அம்மா ஆஆ என்று கீழே விழுந்த வெரோனிகா எழ நினைக்க அவளால் எழ முடியவில்லை. அடி சற்று பலமாக இருந்த்தாலும், விழுந்த அதிர்ச்சியாலும் அவளால் எழ முடியவில்லை.
அர்ச்சனா சுதாரித்து எழுந்தவள் ரோனி என்று அவளைத் தூக்கிட ஏன் அண்ணி இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுனிங்க என்றவள் மயங்கி சரிய ஏய் ரோனி என்று பதறினாள் அர்ச்சனா.
சொல்லுங்க விவேக் என்ற உதயச்சந்திரனிடம் எனக்கு அர்ச்சனாவை பிடிச்சுருக்கு உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக் கொடுங்க ராணி மாதிரி பார்த்துக்குவேன் என்றவனைப் பார்த்து சிரித்த உதய் உங்களை பற்றி எல்லாமே விசாரிச்சுட்டேன். சீக்கிரமே உங்க வீட்டாளுங்க கூட வந்து பொண்ணு கேளுங்க. அப்பா, சித்தப்பாகிட்டையும் பேசி நல்ல முடிவா சொல்கிறேன் என்று இருவரும் கை குலுக்கி பிரியும் நேரம் உதயச்சந்திரனின் மொபைல் போன் ஒலித்திட அர்ச்சனாவின் எண் தெரிய அதை அட்டன் செய்தான்.
என்ன சொல்லுற அர்ச்சனா என்றவனிடம் அண்ணா ரோனிக்கு அடி கொஞ்சம் பலமா இருக்கு சீக்கிரம் வாங்க என்றிட இதோ வரேன் என்று அவள் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தான் உதயச்சந்திரன்.
என்ன ஆச்சு உனக்கும் அடி பட்டிருக்கு என்ற உதயச்சந்திரனிடம் அண்ணா தப்பு என் மேல தான் அண்ணா நீங்க விவேக் கிட்ட என்ன பதில் சொல்லப் போறிங்களோன்னு பதற்றத்திலே பைக் ஓட்டினேன். அதான் ஆக்சிடென்ட் ரோனி பாவம் அண்ணா அவளுக்கு தலையில் அடிபட்டிருக்கும் போல ஒரே இரத்தம் என்று அழுதவளிடம் சரி விடு அவள் எப்படி இருக்கிறாள் என்று ஓடினான் உதயச்சந்திரன்.
டாக்டர் வெரோனிகா என்றவனிடம் நத்திங் டூ வொரி மிஸ்டர் உதய். தலையில் கொஞ்சம் அடி பட்டிருக்கு , ரைட் ஹேண்ட் கொஞ்சம் ப்ராக்சர் ஆகிருக்கு, தலையில் ஸ்கேன் எடுக்க சொல்லிருக்கேன்.ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் வந்த பிறகு பார்க்கலாம். இப்போ போயி பாருங்க என்று மருத்துவர் கூறி விட்டு சென்றார்.
ரோனி என்றவனிடம் மாமா என்றவள் எழ முயல படுத்துக்கோ என்று அவளது கையைப் பிடித்துக் கொண்டான். எனக்கு ஒன்றும் இல்லை மாமா என்றவள் எழ முயல ஏய் எழும்பாதே படுத்துக்கோ என்றவன் ரொம்ப வலிக்குதா ரோனி என்றான்.
இல்லை மாமா என்றவள் அண்ணிக்கு என்றிட அவளுக்கு லேசான அடி தான் என்றவனின் கையை பிடித்துக் கொண்டவள் ஸ்கூல் போக முடியவில்லை மாமா அடுத்த வாரம் ஹாப்இயர்லி எக்ஸாம் என்றாள். அது பரவாயில்லை உனக்கு இப்போ கையில் லேசா ப்ராக்சர் அதான் எக்ஸாம் எப்படி எழுதுவன்னு நான் யோசிக்கிறேன் என்றான் உதய்.
