மென்மையான மலர் பெண்ணிற்கு இப்படியொரு ராட்சசன்தான் புருஷனாக அமையணுமோ. கணவன் அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம்னு சொல்வாங்க. சிபினும் நல்லவன்தான். ஆனால் தனக்கு உரிமைப்பட்டவளின் மீது வேறொருவனின்
பார்வை பட்டால்?…
சிவந்த கண்களும், உக்கிர முகமும், சட்டையில்லாத தேகத்தில் வரிவடிவமாக முறுக்கேரிய கட்டுக்கட்டானா அங்கங்களும் பார்க்கப் பார்க்க அவளுக்கு கண்களை இருட்டிகிட்டு வந்தது.
அவனது தேகத்தின் சூடு இன்னும் தன்னில் படிந்திருப்பதை உணர்ந்தவளுக்கு இப்போதே காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. வெண்டைப் பிஞ்சு விரல்கள் உதற ஆரம்பித்தது.
முன்பே அவனது கோபத்தை நன்கு அறிந்திருந்ததால் அச்சத்தில் தேகமெங்கும் உதறிப் போட்டது அவளுக்கு. பின்னே நகர்ந்தவள் சோஃபா மீது இடித்து நிற்க,
அவள் தன்னிடமிருந்து விலகி பின்னே செல்வதைப் பார்த்தவனின் மண்டைக்குள் இன்னும் சூடேறியது, “தப்பிக்க பாக்கறவளை என்ன பண்ணட்டும்? சொல்லுடி உன்னை என்ன பண்ணலாம்?” கேட்டவனின் விழிகள் அவளை அளவிட.
“நா தப்பிக்கல. இங்கதான் இருக்கேன்”
“முதல் இரவுன்னா இதான் நடக்கும்னு தெரியாதாடி. விலகிப் போற. அத்தானுக்கு இடைஞ்சலா இருக்க இந்தப் புடவையைக் கழட்டித் தா பார்க்கலாம்” வலது கையை அவள் முன் நீட்டியவனின் பார்வையில் சொன்னதைச் செய்டி என்ற அழுத்தம் தொனித்தது.
முந்தானையை இழுத்து கையில் பத்திரமாய் வைத்த நளிராவுக்கோ, இப்படியா கேட்பாங்க? என்ற அச்சமும் அவஸ்தையும் எழுந்தது. அதெப்படி நாமளே கழட்டித் தரமுடியும்? இவர் தெரிஞ்சுதான் பேசுறாரா? மறுப்பாய்த் தலையசைத்து அவனிடம் மறுத்தாள்.
“நளிராவுக்கு துருவ்தான் சரியான ஜோடியாய் இருப்பான், துருவ் எழுந்ததும் அவனுக்கே கட்டி வைப்போம்” என்ற ஆரியனின் குரல் காதுகளில் எதிரொலிக்க, எங்கே தன் கையை விட்டுப் போய்விடுவாளோ, தன்னை விட இன்னொருவன் இவளுக்கு பொருத்தமாக இருப்பானோ! இருந்திடுவானோ! மொத்த உணர்வுகளும் சேர்ந்து விழிகளுக்குள் வெறியாட்டம் போட்டிட, ஏற்கனவே மிரள வைக்கும் கண்கள் இன்னும் மிரட்டியது.
தன்னவளுக்கு வேறொருவன் பொருத்தமாக இருப்பானா? இந்த ஒரு கேள்வியே அவனது மனிதத் தன்மையை இழக்க வைத்திடப் போதுமானதாக இருந்தது.
“ஒருவேளை என்னை விட வேறொருத்தன் பெட்டரா இருப்பான்னு நினைக்கறியோ?” வார்த்தைகளில் வலிக்க வைத்திட முடியுமா? முடியுமெனக் காட்டினான் ராட்சசன்.
“இல்ல நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லைங்க” தன்னால் இங்கிருந்து தப்பிக்கக் கூட முடியாதே என்று அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்,
விழிகளில் கண்ணீர் அரும்பி நிற்க, முந்தானையால் அதைத் துடைத்தாள்.
“அப்படியெல்லாம் இல்லல்ல? அப்போ என்ன இதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க?” அவளது ஜடையைக் கொத்தாகப் பற்றியவன் காரமாகக் கேட்டிட.
“இல்ல.. இல்லைங்க” அவனிடம் இல்லையென்ற சொல்லைத் தவிர்த்து வேறு சொல் அவள் வாயிலிருந்து வரவே இல்லை. அவளது மூளை தன் சிந்திக்கும் வேலையை அறவே விடுத்திருந்தது.
“வந்ததில இருந்து உன் முகத்துல சிரிப்பையே பார்க்கலையேடி” நக்கலான சிரிப்புடன் அவள் காதோரம் சொன்னவனின் சூடான மூச்சுக்காற்று அவளது பட்டுக் கன்னத்தை காயம் பண்ணிடும் வேகத்துடன் உரசிப் போனது.
“ஒருவேளை எனக்குத்தான் கருமாதின்னு நினைச்சுட்டியோ. அதான் முகத்துல செத்தவீட்டு களை அப்படியே இருக்கு. ஆனால் அதுக்கு நீ ஹேப்பியா இல்ல இருக்கணும்?” அவள் முகத்தை வழுக்கட்டாயமாக நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தான்.
