என்ன கேட்கிற உன்னைப் பிடிக்குமா, வினித்ரா மேடமை பிடிக்குமாவா என்றவனிடம் சொல்லுங்க மாமா உங்களுக்கு என்னை பிடிக்குமா இல்லை அந்த வினித்ரா மேடத்தை பிடிக்குமா என்றாள் வெரோனிகா.
வெரோனிகா நீ கேட்கிற கேள்வியே தப்பா இருக்கு என்ற உதயச்சந்திரன் என்ன நடந்துச்சு ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம் என்றான்.
இல்லை மாமா நீங்களும் அந்த வினித்ரா மேடமும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறிங்களாமே. அவங்களை அடிக்கடி உங்க பைக்ல அவங்க வீட்டுக்கு கொண்டு போயி விட்டுட்டு வந்துருக்கிங்களாமே என்றாள் வெரோனிகா.
எதே நானும், வினித்ராவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறோமா என்ன பேசிட்டு இருக்க நீ என்றவனிடம் அப்போ நீங்க அவங்களை உங்க பைக்ல டிராப் பண்ணவே இல்லையா என்றாள் வெரோனிகா.
ஒருமுறை அவங்க பைக் பஞ்சர்னு அவங்க வீட்டில் விட்டுட்டு வந்திருக்கிறேன் என்றவனை முறைத்தவள் அப்போ அந்த சிவரஞ்சனி சொன்னது உண்மை தானா என்றவள் அழுது கொண்டே பள்ளியில் சிவரஞ்சனி அவளிடம் சொன்ன விசயங்களைக் கூறினாள்.
அதைக் கேட்டுக் கொண்டவன் சரி இப்போ என்ன உன் பிரச்சனை என்றவனிடம் என்ன மாமா பேசுறிங்க என்ன என் பிரச்சனையா நீங்க என்னுடைய கணவர் என்றாள் வெரோனிகா.
நமக்கு நடந்த கல்யாணம் ஒரு விபத்து. அதை நீ மறக்க முயற்சி பண்ணு. உனக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. இப்போதைக்கு உன்னுடைய கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்கனும். படிப்பு ஒன்று தான் உனக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்ள உதவும் என்றான் உதயச்சந்திரன்.
நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே மாமா. நான் படிக்கிறேன் நீங்க என்ன படிக்க சொன்னாலும் படிக்கிறேன். ஆனால் நீங்க சொல்வது போல நம்ம கல்யாணம் ஒரு விபத்தாவே இருந்தாலும் ஊரறிய இரண்டு குடும்பத்தோட சம்மதமும் சேர்ந்ததால தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு.
அது சட்டப்படி செல்லாமல் போனாலும் தர்மப்படி செல்லும் அதை உங்களால மறுக்க முடியாது. என்னோட கேள்வி ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு அந்த வினித்ரா மேடத்தை பிடிக்குமா, நீங்க அவங்களை விரும்புறிங்களானு தான் என்றாள் வெரோனிகா.
ஒருவேளை அடிக்கடி யார்கிட்டையோ போனில் சிரிச்சு, சிரிச்சு தனியா போயி பேசுறிங்களே அது அந்த வினித்ரா மேடம் கூட தானா அவங்க கூட சந்தோசமா பேசுறதால தான் எப்போ பாரு என்னை திட்டிட்டே இருக்கிங்களா மாமா என்றவளை முறைத்தவன் உனக்கு என்ன தான்டி பிரச்சனை.
நீ சின்னப் பொண்ணு ரோனி உனக்கு என்னை புரிஞ்சுக்க கொஞ்சம் நாள் ஆகும். நான் உன்னை திட்டிட்டே இருக்கிறேன்னா அதற்கு காரணம் உன் மேல இருக்கிற அக்கரை. அதைப் புரிஞ்சுக்கோ வினித்ரா இல்லை வேற யாரையும் ஏன் உன்னைக் கூட என்னால காதலிக்க முடியாது. காதலிக்கவும் மாட்டேன்.
கேள்வி கேட்டியே என்னை உங்களுக்கு பிடிக்குமா மாமா உன்னை எனக்கு பிடிக்காது. இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் தேவை இல்லாத விசயங்களை மனசுக்குள்ள ஏத்திகிட்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் முட்டாள் மாதிரி நடந்துக்கிற வெரோனிகாவை எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை.
இன்னைக்கு டெஸ்ட் நீ ஒழுங்கா எழுதவில்லைனு நல்லாவே தெரியுது நாளைக்கும் இன்னைக்கு நடந்த விசயங்களை உன் மனசுல போட்டு குழப்பிகிட்டு ஒழுங்கா எழுத மாட்டனு புரிஞ்சுகிட்டேன்.
உனக்கு இத்தனை நாள் உட்கார்ந்து படிப்பு சொல்லிக் கொடுத்ததே வேஸ்ட் என்றவன் எப்படியோ போ என்று கோபமாக அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பிறகு அழுது அழுது கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள். அவளது மொபைல் போன் ஒலித்திட திரையில் அம்மா என்ற பெயர் தெரிய அதை அட்டன் செய்தவள் அழ ஆரம்பித்தாள்.
