முன்னோட்டம்
“ஆமாமா ஊருல இல்லாத தங்கச்சியைக் கொண்டுட்டான் இவன்” சரஸ்வதி வெத்தலையை கொட்டலாவில் நச்சு நச்சுன்னு இடிச்சுக்கிட்டே சொன்னாரு.
ஜோசியர் சரஸ்வதியை தயக்கமாக பார்த்தார்.
“நீங்க மேற்கொண்டு சொல்லுங்க ஜோசியரே” பரமன் பெத்தவளை முறைச்சுக்கிட்டே சொல்ல.
“ஒன்பது பொருத்தமும் அமோகமா இருக்கு பரமா. தாராளமா இந்தப் புள்ளைய உங்க மவனுக்கு கட்டி வைங்க” என்று ஜோசியர் சொல்லிட்டே கிழவியை ஒரக்கண்ணால் பார்த்தார்.
“போய்க் கேட்டதும் இந்தான்னு பொண்ணை தந்துருவாப்புல பாத்துக்க” கிழவி வெத்தலையை வாயில் போட்டு மெல்ல.
“தரலைன்னா விட்டுருவோமாக்கும். உன்ற வாயில நல்ல பேச்சே வராதாம்மா” பரமன் சத்தம் போட்டார்.
“அப்பத்தா பேச்சு அங்க எடுபடாதுடா மகனே. அப்பவே சொன்னேன் கேட்டியா?” சீதா மகனிடம் சொன்னார்.
“அப்பத்தாவ குறைச்சு எடைபோடாதம்மா. இப்ப பாரு வேடிக்கைய” கதிரவன் அப்பத்தா மீது நம்பிக்கையாக சொன்னான்.
“எனக்கென்ன்மோ அந்த வெளிநாட்டுக்காரி நம்ம வீட்டு மருமவளாத்தான் வருவா போலருக்கும்மா” வேலைக்காரி வஞ்சி.
“எனக்கு வேண்டாம்மா” கதிரவனுக்கு அப்பட்டமான பயம்😳