சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 16
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
ஷாலினி சொன்னதைக் கேட்ட சுந்தருக்கோ அதிரடியாக கோவம் வந்தது அவள் வார்த்தைகளில்..
கைகள் இரண்டையும் இறுக்கியவன் பல்லை கடித்துக் கொண்டு “ஷாலினி.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று கத்தினான்..
“அது என்ன புவர் பீப்புள்ன்னா என்ன வேலை கொடுத்தாலும் பணத்துக்காக செய்வாங்கன்னு சொல்றீங்க.. கால்ல விழுந்து கிடப்பாங்க.. அது இதுன்னு கேவலமா பேசுறீங்க.. உங்க கிட்ட பணம் இருக்குன்னா யாரை வேணா எப்படி வேணா பேசலாம்ன்கிற தகுதியும் உரிமையும் உங்களுக்கு வந்துருச்சுன்னு நினைக்கிறீங்களா? இந்த உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் அவனுக்கு கூட இந்த உலகத்தில் இருக்கிற கடைக்கோடி மனுஷனை இப்படி பேசுறதுக்கு உரிமை கிடையாது.. எல்லாரையும் சக மனுஷங்களா பார்க்கிறவன் தான் ஒரு நல்ல மனுஷன்னு நினைக்கிறவன் நான்.. ஐம் க்ரேட்லி டிஸப்பாயின்டட் ஷாலினி.. நீங்க இவ்வளவு கீழ்த்தரமா பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.. ஏன் பணம் இல்லைன்னா அவங்களுக்கு விருப்பு வெறுப்பெல்லாம் இருக்காதா? பணத் தேவை இருக்கறதால அவங்க மட்டும் இஷ்டம் இல்லாத வேலை எது கொடுத்தாலும் செய்யணும்னு ஏதாவது சட்டம் இருக்கா? ரொம்ப தப்பு ஷாலினி.. நீங்க இந்த மாதிரி பேசுனது எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு.. உங்ககிட்ட இப்படி ஒரு சீப்பான ஆட்டிட்யூடை நான் எதிர்பார்க்கல..” என்றான் சுந்தர் இறுகிய முகத்துடன்..
“அந்த பொண்ணை சொன்னா இவனுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது?” என்று யோசித்தவள் “சரி எப்படியாவது சமாளிப்போம்” என்று நினைத்தாள்..
“அதில்ல சுந்தர்.. அவங்க பாவம் கொஞ்சம் கஷ்டப்படுறவங்கன்னு சொல்றீங்க.. நம்மளை மாதிரி பணம் இருக்கிறவங்க ஒரு சேன்ஜ்க்காகவும் பிசினஸ் டென்ஷன் குறைக்கணுங்கறதுக்காகவும் ஹாபியா சில வேலைகள் செய்வோம்.. ஆனா அவங்க அப்படி இல்லல்ல.. எங்க வீட்லயும் வந்து சமைச்சு கொஞ்சம் பணம் கிடைச்சா அவங்களுக்கு நல்லது தானே? அவங்களுக்கு ஏதாவது பண தேவை இருக்கலாம் இல்ல? அதனால தான் சொன்னேன்.. ஆனாலும் நான் பேசின விதம் உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா ஐ அம் சாரி..”
அப்படியே பிளேட்டை தலைகீழாக கவிழ்த்து சொல்லி சமாளித்தாள் ஷாலினி.. அவள் மன்னிப்பு கேட்டதும் சுந்தருக்கு அவன் கோபம் சிறிது மட்டு பட்டது..
“நீங்க எனக்கு சாரி சொல்ல வேண்டாம் ஷாலினி.. நீங்க மத்தவங்க கிட்ட நடந்துக்கிற விதத்தை மாத்திக்கிட்டீங்கன்னா போதும்.. பணம் இல்லாதவங்க உங்களோட அடிமைன்ற நினைப்பை முதல்ல மாத்திக்கோங்க.. பணம் இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு கூட அவங்களுக்குன்னு ஒரு இஷ்டம் இருக்கும் இல்லையா? நம்ப அவங்களை எந்த வேலையும் செய்ய சொல்லி வற்புறுத்த முடியாது.. மே பீ சுந்தரி சமையல் கலைல அவங்களுக்கு இருக்கிற ஆர்வத்துக்காகவும் பேஷன்காகவும் சமைக்கலாம் இல்ல?”
