என்ன சொல்லுற இந்து என்ற வசுந்தராவிடம் நீ பார்க்கிற தானம்மா உதய் மாமா எவ்வளவு சந்தோசமா இருக்காருன்னு அக்கா இந்த வீட்டுக்கு வந்தால் இந்த சந்தோசம் இல்லாமல் போயிரும் என்றாள் இந்திரஜா.
அக்காவோட மனசுல தேவ் அத்தான் மேல துளியும் அன்பும் இல்லை. அவரோட குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்த காரணத்தால தான் அவரை கல்யாணமே பண்ணினாள். நிலாவுக்காக மட்டும் தான் அவர் கூட வாழ்கிறாள்.
அவளோட மனசுல இப்பவும் உதய் மாமா தானே இருக்கிறார். அவளோட கண்ணு முன்னே உதய் மாமா வேற பொண்ணோட சந்தோசமா இருக்கிறதை அவளால எப்படி பார்த்துட்டு இருக்க முடியும். அவளோட கேரக்டர் உங்களுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் அவளை இங்கே அழைச்சுட்டு வர நினைக்கிறது தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு அம்மா என்றாள் இந்திரஜா.
அவள் தேவ் கூட வாழனும் அப்படினா உதய் சந்தோசமா வாழ்றதை பார்க்கனும். அவளை மறந்துட்டு உதய் சந்தோசமா இருக்கிறான் என்று தெரிந்தால் ஸ்ரீஜாவும் பழைய விசயங்களை மறந்துட்டு தேவ் கூட அவனை புரிஞ்சுட்டு வாழ ஆரம்பிப்பாள் என்றார் வசுந்தரா.
உங்க பொண்ணோட எதிர்காலம் நல்லா இருக்கனும்னு நினைச்சு அந்த சின்னப் பொண்ணோட வாழ்க்கையில் பிரச்சனையை உண்டு பண்ணிடாதிங்க. அந்தப் பொண்ணு வெரோனிகாவை பார்த்திங்க தானே அவள் சின்னப் பொண்ணு. அவள் கூட பேசினதை வச்சு சொல்கிறேன் அவள் உதய் மாமா மேல உயிரையே வச்சுருக்கிறாள். ஸ்ரீஜாவால அவங்களுக்குள்ள எதாவது பிரச்சனை வந்தால் அவளால சமாளிக்க முடியுமா சொல்லுங்க என்றாள் இந்திரஜா. இந்து ப்ளீஸ் சும்மா எதாவது சொல்லி தடங்கல் பண்ணாதே எனக்கு என் பொண்ணோட , பேத்தியோட எதிர்காலம் ரொம்ப முக்கியம். அவள் தேவ் கூட சேர்ந்து வாழ்வது அவளோட இஸ்டம். ஆனால் அவங்க இரண்டு பேரும் இந்த வீட்டில் தான் வாழனும். அப்போ தான் நம்ம நிலாவோட எதிர்காலம் சிறப்பா அமையும். அங்கே அவள் பிள்ளையாவா இருக்கிறாள்.
அப்பா, அம்மா ஒருத்தர்கிட்ட ஒருத்தர் முகம் கொடுத்து கூட பேசுறதில்லை. பாசம் கிடைக்க வேண்டிய வயதில் பாசம் கிடைக்காமல் ஏங்கும் அந்த பிஞ்சு குழந்தையோட வலி என்னனு உனக்கு எப்படி புரிய வைப்பேன்னு எனக்கு தெரியலை இந்து.
யாரோ ஒரு வெரோனிகா மேல நீ காட்டுற பட்சாதாபத்தை உன் அக்கா குழந்தை உதயநிலா மேல காட்டு. தேவ், ஸ்ரீஜா இரண்டு பேரும் இந்த வீட்டுக்கு வந்தே ஆகனும் என்றார் வசுந்தரா.
