வேந்தன்… 23

5
(3)
வேந்தன்… 23
கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தவளுக்கு கைகால்கள் உதறியது பயத்தில்.
கட்டியிருந்த புடவை வேறு இருக்கும் புழுக்கத்தை இன்னும் அதிகரித்தது. உள்ளாடை அதற்கு மேல் ரவிக்கை அதை தாண்டி மாறாப்பு என மூச்சுக் கூட விடமுடியாமல் போனது அவளுக்கு. ‘யாரு கண்டுபிடிச்சா இந்தப் புடவை கட்டும் கலாச்சாரத்தை?’ ஆயிரம் எண்ணிக்கையை தாண்டிப் போயிருக்கும் இந்தக் கேள்விகள். 
“கல்யாணம் முடியும் வரைக்கும் ஒழுங்கா லட்சணமா புடவையைக் கட்டுடி” என வீட்டில் சொல்லியிருக்க, வேறு வழியில்லாமல் புடவையைத்தான் உடுத்தியிருந்தாள் நளிரா. வியர்த்து வழிய நின்றவளுக்கு என்ன செய்ய எங்கே ஒழிய தெரியவேயில்லை. 
அவனையே ஒருநிமிடம் உறைந்து பார்த்தவளுக்கு, அப்போதுதான் அருகே நிற்கும் தன்னுடைய சகுனித் தங்கை நினைவு வரவும், பார்வையை மாற்றி நிதானத்திற்கு வந்தவள் பார்வையை சுழட்டி, சுற்றுப் புறத்தைப் பார்க்க, 
செயின் கிடைத்த உற்சாகத்தில், பாரம் நீங்கி எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, சிவதானு எல்லோருக்கும் குடிக்க டீ வர வைத்திருந்தார். ஆளுக்கொரு டம்ளரைக் கையில் வைத்தபடி உரையாடலில் தீவிரமாய் இருந்தனர். 
“இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு கல்யாணத்துக்கு. அதுக்குள்ளே இந்தப் பொண்ணு பதற வைச்சிட்டா. அப்பவே சொன்னேன். இவ்வளவு செல்லம் தரவேண்டான்னு. எங்கே கேட்டாதான?” வாணி அக்கா எடுத்துக் கொடுக்க. 
“வாணிக்காஆஆஆ…” முடிஞ்ச விஷயத்தைக் கிளறி விடுறாங்களே என்று பதறியது இவளுக்கு. 
இந்தப் பக்கம் ஆர்த்தி வேறு சந்தேக கண்களோடு நோக்கிய வண்ணம் நிற்க, “ஒரு மனுஷன் எத்தனையைதான் சமாளிக்கறது?” விழிகள் பிதுங்கியது நளிர்பெண்ணிற்கு. 
“ஏய் இப்ப என்னடி. அக்கான்னு மரியாதையில்லாம சும்மா சும்மா கேள்வி கேக்குற வேலையெல்லாம் வச்சுக்காத. போடி அந்தப் பக்கம்” ஆர்த்தியை கையசைத்து விரட்டிட. 
“எங்க போகப் போ?. உன்னை வச்சுக்கறேன் நளிநெளி. ஐ’ம் வாட்சிங் யூ” என்றவள் ஆள்காட்டி விரலால் நளிராவின் நெற்றியில் பொட்டென்று தட்டிவிட்டுவிட்டு செல்ல. 
“அவுச்… நாயே” அவள் நளி நெளி சொன்னதற்கு சண்டைக்கூடப் போட முடியாது எதிரே அவன் வந்து நின்றிருக்க, 
அந்த டிப்பார்ட்மென்ட் வாசலில் சற்றும் பொருந்தாமல் கரியநிற நாகத்தின் கவர்ச்சியுடன் பளபளவென்று மின்னியது அந்தக் கார். அதன் மீது சாய்ந்து நின்றவனுக்கும் இங்கே என்ன வேலையாம்?
ஆர்த்தியை மிரட்சியுடன் பார்க்க, அவளோ ஆரவ்வுடன் கடலையை வறுத்துக் கொண்டிருந்தாள். “நல்ல வேளை இவ நம்மை பார்க்கல” நெஞ்சில் கைவைத்து நிம்மதி மூச்சு விட்டாள்.
சிபின் உள்ளே வருவதற்கு ஆயத்தமாக, 
“அய்யோ ஆண்டவா” பதறி சட்டென மேஜைக்கும் கீழே அமர்ந்தவள் சுபியையும் தன் அருகில் இழுத்தாள். 
“என்னடி?” அவள் இழுத்ததில் கீழே விழுந்து வைக்கப் பார்த்த சுபி, சமாளித்து அமர்ந்தாள். அவள் மட்டும் சமாளிக்கவில்லை என்றால் இந்நேரம் ரெண்டு பல்லாவது மேஜையின் நுனியில் பட்டு உடைந்துருக்கும். பல் இல்லாமல் தன்னைப் பார்க்க சகிக்குமா? பற்களை கடித்தவள் தோழியை முறைக்க. 
“அப்புறம் முறைப்பியாம்டி. முதல்ல வாசல்ல பாருடி அவன்தான் அது” நளிரா சுபியின் முகத்தை திருப்பி அவனைக் கைகாட்டிட. 
