விதியின் முடிச்சு..(29)

4.7
(7)

அலறி அடித்து எழுந்தாள் வெரோனிகா. என்னாச்சு ரோனி என்ற அர்ச்சனாவிடம் அண்ணி மாமா எங்கே என்றவளிடம் அண்ணா, ஸ்கூலுக்கு போயிருக்காராம் ரோனி. ஏதோ இம்பார்டன்ட் வொர்க் இருக்காம். மதியம் வரேன்னு சொன்னாரு என்றாள் அர்ச்சனா.

 

என் அப்பா, அம்மா என்றவளிடம் அவங்க கிளம்பிட்டாங்களாம் ஈவ்னிங் இங்கே வந்துருவாங்க நீ ரெஸ்ட் எடு என்ற அர்ச்சனா ஏன் பதறி எழுந்த என்றாள். கெட்ட கனவு அண்ணி என்றவள் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்.

 

என்ன கனவு இது அப்பா , அம்மா வந்தாங்க. பாட்டி, அத்தை, மாமா ஜோசியம் பார்க்க போனாங்க. வினோதா வந்தாள். சண்டை வந்துச்சு. மாமா பெரியப்பாவை அடிச்சாரு கடவுளே நினைக்கவே பயமா இருக்கே என்று புலம்பியவள்  அண்ணி என்னோட போன் கொடுங்களேன் என்றாள்.

 

இந்தா ரோனி என்ற அர்ச்சனா அமைதியாக மேகசின் படித்துக் கொண்டிருந்தாள். வெரோனிகா தன் கணவனுக்கு போன் செய்தாள்.

 

மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்தவன் சொல்லு ரோனி என்ன போன் பண்ணிருக்க நீ நல்லா இருக்க தானே. ஒன்றும் பிரச்சனை இல்லையே என்றவனிடம் இல்லை மாமா நல்லா இருக்கேன் நீங்க எங்கே இருக்கிங்க என்றாள்.

 

ஸ்கூல்ல தான் இருக்கேன் ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு வரட்டுமா என்றவனிடம் சரிங்க மாமா கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்றாள் வெரோனிகா.

 

வினோதாவின் எண்ணிற்கு போன் செய்தாள் வெரோனிகா. அதை அட்டன் செய்தான் பிரபு. சொல்லு ரோனி என்றவனிடம் அத்தான் அக்கா என்றிட அவளுக்கு லேபர் பெயின் வந்திருச்சு நீ அட்மிட் ஆகியிருக்கிற ஹாஸ்பிடலில் தான் அட்மிட் பண்ணியிருக்கேன் என்றிட அப்படியா சரிங்க அத்தான் என்றவள் போனை வைத்து விட்டு அண்ணி என்றிட சொல்லு ரோனி என்றாள் அர்ச்சனா.

 

கொஞ்சம் நாம லேபர் வார்டு வரைக்கும் போயிட்டு வரலாமா என்றவளிடம் அங்கே எதற்கு என்றாள் அர்ச்சனா. என் அக்கா வினோதாவுக்கு லேபர் பெயின் வந்திருக்காம். அத்தான் அவளை இங்கே தான் அட்மிட் பண்ணி இருக்கிறாராம் என்றிட ரோனி நீ பேசன்ட் இங்கே இருந்து அங்கே எல்லாம் போக முடியாது. அண்ணா வரட்டும் நானும், அண்ணாவும் போயி பர்த்துட்டு வரோம் என்ற அர்ச்சனா அவளை ஓய்வெடுக்க சொன்னாள்.

 

கடவுளே அம்மா, அப்பா வேற வரேன்னு சொல்லி இருக்காங்க. வினோதாவுக்கு லேபர் பெயின் வந்திருக்கு என்ன நடக்கப் போகுதோ என்று வருந்தியவள் என்ன நடந்தாலும் கனவில் வந்த ஜோசியர் சொன்னது போல நானும், என் மாமாவும் பிரியாமல் ஒன்றாக இருந்தால் சந்தோசம் என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள்.