ரோனி என்னாச்சும்மா ஏன் அழுதுட்டு இருக்க என்ற பூங்கொடியிடம் ஒன்றும் இல்லை என்றாள். ஒன்றும் இல்லை என்றால் ஏன் அழதுட்டு இருக்க என்றவர் மகளைத் துருவித் துருவி கேள்வி கேட்டிட அவளும் கணவனுடனான சண்டையைக் கூறினாள்.
அமைதியாக அனைத்தையும் கேட்டு முடித்த பூங்கொடி அழாமல் ஒழுங்கா நாளைக்கு பரீட்சைக்கு படி அம்மாவும், அப்பாவும் என் ரோனிக் குட்டியை பார்க்க நாளைக்கு வரோம் என்றார்.
நீ எதையும் நோசிக்காமல் இரு அதான் அம்மா வரேன்ல நான் பார்த்துக்கிறேன் என்றவர் போனை வைத்தார்.
என்ன பூங்கொடி ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற கதிரேசனிடம் இன்னைக்கு ராத்திரியே நாம ரோனி வீட்டுக்கு கிளம்பலாமாங்க என்றார் பூங்கொடி.
நாளைக்கு காலையில் கிளம்பினாலே மதியானம் அங்கே போயிரலாமே பூங்கொடி என்ற கதிரேசனிடம் இல்லைங்க நம்ம பொண்ணு ஸ்கூல் போறதுக்குள்ள அங்கே போயிட்டால் எனக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கும் என்றார் பூங்கொடி.
சரிமா உன் விருப்பம் அப்போ கிளம்பு நான் அண்ணன், அண்ணிகிட்ட சொல்லிட்டு வரேன் என்ற கதிரேசன் தன் அண்ணன் கணேசனிடம் சொல்ல கிளம்பினார்.
என்ன அண்ணா ஏன் இங்கே வந்து நிற்கிறிங்க என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை என்ற உதயச்சந்திரன் கிளம்பிட அண்ணி கூட சண்டையா என்றான் பிரகாஷ்.
ஆமாம் பெரிய அண்ணி என்ற உதயச்சந்திரன் அவள் ஒரு முட்டாள். சரியான பட்டிக்காடு என்றவன் கொஞ்சம் கூட என் மேல நம்பிக்கை கிடையாது என்றான்.
என்னாச்சு அண்ணா என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை பிரகாஷ் என்றவன் அமைதியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.
என்ன பண்ணிட்டு இருக்க உதய் நீ. அவள் தப்பே பண்ணி இருந்தாலும் அவளைப் பற்றி நீ எப்படி பிரகாஷ்கிட்ட அப்படி பேசின ஆமாம் அவள் பட்டிக்காடு தான் இன்னும் சொல்லப் போனால் வெளி உலகம் தெரியாத ஒரு சின்னப் பொண்ணு.
அவள் கிட்ட நீ கோபம் படுறதுக்கான ரீசன் அவளுக்கு உன் மேல எந்த அன்பும் வரக்கூடாதுனு தான் ஆனாலும் அவள் உன்னோட மனைவி. அவளுக்கான சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை உனக்கும் இருக்கு.
அவளை படிக்க வைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கிறது மட்டும் உன் கடமை இல்லை அவளுடைய மனநிலையை, எந்த ஒரு சூழ்நிலையும் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொள்வதும் உன் கடமை என்று நினைத்தவன் அவகிட்ட கோபம் பட்டது தப்பு.
வினித்ரா மேடம் பற்றி எனக்கு எந்த ஈடுபாடும் இல்லைனு அவளுக்கு புரிய வைக்கனும். எக்ஸாம் முடியட்டும் இந்த வீக் என்ட் அவகிட்ட பேசி புரிய வைக்கலாம் என்று நினைத்தவன் எழுந்து தன்னறைக்கு சென்றான்.
அவள் அமைதியாக புத்தகத்தை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருந்தாள். அவளது சிந்தனை புத்தகத்தில் இல்லை என்பதை அவன் உணர்ந்தாலும் அவன் அமைதியாக தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
என்ன உதய் நீ மட்டும் தான் வந்திருக்க ரோனி எங்கே என்ற மலர்கொடியிடம் அவள் படிச்சுட்டு இருந்தாள். இருங்க நான் போயி கூட்டிட்டு வரேன் என்றவனிடம் நீங்க இருங்க அண்ணா நான் போயி ரோனியை அழைச்சுட்டு வரேன் என்ற ஊர்மிளா வெரோனிகாவை கூப்பிட சென்றாள்.
உதயா கொஞ்சம் வாப்பா என்ற கல்யாணிதேவியிடம் இதோ வரேன் அப்பத்தா என்றான் உதயச்சந்திரன்.
சொல்லுங்க அப்பத்தா என்ற உதயச்சந்திரனிடம் உனக்கு நான் புத்திமதி சொல்ல வேண்டியது இல்லை. உனக்கே எல்லாம் தெரியும். உன் அறைப் பக்கம் வரும் பொழுது என் காதில் விழுந்துச்சு.
