இரவு யமுனா டைனிங் டேபிளிலில் உணவு பதார்த்தங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரது கணவர் பாலகிருஷ்ணன் சாப்பிட வந்து அமர்ந்தவர், “தியா குட்டி எங்க யமுனா?” என்று கேட்டார்…
“அவ ரூம்ல இருக்கா”…
“என்னது ரூம்ல இருக்காளா, என் கார் சத்தம் கேட்டாலே போதும் டாடி சொல்லி என் பொண்ணு ஓடி வருவா, இப்ப நான் வந்து ஓன் ஹவருக்கு மேல் ஆக போகுது… நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்… நீ ஏதாவது என் பொண்ணை தீட்டுனயா? நான் போய் என் பொண்ணை பார்த்ததுட்டு வரேன்” என்று எழுந்தார்…
“அட சாப்பிட உட்கார்ந்துட்டு எழுந்திருக்க கூடாது உட்காருங்க… உங்க பொண்ணை நான் எதுவும் சொல்லலை, ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கா.. அதான் நீங்க வந்தது கூட தெரியலை… நீங்க இருங்க நான் போய் கூப்பிட்டு வரேன்” என்று யமுனா மாடிப்படிகளில் ஏறினார்…
அவருக்கு ஒரே யோசனை தியா மாலுக்கு சென்றதிலிருந்தே சரியில்லை.. ஷாப்பிங் முடித்து வீடு திரும்புகையில் அவள் முகமே வாடி இருந்தது…
வீட்டிற்கு வந்து அவளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் யமுனா செய்து கொண்டு போய் கொடுத்த போது கூட வேண்டாம் என்று கூறி அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்… ஒரு நாளும் அவளை இப்படி அவர் பார்த்தது கிடையாது… எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் மகள் வாட்டத்துக்கு என்ன காரணம் என்று மறுபடியும் விசாரிக்க ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள்…
அறைக்குள் இருந்த தியாவோ பயங்கரமான குழப்பத்திலும் கவலையிலும் இருந்தாள்… அவளின் எண்ணம் முழுவதையும் எப்போதும் போல் தேவாவே ஆக்கிரமித்து இருந்தான்… இன்று மாலில் நடந்த விஷயங்களை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள்…
ஃப்ரோசோன் மால்:
தேவா தனக்கு தேவையான சில பொருட்களை வாங்கி விட்டு ஒரு ஷாப்பில் இருந்து வெளியே வர, அவனின் முன்பு வந்து நின்றாள் தியா… அதுவும் இவ்வளவு நேரம் ஓடி வந்ததன் விளைவாக இரெயில் எஞ்சின் புகை விடுவது போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து நிற்க,
தேவாவிற்கு உண்மையிலே அவளை அடையாளம் தெரியவில்லை.. யார் இந்த பொண்ணு இப்புடி வழியை மறைச்சு வந்து நிற்குது என எண்ணியவன் அவளை கடந்து போக எத்தனிக்க,
மூச்சு வாங்கியதில் தியாவால் பேச கூட முடியவில்லை…
ஒரு நிமிஷம் நில்லுங்க எனும் விதமாக தேவா முன்பு கை நீட்டி செய்கை செய்ய,
ஓய் யார் பாப்பா நீ வழியை விடாம நிற்கிற நகரு தேவா சொல்ல,
யார் என்று கேட்டதில் தியாவிற்கு புசுபுசுவென கோவம் வந்தது.. தன்னை தெரியவில்லையே என,
பாவா என்ற விழிப்பில் ஓ… இந்த லூசா என நியாயபகம் வந்தது.. ஆனாலும் தெரியலை பாப்பா வழியை விடு என்றவன்
அவள் எதிரே நிற்கவும் அவளின் வலது புறம் இடமிருக்க நகர பார்த்தான், தியாவும் நகர்ந்தாள் அவனுக்கு வழி விடாமல் இரண்டு கையையும் நீட்டியபடி, சரி என்று எதுவும் பேசாமல் இடது புறம் நகர்ந்தால் அவளும் இடது புறம் நகர்ந்து வழி மறித்தாள்…. தேவா நிமிர்ந்து பார்த்து முறைத்தான்…
தியா பயப்படுபவளா அப்புடியே நிற்க,
இவளை கோவமாக வந்தது.. இருந்தும் பொது இடம் என்பதால் திட்டவும் முடியவில்லை.. அதனால் அவள் காதை பிடித்து இழுத்து ஓரமாக நிறுத்தி விட்டு முன்னேறி நடந்தான்…
ஆ…. என்றபடி வலியில் காதை தேய்த்து கொண்டே திரும்பி பார்க்க
தேவா ரொம்ப தூரம் நடந்து இருந்தான்.. நடக்க சொன்னா பறக்குறார் என சலித்து கொண்டவள் மீண்டும் ஓடி அவன் அருகே சென்றாள்..