 

என்ன சொல்லுறிங்க ஜோசியரே என்ற கல்யாணிதேவியிடம் இரண்டு ஜாதகமும் யோக ஜாதகம். எந்த குறையும் இல்லை. என்ன தாலி கட்டின நேரம் தான் சரியில்லை. தாலி கட்டுவதற்குள் முகூர்த்தம் தவறிருக்கு அதை நீங்க கவனிக்கவில்லை என்றார். ஆமாம் அன்னைக்கு இருந்த பிரச்சனையில் கல்யாணம் நடந்தால் போதும்னு மட்டும் தான் யோசிச்சோம் என்ற கல்யாணிதேவியிடம் அதனால ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லைம்மா. இரண்டு பேரையும் கடலுக்குள்ள நவகிரகம் சன்னிதானம் இருக்கிற தேவிபட்டிணம் கடற்கரைக்கு அழைச்சுட்டுப் போயி நான் சொல்லுற பரிகாரங்களை பண்ணுங்க எல்லாம் சரியாகிரும் இரண்டு பேரும் சேமமா இருப்பாங்க என்றார் ஜோசியர்.

 

 

ரொம்ப சந்தோசம் ஜோசியரே கட்டாயம் பரிகாரம் பண்ணிடுறோம். இப்போ மருமகளுக்கு உடம்பு சரியில்லை, படிக்கிறாள் பரீட்சை வேற வருது இந்த பரிகாரத்தை உடனே செய்ய முடியாதே என்று தயங்கிய மலர்கொடியிடம் ஆறு மாத்த்திற்குள்ளே செய்யுங்க எல்லாம் சரியாகிவிடும் என்றார் ஜோசியர். அவருக்கு தட்சனை கொடுத்து விட்டு சந்தோசமாக விடைபெற்றனர் கல்யாணிதேவி, நெடுமாறன், மலர்கொடி மூவரும்.

 

நல்லவேளை அத்தை நம்ம பிள்ளைகளுக்கு பெரியதா எந்த தோஷமோ, குறையோ இல்லை என்ற மலர்கொடியிடம் நம்ம உதய், ரோனி இரண்டு பேருமோ யாருக்குமே எந்த கெடுதலும் நினைக்காத தங்கங்கள். அவங்களுக்கு ஒரு குறையும் வராது மலர் நீ சந்தோசமா இரு என்றார் கல்யாணிதேவி.

 

சம்பந்தி வீட்டில் இருந்து இன்னைக்கு வராங்களாம் அம்மா ரோனியை பார்க்கிறதுக்கு என்ற நெடுமாறனிடம் வரட்டும்பா அவங்க பொண்ணை பார்க்க அவங்க வந்து தானே ஆகனும் அவங்களுக்கு வசதியா தங்க ஏற்பாடு பண்ணிரு மலர் என்ற கல்யாணிதேவியிடம் அதெல்லாம் சுசீலா எல்லா ஏற்பாடும் ஏற்கனவே செய்து விட்டாள் அத்தை என்றார் மலர்கொடி.

 

 

வந்த இடத்தில் அர்ச்சனா ஜாதகத்தையும் காட்டினது ரொம்ப நல்லதா போச்சும்மா. அவளுக்கும் கல்யாணயோகம் கூடி வந்துருச்சுன்னு ஜோசியர் சொல்லிட்டாரு. பிரகாஷ்க்கு பொண்ணு தேடுறப்பவே அர்ச்சனாவுக்கும் மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுரனும் என்றார் நெடுமாறன்.

 

என்னங்க நான் ஒரு விசயம் உங்க இரண்டு பேருகிட்டையும் சொல்லனும் என்ற மலர்கொடியிடம் சொல்லு மலர் என்றார் நெடுமாறன். வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்களேன் ஏதாச்சும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் என்றார் மலர்கொடி. சரிம்மா பக்கத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு அங்கே சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்ற நெடுமாறன் காரை அந்த ரெஸ்டாரண்ட் வாசலில் நிறுத்தினார்.

 

அம்மா உங்களுக்கு என்று கேட்டு விட்டு மூவருக்குமான உணவினை ஆர்டர் செய்த நெடுமாறன் சொல்லு மலர் என்றார்.

