விதியின் முடிச்சு…(34)

4.5
(4)

என்னப்பா கிளம்பவில்லையா என்ற கல்யாணிதேவியிடம் கிளம்பிட்டேன் அப்பத்தா என்ற உதயச்சந்திரன் கிளம்பினான். ரோனி நீ ரொம்ப கையை ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே , ஒழுங்கா சாப்பிடு என்று கூறிட சரிங்க மாமா என்று தலையாட்டினாள் வெரோனிகா. அவளது கன்னம் தட்டியவன் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

 

 

இந்திரஜா வெரோனிகாவைப் பார்த்து புன்னகைத்திட அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். வெரோனிகா சுசீலாவுடன் வாயாடிக் கொண்டே இருக்க அவளுடன் பேசிக் கொண்டே சமையல் வேலையை முடித்தார் சுசீலா.

 

அத்தை, பெரிய அத்தை எங்கே என்றவளிடம் அக்கா கோவிலுக்கு போயிக்காங்க ரோனி உனக்கு உடம்பு சரியாகிருச்சுனா கோவிலில் நெய் தீபம் ஏற்றி வைக்கிறேன்னு வேண்டுக்கிட்டாங்க அதான் என்ற சுசீலா எதாவது சாப்பிடுறியாடி என்றார். ஐயோ போதும் அத்தை ஏற்கனவே சூப் குடிச்சு வயிறு ஃபுல்லா இருக்கு என்ற வெரோனிகா நான் ரூம்க்கு போகட்டுமா என்றாள்.

 

சரி போயி ரெஸ்ட் எடு என்ற சுசீலா தன் வேலையை கவனித்தார்.

 

என்ன மேடம் ஏதோ பேசனும்னு சொன்னிங்களே என்ற உதயச்சந்திரனிடம் சார் அது வந்து என்று இழுத்தாள் வினித்ரா. சொல்லுங்க வினித்ரா என்ன விசயம் என்றவன் அவளது கையைப் பிடித்திட சார் அது என்று அவள் திக்கித் திணறிட என்ன இவ்வளவு திக்குது. அப்படி என்ன விசயம் என்றவன் சுற்று, முற்றும் பார்த்திட அந்த பூங்கா முழுவதிலும் காதல் ஜோடிகள் நெருக்கமாக அமர்ந்து குடை பிடித்தபடி சிலரும், துப்பட்டாவால் முகங்களை மூடிய படி சிலரும் காதல் செய்து கொண்டிருந்தனர்.

 

இந்த மாதிரி ஒரு இடத்திற்கு என்னை வரச் சொல்லிட்டு வாயெல்லாம் குளறி திக்கி, திக்கி வார்த்தை வராமல் தவிக்கிறிங்கன்னா என்ன அர்த்தம் என்றான் உதயச்சந்திரன். அவள் சார் அது என்றிட அவளது கையில் முத்தமிட்டவன் ஐ லவ் யூ என்றிட அவனை பட்டென்று அணைத்துக் கொண்டாள் வினித்ரா. ஐ லவ் யூ சோமச் உதய் சார் என்று அவள் கூறிட இனி என்ன சார் நான் தான் உன்னை லவ் பண்ணுறேனே வினி இனி என்னை உதய்னே கூப்பிடு என்றவன் அவளது முகவாயில் கை வைத்து அவள் முகத்தை நிமிர்த்தினான்.

 

அந்த நேரம் சரியாக வானில் இருந்து ஒரு துளி நீர் அவள் இதழில் பட்டது. அந்த ஒற்றைத் துளி நீர் அவளது சிவந்த இதழில் பட்டதைக் கண்ட காளையவன் அவளது இதழில் தன் இதழைப் பதித்து அவளிதழில் இருந்த மழைத்துளியை பருகிய நேரம் வானம் பொத்துக் கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

 

ஆழங்கட்டி மழையில் இருவரும் நனைந்திட அவள் குளிருக்கு இதமாக அவனை அணைத்தபடி மழையில் நனையாமல் இருக்க ஒரு மரத்தடியில் நின்றாள். அவனது மார்பில் முகம் புதைத்த மங்கை அவள் இப்படியே காலம் முழுக்க இருப்போமா உதய் என்றிட அவளை மேலும் இறுக்கமாக அணைத்தவன் இதை விட இறுக்கமா எப்பவுமே இருக்கலாம் வினி என்று அவளை அணைத்த நேரம் வானில் ஒரு பலத்த இடி அவர்கள் நின்ற மரத்தின் மீது விழ கட்டி அணைத்தபடி இருவரும் கருகி விழிந்தனர் மரத்தில் விழுந்த இடி இருவரது தலையிலும் விழுந்ததால்.

 

 

பதறி அடித்து எழுந்த வினித்ரா கண்ணாடியில் தன்னை பார்த்திட அவளது முகம் கருகாமல் இருந்தது. ச்சே என்ன கனவு இது அவன் காதலைச் சொல்லி எவ்வளவு ஆசையா நெருங்கி வந்தான். எங்கே இருந்து வந்து விழுந்துச்சோ இந்த பாலாய் போன இடி என்று நினைத்தவள் எழுந்து குளிக்கச் சென்றாள்.

