என்ன ரோனி ரெடியாகிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் ரெடி மாமா என்றவள் தனது யூனிபார்மை அணிந்து கொண்டு வந்தாள். அவளுக்கு அடி பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. இப்பொழுது கை கொஞ்சம் சரியாகி இருந்தது.
ப்ராக்டிகல் எக்ஸாம்ஸ் ஆரம்பமாகி இருந்ததால் அவன் அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவளை தயாராக சொன்னான். எல்லாம் படிச்சுட்ட தானே, ப்ராக்டிகல் சொதப்பிற கூடாது சரியா என்றவன் அவளிடம் திரும்ப , திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளும் மாமா நான் படிச்சுட்டேன், நல்லா பண்ணிருவேன்னு பதில் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
என்ன ரோனி கிளம்பிட்டியா சரி சாப்பிட வா என்ற சுசீலாவிடம் அத்தை எனக்கு ஜூஸ் போதும் என்றாள் வெரோனிகா. ஏன் வெறும் ஜூஸ் ஒழுங்கா டிபன் சாப்பிடு. எக்ஸாம் முடிஞ்சு மதியம் வீட்டிற்கு வருவதற்குள் அப்பறம் மயங்கி விழுந்துருவ இரண்டு இட்லி சாப்பிட்டு அப்பறம் ஜூஸ் குடி என்ற மலர்கொடி மருமகளை சாப்பிட வைத்தார். அவளும் அமைதியாக சாப்பிட்டு விட்டு தன் கணவனுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
என்ன ரோனி எக்ஸாமா என்ற இந்திரஜாவிடம் ஆமாம் அக்கா ப்ராக்டிகல் எக்ஸாம் என்றாள் வெரோனிகா. ஆல் தி பெஸ்ட் என்றாள் இந்திரஜா. தாங்க்ஸ்க்கா என்றவள் மாமா போகலாமா என்று தன் கணவனுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
என்ன ரோனி எக்ஸாம்க்கு நல்லா பிரிப்பேர் பண்ணிட்டியா என்ற அர்ஜுனிடம் ஹும் நல்லா பிரிப்பேர் பண்ணிட்டேன் அர்ஜுன் என்றாள்.
ப்ராக்டிகல் எக்ஸாம் முடிந்த பிறகு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் வெரோனிகா.
அந்த சமயம் சிவரஞ்சனி, கார்த்திகா இருவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டே வெரோனிகாவின் அருகில் வந்தனர். என்ன என்னைப் பார்த்து சிரிக்கிறிங்க என்ற வெரோனிகாவிடம் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும் என்றவள் உங்க அத்தை கூடிய சீக்கிரம் உங்க வீட்டுக்கு வந்துருவாங்க போல என்றாள்.
எதே என் அத்தையா என்ன உளருற என்ற வெரோனிகாவிடம் லாஸ்ட் மந்த் உதய் சாரும் அதான் உன் சந்துரு மாமாவும், வினித்ரா மேடமும் கோவிலில் நின்று பேசிட்டு இருந்தாங்க என்றாள் கார்த்திகா. அதனால என்ன என்ற வெரோனிகாவிடம் நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேனே வினித்ரா மேடமும், உதய் சாரும் லவ் பண்ணுறாங்கனு நீ தான் நம்பவில்லை அவங்க இரண்டு பேரும் நெருக்கமா நின்று பேசிட்டு இருந்ததை பார்த்தவங்க நிச்சயம் இவங்க புருசன், பொண்டாட்டி தான்னு நினைச்சுருப்பாங்க என்றாள் கார்த்திகா.
