வேண்டாம்.. அது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும்.. சொன்னா கேளு.. நான் கீழேயே..”
அவன் மறுபடியும் பழைய பல்லவியையே பாடத் தொடங்கிட அவளோ அவனை இடையில் நிறுத்தி “அதெல்லாம் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை.. நான் கட்டில்ல அந்த பக்கம் படுக்க போறேன்.. நீங்க இந்த பக்கம் படுக்க போறீங்க.. அது மட்டும் இல்லாம எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு.. எந்த நேரத்திலும் நீங்க தப்பா எதுவும் பண்ண மாட்டீங்க.. உங்களை பத்தி நான் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்.. தயவு செஞ்சு அடம் பிடிக்காம கட்டில்லயே படுத்துக்கோங்க..”
சொல்லியவள் அதோடு நிற்காமல் கட்டிலின் அந்த பக்கம் சென்று அவனுக்கு எதிர்புறமாய் திரும்பி ஒருக்களித்து படுத்துக் கொண்டாள்..
தீரனும் தயங்கி தயங்கி மெல்ல கட்டிலின் இன்னொரு ஓரத்தில் ஒருக்களித்து படுக்க முனைய அவன் ஒருக்களித்த பக்கம் கையில் அடிபட்டு இருக்கவும் அதில் நன்றாக வலி எடுத்தது.. ஆனாலும் அப்படியே படுத்திருந்தான்..
ஐந்து நிமிடங்கள் கழித்து தீரன் பக்கம் திரும்பிய மதி அவன் படுத்திருக்கும் விதத்தைப் பார்த்து சட்டென எழுந்து அமர்ந்தாள்..
அவன் இடது கையை பிடித்து நேராக திருப்பி “ஏன் தீரா இப்படி பண்றீங்க..? உங்களுக்கு கொஞ்சம் கூட உங்க மேல அக்கறையே கிடையாதா? அந்த கையில தான் அடிபட்டு இருக்குல்ல..? அந்த சைடு திருப்பி படுத்திட்டீங்கன்னா கையில இருக்கிற காயம் எப்படி ஆறும்..? உங்களுக்கு நேரா படுக்க முடியலன்னா ஒருக்களிச்சு தான் படுக்கணும்னா இந்த பக்கம் திரும்பி படுங்க.. அந்த கைல ஸ்டிரெயின் ஆகாம கொஞ்சம் பாத்துக்கோங்க.. தீரா..” சொன்னவள் அவனை கோவமாய் முறைத்துக் கொண்டிருக்க அவனும் மெதுவாக அவள் புறம் திரும்பி படுத்துக் கொண்டான்..
அவள் அவனை முறைத்தபடியே எதிர்பக்கமாய் திரும்பி படுக்க அவள் பின்புறத்தை பார்த்துக் கொண்டு படுத்திருந்தவனின் கண்கள் அவன் அனுமதி இல்லாமலேயே அவள் பின்னழகில் அவற்றின் இஷ்டம் போல பயணிக்க தொடங்கியது..
அவளின் அழகான வளைந்த கழுத்தில் சரிந்து தோள்களில் வழிந்து அவள் ஜாக்கெட்டுக்கு மேல் தெரிந்த பளிங்கு போன்ற வெண்ணிற முதுகுப் பரப்பில் பயணித்து அவள் கொடி இடையில் வழுக்கி அவள் வாழைத்தண்டு கால்களில் சறுக்கி வெள்ளி கொலுசு கொஞ்சிக் கொண்டிருந்த அவளின் வெண்மையான கணுக்காலில் வந்து நிலைத்து நின்றது..
அத்தனை அழகையும் அவள் அனுமதி இல்லாமலே கண்களால் பருகி எச்சில் விழுங்கியவன் அதற்கு மேல் அந்த அழகியலின் தாக்கத்தை தாங்க முடியாமல் நேராக நிமிர்ந்து விட்டத்தை பார்த்து படுத்துக் கொண்டான்..
எப்படியாவது உறங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தவன் அவள் பக்கம் பார்க்காத போதும் கூட அவளின் அழகு அவன் கண்களுக்குள் ஒரே அடியாய் பசை போட்டு ஒட்டிக் கொண்டார் போல் காட்சி கொடுத்து அவனை இம்சை செய்ய உறக்கம் அவனுக்கு எட்டா கனி ஆகிப்போய் இருந்தது..
வெகு நேரம் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் ஒரு வழியாய் தன்னை தானே சமன்படுத்தி மெது மெதுவாய் உறக்கத்தை தழுவி இருந்தான்..
உறங்கி விட்டானே தவிர கனவிலும் அவனுக்கு அவள் முகம் தான்.. ஒரு காதலியாய் காதல் மனைவியாய் அவனை கொஞ்சி கெஞ்சி அணைத்து முத்தமிட்டு காதலித்துக் கொண்டிருந்தாள் அவனின் மதியவள்.. அவன் கனவில் அவளை கண்டு கொள்ளை கொள்வதற்கு அவனுக்கு அவளுடைய அனுமதியே தேவை இருக்கவில்லையே..
ஆனால் எதிர்ப்புறம் திரும்பி படுத்து இருந்த மதி நடு இரவில் அவன் புறம் திரும்பிப் படுக்கவும் கண்ணை திறந்தவள் அவன் சீரான மூச்சோடு நன்கு உறங்கிக் கொண்டிருக்க புன்னகை முகமாய் அவன் அமைதியாய் படுத்து இருந்த கோலம் கண்டு அப்படியே மெய் மறந்து போனாள்..
அவன் தான் கனவில் அவளோடு காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தானே.. அப்புறம் புன்னகை முகமாய் இல்லாமல் இருப்பானா?
அவன் கன்னத்தை வாஞ்சையாய் வருடியவள் ஆசை தீர அவன் வதனத்தையே பார்த்தபடி அவன் நெற்றியில் மென்மையாய் தன் இதழ் பதித்தாள்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 52
“என் பக்கத்துல நீ படுத்தா நான் எங்க மனசு கஷ்டப்படுவேனோன்னு என்னை பத்தி எவ்வளவு யோசிக்கிற டா நீ? இதுக்காகவே சீக்கிரம் உன்னை விரும்புறேன்னு உன்கிட்ட சொல்லி உன் விருப்பத்தையும் தெரிஞ்சுக்கணும்னு தோணுது.. உன் கண்ணை பார்க்கிறப்போ நீ என்னை விரும்புற மாதிரி தான் எனக்கு தெரியுது.. ஆனா எங்க நீ என்னை ஃபிரண்டா மட்டும் தான் பார்க்கிறேன்னு சொல்லிடுவியோன்னு பயமா இருக்குடா.. என்னை ரொம்ப படுத்தாம சீக்கிரம் நீ என்னை விரும்புறேன்னு என்கிட்ட சொல்லிடு தீரா.. ப்ளீஸ்..” என்றவள் அவன் முகத்தையே ஆழமாக பார்த்தபடி அவன் கன்னத்தில் வைத்த கையை எடுக்க கூடத் தோன்றாமல் அப்படியே உறங்கி போனாள்..
உறக்க கலக்கத்தில் அவள் கை அவன் கன்னத்தில் இருந்து நழுவி அவன் கழுத்தின் மேல் அப்படியே குடி கொண்டு இருக்க அதிகாலையில் அவளுக்கு முன்னாலேயே கண் விழித்த தீரன் அவள் கை தன் தோளில் இருப்பதை பார்த்து அப்படியே கண் விரித்து அதிசயித்து போனான்..
“ஓ மேடம்.. தூக்க கலக்கத்துல கையை என் மேல போட்டீங்களா?” என்றவன் அவள் கையை தன்னில் இருந்து விலக்க போக சட்டென ஏதோ தோன்ற அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் முத்தமிட்டவன் அவள் முகம் பார்த்து அவள் கன்னத்தை வருடி “மதி.. உனக்கு புருஷனா நடிக்கிறேனு ஒத்துக்கிட்டேன்.. ஆனா என்னால அப்படி நடிக்கவே முடியல.. நிஜமாவே மனசால உனக்கு புருஷனா தான் இருந்துக்கிட்டு இருக்கேன்.. என் மனசு உன்னை பொண்டாட்டியா பார்க்க ஆரம்பிச்சிருச்சு.. உன் கிட்ட வீராப்போட பெருசா ஃபிரெண்டா இருக்கேன்னு சொல்லிட்டேன்.. ஆனா காலம் முழுக்க என்னால அப்படி இருக்க முடியுமான்னு தெரியல.. என்னோட மனசு நீ எனக்கு சொந்தமானவன்னு சொல்லிக்கிட்டே இருக்கு.. உன் கண்ணுலையும் எனக்கான காதல் தெரியிற மாதிரி தான் எனக்கு தோணுது.. ஆனா உன் படிப்பு.. உன்னோட வேலை.. உன்னோட தகுதி.. இதெல்லாம் உன்கிட்ட என் காதலை சொல்ல விடாம என்னை தடுக்குது.. உன்கிட்ட என் காதலை சொல்லி நீ என்னை காதலிக்கவோ.. இல்ல எனக்கு புருஷனா இருக்கவோ உனக்கு என்ன தகுதி இருக்குன்னு என்னை கேட்டுட்டேன்னா அந்த நிமிஷம் நான் உடைஞ்சே போயிடுவேன் மதி.. அப்படி ஒருவேளை உனக்கு இதெல்லாம் ஒரு தடை இல்லனா தயவு செஞ்சு நீயே என் கிட்ட உன் காதலை சொல்லிடு மதி.. அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்..”
அவள் பேசியது போலவே அவனும் உறங்கிக் கொண்டிருந்த மதியோடு பேசிக் கொண்டிருந்தான்..
இருவரையும் அவரவர் காதலை சொல்லவிடாமல் ஏதோ ஒன்று தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.. அந்த தடையை உடைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக் கொள்ளும் வேளையில் அவர்களின் காதலை கொண்டாடும் நிலை அப்போது இருக்குமோ என்னவோ..? விடை விதிக்கு தான் தெரியும்..
அவள் கையை அவள் மீதே வைத்து விட்டு தன் இடத்தை விட்டு சற்று சிரமப்பட்டு எழுந்து கொள்ள.. அவன் அசைந்த அரவத்தில் மதி கண் விழித்திருந்தாள்..
அருகில் அவன் சிரமப்பட்டு எழும்பிக்கொண்டிருந்ததை பார்த்து “ஏன் அதுக்குள்ள எழும்பிட்டிங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோங்க..” என்க “இல்லை மதி.. இனிமே எப்படியும் தூக்கம் வராது.. நான் போய் பல் விலக்கி குளிச்சிட்டு வர்றேன்” என்றான் அவன்..
ம்ம்.. சரி..
அவன் தன் அலமாரியிலிருந்து ஒரு துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று விட அவள் அதற்குள் படுக்கையையெல்லாம் சரி செய்துவிட்டு அந்த அறையின் பால்கனிக்கு சென்று நின்று வெளியே பார்த்திருந்தாள்..
விடிந்தும் விடியாத காலை பொழுதில் சுவற்றுக்கோழி சத்தத்தோடு அந்த இருளில் வெளியே இருந்து சில்லென்று வீசி உடலை தீண்டிய காற்றை சிலிர்த்து அனுபவித்தபடி நின்றிருந்தாள் அவள்..
தனக்கு பின்னால் ஏதோ அரவம் கேட்கவும் திரும்பியவள் அங்கு தீரன் இடையில் கட்டிய துவாலையோடு ஒற்றை கையால் சட்டையை அணிந்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது..
“ஒரு நிமிஷம் தீரா.. நான் வரேன்.. இருங்க..” என்று சொன்னவள் வேகமாக அவன் கையில் இருந்து சட்டையை வாங்கி அதை அணிவதற்கு அவனுக்கு உதவி செய்தாள்..
சட்டையின் கையை கட்டு போடாத ஒரு கையில் நுழைத்து இன்னொரு கை பக்கம் கொண்டு வந்து மேலே இருந்த இரண்டு பொத்தான்களை விட்டு மூன்றாவது பொத்தானை போடுவதற்காக கையெடுத்தவள் அவனுடைய பரந்து திரண்ட மார்பிலும் சட்டைக்குள் அடங்காமல் திமிறி கொண்டிருந்த புஜங்களிலும் ஒட்டி இருந்த வயிற்றிலும் ஓடிய அவளுடைய கண்கள் அங்கேயே தங்கிவிட சில நொடிகள் அவன் உடல் அழகை பார்த்து அதிசயித்தபடி நின்றிருந்தாள்..
தன்னை மறந்து அவன் மார்பில் தன் கை விரல்களை வைத்து லேசாய் பார்வையில் ஒருவித ரசனையோடு வருட அந்த வருடல் அவனை ஒருவித கிறக்கத்தில் தள்ளி விட்டது..
அவள் விரல்கள் செய்த மாயத்தில் அவன் வேகமான அனல் மூச்சுகளை விட்டபடி தன் மார்பில் படர்ந்து இருந்த அவள் கைவிரல்களை அழுத்தமாய் பிடிக்க அவனின் அந்த செய்கையில் ஒரே நொடியில் அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன அவன் மார்பில் இருந்து தன் கையை சரேலென உருவி கொண்டவள் அதற்கு மேல் அவன் ஊடுருவும் பார்வையையும் சந்திக்க முடியாது கண்களை தரையை நோக்கி தாழ்த்திக் கொண்டாள்..
அவனும் அவளின் அந்த நொடி நேர பாவனை மாற்றங்களை உணர்ந்தவன் தானும் சுதாரித்து “பரவாயில்லை.. நானே போட்டுக்குறேன் மதி..” என்க அவளோ இட வலமாய் தலை அசைத்து “நானே போட்டு விடறேன்..” என்று தரை பார்த்தே சொல்லிவிட்டு வேகவேகமாய் அந்த பொத்தான்களை போட்டுவிட்டு அவனிடமிருந்து விலகினாள்..
மறுபடியும் அவள் பால்கனிக்கே சென்று நின்று கொண்டு சற்று முன் தான் செய்த செயலை எண்ணி சங்கடப்பட்டு தவித்திருந்தாள்..
மதியழகியின் அடுத்தடுத்த உடல் மொழி மாற்றங்களையும் செய்கையிலும் அவளுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் ஏதோ ஒன்று அவள் தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறது என்று புரிந்து கொண்டான் தீரன்..
அது பெண்ணுக்கே உரிய நாணம் என்னும் குணத்தால் உண்டானது என்று புரிந்து கொள்ளாமல் அதை வேறு வித தயக்கம் என்று தவறாகவே புரிந்து கொண்டான் அவன்..
முட்டி தொடும் ஒரு ஷாட்ஸை தானாகவே இடக்கையால் சிரமப்பட்டு அணிந்து கொண்டான்..
அவள் சங்கடமாய் பால்கனிக்கு போய் நின்று கொண்டிருப்பதை பார்த்தவன் அவள் சங்கடத்தை போக்கி இயல்பாக்குவதற்காக “சாரி மதி.. உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன்..” என்று அவள் பின்னாலிருந்து சொல்லவும் அவன் புறம் திரும்பியவள் “அப்படின்னு நான் சொன்னேனா? அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நானா விருப்பப்பட்டு தான் இதெல்லாம் செய்றேன்.. நீங்க இப்படி எல்லாம் ஒன்னும் ஃபீல் பண்ண வேண்டாம்.. உங்களுக்கு சீக்கிரம் குணமாகணும்.. அதுதான் எனக்கு முக்கியம்.. சரி.. நானும் குளிச்சிட்டு வரேன்.. அப்புறம் ரெண்டு பேரும் கீழே போகலாம்..” என்றவள் தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வேகமாய் குளியல் அறைக்குள் நுழைந்திருந்தாள்..
சிறிது நேரத்தில் இருவரும் தங்கள் அறையில் இருந்து கீழே வர அவன் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியும் அவனை எதுவும் செய்ய விடாது சாப்பாட்டு மேஜையின் எதிரே நாற்காலியில் அவனை அமர வைத்தவள் வேக வேகமாய் அன்றைய சமையலை செய்து முடித்தாள்..
அவள் சமையல் செய்து முடிக்கவும் மலரழகி தன் அறையில் இருந்து சாப்பாட்டு மேஜை அருகில் வரவும் சரியாக இருந்தது.. மலரழகி ஆறு மணிக்கு முன்னால் எழுவதெல்லாம் உலக அதிசயம்.. அவள் அவ்வளவு காலையில் எழுந்து வருவதை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் மதி..
அங்கே தீரனை பார்த்த மலரழகி “ஐயோ மாமா.. என்ன ஆச்சு உங்க கைல..? எவ்வளவு பெரிய கட்டு..? என்ன மாமா நீங்க..? கொஞ்சம் பார்த்து வேலை செய்யக்கூடாதா?” என்று கேட்க “பார்த்து தான் செஞ்சேன்.. உங்க அக்காவை பார்த்துகிட்டே செஞ்சதனால தான் இப்படி ஆயிடுச்சு..” என்று மனதிற்குள் அவள் கேள்விக்கு மதியழகியின் மேல் பார்வையை வீசியபடியே பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்..
“ஆனா உங்களுக்கு எதுவும் ஆகாது மாமா.. நீங்கதான் ஸ்ட்ராங் மேனாச்சே.. என்னோட சூப்பர் ஹீரோ.. நீங்க வேணா பாருங்க.. நாளைக்கே மறுபடியும் அங்க போயி இன்னும் நாலு பேரை அடிச்சு போட்டு சூப்பரா வேற லெவல்ல ஸ்டன்ட் பண்ணுவீங்க.. எனக்கு தெரியும்..” என்று சொன்னவளை முறைத்தாள் மதி..
“ஏய் மலரு.. அவருக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு.. டாக்டர் 15 நாள் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காரு.. அவரே இருப்புக்கொள்ளாம ரெண்டு நாள்ல சூட்டிங் போறேன்னு சொல்லிட்டு இருக்காரு.. நீ வேற அதுக்கு ஒத்து ஊத்திட்டு இருக்கியா? வாயை மூடிட்டு போடி..”
மலரழகியை அதட்டியவள் தீரன் பக்கம் திரும்பி “இங்க பாருங்க தீரா.. இவ சொல்றான்னு நாளைக்கு ஷூட்டிங் போற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க.. நீங்க கைக்கு ரெஸ்ட் குடுக்கணும்.. பதினைஞ்சு நாளைக்கு அப்பறம் தான் ஷூட்டிங் போறதை பத்தி நீங்க யோசிக்கணும்.. சொல்லிட்டேன்..”
“ஐயோ.. என்னக்கா நீ.. மாமாவை இப்படி அடக்கி வைக்கிற? எந்த காலத்துல இருக்க நீ..? கொஞ்சமாவது மாமாவை புரிஞ்சுக்கோ கா.. அவர் ஸ்டண்ட் மாஸ்டர்.. ஒரு சூப்பர் ஹீரோ.. இந்த அடி எல்லாம் அவருக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல.. நாளைக்கு போய் நாலு பேரை அடிச்சு போட்டார்னா அவர் கை தன்னால சரியாயிடும்.. என்ன மாமா நான் சொல்றது சரிதானே?”
அவள் கேட்க அவனும் “ரொம்ப கரெக்டா சொன்ன மலரு.. இதைத்தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. உங்க அக்கா தான் கேக்க மாட்டேங்குறா..”
“ஐயோ.. அவ அப்படித்தான் மாமா.. சரியான பழைய பஞ்சாங்கம்.. இத்தனை நாளா அவ அன்பு தொல்லையால நான்தான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. இப்போ உங்க டர்ன்.. ஆனா வேற வழி இல்ல மாமா.. அவ கிட்ட வசமா சிக்கிட்டீங்க.. ஒன்னு மட்டும் நிச்சயம் மாமா.. இந்த வீட்டில உங்களை என்னை மாதிரி யாராலயும் புரிஞ்சுக்க முடியாது மாமா..”
அவள் எதார்த்தமாய் சொல்லவும் மதியழகி அவள் அருகில் வந்து தீரனிடம் இருந்து அவளை தள்ளி நகர்த்தி விட்டு “நீ புரிஞ்சுகிட்ட வரைக்கும் போதும்.. போய் உனக்கு ஏதாவது வேலை இருந்தா பாரு.. அவர் சாப்பிடணும்..” என்று கோவமாக அவளை முறைத்தப்படி சொல்லிவிட்டு அவன் முன்னால் தட்டை வைத்து அதில் இரண்டு இட்லிகளையும் பரிமாறி சாம்பாரையும் ஊற்றினாள்..
அவன் மறுபடியும் தன் இடது கையால் அதை உண்ண முயல மதி அவனை தடுத்து “இருங்க தீரா.. நான் ஊட்டுறேன்..” என்று சொல்லவும் “அக்கா.. நீ போயி உள்ள சமையல் வேலை மிச்சம் இருந்தா பாரு.. மாமாவுக்கு நான் ஊட்டுறேன்..” என்று மலர் இட்லி தட்டை அவள் கையில் இருந்து வாங்க முயல மதியழகிக்கோ கோபம் உச்சகட்டத்தை அடைந்தது..
🎶🎵🎼
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை
இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை
இன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில்
மாட்டிக்கொண்டு
இது
தத்தளித்து துடிக்கிறதே..
காயம் யாவையும்
தேற்றிக்கொண்டு
இது
மறுபடியும் நினைக்கிறதே..
உள்ளுக்குள்ளே
துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ
கடலை இது விழுங்கும்..
வேண்டும் வேண்டும்
என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம்
என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும்
என்று துள்ளுமே..
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரிமலையா இதை
அறிந்தோர் யாருமில்லை..
உள்ளத்திலே அறை உண்டு
வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ
திரும்பவில்லை..
தூங்கும் போதும்
இது துடித்திடுமே
ஏங்கும் போதோ
இது வெடிக்கும்..
தீண்டும் விரல் என்று
தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே
இது நடிக்கும்..
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை..
இதயம் இல்லை என்றால்
என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை
மதி இழக்கும்..
🎼🎵🎶
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 53
முகத்தில் கோபம் கொப்பளிக்க “எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு.. நான் அவரை பார்த்துக்கறேன்.. நீ போய் உன் காலேஜ்க்கு கிளம்புற வழியை பாரு..” என்றாள்..
“அக்கா.. நீ போய் எனக்கு காபி போட்டு கொண்டு வா.. நான் அவருக்கு ஊட்டுறேன்..”
மலரழகி மறுபடியும் அடம்பிடிக்க அப்போது சரியாக அங்கே தமிழ்வாணனும் வந்துவிட அதற்கு மேல் அவர் எதிரில் அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளே சென்று அவளுக்கு காபி போடும் வேலையில் இறங்கினாள் மதியழகி..
ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு தன் தங்கையின் செயலை நினைத்து ஆத்திரம் எரிமலையாய் புகைந்து கொண்டிருந்தது..
“மலரு.. சொன்னா கேளு.. நானே சாப்பிடறேன்..” என்று சொன்ன தீரன் அவள் ஊட்டியதை மறுத்துவிட்டு அங்கு நடுவில் இருந்த ஒரு தேக்கரண்டியை எடுத்து இடது கையால் அந்த தேக்கரண்டியில் இட்லிகளை வெட்டி சாப்பிட தொடங்கி இருந்தான்..
உள்ளே இருந்து காப்பியை கலந்து கொண்டு வெளியே வந்த மதி அங்கு மலரழகி சாப்பாட்டு மேஜையின் இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருக்க தீரன் தேக்கரண்டியால் இட்லிகளை உண்பதை பார்த்தவள் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டு மலரழகியின் முன்னால் தான் கொண்டு வந்த காபி கோப்பையை டொக்கென கோவமாக வைத்தாள்..
அவள் எதற்கு கோபமாக இருக்கிறாள் என்று புரியாத மலரழகியோ “அம்மாடி.. இன்னைக்கு என்ன காபில ரொம்ப அனல் பறக்குது..” என்று எண்ணியபடியே மெதுவாக காபியை பருக தொடங்கினாள்..
அதற்குள் தமிழ்வாணன் தீரனிடம் கையில் பட்டிருக்கும் அடியை பற்றி விசாரிக்கவும் அவன் விஷயத்தை சொல்ல அவரும் மதியை போலவே “இந்த ஆபத்தான வேலை எதுக்கு மாப்பிள்ளை.. வேற ஏதாவது வேலை பார்த்துக்கோங்களேன் மாப்பிள்ளை..” என்றார் அக்கறையோடு..
“அப்பா.. ஏம்பா மாமாவை டிஸ்கரேஜ் பண்ணுறீங்க? எல்லா வேலைலயுமே ஏதாவது ஒரு ரிஸ்க் இருக்க தான்பா செய்யும்.. அதுக்காக இப்படி வேலை மாறிக்கிட்டே போக முடியுமா? தீரா மாமா சூப்பரா சண்டை போடுவார் அப்பா.. அது அவரோட பேஷன்.. அதை விட்டுட்டு வேற வேலை பாருங்கன்னா அவரால அது எப்படிப்பா முடியும்..? எனக்கு எப்படி டாக்டராகிறது பிடிச்சிருக்கோ.. அக்காக்கு எப்படி டீச்சரா இருக்கிறது கனவோ.. அதே மாதிரி தானே பா அவருக்கும்.. அந்த வேலையை அவர் ரொம்ப நேசிச்சு செய்யறார் பா.. தீரா மாமா.. நீங்க யார் சொல்றதையும் கேட்காதீங்க.. யார் சொன்னாலும் இந்த வேலையை மட்டும் விடாதீங்க.. நீங்க மட்டும் இந்த வேலையை விட்டீங்க அதோட நான் உங்களோட பேசவே மாட்டேன்.. சொல்லிட்டேன்..”
அவள் குழந்தையை போல் உதட்டை பிதுக்கிய படி சொல்லவும் தீரன் “அதெல்லாம் விடமாட்டேன் மலரு.. முழு நேரத்துக்கும் செய்யலன்னாலும் கொஞ்ச நேரத்துக்காவது இந்த வேலையை நிச்சயமா பார்ப்பேன்..”
அவன் சொன்னதும் “தீரா மாமான்னா தீரா மாமா தான்.. சூப்பர் மாமா நீங்க.. என்னோட ஃபேவரிட்..” என்று அவன் புறமாய் ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட இங்கேயோ ஒருத்திக்கு பொறுமை பறந்து போனது.. எரிதணலாய் மூச்சுகளை விட்டவள் மலர் அழகியை விட்டால் முறைத்தே எரித்து விடுவாள் போலிருந்தது..
“மலரு வாய் அடிச்சது போதும்.. நீ போய் கிளம்புற வழியை பாரு..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்தர் அங்கே வந்திருந்தான்.. காலை 6 மணிக்கு எழுந்து வந்து அவனும் தீரனுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தான்..
தன் அண்ணனின் கைகட்டை பார்த்தவன் “என்ன ஆச்சு.. நீங்க எப்பவும் ரொம்ப கவனமா இருப்பீங்களே.. இதுக்கு தான் நான் சொன்னேன்.. பேசாம இந்த வேலை வேண்டாம்.. வேற ஏதாவது வேலை பார்த்துக்கோங்கன்னு.. பாருங்க சின்ன சின்ன அடி தான் பட்டுக்கிட்டு இருந்தது.. இப்ப எவ்ளோ பெரிய அடி பட்டிருக்கு” புலம்பினான் இந்தர்..
“வந்துட்டான்.. அடுத்த மொக்க பீசு..” என்று தலையில் அடித்துக் கொண்டாள் மலரழகி..
“மாமா உங்களை யாருமே புரிஞ்சுக்கல.. இந்த வீட்ல உங்களை புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆள் நான் தான்.. பேசாம என்னை உங்க பர்சனல் அட்வைஸரா வச்சுக்கோங்க.. மத்தவங்க எல்லாம் உங்களை உருப்பட விடவே மாட்டாங்க..” என்று அவள் சொல்ல அவள் தலையில் ஓங்கி தட்டினாள் மதி..
“உனக்கு வர வர ரொம்ப வாய் அதிகமாயிடுச்சு.. இப்படியே பேசிட்டு இருந்த அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.. காப்பியை குடிச்சிட்டு போய் கிளம்புற வழியை பாரு..” அவளை விரட்டினாள் மதி..
அதற்குள் தமிழ்வாணன் “அம்மா மதி.. மாப்பிள்ளை இன்னைக்கு எப்படியும் நம்மள எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.. அவரால வண்டி ஓட்ட முடியாது இல்ல..? அதனால..”
அவர் ஏதோ சொல்ல வர தீரன் “ஏன் மாமா..? நான் இல்லனா என்ன..? இந்தர் இருக்கான்ல? அவன் உங்க எல்லாரையும் கூட்டிட்டு போவான்..” என்றவன் இந்தரிடம் “நீ வண்டி எடுத்துட்டு மாமாவை அவர் வேலை செய்யற இடத்துல விட்டுட்டு மலரை அவ காலேஜ்ல விட்டுட்டு நீயும் மதியும் காலேஜுக்கு போயிடுங்க..” என்று சொல்ல அவனும் “ஓகே ணா.. நானே கூட்டிட்டு போறேன்..” என்றான்..
அப்போது மதி “என்ன தீரா.. மறந்துட்டீங்களா? நேத்துதான் உங்க வண்டி எங்க ஆஃபீஸ் வாசல்ல நின்னுடுச்சே. அந்த மெக்கானிக் பையனை வந்து எடுத்துட்டு போக சொன்னீங்களே.. இன்னும் அவங்க வண்டியை கொண்டு வந்து விடலையே..” என்க அப்போது தான் அவனுக்கு வண்டியை நேற்று அங்கேயே விட்டு வந்தது ஞாபகம் வந்தது..
“அட ஆமா இல்ல..? ஒரு நிமிஷம் இரு..” என்று அந்த கம்மியரை கைபேசி மூலம் அழைத்தவன் “ஹலோ.. ஹான்.. சரத்து.. என்ன ஆச்சு? வண்டி ரிப்பேர் ஆயிடுச்சா? வீட்டுக்கு கொண்டு வந்து விடுறியா?” என்று கேட்க அங்கே ஏதோ பதில் சொல்லவும் இணைப்பை துண்டித்தவன் “வண்டியில ஏதோ பெரிய ரிப்பேர் போல.. நாலஞ்சு நாள் ஆகும்னு சொல்றான் சரத்து..” என்றான் மதியிடம்..
“அதனால என்ன தீரா? பரவால்ல.. மலரும் அப்பாவும் பஸ்ல போயிடுவாங்க.. இந்தர் அவன் வண்டியில போகட்டும்..” என்றாள்..
“அப்ப நீ..?” என்று தீரன் கேட்க “நான் இன்னைக்கு போகல.. காலையிலேயே லீவு சொல்லிட்டேன்.. உங்களை பாத்துக்க வீட்ல எப்படியும் ஒரு ஆள் வேணும் இல்ல.. உங்க அத்தையும் இன்னிக்கு காலைல ஊருக்கு கிளம்புறாங்களே..”
அவள் சொன்னதும் தான் தீரனுக்கு நினைவு வந்தது.. “ஆமால..? அவங்க பையன் இன்னைக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு.. ஆனாலும் நானே பார்த்துக்கறேன் மதி.. எனக்காக நீ லீவு எல்லாம் போட வேண்டாம்.. நீ இந்தரோட காலேஜுக்கு போயிட்டு வா..” என்றான்..
“நான் லீவு சொல்லியாச்சு.. இனிமே அதை பத்தி பேசாதீங்க நீங்க.. அமைதியா இருங்க.”
அதற்குள் மலரழகி “நீ வேணா காலேஜ் போயிட்டு வா கா.. நான் லீவு போட்டு இன்னைக்கு மாமாவை பாத்துக்கறேன்..” என்று சொல்ல “ஒன்னும் தேவை இல்ல.. ஒழுங்கா காலேஜ் போய் படிக்கிற வழியை பாரு.. நான் ஒரு நாள் இல்ல நாலு நாள் காலேஜ் லீவு போட்டு இருக்கேன். அவ்வளவு நாள் நீ லீவு போட்டா உனக்கு நிறைய லெசன்ஸ் போயிரும்.. நீ ஒழுங்கா காலேஜூக்கு போ.. என் புருஷனை எனக்கு பாத்துக்க தெரியும்..”
அவள் தீரனை தன் புருஷன் என்று சொல்லும்போது அவள் குரலில் ஒலித்த அந்த உரிமையான பாவனை தீரனுக்குள் ஒரு அழகிய ஆனந்த உணர்வை தூண்டி விட அவன் இதழில் பெரிதாய் ஒரு புன்னகை விரிந்தது..
மதி சொன்னதை கேட்ட தீரன் “சரி.. அப்போ இந்தரோட மாமா போகட்டும்.. இந்த வயசுல மாமா பஸ்ல எல்லாம் அலைய வேண்டாம்.. இந்தர்.. மாமாவை அவர் வேலை செய்ற இடத்துல விட்டுட்டு நீ அப்படியே காலேஜுக்கு போ” என்றான் தீரன்..
அப்போது மலரழகி “ஹூம்.. இப்ப மட்டும் என் வண்டி என்கிட்ட இருந்தா நான் அதுல டர்ன்னு ஏறி போயிருப்பேன்.. பஸ்ல போகணும்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு..”
சலிப்பாய் அவள் சொல்ல அதை பார்த்த தீரன் “என்ன..? உனக்கு உன் வண்டி வேணுமா? சரி இரு..” என்றவன் இந்தரை பார்த்து “இந்தர் உன் வண்டியில மலரை அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் விடு.. அவ அங்கருந்து அவ வண்டியை எடுத்துட்டு காலேஜூக்கு வரட்டும்.. நீ வீட்டுக்கு வந்து மாமாவை கூட்டிகிட்டு உன் வண்டியில கிளம்பு.. சொல்றது புரியுதா?”
தீரன் சொல்லவும் “ம்ம்.. இவனோட வண்டியில போகணுமா? ஐயோ.. எல்லாம் என் தலையெழுத்து.. ஆனா எனக்கு என் வண்டி வேணுமே.. வேற வழி இல்ல.. போய்ட்டு வந்துருவோம்..” முகத்தை சுருக்கியபடி உள்ளுக்குள் புலம்பினாள் மலரழகி..
இந்தர் மலரழகி இருவரும் அவன் வண்டியில் ஒன்றாக மலரழகியின் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.. வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது வழியில் வேக தடைகளும் பள்ளங்களும் மேடுகளும் வரும்போது எதார்த்தமாய் அவன் பிரேக்கை பிடிக்க அவளோ அந்த இழுசக்தியில் அவன் மேல் இடித்து விடுவது போல் முன்னால் சாய தன்னை தானே கட்டுப்படுத்தி அவன் மேல் தன் மேனி படாதவாறு நேராக அமர்ந்திருந்தாள்..
இரண்டு மூன்று முறை இப்படி நடக்கவும் “டேய்.. நிறுத்துடா வண்டியை.. என்னடா நெனைச்சிட்டிருக்க நீ..? உன் காலேஜ் பொண்ணுங்களை உன் வண்டி பின்னாடி உட்கார வச்சு ஊர் சுத்தும் போது அப்பப்ப சடன் ப்ரேக் போட்டு அவங்களை உன் மேல விழ வைக்கிறது.. ரோட்டில அவ்வளவு இடம் இருக்கும்போது வேணும்னே மேடுலயும் பள்ளத்துலயும் ஏறி இறங்குறது.. இந்த மாதிரி வேலை எல்லாம் அவங்களோடவே வச்சுக்கோ.. என்கிட்ட இப்படியெல்லாம் பண்ணனும்னு நினைச்சே அப்புறம் நடக்கிறதே வேற.. கைவசம் சேஃப்டி பின் வச்சிருக்கேன்.. எடுத்து நறுக்குன்னு குத்திடுவேன் முதுகில..”
அவள் அப்படி சொல்லவும் அவனுக்கு இவளை போய் தன் வண்டியில் ஏற்றி வந்தோமே என்று சலிப்பு தோன்றியது..
“ஆமாண்டி.. உன்னை பத்தி தெரிஞ்சும் உன்னை எல்லாம் என் வண்டில ஏத்திட்டு வந்தேன் பாரு.. என் தலையெழுத்து.. என்னை பத்தி என்ன தாண்டி நெனச்சிக்கிட்டு இருக்க நீ..? இந்த அம்மா பெரிய ரதி.. அப்படியே மேல வந்து விழணுங்கறதுக்காக பிரேக் போடுறாங்க.. அடச்சே.. நீயும் உன் கற்பனையும்.. ம்ம்.. எனக்கு என்ன தோணுதுன்னா என்னை மாதிரி ஒரு அழகான பையனை பார்த்ததும் ஒருவேளை நீ கண்ட்ரோல் இல்லாம வேணும்னே என் மேல விழறியோன்னு தோணுது.. அப்படி வேணா இருக்கலாம்..”
அவளுடைய குற்றச்சாட்டுக்கு பதிலாய் அவளை சீண்டும் விதமாக பேசினான் அவன்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 54
“உன் மேல.. யாரு..? நான்..? போடா போ.. நெனப்பு தான் உனக்கு பொழப்பை கெடுக்க போகுது.. இங்க பாரு.. ஏதோ என் வண்டி வேணுமேங்குறதுக்காக வேற வழி இல்லாம உன்னோட வரேன்.. இல்லன்னா உன் வண்டியில எல்லாம் இந்த ஜென்மத்துக்கு ஏறனும்னு நினைக்க கூட மாட்டேன் நான்… என் மாமாக்கு மட்டும் உடம்பு நல்லா இருந்தா அவர் கிட்டயே சொல்லி அவரோடயே போய் என் வண்டியை எடுத்துட்டு வந்து இருப்பேன்..”
மலர் சொன்னதும் இந்தர் அவளை முறைத்தபடி “ஓ அப்படியா..? முதல்ல என் வண்டிலருந்து இறங்குடி.. அப்படியே பொடி நடையா உன் வீட்டுக்கு போய் உன் வண்டியை எடுத்துட்டு வா.. உனக்கு என் வண்டியில ஏறுறது அவ்ளோ கேவலமா இருக்குன்னா நீ ஒன்னும் என் வண்டியில் வர வேண்டாம்..”
அவன் வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கி அவளை முறைத்த படி சொன்னான்..
“போ.. நான் ஒன்னும் உன் வண்டில வரணும்னு காத்துட்டு இருக்கல.. இப்ப என்ன..? நீ என்னை உன் வண்டியில ஏத்திக்கிட்டு போகலைன்னா நான் ஒரு ஆட்டோ வச்சிட்டு போய் என் வண்டியை எடுத்துக்கிறேன்.. இங்கே யாரும் உன் வண்டியில தான் வரணும்னு தவம் கெடக்கல.. போடா.. இந்த மாமாக்கு சரியான அதுக்கப்புறம் அவரோடயே வண்டியில வந்து என் வண்டியை எடுத்துட்டு இருக்கலாம்.. அவசரப்பட்டு வண்டி எடுக்கலாங்கற ஆசையில உன்னோட வந்தது தப்பா போச்சு”
அவளை மேல் கண்ணால் சந்தேகமாய் பார்த்தவன் “ம்ம்.. எனக்கு ஒரு டவுட் டி.. நீ இன்னும் உன் மனசுல எங்க அண்ணனை நெனச்சுக்கிட்டு இருக்கியா?”
அவன் கேட்டதும் அவனை முறைத்தவள் “ஏன்.. நீ இன்னும் உன் மனசுல எங்க அக்காவை நினைச்சுட்டு இருக்கியா? அதான் என்னையும் இப்படி கேக்குறியா?”
அவள் கேட்டதும் அவனுக்கு முனுக்கென கோபம் வந்தது..
“என்னை பாத்தா எப்படிடி தெரியுது உனக்கு..? நான் என்னிக்கோ சொல்லி இருக்கேன்.. அண்ணி எங்க அம்மா மாதிரின்னு.. இப்ப எங்க அம்மாவா தான் அவங்களை பார்க்கிறேன்.. அப்புறம் அவங்களை எப்படிடி வேற மாதிரி நான் தப்பா பார்க்க முடியும்? நான்லாம் நல்ல குடும்பத்துல வளர்ந்தவன்.. அந்த மாதிரி எல்லாம் தப்பா யோசிக்க மாட்டேன்”
“அப்போ நான் மட்டும் என்ன கேடுகெட்ட குடும்பத்தில இருந்து வந்தவளா? நாங்களும் உன்னை மாதிரிதான் எங்க அக்கா புருஷனை லவ்வரா பாக்குற அளவுக்கு கேவலமானவ கிடையாது..”
“நீ சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இப்ப கூட எங்க மாமா நல்லா இருந்தார்னா அவரோட வண்டியில போயிருப்பேன்னு சொல்றியே.. அது தான் டி சந்தேகமா இருக்கு.. அங்க வீட்ல என்னெல்லாம் லூட்டி அடிக்கிற நீ? எங்க அண்ணனுக்கு ஊட்டி விடுறேன்கிற.. அவரை பார்த்துக்க நீ லீவ் போடுறேன்னு சொல்றே.. அதுவும் அன்னிக்கு உன் காலேஜ் ஃப்ரெண்டு கிட்ட எங்க அண்ணனை நீ சொந்தமாக்கிட்டேன்னு சொல்ற.. அந்த வீட்ல நீ மட்டும் தான் அவரை புரிஞ்சு வச்சிருக்கேன்னு சொல்ற..? என்னடி இதெல்லாம்..? இதை எல்லாம் கேட்கறப்பவும் பார்க்கிறப்பவும் நீ எங்க அண்ணனை உன் அக்கா புருஷனா பாக்குற மாதிரி தெரியல.. உன்னோட..”
அவன் சொல்லி முடிக்கும் முன் “டேய் அவ்வளவு தாண்டா உனக்கு மரியாதை.. இன்னொரு வார்த்தை பேசின மரியாதை கெட்டுடும்..”
மிரட்டலாய் சொன்னவள் “நீங்க ஆம்பளைங்க எல்லாம் எப்பவுமே இப்படித்தான் அவசர அவசரமா முடிவெடுப்பீங்களா? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா? இதிலயும் மாமா தான்டா பெஸ்ட்டு.. அவர் பாரு எவ்வளவு நிதானமா உனக்காக எங்க அக்காக்காக எனக்காக ஏன் எங்கப்பா சைட்லருந்து கூட யோசிச்சு முடிவெடுக்கிறாரு.. நீ ஏண்டா இவ்வளவு ஜட்ஜ்மெண்ட்டலா இருக்க.. நான் செய்யறது எல்லாம் பார்த்தவுடனே மாமா மேல ஆசை இருக்கு எனக்கு.. அதனால தான் நான் இப்படி எல்லாம் செய்றேன்னு முடிவுக்கு வந்துட்டே இல்ல.. போடா கூமுட்டை..”
அவள் அவனை எரிப்பது போல் பார்த்து சொல்ல “பின்ன.. நீ செய்யறது எல்லாம் பாத்தா வேற மாதிரியா தோணுது.. அப்படித்தான் தோணுது..”
அவன் இன்னும் அழுத்தி சொல்லவும் “வேணாம் டா.. ரோடுன்னு கூட பாக்க மாட்டேன்.. அடி பின்னிடுவேன்..”
அவள் மறுபடியும் மிரட்ட “என்னடி மிரட்டுறியா? செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு இப்போ வந்து சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்கே.”
“உனக்கெல்லாம் மூளையே வேலை செய்யாதாடா? ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதா தானே சொல்றாங்க..? ஆனா கல்யாணம் ஆன நாளா அவங்களை கவனிச்சியா? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்குள்ள இருக்குற அன்னியோன்னியம் எங்க அக்காவுக்கும் உன் அண்ணனுக்கும் நடுவுல இருக்கா? என்னிக்காவது இதை யோசிச்சு பாத்திருக்கியா நீ..?”
அவள் சொன்னதும் தான் யோசிக்க தொடங்கி இருந்தான் அவன்..
“இப்ப யோசி.. நான் எல்லாம் முதல் நாளே இதை புரிஞ்சுகிட்டேன்.. அவங்க ரெண்டு பேரும் சேகர் சொன்ன மாதிரி ஏதோ ஒரு அக்ரிமெண்ட் மாதிரி கல்யாணம் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அவங்க நடந்துக்கறது எல்லாம் பார்த்தா எங்க நம்பளுக்காக இப்படி ஒரு கல்யாணத்துல இருந்துட்டு கொஞ்ச நாள் கழிச்சு சேகர் சொன்ன மாதிரி பிரிஞ்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு..”
“என்னடி சொல்ற? பிரிஞ்சிடுவாங்களா..?”
“ஆமாடா.. அந்த சேகர் சொன்னான் இல்லே? நம்ம ரெண்டு பேரும் செட்டில் ஆனப்பறம் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியணும்னு முடிவு எடுத்து இருக்காங்கன்னு.. ஆனா நான் இன்னொரு விஷயத்தையும் நோட் பண்ணேன் டா.. அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா ஒரு அன்யோனியத்தோட நடந்துக்கலையே தவிர அவங்களுக்குள்ள காதல் இல்லாம இல்ல.. அவங்க ஒருத்தரை ஒருத்தர பார்க்கற பார்வையிலே அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சிருக்காங்கன்னு தெரியுது.. ஆனா ஏதோ ஒரு விஷயம் அவங்களை அதை சொல்ல விடாம தடுக்குது..”
“என்னடி.. என்னென்னவோ சொல்ற.. நீ ஒன்னும் இல்லாத விஷயத்துல என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிறேன்னு நினைக்கிறேன்.. அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது.. ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க..”
“டேய்.. நான் ஒரு டாக்டர் ஆகப்போறவ டா.. எனக்கு தெரியாதா புருஷன் பொண்டாட்டி எப்படி இருப்பாங்கன்னு.. அந்த அளவுக்கு கூட உலகம் தெரியாதவ கிடையாது நானு.. அதுக்கு தான்.. அவங்க மனசுல இருக்குற காதலை வெளியில கொண்டு வரணுங்கறதுக்காகத்தான் நான் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்.. எங்க அக்கா நிச்சயமா என்னை சந்தேகப்பட மாட்டா.. அதே சமயம் நானும் ஒரு பொண்ணு தானே..? மாமாவோட நான் க்ளோசா இருக்கிறது அவளுக்குள்ள நிச்சயமா ஒரு பொறாமையை கிளப்பி விடும்.. அந்த பொறாமை வளர்ந்து வெளியில வரப்போ அவ ஓப்பனா தன்னோட காதலை.. அவர் மேல தனக்கு இருக்கிற பொஸஸ்ஸிவ்நெஸ்ஸை வெளிப்படையா காட்டுவா.. அது வெளிய வந்துச்சுன்னா ஆட்டோமேட்டிக்கா தன் காதலை மாமா கிட்ட சொல்லுவா..”
“அது எப்படி.. அவ்வளவு உறுதியா சொல்ற?