வாழக்கையின் ஆரம்பத்திலேயே அபசகுணமாய் பேசிட, அவளால் அதைக் காது கொடுத்துக் கேட்டிடவே முடியவில்லை. “அய்யோ” காதுகளைப் பொத்தியவளுக்கு கண்ணீர் அப்படியே விழிகளுக்குள் தேங்கி நின்றது.
விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தவள், மூச்சுவிடவும் அஞ்சிப் போனாள்.
அவளது இடையில் கைவைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன், “என்னைத் தவிர்த்து இந்தக் கண்ணு யாரையாவது பார்த்துச்சுன்னு வை” ஒற்றை விரலாள் கருவிழியை சுட்டிக்காட்டி எச்சரித்தபடியே
அவள் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலக்க விட்டவன்,
“பார்வையற்ற பெண் எனக்கு மனைவியா இருக்கறதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லைடி. ஒரே ஒரு டிராப் மருந்து போதும். இந்தக் கண்ணு அப்படியே க்ளோஸ் ஆகிடும்” விகாரமாய் சிரித்தவன் அவள் இமைகளில் முரடாய் முத்தம் வைக்க.
விழிகளே வெளியே வந்துவிடும் அளவு அவனைப் பார்த்தவளுக்கு, அவனது கோபம் புதிதில்லைதான். ஆனால் இந்த வெறி அவளுக்கு முற்றிலும் புதிதே. சாத்தானிடம் அகப்பட்ட கோழிகுஞ்சு போல நடுநடுங்கி நின்றாள் பாவையவள்.
அசையாது விழிகளால் அவளை விழுங்கிட முயன்றான். ஆளை விழுங்கும் உக்கிரப் பார்வையில் நளிரா தன் மூச்சை விட மறந்தாள், உடலில் குளிர்நடுக்கம் பரவ, சத்தியமாய் அவனோடான நெருக்கத்தை ஏற்கவே முடியாது இப்போதைக்கு.
சோஃபாவின் கைப்பிடி மீது சரிந்தவளை தன்னோடு இறுக்கி அணைத்தவனின் கைப்பிடிக்குள் அசையாது நின்றாள். ராட்சசன் அவனை எதிர்ப்பதற்கே உத்தமமாய் இராத கோழை மனதை எப்படி தைரியப்படுத்தி அவனோடு போராடுவாள்.
“சொல்லடி, என்ன நினைக்கிற?” அவனது விஷம் தோய்ந்த கேள்வியில் அவளது உள்ளம் உடைந்து போனது. தன் கேள்விகளுக்கு பதிலில்லா அவளது மவுனம் இன்னுமே அவனது உணர்வின் கொந்தளிப்பை உச்சத்திற்கு இழுத்துச் சென்றது.
அவளுக்கு இருந்த பயத்தில் அவன் என்ன கேட்டான்னே மறந்து போக, “என்ன நினைக்கட்டும்?” கேள்வியாய் அவனையே பார்த்தாள்.
“வாவ்! நக்கல் பண்ணுறியாடி?”
அவனது விரலைப் பற்றி அகற்றியவள் “இல்லை, நான்… நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லைங்க. எனக்கு உங்களைப் பார்க்கவே பயமா இருக்குது”
“ஹான்” கடுமையான குரலில் ஆரம்பித்தவன் “பயமா? யாருகிட்ட கதை அளக்கறடி? எவ்ளோ அழகா ஸ்கெட்ச் போட்டு என்னைத் தூக்கியிருக்க. உனக்குப் பயமா. வெல் பிளான்டி” ஏளனமாய் சிரித்தான்.
அதிர்ச்சியில் விழிகள் விரிய ‘நானா தூக்குனேன்?’ அப்பட்டமாய் புழுகும் அவனை ஏன்னு கூடக் கேட்க முடியாத அவல நிலை அவளுக்கு. அரக்கனின் கைப்பிடிக்குள் நின்று கொண்டு அவனையே எதிர்த்துப் பேச முடியுமா? பேசிட்டு மிச்சமாக முடியுமா?
‘இப்படித்தான்னு தெரிஞ்சிருந்தா சும்மா தந்தாக் கூட இந்த சாத்தான் எனக்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லியிருப்பேனே’ வேதனையுடன் மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அவனது விரல்கள் மேனியில் அத்துமீறவும்,
துடித்துப் போனவள், “நான்… நான் போகணும்ங்க… இது… இதெல்லாம் எனக்குப் பிடிக்கல!” அவனது கைகளுக்குள் இருந்து விடுபட முயன்றாள்.
வில்லனைப் போலவே ஆராவாரமாய் சிரித்தவன் “நீ அவ்வளவு இலகுவா போக முடியாதுடி. உன்னை எப்படி வேணாலும் டச் பண்ணலாம். அதுக்கான உரிமை என்கிட்டே இருக்குடி” பேச்சால் மிரட்டினான்.
அவனுடன் இந்த அறைக்குள் தனித்து நிற்பதில், சாத்தான் குகைக்குள் நிற்பதைப் போலவே பீல் ஆச்சு அவளுக்கு. “எனக்கு போகணும்” விம்மலுடன் அவனிடம் கெஞ்சினாள்.
“எங்க போகணும்?” கழுகு விழிகளை அவள் விழிகளுக்குள் கலக்க விட்டு அவளது மனதில் உள்ளதை அறிய முற்பட்டான் சிபின்.
“ரெஸ்ட் ரூம்” சொல்லும் பொழுதே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டி கன்னங்களில் அழுந்தியிருந்த அவனது விரல்களை நனைக்கலானது.