நிலாவுக்காக நீங்க ஏன் அம்மா இந்தியாவிலே செட்டில் ஆக கூடாது. இல்லை நிலாவை ஏன் உங்க கூட கனடா கூட்டிட்டு போக கூடாது என்றாள் இந்திரஜா. முட்டாளா இந்து நீ அந்த குழந்தை இருப்பதனால தான் உன் அக்கா தேவ் கூட இருக்கிறாள் என்ற வசுந்தரா இந்த பேச்சை இத்தோட விடு.
ஸ்ரீஜா , தேவ் இரண்டு பேரும் இந்த வீட்டுக்கு வந்தே ஆகனும். இந்த குடும்பத்தோட வாழ்ந்தே ஆகனும். அதற்காக என்ன வேண்டும் என்றாலும் பண்ணுவேன் என்றார் வசுந்தரா.
என்ன மலர் ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற நெடுமாறனிடம் இல்லை அத்தை ரூம்க்கு எதார்த்தமா போனப்ப வசுந்தரா பேசினது காதில் விழுந்துச்சு அதான் யோசனையா இருக்கேன் என்றார் மலர்கொடி. அப்படி என்ன வசுந்தராவும், அம்மாவும் பேசிட்டு இருந்தாங்க என்றார் நெடுமாறன்.
தேவ், ஸ்ரீஜாவோட குழந்தையைப் பற்றி தான். அந்நக் குழந்தை எல்லா சொந்தங்களும் இருந்தும் யாரும் இல்லாமல் தனியா வளர்கிறாளாம் என்ற மலர்கொடியிடம் பெத்த மகனே இல்லைன்னு ஆன பிறகு அவனோட குழந்தை பற்றி கவலை நமக்கு எதற்கு.
தெரியாமல் தப்பு பண்ணினால் மன்னிக்கலாம். தெரிஞ்சே தப்பு இல்லை துரோகம் பண்ணினவங்களை என்ன பண்ணுறது. கூடப் பிறந்த அண்ணனுக்கு துரோகம் பண்ணின பொறுக்கி நமக்கு பிறக்கவே இல்லை என்ற நெடுமாறன் ஒருவேளை உதய் அவங்களை மன்னிச்சாலும் என்னால மன்னிக்க முடியாது என்றார் நெடுமாறன்.
அதே மனநிலை தாங்க எனக்கும். என் உதய் போல ஒரு தங்கத்தை சுமந்த வயிற்றில் தான் அந்த அயோக்கியனை சுமந்தேன்னு நினைக்கும் பொழுது எனக்கே என்னை பிடிக்கவில்லைங்க. பொறுக்கி என்ற மலர்கொடி அமைதியாக அமர்ந்திருந்தார். விடு மலர் நம்ம உதய்க்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை தான் கிடைச்சுருக்கு.
ரோனி குழந்தை தான் ஆனால் அவளோட உலகமே நம்ம உதய் தான். இப்படி அவனை உயிராய் நினைக்கிற மனைவி கிடைக்கனும்னு தான் அப்படி எல்லாம் நடந்திருக்கும் போல அதனால நீ கவலைப் படாதே என்றார் நெடுமாறன்.
ஆமாம்ங்க நம்ம ரோனி தங்கம். அவளுக்கு இப்போ எல்லாம் ரொம்ப பொறுப்பு வந்துருச்சு என்ற மலர்கொடி கவலைகள் மறந்து மருமகள் புராணம் பாட ஆரம்பித்தார்.
என்ன அர்ச்சு தூங்கலையா என்ற விவேக்கிடம் தூக்கம் வரவில்லை அதனால தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் என்றாள் அர்ச்சனா. சரி பேசு என்றவனிடம் அதான் பண்ணுறேன் என்றாள் அர்ச்சனா. ஹும் அப்பறம் மேடம் என்றவனிடம் அப்பறமா விழுப்புரம் என்றாள். ஏன் தாம்பரம் இல்லையா என்ற விவேக்கிடம் சிரிப்பையே பதிலாக கொடுத்தாள். என்னடி சிரிக்கிற என்றவனிடம் சிரிக்காமல் அழனுமா என்றாள் அர்ச்சனா.
