கோபம் இல்லைனா அப்பறம் ஏன் மேடம் அழுதுட்டே மொட்டை மாடிக்கு வந்திங்க என்றவனிடம் அதுவா மாமா நீங்க சட்டுனு திட்டினதும் எனக்கு கண்ணு வேர்த்துருச்சு. உங்க முன்னாடி அழுதா என் கெத்து என்னாகிறது அதான் மொட்டை மாடிக்கு வந்துட்டேன் என்றவளிடம் சாரிடா என்றான் உதயச்சந்திரன்.
எத்தனை தடவை கேட்பிங்க என் அம்மா திட்டுனா நான் கோவிச்சுக்குவேனா அது போல தான் நீங்க திட்டினாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன் என்றாள் வெரோனிகா.
அப்போ நான் என்ன உன் அம்மாவா என்றவனிடம் ஆமாம் என் அம்மா தான் என்றவள் பிள்ளைக்கு முடியலைனா அம்மா தான் ராத்திரி பகலா தூங்காமல் கவனிச்சுப்பாங்க. நான் ஹாஸ்பிடலில் இருந்த மூன்று நாளும் நீங்க தூங்கவே இல்லை. இப்போ வீட்டுக்கு வந்த பிறகும் எவ்வளவு வேலை இருந்தாலும் நான் எப்படி இருக்கேன்னு விசாரிச்சுட்டு தான் இருக்கிங்க. அது மட்டும் இல்லை எனக்கு காலையில் டிரஸ் போட்டு விட்டப்போ கூட என் அம்மா போல தான் தெரிஞ்சிங்க என்றாள் வெரோனிகா.
அவளது தலை கோதியவன் உனக்கு ஏன் ரோனி என்னை இவ்வளவு பிடிக்குது என்றவனிடம் ஏன்னு கேட்டால் என்ன சொல்லனும் எனக்கு என் சந்துரு மாமாவை ரொம்ப பிடிக்கும் அவ்வளவு தான்.
நீங்க என்னை லவ் பண்ணலைனாலும் நான் லவ் பண்ணுவேன் என்றவளை அவன் முறைத்திட மாமா லவ்னா அன்பு தானே. அப்போ உங்க மேல எனக்கு நிறைய அன்பு இருக்கு அதான் ஐ லவ் யூ என்றவள் என் அம்மா சொன்னாங்க நீங்க ரொம்ப நல்லவராம். எப்பவுமே என்னைப் பற்றி தான் யோசிக்கிறிங்களாம். அது எனக்கே தெரியும் என்றாள்.
வேற என்ன எல்லாம் உங்க அம்மா சொன்னாங்க என்றவன் கதை கேட்பது போல் அவளருகில் கன்னத்தில் கை வைத்தபடி அவளைப் பார்த்து அமர்ந்தான்.
வேற ஒருத்தனா இருந்தால் அக்கா ஓடிப் போன கோபத்தில் என்னை சிதைச்சுருப்பானாம். ஆனால் நீங்க அப்படி இல்லையாம். என்னை படிக்க வைக்கனும்னு யோசிக்கிறிங்களாம். என்னோட படிப்பு முடியுற வரை என்னை குழந்தை போல பார்த்துட்டு இருக்கிங்களாம். என்னை மட்டும் இல்லாமல் என் மொத்த குடும்பத்தையும் உங்க குடும்பமா நினைச்சு அக்கரையா நடந்துக்கிறிங்களாம். இன்னும் நிறைய இருக்கு என்றவளை புன்னகையுடன் பார்த்தான் உதயச்சந்திரன்.
மாமா என்றவளிடம் என்ன ரோனி என்றான் உதயச்சந்திரன். ஐந்து வருசத்திற்கு பிறகு இல்லை மாமா என் ஆயுள் முடியுற வரை உங்களை மட்டும் தான் மாமா நேசிப்பேன். நீங்க என்ன படிக்க சொன்னாலும் நான் படிக்கிறேன் ஆனால் என்னோட லவ் அக்சப்ட் பண்ணிப்பிங்களா மாமா என்றாள் வெரோனிகா.
