எண்ணம் -21

4.9
(9)

எண்ணம் -21

தியாழினி, தன் குடும்ப விஷயத்தில் தலையிடுவதாக எண்ணிய ரித்தீஷ் பிரணவ் அவள் மேல் கோபத்தோடு தான் இருந்தான்‌.

அதை எதுவும் அறியாத தியாழினியோ, அலுவலகத்திற்கு நேரத்தோடு வந்துவிடுவாள்.

 அப்படி வருபவள் உடனே அவளிடத்துக்கு செல்லாமல் ரிஷப்னிஸ்டோடும்‍‍‍, வாட்ச்மேனோடும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருப்பாள்.

ரித்திஷ்ப்ரணவ் வந்ததும் நல்லப்பிள்ளையாக வேலை செய்வாள்.

வேலையிலும் ஆர்வமிருக்க‍, சிரத்தையாக வேலையைக் கற்றுக் கொண்டாள்.

யார் எந்த உதவி கேட்டாலும், புன்னகையுடன் செய்துக் கொடுத்து அவர்களுடன் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டாள்.

வந்த வேலையை முடிப்பதற்காக, வேலை‍, வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தாள்.

 எப்படா வார இறுதி வரும் ஓய்வெடுக்கலாம் என்று அவள் காத்திருக்க.

ஆப்பு ஃபோன் மூலமாக வந்தது.

வர்ஷிதாவிடமிருந்து தான் அழைப்பு வந்தது.

“தியா! வெளியே அவுட்டிங் போய் ரொம்ப நாளாச்சு. இந்த வீக்கென்ட் போலாமா?”

“இப்போ தானே அன்னைக்கு சினிமாவுக்கு போன? அப்புறம் என்ன வர்ஷி?”

“ நீ தான் வரலையே?”

“ப்ச்! இப்போ அதுக்கு என்ன?”

“சன்டே நீ‍, நான், நேத்ரா மூணு பேரும் அவுட்டிங் போயிட்டு லஞ்சையும் முடிச்சிட்டு வரலாம்‌.”

“ வாய்ப்பே இல்லை. நானே வார முழுக்க, வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கேன். எப்படா வீக்கென்ட் வரும் ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தா, அவுட்டிங் போகணுமாமே அவுட்டிங். ஆளை விடு தாயே.”

“ ப்ளீஸ் டி. எனக்காக…”என்று கெஞ்சினாள் வர்ஷிதா.

“நோ! நான் வர மாட்டேன்.” என்று முடிவாக கூறி விட்டு ஃபோனை வைத்தாள் தியாழினி.

வர்ஷிதாவை பற்றி நன்கு அறிந்தவள் அல்லவா, நேத்ரனிடம் சென்று, “ அண்ணா! நாளைக்கு லீவ். என்னை எழுப்பக்கூடாது.” என்று கண்டிஷன் போட்டாள் தியாழினி.

“சரி தியா! நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.” என்றான் நேத்ரன்.

“ இப்போ சரின்னு சொல்லிட்டு, அப்புறம் வர்ஷி எங்கேயாவது போகலாம்னு சொல்றான்னு வந்து நின்ன, அவ்வளவு தான்…”என்று மிரட்டினாள் தியாழினி.

“ச்சே! வர்ஷி அப்படி எல்லாம் கிடையாது.” என்று மறுத்தான் நேத்ரன்.

“பார்ப்போம்! பார்ப்போம்!” என்று நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தியாழினி.

தியாழினி நினைத்தது போலவே நேத்ரனிடம் சென்றாள் வர்ஷிதா.

“நேத்ரா! நாளைக்கு நம்ம மூணு பேரும் எங்கேயாவது அவுட்டிங் போகலாமா?” என்று வினவ.

“ தியா பாவம். வேலை, வேலை ஓடிட்டே இருக்கா. வீக்கென்ட் தான் அவளால ரெஸ்ட் எடுக்க முடியும். நீயும், நானும் வேணும்னா அவுட்டிங் போலாம் வர்ஷி.”

