விதியின் முடிச்சு…(20)

4.4
(11)

எங்கே மாமா போகிறோம் ஸ்கூலுக்கு போகாமல் என்றவளிடம் இன்னைக்கு அரை நாள் நீ லீவு என்றவன் அந்த மருத்துவமனைக்குள் காரை நிறுத்தினான்.

 

ஹாஸ்பிடல் எதற்கு என்றவளிடம் இங்கே இருக்கிற டாக்டர் என்னோட ப்ரண்ட் அவரை சும்மா பார்த்து பேசிட்டு போக வந்தோம் என்றவனை அவள் முறைத்திட ஒன்றும் இல்லை வெரோனிகா கொஞ்ச நாளா எனக்கு ஒரே ஸ்ட்ரெஸ் அதான் இங்கே கவுன்சிலிங் எடுக்க வந்திருக்கேன்.

 

அப்படியே நீயும் கொஞ்சம் கவுன்சிலிங் எடுத்துக்கோ என்னை புரிஞ்சுக்க முடியவில்லைனு அடிக்கடி புலம்புற தானே அதான் உன்னையும் அழைச்சுட்டு வந்தேன் என்றவனைப் பார்த்து சிரித்தவள் போங்க மாமா காமெடி பண்ணிட்டு என்றாள் வெரோனிகா.

 

எனக்கு கட்டு பிரிக்க தானே கூட்டிட்டு வந்திங்க இப்போ தான் இவங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸாம் சும்மா என்னை பொய் சொல்லி ஏமாத்தாதிங்க என்று சிரித்தாள் வெரோனிகா.

 

 

சரிங்க மேடம் உங்களை என்னால ஏமாத்த முடியுமா என்றவன் அவளை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றான். முதலில் அவளுக்கு கட்டு பிரித்து விட்டு பிறகு மருத்துவரின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

சொல்லுங்க வெரோனிகா எப்படி இருக்கிங்க என்ற மருத்துவர் சஞ்சனாவிடம் நல்லா இருக்கேன் டாக்டர் என்றாள் வெரோனிகா. கொஞ்சம் நாம ஒரு பத்து நிமிசம் தனியா பேசுவோமா என்ற மருத்துவர் சஞ்சனாவிடம் பேசலாமே என்றாள் வெரோனிகா.

 

அப்போ மிஸ்டர் உதயச்சந்திரன் கொஞ்சம் வெளியே இருக்கிங்களா என்ற மருத்துவரிடம் சரிங்க டாக்டர் என்றவன் கிளம்பினான்.

 

மாமாவை ஏன் வெளியே போகச் சொன்னிங்க டாக்டர். நாம தனியா பேசினாலும் அதை நான் மாமாகிட்ட சொல்லிருவேன் என்ற வெரோனிகாவிடம் உன் மாமாவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்றாள் சஞ்சனா.

 

பின்ன பிடிக்காமல் மாமா ரொம்ப நல்லவங்க என்றாள் வெரோனிகா. சரி என்ற மருத்துவர் அவளிடம் வேறு வேறு விசயங்களை பேச ஆரம்பித்தார்.

 

என்ன டாக்டர் என்ற உதயச்சந்திரனிடம் ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கிறாள். கிராமத்தில் வளர்ந்த பொண்ணு அதனால அவளால இதை ஈஷியா கடந்து போக முடியவில்லை. இன்னும் ஒரு இரண்டு சிட்டிங் கவுன்சிலிங் வந்தால் எல்லாம் சரியாகிரும் என்ற மருத்துவர் வெரோனிகாவை அழைத்துச் செல்ல சொன்னார்.

 

ஏன் மாமா எனக்கு பைத்தியம் பிடிச்சுருச்சுனு முடிவு பண்ணிட்டிங்களா என்ற வெரோனிகாவைப் பார்த்தவன் உன்னை அப்படி நான் நினைப்பேனா என்றான் உதயச்சந்திரன்.

