சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 5 ❤️❤️💞

4.7
(20)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 5

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

“இல்ல.. எப்படியும் பாட்டியை பாத்துக்குறதுக்கு ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணலாம்னு இருந்தேன்.. அவங்களுக்கு எப்படியும் ஏதாவது பணம் கொடுத்திருப்பேன்.. உங்களுக்கு வேலை போயிடுச்சுன்னு பாட்டி சொன்னதுனால தான் அந்த மாதிரி ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்றத்துக்கு பதிலா உங்களையே பாத்துக்க சொல்லலாம்னு நினைச்சேன்.. நீங்க அவங்களை இன்னும் நல்லா கேர் எடுத்து பாத்துப்பீங்கன்னு உங்களுக்கு அந்த பணத்தை கொடுத்துடறேன்னு சொன்னேன்.. இதில் என்ன தப்பு இருக்கு?” என்று கேட்டான் சுந்தர்..

 

“இல்ல சார்.. நீங்க ஒரு நர்ஸே ஏற்பாடு பண்ணிக்கோங்க.. உங்க வீட்ல சமைக்கிறதுக்கு வேற யாராவது ஆளு ஏற்பாடு பண்ணிக்கோங்க.. நான் கிளம்புறேன்” இறுக்கமான குரலில் சொன்னாள் சுந்தரி..

 

அதைக் கேட்டு விக்கித்து போய் நின்றவன் “என்னங்க.. திடீர்னு இப்படி சொல்றீங்க? பாட்டி சொன்னதால தான் உங்களை யாரு என்னனு எதுவுமே கேட்காம இங்க சமையல் செய்ய வேலைக்கு வச்சுக்கலாம்னு நினைச்சேன்.. நீங்க பாட்டியை ஹாஸ்பிடல்ல நல்லா பார்த்துக்கிட்டீங்க.. அதான்.. சரி.. வேற யாரோ ஒருத்தர் வந்து பாட்டியை பார்த்துக்கறத்துக்கு நீங்களே பாத்துக்கலாமேனு நான் நினைச்சேன்.. ஆனா இப்ப என்னடான்னா நீங்க இவ்ளோ திமிரா பேசுறீங்க ? உங்களுக்கு கொடுக்கிற சம்பளம் பத்தலைன்னா இன்னும் அதிகமா கேட்டு வாங்கிக்கோங்க.. நான் தான் நீங்க செய்யற வேலைக்கு பணம் கொடுக்கிறேன்னு சொல்றேன்ல.. ஏதோ நீங்க போனா போகுதுன்னு எனக்கு வேலை செய்ய வந்த மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு இஷ்டம் இல்லனா நீங்க தாராளமா போகலாம்..” என்றான் சுந்தர்..

 

ஏற்கனவே அவன் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லியதில் அவளுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.. இதில் அவன் இன்னும் கொஞ்சம் பணம் வேணும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் அவளுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வர அவனை தன் இடையில் கையை வைத்துக்கொண்டு முறைத்து பார்த்தவள் “சார்.. நான் உங்களை ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன்.. அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என்றாள் சுந்தரி..

 

“என்ன விஷயம்?” என்பது போல் அவன் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தான்..

 

தன் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டவள் அவனைப் பார்த்து, “இப்போ நீங்க ஹாஸ்பிடலுக்கு பாட்டிக்கு பணம் கட்டுனீங்க இல்ல ..? அப்புறம் பாட்டியை இங்க வீட்ல வச்சு நீங்க அவங்களுக்கு செலவு பண்ணி ஆள் ஏற்பாடு பண்ணி அவங்களை பார்த்துக்கறீங்கல்ல? அவங்களுக்கு சாப்பாடு கொடுக்குறீங்க இல்ல ..?” 

 

அவள் சொல்லிக் கொண்டே போக அவள் என்னதான் சொல்ல வருகிறாள் என்று அவளை பார்த்துக் கொண்டே நின்றான் அவன்..