“அது அப்படித்தான்.. தன்னோட புருஷன் லவ்வர் பொருத்தவரைக்கும் பொம்பளைங்க எல்லாம் ரொம்ப பொஸ்ஸிவ்.. அதுவும் நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு அடம் பிடிச்சவ.. நான் மாமாவோட நெருங்கி இருக்கிறது அவளுக்கு ரொம்ப உறுத்தும்.. நிச்சயமா என்னை மாமா கிட்ட நெருங்க விடக்கூடாதுன்னு அவளோட காதலை ஏதாவது ஒரு விதத்துல அவ வெளிப்படுத்துவா.. அப்ப கொஞ்சம் பிரச்சனையாகும் தான்.. எனக்கு திட்டு மட்டும் இல்லாம ஒன்னு ரெண்டு அடி கூட விழலாம்.. ஆனாலும் பரவால்ல.. எங்க அக்கா வாழ்க்கைக்காக நான் இதை சகிச்சுக்க தயாரா இருக்கேன்.. ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ள நெருக்கம் அதிகரிக்கணும்.. இன்னிக்கு நான் அப்படி எல்லாம் வீட்ல நடந்துக்கலன்னா நிச்சயமா அவ லீவு போட்டு இருக்க மாட்டா.. மாமா நானே பார்த்துக்கிறேன்னு சொன்னதும் கன்வின்ஸ் ஆகி காலேஜூக்கு போய் இருப்பா.. அவளோட காதல் தான்.. மாமா மேல அவளுக்கு இருக்கிற பொஸஸிவ்நெஸ் தான் அவளுக்கு லீவு போட்டு மாமாவை பாத்துக்கணும்ங்கிற எண்ணத்தை கொண்டு வந்துச்சு.. எங்க அக்காவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அவ அனாவசியமா காலேஜ்க்கு லேட்டா கூட போக மாட்டா.. லீவ் எடுத்துக்க எல்லாம் சான்சே இல்ல.. ஆனா இன்னைக்கு நான் பிகேவ் பண்ணதை பாத்து அவ நாலு நாள் லீவ் போட்டிருக்கான்னா பாத்துக்கோ.. நம்ம ஆக்டிங் எவ்வளவு தூரம் வொர்க் அவுட் ஆயிருக்குன்னு..”
அவள் சொன்னதை கேட்டவன் அவளை பிரமிப்பாய் பார்த்து இருந்தான்..
“நீ சொல்லும்போது தான் நானும் யோசிக்கிறேன்.. அவங்க ரெண்டு பேரும் புதுசா கல்யாணம் ஆன ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி நடந்துக்கல இல்ல..? சரிதான்..”
“கரெக்ட்.. இப்போ அக்கா லீவு போட்டு வீட்ல இருக்காளா? அவங்க ரெண்டு பேரும் தனியா ஒண்ணா இருக்கறதுக்கு ஒரு சான்ஸ் கெடைச்சிருக்கு.. இந்த நாலு நாளும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற காதல் வெளியில வந்து ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறதுக்கு நல்ல ஆப்பர்ச்யூனிட்டியா இருக்கும்.. அதுக்கு தான் நான் இப்படி பண்றேன்.. இனிமேலும் நான் இப்படித்தான் நடந்துக்குவேன்.. உனக்கு இரிட்டேட்டிங்கா இருந்தா நீ பாக்காத..”
“சரிதான்.. ஆனா உன்னை மாதிரி நடிப்புக்காக கூட அண்ணி கிட்ட என்னால அந்த மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாது.. ஏன்னா அவங்களை என் அம்மாவா பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நான்..”
“இப்ப யாரு ஒன்னை அந்த மாதிரி எல்லாம் நடிக்க சொன்னா.. எங்க அக்காவை கெளப்பி விட்டு கொளுத்தி போட்டாலே போதும்.. அதெல்லாம் நடக்க வேண்டியது தன்னால நடக்கும்.. எங்க அக்கா ஆரம்பிச்சா அதுக்கு அப்புறம் மாமா அவர் காதலை அழகா கொண்டு போய்டுவார்.. நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.. எங்க மாமா பக்கா சூப்பர் ஹீரோ.. சரி.. அதைவிடு.. இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தி வச்சிருக்க..?”
“ஏன் மேடம்.. இவ்வளவு நேரம் கதை பேசினதுல நீங்க என்ன சொன்னீங்கன்னு மறந்து போச்சா? நான் என்னவோ திட்டம் போட்டு நீ என் மேல வந்து விழணும்கற எண்ணத்தோட தாறுமாறா வண்டி ஓட்டறேன்னு சொன்ன இல்ல..? நீ எப்படியாவது போய்க்கோ.. நான் கிளம்புறேன்..”
“சரி சரி.. கோவிச்சுக்காதே.. நான் உன்னை நம்புறேன்.. வா போலாம்..”
சட்டென்று அவள் சமாதானமாய் பேசினாள்.. அவளுக்கு அவள் வேலை ஆக வேண்டுமே.. வேறு வழி.. அவனோடு இந்த பஞ்சாயத்தை வேறு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் அவள்..
லவ்.. ❤️லவ்..❤️ எத்தனை வயது..!! – 55
அவனும் “இன்னொரு முறை இந்த மாதிரி பேசினே.. அவ்வளவுதான் அப்படியே இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. நீ நினைக்கிற மாதிரி ஆளு நான் கிடையாது.. உனக்கு யாரோ என்னை பத்தி தப்பு தப்பா சொல்லி வச்சிருக்காங்க.. நீ என்ன பண்ற.. எங்க காலேஜ்க்கு ஒரு நாள் வா.. என் ஃபிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் என்னை பத்தி கேளு.. ஒரு பொண்ணு என்னை பத்தி தப்பா ஏதாவது சொன்னா அப்புறம் நீ சொல்ற அத்தனை கம்ப்ளைன்ட்டையும் நான் ஒத்துக்கறேன்..”
“ஆமா இவரு உலகத்திலேயே இல்லாத உத்தமருன்னு தெரிஞ்சுக்கறதுக்காக இவர் காலேஜ் வந்து இவர் ஃபிரெண்டோட எல்லாம் நாங்க பேசுறோம்.. அடச்சே.. எனக்கு வேற உருப்படியான வேலை இல்லன்னு நெனச்சியா? போடா போ.. வீட்டுக்கு போ சீக்கிரம்.. வண்டி எடுத்துட்டு நான் காலேஜ் போகணும்.. நீ வேற உன் வீட்டுக்கு போய் அப்பாவை கூட்டிட்டு வரணும்.. ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு.. இங்க ரோட்ல நின்னு வெட்டி கதை பேசிகிட்டு இருக்கே..”
அவள் சட்டென அப்படி சொல்லிவிடவும் “யாரு..? நானு..? அது சரி.. நல்லா வருவீங்கடி நீங்க எல்லாம்”
அலுத்து கொண்டவன் வண்டியை அவள் வீட்டை நோக்கி செலுத்தினான்..
அங்கே சென்றதும் வண்டியில் இருந்து இறங்கிக்கொண்டவள் “சரி.. அப்போ நீ கிளம்பு வீட்டுக்கு.. அப்பாவை கூட்டிட்டு போ.. நான் என் வண்டியை எடுத்துட்டு கிளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் டிரஸ் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும்.. அதெல்லாம் எடுத்துட்டு நான் கொஞ்சம் நிதானமா கிளம்புறேன்.. காலேஜூக்கு நிறைய டைம் இருக்கு..”
சொல்லிவிட்டு அவள் திரும்பி சென்று விட போகும் அவளையே பார்வையில் ஒரு ரசனையோடு பார்த்திருந்தான் இந்தர்..
“ம்ம்..படப்படன்னு பேசறா.. சண்டை போடுறாளே தவிர எல்லாரை பத்தியும் கவலை படுறா.. தனக்கு கெட்ட பேர் வந்தாலும் பரவால்லன்னு அண்ணா அண்ணிக்காக என்ன எல்லாம் செய்றா… ம்ம்.. நல்ல பொண்ணு தான் போல..”
மனதிற்குள் சொல்லியபடியே தன் வண்டியை கிளப்பி வீட்டை நோக்கி செலுத்தினான்..
வீட்டில் எல்லோரும் கிளம்பிவிட தீரனின் அத்தையும் ஊரிலிருந்து அவரை அழைத்து போக வந்த அவர் மகனுடன் கிளம்பி சென்றிருந்தார்..
மதியழகி தீரனை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.. அவனை வேளைக்கு உண்ண வைத்து மாத்திரை மருந்துகளை சரியாக கொடுத்து அவன் கையில் அவ்வப்போது வலி இருக்கிறதா என்று கேட்டு வருடி கொடுத்து என அவனின் முழு நேர சேவகியாகவே மாறி இருந்தாள்..
அவன் மெல்லியதாய் முகம் சுருக்கினாலும் “என்ன தீரா? ரொம்ப வலிக்குதா?” என்று பதட்டத்தோடு கேட்பவளை ஒரு பெருமூச்சு விட்டு பார்த்தான் அவன்..
“மதி.. உனக்கு எத்தனை முறை சொவ்றது? எனக்கு இந்த மாதிரி நிறைய அடி பட்டு இருக்கு.. ஷூட்டிங்ல இந்த மாதிரி அடி படறதெல்லாம் சகஜம்.. பெரிய பெரிய ஹீரோக்கெல்லாமே அடி படும்.. இதுல நான் ஸ்டன்ட் மாஸ்டர்.. எனக்கு அடி படாம இருக்குமா?”
அவன் அவளுக்கு புரிய வைத்து விடும் நோக்கில் பேசி கொண்டு இருக்க “பெரிய ஹீரோவோ ஸ்டன்ட் மாஸ்டரோ.. யாரா இருந்தா என்ன..? ரெண்டு பேரும் மனுஷங்க தானே? அடிப்பட்டா வலிக்கும் தானே..?”
அவள் வலியில் அவன் முகம் சுருங்குவதை கூட தாளாமல் அவனோடு வாக்குவாதம் செய்ய “எனக்கு அவ்ளோ ஒன்னும் வலிக்கல மதி.. நீ இவ்ளோ டென்ஷன் ஆகாத..” அவன் அவளின் வாடிய முகத்தை பார்க்க முடியாது அவளை சமாதான படுத்தி கொண்டு இருந்தான்..
“ஆமா.. உனக்கு வலிக்கல.. ஆனா நீ வலியில லேசா முகம் சுருக்கினாலும் எனக்கு ரொம்ப வலிக்குதே டா..” மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் விஷயத்தை விழிகளாலேயே பேசி முடித்திருந்தாள் அவனிடம்..
ஓரளவு அவள் விழி பார்வையின் மொழிகளை புரிந்து கொண்டவன் அதற்கு மேல் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டான்..
அன்று முழுவதும் அவனையே சுற்றி சுற்றி வந்தாள் அவள்.. தீரனின் அன்னை இருந்தபோது கூட அவனை அப்படி கவனித்துக் கொண்டதில்லை.. அவனுடைய அன்பும் சரி அவன் அன்னையினுடைய கவனிப்பும் சரி இந்தருக்கே முழுதாய் சொந்தமாக இருந்தது எப்போதும்.. வீட்டின் செல்ல பிள்ளை அல்லவா அவன்.. ஆனால் இப்போது மனைவிக்கு மனைவியாகவும் அன்னைக்கு அன்னையாகவும் இருந்து தன்னை கவனித்துக் கொள்ளும் மதியின் தீவிர அன்பில் கொஞ்சம் நெகழ்ந்து தான் போனான் தீரன்..
மாலையில் பார்கவியிடமிருந்து மதியழகிக்கு அழைப்பு வர அதை ஏற்று பேசியவள் அவள் சொன்ன விஷயத்தை கேட்டு பெரிதாய் முகம் மலர்ந்து போனாள்.. ஆனால் அடுத்த நொடியே அவள் முகம் வெயிலில் வாடிப்போன ரோஜா மலராய் சுருங்கி போய் இருந்தது..
பார்கவி தன் படத்தில் தீரனை கதாநாயகனாக நடிக்க வைக்க பாண்டி சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லியபோது ஏற்பட்ட அந்த ஆனந்தமும் மகிழ்ச்சியும் அவனின் தற்போதைய நிலை நினைவில் வர அப்படியே வடிந்து போனது..
“இப்பதான் அவரு கையில அடிபட்டு இருக்கேடி.. அவர் எப்படி இப்ப நடிக்க முடியும்?”
அவள் இழுக்க “அடியேய் அறிவு கெட்டவளே.. இது அவருக்கு தெரியாதா? அவர் கையில அடிபடும் போது பாண்டியும் அங்க தானடி இருந்தான்..? ஆனால் அண்ணன் கையில தானே அடிபட்டு இருக்கு.. டயலாக் பேசுறதுக்கு வாய் நல்லா இருந்தா போதாதா? அண்ணா டயலாக் பேசி மூஞ்சில எக்ஸ்பிரஷன் காட்டினா போதும்.. இப்ப சும்மா ஆடிஷன் தான்டி.. ஷூட்டிங் ஆரம்பிக்க எப்படியும் 15 20 நாள் ஆயிரும்.. அதுக்குள்ள அண்ணாக்கு கை சரியாயிடும்.. முதல்ல இந்த ஸ்க்ரீனிங்கை அண்ணா கிளியர் பண்ணட்டும்.. அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்.. அண்ணாவை ஒழுங்கா நடிக்க சொல்லுடி.. இந்த ஆடிஷன்ல தான் அவரோட எதிர்கால வாழ்க்கையே இருக்கு..”
“அதெல்லாம் நீ கவலைப்படாதே.. நாளைக்கு அங்க வந்து எப்படி நடிக்க போறார் பாரு.. அவர் நடிப்புல நீங்க ரெண்டு பேரும் அப்படியே அசந்து போய்ட போறீங்க..”
பெருமையாக சொல்லிக் கொண்டவள் “சரிடி.. நான் அவர்கிட்ட விஷயத்தை சொல்லி அவரை நாளைக்கு நடக்கற ஆடிஷனுக்கு பிரிப்பேர் பண்றேன்..” சொல்லிவிட்டு கைபேசி இணைப்பை துண்டித்தாள் மதி..
தீரன் அருகில் வந்து அமர்ந்தவள் அவன் கேசத்தை மெல்ல வருடிவிட அவனும் மெதுவாய் கண்களை திறந்து தன்னவளின் மதிமுகத்தை பார்த்தான்..
உடனேவே அவன் இதழில் ஒரு அழகான புன்னகை மலர்ந்தது.. அவள் முகத்தை கண்ட நொடி மலர்ந்து போகிறான் அவன் ஒவ்வொரு முறையும்..
அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவன் பார்வையில் இருந்து தன் பார்வையை தாழ்த்தியவள் “அது.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”
அவள் இழுத்த இழுப்பில் என்னவோ ஏதோ என்று தீரன் குழப்பத்தோடு அவளை பார்த்தான்..
“என்ன விஷயம் மதி..?”
“அது.. பார்கவி கிட்ட நீங்க பாண்டி அண்ணா படத்துல ஹீரோவா நடிக்கிறது பத்தி கேட்டிருந்தேன்.. அண்ணாவும் உங்களை நடிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாராம்..”
“என்னது? ஹீரோவா நடிக்க வைக்க கேட்டுருந்தியா? நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல.. எனக்கு நடிப்பு எல்லாம் வராதுன்னு.. ஏன் மதி..? பாண்டி பாவம்.. அவனாவது உருப்படியா படம் எடுத்து வேலையை பார்ப்பான் இல்ல..? இப்ப அவன் டைம் உழைப்பு பணம் எல்லாமே என்னால வேஸ்ட் ஆகும்..”
அவன் அவள் பேசுவதை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் புலம்பி தள்ள அவளோ “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. கொஞ்ச நேரம் நீங்க வாயை மூடிட்டு சும்மா இருங்க.. நான் சொல்றதை கேளுங்க.. அன்னிக்கு பாண்டி அண்ணா வீட்ல நம்ம ரெண்டு பேரும் நடிச்சப்போ நான் அவ்வளவு சொதப்பினேன்.. ஆனா நீங்க எவ்ளோ அழகா நடிச்சீங்க தெரியுமா? அப்புறம் அந்த ரெஸ்டாரண்ட்ல.. சத்தியமா சொல்றேன்.. அங்க யாரு இருந்திருந்தாலும் நீங்க நிஜமாவே என்னை உயிருக்கு உயிரா லவ் பண்றீங்கன்னு தான் நினைச்சிருப்பாங்க.. அப்படி இருந்தது உங்க நடிப்பு..”
அவள் சொன்னதை கேட்ட அவனோ “அடியேய்.. அது நடிப்பில்லடி.. நெஜம்டி.. சினிமால நடிக்கற ஹீரோயினை எல்லாம் பார்த்தா அப்படி எல்லாம் ரொமான்ஸ் வராதுடி.. ஐயோ.. புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாளே.. என்னை வச்சு செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டா.. இதுல பாண்டி வேற.. நாளைக்கு அவனை பார்ப்பேன் இல்லை? அப்ப வெச்சிக்கிறேன் அவனுக்கு..” இப்படி எல்லாம் மனதிற்குள் நினைத்தானே தவிர வெளியில் அவனால் சொல்ல முடியவில்லை..
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. உங்களால நல்லா நடிக்க முடியும்.. எனக்கு தெரியும்.. அதனால நாளைக்கு போறீங்க.. அங்க ஆடிஷன் அட்டென்ட் பண்றீங்க.. சூப்பரா நடிக்கிறீங்க.. பெரிய ஆக்டர் ஆகுறீங்க.. அவ்வளவுதான்.. இதுக்கு மேல வேற ஒரு பேச்சும் கிடையாது..”
அவள் அழுத்தமாய் ஏதோ ஆணையிடுவது போல் சொல்ல அவனும் ” மகராணி சொன்னப்பறம் நான் ஏதாவது மறுத்து பேச முடியுமா? தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி..” என்றான் பணிவாய்..
அவளோ கையை அருளுவது போல் வைத்துக்கொண்டு “அப்படியே ஆகட்டும் பக்தா.. நீ விரைவில் வாழ்வில் உன்னத நிலையை பெறுவாய்..”
அவள் அருள்வாக்கு சொல்வது போல் சொல்ல அவனோ அவளுடைய குறும்பில் அப்படியே அவளை ரசித்தபடி பார்த்திருக்க அவன் விழிகளில் இருந்து தன் விழிகளை வேறு புறம் திருப்பியவள் களுக் என வெட்கச்சிரிப்பு சிரித்துக் கொண்டு “சரி.. நான் போய் உங்களுக்கு சூப் செஞ்சு எடுத்துட்டு வரேன்..” சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் சமையலறைக்கு ஓடி இருந்தாள்..
மாலை காலையில் போனது போலவே தமிழ்வாணனும் இந்தரும் ஒன்றாக வண்டியில் வீட்டுக்குள் நுழைய அவர்கள் பின்னாலேயே தன் வண்டியில் உள்ளே நுழைந்தாள் மலர்..
மதியழகி உள்ளே மாலை சிற்றுண்டி ஏதோ செய்து கொண்டு இருக்க தீரன் அந்த வீட்டின் வெராண்டாவிலிருந்த ஒரு சிறிய திண்ணை போன்ற அமைப்பில் அமர்ந்திருந்தான்..
தமிழ்வாணன் இறங்கி உள்ளே வர அப்போது மலர் தன் வண்டியில் இருந்து இறங்கி தன் தலை கவசத்தை கழட்ட பார்க்கவும் அது வராமல் ஏடாகூடமாய் சிக்கிக் கொள்ள வெகு நேரம் போராடிக் கொண்டிருந்தாள் அதோடு..
அதை கவனித்த இந்தர் “ஹே மலர்.. என்னடி ஆச்சு.. ஹெல்மெட் லாக் மாட்டிக்கிச்சா?” என்க
“ஆமாடா.. ரொம்ப நேரமா கழட்ட ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. உள்ள ஏதோ ஏடாகூடமா சிக்கிக்கிச்சு போல.. கழட்டவே வரல..”
அவள் அருகே சென்று அவள் தலை கவசத்தை கழட்டும் முயற்சியில் இறங்கினான்.. தமிழ்வாணன் தீரனை அங்கு பார்த்து தலையசைத்து விட்டு உள்ளே சென்றிருந்தார்..
அப்போதும் வெரண்டாவில் அமர்ந்திருந்த தீரனின் பார்வை அங்கிருந்த ஜன்னல் வழியாக அவர்கள் இருவரின் மேல் தான் இருந்தது..
மலரின் தலைக்கவசத்தை கழற்ற முயன்று கொண்டிருந்த இந்தர் வெகு நேரமாய் முயற்சி செய்தும் அது வெளியே வராமல் போக “இந்த லாக் துரு பிடிச்சு இருக்கு போல.. இதெல்லாம் கவனிக்க மாட்டியா மலரு.. அதுல கொஞ்சம் எண்ணெய் போட்டு இருக்கலாம் இல்ல..?” என்று கேட்டான்..
“ஆமாண்டா.. இந்த ஹெல்மெட் வாங்கி ரொம்ப நாள் ஆகுது.. கிட்டத்தட்ட ஒரு நாலு அஞ்சு வருஷம் ஆகுது.. அதான் துரு பிடிச்சுருச்சு போல.. என்ன..? கழட்ட வரலையா? பேசாம உள்ள போய் ஸ்ட்ராப்பை கட் பண்ணிக்கிறேன்.. விடு..”
அவள் அவசரப்படவும் “இருடி.. ஸ்ட்ராப் கட் பண்ணா நாளைக்கு ஹெல்மெட் இல்லாம எப்படி வண்டி ஓட்டிட்டு போவ?” என்றவன் மெதுவாய் அதை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டி கழட்ட முயன்று கொண்டிருந்தான்..
அந்த தலை கவசத்தின் பூட்டு எப்படி மாட்டி இருக்கிறது என்று பார்க்க இன்னும் அவளது முகத்தின் அருகே சென்று அதை ஆழ்ந்து பார்த்த நேரம் அவள் முகம் அவன் முகத்தின் மிக அருகே இருக்க பளீர் என்று மினுக்கும் கண்ணாடியாய் அவள் கன்னம் அவன் பார்வையை பற்ற அந்த நேரம் பக்கவாட்டில் இருந்து அவள் முகத்தை ஒரு நொடி ரசித்திருந்தான்..
ஆனால் அவனின் பார்வை மாற்றம் தீரனின் கண்களில் சரியாக சிக்கியது..
“என்ன இந்தர்.. கழட்டிட்டியா?” சத்தமாக கேட்டான் தீரன்.. இந்தரோ அவன் குரலில் அதிர்ந்து போனான்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது..!! – 56
தீரன் குரல் கேட்டு தன் நிலை உணர்ந்த இந்தர் முயன்று வேகமாய் தலைகவசத்தின் பட்டையை பிடித்து இழுக்க அடுத்த கணமே அந்த தலை கவசத்தின் பூட்டு திறந்து கொண்டது..
மலரழகியோ “அப்பாடா..” என்று ஒரு பெருமூச்சை உதிர்த்தவள் “எங்க இந்த ஹெல்மெட்டோடயே நாள் ஃபுல்லா சுத்த வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன்.. தேங்க்ஸ் டா இந்தர்..” சொல்லிவிட்டு உள்ளே வர தீரனோ இந்தரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
மலர் “ஹாய் மாமா..” என்க “ஹாய் மலர்.. உங்க அக்கா ஏதோ டிஃபன் பண்ணி வச்சு இருக்கா.. போய் ஃப்ரெஷ் ஆகிட்டு காஃபியும் டிஃபனும் சாப்பிடு.. போ..” என்றான்..
அவளை அனுப்பிவிட்டு இந்தருக்கு குரல் கொடுத்தான் தீரன்..
அவன் அழைத்ததும் “ஹாய் அண்ணா.. என்ன அண்ணா..?” என்று அவன் கேட்க “இந்தர்.. இப்படி வந்து உட்காரு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்று அவன் அருகில் இருந்த இடத்தை தட்டி காண்பிக்க இந்தரும் தீரன் அருகில் அமர்ந்தான்..
இந்தரின் கண்களையே கூர்ந்து பார்த்தபடி தீரன் அமைதியாய் அமர்ந்திருக்க இந்தருக்கோ அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று உள்ளம் வதக் வதக் என அடித்துக் கொண்டது..
“இங்க பாரு இந்தர்.. உன் காலேஜ்ல உன் கூட படிக்கிற பொண்ணுங்க கிட்ட நீ எப்படி நடந்துக்கிட்டாலும் அது உன்னோட காலேஜோடயே போய்டும்.. அங்கயும் இப்ப மதி இருக்கறதுனால நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும்னு உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. அப்படியே நீ இதுக்கு முன்னாடி நடந்துக்கிட்ட விதத்தினால மதிக்கு ஏதாவது பிரச்னைன்னாலும் அதை பார்த்துக்க நான் இருக்கேன்.. ஆனா மலர் விஷயம் அப்படி இல்லை.. மலரை மாமா என்னை நம்பி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்கி இருக்கார்.. அவளுக்கு ஏதாவது தப்பா நடந்துச்சுன்னா அதுக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்.. அதுவும் உன்னால அவளுக்கு ஏதாவது தப்பு நடந்துச்சுன்னா அது ரொம்ப பிரச்னை ஆயிடும்.. நான் சொல்றது உனக்கு புரியுதா?”
தீரன் சொன்னதைக் கேட்டு சற்று முன் தான் நடந்து கொண்டதை தீரன் கவனித்து விட்டான் என்று இந்தருக்கு புரிந்தது..
எச்சில் விழுங்கிய படி “அது வந்துண்ணா..” என்று அவன் ஏதோ சொல்ல வாய் எடுக்க தன் கையை தூக்கி காட்டி அவனை நிறுத்த சொன்ன தீரன் “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. எவ்வளவு தூரம் நீ அதை புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறியோ அவ்வளவு உனக்கு நல்லது.. பார்த்து நடந்துக்க.. உன்னால மதிக்கோ மலருக்கோ மாமாக்கோ எந்த பிரச்சினையும் வரக்கூடாது..”
“இல்லண்ணா.. அப்படியெல்லாம் எதுவும் வராது.. நானும் மலரும் ஃப்ரெண்டா தான் ணா..”
அவனை முடிக்க விடாமல் இடையில் புகுந்த தீரன் “எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் இந்தர்.. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்.. புரிஞ்சு நடந்துக்க.. அவ்வளவுதான்.. சரி போ.. உனக்கும் பசி இருக்கும்.. போய் ஏதாவது சாப்பிடு..”
தம்பியை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு தன் கையால் நெற்றியை நீவி விட்டபடி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தான் தீரன்..
அதன் பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மாலை சிற்றுண்டி உண்ணும் போது இந்தர் மலரின் பக்கம் கூட திரும்பவில்லை.. வேகமாக உண்டு விட்டு சிற்றுண்டியை செய்து கொடுத்த தன் அண்ணிக்கு அதன் அபிரிமிதமான சுவைக்கான பாராட்டை தெரிவித்துவிட்டு தன் அறையில் போய் அடைந்து கொண்டான்..
அப்போது இந்தருடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.. யார் என்று எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தே போனான்..
“இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் இவன் எதுக்கு எனக்கு கால் பண்றான்? அட்டென்ட் பண்ணி என்னன்னு கேட்டு வைப்போம்.” என்று எண்ணியபடி அந்த கைபேசி அழைப்பை ஏற்று “டேய் நீ எதுக்குடா எனக்கு ஃபோன் பண்ண..? அன்னைக்கு எங்க கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட்டது பத்தலையா?”
இந்தர் ஆத்திரத்தோடு கேட்க அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்த சேகர் “ஏன்டா.. அந்த வீட்டிலேயே இருந்துக்கிட்டு ரெண்டு பேரும் நடிச்சு கொட்டிக்கிட்டு இருக்காங்க.. அவங்களை பார்த்தாலே தெரியலையா? அவங்க நடிக்கிறாங்கன்னு.. இன்னுமாடா அவங்களை நம்பிகிட்டு இருக்கீங்க..? அவங்க கிட்ட ஏன் நடிக்கிறீங்கன்னு கேட்டு ரெண்டு பேரோட நடிப்பையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இவ்வளவு நாள் உங்க ஆளுங்க கூட எப்படி சேரலாம்னு பிளான் பண்ணிட்டு இருப்பீங்கன்னு பார்த்தா என்னடா ஒன்னும் செய்யாம அந்த வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கீங்க..? உனக்கு தான் ஒன்னும் விளங்கல.. அந்த மலர் பொண்ணுமா இவங்க நடிப்பை எல்லாம் நம்பிகிட்டு இருக்குது..”
“டேய்.. வேண்டாம்.. நீ நேரில இருந்தா உன்னை நான் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது.. அவங்களுக்குள்ள காதல் இல்லைன்னு உனக்கு தெரியுமாடா? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.. எனக்கு இது தெரியும்.. அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும்னு நினைக்கிற இந்த எண்ணத்தை எல்லாம் இதோட விட்டுட்டு மரியாதையா உன் வேலையை போய் பாரு.. நீ எவ்ளோ பேசினாலும் என் மனசை மாத்த முடியாது.. அவங்க என் அண்ணி.. என் அம்மாக்கு சமம்.. இனிமே அவங்கள பத்தி ஏதாவது தப்பா பேசினே நீ இருக்கிற இடம் தேடி வந்து உன் வாயை ஒடச்சிடுவேன் டா..”
“என்னடா மிரட்டுற? இங்க பாரு.. நீ வேணா அவ உங்க அண்ணி.. அம்மா மாதிரின்னு சொல்லி எதுவும் பண்ணாம இருந்துக்க.. ஆனா நான் அவங்க ரெண்டு பேரையும் பிரிப்பேன்.. அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு நெனச்சு நெனச்சு கதறுற மாதிரி அவங்கள துடிக்க வப்பேன்டா.. அவள காதலிச்ச ஒரே பாவத்துக்காக என் வாழ்க்கையையே அழிச்சவ அவ.. அவளை நிம்மதியா வாழ விட்ருவேனா..? ஆமா.. இன்னும் உங்க அண்ணியோட அப்பாக்கு இவங்க நடிக்கிற விஷயம் எல்லாம் தெரியாதுல்ல? அப்புறம் அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீ உன் அன்பு அண்ணியையும் மலரு அவளோட ஆசை மாமனையும் லவ் பண்ண விஷயம் கூட அவங்க அப்பாக்கு தெரியாது இல்ல.. அவருக்கு எல்லா விஷயத்தையும் சாட்சியோட சொல்லி தீரனும் மதியும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறாங்கன்னு ப்ரூவ் பண்ணி உங்க குடும்பத்தையே கதற வைக்கல.. என் பேரு சேகர் இல்லடா..”
“டேய்.. அண்ணி தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க இல்ல..? அப்புறம் அவங்களை விட்டு விலகிட வேண்டியதுதானே..? இப்ப அவங்க என் அண்ணன் கூட வாழ்ந்துட்டு இருக்காங்க.. உனக்கு எதுக்குடா இந்த ஈன பொழப்பு? இதை பாரு.. அண்ணன் அண்ணிக்கு எதிரா நீ ஏதாவது செஞ்சேன்னு எனக்கு தெரிஞ்சதுன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. அதோட கொன்றுவேன்டா உன்னை..”
அவன் சொன்னதை எல்லாம் அலட்சியப்படுத்திய சேகர் “என்னடா மிரட்டுறியா? அதெல்லாம் உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது.. நான் சொன்னதை முடிச்சிட்டு அப்புறம் உன்னோட பேசறேன்டா..” சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டிருந்தான் அவன்..
அவன் சொன்னதைக் கேட்ட இந்தருக்கோ கலக்கமாய் போனது.. தமிழ்வாணனுக்கு விஷயம் தெரிந்தால் அவர் உடைந்தே போவார்.. தன் பெண் நாடக கல்யாணம் செய்து தனக்கு தாலி கட்டியவனோடு மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது எந்த தந்தைக்கும் பெரிய இடி தானே..
யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் இருந்தது அவனுக்கு.. ஏற்கனவே தீரனுக்கு கையில் அடிபட்டிருக்கும் இந்த நேரத்தில் மதி அதை எண்ணி கவலையில் இருக்க இந்த விஷயத்தை சொல்லி மேலும் அவர்களை கவலை படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தான் அவன்..
சேகரை எப்படி சமாளிப்பது என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தும் அவனுக்கு எந்த யோசனையும் தோன்றவில்லை.. எப்படியாவது தமிழ்வாணனுக்கு விஷயம் தெரியாமல் அந்த சேகரை அடக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவனுக்கு அப்போது தான் மலரின் ஞாபகம் வந்தது..
“அதான் கரெக்ட்.. மலர் இதுக்கு ஏதாவது அதிரடியா நல்ல ஐடியாவா கொடுப்பா.. பேசாம அவ கிட்ட விஷயத்தை சொல்லி இதுக்கு ஏதாவது பண்ண சொல்லலாம்..”
இப்படி எண்ணிக்கொண்டு சட்டென தன் அறையில் இருந்து வெளியே போக கால் எடுத்து வைத்தவனுக்கு மாலையில் தன் அண்ணன் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது..
“மலரோட பேசுனா அண்ணன் வேற முறைப்பாரு.. அவருக்கு ஏற்கனவே இருக்கிற கவலை எல்லாம் போதும்.. சேகரை பத்தி வேற சொல்லி அவரை மேல மேல டென்ஷன் படுத்த வேண்டாம்.. இதை பத்தி பேசினா அவரும் அண்ணியும் நடிக்கிறாங்கங்கறது எனக்கும் மலருக்கும் தெரிஞ்சிருச்சுன்னு அதை நினைச்சு வேற கவலைப்படுவாரு.. நாங்க மறுபடியும் பழைய படி ஏதாவது ஆரம்பிச்சுருவோமோன்னு டென்ஷன் ஆவாரு.. வேண்டாம் இதை நம்மளே டீல் பண்ணிக்கலாம்.. ஆனா என்ன செய்யறது..?”
வெகு நேரம் அப்படியே யோசித்த படி அமர்ந்திருந்தவன் அதன் பிறகு இரவு 12 மணிக்கு மேல் எல்லோரும் உறங்கிய பிறகு மலரை அழைத்து பேசுவோம் என்று முடிவு செய்து நள்ளிரவு வருவதற்காக காத்திருந்தான்..
நள்ளிரவு 12 மணி அளவில் மெதுவாக ஓசை படுத்தாமல் தன் அறை கதவை திறந்து கொண்டு படி இறங்கி மலரின் அறை வாசலுக்கு சென்றவன் மெதுவாக “மலரூ..” என்று ரகசிய குரலில் அழைத்தபடி அவளின் அறை கதவை திறக்க அதே நேரம் பின் இருந்து தீரனின் குரல் கேட்டது..
“இந்தர்ர்ர்ர்..” தீரன் அழைப்பை கேட்டு வெடவெடத்து போனான் இந்தர்..
“டேய் இந்தரூ.. கரெக்டா வான்டடா வந்து சிக்கிட்டியேடா இவர் கிட்ட..” கண்ணை இறுக்க மூடி திறந்தவன் தீரன் பக்கம் திரும்பி மாந்தோப்பில் மாங்காய் திருடிவிட்டு மாட்டிக்கொண்ட சிறுவன் போல திரு திருவென முழித்தபடி “அண்ணா அது வந்து..” ஏதோ சொல்ல வந்தவனை பேசவும் விடாது அவன் கையை பிடித்து தரதரவென இந்தருடைய அறைக்கே இழுத்துப் போனான் தீரன்..
கதவை மூடிவிட்டு அவனுக்கு நேராக வந்து நின்றவன் அவனை எரிக்கும் பார்வை பார்த்த படி அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறை விட்டிருந்தான்..
கன்னத்தை கையால் பிடித்தபடி கலங்கி போய் அவனை பார்த்திருந்தான் இந்தர்..
“அண்ணா.. சாரி அண்ணா..”
பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு பார்த்திருந்தவனை எரிக்கும் பார்வை பார்த்திருந்தான் தீரன்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 57
“ச்சீய்.. வாயை மூடு.. சாயந்திரம் தானடா படிச்சு படிச்சு சொன்னேன்.. அந்த புள்ள இருக்கிற பக்கம் திரும்பி பார்க்காதன்னு.. என்ன தைரியம் இருந்தா நைட் 12 மணிக்கு அவங்க ரூம் கதவை போய் திறப்ப.. அந்த டைமுக்கு நல்லவேளை நான் வந்துட்டேன்.. ஒருவேளை நான் வரலைன்னா நீ என்னடா பண்றதா இருந்த.. நீ ஏண்டா இப்படி ஆயிட்டே இந்தரு.. நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்குடா.. என் தம்பியாடா நீ? உன்னை பத்தி எவ்வளவு பெருமையா நினைச்சிட்டு இருந்தேன்.. ஒவ்வொரு நாளும் அந்த எண்ணத்தை தரை மட்டமாக்கி குழி தோண்டி புதைக்கிறியேடா.. அதுவும் அவ பேரை கூப்ட்டுக்கிட்டே உள்ள போற.. என்னடா நெனச்சிட்டு இருக்க நீ.. நீ கூப்பிட்ட சத்தம் கேட்டு மாமா மட்டும் எழுந்து இருந்தாருன்னா அங்க என்ன நடந்திருக்கும்ன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.. அதுக்கப்பறம் அவர் முகத்தில நான் எப்படிடா முழிக்க முடியும்..?”
ஏற்கனவே இந்தர் செய்த வேலைக்கு அவன் அர்ச்சித்துக் கொண்டிருக்க மேலும் மேலும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டான் இந்தர்..
“அண்ணா தமிழ்வாணன் அங்கிள் நைட் ஆனா தூங்குறதுக்கு மாத்திரை போடுறாரு ண்ணா.. அது தெரிஞ்சதுனால தான்..” ஆடு தானே தலையை கொண்டு போய் பலிபீடத்தில் வைத்தது..
“டேய்.. உன்னை.. அவர் தூங்கறாருன்னா அந்த ரூமுக்கு போய் நீ என்ன வேணா செய்வியா.. டேய் இந்தர்.. வேணாண்டா என் கோபத்தை மேலே மேலே கிளறாத.. இனிமே அவ பக்கம் நீ பார்த்தா கூட உன்னை இந்த வீட்டை விட்டு நிரந்தரமா வெளியில அனுப்ப வேண்டி இருக்கும்.. சொல்லிட்டேன்.. மாமாவையும் மலரையும் இந்த வீட்ல நிரந்தரமா இருங்கன்னு சொல்லி நான் கூட்டிட்டு வந்து இருக்கேன்.. என் வாயால இந்த வீட்டை விட்டு அவங்களை போக சொல்ல முடியாது.. அவங்களுக்கு உன்னால ஏதாவது பிரச்சனைனா ஒன்னை தான் இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டி இருக்கும்.. பார்த்து நடந்துக்க..”
அவனை தீவிரமாய் முறைத்து விட்டு அந்த அறை கதவை படார் என சாத்திவிட்டு வெளியே சென்றவனை பயத்தில் எச்சில் விழுங்கி பார்த்தபடியே நின்று இருந்தான் இந்தர்..
“ஐயோ இந்தரு.. உனக்கு நேரமே சரியில்லடா.. இப்படி வான்டடா போய் சிக்கற… இப்ப என்ன பண்ணுறது?” மறுபடியும் சேகர் பற்றிய கவலைகள் அவன் மண்டையை குடைந்தது..
திடீரென ஒரு யோசனை தோன்ற “இது ஏன் எனக்கு முன்னாடியே தோனாம போச்சு..? தமிழ்வாணன் அங்கிள் எப்படியும் நைட் தூக்க மாத்திரை போட்டு தான் படுத்து இருப்பார்.. இப்ப என்ன சத்தம் கேட்டாலும் எழும்ப மாட்டார் இல்ல..?” என்று எண்ணியவன்
சட்டென தன் கைபேசியை எடுத்து மலருக்கு அழைத்தான்.. அங்கே மலரின் கைபேசி அடித்துக் கொண்டே இருக்க அவள் கைப்பேசியை எடுக்கவே இல்லை.. மேலும் இரண்டு முறை அழைத்தும் அவள் கைபேசி அழைப்பை ஏற்கும் வழியாய் காணவில்லை..
“இவ மத்த டைம்ல 24 மணி நேரமும் கையில் ஃபோனை வச்சுக்கிட்டு அதை நோண்டிக்கிட்டே இருப்பா.. ஆனா நான் ஃபோன் பண்ணும் போது மட்டும் எடுக்க மாட்டா..” தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் அவன்..
அப்போது அவன் கைபேசிக்கு மலரிடமிருந்து பதில் அழைப்பு வர ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவன் “ஹலோ மலரு.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என்க “டேய்.. ராத்திரி 12 மணிக்கு தூங்க விடாம தூக்கத்தை கலைச்சு எழுப்பி அப்படி என்னடா தலை போற விஷயம்..? அப்படியே உன் தலையே போனாலும் எனக்கு கவலை இல்லை.. தூக்கம் தூக்கமா வருது டா.. சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லி தொல.. இப்படி மறுபடி மறுபடி ஃபோன் பண்ணி என் தூக்கத்தை மொத்தமா கலைச்சு விட்டுட்டியே.. இருடா.. நாளைக்கு காலைல உன்னை கவனிச்சுக்கறேன்..”
அவள் தூக்கம் கலைந்த கோபத்தில் கத்த “ஏய் மலரு.. நெஜமாவே தலை போற விஷயம் தான்டி.. அந்த சேகர் எனக்கு ஃபோன் பண்ணான்..”
அவன் சொன்ன விஷயத்தை கேட்டு படக்கென விழிகளை விரித்தவள் “என்ன சேகரா?” என்றாள் அதிர்ந்த குரலில்..
அவளுக்கு இருந்த அத்தனை தூக்கமும் கலைந்து காணாமல் போயிருந்தது..
அதன் பிறகு சேகர் அவனிடம் சொன்ன விஷயத்தை அவளிடம் அவன் சொல்ல “இவன் என்னடா விக்ரமாதித்தன் வேதாளம் மாதிரி நம்ம முதுகுலையே தொங்கிட்டு இருக்கான்.. சரி.. இப்ப என்ன பண்ணலாம் சொல்லு..”
“அடியேய்.. எனக்கு எதுவும் தோணாம தான் உன்னை கேட்கலாம்ன்னு ஃபோன் பண்ணேன்.. நீ என்னடான்னா என்னையே கேக்கற? இது நடுவுல உன்னை பார்த்து பேசலாம்னு கீழ இறங்கி வந்து அண்ணா கிட்ட வேற மாட்டிக்கிட்டேன்..”
“சரி அதை விடு.. அதை நான் சமாளிச்சுக்கிறேன். இப்போ அந்த சேகரை சமாளிக்க வேண்டியது தான் முதல் வேலை.. அவன் உங்க அப்பா கிட்ட இவங்க ரெண்டு பேரும் நடிச்சிட்டு இருக்காங்கன்னு ப்ரூவ் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. என்ன பண்ண போறான்னு தெரியலையே.. ஏதாவது குண்டக்க மண்டக்க செஞ்சு வச்சு உங்க அப்பா..”
“ஐயையோ ஆமாண்டா.. எங்க அப்பா கொஞ்சம் சென்ஸிட்டிவ் எமோஷனல் டைப்.. அவன் அவரு நம்புற மாதிரி எதாவது ப்ரூஃப் காமிச்சான்னா அவர் உடைஞ்சே போய்டுவார்.. ஆமா.. அவன் என்ன ப்ரூஃப்ன்னு ஏதாவது சொன்னானா..?”
“இல்லடி.. எனக்கு இருந்த கோவத்துல அவனை கன்னா பின்னான்னு திட்டிட்டேன்.. அவனும் நான் அவனுக்கு ஹெல்ப் பண்ண போறதில்லன்னு தெரிஞ்சதும் அண்ணா அண்ணி சைடு தான் இருக்கேன்னு தெரிஞ்சதும் அதுக்கு மேல எதுவும் சொல்லல.. அதை பத்தி எதுவும் பேசாம ஃபோனை கட் பண்ணிட்டான்..”
“அடேய் மங்குனி.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா? அவன் கிட்ட பேசுற மாதிரி பேசி என்ன பண்ண போறான்னு தெரிஞ்சுக்காம இப்படி அவசரப்பட்டு குட்டையை குழப்பி விட்டிருக்க..?”
“சரி பரவால்ல.. விடு.. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல.. எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. அதை செஞ்சோம்னா ஆடு நிச்சயமா நம்ம வலையில சிக்கிரும்..” இப்படி சொன்னவள் அவளின் யோசனையை சொல்ல இந்தருக்கும் அது சரியாகத்தான் பட்டது..
அடுத்த நாள் காலை தமிழ்வாணன் குளித்துக் கொண்டிருக்கும் போது மலரழகி தன் கைபேசியில் இருந்து சேகருக்கு அழைப்பு எடுத்தாள்..
அவள் அழைத்ததும் உடனே அந்த அழைப்பை ஏற்ற சேகர் அழைத்தது யார் என்று கேட்க தான் மலரழகி என்று சொன்னதும் சட்டென “மலரா.. நீ எதுக்கு எனக்கு கால் பண்ணி இருக்கே..? என்ன..? அந்த இந்தர் பையன் மாதிரியே நீயும் என்னை மிரட்டுறதுக்காக கால் பண்ணியா? அவன் உன்கிட்ட விஷயத்தை சொல்லி இருப்பான்.. உடனே நீ அவனை மாதிரியே என்னை திட்ட போறியா?”
எடுத்த உடனே சேகர் இப்படி கேட்க “ஏய்.. அவசர குடுக்கை.. முதல்ல நான் என்ன சொல்றேன்னு கேளு.. இந்தர் என்கிட்ட விஷயத்தை சொன்னான் தான்.. ஆனா நான் அவனை மாதிரி கிடையாது.. இன்னும் கூட என் மாமா மேல எனக்கு விருப்பம் இருக்கு.. இப்போதைக்கு அவரை எப்படியாவது எங்க அக்கா கிட்ட இருந்து பிரிச்சு விட்டுட்டா போதும்.. அதுக்கப்பறம் இப்ப அவங்க ஒத்துக்கலன்னாலும் எப்படியாவது கொஞ்ச நாளைக்கு அப்பறம் அவங்களை சமாதானப்படுத்தி தீரா மாமாவை கட்டிக்குவேன்.. ஆனா இந்தர் கிட்ட நான் இதை பத்தி எல்லாம் சொல்லல.. அவனுக்கு தெரிஞ்சா உன்னோட சேர்த்து எனக்கும் ஆப்பு வச்சிருவான்.. அது சரி.. எங்க அக்காவையும் மாமாவையும் பிரிக்கிறதுக்கு நீ எதோ செய்யப் போறேன்னு சொன்னியாமே.. என்ன செய்யப் போற?”
அவள் கேட்கவும் “ஏன்..? அந்த இந்தர் பையன் அதை சொல்லலையா? உங்க அப்பாகிட்ட உண்மையை சொல்லி அதை ப்ரூவும் பண்ணிட்டா தன்னோட பொண்ணு இன்னொருத்தனோட பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு அவன் கூட இருக்கிறதை எந்த அப்பனும் விரும்ப மாட்டார்.. உடனேவே உங்க அக்காவை அந்த தீரன் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவார்.. அதுக்கப்புறம் நீ உன் படிப்பு எல்லாம் முடிச்சுட்டு நல்ல வேலையில செட்டில் ஆனப்புறம் தீரன் கிட்ட உன் காதலை சொல்லி அவனோட சேர்ந்துக்கலாம்.. என்ன நான் சொல்ற இந்த ஐடியா ஓகே தானே..?”
