ஆரோக்கியம் மருத்துவமனை நான்கு மணி நேரத்திற்கு முன்பு….
கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை தான் ஆரோக்கியம் மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் தமிழக அளவில் இந்திய அளவில் கூட மருத்துவமனை பெயர் சொன்னால் தெரியுமளவு பிரபலமான மருத்துவமனை இது..
அந்த அளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… அனைத்து வியாதிகளுக்குமான ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு இருக்கின்றனர்…
இந்த மருத்துவமனையின் இன்னோரு சிறப்பு பணக்காரர்கள் ஏழைகள் என்ற பாகுபாடு இங்கு பார்க்க மாட்டார்கள்… அனைவருக்கும் ஒரே மாதிரியாக மருத்துவம் பார்க்கப்படும்…. இன்னும் சொல்லப்போனால் ஏழை எளிய மக்களுக்கு அவர்களிடம் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் எவ்வளவு பெரிய வியாதி என்றாலும் அதற்கான அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படும்…
அது இந்த மருத்துவமனை சிறியதாக ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது..
ஆரோக்கியம் மருத்துவமனை தொடங்கப்பட்டதன் முதன்மை நோக்கமே எந்தவித ஏற்ற தாழ்வும் இல்லாது அனைவருக்கும் உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான்..
அதனுடைய தற்போதைய உரிமையாளர் மகேஸ்வரன்.. அவரின் தாத்தா சிறிய அளவில் கட்ட அதை அவர் அப்பா ஓரளவுக்கு கொண்டு வந்தார் என்றால் மகேஸ்வரன் தன் காலத்தில் இந்திய அளவில் பேசப்படும் மருத்துவமனையாக மாற்றி இருந்தார்..
அதிகாலை வேளை டாக்டர் மகேஸ்வரன் மருத்துவமனையின் நீண்ட அந்த வராண்டாவில் சற்று பதட்டமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார்… அவரின் மகன் டாக்டர் கார்த்திக்கோ( தேவா தங்கை இந்துமதி கணவன்) கோவமாக அங்கு நின்று இருந்த திவேஷை முறைத்து கொண்டு நின்றான்…
அந்த வராண்டாவில் மேலும் வெண்ணிலாவும் அங்கு பணிபுரியும் இரு டாக்டர்களும் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் நின்று இருந்தனர்…
அனைவரும் அமைதியாக இருக்க அங்கு இருந்த மூத்த மருத்துவர் நாராயணன் “சார் இப்படியே யோச்சிட்டே இருந்தா என்ன பண்றது மினிஸ்டருக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு… இமீடியட்டா ஓபன் ஹார்ட் சர்ஜரி இன்னைக்கு பண்ணியே ஆகனும் டீலே பண்ணா அது அவருக்கு ரொம்ப ஆபத்தா முடியும்… அது மட்டுமில்லை நம்ம ஹாஸ்பிடல் பேரும் கெட்டு போயிரும் சார்” என்றார்…
“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா” என்றான் திவேஷ் மெதுவான குரலில்,
“யூ ஜஸ்ட் ஷ்ட்டப்ப் திவேஷ் இப்ப உருவாகி இருக்கிற இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணமே உன்னோட கேர் லெஸ் தான்… அதனால் நீ அமைதியா இரு” என்று கடுப்புடன் கூறினான் கார்த்திக்…
தாரிகா தந்தை ஒரு ஆளும் கட்சியின் மினிஸ்டர் பெயர் சேரன்… அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட அவரை மகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதித்தனர்… பரிசோதித்தில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வர உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்னும் நிலை…
ஆரோக்கியம் மருத்துவமனையின் முதன்மை இருதய நோய் நிபுணர் (cardiologist) விடுமுறையில் குடும்பமாக தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை..
திவேஷும் ஒரு இருதய நோய் நிபுணர் தான்… ஆனால் அவன் இதுவரை அறுவை சிகிச்சை செய்தது இல்லை… அதுபோக அவன் மேல் மகேஸ்வரனுக்கே நம்பிக்கையும் இல்லை… இருந்தாலும் அவனை இந்த மருத்துவமனையில் வேலைக்கு வைத்து இருக்கிறார்… அதற்கு ஒரு காரணம் இருக்கிறது…
இப்புடிப்பட்ட சூழ்நிலை ஒன்றும் புதிது அல்ல.. சில நேரங்களில் ஏற்படும்.. அப்போது வேறு மருத்துவமனையிலிருந்து மருத்துவரை அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்வார்கள்.. ஆனால் இங்கோ அதிலும் ஒரு சிக்கலாகி விட்டது..