 

“இந்த பணத்தை எல்லாம் பாட்டி கிட்ட வட்டியும் முதலுமா அவங்களுக்கு உடம்பு நல்லா ஆன உடனே திருப்பி வாங்கிடுவீங்க தானே?” என்று கேட்டாள் சுந்தரி..

 

“ஹலோ மிஸ்.சுந்தரி.. என்ன கேள்வி கேக்குறீங்க..? பாட்டிக்கு நான் பேரன் மாதிரி.. ஒரு பேரன்கிற இடத்தில் இருந்துதான் அவங்களுக்கு இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.. அப்படி இருக்கும்போது அவங்க கிட்ட நான் அவங்களுக்கு செய்யறதுக்கு எப்படி பணம் வாங்குவேன்…? ஹௌவ் டேர் யூ ஆஸ்க் மீ லைக் திஸ்?” என்று கேட்டான் சுந்தர்..

 

“அவ்வளவு எல்லாம் எனக்கு இங்கிலீஷ் பேச வராது.. அதனால உங்களுக்கு எனக்கு தெரிஞ்ச தமிழிலேயே இதுக்கு பதில் சொல்றேன்”  என்று சொன்னவளை கோவமாக பார்த்தவன் “எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு கேள்வி என்னை கேட்பீங்க? எனக்கு பாட்டி எவ்வளவு முக்கியம்னு அங்க ஹாஸ்பிடல்ல பார்த்தீங்கல்ல? அவங்களை நான் சமையல் வேலை செய்றவங்களா பார்க்கல.. என் வீட்ல ஒருத்தரா தான் பார்த்தேன்.. என் பாட்டி இருந்தா அவங்களுக்கு என்ன எல்லாம் செய்வேனோ அதைத்தான் அவங்களுக்கு செய்யணும்னு நான் நினைச்சேன்.. இன்ஃபாக்ட் அவங்களை நான் இங்கேயேதான் இருக்க சொன்னேன்.. அவங்க தான் அவங்களுக்கு ஒரு வீடு இருக்குன்னு சொல்லி அங்க வந்து தங்கிட்டு இருந்தாங்க.. மோர் ஓவர் நீங்க வருவீங்கன்னு சொல்லி தான் அவங்க தினமும் வேக வேகமா இங்கிருந்து கிளம்பி வந்துட்டு இருந்தாங்க.. அவங்க கிட்ட போய் நான் பணம் வாங்குவேனானு கேள்வி கேக்குறீங்க?” என்றான் சுந்தர்..

 

இப்போது அவனை நன்கு முறைத்தவள் “கோவம் வருது இல்ல உங்களுக்கு? ஹாஸ்பிடல்ல பாட்டிகிட்ட நீங்க எப்படி நடந்துக்கிட்டீங்கன்னு நான் பார்த்தேனான்னு என்னை கேக்குறீங்களே.. நான் பாட்டி கூட எப்படி இருந்தேன்னு நீங்க கவனிச்சீங்களா? இத்தனை நாளா எனக்காக அவங்க ஓடி வந்ததிலிருந்தே தெரியல.. அவங்க என் மேல எவ்வளவு பாசம் காட்டினாங்கன்னு.. அப்படி இருக்கும் போது என்கிட்ட அவங்களுக்கு நான் வேலை செய்யறதுக்கு பணம் கொடுக்கிறேன்னு சொல்றீங்களே.. உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?” 

 

அவள் கேட்கவும் அப்போதுதான் அவனுக்கு தான் சொன்ன விஷயம் அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று புரிந்தது..

 

சட்டென சுந்தரியிடம் “சாரி சுந்தரி.. பாட்டியை பாத்துக்கறதுக்கு நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கறேன்னு சொன்னது தப்புதான்.. நீங்க பாட்டியை பாத்துக்குறதுனால கம்பெனி வேலைக்கு போக முடியாம உங்களுக்கு வேலை போயிடுச்சுன்னு பாட்டி சொன்னாங்க.. உங்களுக்கு பாட்டியை பார்த்ததுக்கு பணம் கொடுத்தா உதவியா இருக்கும்ன்னுதான் நான் பணம் கொடுக்கிறேன்னு சொன்னேன்.. மத்தபடி உங்களுக்கும் பாட்டிக்கும் இடையில எவ்வளவு அன்பு இருக்குன்னு எனக்கு தெரியும்.. ” என்றான் சுந்தர்..

