விதியின் முடிச்சு…(40)

4.2
(5)

என்னாச்சு ரோனி என்ற இந்திரஜாவிடம் ஒன்றும் இல்லையே என்றவள் கிட்சனுக்குள் நுழைந்தாள். அக்கா அத்தை எங்கே என்றவளிடம் இரண்டு பேரும் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வளைகாப்பு அதான் அங்கே போயிருக்காங்க என்றாள் இந்திரஜா.

 

நீங்க ஜூஸ் குடிக்கிறிங்களா என்றவளிடம் உனக்கு வேண்டுமா நான் ரெடி பண்ணி தரட்டுமா என்றாள் இந்திரஜா. இல்லைக்கா நானே ரெடி பண்ணிடுறேன் என்றவள் ஜூஸ் ரெடி செய்தாள்.

 

சாத்துக்குடி ஜூஸ்னா உனக்கு பிடிக்குமா ரோனி என்ற இந்திரஜாவிடம் ஜூஸ் எனக்கில்லை சந்துரு மாமாவுக்கு என்றவள் ஒரு கிளாஸை இந்திரஜாவிடம் கொடுத்து விட்டு தன் கணவனுக்காக ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு சென்றாள்.

 

கோபம் கொஞ்சமும் குறையாமல் தான் அவன் அமர்ந்திருந்தான். அவளை பிடிக்கவில்லைனு நான் ரொம்ப டீசன்ட்டா தானே சொன்னேன். இன்சல்ட் ஒன்றும் பண்ணவில்லையே அப்பறம் ஏன் என்னைப் பற்றி தப்பா பேசினாள். ரோனிக்கும் , எனக்கும் பத்து வயசு ஏன் இருபது வயசு வித்தியாசமே ஆனாலும் இவளுக்கு என்ன. இடியட் நான் ஒன்றும் என்னோட ஸ்டூடண்டை லவ் பண்ணி அப்யூஸ் பண்ணவில்லை. வெரோனிகா முதலில் என்னுடைய மனைவி அப்பறம் தான் ஸ்டூடண்ட் அப்போ கூட நான் அவள் கிட்ட எந்த வகையிலும் தப்பா நடந்துக்கிட்டதில்லையே என்று யோசித்தவனிடம் நீ ஏன் முட்டாள் மாதிரி அந்த வினித்ரா சொன்ன விசயங்களை யோசிக்கிற உதய் என்று அவனை அவனே கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் திரும்பிட கையில் பழச்சாறுடன் வந்த வெரோனிகா மாமா ஜூஸ் எடுத்துக்கோங்க என்றாள். இல்லை எனக்கு வேண்டாம் என்றவனின் அருகில் வந்தவள் என்ன வேண்டாம் ஒழுங்கா குடிங்க என்று அவனுக்கு ஜூஸை ஊட்டி விட வர சரி கொடு என்று வாங்கி குடித்தான். அவள் சென்று விட அவன் எங்கேயோ கிளம்பி சென்று விட்டான்.

 

என்னாச்சு ரோனி உன் ஆளு எங்கேயோ கிளம்பி போயிட்டாரு என்ற இந்திரஜாவிடம் தெரியலைக்கா மாமா கொஞ்சம் டென்சனா இருந்தாங்க எதாச்சும் வேலையா இருக்கும் என்றவள் எனக்கு தூக்கம் வருது நான் போயி தூங்கட்டுமா என்றாள்.

 

தூங்கப் போறியா ரோனி நாம கொஞ்சம் ஷாப்பிங் போகலாமா என்றாள் இந்திரஜா. மாமாகிட்ட சொல்லாமல் எப்படிக்கா என்ற வெரோனிகாவிடம் போன் பண்ணி சொல்லு என்றாள் இந்திரஜா. இல்லை மாமா இருந்தாங்கனா காசு கொடுப்பாங்க என்றவளை முறைத்தவள் என்னை உன் அக்காவா நீ நினைக்கவில்லை அப்படித் தானே என்றாள் இந்திரஜா.

