சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 11
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
“ஒரு சேலன்ஜே பண்ணி இருக்கேன் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட.. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை பத்தி..”
புன்னகை மாறாமல் அவன் சொன்னதை அந்த பெண் நிருபர் கயல் புருவம் உயர்த்தி கேட்கவும் சுந்தரியும் பாட்டியும் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து கண்ணை அகற்றாமல் அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க.. அவன் சிரித்து விட்டு தொடர்ந்தான்..
“ஆக்சுவலா என் ஃபிரண்ட்ஸ் எனக்கு வைஃப்பா ஒரு நாட்டுக்கட்டை தான் அமையும்.. ஃபேரா வெஸ்டர்னைஸ்டா மாடர்னா இருக்குற எந்த பொண்ணும் என்னை விரும்ப மாட்டான்னு சொல்லி என்னை வெறுப்பேத்திக்கிட்டே இருந்தாங்க.. அப்படி அவங்க கிண்டல் பண்ணும் போது நான் பண்ண சேலஞ்ச்தான் அது.. ஃபேரா மாடர்னா வெஸ்டர்னைஸ்டா நுனி நாக்கில இங்கிலீஷ் பேசிகிட்டு இருக்கிற ஒரு போல்டான பொண்ணை நான் என்னை லவ் பண்ண வெச்சு கல்யாணம் பண்ணி சூப்பரா வாழ்ந்து காட்டறேன்னு அவங்க கிட்ட சேலஞ்ச் பண்ணி இருக்கேன்.. அப்படி ஒரு பொண்ணை தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன்..” என்றான் அவன்..
அவன் சொன்னதை கேட்டு சுந்தரிக்கு யாரோ தன் இதயத்தை இரண்டாய் பிளந்தது போல் வலித்தது.. தன் மனதில் மெதுவாக முளைத்த காதல் முளையிலேயே கருகிவிட்டதை உணர்ந்தவளின் கண்களில் அருவி போல் நீர் பொழிந்து கொண்டிருந்தது..
அவன் சொன்னதை கேட்ட நொடி பொல பொலவென தன்னையுமறியாமல் அவள் கண்ணில் பொழிந்த கண்ணீரை பாட்டிக்கு பின்னே நின்று இருந்தவள் சட்டென பாட்டிக்கு தெரிவதற்கு முன் துடைத்துக் கொண்டாள்..
பாட்டியோ “இது என்னமா இது அதிசயமா இருக்கு? அவங்க சினேகிதங்க அப்படி சொன்னாங்கன்னா அன்பான வாழ்க்கை வாழறதுக்கு நெறமோ பெரிய படிப்போ அவசியம் இல்லை.. புருஷன் பொண்டாட்டிக்கு இடையில அன்பும் காதலும் இருந்தா போதும்ன்னு சொல்லி அந்த மாதிரி நெறமா இல்லாம ரொம்ப படிக்காத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினாலும் நான் சிறப்பா வாழ்ந்து காட்டுறேன் டா.. அப்படின்னு சவால் விடாம இவன் என்னமா இப்படி ஒரு சவாலை விட்டு இருக்கான்.. இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்போம்ன்னு நினைக்கிறான்.. அதுக்கு அப்படிப்பட்ட பொண்ணை அவனுக்கு பிடிக்கணும் இல்ல.. அப்படிப்பட்ட பொண்ணை இவனுக்கு பிடிக்குமா? அப்படி பிடிக்கிற மாதிரி இருந்தா அங்க வெளிநாட்டில் படிச்சப்பவே அங்க இருந்த ஏதாவது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே வந்திருப்பானேமா.. எப்ப அங்க இருந்த எந்த பொண்ணையும் அவனுக்கு பிடிக்கலையோ.. அதுல இருந்தே தெரியலையா அவனுக்கு? அந்த மாதிரி பொண்ணு எல்லாம் அவனுக்கு ஒத்து வராதுனு.. நான் அந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் தப்பானவங்கனு சொல்லல.. ஆனா இவன் மனசு அதை விரும்பாதுன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு… ஹூ..ம்… நான் என்னவோ நெனச்சேன்.. கடைசியில இந்த பிள்ளை இப்படி சொல்லிடுச்சே..” என்ற பாட்டி பெருமூச்சு விட்டுக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்..
“ஐயோ பாட்டி.. அவர் எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்.. அந்த மாதிரி நிறைய பொண்ணுங்களை பார்த்திருப்பாரு.. ஆனா அவருக்கு அந்த மாதிரி பொண்ணுங்கள்ல அவர் மனசுக்கு புடிச்ச மாதிரி பொண்ணு இன்னும் கிடைக்கல.. அவர் நினைக்கிற படியே அவர் ஆசைப்பட்ட படியே அவருக்கு நல்ல பொண்ணா அமையட்டும் பாட்டி.. நம்மளும் கடவுள்கிட்ட அப்படியே வேண்டிப்போம்.. எவ்ளோ பேரை வாழ வச்சுட்டு இருக்காரு.. அவர் மனசு படி அவர் நல்லபடியா வாழனும்..” என்றாள் சுந்தரி தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு..