வேண்டாம் தாயே நீ அழுது மெரினா பீச்ல நீர்மட்டம் கூடப் போகுதாம் என்ற விவேக்கிடம் உங்களை என்று போனிலே அவனை அர்ச்சிக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா. அடியே பொண்டாட்டி போதும் உன் புருசன் பாவம் என்று அவன் கூறிட அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது அவனது பொண்டாட்டி என்ற அழைப்பில்.
என்ன அர்ச்சுமா சைலண்ட் ஆகிட்ட என்ற விவேக்கிடம் ஒன்றும் இல்லை என்று அவள் மௌனமாகிட ஓஓ பொண்டாட்டினு சொன்னதும் என் அர்ச்சுவுக்கு வெட்கம் வந்துருச்சா. அச்சோ அவள் வெட்கம் படுற அழகை என்னால பக்கத்தில் இருந்து ரசிக்க முடியலையே என்றவனிடம் கல்யாணத்திற்கு அப்பறம் உட்கார்ந்து ரசிங்க இப்போ நான் போனை வச்சுட்டு தூங்குறேன் என்றாள் அர்ச்சனா. சரிமா தூங்கு குட்நைட் என்ற விவேக் போனை வைத்தான்.
அர்ச்சனாவும் புன்னகையுடன் போனை வைத்து வெட்கத்துடனே திரும்பிட வாசலில் இடுப்பில் கை வைத்தபடி இந்திரஜா நின்றிருந்தாள்.
என்ன நாத்தனாரே லவ்வா என்ற இந்திரஜாவிடம் ஆமாம் அண்ணியாரே என்றாள் அர்ச்சனா. அடிப்பாவி எவ்வளவு கொழுப்பு உனக்கு ஒரு அண்ணிகிட்ட ஆமாம் லவ்னு சொல்லுற என்றாள் இந்திரஜா.
எதே அண்ணியா ஏன்டி நீ இன்னும் எனக்கு அண்ணி ஆகவில்லை என்ற அர்ச்சனாவிடம் இரு இப்போ வரேன் என்ற இந்திரஜா நேராக பிரகாஷின் அறைக்கு சென்றாள்.
அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டிட எவன்டா அவன் இந்த நேரத்தில் தூக்கத்தை கெடுத்துட்டு என்று திட்டிக் கொண்டே இழுத்துப் போர்த்தி படுத்தான் பிரகாஷ். யோவ் மாம்ஸ் கதவைத் திற என்று இந்திரஜா மீண்டும் அவனது அறைக் கதவைத் தட்டிட தட்டுத் தடுமாறி எழுந்து வந்தவன் கதவைத் திறந்தான்.
யோவ் மாம்ஸ் என்ன அதுக்குள்ள கவுந்தடிச்சு படுத்துட்டியா சரி வா என்றவளிடம் எங்கே இந்து என்றான் பிரகாஷ். நாசாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி பண்ண அட வாயா என்று அவனை இழுத்துச் சென்றாள் இந்திரஜா.
அடியேய் நானே இப்போ தான் சன்னிலியோன் கூட குளுமணாலில குளிரில் கட்டிப் பிடிச்சுட்டு டூயட் பாடிட்டு இருந்தேன் இப்படி பாதி தூக்கத்தில் என்னை எழுப்பி என் சன்னிலியோனை விட்டு பிரிச்சு என் கனவை கெடுத்து எங்கேடி இழுத்துட்டு போற என்றான் பிரகாஷ்.