 

அப்பறம் ஏன் மாமா சைக்கார்டிஸ்ட் என்றவளின் கன்னத்தில் கை வைத்தவன் மன நலம் பாதிக்கப் பட்டவங்க அதாவது உன் பாஷையில் சொல்லனும்னா பைத்தியமா இருக்கிறவங்க மட்டும் சைக்கார்டிஸ்ட் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்க மாட்டாங்க. மனநோய் அதாவது எதாச்சும் நம்ம வாழ்க்கையில் நம்முடைய ஆழ் மனசை பாதிக்கிற வகையில் ஒரு நிகழ்வு நடந்து அதில் இருந்து மீள கஸ்டப் படுறவங்களும் சைக்கார்டிஸ்ட் ட்ரீட்மென்ட் எடுத்துப்பாங்க.

 

தினமும் நைட் நீ தூக்கத்தில் அலறி எந்திரிக்கிற பாரேன். அதை என்னால பார்த்துட்டு சரியாகிரும்னு சும்மா விட முடியாது. நாளைக்கு உங்க வீட்டுக்கு போகிறோம். அங்கே தங்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்போ நீ இதே போல அலறி எழுந்தால் நீ மறக்கனும்னு நினைக்கிற அந்த கசப்பான சம்பவத்தை சொல்ல வேண்டி வரும்.

 

அது மட்டும் இல்லை ரோனி உன்னோட எதிர்காலத்திற்கு என்ன நல்லதோ அதை மட்டும் தான் நான் செய்வேன் என்றவன் வீட்டுக்கு போனதும் கிளம்பி ரெடியாகு ஸ்கூலுக்கு போகலாம் என்றான். சரிங்க மாமா என்று தலையாட்டினாள்.

 

என்ன ரோனி இப்போ தான் ஸ்கூலுக்கு வருகிறாய் என்ற நிகிலா ஏய் என்ன நெற்றியில் காயம் என்றாள். கீழே விழுந்துட்டேன் என்ற வெரோனிகா அமைதியாக அமர்ந்தாள்.

 

 

வகுப்புகள் தொடங்க ஆரம்பித்தது. இயற்பியல் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வகுப்பறைக்குள் வந்தார்.  வெரோனிகா வந்துட்டியா என்ற கிரிஷ்ணமூர்த்தி இந்த வகுப்பிலே நான் எதிர்பார்த்த மாதிரி பதில் எழுதின ஒரே ஸ்டூடண்ட் நம்ம வெரோனிகா தான். நீ பிஸிக்ஸ் எக்ஸாம்ல 70 மார்க் எடுத்துருக்க என்றதும் என்னது நீ 70 மார்க்கா என்று வாயைப் பிளந்தாள் ஊர்மிளா.

 

 

குட் வெரோனிகா புத்தகத்தை படிச்சு அப்படியே வாந்தி எடுக்காமல் நான் நடத்தினதை  அன்டர்ஸ்டான்டிங் பண்ணி அதை வச்சு எக்ஸாம் எழுதிருக்க கீப் இட் அப் என்று பாராட்டி விட்டு சென்றார்.

 

ஏய் ரோனி செம்ம என்ற நிகிலாவிடம் தாங்க்ஸ் என்றாள் வெரோனிகா. என்ன மேடம் எல்லாம் எங்க அண்ணாவோட டியூசன் எபக்ட் தானே ஆனால் பாரேன் மூர்த்தி சார் அவர் நடத்தினதை வச்சு நீ எழுதிருக்கனு பெருமையா நினைக்கிறாரு என்ற ஊர்மிளாவிடம் கம்பெனி சீக்ரெட்டை சத்தமா சொல்லாதடி என்றாள் வெரோனிகா.

 

என்ன அர்ஜுன் அப்படி பார்க்கிற என்ற வெரோனிகாவிடம் ஆர் யூ ஆல்ரைட் என்றான் அர்ஜுன். ஐயம் ஆல்ரைட் என்றவள் சரி ப்ரண்ட்ஸ் வராங்க என்றிட அவனும் மௌனமாகினான்.

