சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞

4.7
(20)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 12

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“நீ அந்த சுந்தரை எப்படியாவது மயக்கி அவனை உன்னை லவ் பண்ண வைக்கணும்..” 

மாதேஷ் சொன்னதை கேட்ட ஷாலினி அப்படியே வாயடைத்து போனாள்.. அவன் மடியில் இருந்து அப்படியே துள்ளி குதித்து எழுந்து அவனை எரித்து விடுவது போல் தீயாய் முறைத்துக் கொண்டு நின்றாள் ஷாலினி…

“ஏ மாதேஷ்.. என்ன நினைச்சுட்டு இருக்க நீ? என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? பணம் இருக்கிற ஆளா பார்த்து  மயக்கி திரியறவ மாதிரி தெரியுதா? அப்படி இருந்திருந்தா இவ்வளவு நாள் உன் கூட இருந்திருக்க மாட்டேன்.. அந்த ஸிட் என்ன லவ் பண்றேன்னு சொல்லி எவ்வளவு நாளா என் பின்னாடி அலைஞ்சிகிட்டு இருக்கான் தெரியுமா? ஆனா நான் உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்.. நான் பார்க்கறதுக்கு மாடர்னா இருக்கலாம்.. பப், டிஸ்கோதேன்னு சுத்தலாம்.. ஆனா என்னோட பேரெண்ட்ஸ் என்னை கல்சர்டா தான் வளர்த்திருக்காங்க..  உன்னை நானும் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்.. நீ என்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கறதை அலவ் பண்ணவும் மாட்டேன்.. இந்த ஷாலினி முழுசா  உனக்கு மட்டும் தான் சொந்தம்.. அதே மாதிரி இந்த மாதேஷ் முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. இதில் ஏதாவது செஞ்சு என்னை ஏமாத்தலாம்னு பார்த்தே அதோட நீ தொலைஞ்ச.. இதை நல்லா உன் மைன்ட்ல போட்டு வச்சுக்கோ” 

தன் வலக்கை சுட்டுவிரலால் அவன் நெற்றியின் பக்கவாட்டில் குத்தியபடி சொன்னாள் அவன் கண்களுக்குள் தீர்க்கமாக முறைத்துக்கொண்டு..

“கொஞ்சம் நான் சொல்றதை கேளு ஷாலு..” 

அவன் அவளை சமாதானப்படுத்த முயல அதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் “என்ன.. நைசா என்னை கழட்டிவிடலாம்னு பார்க்கிறயா? நம்மளுக்குள்ள எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப் இருக்குன்னு உனக்கு தெரியும்ல? ஏன் உங்க வீட்ல உனக்கு வேற ஏதாவது பொண்ணு பாத்துட்டாங்களா? நான் அலுத்து போயிட்டேனா உனக்கு?”

சரமாரியாக அவள் கேள்வி கேட்க தொடங்க அவன் அவளை இழுத்து தன் மடியில் மறுபடியும் கிடத்தியவன் “ஏண்டி அடுப்பில போட்ட கடுகு மாதிரி எகிர்ற? நான் சொல்றதை முழுசா கேளு.. அந்த சுந்தரோட வாழ்க்கையோட லட்சியமே ஃபேரா இருக்குற பொண்ணை கல்யாணம் பண்ணனும்கிறதுதான்.. அந்த மாதிரி நீ இருக்கிறதுனால அவனை ஈசியா கவுத்துற முடியும்.. நீ அவனோட வேற எதுவும் பண்ண வேண்டாம்.. அவன் உன்னை லவ் பண்ணி ப்ரொபோஸ் பண்ற மாதிரி நீ செஞ்சிடு.. அப்படியே உன் காதல் மயக்கத்திலே இருக்கும்போது எப்படியாவது அவன் கிட்ட இருந்து அவன் சொத்தை உன் பேர்ல எழுதி வாங்குறதுக்கு ட்ரை பண்ணு.. இதை நீ பண்ணிட்டேனா அப்புறம் நம்ம லைஃப்ல கல்யாணம் பண்ணிட்டு சூப்பரா செட்டில் ஆயிடலாம்..  நான் நினைச்ச மாதிரி நான் அவனையும் ஜெயிச்ச மாதிரி இருக்கும்.. என்ன சொல்ற?” என்று கேட்டான் மாதேஷ்..

“எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்” என்றாள் ஷாலினி.. 

“எதுக்கு ஷாலு டைம்.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? நம்ப வாழ்க்கையோட நல்லதுக்கு தான் நான் எதுவா இருந்தாலும் சொல்வேன்.. பாரு.. நான் சொன்னா நீ கேட்பேன்கிற நம்பிக்கையில் இன்னைக்கு உன் பர்த்டே பார்ட்டிக்கு அவனை வர சொல்லிட்டேன்.. சிக்ஸ் ஓ கிளாக் இங்கே இருப்பான்… நீ என்ன பண்ணுவியோ எப்படி பேசுவியோ அவன் கிட்ட காஸ்டியூம் டிசைனரா உன்னை சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு.. அதுக்கப்புறம் அங்கிருந்து நம்ம ப்ளானை சரியா எக்ஸிக்யூட் பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு.. அவனை உன் பின்னாடி பைத்தியமா திரிய வைக்கணும்.. அவன் கம்பெனியில காஸ்டியூம் டிசைனரா ஆனப்பறம் முதல்ல அவனை பத்தி ஸ்டடி பண்ணு.. அப்புறம் கரெக்டா நேரம் பார்த்து அவனை இம்ப்ரஸ் பண்ணி நீ இல்லன்னா அவனுக்கு இந்த உலகமே இல்லைன்ற மாதிரி உன் பின்னாடி அவனை பித்து பிடிச்சி அலைய வை.. அந்த சொத்தை எப்படி எழுதி வாங்கணும்னு போக போக நான் உனக்கு சொல்றேன்.. இப்போதைக்கு நீ முதல்ல அவன் கம்பெனியில காஸ்ட்யூம் டிசைனரா சேர்ற வழிய பாரு..” என்றான் மாதேஷ் அவளை இறுக்கி அணைத்தபடி..

“எனக்கு இதுல இஷ்டமே இல்ல.. எதுவும் விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணறது? நம்ம ரெண்டு பேர் லைஃப்பயும் ரொம்ப ரிஸ்க்ல போடுறோமோனு தோணுது” என்றாள் அவள்.. சுருங்கிய புருவத்தோடு..

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது பேபி.. டோன்ட் வர்ரி.. ஸீ.. அப்படியே அவன் உன்னை லவ் பண்ணா கூட உன்கிட்ட நிச்சயமா அத்து மீற மாட்டான்.. ஏன்னா அவன் ஒரு ஒழுக்க சீலன்.. பயங்கர பெர்ஃபெக்ஷனிஸ்ட் அன்ட் ஓல்ட் ஃபேஷன்ட் கை… அவன் தப்பி தவறி கூட உன் மேல கை  வைக்க மாட்டான்.. தான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு தெரிஞ்சா கூட அவன் கை விரல் நுனி கூட உன் மேல படாது… அதுக்கு நான் கேரண்டி..” 

“நீ சொல்றதை பாத்தா சரியான போரிங் மொக்க பீசா இருப்பான் போல இருக்கு.. என்னை ஏன்டா அவனை லவ் பண்ண வைக்க சொல்லி கோத்து விடுறே..”  அவள் சிணுங்கிகொண்டே கேட்டாள்..

“என் செல்ல ஷாலுவை இந்த பிளானுக்காக அவன் கிட்ட பணயம் வச்சு அனுப்ப போறேன்.. அப்படி இருக்கும்போது அவன் என்னை மாதிரி இருந்து உன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சில்மிஷம் பண்ணான்னா அப்புறம் நான் என்ன பண்றது.. நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்.. ஆனா அவனை பொறுத்தவரைக்கும் எதுவும் ரிஸ்க் இல்ல.. அதனால் தான் உன்னையே நான் தைரியமா அனுப்புறேன் இந்த வேலைக்கு..” 