வெரோனிகா எதுவும் பேசாமல் மௌனமாக அதே நேரத்தில் முகத்தில் சிறு புன்னகையுடன் அவளை ஏறிட்டாள். சரி அவங்க லவ் பண்ணினால் உனக்கு என்ன ஏன் நீயும் என் சந்துரு மாமாவை லவ் பண்ணுறியா என்றாள் வெரோனிகா. சேச்சே என்ற கார்த்திகாவைப் பார்த்த வெரோனிகா புன்னகையுடன் இதோ பாரு கார்த்திகா என்னோட சந்துரு மாமா யாரை வேண்டுமானலும் லவ் பண்ணிட்டு போறாரு அதில் எனக்கே பிரச்சனை இல்லாத போது உனக்கு என்ன பிரச்சனை. அப்பறம் வினித்ரா மேடம் அவரை லவ் பண்ணினால் எனக்கு அத்தையா ஆக முடியாது. ஏன்னா சந்துரு மாமாவோட அம்மா தான் என்னோட அத்தை. முறையை இனிமேல் கரைக்ட்டா சொல்லு வரட்டா என்றவள் தன் நண்பர்களுடன் கிளம்பினாள்.
அட்றா, அட்றா நம்ம ரோனியா இது அந்த கட்டதுரை மூஞ்சில ஈ ஆடலை மச்சி என்றாள் நிகிலா. ஏய் ரோனி ஆமாப்பா இங்கே பாரு எனக்கும், விஷாலுக்கும் புல்லரிச்சு போச்சு என்றான் கிஷோர். ஆமாம் ரோனி அவள் சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிற என்றான் விஷால். நான் ஆல்ரெடி இவள் சொன்னதை வச்சு சந்துரு மாமாகிட்ட சண்டை போட்டிருக்கேன். அப்போ அவர் என்கிட்ட சொன்னது கட்டாயம் நான் அந்த வினித்ராவை லவ் பண்ணவில்லைனு அதனால நான் இப்பவும் என் சந்துரு மாமாவை நம்புகிறேன் என்றாள் வெரோனிகா. அவங்க இரண்டு பேரும் கோவிலில் சந்திச்சுகிட்டதா அந்த லூசு சொல்லுதே என்ற கிஷோரிடம் நீயும், நானும் நாளைக்கு கோவிலில் எதார்த்தமா பார்த்துக்கிறோம். பேசாமல் முகத்தை திருப்பிட்டா போக முடியும். நாம இரண்டு பேரும் க்ளாஸ்மெட்ஸ் அப்பறம் ப்ரண்ட்ஸ். அது போல தான் வினித்ரா மேடமும், சந்துரு மாமாவும் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறவங்க. அவங்க இரண்டு பேரும் கோவிலில் மீட் பண்ணிகிட்டதோ, பேசிட்டு இருந்ததோ தப்புனு எனக்கு தோணலை என்றாள் வெரோனிகா. பாவம் ரோனி இந்த கூமுட்டை கார்த்திகா உதய்சார் உன்னோட ஹஸ்பண்ட்னு தெரிந்தால் என்ன ஆகுமோ என்று சிரித்த நிகிலாவின் தலையில் கொட்டினாள் ஊர்மிளா. பேயே உங்க நான்கு பேர்கிட்ட மட்டும் அவள் சொல்லிருக்கானா உங்களால இந்த விசயம் வெளியே போகாதுனு தான். நீயே இப்படி சத்தமா சொல்லி ஊரெல்லாம் பரப்பிருவ போல என்றாள்.
சாரி ரோனி என்ற நிகிலாவிடம் இன்னும் ஒன் மந்த் அப்பறம் ஊரெல்லாம் பரப்பி விட்டுரு என்றாள் வெரோனிகா. என்ன சொல்லுற ரோனி என்ற அர்ஜுனிடம் ஆமாம் அர்ஜுன் எனக்கு பர்த்டே வர ஒன் மந்த் இருக்கு. எய்ட்டீன்த் பர்த் டே அப்பறம் நான் மேஜர் சந்தோசமா என் சந்துரு மாமாவை திரும்பவும் கல்யாணம் பண்ணிகிட்டு ஹாப்பியா இருப்பேன் என்றாள் வெரோனிகா. என்ன கல்யாணம் பண்ணிக்கப் போறியா அதான் ஆல்ரெடி முடிஞ்சுருசதே என்ற ஊர்மிளாவிடம் அது விருப்பமே இல்லாமல் நடந்துச்சு.