அது வலது கையில் தானே மாமா அடி பட்டிருக்கு நான் இடது கையில் தானே எழுதுவேன் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன் சரி நீ ரெஸ்ட் எடு என்றான்.
என்னடி இது பார்த்து வண்டி ஓட்ட மாட்டியா என்ற மலர்கொடி மகளைத் திட்டிட விடுங்க அக்கா அதான் ரோனிக்கு ஒன்றும் இல்லையே என்ற சுசீலா மலர்கொடியை சமாதானம் செய்தார். ஒன்றும் இல்லையா அவளுக்கு கை உடைஞ்சுருக்கு சுசி என்ற மலர்கொடி அவங்க அம்மா, அப்பா வந்து என் பொண்ணுக்கு இப்படி ஆகிருச்சேன்னு சண்டை போட்டால் என்ன பண்ணுறது என்ற மலர்கொடியிடம் அண்ணி தேவை இல்லாமல் யோசிக்காதிங்க என்ற இளமாறன் பிரகாஷ் நீ அம்மா, பெரியம்மாவை வீட்டுக்கு அழைச்சுட்டு போ. இன்னைக்கு ஒருநாள் தானே , நாளைக்கு வெரோனிகாவை டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்க நானும், அப்பத்தாவும் இங்கே இருக்கிறோம் என்றார்.
நீங்களும், அப்பத்தாவும் கூட கிளம்புங்க சித்தப்பா நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன் என்ற உதயச்சந்திரன் அவர்களை அனுப்பி வைத்தான்.
உறக்கம் கலைந்து எழுந்தவள் மாமா எப்போ வீட்டுக்கு போகிறோம் என்றிட நாளைக்கு காலையில் போகலாம் என்றான். அத்தை, மாமா என்றிட அவங்க இப்போ தான் கிளம்பினாங்க என்றான். நான் அவங்களை பார்க்கவே இல்லை, என்னை எழுப்பிருக்கலாம்ல மாமா என்றவளிடம் வெரோனிகா உனக்கு வலி தெரியக்கூடாதுனு தூக்கம் வரத் தான் மருந்து செலைன் மூலம் ஏறிட்டு இருக்கு.
உன்னை எழுப்பலாமா என்றவன் ரெஸ்ட் எடு என்றிட நீங்க சாப்பிட்டிங்களா மாமா என்றாள். இல்லை உனக்கு எதுவும் வாங்கிட்டு வரட்டுமா என்றான். ஜூஸ் போதும் மாமா என்றவளிடம் சரி நான் வாங்கிட்டு வரேன் என்று கிளம்பினான் உதயச்சந்திரன்.
என்னாச்சு அர்ச்சு உனக்கு ஒன்றும் இல்லையே என்ற விவேக்கிடம் எனக்கு ஒன்றும் இல்லை விவேக் லேசான சிராய்ப்பு தான். பாவம் ரோனி அவளுக்குத் தான் தலையில் அடி, கை வேற உடைஞ்சுருச்சு என்றிட சரி கவலைப் படாதே என்றான் விவேக்.
என்னால தான் அவள் பாவம் சின்னப் பொண்ணு. எனக்கு நீயும், அண்ணாவும் என்ன பேசிட்டு இருக்கிங்கனு தெரிஞ்சுக்கனும் அந்த ஆர்வத்தில் வேக வேகமா அவளை ஸ்கூலில் விடனும்னு தான் பைக்கை அவ்வளவு வேகமா ஓட்டினேன். அவள் அப்போ கூட சொன்னாள் அண்ணி மெதுவா போங்கனு நான் தான் கேட்கவே இல்லை என்று அழுதாள் அர்ச்சனா.
அர்ச்சு அழாதேம்மா அதெல்லாம் வெரோனிகா எதையும் மனசுல வச்சுக்க மாட்டாங்க என்றான் விவேக். இல்லை விவேக் என்றவளை மலர்கொடி அழைத்திட அம்மா கூப்பிடுறாங்க விவேக் நான் அப்பறமா பேசுறேன் என்று போனை வைத்தாள் அர்ச்சனா.
