விதியின் முடிச்சு…(19)

4.6
(9)

வெரோனிகா என்றவனிடம் என்கிட்ட பேசாதிங்க மாமா என்றவள் சென்று படுத்துக் கொண்டாள். வெரோனிகா ஏன் என்மேல கோபமா இருக்க என்றவனிடம் வேற என்ன பண்ண சொல்லுறிங்க நீங்க மட்டும் அன்னைக்கு அவளுக்கு ஓடிப் போக உதவி பண்ணாமல் இருந்திருந்தால் நமக்கு கல்யாணம் நடந்தே இருக்காது.

 

இப்படி தினம்,தினம் ஸ்கூலுக்கு போகும் பொழுது நான் தாலியை மறைச்சு மறைச்சு உங்களுக்கு என்ன தெரியும் நான் படுற கஷ்டம். தினமும் பிரகாஷ் மாமா கூட என்னை வீட்டுக்கு வரச் சொல்லுறிங்க.

 

பிரகாஷ் மாமா உங்க தம்பி அவங்களோட சேர்த்து வச்சு கிளாஸ்ல என்னை ஒரு மாதிரியா பேசுறாங்க என்றவள் கண்கள் கலங்கிட என்ன சொல்லுற நீ என்றான். என்ன சொல்லுறேன்னா உங்களுக்கு தான் என்னை உங்க கூட கூட்டிட்டு வந்தால் கௌரவக் குறைச்சல் ஆச்சே என்றவள் எனக்கு புரியுது உங்களுக்கு என்னை பிடிக்காதுனு  என்றவள் சரி விடுங்க நான் என்ன பேசி என்ன ஆகப் போகுது.

 

நான் கேட்டப்பவே எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தால் கூட நான் ஊர்மிளா கூடவே வீட்டுக்கு வந்துருப்பேன். நீங்களோ, இல்லை பிரகாஷ் மாமாவோ வந்து என்னை கூட்டிட்டுப் போவிங்கனு நான் தனியா அந்த கிளாஸ்ரூம்ல வெயிட் பண்ணாமல் இருந்திருந்தால் எனக்கு அப்படி ஒரு அசிங்கம் நடந்திருக்காது.

 

எனக்கு இன்னமும் உடம்பெல்லாம் அறுவறுப்பா இருக்கு. அதை நினைக்க கூடாதுனு நீங்க சொன்னதை நானும் முயற்சி பண்ணி பார்க்கிறேன் என்னால முடியலை என்று அழுதவளிடம் உனக்கு ஒன்றுமே நடக்கவில்லை. சும்மா எப்போ பாரு அதையே நீ ஏன் நினைக்கிற என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது.

 

ஆனால் என்றவனிடம் மாமா ப்ளீஸ் விடுங்க என்றவள் படுத்துக் கொள்ள அவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

 

அவன் சென்றது அவளுக்கு தெரியாது. மெல்ல கண்ணசந்தவள் திடீரென அலறி எழுந்தாள். அந்த அறையில் அவளைத் தவிர யாரும் இல்லை என்பது அவளது புத்திக்கு புரிந்தாலும் மனம் முழுவதும் அன்று பள்ளியில் நடந்த நிகழ்வு கண் முன் தோன்றுவது போல இருக்க பயத்தில் அலற ஆரம்பிக்க அந்த நேரம் அவனும் அறைக்குள் நுழைந்தான்.

 

ரோனி என்னாச்சு என்றவனைக் கட்டிக் கொண்டு அவள் அழ ஆரம்பித்தாள். என்னை தனியா விட்டுட்டு ஏன் மாமா போனிங்க என்றவள் அழ ஆரம்பிக்க அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன் ரோனி ஒன்றும் இல்லைம்மா நீ தூங்கு என்று சமாதானம் செய்து அவளை உறங்க வைப்பதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றானது.

 

 

என்னப்பா சத்தம் என்று வந்த சுசீலாவிடம் ஒன்றும் இல்லை சித்தி என்ற உதயச்சந்திரன் ஏதோ கெட்ட கனவு கண்டிருக்கிறாள் என்றான். சரிப்பா பார்த்துக்கொள் என்று கூறி விட்டு அவர் சென்று விட உதயச்சந்திரன் யோசிக்க ஆரம்பித்தான்.