 

நம்ம அர்ச்சனா கூட படிச்ச ஒரு பையனை விரும்புறேன்னு சொல்லிட்டு இருக்கிறாள். நான் இதற்கு உங்க அப்பா சம்மதிக்க மாட்டாருன்னு சொல்லி அடிச்சுட்டேன். இப்போ அவள் கல்யாணம் பற்றி பேசும்பொழுது இந்த விசயத்தை உங்க காதில் போட்டு வைக்கலாம்னு தான். பையன் யாரு என்னன்னு கேட்டு விசாரிக்கலாமே என்ற மலர்கொடியிடம் நெடுமாறன் ஏதோ சொல்ல வர அதற்குள் கல்யாணிதேவி இதை சொல்ல ஏன் இவ்வளவு தயங்குற மலர் வாழப் போறவள் அவள். அவளோட முடிவு தான் முக்கியம். அவளுக்கு விருப்பமில்லாத வாழ்க்கையை அவள் தலையில் கட்ட முடியாதே. பையனைப் பற்றி விபரம் கேட்டு சொல்லு நெடுமாறனும், இளமாறனும் விசாரிச்சு தகவல் சொல்லட்டும்.

 

நல்லகுடும்பம், நல்ல பையனா இருந்தால்  மேற்கொண்டு பேசி கல்யாணம் பண்ணி வச்சுருவோம். நம்ம பொண்ணோட சந்தோசம் தான் நமக்கு முக்கியம் என்ற கல்யாணிதேவி மகனைப் பார்க்க உங்க விருப்பம் அம்மா. உங்களுக்கு தெரியாதா எது சரி, எது தப்புன்னு என்றார் தெடுமாறன்.

 

மலர்கொடி மனசு திருப்தியாக சாப்பிட ஆரம்பித்தார். மூவரும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

 

என்ன சார் ஏதோ டென்சனா இருக்கிங்க போல என்ற வினித்ராவிடம் அப்படிலாம் இல்லை மேடம் என்ன விசயம் என்னை பார்க்க வந்துருக்கிங்க என்றான் உதயச்சந்திரன். இல்லை சார் நீங்க இரண்டு நாளா ஸ்கூலுக்கு வரவில்லையே என்ற வினித்ராவிடம் உங்களுக்குத் தெரியும் தானே வெரோனிகாவுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு அப்பறம் எப்படி நான் ஸ்கூலுக்கு வர முடியும். இப்ப வந்ததே ஒரு முக்கியமான வேலைக்காக தான் என்றவன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் வினித்ரா.

 

ரொம்ப அர்ஜென்ட்டான விசயமா என்ற உதயச்சந்திரனிடம் இல்லை ரொம்ப அவசரம் இல்லை அவசியமான விசயம் நீங்க ப்ரீயா இருக்கும் பொழுது சொல்லுங்க நாம மீட் பண்ணலாம் என்றாள் வினித்ரா. ஒரு இரண்டு, மூன்று நாட்கள் கொஞ்சம் பிஸி ரோனியை பார்த்துக்கனும், அவளோட பேரண்ட்ஸ் வேற வராங்க அவங்க கூட இருந்தாகனும்  சன்டே ப்ரீயாகிட்டேன்னா மீட் பண்ணலாம் மேடம் என்றான். சரிங்க சார் என்ற வினித்ரா அவனிடம் விடைபெற்று சென்றாள்.

 

 

அவனது மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்தவன் சொல்லுங்க மாமா என்றிட மாப்பிள்ளை எங்கே இருக்கிங்க நாங்க வந்துட்டோம். வீட்டுக்கு வரட்டுமா இல்லை ஹாஸ்பிடலுக்கு வரட்டுமா என்ற கதிரேசனிடம் மாமா நான் கொஞ்சம் வேலையா இங்கே ஸ்கூலுக்கு வந்திருக்கிறேன்.

 

நீங்க வீட்டுக்கு போங்க சித்தி இருப்பாங்க. நான் வந்துருவேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் அப்பறம் நாம எல்லோரும் ஹாஸ்பிடல் போகலாம். ரோனிக்கு துணையா அர்ச்சனா இருக்கிறாள் என்ற உதயச்சந்திரன் போனை வைத்தான்.

 

நான் சொன்னேன்ல பிரகாஷ் இந்த வேலையை நீயே எப்படியாவது முடிச்சுருன்னு இப்போ பாரு என் மாமனார் வேற போன் பண்ணிட்டாரு. மகளை பார்க்க வந்துட்டோம்னு என்றவன் சரி இன்னும் அரைமணி நேரத்தில் முடிஞ்சுருச்சுனா ஓகே இல்லைனா நீ தான் செய்யனும் என்றவனிடம் அண்ணா இது கவர்மென்ட் சம்பந்தமான வேலை அதான் உன்னோட உதவியை கேட்டேன் அண்ணா என்றான் பிரகாஷ். சரிடா என்றவன் வேக வேகமாக அந்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

என்ன ரோனி நீ இப்படி இருக்க நான் சொல்கிறேன்ல பிடிவாதம் பண்ணாதே என்ற அர்ச்சனாவிடம் இல்லை அண்ணி லேபர்பெயின் வந்திருக்காம். அதான் கொஞ்சம் கவலையா இருக்கு. அவள் மேல எனக்கு கோபம் இருக்கு ஆனாலும் குழந்தை பெத்துக்கப் போறாள். அதான் நல்லபடியா குழந்தையை பெத்து வரணும்னு கவலையா இருக்கு என்றாள் வெரோனிகா.

 

உன்னை தனியா விட்டுட்டு என்னால் போக முடியாது. நீ இங்கே தனியா இருக்கிற நேரம் அண்ணன் வந்துருச்சுனா என்னை திட்டி தீர்த்துரும் அதுக்காக தான் சொல்றேன். உனக்கு வேற ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு நீ என்னடான்னா உன் அக்காவை பார்க்க போறேன்னு அடம் பிடிக்கிற டாக்டர், நர்ஸ் யாரும் வரும் பொழுது நீ ரூம்ல இல்லாமல் இருந்தால் எப்படி சொல்பேச்சு கேளு என்றாள் அர்ச்சனா. சரிங்க அண்ணி என்ற வெரோனிகா அமைதியாகினாள்.

 

 

வாங்க அண்ணா , வாங்க அண்ணி என்று  கணேசன், கதிரேசன், வசந்தி, பூங்கொடி நால்வரையும் வரவேற்ற சுசீலா அவர்களுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு தங்கச்சி இதெல்லாம் என்ன கணேசனிடம் அட என்ன அண்ணா இது எதற்காகவா தங்கச்சி கொடுத்தால் அண்ணன் வாங்கிக்கனும் குடிங்க என்றார் சுசீலா.

 

வசந்தியின் மனதில் நம்ம மகள் வாழ்ந்திருக்க வேண்டிய வீடு என்ற ஏக்கப் பெருமூச்சு இருந்த போதிலும் கணேசனுக்கு ரொம்ப சந்தோசம். தம்பி மகளுக்கு இப்படி ஒரு ராஜவாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று. அவளும் அவர் மகள் தானே அந்த பாசம் எப்பொழுதும் குறையாது.

 

தேனு வரவில்லையா அண்ணி என்ற சுசீலாவிடம் அறுப்பு வேலை நடந்துண்டு இருக்கு தங்கச்சி பயலுக இரண்டு பேரும் தான் எல்லா வேலையும் பார்த்துக்கனும், அவனுகளுக்கு சாப்பாடு செய்யனும். அறுப்புக்கு வந்தவங்களுக்கு சாப்பாடு பொங்கி போடணும் இல்லையா. தேன்மொழி தானே பார்த்துக்கனும். ரோனிக்கு மேலுக்கு முடியலைங்கிறதால தான் நாங்களும் போட்டது போட்டபடியே வந்துட்டோம்.

 

பிள்ளை சுகமா இருக்குதாத்தா என்ற கணேசனிடம் அடி பலமா இல்லை அண்ணா என்ன வலது கை தான் உடைஞ்சுருக்கு என்ற சுசீலாவிடம் சீக்கிரம் சரியாகிரும்த்தா என்றவர் எங்கே வீட்டில் யாரையும் காணோம் என்றார்.

 

அத்தை, அத்தான், அக்கா மூன்று பேரும் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சேன்னு ஜாதகம் பார்க்க போயிருக்காங்க என்றார் சுசீலா.

 

 

 

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!