அறுவை சிகிச்சைக்கா இந்தியாவிலேயே சிறந்த புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை வட இந்தியாவில் இருந்து வரவழைக்க சொல்லி அந்த பொறுப்பை திவேஷிடம் ஒப்படைத்து இருந்தார் மகேஸ்வரன்… அந்த வேலையையும் திவேஷ் சொதப்பி வைத்து விட்டான்…
அந்த மருத்துவரிடம் மினிஸ்ட்ரின் உடல்நிலை குறித்து விரிவாக கூறி இன்றைய நாளுக்கு அப்பாயிண்மெண்ட் வாங்க சொன்னார் மகேஸ்வரன்… அவனும் அவர் ஒத்து கொண்டார் என்று கூற மகேஸ்வரன் மினிஸ்டரின் குடும்பத்தினரிடமும் பத்திரிகைகளிலும் இன்று அறுவை சிகிச்சை என்று சொல்லி அதற்கான வேலையில் இறங்கினார்…
அறுவை சிகிச்சை இன்னும் ஒருமணி நேரத்தில் துவங்க வேண்டும் ஆனால் மருத்துவர் வரவில்லை… அவருக்கு கால் செய்து பார்த்தால் அவர் வேறு ஒரு அறுவை சிகிச்சையில் இருப்பதாகவும் திவேஷிடம் நாளைக்கு தான் அப்பாயிண்மெண்ட் கொடுத்தேன் என்று கூறினார்… அது தான் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருக்கின்றனர்…
“இப்ப என்ன பண்றது டாக்டர் நாராயணன் இந்த பிரச்சினையை தீர்க்கிறது எப்படி? உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க” என்று கேட்டார் மகேஸ்வரன்…
“சார் இப்ப நம்மளால உடனே வேற சர்ஜனை அதர் ஸ்டேட்டில் இருந்து வர வைக்க முடியாது” நாராயணன் சொல்ல,
“புரியுது டாக்டர், ஆனா வேற ஏதோ ஒரு யோசனை இருக்குன்னு சொன்னீங்களே அதை சொல்லுங்க மகேஸ்வரன் கேட்க,
“சார் அது வந்து உங்களுக்கு பிடிக்குமா தெரியலை... ஆனா மினிஸ்டர் ஹெல்த் ரொம்ப மோசமான இருக்கு, அதனால் இப்ப நமக்கு வேற வழி இல்லை சார் நாமா டாக்டர் தேவேந்திரன் கிட்ட தான் ஹெல்ப் கேட்டு ஆகனும்“ என்றார்…
“தேவா வேண்டாம் டாக்டர் நாராயணன்” என்றான் கார்த்திக் அவசரமாக
“கார்த்திக் சார் வீ கேவ் நோ அதர் ஆப்ஷன்,
ஆளுங் கட்சியோட மினிஸ்டர் அவர்.. அடுத்த எலெக்சன்ல சி.எம் வேட்பாளராக நிற்க போகிறவர்… அவருக்கு ஏதாவது ஒன்னுனா அவரோட தொண்டர்கள் ஹாஸ்பிடலை சும்மா விட மாட்டாங்க” என்ற நாராயணன்
மேலும் “சார் தேவேந்திரன் ஆல்ரெடி நம்ம ஹாஸ்பிடல் வொர்க் பண்ணி இருக்கிறார்… அவரை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரியம்னு ஒன்னும் இல்லை… ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே அவர் நம்ம ஹாஸ்பிடல் பண்ண எல்லா ஹார்ட் சர்ஜரியும் சக்ஸஸ் ஒரு பெயிலியர் கூட கிடையாது சார்… இப்ப கூட இந்தியாவின் சிறந்த ஹார்ட் சர்ஜரி ஸ்பெஷலிட்டில் டாக்டர் தேவாவும் ஒருத்தர் … அவர் நம்ம ஹாஸ்பிடல் விட்டு போன அப்புறம் நடந்த எந்த ஆப்ரேஷனும் சக்ஸஸ் ஆகல சார்,
டாக்டர் தேவாவோட பாஸ்ட் அண்ட் இப்ப இருக்க பர்சனல் லைஃப் பத்தி நாமா யோசிச்சா லாஸ் நமக்கு தான் சார்” என்றார்…
மகேஸ்வரன் யோசிக்க ஆரம்பித்தார்..
