சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞

4.9
(13)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 13

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

வரவேற்பறை நடுவில் கீழே விழுந்த சுந்தரை பார்த்து ஷாலினி அதிர்ச்சியில் உறைந்து நிற்க கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்து விட்டான் மாதேஷ்.. அந்த வரவேற்பறையில் நின்ற இன்னும் நான்கைந்து பேரும் அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்..

“ஸ்டாப் இட்..!!” என்று கத்தினாள் ஷாலினி..

அப்படியே அங்கு நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டு சிரிப்பை நிறுத்திக் கொள்ள “உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாதா? ஏதோ தடுக்கி தவறி விழுந்துட்டாரு.. அவரை கை புடிச்சு தூக்கலன்னா கூட பரவால்ல.. எல்லாரும் சேர்ந்து இப்படி அவரை பார்த்து சிரிச்சு கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க.. நீங்க எல்லாம் மனுஷங்க தானா?” என்று கேட்டவள் சுந்தரின் புறம் திரும்பி கையை நீட்டி “எழுந்திருங்க சுந்தர்.. ஐ அம் சாரி.. நான் சட்டுனு கைய எடுத்ததுனால தான் நீங்க விழுந்துட்டீங்க..” என்றாள்..

மாதேஷோ மனதுக்குள் “அப்படி போடு ஷாலு.. யூ ஆர் ஸோ ஸ்மார்ட் ஷாலினி.. சான்ஸ் கிடைச்ச உடனே கப்னு பத்திக்கிட்டு யூஸ் பண்ணிக்கிற பாரு.. உன்னை இதுல அடிச்சுக்க ஆளே கிடையாதுடி..” 

ஷாலினிக்கு சபாஷ் போட்டுக் கொண்டிருந்தான்..

“இட்ஸ் ஓகே ஷாலினி.. அண்ட் தேங்க்யூ வெரி மச் எனக்காக பேசுனதுக்கு.. எனக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. இதெல்லாம் கடந்து தான் நான் இப்ப இங்க வந்து நிற்கிறேன்.. நாளைக்கு நான் ஏதாவது புது பிசினஸ்காக ஒரு பார்ட்டி வச்சேன்னா நான் இங்க விழுந்ததை இவங்க எல்லாருமே மறந்துடுவாங்க..” சாதாரணமாக சொல்லியபடி எழுந்தான் அவன்..

அப்போது அங்கே வந்த மாதேஷும் “சாரி சுந்தர்.. ஏதோ சட்டுனு சிரிச்சிட்டேன்.. என்னையும் அறியாம சிரிப்பு வந்துடுச்சு..” என்றான் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு..

சுந்தருக்கோ அவனுடைய வருத்தம் பொய்யான நடிப்பு என்பது நன்றாகவே தெரியும்..

“இட்ஸ் ஓகே.. மாதேஷ்.. கூல்..” என்று சொல்லிவிட்டு தன் மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு மிடுக்காக நின்றவனை கண்ட மாதேஷுக்கோ “என்ன செஞ்சாலும் இவன் கான்ஃபிடன்ஸை அசைக்க முடியாது போல இருக்கே..” என்று மனதில் தோன்றியது..

அப்போது அங்கே வந்த ரவிக்குமார் “வாவ்.. வெரிகுட் யங் மேன்.. உன்னை பாக்கவே எனக்கு ஆச்சரியமா இருக்கு.. இந்த மாதிரி ஏதாவது சம்பவம் நடந்தா ஒரு ரெண்டு நிமிஷமாவது அவமானத்துல கூனி குறுகிப் போய் உட்கார்றவங்களை தான் நான் பார்த்திருக்கேன்.. ஆனா எழுந்து நின்னு இதெல்லாம் எனக்கு சாதாரணம்னும் அடுத்ததா ஒரு அடி எடுத்து முன்னேறினேன்னா இதெல்லாம் மறந்து போய்டும்னும்  சொல்றவரை இப்பதான் முதல்ல பார்க்கிறேன்.. ஹாட்ஸ் ஆஃப் டு யூ” என்றார்..

