தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த வெள்ளை மாளிகை… அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது… 50 வருட பழைய மாளிகை தான்… ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அழகாக பராமரித்து வருகின்றனர்..
அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் அவரின் அப்பா பெயர் தேவேந்திரன்… அவர் கட்டிய மாளிகை தான் இது..
வேதாசலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்… xxxxx என்ற பெயரில் சொந்தமாக மூன்று மில்களும், கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார்…. அவரின் அப்பா காலத்தில் இருந்த ஒரு மில்லை இவரின் கடின உழைப்பில் விரிவுப்படுத்தி உள்ளார்….
வேதசாலம் ரொம்ப நேர்மையான மனிதர்… தனக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களிடம் கூட இனிமையாக பழகுவார்… வீட்டிலோ, அலுவலுகத்திலோ யார் தவறு செய்தாலும் கோவம் படாமல் பொறுமையாக அவர்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லி அன்பாகவே கண்டிப்பார்…
அவருக்கு பிடிக்காது ஒரே விஷயம் ஒழுங்கின்மை… நாம் வாழும் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்… அந்த ஒழுக்கத்தை தவறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் முகத்தில் கூட முழிக்க மாட்டார்…
இவரின் மனைவி மீனாட்சி அந்த மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி போன்று அவ்வளவு அழகு அமைதி… வேதசாலத்திற்கு மனைவியின் பால் அன்பு அதிகம்… அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்…. இவ்வளவு வருட திருமண வாழ்க்கையில் மீனாட்சி கேட்டு அவர் எதையும் மறுத்தது கிடையாது ஒரே ஒரு விஷயத்தை தவிர,
இவர்களுக்கு மூன்று புதல்வர்கள் ஒரு புதல்வி, மூத்தமகன் பெயர் ஜெயேந்திரன் வயது 35 தந்தை தொழிலை கவனித்து வருகிறார்… அவரின் மனைவி மஞ்சுளா, அவர்களுக்கு 6 வயதில்தஸ்வந்த் என்ற மகனும், 4 வயதில் தாமினி என்ற மகளும் உள்ளனர் …
இரண்டாவது மகன் தேவேந்திரன் வயது 30( நம் நாயகன்)… அடுத்து ராகவேந்திரன் வயது 28 பட்டபடிப்பை முடித்து விட்டு தந்தையின் கார்மெண்ட்ஸ்களை கவனித்து வருகிறான்…
மகள் இந்துமதி கணவன் கார்த்திக் டாக்டர் கார்த்திக்… அவனின் தந்தை மகேஸ்வரனும் டாக்டர் சொந்தமாக கோவையில் மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை வைத்துள்ளனர்….
ராகவ் அலுவலகம் செல்ல தயாராகி தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தான்… இனியா தனது அப்பா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூறி இருந்தாள்…இதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும் என வேகமாக கீழிறிங்கி வந்தான்…
ஹாலிலே மொத்த குடும்பமும் இருந்தது… ஏற்கெனவே அவன் இனியாவை விரும்பும் விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கூறி இருந்தான்… வேதசாலம் காதலுக்கு எதிரி கிடையாது… தன் மகன் விரும்புவதாலும் இனியா குடும்பத்தை பற்றி விசாரித்தவரை நல்ல விதமாக கூறுவதாலும் எந்த வித ஆட்சேபனையும் கூறவில்லை… கீழே வந்த ராகவ் நேராக தன் தந்தையிடம் சென்று இனியா தந்தை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூறினான்…
வேதசாலம் அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் நாளைக்கு நல்ல நாளாக இருப்பதால் இனியா வீட்டிற்கு சென்று முறைப்படி திருமணம் பற்றி பேசலாம் என்று கூறினார்… அனைவரும் தங்களுக்கு இதில் சம்மதம் என்று மகிழ்வுடன் கூறினர்… அவர்களின் அன்னை மீனாட்சியை தவிர,
“ஏங்க ராகவை விட பெரியவன் தேவா இருக்கும் போது ராகவ்ற்கு கல்யாணம் பேசுறது எப்படி சரியாக இருக்கும்” என்றார் கணவரிடம் தயங்கியபடி, அவரை வேதசாலம் முறைக்க, மற்றவர்களுக்கும் தேவா பற்றிய பேச்சு எரிச்சலையே கொடுத்தது…