 

அன்று பள்ளி முடிந்த பிறகு அவள் பைக் ஸ்டாண்டில் நின்றிட வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்று கேட்டபடி வந்தான் உதயச்சந்திரன். நான் பிரகாஷ் மாமா கூட வரேன் நீங்க வேலை இருந்தால் முன்னே போங்க மாமா என்றவளை கூர்மையாக பார்த்தான்.

 

 

நிஜமாவே நான் போகட்டுமா மேடம் என்றவனை சோகமாக அவள் பார்த்திட வா இனிமேல் தினமும் நானே கூட்டிட்டு போறேன். பிரகாஷ் கூட உன்னை யாரும் இனி சேர்த்து வச்சு தப்பா பேச மாட்டாங்க என்றதும் அவள் சந்தோசமாக அவனது பைக்கில் அமர்ந்தாள்.

 

தாங்க்ஸ் மாமா என்றவளிடம் நான் உன்னோட ஹஸ்பண்ட் எனக்கு எதற்கு தாங்க்ஸ் சொல்லுற என்று அவன் கூறியதும் அவளுக்கு ஏதோ பறப்பது போல் இருந்தது.

 

 

சரி சரி வேகமா போயி கிளம்பு என்றவனிடம் எங்கே மாமா என்றாள் வெரோனிகா. உங்க வீட்டுக்குத் தான் என்றவன் என்ன மறந்துருச்சா உங்க அம்மா, அப்பா வந்து நம்மளை தலை ஆடி கொண்டாட வரச் சொன்னாங்களே என்றதும் அட ஆமாம் என்றவள் வேக வேகமாக கிளம்பினாள்.

 

மாமா கொஞ்சம் வெளியில் போங்க என்றவளிடம் ஏன் என்ன பண்ணப் போற என்றான். புடவை கட்டனும் என்றிட சிரித்தவன் சுடிதார் தானா போட்டுக்கோ. நீ ஒன்றும் பெரிய பொம்பளை இல்லை சின்னப் பொண்ணு சொல்லப் போனால் பாப்பா தான் . அதற்கு தகுந்தது போலவே டிரஸ் பண்ணு என்றான் உதயச்சந்திரன்.

 

சரிங்க மாமா என்றவள் குளியலறைக்கு ஓடினாள். குளித்து உடை மாற்றி வந்தவளிடம் தலை நனையவில்லை தானே என்றான் உதயச்சந்திரன். இல்லை மாமா என்றவள் தலை சீவி, பொட்டு வைத்து, பூ வைத்து கிளம்பிட அவனும் தயாராகினான்.

 

என்ன ரோனி கிளம்பிட்ட போல என்ற மலர்கொடியிடம் என்ன தான் ஒன்றுக்கு இரண்டு மாமியார் அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாலும் இந்த பொண்ணுங்களுக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போறதுனா ஒரு தனி குஷி தான் போல என்றார் சுசீலா.

 

அத்தை என்று சிணுங்கியவளிடம் சும்மா சொன்னேன்டி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க என்ற சுசீலா உதய் அவளை பத்தரமா கூட்டிட்டு போப்பா என்றிட அவனும் சரிங்க சித்தி என்றான்.

 

கல்யாணிதேவியிடமும் கூறி விட்டு இருவரும் ஊருக்கு கிளம்பினர். என்ன இளமாறா யோசனை என்ற கல்யாணியிடம் இல்லைம்மா இரண்டு பேரும் பத்திரமா போயிட்டு வரணும்னு தான் கடவுளை வேண்டிக்கிறேன் என்றவர் தன் அண்ணனுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் சம்மந்தமாக ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்.

 

 

என்ன மேடம் ரொம்ப ஹாப்பி போல என்றவனிடம் அச்சோ மாமா நான் ஒரு மக்கு. மறந்தே போயிட்டேன் உங்க கிட்ட சொல்ல என்றவள் இன்னைக்கு பிசிக்ஸ் டெஸ்ட் பேப்பர் கொடுத்தாங்க நான் 70 மார்க் மாமா எல்லாம் உங்களால தான் என்றவள் ரொம்ப தாங்க்ஸ் மாமா என்று அவனது கையைப் பிடித்து ஆட்ட ஆரம்பிக்க ரோனிம்மா நாம காரில் போயிட்டு இருக்கோம்.