அடி செருப்பால யோவ் மாம்ஸ் உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் குத்துக்கல்லு மாதிரி அத்தை பொண்ணு இருக்கும் போது சன்னிலியோன் கூட டூயட் பாடுவ அதுவும் குளுமணாலி என்றவள் அவனது காதை திருகிட இந்து ப்ளீஸ் விடும்மா உன் மாம்ஸ் பாவம். ஆல்ரெடி உன் ரெண்டு மாமியாரும் திருகி , திருகி அது பிஞ்ச காதா மாறிடுச்சு. நீயும் பிச்சுறாதே காதே இல்லைனா உன் மாம்ஸ் பார்க்க கன்றாவியா இருப்பேன் ஆல்ரெடி ஒரு பக்கி கூட என்னை சைட் அடிக்க மாட்டேங்குது என்று புலம்பியவனது தலையில் நங்கென்று கொட்டிய இந்திரஜா.
யோவ் மாக்கான் உன்னை சைட் அடிக்க நான் இருக்கும் பொழுது வேற யாருயா சைட் அடிக்கனும் என்று இந்திரஜா கூறிட நீ ஏன் என்னை சைட் அடிக்கனும் என்றான் பிரகாஷ்.
போடா மரமண்டை உன் தங்கச்சி என்னடானா நீ இன்னும் அண்ணியா வரவில்லைனு சொல்லுறா. நான் தான்டி உன் அண்ணினு உன்னை கூட்டிட்டு போயி நான் சொல்ல நினைச்சா உனக்கு என்னைத் தவிர மற்ற எல்லா பொண்ணுங்களும் கண்ணுக்கு தெரிவாங்க என்ற இந்திரஜா கோபமாக சென்றாள்.
என்ன இவள் தூக்கத்தை கெடுத்துட்டு என்ன சொல்லிட்டு இருக்கிறாள் என்ற பிரகாஷின் அருகில் வந்த அர்ச்சனா என்ன அண்ணா அண்ணி கோவிச்சுட்டு போறாங்க போல என்றாள். ஆமாம் ஏன் கோவிச்சுட்டு போறாள் என்றான் பிரகாஷ் அப்பாவியாக.
அட மக்கு அண்ணா அவள் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறாள். அதை தான் அவள் சூசகமா சொல்கிறாள் உனக்கு அது புரியாமல் அவளை கோபம் பட வச்சுட்ட என்றாள் அர்ச்சனா. அது எனக்கும் தெரியும் அர்ச்சனா என்றவன் என்னோட கல்யாணம் அப்பா, பெரியப்பா சம்மதம் இருந்தால் தான் நடக்கும்.
எனக்கும் இந்துவை பிடிக்கும் ஆனால் ஏற்கனவே நடந்த விசயங்கள் அப்பா, பெரியப்பாவை ரொம்பவே காயப் படுத்திருக்கு அதனால தான் அவகிட்ட அப்படி பேசினேன். எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவள் கிட்ட அதை சொல்லி அவள் மனசுல ஆசையை வளர்த்து விடக் கூடாதுல அதான் என்ற பிரகாஷ் அவள் கிட்ட போயி எதாச்சும் சமாதானமா பேசு அர்ச்சு நான் போயி துங்குறேன் என்ற பிரகாஷ் தன்னறைக்கு சென்றான்.
என்ன இந்து என்றவளிடம் நொந்து போன இந்து என்றாள் இந்திரஜா. அண்ணி என்ற அர்ச்சனாவிடம் அதான் உன் அண்ணன் சொல்லிட்டாரே அப்பா, பெரியப்பா சம்மதிச்சா தான் அண்ணினு அப்பறம் என்ன அர்ச்சு விடு எனக்கு ஏமாற்றம் புதுசு இல்லை.
உங்க பெரிய அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க தான் இங்கே வந்தேன். அவருக்கு கல்யாணம் ஆகிருச்சு. சரி நாம ஒன்றும் உதய் மாமாவை லவ் பண்ணவில்லையே பேசாமல் பிரகாஷ் மாம்ஸை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் இப்போ அதுவும் இல்லை என்ற இந்திரஜா சரி
எனக்கு தூக்கம் வருது என்று சென்று படுத்து விட்டாள்.
…..தொடரும்…