“ப்ச்! அவளோட போனால் தான் வீட்ல உள்ளவங்களுக்கு சந்தேகம் வராது. அதுக்காகத் தான் அவளையும் கூப்பிடுறேன். இல்லைன்னா எதுக்கு அவளைப் பிடிச்சிட்டு தொங்கப் போறேன்.” என்று நொடித்துக் கொண்டாள் வர்ஷிதா.

“அப்போ அடுத்த வாரம் பார்த்துக்கலாம்.” என்று விட்டான் நேத்ரன்.

 வர்ஷிதாவின் பிடிவாதத்தைப் பற்றி தியாழினி முழுதாக அறிந்து வைத்துக் கொள்ளவில்லை.

‘அடியே தியா!உங்க அண்ணன் கிட்ட சொல்லி காரியத்தை சாதிச்சுக் கிட்ட. உங்க அண்ணன் தான் உன் பேச்சைக் கேட்டுட்டு ஆடுவார். இருடி உன்னை நான் இன்னைக்கு வெளியில் கூட்டிட்டு போகாம விட மாட்டேன்.’ என்றவள் அவர்களது தோழியர் கூட்டத்திற்கு கான்ப்ரென்ஸ் கால் போட்டாள்.

“என்னடி! எல்லாரும் வேலைக்கு போனதும் பிஸியா இருக்கீங்களா.”என்று வினவ.

 “என்னாச்சு ஆடு வந்து தானா பேசுது. அதுவும் தியா மட்டும் காணும்.” என்றாள் ஷாலினி.

“பேசி ரொம்ப நாளாச்சுன்னு ஃபோன் பண்ணினது குத்தமா? தியா வேலைக்கு போறதால அவளைப் பிடிக்க முடியலை.” என்றாள் வர்ஷிதா‌.

“என்னது தியா வேலைக்கு போறாளா?” என்று ஷாலினி, மஹதி, சுபிஷா மூவரும் ஆச்சரியமாக வினவ.

“ஆமாம் டி தியா மேடம் வேலைக்கு போறாங்க. ட்ரீட் கேட்டா தர மாட்டேங்குறா. நான் ஃபோன் போட்டாலும் கேட்க மாட்டேங்குறா! அதான் நீங்க போட்டு என்னன்னு கேளுங்க. அப்போ தான் சரியா வரும்.” என்று பத்த வைத்தாள் வர்ஷிதா.

“சரிடி! இன்னைக்கு அந்த தியாவை வச்சு செய்யுறோம். ட்ரிட் தர மாட்டாளாமா. இன்னைக்கு அவளது பர்ஸுக்கு வேட்டு வைக்குறோம்.” என்றாள் ஷாலினி.

“ ஆமாம்! வேட்டு வைக்குறோம்.” என்று சுபிஷாவும் அமோதிக்க.

மஹதியோ,” தியா! பாவம் டி.” என்று பரிந்து வந்தாள்.

“ ஹே! சும்மா கலாய்க்க தானே சொன்னோம். எல்லோரும் பார்த்து ரொம்ப நாளாச்சு. இதை சாக்கா வச்சு மீட் பண்ணுவோம். நீ முதல்ல தியாவுக்கு கால் போடு.” என்று கூற.

மஹதி கால் பண்ணினாள்.

“ ஹலோ! என்னடி காலங்காத்தால ஃபோன் பண்ணியிருக்க.” என்று தூக்கம் கலைந்ததில் எரிச்சலான குரலில் பேசினாள் தியாழினி.

“ அடிப்பாவி! மணி பத்தாகுது.” என்று ஷாலினி கத்த.

“ நீயும் இங்கே தான் இருக்கியா? இப்போ உங்களுக்கு என்னடி வேணும். டைம் சொல்லத் தான் கால் பண்ணீங்களா?” என்றாள் தியாழினி.

“எருமை! எருமை! வேலைக்கு போக மாட்டேன், வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டு வேலைக்கு போயிட்டு இருக்க. இதுல நக்கலும், நையாண்டியும் வேற‌.” என்று சுபிக்ஷா எகிற.