 

இவளுக்கு அந்த இன்சிடென்ட் ரொம்ப ஆழமா மனசுல பதிஞ்சுருக்கு அதனால தான் இப்படி பயப்படுகிறாள் என்று நினைத்தவன் சரி பார்க்கலாம் என்று விட்டு அவளருகிலே படுத்து உறங்கினான்.

 

 

என்னடி நீ தூங்கவில்லையா என்ற மலர்கொடியிடம் அம்மா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் அர்ச்சனா. சொல்லும்மா என்றவரிடம் அம்மா அம்மா என்று அவள் இழுத்திட என்ன யாரையும் விரும்புறியா என்றார் மலர்கொடி.

 

ஆமாம் அம்மா என்றவளிடம் என்ன என்றிட ஆமாம் அம்மா விவேக்னு எங்க காலேஜ் சீனியர். இப்போ சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கிறார். அவங்க அப்பா, அம்மாவோட நம்ம வீட்டுக்கு வந்து பேசுகிறேன்னு சொன்னாரு அதான் என்றிட அவளை முறைத்த மலர்கொடி எனக்கான வாழ்க்கையை நானே தேடிகிட்டேன் நீங்க ஒன்றும் தேடிக் கிழிக்க வேண்டாம்னு சொல்லாமல் சொல்லுற அப்படித்தானே என்றார் மலர்கொடி.

 

அம்மா அது அப்படி இல்லை என்றவளிடம் வேற எப்படிம்மா. அது என்னடி உங்களுக்கு பிறந்ததில் இருந்து எது சரியா இருக்கும், எது பிடிக்கும்னு பார்த்து பார்த்து நீங்க ஆசைப் பட்டது எல்லாத்தையும் செய்து கொடுக்கிற அப்பா , அம்மாவுக்கு உங்க வாழ்க்கையை தீர்மானிக்கிற உரிமையை மட்டும் கொடுக்கவே மாட்டேங்கிறிங்க என்றார் மலர்கொடி.

 

அம்மா நீங்க ஏன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறிங்க காதல் என்ன அப்பா, அம்மாகிட்ட பர்மிசன் கேட்டுட்டா வரும் என்றவளை முறைத்தவர் என்கிட்ட வாய் கிழிய பேசுறியே இதை உன் அப்பாகிட்ட நீயே சொல்லு உன்னை ரொம்ப மெச்சிக்குவாரு என்ற மலர்கொடி கோபமாக சென்று விட்டார்.

 

என்ன இது அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க என்று யோசித்த அர்ச்சனா சரி என்னவா இருந்தாலும் சமாளிச்சுத் தான் ஆகவேண்டும் என்று நினைத்து அமைதியாக படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

 

 

என்ன வினோ என்னாச்சு என்ற பிரபுவிடம் ஒன்றும் இல்லை என்றாள் வினோதா. ஏன்டி உன் முகம் எனக்கு தெரியாதா ஏன் வாடிப் போயி இருக்கு காரணம் சொல்லு என்றவனிடம் ரோனிக்கு போன் பண்ணினேன் என் மேல கோபமா இருக்கிறாள் என்றாள் வினோதா.

 

கோபமா இல்லாமல் அக்கா நல்லா இருக்கியா, சாப்பிட்டியானா கேட்பாள். நாம பண்ணின தப்பால பாதிக்கப் பட்டிருக்கிறது அவள் தான் அது உனக்கு புரியுதா இல்லையா என்றான் பிரபு. நல்லாவே புரியுது பிரபு ஆனால் எனக்கு என்னம்மோ நம்ம வீட்டுக்கு போகனும்னு தோணுச்சு. அதான் ரோனிகிட்ட பேசி அவள் மூலமா அப்பா, அம்மாகிட்ட பேசலாம்னு என்ற வினோதாவிடம் புரிஞ்சு தான் பேசுறியா வீணா நமக்கு உதவி பண்ணின உதய் வாழ்க்கையில் சிக்கலை உண்டு பண்ணிராதே என்ற பிரபு வா வந்து சாப்பாடு எடுத்து வை என்றிட அமைதியாக எழுந்து சென்றாள் வினோதா.