“தேங்க்யூ சார்..” என்றவன் “சரி… இவ்வளவு நேரம் என்னையே எல்லாரும் பார்த்துட்டு இருந்தது போதும்.. இப்ப எல்லாரும் பார்ட்டியை கண்டினியூ பண்ணலாமா?” என்று சொல்ல எல்லோரும் சாதாரணமாக அவர்கள் கூட வந்தவர்களுடன் பேசிக்கொண்டு கவனத்தை வேறு பக்கம் திருப்பினர்..

அப்போது வாயை திறந்த மாதேஷ் “அப்புறம் சுந்தர் நான் உன்கிட்ட சொல்லியிருந்தேன் இல்லையா? உன் கம்பெனிக்கு ஒரு காஸ்டியூம் டிசைனர் ரெக்கமெண்ட் பண்றேன்னு.. அது ஷாலினி தான்.. இப்போ நீ தான் சொல்லணும் டிசைட் பண்ணி.. ஷாலினி உன் கம்பெனிக்கு ஓகேவா இல்லையான்னு..” 

“ஓகே மிஸ் ஷாலினி.. உங்களை பார்த்தா நீங்க நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவீங்கன்னு தான் தோணுது.. ஆனாலும் ஃபார்மலா ஒரு இன்டர்வியூ வச்சுக்கலாம்.. உங்க ப்ரொஃபைலோட நாளைக்கு மார்னிங் 10 ஓ கிளாக் என்னோட கார்மெண்ட்ஸ்க்கு வந்துருங்க” என்றான்..

“ஷ்யூர் மிஸ்டர் சுந்தர்.. நீங்க எனக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி கொடுத்தீங்கன்னா அதை விட சந்தோஷமான விஷயம் எனக்கு வேற எதுவும் இல்லை.. உங்களோட ஒர்க் பண்ணப்போறோம்னு நினைச்சாலே எனக்கு அவ்ளோ எக்ஸைட்டிங்கா இருக்கு..” என்றாள் ஷாலினி..

“தேங்க்யூ மிஸ் ஷாலினி.. பை த வே.. உங்களோட காஸ்டியூம் ரொம்ப நல்லா இருக்கு.. இது நீங்க டிசைன் பண்ணதா?” என்று கேட்க ஷாலினி “அஃப்கோர்ஸ்.. நானே காஸ்ட்யூம் டிசைனரா இருந்துட்டு மத்தவங்க கிட்ட எப்படி நான் காஸ்ட்யூம் வாங்க முடியும் என் பர்த்டேக்கு?” என்றாள்..

மாதேஷ் “உன்னை கடைக்கு கூட்டிட்டு போய் நான் தானடி வாங்கி கொடுத்தேன்.. எப்படி இப்படி சரளமா புளுகுற..? நீ தான்  டிசைன் பண்ணினேன்னு” உள்ளுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டான்..

அவன் இதழில் ஒரு புன்னகை இருக்க அதை கவனித்த ஷாலினி அவனை முறைத்தாள்.. 

பிறகு சமாளித்துக் கொண்டவன் “இந்த ட்ரஸ் டிசைன் பண்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு டூ டேஸ் ஆச்சு.. அதுக்கப்புறம் நம்ம கம்பெனியில தான் இதை ஃபுல்லா ஸ்டிச் பண்ணி கிரியேட் பண்ணது..”

அவனும் கூட சேர்ந்து அவன் பங்குக்கு பொய்களை அவிழ்த்து விட்டான்..

“வாவ்.. ரொம்ப நல்லா இருக்கு ஷாலினி.. இந்த டிரஸ் வச்சு பார்க்கும்போது நீங்க இந்த வேலைக்கு ரொம்ப சூட்டபிளா இருப்பீங்கன்னு தோணுது.. எனிவே நீங்க எதுக்கும் உங்க ப்ரோஃபைல் எடுத்துட்டு நாளைக்கு ஆபீஸ் வந்துருங்க..” என்றான்..

“ஷ்யூர்… வர்க் பத்தி பேசுனதெல்லாம் போதும்.. வாங்க என் பர்த்டே டின்னர் உங்களுக்காக காத்துக்கிட்டிருக்கு” என்று சொன்னவள் சுந்தர் கையில் தன் கைகளை கோர்த்துக்கொண்டு சாப்பிடும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.. 

