சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02

5
(5)

Episode – 02

போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.

 

“நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.

 

வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.

 

அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.

 

அவளது தந்தை வேறு குழப்பத்துடனும், பசியுடனும் அமர்ந்து இருக்க,

 

அந்த நேரத்திற்கு தனது நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு,

 

தந்தையை சமாதானப்படுத்தி உணவு சமைத்து, உண்ணவும் வைத்தவள்,

 

தானும் உண்டு விட்டு உறங்க சென்றாள்.

 

அன்று இரவு ஏனோ அவளுக்கு உறக்கம் வர மறுத்தது.

 

உறக்கம் வராது அங்குமிங்கும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு அனுபவத்தை அவள் சந்தித்து இருக்கிறாள்.

 

“மோசமான அனுபவம் என்பதாலோ என்னவோ அடிக்கடி நினைவுக்கு வருகின்றது போலும்.” என எண்ணி அந்த நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு உறங்க முயன்ற போதும் அந்தப் பெயர் தெரியா ஆடவனின் பார்வை மீண்டும் மீண்டும் அவளது நினைவுக்குள் புகுந்து அவளை இம்சித்தது.

 

“அந்தப் பார்வையில் ஒரு வித விலங்கின் வெறி தெரிந்ததோ….” என எண்ணியவள்,

 

“முருகா சரணம்…. முருகா சரணம்….” என கூறிக் கொண்டு, முயன்று

ஒருவாறு உறங்கிப் போனவள் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து, வழக்கம் போல தனது வேலைகளை பம்பரம் போல சுழன்று கவனித்து விட்டு,

தந்தைக்கான உணவுகள் மற்றும் மருந்துகளை எடுத்து வைத்து விட்டு, அவரை பத்திரமாக இருக்கும் படி பத்து முறைகள் சொல்லி விட்டு,

 

தான் வேலை செய்யும் ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு கிளம்பி சென்றாள்.

 

ஆம், சொர்ணா இப்போது வேலை செய்து கொண்டு இருப்பது ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் தான்.

 

அவளது பூர்விகம் கும்பகோணம் தான்.

 

அவள் படித்து வளர்ந்தது எல்லாமே அங்கு தான்.

 

அவளுக்கு பெரிய ஐடி கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை, சிறு வயதில் இருந்தே நிறைய இருந்தது.

 

அவளின் குடும்பம் ஐயராத்து குடும்பம் என்பதாலோ என்னவோ…. அவர்களது சூழலில் படித்த பெண்கள் மிக மிக குறைவு.

 

திருமண வயது வந்தவுடன், திருமணம், குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி விடுவார்கள்.

 

அந்த சூழலில், படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தவளுக்கு, தாயும், தந்தையும் முழுவதும் சப்போர்ட் ஆக இருக்க, சொர்ணாவும் ஆர்வத்துடன் படித்து தான் எண்ணிய சாப்ட்வேர் துறையில் கோல்ட் மெடலும் வாங்கி இருந்தாள்.

 

ஆனால், அதே நேரம் அவளது படிப்பு முடிவடையும் தருவாயில் புற்றுநோய் காரணமாக தாயும் இறந்து விட, அழுது தீர்த்த சொர்ணாவும், தந்தையும் அடுத்து என்ன செய்வது எனப் புரியாது கொஞ்சம் குழம்பித் தான் போயினர்.

 

இருவரில் முதலில் சுதாரித்துக் கொண்டது என்னவோ…. சொர்ணா தான். இனி குடும்ப பொறுப்பையும், தந்தையையும் தான் முன்னே நின்று கவனித்துக் கொள்ள வேண்டிய கட் டாயம் இருக்கின்றது என புரிந்து கொண்டவள், அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.

 

தந்தையையும் தானே முன் நின்று தேற்றி ஆறுதல் படுத்தினாள்.

 

அதே நேரம் அந்த இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாது, தாயின் நினைவுகள் அவளையும் தந்தையையும் வாட்ட ஆரம்பித்தது.