 

சுந்தரிக்கு சட்டென என்னவோ போல் ஆகி விட்டது.. அவன் நல்லெண்ணத்தில் தன் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என சொன்னதை தவறாக புரிந்து கொண்டு அவசரப்பட்டு பேசியதை எண்ணி வருந்தினாள்..

 

“பரவால்ல சார்.. இனிமே என் பாட்டிக்கு செய்யறதுக்கு பணம் அது இதுன்னு எதுவும் பேசாதீங்க.. உங்க வீட்ல சமையல் செய்யறதுக்கு நீங்க பாட்டிக்கு எவ்ளோ பணம் கொடுத்தீங்களோ அதே எனக்கும் கொடுங்க..” என்றாள் அவள்..

 

அவரவர் பணம் கொடுக்கிறேன் என்றால் ஆலாய் பறந்து இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்ளும் இன்றைய உலகத்தில் இப்படி ஒரு பெண் இருப்பது அவனுக்கு அதிசயமாய் இருந்தது.. 

 

அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு அவள் சொன்னது காதிலே விழாதது போல் நின்றிருந்தவனை “சார்” என்று அவள் அழைக்கவும் தன் நினைவில் இருந்து வெளிவந்தான்..

 

“சரி சுந்தரி.. நீங்க பாட்டிக்கு செய்யறதுக்கு சம்பளம் வாங்க வேண்டாம்.. ஆனால் நீங்க கார்மெண்ட்ஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தீங்கன்னு பாட்டி சொன்னாங்க..” என அவன் கேட்கவும் “ஆமாம் சார்.. பண்ணிட்டு இருந்தேன்.. சொல்லாம கொள்ளாம லீவ் போட்டதுனால வேலையை விட்டு எடுத்துட்டாங்க..” என்றாள் அவள்..

 

“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. அவங்க எதிர்பார்க்கிறதும் கரெக்ட் தானே? நீங்க வந்து ஒரு இன்ஃபர்மேஷனாவது கொடுக்கணும்னு எதிர்பார்த்திருப்பாங்க இல்லையா..? நைட்டே பாட்டிக்கு உடம்பு முடியலன்னு சொல்றீங்க.. காலையில ஒரு அரை மணி நேரம் வேற யார்கிட்டயாவது விட்டுட்டு நீங்க கம்பெனிக்கு போய் சொல்லிட்டு வந்து இருக்கணும் இல்லையா? காலையில வேலைய ஆரம்பிச்சப்புறம் திடீர்னு நீங்க இல்லன்னு தெரிஞ்சா அவங்க வேலை எவ்வளவு பாதிக்கும்னு யோசிச்சீங்களா? ப்ராடக்டை டெலிவரி பண்றதுக்கு ஏதாவது டைம் லைன் இருந்திருக்கும்.. நீங்க போகாததுனால அது ஒரு நாள் லேட்டா ஆனாலும் கிளையன்ட் கிட்ட அந்த கம்பெனியோட மதிப்பு குறைஞ்சுடும்.. சுந்தரி.. நானும் ஒரு கார்மெண்ட்ஸ் வச்சிருக்கறதுனால எனக்கும் அந்த கஷ்டம் தெரியும்.. ஆனா என்ன..? நான் எப்பவும் ஒரு ரெண்டு முறை வார்னிங் குடுத்துட்டு அப்புறம் தான் வேலையை விட்டு எடுப்பேன்னு சொல்லுவேன்.. உங்க கம்பெனியில முதலிலேயே அதை பண்ணிட்டாங்க.. அது கொஞ்சம் நியாயம் இல்ல தான்..” என்றான் அவன்..