இப்போதும் தேவா நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடி கொண்டே பேசினாள்…
அச்சோ ஒரு நிமிஷம் நில்லுங்க பாவா ஏன்ஸிப்புடி பண்றீங்க.. உங்களுக்காக உங்ககிட்ட பேசுறதுக்காக என் அம்மாகிட்ட பொய்க்கு மேல்ல பொய் சொல்லி ஓடி வந்தா நீங்க கண்டுக்காம போறீங்களே இது எல்லாம் நியாயமா குறைப்பு,
ஹு ஆர் யூ என கேட்டான் தேவா…
என்னை தெரியாத உங்களுக்கு, சும்மா பொய் சொல்லாதீங்க பாவா, கொஞ்ச நேரம் முன்ன இவளான்னு நீங்க ஒரு லுக் விட்டிங்களே அதை நான் கவறிச்சுட்ணேன்.. அதனால் வேஸ்ட்டா பொய் சொல்லாதீங்க.. என்னை உங்களுக்கு நல்லாவே தெரியும்…
தெரிஞ்சா என தேவா தான் கேள்வியாக நிறுத்தி தியாவை பார்த்தான்… அதுக்கு என்ன பண்ணனும்ங்கிற என்ற கேள்வி இருந்தது அந்த பார்வையில் அது தியாவிற்கு புரிய,
தெரிஞ்சவங்களை வெளிய எங்கையாவது பார்த்தா சின்னதா ஒரு ஸ்மைல் ஹாய் ஹலோ எப்புடி இருக்கீங்க இரண்டு வார்த்தை பேசனும் தானே,
அப்புடி ஏதாவது கவர்மென்ட் புதுசா ரூல்ஸ் போட்டு இருக்காங்களா என்ன ஆச்சர்யம் போல் தேவா கேட்க,
ரூல்ஸ் எல்லாம் இல்லை.. அது ஒரு பேஸிக் மேன்னர்ஸ் தானே,
நான் மேனர்ஸே தெரியாத பொறம் போக்குன்னு வச்சுக்கோ… ஆனா நீ தான் மேனர்ஸ்ல பி.ஹெச்.டி படிச்சவாளாச்சே.. ஒருத்தவங்க உன்னை தெரிஞ்ச்சும் தெரியாத போல கண்டுக்காம அவாய்ட் பண்ணிட்டு போறாங்கன்னா அவங்களுக்கு நம்ம கூட பேசுறது பிடிக்கலை.. அவங்களை தொந்தரவு பண்ண கூடாதுங்கிற அந்த மேனர்ஸ் தெரியாத உனக்கு கோவமாக கேட்டான்… வார்த்தைகளில் இருந்த கோவம் குரலில் இல்லை.. மற்றவர்கள் கவனத்தை திருப்பாத மெதுவான குரலில்,
இங்க பாரு எனக்கு உன்கிட்ட பேச பிடிக்கல.. சுத்தமா பிடிக்கல.. உன் பேச்சு எரிச்சலூட்டுது.. இனிமே பாவா மயிர் மண்ணாங்கட்டின்னு கூப்பிட்டு என் முன்னாடி வந்த அவ்ளோ தான் என விரல் நீட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து நகன்றான்..
புட் கோர்ட்டில் சாப்பிட தனக்கு தேவையான ஐட்டங்களை வாங்கிய தேவா ஒரு டேபிளில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க, அவன் எதிர்புறம் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் தியா…
அவளை பார்த்து உஃப் என பெருமூச்சு விட்டவன் ஏய் உனக்கு என திட்ட ஆரம்பிக்கும் முன்னரே,
அவன் முன்பு ஒரு நிமிஷம் என் கை நீட்டியவள் புரியுது நான் உங்களை தொந்தரவு பண்றேன்னு, ஆனா இதுக்கு எல்லாம் காரணம் நான் இல்ல நீங்க தான்..
ஏதே.. நானா தேவா கோவப்பட,
நீங்கன்னா நீங்க மட்டும் இல்ல.. உங்க வீட்டு ஆளுங்க தான்.. எப்ப பார்த்தாலும் என் முன்னாடி தேவாவா அச்சச்சோ அவர் ரொம்ப பயங்கரமான ஆளாச்சே.. அவன் அப்புடி இப்புடின்னு பில்டப் பண்றாங்க.. அந்த அப்புடியும் இப்புடியும் எப்புடின்னு நான் போய் கேட்டா… ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க..