“எல்லாம் ஓகே தான்.. ஆனா நீ சொல்ற விஷயத்தை கேட்டு எங்க அப்பா அதை நம்பணுமே.. அவர் எப்படி நம்புவாரு? அது மட்டும் இல்லாம அவர் ஒருவேளை நம்பிட்டாருன்னா அவருக்கு ஏதாவது ஆயிடுமோனு எனக்கு பயமா இருக்கு..”
“இங்க பாரு.. ஒன்னு கிடைக்கணும்னா இன்னொரு விஷயத்துல நம்ம ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்.. அதெல்லாம் உங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது.. அப்படியே ஏதாவது ஆனாலும் அதுக்கு காரணம் உங்க அக்கா தானே தவிர நீ கிடையாது.. என்னைக்காவது ஒரு நாள் உங்க அப்பாக்கு இந்த விஷயம் தெரியாமயா போக போகுது? தெரியறப்போ எப்படி இருந்தாலும் அவருக்கு அது ஷாக் தானே..?”
“அட பரங்கி மண்டையா.. எங்கப்பாவை போட்டு தள்ளறதுக்கா ப்ளான் பண்ணற? இருடா.. எல்லாம் நல்லபடியா முடியட்டும்.. எங்க அக்காவும் மாமாவும் புருஷன் பொண்டாட்டியா ஒன்னா வாழ ஆரம்பிக்கட்டும்.. அதுக்கப்புறம் உனக்கு வெக்கறேன்டா வேட்டு..”
மனதிற்குள் அவனை கரித்து கொட்டியவள் “நீ சொல்றது சரிதான்.. ஆனா எங்க அப்பா நம்புற மாதிரி எப்படி சொல்ல போற? அவரு அவர் பொண்ணு மதியை பத்தி யார் எது சொன்னாலும் நம்ப மாட்டார்.. ஏன் நானே போய் எங்க அக்கா தீரா மாமாவோட சேர்ந்து நடிக்கிறான்னு சொன்னா என்னை அறைஞ்சிடுவாரு.. அவர் பொண்ணு மேல அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு.. இதுல நீ சொல்றதை அவர் எப்படி நம்புவாரு?”
அவள் துருவி துருவி கேட்க சேகரும் “அதுவா..? நான் முன்னாடியே சொன்னேன் இல்ல.. அது மாதிரி தான் செய்ய போறேன்.. அந்த தீரன் மதி இருக்கிற ரூம்க்கு நைட் டைம்ல போய் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழலன்னு ஃபோட்டோ எடுத்து ப்ரூவ் பண்ணிட்டா அதுக்கு அப்புறம் உங்க அப்பா நம்பாம இருக்க வாய்ப்பே இல்லை..”
அவன் பேசியதைக் கேட்டு அவளுக்கு பற்றி கொண்டு வந்தது.. “எவ்வளவு கேவலமான மனிதனாய் இருக்கிறான் இவன்..!!” என்று எண்ணியவள் வேறு வழி இன்றி பல்லை கடித்துக் கொண்டு “சரி.. உன்கிட்ட இருந்து வர்ற நல்ல செய்திக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..” என்று சொல்லி அந்த கைபேசி இணைப்பை துண்டித்தவள் தன் கைபேசியை படாரென கட்டில் மேல் விட்டெறிந்தாள்..
ஆனால் அவ்வளவு நேரமும் அவள் பேசியதை அவள் அறைக்கு வெளியே அவளும் தன் தந்தையும் எழுந்து விட்ட அரவம் கேட்க அவளுக்கும் தன் தந்தைக்கும் காபி கொண்டு வந்து கொடுக்கலாம் என்று காபி தட்டுடன் வந்த மதி அவள் பேசிய முதல் சில வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போய் அப்படியே கதவின் பின்னால் மறைந்த படி அவள் பேசிய சம்பாஷனை முழுவதையும் கேட்டிருந்தாள்..
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது? – 58
“ஐயோ மலர்.. ஏண்டி என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற..? நான் தீரனை உயிருக்குயிரா விரும்புறேன்டி.. அவனை விட்டு என்னால இனிமே இருக்க முடியாது.. அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர் உயிருக்கு ஆபத்தாயிடும்.. நீ ஏண்டி இப்படி இருக்க? உனக்கு என்னை பத்தி கவலை இல்லை.. தீரனை பத்தி கவலை இல்லை.. சரி.. அப்பாவை பத்தியும் கவலை இல்லையா? உனக்கு உன் ஆசை மட்டும் தான் முக்கியமா? ஐயோ கடவுளே.. எப்படி இவளை சமாளிக்கிறதுன்னு தெரியலையே.. இவளோட இதை பத்தி எவ்வளவு பேசி இருக்கேன்.. ஆனாலும் இப்படி பிடிவாதமா இருக்காளே..”
விழிகளில் நீர் வழிந்தோட என்ன செய்வது என்று தெரியாமல் கவலையும் குழப்பமும் நிறைந்த முகத்தோடு எடுத்து வந்த காபியை எடுத்துக் கொண்டு மறுபடி சமையலறைக்கே சென்று இருந்தாள் மதி..
சமையலறை மேடையில் அந்த ட்ரேவை கையில் ஜீவனற்று போனது போல் தள்ளிவிட்டு அந்த மேடையின் கீழே சரிந்து தரையில் அமர்ந்தவள் தலையில் கை வைத்த படி தனக்குள்ளேயே அழுது கரைய தொடங்கினாள்..
அப்போது சமையலறை வாயிலில் ஏதோ அரவம் கேட்கவும் சட்டென விழிகளை துடைத்து கொண்டு மேடையின் பக்கம் ஏதோ வேலை செய்வது போல் திரும்பி நின்று கொண்டாள்..
தீரன் தான் அங்கு வந்திருந்தான்.. “மதி.. கொஞ்சம் காபி தர்றியா? தலை வலிக்குது..” என்றவன் அங்கே மேடை மேல் கீழே காபி சிந்தி இருக்க அரை குவளை காபி இருந்ததை பார்த்து “என்ன ஆச்சு? காபி கீழ எல்லாம் சிந்தி இருக்கு.. ஏதாவது ப்ராப்ளமா உனக்கு?” கேட்டவன் அவள் அருகில் வந்து அவளை பார்க்க அவளோ தலையை குனிந்து அவனிடமிருந்து தன் முகத்தை மறைத்தாள்..
ஆனால் அவனுக்கு ஏதோ தவறாய் தெரிய மதியின் கவிழ்ந்திருந்த முகத்தை நாடி பற்றி நிமிர்த்திய தீரன் அவள் கலங்கிய விழிகளை கண்டு பதறிப் போனான்..
“ஹேய் மதி.. என்ன ஆச்சு? உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.. என்னம்மா?”
அவன் குரலில் அக்கறை பொங்கி வழிய அவளை ஆழ்ந்து பார்த்திருந்த விழிகளை கண்டவளுக்கோ அதற்கு மேல் தனக்குள் அவனுக்கு தெரியாமல் புதைத்து வைக்க நினைத்த துக்கத்தை அடக்கி வைக்க முடியவில்லை..
உள்ளிருந்து வேதனை பொங்கி எழ அவன் வயிற்றுப் பகுதியில் இருந்த சட்டையை இறுக்கமாய் பிடித்து இழுத்து அவன் மார்பில் தன் நெற்றி சாய்த்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..
“என்னடா மதி.. ஏன்டா இப்படி அழுற? எனக்கு பயமா இருக்கு மதி.. என்ன ஆச்சுன்னு சொல்லு.. அழாதமா ப்ளீஸ்..”
அவள் தலையை வருடியபடி கலக்கம் நிறைந்த குரலில் கேட்டுக்கொண்டு இருந்தான் தீரன்..
அவள் அழுகையில் அவனின் இதயம் ஆழமான வலி கொண்டது.. அவளோ கொஞ்சம் கொஞ்சமாக மனம் திறந்து தன் கவலைகளை எல்லாம் அவன் மார்பில் கொட்டி தீர்ப்பவள் போல் விம்மி வெடித்து அழ தொடங்கி இருந்தாள்..
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.. அவள் முகத்தை மறுபடியும் நிமிர்த்தியவன் “என்னன்னு சொல்லுமா.. ஒரே பதறி போய் கிடக்கேன்.. என்னன்னு சொல்லாம அழுதுகிட்டே இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது? யாருக்காவது உடம்பு சரியில்லையா? ஒருவேளை மாமாக்கு ஏதாவது..”
“இல்லை” என்று அவசரமாக இடவலமாய் தலையை ஆட்டி மறுத்தவள் “ரொம்ப கஷ்டமா இருக்கு தீரா.. என்னால தாங்கவே முடியல.. என் மனசுல இருக்குற உணர்வுகளை வெளிக்காட்ட முடியாம இப்படி எவ்ளோ நாளைக்கு நடிக்க வேண்டி இருக்குமோன்னு நெனச்சா உயிரே வெறுத்து போகுது தீரா..”
அவனிடம் தன் மன வலியை மொத்தமாய் கொட்ட தொடங்கினாள்..
“என்னால இப்படி பொய்யா நடிக்க முடியல.. நான் உள்ளுக்குள்ள உண்மையா என்ன உணர்றேனோ அதை அப்படியே வெளில கொட்டி தீர்க்கணும்னு தோணுது.. எப்பவும் போல ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும்னு ஆசையா இருக்கு தீரா.. ஆனா அப்படி பண்ண முடியாம இந்த பொண்ணு என்னென்னவோ வேலைகள்லாம் பண்ணி வச்சிருக்கா.. இப்படி என் மனசை கொன்னுட்டு நடிக்கிறது எனக்கு வலியை மட்டும் தான் கொடுக்குது.. அவளோட கனவு என்னோட கனவு இதை எல்லாம் அவ முழுசா நிறைவேத்தற வரைக்கும் பல்லை கடிச்சுக்கிட்டு என் மனசுல இருக்குறதை வெளியில காட்டாம இப்படியே நடிச்சிட்டு போகலாம்னு பாத்தா இந்த பொண்ணு அதுக்கு வழி விட மாட்டா போல இருக்கு..”
“ஏன் அப்படி நினைக்கிற மதி? என்ன ஆச்சு?”
“அவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தேன் தீரா.. எங்கம்மா இல்லாததனால அவ தப்பான பொண்ணா வளந்துட்டான்னு யாரும் சொல்லிட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன்.. ஆனா இப்ப அவ எங்க தடம் மாறிடுவாளோன்னு எனக்கு பயமா இருக்கு தீரா.. அவ போகற போக்கே சரியில்ல.. அவ இந்த அஞ்சு வருஷம் படிப்பை முடிக்கறதுக்குள்ள என் மனசு கெடந்து தவிக்கிற தவிப்புல என் உயிரே போயிடுமோன்னு பயமா இருக்கு தீரா..”
விம்மி வெம்மி வெடித்தவளின் கன்னத்தை தாங்கி “மதி மதி மதி.. இங்க பாரு.. நான் சொல்றதை கேளு.. எனக்கு உன் பயம் புரியுது.. அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு தடவை படிப்பிலருந்து கவனத்தை சிதற விட்டு வேற ஏதோ நினைப்புல தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணி இருக்கா.. அதை ஓரளவுக்கு சரி பண்ணி அவளை மறுபடியும் சரியான பாதையில் போக வச்சாச்சு.. ஆனா அவளோட இந்த அஞ்சு வருஷ படிப்புக்கு எந்த பாதகமும் வராம நல்லபடியா முடிக்கணுமேன்னு உனக்கு கவலையா இருக்கு.. அது எனக்கு புரியுது.. அது மட்டும் இல்லாம அவளை நம்ப வைக்கறதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியா இப்படி நடிக்கிறது உனக்கு எவ்வளவு பெரிய தண்டனைன்னும் எனக்கு தெரியும்..”
அவள் வேறு ஏதோ அர்த்தத்தில் பேசிக் கொண்டிருக்க தீரனோ அவன் வார்த்தைகளால் அவள் உள்ளத்தை இன்னும் குத்தி கிழித்தான்..
“இல்லை தீரா.. நான் அப்படி சொல்லல..” என்று ஏதோ சொல்ல வந்தவளின் வாய் மேல் சுட்டு விரல் வைத்து மூடியவன் “ஷ்ஷ்.. நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. உன் நிலைமை எனக்கு புரியுது.. ஆனா உனக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன்.. இந்த தீரன் எப்பவும் சொன்னா சொன்னபடி செஞ்சு காட்டுவான்.. உன் தங்கை டாக்டர் படிப்பு முடிச்சு பெரிய டாக்டர் ஆவா.. அது என்னோட பொறுப்பு.. அவளை டாக்டரா ஆக்கி உன் முன்னால கொண்டு வந்து நிறுத்தறது இந்த தீரனோட வேலை.. நீ இப்படி அழாதடா.. முதல்ல அழுகையை நிறுத்து.. நிச்சயமா மலர் ஒரு டாக்டர் ஆனப்பறம் இப்படி நடிக்க வேண்டிய அவசியம் நம்ம ரெண்டு பேருக்குமே இருக்காது..”
அவன் சொன்னது போல் அவனுக்கு மனைவியாக நடிப்பது அவளை பொறுத்தவரை தண்டனை தான்.. நிஜமாகவே மனதளவில் அவனுக்கு மனைவியாகவே மாறி இருந்தவளை அப்படி நடிக்கச் சொன்னால் அது அவளுக்கு எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
“ஆமா தீரா.. என்னால இப்படி நடிக்க முடியல.. எனக்கு உங்க மனைவியா வாழணும்.. எல்லாம் முடிஞ்சு இங்க இருந்து போகும்போது என் மனசுல இருக்குறதை உங்க கிட்ட சொல்லிட்டு தான் போவேன்.. ஆனா இப்ப அதை சொல்லமுடியாம உள்ளுக்குள்ளேயே வச்சு தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. ஏன்னா ஒருவேளை உங்களுக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லன்னு சொல்லிட்டீங்கன்னா அதுக்கப்புறம் என்னால உங்களோட மனைவியா நடிக்க முடியாது.. அது என்னை சுக்கு நூறா உடைச்சு போட்டுடும்.. நான் என்ன பண்ணுவேன் தீரா..”
மனதிற்குள் இப்படியே எண்ணி மறுகி போனவள் மறுபடியும் அவன் மார்பிலேயே சாய்ந்து கண்ணீர் விட அவனும் தன் ஒற்றை கை அணைப்பிலேயே அவளுக்கு ஆறுதல் தந்து கொண்டு இருந்தான்..
சரியாக அப்போது தன் அக்காவிடம் காபி கேட்டு குடிக்கலாம் என்று சமையல் அறைக்குள் நுழைந்த மலர் அங்கு கண்ட காட்சியில் சட்டென பின் வாங்கி வெளியே வர அதே சமயம் அவள் பின்னிருந்து இந்தரும் சமையல் அறைக்கு வர பின்னாலே வந்தவள் அவன் மார்போடு மோதி கொண்டாள்..
“ஏய் பாத்துடி..” என்ற அவன் கத்த அவன் வாயை தன் கையால் இறுக்க மூடியவள் “ஷ்ஷ்ஷ்.. அக்காவும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அப்படியே திரும்பி போ.. பேசாத..” என்று சொல்ல “நிஜமாவாடி?” என்று அவனும் ரகசியமாய் புருவம் உயர்த்தி கேட்க “அவங்களுக்கே தெரியாம காதல் உலகத்துல காலடி எடுத்து வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்..”
ஆச்சரியமாய் விழியை விரித்து அவள் சொன்னதை கேட்டபடியே இந்தர் திரும்பி நடக்க போக அங்கே பக்கத்தில் இருந்த ஒரு பூச்சாடி அவன் கை பட்டு டமார் என்ற சத்தத்தோடு கீழே விழுந்தது..
சத்தம் கேட்டு பதறிப் போய் தீரனும் மதியும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் விலகிவிட இங்கே மலரழகியோ தலையில் அடித்துக் கொண்டு “போடாங்.. கொய்யால.. கண்ணை என்ன பொடறிலயா வச்சிருக்க.. உன்னை… பார்த்து நடக்க மாட்டே..” பல்லை கடித்து அவனை வசை பாடியவள் அதற்கு மேல் தீரா மதியின் காதல் காட்சி எதுவும் நடக்காது என்று உணர்ந்து மெல்ல சமையல் அறைக்குள் வந்து தொண்டையை செருமி “ம்க்கும்.. அக்கா ஒரு காபி ப்ளீஸ்..” என்றாள்..
மதியோ அவளை தீவிரமாய் முறைத்த படி டமார் டமார் என குவளைகளை உடைப்பது போல் எடுத்து வைத்து அவளுக்கு காபி கலக்க தொடங்க “ஓ.. இன்னும் கோவம் குறையலையா.. நேத்து வெச்ச வெடி ரொம்ப பலமா தான் வெடிச்சிருக்கு போல.. ஓவரா நடிச்சு கொட்டிட்ட போல இருக்குடி மலரு..” தனக்குள்ளேயே புருவம் உயர்த்தி தலை குனிந்து முணுமுணுத்துக் கொண்டவள் அப்படியே அமைதியாய் போய் சாப்பாட்டு மேஜை முன்னால் அமர்ந்து விட்டாள்..
எதிரே வந்து அமர்ந்த இந்தர் என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க அவளோ தன் அக்காள் கோபமாக இருக்கிறாள் என்பதை கையை பூதம் போல் சைகை காட்டி சொல்ல இவர்கள் சைகை பாஷையை பார்த்துக் கொண்டே வெளி வந்தான் தீரன்..
வெளிவந்தவன் இந்தரை முறைக்க அவன் பார்வையை தவிர்த்து சட்டென்று தலையை குனிந்து கொண்டான் இந்தர்.. “ஐயோ மறுபடியும் மறுபடியும் மாட்டறியேடா இந்தரு..” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 59
தமிழ்வாணனும் அங்கே வந்துவிட அவர்களுக்கெல்லாம் காலை உணவை எடுத்துக் கொண்டு வெளியே வந்த மதி எல்லோருக்கும் பரிமாற அவளை பார்த்த தமிழ்வாணன் “ஏன்மா மதி.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. என்ன ஆச்சு..?” என்று கேட்க “ஒன்னும் இல்லப்பா.. நைட் எல்லாம் தலைவலி.. தூக்கமே இல்லை.. அதான் ஒரு மாதிரி இருக்கு.. எப்படியும் இன்னைக்கு லீவு தானேப்பா.. நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்..
“வீட்ல தான் இருக்க போறீங்களா ரெண்டு பேரும்.. அப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல..”
தமிழ்வாணன் சொல்லவும் மதியழகியோ “இல்லப்பா.. இன்னைக்கு ஒரு ஆடிஷனுக்கு போறோம்.. நான் தான் அவரை கூட்டிட்டு போறேன்.. அவரை படத்தில ஹீரோவா நடிக்க வைக்க ட்ரை பண்றேன்னு பாண்டி அண்ணா சொல்லி இருக்காரு.. அதுக்கு போறோம் பா.. 10 மணிக்கு மேல வர சொல்லி இருக்காரு..”
அவள் சொன்ன விஷயத்தை கேட்ட மூவருமே விழிகளை விரித்தனர்..
“கங்கிராட்ஸ் மாமா.. நீங்க வேணா பாருங்க.. நீங்க பெரிய ஆக்டரா வருவீங்க.. உங்க அழகுக்கும் ஸ்டைலுக்கும் லுக்குக்கும் நீங்க அப்படி எல்லாம் வரலைன்னா தான் ஆச்சரியம்.. மாமா இப்பவே நான் உங்க ஆட்டோகிராஃப்பும் போட்டோகிராஃபும் வாங்கி வெச்சுக்கறேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த தீரன் அவள் தலையில் கையை வைத்து ஆட்டி “எப்பவும் விளையாட்டு தான் உனக்கு.. உனக்கு இல்லாத ஆட்டோகிராஃப் போட்டோகிராஃப்பா.. உனக்கு தான் முதல்ல.. அப்புறம் தான் மத்தவங்களுக்கு.. ஆனா அதுக்கு முதல்ல நான் நடிக்கணும்.. எனக்கெல்லாம் நடிப்பே வராது.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. மதி தான் அடம் பிடிச்சு கூட்டிட்டு போறா..”
“பரவாயில்லையே.. இந்த பழைய பஞ்சாங்கம் அக்கா கூட உங்களுக்காக நல்ல விஷயம் எல்லாம் பண்றா..”
அவள் மதியை வேண்டும் என்றே சீண்டிவிட “ஏய் ஓவரா ஆடாத டி.. காபி டிஃபனை முடிச்சுட்டு கிளம்புற வழியை பாரு.. இங்க உட்கார்ந்து நீட்டிமுழக்கி பேசிட்டு இருக்கா..” எரிச்சலாய் சொன்னாள் மதி..
இந்தர் தமிழ்வாணன் பக்கம் திரும்பி “மாமா.. நேத்து மாதிரியே நீங்க கிளம்பி ரெடியா இருங்க.. உங்களை நான் என் வண்டியிலேயே கூட்டிட்டு போய் விடறேன்..”
“சரிப்பா.. தீரா மாப்பிள்ளை போலவே தங்கமான புள்ளையா இருக்க நீயும்..” அவர் சொல்ல தீரனோ இந்தர் புறம் கவலையாய் தான் பார்த்து இருந்தான்..
எல்லோரும் அவரவர் வேலைக்கும் கல்லூரிக்கும் கிளம்பி போய்விட மதி தீரனை அழைத்துக் கொண்டு அந்த கதாநாயகன் தேர்வு நடக்கும் இடத்திற்கு போனாள்..
பாண்டி ஒரு காதல் காட்சியின் வசனங்களை தீரனிடம் கொடுத்து அங்கு ஆடிஷனுக்கு வந்திருந்த இன்னொரு பெண்ணோடு நடிக்கச் சொல்ல அவனோ அந்தப் பெண்ணை ஆசையாய் ஒரு பார்வை பார்ப்பது போல் கூட நடிக்க முடியாமல் அவஸ்தை பட்டு போனான்..
காதல் காட்சியில் எந்த உணர்வுகளையும் தன் முகத்தில் பிரதிபலிக்க முடியாது எதிரே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான் தீரன்..
“தீரா.. என்ன தீரா.. இங்க பாரு.. அவங்க கன்னத்துல கைய வச்சு ப்ரொபோஸ் பண்ணு.. உனக்கு தான் டயலாக் கொடுத்து இருக்கேன் இல்ல.. அதை பேசு தீரா..”
“கன்னத்துல கைய வச்சா..?” என்று அதிர்ந்து பார்த்தபடி கேட்டவன் அந்த பெண்ணின் முகத்தின் பக்கம் திரும்பி கன்னத்தில் கையை வைக்க போக கையை எப்படி வைப்பது என்று தெரியாமல் விரைப்பாய் கையை ஏதோ கன்னத்தில் அடிக்க வருவது போல் வைக்க அந்தப் பெண்ணோ பயந்து தலையை பின்னிழுத்துக் கொண்டாள்..
இங்கே தலையில் அடித்துக் கொண்டான் பாண்டி..
தீரனின் அருகில் சென்று அந்தப் பெண்ணின் கன்னத்தில் கை வைத்து அவன் நடிக்க வேண்டிய காட்சியை நடித்துக் காண்பித்தான்..
தீரனுக்கோ அவன் நடித்ததை பார்த்ததற்கே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.. இப்படியே எங்கேயாவது தப்பி ஓடி விடலாமா என்று அவன் எண்ண ஓட்டம் போய்க் கொண்டிருந்தது..
பாண்டி பக்கம் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு திரும்பியவன் “பாண்டி.. என்னை விட்டுடு பாண்டி.. இது எனக்கு வராது.. மதி கிட்ட எனக்கு நடிக்க வராதுன்னு சொல்லிரு.. உனக்கு புண்ணியமா போகும்.. நான் கிளம்பி போறேன் பாண்டி.. கட்டையால ஏன் அருவாளால கூட வெட்டு வாங்க ரெடியா இருக்கேன்.. ஆனா முட்டை தக்காளி இதெல்லாம் வேண்டாம் பாண்டி.. நிச்சயமா என்னை நடிக்க வச்சா உன் படத்துல உனக்கு அதுதான் கிடைக்கும்.. சொன்னா கேளு..”
தான் அரண்டு போனதும் இல்லாமல் அவனையும் பயமுறுத்தினான் தீரன்.. அவன் கெஞ்ச பாண்டிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை..
“தீரா.. ட்ரை பண்ணாம எதுவுமே முடியாதுன்னு சொல்ல கூடாதுல்ல..? இப்ப நான் வேணா உனக்கு ப்ராம்ப்ட் கொடுக்கிறேன்.. நீ அதை திரும்பவும் சொல்லி நடிக்க ட்ரை பண்ணு.. சரியா..?”
இப்படி சொல்லி அவனுக்கு வசனங்களை பின் இருந்து பாண்டி எடுத்துக் கொடுக்க தீரனோ காதலிக்க நேரமில்லை படத்தில் “உன் காதல்ல இந்த உலகத்தையே மறக்கிறேன்..” என்று சச்சு நாகேஷை பார்த்து சொல்வது போல் இயந்திரத்தனமாய் வசனங்களை பேசிக் கொண்டிருந்தான்..
பாண்டிக்கோ பொறுமை பறந்து போனது..
“தீரா காதல்ங்கறது எவ்வளவு பெரிய விஷயம்.. உள்ளுக்குள்ள உணர்ந்து நம்ம நாடி துடிப்போட கலந்து நம்மளோட ஒவ்வொரு அணுவையும் தாக்கி நம்மளை சாய்ச்சு போடுற விஷயம்.. என்ன தீரா.. அதை ஏதோ மளிகை கடையில உளுத்தம் பருப்பு வாங்கற மாதிரி சாதாரணமா சொல்றே..”
மதி பக்கம் பாவமான முகத்தை வைத்துக்கொண்டு பார்த்தவன் “மதி ஸிஸ்டர்.. அவனால முடியல.. பேசாம..” என்று இழுத்தவனிடம் “இல்லண்ணா.. அவரால முடியும்.. ஒரு நிமிஷம் இருங்க.. அந்த டயலாக் பேப்பரை குடுங்க..” என்றவள் வசனம் அடங்கிய தாளை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு தீரனை அழைத்துக் கொண்டு போய் தான் அமர்ந்த இடத்தில் எதிரில் அமர வைத்தாள்..
“தீரா.. என்னை பாருங்க.. இந்த வசனத்தை நல்லா படிச்சுக்கோங்க..” அவள் சொன்னதும் அவனும் நல்ல பிள்ளையாய் அந்த வசனம் அடங்கிய தாளை வாங்கி முழுவதுமாக படித்திருந்தான்..
படிச்சிட்டீங்களா என்று கேட்க அவனும் படித்து விட்டதாக தலையாட்டவும் “இப்ப இந்த டயலாக்கை என்னை பார்த்து பேசி நடிங்க..” என்று சொல்லிவிட்டு அவன் எதிரே வாகாக திரும்பி அமர்ந்து கொண்டாள்..
முதலில் தடுமாறி தலையை குனிந்து கொண்டிருந்தவன் மெதுவாய் நிமிர்ந்து அவள் கண்களை பார்க்க அவளும் தன் கண்களை மெல்ல மூடித் திறந்து அவனையும் கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொல்ல அவனும் அப்படியே செய்து அவள் கண்களைப் பார்த்தான்..
அதன் ஆழத்தில் மெல்ல மெல்ல ஊறி வாய் திறந்து தன்னால் காதல் வசனங்களை பேச தொடங்கினான் அவளின் காதலன் அவன்..
“மதி.. உன்னை பாக்குற வரைக்கும் என் வாழ்க்கையில எங்க அம்மாவை தவிர வேற எந்த பொண்ணும் கிடையாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா உன்னை பார்த்த நொடி என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு.. அதோட அர்த்தத்தையே முழுசா மாத்தி வச்சிருக்கே மதி.. நீ இல்லாத ஒரு நிமிஷம் என்னை பொறுத்த வரைக்கும் நரகம்.. ஆனா உன்னோட இன்னும் ஒரு நாள் தான் வாழ்க்கைன்னு சொன்னா கூட அந்த ஒரு நாளை வாழ்ந்துட்டு எத்தனை நரகத்துக்கு வேணா போகறதுக்கு நான் ரெடியா இருக்கேன்.. என் மனசுக்குள்ள என் உயிருக்குள்ள ஏன்.. என் ஒவ்வொரு அணுவுலயும் மதி மதின்னு உன் பேரு மட்டும் தான் மறுபடி மறுபடி நாடி துடிப்பா துடிச்சுக்கிட்டு இருக்கு.. நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே கிடையாது மதி.. என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் என் உயிரோட கலந்து நினைவோட பின்னி இருக்கிறதுக்கு நீ மட்டும் தான் வேணும்.. ஐ லவ் யூ மதி… ஐ லவ் யூ சோ மச்..”
அவள் கன்னத்தில் கையை இதமாய் வைத்து வருடியபடி பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள் நெகிழ்ந்து போய் கலங்கி இருந்தன.. மதிக்கோ அவன் தன் மனதின் உணர்வுகளை நிஜமாகவே தன்னிடம் சொல்வது போல் இருந்தது..
அவளின் கண்களும் மீதூற சட்டென தலையை குனிந்து தன் கண்களை துடைத்துக் கொண்டவளின் நெற்றியில் மெல்ல தன் இதழ் பதித்து “என் காதலை ஏத்துப்பியா மதி.. இல்ல நான் உனக்கு ஏத்தவன் இல்லைன்னு தூக்கிப்போட்டுடுவியா..? உன்னால மட்டும் தான் என் வாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்க முடியும்.. சொல்லு மதி.. நீயும் என்னை விரும்புறயா?” அவள் முகத்திலேயே கண்களை அலைப்புற செய்து ஏதோ நிஜமாகவே அவளிடம் கேட்பது போல் காதல் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தான் தீரன்..
மதியோ அவன் கேட்ட கேள்வி அவள் மனதை நேராகச் சென்று தாக்க அவனுக்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று தெரியாமல் திக்கி திணறி போயிருந்தாள்..
ஆனால் அவளை அந்த நிலையில் இருந்து காப்பது போல் கையை தட்டிக் கொண்டு அவர்கள் அருகில் வந்த பாண்டி “கட் கட் கட்.. சூப்பர் தீரா.. அந்த பொண்ணு கிட்ட நடிக்க தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த தீரனா இது..? எவ்வளவு சரளமா காதல் டயலாக் வருது உனக்கு..? நடிக்க வராதுன்னு இவ்வளவு நேரம் எங்க முன்னாடி எல்லாம் நடிச்சிட்டு இருந்தியா நீ அப்போ..?”
அவன் கிண்டலாய் கேட்க தீரன் தன் கண்களை துடைத்துக் கொள்ள அதை பார்த்து பிரமித்து போனான் பாண்டி..
இது ஏதோ நடிப்பு மாதிரி இல்லையே என்று எண்ணியவன் தீரனை கேள்வியாய் பார்க்க அவனோ “இல்ல பாண்டி.. என்னால அந்த பொண்ணு முன்னாடி இப்படி எல்லாம் பேச முடியாது.. ஏதோ மதி முன்னாடி பேசிட்டேன்.. எனக்கு அந்த பொண்ணு கிட்ட இந்த மாதிரி நடிக்க வராது பாண்டி..”
“புரிஞ்சிடுச்சு.. அப்போ மதி கிட்ட மட்டும் தான் நடிப்பீங்க சார்.. அய்யய்யோ உன்னை முதல் முதல்ல மதியோட நடிக்க வெச்சது தப்பா போச்சே.. ஏன் தீரா.. அதுக்காக எல்லா படத்திலயும் மதியை ஹீரோயினா போட முடியுமா? அதெல்லாம் நடக்குமா தீரா..?”
பாண்டி நிஜமான கவலையோடு கேட்க “என்னது..? ஹீரோயினா..? ஆளை விடுங்க.. எனக்கெல்லாம் நடிக்கவே வராது.. தீரா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்றேன்.. உங்களுக்கு என் முன்னாடி தான் நல்லா நடிக்க வருதுன்னா அந்த பொண்ணுக்கு பதிலா உங்க முன்னாடி நான் இருக்கறதா கற்பனை பண்ணிக்கோங்க.. அப்போ உங்களால நிச்சயமா நடிக்க முடியும்.. நான் சொல்றதை கேளுங்க.. நீங்க இப்ப போய் ட்ரை பண்ணி பாருங்க..”
அவனை எழுப்பி தள்ளி கொண்டு போய் அந்த பெண்ணின் எதிரில் அமர வைத்தாள் மதி..
அந்தப் பெண்ணை பார்த்த நொடி அவனுக்கு உடல் எல்லாம் மறுபடியும் வெடவெடத்து போனது..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 60
மதி பக்கம் தீரன் திரும்பி கெஞ்சலாய் பார்க்க அந்தப் பெண்ணுக்கு பின்னால் நேராக தன் முகம் தீரனுக்கு தெரியும்படியாக அமர்ந்து கொண்டவள் தன் முகத்தை வட்டமிட்டு காட்டி அந்தப் பெண்ணை சுட்டிக்காட்டி அவளிடத்தில் தன்னை பார்க்குமாறு ஜாடை காட்ட அவனும் ஒரு முறை கண்ணை மூடி திறந்தவன் தன் எதிரில் மதி அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டான்..
அதன் பிறகு அவன் நடிப்பதில் எந்த குறையும் வரவில்லை.. சரளமாக காதல் வசனங்களை பேசி கொண்டே போக பாண்டி பலமுறை கட் சொல்லி அவனை நிறுத்த வேண்டி இருந்தது..
பாண்டி கட் சொல்லிய பிறகும் அவன் அந்த பெண்ணின் கன்னத்தில் கை வைத்தபடியே அவளையே பார்த்துக் கொண்டிருக்க “இது என்னடா புது பிரச்சனை..?” என்று மறுபடியும் புருவத்தை விரல் வைத்து நீவியபடி பாண்டி யோசிக்கத் தொடங்கினான்..
மதிக்கோ பாண்டி கட் சொன்ன பிறகும் தீரன் அப்படி அமர்ந்து இருந்தது உள்ளுக்குள் ஒரு பொறாமை தீயை பற்ற வைக்க நேராக அங்கே தீரன் அமர்ந்து இருந்த இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் கன்னத்தில் இருந்து அவன் கையை தட்டி விட்டாள்..
அப்போது தான் தன் கற்பனை உலகத்தில் இருந்து விடுபட்டு வெளியில் வந்தவன் கண்ணை மூடி திறந்து வியப்போடு மதியை பார்க்க அவளும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு இடுப்பில் கை வைத்த படி அவனைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தாள்..
“பாண்டி அண்ணன் கட் சொல்லி பத்து நிமிஷம் ஆகுது.. இங்க பாருங்க.. ஷூட்டிங் போது மட்டும் தான் நீங்க என் முகத்தை கற்பனை பண்ணிக்கணும்.. பாண்டி அண்ணன் கட் சொன்ன நிமிஷம் என் முகமும் எதிரே இருக்குற பொண்ணு கிட்ட இருந்து கட் ஆஃப் ஆகிடனும்.. இல்ல அப்புறம் நடக்கிறதே வேற..”
ஏதோ அவனுக்கு நிஜமாகவே அவள் மனைவியாய் மாறிவிட்டது போல் மிரட்டினாள்.. அவர்களின் அலப்பறையை பார்த்த பாண்டிக்கும் அப்படித்தான் தோன்றியது..
“ஓகே ஓகே.. சாரி சாரி.. அம்மா உனக்கும் சாரி மா..” என்று அந்த பெண்ணிடமும் மன்னிப்பு கேட்டவன் “அதை விடு மதி.. நான் நல்லா நடிச்சேனா மதி..?” அவன் ஆவலோடு கேட்க “ம்ம்ம்ம்.. பத்து ரூபா குடுத்ததுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு நடிச்சி வச்சிருக்கீங்க.. போதும் போதும்.. அதுக்குன்னு ரொம்ப ஓவரா பண்ணாதீங்க.. ஞாபகம் இருக்கட்டும்.. கட் சொன்ன அடுத்த நிமிஷம் எதிருல இருக்குற பொண்ணுக்கும் உங்களுக்கும் இருக்கிற எல்லா கனெக்ஷனும் கட் ஆயிடனும்.. இல்ல நடக்கிறதே வேற..”
அவளைப் பார்த்த பாண்டி “ஒரு கையில விளக்குமாறு இன்னொரு கையில் கரண்டி மட்டும் தான் மிஸ்ஸிங்.. இருந்துருந்துச்சுன்னா பக்காவா இருந்திருக்கும்.. ” உள்ளுக்குள் நினைத்தபடி சிரித்துக்கொண்டான் அவன்..
“சரி சரி.. ஓகே.. நீ சொல்ற படியே கேட்டுக்கறேன்.. இனிமே பாண்டி கட் சொன்ன அடுத்த செகண்ட் நடிக்கிறதை நிறுத்திடுவேன்” என்றான் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு..
பாண்டிக்கோ ஸ்டண்ட் மாஸ்டர் என்ற பெயரில் கம்பீரமாய் இருபது பேர் தன் எதிரில் வந்தாலும் அடித்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தவனா இவன் என்று தோன்றியது.. எப்போதும் ஒரு இறுக்கத்துடன் சிங்கமாய் சீறிக் கொண்டிருந்தவன் இப்படி பெட்டி பாம்பாய் அடங்கிக் கிடக்கிறானே மதியிடம் என்று தீரனை பார்க்க பார்க்க ஆச்சரியமாய் இருந்தது..
மதியின் அலப்பறையையும் தீரன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக அவளுக்கு அடங்கி போவதையும் பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்த பாண்டி “தீரா.. அப்படியே பக்கா ஹஸ்பண்ட் மெட்டீரியலா மாறிட்டியே தீரா.. நடிப்பு எல்லாம் சரிதான்.. ஆனா அந்த பொண்ணு கிட்டயும் மதி மதின்னு மதி பேர் சொல்லி தான் பேசிகிட்டு இருந்தே.. நீ நடிக்கப் போற எல்லா படத்திலயும் ஹீரோயின்க்கு மதின்னு பேர் வைக்க முடியாதே.. அதனால இனிமே நீ நடிக்கிற படத்தில எல்லாம் ஹீரோயின் உருவத்தில மதியை வச்சு கற்பனை பண்ற மாதிரி மதிக்கு ஹீரோயின் பேரை மாத்திட்டதாவும் கற்பனை பண்ணிக்க..”
சொல்லிவிட்டு அவன் சிரித்து விட மதியோ வெட்கப்பட்டு தலையை கவிழ்த்தாள்..
“என்னமா மதி.. தீரனுக்கு சர்வமும் மதி மயமா ஆக்கி வச்சிருக்க..?”
பாண்டி கேலி செய்ய மதிக்கோ வெட்கத்தில் முகம் சிவந்து போனது..
தீரன் கதாநாயகனுக்கான தேர்வில் தேறி விட்டான் என்றும் தான் எடுக்கபோகும் படத்தில் கதாநாயகன் அவன் தான் என்றும் பாண்டி முடிவு செய்து சொல்லி இருந்தான்.. ஒரு நிபந்தனையோடு தான் தன் முடிவை சொன்னான்.. ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் அவனோடு மதி வரவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை..
அவள் வருவதற்கு வசதியாக மாலை நேரங்களில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.. தீரன் கையில் இருந்த காயம் முழுவதுமாக குணமான பிறகு படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என பாண்டி சொன்னான்..
அதைக் கேட்டு தீரன் ஆனந்தப்பட்டானோ இல்லையோ மதிக்கோ உள்ளுக்குள் சொல்லொணா இன்பம் நிறைந்து வழிந்தது..
அது அவள் கண்களிலும் தெரிய “சூப்பர் தீரா.. கூடிய சீக்கிரமே என் தீரன் பெரிய ஸ்டார் ஹீரோ ஆயிடுவாரு..” என்று சொல்லி துள்ளி குதிக்க அவனுக்கோ அவள் சொன்ன என் தீரன் என்ற வார்த்தைகள் அப்படியே உள்ளுக்குள் பதிந்து போயின..
படப்பிடிப்பு தளத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் இருவரும் ரொம்பவும் பேசிக்கொள்ளவில்லை.. அந்த காதல் காட்சியில் தீரன் தன்னிடம் பேசிய வார்த்தைகளையே அசைப்போட்டு கொண்டு இருந்தாள் மதி.. உள்ளுக்குள் அவன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஓடவிட்டவளுக்கு அதன் தாக்கத்தில் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி நிறைந்து வழிந்தது..
தீரனோ அந்த படத்தில் தன்னை எப்படியாவது கதாநாயகனாக ஆக்கிவிட வேண்டும் என்ற உந்துதலில் மதி அவனை ஒவ்வொரு நொடியும் ஊக்கப்படுத்திய விதம்.. அவனோடு பேச்சு கொடுத்து அவனை நடிக்க வைத்த முறை.. இதையெல்லாம் எண்ணிக் கொண்டு வந்தவன் அவள் சொன்ன என் தீரன் என்ற வார்த்தையில் அப்படியே உறைந்து உருகி வழிந்து கொண்டு இருந்தான்..
இருவருமே அடுத்து வரும் இரண்டு நாட்களுக்குள் தங்கள் காதலை மற்றவரிடம் சொல்லி விட வேண்டும் என்று முடிவுக்கு வந்திருந்தனர்..
இருவருக்குமே ஏதோ ஒரு சிறிய தடை மற்றவரை அவர்களின் காதலை சொல்ல விடாமல் தடுக்கிறது என்று புரிந்து போனது.. அதனால் தங்கள் காதலை சொல்லி அவர்கள் மனதில் இருக்கும் காதலை வெளிக்கொணர வேண்டும் என்று இருவருமே முடிவு செய்து கொண்டனர்.. அதற்கான சரியான நேரத்துக்காக இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்..
இங்கே மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வருகையில் தமிழ்வாணனை அழைத்துக் கொண்டு வர அவர் அலுவலக வாசலில் சென்று வண்டியை நிறுத்தினான் இந்தர்..
அவர் வெளியில் வராது போகவே வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அந்த நிறுவனத்திற்குள் நுழைய முற்படும் நேரம் எதிரில் நான்கு இளைஞர்கள் ஒரு இளம் யுவதியை கேலி செய்து பேசி சீண்டிக் கொண்டிருப்பதை பார்த்தான்..
பேசிக் கொண்டே இருக்கும் போது அவர்களில் ஒருவன் அந்த பெண்ணின் துப்பட்டாவை இழுக்க அவளோ துப்பட்டாவின் மறுமுனையை இறுக பிடித்தபடி “டேய்.. துப்பட்டாவை குடுடா.. செருப்பு பிஞ்சிடும்..” என்க அவனோ மேலும் முன்னேறி அவள் கையை பிடித்து சட்டென இழுத்தான்..
அவனிடம் சிக்கிவிடாமல் இருக்க அவனிடமிருந்து அந்த பெண் விலகி ஓட பார்க்க அந்தப் பெண்ணை ஓட விடாமல் அவள் கையை அவன் பிடித்து இழுக்க கை பகுதியில் இருந்த ஆடை கிழிந்தது அவனால்..
அதைப் பார்த்த இந்தர் அங்கிருந்து ஓடி சென்று அந்த இளைஞனின் மார்பிலேயே காலால் எட்டி ஒரு உதை விடவும் அந்த இளைஞன் அப்படியே நான்கடி பின்னால் போய் விழுந்தான்..
அவன் கையில் இருந்த துப்பட்டாவை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்து “நீ போம்மா.. நான் பாத்துக்குறேன்” என்றான் இந்தர்..
அதன் பிறகு அவர்கள் எல்லோரும் அவனோடு வரிசையாக சண்டையிட வர அவர்களை சரமாரியாக அடித்து துவைத்து இருந்தான் இந்தர்..
நிறுவனத்தை விட்டு வெளியே வந்த தமிழ்வாணன் அவன் அந்த இளைஞர்களை வெளுத்துக் கொண்டிருப்பதை பார்த்து முதலில் அதிர்ந்தவர் அதன் பின் ஒரு நிம்மதி பெருமூச்சு தான் விட்டார்..
பல நாட்களாக அந்த பக்கம் போகும் பெண்களையும் சிறுமிகளையும் சீண்டிக்கொண்டும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டும் இருந்த அந்த இளைஞர்களை கேள்வி கேட்க எவரும் துணியவில்லை..
தமிழ்வாணன் ஒரு நாள் துணிந்து அவர்களை கேள்வி கேட்க “ஏ கெழவா.. உன் வேலை என்னவோ அதை பார்த்துக்கிட்டு போ.. எங்களை கேள்வி கேட்டா நடக்குறதுக்கு கால் இருக்காது உனக்கு..” என்று மிரட்டி இருந்தனர் அந்த வருங்கால இந்தியாவின் தூண்கள்..
வயதான காலத்தில் தன் பெண்களுக்கு பாரமாக ஆகிவிடக்கூடாது என்ற நினைப்பில் அவரும் வாயை மூடி அமைதியாக இருந்து கொண்டார்..
இந்தர் அவர்களை ஒரு கை பார்த்திருக்கவும் அவருக்கு மனதிற்குள் பெருத்த ஆனந்தம் உண்டாயிற்று..
அவனருகில் வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர் “இந்த ஏரியால இருக்குற பொண்ணுங்களுக்கு எல்லாம் உன்னால ஒரு விடிவு காலம் கெடச்சிடுச்சு பா.. நீ இந்த பசங்களை அடிச்சு போட்டது தெரிஞ்சா உன்னை தலையில வச்சு கொண்டாடுவாங்க அவங்க.. அவ்ளோ அக்கிரமம் பண்ணிட்டு இருந்தாங்க இந்த பசங்க..”
அவர் சொன்னதைக் கேட்டவன் “இவனுங்க எல்லாம் அடிச்சா தான் திருந்துவானுங்க அங்கிள்.. வாயால சொல்லி எல்லாம் திருந்துறவனுங்க கிடையாது.. சரி.. வாங்க போலாம்..” என்று அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வண்டியை விட்டான்..
வரும் வழியில் திடீரென தமிழ்வாணனுக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருக்க இந்தர் முதுகில் தட்டி “அப்பா இந்தர்.. எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு.. கொஞ்சம் வண்டியை நிறுத்துறியா?” என்று கேட்க அவர் சொன்னதை கேட்டு பதறி போனவன் வண்டியை நிறுத்தி ஸ்டாண்டை போட்டு மெல்ல அவரை கை தாங்கலாக பிடித்து இறக்கிவிட்டான்..
அங்கே ஓரமாய் இருந்த கல் மேடையில் அவரை அமர வைத்தவன் “ரொம்ப வலிக்குதா அங்கிள்.. ஒரு நிமிஷம் இருங்க..” என்றவன் அங்கே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டு வாங்கி வந்தான்..
அவருக்கு தண்ணீரை பருக கொடுத்தவன் “அங்கிள் இங்கே பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு.. வாங்க போய் பார்த்துட்டு போயிடலாம்..”