“அத்தை ஒரு நல்ல விஷயம் பத்தி பேசும் போது ஏன் இப்படி ஒரு ஆகா வழி பேச்சு பேசுறீங்க… நடக்கற காரியம் எதுவோ அதை பத்தி பேசுங்க… ஒரு பொண்ணு வாழ்க்கையை ஏன் அத்தை கெடுக்க பாக்குறீங்க” என்ற மூத்த மருமகள் மஞ்சுளாவை முறைத்தார் மீனாட்சி…
மாமியார் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாத மஞ்சுளாவிற்கு தேவா பேச்சு என்றால் அல்லது சாப்பிடுவது போல்,
அதனால் மேலும்
“உங்க பையன் தேவா பற்றி தெரிஞ்ச யாரும் அவருக்கு பொண்ணு கொடுப்பாங்களா, அவருக்கு எந்த முகத்தை வச்சிட்டு நாமா பொண்ணு கேட்டு போக முடியும்… கேட்க போனா அவமானப்பட்டு தான் திரும்பி வரனும்.. எந்த நல்ல குடும்பத்தில் பிறந்த பொண்ணும் அவரை கட்டிக்க ஒத்துக்க மாட்டா, ஏன் ஒரு பையத்திக்காரி கூட அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டா, அவர் ஏற்கெனவே செஞ்சதுக்கும் இப்ப பண்ணிட்டு இருக்க காரியத்துக்கும்” என்றாள் முகத்தை அசிங்கத்தை கண்டது போல் சுளித்தவாறு,
“ஜெயா உன் பொண்டாட்டிய அமைதியா இருக்க சொல்லு, என் பையனை பத்தி பேசுனா நல்லா இருக்காது” என்ற மீனாட்சியிடம்,
“ஏம்மா அண்ணி இப்ப என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு அவங்க மேல கோவப்படுற, அவங்க சொல்றது எல்லாம் உண்மை தானே, அவன் பண்ண காரியத்தால் நம்ம எல்லாரும் எவ்ளோ அவமானப்பட்டோம்… இப்ப வரை எந்த ஒரு விஷேசத்திற்கும் நிம்மதியா போக முடியலை, எங்க போனாலும் இவன் பண்ணுன அசிங்கத்தை பத்தி தான் கேட்கிறாங்க… நம்ம குடும்பமும் மட்டுமா இவனால் அசிங்கப்படுறோம்… என்னை கல்யாணம் பண்ண பாவத்துக்கு என் புகுந்த வீட்டு ஆளுங்களும் கஷ்டப்படுறாங்க... ஆனா அவன் அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல், நல்ல குடிச்சிட்டு கூத்தடிச்சிட்டு இருக்கான்… அவன் எல்லாம் ஒரு ஆளுனு அவனை பத்தி பேசாதீங்க” என்று தேவா மேல் உள்ள கோவத்தை தன் அன்னையிடம் காட்டினாள் இந்துமதி…
“இந்து அவன் உன் அண்ணன்” என்று கோவமாக பேச ஆரம்பித்த மீனாட்சியை “மீனா” என்ற வேதாசலத்தின் கோவமான அழைப்பு தடுத்து நிறுத்தியது..
“இங்க பாரு மீனா எனக்கு இரண்டு பசங்க ஒரு பொண்ணு தான், என்னை பொறுத்தவரை நீ சொல்றவன் இறந்து போய் அஞ்சு வருஷம் ஆகாது… உனக்காக தான் அவன் இந்த வீட்டுக்கு வரதுக்கு போறதுக்கு கூட நான் அமைதியா இருக்கேன்… இது என் பையன் கல்யாண விஷயம், நல்ல விஷயம் பேசும் போது கண்டவனை பத்தி பேசி வீட்டுக்குள்ள சண்டை வர மாறி செய்யாதே, நாளைக்கு பாலகிருஷ்ணன் வீட்டுக்கு போறோம் இனியா ராகவ் கல்யாணம் பத்தி பேச, இது தான் என்னோட இறுதி முடிவு, இப்ப எல்லாரும் அமைதியா போய் உங்க வேலைகளை பாருங்க” என்றார்…
அனைவரும் கிளம்பிட மீனாட்சி மட்டும் தனது முந்தானை எடுத்து கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க, அதை பார்த்த வேதசாலமோ அவரின் அருகில் வந்து கண்ணீரை துடைத்தவர் “உன் கண்ணீரை கூட அவனுக்காக வீணாக்காத மீனா எனக்கு பிடிக்கலை” என்று சொல்ல,
“ஏங்க தேவா தப்பு செஞ்சு இருக்கான் தான் இப்ப கூட செய்றான் தான் ஆனா அவனை உங்க போல என்னால் ஒதுக்க முடியலை.. அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணினா மாறிடுவான்னு” என மீனாட்சி முடிப்பதற்குள்,
அவரை கடுமையாக முறைத்த வேதாசலம் வெளியேறினார்…
அவர் சென்றதும் மீனாட்சி எப்போதும் போல் ‘கடவுளே என் பையன் தேவா வாழ்க்கையை சரி பண்ணுப்பா’ என்று கடவுளிடம் மனதிற்குள் வேண்டுதலை வைத்தார்…
அடுத்த நாளே வேதாசலம் குடும்பத்தினர் திரவியா வீட்டிற்கு சென்றனர்… இனியாவை பெண் பார்க்க, இரு குடும்பத்திற்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து போனது… ஆரம்பத்தில் யமுனாவிற்கு இருந்த சிறு நெருடல் கூட இப்போது வேதாசலம் குடும்பத்தினரை நேரில் பார்த்த போது இல்லை…