சொல்லுங்கம்மா என்று வந்தவளிடம் சாப்பிடாமல் என்னடி பண்ணிட்டு இருக்க என்றவர் உணவினை பரிமாறினார். அத்தை நம்ம உதய், ரோனி இரண்டு பேருடைய ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டினால் என்ன கல்யாணம் ஆகி ஆறு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்ள ரோனிக்கு ரெண்டு கண்டம் வந்திருச்சு. என் மருமகளுக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக் கொள்ளனும்னு தான் நினைக்கிறேன் ஆனால் என்ற மலர்கொடியிடம் சரி மலர் நாளைக்கு நாம போயி பார்த்துவிட்டு வரலாம் என்றார் கல்யாணிதேவி.
என்னங்க மாப்பிள்ளை போன் பண்ணினாரு நம்ம ரோனிக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சுனு சொன்னாரு என்றிட பதறாதே பூங்கொடி மாப்பிள்ளை என்கிட்டையும் தான் பேசினாரு நம்ம ரோனி நல்லா இருக்கிறாளாம்.
கை தான் பிள்ளைக்கு உடைஞ்சுருச்சாம். மத்தபடி ஒன்றும் பெரிய அடி இல்லை நாம நாளைக்கு காலையில் கிளம்பலாம் என்ற கதிரேசன் பாப்பா கிட்ட இப்போ தான் பேசினேன் பயப்படாதே என்றார்.
என்ன தம்பி பூங்கொடி என்னவோ சொல்லுது என்ற கணேசனிடம் ஆமாம் அண்ணா நம்ம ரோனிக்கு சின்ன ஆக்சிடென்ட் ஆச்சாம். பிள்ளைகிட்ட பேசிட்டேன். நாளைக்கு நானும், பூங்கொடியும் போயி பார்த்துட்டு வந்துடுறோம் என்றார் கதிரேசன். நாங்களும் வரோம் கதிரேசா பிள்ளையை பார்க்கனும் என்றவர் வசந்தி போனவாரம் கிடா வெட்டினோமே அந்த கால் எல்லாம் வாட்டி வச்சியே அதை எடுத்து வை. பிள்ளைக்கு கை உடைஞ்சுருக்காம் சூப்பு வச்சு கொடுக்கனும் என்ற கணேசன்.
ஒரு ஆட்டுக்குட்டியை பிடிச்சுட்டு போவோமா தம்பி அந்த ஊரில் வெள்ளாட்டுக் கறிக்கு பதிலா மாத்தி செம்மறி ஆட்டுக்கறியை போட்டு ஏமாத்திருவானுங்க என்றிட அதெல்லாம் வேண்டாம் அண்ணா அதான் அண்ணி கால் வாட்டி வச்சுருக்காங்களே அது போதும் என்றார் கதிரேசன்.
என்ன ரோனி தூங்கவில்லையா என்ற உதயச்சந்திரனிடம் இல்லை மாமா தூக்கம் வரவில்லை என்றவள் எப்போ மாமா வீட்டுக்கு போவோம் என்றாள்.
கையை இப்படியே அசைக்காமல் வச்சுருக்கனும். வீட்டில் நீ அசைக்காமல் வச்சுருப்பியா ஒரு ஒருவாரம் இங்கே இருக்கலாமா என்றிட ஐயோ மாமா என்னால முடியாது என்றாள் வெரோனிகா.
அவன் சிரித்து விட்டு விளையாட்டுக்கு சொன்னேன் என்றிட மாமா என்றாள் வெரோனிகா. என்ன என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றவள் படுத்துக் கொள்ள அவனும் அமர்ந்தபடி நாற்காலியில் உறங்க ஆரம்பித்தான்.
மாமா நீங்க எப்படி உட்கார்ந்தபடியே தூங்குவிங்க கழுத்து வழிக்குமே என்றவளிடம் அதனால் என்னம்மா நீ தூங்கு என்றவன் அவளை உறங்கச் சொல்லிட அவனை ரசித்தபடியே அவள் உறங்க ஆரம்பித்தாள்.