 

ஆகவே அந்த இடத்தை விட்டு கிளம்பலாம் என முடிவு எடுத்தாள் சொர்ணா.

 

முதல் முறை அந்த முடிவை சொர்ணா கூறும் போது அவளின் தந்தை அதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.

 

“அது எப்படிம்மா பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வேற இடத்துக்கு போறது?, அங்கு உள்ள மனுஷால் எப்படியோ தெரியாது. நாம ஆச்சாரமா இருந்து பழகிட்டோம். வேற இடத்துக்கு போய் எப்படி வாழ முடியும்?” எனக் கூறி கவலைப்பட்டவரை,

 

“அப்பா, இப்போ மனுஷங்க பூமில மட்டும் இல்ல…. நிலாவிலயும் போய் வீடு கட்டுறாங்க. நீங்க என்னப்பா…. இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பயப்படுறீங்க. இங்க இருந்தா இன்னும் அம்மாவை நினைச்சு கவலை தான் கூடும். வாங்க அப்பா. நான் உங்கள நல்லாப் பார்த்துக்கிறன். இந்த வீட்ட நாம வாடகைக்கு விட்டுடலாம். அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு கண்டிப்பா இங்க வரலாம். வாங்கப்பா….” என மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறி,

 

அவரை சமாதானப்படுத்தி ஒருவாறு சென்னைக்கு வந்தவள், தமக்கு ஏற்றது போல ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து தந்தை யுடன் தங்கிக் கொண்டாள்.

 

கும்பகோணத்திலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே இரண்டு…. மூன்று கம்பெனிகளில் வேலைக்காக விண்ணப்பித்தும் இருந்தாள் சொர்ணாம்பிகை.

 

அவளது குவாலிபிகேஷனுக்கு ஏற்றது போலவே அருமையான வேலையும் அதற்குரிய சம்பளமும் அவளைத் தேடி வரவே,

 

அந்த கம்பெனியில் எந்தவித பிரச்சனையும் இல்லாது வேலைக்கும் சேர்த்து இருந்தாள்.

 

ஆரம்பத்தில், அங்கு இருப்பவர்களுடன் கதைக்க, மிகவும் கஷ்டப் பட்டாள்.

 

அவர்களின் நாகரீகம், பேச்சு, பழக்க வழக்கங்கள் எதுவும் சொர்ணாக்கு ஒத்து வரவில்லை.

 

அதுக்காக அவள் ஒன்றும் தெரியாத பட்டிக் காடும் இல்லை. அவளுக்கும் ஓரளவுக்கு நாகரீகங்கள் தெரியும் தான். அவள் அறிந்தது அடக்கமான நாகரீகம். ஆனால் அங்கு சிலரோ மேல் தட்டு நாகரீகத்துடன் உலா வர,

 

முதலில் பயந்து போனவள், அதன் பின்பு, சமாளித்து, ஒதுங்கி நிற்க ஆரம்பித்தாள்.

 

ஆனாலும் விடாது அவளின் நல்ல குணத்துக்காக நட்பு பாராட்ட வந்தவர்கள் சிலர் அங்கு இருக்கிறார்கள் தான்.

 

அதோடு இந்த ஒரு மாதத்தில் அவளுக்கு ஒரு அருமையான நண்பியும் அங்கு கிடைத்து இருக்கிறாள்.

 

ஆம், அருணா என்கிற பெண் அவளுக்கு தோழியாகவும் மாறி விட்டாள்.

 

அவள் சொன்னதின் பேரில் தான், குறித்த ஹோட்டலுக்கு தந்தையை சொர்ணா அழைத்தக் கொண்டு போனது.

 

இப்போதும், வேலைக்கு வந்து அமர்ந்த சொர்ணாவிடம்,

 

“ஹாய் சொர்ணா, அப்புறம் நேற்று நைட் அப்பா கூட டின்னெர் போனீயே என்னாச்சு?, சூப்பரா இருந்துதா?, எப்படி அந்த இடம் செம இடம் இல்ல. அப்பா ஹாப்பியா என்ஜோய் பண்ணினாரா?…. என்ன பூட் சாப்பிட்டீங்க?….” என தொடர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

.

அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த சொர்ணா,

 

அவள் பேசி முடிக்கவும், “என்ன அருணா, எல்லாம் கேட்டு முடிஞ்சுதா?, இல்ல. இன்னும் ஏதாச்சும் மீதி இருக்கா?…. கேட்கிற கேள்வி எல்லாத்தையும் ஒரே தடவையில கேட்டு முடி. அப்புறமா நான் பதில் சொல்றேன்.” என சற்று அழுத்தமாக கூற,

 

அவளின் அழுத்தமே, ஏதோ தவறு நடந்து உள்ளது என்பதை வெளிக் காட்ட,

 

சற்று அமைதியான அருணா, “என்னாச்சு சொர்ணா, உன் முகமே சரி இல்லையே. நேற்று அங்க போக முடியலயா?, இல்ல…. சாப்பாடு பிடிக்கலயா?, இல்ல வேற ஏதும் பிரச்சனையா?…. அப்பா நல்லாத் தானே இருக்கார். அவருக்கு ஏதும்….” என இழுக்க,

 

“ம்ப்ச்…. அதெல்லாம் ஓகே அருணா. அப்பா நல்லாத் தான் இருக்கார். ஆனா அந்த ஹோட்டல் தான் கால வாரி விட்டிடுச்சு. அங்க ஒரு பிரச்சனை ஆகிடிச்சு. அதனால நானே ஒருத்தர அடிக்க வேண்டியதாப் போச்சு.” என கூறவும்,

 

“எத…. நீ ஒருத்தர அடிச்சீயா?, சும்மா காமெடி பண்ணாத. பஸ்ல யாருக்கும் தெரியாம இடிச்சிட்டு வந்தாலே புலம்புற ஆள் நீ. நீ போய் ஒருத்தன அடிச்சீயா…. சும்மா உருட்டாம கிளம்பு.” என கூற,

 

அவளை முறைத்துப் பார்த்தவள், “என்ன நடந்து துன்னு முதல்ல கேளு.” என கூறியவள்,

 

விடயத்தை சொல்ல ஆரம்பிக்க,

 

அவளின் அருகே பல குரல்கள் கேட்டது.

 

“ஏய் இங்க பாருங்கடி…. இது அவர் தானே…. அவர யாரோ அடிச்சு

இருக்காங்க போல….”

 

“அவர அடிக்கிற அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு. ஒரு பொண்ணுன்னு வேற போட்டு இருக்கு. அவரு தான் பொண்ணுங்க விஷயத்தில நெருப்பாச்சே….”

 

“அத விடு…. இவரு கடைசியா இங்க வந்தது ஆறுமாசத்துக்கு முதல் தானே. அவரு இந்தியா வர்றதே பெரிய விஷயம் தான். இப்போ எதுக்கு இங்க வந்து இருப்பார்?….”

 

“ஒரு வேள கலியாணமா இருக்குமோ?…. இல்ல…. பிசினஸ் ட்ரிப்பா இருக்குமோ?….”

 

“அவரோட அப்பா இங்க தானே இருக்கார். அவருக்காக வந்து இருப்பார் போல….”

 

“யாருக்காக வந்தால் என்ன…. போன தடவ மாதிரி நம்ம கம்பெனிக்கு விசிட் பண்ணினா நல்லா இருக்கும் என்ன…. என்ன ஹாண்ட்சம் ஆளு அவரு….”

 

“ஆமா…. ஆனா அவரு ஒரு ஸ்பீச் கொடுக்க தானே இங்க வந்தார். ஆனா அதுக்காக அவரு வாங்கின பணம் இரண்டு கோடிக்கும் மேலயாம்.”