உன்னோட எக்ஸாம் முதலில் முடியட்டும் என்றவனிடம் இது என்ன பதில் என்றாள் வெரோனிகா. உன்னோட எக்ஸாம் முடியட்டும். உனக்கு பதினெட்டு வயசும் முடியட்டும். அப்பறம் லவ் பண்ணுறதைப் பற்றி யோசிக்கலாம் இப்போ மேடம் டெஸ்ட் எழுத வரீங்களா என்றான்.
ஏன் மாமா வாத்தியாரை கல்யாணம் பண்ணிகிட்டால் எப்போ பாரு படி படினு பிரம்பை எடுத்து விரட்டுவாங்களோ என்றவளை அடிக் கழுதை உன்னை என்று அவன் கூறிட அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு எழுந்து ஓடிவிட்டாள் வெரோனிகா.
என்னடி இப்படி ஓடி வர என்ற மலர்கொடியிடம் அது ஒன்றும் இல்லை அத்தை நம்ம ஸ்கூலில் அடுத்த வாரம் ஸ்போர்ட்ஸ் டே வருதாம். என்னை ரன்னிங் காம்பிட்டேசன்ல கலந்துக்க சொல்லி மாமா அடம் பிடிச்சு டிரெயினிங் வேற கொடுக்கிறாரு நீங்களே சொல்லுங்க இந்த நொண்டிக் கையை வச்சுகிட்டு நான் எப்படி ஓடுவேன் என்று நடித்தாள் வெரோனிகா.
ஓடுறதுக்கு காலு தான அண்ணி முக்கியம் நீங்க என்ன ஃப்ராக் ரேஸ்ஸா ஓடப் போறிங்க கையை ஊணிக்கிட்டு தவளை மாதிரி என்றான் பிரகாஷ்.
அதானே நல்லா சொல்லுடா தம்பி தவளை ஓட்டமா ஓடப் போற நொண்டிக் கையை வச்சுகிட்டு என்றான் உதயச்சந்திரன்.
அத்தை நீங்களே சொல்லுங்க ஒரு கல்யாணம் ஆன பொண்ணு ஓடினாள் குடும்பத்துக்கு நல்லதா என்று நடித்தவளிடம் அடியே சாவித்ரி கல்யாணம் ஆன பொண்ணு வீட்டை விட்டு ஓடினாள் தான் குடும்பத்துக்கு நல்லதில்லை மைதானத்தில் ஓடலாம் அதனால நீ தாராளமா ஓடு என்றார் சுசீலா.
அது யாரு சாவித்ரி என்ற வெரோனிகாவிடம் ஹும் சத்யவான் சாவித்ரி அப்படியே தெரியாத மாதிரியே கேட்பாள். ஏன்டி நடிகையர் திலகம் சாவித்ரி தெரியாது நடிப்பில் அவங்களையே மிஞ்சுருவடி நீ என்று இரண்டு மாமியாரும் அவளது காதை திருகிட அச்சோ மாமியார் கொடுமை ஆரம்பமாகிருச்சே ப்ளீஸ் மாமா என்னை காப்பாத்துங்க என்றாள் வெரோனிகா.
கொடுமை தானே மவளே நீ எக்ஸாம் முடி அப்பறம் தெரியும் உனக்கு மாமியார் கொடுமைனா என்னனு என்ற மலர்கொடி, சுசீலா இருவரும் அவளது காதை விட்டனர்.
ஆஆ காதே சிவந்திருச்சு பிரகாஷ் மாமா சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க அப்போ தான் என் காது தப்பிக்கும் என்றவளைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
உதயச்சந்திரன் சந்தோசமாக சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்ட வசுந்தரா உதய் மனசு வச்சா மட்டும் தான் தேவ், ஸ்ரீஜா இரண்டு பேரும் இந்த வீட்டுக்கு வர முடியும். அதனால உதய்கிட்ட பேசி பார்த்தால் என்ன என்று யோசித்தார்.