 

 

என்ன சொல்லுற அர்ச்சு என்ற விவேக்கிடம் அம்மா கோபமா திட்டிட்டு போயிட்டாங்க. உங்க வீட்டில் பேசினிங்களா விவேக் என்றிட அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களுக்கு சம்மதம் தான் அப்பா தான் என்ன சொல்லப் போகிறாரோ என்றவன் நீ கவலைப் படாதே உங்க வீட்டில் சீக்கிரமே வந்து பேசுகிறேன்.

 

பெரியவங்க சம்மதத்துடன் தான் நம்ம கல்யாணம் நடக்கும் என்ற விவேக் சரிம்மா குட்நைட் தூங்கு நாளைக்கு பேசிக்கலாம் என்றிட சரியென்று அர்ச்சனாவும் போனை வைத்து விட்டு உறங்க ஆரம்பித்தாள்.

 

 

என்ன பிரகாஷ் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க என்ற சுசீலாவிடம் தூக்கம் வரவில்லை அம்மா என்றவன் அமைதியாகிட என்னப்பா பிரச்சனை என்றார் சுசீலா.

 

அம்மா அது  என்றவனிடம் என்னப்பா எதுவா இருந்தாலும் சொல்லு என்றிட இல்லைம்மா அண்ணியை பார்க்கும் பொழுது ஒரே குற்றவுணர்ச்சியா இருக்கு. அந்த வாட்ச்மேனை நான் தான் ரெக்கமன்ட் பண்ணினேன். அதனால தான் அப்பா சரியா விசாரிக்காமல் வேலைக்கு எடுத்தார்.

 

அண்ணி இந்த இரண்டு நாளா ராத்திரியில் பயந்து அலறுவதை பார்க்கும் பொழுது என்னம்மோ ரொம்ப வேதனையா இருக்கும்மா என்றான் பிரகாஷ். பிரகாஷ் ப்ளீஸ் நடந்ததை நாம மாற்ற முடியாது. வெரோனிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர உதய் இருக்கான் நீ கவலைப் படாதே என்ற சுசீலா அவனை தூங்கச் சொல்லி விட்டு சென்றார்.

 

என்ன பூங்கொடி ஊரில் இருந்து வந்ததில் இருந்து என்னம்மோ மாதிரி இருக்க அங்கே எதுவும் பிரச்சனையா நம்ம ரோனி நல்லா தானே இருக்கிறாள் என்ற வசந்தியிடம் அதெல்லாம் நல்லா தான் அக்கா இருக்கிறாள்.

 

அவளுக்கு எந்த குறையும் இல்லை நம்ம வீட்டில் எப்படி இருந்தாளோ அப்படித் தான் அங்கேயும் இருக்கிறாள் அக்கா. ஆனால் என்னம்மோ மனசு கிடந்து அடிச்சுட்டே இருக்கு ரோனிக்கு என்னம்மோ நடந்தது போல என்று வருந்திய பூங்கொடியிடம் அதெல்லாம் ஒன்றும் இருக்காது. நீ பயப்படாமல் இரு என்ற வசந்தி அமைதியானார்.

 

என்னக்கா என்ற பூங்கொடியிடம் இந்த பாதகத்தி ஓடிப் போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவளுக்கு தலை ஆடி கொண்டாடிருப்போம் என்ற வசந்தியின் கண்களில் கண்ணீர் துளிர்த்திட அக்கா நாம ஏன் வினோதாவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார் பூங்கொடி.

 

 

என்ன பேசுற பூங்கொடி ஓஓ அந்த ஓடுகாலி உன் அண்ணன் மகனை இழுத்துட்டு ஓடிட்டாள்னு அவளை சேர்த்துக் கொள்ள சொல்கிறாயா என்றிட என்னக்கா இப்படி பேசுறிங்க எங்க அண்ணன் வீட்டோட நான் பேசியே ஏழெட்டு வருசம் ஆச்சு என்றார் பூங்கொடி.