 

இன்னைக்கு எப்படியாவது உதய்கிட்ட என்னோட லவ் பற்றி சொல்லியே ஆகனும் என்ற முடிவுடன் கிளம்பினாள் வினித்ரா.

 

என்ன தான் குழந்தை என்று அவன் மனம் சொன்னாலும் அவள் வளர்ந்த குமரி அல்லவா. அவளுக்கு தானே உடை மாற்றி விட்டது தவறோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன். அவள் அவனை காதலிக்கிறாள். அவனுக்கு காதல் இல்லை என்றாலும் வராமல் போய் விடாதே. அவள் மீது தனக்கு இருக்கும் அன்பு, பாசம் எல்லாமே உண்மை. அது ஏன் காதலாக மாறக் கூடாது என்று அவனது மனசாட்சி குழம்பி போயிருக்க அவனுக்கு கவனம் வேலையில் இல்லை.

 

அண்ணா என்ற பிரகாஷிடம் என்ன என்றான் உதய். என்ன யோசனை என்றவனிடம் ஒன்றும் இல்லை என்ற உதயச்சந்திரன் தன் வேலையை கவனித்தான். ஒன்றும் இல்லாமலா இவ்வளவு யோசனையோட இருக்க சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம் என்றான் பிரகாஷ்.

 

ரோனி பற்றி தான் யோசிச்சுட்டு இருக்கேன் என்றான் உதய். அண்ணி பற்றி யோசிக்க என்ன இருக்கு என்ற பிரகாஷிடம் அவள் என்னை லவ் பண்ணுகிறாளாம் என்றான் உதயச்சந்திரன்.

 

அதைக் கேட்டு சிரித்த பிரகாஷ் இதில் யோசிக்க என்ன இருக்கு அண்ணா. அண்ணி உன்னோட மனைவி அப்போ அவங்க உன்னை லவ் பண்ணாமல் ரோட்ல போறவனையா லவ் பண்ணுவாங்க என்றான்.

 

நீ புரிஞ்சு தான் பேசுறியா அவள் சின்னப் பொண்ணு . இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகவில்லை. அவளுக்கும், எனக்கும் நடந்த கல்யாணம் சட்டப்படி செல்லவே செல்லாது இந்த சூழ்நிலையில் லவ் வேற என்றவனிடம் அண்ணா நீ இன்னும் ஸ்ரீஜா அண்ணியை மறக்கவில்லையா என்றான் பிரகாஷ்.

 

அடுத்தவங்க மனைவியை நினைக்கிற அளவுக்கு உன் அண்ணன் கேடு கெட்டவன் இல்லை. ஆனால் அவளால் ஏற்பட்ட காயம் மனசுல ஒரு ஓரத்தில் இருந்துட்டு தான் இருக்கு என்றான் உதய்.

 

அப்பறம் ஏன் ரோனி அண்ணியை புரிஞ்சுக்க மாட்டேங்கிற. அவங்க சின்னப் பொண்ணு தான் நான் இல்லைன்னு சொல்லவில்லை. உலகமே தெரியாத பச்சை மண்ணா தான் இருந்தாங்க. ஆனால் அவங்க உன் மேல வச்சுருக்கிற அன்பு வெறும் காதல் இல்லை ஒரு பக்தி. ஒரு நாளைக்கு நூறு முறையாவது அவங்க வாயில் இருந்து வரும் வார்த்தை சந்துரு மாமா மட்டும் தான். அப்படி இருக்கும் பொழுது அவங்க அன்பை ஏன் நீ புரிஞ்சுக்க கூடாது என்றான் பிரகாஷ்.

 

புரிஞ்சுக்க வில்லைனு யார் சொன்னது அவளோட அன்பு எனக்கு நல்லாவே புரியுது. அவளோட பக்தி, பாசம், காதல் எல்லாமே எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது. ஆனால் ஏதோ ஒன்று தடுக்குது. அவளோட வயசு தான் எனக்கு பிரச்சனை.

 

இப்போ அவளுக்கு தேவை படிப்பு, காதல் இல்லை. இந்த ஜென்மத்தில் அவள் மட்டும் தான் என்னோட மனைவி. அது மாறப் போறதில்லை ஆனால் நாளைக்கு அவள் மனசு மாறினாலும் அந்த மாற்றத்தையும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றான் உதயச்சந்திரன்.

 

என்ன அண்ணா பேசுற நீ அண்ணி உன்னை விட்டுட்டு இன்னொரு வாழ்க்கையை தேடிப்பாங்கனு சொல்ல வருகிறாயா என்ற பிரகாஷிடம் அது கூட தப்பு இல்லைன்னு சொல்கிறேன் பிரகாஷ் என்றான் உதய்.

 

அவளுக்கும் , எனக்கும் நடந்த கல்யாணம் பெரியவங்க முடிவு. அவங்க முடிவை அவள் மேல திணிச்சாங்க. அவளா ஆசைப்பட்டு தனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கனும். அந்த சுதந்திரம் அவளுக்கு பறிக்கப் பட்டுச்சு அதனால தான் சொல்கிறேன். அவளுக்கு இப்போ என் மேல இருக்கிற காதல் சூழ்நிலையால கூட ஏற்பட்டிருக்கலாம்.