“பயங்கர பிளான் தான்.. ஆனாலும் நீ இவ்ளோ பெரிய வில்லனா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல டா.. உன் ஃப்ரெண்டுக்கே எவ்வளவு பெரிய துரோகம் பண்ற நீ? உன்கிட்ட நானே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல இருக்கு”

“யாருடி சொன்னா.. அவன் என் ஃப்ரெண்டுன்னு? அவன் எல்லாம் என் வீட்ல வேலைக்காரனா இருக்க கூட தகுதி இல்லாதவன்.. நேர்ல பார்க்கும்போது உனக்கே புரியும்.. நான் ஏன் இப்படி சொன்னேன்னு.. எப்படியோ படிச்சு பெரிய லெவலுக்கு வந்துட்டான்.. அவன் அப்படி இருக்கறதை பார்க்க பார்க்க எனக்கு அவனை கீழே இறக்கி விடணும்னு உள்ளுக்குள்ள ஒரு வெறி நாளுக்கு நாள் ஏறிக்கிட்டிருக்கு.. அதான் ரொம்ப நாளா யோசிச்சு இந்த பிளான் பண்ணி இப்ப உன்னை வெச்சு எக்ஸிக்யூட் பண்ணலாம்னு  முடிவு பண்ணிட்டேன்..” 

“ஓகே மாதேஷ்.. பர்த்டே பார்ட்டிக்கு டைம் ஆயிடுச்சு.. இப்பவே பார்ட்டி ஹாலுக்கு போயிட்டா தான் சரியா இருக்கும்..” 

தன் ஆடையை சரி செய்து கொண்டு திரும்பி போக எத்தனித்தவளை பிடித்து தன் கைவளைவுகள் கொண்டு வந்தவன் “எனக்கு அவன் மேல சந்தேகமே இல்லை.. அவன் நிச்சயமா உன்கிட்ட ரொம்ப கண்ணியமா நடந்துக்குவான்..  ஆனா உன்கிட்ட நான் கொஞ்சம் உஷாரா இருக்கணும்.. தப்பி தவறி ஏதாவது உன் சைடுல தப்பு நடந்துச்சு.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்.. அதை எப்பவும் இங்க போட்டு வச்சுக்கோ..” 

அவள் தலையில் பக்கவாட்டில் சுட்டு விரலால் தட்டி காட்டினான்..

“அந்த இந்திரன் சந்திரன் எவன் வந்தாலும் உன்கிட்ட இருந்து என்னை பிரிக்க முடியாது மாதேஷ்.. ஐ லவ் யூ சோ மச்..” என்று விட்டு தனிச்சையாய் அவன் இதழில் ஒரு மெல்லிய முத்தம் வைத்தாள்..

“ஐயோ.. கொல்றியே பேபி என்னை..” என்று சொல்லி மறுபடியும் அவள் இதழ் நோக்கி தன் இதழை கொண்டு போக  “இப்படியே இருந்தோம்னா பர்த்டே பார்ட்டிக்கு போக முடியாது.. கிளம்பு…” என்று சொன்னவள் அவனையும் இழுத்துக் கொண்டு பிறந்தநாள் விழா நடக்கும் அந்த உல்லாச விடுதியின் வரவேற்பறைக்கு சென்றாள்..

வரவேற்பறைக்கு சென்றவள் அங்கே ஏற்கனவே அலங்காரம் செய்து நடுவில் ஒரு மேஜையில் கேக் வைத்து முழுதாக பிறந்தநாள் விழாவுக்காக தயாராக இருந்த வரவேற்பறையில் நடு நாயகமாக போய் நின்றாள் ஷாலினி..

தன் காரில் இருந்து இறங்கிய சுந்தர் அந்த உல்லாசவிடுதியில் பிறந்தநாள் விழா நடக்கும் இடத்திற்கு மெதுவாக கையில் ஒரு பூங்கொத்தோடு இதழில் ஒரு மென் சிரிப்போடு நுழைந்தான்..

அவன் நுழைந்தவுடன் மாதேஷ் அவனை கண்டு கொண்டான்.. “ஷாலு.. சுந்தர் வந்துட்டான் பாரு..”

அவன் அவள் காதை கடிக்க நிமிர்ந்து பார்த்தவள் “என்னடா இவன்.. இவ்ளோ கருப்பா இருக்கான்.. இருட்டுல நிக்க வச்சா ஆள் அடையாளமே தெரியாது போல இருக்கு..” என்றாள் அவள் முகத்தை சுருக்கி..