 

“பின்னே இருக்காதா ஒவ்வொரு நொடியும் அவருக்கு கோல்டன் செகண்ட் மாதிரின்னு சொல்லுவார். அத செலவு செய்யும் போது, காசு வாங்காம இருப்பாரா என்ன?”

 

“ஆமா…. அவர பத்தி ஆர்ட்டிக்கல் நிறைய வந்து இருக்கு தானே. அதெல்லாம் ஒண்ணு கூட விடாம நான் படிச்சு இருக்கேன்….”

 

“ஹலோ நீ மட்டும் இல்ல, நானும் படிச்சு இருக்கேன்.”

 

“ம்ப்ச்…. நான் அவரோட போட்டோவையே கண்ணாடில ஒட்டி வைச்சு இருக்கேன்.”

 

“ஆனாலும், அவரோட ஹோட்டல்ல வைச்சு ஒரு பொண்ணு அவர அடிச்சு இருக்கா…. அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?”

 

“ஆத்தி, அந்த ஆளே ஒரு டெரர் பீஸ் அவர போய் அடிச்சு இருக்கா…. யாரா இருக்கும்?, அந்தப் பொண்ண பார்த்தே ஆகணும்.”

 

“ஆரண்யன் பேமஸ்சோ இல்லையோ…. அந்தப் பொண்ணு ஒரு நாளுல பேமஸ் ஆகிட்டா….”

 

“ஆமா…. ஆனா அந்தப் பொண்ணு முகத்த தெளிவாப் போடல. பொதுவா ஹோட்டல்ல ப்ரோப்லம்னு போட்டு இருக்காங்க. யாரோ வேணும்னு பப்ளிக் பண்ணி இருக்காங்க. இது தான் இப்போ ஹாட் நியூஸ். இந்த விஷயம் வெளில வந்ததுக்கே. இன்னும் என்னனென்ன நடக்கப் போகுதோ….”

 

“ஆமா, வெளியிட்ட ஆளுக்கு இனி மேல் சனி உச்சத்தில தான்….” என ஓயாது ஏனைய பெண்கள் பேசிக் கொண்டு இருக்க,

 

சொர்ணாவோ, ஆரம்பத்தில் ஏனோ தானோவென அமைதியாக அவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்தவள்,

 

“ஹோட்டல்…. பிரச்சனை…. அடி….” என அவர்கள் பேசவும்,

 

ஒரு கணம், “அந்த ஆளா இருக்குமோ….. சே…. சே…. அந்த ஆளு அங்க வேலை செய்ற ஆளு….” என எண்ணிக் கொண்டாலும்,

 

மனம் ஏதோ போல் உணர,

அவர்கள் பார்த்த அந்த பேப்பரை தானும் வாங்கிப் பார்த்தாள்.

 

பார்த்தவளுக்கு அடுத்த வார்த்தை வர மறுத்தது.

 

அவள் யாரை அடித்தாளோ.. அந்தக் காட்சி அச்சுப் பிசகாது, அங்கு போட்டோ வாக பதிவாகி இருந்தது.

 

அதற்கு கீழே, “மல்டி மில்லினர் ஆரண்யனின்

ஹோட்டலில் வைத்தே அவரை அடித்த பெண்.

அதன் பின்னணி என்ன?…. மிஸ்டர் ஆரண்யன் வெயிட் டர் உடையில் இருக்க காரணம்?, அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?, அந்தப் பெண்ணுக்கு பயந்து தான் இந்த மாறுவேடமா?, இது வரையும் ஒரு கேஸ்சிலும் சிக்காத ஆரண்யன் இதில் சிக்க காரணம் என்ன?….” என கண்ட பாட்டுக்கு எழுதி இருந்தனர்.

 

அனைத்தையும் வாசித்த சொர்ணா எச்சில் விழுங்கியபடி, இருக்கையில் அமர, அவளின் முகம் வியர்வையில் குளித்தது.

 

அதற்குள், அருணாவும் வாங்கிப் பார்த்து விட்டு,

 

“ஓஹ்…. இவரா…. என்னோட ரீசன்ட் கிரஷ் இவரு. செம ஆளு இல்ல. இந்த ஆள போய் யாரு அடிச்சிருப்பா. சே…. பாவம் அந்தப் பொண்ணு நிலைமை. இனி என்ன ஆகப் போகுதோ. கர்த்தரே…. அந்தப் பொண்ணை நீங்க தான் காப்பாத்தணும்.” என கூறி விட்டு,

 

சொர்ணாவைப் பார்க்க,

 

அவளோ இன்னும் பிரீஸ் மோடில் இருக்க,

அவளை உலுக்கி நனவு உலகத்திற்கு கொண்டு வந்தவள்,

 

“என்னாச்சு உனக்கு?, எதுக்கு இப்படி பேய பார்த்த மாதிரி இருக்காய்?” என கேட்டாள்.

 

சொர்ணாவோ, மனதிற்குள், “ஆமா ஒரு பேய் கூடத் தான் தெரியாம மோதி இருக்கன் போல.” என எண்ணிக் கொண்டவள்,

 

வெளியில் அமைதியாக ஒன்றும் இல்லை என தலையை ஆட்டினாள்.

 

“சரிடி, இத விடு. உன் கதைய சொல்லு.” என கேட்டவளுக்கு, என்ன பதில் சொல்வது எனப் புரியாது திண்டாடிப் போனாள் அவள்.

 

“அருணாவிடம் சொன்னால் அது கண்டிப்பாக, அனைவருக்கும் சென்று விடும். அதன் பின்பு அவள் அங்கு வேலை செய்ய முடியுமா?, இல்லை மீடியாக் காரர்கள் தான் சும்மா விடுவார்களா?” என எண்ணியவள்,

 

அமைதியாக, “அப்புறம் சொல்றேன் இப்போ கொஞ்சம் தல வலிக்குது.” என கூறி விட்டு, பைலை எடுக்க,

 

“சரிடி, நீ டென்ஷன் ஆகாத. ஆறுதலா சொல்லு.” என கூறி விட்டு தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.

 

ஆனால் சொர்ணாவிற்கு தான், தலைக்குள் ரயில் ஓட ஆரம்பித்தது.

 

அவள் அறியாது செய்த பிழை இப்போது பூதாகரமாக மாறி இருந்தது.

 

“அடுத்து என்ன ஆகும்?” என யோசித்தவள்,

இப்போதைக்கு அமைதியாக இருப்போம் என எண்ணி விட்டு, முயன்று அந்த பேப்பரை தூக்கிப் போட்டாள்.

 

போடும் போது தான் ஆரண்யனின் முகத்தையும், அவனையும் உற்றுப் பார்த்தாள்.

 

அப்படி ஒரு இறுக்கம் அவனது முகத்தில் குடி கொண்டு இருந்தது.

 

உடல் உரம் ஏறி, சிக்ஸ் பேக் அப்பட்டமாக தெரிந்தது.

 

அவனது உடலில் உள்ள இறுக்கம் போலவே முகத்திலும் இறுக்கம் தெரிந்தது.

 

“அவனது கையால் ஒரு அடி வாங்கினால் கண்டிப்பாக தாடை பெயர்ந்து போகும்.” என எண்ணிக் கொண்டவள்,

 

தனது எண்ணம் போகும் திசை அறிந்து, தலையில் அடித்துக் கொண்டு, மனதை வேலைகளில் செலுத்தினாள்.

 

ஆனால் மதியம் அவளின் காதுக்கு வந்து சேர்ந்த செய்தியில் முற்றிலும் ஆடிப் போனாள் பெண்ணவள்.

 

அப்படி அவள் காதுக்கு வந்த செய்தி என்ன?

 

இருவரும் சந்திக்கும் நிலை வந்தால் சொர்ணாவின் நிலை என்னவாகும்?

 

ஆரண்யன் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

 

பதில்கள் அடுத்த பதிவில் வரும்….

 

கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.

 

அடுத்த எபி நாளை வரும்…😍😍😍

 

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!