ஓகே டாக்டர் நாராயணன் ஆனா இப்ப நாமா எப்படி ஹெல்ப் கேட்டு டாக்டர் தேவா வா காண்டாக்ட் பண்றது… எனக்கு தெரிஞ்சு அவரை நாமா நேரடியா காண்டாக்ட் பண்ண முடியாது…அப்படியே கேட்டாலும் அவர் ஒத்துக்குவாரா? என்றார் அங்கு நின்று இருந்த மற்றுமொரு மருத்துவர் லட்சுமணன்…
தேவாவோட ஃப்ரெண்ட் டாக்டர் சூர்யா கிட்ட பேசலாம் அவர் சொன்னா தேவா கேட்பார்… சூர்யா கிட்ட டாக்டர் வெண்ணிலாவே பேச சொல்லலாம் சார் அவங்க அவரோட சிஸ்டர் தானே என்றார்…
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மகேஸ்வரன் யோசிக்க ஆரம்பித்தார்…
டாக்டர் நாராயணன் கூறுவது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இருக்கும் ஒரே வழி தேவா தான்… ஆனால் தேவா இதற்கு ஒத்து கொள்வானா, இந்த மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வில் தானே நேர்கோட்டில் பயணித்து கொண்டு இருந்த தேவா வாழ்க்கையை திசை மாற்றியது… அவனுக்கு ஏற்பட்ட அவமானம், அவனை சுற்றி இருப்பவர்கள் அவனை வெறுத்தது இது எல்லாம் இந்த மருத்துவமனையில் நடந்தது தானே அதனால் தேவா ஒத்து கொள்வானா என்று மகேஸ்வரன் பயந்தார்…
இவர்கள் கூறுவது போல் சூர்யாவிடம் அணுகினால் தேவா விஷயத்தில் தான் செய்த தவறால் தேவாவை விட அதிக கோவத்துடன் ஏன் கொலை வெறியுடன் இருப்பது சூர்யா தான்… இப்போது தான் உதவி என்று போய் நின்றால் சூர்யா அதற்கு பதிலாக அன்று நடந்த உண்மைகளை அனைவரிடமும் கூற சொன்னால் என்ன செய்வது, ஒரு உயிரை வைத்து பேரம் பேச மாட்டார்கள் தான் சூர்யாவும் தேவாவும், ஆனாலும் ஒரு வேளை அப்படி சூர்யா சொன்னால் தன்னுடைய கெளரவம் இந்த மருத்துவமனைக்கு இருக்கும் மரியாதை அனைத்துமே ஒரு நொடியில் காற்றில் பறந்து விடும்…
அதனால் சூர்யாவிடம் தான் நேரடியாக சென்று உதவி கேட்க முடியாது… வேறு யாரையாவது தான் தூது அனுப்ப வேண்டும்… யாரை அனுப்புவது என்று யோசித்தார்… வெண்ணிலாவை தூது அனுப்புவது மிக மோசமான ஒரு தேர்வு தான்… அவள் சென்று உதவி கேட்டாலும் சூர்யாவிடம் வேலைக்கு ஆகாது… திவேஷ் மீதும் அவன் கொலை வெறியில் இருக்கிறான்…
அடுத்து தன் மருமகள் தேவாவின் தங்கை இந்துமதியை அனுப்பலாமா என்ற சிந்தனை வந்தது… ஆனால் இந்துமதி தூது போக ஒத்து கொள்ள மாட்டாள்… இந்துமதி கொஞ்சம் கர்வம் பிடித்தவள் என்றும் யாருக்காகவும் தன் நிலையை விட்டு கீழ் இறங்க மாட்டாள்… அதுவும் இப்போது அவளுக்கு தேவா மீது பயங்கர கோவம் வெறுப்பு எல்லாமே உள்ளது…
இறுதியாக முடியிது என மறுத்த தனது மகன் கார்த்திக்கை சமாதானம் படுத்தி சூர்யாவிடம் பேச வைத்தார் மகேஸ்வரன்…
கார்த்திக் சென்று பேசினால் சூர்யா தேவா இருவருமே மறுப்பு கூற மாட்டார்கள்… கார்த்திக் சூர்யா தேவாவின் நண்பன் தான்… ஆனால் அன்று தான் தேவா பற்றி கூறிய பொய்யை நம்பி தேவாவிடம் இருந்து பிரிந்து விட்டான்…
கார்த்திக் சூர்யாவிற்கு அலைப்பேசியில் அழைத்தான்.. கார்த்திக் நம்பரை பார்த்து எதிரி குரூப் எதுக்கு நமக்கு கால் பண்ணுது என புருவம் சுரூக்கி ஒரு வித யோசனையுடன்
அழைப்பை ஏற்று காதில் வைத்தான் சூர்யா..