“நீயும் இங்கே தான் இருக்கீயா?”

“நானும் இங்கே தான் இருக்கேன். நீயும் இங்கே தான் இருக்க.“ என்று இடக்காக கூறினாள் சுபிக்ஷா.

“ அடேய் இப்ப என்ன டி உங்களுக்கு பிரச்சனை? அது தான் நான் வேலைக்கு போறது உங்களுக்கு தெரிஞ்சிருச்சே. அப்புறம் என்னடி. என்னை தூங்க விடுங்க.”

“ ஒழுங்கு மரியாதையா உனக்கு வேலை கிடைச்சதுக்கு எங்களுக்கு ட்ரீட் வைக்குற.”

“இன்னைக்கு ஒரு நாள் தான் எனக்கு லீவ். நான் ரெஸ்ட் எடுக்கணும். ட்ரீட் இன்னொரு நாளைக்குத் தர்றேன்.”

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. இன்னைக்கு வர்ற. அதுவும் நம்மளோட ஃபேவரைட் ஸ்பாட்ல புதுசா ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணியிருக்காங்க. அங்கப் போய் டிரைப் பண்ணுவோம்.” என்றாள் ஷாலினி.

“என்னடி சொல்ற பெசண்ட் நகர் பீச்சா?” என்று அதிர்ந்து வினவியவள், ‘ ஐயோ! இன்னைக்கு தானே தீபா மேடமுக்கே பர்த்டேன்னு அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. நாமளும் அங்க போய் நின்னா என்ன நினைப்பாங்க. அதுவும் அந்த ரூல்ஸ் மெஷின் நான் வேணும்னே வந்ததா நினைப்பார். எதாவது சொல்லி அங்கப் போறதை அவாய்ட் பண்ணனும்.’ என்று எண்ணினாள்.

“ யெஸ் பெசண்ட் நகர் பீச் தான். ஃபர்ஸ்ட் அஷ்டலட்சுமி கோவிலுக்கு போறோம். நெக்ஸ்ட் ஹோட்டலுக்கு போறோம்.” என்றாள் மஹதி.

“ கோவிலுக்கு எல்லாம் நான் வரலை.” என்று வேகமாக மறுத்தாள் தியாழினி.

“ ஏன் வர மாட்ட?” என்றாள் வர்ஷிதா.

“ஹேய் வர்ஷி நீயும் இருக்கியா?” என்று ஆச்சரியமாக தியாழினி வினவ.

“ ஏன் நானும் உன் ஃப்ரெண்ட்டு தானே. இந்த ஃபைவ் ஸ்டார் கேங்ல ஒரு ஆள் தானே.”

“எதுக்குடி கோபப்படுற? இவ்வளவு நேரம் ஆளைக் காணோமேன்னு கேட்டேன்.”

“நான் கூப்பிட்டா மட்டும் நீ வெளியே வர மாட்ட?” என்று கோபமாக வர்ஷிதா கூற.

“இப்பவும் வரலைன்னு தான் சொல்றேன். வயிறு வேற வலிக்குது. அல்சர் இருக்குன்னு தெரியும்ல.”

“அது தான் மாத்திரை எடுத்துட்டு இருக்கல்ல. சும்மா சொல்லாதே. வேலைக்கு போனதுல இருந்து நீ ரொம்ப மாறிட்ட.”என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா.

“ஆமாம்! ஆமாம்!” என்று மற்றவர்களும் பின் பாட்டு பாட.

“ சரி வர்றேன். ஆனால் கோவிலுக்கு வேண்டாம்.” என்று தயக்கத்துடனே கூறினாள்.

                 ****************

தியாழினி சொன்னது போல கேசவ், தீபாவிற்கு பிறந்த நாள் கிப்ட் கொடுக்க.

அதைப் பார்த்ததும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அவருடைய நீண்ட கால ஆசை, ஓவியம் கத்துக்க வேண்டும் என்பது. இத்தனை வருடத்திற்கு பிறகு அது நிறைவேற போவதில் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

“எப்படிங்க இப்படி ஒரு கிஃப்ட் கொடுக்கணும்னு தோணுச்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.”என்று சந்தோஷத்தில் அர்ப்பரித்தார் தீபா.