அனைவரும் கலகலப்பாக பேச, தியா மட்டும் யோசனையில் இருந்தாள்.. ‘தேவேந்திரன்னு மாமாவுக்கு ஒரு அண்ணா இருக்கிறதா மம்மி சொன்னாங்க… அவர் ஏன் வரல? என்ற யோசனை தான்,
பின்பு அவளே ‘அவர் வந்தா என்ன? வரலைன்னா என்ன? என்று தனக்கு தானே கேட்டு கொண்டு அமைதியாகி விட்டாள்…
மீனாட்சிக்கு கூட இனியாவை ரொம்ப பிடித்து போனது… அதை விட திரவியாவை அவளின் கலகலப்பான பேச்சு அவர்க்கு பிடித்து போனது…
அதன் பின்பு அடுத்த முகூர்த்திலே திருமணம், திருமணத்திற்கு முந்தைய நாள் நலுங்கு என்று ஒரு மனதாக முடிவு எடுத்தனர்…
நாட்கள் வேகமாக ஓடி திருமண நாளும் வந்தது… கோவையின் மிகப்பெரிய மஹாலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது…
ராகவ், இனியா இரு வீட்டினரும் வசதியானவர்கள் வேதாசலமோ தன் வீட்டின் கடைசி திருமணம் என்றும், பாலகிருஷ்ணனோ தன் வீட்டின் முதல் திருமண்ம என்றும் பணத்தை தண்ணீராக இறைத்து வெகு விமர்சையாக திருமண ஏற்பாட்டை செய்து இருந்தனர்…
மண்டபம் ஏதோ கோவில் திருவிழா போன்று சொந்த பந்தங்களால் நிரம்பி வழிந்தது…
ராகவேந்திரன் அழகாக கல்யாண பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான்… அவனின் அருகில் மாம்பழ நிற பட்டுத்தி அளவான ஒப்பனையுடன் அமர்ந்து இருந்தாள் இனியா… சிறிது நேரத்தில் ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று தாம்புளத்தின் தேங்காய் மீது இருந்து பெரியவர்கள் அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்ட தாலியை ராகவ் கையில் எடுத்து கொடுக்க, அவனோ தனது அருகே அமர்ந்து இருந்த இனியா கழுத்தில் அணிவித்து அவளை தன்னவளாக்கி கொண்டான்…
அதன் பின்பு கல்யாண சடங்குகள் நடை பெற்று கொண்டு இருந்தது…
திரவியாவோ அதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் தனியே நின்று பலமாக எதையோ பற்றி யோசித்து கொண்டு இருந்தாள்…நேற்று மாலை மண்டபத்திற்கு இவர்கள் வீட்டினர் வந்ததிலிருந்து தியா காதில் விழுந்தது எல்லாம் எங்கும் தேவா எதிலும் தேவா என அவனை பற்றிய பேச்சுக்கள் தான்…
‘தேவா கல்யாணத்திற்கு வரலையா?’
‘தேவா இருக்கும் போது ராகவிற்கு ஏன் கல்யாணம் பண்றீங்க?’
‘தேவாவிற்கு எப்ப கல்யாணம்?’
‘தேவா எவ்வளவு தப்பு பண்ணி இருந்தாலும் அவனை இப்புடி ஒதுக்கி வைக்கிறது நல்லவா இருக்கு’
‘என்ன இருந்தாலும் தேவா இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்க வேண்டாம்?’
இப்படி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை சொந்தங்கள் வேதாசலத்தின் குடும்பத்தினரிடம் ஆயிரம் கேள்வி தேவாவை பற்றி கேட்டனர்… அவர்களோ எதுக்கும் பதில் கூறாமல் அதை நாசூக்காக தவிர்த்து வந்தனர்…
யாரோ ஒருவனை பற்றி பேசுகிறார்கள் என்னவோ இருந்துட்டு போகட்டும் என தியாவால் இயல்பாக எளிதாக இதை கடக்க முடியவில்லை..
அவர்கள் கேட்ட அத்தனை கேள்வியும் எப்புடி? ஏன்? எதனால்? என அனைத்தும் இவள் மண்டைக்குள் வந்து அமர்ந்து விட்டது… அவளின் எண்ணம் சிந்தை முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தான் தேவேந்திரன்..
அவனை பற்றிய கேள்விகள் அனைத்துக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது... அதை விட இத்தனை கேள்விக்கும் நாயகனான அந்த தேவேந்திரனை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் பிறந்தது…
தொடரும்…
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.5 / 5. Vote count: 31
No votes so far! Be the first to rate this post.
Post Views:673
4 thoughts on “விடாமல் தூரத்துறாளே 2”
Saranya selvaraju
Thiya kku mattum illa …engalukum devava pakkanum pola Iruku …seekiram kanla katttunga sis
Thiya kku mattum illa …engalukum devava pakkanum pola Iruku …seekiram kanla katttunga sis
Next ud vanthuruvar dear ❤️❤️❤️❤️
Epo engalukum kattuvinga……
Next ud vanthuruvar dear ❤️❤️❤️❤️