அவன் கவலையாய் சொல்ல அவரோ “அதெல்லாம் வேணாம் பா இந்தரு.. இந்த மாதிரி அப்பப்போ லேசா வலிக்கும்.. அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தன்னால சரியாயிடும்.. வீட்டுக்கே போயிடலாம் பா..” என்றார்..
ஆனால் அவர் முகத்தில் வலியின் ரேகைகள் இன்னும் தெரிய “இல்ல அங்கிள்.. அப்படி எல்லாம் விட முடியாது. நெஞ்சு வலி எல்லாம் அப்படி சாதாரணமா எடுத்துக்க கூடாது.. வாங்க.. டாக்டரை பார்த்துட்டு போயிடலாம்..”
சொன்னவன் அதோடு நிற்காமல் அவரை எழுப்பி வண்டியில் ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றான்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 61
தமிழ்வாணனை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் இன்னும் சில பரிசோதனைகள் செய்து அதன் பின்னரே சிகிச்சையை தொடங்க முடியும் என்றும் கூறி அப்போதைக்கு ரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுப்பதாகவும் சொல்லி சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்..
வெளியே வந்து அந்த மருந்துகளை மருந்தகத்திலிருந்து வாங்கிக் கொண்ட இந்தர் அவரை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான்..
வீட்டுக்கு வந்தவன் தமிழ்வாணனிடம் மறக்காமல் இரவு அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு நேராக தன் அறைக்கு சென்று விட தன் அறைக்குள் நுழைந்த தமிழ்வாணன் அங்கே மலர் நின்று கொண்டிருக்கவும் அவளிடம் அன்று நிகழ்ந்தது அனைத்தையும் கூறினார்.. அவளும் அவர் நெஞ்சு வலியை பற்றி சொன்னதும் படபடத்து போனாள்..
அவர் அவளை சமாதானப்படுத்தி “ஒன்னும் இல்லடா.. இந்தர் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிட்டான்.. அந்த பையன் அங்கேயே எனக்கு வேண்டிய மருந்து மாத்திரையும் வாங்கி கொடுத்துட்டான்.. நைட்டு அதை போட்டுக்கிட்டு படுத்தா ஒன்னும் ஆகாது.. நெஞ்சு வலி இருக்கிற இடமே தெரியாம போய்டும்.. நாளைக்கு போய் அந்த டாக்டரை பார்த்து மறுபடியும் மருந்து வாங்கிக்கலாம்..”
அவர் சொன்னதை கேட்டவள் ஓரளவுக்கு சமாதானம் ஆகி இருந்தாள்..
“அப்புறம் மலரு.. உங்க அக்காக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.. தேவையில்லாம ரொம்ப கவலைப்படுவா.. ஏற்கனவே மாப்பிள்ளைக்கு கையில அடிபட்டு இருக்கிறதுனால அவ ரொம்ப கவலையில இருக்கா.. மேல மேல இந்த சின்ன விஷயத்தை சொல்லி அவளை இன்னும் கவலை படுத்த வேண்டாம்.. எனக்கு ஒன்னும் இல்ல.. சொல்றது புரியுதா?”
அவர் கேட்கவும் அவளும் மதியிடம் எதையும் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக சொன்னாள்..
அவள் மனதில் இப்போது இந்தருக்கான மதிப்பு ஒரு படி கூடி போனது..
“என் கூட எப்பவும் வாயடிச்சு ரொம்ப சண்டை போடுறான்.. என்கிட்ட திமிர் தனமா தான் நடந்துக்கிறான்.. ஆனா ரொம்ப நல்லவன் தான் போல.. அப்பாவை பொறுப்பா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கான்.. அப்பா எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டு இருந்தாரு.. அந்த பசங்க பொண்ணுங்க கிட்ட எல்லாம் ரொம்ப வம்பு பண்றாங்கன்னு.. நான் கூட வந்து ஒரு நாள் கேட்கிறேன்னு சொல்லி இருந்தேன்.. ம்ம்ப்.. இந்தர் அவங்களையெல்லாம் காலி பண்ணி எனக்கு வேலை இல்லாம பண்ணிட்டான்.. ம்ம்ம்.. அவன் தீரன் மாமா கிட்ட வளர்ந்தவன் ஆச்சே.. வேற எப்படி இருப்பான்? எனக்கு என்னவோ உன்னை கொஞ்சம் கொஞ்சம் பிடிக்குது டா மங்குனி..” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் மலர்..
இங்கு மதி தீரன் அறையிலோ இருவருமே மற்றவரிடம் ஏதோ சொல்ல வந்துவிட்டு சொல்ல முடியாமல் பின் வாங்கிக் கொண்டிருந்தார்கள்..
தீரா என்று அழைப்பவள் அவன் என்ன என்று கேட்கவும் அடுத்த நொடி சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் ஏதேதோ உளறி கொட்டி விட்டு அவசரமாக அங்கிருந்து எழுந்து சென்று இல்லாத வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..
தீரனோ தொண்டையை செறுமிய படி அவள் அருகில் செல்பவன் அவள் நிமிர்ந்து பார்க்கவும் “ஒன்னும் இல்லை.. உன் பின்னாடி இருக்கிற ஜக்குல தண்ணி இருக்குல்ல.. எடுத்து குடிக்கலாம்னு வந்தேன்..” என்று சொல்லிவிட்டு மடக் மடக்கென ஒரு குவளை தண்ணீரை குடித்துவிட்டு மறுபடியும் விலகிச் சென்று இருந்தான்..
இப்படியே இரவு வரை இருவரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர் அன்று முழுவதும்..
எல்லோரும் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் அடைந்து போக இந்தரோ சற்று காற்று வாங்கலாம் என்று வீட்டின் முன்பக்கம் இருந்த முற்றத்தில் உலவிக்கொண்டு இருந்தான்..
மலரழகிக்கும் உடல் ஏதோ கசகசவென்று இருப்பது போல் தோன்ற உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு வரலாம் என்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..
அதே நேரம் வெளியே நடந்து கொண்டு இருந்த இந்தருக்கு பொத்தென ஏதோ விழும் சத்தம் கேட்கவும் என்ன சத்தம் என்று வீட்டின் பக்கவாட்டில் போய் பார்க்க அங்கே சேகர் மதில் சுவர் ஏறி வீட்டிற்குள் குதித்திருந்தான்..
அவனைக் கண்டவன் அவன் ஓடிப்போய் ஏதோ ஒரு பைப்பில் ஏற தொடங்க அவன் பின்னாலேயே ஓடி சென்று தானும் அந்த பைப்பில் ஏறி போனான்.. பைப்பில் ஏறி தீரனின் அறையின் பால்கனியை அடைந்த சேகர் பைப்பிலிருந்து தாவி பால்கனியில் ஏற பார்த்த அதே நேரம் பைப் மூலம் ஏறி அவனை அடைந்திருந்த இந்தர் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைக்க மேலிருந்து கீழே விழுந்து இருந்தான் சேகர்..
ஆனால் அவன் விழுந்த இடத்தில் சருகுகள் நிறைந்திருக்கவும் பெரிதாய் அடி படவில்லை.. லேசான காயங்கள் ஏற்பட்டிருக்க எழுந்தவன் தட்டு தடுமாறி வீட்டை விட்டு வெளியே ஓடி இருந்தான்..
அவன் விழுந்த சத்தம் தீரனுக்கும் கேட்க என்ன சத்தம் என்று பால்கனி வழியே வந்து எட்டிப் பார்த்த அதே நேரம் இந்தர் சேகரை துரத்துவதற்காக பைப் லைனில் வேக வேகமாக இறங்கிக் கொண்டிருந்தான்..
தீரன் பார்க்கும் நேரம் மலரழகி இருந்த அறையின் குளியலறை ஜன்னல் பக்கமாக இருந்தான் இந்தர்.. அதே நேரம் குளியலறைக்குள் வந்திருந்த மலரழகியோ ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அலறி இருந்தாள்..
அவள் அலறியதை கேட்டு அரண்டு போனவன் வேக வேகமாக இறங்கி அவளுக்கு விஷயத்தை புரிய வைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்குள் ஓடி வர அதே நேரம் தன் அறையின் பால்கனியிலிருந்து தீரனும் கதவை திறந்து கொண்டு வேகமாக கீழே இறங்கினான்.. மதியோ என்னவோ ஏதோ என்று அவன் பின்னாலேயே வந்தாள்..
“என்னாச்சு தீரா.. ஏன் இவ்ளோ படபடன்னு ஓடுறீங்க?” என்று கேட்டுக்கொண்டே வந்தவளை “இந்த இந்தரை.. இன்னைக்கு நீ அவனுக்கு சப்போர்ட்டா எதுவும் பேசாத மதி.. அவனை என்ன பண்றேன் பாரு..” என்று சொல்லிக் கொண்டே வரவேற்பறைக்கு வந்திருந்தான் தீரன்..
அதே நேரம் மலரழகி குளியலறையில் இருந்து பதட்டத்தோடு வெளியே வர தமிழ்வாணன் “என்னாச்சும்மா.. எதுக்கு அப்படி கத்தின? உனக்கு தான் கரப்பான் பூச்சி பயம் கூட கிடையாதே..” என்று கேட்க “அது.. அப்பா.. அது வந்து.. அங்க ஜன்னல் பக்கம் இந்தர்..” என்று இழுக்க அவருக்கும் அவள் சொன்ன விஷயம் புரிபடவும் அதிர்ந்து போய் பார்த்தார் அவளை..
“நீ வேற ஏதாவது நிழலாடுறதை பார்த்து தப்பா நினைச்சிருப்பமா.. அந்த தம்பி அப்படி எல்லாம் பண்ணி இருக்காது.. ஏதாவது உளறிக்கிட்டு இருக்காத மலரு.. அது தங்கமான புள்ளை.. இந்த மாதிரி நீ சொன்னதை மாப்பிள்ளை கேட்டா ரொம்ப வருத்தப்படுவார்..”
“நான் பொய் சொல்லல பா.. நிஜமா தான் பா..”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே யாரோ யாரையோ அடிக்கும் சத்தம் கேட்கவும் கதவை திறந்து கொண்டு இருவரும் வெளியே வந்தனர்..
அங்கே வரவேற்பறையில் “உன்னை இப்படியாடா நான் வளர்த்தேன்..? படுபாவி.. இவ்வளவு மோசமா கெட்டு போவன்னு நான் நினைக்கவே இல்லையேடா.. இப்படி பொறுக்கி தனம் பண்றதுக்கு நீ உயிரோடவே இருக்க வேண்டாம்.. பேசாம செத்து போயிடு.. நானே உன்னை கொன்னு போட்டுடறேன்..” சரமாரியாக இந்தரை எந்த கேள்வியும் கேட்காமல் அடித்து துவைத்து கொண்டு இருந்தான் தீரன்..
“அண்ணா அடிக்காதீங்க அண்ணா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க அண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணல..”
அவன் கத்தி சொல்ல “எந்த தப்பும் பண்ணலையாடா நீ? நான் தான் மேலே இருந்து பார்த்தேனே நீ பண்ண வேலையை.. அதை வாயை திறந்து சொல்ல கூட முடியல என்னால.. நினைச்சாலே கூசுதுடா..”
இந்தருக்கோ தீரன் பேச பேச மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது.. தன்னை நம்பாமல் கூட பிறந்த அண்ணனே பழி சொல்லியது அவனுக்கு அதிகமாக வலித்தது..
“ஐயோ அண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணல.. அந்த சேக..” என்று அவன் சொல்ல தொடங்கிய நேரம் மலரோடு தமிழ்வாணன் அவர்களின் அறையை விட்டு வெளியே வந்திருந்தார்..
மலருக்கோ அவன் சேகரின் பெயரை முழுதாய் சொல்லாத போதும் அவன் பெயரை சொல்ல தொடங்கியதிலேயே விஷயம் அத்தனையும் புரிந்தது.. சேகர் தீரனின் அறைக்கு போய் இருக்க வேண்டும்.. இந்தர் அவனை துரத்திக் கொண்டு போனபோது தன் அறையின் குளியலறை வெளியே தான் அவனை பார்த்திருக்க வேண்டும்.. இப்போது தன்னோடு தன் தந்தை இருப்பதால் விஷயத்தை சொல்ல முடியாமல் அவன் நிறுத்தி இருக்க வேண்டும் என்று ஒரே நொடியில் புரிந்து கொண்டவள் “மாமா..” என்று தீரனிடம் ஏதோ சொல்ல வர அதற்குள்ளாக அவள் பின்னாலேயே வந்த தமிழ்வாணன் “மாப்ள.. என்ன ஆச்சு? ஏன் இப்படி இந்தர் தம்பியை போட்டு அடிக்கிறீங்க..?” என்று கேட்டார்..
முழுதாய் விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் தவறான எந்த வார்த்தையையும் விட்டு விடக்கூடாது என்று பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்..
“விடுங்க மாமா.. இவன் செஞ்ச வேலைக்கு இவனை கொன்னே போடணும்.. நான் இன்னும் கொன்னு போடாம இருக்கனேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. என்னால தூக்கி வளர்த்த இதே கையால இவனை கொல்ல முடியல மாமா..” உடைந்து போன குரலில் பேசிக்கொண்டு இருந்தான் தீரன்..
“என்னாச்சு மாப்ள.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க..? மலரும் ஏதேதோ சொல்றா.. அவ குளிக்க போகும் போது ஏதோ பார்த்ததா உளறிக்கிட்டு இருக்கா..”
இன்னும் கூட இந்தர் இப்படி ஒரு வேலையை செய்திருப்பான் என்று அவரால் நம்ப முடியவில்லை.. அனுபவப்பட்ட மனிதர் ஆயிற்றே..
ஆனால் அவர் சொன்னதைக் கேட்ட தீரனுக்கோ ஆத்திரம் பொங்கி வர இந்தரை இன்னும் சரமாரியாக அடிக்க துவங்கினான்..
“ஐயோ அப்பா.. மாமாவை நிறுத்த சொல்லுங்க.. அவன் மேல எந்த தப்பும் இருக்காது… அவன் வேற எதோ காரணமா தான் அங்க வந்திருப்பான்.” மலர் எவ்வளவு கத்தி சொல்லியும் எந்த பிரயோஜனமும் இருக்கவில்லை.. தீரன் இந்தரை சரமாரியாக அடித்து துவைத்து வெளுத்து கொண்டிருந்தான்..
மதியழகிக்கோ ஒன்றும் புரியவில்லை..
“எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன நடந்ததுன்னு சொல்றீங்களா? தீரா.. நீங்க எதுக்கு இந்தரை போட்டு இப்படி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க? அவன் என்னதான் பண்ணான்..?”
ஆவேசமாய் கேட்டுக் கொண்டு இருந்தாள் மதி..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 62
“எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன நடந்ததுன்னு சொல்றீங்களா? தீரா.. நீங்க எதுக்கு இந்தரை போட்டு இப்படி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க? அவன் என்னதான் பண்ணான்..?”
மதி கேட்கவும் தீரன் “இந்தர் மாடியில இருந்து நான் பார்க்கும் போது பைப் லைன்ல ஏறி உட்கார்ந்துக்கிட்டு இருந்தான்.. அவன் இருந்தது….,…. மலரோட ரூம்ல இருந்த பாத்ரூமோட ஜன்னல் பக்கத்துல இருந்த பைப்ல..”
தயங்கி தயங்கி சொன்னவன் “சொல்லு மதி.. இதுக்கப்புறமும் நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண போறியா? இதைவிட இன்னும் என்ன கேவலத்தை இவன் பண்ணிட முடியும்..? இவன் என் தம்பியே இல்ல மதி.. ஒரு பொண்ணு குளிக்கிறதை பாத்ரூம் ஜன்னல்ல இருந்து பாக்கணும்னு நினைக்கிற ஒரு பொறுக்கி.. இவனை எல்லாம்..” என்று மறுபடியும் அவன் கை ஓங்க இந்தரோ அப்படியே சிலையாக நின்றான்..
தன் அண்ணன் தன்னை உயிருக்கு உயிராய் வளர்த்த தன்னோட அண்ணன்.. அவருக்கு தன் மேல ஒரு துளி நம்பிக்கை கூட இல்லையா? அது எப்படி இவ்வளவு கேவலமான ஒரு தப்பை தன் தம்பி செய்து இருப்பான்னு அவரால நினைக்கவும் முடிஞ்சது..? அவ்வளவுதானா? அவர் என் மேல் வச்சிருக்கற நம்பிக்கை.. பொண்ணுங்களோட சுத்துறேன்னு சொல்ற வரைக்கும் கூட பரவால்ல.. ஆனா ஒரு பொண்ணு குளிக்கிறதை பாத்ரூம் ஜன்னல்ல இருந்து பார்ப்பேன்னு என்னை பத்தி அவர் எப்படி இவ்வளவு கேவலமா நினைச்சார்.. நான் அவர் வளர்த்த பையன் தானே? யார் என் மேல பழி சொன்னாலும் என் தம்பி ஒருநாளும் இப்படி ஒரு தப்பை பண்ண மாட்டான்னு அவர் உறுதியா சொல்லவேண்டாமா?”
ஒரு நொடியில் உலகமே வெறுத்து போனது அவனுக்கு.. தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்ன பிறகும் அதற்கான விளக்கத்தை கூட ஒழுங்காக கேட்காமல் தனக்கு தண்டனையும் வழங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணனையே விழியகலாமல் பார்த்திருந்தவன் அப்படியே இருந்த இடத்திலேயே இறுகி போனான்..
மதியழகி முன்னால் வந்து “ஒரு நிமிஷம் இருங்க.. அடிச்சு அடிச்சு அவனை கொன்னுடாதீங்க.. அவன் தான் தப்பு பண்ணலைன்னு ஏதோ சொல்ல வர்றான் இல்ல..? அவன் என்ன சொல்றான்னு தான் கேளுங்களேன்.. இந்தர் சொல்லு.. என்ன நடந்தது..? நீ நிச்சயமா இப்படி ஒரு தப்பை பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்குள்ள ஏதோ ஒன்னு சொல்லுது.. நீ என்னை நிஜமாவே உன் அம்மா ஸ்தானத்தில வச்சு பார்க்கிறேன்னா என்கிட்ட சொல்லு.. நிஜமா என்ன நடந்தது..?”
அவள் பொறுமையாக கேட்க இந்தர் “அண்ணி.. அது வந்து.. நான் எந்த தப்பு பண்ணல அண்ணி.. அங்க அந்த பைப் லைன்ல நான் இருந்ததுக்கு காரணம்..” என்று தொடங்கியவன் மறுபடியும் தமிழ்வாணனை கண்டு அவர் முன்னால் சேகரின் பெயரை சொல்ல முடியாமல் வாயை இருக்க மூடி கொண்டான்..
அவர் முன்னால் சேகரை பற்றி சொன்னால் அவன் ஏன் வந்தான் எதற்காக வந்தான் என்ற காரணத்தை சொல்ல வேண்டும்.. காரணத்தை சொன்னால் மதியும் தீரனும் நடிப்பது பற்றி சொல்ல வேண்டும்.. அப்படி சொன்னால் அவர்கள் ஏன் நடிக்கிறார்கள் என்ற காரணத்தையும் சொல்ல நேரிடும்.. அதைக் கேட்ட பிறகு தமிழ்வாணன் மொத்தமாய் நொறுங்கிப் போவார்.. இதையெல்லாம் யோசித்து வாயை திறக்காமல் அப்படியே பசை போட்டு ஒட்டிக் கொண்டான் இந்தர்..
“சொல்லு இந்தர்.. எதுக்கு அந்த பைப் லைன்ல ஏறினே..?” பதட்டத்தோடு அவன் தவறு செய்திருக்கமாட்டான் என்ற உறுதியோடு மதி அவனை பார்த்திருக்க “சாரி அண்ணி.. என்னை எதுவும் கேக்காதீங்க.. எதை சொல்ற நிலைமையிலயும் நான் இல்லை.. இந்த சூழ்நிலையில நான் எதையும் சொல்ல முடியாது.. என்னை நான் விளக்கி சொல்லி தான் புரிய வெக்கணும்னா என்னை யாரும் புரிஞ்சுக்கவே வேண்டாம்.. என்ன..? அண்ணன் இன்னும் ரெண்டு அடி அடிப்பாரு அவ்வளவு தானே? அவரு அடிக்கறது எனக்கு வலிக்கவே இல்ல அண்ணி.. ஆனா அவரு என்னை.. என்னை.. விடுங்க அண்ணி..” அவனால் அதற்கு மேல் பேச கூட முடியவில்லை..
அவன் அப்படி சொல்லவும் “எப்படி அவனால விளக்கம் சொல்ல முடியும்? அதுக்கு காரணத்தை எவ்வளவுதான் இட்டு கட்டி சொல்ல முடியும் அவனால?”
தீரன் பேச பேச இந்தரோ மனதளவில் ரணப்பட்டு போனான்..
“தீரா நீங்க நினைக்கிற மாதிரி இந்தர் மோசமானவன் கிடையாது.. அவன் என்னோட ஸ்டூடண்டா இருந்திருக்கான்.. அவன் பொண்ணுங்க கிட்ட எவ்வளவு மரியாதையோட பழகுவான் பேசுவான்னு நான் பார்த்திருக்கேன்.. சில பொண்ணுங்க அவன் மேல அவ்வளவு கிரேஸோட இருந்தாங்க.. ஆனா அவன் அவங்க கிட்ட கூட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு முறை தவறி எப்பவும் நடந்துக்கிட்டதில்ல.. அவங்களையும் ஒரு எல்லைக்கு மேல அவன்கிட்ட நெருங்க விட்டதில்லை.. நிச்சயமா அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்.. நீங்க அவனை தனியா கூட்டிட்டு போய் என்ன விஷயம்னு கேளுங்க ப்ளீஸ்..”
“நீ அவன் காலேஜ்ல இருந்தப்ப அவனை பார்த்திருப்ப.. ஆனா மத்த நேரங்கள்ல அவன் தான் பொண்ணுங்களோட ஊர் சுத்திட்டு இருந்தானே.. உன் கிளாஸ் தவிர மத்த கிளாஸ் எல்லாம் ஒழுங்கா வர கூட இல்லையே.. அப்படி வெளியில போகும்போது அவன் என்ன பண்ணான்னு உனக்கு எப்படி தெரியும்..? எப்போ உங்க பிரின்சிபல் மூலமா இவன் கிளாஸை கட் அடிச்சிட்டு ஊர் சுத்துனான்னு எனக்கு தெரிஞ்சதோ அப்பவே எனக்கு இவன் மேல இருந்த மொத்த நம்பிக்கையும் போயிருச்சு.. எனக்கு தெரியாம இவ்வளவு தப்பான விஷயங்களை பண்ணினவன் இதையும் பண்ணி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? நான் உனக்கு முன்னாடியே சொன்னேன் மதி.. இப்பவும் சொல்றேன் அவனுக்கு சப்போர்ட் பண்ணாத.. அது அவனை இன்னும் மோசமான நிலைமைக்கு தான் கொண்டு போகும்..”
தீரனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துப் போனாள் மதி.. அவனோ மதி சொன்னதை காது கொடுத்து கேட்கும் நிலையில் கூட இல்லை..
“உனக்கு தெரியாது மதி.. ரெண்டு மூணு நாளா இவன் நடவடிக்கையே சரியில்லை.. நான் இவனை கூப்பிட்டு வார்ன் பண்ணேன்.. அப்படியும் இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு வந்து நிக்கிறான்..” என்றவன் இந்தர் பக்கம் திரும்பி “உனக்கு நான் படிச்சு படிச்சு சொன்னேன் இல்ல..? தள்ளி இரு.. எந்த தப்பும் பண்ணாத.. அது எனக்கு ரொம்ப அவமானத்தை தேடி கொடுக்கும்னு சொன்னேனா இல்லையா? அப்படியும் ஏன்டா இப்படி.. உன்னையெல்லாம்.. சீய்.. என் கண்ணு முன்னாடி நிக்காதடா”
இந்தரோ அப்படியே இறுகி போய் கண்களில் கண்ணீர் வழிய சிலையாய் நின்று இருந்தான்.. அவன் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள எந்த பதிலும் சொல்லவில்லை.. இருந்த இடத்திலேயே உரைந்து போயிருந்தவன்.. அப்படியே ஏதோ ஒரு உயிரற்ற பிணம் நடப்பது போல் மெல்ல நடந்து படியேறி தன் அறைக்குள் சென்றவன் கதவை அடைத்து தாழிட்டு கொண்டான்..
மதிக்கோ இன்றைய நிலையை பார்த்தபோது ஏதோ தவறாய் உள்ளுக்குள் நெருடி கொண்டே இருந்தது.. அவனைப் பார்த்து எப்படி பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்..
தமிழ்வாணனிடம் வந்த தீரன் “மாமா.. இப்ப நீங்க போய் தூங்குங்க மாமா.. ரொம்ப டைம் ஆயிடுச்சு உங்களுக்கு வேற உடம்பு சரியில்லை.. நீங்க மாத்திரையை போட்டு படுத்துடுங்க.. நாளைக்கே காலையில என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்.. நிச்சயமா மலருக்கு யாராலயும் எந்த பாதிப்பும் வர விட மாட்டேன்.. அவ பாதுகாப்பா இருக்கிறது என்னோட பொறுப்பு.. நீங்க எதை பத்தியும் கவலைப்படாம அமைதியா படுத்து தூங்குங்க மாமா.. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்ல?”
“ஐயோ மாப்ள.. உங்களை போய் நம்பாம இருப்பேனா..? நீங்கே எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்.. நீங்க நிச்சயமா எல்லாத்தையும் நல்லவிதமா பாத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனா ஒரு விஷயம் மாப்பிள்ளை.. இந்தர் தம்பியை பத்தி எதுவும் முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் அவரோட பேசிட்டு நல்லா யோசிச்சு முடிவெடுங்க.. ஏன்னா அவசரத்தில முடிவெடுக்கிற விஷயம் இல்லை இது..”
“சரிங்க மாமா.. நான் நிச்சயமா அவசரப்பட்டு எந்த முடிவு எடுக்க மாட்டேன்.. நான் அவனோடு பேசறேன்..”
இப்படி சொல்லி அவரை உள்ளே அனுப்பியவன் மலரோடு அவர் உள்ளே சென்றுவுடன் மதி பக்கம் திரும்பி “இந்தர் நாளைக்கு காலைல இந்த வீட்ல இருக்க கூடாது.. அவன் வீட்டை விட்டு வெளியே போகட்டும்..” என்றான் இறுகிய குரலில்..
அவன் முடிவாய் சொன்னதில் அதிர்ந்து போனாள் மதி..
“என்ன சொல்றீங்க தீரா..? அவன் வீட்டை விட்டு எங்க போவான் தீரா.. இப்போவும் சொல்றேன் தீரா.. அவன் மேல எந்த தப்பும் இருக்காது..”
அவள் குரலில் இந்தரின் மேல் அவை வைத்திருந்த அதீதமான நம்பிக்கை வெளிப்பட்டது..
“ஐயோ மதி.. உனக்கு தெரியாது.. நேத்து அவன் நைட்டு 12 மணிக்கு மேல மலரோட ரூம் கதவை திறந்து உள்ள போக ட்ரை பண்ணான்.. நான் சமயத்துல பாத்து அவனை தடுத்துட்டேன்.. இல்லைன்னா அப்பவே ஏதாவது தப்பா நடந்திருக்கும்..”
அவன் சொன்னதைக் கேட்ட பிறகும் இடவலமாய் தலையாட்டிய மதி “நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் இந்தர் இப்படி ஒரு வேலையை பண்ணி இருப்பான்னு நான் எந்த ஜென்மத்திலயும் நம்ப மாட்டேன்.. நிச்சயமா அவன் இப்படி ஒரு வேலையை பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை.. நான் அண்ணின்கிற பேர்ல அவனுக்கு அம்மா ஸ்தானத்தில இந்த வீட்டில வந்திருக்கிறேன்.. என்னால என் புள்ள மாதிரி இருக்கிற ஒருத்தனை வீட்டை விட்டு வெளியே அனுப்புறதை அதுவும் இப்படி ஒரு மோசமான பழி சுமத்தி வெளியே அனுப்புறதை ஒத்துக்கவே முடியாது.. நான் போய் அவன் கிட்ட பேசி பார்க்கிறேன்.. அவன் அங்க போனதுக்கு அவன் பக்கம் நியாயமான ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.. எங்க அப்பா மலரு இவங்க எல்லாம் இருந்ததுனால அவனுக்கு சொல்ல முடியாம இருந்திருக்கலாம்.. நான் ஒரு முறை அவனோட பேசி பார்க்கிறேனே.. ப்ளீஸ் தீரா.. அவசரப்படாதீங்க..”
அவள் எப்படியாவது தீரனின் கோபத்தை குறைக்க வேண்டும் என்று எண்ணி பேசிக் கொண்டிருக்க தீரனோ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை..
“அப்படியே அவன் ஏதாவது நியாயமான காரணம் வெச்சிருந்தாலும் இதுக்கு மேல உங்க அப்பா இந்த வீட்ல இந்தர் மலர் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதுக்கு சம்மதிப்பாரா? தான் கிளம்பி போறேன்னு தான் சொல்வார்.. அவரு இனிமே வாழ்க்கை முழுக்க என்னை ஒரு மகனா நினைச்சு இந்த வீட்லயே இருக்கலாம்னு சொல்லி கூட்டி வந்த நானே அவரை வீட்டை விட்டு அனுப்ப முடியாது.. இந்தர் இந்த வீட்டை விட்டு போறது தான் நியாயம்.. அவன் போகட்டும்.. அவன் தப்பே பண்ணலன்னாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில அவன் இந்த வீட்டை விட்டு போறது தான் சரியா இருக்கும்..”
லவ்..❤️ லவ்.. ❤️எத்தனை வயது? – 63
“இந்தர் இந்த வீட்டை விட்டு போறது தான் நியாயம்.. அவன் போகட்டும்.. அவன் தப்பே பண்ணலன்னாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில அவன் இந்த வீட்டை விட்டு போறது தான் சரியா இருக்கும்..” தீரன் இறுதியாய் உறுதியாய் சொன்னான்..
“இல்ல.. இந்தர் இந்த வீட்டை விட்டு போறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. அவன் இந்த வீட்டு புள்ள.. அவன் எதுக்கு இங்க இருந்து வெளியே போகணும்..? அவன் நிச்சயமா எந்த தப்பும் பண்ணலைன்னு எனக்கு தெரியும்.. அவன் இங்க இருந்து எங்கேயும் போக மாட்டான்.. அவன் இந்த வீட்டிலிருந்து அனுப்புனா உங்க அம்மாவோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது..”
மதியழகி தீர்க்கமாய் சொல்லிவிட “அப்போ உங்க அப்பா கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்றது?” தீரன் கேட்கவும் “அப்படி எங்க அப்பாக்கு மலரோட இங்க இருக்கிறது பிரச்சனைன்னா அப்பாவும் மலரும் எங்க பழைய வீட்ல போய் இருக்கட்டும்.. இனிமே அவங்க இங்க இருக்க வேண்டாம்..”
“அவங்க ஏன் தனியா இருக்கணும் மதி.. கொஞ்சமாவது யோசிச்சு பேசுறியா? உங்க அப்பாக்கு வயசு ஆகுது.. இன்னைக்கு அவருக்கு நெஞ்சுவலி வந்துருச்சு.. அதுக்கு டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க.. இப்படி உடம்பு சரியில்லாதவர் வயசு பொண்ணை கூட வச்சுக்கிட்டு எப்படி தனியா இருக்க முடியும்? இந்தர் சின்ன பையன்.. அவன் வெளியில் போய் சமாளிச்சுப்பான்.. அவன் வெளியே போகட்டும்..”
“முடியாது.. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.. இந்தர் வீட்டை விட்டு வெளியே போக மாட்டான்..”
“ஓ.. அப்ப உங்க அப்பாவும் மலரும் வீட்டை விட்டு வெளியே போகணும்ன்னு சொல்றியா..?”
“தீரா.. இந்த பிரச்சனைக்கு அது தான் கரெக்டான முடிவாக இருக்கும்.. நீங்க இந்தரை வெளில அனுப்புறேன்னு சொன்னா அப்பாவே அதுக்கு ஒத்துக்க மாட்டார்.. அது மட்டும் இல்லாம.. நான் இப்படி சொல்றதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.. மலர் இன்னும் உங்க நெனப்புல தான் இருக்கா.. இன்னைக்கு அந்த சேகரோட அவ ஃபோன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.. அவன் கிட்ட எங்க அக்கா கிட்ட இருந்து எங்க மாமாவை பிரிச்சு நான் எப்படியாவது அவரை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டு இருந்தா.. அதனால அவ இங்க இருந்து அந்த வீட்டுக்கு போறது தான் சரியா இருக்கும்.. அவ இனிமே இங்க இருக்கிறதை என்னால அனுமதிக்க முடியாது..”
“அவ அப்படி சொன்னா நான் அப்படி நடக்க விட்டுடுவேனா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மதி?”
“அய்யோ தீரா.. உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. ஆனா அவ அப்படி நடந்துக்கும் போது உங்க மனசு என் மனசு ரெண்டுமே எவ்வளவு கஷ்டப்படும்னு எனக்கு தெரியும்.. அந்த கஷ்டம் வேண்டாம்னு தான் நான் சொல்றேன்.. அவங்க வீட்டை விட்டு போறேன்னு சொன்னா நீங்க அனுப்பி வச்சிடுங்க.. அவங்க இங்கதான் இருக்கணும்னு நீங்க ஃபோர்ஸ் பண்ணாதீங்க.. நான் அவரோட பொண்ணு.. அவரு போகட்டும்னு நானே சொல்றேன்.. அவர் இங்கதான் இருக்கணும்னு நீங்க எதுக்கு இப்படி அடம் பிடிக்கிறீங்க? எங்க அப்பாவும் தங்கச்சியும் எங்க இருக்கணும்னு நான் தான் டிசைட் பண்ணனும் தீரா..”
“சரிதான்.. நான் என்ன அவரோட நிஜ மருமகனா? அவரை ஃபோர்ஸ் பண்ணி இங்க இருக்க வைக்கறதுக்கு.. சும்மா மருமகனா நடிக்கிறவன் தானே..? உன்னை பத்தியும் உங்க அப்பா பத்தியும் உன் தங்கச்சி பத்தியும் நான் எப்படி முடிவு எடுக்க முடியும்.. அவருக்கு நான் மருமகனா இருந்துக்கிட்டு என்னால அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது.. அதனால எப்படியும் நம்ம நடிச்சுகிட்டு தானே இருக்கோம்.. மலர் என்னை கல்யாணம் பண்ணணும்னு சொன்னதுனால அவ பிடிவாதத்தை மாத்தறதுக்கு தானே நம்ம இப்படி ஒரு பொய் கல்யாணம் பண்ணிக்கிட்டு நடிக்கிறோம்.. இப்பதான் அது நடக்கலையே.. நீ தான் சொல்றியே.. மலர் இன்னும் அதே நினைப்புல தான் இருக்கான்னு.. அப்புறம் எதுக்கு நம்ம வேஸ்டா அப்படி நடிக்கணும்..? எப்படியும் இந்தரும் மலரும் செட்டில் ஆனப்புறம் டிவோர்ஸ் பண்ணி பிரியறதா தானே இருந்தோம்..? அதை இப்பவே பண்ணிடலாம்.. நீ போய் உங்க அப்பாவோட இரு.. நானும் இந்தரும் இந்த வீட்லயே இருக்கோம்..”
தீரன சொன்ன விஷயத்தில் அவளோ அதிர்ந்து விக்கித்து போய் நின்றிருந்தாள்.. தன் காதலை சொல்லலாம் என்று முடிவு செய்திருந்த நேரத்தில் அவன் விவாகரத்து பற்றி பேசிய வார்த்தைகள் அவளை இடியாய் தாக்கின..
விரக்தி நிறைந்த ஒரு புன்னகையை சிந்தியவள் “இதைத்தான் உங்ககிட்ட நான் எதிர்பார்த்திருக்கணும் தீரா.. சரிதான்.. ஆனா நான் என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.. நான் ஒரு பைத்தியக்காரி.. இருந்தாலும் இப்ப நீங்க டிவோர்ஸ் பத்தி பேசுறதுனால எப்படியும் நம்ம பிரிய போறோம்ன்கிற பட்சத்தில எனக்கு இதை உங்க கிட்ட சொல்லாம போறதுல விருப்பம் இல்லை.. உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்..”
எச்சில் விழுங்கியவள் விழிகளில் ஆழமான வலியோடு “இந்த விஷயத்தை எப்படி எப்படியோ சொல்லணும்னு நினைச்சேன்.. ஆனா இப்படி சொல்ற மாதிரி சூழ்நிலை வரும்னு நான் நினைக்கவே இல்ல தீரா..”
தொண்டை வறண்டு போக கண்களில் கண்ணீர் நிற்காமல் உடைபடுத்து பகிர்ந்து கொண்டே இருக்க அதனை கையால் துடைத்துக் கொண்டு அவன் கண்ணை பார்க்காமல் தரையில் எங்கோ ஒரு மூளையை பார்த்துக் கொண்டு “நான் உங்களை மனசார விரும்புறேன் தீரா.. ஐ லவ் யூ.. என்னால நீங்க இல்லாம வாழ முடியாதுன்ற நிலைமையில தான் நான் வந்து நின்னுகிட்டு இருக்கேன்..”
அவள் முகம் முழுவதும் வலிகளின் கீற்றோடு அவள் காதலை சொல்லி இருக்க தீரனோ பேச்சற்று செயலற்று நின்றிருந்தான்.. அவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.. உள்ளுக்குள் இன்பமாய் அதிர்ந்திருந்தவனுக்குள் அவள் முகத்தில் தோன்றிய துயரத்தின் ரேகைகள் அதிக வலியையும் உண்டாக்கியது.. அவள் காதலை இப்படி சொல்லும் நிலை உருவாகிவிட்டதே என்று உள்ளுக்குள் உடைந்து நொறுங்கி தான் போனான் அவனும்..
“உங்ககிட்ட என் காதலை சொல்லணும்னு நான் முடிவு பண்ண இந்த நேரத்துல நீங்க விவாகரத்து பத்தி பேசுறீங்க.. சூப்பர்.. என் மனசுல தோன்றின காதல் உங்களுக்கும் தோன்றியிருக்கணும்னு அவசியம் இல்லையே.. நீங்க கடைசி வரைக்கும் ஆஞ்சநேயர் பக்தராகவே இருக்கணும்னு முடிவு பண்ணி இருக்கலாம்.. ஆனா இந்த விவாகரத்து முடிவு இப்ப எனக்கும் சரின்னுதான் படுது தீரா.. ஏன் தெரியுமா? இவ்வளவு வருஷமா பார்த்து பார்த்து நீங்க வளர்த்த உங்க தம்பி மேல சட்டுனு இவ்ளோ பெரிய பழியை போட்ட நீங்க நாளைக்கு ஒருவேளை நான் ஏதாவது ஒரு ஆம்பளை கிட்ட பேசிகிட்டு இருந்தா கூட நான் அவனோட தப்பு பண்ணிட்டேனோன்னு சந்தேகப்பட்டாலும் படுவீங்க.. உங்ககிட்ட நம்பிக்கையை வாங்கறதுக்கு ரொம்ப போராடணும் போல இருக்கே.. வேண்டாம்.. என் மனசுல நீங்க எப்பவும் இருப்பீங்க.. ஆனா உங்களோட ஒண்ணா வாழ்ந்து உங்க வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் தெனம் தெனம் ஒரு ரணகளமா மாத்திக்க நான் விரும்பல.. நீங்க சொல்ற மாதிரி டிவோர்ஸ் பண்ணிக்கலாம்..”
அவள் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருகிக்கொண்டிருக்க உடைந்து போன மனதோடு தன் முடிவை அவள் சொல்லிக் கொண்டிருக்க அவள் சொன்ன வார்த்தைகளில் மொத்தமாய் நொறுங்கிப் போயிருந்தான் தீரன்..
அப்போது பக்கத்தில் யாரோ கீழே விழும் சத்தம் கேட்கவும் இருவரும் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்க்க அங்கே அவருடைய அறை வாசலில் தமிழ்வாணன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தார்..
அறை வாசலில் தமிழ்வாணன் மயங்கி விழுந்திருந்ததை பார்த்த மதியும் தீரனும் பதறிப்போய் வேகமாய் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.
ஆனால் அவரோ எழுந்திருக்கும் வழியாய் தெரியவில்லை..
மலரோடு அவரின் அறைக்கு வந்தபோது தமிழ்வாணன் அவளிடம் “மலர் நம்மளால மாப்பிள்ளைக்கும் இந்தர் தம்பிக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும் போல இருக்கு.. பேசாம நம்ம நம்ம வீட்டுக்கே போய் இருந்துக்கலாம்.. நாளைக்கு காலைல கிளம்பிடலாம்..”
தமிழ்வாணன் சொல்ல “இல்லப்பா.. நான் எங்கேயும் வரல.. நான் இந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்னா நானும் மாமாவோட சேர்ந்து இந்தர் மேல பழி போடுற மாதிரி ஆயிடும்.. இந்தர் எந்த தப்பும் பண்ணலப்பா.. அவன் தப்பு பண்ணலன்னு மாமாக்கு புரிய வச்ச அப்புறம் தான் நான் இந்த வீட்டை விட்டு வருவேன்.. அது வரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு வர மாட்டேன்..” உறுதியாய் அவள் சொல்லவும் அவரும் அமைதியாக இருந்து கொண்டார்..
இருந்தாலும் வேறு எதுவும் விபரீதமாய் முடிவெடுத்து விட வேண்டாம் என்று தீரனிடம் சொல்வதற்காக அறைக்கு வெளியே வந்தவர் தீரனும் மதியும் பேசியது அனைத்தையும் கேட்டு நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்திருந்தார்..
அவர் எவ்வளவு எழுப்பியும் எழும்பாமல் போகவும் பயத்தில் மதிக்கு உடல் நடுங்கியது..
“தீரா.. அப்பா எழுந்திருக்கவே மாட்டேங்குறாரு.. எனக்கு பயமா இருக்கு தீரா.. அவருக்கு எதுவும் ஆகாது இல்ல?”
பதைபதைப்போடு அவள் கேட்க அவள் கையை இறுக்கமாய் அதே நேரம் ஆறுதலாய் பிடித்தவன் “அதெல்லாம் ஒன்னும் ஆகாது மதி.. நீ போய் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா.. போ”
என்று அவளை அனுப்பி இருந்தான்..
ஆனால் அவனுக்கும் உள்ளுக்குள் பதட்டம் அதிகரித்து கொண்டே தான் போனது..
சற்று நேரத்தில் சமையல் அறைக்கு சென்று கொஞ்சம் தண்ணீரை கொண்டு வந்த மதி அதை அவர் முகத்தில் தெளிக்க மெல்ல மயக்கம் கலைந்தவர் மதியை பார்த்த நொடியே.. “மதி.. என்னை மன்னிச்சிடுடா.. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணையும் நான் தான் பெத்தேன்.. அந்த மலரை மாதிரி ஒரு கேடு கெட்டவளையும் நான் தான் பெத்து இருக்கேன்.. அவ வாழ்க்கைக்காக இப்படி உன் வாழ்க்கையை பணயம் வச்சிட்டியேடா.. இதுல நீ மாப்பிள்ளையை விரும்ப தொடங்கிட்டன்னு சொல்ற.. அவர் விவாகரத்துன்னு பேசிகிட்டு இருக்காரு.. உன் வாழ்க்கையே இப்படி நாசமா போச்சேடா.. எல்லாத்துக்கும் நான் பெத்த அந்த ராட்சசிதான காரணம்.. என் கையாலேயே பேசாம அவளை கொன்னே போடறேன்..”
அவர் அரை மயக்கத்தில் மூச்சு வாங்கிக் கொண்டே உணர்ச்சி வசப்பட்டு இப்படி பேச மதியழகியோ ஆற்றாமையோடு தீரனை தான் கேள்வியாக பார்த்திருந்தாள்..
லவ்.. ❤️லவ்.. ❤️எத்தனை வயது? – 64
“ஐயோ மாமா.. அது விவாகரத்துன்னு ஏதோ கோபத்தில சொல்லிட்டேன் மாமா.. அப்படியெல்லாம் பண்ண மாட்டோம்.. முதல்ல ஹாஸ்பிடல் போலாம் மாமா.. நான் ஒரு கேப் புக் பண்ணறேன்.. நீங்க பெட்ல படுத்துக்கோங்க மாமா” என்று சொல்லி இருவரும் சேர்ந்து அவரை அங்கிருந்து எழுப்பி அணைத்தார் போல் அழைத்துக் கொண்டு போய் அவருடைய அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார்கள்..
மலர் அழகியோ முதலில் இந்தர் குளியலறை ஜன்னல் வழியாக அவளை பார்த்ததாக நினைத்ததினால் அரண்டு போய் குளிக்காமல் வெளி வந்திருந்தவள்.. இப்போது உள்ளே குளித்துக் கொண்டிருந்தாளா..
தீரன் ஒரு வாடகை காரை அதற்கான செயலி மூலம் பதிவு செய்ய அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வாடகைக்காரர் வீட்டு வாசலில் வந்தது..
தமிழ்வாணனை மெல்ல அழைத்து போய் காரில் ஏற்றி அவரோடு மதியை அமரச் சொல்லிவிட்டு தான் சென்று முன் இருக்கையில் அமர்ந்து கொண்ட தீரன் ஓட்டுனரிடம் பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு வண்டியை விடச் சொன்னான்..
குளித்துவிட்டு வந்த மலரழகி அறையில் தன் தந்தையை காணாமல் ஒருவேளை வரவேற்பறைக்கு போய் மறுபடியும் தீரனுடனும் மதியுடனும் பேசிக் கொண்டிருப்பாரோ என்று எண்ணி வரவேற்பறைக்கு வந்து பார்த்தாள்..
அங்கேயும் யாரும் இல்லாது போகவே யோசனையோடு தன் கைபேசி எடுத்து மதியழகிக்கு அழைத்தாள்..
“அக்கா.. அப்பா எங்க? நீங்க எல்லாம் எங்க போனீங்க?” என்று கைபேசியில் அவள் கேட்,க கேட்க மதி அவளுக்கு விவரத்தை சொல்லி மருத்துவமனை சென்றதும் அவளுக்கு அழைத்து விவரங்களை சொல்வதாக சொல்லி இணைப்பை துண்டித்தாள்..
இப்போது மலரழகியை தந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற யோசனையும் கவலையும் தொற்றிக் கொண்டது.. அந்தக் கவலையுடனேயே சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் இந்தரிடம் அன்று என்ன தான் நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனை தோன்ற நேராக அவன் அறைக்கு சென்றாள்..
அவனுடைய அறை கதவு பூட்டப்படாமல் லேசாக திறந்து தான் இருந்தது.. கதவை தட்டி பார்த்தவள் யாரும் வராமல் போகவே “என்ன.. இன்னைக்கு யாருமே வீட்ல இருக்க மாட்டேங்கறாங்க? ஒருவேளை இவனும் எங்கேயாவது கிளம்பி போயிட்டானா?” என்று எண்ணிய படியே மெதுவாக கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்..