 

ஐய்யோ, அக்கா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்ற வெரோனிகாவிடம் அப்போ நீ வா, என்கிட்ட காசு இருக்கு. இன்னைக்கு செலவு என்னுடையது. உனக்கு நான் இதுவரைக்கும் எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை அதனால நான் தான் செலவு பண்ணுவேன் என்றவள் அவளை அழைத்திட வெரோனிகாவும் அவளுடன் கிளம்பினாள்.

 

 

அக்கா எப்படி போகிறோம் என்றவளிடம் கால்டாக்ஸி புக் பண்ணிருக்கிறேன் என்றாள் இந்திரஜா. சரிங்க அக்கா என்றவள் கிளம்பி இந்திரஜாவுடன் ஷாப்பிங் சென்றாள்.

 

என்ன அண்ணா அண்ணியை வீட்டில் விட்டாச்சா என்ற பிரகாஷிடம் விட்டுட்டேன் என்றான் உதயச்சந்திரன். அண்ணா என்ற பிரகாஷிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். இல்லை அந்த வினித்ரா மிஸ் சந்துருனு உங்க வீட்டில் யாரும் இருக்காங்களான்னு கேட்டாங்க நானும் அண்ணி உங்களை அப்படி தானே  கூப்பிடுவாங்க அதனால நீங்க தான் சந்துருனு சொன்னேன் என்றான். உதயச்சந்திரனுக்கு ஏதோ விளங்கிட அந்த நேரம் சரியாக வெரோனிகாவிடம் இருந்து போன் வந்தது.

 

ஹலோ என்றவளிடம் ரோனி என்னைப் பற்றி ஸ்கூலில் யார்கிட்டையாச்சும் பேசிட்டு இருந்தியா என்றான் உதயச்சந்திரன். ஏன் மாமா என்றவளிடம் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்றான். ஆமாம் என்று கார்த்திகா அவளை வெறுப்பேற்றியது முதல் நண்பர்களிடம் பேசியது வரை கூறினாள் வெரோனிகா. ஸாரி மாமா நான் ஏதும் தப்பா பேசிட்டேனா என்றவளிடம் இல்லை ரோனி நீ எதுவும் தப்பா பேசவில்லை என்றவன் அந்த கார்த்திகா சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிற என்றான்.

 

அதில் நினைக்க என்ன இருக்கு நீங்களும், அந்த வினித்ரா மேடமும் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறவங்க வெளியில் எங்கேயாச்சும் பார்க்கும் பொழுது பேசுறது ஒன்றும் தப்பில்லையே என்றாள் வெரோனிகா. சரி என்றவனிடம் மாமா இந்து அக்கா என்னை ஷாப்பிங் கூப்பிடுறாங்க போயிட்டு வரட்டுமா என்றாள். தாராளமா போயிட்டு வா ரோனி என்றவன் போனை வைத்தான்.

 

ச்சே ஏன் உதய் வர வர நீ என்னம்மோ சின்னப் பிள்ளை மாதிரி நடந்துக்கிற ரோனிகிட்ட உள்ள மெச்சுரிட்டி கொஞ்சமும் உனக்கு இல்லை. அவள் தன்னோட ப்ரண்ட்ஸ்கிட்ட என்னைப் பற்றி பேசினதை அரைகுறையா கேட்டுட்டு வந்து இந்த வினித்ரா மேடம் ஏதோ உளறிக்கிட்டு இருந்திருக்கு. அந்தக் கோபத்தை கூட நீ வெரோனிகா கிட்ட தான் காட்டின ஆனால் அப்போ கூட அவள் உனக்காக ஜூஸ் எடுத்துட்டு வந்தாள்.

 

அவளோட அன்பை புரிந்து கொள்ளாமல் அவளைப் போயி திட்டிட்டியே என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவன் இன்னைக்கு ரோனிக்கு சர்ப்பரைஸா ஒரு கிப்ட் வாங்கனும் என்ன வாங்கலாம் என்று யோசித்தவனுக்கு அவளுக்கு ஊஞ்சல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது ஞாபகம் வர அதையே வாங்கலாம் என்று முடிவு செய்தான்.