“நம்ம தியா தான் ஐடியா கொடுத்தா.”

“தியாவோட ஐடியாவா. சூப்பர்… அந்தப் பொண்ணை பார்க்கும் போது தேங்க்ஸ் சொல்லணும்.” என்ற தீபா,

அந்த நாள் முழுவதும் சந்தோஷத்துடன் சுத்தினார்‌

அதுவும் இந்த முறை பார்ட்டி வைக்காமல் குடும்பத்துடன் அவருக்கு பிடித்த அஷ்டலட்சுமி கோவிலுக்கு மாலையில் கூட்டி செல்லவும், அவருக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்து விட்டது.

நல்லபடியாக சாமி தரிசனம் முடிந்ததும், “ பீச்சுக்கு போகலாமா?” என்று சிறு குழந்தை போல் தீபா வினவ.

“ ஆமாம்! பீச்சுக்கு போகலாம். ஜாலியா இருக்கும்.” என்று தனுவும் கூற.

“நீங்க போயிட்டு வாங்க. நான் கிளம்புறேன்.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.

“ டின்னர் எல்லோரும் ஒன்னா சாப்பிடலாம்னு தானே ப்ளான் பண்ணோம். சரி விடு! இன்னொரு நாள் பீச்சுக்கு போகலாம்.” என்று ஏமாற்றத்தை மறைக்க முயன்றார் தீபா.

இவ்வளவு நேரம் சந்தோஷமாக இருந்த தீபாவின் முக மாற்றத்தைப் பார்த்ததும் மறுக்க இயலாமல், “ சரி வாங்க பீச்சுக்கு போகலாம்.” என்றான் ரித்திஷ்ப்ரணவ்.

அங்கோ தோழிகளுடன் பீச்சில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தாள் தியாழினி.

ஜீன்ஸ் பேண்டில் சிறு பெண் போல தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தவளை முதலில் அடையாளம் கண்டுகொண்டவன் ப்ரணவ் தான். அவளை அங்கு பார்த்ததும், அருகே இருந்த கேசவ்வை பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“என்னடா?” என்று புரியாமல் வினவினார் கேசவ்.

“அங்க பாருங்க !” என்று கண்களால் தியாழினி இருந்த இடத்தைக் காட்ட.

“ஹே! நம்ம தியா!” என்று கூச்சலிட்டார் கேசவ்.

“என்னது தியா வந்திருக்காளா?” என்று தீபாவும் பரபரப்பாக வினவ.

தன் தலையில் தட்டிக் கொண்டான் ரித்திஷ்ப்ரணவ்.

இவர்கள் கத்திய சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள் தியாழினி.

“ஒரு நிமிஷம் வந்துடுறேன்.” என்று தோழிகளிடம் கூறியவள் அங்கிருந்து நகர முயல.

“யாருடி அவங்க?”என்று மஹதி வினவினாள்.

“அது எங்க பாஸ் ஃபேமிலி. பாஸோட அம்மாவுக்கு பிறந்தநாள். அதான் கோவிலுக்கு வந்திருக்காங்க.”

“ஓஹோ! அதான் மேடம் இங்கே வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சீங்களா?” வர்ஷிதா வினவ.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே.” என்று மறுத்தாள் தியாழினி.

“ ஹே! அன்னைக்கு ஹோட்டல்ல ஹேண்ட்ஸம் கைன்னு சைட்டடிச்சியே. அவர் தான் உங்க பாஸா?” என்று ஆச்சரியமாக வினவினாள் ஷாலினி‌.

“ஷ்! உளறாத ஷால்.”

“ உண்மையா தான் சொல்றேன். நம்ம காலேஜ் முடிஞ்ச அன்னைக்கு ஹோட்டலுக்கு போனேமே. அப்போ இவரைப் பார்த்து நாம சைட்டடிச்சோம். பட் இவரு நம்மளை முறைச்சுக் கிட்ட போயிட்டார்.ஹே! உனக்கு அது ஞாபகம் இல்லையா?” என்றாள் ஷாலினி.