என்ன ரோனி எல்லாம் கரைக்ட்டா எழுதிட்டியா என்றவனிடம் எழுதிருக்கேன் அது கரைக்ட்டா, இல்லையான்னு நீங்க தான் சொல்லனும் மாமா என்ற வெரோனிகாவை முறைத்தவன் வர வர உனக்கு வாய் துடுக்கு ஜாஸ்தி ஆகிருச்சு. கை உடைஞ்சதுக்கு பதிலா வாய் உடைஞ்சுருக்கலாம் என்றவனிடம் அப்பறம் என்னோட வாய் கோன வாயா போயிரும் என்ற வெரோனிகாவிடம் கோன வாயி கோகிலா என்றான்.
அவனை முகம் சுழித்து முறைத்தவள் ஏதொ சொல்ல வர உள்ளே வரலாமா என்று வந்தார் வசுந்தரா. வாங்க பெரியம்மா என்றவளிடம் புன்னகைத்தவர் உதயச்சந்திரனை பார்த்திட வாங்க அத்தை என்றான்.
உதய் நீ என் மேல கோபமா இருப்பனு எனக்கு தெரியும். நான் சொல்லுற விசயமும் உன்னை கோபம் படுத்தும்னும் எனக்கு தெரியும் ஆனால் எனக்கு வேற வழி தெரியவில்லை என்றார் வசுந்தரா.
சொல்லுங்க அத்தை என்ன விசயம் என்றவன் வெரோனிகா என்றிட என்ன மாமா என்றாள். கொஞ்சம் டீ போட்டு எடுத்துட்டு வருகிறாயா என்றான் உதய். சரிங்க மாமா என்றவள் சென்றிட இப்போ சொல்லுங்க அத்தை என்றான் உதய்.
உதய் உனக்கு அவங்க இரண்டு பேரும் பண்ணினது பெரிய துரோகம் தான். நான் இல்லைன்னு சொல்லவில்லை. அதற்கு எந்த விளக்கமும் நான் சொல்லவில்லை. தப்பு பண்ணிட்டாங்க அவங்களை மன்னிக்க கூடாதா. அவங்களை மட்டும் நீங்க ஒதுக்கி வைக்கவில்லை இந்த வீட்டோட மூத்த வாரிசு நிலா. அவளையும் சேர்த்து தான் ஒதுக்கி வச்சுருக்கிங்க என்றார் வசுந்தரா.
நான் சத்தியமா சொல்லுறேன். இந்திரஜாவை எப்படியாவது உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு தேவ், ஸ்ரீஜா இரண்டு பேரையும் இந்த வீட்டோட சேர்த்து வச்சுரணும்ங்கிற நினைப்புல தான் இங்கே வந்ததே என்றார்.
உனக்கு கல்யாணம் முடிஞ்சு நீ சந்தோசமா இருக்கங்கிற பட்சத்தில் அவங்களை ஏற்றுக் கொள்ளலாமே உதய். நீ சொன்னால் கண்டிப்பா அம்மா சம்மதிப்பாங்க. அம்மா சொன்னால் கண்டிப்பா அண்ணன், அண்ணியும் சம்மதிப்பாங்க அதனால உன் கிட்ட மடிப்பிச்சை கேட்கிறேன் உதய் என் பேத்தியோட எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிறாதே. இத்தனை சொந்த பந்தங்கள் இருந்தும் அவள் அனாதை மாதிரி வளருறது எனக்கு கஷ்டமா இருக்கு என்றார் வசுந்தரா.
அத்தை அதற்கு ஏன் மடிப்பிச்சை அது, இதுனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறிங்க என்ற உதயச்சந்திரன் நீங்க கவலைப் படாதிங்க இந்துவுக்கும், பிரகாஷ்க்கும் கல்யாண ஏற்பாடு பண்ணும் பொழுது அப்பத்தாகிட்ட பேசுறேன் என்றான் உதயச்சந்திரன்.