“நான்தான் சொன்னேனே.. சரி நீ இங்கேயே இரு.. நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்..” என்று சொன்னவன் அவனை நோக்கி முன்னேறி செல்ல அதற்குள் அங்கிருந்த ஷாலினியின் அப்பா ரவிக்குமார் என்ற பெரிய வியாபார காந்தம் அவன் அருகில் சென்று அவனோடு கை குலுக்கினார்..

“ஹலோ மிஸ்டர் சுந்தர்.. இன்னைக்கு உங்களோட லைவ் ப்ரோக்ராம் பார்த்தேன்.. வாவ் வாட் எ மேன்..!! நிஜமா சொல்றேன்.. உங்களோட பிசினஸ் லைஃப்போட ஸ்டோரி அவ்ளோ இன்ஸ்பிரேஷனலா இருந்தது.. வாழ்க்கையோட அடி மட்டத்திலிருந்து ஒரு வெறியோட இவ்வளவு மேல வந்து நிக்கிறீங்க.. நீங்க இன்னும் மேலே மேலே பெரிய பிசினஸ் மேனா வருவீங்கங்கறதுல எந்த டவுட்டும் இல்ல.. இப்பவே உங்களை மீட் பண்ணி வச்சுக்கிட்டா ஃபியூச்சர்ல நாங்கலாம் கூட உங்களோட பிசினஸ் டீலிங்க்ஸ் வச்சுக்கலாம் இல்ல?” 

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்..

“நோ நோ.. மிஸ்டர் ரவிக்குமார்.. நிஜமா நீங்க என்கிட்ட வந்து பேசுறதை நினைச்சாலே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு.. எவ்ளோ பெரிய பிசினஸ் மேக்னட் நீங்க..!! தேங்க்யூ வெரி மச்..!! அய்ம்  ஸோ ஹானர்ட்..!!” என்றான் சுந்தர் தன்னடக்கத்துடன்..

“ஓ.. யூ ஆர் பீயிங் வெரி ஹம்பிள் என்ட் மாடெஸ்ட் யங்க் மேன்” என்றார் அவர் சுந்தரின் முதுகில் தட்டி..

இதைக் கண்ட மாதேஷுக்கோ பொறாமையில் காதில் புகை வந்தது..

ஷாலினியும் வாயை பிளந்த படி நின்றாள் அவனை பார்த்து..

அதற்குள் இன்னும் நாலு பேர் அவனை சுற்றி நின்றிருக்க இதற்கு மேல் தாங்காது என்று நினைத்த மாதேஷ் வேகமாக அவன் அருகில் சென்றான்..

“ஹலோ பிரண்ட்ஸ்.. ஹி இஸ் மை கெஸ்ட்.. என்னோட காலேஜ் மேட்.. சோ லெட் மி ஹேவ் தி ஹானர் ஆஃப் இன்வைட்டிங் ஹிம்… வா சுந்தர்..” என்று அவனை கைப்பிடித்து கூப்பிட “டேய் என்னடா மச்சான்.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்றே..” என்று அவன் தோளில் கை போட்டுக் கொண்டான் சுந்தர் சினேகமாக..

மாதேஷோ மனதிற்குள் “இவ்வளவு பெரிய பர்த்டே பார்ட்டிக்கு வந்துட்டு மாமா மச்சான்னு லோ க்ளாஸா பேசுறான் பாரு.. என் மானம் போகுது” என்று நினைத்தவன் “சரிடா.. வாடா.. முக்கியமான ஒருத்தரை உனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி விடுறேன்..” என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு ஷாலினியிடம் சென்றான்..

“ஹாய் ஷாலு.. திஸ் இஸ் மிஸ்டர் சுந்தர்.. என்னோட காலேஜ் மேட்.. அண்ட் நௌ அப்கம்மிங் பிசினஸ் மேன்..” என்று அறிமுகம் செய்து வைத்துவிட்டு சுந்தர் பக்கம் திரும்பியவன் “இவதாண்டா பர்த்டே பேபி.. மை க்ளோஸ் ஃப்ரெண்ட்.. ஷாலினி ரவிக்குமார்.. ” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்..