“ஐ அண்டர் ஸ்டாண்ட்..” என்று சொன்னவள் “சரி.. எது எப்படியோ அவங்களால எனக்கு இன்னைக்கு ஒரு யம்மி ஃபுட் கிடைச்சுது.. சரி சுந்தர்.. ஐ அம் வெரி ஃபுல்.. கேன் ஐ டேக் லீவ்? நான் நாளைக்கு வேலைக்கு வரட்டுமா? தப்பா நினைச்சுக்காதீங்க.. எனக்கு இங்க சும்மா உக்காந்திருக்க கஷ்டமா இருக்கு..” என்றாள் ஷாலினி..
இன்னும் அரை மணி நேரம் அவனுடன் பேசினால் கொடுத்த வேலையை திரும்பி வாங்கிக் கொண்டு தன்னை வெளியே அனுப்பி விடுவானோ என்று அவளுக்கு பயமே வந்தது..
“உங்களுக்கு போகணும்னா கெளம்புங்க.. ஆனா அதுக்கு முன்னாடி நான் இப்ப கிளம்பி நம்மளோட டெக்ஸ்டைல் ஷோரூம்க்கு போவேன்.. நீங்க வந்து அதையும் பாக்கறீங்களா? மே பீ அங்க இருக்கிற டிரஸ் வெரைட்டீஸ்.. அதோட டிசைன்ஸ் பார்த்தா உங்களுக்கு கொஞ்சம் ஈவினிங் வரைக்கும் நல்லா டைம் ஸ்பென்ட் ஆகும்னு நினைக்கிறேன்..” என்றான் சுந்தர்..
“ஷ்யூர் சுந்தர்.. மை பிளஷர்..” என்று சொன்னவள் “சரி.. வாங்க கிளம்பலாம்” என்று சொல்லி சுந்தரோடு கிளம்பி கார் நிறுத்தும் இடத்திற்கு சென்றாள்..
அவன் கார் கதவை திறந்து விடவும் உள்ளே ஏற ஏதோ தடுக்க விழப் போனவள் விழாமல் சமாளிக்க சுந்தர் தோளை இறுக பிடித்துக் கொண்டு அப்படியே விழாமல் நின்றாள்..
“பார்த்து ஷாலினி..” என்றவனோ அவள் கையை தன் தோளில் இருந்து விலக்கி காரின் உள்ளே மேலே இருந்த பிடியில் பிடித்துக் கொள்ளுமாறு வைத்து விட்டான்..
“ம்ம்ம்ம்.. மாதேஷ் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி இவன் கை விரல் நுனி கூட என் மேல படாது போல இருக்கு.. இவனோட தைரியமா சுத்தலாம்.. நான் இவன் மேல விழுந்து பொறண்டாலும் அவன் என்னை தள்ளி தான் வச்சிருப்பான்.. ஸேஃப் கைய்” என்று மனதிற்குள் நினைத்தவள் “தேங்க்யூ சுந்தர்” என்று சொல்லி சற்று தடுமாறி உள்ளே ஏறி அமர்ந்தாள்..
அதன் பிறகு அவன் கடைக்கு சென்றவள் மாலை வரை அவன் கடையில் இருந்த ஆடைகளை பார்த்து அந்த கடையில் இருந்த ஆடை வடிவமைப்புக்கான தன்னுடைய எண்ணங்களை அவனோடு பகிர்ந்து கொண்டாள்..
ஏனோ அவளுடைய எண்ணங்கள் அவனுடைய வாடிக்கையாளர்களின் ரசனையோடு ஒத்துப் போகுமா என்று அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது..