என்ன ஊர்மி ஏன் இன்னைக்கு ரோனி ஸ்கூலுக்கு வரவில்லை என்ற நிகிலாவிடம் அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சுடி. இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறாள் கை உடைஞ்சுருச்சு என்ற ஊர்மிளாவிடம் நாளைக்கு வீட்டுக்கு வந்திருவாளா ஊர்மி என்றாள் நிகிலா.
தெரியலை நிகி என்ற ஊர்மிளா சரிடி போனை வைக்கிறேன் என்றாள். என்ன ஊர்மி யாரு போன்ல என்ற சுசீலாவிடம் நிகிலாம்மா என்றவள் சென்று படுத்துக் கொண்டாள்.
என்னக்கா என்ன யோசனை என்ற சுசீலாவிடம் பாவம் சுசி ரோனி அவள் நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு பிரச்சனையா வருது. அந்தப் பொண்ணு சின்னப் பொண்ணு கடவுள் ஏன் அவளை கஷ்டப்படுத்துகிறாரோன்னு கவலையா இருக்கு என்றிட அக்கா எதையும் யோசிக்காதிங்க அதான் அத்தை நாளைக்கு ஜோசியரை வரச் சொல்லி இருக்காங்களே அப்பறம் என்ன எதாச்சும் குறை இருந்தால் கூட பரிகாரம் பண்ணி சரி செய்யலாம் என்று ஆறுதல் கூறினார் சுசீலா.
ஆமாம் சுசி எதாச்சும் குற்றம், குறை இருந்தாலும் பரிகாரம் பண்ணி சரி செய்யனும். நம்ம உதய், ரோனி இரண்டு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டவர் சரிம்மா நேரம் ஆச்சு போ போயி தூங்கு என்ற மலர்கொடி தன்னறைக்குச் சென்றார்.
பிரபு என்ன சொல்லுறிங்க ரோனிக்கு ஆக்சிடென்ட்டா அப்போ நாம போயி பார்க்க வேண்டாமா என்ற வினோதாவிடம் இல்லை வினோ சொல்லுறதை புரிஞ்சுக்கோ. எப்படியும் அத்தை, மாமாகிட்ட ஆக்சிடென்ட் ஆன விசயத்தை சொல்லியிருப்பாங்க அவங்க வரும் பொழுது நாம இரண்டு பேரும் அங்கே போனால் வேண்டாம் வினோ நமக்கு உதவி பண்ணின பாவத்திற்கு உதய், ரோனி வாழ்க்கையை கெடுத்திடக் கூடாது புரிஞ்சுக்கோ என்றான் பிரபு.
புரியுது பிரபு ஆனால் ஆக்சிடென்ட் ஆகி கிடக்கிறவள் என் தங்கச்சி அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது என்ற வினோதா பிடிவாதமாக இருந்தாள்.
எனக்கு புரியாமல் இல்லை நேற்று தான் செல்வத்துக்கிட்ட பேசினேன். உதய், ரோனி ஆடிக்கு போனப்ப உதய் நம்மளைப் பற்றி உன் அண்ணன் கிட்ட பேசிருக்காரு. அவன் வெட்டுவேன், குத்துவேன்னு தான் பேசிருக்கான். அதனால தான் சொல்கிறேன் அமைதியா இரு. உனக்கு இது நிறை மாதம் வேற என்ற பிரபு எனக்கு நீயும் , நம்ம குழந்தையும் வேண்டும் வினோ என்றிட சரி பிரபு என்றவள் அமைதியாகினாள்.
ஆனாலும் எப்படியாவது தங்கையை பார்த்திட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இவள் அவளைப் பார்க்கச் செல்லும் நேரம் இவளது அப்பா, அம்மா வந்திருந்தால்🤔🤔🤔🤔
…..தொடரும்…