 

நீ பாட்டுக்கு கையைப் பிடிச்சு தொங்கினால் நான் எப்படி ஸ்டியரிங்கைப் பிடிப்பேன் என்றதும் ஸாரி மாமா என்றவள் அவனை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

ரோனி உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும் என்றவனிடம் என்ன மாமா என்றாள் வெரோனிகா. நீ நம்ம வீட்டில் நிஜமாகவே சந்தோசமா இருக்கியா என்றவனிடம் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா.

 

எங்க வீட்டில் பெரியம்மா எப்போ பாரு என்னை எதாச்சும் திட்டிட்டே இருப்பாங்க. ஆனால் இங்கே அத்தை, சின்ன அத்தை இரண்டு பேருமே என்னை ரொம்ப பாசமா  பார்த்துக்கிறாங்க. அது மட்டுமா அர்ச்சனா அண்ணி , பிரகாஷ் மாமா, ஊர்மிளா மூன்று பேரும் என்கிட்ட ரொம்ப பாசமா நடந்துக்கிறாங்க. எங்க வீட்டிலும் சக்தி அண்ணா, சரவணா அண்ணா , தேனு அண்ணி இவங்க மூன்று பேரும் எப்படி என்னை பார்த்துப்பாங்களோ அப்படி பார்த்துக்கிறாங்க. அப்பறம் பெரியமாமா, சின்ன மாமா, ஆச்சி எல்லோரும் சொல்லவே வேண்டாம். என்னையை யாரும் நம்ம வீட்டில் மருமகளா நினைக்கவே இல்லை. அர்ச்சனா அண்ணி, ஊர்மிளா எப்படியோ நானும் அப்படித் தான்கிற மாதிரி நடத்துறாங்க என்றாள் வெரோனிகா.

 

அப்பறம் என்னுடைய சந்துரு மாமா. நீங்க தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச மாமா. உங்க கூட இருக்கும் பொழுது நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். உங்க மேல ஆரம்பத்தில் ரொம்ப பயம் இருந்துச்சு. ஆனால் இப்போ எல்லாம் பயம் இல்லை நிறையா பாசம் இருக்கு என்றவள் சிரித்திட அவனும் சிரித்து விட்டு வண்டியை ஓட்டினான்.

 

மாமா என்றவளிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். என்னை உங்களுக்கு பிடிக்குமா என்றவளிடம் பிடிக்கும் நீ தான் நல்ல மார்க் வாங்கிருக்கியே. எனக்கு பிடிச்ச மாதிரி தானே நீ மாறிட்டு இருக்க என்றவன் சாலையைப் பார்த்து வண்டி ஓட்டிட மக்கு , மரமண்டை மாமா.

 

என்னை பிடிச்சுருக்கானு கேட்டால் படிக்கிற அதனால பிடிக்குதாம். என்று மனதிற்குள் திட்டியவள் இவரை என்று பற்களைக் கடித்தாள்.

 

என்ன சத்தம் என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றவள் சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

 

அவனோ அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாமல் பதில் சொல்லவில்லை. அவனுக்கு அவளை பிடிக்கும் தான் ஆனால் படிக்கும் காலத்தில் அவள் மனதில் தேவை இல்லாத ஆசைகளை ஏற்படுத்தி அவளது எதிர்காலத்தை கெடுத்து விடக்கூடாது என்று நினைக்கிறான்.

 

 

அவளை தன் மனைவி என்று அவன் மனம் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு அவனிடம் ஆயிரம் காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம் அவளுடைய வயது. அவளுக்கு இப்போதைக்கு தேவை நல்ல படிப்பு. அவள் பள்ளிப் படிப்பாவது முதலில் முடிக்க வேண்டும் என்று நினைத்தான்.

 

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!