பதினெட்டு வயசு ஆனதும் நான் என் சந்துரு மாமாவை ரொம்ப ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பேன் என்றாள் வெரோனிகா.
அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகள் மட்டும் காதில் விழ அவளுக்கு சுருக்கென்றானது. என்ன இந்தப் பொண்ணு பதினெட்டு வயசு ஆனதும் சந்துரு மாமாவை ரொம்ப ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறாளா என்று நினைத்தபடி வந்தாள் வினித்ரா.
எதிரில் பிரகாஷ் வர அவனிடம் சார் ஒரு நிமிசம் என்றாள். சொல்லுங்க மேடம் என்றவனிடம் வெரோனிகா உங்க கசின் தானே என்றாள் வினித்ரா. ஆமாம் மேடம் என்ன விசயம் என்றான் பிரகாஷ். சந்துருங்கிறது என்றவளிடம் என் அண்ணா உதயச்சந்திரன். வெரோனிகா அண்ணனை சந்துரு மாமானு தான் கூப்பிடுவாங்க என்றான் பிரகாஷ். ஓஓ ஓகே சார் என்றவள் கிளம்பினாள்.
சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா என்ற வினித்ராவிடம் என்ன பேசனும் மேடம் என்றான் உதயச்சந்திரன். உங்க வொய்பை நான் பார்க்கனுமே என்றாள் வினித்ரா. ஒரு ஒன் மந்த் வெயிட் பண்ணுங்க மேடம் அவங்களை உங்களுக்கு அறிமுகம் படுத்தி வைக்கிறேன் என்றவனிடம் நல்லா பொய் சொல்லுறிங்க சார். இல்லாத ஒரு வொய்ப்பை எப்படி கொண்டு வருவிங்க என்ற வினித்ரா ஓஓ உங்களுக்கு கூட வேலை பார்க்கிற டீச்சரை விட உங்க கிட்ட படிக்கிற ஸ்டூடண்ட் மேல தானே கண்ணு என்றாள்.
வாட் நான்சன்ஸ் என்ன பேசுறிங்க மேடம் நீங்க என்றான் உதயச்சந்திரன். என்ன சார் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குதா என்ற வினித்ரா மேலும் பேச ஆரம்பித்தாள். உங்களை என்னவோ நினைச்சேன் சார் ஆனால் இப்படி ஒரு மோசமான ஆளா இருப்பிங்கனு நினைக்கவே இல்லை.
உங்களை விட பத்து வயசு சின்னப் பொண்ணை உங்க காதல் வலையில் விழ வச்சு நீங்க தினமும் அந்தப் பொண்ணை பைக்ல கூட்டிட்டு போறது நேரா வீட்டுக்குத் தானா இல்லை வேற எங்கேயுமா , வெரோனிகா மட்டும் தானா இல்லை இன்னும் பல சின்ன பொண்ணுங்களா என்ற வினித்ராவிடம் ஸ்டாப்இட் என்றான் உதயச்சந்திரன்.
வாட்ஸ் யுவர் ப்ராப்லம் என்ன பேசிட்டு இருக்கிங்க நீங்க வெரோனிகா யாருனு உங்களுக்கு தெரியுமா. நான் யாருனு உங்களுக்கு தெரியுமா. நீங்க தான் சொன்னிங்க நான் எந்த பொண்ணையும் கண்ணை பார்த்து பேசுவேன்னு இப்போ நீங்களே இப்படி பேசுறிங்க. என்ன பிரச்சனை மேடம் உங்களுக்கு உங்களை நான் பிடிக்கவில்லைனு சொன்னதால என்னைப் பற்றி தப்பா பேசுறிங்க. அப்படியாவது உங்க கோபம் தணியட்டும் என்றான்.