 

 

என்ன ரோனி உன் ஆளு என்ன சொன்னாரு என்ற இந்திரஜாவிடம் மாமா உங்க கூட போயிட்டு வரச் சொன்னாங்க என்ற வெரோனிகா கிளம்பினாள். அக்கா என்று இந்திரஜாவின் அருகில் சென்றவள் தலை வாரி விடச் சொல்ல உனக்கு ப்ரீ ஹேர் நல்லா இருக்கும் ரோனி என்றாள் இந்திரஜா.

 

ஐய்யோ அக்கா இவ்வளவு நீளமான முடி காத்தடிச்சா மூஞ்சி முழுக்க வந்து விழும் அதெல்லாம் வேண்டாம் பிண்ணி விடுங்க என்றாள். இரு நான் உனக்கு அழகா வாரி விடுகிறேன் என்று அவளை அலங்கரித்தாள் இந்திரஜா.

 

 

என்ன வினி இவ்வளவு கடுப்பா வர என்ற பவித்ராவிடம் ஒன்றும் இல்லை என்றவள் எங்கே கிளம்பிட்ட என்றாள் வினித்ரா. ஷாப்பிங் தான் வாயேன் நீயும் என்று தன் தோழியையும் அழைத்துக் கொண்டு சென்றாள் பவித்ரா.

 

என்னடி டென்சன் உனக்கு என்ற பவித்ராவிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை கூறிய வினித்ரா நீ சொன்னது போல அவன் சரியான பொறுக்கியா தான் இருப்பான் போல. எப்படி இப்படி ஒருத்தனால பெர்பெக்ட்டா இருக்க முடியும். அவனோட டேஸ்ட் சின்னப் பொண்ணுங்க போல இந்த வெரோனிகா பொண்ணு வேற அவன் மேல லவ் என்றவளிடம் நீ என்ன லூசா வினி என்றாள் பவித்ரா.

 

என்ன சொல்லுற பவி என்றவளிடம் வினி உனக்கு என்ன பிரச்சனை அவன் உன்னை வேண்டாம்னு சொன்னதா இல்லை அந்த வெரோனிகா அவனை லவ் பண்ணுறேன்னு சொன்னதா என்றாள் பவித்ரா.

 

 

இரண்டும் தான் என்ற வினித்ரா கோபமாக முகத்தை திருப்பிக் கொள்ள அந்த உதய் ரொம்ப நல்லவன் வினி என்றாள் பவித்ரா. ஆமாம் ரொம்ப நல்லவன் தான் என்ற வினித்ராவிடம் நான் தான் அவனை சரியா புரிந்து கொள்ளாமல் உன்கிட்ட அவனை கெட்டவன்னு நிரூபிக்கனும்னு பேக் ஐடி கிரியேட் பண்ணி மெசேஜ் எல்லாம் அனுப்பினேன். அவன் ஒரு மெசேஜ் கூட ரிப்ளை பண்ணவில்லை.

 

நான் வேலை பார்க்கிற ஹாஸ்பிடலில் ஒரு நாள் அந்த உதய் எங்க டாக்டர் ரூபிணிகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்ததை பார்த்தேன். அப்போ தான் அவன் தன்னோட வொய்ப்க்கு ஒரு இன்சிடென்ட்ல  மென்டலி கொஞ்சம் அப்சட்டா இருக்கிறதால சைக்கார்டிஸ்ட் ட்ரீட்மென்ட் எடுத்ததா டாக்டர் சொன்னாங்க. அவனுக்கு நிஜமாகவே கல்யாணம் ஆகிருச்சி. ஆனால் ஏதோ பர்சனல் இஸ்யூஸ்னால அவங்க மேரேஜ் பற்றி யாருக்கும் சொல்லாமல் இருக்காங்களாம் என்றாள் வினித்ரா. ரூபிணி டாக்டர் உதய்யோட பெஸ்ட் ப்ரண்ட்டாம் அவங்க சொன்னதை வச்சு தான் சொல்கிறேன். அவன் தப்பானவன் இல்லை என்றாள் பவித்ரா.