உணவு உண்டு முடித்த பின் “ஓகே ஷாலினி.. அப்ப நான் கிளம்புறேன்..” என்று சுந்தர் கிளம்ப “ஒரு நிமிஷம் சுந்தர்.. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..  நீங்க கருப்பா இருந்தாலும் அதை பத்தி கவலைப்படாம உங்க வாழ்க்கையில இவ்வளவு உயரத்துக்கு முன்னேறி இருக்கீங்க..  அதனால கிடைச்ச சக்ஸஸ் என்ட் கான்ஃபிடன்ஸோட ஷைன் உங்க முகத்துல அவ்வளவு நல்லா தெரியுது.. உங்க ஹைட் உங்க ஃபிட்டான பாடி இதெல்லாம் பார்க்கும்போது நீங்க ரொம்ப வித்தியாசமா தெரியுறீங்க இந்த கூட்டத்துல.. அண்ட் என்னை பொறுத்த வரைக்கும் உங்க பர்சனாலிட்டின்னால எனக்கு ரொம்ப ஸ்பெஷலாவும் தெரியுறீங்க..” 

ஒரு வெட்க புன்னகையோடு சொன்னவள்.. “உங்களை மீட் பண்ணதுக்கு நான் ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன்.. இதுக்கு நான் மாதேஷ்க்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்று அழகாய் ஒரு பிட்டை போட்டாள் ஷாலினி..

“ஓ தேங்க்யூ வெரி மச் மிஸ்.ஷாலினி..” என்று சொன்ன சுந்தர் “அண்ட் யூ டூ ஆர் லுக்கிங் வன்டர்ஃபுல் என்ட் கார்ஜியஸ்” என்று சொல்லவும் மாதேஷ் மனதிற்குள் “முதல் பால்லயே விக்கெட் அவுட் பண்ணிட்டா… பையன் கிளீன் போல்ட் ஆயிட்டான்.. கூடிய சீக்கிரம் நம்ம வேலை முடிஞ்சுடும்..” என்று குதூகலித்தான்..

“ஓகே டா மாதேஷ்.. அப்போ நான் கிளம்புறேன் டா மச்சான்..” என்று சொல்லி சுந்தர் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான்.. 

அவன் மனமோ ஷாலினி சொன்ன வார்த்தைகளையே சுற்றி சுற்றி வந்தது.. இதுவரை தன் கருப்பு நிறத்தினால் தன்னை அவமானப்படுத்தியவர்கள் தான் அதிகம்.. முதல் முறையாக ஒருவர் அதுவும் ஒரு பெண் அதை பற்றி அவமானமாக நினைக்காமல் தன்னிடம் சாதாரணமாக பேசி பழகியதே அவனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை அள்ளித் தந்திருந்தது.. அந்த சந்தோஷத்தோடு தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்..

இங்கே மாதேஷ் “பேபி.. சூப்பர் பேபி.. இப்பயே அவனை முக்காவாசி கவுத்துட்ட… கொஞ்ச நாளிலேயே உனக்கு கொடுத்த வேலையை ஈஸியா முடிச்சிருவேன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.. அதுவும் ஹைலைட் என்ன தெரியுமா? ஏதோ ஒரு கடையில வாங்கின உன்னோட டிரெஸ்ஸை நானே தான் டிசைன் பண்ணினேன்னு போட்டியே ஒரு பிட்டு.. ஷாலுமா.. நீ எங்கயோ போயிட்ட.. என்னால நம்பவே முடியல.. அப்படியே நடிச்சு கொட்டற அவனை பார்த்தவுடனே அப்படியே உன் மனசுல பச்சக்குனு அவன் ஒட்டிகிட்டா மாதிரி.. அது எப்படி இவ்வளவு சரளமா உன் வாயில அப்படியே பொய்யா கொட்டுது..?”

அவன் கேட்க அப்போது ரவிக்குமார் அவர்கள் பக்கம் வர ஷாலினி அவனிடம் கண்ணை காட்டினாள்..