“ஹலோ நான் கார்த்தி பேசுறேன்” என கார்த்திக் பேச ஆரம்பிக்க,
மறுமுனையில் இருந்த சூர்யாவோ “அச்சோ கார்த்திக் சார் நீங்களா நீங்க எனக்கு போன் பண்ணி இருக்கீங்களா என்னால் நம்பவே முடியலை.. உங்க கைதி மூவியை நான் பல தடவை பார்த்து இருக்கேன்” என வேண்டுமென்றே கார்த்திக்கை கேலி செய்யும் விதமாக பேச,
கடுப்பான கார்த்திகோ “சூர்யா விளையாடத, நான் கார்த்திக் ரொம்ப முக்கியமான விஷயத்துக்காக கால் பண்ணி இருக்கேன்” என எரிச்சல் பட,
“அவ்ளோ எரிச்சலா இருக்குன்னா எதுக்கு எனக்கு கால் பண்ணுற? ஏதோ உங்களுக்கு என்னை வச்சு காரியம் ஆக வேண்டிய இருக்கு… அதுக்கு தானே உங்கப்பன் ஐடியா கொடுக்க நீ கால் பண்ணி இருக்க என முடிப்பதற்குள்
“சூர்யா அப்பாவை மரியாதை இல்லாம பேசாதா நல்லா இருக்காது”…
“எனக்கு நல்லா இருக்கு”..
சூர்யா கார்த்திக் பல்லை கடிக்க
இதோ பார் உங்கப்பனுக்கு இந்த மரியாதையே அதிகம்.. நீ இடையில் மரியாதை கொஞு மாலை கொடுன்னு வந்து இன்னும் எக்ஸ்ட்ரா நாலு திட்டு வாங்கி கொடுக்காத, அதுவும் அசிங்க அசிங்கமா திட்டுவேன்.. என்ன விஷயத்திற்காஇ கால் பண்ணுனீயோ அதை சொல்லு என சூர்யா கேட்கவும்..
கார்த்திக் அங்குள்ள நிலவரத்தை சொல்ல,
ஓ… இதுக்கு தான் எலி நியூடா அங்குட்டும் இங்குட்டும் சுத்துதா என கேலி செய்ய,
கார்த்திக் பல்லை கடித்தான்..
அது சரி நான் ஹார்ட் சர்ஜனும் இல்ல.. தேவாவும் இல்ல அப்புறம் எதுக்கு எனக்கு கால் பண்ணி இருக்க, யார் மூலமாக உதவி தேவையோ அவங்களுக்கு கூப்டுங்க..
சூர்யா இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் ப்ளீஸ்… தேவாகிட்ட நீ..
என்னால முடியாது…. உங்க ஹாஸ்பிடலுக்காவும் உங்கபப்பனுக்காகவும் என்னால் பேச முடியாது… ஆனா நீ சொன்னது போல ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அப்புடிங்கிறதால் பேசுறேன் என்றவன் கோவமாக அழைப்பை துண்டித்தான்..