அவள் கண்ட காட்சியில் மூச்சே நின்று விடும் போல இருந்தது அவளுக்கு..
அங்கே இந்தர் தன் கை நரம்பை அறுத்து அதிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க மயக்க நிலையில் படுத்து இருந்தான்..
அவன் அறைக்குள் வேகமாக ஓடி சென்றவள் கட்டிலின் வெளிப்புறம் தொங்கிக் கொண்டிருந்த அவன் தன் கையைப் பிடித்து கட்டில் மேல் வைத்து “ஏய்.. இந்தர் பக்கி.. என்ன வேலைடா பண்ணி வச்சிருக்க.. ஐயோ.. இப்ப நான் என்ன பண்ணுவேன்.. இவன் கையில் இருந்து பிளட் வேற நிக்காம வந்துட்டு இருக்கு.. முதல்ல அதை நிறுத்துறதுக்கு வழியை பார்ப்போம்..”
முதலில் அவன் கையில் வந்து கொண்டு இருந்த குருதியை நிறுத்தும் வழியை யோசித்தாள்.. அவளும் மருத்துவராக ஆகப்போகிறவள் தானே.. இப்படி கையில் வெட்டு பட்டால் முதல் உதவி செய்வது எப்படி என்று அவளுக்கு தெரியும்.. கீழே தன் அறைக்கு ஓடி சென்று தான் வைத்திருந்த முதலுதவி பெட்டி எடுத்துக் கொண்டு ஓடி வந்தவள் மெல்லிய பஞ்சு துணியை எடுத்து அவன் காயத்தில் வைத்து அழுத்தி ஒரு வழியாக ரத்தத்தை கட்டுப்படுத்தி விட்டு ஒரு சிறிய கட்டும் போட்டு விட்டாள்..
ஏற்கனவே அவள் அழைத்திருந்த வாடகை கார் வர அந்தக் கார் ஓட்டனரின் துணையோடு இந்தரை தூக்கி வந்து காரில் ஏற்றினாள்..
மருத்துவமனை நோக்கி விரைந்தது அந்த கார்..
தமிழ்வாணனை அனுமதித்து இருந்த அதே மருத்துவமனைக்கு தான் இந்தரையும் அழைத்துச் சென்று இருந்தாள் மலரழகி..
தமிழ்வாணனை அழைத்துக் கொண்டு போனது போல் அவசர சிகிச்சை பிரிவுக்கு இந்தரையும் அழைத்துக் கொண்டு போக அங்கே வெளியே தமிழ்வாணனின் நிலை குறித்த கவலையோடு நின்றிருந்த தீரனும் மதியும் ஒரு ஸ்ட்ரெச்சரில் இந்தரை தள்ளிக் கொண்டு ஒரு வார்ட் பாய் முன்னே வந்து கொண்டிருக்க பக்கத்தில் மலரழகியோ பதட்டத்தோடு நடந்து வருவதை பார்த்து அதிர்ந்து போனார்கள்..
இருவரும் மலரிடம் ஓடிவந்து “என்ன ஆச்சு மலரு..?” என்று பதட்டமாக ஒரு சேர வினவ மலரழகி தீரனிடம் “மாமா.. நான் அவன் கிட்ட இன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேட்கலாம்ன்னு அவன் ரூமுக்கு போனேன்.. அவன் கையை அறுத்துக்கிட்டு மயக்கமா இருந்தான் மாமா.. கைலருந்து நெறைய இரத்தம் போய்க்கிட்டு இருந்தது.. எப்படியோ ப்ளீடிங் ஸ்டாப் பண்ணி அவனை கூட்டிட்டு வந்துட்டேன் மாமா..”
அவள் சொன்னதைக் கேட்டு இடிந்தே போனான் தீரன்.. தன் தம்பியின் பக்கம் திரும்பி அவனை வாரி அணைத்து “ஐயோ இந்தரு.. ஏன்டா..? ஏன்டா இப்படி பண்ண..? கோவத்துல நான் சொன்ன வார்த்தைக்காக என்னை விட்டு ஒரேயடியா போகணும்னே முடிவு பண்ணிட்டியா நீ? இதுக்காடா உன்னை பார்த்து பார்த்து வளர்த்தேன்.. “கதறி கதறி அழுது கொண்டிருந்தான் தீரன்..
அதற்குள் அங்கு மருத்துவர் ஒருவர் வந்து “யார் இவரு..? ஹலோ மிஸ்டர்.. இது ஹாஸ்பிடல்.. இங்க இப்படி எல்லாம் அழக்கூடாது.. என்ன ஆச்சு இவருக்கு?” என்று இந்தரை பார்வையால் சுட்டி காட்டி கேட்க மலரழகி அவரிடம் நிகழ்ந்ததை சொன்னாள்..
“முதல்ல அவருக்கு ட்ரீட்மென்ட் பண்ணணும்.. கொஞ்சம் நீங்க அவர்கிட்ட இருந்து தள்ளி இருக்கீங்களா..? நீங்க இப்படியே கட்டி பிடிச்சு அழுதுட்டு இருந்து ட்ரீட்மென்ட்க்கு லேட்டாச்சுன்னா ரொம்ப க்ரிட்டிக்கலாயிரும்.. தள்ளி நில்லுங்க சார்..”
அங்கே பக்கத்தில் இருந்த வார்ட் பாயை பார்த்து “மகேஷ்.. அந்த எமர்ஜென்சி ரூம் நம்பர் டூக்கு இவரை கூட்டிட்டு போ.. நான் வந்து பார்க்கிறேன்..” என்று கறாராய் சொல்லிவிட்டு வேக வேகமாய் அந்த அறைக்குள் இந்தர் பின்னாலேயே நுழைந்தார் நுழைந்தார்..
மதியழகியோ கண்ணீர் வழிய தீரனை தான் கேள்வியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் பார்வையின் தீர்க்கம் அவனை என்ன என்னவோ நியாயம் கேட்டுக் கொண்டிருந்தது..
“இப்ப சந்தோஷமா உங்களுக்கு? எப்படி சந்தோஷமா பட்டாம்பூச்சி கணக்கா எந்த கவலையும் இல்லாம திரிஞ்சிக்கிட்டு இருந்த புள்ள.. இப்படி உயிரையே எடுத்துக்கிற அளவுக்கு குற்ற உணர்ச்சியில சாக வெச்சிட்டீங்களே அவனை.. இந்தருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு நான் எப்பவுமே உங்களை மன்னிக்க மாட்டேன் தீரா..”
“ஐயோ மதி.. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது.. அடுத்த நிமிஷம் நானும் செத்துருவேன்.. அவனுக்காக மட்டும் தான் நான் வாழ்ந்துகிட்டு இருந்தேன்.. அவன் என் உயிர் மதி.. அவனை விட்டு என்னால இருக்க முடியாது.. ஆனா இந்தருக்கு ஒன்னும் ஆகாது.. அவன் திரும்ப என் கிட்ட வந்துடுவான்.. அவனுக்கு தெரியும்.. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனோட இந்த அண்ணன் உயிரோட இருக்க மாட்டேன்னு.. அவன் என்னை சாக விட மாட்டான்..”
அவன் அழுது புலம்புவதை பார்க்க பாவமாய் இருந்தாலும் அவன் பேசிய பேச்சு நினைவுக்கு வர அவனை வெறுப்புடனே நோக்கி இருந்தாள் மதி..
“ஏன் மதி அவன் இப்படி பண்ணிட்டான்? அவன் தப்பு பண்ணதனால தானே நான் கண்டிச்சேன்.. அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கான்..? ஒரு அண்ணனா நான் அதை கண்டிக்க கூடாதா..?”
அவன் அப்போதும் அதே கேள்வியை கேட்க மதியழகிக்கோ அவன் மேல் இன்னும் கோவம் கூடியது.. “உங்களுக்கு நிஜமாவே புரியல இல்ல? அவன் நிஜமாவே தப்பு பண்ணி நீங்க அவனைக் கேள்வி கேட்டு இருந்தா.. அப்படியெல்லாம் பேசியிருந்தா.. அவனை அடிச்சு தண்டனை கொடுத்து இருந்தா.. இங்கே யாருமே உங்களை கேட்க போறது இல்ல.. ஆனா அவன் தப்பு பண்ணி இருக்கானா இல்லையான்னு அவன் கிட்ட தீர விசாரிக்கவும் இல்லை நீங்க.. அவன் நான் தப்பு பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு இருக்கும்போது அதை காது கொடுத்து நீங்க கேட்கவும் இல்லை.. நேரடியா அவனுக்கு தண்டனை கொடுத்துட்டீங்களே.. அவன் மனசு எவ்வளவு துடிச்சி இருக்கும்..? ஒருவேளை அவன் தப்பு பண்ணலைன்னா என்ன பண்ணுவீங்க தீரா? நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் திரும்பி எடுத்துக்க முடியுமா உங்களால..? ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க தீரா.. தப்பு பண்ணது இந்தர் இல்லை.. நீங்க தான் தப்பு..” ஒரு நொடி நிறுத்தியவள் “தப்பு இல்ல பாவம் பண்ணி இருக்கீங்க.. அவன் உயிர் எவ்வளவு துடிச்சிருந்தா உங்க நம்பிக்கையை இழந்துட்ட அந்த வேதனையை அனுபவிக்கிறதை விட தன் உயிரே போனாலும் பரவால்லன்னு அவன் நினைச்சிருப்பான்.. உங்க மேல அவ்வளவு பாசமும் மரியாதையும் வச்சிருக்கிற புள்ள.. நீங்க பேசின வார்த்தை அவன் உயிரோட இருக்கும்போதே கொன்னு போட்டுருச்சு.. அவன் செஞ்சதுக்கு அது தான் அர்த்தம் தீரா..”
அவள் பேச பேச இந்தரை அவசரமாய் குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து நேரடியாக தண்டனை கொடுத்து தகாத வார்த்தைகளை பேசி தான் பெரிய தவறு இழைத்து விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது தீரனுக்கு..
மலரழகி தீரனிடம் வந்து “மாமா.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. நான் அந்த நேரத்துல பாத்ரூம்ல குளிக்க போறேன்னு இந்தருக்கு எப்படி தெரியும்? நேத்து அந்த நேரத்துல குளிக்கணும்ன்கிற எண்ணமே அங்க போறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் எனக்கு கிடையாது.. திடீர்னு உடம்பு எல்லாம் கசகசன்னு இருந்ததுன்னு குளிக்கலாம்ன்னு போனேன்.. அப்போ இந்தர் எப்படி கரெக்டா நான் குளிக்கப் போற நேரத்துக்கு ப்ளான் பண்ணி என் பாத்ரூம் ஜன்னல்ல வந்து பார்க்க முடியும்? இதை யோசிச்சு பார்த்து இருந்தாலே உங்களுக்கு இந்தர் மேல எந்த தப்பும் இல்லைன்னு புரிஞ்சிருக்கும் மாமா.
நீங்க என்னையும் இதை பத்தி கேட்கல.. இந்தரையும் அதை பத்தி கேட்கலை.. நேரா அவனுக்கு தண்டனை கொடுத்துட்டீங்களே மாமா.. பாவம் மாமா அவன்.. உங்க மேல உயிரையே வச்சிருக்கான்.. அதுக்காக சில விஷயங்கள் பண்ண போய்தான் நிச்சயமா அந்த சிக்கல்ல மாட்டியிருப்பான்.. நான் ஓரளவுக்கு அவன் எதுக்காக அங்க வந்திருப்பான்னு கெஸ் பண்ணி இருக்கேன்… ஆனா அதை அவன் வாயால சொல்லாம உங்க கிட்ட சொல்றதுக்கு நான் தயாராக இல்லை..”
மலர் சொன்னதை கேட்டவனுக்கு நிஜமாகவே தான் பெரிய தவறு எடுத்து விட்டோம் என்றும்.. தன் தம்பிக்கு பெரிய கொடுமையை செய்து விட்டோம் என்றும் தெளிவாக புரிந்தது வீரனுக்கு..
தலையில் அடித்துக் கொண்டு “அய்யோ மதி.. எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தைகளை பேசி அவன் மேல பழி போட்டுட்டேன்.. அவனை ரொம்ப அசிங்கமா பேசிட்டேனே மதி… நான் எல்லாம் ஒரு அண்ணனா இருக்கவே லாயக்கில்லை.. அவனுக்கு பதிலா கடவுள் என் உயிரை எடுத்துக்கட்டும்.. நான் தான் அவசரப்பட்டு தப்பு பண்ணேன்.. என் தம்பி உயிரோட நெறைய வருஷம் இருக்கணும் மதி..”
அவள் அவள் கையை பிடித்துக் கொண்டு அதில் தலையை வைத்து குலுங்கி குலுங்கி அழ அதற்கு மேல் மதியால் அவன் மீது இருந்த கோபப் பார்வையை தொடர முடியவில்லை..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 65
என்ன இருந்தாலும் அவள் உயிருக்கு உயிராய் விரும்புபவன் ஆயிற்றே.. அவன் குழந்தை போல் கதறி அழுவதை பார்த்துக்கொண்டு எப்படி அவளால் அமைதியாக இருக்க முடியும்..?
அதற்கு மேல் கோவத்தை இழுத்து பிடிக்க முடியாமல் அவன் முதுகில் தடவி கொடுத்து “இந்தர் வந்திடுவான்.. கவலைப்படாதீங்க.. அவன் நிறைய வருஷம் உங்க தம்பியா சந்தோஷமா இருப்பான்..” என்று ஆறுதலாய் பேசினாள்..
மலரழகி அப்போதுதான் நினைவு வந்தவளாக “அப்பா எப்படி இருக்காரு அக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க..?”
“அப்பாக்கு ஹார்ட் அட்டாக் மலரு.. அவருக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு..”
“எல்லா விஷயமும்னா?” மலரழகி பதறிப் போய் கேட்க “எல்லா விஷயமும்னா எல்லா விஷயமும் தான்.. நீ தீரனை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சது.. அதுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டது.. இது வரைக்கும் நாங்க புருஷன் பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு இருக்கறது.. எல்லாம் தான்..”
“ஐயோ அக்கா அது தெரிஞ்சிருந்தா அப்பாவால தாங்கி இருக்கவே முடியாதேக்கா.. இந்த விஷயம் எல்லாம் அவருக்கு தெரியக்கூடாதுன்னு தானே நானும் இந்தரும் இவ்வளவு பாடுபட்டோம்..” அவள் பேச பேச மதியு தீரனும்ம் புருவம் சுருக்கி அவளை பார்த்தார்கள்..
“என்ன சொல்ற மலரு.. எது தெரிய கூடாதுன்னு நீயும் இந்தரும் என்ன பாடு பட்டீங்க? இப்பயாவது உண்மையை சொல்லுடி.. என்னடி நடந்துச்சு..? அந்த புள்ள குத்துயிரும் குலையுயிருமா கெடக்குது அங்க.. இதுக்கு மேல மறைக்காத.. உண்மையை சொல்லித் தொலை..” அவளை பிடித்து உலுக்கி கேட்டாள் மதி..
தீரனும் “என்ன மா மலரு சொல்ற..? இன்னும் என்ன ரகசியம் வச்சிருக்கீங்க.? எங்க கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா..? ஏன்மா.. என்ன தான் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கு நடுவுல..”
“மாமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு பிரச்சனையும் இல்லை.. அந்த சேகர் மறுபடியும் இந்தருக்கு ஃபோன் பண்ணான்.. நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறீங்கன்ற விஷயத்தை அவன் எங்களுக்கு ஏற்கனவே உங்க கல்யாணத்து அன்னைக்கே சொல்லி இருந்தான்..”
அதை கேட்டு அதிர்ந்து போனார்கள் இருவரும்.. “கல்யாணத்து அன்னிக்கேவா? நாங்க முடிவு பண்ணது அவனுக்கு எப்படி தெரியும்?”
தீரன் திகைத்துப் போய் கேட்க “மாமா.. அன்னிக்கு அந்த ஹோட்டல்ல நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி நடிச்சிட்டு திரும்பி வந்தீங்க இல்ல..? அந்த கார்ல ஒளிஞ்சிருந்து உங்களோடயே வந்து நீங்க பேசும்போது அத்தனையும் கேட்டுட்டான்.. கல்யாணத்து அன்னிக்கு உங்க கல்யாணம் முடிஞ்சப்புறம் எங்களை வந்து பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி உங்க ரெண்டு பேரையும் பிரிக்கிற வேலைய பார்க்க சொன்னான் எங்களை..”
தீரனாலும் மதியாலும் அவள் சொன்ன விஷயங்களை நம்பவே முடியவில்லை..
“ஆமா.. இவ்ளோ நடந்து இருக்கு.. ஏன் மலரு நீங்க ரெண்டு பேரும் வாயே தொறக்கல.. என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல..? அவனை ஒரு வழி பண்ணி இருப்பேன்..”
தீரன் பல்லை கடித்துக் கொண்டு பேச “இல்ல மாமா.. அப்போ அதுக்கு அவசியம் வரல.. நாங்க ரெண்டு பேரும் முதல்ல அவன் சொன்னதை நம்பவே இல்லை.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிறீங்க.. அவன் மதி அக்காவை விரும்புனதினால அவளை அடையணும்ங்கிற வெறியில இந்த மாதிரிலாம் பேசிட்டு இருக்கான்னு சொல்லி அவனை நல்லா திட்டி தான் அனுப்பிச்சு விட்டோம்.. ஆனா அவன் அதோட அடங்கிடுவான்னு பார்த்தா மறுபடியும் இந்தருக்கு நேத்து ஃபோன் பண்ணி இருந்தான்..”
“இப்ப எதுக்கு அவன் இந்தருக்கு ஃபோன் பண்ணான்..” தீரன் கேட்க “அந்த நாயி நீங்க புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறது பத்தி எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்னு பயமுறுத்தி ப்ளாக்மெயில் பண்ணி இருக்கான்.. ஆனா அதை எப்படி பண்ண போறான்னு சொல்லல.. அதுக்காக தான் இந்தர் நேத்து ராத்திரி 12:00 மணிக்கு என் ரூமுக்கு வந்திருக்கான்.. நீங்க அப்பவும் அவனை எந்த விஷயத்தையும் சொல்ல விடாம அவன் என் ரூமுக்கு வந்ததை பாத்து அவனை அடிச்சு மிரட்டி இருக்கீங்க..”
அவள் சொன்னதைக் கேட்டு தீரன் அப்படியே ஸ்தம்பித்து போய் இருக்க மதியழகி அவனை மேல் கண்ணால் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
தான் அவனை எள்ளளவும் நம்பாமல் எவ்வளவு கேவலமாக நினைத்து இருக்கிறோம் என்பது தீரனுக்கு புரிய ஒவ்வொரு முறை அவனைக் கேள்வி கேட்கும் போது அவன் எவ்வளவு துடித்திருப்பான் என்றும் புரிந்தது அவனுக்கு..
அவனைக் கேள்வி கேட்ட தன் நாவை சுட்டு பொசுக்கிக் கொள்ளலாமா என்ற எண்ணம் கூட தோன்றியது அவனுக்கு..
மலரழகி தொடர்ந்தாள்.. “நீங்க மிரட்டிட்டு போன அப்புறமும் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியறதை எப்படியாவது தடுக்கணும்ன்னு அவன் மறுபடியும் எனக்கு கால் பண்ணான் மாமா.. அப்பதான் அவன் என்ன பண்ணப் போறான்னு தெரிஞ்சுக்கறதுக்காக நாங்க ஒரு பிளான் போட்டோம்.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி நான் இன்னும் தீரா மாமாவை கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டுட்டு தான் இருக்கேன்.. அதனால நீ இந்தர் கிட்ட சொன்ன மாதிரி அவங்களை பிரிக்கிறதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணுவியா ன்னு கேட்டேன்..”
இப்போது அதிரும் முறை மதியழகியினுடையதாகியது..
“அப்போ நேத்து நீ அந்த சேகர் கிட்ட பேசுனதெல்லாம் நடிப்பா..?”
“என்னக்கா சொல்ற? நான் பேசினதை நீ கேட்டியா?”
“ஆமான்டி.. நீ சேகரோட ஃபோன்ல பேசினதை நான் கேட்டேன். நீ இன்னும் உன் தீரா மாமாவை மறக்கலைன்னு நினைச்சுக்கிட்டு.. ஐயோ நான் என்னென்னவோ பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சிடு மலரு.. சத்தியமா இப்படி ஒரு விஷயம் இதுக்கு பின்னாடி நடந்து இருக்கும்ன்னு எனக்கு தெரியாதுடி.. உன்னை பத்தி ரொம்ப தப்பா நினைச்சு தீரா கிட்டயும் அதை சொல்லி புலம்புனப்போ தான் அப்பாவும் அதைக் கேட்டு.. ஐயோ.. இவ்வளவு பெரிய விபரீதம் நடந்து போச்சே.. என்கிட்ட சொல்லிட்டு செய்யக்கூடாதா..மலரு.. இப்படி நீங்களாவே ஏதோ செய்ய போய் எல்லாரோட வாழ்க்கையையும் சிக்கல் ஆக்கிவிட்டு இருக்கீங்களே..”
அவள் அழுது புலம்ப மலரோ “அப்படின்னா.. எப்படிக்கா உன்னால இப்படி யோசிக்க முடிஞ்சுது..? நான் நீ வளர்த்த பொண்ணுக்கா.. நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒருத்தரை உன்கிட்ட இருந்து பிரிச்சு நான் அடையணும்னு நினைப்பேன்னு எப்படிக்கா நீ நம்புன.. அந்த சேகர யாரோ எவனோ.. அவன் கூட ஃபோன் பண்ணதும் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா..? நீயும் அந்த இந்தர் மாதிரி என்னை மிரட்டுறதுக்கு ஃபோன் பண்ணியான்னு கேட்டான்.. அவனுக்கு கூட நான் மாமாவை உன் கிட்ட இருந்து பிரிப்பேன்னு நம்பிக்கை வரல.. எவ்வளவு தடவை என் கிட்ட நீ நிஜமாதான் சொல்றியானு கேட்டான் தெரியுமா? ஆனா நான் பொறந்ததிலிருந்து என்னை தூக்கி வளர்த்தவ அக்கா நீ.. நீ எப்படி கா அதை நம்புன.. நீ இதை சொன்னதனால தான் அப்பா வேற நெஞ்சு வலி வந்து விழுந்துட்டாரா.? அப்போ அப்பாவும் இதை நம்பி இருக்காரு.. கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு அக்கா.. சந்தோஷமா இருக்கு.. மனசுல அப்படியே யாரோ ஒரு அண்டா நிறைய ஐஸை எடுத்து ஊத்துன மாதிரி இருக்கு.. ரொம்ப தேங்க்ஸ் அக்கா..”
அவள் விரக்தியாய் பேசிக் கொண்டே போக மதியழகிக்கோ “இது என்ன விபரீதத்தில் போய் முடிய போகிறதோ?” என்று கலக்கமாய் இருந்தது..
“மலரு.. நீ அதுக்கு முன்னாடியுமா தீரன் கிட்ட நடந்துக்கிட்ட விதம்..”
மதியழகி இழுக்க “ஓ அப்ப அப்பலருந்தே என் மேல சந்தேகம் வந்துடுச்சா அக்கா உனக்கு.. சூப்பர்கா.. உனக்காக தான் அக்கா தீரா மாமா கிட்ட ரொம்ப க்ளோசா இருக்கிற மாதிரி நடிச்சேன்.. நீங்க ரெண்டு பேரும் நடிக்கிறீங்கன்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சிருச்சு.. சேர்க்க சொன்னது உண்மைதான் உங்க கல்யாணம் நடந்த அடுத்த நாளே நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. ரெண்டு பேருக்குள்ள ஒரு புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல இருக்க வேண்டிய அன்னியோன்னியம் எதுவுமே இல்லை.. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிச்சயமா காதல் இருக்குன்றதை மட்டும் நான் புரிஞ்சுகிட்டேன்..”
அவள் சொன்னதை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் கலங்கி போய் இருந்த கண்களோடு பார்த்துக் கொண்டனர்..
“உங்க ரெண்டு பேரையும் எப்படியாவது உங்க மனசுல இருக்குற அந்த சின்ன தடையை உடைக்க வெச்சு சேர்த்து வைக்கணும்ங்கிறதுக்காக தான் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன்.. அப்ப கூட நீ என்னை சந்தேகப்படுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அக்கா.. தீரா மாமா மேல எல்லாரை விடவும் உனக்கு தான் உரிமை அதிகம்னு நினைச்சு அதுக்காக சண்டை போடுவேன்னு தான் எதிர்பார்த்தேன்.. ஆனா நீ என்னை சந்தேகப்பட்டு இருக்க இல்ல?”
மதியழகியோ தான் செய்ததை எண்ணி கூனி குறுகிப் போனாள்..
“விடுக்கா.. இனிமே இதை பத்தி எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.. இனிமே நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு சாரி சொன்னாலும் நொறுங்கிப் போய் இருக்கிற எங்க மனசு மறுபடியும் முழுசா மாறி வரப்போறதில்லை.. இப்ப என்னால புரிஞ்சுக்க முடியுது.. இந்தர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தான்னு.. நீ இப்ப சொன்ன விஷயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நானும் அதே மாதிரி தான் உடைஞ்சு போய் இருப்பேன்.. இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா அக்கா? உயிர் இருந்தும் இல்லாத மாதிரி இருக்கு..” இப்படி பேசியவள் சட்டென எழுந்து போய் அவர்களிடமிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டாள்..
தீரனும் மதியும் தலையில் கை வைத்த படி அவர்களுக்கு பின்னே இருந்த கதிரையில் அப்படியே உயிரற்ற சிலைகளாய் அமர்ந்தனர்..
இந்தர் இருந்த அறையில் இருந்து வெளிவந்த மருத்துவர் “இந்தரோட அட்டெண்டர் யாரு..?” என்க அவர் அருகில் சூழ்ந்து நின்று இருந்தார்கள் மூவரும்..
“என்ன ஆச்சு டாக்டர்? இந்தருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே..?”
படபடக்கும் குரலில் தீரன் கேட்க “ஆபத்தெல்லாம் எதுவும் இல்ல.. ஹாஸ்பிடல்க்கு சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க.. இல்லனா கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் நிறைய பிளட் லாஸ் ஆகி இருக்கும்.. அது மட்டும் இல்லாம அவர் பிளீடிங் கண்ட்ரோல் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி இருக்காங்க.. அதனால அவர் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை.. அவர் ஒரு டூ ஹவர்ஸ்ல கண் முழிச்சிருவாரு.. அதுக்கப்புறம் நீங்க போய் அவரை பார்க்கலாம்.. ஹீ இஸ் அவுட் ஆப் டேஞ்சர்.. யூ நீட் நாட் ஒர்ரி..”
சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து போய்விட்டார்.. அவர் அப்படி சொல்லிய பிறகு தான் மூவரிடம் இருந்தும் ஒரு நிம்மதி பெருமூச்சு வெளி வந்தது..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 66
மருத்துவர் சொன்னதை கேட்டு அங்கிருந்த மூவரின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது..
தீரன் மலரழகியின் கையைப் பிடித்து தன் நெற்றியில் வைத்து “மலர்.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல.. நீ செஞ்ச உதவி எவ்வளவு பெருசுன்னு உனக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா நீ இந்தர் உயிரை காப்பாத்தி என் உயிரையும் காப்பாத்தி இருக்க.. என்னை பொறுத்த வரைக்கும் நீ மனுஷ உருவத்தில வந்த கடவுள்.. அவனுக்கு ஏதாவது நடந்திருந்தா.. ஐயோ.. அதை நினைச்சு பார்க்கும்போதே எனக்கு குலை நடுங்குது.. வாழ்நாள் முழுக்க உன்னோட இந்த உதவியை நான் மறக்கமாட்டேன்.. உனக்கு நான் ரொம்ப கடன் பட்டுருக்கேன் மலர்.. நீ இன்னைக்கு செஞ்ச உதவிக்கு பதிலா என் உயிரை வேணும்னாலும் கேளு.. கொடுக்கிறேன்”
அவன் குரல் தழுதழுக்க அவள் கைகளில் கண்ணீரால் அபிஷேகம் செய்தபடி பேசிக் கொண்டே போக “மாமா.. நான் டாக்டராக போறவ. இது என்னோட கடமை.. எதிரியாவே இருந்தாலும் உயிருக்கு போராடும் போது ஒரு டாக்டரா அவரை காப்பாத்துவேன்.. இந்த உதவிக்கு பிரதிபலனா நீங்க ஏதாவது செய்யணும்னு நெனச்சா தயவு செஞ்சு இனிமே எந்த காலத்திலயும் உங்களை சுத்தி இருக்கிற நல்ல மனுஷங்க மேல சந்தேக படாதீங்க.. இதுதான் நீங்க எனக்கு கொடுக்கிற பெஸ்ட் ரிவார்டா இருக்கும்..”
வாய்ப்பு கிடைத்த போது ஈட்டி போன்ற வார்த்தைகளால் குத்தி கிழித்தாள் தீரனை மலரும்..
அதே நேரம் தமிழ்வாணனின் அறையில் இருந்து செவிலி வந்து அவர் கண்விழித்து விட்டதாக சொல்லவும் மூவரும் அவர் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள்..
மதியையும் தீரனையும் பார்த்த தமிழ்வாணனின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள அடுத்ததாய் உள்ளே நுழைந்த மலரை பார்த்தவர் ருத்ரமூர்த்தி ஆகி போனார்..
முகம் இறுகி கண்கள் சிவக்க “ஏய்.. நீ எங்கடி வந்த..?! வெளியே போடி.. என் கண்ணு முன்னாடி நிக்காத.. மரியாதையா போயிரு.. உன்னை என் மகன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.. இப்படி ஒரு கேவலமான வேலையை பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டதும் இல்லாம இப்போ மதியோட வாழ்க்கையையும் கெடுத்துட்டு நிக்கிறியேடி.. இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத.. எங்கேயாவது போய் செத்து தொலை..”
மலரோ தன் தந்தை பேசியது கேட்டு விக்கித்து போய் நின்றிருந்தாள்..
அவர் அதிகமாக கத்த மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அவருக்கு மறுபடியும் நெஞ்சு வலி வருவது போலாக அங்கே வந்த செவிலியர் “ஏன்மா.. வெளியில அவ்வளவு தூரம் சொன்னேன் இல்ல..? அவரை டென்ஷன் படுத்தாம இருங்கன்னு.. உங்களுக்கு எல்லாமா சொன்னா புரியாதா? மறுபடியும் அவருக்கு அட்டாக் வந்தா உயிருக்கே ஆபத்தாயிடும்.. முதல்ல எல்லாரும் வெளில போங்க..”அந்த செவிலி அவர்களிடம் கரோராய் பேசி அவர்களை அங்கிருந்து துரத்தினாள்..
மதியழகி அந்த செவிலியிடம் “ஒரு அஞ்சு நிமிஷம்.. நாங்க எங்க அப்பா கிட்ட பேசிட்டு போயிடறோம்.. ப்ளீஸ் சிஸ்டர்..” என்று கெஞ்சினாள்..
எப்படியாவது மலரழகியின் மீது எந்த தவறும் இல்லை என்று அவருக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாள் அவள்..
“சரி.. ஒவ்வொருத்தரா வந்து பேசுங்க.. மொத்தமா இங்க கூட்டம் போட்டுட்டு நிக்க வேண்டாம்.. அவருக்கு உடம்பு சரியில்லமா.. ரொம்ப எமோஷனல் ஆக கூடாது.. பார்த்துக்கங்க..”
அந்த செவிலி திட்டவட்டமாய் சொல்ல தமிழ்வாணன் அவரிடம் “சிஸ்டர் இவங்க ரெண்டு பேரும் என்னோட பேசட்டும்.. அந்த மலரை முதல்ல வெளிய அனுப்புங்க.. அவ முகத்தை பார்க்க கூட எனக்கு இஷ்டம் இல்ல.. ஒருவேளை உங்களால அவளை அனுப்ப முடியாதுன்னா நான் இந்த ஹாஸ்பிடல்ல விட்டு வெளியில போயிடுறேன்.. அவளை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகி என் பக்கத்துலயோ என் பொண்ணு பக்கத்துலையோ இருக்க கூடாது..”
அவர் பேசியதைக் கேட்டு மூவருமே வாய் அடைத்துப் போனார்கள்.. உண்மை தெரியாமல் படபடவென அவர் பேசி விட்டார்.. ஏற்கனவே நொறுங்கிப் போயிருந்த மலரழகி இவர் பேசியதெல்லாம் கேட்ட பிறகு இன்னும் என்ன செய்வாளோ என்று சிறிது அச்சமாகவே இருந்தது மதிக்கு..
மலரழகியோ அந்த செவிலிக்கு ரொம்பவும் வேலை வைக்காமல் தானே அந்த அறையை விட்டு அமைதியாய் கண்ணீர் நிறைந்த கண்களோடு வெளியே சென்று இருந்தாள்..
அவள் பின்னாலேயே சென்ற தீரன் “மலர் உங்க அப்பாக்கு ஒன்னும் தெரியாது.. அதனால கோவத்தில ஏதோ பேசிட்டாரு.. நீ தப்பா நினைக்காதே.. ப்ளீஸ்..”
“ஏன் மாமா.. உண்மை தெரியறது.. தெரியாதது இருக்கட்டும் மாமா.. அவரோட பொண்ணு தானே நானு..? என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா மாமா.. ஆமாம் மாமா.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி காலேஜ் கட் அடிச்சிட்டு உங்களை பார்க்க வந்தேன்.. ஆனா என் காலேஜ்ல போய் நான் எப்படி படிப்பேன்னு கேட்டு பாருங்க மாமா.. அந்த ஒரே ஒரு நாள் உங்க ஷூட்டிங் பார்க்க வந்தவ அக்கா எந்த காரணத்தை கொண்டும் காலேஜ் கட் அடிக்க கூடாதுன்னு சொன்னதுக்காக ஒரு நாள் கூட நான் காலேஜ் கட் அடிச்சது கிடையாது.. என்னை பொறுத்த வரைக்கும் என் அக்கா வார்த்தைக்கு நான் அவ்வளவு மதிப்பு கொடுத்துக்கிட்டு இருந்தேன்.. ஏன் மாமா காலேஜ் டைம்ல எவ்வளவோ பொண்ணுங்களுக்கு கிரஷ் இருக்கிறது இல்லையா? தன்னோட ஃபேவரிட் ஹீரோவோட ஷூட்டிங் நடக்குதுன்னா காலேஜ் கட் அடிச்சிட்டு போய் பாக்குற பொண்ணுங்க இல்லையா? சாக்லேட் பாய்ன்னு சொல்லி அவங்க மேல பைத்தியமா திரியறது இல்லையா..? ஆனா அதுக்கப்புறம் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் என்னோட ஃபர்ஸ்ட் க்ரஷ்னு சொல்லிக்கிறது இல்லையா? அந்த மாதிரி தான் மாமா நான் உங்களை பார்த்தேன்.. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு சூப்பர் ஹீரோ.. ஆனா எப்ப நீங்க எங்க அக்காவை கல்யாணம் பண்ணிட்டீங்களோ அதுக்கப்புறம் உங்களை என் மாமாவா.. இன்ஃபாக்ட் என்னோட வெல்விஷரா என்னோட ஒரு கைடா தான் பார்த்து இருக்கேன்.. உங்க மேல இருந்த ஒரு பிரமிப்பு மட்டும் எனக்கு போகல.. அது இன்னும் கூட அப்படியே தான் இருக்கு.. ஆனா அதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனப்புறம் நான் உங்களை எங்க அக்கா கிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி அவங்களால நினைக்க முடிஞ்சது மாமா..? இல்ல மாமா.. நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் நான் அதை ஒத்துக்க மாட்டேன்..”
“இல்ல மா.. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு.. நீ எங்களுக்காக பண்ண ஒவ்வொரு வேலையும் உங்க அக்காவை உன் மேல சந்தேகப்பட வெச்சிடுச்சு.. உங்க அப்பா ஒருவேளை நீ அந்த சேகரோட பேசறதை கேட்டிருந்தா உன்னை சந்தேகப்பட்டு இருப்பாரான்னு எனக்கு தெரியாது.. ஒருவேளை நேரடியா உன்கிட்ட கேட்டு கிளியர் பண்ணி இருந்திருக்கலாம்.. ஆனா நீ அந்த சேகர் கிட்ட அப்படி பேசினேன்னு சொல்லி நீ மனசுல இன்னும் என்னை அடையணும்னு நினைச்சு இருக்கேன்னு சொன்னது உங்க அக்கா.. மதியே அப்படி சொல்லவுந்தான் அவர் சந்தேகமே இல்லாம உன்னை தப்பா நினைச்சு இருக்காரு..”
“இல்ல மாமா.. யார் என்ன சொன்னாலும் இப்படி எல்லாம் நான் பண்ணுவேனான்னு யோசிச்சு இருந்தாலே அவருக்கு தெளிவாகி இருக்குமே மாமா.. ஹூம்.. விடுங்க மாமா.. எல்லா மனுஷங்களுமே இப்படித்தான் போல இருக்கு.. மதி அக்கா அவரு பொண்ணுன்னா நானும் அவரு பெத்த பொண்ணு தானே மாமா? அப்போ மதியக்கா சொன்னாங்கன்னு என்னை பத்தி அவர் எப்படி மாமா அவ்வளவு தப்பா நினைக்கலாம்? இவ்ளோ பேசுறீங்களே என்னை கூப்பிட்டு எங்க அப்பா ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல..? மதி இப்படி சொல்றாளே.. உண்மையான்னு.. கேட்டாரா..? இல்லையே மாமா.. இப்ப அவர் படுத்திருக்கிற ரூமுக்குள்ள போன உடனே என்னை ஏதோ ஒரு கேவலமான புழு பூச்சியை பார்க்கிற மாதிரி பார்த்து இல்ல விரட்டி விட்டிருக்கிறார்.. நான் என்ன தப்பு பண்ணேன் மாமா..? உங்களுக்கும் கல்யாணம் ஆகல.. நான் ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு.. உங்க மேல இருந்த இன்ஃபெக்ஷூவேஷனை காதல்னு நினைச்சுட்டு உங்க பின்னாடி சுத்தினேன்.. அது என்ன அவ்வளவு பெரிய பாவமா அதுக்கு எனக்கு எதுக்கு மாமா எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை..?”
விரக்தியாய் சொல்லி சிரித்தவளை கவலையோடு பார்த்திருந்தான் தீரன்..
“சரி மலரு.. எனக்கு புரியுது.. உங்க அக்கா அப்பா ஏன் நான் கூட நீ அந்த மாதிரி தப்பு பண்ணி இருப்பியோன்னு ஏதோ ஒரு நேரத்துல நம்பிட்டேன்.. எல்லாரும் உன்ன பத்தி தப்பா நினைச்சது உனக்கு ரொம்ப வலிக்கும்.. எனக்கு தெரியும்.. ஆனா எனக்கு நீ ஒரே ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கணும்.. “
“என்ன மாமா?”
இந்தர் மாதிரி எந்த தப்பான முடிவையும் எந்த காரணத்தைக் கொண்டும் உன் வாழ்க்கையில எடுக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு..”
அவன் கை மேல் கை வைத்து சத்தியம் செய்தவள் “நிச்சயமா அந்த மாதிரி ஒரு வேலையை நான் பண்ண மாட்டேன் மாமா.. ஆனா அதுக்காக இந்த வார்த்தைகளை சகிச்சுக்கிட்டு நான் அட்ஜஸ்ட் பண்ணி போவேன்னு எதிர்பார்க்காதீர்கள்.. அடுத்து நான் என்ன பண்ணுவேன்னு தெரியல.. ஆனா நிச்சயமா இனிமே யாருக்கும் பாரமா இந்த மலரழகி இருக்க மாட்டேன்..”
அவள் பேச்சு போகும் திசை தீரனுக்கு அதிர்வை தந்தது..
“யாருக்கும் பாரமா இருக்க மாட்டேனா என்ன சொல்ல வர மலரு..?”
“நான் எங்கேயாவது வெளியில போய் தனியா இருக்க போறேன் மாமா.. என் டாக்டர் படிப்பு முடிக்கிற வரைக்கும் தனியா இருந்து டாக்டராகி என் ஃபீல்டில் சாதிச்ச அப்புறம் தான் நான் மறுபடியும் அந்த வீட்டுக்கு வருவேன்.. நிச்சயமா நான் சாகமாட்டேன் மாமா.. நல்லபடியா வாழ்ந்து காட்டுவேன்.. அதுவும் இண்டிபெண்டன்டா என் கால்ல நான் நின்னு காட்றேன்.. இது இந்த மலரழகி உங்களுக்கு செய்ற சத்தியம்..”
அவள் சொன்னதைக் கேட்டு ஒரு புறம் அவள் தனியாக இருக்கிறேன் என்று சொல்கிறாளே என்று வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் தீரனுக்கு அவளின் தன்னம்பிக்கையை எண்ணி மகிழ்ச்சியாக தான் இருந்தது.. அவளை அந்த நேரம் பிரமிப்பாய் தான் பார்த்து இருந்தான் தீரன்..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 67
தமிழ்வாணனின் அருகில் அமர்ந்திருந்த மதியழகி “அப்பா.. ப்ளீஸ்பா.. மலரை எதுவும் சொல்லாதீங்க.. என்னால தான் எல்லாமே தப்பா ஆயிடுச்சு.. நான் தான் அவளை தப்பா புரிஞ்சுகிட்டேன்.. நான் தீரன் கிட்ட மலரை பத்தி அப்படி சொன்னப்போ நீங்க எவ்ளோ மனசு உடைஞ்சு போயிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா அது எல்லாமே என்னோட தப்பு தான் பா.. மலர் மேல எந்த தப்பும் இல்லை.. என்னோட அழகியா தான் பா அவ இருக்கா..” முகத்தில் வருத்தத்தின் சாயலோடு பேசிக் கொண்டிருந்தாள் அவள்..
“என்னம்மா சொல்ற? இவ்ளோ நடந்த அப்புறமும் அந்த கேடு கெட்டவளுக்கு சப்போர்ட் பண்ற.. அவ உன்னையும் மாப்பிள்ளையும் பிரிச்சு..” என்று ஏதோ ஆரம்பித்தவர் வாயில் கை வைத்து தலையை இடவலமாய் ஆட்டி மறுத்த மதி “இல்லப்பா.. அவ எங்களை பிரிக்கணும்ன்னு நினைக்கல.. புருஷன் பொண்டாட்டியா நடிச்சிட்டு இருந்த எங்களை நிஜமான புருஷன் பொண்டாட்டியா மாத்தணும்னு தான் முயற்சி செஞ்சிருக்கா..”
“ஆனா அந்த சேகரோட அவ பேசுனதை கேட்டேன்னு நீ சில விஷயங்களை சொன்னியேம்மா.. அவன் கிட்ட உன்னையும் மாப்பிள்ளையும் பிரிக்கிறது பத்தி தானே சொல்லிட்டு இருந்தானு சொன்னே..” அவருக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடாய் இல்லை..
“இல்லப்பா.. அந்த சேகர் எங்களுக்குள்ள நடந்த எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட வந்து சாட்சியோட சொல்லுவேன்னு இந்தரை பயமுறுத்தி இருக்கான்.. அவனோட அந்த பிளானை தவிடு பொடி ஆக்கணும்னு தான் மலர் அப்படி பேசி அவன் என்ன ப்ளான்ல இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இருக்கா.. அது தெரியாம அவ பேசுனது கேட்டு நான்தான் பா அவளை ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்.. இதுக்கு மேல அவ மேல எதுவும் தப்பு சொல்லாதீங்கப்பா.. அவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா.. நம்ம ரெண்டு பேரும் வளர்த்த பொண்ணு பா அவ.. அவ மேல நாமளே நம்பிக்கை வெக்காம பேசுனது ரொம்ப கொடுமை பா.. தெரிஞ்சோ தெரியாமயோ அந்த கொடுமையை நம்ப அவளுக்கு செஞ்சிருக்கோம் பா..”
மதி சொன்னதை கேட்டவர் “அய்யோ கடவுளே.. அந்த பொண்ணை என்னென்னவோ பேசிட்டனேம்மா.. அவ எவ்வளவு நொறுங்கிப் போயிருப்பா.. என் மூஞ்சிலேயே முழிக்காதன்னு சொல்லிட்டனே மா.. சேகரை பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா அதுக்கான வழியை நானே சொல்லி இருப்பேனே..”
“உங்ககிட்ட உண்மையை சொல்ற தைரியம் அவளுக்கு வந்து இருக்காது பா.. ஏன் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி படிக்கிற வயசுல சினிமால ஸ்டன்ட் மாஸ்டரா இருக்கற தீரன் பின்னாடி காலேஜ் கட் அடிச்சிட்டு லவ்வுனு சொல்லிட்டு அவ சுத்தினான்னு எப்படி பா அவ உங்ககிட்ட நேரடியா சொல்லுவா.. அவ வயசு வேகத்துல அப்ப ஏதோ பண்ணிட்டா.. ஆனா தீரன் என்னோட புருஷனா ஆனப்புறம் அவ அவரை என்னோட புருஷனா மட்டும்தான் பா பார்த்திருக்கா.. அவ பழைய நினைப்பை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு இருக்காப்பா.. நான் தான் அவளை சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு பழைய நினைப்பை எனக்குள்ள உயிரோட வச்சிருந்து இருக்கேன்..”
“அம்மாடி மதி.. அப்படி சொல்லாதடா.. உன் மேல எந்த தப்பும் இல்லடா.. தீரன் மாப்பிள்ளையை அவ உன் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணாங்கறதனால கல்யாணத்துக்கு அப்புறம் அவரோட அவ இந்த மாதிரி நெருக்கமா பேசும் போது நீ நினைக்கிற மாதிரி தான் யாராயிருந்தாலும் நினைச்சிருப்பாங்க.. அதுல எதுவும் பெரிய தப்பு இருக்கிறதா எனக்கு தெரியல.. ஆனா தீரா மாப்பிள்ளையும் நீயும்.. ஏன் நான் கூட ஒரே மாதிரி தப்பை தான் பண்ணி இருக்கோம்.. தீரா மாப்பிள்ளையும் இந்தர் தம்பியை இன்னிக்கு அந்த ஜன்னல் கிட்ட பார்த்தப்போ அவர்கிட்ட அதை பத்தி எந்த விபரமும் கேட்காமலேயே அவர் தப்புதான் பண்ணிட்டாருன்னு முடிவு பண்ணிட்டாரு.. அதே மாதிரி நீயும் நானும் சேகரோட மலர் பேசுனதை பத்தி கேட்டவுடனே அவ கிட்ட என்ன ஏதுன்னு கேட்ருந்தோம்னா இந்த பிரச்சனை அப்படியே முடிஞ்சிருக்கும்.. அதை விட்டுட்டு நம்ம எல்லாருமே மனசுக்குள்ள அவங்கள பத்தி தப்பா நெனச்சிட்டோம்.. சிறுதுளி பெரு வெள்ளம்ன்கிற மாதிரி சின்ன சின்னதா உனக்கும் தீரா மாப்பிள்ளைக்கும் ஏற்பட்ட சந்தேகங்கள் பெரிய வெள்ளமா வந்து நம்ம எல்லாரோட சந்தோஷத்தையும் அழிச்சிட்டு போயிருக்குமா..”