 

இது தான் நம்ம வாழ்க்கை. இவன் தான் நம்ம கணவன். இவன் மேல தான் நம்ம காதல் இருக்கனும்னு ஒரு கட்டுப்பாடு அவள் மனசுக்குள்ள இருந்து அதனால கூட என்மேல காதல் வந்திருக்கலாம். இப்போ இருக்கிற இந்த காதல் மாறாமல் இருந்தால் எனக்கும் சந்தோசம் தான். மாறினால் கூட சந்தோசம் தான் அவளோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம் என்றவன் அவகிட்ட சொல்லிருக்கேன்.

 

இன்னும் ஐந்து வருசம் கழிச்சு உனக்கு என் மேல இதே காதல் இருந்தால் அப்பறம் பேசிக்கலாம்னு என்றான் உதயச்சந்திரன்.

 

 

ஐந்து வருசம் இல்லை நீ வேணும்னா பாரு அண்ணியோட காதல் அவங்க ஆயுள் வரைக்கும் மாறாது. உன் மேல தான் இருக்கும் என்றான் பிரகாஷ்.

 

காதல் மேல இருந்த நம்பிக்கை எல்லாம் உடைஞ்சு ரொம்ப நாள் ஆகுது பிரகாஷ். காதல் எப்போ வேண்டுமானாலும் தடம் மாறும். அதனால அதை நம்பி அவள் மேல வீணா எந்த ஆசையையும் வளர்த்துக்க விரும்பவில்லை என்றான் உதய்.

 

அப்போ அண்ணி மேல உனகக்கு எந்த ஆசையும் , பாசமும் இல்லையா என்ற பிரகாஷ் ஆசை இல்லாமல் தான் அவங்களுக்கு ஒன்றுனா துடிக்கிறாயா.

 

அண்ணிக்கு ஆக்சிடென்ட் ஆன நாளில் இருந்து அவங்க வீட்டுக்கு வருவது வரை ஏன் இப்போ கூட உன் மனசுல அவங்க வீட்டில் என்ன பண்ணிட்டு இருப்பாங்கனு தானே தோன்றிட்டு இருக்கு இதற்கு பெயர் என்ன சொல்லப் போற அண்ணா என்றான் பிரகாஷ்.

 

வெரோனிகா என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி அவளுக்கு ஒன்றுனா அவள் அப்பா, அம்மாகிட்ட நான் தான் பதில் சொல்லனும் என்றான் உதயச்சந்திரன்.

 

நீ அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வச்சுக்கோ ஆனால் என்னைப் பொறுத்த அளவு நீ அண்ணி மேல வச்சுருக்கிற அன்பு, பாசத்திற்கு பெயர் காதல் தான். காதல் மட்டும் தான் என்றவன் வேண்டும் என்றால் ஒன்று பண்ணலாம்.

 

எக்ஸாம் முடிஞ்சதும் அண்ணியை உன் மாமனார் வீட்டுற்கு அனுப்பி வை. அவங்களை பிரிஞ்சு நீ எத்தனை நாள் நார்மலா இருக்கனு பார்ப்போம். அப்போ உனக்கே புரியும் நீ அவங்க மேல எவ்வளவு காதல் வச்சுருக்கனு என்றான் பிரகாஷ்.

 

 

சரி உன் அண்ணி மேல எனக்கு காதல் இருக்கா, இல்லையாங்கிற ஆராய்ச்சியை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு இரண்டு பேரும் வேலையை பார்ப்போமா என்றான் உதயச்சந்திரன். சரி என்ற பிரகாஷ் தானும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

 

வினித்ரா ஒரு வித தவிப்புடனே அன்று முழுவதும் இருந்தாள். எப்படா ஸ்கூல் முடியும் , உதய் கிட்ட பேசலாம் என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

 

 

இன்று ஏனோ நேரம் ஆமை வேகத்தில் மெதுவாக கடப்பது போல ஒரு பிரம்மை அவளுக்கு தோன்றிட கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

உதயச்சந்திரன் அலுவலக அறையிலே ஏதோ முக்கியமான வேலையாக இருந்தான். அதனால் லேபிற்கு அவன் வரவே இல்லை. வினித்ரா எதிர்பார்த்தது போல பள்ளி முடியும் நேரம் வந்து விட சந்தோசமாக அவள் உதய்யை தேடி அலுவலக அறைக்கு சென்றாள்.

 

 

என்ன மேடம் என்றவனிடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னேனே சார் என்றாள். அட ஆமாம் மேடம் மறந்தே போயிட்டேன் என்றவன் சரி கிரவுண்ட்ல வெயிட் பண்ணுங்க என்றான்.

 

ஸ்கூலில் வேண்டாம் வெளியே போயி பேசலாமா என்ற வினித்ராவிடம் சரி ஒரு ஐந்து நிமிடம் என்ற உதய் தன் வேலையை முடித்து விட்டு அவளுடன் சென்றான்.

 

 

 

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!