 

 

 

அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சுனா அப்பறம் ஏன் அந்த வெரோனிகா என்ற வினித்ராவிடம் அவன் வொய்ப் நேம் வெரோனிகான்னு தான் ரிப்போர்ட்ல இருந்துச்சு என்றாள் வினித்ரா. வாட் அவள் சின்னப் பொண்ணு அவனை விட பத்து வயசு சின்னப் பொண்ணு என்ற வினித்ரா மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணுறது எவஙளவு பெரிய குற்றம் என்றாள்.

 

 

அது அவங்க பர்சனல் அதில் நீ ஏன்டி தலையிடுற முட்டாள் என்ற பவித்ரா இவளால என்னோட ஷாப்பிங் போற மைண்ட் செட்டே போச்சு என்றவள் அந்த உதய் உனக்கு இல்லை வினி அதனால அவனை மறந்திரு. வெரோனிகா அவனோட மனைவி அவள் சின்னப் பொண்ணு, பெரிய பொண்ணு இதெல்லாம் அவங்க பர்சனல் அதில் தலையிடுற உரிமை உனக்கு இல்லை என்ற பவித்ரா வா கடை வந்துருச்சு என்றாள்.

 

என்னக்கா ஒரு டிரஸ் செலக்ட் பண்ண இவ்வளவு நேரமா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் நல்லதா செலக்ட் பண்ணனும்ல என்றாள் இந்திரஜா. பிரகாஷ் மாமா கூட உங்களை மாதிரி தான் அப்பப்பா ஒரு முறை நான், சந்துரு மாமா, பிரகாஷ் மாமா மூன்று பேரும் கடைக்கு வந்தோம். அவரும் இப்படித் தான் ஒரு டிரஸ் செலக்ட் பண்ணுறதுக்குள்ள ஒரு மணி்நேரம் ஆக்கிட்டாரு என்று சிரித்தாள் வெரோனிகா.

 

அக்கா தப்பா நினைக்காதிங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு பேசாமல் நீங்க பிரகாஷ் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா நாம எல்லோரும் சந்தோசமா இருக்கலாம் என்றாள் வெரோனிகா.

 

 

அவளைப் பார்த்து சிரித்த இந்திரஜா உன் பிரகாஷ் மாமா சம்மதம் சொல்லட்டும் அப்பறமா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றவள் இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்கும் என்ற இந்திரஜாவிடம் மெரூன் கலர் சந்துரு மாமாவுக்கு பிடிக்காது என்றாள் வெரோனிகா.

 

யார் சொன்னது என் தயா மாமாவுக்கு மெரூன்கலர் தான் பிடிக்கும் என்று வந்தவளைக் கண்டு அதிர்ந்து போனாள் இந்திரஜா. உங்க தயா மாமாவுக்கு மெரூன் கலர் பிடிக்கலாம் நான் என் சந்துரு மாமா பற்றி சொன்னேன் என்ற வெரோனிகா  நீங்க யாரு என்றாள்.

 

நானும் நீ சொன்ன உன் சந்துரு மாமாவைத் தான் சொன்னேன். அவருக்கு மெரூன் கலர் தான் பிடிக்கும் ஆனால் உனக்கு இந்த டிரஸ் கொஞ்சம் கூட சூட் ஆகாது என்றவள் என்ன இந்து இது உன் செலக்சன் நல்லாவே இல்லையே என்றாள் ஸ்ரீஜா.

 

 

அம்மா என்று ஓடி வந்த குழந்தையை தூக்கியபடி வந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் வெரோனிகா. அவளுக்கு தலை எல்லாம் சுற்றுவது போல இருக்க ஸ்ரீஜாவை அம்மா என்று அழைத்த குழந்தை அவனை அப்பா என்று அழைத்திட அதிர்ச்சியில் உறைந்து போன வெரோனிகாவின் கண்கள் கலங்கிட இதயம் தாறுமாறாக துடித்திட அப்படியே மயங்கி சரிந்தாள்.

 

 

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!