“ ஆமாம்!” என்று சுபிக்ஷாவும் கூற.

“எனக்கு ஞாபகமே இல்லை.”என்றுக் கூறிக் கொண்டிருக்கும் போதே, தீபா மீண்டும் அழைத்தார்‌.

“சரி டி. நான் அவங்கக் கிட்ட பேசிட்டு வர்றேன்.” என்று சங்கடத்துடன் அவர்களை நோக்கி சென்றாள் தியாழினி.

‘தியா! நம்ம கிட்ட கூட எதுவும் சொல்லவே இல்லை.’ என்று அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷிதா.

தீபாவின் அருகே சென்ற தியாழினியோ,

“ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!” என்று புன்னகைத்தவாறே, ரித்தீஷ்பிரணவ்வை பார்த்தாள்.

‘ அட ஆமாம்! ஹோட்டல்ல இவரைப் பார்த்து சைட்டடிச்சோம். ஆனா ஏன் இவ்வளவு நாள் நம்ம கவனத்தில அதுவரல.’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

“ ரொம்ப தேங்க்ஸ் டா. அப்புறம் கிஃப்ட் ஐடியா உன்னோடதாமே. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது டா.” என்று கையைப் பிடித்துக் கொண்டு கூறிய தீபா,

அவளது கவனத்தை தன்னிடம் திருப்பினாள்.

“ஜஸ்ட் ஐடியா மட்டும் தான் நான் கொடுத்தேன். சார் தான் உங்களோட ஆர்ட் கேலரி ரசனை ஆர்வம் பத்தி சொன்னார்.அவர் தான் உங்க மனசை புரிஞ்சு அந்த கிஃப்ட் கொடுத்தார்.”

“ இருந்தாலும் நீ சொன்னதால் தான் இந்த கிஃப்ட் எனக்கு கிடைச்சது. அதனால உனக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.” என்றுக் கூறி புன்னகைத்தார் தீபா.

“சரிங்க மேடம்! நான் கிளம்புறேன். என்ஜாய் யூவர் டே.”என்று அவர்களிடமிருந்து விடை பெற முயன்றாள்.

“அக்கா! எங்களோட டின்னருக்கு வாங்களேன்.” என்று இவ்வளவு நேரம் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த தனு அழைக்க.

“ என்னது அக்காவா? சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க. ஐ எம் தியாழினி! “என்று கை நீட்டினாள் தியாழினி.

“ ஐ அம் தன்வி!” என்று தனுவும் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

ரித்திஷ்ப்ரணவோ கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.

 பிறந்தநாள் அதுவுமாக அம்மா மனதை வருத்தப்படுத்தக் கூடாது என்று பொறுமையாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“ஆமாம்! நீயும் வாம்மா.” என்று கேசவ் அழைக்க.

“இல்லை சார்! நான் ஃப்ரெண்ட்ஸோட டின்னருக்கு வந்திருக்கேன்.” என்று மறுத்தாள் தியாழினி.

“பரவாயில்லைமா! உன் ஃப்ரெண்ட்ஸோட இன்னொரு நாள் சாப்பிட்டுக்கலாம். இன்னைக்கு எங்களோட வாயேன்.” என்று கனிவுடன் அழைத்தார் தீபா.

“இல்லைங்க மேடம்! அவுட்டிங் வர மாட்டேனு சொன்னவளை வற்புறுத்தி அவங்க தான் கூட்டிட்டு வந்தாங்க. இப்போ பாதியிலே வந்துட்டா வருத்தப்படுவாங்க.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தாள் வர்ஷிதா.

“ ஹேய் தியா! இவங்களுக்கு விஷ் பண்ணனும்னு தான் இங்கே வரணும்னு பிடிவாதம் பண்ணியா?” என்று வினவினாள்.

அவள் பேசியதைக் கேட்டதும் ரித்தீஷ் ப்ரணவ் முகம் இறுகியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!