 

“பரவால்ல சார்.. பாட்டிக்கு சரியாகற வரைக்கும் எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்.. அவங்க எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்காங்க.. இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.. சரி நீங்க கார்மென்ட்ஸ்க்கு கிளம்ப வேண்டி இருக்கும் இல்ல? நீங்க போய் ரெடி ஆகி வாங்க.. பத்து நிமிஷத்துல உங்களுக்கு ஏதாவது டிஃபன் பண்ணி வச்சிடறேன்.. சாப்பிட்டுட்டு நீங்க கிளம்பி போங்க..” என்று அவள் சொல்லவும் “தேங்க்ஸ் சுந்தரி.. உங்களுக்கு எது எங்க இருக்குன்னு தெரியணும்னா பாட்டியை கேட்டீங்கன்னா சொல்லுவாங்க” என்றான் சுந்தர்..

 

“ஓகே சார்.. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நானே தேடி எடுத்துக்கிறேன்..” என்றாள் அவள்..

 

அப்போது அவள் கைபேசி ஒலித்தது.. அதை எடுத்தவள் ரதியின் பெயரை பார்க்கவும் “ஹலோ ரதி.. நானே உனக்கு ஃபோன் பண்ணனும்னு நெனச்சேன்.. நாங்க பாட்டியை கூட்டிகிட்டு சுந்தர் சார் வீட்டுக்கு வந்துட்டோம்.. ஆனா நான் இங்கேயே இருந்து பாட்டியை பாத்துக்கலாம்னு இருக்கேன்.. அவர் வீட்ல சமையல் வேலை செஞ்சிட்டு பாட்டியும் பார்த்துகிட்டு இருக்க போறேன்.. நீ எனக்கு கொஞ்சம் மாத்திக்கிறதுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்து கொடுக்கிறியா? இந்த ஹாஸ்பிடல்ல போட்டிருந்த ட்ரஸோட முழு நாள் இருக்க என்னவோ போல இருக்கு.. ட்ரஸ் எல்லாம் ஏதோ மருந்து வாடை அடிச்சிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கு” என்றாள் அவள்..

 

ரதியோ இங்கே கணக்கு போட ஆரம்பித்து விட்டாள்.. அந்த சமையல் வேலைக்கு சுந்தர் கொடுக்கும் சம்பளம் நிச்சயமாக கார்மெண்ட்ஸில் சுந்தரிக்கு கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாக தான் இருக்கும்.. ஆனால் இரண்டு வேலையும் சேர்ந்து பார்த்தால் கொஞ்சம் பணம் கூட கிடைக்குமே என்று அவளுக்கு பேராசை இருந்தது.. இப்போது அதில் ஒரு சம்பளம் வராது என்று தெரிந்தவுடன் அவள் குரலில் உறுதி குறைத்து காணப்பட்டது..

 

“என்ன சுந்தரி சொல்ற? அப்போ உன் கார்மெண்ட்ஸ் போலயா நீ? வேலைக்கு ஒரு நாள் லீவு போட்டதுக்கு வேலையை விட்டு எடுத்துடுவாங்கன்னு பயந்துக்கிட்டு இருந்தே.. இப்போ பாட்டியை எப்படி பாத்துப்ப?”

 

அவள் கேட்கவும் “ரதி.. கார்மெண்ட்ஸ்ல என்னை வேலையை விட்டு எடுத்துட்டாங்க..” தயங்கி தயங்கி சொன்னாள் சுந்தரி..

 

அவ்வளவுதான் ரதிக்கு இடியே விழுந்தது போல் ஆகிவிட்டது.. “என்னடீ சொல்ற? கார்மெண்ட்ஸ்ல வேலைய விட்டு எடுத்துட்டாங்களா? அறிவு இருக்காடி உனக்கு? அது தெரிஞ்ச உடனேயே நீ காலைல போய் அந்த முதலாளி கையில கால்ல விழுந்தாவது அந்த வேலையை வாங்க பாக்காம இங்க உட்கார்ந்து பாட்டிக்கு சேவகம் பண்ணிட்டு இருக்க..!!” திட்ட ஆரம்பித்தாள் ரதி..