எப்புடி பேசுறான் இதுக்கு தான் வேண்டாம் சொன்னேன் எனும் விதமாக மகன் தந்தையை பார்க்க, மகேஸ்வரனோ நம்ம சூழ்நிலை அப்புடி என அவனின் தோள் தட்டி சமாதனம் செய்தார்…
சூர்யா விஷயத்தை சொன்னதும் தேவா இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொண்டான் ஒரு நிபந்தனையுடன்,
ஆரோக்கியம் மருத்துவமனைக்குள் எந்நிலையிலும் காலடி எடுத்து வைக்க மாட்டேன்… அருகில் இருக்கும் வேறு மருத்துவமனைக்கு மினிஸ்டரை மாற்றினால் வந்து அறுவை சிகிச்சை செய்வேன் என்று கூறினான்…. கார்த்திக்கும் அதற்கு ஒத்து கொண்டான்…
மகேஸ்வரனுக்கு அமைச்சரை வேறு மருத்துவமனை அனுப்புவது விருப்பமில்லை… அது தனது மருத்துவமனைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால், ஆனால் இப்போது வேறு வழியில்லை என்று அமைதியாக இருந்தார்… அடுத்த சில விநாடிகளில் அமைச்சர் அருகில் இருந்த நலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தேவா சென்று அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வெளியே வந்தான்….
அப்போது தான் அங்கு நின்று இருந்த தியா அவனை பார்த்து,
“பாவா நீங்க டாக்டரா?’
“ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அவனை கண்டு விட்ட சந்தோஷ மிகுதியில் இடம் பொருள் ஏவல் எதுவும் பார்க்காமல் கத்தி விட்டாள்….
தாரிகா, அமைச்சர் மனைவி, கட்சி ஆட்கள் அனைவரும் அவளை தான் திரும்பி பார்த்தனர்… அவளோ முகத்தில் தேவாவை பார்த்ததால் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நின்று கொண்டு இருந்தாள்… அவளுக்கு இப்போது தான் இருப்பது மருத்துவமனை தனது தோழியின் தந்தை அங்கு இருக்கிறார்… அவர்கள் குடும்பம் அழுது கொண்டு இருக்கின்றனர் என்பது எல்லாம் நினைவில் இல்லை… அவளின் நிலை ஒரு சாக்லேட் கேட்கும் குழந்தைக்கு தீடிரென பத்து டெய்ரி மில்க் சாக்லெட் வாங்கி கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு மகிழ்வாக துள்ளி குதிக்கும் அந்த மனநிலையில் இருந்தாள் தியா….
ஹரிணிக்கு தியா மகிழ்வை பார்த்தே இது தான் தேவா என்று தெரிந்து கொண்டாள்… கத்தி கொண்டு இருந்த தியா அருகில் வந்து அவள் கையை அழுத்தி பிடித்து அமைதியா இரு என்று அங்கு நின்று இருந்த தாரிகாவை கண்காட்டினாள் ஹரிணி… அதன் பின்பே சுற்றம் அறிந்து சற்று அமைதியானால் தியா…
இதில் கொடுமை என்னவென்றால் தேவாவிற்கு தியாவை யாரென்றே தெரியவில்லை… யார் இந்த பொண்ணு?எதற்காக தன்னை பார்த்ததும் இவள் கண்களில் இவ்வளவு பிரகாசம் முகத்தில் இவ்வளவு மகிழ்வு எதனால் என்று ஒரு நொடி யோசித்தவன்,
பின்பு ம்பச் என அவள் சம்மந்தப்பட்ட யோசனையை அலட்சியம் செய்து விட்டு, அமைச்சரின் மனைவியிடம் அமைச்சருக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்தும் இனி அவரின் உடல்நிலை குறித்தும் கூறி கொண்டு இருந்தான்…
அதன் பிறகே அவள் அழைத்த பாவா என்பதில் தான் அன்று வீட்டில் பார்த்தா ராகவ் கசின் என்பது புரிந்தது…
தியா அவன் பேசுவதையே இமைக்காமல் பார்த்து கொண்டு நின்று இருந்தாள்… முதன் முதலில் அவனை பார்க்கும் போது அவன் முகத்தில் அவ்வளவு இறுக்கம் கடுகடுப்பு இருந்தது… இன்றோ அது இரண்டுமே இல்லை… சாந்தமாக அவன் முகம் இருந்தது…
அவனை பார்த்த தியாவின் உதடுகளோ சிரித்த வண்ணமாகவே இருந்தது… ஹரிணி தாரிகா அன்னை தியா வை தவறாக எண்ண கூடாது என்று தியா கன்னத்தை அழுத்தி சிரிக்காத மாதிரி வைத்தாலும், மறுபடியும் தியா சிரித்த முகமாகவே நின்று இருந்தாள்… இந்த சூழ்நிலையில் தன்னுடைய முகபாவனை தவறானது என்று தியாவின் மூளைக்கு புரிகிறது… ஆனாலும் தேவாவை பார்த்ததும் தன் உள்ளம் கொண்ட மகிழ்வை அவள் எவ்வளவு அணை போட்டு தடுத்தாலும் மனது கேட்காமல் அணையை உடைத்து வரும் வெள்ளம் போல் அவள் கண்களும் முகமும் அந்த மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிபடுத்துகிறது…
தேவா அவர்களிடம் பேசி விட்டு கிளம்பும் போது தாரிகா அன்னை தேவாவின் கைப்பிடித்து ரொம்ப “தாங்க்ஸ் டாக்டர் என் புருஷன் உயிரை காப்பாத்தி கொடுத்துட்டிங்க… நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கனும் குழந்தை குட்டியோடு” என்று கூறினார்… அதை கேட்டு தேவா மகிழ்ந்தானோ என்னவோ தியாவிற்கு மனதிற்குள் சொல்ல முடியாத அளவு அவ்வளவு மகிழ்வு… அவனை புகழ்வது அவளுக்கு பெருமையாக இருந்தது…
தேவாவோ அவர்கள் சொன்னதுக்கு நன்றி எனும் விதமாக உதட்டோரம் சின்ன சிரிப்பை அளித்து விட்டு கிளம்பினான்… இதழ் பிரிக்காமல் உதட்டை லேசாக வளைத்ததுக்கே, என் பாவா சிரிக்கும் போது எவ்ளோ அழகு ப்பா என்று தியா அதையும் ரசித்தாள்…
தேவா தியா வை கடந்து சென்றான்… என்ன இவரு நம்ம கிட்ட பேசாம போறாரு? என்று அவள் முகம் சுருங்கியது.. செல்லும் அவனையே பார்த்து கொண்டு நின்றவள்…
பின்பு “பாவா ஒரு நிமிஷம் நில்லுங்க பாவா” என்றபடி தேவா பின்னே சென்றாள்…
“ஹாய் பாவா எப்படி இருக்கீங்க… நல்லா இருக்கீங்களா, நாமா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு” என தியா அருகே பேசி கொண்டே வர,
முதலில் யார் என்று தெரியாது புருவம் சுருக்கி பார்த்த தேவாவிற்கு.. அவளின் இந்த பாவா என்ற அழைப்பும் எரிச்சல்ப்படுத்துப் பேச்சும் அவள் யார் என்பதை நியாகப்படுத்தி விட்டது.. இரிட்டேடிங் இடியட் மனதிற்குள் திட்டி கொண்டான்…
“ என்ன பாவா நான் பேசிக்கிட்டே வரேன் நீங்க கண்டுக்காம போறீங்க… இது எல்லாம் நியாயமா கொஞ்சம் நில்லுங்க பாவா” தியா கேட்க,
“ஹூ ஆர் யூ” வேண்டுமென்றே தேவா கேட்க,
“என்னை தெரியலையா பாவா உங்களுக்கு” என கேட்டவளுக்கு உள்ளுக்குள் பயங்கர ஏமாற்றமாக இருந்தது.. இருந்தும் நான் உங்களோட என ஆரம்பிக்கும் முன்னரே,
“நீ யாரா வேணா இரு அந்த விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லை, என்ன பாவா கூப்பிடுற வேலையோ என் பின்ன வர வேலையோ வச்சுக்காதா”, என்று மெதுவாக அவள் புறம் திரும்பி விரல் நீட்டி கோவமாக எச்சரித்து விட்டு தேவா விறு விறுவென நடந்தான்…
அவன் கோவபேச்சை எல்லாம் சட்டை செய்யாது மீண்டும் லொட லொடவென பேசி கொண்டே இருந்தாள்… அவன் நடந்து தான் செல்கிறான்… ஆனால் தியா வால் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை… அதனால் தேவா அருகில் ஓடி கொண்டே பேசினாள்…
தியாவிற்கு ஓடி கொண்டே பேசுவது மூச்சு வேறு வாங்கியது…
“பாவா மெதுவா நடங்க, இல்லைனா இப்படி ஓரமா நின்னு பேசாலாம் முடியலை ஓடி கிட்டே பேசுறது” என்று தியா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறினாள்… தேவா எதுவும் பேசாது அமைதியாக நடந்து கொண்டு இருந்தான்…
மருத்துவமனை நிறைய ஆங்காங்கே ஆட்கள் வேற இருந்தனர்.. இவளோடு நின்று கோவமாக பேசினால் மற்றவர்கள் கவனம் இங்கு திரும்பும் என்பதால் அமைதியாக நடந்தான்…
“பாவா உங்க கிட்ட தான் நான் பேசுறேன்… ஏதோ காது கேட்காத மாதிரி போறீங்க… அதுவும் இவ்வளோ வேக வேகமா, ஏதாவது எக்ஸ்பிரஸ் ட்ரைன் பிடிக்க போறீங்களா, உங்க கிட்ட நிறைய கேட்க வேண்டிய கேள்வி இருக்கு… அதற்கு எல்லாம் பதில் தெரியலைனா எனக்கு மண்டை வெடிச்சிரும்… பாவா நில்லுங்க என்று அவன் கைபிடித்து நிறுத்தியவள், இப்ப நீங்க பிசினா பரவாயில்லை, உங்க மொபைல் நம்பர் கொடுத்துட்டு போங்க… நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு நீங்க ஃப்ரியா இருக்க டைம் வந்து என் கொஸ்டினுக்கு ஆன்சர் தெரிஞ்சிக்கிறேன்” என்று இரண்டு கண்ணையும் சிமிட்டியபடி கூறினாள்…
தேவா பெரு மூச்சை இழுத்து விட்டவன், தனது நெற்றியை தடவினான்…
“என்ன பாவா தலை வலிக்குதா, வாங்களேன் வெளியே காஃபி ஷாப் போய் காபி சாப்பிட்டே பேசலாம் என்றாள்..
உண்மையாகவே தேவாவிற்கு இவளால் தலை வலி வரும் போல தான் இருந்தது.. கோவமாக முகத்தை திருப்பினாலும் திரும்ப திரும்ப சிரித்த முகமாக பேசும் இவளை எப்புடி கையாள்வது என்றே குழப்பமே வந்தது..
இவர்கள் இருவரும் நின்ற இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டு இருந்த ஹரிணியை கை காட்டி இங்கு வருமாறு அழைத்தான் தேவா…
ஹரிணியும் அருகில் வர,
ஹரிணியிடம் “யார் இது உன்னோட ஃப்ரெண்டா” என்று தியாவை காட்டி கேட்டான்….
ஹரிணி ‘ஆம்’ என்று தலை ஆட்டினாள்…
தேவா தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து தனது வால்டை எடுத்து அதில் வைத்து இருந்த ஒரு விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து ஹரிணி கையில் கொடுக்க,
“என்கிட்ட கொடுங்க பாவா உங்க கார்டா இது” என்றபடி தேவா கையில் இருந்து பிடிங்கினாள் தியா…
“இதுல ஒரு சைகார்டிஸ்ட் அட்ரஸ் இருக்கும்மா… உன் பிரெண்டா கூட்டிட்டு போய் காட்டுங்க… அவரு எவ்ளோ முத்துன கேஸா இருந்தாலும் சரி பண்ணிருவார்… அசாலாட்டா விட்றாதீங்க அப்புறம் பாவம் சங்கிலி போட்டு கட்டி வைக்கிற நிலைக்கு வந்துர போகுது” என்று அலட்சியமாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான்…
“என்னடி சொல்லிட்டு போறாரு புரியலையே” தியா கேட்க
“ஆ… நீ சரியான பைத்தியம் உனக்கு வைத்தியம் பார்க்கனும்னு சொல்றாருடி அந்த ஆளு”,
“ஹனிமா பாவா மரியாதையா பே”சு என்று ஹரிணியிடம் கூறி விட்டு மறுபடியும் அவன் பின்னால் வெளியே ஓடி வர, ஹரிணி தான் தன் தலையில் அடித்து கொண்டாள்…
அதற்குள் தேவா தனது காரை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றான்…
‘ச்சே இப்புடி மிஸ் பண்ணிட்டன்னே’ என காலால் தரையில் உதைத்தாள் கோவத்தில்,