அவள் ஏதோ கூற வர நீங்க என்னை பேசின பேச்சுக்கு உங்களை டிஸ்மிஸ் பண்ண கூட என்னால முடியும். பட் அதுக்கு என் அப்பாகிட்ட இங்கே இல்லைனாலும், வீட்டில் நான் ரீசன் சொல்லி தான் ஆகனும் அந்த ஒரு காரணத்திற்காக தான் அமைதியா இருக்கேன்.
வெரோனிகா பற்றி நீங்க கவலைப் பட வேண்டாம். அவளை நான் அப்யூஸ் பண்ணிருவேன்னு தான் உங்க கவலையா இல்லை உங்களை விரும்பாமல் போன நான் எங்கே வெரோனிகாவை விரும்பிருவேன்னு கவலையா என்றான் உதயச்சந்திரன்.
எனக்கு சத்தியமா கல்யாணம் ஆகிருச்சு. நம்புறதும், நம்பாததும் உங்க விருப்பம் என்றவன் எனக்கு நேரம் ஆச்சு என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
என்ன மாமா ஏன் டல்லா இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை என்றான் உதயச்சந்திரன். அவள் அவனை தொல்லை செய்யாமல் அமைதியாக பைக்கில் அமர்ந்திட அவன் வீட்டிற்கு சென்றான்.
என்ன ரோனி எக்ஸாம் எப்படி பண்ணிருக்க எல்லாம் ஓகே தானே என்ற இந்திரஜாவிடம் ஓகே அக்கா நல்லா தான் பண்ணிருக்கேன் நிச்சயம் பெயில் ஆக மாட்டேன் என்றாள். சரி என்றவள் அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
என்ன உன் ஆளு விளக்கெண்ணையை குடிச்சது போல விரைப்பா இருக்காரு என்ற இந்திரஜாவிடம் உங்க முறைப் பையன் தானே நீங்களே கேளுங்க என்னாச்சு மாமான்னு என்றாள் வெரோனிகா.
எனக்கென்ன பயமா என்ற இந்திரஜா ஏதோ சொல்ல வர மாமா என்று அவனை அழைத்தாள் வெரோனிகா. அவன் அதை காதில் வாங்காமல் சென்றிட என்ன ரோனி ஸ்பீக்கர் அவுட்டா உன் ஆளுக்கு என்றாள் இந்திரஜா. அதெல்லாம் கிடையாது இருங்க நான் வரேன் என்றவள் தன்னறைக்கு சென்றாள். என்ன மாமா கூப்பிட கூப்பிட நீங்க பாட்டுக்கு வரிங்க உங்களுக்கு ஸ்பீக்கர் போச்சுனு இந்து அக்கா சொல்லுறாங்க அது உண்மையா என்று சிரித்தபடி அவள் கேட்டிட ஆமாம்டி ஸ்பீக்கர் போச்சு நான் டமாரம் போதுமா. சும்மா மாமா , மாமான்னு ஏன் என் உயிரை வாங்குற. ஒரு பத்து நிமிசம் கூட தனியா இருக்க விட மாட்டியா. எல்லாம் இந்த அப்பத்தாவை சொல்லனும் உன்னை என் தலையில் கட்டி வச்சு கண்டவளும் என்னை என்ன பேச்சு பேசுறாள் என்று வினித்ரா மீது உள்ள கோபத்தை வெரோனிகா மீது காட்டினான் உதயச்சந்திரன்.
மாமா இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன் என்றவளிடம் நீ ஒன்றும் தப்பா சொல்லலைம்மா நான் தான் தப்பு. என்றவன் கோபத்தில் முகத்தை திருப்பிக் கொள்ள
அவள் மௌனமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்.
…..தொடரும்..