இதற்குள் தொலைக்காட்சியிலோ அந்தப் பெண் கயல் ” ஓ…நீங்க இப்படிப்பட்ட பொண்ணா தான் தேடுறீங்களா..? ஏற்கனவே யாரையாவது பார்த்து வச்சிருக்கீங்களா?” என்று அவள் கேட்க “இல்லை இல்லை.. இதுவரைக்கும் அப்படி யாரும் என் கண்ணில படல.. இனிமே படறதுக்கு சான்ஸ் நிறைய இருக்குன்னு நெனைக்கறேன்..” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்..
“ஓகே சார்.. எங்க சைடுல இருந்து ஆல் த பெஸ்ட்… அப்புறம் இன்னைக்கு உங்க பேட்டியை பார்க்கிற எங்ஸ்டர்ஸ்க்கு நீங்க ஏதாவது சொல்ல விரும்புனீங்கன்னா நீங்க சொல்லலாம்..”
“இன்னிக்கு இருக்கிற எங்ஸ்டர்ஸ்க்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு எனக்கு தெரியல.. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.. எதுவா இருந்தாலும் உங்க மனசு சொல்றதைக் கேட்டு நடந்துக்கோங்க.. எப்பவுமே உங்க மனசு சொல்றது தான் கரெக்டா இருக்கும்.. இது மட்டும் தான் நான் சொல்லிக்கொள்ள விரும்பறது.. மனசு தப்புனு சொல்லுச்சுன்னா அதை நிச்சயமா பண்ணவே ஆரம்பிக்காதீங்க.. ஏன்னா அது தப்பா தான் போய் முடியும்” என்று அவன் சொல்ல “ஓ.. வாட் எ கிரேட் மெசேஜ்.. !! தேங்க்யூ சார்..” என்று சொன்ன கயல் அத்தோடு பேட்டியை முடித்துக் கொண்டாள்..
அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி அவர்களுடைய ஜவுளி கடைக்கு சென்று அந்த ஜவுளிக்கடையை சுற்றி காண்பித்தான்..
அவன் ஜவுளி கடையையும் கார்மெண்ட்ஸையும் பார்த்த சுந்தரி “எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் அவர்.. நம்மகிட்ட எவ்வளவு சகஜமா பேசுறாரு.. எவ்வளவு உதவி செய்யறாரு எல்லாருக்கும்.. இவருக்கு எப்பவும் நல்லது தான் நடக்கணும்.. பாட்டி சொன்னாங்கன்னு இவ்வளவு பெரிய ஆள போய் நம்மளும் கட்டிக்கலாம்னு கனவு கண்டோமே.. எவ்ளோ பெரிய பைத்தியக்காரி நான்.. அவர் எங்க.. நான் எங்க…”
இப்படி யோசித்து பின்னந்தலையில் அடித்துக் கொண்டவள் “நல்லபடியா இருக்கட்டும் அவர் நினைச்ச மாதிரியே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு” என்று நினைத்தவள் “சரி பாட்டி நான் போயி உங்களுக்கு கஞ்சி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி சமையலறைக்கு சென்றாள்..
இங்கே பேட்டி முடித்த கயல் விடைபெற அவளுடன் பேசிக்கொண்டே வந்தவனிடம் “சார்.. உங்களை நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி பேட்டி எடுத்து இருக்கணும் சார்” என்றாள்..
ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தியவன் “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டான்..
“எனக்கு தெரிஞ்சு நீங்க சொல்ற அத்தனை குவாலிட்டிஸூம் என்கிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்..” என்றவளை பார்த்து சிரித்துக் கொண்டே “நிச்சயமா இருக்கு..” என்றான் சுந்தர்..
“அதான் சொல்றேன்.. ஒரு வருஷம் முன்னாடி உங்களை பாத்து இருந்தா நிச்சயமா உங்களை நானே கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பேன்.. இப்ப பாருங்க.. இந்த தடியன் இருக்கானே.. கேமராமேன் மித்ரன்.. இவனை கல்யாணம் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.. ரொம்ப சோம்பேறியா இருக்கான் சா..ர்.. சரி.. கேமரா மேன்னா இருக்கானே.. அப்படியே முன்னேறி நல்லா வந்துருவான்.. ரெண்டு பேரும் சேர்ந்து சூப்பரா இருக்க போறோம் லைஃப்லன்னு நெனச்சு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. லவ் மேரேஜ் தான்… ஆனா இன்னும் அப்படியே கேமராவை தூக்கிட்டே தான் திரியறான்..” குறைபட்டுக் கொண்டாள் அவள்..