உனக்கும், வெரோனிகாவுக்கும் சண்டை. அது எதனாலனும் கேட்டுச்சு என்றவர் அவள் சின்னப் பொண்ணு. உன்னை கட்டாயப்படுத்தி அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சது உங்க இரண்டு பேருடைய வாழ்க்கையும் நல்லா இருக்கனும்னு தான்.
கோபத்தில் ஒரு வார்த்தை சொன்ன என்னால உன்னை எப்பவுமே காதலிக்க முடியாதுனு அதற்கான அர்த்தம் அந்த சின்னப் பொண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும் என்ற கல்யாணிதேவி முடிஞ்சு போன விசயத்தை நீ மறக்கனும்.
அந்த ஞாபகங்களை உனக்குள்ள சுமந்துகிட்டு இருக்கிறது நீ வெரோனிகாவுக்கு மட்டும் இல்லை உனக்கு நீயே செய்கிற துரோகம் என்ற கல்யாணிதேவி உனக்கு நான் புத்திமதி சொல்ல வேண்டியது இல்லை. உனக்கு எல்லாமே புரியும்.
நின்று போன கல்யாணத்தையும் என்னால மாற்ற முடியாது. நடந்து முடிஞ்ச கல்யாணத்தையும் என்னால மாற்ற முடியாது. ஏன் யாராலையும் மாற்ற முடியாது அதனால தான் சொல்கிறேன் இது தான் உன் வாழ்க்கை. வெரோனிகா தான் உன் எதிர்காலம்.
அவளை நீ விரும்பி தான் ஆகனும்னு நான் சொல்ல மாட்டேன் ஆனால் அவளை புரிஞ்சு நடந்துக்கோ. உன்னையையும் அவளுக்கு புரிய வை என்றார்.
மௌனமாக அவர் சொன்னதைக் கேட்டவன் சரிங்க அப்பத்தா என்றிட சரி போய்யா போயி சாப்பிடு என்ற கல்யாணிதேவி கண்களை மூடிக் கொண்டார். மூடிய விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வழிந்தது.
என்ன ரோனி சாப்பிட வரவில்லையா என்ற ஊர்மிளாவிடம் பசி இல்லை ஊர்மி என்றாள் வெரோனிகா. என்ன பசி இல்லை அம்மாவும், பெரியம்மாவும் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னாங்க வா என்று அவளை இழுத்து வந்தாள் ஊர்மிளா.
என்ன மகாராணி இன்னைக்கு பசிக்கவில்லையா இவ்வளவு நேரம் கழிச்சு வந்துருக்கிங்க என்ற சுசீலாவிடம் பதில் சொல்லாமல் பெயருக்கு சிரித்தவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
மருமகளின் முகம் வாடி இருப்பதைக் கண்ட சுசீலா மலர்கொடியிடம் கண்ஜாடையில் சொல்ல அதைப் புரிந்து கொண்டவர் ரோனி உனக்கு ஒரு குட்நியூஸ் சொல்லட்டுமா என்றார் மலர்கொடி.
என்ன அத்தை குட் நியூஸ் என்றவளிடம் உன் அம்மா ,அப்பா நாளைக்கு வராங்க என்றார் மலர்கொடி. எனக்கு தெரியும் என் அம்மா சொல்லிட்டாங்க என்றவள் சாப்பிட்டு விட்டு எழுந்து தன்னறைக்கு சென்றாள்.
என்னாச்சுக்கா இந்த பொண்ணுக்கு எப்பவும் அவன் திட்டிட்டு தானே இருக்கிறான். இன்னைக்கு ரொம்ப மூட் அவுட்டா இருக்கிறாள். அவன்கிட்ட நாம கேட்கவும் முடியவில்லை என்று புலம்பினார் சுசீலா.
அத்தை அவன்கிட்ட பேசிருப்பாங்க நீ கவலைப் படாதே சுசீ அவன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கானோ தெரியவில்லை அவனை வேண்டாம்னு போனவளை நினைச்சுட்டு இருக்கிறவளை இழந்திருவானோன்னு பயமா இருக்கு என்ளார் மலர்கொடி.
ஊரைக் கூட்டி கல்யாணம் ஏற்பாடு பண்ணி நிற்கிறது எவ்வளவு பெரிய வலி அவன் மனசுல இருந்த ஆசை எல்லாம் சிதைஞ்சு போனப்ப ஏற்பட்ட விரக்தி இன்னும் மாறாமல் இருக்கிறது என்ன பண்ண எல்லாம் காலம் தான் மாற்றனும் என்ற சுசீலா பாத்திரத்தை கழுவ ஆரம்பித்தார்.
அமைதியாக படித்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள். பால்கணியில் அமர்ந்திருந்தவன் அறைக்குள் வந்து பார்த்திட அவள் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை தூக்கி மெத்தையில் படுக்க
வைத்தவன் போர்வையை போர்த்தி விட்டான். பிறகு அவன் சென்று ஷோபாவில் படுத்து விட்டான்.
….தொடரும்….
Awesome https://shorturl.at/2breu