அங்கே வந்து ரவிக்குமார் “பரவால்ல மாதேஷ்.. உன்னை மாதிரி ஒரு ஆளுக்கு இப்படிப்பட்ட நல்ல ஃப்ரெண்ட்ஸும் இருக்காங்களே.. சுந்தர் மாதிரி ஒருத்தர் உனக்கு ஃப்ரெண்டா இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..” என்று சொல்லவும் மாதேஷுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கி வந்தது..

“ஷாலினி முதல் தடவையா உன் பிரெண்ட்ஸ் சர்க்குள்ல இருக்குற நிறைய பேர்ல உருப்படியான ஒருத்தரா எனக்கு சுந்தரை பார்த்தா தெரியுது.. தயவு செஞ்சு அவரோட கிடைச்ச இந்த ஃப்ரெண்ட்ஷிப்பை நல்லபடியா காப்பாத்தறதுக்கு ட்ரை பண்ணு.. நீ அவர் கம்பெனியில ஒர்க் பண்ண போறேன்னு சொல்லிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன்..  நீ இதுவரைக்கும் வேஸ்டா செலவு பண்ண டைம் எல்லாம் போதும்.. அங்க போயாவது உருப்படற வழியை பாரு…” என்று சொன்னவர் “முதல்ல உனக்கு இருக்கிற உருப்படாத ஃப்ரெண்ட்ஷிப்பை எல்லாம் கட் பண்ண ட்ரை பண்ணு..”  மாதேஷை பார்த்து முறைத்துக் கொண்டே சொன்னார்.. 

ஷாலினி அமைதியாய் தலையை குனிந்து கொண்டு இருக்க அங்கிருந்து மாதேஷை பார்த்துக் கொண்டே நகர்ந்து சென்றார் ரவிக்குமார்..

“ஷாலு.. உங்க அப்பா ரொம்ப பேசுறாரு இதுக்கெல்லாம் வட்டியும் மொதலுமா அவருக்கு கொடுக்கிறேன்” 

மாதேஷ் உறும ஷாலினியும் “சரி விடு மாதேஷ்.. நீ உன் கம்பெனியை நல்லா கொண்டு வர ட்ரை பண்ணு.. நீ பிசினஸ்ல நல்லா வந்துட்டேனா டேட் முன்னாடி உன்னோட இமேஜ் மாறிடும்.. அதுக்கப்புறம் அவர் இப்படி பேச மாட்டாரு..” என்றாள்..

“நீ மட்டும் இந்த சுந்தர் கிட்ட வேலைக்கு சேர்ந்து நம்ம மிஷனை சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டு வா.. அதுக்கப்புறம் அதுல கிடைக்கிற பணத்தை வெச்சு நான் என் பிசினஸ்ஸை எப்படி கொண்டு வரேன்னு பாரு..” என்று சொன்னான் மாதேஷ்..

“ஓகே.. பார்க்கலாம்..” என்றவள் அதன் பிறகு அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏதோ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க மாதேஷுடன் இணைந்து ஆடத் தொடங்கினாள்..

இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்த சுந்தர் நேரே பாட்டியின் அறைக்கு அவரைப் பார்க்க சென்றான்.. அங்கு பாட்டிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி..

“ஹலோ பாட்டி.. எப்படி இருக்கீங்க?” என்று சுந்தர் கேட்கவும் பாட்டி கொஞ்சம் சோகமாய் “நல்லாத்தான் இருக்கேன்..” என்றார்..

“என்ன பாட்டி.. குரல் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டான் சுந்தர்.. 

சுந்தரியும் பாட்டி ஏதாவது அவன் பேட்டியில் தன் மனைவியாக வரப்போகிறவர் பற்றி சொன்னது குறித்து உளறி விடப் போகிறார் என்று அவசர அவசரமாக “அது ஒன்னும் இல்ல.. உங்க பேட்டியை டிவியில பார்த்தோம்.. ரொம்ப நேரம் பாட்டி டிவி பாத்துட்டு இருந்தாங்களா? கொஞ்சம் கண்ணுக்கு ஸ்ட்ரெய்னாகி டயர்ட் ஆயிடுச்சு..  சாப்பாடு கொடுத்து தூங்கினா கண்ணுக்கு ரெஸ்ட் கிடைக்கும்.. காலையில சரியாயிடும்.. வேற ஒன்னும் இல்ல..” என்றாள் சுந்தரி..