“இப்ப புரியுது பா.. ஆனா இப்ப மலர் ரொம்ப கோவமா இருக்கா.. அது மட்டும் இல்லாம..”
“என்னம்மா..?”
“இந்தர் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான் பா.. இதே ஹாஸ்பிடல்ல தான் பக்கத்து ரூம்ல தான்பா இருக்கான்..”
மலர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார் தமிழ்வாணன்..
“என்னமா சொல்ற? அய்யோ.. அந்த புள்ள தீரா மாப்பிள்ளை அடிச்சப்பவே அப்படியே உயிரே போன மாதிரி இறுக்கமா நின்னுட்டு இருந்தான்மா.. நான் கூட ஒரு நாலு நாளைக்கு அந்த தம்பி வாழ்க்கையையே வெறுத்து வருத்தமா இருப்பார்னு நினைச்சேன்.. இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப சந்தோஷமா எந்த கவலையும் இல்லாம சுத்திக்கிட்டு இருந்த புள்ள.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமாம்மா? எங்க ஆஃபீஸ் வாசல்ல ஒரு நாலஞ்சு பொறுக்கி பசங்க பொண்ணுங்கள வம்பிழுப்பாங்கன்னு நான் சொல்லி இருந்தேன் இல்ல? அந்த பசங்களை இந்தர் தம்பி போட்டு அடிச்சு அவங்க கிட்ட இருந்து ஒரு பொண்ணை காப்பாத்துனாருமா.. அப்படிப்பட்டவர் ஒரு பொண்ணோட பாத்ரூம்ல அவ குளிக்கும் போது.. எப்படிமா.. என்னாலயே நம்ப முடியல.. தீரா மாப்பிள்ளை எப்படி நம்புனாருன்னு எனக்கு தெரியல.. அவர் எதுவுமே கேட்காம இந்தர் தம்பியை அடிச்சப்போ எனக்கே ரொம்ப கஷ்டமா தான்மா இருந்தது.. வாம்மா.. போய் இந்தர் தம்பியை பார்க்கலாம்..”
அவர் சொல்லிக் கொண்டே தன் படுக்கையிலிருந்து எழ முயல “அப்பா உங்களுக்கே உடம்பு சரியில்ல.. நீங்க அலைய வேண்டாம் பா.. இந்தரை எப்படி இருந்தாலும் இப்ப பார்க்க முடியாது.. ரெண்டு மணி நேரம் கழிச்சு அவன் எழுந்த அப்புறம் சொல்றோம்ன்னு சொல்லி இருக்காங்க.. அப்புறம் தான் பா நம்ப அவனை பார்க்க முடியும்.. நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க
. அவனை நாங்க பார்த்துக்கிறோம்..”
“அம்மாடி தெரியாம மலரை என்னென்னவோ பேசிட்டேன்.. அவளை கொஞ்சம் உள்ள அனுப்புறியாடா?”
அவர் ஆதங்கத்தோடு கேட்க “அனுப்புறேன் பா..” அறையை விட்டு வெளியே வந்த மதி மலரழகியிடம் “அழகி..” என்று அழைக்க அந்த அழைப்பில் நெகிழ்ந்து போனாள் மலரழகி..
“அக்கா என்னை அழகின்னாக்கா கூப்பிட்டே..? ப்ளீஸ் கா.. இன்னொரு வாட்டி கூப்பிடேன்..”
“நீ என்னோட பழைய அழகி தான்டி.. நீ மாறல.. கொஞ்ச நாள் எதோ தெரியாம வழி தவறி போக பார்த்த.. ஆனா என் அழகி என்னோட பழைய அழகியா திரும்ப கிடைச்சிட்டா.. இனிமே அவ அழகியா மட்டும்தான் இருப்பான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு..”
மதியை இறுக்கமாய் கட்டி அணைத்துக் கொண்டாள் மலரழகி..
“தேங்க்ஸ் கா.. எங்க நீ என்னை கடைசி வரைக்கும் அழகின்னு கூப்பிடவே மாட்டியோன்னு பயந்துகிட்டு இருந்தேன்..” உணர்ச்சிவயப்பட்டு பேசினாள் அவள்..
“எனக்கு மட்டும் இல்ல.. அப்பாவுக்கும் நீ இனிமே எப்பவும் மாற மாட்டேன்னு நம்பிக்கை வந்துடுச்சு.. உன்னை தப்பா நினைச்சதுக்காக அவரும் ஃபீல் பண்ணிட்டு இருக்காரு டி.. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன்.. அவரு உன்னை அப்படி பேசினதுக்காக ரொம்ப வருத்தப்படறாருடி.. போய் அவரை பார்த்து கொஞ்சம் சமாதானமா பேசிட்டு வா..”
“இல்லக்கா வேண்டாம்.. இனிமே அவரை நான் என் படிப்பை முடிச்சுட்டு ஒரு டாக்டரா தான் பார்ப்பேன்..”
மதியழகியோ அவள் சொல்வது ஒன்றுமே புரியாமல் “என்ன சொல்ற மலரு..? ஒரே வீட்ல இருந்துகிட்டு அவரை எப்படி நீ பாக்காம இருக்க முடியும்?”
“கரெக்டு தான்.. ஒரே வீட்டில இருந்தா அவரை.. உன்னை.. எல்லாரையும் பார்க்காம இருக்க முடியாது.. ஆனா அந்த வீட்ல இல்லனா வெளியில எங்கேயாவது இருந்தேன்னா பார்க்காம இருக்கலாம் இல்ல..?”
அவள் சொன்ன விஷயத்தின் அர்த்தம் மூளையில் உரைத்த நேரம் முகம் சுருக்கி அவளை கவலையோடு பார்த்தவள் தீரன் பக்கம் திரும்பி “என்ன தீரா சொல்றா இவ? வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொல்றா.. இவளுக்கு யாரை தெரியும்.. எங்க போய் இருப்பா? என்ன மலர் பேசுற நீ? அப்பா ஏதோ கோபத்தில் சொல்லிட்டதுக்காக உனக்கு எதுக்கு இவ்வளவு வீராப்பு? நம்ம அப்பாதானே.. அவருக்கு நம்மளை திட்டறதுக்கு உரிமை இல்லையா?”
“இருக்குக்கா.. அவருக்கு நம்மளை திட்டறத்துக்கு கண்டிக்கிறதுக்கு எல்லாத்துக்கும் உரிமை இருக்கு.. ஆனா தப்பு பண்ணி திட்டு வாங்குறதுக்கும் தப்பே செய்யாம திட்டு வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லக்கா..? அதுவும் அவர் சாதாரணமா ஒன்னும் திட்டலையே.. என் மூஞ்சிலேயே முழிக்காதே செத்துப்போன்னு சொன்னாரேக்கா.. அவர் சொன்னதை கேட்டு இந்தர் மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு நான் செத்துப் போயிருந்தா அதுக்கப்புறம் இப்படி உன்னால என்கிட்ட வந்து அப்பாவை பாருன்னு சொல்ல முடியுமா? கண்ணாடி பாத்திரத்தை கீழே போட்டு உடைக்கிற மாதிரி வார்த்தையால என்னை ரொம்ப உடைச்சுட்டாருக்கா.. என்னை அவர் பொண்ணுன்னு பெருமையா அவர் நினைக்கிற மாதிரி அவர் கண்ணு முன்னாடி வந்து நிப்பேன்கா.. தன் பொண்ணு வாழ்க்கையில எந்த குறிக்கோளும் இல்லாம தறி கெட்டவளா சுத்தறவ கிடையாது.. அவ தான் படிப்பையே நோக்கமா எடுத்துக்கிட்டு அதுல ஜெயிச்சும் காட்டுவான்னு அவருக்கு ப்ரூவா பண்ண போறேன் கா… இத்தனை நாள் என் படிப்பு செலவு என் கனவு இது எல்லாத்தையும் நீ தான் பாத்துக்கிட்ட.. எனக்கு அம்மா இல்லாத குறை தெரியாம பார்த்து பார்த்து வளர்த்த.. இப்போ என்னோட டர்ன்க்கா.. உன் பெருமையை காப்பாத்தற மாதிரி டாக்டர் ஆகி உன் முன்னாடி வந்து நிற்பேன்.. மலர் என்னோட தங்கைன்னு நீ பெருமையா சொல்ற மாதிரி நான் வளர்ந்து காட்டுவேன்..”
“சரிடி.. நாங்களும் அதைதான் ஆசைப்படுறோம்.. ஆனா அதுக்கு எதுக்கு நீ வீட்டை விட்டு வெளியில போகணும்? நம்ம வீட்டிலேயே இருந்து இதெல்லாம் பண்ணலாமே..”
“இல்லக்கா.. அது முடியாது.. சந்தேகம்ன்ற ஒரு விதை ஏற்கனவே உங்க மனசுல எல்லாம் விழுந்துடுச்சு.. ஒவ்வொரு நேரமும் நான் என் மனசுல என்ன நினைக்கிறேன்.. ஒழுங்கா படிக்காமல தரிக்கட்டு போயிடுவேனோங்கற கவலை உங்க மனசுல ஏதோ ஒரு மூலையில உறுத்திக்கிட்டே இருக்கும்.. எனக்கும் நீங்க என்னை சாதாரணமா பார்க்கும்போது கூட சந்தேக பார்வையோட பார்க்கிறீங்களோன்னு தோணும்.. வேணாம்க்கா .. நிறைய பசங்க பார்ட் டைம் வேலை பாத்துக்கிட்டே படிக்கிறாங்கக்கா.. எனக்கு 18 வயசு ஆயிடுச்சு.. இனிமே நான் நிச்சயமா என் படிப்பு செலவுகளையும் சாப்பாட்டு செலவையும் பார்த்துக்குற அளவுக்கு ஒரு வேலை தேடிக்க முடியும்.. நீ எனக்கு நல்ல எஜுகேஷன் கொடுத்திருக்க.. அதை வச்சு என்னால லைஃப்ல இன்னும் நல்லா முன்னேற முடியும் அக்கா..”
“அழகி வேணாண்டி.. அப்பா ரொம்ப உடைஞ்சு போய்டுவார்.. சொன்னா கேளு..”
மலர் வீட்டை விட்டு போயே தீருவேன் என்று அடம்பிடிக்க அவளை அப்படி போகவிடாமல் தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள் மதி..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 68
“அழகி வேணாண்டி.. அப்பா ரொம்ப உடைஞ்சு போய்டுவார்.. சொன்னா கேளு..”
மலர் வீட்டை விட்டு போயே தீருவேன் என்று அடம்பிடிக்க அவளை அப்படி போகவிடாமல் தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள் மதி..
“இல்லக்கா.. அவர் கிட்ட சொல்லு.. டாக்டர் மலரழகியா நான் அவரை வந்து பாப்பேன்னு.. அப்ப நிச்சயமா அவருக்கு கஷ்டம் தெரியாது.. இந்த வைராக்கியம் தான் என் கோலை நான் அடையறதுக்கு என்னை மோட்டிவேட் பண்ணிக்கிட்டே இருக்கும்.. உங்களை சீக்கிரம் வந்து பார்க்கணுங்கறதுக்காகவே என் கோலை நோக்கி நான் வேகமாக ஓடுவேன்.. ப்ளீஸ் கா என்னை புரிஞ்சுக்க.. என்னதான் இருந்தாலும் இப்போ அப்பா என்னால அவமானப்பட்டு கூனி குறுகி தான் இருக்காரு.. என்ன இருந்தாலும் தீரா மாமாவ உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நான் டார்ச்சர் பண்ணது இல்லன்னு ஆகாது இல்ல? அந்த நினைப்பு என்னை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு கஷ்டத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும்.. அந்த கஷ்டத்தை போக்கணும்னா என்னை பத்தின ஒரு நல்ல நினைவு அவருக்கு வேணும்.. அது நான் இந்த எம்பிபிஎஸ் முடிச்சு ஒரு நல்ல டாக்டர் ஆகி அவர் முன்னால வந்து நிற்கும் போது தான் நடக்கும்.. நிச்சயமா நடக்கும் அக்கா. அதுவரைக்கும் ஒரு அவமான சின்னமா நான் அவரை பார்க்க விரும்பல.. அவரை நான் டாக்டரா வரப்போற அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்க சொல்லு.. நிச்சயமா நான் வந்துருவேன்..”
அப்போது இந்தர் கண் முழித்து விட்டதாக ஒரு செவிலி வந்து சொல்ல தீரன் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தான்..
உள்ளே நுழைந்த தீரன் “இந்தர் கண்ணு” என்று அழைத்தது தான் தாமதம்.. கண் திறந்து தன் அண்ணனை பார்த்த உடனேயே கண்கள் குளமாக “அ.. அண்..ணா..!!??” என்று குரல் தழுதழுக்க அழைத்தவன் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் ஜீவனற்ற பார்வையோடு “ஏன்ணா இப்படி பண்ணிட்டே..?” இந்த கேள்வி விழிகளில் தொக்கி நிற்க தீரனை ஆதங்கத்தோடு பார்த்தவனை ஓடி சென்று அனைத்து கொண்டான் தீரன்..
ஒரே ஒரு அணைப்புதான் அண்ணன் பேசியது அத்தனையும் மறந்து போனான் இந்தர்..
“அண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணலணா.. நான் தப்பு பண்ண மாட்டேன்ணா.. ஏன்னா நான் உன் தம்பிணா.. நான் உன் தம்பி தானே..?” என்று அழுதழுது கேட்டவனை இன்னும் இறுக்க அனைத்து கொண்டவன் “நீ என் தம்பி டா.. பெருமையா சொல்றேன்டா.. நீ என் தம்பி இந்தர்.. நான் வளர்த்த என் சிங்கக்குட்டி டா நீ.. இந்த அண்ணனை மன்னிச்சுடுடா.. வயசு கோளாறுல நீ செஞ்ச ஒரு தப்பை மனசுல வச்சுக்கிட்டு உனக்கு பெரிய தண்டனையை கொடுத்துட்டேன்.. இந்த அண்ணனை கொன்னு போட்டுடுடா.. நீ இந்த மாதிரி ஒரு அண்ணனுக்கு தம்பியா கூட இருக்க வேண்டாம்..”
அவன் சொன்னதை கேட்டவன் பதறிப் போய் அவனை தன்னில் இருந்து விலக்கி அவன் வாயில் கைவைத்து மூடி “வேணாம்னா.. அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க.. ரொம்ப வலிக்குதுணா.. நீங்க வேணா இன்னும் என்னை நாலு அடி கூட அடிச்சுக்கோங்க.. ஆனா உங்க தம்பி இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்கணா.. அதை என்னால தாங்கவே முடியல..”
அங்கே ஒரு பாச போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது..
“அடிக்கணும் டா உன்னை.. அடிக்கத்தான் போறேன்.. உன்னை தப்பா நினைச்சு ஏதோ பேசிட்டேன்கிறதுக்காக என்னை விட்டுட்டு ஒரேடியா போயிடுவியா நீ? உனக்கு எப்படி டா தைரியம் வந்தது? பெரிய இவன் மாதிரி கைய அறுத்துக்கிட்ட? உயிரே போயிடுச்சுடா எனக்கு உன்னை ஸ்ட்ரெச்சர்ல பார்த்தப்போ.. என் தம்பிடா நீ.. இந்த மாதிரி கோழைத்தனமான முடிவை எப்படிடா எடுத்த? ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் என்னோட பேசி புரிய வச்சி இருக்கலாம் இல்ல இந்தர்..?”
இந்தரை கையால் செல்லமாய் கன்னத்திலும் மார்பிலும் அடித்தான்.. ஆனால் அடித்த அவன் கண்கள் கலங்கி இருந்தன..
“இனிமேல் எந்த காலத்திலயும் இப்படி பண்ண மாட்டேன்ணா.. சாரி அண்ணா..” என்று மறுபடியும் தன் பலமற்ற கைகளால் அண்ணனை இழுத்து அணைத்துக் கொண்டான்..
அதன் பிறகு அண்ணனும் தம்பியும் உணர்வு போராட்டத்தில் வெகு நேரம் பேசாமல் ஒருவர் மற்றொருவரை குளமாய் மாறிய கண்களோடு அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..
தீரனின் கைகள் மட்டும் இந்தரின் தலையை வாஞ்சையாய் வருடிவிட்டபடியே இருந்தது..
தீரன் மெதுவாக வாய் திறந்தான்..
“இந்தர்.. உங்க அண்ணி உன் மேல அசையாத நம்பிக்கை வெச்சிருந்தாடா.. நீ இந்த தப்பை பண்ணி இருக்கவே மாட்டேன்னு உறுதியா சொன்னா.. நான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பணும்னு சொன்னப்ப கூட இந்தர் இந்த வீட்டு பிள்ளை.. அவனுக்கு நான் அண்ணி.. அவனோட அம்மா இடத்துல இருக்கேன்.. அவனை ஒரு காலமும் இந்த வீட்டை விட்டு அனுப்ப மாட்டேன்.. அப்படி செஞ்சா உங்க அம்மாவோட ஆத்மா என்னை மன்னிக்காதுன்னு உனக்காக என்னோட சண்டை போட்டா டா..”
“ஆமான்ணா.. நான் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவங்களை டார்ச்சர் பண்ணப்பவும் சரி அதுக்கப்புறமும் சரி.. எப்பவுமே எனக்கு ஒரு அம்மாவா வழி நடத்திக்கிட்டு தான் இருந்திருக்காங்க.. அதனால தான் அவங்களுக்கு என்னை புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈஸியா இருந்திருக்கு..” என்று சில நொடிகள் மௌனமாய் இருந்தவன் “அண்ணா.. நான் அந்த பைப்பில் ஏறுனதுக்கு காரணம்..”
அவன் ஏதோ சொல்ல தொடங்க “தெரியும்டா.. மலர் எல்லாத்தையும் சொல்லிட்டா.. என்னை மன்னிச்சிடுடா.. நீ மாமாக்கு விஷயம் தெரிஞ்சா அதிர்ச்சியில எதுவும் ஆயிட போகுதுன்னு அந்த விஷயத்தை சொல்லாம இருந்திருக்க.. ஆனா நான் தான் புரிஞ்சுக்காம உன்னை குற்றவாளி ஆக்கிட்டேன்.. சாரி டா இந்தரு..” தீரன் முகத்தில் டன் கணக்காய் குற்ற உணர்ச்சி தெரிந்தது..
“பரவாயில்லை அண்ணா.. இப்பதான் புரிஞ்சிக்கிட்டிங்களே.. மலர் மொதல்ல என்னை அங்க பார்த்துட்டு அலறினா.. ஆனா அப்புறம் அவ புரிஞ்சுகிட்டா.. அதனாலதான் நான் எந்த தப்பும் பண்ணலன்னு அவ சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருந்தாண்ணா..”
“அதுவும் தெரியும்டா.. எனக்குள்ள அந்த நேரத்துல என்ன ஆயிடுச்சுன்னு தெரியல.. நான் எப்படி உன்னை பத்தி அவ்வளவு தப்பா நினைச்சேன்னு புரியல.. உன்கிட்ட எவ்வளவு தடவை சாரி கேட்டாலும் தீராதுடா.. இந்த அண்ணனை முடிஞ்சா மன்னிச்சுடுடா.. இல்ல நல்லா நான் அடிச்ச மாதிரி நாலு அடி வெச்சிடு..” இந்தரின் கையை பிடித்து தன் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டான் தீரன்..
தன் அண்ணன் அப்படி மனம் ஒடிந்து அழுவதை பார்க்க முடியாமல் இந்தர் பதறிப் போனான்..
“அண்ணா.. என்ன பண்றீங்க? கைய விடுங்கணா ப்ளீஸ்.. நான் அதெல்லாம் மறந்துட்டேன்ணா.. நீங்களும் மறந்துடுங்க.. விடுங்க..”
“எதைடா மறக்க சொல்ற? மாமாவுக்கு எதுவும் ஆயிட கூடாதுங்கறதுக்காக நீ எவ்ளோ யோசிச்சு அந்த உண்மையை மறைச்சு பேசி இருக்கே.. ஆனா நான் வயசுல தான் உன்னோட பெரியவனா இருக்கேன்.. எனக்கு கொஞ்சம் கூட பக்குவமே இல்லடா இந்தரு.. என்னோட அந்த கோபத்தினால உன்னையே மொத்தமா இழந்து இருப்பேனேடா.. உன்னை இழந்தப்பறம் என் வாழ்க்கையில என்னடா இருந்திருக்கும்..”
தீரன் சொன்னதைக் கேட்டவனுக்கு “அதான் உங்களை டார்ச்சர் பண்ண மறுபடியும் வந்துட்டேனேண்ணா.. இப்படியே உங்களை டார்ச்சர் பண்ணிட்டு தான் இருப்பேன் கடைசி வரைக்கும்..”
“டேய் நீ டார்ச்சர் இல்லடா
எனக்கு கிடைச்ச பொக்கிஷம்..” என்றவனை மலர்ந்த இதழோடு பார்த்தவன் “அண்ணா.. உங்களை நான் ஒன்னு கேட்பேன்.. உண்மையை மட்டும் சொல்லணும்..”
“இந்தர்.. இப்போ நீ கேட்டு நான் பொய் வேற சொல்லுவேனா? கேளுடா..”
“நீங்களும் அண்ணியும் கல்யாணம் ஆகியும், புருஷன் பொண்டாட்டியா நடிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கும் மலருக்கும் தெரியும்ணா..”
“மலர் சொன்னாடா..”
“ஆனா நீங்க அண்ணியை விரும்புறீங்க தானே..? உண்மையை சொல்லுங்க.. “
அவன் கேட்க கண்ணீரும் புன்னகையுமாய் ஒரு சிறு வெட்கச் சாயலும் முகத்தில் பூத்திருக்க தலையை குனிந்த தீரன் தன் விரல்களில் பார்வையை மேயவிட்டபடி “ஆமாண்டா.. அவ எப்ப என் உயிருக்குள்ள புகுந்தான்னே எனக்கு தெரியல.. அவ இல்லாம வாழ்க்கை இல்லைன்னு அவளை பார்த்த முதல் நிமிஷத்தில் இருந்தே எனக்கு தோண ஆரம்பிச்சுடுச்சு.. ஆனா..”
“ஆனா உங்களுக்கு படிப்பு இல்ல அண்ணி நிறைய படிச்சிருக்காங்க.. அவங்க பெரிய ப்ரொஃபசர்.. அதனால உங்க காதலை அவங்க ஏத்துக்க மாட்டாங்கன்னு நீங்களா நினைச்சுக்கிட்டு அவங்க கிட்ட எதையும் சொல்லாம இருக்கீங்க.. சரியா?”
இந்தர் சரியாக கேட்டு விட “அப்படி நினைச்சுக்கிட்டு தான் நான் அமைதியா இருந்தேன்.. ஆனா..”
“என்னண்ணா ஆனா..”
“அது.. நேத்து நான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பணும்னு சொன்னப்போ கோவத்துல மதி என்னை விரும்புறதா சொன்னாடா..”
“நெஜமாவா அண்ணா.. எனக்காக நடந்த சண்டையில அண்ணி உங்களுக்கு ப்ரபோஸே பண்ணிட்டாங்களா..? சூப்பர்ணா.. ரெண்டு பெரும் எங்க உங்க காதலை சொல்லாமலேயே இருந்திருவீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. பரவால்ல.. அண்ணி கொஞ்சம் தெளிவு தான்..”
“அவ மனசுல இருந்த காதலை அவ சொல்லிட்டா தான்.. ஆனா காதலை சொல்லிட்டு அவ விவாகரத்து கேட்டிருக்காடா என்கிட்ட..”
“என்னண்ணா.. ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னீங்கன்னு பார்த்தா பின்னாடியே இப்படி ஒரு இடியை தூக்கி போடுறீங்க?”
அதிர்ந்து கேட்டான் இந்தர்..
“அது எனக்கு நானே தோண்டி கிட்ட குழிடா.. இந்த விவாகரத்துன்கிற பேச்சை ஆரம்பிச்சதே நான்தான்.. மாமாவையும் மலரையும் அவங்க பழைய வீட்டுக்கு அனுப்புறேன்னு அவ சொன்னப்போ நான் அனுப்ப முடியாதுன்னு கோவப்பட்டேன்.. ஆனா அவ உன்னை எந்த காரணத்தை கொண்டும் அந்த வீட்டை விட்டு அனுப்ப கூடாதுன்னும் மாமாவும் மலரும் வீட்டை விட்டு போய் ஆகணும்னு முடிவு எடுத்துட்டதா சொன்னப்போ எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு.. அவ அவ குடும்பத்துக்கான முடிவுகளை நான் எடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறா.. எனக்கு அவங்களை பத்தி எந்த முடிவும் எடுக்கறதுக்கு உரிமை இல்லைன்னு சொல்றான்னு தோணுச்சு.. மதிக்கு புருஷனா அவங்க வீட்டு மாப்பிள்ளையா எனக்கு அவங்களை பத்தி முடிவு எடுக்கிற எல்லா உரிமையும் இருக்குதுன்னு எனக்குள்ள ஒரு நினைப்பு இருந்தது.. ஆனா அவ தான் அவங்களை பத்தி முடிவு எடுப்பேன்னு சொன்னப்போ அந்த நினைப்பை மொத்தமா அழிச்ச மாதிரி இருந்தது.. அந்த கோவத்துல விவாகரத்து பண்ணி ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்னு முதல்ல சொன்னது நான்தான்..”
“என்னண்ணா சொல்றீங்க? ஏன்ணா?”
“தப்பு தான்டா.. இப்ப புரியுது.. இப்ப புரிஞ்சு என்ன பிரயோஜனம்? ஆனா அப்பதான் அவ தன் மனசுல இருக்குற காதலை எனக்கு சொன்னா.. எனக்கும் அவ என்னை விரும்புறான்னு தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷமா தான்டா இருந்தது.. ஆனா அடுத்த நிமிஷமே உன்னை சந்தேகப்பட்ட மாதிரி அவளையும் காலம் முழுக்க நான் சந்தேக கண்ணோட தான் பார்ப்பேன்னு சொல்லி அவ விவாகரத்து கேட்டப்போ என் உயிரே போயிடுச்சுடா.. அப்பதான் நான் அந்த வார்த்தையை சொன்னப்போ அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும்னு புரிஞ்சுது.. உனக்கு மட்டும் இல்ல மதிக்கும் நான் தப்பு பண்ணி இருக்கேன்டா இந்தரு..”
“அவ்வளவு தானேணா.. ஏதோ கோவத்துல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனா உங்களுக்குள்ள இருக்கிற காதல் உங்களை பிரிய விடாதுண்ணா… நீங்க போயி அண்ணிக்கிட்ட உங்க காதலை சொல்லுங்க.. மறு நிமிஷமே அவங்க நிச்சயமா உங்ககிட்ட வந்து சேர்ந்திடுவாங்க..”
“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குடா.. அவ அன்புக்கு பதிலா அன்பை மட்டுமே கொடுக்க தெரிஞ்சவ.. அவ மனசு மாறிடும்னு எனக்கு தெரியும்.. ஆனா அதை எப்படி மாத்தறதுன்னு தான் தெரியல.. இப்பவே ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் கோபமா வருத்தமா ஒரு மாதிரி வெறுப்போட தான் பார்க்கிறா..”
“அதெல்லாம் வெளியில அப்படித்தான் இருப்பாங்க.. ஆனா உள்ளுக்குள்ள உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க.. நீங்க முதல்ல உங்க காதலை அவங்க கிட்ட சொல்லுங்க.. அதுக்கப்புறம் நிச்சயமா அவங்களால உங்ககிட்ட கோவத்தை காட்டவே முடியாது..”
“தேங்க்ஸ் டா இந்தரு.. அப்புறம் எனக்காக நீ இன்னொரு ஹெல்ப் பண்ணனும்.. இதை நான் பண்றதை விட நீ பண்றது தான் சரியா இருக்கும்னு எனக்கு தோணுது..”
“சொல்லுங்க அண்ணா..” என்றான் இந்தர்..
அவனிடம் சில விஷயங்களை சொன்ன தீரன் அந்த அறையின் உள்ளிருந்து வெளியே வந்தான்..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 69
தீரன் வெளிவந்ததும் இந்தரின் அறைக்குள் சென்றாள் மதி.. உள்ளே நுழையும் போதே பெரும் கோபத்துடன் தான் நுழைந்தாள்..
“ஏன் இந்தர்? எதுக்கு இப்படி பண்ண..? நான் தான் உன்கிட்ட பேசுறேன்னு உங்க அண்ணன் கிட்ட சொன்னேன்ல..? நான் வந்து உன்கிட்ட முழு விவரத்தை கேட்கறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்..? அதுவும் இப்படி ஒரு விபரீதமான முடிவை எடுத்திருக்க? அந்த மனுஷனோட உயிரே உன் கிட்ட தான் இருக்கு.. இத்தனை வருஷமா உனக்காக வேற நெனப்பே இல்லாம வாழ்ந்திருக்காரு.. அந்த மாதிரி அவர் நேத்து ரியாக்ட் பண்ணதுக்கு உன் மேல இருந்த பொஸஸிவ்நெஸ்.. என் தம்பி எந்த விஷயத்திலயும் தப்பானவனா இருந்திட கூடாதுன்கிற நினைப்பு இதெல்லாம் தான் காரணம்.. இது உனக்கு புரியலையா? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா அவர் நிலைமை என்னன்னு யோசிச்சியா? செத்தே போய் இருப்பாரு அவரு.. உனக்கு அதான் வேணுமா?”
“தப்பு தான் அண்ணி.. ஆனா அந்த நேரத்துல ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.. ஏதோ பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டேன்.. இனிமே எந்த காலத்திலும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கவே மாட்டேன்.. நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து காட்டுவேன்.. நீங்களும் அண்ணாவும் இனிமே என்னை பார்த்து பெருமைப்படுவீங்க..”
அவன் தலையை ஆதூரமாய் வருடியவள் “ரொம்ப சந்தோஷம் இந்தர்.. சீக்கிரம் வீட்டுக்கு வா.. உன்னை பழைய படி தேத்த வேண்டியது என் பொறுப்பு..”
“இல்ல அண்ணி.. நான் வீட்டுக்கு வரல.. நான் வீட்டை விட்டு வெளியே தான் இருக்க போறேன்..”
“ஏன் இந்தர்.. நீயும் மலரும் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீங்க? அவளும் இதே தான் சொல்றா.. உங்க ரெண்டு பேருக்கும் எதுக்கு இவ்வளவு கோபம்.. பெரியவங்க ஏதோ பேசிட்டோம்.. நாலு வார்த்தை சொல்லிட்டோங்கறதுக்காக இப்படி ஆளாளுக்கு கோவிச்சிட்டு வீட்டை விட்டு வெளியே போனா எப்படி..?”
“இல்ல அண்ணி.. எங்க ரெண்டு பேருக்குமே உங்க மேல கோபம் இல்ல.. இந்த முடிவு எங்களுக்கு ஒரு விதமான மோட்டிவேஷன்னு வச்சுக்கோங்க.. எங்களால முடியும்ங்கறதால தான் அதை செய்யணும்னு சொல்றோம்.. இதே நானும் மலரும் ஒரு பத்து வருஷம் முன்னாடி நிச்சயமா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டோம்.. அப்ப எங்களுக்கு அவ்வளவு தைரியமும் இருந்திருக்காது.. இப்ப நாங்க ரெண்டு பேருமே மேஜர்.. இப்போ எங்களால எங்க சொந்தக்கால்ல நின்னு உழைச்சு முன்னேற முடியும்.. ஒரு விதத்தில இந்த மாதிரி தனியா நின்னு போராடற குணத்தையும் உங்ககிட்ட இருந்து தான் நாங்க கத்துக்கிட்டோம்.. எங்க அண்ணா எப்படி தனியா உழைச்சு வாழ்க்கையில முன்னேறினார்னு பார்த்து பார்த்து நான் கத்துகிட்டு இருக்கேன்.. அதே மாதிரி தான் மலரும்.. உங்க கிட்ட இருந்த டிட்டர்மினேஷன்.. அந்த ஹார்ட் வொர்க்.. இது எல்லாத்தையும் கத்துக்கிட்டு இருக்கா.. இப்போ நாங்க இண்டிபெண்டென்டா எங்களை நாங்களே பாத்துக்கிற அளவுக்கு பெரியவங்களாயிட்டோம்.. இப்போ நாங்க எங்க லைஃபை பாத்துக்கிட்டா உங்க லைஃப்பை நீங்க கொஞ்சம் என்ஜாய் பண்ணலாம் இல்ல..? இன்னும் எத்தனை நாளைக்கு நீங்களும் அண்ணாவும் எங்களுக்காகவே உழைச்சுக்கிட்டு இருப்பீங்க..? சொல்லுங்க.. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? உங்களுக்குன்னு ஒரு சந்தோஷம் வேண்டாமா? நீங்க ரெண்டு பேரும் வேற எந்த கவலையும் இல்லாம ஜாலியா இருங்க அண்ணி.. எங்களை பத்தி கவலைப்படாதீங்க.. நாங்க ரெண்டு பேரும் ஹாப்பியா அதே சமயம் சூப்பரா படிச்சு முன்னேறி வருவோம்..”
அவன் பேசியதை கேட்க ஏனோ மதிக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது.. அவன் சொல்வதும் உண்மை தானே? அவர்கள் தங்கள் காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.. அதற்கு வழி விட்டு நிற்பது தான் சரி என்று தோன்றியது அவளுக்கு..
“சரி ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத.. ரெஸ்ட் எடுத்துக்கோ.. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.. அட்லீஸ்ட் உன் கையில் இருக்கிற இந்த காயம் ஆறுற வரைக்கும் எங்களோட இரு இந்தர்..”
“இல்ல அண்ணி.. நீங்க சொல்றபடி என் கையில் இருக்கிற காயத்துக்காக வீட்டுக்கு வந்து ஒருவேளை என் மனசு மாறிடலாம்… ஏன்னா எனக்கு தெரியும் நீங்களும் அண்ணாவும் என்னை எப்படி பார்த்துப்பீங்கன்னு.. அப்பறம் எனக்கு அங்கிருந்து வரவே மனசு வராது”
“இதுக்கு மேல நான் என்ன சொல்றது..? அப்பறம் உன் இஷ்டம்..”
சொல்லிவிட்டு மதி அந்த அறையை விட்டு வெளியே வர மலரழகி அந்த அறைக்குள் நுழைந்தாள்..
அறைக்குள் நுழைந்தவள் வேகமாக இந்தரின் அருகே சென்று ஓங்கி ஒரு அறை விட்டாள்..
கன்னத்தைப் பிடித்துக் கொண்டு “அடியேய் ராட்சசி.. ஏண்டி அறைஞ்ச என்னை? நானே கையை கட் பண்ணிட்டு உடம்பு முடியாம படுத்து இருக்கேன்.. என்னை வந்து இப்படி அடிக்கிற.. பைத்தியமா டி நீ..?”
“இப்ப சொன்ன பாரு.. கைய கட் பண்ணிட்டு படுத்து இருக்கேன்னு.. அதுக்கு தான்டா இது.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? அன்னைக்கு நான் கடல்ல விழப்போனப்போ அப்படி அட்வைஸ் பண்ண..? இது தான் சாத்தான் வேதம் ஓதறதுன்னு சொல்லுவாங்க..”
“ஏய் சந்தடி சாக்குல யாரடி சாத்தான்குற?”
“உன்னை தான்டா.. அதுல என்ன டவுட்டு டா உனக்கு..? அன்னைக்கு நான் சாகப் போகல.. உங்க அண்ணன் வந்து காப்பாத்துவாருன்ற நிச்சயமா தெரிஞ்சதால தான் கடலுக்குள்ள தைரியமா போனேன்.. ஆனா நீ என்னடா பண்ணி இருக்க? இன்னிக்கி ஒரேடியா போகணும்னு இப்படி ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து இருக்கே..? உனக்கு என்னடா குறைச்சல்..? கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு.. இத்தனை வருஷமா உங்க அண்ணன் உழைச்சு ஓடா தேய்ஞ்சு உனக்கு நல்ல படிப்பு நல்ல சாப்பாடு நல்ல வீடு இதெல்லாம் கொடுத்து இருக்கிறார் தானே..? ஒருவேளை உங்க அண்ணன் சொன்னது உனக்கு ரொம்ப வலிக்குதுன்னா வெளியில வந்து உழைச்சு சாப்பிட வேண்டியதுதானே? அதை விட்டுட்டு உயிரை விட போறானாம்.. அப்படியே வர்ற ஆத்திரத்துக்கு நானே உன் கழுத்தை நெறிச்சு கொன்னுடனும் போல இருக்குடா..”
அவள் சொன்னதை கேட்டவன் பக்கென சிரித்து விட்டான்..
“என்னடா.. நான் திட்டிகிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற.. வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாதா டா உனக்கு..?”
“போதும்டி.. எவ்வளவுதான் கடிச்சு கொதறுவே? நிறுத்திக்கோ..”
அலட்சியமாக உதட்டை சுழித்த படி “ம்ம்.. சரி.. சரி.. பொழைச்சு போ..” என்றவள் “அப்பறம் உன்னை பார்த்து சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்.. இனிமே நான் வெளில தங்கி படிக்கப் போறேன்.. ஒரு பார்ட் டைம் ஜாப் பார்த்துட்டு படிக்கலாம்ன்ற ஐடியால இருக்கேன்.. உடம்பை பாத்துக்கோ.. அக்காவையும் மாமாவையும் பத்திரமா பாத்துக்கோ.. நான் கிளம்புறேன்..” என்று திரும்பியவள் கையை பிடித்து நிறுத்தினான் இந்தர்..
“ஓய்.. நானும் அந்த முடிவில தான்டி இருக்கேன்.. நீயும் வெளியில போய் தங்கி படிக்க போறேன்னு தான் அண்ணா சொன்னாரு.. எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான்.. அவனுக்கு உங்க காலேஜ் பக்கத்தில ஒரு ஃபர்னிஷ்ட் ஹவுஸ் இருக்கு.. அந்த வீட்டில ரெண்டு போர்ஷன் காலியா இருக்கு.. அவன் எனக்குன்னா குறைவான வாடகைக்கு வீடு குடுப்பான்.. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லன்னா ஒரு போர்ஷன்ல நீ தங்கிக்க.. இன்னொரு போர்ஷன்ல நான் தங்கிக்கிறேன்.. நம்ம பார்ட் டைம் வேலை பார்த்துட்டு படிக்கவும் செய்யலாம்.. ஆனா அந்த போர்ஷன்ல ஒரு ரூமும் ஒரு கிச்சனும் மட்டும் தான் இருக்கும்.. அதுக்கு மேல வேற எதுவும் எதிர்பார்க்காதே.. வேலைக்கு ஆள் எல்லாம் கிடையாது.. ஹாஸ்டல்ல நீ ஒரு ரூமுக்கு என்ன பே பண்ணுவியோ அதை கொடுத்தா போதும்.. அட்வான்ஸ்லாம் கொடுக்க வேண்டாம்.. இங்க உனக்கே உனக்குன்னு ஒரு ரூம் கிச்சன் எல்லாமே கிடைச்சுடும்.. உனக்கு ஓகேவா..?”
அவன் கேட்டதும் அவள் கொஞ்சம் யோசித்தாள்..
அதை பார்த்தவன் “இல்ல.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லனா நீ லேடீஸ் ஹாஸ்டல்லயே போய் தங்கிக்கோ.. நேத்திக்கு அண்ணா என்னை நம்பாம திட்டினப்ப கூட நீ நான் எதுவும் பண்ணலன்னு எனக்கு சப்போர்ட் பண்ண.. அதனால நான் இன்னொரு போர்ஷன்ல இருக்கிறது உனக்கு ஒன்னும் டிஸ்டர்பன்ஸா இருக்காதுன்னு நினைச்சு தான் நான் இதை கேட்டேன்.. நான் வீட்டை விட்டு வெளியில தங்கற முடிவை இப்பதான் எங்க அண்ணா கிட்ட பேசும்போது எடுத்தேன்.. அப்படி தங்கணும்னு நினைக்கும் போதே என் ஃப்ரெண்டோட இந்த வீடு இருக்கிறது எனக்கு ஞாபகம் வந்தது.. அண்ணா நீயும் வெளியில தங்க போறேன்னு சொன்னப்ப உன்னையும் கேட்கலாம்ன்னு தோணுச்சு.. அதான் கேட்டேன்.. உனக்கு இஷ்டம் இல்லனா விட்டுடு.. நான் மட்டும் அங்க தங்கிக்குறேன்..”
“இல்ல இல்ல.. எனக்கு இந்த ஆஃபர் ஓகே தான்.. இன்னொன்னு என் வேலையை நானே செஞ்சுக்கணும்னு ஆசைப்படறேன்.. தனியா இருந்தாதான் அந்த எண்ணமே வரும்.. குக் பண்றது துணி துவைக்கிறது பாத்திரம் கழுவறது வீட்டை க்ளீன் பண்றதுன்னு இது எல்லாமே இத்தனை நாள் எங்க அக்கா என்னை செய்ய விடாம செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கா.. இப்போ கொஞ்சம் பொறுப்பா இதெல்லாம் செஞ்சு பழகிக்கணும்னு நினைக்கிறேன்.. அதுக்கு நீ சொல்ற மாதிரி தனியா இருந்தா தான் சரி வரும்.. ஒரு ஆள் கூட இருந்தா எப்பவும் அவங்களையே எல்லாத்துக்கும் எதிர்பார்த்துட்டு வாழற மாதிரி இருக்கும்.. எனக்கு இந்த டீல் ஓகே தான்.. ஆனா நீ ஹாஸ்பிடலை விட்டு வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆயிடுமே.. அது வரைக்கும் நான் எங்கே இருக்கிறது..?”
“அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நான் உனக்கு அந்த வீட்டோட அட்ரஸ் தர்றேன்.. நம்ம ரெண்டு பேர் போர்ஷனும் மாடியில இருக்கு.. கீழே ஒரு மாமாவும் மாமியும் இருக்காங்க.. நீ இப்ப போனா அவங்க உனக்கு உன் போர்ஷனோட சாவி கொடுப்பாங்க.. அவங்க பேரன் பேத்தி பொண்ணு புள்ளையெல்லாம் பார்க்க அடிக்கடி ஊருக்கு போய்டுவாங்க போல.. வீட்டை பார்த்துக்க ஆள் வேணும்னு தான் என் ஃப்ரெண்டு வாடகைக்கு யாராவது ஆள் இருந்தா சொல்லுன்னு சொல்லி இருந்தான்.. நீ போய் அந்த மாமி கிட்ட சாவி வாங்கிட்டு அங்கே இருந்துக்க.. எப்படியும் அந்த மாமா மாமி உனக்கு துணைக்கு இருப்பாங்க.. ரொம்ப அவசரமா ஏதாவது வேணும்னா அவங்க கிட்ட நீ கேட்டுக்கலாம்.. ஒருமுறை நான் என் ஃப்ரெண்டோட அந்த வீட்டுக்கு போய் இருக்கேன்.. அவங்க ரொம்ப நல்ல மாதிரி பழகுவாங்க.. அதனால நீ பயப்பட வேண்டாம்.. என் ஃப்ரெண்டு கிட்ட சொல்லி அவங்களோட பேச சொல்றேன்.. உனக்கு ஓகேவா..?”
“ம்ம்.. அப்படின்னா ஒரு பிராப்ளமும் இல்ல.. நான் அங்கே போய் தங்கிக்கிறேன்.. நீ அட்ரஸ் குடு..” என்றதும் அவனும் அவள் கைபேசிக்கு அந்த வீட்டு முகவரியை குறுஞ்செய்தியாய் அனுப்பினான்..
“ஓகே.. அப்ப நான் கிளம்புறேன்.. நீயும் ரெண்டு நாள் கழிச்சு வந்து சேரு.. பாய்.. டேக் கேர்..” சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்..
அவள் வெளியே சென்றதும் தீரன் அந்த அறைக்குள் மறுபடி வந்தான்..
“அண்ணா நீங்க சொன்னபடியே மலர் கிட்ட பேசிட்டேன்.. அவ அந்த வீட்டுக்கு தான்ணா போயிட்டு இருக்கா”
இந்தர் சொன்னதும் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டான் தீரன்…
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 70
“அண்ணா நீங்க சொன்னபடியே மலர் கிட்ட பேசிட்டேன்.. அவ அந்த வீட்டுக்கு தான்ணா போயிட்டு இருக்கா.. நீங்க ஏற்பாடு பண்ண வீட்டுல மலர் பாதுகாப்பா பத்திரமா இருப்பா.. நீங்க சொன்னபடி அவளுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம சேஃபா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு.. என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா..”
“இந்தர் நான் மறுபடியும் சொல்றேன்.. தப்பா நினைக்காத.. நான் உன்கிட்ட கேட்டப்போ நீ மலரை விரும்புறேன்னு ஒத்துக்கிட்டே.. ஆனா அந்த விருப்பம் அவ படிப்பை முடிச்சு செட்டில் ஆகுற வரைக்கும் உனக்குள்ள தான் இருக்கணும்.. அவளும் நீயும் படிப்பை முடிச்சு நல்லபடியா வந்த அப்புறம் அவ கிட்ட உன் மனசுல இருக்கறதை சொல்லு.. அவளும் ஒத்துக்கிட்டா நானும் மதியுமே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம்.. ஆனா அதுவரைக்கும் இந்த விஷயம் அவளுக்கோ இல்ல வேற யாருக்கும் தெரிய வேண்டாம். நான் சொல்றது உனக்கு புரியுது இல்ல..?”
“புரியதுண்ணா.. நிச்சயமா என்னாலயோ இல்ல வேற யாராலயோ அவளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.. நான் அவளுக்கு ஏதாவது ரொம்ப அவசியமா ஹெல்ப் வேணும்னா மட்டும் செய்வேன்ணா.. மத்தபடி அவளை தொந்தரவு பண்ணாம தள்ளி நின்னு ஒரு செக்யூரிட்டியா இருந்து அவளை பாத்துப்பேன்..”
“தேங்க்ஸ் டா இந்தர்.. சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு.. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத..” சொல்லிவிட்டு தீரன் அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்டான்..
மலர் மருத்துவமனையில் இருந்து தீரனின் வீட்டிற்குச் சென்று விடிந்தவுடன் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு தான் தங்க வேண்டிய இடத்துக்கு செல்ல போவதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்று இருந்தாள்..
காலை விடிந்திருந்தது..
மதியும் தீரனும் இரவிலிருந்து அங்கேயே தனி தனி இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.. அங்கே மௌனமே ஆட்சி செய்து கொண்டிருந்தது..
தீரன் அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.. ஒரு வழியாய் மனதில் திடத்தை ஏற்றி கொண்டு மதி அருகில் சென்றவன் “மதி.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..” என்றான்..
அதற்கு மேல் அவனை பேசவிடாமல் “போதும் தீரா.. நிறைய பேசிட்டோம்.. இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்..”
அவள் இறுக்கமான முகத்தோடு சொல்ல அவனோ தன் மனதில் இருக்கும் அத்தனை காதலையும் அவளிடம் கொட்டி தீர்க்கும் முடிவில் இருந்தான்..
“இல்ல மதி.. என் மனசில இருக்கிறதை உன் கிட்ட நான் சொல்லியே ஆகணும்.. இதுக்கு மேல என்னால சொல்லாம இருக்க முடியல.. ப்ளீஸ் மதி.. நான் சொல்றதை கேளு.. நான் உன்னை..”
அவன் முன்னால் தன் கையை நீட்டி அவன் பேசுவதை நிறுத்தியவள் “என்ன.. என்னை விரும்புறேன்னு சொல்லப் போறீங்களா? நீங்க அப்படி சொன்னா நான் நம்பணுமா? நேத்து நான் என் விருப்பத்தை சொல்லிட்டேங்கறதுக்காக உங்களையே என்னை விரும்புறதுக்கு நீங்க ஃபோர்ஸ் பண்ணிக்க வேண்டாம்.. ப்ளீஸ் தீரா.. காதல் இரண்டு பக்கமும் இருந்தா தான் அழகா இருக்கும்.. ஒரு பக்கம் மட்டும் இருந்தா அது கொடுமை.. என்னை சந்தோஷப்படுத்த நீங்க இப்படி பொய் சொல்லாதீங்க.. உங்களை கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல.. இதை இதோட விட்டுடுங்க..”
“ஐயோ.. இல்ல மதி.. நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க.. நான் எந்த கட்டாயத்திலயும்..”
“இல்ல தீரா.. எந்த கட்டாயமும் இல்லனா இவ்வளவு நாள் நீங்க உங்க விருப்பத்தை சொல்லி இருப்பீங்க.. இப்ப நான் என் விருப்பத்தை சொன்ன அப்புறம் நீங்க சொல்றீங்கன்னா அது நிச்சயமா இவளுக்கு தாலி கட்டிட்டோம்.. இவளும் என்னை விரும்புறதா சொல்லிட்டா.. இதுக்கு மேல நம்மளுக்கு வேற வழி இல்ல.. இவளை விரும்பி தான் ஆகணும்ன்கிற கட்டாயத்தில நீங்க கொடுக்கற காதலா தான் இருக்கும்.. அது எனக்கு வேண்டாம் தீரா..”
“ஐயோ இல்ல மதி..”
“வேணாம் தீரா.. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு.. இனிமே நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கணும்ன்ற கட்டாயம் கூட கிடையாது.. சீக்கிரமே டிவோர்சுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.. நம்ம ரெண்டு பேரும் சட்ட படி பிரிஞ்சுடலாம்.. நான் அப்பாவை கூட்டிட்டு எங்க பழைய வீட்டுக்கே போயிடுறேன்…”
அவள் தீர்க்கமாய் முடிவெடுத்து உறுதியாக சொல்லி இருந்தாள்…
அவனுக்கோ அவளுக்கு எப்படி தன் காதலை புரிய வைப்பது என்று பிடிப்படவே இல்லை..
“ஐயோ.. அந்த பேச்சை எடுக்கும் போதே கட்டையை போடுறாளே.. நான் எப்படி அவளுக்கு என் காதலை சொல்லி புரிய வைப்பேன்? ஒரே வீட்டில இருந்தாலாவது அப்பப்ப பாத்துக்கிட்டு இருக்க போக ஏதாவது பண்ணி அவளுக்கு என் காதலை புரிய வைக்கலாம்னு பாத்தா அவங்க அப்பா கூட போய் தனியா இருக்க போறேன்னு சொல்றா.. தீரா.. என்னடா இது உன் காதலுக்கு வந்த சோதனை..” உள்ளுக்குள்ளேயே புலம்பி கொண்டிருந்தான் தீரன்..
சரியாக அப்போது பார்கவியோடு அங்கு வந்து சேர்ந்தான் பாண்டி.. தீரன் அன்று காலை தான் விஷயத்தை பாண்டியிடம் சொல்லி இருக்க செய்தி கேட்டவுடன் பதைப்புடன் ஓடி வந்திருந்தான் அவன்..
“தீரா என்ன ஆச்சு? இந்தர் எதுக்கு இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தான்..? என்ன நடந்துச்சு தீரா?” வந்தவுடன் அவன் படபடக்க “ஒன்னும் இல்லடா எல்லாம் சரியாயிடுச்சு..” என்றவன் அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் பாண்டியிடம் சொன்னான்..
“ஏன் தீரா இப்படி எல்லாம் நடக்குது? சரி இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சு இல்ல..? மதி சிஸ்டரும் உன்னை விரும்பறதா சொல்லிட்டாங்க.. இன்னும் என்ன வேணும் உனக்கு..? நீயும் அவங்களை விரும்பறதா சொல்லி ரெண்டு பேரும் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதானே..?”
“நானும் அப்படி தான் பாண்டி நினைச்சேன்.. ஆனா அது அவ்வளவு சுலபமா இல்ல.. ஆஞ்சநேயர் நான் அவர் பக்தனா இருந்துட்டு இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ற அளவுக்கு மாறி போனதுனால என்னை ரொம்ப சோதிக்கிறார் போல பாண்டி..”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஆஞ்சநேயர் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல.. ராமரையும் சீதையும் சேர்த்து வச்சவரு அவரு.. அதே மாதிரி உங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைப்பார்.. அதுக்காக நீ தளர்ந்து போயிராதே தீரா.. நீ மறுபடியும் மறுபடியும் சிஸ்டரை கூப்பிட்டுக்கிட்டே இரு.. அவங்க நிச்சயமா உன்னோட வந்து வாழ்வாங்க.. ஆமா.. இந்தருக்கும் உங்க மாமாவுக்கும் உடம்பு சரியில்லை.. மலர் எங்கே?”
“அதை ஏன் கேக்குற? அவ இனிமே வீட்டுக்கு வர மாட்டேன்.. தனியா தான் போய் இருப்பேன்னு சொல்லி நேத்து நைட்டே கிளம்பிட்டா.. அப்புறம் நான் தான் இந்தர் கிட்ட சொல்லி வேற மாதிரி பேச சொன்னேன்.. அவளும் அவன் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டா.. நம்மளுக்கு ஷூட்டிங்க்கு இடம் பார்த்து கொடுப்பாரே நாகா அவருக்கு நைட்டே ஃபோன் பண்ணி ஏதாவது வீடு காலியா இருக்குமான்னு கேட்டேன்.. ஒரு வீடு இருக்கு.. அடிக்கடி சூட்டிங் எடுப்பாங்க.. ஆனா ரொம்ப சின்ன வீடுன்னு சொன்னாரு.. எப்படியோ இந்தர் மூலமா மலரை அந்த வீட்ல தங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன்.. உனக்கு கூட தெரியும் பாண்டி அந்த வீட்டை.. நம்ம ஜகஜ்ஜாலக்கில்லாடின்னு ஒரு படம் எடுத்தமே.. அந்த வீடு தான்..’
“அந்த வீடா? கீழ ஒரு பெரிய வீடு.. மாடில சைடு சைடு போர்ஷன்.. நடுவுல ஒரு கதவு பூட்டியே வச்சிருப்பாங்க.. ஆனா அங்க மத்த போர்ஷன்ல எல்லாம் யார் இருக்காங்கன்னு பார்த்துக்கிட்டியா தீரா..?”
“எல்லாம் விசாரிச்சிட்டேன் பாண்டி.. நாம அங்க ஷூட்டிங்க்கு போனப்போ ஒரு மாமி மாமா இருந்தாங்க இல்ல? இன்னும் அவங்க தான் அங்க கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்காங்களாம்.. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இந்த ரெண்டு வீடும் காலியா இருக்குன்னு சொன்னாங்க.. அதான் ஒரு போர்ஷன்ல மலரும் அவளுக்கு பாதுகாப்பா இன்னொரு போர்ஷன்ல இந்தரையும் தங்க சொல்லி இருக்கேன்..”
“என்ன சொல்ற தீரா..? இந்த நெலமைல இந்தரும் வெளியில தங்க போறானா..?”
“ஆமா பாண்டி.. மலர் தனியா இருக்க கூடாதுன்னு அவளுக்கு பாதுகாப்பா இந்தரை இன்னொரு போர்ஷன்ல தங்க சொல்லி இருக்கேன்.. ரொம்ப தப்பு பண்ணிட்டேன் பாண்டி.. அநியாயமா இந்தர் மேல சந்தேகப்பட்டு அவன் உயிரையே எடுத்துக்கிற அளவுக்கு அவனுக்கு கொடுமை பண்ணிட்டேன்.. அவன் திரும்பத் திரும்ப என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேக்குறப்போ எனக்கு உயிரே அறுந்து போகுது.. அதான் இப்ப அவன் மேல முழு நம்பிக்கை வச்சு மலர் நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் அவளை தள்ளி இருந்து பார்க்க சொல்லி இருக்கேன்.. அப்படியே அவன் படிப்பையும் முடிச்சு நல்லபடியா செட்டில் ஆனா போதும்..”
“இந்தர் உன் தம்பி தீரா.. தப்பு பண்ண மாட்டான்.. நீ தைரியமா இருக்கலாம்.. மலரை பார்த்துக்க சொல்லி இருக்கே இல்ல..? மலர் எப்படி போறாளோ அதே மாதிரி திரும்பி வருவா.. ஆனா ஒரு பெரிய டாக்டரா வருவா..”
“எனக்கும் தெரியும் பாண்டி.. நான் இந்தரை நம்பறேன்.. சரி பாண்டி.. வா போய் டீ குடிச்சிட்டு வரலாம்..” என்று அவனை அழைத்து திரும்ப அதே நேரம் பார்கவி மதியிடம் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள்.. அவர்கள் அருகில் வந்த தீரன் “நீங்க இங்கேயே பேசிட்டு இருங்க.. நாங்க போய் டீ குடிச்சிட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வர்றோம்..”
“எனக்கு டீ வேண்டாம்.. எனக்கு காபி தான் வேணும்.. ஒரே தலை வலிக்குது..” என்க “சரி.. காஃபி வாங்கிட்டு வர்றேன்.. சாப்பிடுறதுக்கு வேற ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
தீரன் கேட்க “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீங்க எதுவும் எனக்காக வாங்கிட்டு வர வேண்டாம்.. நானே கேண்டினுக்கு போய் வாங்கி குடிச்சுக்குறேன்.. இல்லனா நீங்க வாங்கிட்டு வர காபிக்கு நான் பணம் கொடுக்கிறேன்.. வாங்கிக்கங்க” என்று அவள் பட்டென சொல்ல தீரன் அவளை தீவிரமாய் முறைத்தான்..
அவள் கையைப் பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு அந்த பாதையின் ஒரு மூலைக்கு சென்றவன் அவள் கண்களுக்குள் ஊடுருவி “இங்க பாரு.. நான் உன்னை விரும்புறேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு.. பாண்டி இந்தர் மலர் இவங்க எல்லாருக்கும் தெரியிற விஷயம் உனக்கு தெரியாம இருக்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அப்படி இல்லனாலும் உன் கழுத்தில இப்பவும் நான் கட்டின தாலி இருக்கு.. நம்ம ரெண்டு பேரும் இன்னும் புருஷன் பொண்டாட்டி தான்.. உனக்கு ஒரு காபி வாங்கி கொடுக்க கூட முடியாத அளவுக்கு உன் புருஷன் ஒன்னும் பஞ்சத்தில அடிபட்டு இருக்கல.. இந்த பணம் கொடுக்கிற வேலை எல்லாம் இதுதான் கடைசியா இருக்கணும்.. சொல்லிட்டேன்..” அவளை முறைத்தப்படி சொல்லிவிட்டு “வா பாண்டி..” என்று அவனை இழுத்துக்கொண்டு அந்த மருத்துவமனையின் கேண்டீனுக்கு சென்று இருந்தான் தீரன்..
மதியின் முகத்தில் அவளையும் மீறி ஏதோ ஒரு சந்தோஷ ரேகை மின்னல் போல் வெட்டி சென்றது..
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த இந்தரும் தமிழ்வாணனும் மூன்றாவது நாள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்..
தமிழ்வாணன் தன்னுடைய பழைய வீட்டுக்கு மதியோடு சென்று விட இந்தர் மலரழகி ஏற்கனவே சென்று தங்கியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் தான் சென்று தங்கிக் கொண்டான்..
அந்த வீட்டின் கீழ் பகுதியில் இருந்த மாமாவும் மாமியும் தீரனும் மதியும் இல்லாத குறையை அவர்கள் இருவருக்கும் போக்கிக் கொண்டு இருந்தார்கள்..
அழைக்காமலேயே மலர் வீட்டிற்கு வந்து “ஏன்டி மா.. என்ன செஞ்சுண்டு இருக்காய்..?” என்று கேட்க சமையல் என்றால் என்னவென்றே தெரியாத அவள் யூடியூப் காணொளியை பார்த்து ஏதோ சமைக்க முயன்று கொண்டிருக்க “உனக்கு எதுக்குடீம்மா இந்த பாடு.. மாமி தான் இருக்கேனோன்னோ.. நீ பேசாம கீழ வந்து எங்காத்துலயே சாப்பிடேன்.. அங்க என்ன உனக்குன்னு தனியாவா எடுத்து வச்சு தளிகைப் பண்ண போறேன்.. எங்களுக்கு பண்ணும்போது உனக்கும் சேர்த்து பண்ணி வெக்க போறேன்.. எதுக்குடீம்மா இப்படி கஷ்டப்படுற? ஊர்ல இருக்கிற என் பேத்தி கூட உன் வயசு தான்.. என் தளிகைன்னா அவளுக்கு உசுரு..”
“இல்ல மாமி.. நானும் இதெல்லாம் செய்ய கத்துக்கணும் இல்ல..? இப்படியே சமையல் செய்யாமலேயே இருக்க முடியாது..”
“இன்னும் நாலு நாள்ல நானும் மாமாவும் என் பொண்ணாத்துக்கு போயிடுவோம்.. அந்த நேரத்துல நீ சமைக்க கத்துக்கோ.. நான் இருக்கும் போது என் ஆத்துல வந்து நீ சாப்பிடு.. சொல்றது புரியறதோ.. எதுக்குடி குழந்தை இவ்வளவு சிரமப்படறே?”
மாமி வாஞ்சையோடு அவள் தலையை வருடியபடி அழைக்க அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவர்கள் இருக்கும் போது அவர்கள் வீட்டில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டாள் மலரழகி.. இந்தருக்கும் இதே போன்ற ஒரு அன்பு கட்டளையை மாமியும் மாமாவும் விதித்து விட அவனும் கீழே அவர்களோடு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டான்..
நால்வருக்குமே ஏதோ தாங்கள் ஒரு குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவது போல் தான் இருக்கும் ஒவ்வொரு நாளும்..
இங்கே தீரனோ இரண்டாவது நாளே வீட்டில் தனியாக இருக்க முடியாமல் பாண்டியை அழைத்து புலம்பி தள்ளிக் கொண்டு இருந்தான்..
“பாண்டி என்னால முடியல பாண்டி.. இப்படி வீட்ல கொட்டு கொட்டுன்னு தனியா உட்கார்ந்து இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் பேசாம அந்த பழைய படத்துல ஸ்டண்ட் முடிக்க வேண்டியது இருக்குல்ல..? அதை போய் முடிச்சுட்டு வந்துடலாம்ன்னு பாக்குறேன்..”
“தீரா நீ என்ன விளையாடுறியா? மதி சிஸ்டர் உனக்கு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு போயிருக்காங்க.. 15 நாளைக்கு அப்புறம் தான் நீ சூட்டிங்க்கு போகணும்னு.. நீ என்னடான்னா ரெண்டு நாளிலேயே ஷூட்டிங்க்கு போறேங்கற.. அதுவும் ஸ்டண்ட் பண்ண.. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..” என்று பேசிக் கொண்டிருந்தவன் சட்டென ஏதோ தோன்ற “இது இத்தனை நேரம் ஏன் எனக்கு தோணாம போச்சு? அடிபட்ட கையோட நீ ஷூட்டிங் போறேன்னு தெரிஞ்சா அதுவும் ஸ்டண்ட் பண்றேன்னு தெரிஞ்சா மதி சிஸ்டர் டென்ஷன் ஆவாங்கல்ல..?”
அவன் சொன்னதைக் கேட்டு தீரன் முகத்திலும் வெளிச்சம் பரவியது.. “அதானே.. இது ஏன் எனக்கு தோணாம போச்சு.. நாளைக்கு நான் அந்த ஷூட்டிங் போறேன்..”
“ஆமாம் தீரா.. நாளைக்கு நீ அங்க போ.. நான் மதி சிஸ்டருக்கு நீ போறதை தெரியப்படுத்தறேன்.. நடக்க வேண்டியது எல்லாம் தன்னால நடக்கும்.. இன்னும் 15 நாள் இருக்கு.. நம்ம புதுப்பட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு.. உன் கை சரியாகற வரைக்கும் எப்படியாவது நீ மதி சிஸ்டரோட இருக்கறதுக்கு வழி பண்ணிடலாம்.. ஆனா அதுக்குள்ள உன் காதலை அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது உன் பொறுப்பு..”
பாண்டி சொன்னதை கேட்டவன் “நிச்சயமா பாண்டி.. 15 நாள் இருக்குல்ல..? நிச்சயமா மதிக்கு என் காதலை புரிய வச்சிடுவேன்..”
“சரி.. நீ நாளைக்கு கிளம்பி அந்த ஷூட்டிங்க்கு போயிடு.. நான் மதி சிஸ்டருக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்..” சொல்லிவிட்டு சிரித்தவனை இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு இருந்தாள் பார்கவி..
தீரன் அங்கு இணைப்பைத் துண்டித்து இருந்தான்.. “இவ எதுக்கு இப்படி முறைக்கிறா?” என்று பார்கவியை கேள்வியோடு பார்த்தவனிடம் “தீரா அண்ணா ஷூட்டிங் போகப் போறாங்க.. ஸ்டண்ட் பண்ண போறாங்க.. சார் அதை மதிக்கிட்ட சொல்ல போறீங்க.. அதுவும் ஃபோன் பண்ணி.. உடனே மதி படபடன்னு ஓடி வந்துருவா.. இதான் உங்க பிளானா?”
பார்கவி கேட்க “ஐயோ என்னோட சேர்ந்து சேர்ந்து நீயும் ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டு இருக்க பாரு பவி.. சொல்லாமயே எல்லாத்தையும் புரிஞ்சுகிட்ட..” பார்கவியின் கன்னத்தைக் கிள்ளி பாண்டி சொல்ல அவன் கையை தட்டி விட்டவள் “நான் எப்பவுமே ஸ்மார்ட்டா தான் இருக்கேன்.. ஆனா நீயும் தீரா அண்ணனும் தான் மொக்கையா பிளான் பண்ணிட்டு இருக்கீங்க..”
அவன் சொன்னதும் முனுக்கென ரோஷம் வந்தது அவனுக்கு.. “எவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ பெரிய பிளானை போட்டு வச்சிருக்கோம்.. என்ன ரொம்ப சாதாரணமா மொக்கைன்னு சொல்லிட்ட..?”
“பின்ன.. தீரா அண்ணா ஷூட்டிங் போய் ஸ்டண்ட் பண்றாருன்னு நீ ஃபோன் பண்ணி சொன்னா மதி அதை நம்பனும் இல்ல..? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் பண்ணி தான் இதை பண்றீங்கன்னு மதிக்கு புரியாதுன்னு நினைக்கிறியா..? இல்ல அப்படியே புரியாம மதி வந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனா என்ன நடக்கும்? அந்த ஷூட்டிங்ல ஸ்டண்ட் பண்ண விடாம தீரா அண்ணாவை திரும்பி வீட்டுக்கு அனுப்பிட்டு உன்கிட்ட நீ எடுக்கிற படத்துல அவரை ஹீரோவா நடிக்க வைங்கன்னு சொல்லிட்டு போயிருவா.. அவதான் தீரா அண்ணாவை லவ் பண்றேன்னு ஏற்கனவே சொல்லிட்டாளே.. அதனால உரிமையோட வந்து இதை சொல்லிட்டு போயிருவா.. இந்த பிளான்னால இதை தவிர வேற எதுவும் நடக்காது.. நீ நினைக்கிற மாதிரி 15 நாள் வீட்டுல கூட்டி கிட்டு போய் எல்லாம் வச்சுக்க மாட்டா”
“ஆமால… அப்ப மதி சிஸ்டர் வர மாட்டாங்களா?”
“சான்சே இல்ல.. அதுக்கு பதிலா நான் சொல்றதை பண்ணுங்க.. அலறி அடிச்சுட்டு மதியே ஓடி வருவா..”
“என்ன..?” என்று பாண்டி கேள்வியாய் பார்க்க தன்னுடைய முழு திட்டத்தையும் சொன்னாள் பார்கவி..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 71
மருத்துவமனையில் இருந்து வீடு வந்து ஐந்து நாட்கள் ஓடியிருந்தன.. மாமி ஊருக்கு போய் இரண்டு நாட்கள் ஆகி இருந்தது.. முதல் மூன்று நாட்கள் மாமியின் சமையலை உண்டு கொண்டிருந்தவள் அவர் சென்றவுடன் யூடியூப் ஐ பார்த்து ஏனோ தானோ வென்று சமைத்து அதை சாப்பிட அந்த சாப்பாடு தொண்டை குழிக்கு மேல் இறங்கவில்லை மலருக்கு..
இந்தர் சொல்லி ஒரு டியூஷன் சென்டரில் மாலைகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் வேலையில் சேர்ந்திருந்தாள் மலர்.. காலையில் அவள் சமைத்த உணவை அவளாலேயே சாப்பிட முடியாமல் கல்லூரிக்குச் செல்பவள் வேறு வழி இல்லாமல் அங்கே கேண்டினிலே உணவு வாங்கி சாப்பிட்டாள்..
இரண்டு நாட்கள் இப்படியே வெளி உணவு சாப்பிட மூன்றாம் நாள் அது தன் கைவரிசையை காட்டியிருந்தது.. மூன்றாம் நாள் இரவு மிகுதியான வயிற்று வலியில் அவஸ்தை பட்டவன் ஏதோ மாத்திரையை வாயில் போட்டு அப்போதைக்கு உறங்கி இருந்தாள்..
அதற்கு மேல் வெளி உணவை சாப்பிட்டால் உடல் தாங்காது என்று உணர்ந்தவள் மறுபடியும் யூட்யூப் காணொளியை பார்த்து சமைக்க தொடங்கினாள்..
அதன்படியே சமைத்துக் கொண்டிருந்தவள் அதில் தேவையான அளவு உப்பை போடவும் என்று சொல்ல அது என்ன அளவு என்று புரியாமல் திருதிருவென யோசனையோடு விழித்துக் கொண்டிருக்க அதற்குள் கொதித்து இருந்த குழம்பு பொங்கி வழிய தொடங்கியது.. சட்டென அந்த பாத்திரத்தை கையால் பிடித்து அடுப்பில் இருந்து இறக்கப் போனாள் மலர்..
அந்த பாத்திரத்தின் சூடு அவள் கையை பதம் பார்த்து விட அந்த வலி தாங்க முடியாமல் அந்த பாத்திரத்தை கீழே தவற விட்டாள்.. அது கீழே விழுந்து அவள் பாதம் எல்லாம் குழம்பு சிதறி தெறித்திருந்தது..
சூடான குழம்பு காலில் பட்டதில் வலியில் துடித்து போனவள் “அம்மா..” என்று அலற பாத்திரம் விழுந்த சத்தமும் அவள் கத்திய சத்தமும் கேட்டு அவர்களுடைய இரண்டு வீடுகளுக்கும் நடுவில் இருந்த கதவை திறந்து அவள் வீட்டுக்கு வர முயன்றான் இந்தர்..
அது மலர் வீட்டு பக்கம் பூட்டி இருக்கவே வேகமாய் வாசல் பக்கம் வந்து சுற்றிக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தான்..
அங்கே சமையலறையில் ஒரு ஓரமாய் குழம்பும் பாத்திரமும் விழுந்து சிதறி கிடக்க குழம்பு தெறித்த காலில் கொப்புளங்கள் உண்டாகியிருக்க காலை பிடித்துக் கொண்டு கையை உதறிய படி “அம்மா.. வலிக்குதே.. ஸ்ஸ்.. ஆ..” என்று வலி பொறுக்க முடியாமல் அவள் கத்திக் கொண்டிருந்தாள்.. அதை பார்த்தவன் அதிர்ந்து போனான்..
“ஏய் மலரு.. என்னடி பண்ணிட்டு இருக்க?”
“ம்ம்.. கால்ல சூடா குழம்பு ஊத்துனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது.. அதான் கால்ல கொஞ்சம் ஊத்தி பார்த்தேன்.. வந்துட்டான்.. கேள்வி கேட்டுக்கிட்டு.. பார்த்தா தெரியலையா டா? ரெண்டு நாளா ஹோட்டல்ல சாப்பிட்டு நேத்தெல்லாம் வயிறு வலி.. சரி இன்னைக்கு நம்மளே சமைச்சு சாப்பிடுவோம்னு சமைச்சா ஒண்ணுமே ஒழுங்கா வரல.. கால்ல குழம்பை கொட்டி கொப்பளம் வந்தது தான் மிச்சம்..”
இந்தரோ அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாய் இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருந்த கதவின் தாழ் நீக்கி தன் வீட்டிற்கு போய் தீக்காயத்துக்கான மருந்தை எடுத்து வந்து மெதுவாக அவள் காலில் தடவி விட்டான்.. அவன் பொறுமையாய் அவள் காலில் கொப்பளித்த ஒவ்வொரு இடத்திலும் வாயால் ஊதி ஊதி தடவி விட்டதை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் சேவையில் ஒரு நொடி மயங்கி தான் போனாள்..
“எவ்ளோ அக்கறையா பொறுமையா செய்யறான்.. ம்ஹூம்.. எவளுக்கு கொடுத்து வச்சிருக்கோ..” என்று நினைத்தவள் தன் நினைப்பு போகும் விதத்தை எண்ணி ஒரு நொடி எச்சில் விழுங்கிக் கொண்டாள்.. தன் தலையிலேயே தட்டிக் கொண்டவள் “மலரு ரொம்ப தப்பா யோசிக்கிற டி..” தனக்கு தானே எச்சரித்துக் கொண்டாள்..
“ஆமா உனக்கு சமைக்க தெரியாதுன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல? நான் எனக்கு சமைக்கிறதை எடுத்துட்டு வந்து கொடுத்திருப்பேன்ல.? இந்த மாதிரி கையில கால்ல கொட்டிகிட்டு எதுக்கு நீ புதுசு புதுசா எக்ஸ்பிரிமெண்ட் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே..?”
“என்ன.. எல்லாரும் இப்படியே கேக்குறீங்க? ஏன் நான் சமையல் கத்துக்கணும்னு நினைக்க கூடாதா? அதுக்கு தான் யூடியூப் வீடியோ பார்த்து சமைக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா அதுல உப்பு தேவையான அளவுன்னு அவங்க ஏதோ ஒரு அளவு போட்டாங்க.. அதுவும் கல்லுப்பு.. அவங்க கைல எவ்வளவு வச்சிருக்காங்கன்னு அந்த வீடியோல தெரியல.. அது எப்படி போடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேனா? அதுக்குள்ள குழம்பு பொங்கி வழிஞ்சுடுச்சு..”
“அதை நீங்க எடுத்து கையாலே கீழே வெச்சீங்களாக்கும்.. அடுப்புல கொதிக்கிற குழம்பு பாத்திரத்தை எடுத்தா கை சுடும்னு உனக்கு தெரியாதா? நல்லா சமைச்ச நீ.. இரு.. உனக்கு என்ன..? இப்ப நீயே சமைக்கணும் அதானே.. நான் உனக்கு சமையல் செய்ய சொல்லி தரேன்.. அங்கிருந்து சமையல் செஞ்சு உனக்கு எடுத்துட்டு வந்து குடுக்கல.. இங்க உனக்கு சமையல் செய்ய சொல்லி கொடுத்துகிட்டே எனக்கும் சேர்த்து செஞ்சு நான் எடுத்துட்டு போகட்டுமா தாயே.. இல்ல அதுலயும் ஏதாவது ப்ராப்ளமா உனக்கு?”
“ஆமா.. உனக்கு சமைக்க தெரியுமா? நெஜமாவா டா..?”
“எல்லாம் தெரியும்.. வீக்கென்ட்ஸ்ல நானும் அண்ணாவும் தான் சேர்ந்து சமைப்போம்.. அண்ணா எனக்கு எல்லா சமையலும் கத்துக் கொடுத்திருக்கிறார்..”
“அப்படின்னா ஓகே.. நீ எப்படி எப்படி சமையல் பண்ணனும்னு சொல்லு.. நான் அப்படியே செய்றேன்.. நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் சமைச்சப்புறம் நம்ம ரெண்டு பேரும் எடுத்துட்டு போகலாம்.. ஆனா நீ உன் வீட்ல சமைச்சதை நான் எடுத்துட்டு போக மாட்டேன்..”
அவள் சொன்னதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டவன் “சரி வந்து தொலை.. சொல்லி கொடுக்கிறேன்..” என்று கடுகடுவென சொல்லிவிட்டு காய்கறிகளை எடுத்து முதலில் எப்படி நறுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து பிறகு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தான்..
அவளோ அவன் வேலை செய்யும் நேர்த்தியையும் அழகையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“ஏய் இந்தரு.. என்னடா இப்படி சமைக்கிற..? உன்கிட்ட சமையல் கத்துட்டா நான் பெரிய எக்ஸ்போர்ட் ஆயிடுவேன் போல இருக்கே.. தீரா மாமா பரவால்லடா.. உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.. எங்க அக்கா தான் என்னை செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து எதுவுமே செய்ய விடாம இப்ப பாரு.. கால்ல குழம்பை கொட்டிக்கிட்டு நிக்கிறேன்.. உனக்கு தெரியுமா.. நான் எங்கேயாவது சமையல் ரூமுக்கு போயிட போறேன்னு அக்கா சமையல் அறையை பூட்டிட்டு தான் போவா வேலைக்கு..”
உதட்டைப் பிதுக்கி கோவமாய் இருக்கும் குழந்தை போல சொல்லியவளை ரசித்து தான் பார்த்திருந்தான் இந்தர்..
“சரி விடு.. அதான் அந்த பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சு இல்ல.. அண்ணி உன்னை அவங்க தங்கையா பாக்கல.. குழந்தையா பார்த்து இருக்காங்க.. எங்க அம்மா இருந்த வரைக்கும் நான் சமையலறை பக்கமே போனது கிடையாது.. அம்மா இறந்த அப்புறம் தான் எனக்கே மனசு கேட்காம அண்ணாக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சமையல் அறைக்கு போனேன்.. எல்லா அம்மாவும் அப்படித்தான்.. அண்ணியும் உனக்கு அம்மாவா இருந்திருக்காங்க.. அதான் அப்படி.. அதனால இப்படி பொலம்புறதை விட்டுட்டு இப்ப நான் சொல்லிக் கொடுக்கிறதை ஒழுங்கா கவனிச்சு கத்துக்கோ..”
அவன் சொன்னதைக் கேட்டவள் “ஓகே ஓகே.. சரி சரி..” என்று ஏதோ பணிவான மாணவி போல அவன் முன்னே கையை கட்டி நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவனோ அவள் முகபாவனையை பார்த்து சட்டென்று சத்தமாக சிரித்து விட்டான்..
“சரியான கிராக்கு டி நீ..” அவள் தலையை இடவலமாய் ஆட்டி சொன்னவன் அன்றைய சமையலை முடித்து இருவருக்கும் எடுத்து வைக்க “அப்பாடா.. அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே.. கிளம்பலாமா..?” என்று கேட்டாள் அவள்..
“ஹலோ மேடம்.. என்ன முடிஞ்சுச்சு..? இனிமேதான் வேலையே இருக்கு.. இந்த சமையல் ரூம்ல இவ்வளவு கலவரம் பண்ணி வச்சிருக்கோமே.. இதையெல்லாம் யாரு கிளீன் பண்றது.. சாய்ந்தரம் வீட்டுக்குள்ள வரும்போது டயர்டா இருக்கும்.. அப்ப வந்து இதெல்லாம் கிளீன் பண்ணனும்னா ரொம்ப கஷ்டமா இருக்கும்.. இதெல்லாம் இப்பவே கிளீன் பண்ணிட்டு அப்புறம் கிளம்புங்க..”
“ஆமால.. ஐயோ.. நான் வேற குழம்பு வேற கொட்டி வச்சிருக்கேன்.. அதை வேற கிளீன் பண்ணனுமே..”
“அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல.. நீ மேல அடுப்பு.. சமையல் மேடை எல்லாம் கிளீன் பண்ணு.. நான் தரையில ஊத்திருக்கிற குழம்பு எல்லாம் கிளீன் பண்ணி சமையலறையை கூட்டி மாப் போட்டு தொடச்சி விட்டுடறேன்..”
இந்தர் அந்த வேலைகளை எல்லாம் முகம் சுணங்காமல் செய்தான்.. தீரன் இந்த வேலைகளை செய்வதை ஏற்கனவே அவள் அந்த வீட்டில் பார்த்திருக்கிறாள்.. இப்போது இந்தரும் அதே போல் செய்வதை பார்த்து பிரமித்து போனாள் அவள்..
“அண்ணனும் தம்பியும் ஸ்பெஷல் மேக் தான் போல.. ம்ம்..”
கொஞ்சம் கொஞ்சமாய் இந்தரை அவளையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள் மலர்..
அவள் வேலைக்கு செல்லும் டியூஷன் சென்டரில் இருந்து முன் பணமாக வாங்கி வந்த பணத்தில் அப்போதைய செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.. பேருந்தில் கல்லூரிக்கு செல்வதும் அதன் பிறகு அங்கிருந்து டியூஷன் சென்டருக்கு சென்று மறுபடியும் வீட்டிற்கு வருவதும் அவளுக்கு ரொம்பவும் சிரமமாய் தான் இருந்தது.. ஆனால் தான் அடைய வேண்டிய குறிக்கோளை நினைப்பவள் அதை பற்றி எல்லாம் பெரிதாய் யோசிப்பதில்லை.
ஆனால் இந்தருக்கு அவள் அப்படி சிரமப்படுவது கஷ்டமாக இருந்தது.. எங்கிருந்தோ ஒரு ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு வந்தவன் அதை அவளிடம் கொடுத்து “மலரு இது என் ஃப்ரெண்டோட வண்டி.. செகண்ட் ஹேண்ட் தான்.. ரொம்ப பழைய வண்டி.. இது வாங்கியே 15 வருஷம் ஆகுது.. கொஞ்சம் ஒவர் ஹாலிங் பண்ணி அவன் கொடுத்தான்.. இப்போதைக்கு இதை ஓட்டிட்டு போ.. இது ஏழாயிரம் ரூபாய்க்கு கொடுத்தான்.. மாசம் ஐநூறு ரூபா கொடுத்து அடைச்சிடலாம்னு சொன்னான்.. இந்த மாச தவளையை நான் கொடுத்துட்டேன்.. அடுத்த மாசத்துல இருந்து நீ அதை கொடுத்துடு.. கொடுக்க முடியும் இல்ல..?”
அவன் கேட்டதும் அவளோ “தேங்க்ஸ்டா.. எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ற.. இதுக்கெல்லாம் நான் என்ன செய்ய போறேன்னே தெரியல.. ஆமா.. நீ எப்படி காலேஜ் போற?”
“நான் என் ஃப்ரெண்டு வீடு வரைக்கும் பஸ்ல போயிட்டு அங்க இருந்து அவனோட வண்டியில் போறேன்..”
“இனிமே அப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம்.. என் ஸ்கூட்டிலேயே நம்ம ரெண்டு பேரும் காலேஜ் போலாம்.. வரும்போது இதுலயே வந்துடலாம்.. ஆனா நம்ம ரெண்டு பேரும் வண்டியில போகும்போது நான் தான் வண்டியை ஓட்டுவேன்.. இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிறதா இருந்தா என்னோட வா..”
அவள் சொன்னதை கேட்டவன் “கரும்பு தின்ன கசக்கிறதா என்ன?” என்று எண்ணியபடி “ஓகே தான்” என்றான்..
அதன் பிறகு இருவரும் அந்த வண்டியில் கல்லூரிக்கு போவது வாடிக்கையாயிற்று..
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 72
ஐந்து நாட்களுக்குப் பிறகு மதி தன் கல்லூரி வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாள்.. இந்தர் மதியழகியின் வகுப்பிற்கு மட்டுமின்றி எல்லா வகுப்புகளிலும் தவறாமல் இருந்து கவனித்து எல்லா பேராசிரியர்களிடமும் நல்ல பெயர் வாங்கி இருந்தான்..
பாதி வகுப்புகளை தவறவிட்டே தேருவதற்குரிய மதிப்பெண்களை எடுத்தவனாயிற்றே… இப்போது கேட்கவா வேண்டும்..? எல்லா வகுப்பிலும் அனைத்து கேள்விகளுக்கும் அவனிடம் பதில் இருந்தது.. விரிவுரையாளர்கள் அனைவரும் அவன் மாற்றத்தை கண்டு ஆச்சரியமடைந்து போயிருந்தனர்..
பார்கவியும் மதியும் அதைப்பற்றி அவர்களுக்கான அறையில் பேசிக்கொண்டு இருந்த நேரம் பார்கவியின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..
“பாண்டி என்ன இந்த நேரத்துக்கு கால் பண்ணி இருக்கான்..? சொல்லு.. பாண்டி என்ன விஷயம்?”
பார்கவி கேட்க.. இல்லை இல்லை.. அப்போதுதான் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை கேட்பது போல அவள் நடிக்க அந்த பக்கத்தில் இருந்து பாண்டி “ஏன் உனக்கு விஷயம் என்னன்னு தெரியாதா? ரியாக்ஷனை அங்க காட்டுடி பொண்டாட்டி..” என்றான் புன்னகைத்தபடி..
அவன் அப்படி சொன்னதும் இதழுக்குள் தன் சிரிப்பை மதிக்கு தெரியாமல் மறைப்பதற்குள் படாத பாடுபட்டு போனாள் பார்கவி..
அதன் பிறகு அதிர்ந்து போன முகத்தோடு “என்னது தீரா அண்ணாவா..? என்ன ஆச்சு? தலையிலயா? அவங்களை தான் ஸ்டண்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி இருந்தாங்க இல்ல..? இப்ப எதுக்கு போனார் அவர்..? என்ன பாண்டி.. இப்படி சொல்ற..? உனக்கு தான் அவருக்கு கையில அடிபட்டிருக்குன்னு தெரியும் இல்ல..? நீயாவது தடுத்திருக்கணும் இல்ல..? இப்ப எப்படி இருக்காரு..?
ஓ.. அப்படியா.. எந்த ஹாஸ்பிட்டல்? நீ வந்து என்னை கூட்டிட்டு போ பாண்டி.. நான் தீரா அண்ணனை உடனே பாக்கணும்..”
அவள் பேசிக் கொண்டே போக இங்கே மதியழகிக்கோ அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் முக பாவம் கொஞ்சம் கொஞ்சமாய் மாற பெரிய கலவரமே மூண்டு இருந்தது அவள் முகத்தில்..
“ஏ பவி.. என்னடி விஷயம்..? தீராக்கு ஏதாவது பிராப்ளமா?”
“சரி பாண்டி.. நான் ஃபோனை வைக்கிறேன்.. நான் அப்புறம் பேசுறேன் உன்னோட.. நீ வந்துடு உடனே..”
மதி பக்கம் திரும்பியவள் “மதி தீரா அண்ணா ரெண்டு நாளா அந்த பழைய படத்துல ஸ்டண்ட் பண்ண போயிருக்கிறார்.. அப்போ எதோ ஸ்டன்ட் ஆளுங்க கட்டையில அடிக்கிற மாதிரி ஒரு சீனாம்.. இவரு அவங்க அடிக்கிறதுக்குள்ள கையெடுத்து தடுக்கணும்.. ஆனா எடுக்குற நேரத்துல கை வலிச்சு அதனால அவரால தடுக்க முடியல.. கட்டை தலையில பட்டு கொஞ்சம் இல்ல.. நிறைய ரத்தம் போயிடுச்சாம்.. இப்போ ஹாஸ்பிடல்ல ஐசியூல இருக்காராம்..”
அவள் சொன்னதுதான் தாமதம்.. மதியின் முகம் இருண்டே போனது..
“எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்லி இருப்பேன்.. 15 நாளைக்கு முன்னாடி போகாதீங்கன்னு.. இந்த மனுஷன் யாரு சொல்றதையாவது கேட்கிறாரா? பாரு.. இப்ப என்ன ஆச்சுன்னு.. பவி.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத.. கொஞ்சம் நீ இருந்து என் கிளாஸ் எல்லாம் பார்த்துக்கிறியா? நீ சாயங்காலம் வந்து தீராவை பாரு பவி.. நான் இப்போ உடனே போய் அவரை பார்க்கணும்..”
படபடவென மது பேச “எனக்கு தெரியும் மதி.. நீ தீரா அண்ணா மேல உயிரையே வச்சிருக்கே.. அப்புறம் ஏண்டி உனக்கு இந்த வெட்டி பிடிவாதம்? சரி.. நீயே போயிட்டு வா.. லீவு சொல்லிட்டு நீ ஹாஸ்பிடலுக்கு போ.. நான் சாயந்திரம் வந்து தீரா அண்ணனை பார்க்கிறேன்..”
அவள் படபடவென என்ன செய்வது என்று தெரியாமல் தன் பையை எடுத்தவள் திரும்பவும் அதை கீழே வைத்துவிட்டு மறுபடியும் வேகமாய் முதல்வர் அலுவலகம் நோக்கி நடந்து பிறகு திரும்ப வந்து ஒரு பேப்பரையும் ஒரு பேனாவையும் எடுத்து விடுமுறை கடிதத்தை எழுத தொடங்க அவள் கைகளோ நடுங்கிக் கொண்டிருந்தது படபடப்பில்..
அவள் நிலையை பார்த்த பார்கவி மனதுக்குள் “உனக்கு எதுக்குடி இந்த பிடிவாதம்? இது தேவையா? மனசுல இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு.. இவளை…” கோபமாய் மதியை பார்த்தவள் “மதி எதுக்கு இவ்வளவு பதறுற? நீ ரொம்ப டென்ஷனா இருக்க.. இரு.. அந்த லீவு லெட்டரை நான் எழுதுறேன்.. நீ ஒரு சைன் பண்ணிட்டு போ.. இந்த பேப்பர்ல..” என்றாள்..
மதியும் அந்த காகிதத்தில் ஒரு கையெழுத்தை போட வேகவேகமாய் அதன் மேல் விடுமுறை கடிதத்தை எழுதிய பார்கவி அதை கொண்டு போய் முதல்வர் அறையில் தானே மதியின் சார்பாக கொடுத்துவிட்டு திரும்பி வந்து அவளை அழைத்துக் கொண்டு அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்..
மதியும் ஆட்டோவில் ஏறியவுடன் “அண்ணா ப்ளீஸ்.. கொஞ்சம் சீக்கிரம் போங்க அண்ணா..” என்க “ஏம்மா.. இதுக்கு மேல ஃபாஸ்டா போனா ஆக்சிடென்ட் தான் ஆகும்.. ஏம்மா இவ்வளவு படபடன்னு இருக்க.. யாருக்கு என்ன ஆச்சு?”
“அது.. என் புருஷன் அடிபட்டு ஹாஸ்பிடல் இருக்காருண்ணா..”
“ஓ.. உன் புருஷனை அவ்வளவு லவ் பண்ற போல.. இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல போய்டலாம் கவலைப்படாத கண்ணு..”
சொன்னபடி ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே அந்த மருத்துவமனையை அடைந்திருந்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.. அவருக்கு பணத்தை கொடுத்து விட்டு வரவேற்பறைக்கு வந்து தீரன் இருந்த அறையைப் பற்றி விசாரித்தவள் வேகமாய் படி ஏறி அவன் இருந்த அறைக்கு போக நடுவில் தடுக்கி கீழே விழுந்தாள்..
மேலிருந்து அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாண்டியும் தீரனும்..
அவள் வந்தது தெரிந்தவுடன் பாண்டி அவனை சென்று அவசர சிகிச்சை பிரிவிலிருந்த அறையில் படுக்க சொல்ல அதே நேரம் மதி கீழே படியில் தடுக்கி விழவும் “மதி..” என்று பதறி போய் வேகமாய் படி இறங்கி போக எத்தனித்தான் தீரன்..
அதற்குள் அவனை பிடித்து இழுத்த பாண்டி “அய்யோ தீரா.. என்ன பண்ணிட்டு இருக்க..? முதல்ல உள்ள போய் படு… மதிக்கு ஒன்னும் இல்ல.. நீ பதறி எல்லாத்தையும் சொதப்பி விட்டுறாத தீரா..”
அப்போதுதான் தான் என்ன செய்ய வேண்டும் என்று தெளிந்தான் தீரன்.
வேகமாக உள்ளே சென்று தலையில் கட்டோடு படுத்துக் கொண்டிருந்தான் அவன்..
எப்படியோ படி ஏறி வந்து அவன் இருந்த அறையை அடைந்த மதி வாசலில் பாண்டியை பார்த்து “அண்ணா அவரு..” என்க “உள்ளதான்மா இருக்கான்.. தலையில பலமா அடிபட்டு இருக்கு..”
அதைக் கேட்டவள் கோவமாக “ஏன்ணா அவரை தான் ஸ்டண்ட் பண்ண போக வேண்டாம்னு அவ்வளவு தூரம் சொல்லி இருந்தேன் இல்ல..? 15 நாளைக்கு குறைஞ்சு வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லி இருந்தேனா இல்லையா? நீங்களாவது அவரை தடுக்க கூடாதா..?” என்றாள்..
பாண்டி “என்னமா பண்ண சொல்ற? இப்ப அந்த வீட்ல இந்தரும் இல்ல.. தனியா எவ்வளவு நேரம் ஒரு மனுஷன் உட்கார்ந்து இருப்பான்.. நீயும் உங்க அப்பாவை கூட்டிட்டு உங்க பழைய வீட்டுக்கு போயிட்டே.. அவன் என்னதான் பண்ணுவான் சொல்லு.. அங்க வீட்ல தனியா இருக்கறதை விட இங்க வந்து நாலு மனுஷங்களோட இருந்தா மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு நெனச்சி இருக்கான்.. நான் ஏதாவது சொன்னா இதை சொல்லியே என் வாயை அடைச்சுடறான்.. எனக்கும் அவனை பார்க்க பாவமா இருக்குமா.. அவன் சொல்றதும் நியாயம் தானே?”
இப்போதுதான் தன் தவறு உரைத்தது அவளுக்கு.. அவன் கை சரியாகும் வரை அவனை பார்த்துக்கொள்வேன் என்று நான்கு நாட்கள் விடுமுறை எடுக்க தயாராக இருந்தவள் அவனை கோவத்தில் தனியாக விட்டுவிட்டு தன் தந்தையோடு தன் வீட்டிற்கு போனதில் எந்த நியாயமும் இல்லை என்று புரிந்தது அவளுக்கு..
“நான் போய் பார்க்கலாமா அண்ணா..”
“போம்மா… போய் பார்..” என்றான் பாண்டி..
உள்ளே போனவள் அவன் கையிலும் தலையிலும் கட்டோடு படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து கண்கள் குளமாக அவன் அருகில் ஓடி சென்று தலையை வாஞ்சையாய் வருடி “ஏன் தீரா..? ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்துறீங்க..? உங்களை இப்படி பார்க்க கூடாதுன்னு தானே அவ்வளவு தூரம் நீங்க ஷூட்டிங்க்கு போகக்கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன்.. கடைசில கையில இருந்த அடியோட இப்ப தலையிலும் அடிபட்டுக்கிட்டு இருக்கீங்க.. என் மேல தான் தப்பு.. நான் உங்களை விட்டுட்டு போயிருக்க கூடாது..” கண்களில் கண்ணீர் வழிய துடித்துப் போயிருந்தாள் அவள் அவன் நிலையை பார்த்து..
மெல்ல கண் திறந்த தீரன் அவள் நிலையை பார்த்து சற்றே அதிர்ந்து தான் போனான்..
உயிர் போகும் வலியோடு அழுது கொண்டிருந்தவளை அவனால் காண முடியவில்லை.. அவன் கைகளோ அவள் அழுகையை நிறுத்த அவள் கண்களை துடைத்து ஆறுதல் சொல்ல பரபரத்தது..
மெல்ல “மதி மதி.. எனக்கு ஒன்னும் இல்ல மதி.. நான் நல்லா தான் இருக்கேன்..” என்க அப்போது உள்ளே வந்த பாண்டி “அய்யய்யோ தீரா சொதப்பிருவான் போல இருக்கே..” என்று எண்ணியபடி வேக வேகமாக அவர்கள் அருகில் வந்து “இப்படிதான்மா சொல்லிட்டு இருக்கான்.. எனக்கு ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.. தலையில லேசா அடிபட்டு இருக்குன்னு.. ஆனா எவ்ளோ ரத்தம் போச்சு தெரியுமா? பலமா அடி விழுந்துச்சு.. பார்த்த எங்களுக்கே பொறி கலங்கி போயிடுச்சு..”
தீரனோ அவன் பேசியதை கேட்டு “டேய் ஓவரா பில்டப் கொடுக்காத டா.. அவளுக்கு ஏதாவது ஆயிரப்போகுது..” என்று மானசீகமாக கண் ஜாடையில் எச்சரிக்கை மணி அடித்தான் அவனுக்கு..
அவளோ அங்கேயே உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள்..
அவன் தோளில் தலை வைத்து “அய்யோ தீரா.. நான் உங்களை விட்டு போய் இருக்கவே கூடாது.. உங்களோடயே இருந்து உங்களை பார்த்துட்டு இருந்திருக்கணும்.. உங்களை தனியா விட போய் தானே இப்படி எல்லாம் ஆச்சு.. எல்லாம் என் தப்பு தான்..” என்று மொத்தமாய் நொறுங்கி அழுதவளை அதற்கு மேல் கண் கொண்டு காண முடியவில்லை தீரனால்..
“மதி அழாத மதி.. ப்ளீஸ்.. எனக்கு ஒன்னும் இல்ல மதி.. இங்க பாரு.. இங்க பாரு..” என்று அவன் தோள்மேல் படுத்திருந்தவளை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன் தன் தலையில் இருந்த கட்டை அவிழ்த்து அவனுக்கு அடிபடவில்லை என்று காண்பித்தான்..
அவ்வளவுதான்..
கண்ணீரில் கலங்கி இருந்த அவளின் கண்கள் சிவப்பேறி கோப நிறத்தை பூசிக் கொண்டன..
“அப்போ அடிபட்ட மாதிரி நடிச்சீங்களா? நடிச்சீங்களா?” என்று கேட்டபடி அவனை மார்பிலும் தோளிலும் அடி வெளுத்தவள் “உயிரே போயிருச்சு டா எனக்கு.. என்ன நெனச்சிட்டு இருக்க நீ..? என்னை போட்டு பாடா படுத்துற.. எவ்ளோ பதறி ஓடி வந்தேன் தெரியுமா? பார்கவியை கேளு.. உன்னை பார்க்கிற வரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்ல.. எவ்வளவு கொழுப்பு இருந்தா அடிபட்ட மாதிரி இப்படி நடிச்சிருப்ப..” என்று மறுபடியும் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை எடுத்து அதை வைத்து அவனை சரமாரியாக அவள் அடிக்க அவனோ அங்கிருந்து எழுந்து ஓடினான்..
“அய்யோ மதி.. சொல்றதை கேளு.. ஒரு நிமிஷம்.. இரு இரு இரு..” என்று தடுத்துக் கொண்டிருக்க அவளோ அடங்காமல் மேலும் மேலும் அவனை அடித்துக் கொண்டே இருந்தாள்..
அந்த அறையின் மூலைக்கு மூலை ஓடியவன் பாண்டியை பார்த்து “டேய் பாண்டி காப்பாத்துடா..” என்க பாண்டியை திரும்பி பார்த்த மதி “ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் போடுறீங்களா?” என்று அவனையும் முறைக்க அவன் “அய்யய்யோ.. நான் எஸ்கேப்..” என்று சொல்லி அந்த அறை கதவை மூடிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தே இருந்தான்..
மதியோ தீரனை துரத்தி துரத்தி அடித்துக் கொண்டே இருந்தவள் ஒரு நிலையில் மேலும் கீழுமாய் மூச்சு வாங்க இடுப்பில் கையை ஊன்றி அவனையே முறைத்துப் பார்த்திருந்தாள்..
அவனோ மெதுவாக சுட்டுவிரலை மேல் நோக்கி நீட்டியபடி அவள் முன்னால் கையை நீட்டியவன் “இங்க பாரு அடிக்காத.. நான் சொல்றதை ஒழுங்கா கேளு.. நீ உன் பாட்டுக்கு என்னை விட்டுட்டு போயிட்டே.. நான் உன்னை விரும்புறேன்னு சொன்னாலும் நம்பல.. எனக்கு அந்த வீட்ல தனியா இருக்க முடியல.. உன்னை எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுன்னு தெரியல.. அதான் இப்படி ஒரு நாடகம் போட வேண்டியதா ஆயிடுச்சு.. இதுல என் தப்பு மட்டும் இல்ல.. உன் தப்பும் இருக்கு.. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு..” அவன் சொல்ல சொல்ல அவளுக்கு இன்னும் அவள் மேல் அவன் தவறு என்று சொல்லவும் கோபம் உச்சிக்கு ஏறியது..
“சார் என்னை லவ் பண்ணுறீங்களா? லவ் பண்றீங்களா? லவ் பண்றீங்களா?” என்று சொல்லி மறுபடியும் அவன் அருகில் வந்து அவனை அடித்தவள் “அப்ப எதுக்குடா விவாகரத்து கொடுக்கிறேன்னு சொன்னே.. எப்படிடா உன்னால அந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சுது?” என்று அவன் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கினாள்..
மறுபடியும் சரமாரியாக அவள் அவனை அடி வெளுத்து வாங்க “என்ன மதி.. மரியாதை ரொம்ப குறையுது..?” அவன் மெதுவாய் இழுத்தபடி கேட்க “சார் செஞ்ச வேலைக்கு மரியாதை வேற கொடுக்கணுமா மரியாதை.. இதோ கொடுக்கிறேன் வாங்கிக்கடா..” என்று அடிகளை மழையாய் பொழிந்தாள் அவன் மேல்..
“அய்யோ மதி.. நீ ப்ரொஃபசர் தான்.. அதுக்காக போட்டு இந்த அடி அடிக்காதடி.. இதுக்கு இந்த ஸ்டண்ட் அடிக்கிற பசங்களே தேவல போல.. பேசாம நான் அவங்க கிட்டயே போய் அடி வாங்கிக்கிறேன்..”
அவளோ மறுபடியும் தீவிரமாக முறைத்தாள் அவன்..
“ஏம்மா இவ்வளவு ஆசையா பாக்குற..?”
“வேற எதுக்கு பார்க்கிறாங்க.. நல்லா இன்னும் எப்படி எல்லாம் மொத்தமா உன்னை வெளுக்கலாம்னு தான் யோசிக்கிறேன்..” என்று சொல்லி மறுபடியும் அவனை அடிக்க போக அவளின் இரண்டு கைகளையும் தன் கைகளால் சிறை பிடித்தவன் அவளை அப்படியே திருப்பி சுவற்றில் சாய்த்து “போதும் மதி.. நான் சொல்றதை கேளு.. நம்புடி.. நான் உன்னை நிஜமாகவே விரும்புறேன்.. உனக்கு தெரியும் இல்ல..? என் தம்பி மேல நான் உயிரையே வச்சிருக்கேன்.. அவன் மேல சத்தியமா சொல்றேன்.. உன்னை முதல் முதல்ல பார்த்த நிமிஷத்திலேயே என் உயிரில போய் உறைஞ்சுட்டடி நீ.. எனக்கானவ நீன்னு என் மனசு என்கிட்ட அடிச்சு சொல்லுச்சு.. ஆஞ்சநேயர் பக்தனா இருந்தவனை அப்படியே அந்தர் பல்ட்டி அடிக்க வச்சு உன் பக்தனா மாத்துனது நீ தான் மதி..”
அவளும் அவன் கைப்பிடியில் தன் கை கையை கொடுத்துவிட்டு உதட்டை பிதுக்கிய படி “இல்லை.. நான் நம்ப மாட்டேன்.. அப்போ இத்தனை நாள் ஏன் என்னை விரும்புறேன்னு சொல்லவே இல்ல.. இப்ப கூட நான் கேட்ட அப்புறம் தானே சொன்னே.. பொய் சொல்லாத.. போடா தீரா..”
“வரவர என்னடி மரியாதை ரொம்ப குறையுது.. சரி பரவால்ல.. நீ அப்படியே கூப்பிட்டுக்கோ.. அதுவும் கிக்கா தான் இருக்கு.. ஏன் உனக்கு தெரியாதா மதி..? இத்தனை நாள் நான் ஏன் உன்கிட்ட சொல்லலைன்னு.. நீ படிச்ச பொண்ணு ப்ரொஃபசர்.. நான் படிப்பு வாசனையே இல்லாதவன்.. முரடன்.. சண்டை போடுறவேன்.. எனக்கு இங்கிலீஷ்ல நாலு வார்த்தை சேர்ந்தாப்ல பேச கூட வராது.. இதுல நான் எப்படி உன்கிட்ட தைரியமா நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்ல முடியும்? உன் தகுதி உன்னோட உயரம் இதெல்லாம் அப்படி உன் கிட்ட சொல்றதிலிருந்து என்னை முழுசா தடுத்துடுச்சு.. என்னை காதலிக்கிறதுக்கு உனக்கு என்னடா தகுதி இருக்குனு நீ கேட்டுட்டா.. அந்த பயம் தான் என் காதலை உன்கிட்ட சொல்றதுல இருந்து தடுத்துருச்சு..”
“ஆனா இப்ப சொல்றேன்.. ஐ லவ் யூ மதி… நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை.. என்னை விட்டுட்டு போயிடாத மதி.. எனக்கு நீ வேணும்.. வாழ்க்கை முழுசும் வேணும்.. இருப்ப இல்ல?”
ஏக்கம் நிறைந்த கண்களோடு அவன் கேட்டது தான் தாமதம் தன் காலை எக்கி அவன் இதழோடு தன் இதழை சேர்த்து இருந்தாள் பாவை அவள்..
அவன் கேட்ட கேள்விக்கு அவள் எந்த பதிலையும் வார்த்தைகளால் கூறவில்லை.. ஆனால் அவளின் வாய்மொழி அவன் இதழோடு அவள் மனதில் இருந்த அவனுக்கான பதிலை அழுத்தமாய் சொல்லி அவன் உடலுக்குள் அந்த பதிலுக்கான இன்பமான அதிர்வை பாய்ச்சிக்கொண்டிருந்தது..
சிறிது நேரம் அவள் இதழ் அவனுடன் சண்டை போட்டு இருக்க தன் பங்குக்கு அவனும் எதிர் சண்டை போட்டான் அவள் இதழோடு..
சிறிது நேரத்தில் மூச்சு எடுக்க ஒருவரை விட்டு மற்றொருவர் விலக அதற்கு மேல் ஒரு நொடியும் அவனிடமிருந்து தள்ளி இருக்க விரும்பாதவள் போல் அவன் மார்பில் முகம் புதைத்து இறுக்கமாய் கட்டிக் கொண்டாள் மதி..
அவன் மார்பில் அழுத்தமாய் தன் அதரத்தை பதித்தவள் “ஐ லவ் யூ தீரா ஐ லவ் யூ டு த கோர்.. நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படித்தான் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. எனக்கு உங்க கிட்ட பிடிக்காத ஒரே விஷயம் முதல்ல பேசுவீங்களே அந்த சென்னை பாஷை தான்.. ஏன்னு தெரியல.. எனக்கும் அதுக்கும் ஒத்து போகல..”
அவள் சிணுங்கியபடி சொல்ல “அது தான் இப்ப எல்லாம் நான் பேசுறதுல அந்த வாசனையே வரதில்லையே மேடம்.. இதெல்லாமே உங்களுக்காக தானே..?”
“ஆமா இல்ல..? உங்க தம்பிக்காக கூட மாறாதவர் எனக்காக தான் உங்க பாஷையை மாத்திக்கிட்டீங்க.. இப்ப யோசிச்சு பார்த்தா நீங்க செஞ்ச ஒவ்வொரு விஷயமும் என் மேல எவ்வளவு காதலோட செஞ்சி இருக்கீங்க புரியுது.. ஆனா அப்ப இந்த மரமண்டைக்கு எதுவுமே உரைக்கல..”
மறுபடியும் சிணுங்கிய படி சொன்னவளின் நாடி பிடித்து முகம் நிமிர்த்தி “அதான் இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல.. சரி வா.. வீட்டுக்கு போலாம்.. இனிமே உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நான் பிரிஞ்சு இருக்கிறதா இல்லை.. முதல்ல உங்க வீட்டுக்கு போய் மாமாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு.. இல்ல இல்ல நம்ம வீட்டுக்கு போகலாம்..”
அவளோ இடவலமாய் தான் அப்போதும் தலையாட்டினாள்..
“என்ன மதி..? இன்னும் என்ன பிரச்சினை வீட்டுக்கு வர்றதுக்கு?”
அவளை இறுக்கி அணைத்தபடி அவன் கேட்க அவன் சட்டை பொத்தானை திருகியபடி “தீரா.. இந்தர் அந்த வீட்டுக்கு திரும்பி வராம நான் வரமாட்டேன்.. இந்தர் என்னிக்கு அந்த வீட்ல வந்து நம்மளோட நம்ம மகனா இருக்கானோ.. அப்பத்தான் நானும் அந்த வீட்டுக்கு வருவேன்.. இல்லனா உங்க அம்மா என் கனவில வந்து என் புள்ளையை வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டு நீ வந்து இங்க ஜாலியா இருக்கியான்னு என்னை கேட்டு கேட்டு மிரட்டுவாங்க..”
“சோ.. இப்ப அதுக்கு என்ன பண்ணலாம் மேடம்.? அப்ப இனிமேலும் இந்தர் வர வரைக்கும் தனித்தனியா இருக்கணுமா? சத்தியமா என்னால முடியாதுடி. செத்துருவேன்..”
அவன் சொன்னதைக் கேட்டு அவன் வாயை சட்டென மூடியவள் அவன் கன்னத்தில் செல்லமாய் ஒரு அடியும் போட்டாள்..
“இனிமே செத்துருவேன் அது இதுன்னு பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. என்னாலயும் உங்களை விட்டு இருக்க முடியாது தான்.. ஆனா அதுக்காக இந்தர் வராம நான் அந்த வீட்டுக்கும் வர மாட்டேன்.. இப்ப என்ன பண்றது?”
அப்போது பாண்டி மெதுவாக கதவை லேசாக திறந்து உள்ளிருந்த நிலைமை என்னவென்று தெரிந்துகொள்ள எட்டிப் பார்த்தான்..
இருவரும் கட்டியணைத்துக் கொண்டு நிற்பதை பார்த்தவனுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது..
“அப்பாடா.. எங்க இன்னும் ரெண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருப்பீங்களோன்னு நெனைச்சேன்.. பரவால்ல செட் ஆயிட்டீங்களா.?” என்றவனை தீவிரமாய் முறைத்த மதி “பாண்டிணா உங்களை என்னால அடிக்க முடியாது.. இருங்க இருங்க பார்கவி கிட்ட சொல்லி நல்லா ரெண்டு போட சொல்றேன்..”
“ம்க்கும்.. கிழிஞ்சிது.. இந்த ஐடியாவை கொடுத்ததே அவதான்.. அவ என்னை போடுவாளா?” பாண்டி படாரென உண்மையை உடைத்து விட தீரனோ “ஏன்டா பாவம் அந்த பொண்ணை கோத்து விட்ட, இப்ப மதிப்போய் அவளை ஒரு வழி ஆக்கப்போறா..”
“கூட்டு சதியா மூணு பேரும் சேர்ந்து.. அவ வரட்டும்.. நான் எப்படி துடிச்சேன்னு அவ பார்த்த அப்புறம் கூட என்கிட்ட சொல்லல.. இன்னைக்கு இருக்கு அவளுக்கு..” என்று இடுப்பில் சேலை முந்தானையை சொருகியவளை பார்த்து “பார்கவி எங்கேயாவது வேற ஊருக்கு ஓடிப்போய்டலாமா ரெண்டு பேரும்..” என்று மானசிகமாய் பேசிக் கொண்டிருந்தான் பாண்டி பார்கவியிடம்..
“சரி ரெண்டு பேரும் எப்ப வீட்டுக்கு கிளம்புறீங்க?” என்று கேட்க “இல்லடா.. அவ வீட்டுக்கு வர மாட்டாளாம். இந்தர் வராம மறுபடியும் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா.. என் தலையில தனியா தான் இருக்கணும்னு எழுதி இருந்தா யாரு என்ன பண்ண முடியும்?” புலம்பினான் தீரன்..
“ஏய் தீரா.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்.. அவ்வளவுதானே.. அதற்கு உங்க வீட்டுக்கு தான் போகணும்னு அவசியம் இல்லையே.. நீ மதி வீட்டுக்கு போலாம் இல்ல?”
அதைக் கேட்டு இருவரின் முகமும் மலர்ந்தது.. “ஆமா இல்ல.. இது ஏன் தோணவே இல்ல.. தேங்க்ஸ்டா பாண்டி.. வாழ்க்கையில் உருப்படியா நீ செஞ்ச ரெண்டே வேலை பார்கவியை கல்யாணம் பண்ணிக்கிட்டது.. இன்னொன்னு இப்ப நீ கொடுத்த ஐடியா..”
தீரன் சொல்ல “இன்னொரு விஷயம் கூட அண்ணா சூப்பரா செஞ்சாரு..” என்றாள் மதி..
“என்ன?” என்று தீரன் கேள்வியாய் பார்க்க “அவரோட படத்துல உங்களை ஹீரோவாக்குனது..”
“ரெண்டு பேருக்கும் இப்பதான் அது ஞாபகம் வருதா? ஏன்மா.. நீ உன் பாட்டுக்கு இனிமே தீரனோட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டே.. ரெண்டு பேரும் என்கிட்ட ஒன்னு கமிட் பண்ணுனிங்க.. ஞாபகம் இருக்கா..? என் படம் ஷூட்டிங் ஆரம்பிச்ச உடனே ஒவ்வொரு சூட்டிங்க்கும் நீயும் வருவேன்னு சொன்னியே.. சுத்தமா மறந்து போச்சு இல்ல உனக்கு..?”
“நீ வராம போயிருந்தா தீரன் நடிச்ச மாதிரி தான்..”
“அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் வந்திருக்காது பாண்டி… நான் மதி முகத்தை கற்பனை பண்ணி அந்த ஹீரோயினோட பட்டையை கிளப்பியிருப்பேன்..” தீரன் சொல்ல மறுபடியும் முகம் மாறினாள் மதி..
“அப்ப சாருக்கு நான் வேண்டாம்.. ஹீரோயினோட நீங்களாவே ரொமான்ஸ் பண்ணிடுவீங்க.. அப்படித்தானே?”
“அது அது.. உன் முகத்தை கற்பனை பண்ணி தானே ரொமான்ஸ் பண்றேன்னு சொன்னேன்..”
தீரன் மெதுவாய் இழுக்க “தீரா அன்னைக்கு நான் உங்ககிட்ட சொன்னது தான் இப்பவும்.. கட் சொன்ன மறு நிமிஷம் என் முகமும் கட்டாயிடணும்.. ஆனா எனக்கு நம்பிக்கையே இல்லை.. ஆஞ்சநேயர் பக்தனுல இருந்து ராமனா மாறி இப்போ என்னை காதலிக்க ஆரம்பிச்ச அப்புறம் கிருஷ்ணனா மாறிட்டீங்கனா நான் என்ன பண்றது?”
அவள் அழுது விடுவாள் போல இருந்தது..
பாண்டி இடைப்புகுந்து “தீரனே நெனச்சாலும் அவனால அப்படி ஒன்னை செய்ய முடியாது.. அவன் உயிர்ல துடிப்பா ஓடிட்டு இருக்கே நீ.. உன்னை விட்டுட்டு அவன் இன்னொரு பெண்ணை பார்த்தான்னா அவன் துடிப்பு நின்னுடும்.. எந்த பொண்ணாலயும் உன் இடத்துக்கு வர முடியாது.. அதனால கவலைப்படாத.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.. அப்படியே இருந்தாலும் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.. அப்படி விட்டுவிடுவோமா தீரனை.. அந்த ஸ்டன்ட் மேன்களை வச்சு அடிவெளுத்துட மாட்டோம்..?”
“அது சரி.. இப்ப அண்ணனும் தங்கச்சியும் ஒன்னா சேர்ந்துட்டீங்களா? என் சைடு கொஞ்சம் வீக் தான்.. சரி வா மதி உங்க வீட்டுக்கு போலாம்..”
“ஆனா அப்பாகிட்ட சொல்லணுமே..” அவள் முகத்தில் வெட்க சாயல்..
“அதெல்லாம் என் மாமா கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ அமைதியா வா.” என்று சொல்லி அவள் தோளில் அணைத்தார் போல் கை வைத்து அவளை அழைத்துக்கொண்டு முகம் முழுக்க புன்னகையோடு அந்த மருத்துவமனையை விட்டு வெளி வந்தான் தீரன்..
ஏழு வருடங்களுக்குப் பிறகு..
தீரனும் மதியும் அவள் வீட்டில் ஒன்றாக இருந்தார்களே தவிர அவர்கள் வாழ்க்கையை.. தாம்பத்தியத்தை.. இதுவரை தொடங்கவில்லை..
முதலில் பேசியது போலவே இந்தரும் மலரழகியும் தங்களோடு தங்கள் வீட்டில் வந்து சேர்ந்த பிறகு தான் தங்கள் வாழ்வை தொடங்குவது என்று முடிவே செய்திருந்தனர்..
ஆனால் இருவர் முகத்திலும் எள்ளளவும் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை.. தாம்பத்தியம் நடக்கவில்லையே தவிர இளம் காதலர்கள் போல் அவ்வப்போது முத்தமிட்டு கொள்வது அணைத்துக் கொள்வது என்று இடை இடையே இருவருக்குள்ளும் நடக்கும் காதல் சீண்டல்களுக்கு எல்லையே இருக்கவில்லை.. அவர்கள் மனம் முழுதாய் நிறைவடைந்திருந்தது..
என்னருகில் எப்போதும் நீ இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார்கள் இருவரும்..
இந்தர் ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாய் வேலை செய்து கொண்டே தன் படிப்பை முடித்து அதன் பிறகு ஒரு பெரிய கார் கம்பெனியில் மேலாளராய் ஆகி இருந்தான்..
மலரழகி எம்பிபிஎஸ் முடித்து எம் எஸ் படித்துக்கொண்டு இருந்தாள்.. மாலை வேளையில் ஒரு சிறிய க்ளினிக்கில் பொதுநல மருத்துவராய் பணியேற்று இருந்தாள்..
இன்னும் ஆறு மாதத்தில் எம் எஸ் முடித்து அவள் தனக்கென ஒரு கிளினிக் தொடங்கி விடுவாள்.. இன்றும் இந்தரும் அவளும் அதே வீட்டில் இருந்து தான் கல்லூரிக்கும் வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர்.. அதுவும் அதே ஸ்கூட்டியில் தான்..
கீழ் வீட்டில் மாமி மாமா இருக்கும்போது மாமியின் சமையலை சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் அவரிடம் சாப்பிடும் உணவுக்கான சமையல் குறிப்பு கேட்டு தானும் அதை தன் வீட்டில் முயற்சிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தாள் மலர்..
மாமி மாமா இல்லாதபோது இந்தர் மலர்
இருவரும் அடித்து பிடித்துக் கொண்டு சமையல் செய்வது ஒருவரோடு ஒருவர் கத்தி கத்தி வம்பு இழுத்து சண்டை போட்டுக் கொள்வது என்று நித்தம் அவர்களுக்குள் நடந்த அழகான சிறு சிறு சண்டைகளும் சீண்டல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன..
ஆனால் இந்தர் தன் காதலை தன் மனதுக்குள் தான் வைத்திருந்தான்.. அவளிடம் தன் மனதை திறந்திருக்கவில்லை அவன்..
இன்றைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்க தான் வேலையில் இருந்து வர சற்று தாமதமாகும் என்று இந்தர் சொல்லி இருக்க ஸ்கூட்டியில் தான் மட்டும் கிளம்பி வேலைக்கு சென்று இருந்தாள் மலர்.. அப்போது அவள் போகும் வழியில் நான்கு பேர் நின்றிருக்க அவர்களை பார்க்க தறுதலைகளாய் திரிபவர்கள் போல் இருந்தார்கள்..
அவர்கள் அவளை வழிமறித்து வம்பு செய்ய அவள்தான் தைரியமான பெண்ணாயிற்றே.. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி “என்னடா வம்பு பண்றீங்களா? போலீஸ்ல சொல்லி ஈவ் டீஸிங் கேஸ்ல உள்ள போட்டுருவேன்.. வழி விடுங்கடா மரியாதையா..” தைரியமாக பேசினாள் அவர்களிடம்..
“நீ பெரிய ஜான்சி ராணி.. ரொம்ப திமிர் தாண்டி உனக்கு.. அப்படியே பயந்து வண்டியில ஏறி ஓடிடுவேன்னு பார்த்தா எதிர்த்து நின்னு திமிரா பேசிகிட்டு இருக்க.. டேய் பாப்பா ரொம்ப தான் துள்ளுது.. நம்ம யாருன்னு கொஞ்சம் காட்டுவோமா?”
ஒருவன் பேசிக் கொண்டே அவள் மேலாடையில் கை வைக்க அவன் முகத்திலேயே ஓங்கி ஒரு குத்து விட்டாள் மலரழகி..
அதில் இரண்டு அடி பின்னால் போய் விழுந்தான் அவன்..
“அவளை புடிங்கடா. இன்னிக்கு அவளை சும்மா விடக்கூடாது..” என்று மற்றவர்களுக்கு அவன் குரல் கொடுக்க மூவரும் ஒன்றாக சேர்ந்து அவளை போய் பிடித்துக் கொள்ள அவர்களிடம் இருந்து திமிறியவள் ஒருவொருவராய் இடி போல அடித்து சாய்த்து இருந்தாள் கீழே..
நால்வரும் கீழே விழுந்திருக்க “பொண்ணுன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சாடா? கொன்னுடுவேன்..” அவர்களைப் பார்த்து சீறியவள் கையை தூசு தட்டுவது போல் தட்டி சொல்லியபடி திரும்பி தன் வண்டியை நோக்கி நடக்க அந்த நேரம் அங்கே கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து அவள் பின் தலையில் ஓங்கி அடித்திருந்தான் அந்த நால்வரில் ஒருவன்..
பின் மண்டையில் அதிகமாய் வலி எடுக்க தலையைப் பிடித்துக் கொண்ட மலர் திரும்பி பார்க்க கீழே விழுந்திருந்த நால்வரும் மெல்ல எழுந்து அவளை வந்து பிடித்து எங்கேயோ இழுத்துச் சென்றனர்..
அவளுக்கு நிலைமை புரிய “டேய் விடுங்கடா..” என்று அவர்களிடம் எவ்வளவு திமிறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அரை மயக்க நிலைக்கு சென்று கொண்டு இருந்தாள் அவள்..
ஆனால் மயக்கம் போட்டு விடக்கூடாது.. இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பி போக வேண்டும்.. என்று முயன்று கொண்டு இருந்தவள் பெரும் முயற்சிக்குப் பிறகும் அவர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை..
அவளை கீழே கிடத்தி மூன்று பேர் அவளை பிடித்துக் கொண்டிருக்க அவள் மேலாடையை அவள் மேலிருந்து நீக்கிய ஒருவன் மெல்ல அவள் கன்னத்தை வருட அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு “பொறுக்கி நாயே விடுடா என்னை.. பின்னாடி இருந்து அடிக்கிறீங்க.. ஆம்பளைங்களாடா நீங்க.. தூ..” என்று அவன் முகத்தில் காறி உமிழ அவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான் அவன் அடுத்த நொடி..
அதற்குள் இன்னொருவன் “அவளை அடிக்காதடா.. மயிலிறகை ஹேண்டில் பண்ற மாதிரி ஹேண்டில் பண்ணனும்.. நீ தள்ளு.. நான் பூந்து விளையாடுறேன் பார்..” என்றபடி மற்றொருவன் இடத்திற்கு வந்தவன் மெல்ல அவள் மேனியில் படக்கூடாத பாகங்களில் கை வைத்து வருட அப்படியே கூனிக்குறுகிப் போனாள் அந்த நொடி அவள்..
அவளுக்கு தன் மேனியில் ஏதோ புழு பூச்சி ஊர்ந்து நெளிவது போல் அருவருப்பாக இருந்தது.. எப்படியாவது அந்த மூவரின் பிடியில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று அரை மயக்க நிலையிலும் போராடிக் கொண்டிருந்தாள் அவள்..
இந்தருக்கு எதிர்பார்த்ததை விட வேலை சீக்கிரம் முடிந்து விட தன் நண்பனிடம் அவன் வண்டியை கடன் வாங்கிக் கொண்டு அதில் வந்து கொண்டிருந்தவன் வழியில் ஆள் அரவமற்ற இடத்தில் மலரின் வண்டி நிற்பதை பார்த்து திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தான்..
அதன் பிறகு அந்த பக்கத்தில் இருந்த புதரில் மலரின் சத்தம் கேட்க பதறிப் போய் அங்கே ஓடினான் அவன்..
அங்கே ஒருவன் மலரின் மேல் படுத்து அவளின் கற்பை சூறையாட முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு கொலை வெறியே பிடித்துப் போனது..
வேகமாக போய் அந்த ஆளை பிடித்து தள்ளியவன் நால்வரையும் சுழற்றி சுழட்டி அடித்து ஒரு வழியாக பதம் பார்த்திருந்தான்.. மலரை அடித்த அதே கல்லை எடுத்து நால்வரையும் அடித்து வெளுத்து அவர்கள் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி வலியில் துடிப்பதை பார்த்தும் அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை..
அவர்களை மேலும் குற்று உயரும் குழு இருமாய் அடித்து போட்டவன் மலரழகிக்கு தலையில் அடிபட்டு இருந்ததை பார்த்து அவளை கையில் அள்ளிக் கொண்டு தன் வண்டியில் முன்பக்கம் அமர வைத்து தன் அணைப்புக்குள் வைத்துக் கொண்டான்.. வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அதிவேகமாக சென்று இருந்தான்..
அங்கே அவளை பரிசோதித்தார் மருத்துவர் “ரொம்ப ஆழமான காயம் எல்லாம் இல்லை.. லேசா தான் அடிச்சிருக்காங்க.. ரத்தம் ரொம்ப போகல.. கட்டு போட்டு இருக்கோம்.. ஒன் ஹவர்ல சரியாயிடுவாங்க..”
மருத்துவர் சொல்லிவிட்டு போய்விட அறைக்குள் நுழைந்த இந்தரை பார்த்தவுடன் அவள் இயல்புக்கு மாறாக கேவி கேவி அழுதாள் மலரழகி..
“என்னம்மா ஆச்சு? ஏதாவது தப்பா நடந்துடுச்சா? அவங்க உன்னை.. அப்படி இருந்தாலும் பரவால்லடா.. விட்டு தள்ளு.. என்னை பொறுத்த வரைக்கும் நீ எப்பவும் அதே மலர் தான்.. என்னோட அழகி..” என்று தன்னை மறந்து அவளை தன் காதலி என உரிமை கொண்டாடி பேசத் தொடங்கியிருந்தான் இந்தர்..
“இல்லை இந்தர்.. அவங்க என்னை எதுவும் பண்றதுக்கு முன்னாடி நீ தான் வந்து அவங்களை எல்லாம் அடிச்சு போட்டியே.. எனக்கு தெரியும் டா.. எப்படியும் நீ வந்துவிடுவேன்னு.. மனசுக்குள்ள நீ எப்படியாவது வந்துடணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. ஆனா அவனுங்க தொட்டதை நினைச்சாலே அருவருப்பா இருக்குடா.. இன்னும் கூட என் உடம்புல கம்பளி பூச்சி ஓடுற மாதிரி அப்படியே அவங்க தொட்ட இடத்தை எல்லாம் வெட்டி போட்டுக்கலாம் போல இருக்குடா.. என்னை எங்க எல்லாம் தொட்டாங்க தெரியுமா? என்னையே எனக்கு பிடிக்கலடா..”
“இங்க பாரு.. இன்னும் கொஞ்ச நேரம் நான் அங்க இருந்திருந்தேன்னா அவங்க எல்லாரையும் கொன்னே போட்டு இருப்பேன்.. அப்புறம் நீ கவலைப்பட்டு இருக்கவே தேவையில்லை..”
“அவங்களை எல்லாம் கொன்னு போட்டுட்டு நீ ஜெயிலுக்கு போயிட்டா அப்புறம் மிச்ச வாழ்க்கை என்னோட யாருடா வாழ்வா? என் வாழ்க்கை முழுக்க எனக்கு நீ வேணும்டா.. நீ மட்டும் தான் வேணும்.. நீ என்னுடைய இந்தர்.. எனக்கு மட்டும்தான் சொந்தம்.. என்னை விட்டுட்டு எப்பவுமே எங்கேயும் போகாதடா..” என்று சொன்னவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..
அந்த அணைப்பில் இன்பமாய் அதிர்ந்தவன் “மலரு.. நிஜமாத்தான் சொல்றியா?”
“ஏன்டா உனக்கு சந்தேகமா இருக்கா? ஏன்..? உனக்கு என்னை பிடிக்கலையா? நான் உனக்கு வேணாமா?” அவனோடு தன் உரிமைக்காக சண்டை இட்டாள் அவள்..
“வேணும் தாண்டி.. ஆனா நான் ஒருத்தருக்கு சத்தியம் பண்ணி இருக்கேன்.. நீ படிப்பை முடிச்சு நல்ல வேலையில செட்டில் ஆகுற வரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு.. அதனால இப்போதைக்கு இந்த ப்ரொபோஸலை ஒரு ஆறு மாசம் தள்ளி வைக்கிறேன்.. நீ டாக்டரா ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல வேலை செய்ய ஆரம்பிக்கற அன்னிக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்..”
“அப்படி யார்கிட்ட டா சத்தியம் பண்ணே?”
அவள் கேள்வியாய் பார்க்க “உங்க மாமா கிட்ட.. என் அண்ணன் கிட்ட.. ஆனாலும் அவரு உனக்கு இன்னொரு அப்பாவாவே மாறிட்டாருடி.. அவரால தான் இப்ப நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சும் ஒரு கிஸ்ஸுக்கு கூட வழி இல்லாம உக்காந்து இருக்கேன்.. இன்னும் சேர்த்து வச்சு ஆறு மாசம் கழிச்சு இருக்குடி மவளே உனக்கு” என்றான் ஏக்க விழிகளோடு..
அவள் தலையை ஆதுரமாய் வருடி “இங்க பாரு.. இன்னைக்கு நடந்ததெல்லாம் மறந்திடு.. நம்ம ரோட்ல போறோம்.. காக்காவோட எச்சம் நம்ம மேல விழுது.. அருவருப்பா தான் இருக்கும்.. அதுக்காக என்ன நம்ப செத்துடவா முடியும்..? அதை கழுவி போட்டுட்டு அடுத்த நாளிலிருந்து சந்தோஷமா போறது இல்ல.. அதே மாதிரி தான் அவனுங்களை மறந்துடு.. இனிமே உன் நினைப்புல இந்த ஆறு மாசம் படிப்பை முடிச்சுட்டு எப்ப பெரிய ஹாஸ்பிடல்ல டாக்டர் ஆவோம் அப்படிங்கறதில மட்டும் தான் இருக்கணும்.. என்ன ஓகேவா?”
அவன் ஆவலோடு கேட்க அவளோ தலையை இடவலமாய் ஆட்டி “ம்ஹூம்.. இல்ல.. எப்ப என் இந்தரோட எனக்கு கல்யாணம் ஆகும்ன்றத்துல தான் இருக்கும்..”
“நானும் காத்திருக்கேன் டி பேபி.. ரொம்ப காக்க வச்சிடாத என்னை..”
அவன் சொன்ன நொடி “நிச்சயமாய் காக்க வைக்க மாட்டேன்.. ஆனா ஒரு கிஸ் கூட தர மாட்டியா டா? தலையில அடி எல்லாம் பட்டு இருக்கு.. நான் பாவம் டா..” அவள் சொல்ல “வேணும்னா ஒன்னு பண்ணலாமா? நான் வேணா அண்ணாக்கு ஃபோன் போட்டு தரேன்.. நீ இந்தருக்கு ஒரு கிஸ் குடுக்கட்டுமான்னு கேட்டு பர்மிஷன் வாங்கு.. அதுக்கப்புறம் கிஸ் கொடுத்துக்கலாம். ஓகேவா?”
“அடிச்சீ தூ.. என்கிட்ட பேசாத.. போடா..”
அவள் கோவித்துக் கொண்ட நேரம் அந்த அறைக்குள் தீரன் மதி இருவரும் உள்ளே நுழைய “மதி.. பார்க்க பாவமா இருக்கு இல்ல..? ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கட்டும்.. விட்டுடலாமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தீரன்..
மதி யோசித்தபடி “ஆமா.. பாவம் தீரா.. ஒரே ஒரு கிஸ் கொடுத்துக்கட்டுமே..” என்று சொல்லிவிட்டு “சரி அப்போ நம்ம வெளியில போயிட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சு உள்ள வரலாம்..” என்று சொல்லிவிட்டு அறையின் வாசலை அடைவதற்குள் அங்கே இந்தரின் இதழோடு தன் இதழை அதிரடியாக சேர்த்து இருந்தாள் மலர்.
புன்னகையோடு மதியும் தீரனும் வெளியே வர “என்னங்க மேடம்.. புதுசா காதலிக்க ஆரம்பிச்சவங்களே முத்தம் கொடுக்குறாங்க.. எனக்கு தான் எதுவுமே இல்லை..”
“அப்படியே எதுவும் பண்ணாதவர் தான் நீங்க.. திருட்டு புருஷா.”. என்று அவனை சீண்டி விட “ஏய் ஒரு புருஷன் பண்றதெல்லாமாடி நான் பண்றேன்? அப்பப்போ ஒரு முத்தம்.. அப்பப்போ ஒரு ஹக்.. இதோட இந்த தீரன் சேடிஸ்ஃபை ஆகிட்டு இருக்கான்.. ஆனா இருக்குடி மவளே.. மெயின் பிக்சர் ரிலீஸ் அப்போ பாரு மாமா பர்ஃபாமென்ஸை.. யூ கேன் நெவர் எஸ்கேப் ஃப்ரம் தீரன்ஸ் லவ்”
ஆமாம்.. இப்போது ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான் தீரன்.. மதி அவனை மாற்றி இருந்தாள்.. இயக்குனர்கள் தேடும் பிரபலமான கதாநாயகன் ஆகி இருந்தான் அவன்.. அவனை கதாநாயகன் ஆக்கி படம் எடுத்தால் தாங்கள் ஏமாறாமல் போட்ட முதலை விட மூணு மடங்கு பணத்தை எடுத்து விடுவோம் என்று எல்லா இயக்குனர்களுக்கும் அவன் மீது நம்பிக்கை இருந்தது..
தீரன் சொன்னதை கேட்டவள் கன்னம் சிவக்க களுக்கென சிரித்தாள் மதி.. “சிரிச்சிட்டா.. சிரிச்சு சிரிச்சு என்னை சாய்ச்சுடுவா.. இப்ப எனக்கு இன்னொரு ரூம் வேணுமே..” என்று தீரன் சொல்ல “அய்யய்யோ நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு..” என்று அங்கிருந்து ஓடி இருந்தாள் மதி..
அடுத்த ஆறு மாதத்தில் சொன்னபடியே படிப்பை முடித்து பெரிய மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவர் ஆகியிருந்தாள் மலர்..
அன்று அவள் மருத்துவராக பணிக்கு சேர அடுத்த நாள் அவளுக்கும் இந்தருக்கும் திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடாகி இருந்தது..
தீரனும் மதியும் ஓடியாடி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. எங்கேயோ ஒரு தூண் மறைவிலோ ஒரு அறைக்குள்ளோ இழுத்து செல்ல சீண்டல்கள் புரிவதை மறக்கவில்லை அவன்..
இதற்கிடையில் பாண்டியும் பார்கவியும் மகிழ்ச்சியுடன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரோடும்..
அப்படி ஓடி ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மதிக்கு தலை சுற்றி மயக்கம் வர தீரன் பதறிப்போய் அவளை அள்ளிக் கொண்டு ஒரு அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தவன் மலரைக் கூப்பிட்டு அவளை பரிசோதிக்க சொல்ல தன் அக்காளை பரிசோதனை செய்தவளின் முகம் பிரகாசமாய் விரிந்தது..
தன் மாமனை முறைத்தவள் “என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க மாமா.. திருட்டுத்தனமா வேலை பண்ணிட்டு இப்ப அப்படியே கவலையோட உட்கார்ந்திருக்க வேண்டியது.. நல்லா இருக்கு உங்க நடிப்பு.. பெரிய ஹீரோன்னு அப்பப்போ காட்டிக்க வேண்டியது..” என்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..
“என்ன சொல்ற மலர்..”
“நீங்க திருட்டுத்தனமா பண்ண வேலை எல்லாருக்கும் தெரிய போகுதுன்னு சொல்றேன்.. கூடிய சீக்கிரம் உங்க காதலுக்கு சாட்சியா ஒரு குட்டி தீரனோ ஒரு குட்டி மதியோ வரப்போறாங்கன்னு சொல்றேன்.. ஆமா யாரோ எங்க கல்யாணத்துக்கு அப்புறம்தான் வாழ்க்கை ஆரம்பிப்போம்னு சொன்னதா ஒரு ஞாபகம்..”
கையை யோசிப்பது போல் வைத்துக் கொண்டு அவள் பேச இந்தரோ “சரி விடு பாவம்.. அவங்களும் எத்தனை வருஷம் தான் நமக்காக காத்துட்டு இருப்பாங்க.. “
“ஏய் ரெண்டு பேரும் ரொம்ப ஓட்டாதீங்க. நீங்கதானே எங்களை திட்டி கழுவி ஊத்தி வாழ்க்கையை ஆரம்பிங்கன்னு சொல்லி அட்வைஸ் பண்ணது.. இல்லனா இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும் இந்த தீரன் வெயிட் பண்ணி இருப்பேன்.. எனக்கு என் மதி என் கூட இருந்தா போதும்..” என்றான் நெகிழ்வோடு..
“உங்களுக்கு உங்க மதி போதும்.. எங்களுக்கு அது போதுமா.. எங்களுக்கு குட்டி மதி.. குட்டி தீரன் எல்லாம் வேணும்.. அதனாலதான் அப்படி சொன்னோம்.. இப்ப கிடைச்சிருச்சு இல்ல.’.
இப்படி பேசிக் கொண்டே இருக்கும் போது மதியும் மெல்ல கண்ணை திறக்க அவளிடம் மலர் விஷயத்தை கூற அவளோ தீரனை தாவி அணைத்துக் கொண்டாள்..
தன் வயிற்றை தடவி பார்த்தவள் “நம்ம பாப்பா… நம்மளோட மூணாவது குழந்தை..” என்று தீரன் சொன்னதும் அவளும் “ஆமா.. மூணாவது குழந்தை..* என்றாள் நிறைவான முகத்தோடு..
எல்லோரும் முகம் சுருக்கி யோசனையோடு பார்க்க “உடனே எல்லாரும் டென்ஷன் ஆகாதீங்க.. அவங்க எங்க ரெண்டு பேரை தான் அவங்க குழந்தைங்கன்னு சொல்றாங்க.. நானும் இந்தரும் எப்பவும் அவங்களோட குழந்தைங்க தான்..” என்று சிரித்தாள் மலரழகி..
அதன் பிறகு திருமணம் இனிதே நடந்தது.. மலர் இந்தர் மட்டுமன்றி மதியழகியும் தீரனும் கூட புது மண தம்பதிகளாய் ஜொலித்திருந்தார்கள் அந்த திருமணத்தில்.. தங்களின் ஆறு வயது குழந்தையோடு வந்திருந்த பாண்டியும் பார்கவியும் அந்தக் குடும்பத்தில் ஒருவராக அந்த ஆனந்தத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்..
தமிழ்வாணன் அத்தனை நிகழ்வுகளுக்கும் முதிர்ந்த சாட்சியாய் அமர்ந்து தன் பிள்ளைகளின் மகிழ்ச்சியில் தானும் பேரானந்தம் கொண்டார்..
ஒரே குடும்பமாய் தீரன் தன்னவளோடு தன் வீட்டிற்குள் ஆறு வருடங்களுக்கு பிறகு மறுமுறை கிரஹப்ரவேசம் செய்தான்.. எல்லோரையும் நிற்க வைத்து ஊரிலிருந்து திருமணத்திற்கு வந்திருந்த அவனுடைய அத்தை உள்ளிருந்து ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்க வரவேற்பறையில் எதிரே இருந்த சுவற்றில் அவனுடைய அன்னை தந்தையும் மதி மற்றும் மலரின் அன்னையும் பெரிய அளவில் நிழற்படங்களாய் புன்னகை முகத்தோடு அவர்களை வரவேற்று கொண்டிருந்தார்கள்..
பேரானந்த பெருவெள்ளமாய் அந்த வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே குடிகொண்டிருந்தது..
இவர்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து அருகு போல் வளர நாம் எல்லோரும் கூட வாழ்த்தி விடை பெறுவோம்.. நன்றி.. வணக்கம்.🙏