சுந்தர் “ஹாப்பி பர்த்டே மேம்” என்று சொல்லி தன் கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் “ப்ளீஸ் மிஸ்டர் சுந்தர்.. தயவு செஞ்சு மேடம்னு எல்லாம் கூப்பிட்டு என்னை ரொம்ப வயசில பெரியவ ஆக்காதீங்க.. கால் மீ ஷாலினி..” என்றாள் ஷாலினி..

“ஓகே மிஸ்.ஷாலினி.. தேங்க்யூ.. இப்படி சொல்லி என்னை ஈஸ் பண்ணதுக்கு..” என்றான் சுந்தர்..

அதன் பிறகு பிறந்த நாள் நிகழ்ச்சியாக ஆடலும் பாடலும் நடந்து கொண்டிருக்க அதையெல்லாம் ஒரு பார்வையாளனாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரிடம் யாரோ வந்து மது கோப்பையை நீட்ட “நோ தேங்க்ஸ்.. நான் ட்ரிங்க் பண்ணறது இல்ல..” என்று சொன்னவன் அதிலிருந்த ஆரஞ்சு பழச்சாறை கையில் எடுத்துக் கொண்டு மற்றவர்கள் ஆடுவதை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..

அப்போது அவன் அருகே வந்து நின்ற ஷாலினி தன் கையை நீட்டி ” என்னோட டான்ஸ் பண்றீங்களா சுந்தர்?” என்று கேட்கவும் தர்ம சங்கடமாக பார்த்தவன் “சாரி ஷாலினி.. உங்க பர்த்டே அதுவுமா நீங்க கேட்டு முடியாதுன்னு சொல்றதுக்கு..  எனக்கு டான்ஸ் பண்ண வராது.. நீங்க மாதேஷோட டான்ஸ் பண்ணுங்க.. நான் பார்க்குறேன்..” என்றான்..

“மாதேஷ் சொன்னா மாதிரி இவன் ஒரு மொக்க பீஸுதான்” என்று மனதில் நினைத்தவள் “உங்களுக்கு டான்ஸ் பண்ண வராதுன்னாலும் பரவால்ல.. நீங்க என் கூட வந்து என் கைபிடிச்சு நில்லுங்க.. உங்களை நான் டான்ஸ் ஆட வைக்கிறேன்..” என்றாள் அவனைப் பார்த்து..

தர்ம சங்கடமாக நெளிந்தவன் பிறகு வேறு வழியின்றி அவள் கை பிடித்து வரவேற்பறை நடுவில் மெதுவாக நடந்து சென்றான்.. அவன் அப்படியே நின்று கொண்டிருக்க அவன் கை பிடித்து சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தாள் ஷாலினி.. அவள் செல்லும் பக்கம் எல்லாம் திரும்பியபடி இருந்தவன் தன் காலை ஒரு சிறு துளியும் நகர்த்தவில்லை.. 

நகராமல் சிலை போல் நிற்பவனை கையை பிடித்து இழுத்து இழுத்து நகர்த்தி வெகு நேரம் ஆட வைத்து தாக்கு பிடிக்க முடியாமல் ஷாலினி மாதேஷுக்கு கண்ணை காட்ட அவன் அங்கே பாடல் இசைத்துக்கொண்டிருந்த டிஜேவிடம் ஏதோ சொல்ல பாடல் அப்படியே நிறுத்தப்பட்டது.. 

பாடல் நிற்கபோகிறதென்று ஏற்கனவே அறிந்த ஷாலினி அப்படியே நின்றுவிட சுந்தரோ ஆட ஒரு அடி எடுத்து வைத்தவன் ஷாலினி சட்டென கையை எடுத்து விடவும் அப்படியே அந்த வரவேற்பறை நடுவில் கீழே விழுந்தான்..

இதை எதிர்பார்க்காத ஷாலினி ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியாய் நின்றாள்.. மாதேஷ் அவன் விழுந்ததை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்து விட்டான்.. அந்த வரவேற்பறையில் நின்ற இன்னும் நான்கைந்து பேரும் அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு

பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!