 

“ரதி.. பாட்டி பாவம்.. அவங்களுக்கு யாருமே இல்ல.. அவங்களை எப்படி அப்படியே விட்டுட்டு வர்றது?”  வருத்தத்தோடு கேட்டாள் சுந்தரி..

 

“அடி ஏண்டி நீ இப்படி இருக்க? கொஞ்சமாவது உன்னை பத்தியும் இந்த குடும்பத்தை பத்தியும் கவலைப்படுறியா? எப்ப பாரு அடுத்தவங்களை பத்தியே கவலைப்பட்டுக்கிட்டு.. சரி பாட்டியை பாத்துக்கறதுக்கு அவரு ஏதாவது பணம் கொடுக்கிறேன்னு சொன்னாரா?”  எப்போதும் போல பணத்தை பற்றி பேச ஆரம்பித்தாள்..

 

“பாட்டிக்கு செய்யறதுக்கு நான் எப்படி ரதி பணம் வாங்க முடியும்?” என்று கேட்டாள் சுந்தரி..

 

அதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட ரதி “இப்படியே பேசிட்டிரு.. நல்லா வருவ நீ.. இதை பாரு இன்னிக்கு ஒரு நாள் பாட்டியை பார்த்துட்டு நாளையிலிருந்து சமையல் வேலை மட்டும் ஒத்துக்கிட்டு வீட்டுக்கு வந்து சேரு.. நாளைக்கு காலைல இருந்து சமைச்சு முடிச்சுட்டு வந்து வேற எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தேட ஆரம்பி.. அதை விட்டுட்டு பாட்டியை பாத்துக்குறேன் தாத்தாவை பாத்துக்குறேன்னு அங்க போன அதுக்கப்புறம் இந்த வீட்டு பக்கம் வர்றது பத்தி யோசிச்சு கூட பாக்காத.. அந்த கிழவியை பார்க்கறதுனால உனக்கு பைசா கூட பிரயோஜனம் கிடையாது”  மூச்சு விடாமல் பேசினாள் ரதி..

 

அவள் பேசுவதைக் கேட்ட சுந்தரிக்கு அவள் தனக்கு லாபம் இல்லாமல் தன்னை பாட்டிக்கு எதுவும் செய்ய விடமாட்டாள் என்று தெரிந்தது..

 

“சரி ரதி.. நான் சுந்தர் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்று அவள் சொல்ல “சரி நீ பேசி பாரு.. நான் உனக்கு டிரஸ் எடுத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்” என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள்..

 

சுந்தரி ரதி சொன்னதை சுந்தரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.. அங்கே ரதியோ சுந்தரி எப்படியும் இது பற்றி சுந்தரிடம் பேசத் தயங்குவாள் என்று அறிந்தவள் நேரில் தானே சுந்தரிடம் இது பற்றி பேசிவிட‌வேண்டுமென தீர்மானித்திருந்தாள்…

 

சுந்தரிக்கு இன்னொரு கவலையும் இருந்தது.. இரவு நேரத்தில் அவள் பாட்டியோடு பாட்டியின் வீட்டில் தங்கி கொண்டிருந்தாள்.. ஆனால் இப்போது பாட்டி சுந்தர் வீட்டில் இருப்பதால் அவளுக்கு ரதியின் வீட்டிலேயே இருக்க வேண்டி இருக்கும்… அவள் ரதியோடு இல்லாமல் பாட்டி வீட்டிற்கு செல்வதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.. அதை பற்றி நினைக்கும்போதே அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது… 

 

அன்றைக்கு நடந்ததை எண்ணும் போதே அவளுக்கு தொண்டை வறண்டு முகமெல்லாம் வியர்த்தது.. 

 

தொடர்ந்து வருவார்கள்….

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!