“ஷாலினி நீங்க சொல்ற டிரஸ் ஐடியாஸ் எல்லாம் இந்த ஃபேஷன் ஷோல்ல போடுற மாதிரி.. நம்ம அட்டென்ட் பண்ற ஹைஃபை பார்ட்டீஸ்க்கு கர்ள்ஸ் போடுற மாதிரி.. ஆக்சுவலி நல்லா இருக்கு.. ஆனா நம்ம ஷோ ரூம் இருக்கிற இடத்தில சுத்தி இருக்கறவங்க அந்த மாதிரி டிரஸ்ஸஸ் எல்லாம் விரும்ப மாட்டாங்க.. அவங்க தினமும் அவங்க வேலை செய்ற இடத்துக்கு போட்டுட்டு போற மாதிரி சிம்பிள் டிசைன்ஸ்தான் நிறைய லைக் பண்ணுவாங்க.. எடுப்பாங்க.. மே பீ தங்களுடைய குழந்தைங்க இளவரசி மாதிரி இளவரசன் மாதிரி தெரியணும்ங்கறதுக்காக அவங்க கொஞ்சம் காஸ்ட்லியான டிரஸ்ஸஸ் குழந்தைகளுக்கு மட்டும் வாங்கலாம்.. ஆனா நீங்க சொல்ற மாதிரி டிரஸ் எல்லாம் அவங்க போடுவாங்களான்னு தெரியல.. அவ்ளோ விலை கொடுத்து அந்த டிரஸ் எல்லாம் அவங்களால வாங்க முடியுமான்னு தெரியல.. சோ எனக்கு என்னவோ அவங்களுக்கு ஏத்த மாதிரி நம்ம டிரஸ் டிசைன் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது.. நீங்க அத பத்தி கொஞ்சம் திங்க் பண்ணுங்க..” என்று சொன்னான் சுந்தர்..
“புரியுது சுந்தர்.. நான் என்ன நெனச்சேன்னா இவ்வளவு பேர் வந்தாலும் 10 பேர் அந்த மாதிரி ஹைஃபை காஸ்ட்லி டிரஸ் வாங்கினாங்கன்னா நம்ம கடையோட சேல்ஸ் எங்கேயோ போயிடும்.. 500 பேர் நம்ம டிரஸ் வாங்குறதுனால வர்ற லாபத்தை அந்த பத்து பேரு ஈஸியா நம்மளுக்கு குடுத்துடுவாங்க.. அதனால தான் இப்படி டிசைன் பண்ணலாம்னு சொன்னேன்..” என்றாள் அவள்..
” கரெக்ட்டு தான்.. 500 பேர் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குற ட்ரெஸ்ஸை விட அம்பது பேர் பத்து ஆயிரம் ரூபாய்க்கு வாங்குற டிரஸ் அந்த லாபத்தை நமக்கு சம்பாதிச்சு கொடுத்திடும்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா அந்த 50 பேர் நம்ம கடைக்கு ரெகுலரா வர மாட்டாங்க.. ஆனா இந்த 500 பேர் நம்ம கடைக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை வருவாங்க.. ரெகுலரா.. அப்போ இதுல தான் லாபம் நிறைய கிடைக்கும்.. அது மட்டும் இல்லாம இந்த 500 பேர் ஆயிரம் ஆகும்.. ஆயிரத்து 500 ஆகும்.. வேகமா நம்ம கஸ்டமர் ஸ்ட்ரென்த் அதிகரிச்சுடும்.. ஏன்னா இந்த கடையை சுத்தி அந்த மாதிரி மக்கள் தான் நிறைய இருக்காங்க.. ஆனா அந்த 50 பேர் மாதிரி இந்த ஏரியாலேயே கொஞ்சம் பேருதான் இருக்காங்க.. சோ அவங்க வந்து வாங்குற வரைக்கும் நம்ம வெயிட் பண்ண வேண்டி இருக்கும்.. அதுல லாபம் வரதுக்கு ரொம்ப டைம் எடுக்கும்.. அதுக்குள்ள அவங்களுக்கு வேற கடை கிடைச்சாலும் ஆச்சரிய படறத்துக்கு இல்லை.. அதனால என்னை பொறுத்த வரைக்கும் இப்போ விக்கிற மாதிரி இந்த கஸ்டமர் குரூப்ப டார்கெட் பண்றது தான் சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன்..” என்று விளக்கினான் அவன்..