எட்டிப் பார்த்த சுபிக்கு தூக்கி வாரிப்போட்டது “மைகாட் இந்தக் கார்தான் நம்மளை பாலோவ் பண்ணுச்சுடி” சொன்னவளுக்கு தன்னை ஒருவன் பாலோவ் பண்ணி வந்திருக்கிறான் என்ற எண்ணமே அச்சத்தை தந்தது. 
“அய்யய்யோ பாலோவ் பண்ணுச்சா? இது எப்ப டி?” நளிராவுக்கு பைக்கிலிருந்து விழாமல் இருந்தாலே போதும் என்ற மனநிலை அப்போதைக்கு. இதில எங்கே மத்ததைக் கவனிக்க. மேஜையின் அடியில் குனிந்து எட்டிப் பார்த்தாள் ஒருமுறை. 
அவன் பார்வையால் கடையை ஸ்கேன் பண்ணிட, தன்னைத்தான் தேடுகிறான் என்பது நன்றாகவே புரிந்து போக, அச்சத்தில் கைகள் நடுங்கியது அவளுக்கு. 
“நேத்து பைக்கை ஓரங்கட்டினேன்ல?” 
“ஆமா” நளிரா விழிகளை விரித்தாள் கதை கேட்கும் தோரணையோடு. 
“அப்போதான் இந்தக் கார் நம்ம பின்னாடியே வந்துச்சுடி. அதான் வழி விட்டேன்” சுபி சொல்ல. 
“அடக் கடவுளே” வாய் பொத்தி அமர்ந்தாள் நளிரா.
“ஆனால் சும்மா சொல்லக் கூடாதுடி. செம்ம ஹேன்சம். பார்த்தே மயக்குறாண்டி” சுபி வெட்கமே இல்லாமல் அவனை சைட் அடித்தாள். 
“மாடே, எருமை மாடே. அவன் பண்ணி வச்ச வேலையப் பாத்தியில்ல. சரியான பொறுக்கிடி அவன்” அவள் தலையில் தட்டினாள் நளிரா.
“ஆமாமில்ல” தானும் தலையில் தட்டிகிட்ட சுபி “பட் நான் வேணா அவனை லவ் பண்ணி திருத்திக் காட்டட்டுமா?” முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி சிரித்தபடி கேட்டாள் சுபி.  
“கால்ல புது செருப்பு போட்டிருக்கேண்டி.  நாயே தப்பிக்க வழி சொல்லுன்னா. வழிஞ்சுக்கிட்டு இருக்க” அவளை அடிக்கப் பாய்ந்தாள்.
“பொறுமை பொறுமைடி” நளிராவை தடுத்து நிறுத்திய சுபிக்கு ஒரு யோசனை வரவும். 
“நம்ம ஆளுங்ககிட்ட இவனை மாட்டிவிட்டா என்னடி” சுபிக்கு விழிகள் மின்ன.
“மாடே மாடே. புத்தியே இல்லடி உனக்கு. ஒரு செயினுக்கு இந்தப் பாடு. இதுல அவன் எங்கிட்ட தப்பா நடந்துகிட்டான்னு சொன்னா. அதிர்ச்சியில என்னவாங்கன்னு தெரியாது” நளிரா வருத்தப்பட்டாள்.
“இப்ப என்னடி பண்ணுறது?” 
“நான் சத்தமில்லாம கிளம்பறேண்டி. நீ சமாளிச்சிக்க இங்க” சட்டென எழுந்த நளிரா பின் வாசல் நோக்கி விரைந்தாள். 
கடைக்குள் வந்தவனுக்கு நளிராவை காணாது போகவும், முகம் மாறியது. அவள் வருவதை பார்த்து விட்டுத்தானே இவனும் இங்கே வந்ததே. இப்பொழுது இங்கே இல்லையென்றால்? அப்போ தான் வருவதை பார்த்துவிட்டுதான் தப்பிப் போயிருக்கிறாள். அவனது புத்திகூர்மை அவனுக்கு உடனடியாக பதிலையும் கண்டறிந்து சொல்ல. 
முகம் கோபத்தில் இறுக வெளியே வந்தவன் காரிலேறி அமர்ந்தான். 
கார் நளிராவின் வீட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது. அவளிடம் பேசவேண்டுமென நினைத்தவனுக்கு இப்போது அந்த மனநிலை முற்றிலும் மாறிப் போனது. 
நெருக்கடி மிகுந்த வீதியில் அந்தக் கார் சீறிப் பாய, மக்கள் மிரண்டு வழி விட்டனர். 
நளிராவின் வீட்டின் முன் நின்ற காரை அந்த வீதியில் இருந்த பலரும் பார்த்தனர். பார்த்தால் கண்டுகொள்ளாது போக அது ஒன்னும் சாதாரண கார் இல்லையே. காரின் நிறமே மற்றவர்களைக் காந்தமாய் கவர்ந்து இழுக்கும். 
காரிலிருந்து இறங்கியவன், நிற்காமல் கேட்டை திறந்து வீட்டினுள் சென்றான். 
“அம்மாடியோவ். இது யாருடி?” அருகில் வசிக்கும் பெண்மணி வாயை பிளந்துவிட்டாள். 
அழகாய் கம்பீரமாய் ஸ்டைலாக, ஆண்மையின் இலக்கணமாய் ஒரு வாலிபன் ராஜன் மலர்விழியின் வீட்டிற்குள் செல்ல, இதைப் பற்றி புறணி பேசுவதற்காக பக்கத்து வீட்டிற்கு ஓடினார் அவர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!