 

அதான்மா அவங்க கூட உன்னோட உறவை திரும்பவும் புதுப்பிக்கலாம்னு உனக்கு ஒரு எண்ணம் இருக்குதோன்னு தான் என் மனசுல படுது என்றார் வசந்தி.

 

 

அக்கா அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை வீணா என் மேல பழி போடாதிங்க என்ற பூங்கொடி கோபமாக சென்று விட்டார்.

 

என்னம்மா சித்தி கூட என்ன சண்டை என்று வந்த சரவணனிடம் உன் சித்தி கூட சண்டை போடுறது மட்டும் தானே எனக்கு வேலை போடா போ போயி வேலையைப் பாரு வந்துட்டான் பஞ்சாயத்து பண்ண என்று மகனை திட்டி அனுப்பினார் வசந்தி.

 

அத்தை என்ற தேன்மொழியிடம் சொல்லு தேனு என்றார் பூங்கொடி. இல்லை சாப்பிட வாங்க என்றவளிடம் பசி இல்லைம்மா நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன் என்றார் பூங்கொடி .

 

 

பூங்கொடி என்ன பிரச்சனை உனக்கும் , அண்ணிக்கும் என்று வந்த கதிரேசனிடம் ஒன்றும் இல்லை என்றார் பூங்கொடி. ஒன்றும் இல்லாமலா அண்ணி ஒரு பக்கம் முறைச்சுகிட்டும், நீ ஒரு பக்கம் முறைச்சுகிட்டும் இருக்கிங்க என்றார் கதிரேசன்.

 

அது எங்க இரண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை அதில் நீங்க ஏன் கேட்கிறிங்க உங்க வேலையை மட்டும் பாருங்க என்ற பூங்கொடி வாங்க சாப்பிட என்று கணவரை அழைத்திட இந்த பொம்பளைங்க மனசில் என்ன இருக்குனே புரிய மாட்டேங்குது என்று கூறி விட்டு சென்றார்.

 

உங்க அம்மா பேசுறது கொஞ்சம் கூட சரி கிடையாதுங்க என்ற தேன்மொழியிடம் உனக்கு எங்க அம்மாவை பிடிக்காது அதனால என்ன குறை சொல்லனுமோ சொல்லிக்கோ. சித்தியே அதை மறந்தாலும் நீ விட மாட்ட ஏன்னா அவங்க குறை சொன்னது உன் பெரியப்பா குடும்பத்தை ஆச்சே என்ற சக்திவேல் தூங்குடி ராத்திரி நேரத்தில் என்னத்தடா சொல்லி வம்பு இழுக்கலாம்னு அலைவாள் என்றான்.

 

அதானே நீ தான் உங்க அம்மா பிள்ளையாச்சே உன்கிட்ட சொன்னேன் பாரு என்றவள் தன் மகனைத் தட்டிக் கொடுத்திட சக்திவேல் அவளை முறைத்து விட்டு படுத்துக் கொண்டான்.

 

 

என்ன தான் பிரச்சனை  உனக்கும், பூங்கொடிக்கும் என்ற கணேசனிடம் எல்லாம் ஓடிப்போன உங்க மகளால தான் என்ற வசந்தி நடந்தவற்றைக் கூறினார். ஏன்டி ஓடிப் போன உன் மகளைப் பத்தி பேச்சை நீ தானே முதலில் ஆரம்பிச்சுருக்க அப்பறம் பூங்கொடியை திட்டினால் என்ன அர்த்தம் என்ற கணேசன் மனைவியை முறைத்தார்.

 

 

அவள் என் ஓரகத்தி அவள் கூட சண்டை போடுவேன். சமாதானம் ஆகுவேன் உங்களை யாரும் பஞ்சாயத்து பண்ண கூப்பிடவில்லை என்ற வசந்தி சென்று படுத்துக் கொள்ள தலையில் அடித்து விட்டு படுத்துக் கொண்டார் கணேசன்.

 

 

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!