ஷாலினியோ அவன் எவ்வளவு தெளிவாக இருக்கிறான் என்று வியந்தாள்.. அவனுக்கும் மாதேஷூக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.. “எவ்ளோ ஸ்டேரேட்டஜீஸ் எல்லாம் யூஸ் பண்ணி யோசிக்கறான்.. இவனோட ஸ்ட்ராட்டஜி எல்லாம் யோசிச்சு வொர்க் பண்ணா இன்னும் ஒரு வருஷத்துல இவன் அடுத்த லெவலுக்கு வளர்ந்து எங்கேயோ போயிடுவான்.. இந்த மாதேஷ்க்கு சுட்டு போட்டாலும் இந்த மாதிரி யோசனை எல்லாம் வராது.. என்ன செய்யறது நமக்கு வாய்ச்சது அப்படி இருக்கு..” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே “ஓகே சுந்தர்.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. அப்படியே டிசைன் பண்ணிடுறேன்” என்று சொன்னாள் அவள்..
தான் சொன்னது நல்ல விஷயம் என்று தெரிந்தவுடன் அதனை உடனே ஒப்புக் கொண்ட அவள் குணத்தை நினைத்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது..
“சரி சுந்தர் அப்ப நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றாள் ஷாலினி..
“ஓகே ஷாலினி.. பார்த்து போயிட்டு வாங்க.. எப்படி போவீங்க?” என்று சுந்தர் கேட்கவும் “என்னை பிக்கப் பண்ண வீட்டில் இருந்து டிரைவர் அனுப்புறேன்னு அப்பா சொல்லி இருக்காரு.. இப்பதான் என் டிரைவருக்கு மெசேஜ் பண்ணேன்..” என்றாள் அவள்…
“அப்படின்னா ஓகே” என்று சொன்னவன் வாசல் வரை அவளை கொண்டு விட கூட வர “இல்ல சுந்தர்.. பரவால்ல.. நீங்க உள்ள போய் கஸ்டமரை கவனிங்க.. வேலையை பாருங்க.. என்னால உங்க பிசினஸ் டிஸ்டர்ப் ஆக வேண்டாம்.. நான் போய்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்று அவசர அவசரமாக வெளியே வந்தாள்..
“இன்னைக்கு தான் ஷாலினி வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்காங்க.. ஆனா அதுக்குள்ள என் பிசினஸ் நல்லா போகணும்னு ஒரு நிமிஷம் கூட நான் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு நினைக்கிறாங்க.. நிச்சயமா இவங்க இந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக சின்சியரா டெடிகேட்டடா வர்க் பண்ணுவாங்க.. ஆனா கொஞ்சம் இவங்க ஆட்டிட்யூட் சேஞ்ச் பண்ணிக்கிட்டாங்கன்னா போதும்..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..
ஆனால் அது எவ்வளவு தவறான கணிப்பு என்பது அதற்கான காலம் வரும்போது அவனுக்கு புரியும்..
அந்த கடையில் இருந்து இரண்டு கடை தள்ளி நடந்து வந்தவள் அங்கே இருந்த காரில் சட்டென ஏறி அமர்ந்து கொண்டாள்… ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான் மாதேஷ்..
ஷாலினி காரில் ஏறிய அடுத்த நொடி அவளை இழுத்து அவள் இதழில் ஆழ்ந்த முத்தம் பதித்திருந்தான்..
###############
இங்கே வீட்டில் சுந்தரி சுந்தரின் சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தாள்.. அவர்களுக்கு உணவு பரிமாறுவது.. அவர்கள் கொண்டு வந்த பெட்டியில் இருந்து துணிமணிகளை எடுத்து அவர்களுக்கு என்று இருந்த அலமாரியில் அடுக்குவது… அவர்களுக்கு காப்பி சிற்றுண்டி எது கொடுப்பதாக இருந்தாலும் அவர்கள் அறைக்கே எடுத்து வந்து கொடுப்பது.. என்று ..அவர்களை நடக்க விடாமல் வேறு எந்த வேலையும் செய்ய விடாமல் தாங்கு தாங்கு என்று தாங்கினாள் சுந்தரி..