மித்ரனோ அவளை பார்த்து முறைத்தான்..
இப்போது இடவலமாக தலையை ஆட்டிய சுந்தர், “நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. நீங்க கல்யாணம் பண்ணிக்கும்போது உங்க ரெண்டு பேர் மனசுலயும் எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும்.. ஆனால் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகள்ல எல்லாமே அப்படியே கையில வந்து விழுறது இல்ல.. முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்.. நீங்க அவரு அப்படியே இருக்காரு கேமிரா மேனான்னு சொல்றீங்க.. ஆனா எனக்கு என்ன தோணுது தெரியுமா? அவருக்கு இது வரைக்கும் வெற்றி கிடைக்கலனாலும் வாழ்க்கைல முன்னேற முடியலனாலும் அவர் இன்னும் அந்த கேமராவை தூக்கிட்டு சுத்திட்டு தான் இருக்காரு.. தன் குறிக்கோளை நோக்கி இன்னும் ஓடிட்டு தான் இருக்காரு.. தன்னம்பிக்கையை இழக்கல.. அந்த நம்பிக்கை இருக்கு இல்ல.. என்னைக்காவது ஒருநாள் நல்லது நடக்கும்ன்னு.. அதுதான் முக்கியம்.. அது போயிடுச்சுன்னா தான் நம்ம தோத்துட்டோம்னு அர்த்தம்.. அதனால அவர் நிச்சயமா நல்லா முன்னுக்கு வருவார்.. கவலைப்படாதீங்க.. அப்போ நீங்களே வந்து என்கிட்ட சொல்லுவீங்க பாருங்க.. இவர் தான் நான் லைஃப்ல சூஸ் பண்ண விஷயங்கள்லயே பெஸ்ட் சாய்ஸ்ன்னு”
சுந்தர் சொல்ல “உங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா எங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்கற மிஸ்அன்டர்ஸ்டான்டிங் எல்லாம் சரியா போயிடும் போல இருக்கு.. எல்லாருக்குமே மனசுல ஒரு நம்பிக்கை வந்துடும் சார்.. எவ்வளவு பாசிட்டிவா இருக்கீங்க..?! தேங்க்யூ வெரி மச் சார்..” என்றான் மித்ரன்..
“உங்களுக்கும் கயலுக்கும் என்னோட பெஸ்ட் விஷஸ்.. அப்புறம்… இப்ப நம்ம ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம்.. என் வீட்டு அட்ரஸ் தரேன்.. ஒருநாள் வீட்டுக்கு சாப்பிட வாங்க. எங்க வீட்ல சூப்பரா சமையல் செய்யறவங்க ஒருத்தங்க இருக்காங்க.. நீங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா அவங்க சமையல் சாப்பிடலாம்..”
அவர்களை விடை கொடுத்து அனுப்பியவன் நேரத்தை பார்த்தான்.. மணி ஐந்து முப்பது ஆகி இருந்தது.. “பார்ட்டிக்கு வேற டைம் ஆயிடுச்சு..” என்று அவசர அவசரமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் அந்த உல்லாச விடுதியை நோக்கி..
அந்த உல்லாச விடுதியில் ஒரு அறையில் மாதேஷ் கதிரையில் அமர்ந்து கொண்டிருக்க அவன் மடியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்..
“என்ன சொல்ற மாதேஷ்? நான் காஸ்டியூம் டிசைனரா வேற ஒருத்தரோட கார்மெண்ட்ஸ்ல ஒர்க் பண்ணனுமா? உனக்கு ஏதாவது ஆயிடுச்சா? உன்னோட கார்மெண்ட்ஸ்க்கு தானே நான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணிட்டு இருக்கேன்.. இப்ப நான் அங்க போயிட்டன்னா இங்கே யார் டிசைன் பண்ணுவா?” புரியாமல் கேட்டாள் ஷாலினி..
“ஷாலு டியர்.. நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு.. ஆக்சுவலா இப்ப நம்ம கார்மெண்ட்ஸ் சேல்ஸ் எல்லாம் ரொம்ப கேவலமா போயிட்டு இருக்கு.. ஆர்டர் எதுவுமே கிடைக்கல.. பயங்கர நஷ்டத்துல போயிட்டு இருக்கு.. இப்படியே இன்னும் ஒரு ஆறு மாசம் போச்சுன்னா மொத்த கார்மெண்ட்ஸையும் நான் இழுத்து மூட வேண்டியதுதான்.. நிறைய கடன் வேற வாங்கி வச்சிருக்கேன்.. அதெல்லாம் அடைக்கணும்னா என் சொத்து முழுக்க விக்கணும்.. அப்புறம் நான் நடு ரோட்ல தான் நிக்கணும்.. அதுக்கு தான் இப்போ ஒரு பிளான் பண்ணி இருக்கேன்..” என்றான் அவன்..
“என்ன..!? ப்ளானா..!? என்ன பிளான்..?”
“நான் சொன்னேன் இல்ல உன் கிட்ட.. நீ சுந்தரோட கார்மெண்ட்ஸ்ல காஸ்டியூம் டிசைனரா ஒர்க் பண்ண போன்னு..” அவள் கன்னம் பிடித்து கேட்டான்..
“ஆமா சொன்ன.. அதுக்கு என்னடா இப்போ?” அவள் புருவத்தை உயர்த்தி கேட்டாள்..
அவளை தன்னோடு இன்னும் இறுக்கியவன் “இங்க பாரு.. இப்போ இந்த சுந்தரோட கார்மெண்ட்ஸ் நல்ல பிராஃபிட்ல ஓடிட்டு இருக்கு.. லைஃபோட உச்சத்தில இருக்கான் அவன்.. நான் இவ்ளோ சக்சஸ்புல்லா அவன் வருவான்னு சத்தியமா நினைக்கவே இல்ல.. கிராமத்தில் இருந்து வந்தவன் இவன் எல்லாம் எங்க இந்த மாதிரி ஹை சொசைட்டில தாக்கு பிடிக்க போறான்னு நினைச்சேன்.. ஆனா யாருமே நினைச்சு பார்க்காத அளவுக்கு அவன் லைஃப்ல முன்னேறி இருக்கான்.. அவன் கம்பெனியோட காஸ்ட்யூம்ஸை அவன் தான் டிசைன் பண்ணிட்டு இருக்கான் இதுவரைக்கும்.. ஆனா இப்போ அவனோட பிசினஸ் வால்யூம் ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டதுனால காஸ்டியூம் டிசைன் பண்ண ஒரு ஆள் வேணும்னு என்கிட்ட கேட்டான்..” என்று கூறினான் மாதேஷ்..
“சோ… நான் போய் அங்க காஸ்ட்யூம் டிசைன் பண்ணி கொடுக்கணும்.. சரி.. அப்படின்னா அங்க காஸ்டியூம் டிசைனரா நான் போறதுனால.. அவனுக்கு சம்பாதிச்சு கொடுக்கறதுனால.. உனக்கு என்ன லாபம்? அவனுக்கு தானே அது ப்ராஃபிட்.. ”
அவள் புருவம் சுருக்கி கேட்க “முழுசா பேச விடு என்னை.. நீ இந்த கம்பெனியோட காஸ்டியூம் டிசைனரா தான் இருந்தே.. இந்த கம்பெனி அப்படியே ஓகோன்னு வந்துருச்சு உன் டிசைன்ல.. இப்ப நீ அங்க போனதும் அப்படியே இன்னும் பலமடங்கா அப்படியே முன்னேறிடும்.. இங்க எப்படி உன் டிசைன்லாம் காத்து வாங்குதோ அதே மாதிரி தான் அங்கேயும் காத்து வாங்க போகுது” என்றவனை முறைத்தாள் ஷாலினி..
“உனக்கு ஒழுங்கா கஸ்டமர்ஸை அட்ராக்ட் பண்ற மாதிரி மார்க்கெட்டிங் பண்ண துப்பு இல்ல.. என் டிசைனை குறை சொல்றியா நீ..?” கோவப்பட்டாள் அவள் ..
“த்சு… த்சு.. கோச்சுக்காத ஷாலு பேபி… நான் சொல்றதை ஒழுங்கா கேளு.. நீ அந்த கம்பெனிக்கு போய் சேர்ந்து உன் டிசைன்ஸ்னால அப்படியே அந்த கம்பெனி மேல மேல இன்னும் வளரும்னு எல்லாம் நான் யோசிக்கல.. வளர்ந்தாலும் எனக்கு கவலை இல்லை.. நான் உன்னை அங்க அனுப்புறது வேற ஒரு திட்டத்தோட.. ”
இதழ் ஓரமாய் ஒரு சதிகார புன்னகை புரிந்து கொண்டே சொன்னான் அவன்..
“என்ன வேற பிளானா..?! என்ன பிளான்?” என்று அவள் கேட்க “நீ அந்த சுந்தரை எப்படியாவது மயக்கி அவனை உன்னை லவ் பண்ண வைக்கணும்..” என்று அவன் சொன்னதை கேட்டவள் அப்படியே வாயடைத்து போனாள்..
அவன் மடியில் இருந்து அப்படியே துள்ளி குதித்து எழுந்து அவனை எரித்து விடுவது போல் தீயாய் முறைத்துக் கொண்டு நின்றாள் ஷாலினி…
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..