ரொம்ப நன்றிப்பா என்ற வசுந்தரா கிளம்பிட அவன் எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
என்ன மாமா யோசனை என்றவளிடம் டீ எங்கே என்றான். நீங்க நிஜமாவே டீ கேட்டிங்களா அச்சச்சோ நான் கூட அந்த பெரியம்மாகிட்ட நீங்க பேசுற விசயம் எனக்கு தெரியக் கூடாதுனு தான் என்னை டீ எடுத்துட்டு வரச் சொன்னிங்கனு நினைச்சேன் சாரி மாமா நான் போயி டீ எடுத்துட்டு வரேன் என்றாள் வெரோனிகா.
டீ வேண்டாம் ரோனி என்றவன் அவளையே பார்த்தான். என்ன மாமா என்றவளிடம் இல்லை நான் அவங்க கிட்ட என்ன பேசினேன்னு நீ கேட்கவே இல்லை என்றான் உதயச்சந்திரன். அவங்க கிட்ட நீங்க பேசுற விசயம் எனக்கு தெரியனும்னு நினைச்சுருந்தால் நீங்க என்னை டீ எடுத்துட்டு வர சொல்லிருக்க மாட்டிங்களே மாமா என்றாள் வெரோனிகா.
எல்லா விசயமும் எனக்கு தெரிஞ்சே ஆகனும்னு எல்லாம் இல்லை மாமா. எது எனக்கு தெரியனுமோ அது தெரிஞ்சா போதும். ஒரு விசயத்தை எனக்கு தெரிய வேண்டாம்னு நீங்க நினைச்சால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்ற வெரோனிகா மாமா என்னை வெளியில் கூட்டிட்டு போறிங்களா என்றாள்.
எங்கே போகலாம் என்றவனிடம் மொட்டை மாடியில் ஒரு ஊஞ்சல் இருக்கே அங்கே போகலாமா என்றவளிடம் அந்த ஊஞ்சலா என்றான் உதயச்சந்திரன்.
ஏன் மாமா அந்த ஊஞ்சலுக்கு என்ன என்றவளிடம் உனக்கு அந்த ஊஞ்சல் வேண்டாம் ரோனி எனக்கு தூக்கம் வருது அதனால தூங்குவோமா என்றான் உதயச்சந்திரன்.
சரியென்று அவளும் மெத்தையின் மறுபுறம் படுத்து உறங்கினாள். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவள் சின்னப் பொண்ணு தான் ஆனால் எவ்வளவு மெச்சுரிட்டியோட நடந்து கொள்கிறாள். எனக்கான ஸ்பேஸ் கொடுக்கிறாள். எல்லா பொண்ணுங்களும் புருசன் யார்கிட்ட என்ன ரகசியம் பேசுறான்னு தெரிஞ்சுக்க தான் நினைப்பாங்க ஆனால் நான் அவளை அனுப்ப தான் டீ கேட்டேங்கிற விசயம் தெரிஞ்சும் அத்தை அறையை விட்டு போற வரைக்கும் அவள் அறைப் பக்கம் வரவே இல்லை என்று நினைத்தவன் உறங்கும் அவளது நெற்றியில் படர்ந்த முடியை ஒதுக்கி விட்டான்.
என்ன நினைத்தானோ அவளது நெற்றியில் முத்தமிட்டவன் அவளது தலை கோதி விட்டான். அவளைப் பார்த்தவாறே இருந்தவன் கண்களை மூடி தூங்கினான்.
என்னம்மா என்ன சந்தோசமா இருக்கிங்க போல என்ற இந்திரஜாவிடம் ஆமாம் இந்து உன் அக்காவை இந்த வீட்டுக்கு அழைச்சுட்டு வருவது பற்றி உதய்கிட்ட பேசினேன். அவனும் அம்மாகிட்ட பேசுகிறேன்னு சொல்லிருக்கான் என்ற வசுந்தரா சந்தோசப் பட்டார்.
அம்மா, நான் சொல்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க அக்கா இப்போதைக்கு இங்கே வர வேண்டாம் என்றாள் இந்திரஜா.
….தொடரும்….