இதற்கு நடுவே சுந்தரின் கார்மெண்ட்ஸில் இருந்து வந்திருந்த பொருள்களை எல்லாம் பிரித்து எடுத்து வைத்து மாதிரி துணிகளை பார்த்து அதற்கேற்றார் போல் மற்ற துணிகளை தைப்பதற்கு வேலையை ஆரம்பித்து இருந்தாள்..
இதன் கூடவே பாட்டியையும் நன்றாக கவனித்துக் கொண்டாள்.. நடராஜனும் சுந்தரின் சித்தி மேகலாவும் பாட்டியை சென்று சந்தித்தனர்.. பாட்டியின் நிலை கண்ட அவர்களுக்கு வருத்தமாய் இருந்தது..
ஆனால் சுந்தரியோ “இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க.. பாட்டி எழுந்து எல்லா வேலையும் செய்வாங்க.. இந்த மாதிரி படுத்து இருக்கிறது எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்..” என்று அவள் சொல்லவும் அத்தனை வலியிலும் பாட்டி சிரித்தாள்..
“ஏன் சுந்தரி.. எனக்கு செஞ்சு செஞ்சு உனக்கு கஷ்டமா இருக்கா?” என்று சுந்தரியை பாட்டி கேட்கவும் “இல்ல பாட்டி.. உங்க சமையல் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு..” என்றாள் சுந்தரி..
“உன் ஆசைக்காகவாது எனக்கு சரியாகி சீக்கிரம் எழுந்து நான் உனக்கு சமைச்சு போடுவேன்” என்றார் பாட்டி அவள் தலையை ஆதரவாக தடவிக் கொண்டு..
வலியில் இருந்தவரை சிரிக்க வைத்த சுந்தரியை மேகலாவுக்கு மிகவும் பிடித்து போனது..
அதன் பிறகு நடராஜனும் மேகலாவும் தங்கள் அறைக்கு வந்தார்கள்..
இப்படி சுந்தரி பம்பரமாய் சுற்றுவதை பார்த்த மேகலா “ஏங்க.. இந்த பொண்ணு என்னங்க.. இப்படி வீட்டு வேலை அத்தனையும் பார்த்து பார்த்து செய்யறா..? இவளை பாத்தா சமையல் வேலை செய்ய வந்தவ மாதிரி இல்ல.. ஏதோ சுந்தரோட வீட்டுக்காரி மாதிரி வேலை எல்லாம் இழுத்து போட்டுட்டு செய்யறா.. அவனுக்கு சாப்பாடு போடறது.. அவனுக்கு டிஃபன் கட்டி கொடுக்கறது.. அவனோட துணிமணிகள் எல்லாம் தோய்ச்சு போடுறது.. அப்புறம் அவன் ரூமை சுத்தம் பண்றதுன்னு இந்த பொண்ணு காலையிலிருந்து எப்படி பம்பரமா சுத்திட்டு இருக்கா பாத்தீங்களா..!? நம்பளையும் நல்லா கவனிச்சுக்கறா.. போதா குறைக்கு கம்பெனியில் இருந்து அந்த தையல் துணி வந்துது இல்ல? அதையும் தெச்சு குடுக்குறா.. பாட்டியையும் கவனிச்சுக்கறா.. நல்லா குணமாவும் இருக்கா..” என்று ஆச்சரியப்பட்டு சொன்னாள்..
“ஏய்.. மேகலா.. அந்த பொண்ணு ஏதோ அந்த பாட்டிக்கு செய்யணும்னு வந்துட்டு மத்த வேலையையும் இழுத்து போட்டுட்டு செய்யறா.. நீ எதையாவது தப்பு தப்பா சொல்லி வைக்காத..” என்றார் நடராஜன்..
அவர் சொல்வதும் சரிதான் என்று தன் வேலையை பார்க்கத் தொடங்கினார் மேகலா.. ஆனால் அவருக்கு உள்ளுக்குள்ளே சுந்தரி மிகவும் விருப்பத்துடன் அந்த வேலைகளை எல்லாம் செய்வது போலவே தோன்றியது.. அவருக்கு மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது.. ஆனால் மறுகணமே தான் அப்படி யோசித்ததற்காக தன் தலையில் தட்டிக் கொண்டார் மேகலா..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணு