என்ன சொல்லுற தேவ் உதய்க்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா என்ற நெடுஞ்செழியனிடம் ஆமாம் மாமா உதய்க்கு கல்யாணம் ஆகிருச்சுனு சித்தப்பா சொன்னாரு. ஆனால் ரிசப்சன் எல்லாம் ஒன்றும் வைக்கவில்லை ஏன்னு தான் தெரியலை என்ற தேவச்சந்திரன் தன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
உறக்கம் கலைந்து எழுந்த இந்திரஜா குளித்து முடித்து உடைமாற்றி வந்தாள். என் அக்கா உங்களை ஏமாத்தினது மாதிரி நான் உங்களை ஏமாத்த மாட்டேன் மாம்ஸ் என்று உதயச்சந்திரனின் போட்டோவிடம் பேசியவள் மாடிப் படிகளில் குதித்து குதித்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
ஏன்டி இப்படி குதிச்சு குதிச்சு வர அதுவும் படிக்கட்டுல விழுந்துட்டால் என்ன பண்ணுறது என்ற சுசீலாவிடம் விழுந்தால் எனக்கு சேவகம் பண்ணுங்க மாமியாரே என்றாள் இந்திரஜா. சேவகம் தானே அது எனக்கு நீ பண்ணனும்டி கழுதை என்ற சுசீலாவிடம் அது என்ன எல்லா மாமியாரும் மருமகளையே சேவகம் பண்ண சொல்லுறது ஒரு மாற்றத்திற்காக மருமகளுக்கு மாமியார் சேவகம் பண்ணினால் என்ன என்றாள் இந்திரஜா.
ஏய் வாயாடி உன்னை என்று அவளது காதை திருகினார் சுசீலா. இந்து எப்போ வந்த என்ற நெடுமாறனிடம் அப்பவே வந்துட்டேன் மாமா என்றவள் சின்ன மாமா எங்கே என்றாள். அவன் உதய் கூட வருவான் என்றவர் எங்கே உன் அம்மா, அப்பா வரக் காணோம். நீ மட்டும் தான் வந்தியா என்றவரிடம் இல்லை மாமா அவங்க ஸ்ரீஜாவை பார்க்க போயிருக்காங்க என்றதும் அங்கேயா சரி என்ற நெடுமாறன் மலர் என்றிட மலர்கொடி வந்தார்.
உதய் வந்துட்டு இருக்கானாம் அம்மாகிட்ட சொல்லிரு நான் போயி குளிச்சுட்டு வந்துடுறேன் என்றவர் சென்று விட்டார்.
என்ன சுசீலா ஆரத்தி எல்லாம் ரெடி தானே என்ற கல்யாணிதேவியிடம் ரெடி அத்தை. உதய், ரோனி வந்துட்டாங்கனா இரண்டு பேருக்குமே சுத்தி வச்சுரலாம் என்ற சுசீலா கார் சத்தம் கேட்குது என்றார்.
அப்போ வா என்ற கல்யாணிதேவியிடம் யாருக்கு அம்மாச்சி ஆரத்தி எல்லாம் என்ற இந்திரஜாவிடம் என் பேரனுக்கும், அவன் பொண்டாட்டிக்கும் தான் என்றார் கல்யாணிதேவி. ஒருவேளை தேவ், ஸ்ரீஜாவை இவங்க ஏத்துக்கிட்டாங்களா என்ன. நான் தூங்கின ஒரு மணி நேரத்தில் இப்படி எல்லாம் மிராக்கல் நடந்துருக்குமா என்று நினைத்தபடி வாசலுக்கு வந்தாள் இந்திரஜா.
உதயச்சந்திரன், வெரோனிகா இருவரும் இறங்கிட அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார் சுசீலா. எதற்கு அத்தை இதெல்லாம் என்ற வெரோனிகாவிடம் சும்மா இருடி எல்லாம் திருஷ்டி அதான் இப்படி கையை உடைச்சுட்டு இருக்க என்றவர் அவளது நெற்றியில் பொட்டு வைத்து உதய் அவளை உள்ளே அழைச்சுட்டு போ என்றார்.
யார் அம்மாச்சி இந்த பொண்ணு என்ற இந்திரஜாவிடம் என் பேரனோட பொண்டாட்டி என்றார் கல்யாணிதேவி. இந்திரஜாவிற்கு ஏதோ உலகமே அவளது காலின் கீழே சுழல்வது போல இருந்தது. தலையெல்லாம் தட்டாமாலை சுற்றுவது போல சுற்றிட சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டாள்.
என்ன ரோனி எப்படி இருக்க என்ற கல்யாணிதேவியிடம் நல்லா இருக்கேன் ஆச்சி என்றவளின் நெற்றியில் விபூதி வைத்தவர் கை சீக்கிரம் சரியாகிரும் என்றார்.
உதய் அவளோட எக்ஸாம் என்ற கல்யாணிதேவியிடம் ஆச்சி எனக்கு இடது கை பழக்கம் அதனால பிரச்சனை இல்லை என்றவள் திரும்பிட இந்திரஜா நின்றிருந்தாள்.
ஆச்சி இவங்க என்று வெரோனிகா கை காட்டிய திசையில் இந்திரஜா நிற்பதைக் கண்ட உதயச்சந்திரன் இந்து நீ எப்போ வந்த என்றான்.
அவள் சாயங்காலமே வந்துட்டாள் உதய் என்ற சுசீலா ரோனி வா வந்து சாப்பிடு. இந்து நீயும் வா என்ற சுசீலாவிடம் வரேன் அத்தை ரெஸ்ட்ரூம் போயிட்டு என்ற இந்திரஜா அர்ச்சனாவின் அறைக்குள் புகுந்து அழ ஆரம்பித்தாள்.
அவள் உன்னை ஏமாத்திட்டதால என்னை நீ ஏமாத்திட்டியா மாம்ஸ் என்று அழுதவள் ஆமாம் அக்கா மாதிரி தான் தங்கச்சியும்னு நினைச்சுருப்பாங்க அதான் மாமாவுக்கு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க போல என்று நினைத்தவள் இங்கே அழாதே இந்து. அப்பறம் தப்பா நினைச்சுப்பாங்க என்று தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொண்டவள் முகம் கழுவி விட்டு உணவு மேஜைக்கு வந்தாள்.
உதயச்சந்திரன் தன் மனைவிக்கு உணவினை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான். நானே சாப்பிட்டுக்கிறேன் மாமா என்றவளிடம் சும்மா சாப்பிடு ரோனி என்றவன் அவளுக்கு ஊட்டி விட்டான்.
ரோனி இது இந்திரஜா என் அத்தை பொண்ணு என்றவன் இந்து இது வெரோனிகா என்று அறிமுகம் செய்தான். உங்களோட கல்யாணத்தை நீங்க கூட சொல்லவே இல்லையே மாமா என்றவளிடம் எங்க கல்யாணம் திடீர்னு முடிவாகிருச்சு. அதான் சொல்லவில்லை என்றவன் ரோனி சாப்பிடு என்று அவளுக்கு ஊட்டி விட்டான்.
இந்திரஜாவின் முக மாற்றத்தை கவனித்த கல்யாணிதேவி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தார்.
ஆமாம் அம்மா கருவாட்டுக்குழம்பு வச்சுருக்கிங்க கருவாடு எப்போ வாங்கினிங்க என்ற உதயச்சந்திரனிடம் அதெல்லாம் உன் மாமனார் , மாமியார் வாங்கிட்டு வந்தது உதய் என்ற கல்யாணிதேவி மகளுக்கு கை சரியாகனும்னு எத்தனை கிடாவை போட்டுத் தள்ளினாங்களோ ஆடுக்காலு, உப்புக்கண்டம்னு கிட்சனே போதவில்லை. பத்தாத்துக்கு தோட்டத்து காய்கறிகள், மிளகாய், வேர்க்கடலைனு எவ்வளவை தான் கொண்டு வந்தாங்களோ என்றார் .
ஏன் ஆச்சி நீங்க உப்புக்கண்டம் சாப்பிட மாட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் ஏன் ரோனிம்மா இப்படி கேட்கிற அம்மாவுக்கு மட்டும் இல்லை எனக்கும், என் தம்பிக்கும் கூட உப்புக்கண்டம்னா ரொம்ப பிடிக்கும். உன் அத்தைகளுக்கு அது பக்குவமா காய வச்சு எடுக்க தெரியாது. அதனால அதை எல்லாம் மறந்துட்டோம் என்றார் நெடுமாறன் . அதான் நம்ம மருமகள் புண்ணியத்தில் உப்புக்கண்டம் வந்துருச்சே அண்ணன் என்ற இளமாறன் சுசீ இன்னைக்கு மாதிரியே நாளைக்கும் உப்புக்கண்டம் வறுத்து வச்சுரு என்றார்.
நல்லா சொல்லுவிங்க தினமும் எல்லாம் அதை வைக்க மாட்டேன். நாளைக்கு வெந்தயக்களி தான் என்றார் சுசீலா. அதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டனர். சந்தோசமாக சிரித்து பேசிய படி உணவு உண்டனர் .
என்ன மாமா ஏதோ யோசனையில் இருக்கிங்க தூங்கலையா என்ற வெரோனிகாவிடம் தூக்கம் இல்லை ரோனி என்றவனிடம் ஏன் என்னாச்சு என்றாள் வெரோனிகா. ஒன்றும் இல்லை ரோனி நீ தூங்கு என்றான்.
அவள் அவனையே பார்த்திருக்க ரோனி என்றான். என்ன மாமா என்றவளிடன் அருகில் வந்து அமர்ந்தவன் உன் முன்னே என்னைப் போல இன்னொருத்தனை நிறுத்தினாள் நான் யாருன்னு சரியா கண்டுபிடிச்சுருவியா என்றான்.
என்ன மாமா கேள்வி இது என்றவளிடம் இல்லை ரோனி என்னைப் போலவே அச்சு அசலா ஒரு தம்பி இருக்கிறான். உன் முன்னே நானும், அவனும் நிற்கிறோம் நீ சரியா கண்டு பிடிப்பியா என்றான் உதய்.
கண்டுபிடிச்சுருவேன் என்றவளிடம் எப்படி என்றான் உதய். என் சந்துரு மாமாவை எனக்கு தெரியாதா என்ன உங்க கூட நான் ஆறு மாதமா இதே அறையில் தான் இருக்கேன். உங்களோட வாசனை எனக்கு தெரியாதா மாமா என்றவளிடம் என்னோட பெர்பியூமே அவனும் யூஸ்பண்ணினால் என்ன பண்ணுவ என்றான்.
உங்க குரலை வச்சு கண்டு பிடிப்பேன் என்றாள் வெரோனிகா. சரி என்னைப் போலவே மெமிக்ரி பண்ணிடுறான் அப்போ என்ன பண்ணுவ என்றவனின் கையைத் தொட்டவள் மாமா என்னால உங்க கையை தொட்டாளே போதும் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்குவேன். அது மட்டும் இல்லை உங்க இடத்தில் வேற ஒருத்தர் இருந்தாங்கனா என்னோட உள்ளுணர்வே எனக்கு காட்டிக் கொடுத்திரும் அது என் சந்துரு மாமா இல்லைன்னு என்றவள் ஏன் மாமா இந்த சந்தேகம் உங்களுக்கு என்றாள் வெரோனிகா.
சும்மா தான் ரோனி என்றவன் தூங்கு என்றிட மாமா உங்க மடியில் படுத்துக்கட்டுமா ப்ளீஸ் என்றாள் வெரோனிகா. சரி என்றவன் காலை நீட்டி அமர்ந்திட அவனது மடியில் தலை வைத்து உறங்கினாள். அவளது தலையை கோதி விட்டவன் எதையோ யோசித்துக் கொண்னே இருந்தான் வெகுநேரம் கழித்து தான் உறங்கினான்.
என்ன அம்மாச்சி கூப்பிட்டிங்களா என்ற இந்திரஜாவிடம் வா வந்து உட்காரு என்றார் கல்யாணிதேவி. அவரின் அருகில் அமர்ந்தவளிடம் இந்து உன் மனசுல உதய் என்று திக்கி திணறி அவர் கேட்டிட வர அதை உணர்ந்தவள் இருந்துச்சு ஆசை இருந்துச்சு. மாமன் மகனாச்சே கல்யாணம் பண்ணிக்கனும். அக்காவால பட்ட அவமானத்திற்கும், காயத்திற்கும் மருந்தா நான் இருக்கனும்னு ஆசை இருந்துச்சு. ஆனால் அது என் மாமா பையன் உதய் மாமா மேல தான். அந்த பொண்ணு வெரோனிகாவோட கணவன் மேல எனக்கு எந்த ஆசையும் இல்லை அம்மாச்சி என்றாள் இந்திரஜா.
இந்து என்ற கல்யாணிதேவியிடம் அம்மாச்சி எனக்கு இருந்தது ஆசை தான். வெறி இல்லை அதனால பயப்பட வேண்டாம். நான் குழந்தை இல்லை படிச்சுருக்கேன். அறிவு இருக்கு இன்னொருத்தவங்க பொருளுக்கு என்னைக்குமே நான் ஆசைப் பட மாட்டேன் அதனால நீ கவலைப் படாதே கிழவி என்றவள் சிரித்திட அவளை அணைத்துக் கொண்டார் கல்யாணிதேவி.
சரி இந்து போ நேரத்தோட போயி தூங்கு என்ற கல்யாணிதேவியிடம் குட்நைட் அம்மாச்சி என்றவள் சென்று படுத்துக் கொண்டாள்.
என்ன இந்து தூங்கப் போறியா என்ற அர்ச்சனாவிடம் தூக்கம் வரவில்லை பேசிட்டு இருப்போமா என்றாள் இந்திரஜா. பேசலாமே என்ற அர்ச்சனா அவளுடன் பேசிக் கொண்டிருக்க ஹாய் அண்ணி என்று வந்தாள் ஊர்மிளா. ஏய் ஊர்மி வாடி என்ற இந்திரஜா அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
என்னக்கா ரோனி தூங்கிட்டாளா என்ற ஊர்மிளாவிடம் ஏய் என்னடி உன் அண்ணியை அவள், இவள்னு மரியாதை இல்லாமல் பேசுற என்றாள் இந்திரஜா. அண்ணி எனக்கும், ரோனிக்கும் ஒரே வயசு தானே அப்பறம் அவளை பெயர் சொல்லி கூப்பிடாமல் அண்ணினா கூப்பிடுவாங்க என்றாள் ஊர்மிளா.
என்ன சொல்லுற ஊர்மி உன் வயசா என்ற இந்திரஜாவிடம் உதய், ரோனி இருவரது கல்யாண கதையை கூறினாள் அர்ச்சனா. அப்போ அந்த பொண்ணுக்கு பதினேழு வயசு தான் ஆகுதா என்றாள் இந்திரஜா. ஆமாம் என் கூட தான் படிக்கிறாள் என்ற ஊர்மிளா அண்ணி உங்களுக்கு ஒரு காமெடி சொல்லவா ரோனியோட கிளாஸ் டீச்சர் உதய் அண்ணா தான்.
ஹஸ்பன்ட் டீச்சர், வொய்ப் ஸ்டூடண்ட் செம்ம காமெடி இல்லை என்ற ஊர்மிளா சிரிக்க ஏய் சிரிக்காதேடி அப்பறம் ரோனி கிட்ட சொல்லி கொடுத்துருவேன் என்ற அர்ச்சனாவிடம் சொல்லிக்கோ எனக்கென்ன பயமா அவள்கிட்ட என்ற ஊர்மிளா பழிப்பு காட்டிட அர்ச்சனா சிரித்து விட்டாள்.
இந்திரஜா ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்.
…..தொடரும்….
Very good https://lc.cx/xjXBQT