“என் பேட்டி பாத்தீங்களா பாட்டி?” என்று சுந்தர் கேட்க ” ஹான்.. பார்த்தேன்.. பார்த்தேன்.. நீ உழைச்ச உழைப்புக்கு இந்த பேட்டி எல்லாம் எப்பவோ எடுத்து இருக்கணும்.. இவ்வளவு நாள் தாமதம் பண்ணி தான் எடுத்து இருக்காங்க.. நீ நல்லா வருவேன்கிறதுல ஒரு சந்தேகமும் எனக்கு இல்ல.. பாரு.. உழைப்பு இருக்கிற இடத்துல முன்னேற்றம் இல்லாம இருக்கவே இருக்காது..”

என்று பாட்டி சொல்லவும் “ரொம்ப தேங்க்ஸ் பாட்டி.. எனக்கு தெரியும் உங்க ஆசீர்வாதம் எப்பவும் என்னோடயே இருக்கும்” என்றான் சுந்தர்..

ஆனாலும் பாட்டியால் சொல்லாமல் இருக்க முடியவில்லை…. “ஆனா எனக்கு ஒரு விஷயம் வருத்தமா இருந்தது..” என்று பாட்டி சொல்லவும் “அதான் உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதே.. ஏதோ வருத்தமா இருக்கீங்கன்னு..” என்றான் சுந்தர்..

“நீ அந்த பேட்டியில உன் பொண்டாட்டியா வர்றவளை பத்தி சொன்னே இல்ல..? அதுதான் கொஞ்சம் வருத்தமா இருந்தது..” 

பாட்டி சொல்ல “என்ன சொல்றீங்க பாட்டி? நான் என்ன தப்பா சொன்னேன்..? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணாங்க.. அதனால அவங்க எந்த மாதிரி பொண்ணை என்னால கல்யாணம் பண்ணி வாழவே முடியாதுன்னு சொன்னாங்களோ அந்த மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணி வாழ்ந்து காட்டுறேன்னு சொன்னேன்.. இதில என்ன தப்பு இருக்கு?” 

“நீ சொன்னது தப்பு இல்ல.. ஆனா அவங்க சொன்னப்புறம் நீ கருப்பா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை விட சிறப்பா வாழ்ந்து காட்டுறேன்னு சொல்லி இருந்தேன்னா நான் கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருப்பேன்.. பரவால்ல.. எல்லாரோட எண்ணமும் ஒரே மாதிரி இருக்குமா?” சலித்து கொண்டாள் பாட்டி..

சுந்தருக்கு பாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை.. நமக்கு ஏன் அப்படி தோன்றவில்லை என்று எண்ணினான்.. ஆனால் இதை பற்றி வெகு நாட்களாக அவன் முடிவு செய்து வைத்திருந்ததால் அதை மாற்றும் எண்ணமும் அவனுக்கு இல்லை.. அந்த எண்ணம் ஒரு பிடிவாதமாகவே அவனுக்குள் மாறி இருந்தது.. 

“சரி.. விடுங்க பாட்டி.. அது நடக்கும்போது பாத்துக்கலாம்.. சாப்பிட்டு மருந்து எல்லாம் ஒழுங்கா போட்டுட்டு படுத்துக்கோங்க.. சரியா?” என்று அவன் சொல்ல “ஒரு நிமிஷம் பா சுந்தர்..” என்று அழைத்தாள் பாட்டி..

“சொல்லுங்க பாட்டி..” என்றவனிடம் “எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்..” 

பாட்டி சொல்லவும் “பாட்டி.. உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? இப்படி உதவின்னு எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்தாதீங்க.. இது செய்யணும்னு ஆர்டர் போடுங்க.. நான் செய்வேன்..” என்றான் சுந்தர்..

“நாளைக்கு ஒரு வக்கீலை கூட்டிட்டு வரணும்பா நீ.. எனக்கு ஒரு உயில் எழுதணும்..” 

“என்ன..? உயில் எழுத போறீங்களா?” சுந்தர் அப்படியே விழி விரித்து கேட்க சுந்தரியும் பாட்டியை ஆச்சரியமாக பார்த்தாள்..

தொடரும்…

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு

செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!