சரி உங்ககிட்டே கேட்டு தெரிஞ்சிக்கலாம் பார்த்தா நீங்க எப்ப பாரு வெந்நீர்ல விழுந்த வெறி அடுத்த வார்த்தை அவள் சொல்லும் முன்பு
ஏய் என தேவா உறுமி கொண்டு இருக்கையை விட்டு எழ பார்க்க,
அட உக்காருங்க, வெறி பிடிச்ச சிங்கம் போல கர்ஜிக்கிறீங்களேன்னு சொல்ல வரதுக்குள்ள டென்ஷனாக்கிட்டு என கேவலமாக சமாளிக்க,
அவளை முறைத்து தேவா உனக்கு இப்ப என்ன தான் வேணும் ஏன் ஏதேதோ உள்ளிட்டு இருக்க என் கேட்க,
எனக்கு நிறைய ஏன்க்கு ஆன்சர் வேணும்… அதுக்கு முன்ன இந்த மொஜிட்டோ வேணும் என்றவள் அவனிடம் கேட்காமலே அவன் வாங்கி வைத்திருந்த மொஜிட்டோ எனப்படும் குளிர்பானத்தை எடுத்து பருக தொடங்கினாள்…
உங்களை பார்க்க அடிச்சு பிடிச்சு ஓடி வந்ததில் தாகம் எடுக்குது என்றவள் மீதியையும் பருகினாள்…
தேவா அவளையே பார்த்து இருந்தான்.. ஏனோ அவளின் இன்றைய செய்கைகள் எதுவும் பெரிதாக அவனுக்கு கோவத்தை தரவில்லை…. அவளின் செய்கைகள் அவனுக்கு சூர்யாவை தான் நியாபிப்படுத்தின..
அவனையும் பிரச்சினை ஏற்பட்ட காலத்திலிருந்து எத்தனையோ முறை தன்னை விட்டு தள்ளி நிறுத்த அலட்சியப்படுத்தி இருக்கிறான்… திட்டி இருக்கிறான்.. ஆனால் சூர்யா ஒரு நாளும் அதை எல்லாம் பெரிது படுத்தாது தேவா பேசவில்லை என்றாலும் பேசவான்.. அவன் அன்னை கூட வாரம் ஒரு முறை இல்ல பத்து நாள் ஒரு முறை தான் பேசுவதும்.. சூர்யாவோ ஒரு நாள் கூட அவனை பார்க்காமல் கூட இருக்க மாட்டான்.. எங்க இருக்க என கேட்டுட்டு நச்சரித்தாவது வந்து பார்த்து விட்டு தான் செல்வான்.. இவளின் இந்த செய்கை சூர்யா போல என்ற எண்ணம் வர,
ச்சே இது என்ன கேணதனமான யோசனை அவன் என் ஃப்ரெண்ட் இந்த பொண்ணு யாரோ, ஆனா இனி என்கிட்ட பேசாத படி என்னை பக்கம் வராதபடி பார்த்துக்கணும் அதுக்கு என்ன பண்ணலாம் என யோசித்தான்…
இவர்கள் இங்கு அமர்ந்து இருக்க. அதே மாலிற்கு வந்து இருந்தனர் தேவாவின் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி நால்வரும். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் அருகே இருந்த திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு திரும்பும் போது மஞ்சுளா தனது மாமனார் வேதசாலத்திடம் மாலிற்கு சென்று ஷாப்பிங் செய்து விட்டு செல்லலாம் என்று கூற, வேதாசலம் தனது ப்ரியமான மருமகள் மஞ்சுவிற்காக அவரும் வந்தார்…
அவர்கள் தனது ஷாப்பிங்கை முடித்து விட்டு புட் கோர்ட்டிற்குள் நுழையும் போது மஞ்சுளா கண்ணில் தேவா பட்டான். மாமா உள்ள போக வேணாம் நாமா திரும்பி போயிடலாம் என்றாள் மஞ்சு. ஏம்மா என்னாச்சு என்று வேதாசலம் கேட்க.. அங்க பாருங்க மாமா என்று மஞ்சு கை நீட்ட மற்ற மூவரும் திரும்பி பார்த்தனர்… அங்கு தேவாவும் அவனுடன் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தது பட்டது… தேவா முகமே அவர்களுக்கு தெரிந்தது தியா திரும்பி அமர்ந்து இருந்ததால் அவள் முகம் தெரியவில்லை…
ஏன் மஞ்சு அவன் இருந்தா நமக்கு என்ன அதற்கு ஏன் நாமா போக கூடாது என்று ஜெயேந்திரன் கேட்டார்…
ஏங்க நம்ம மாமாக்கு ஒரு கெளரவம் மரியாதை இருக்கு.. அவர் போய் பட்ட பகல்ல பப்ளிக் ப்ளேஸ்ல உங்க தம்பி அடிக்கிற கூத்தையும் அந்த மாதிரி பொண்ணு முகத்தை எல்லாம் பார்க்கன்னுமா அதான் வேண்டாம் சொல்றேன் என்று மஞ்சுளா கூற வேதாசலத்திற்கு தேவா மேல் வெறுப்பு தான் அதிகரித்தது… அங்கிருந்து விறு விறுவென வெளியே சென்றார்…
மஞ்சு தேவா உட்கார்ந்து அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கான் அவ்ளோ தான். அவங்க என்ன பேசுறாங்க யார் அந்த பொண்ணுன்னு தெரியாம உன் வாய்க்கு வந்த மாதிரி தப்பா பேசாதா என்று மீனாட்சி கடிந்து கொண்டார்.
அத்தை உங்க பையன் தேவா எப்படின்னு எல்லாருக்கும் தெரியும்.. அப்படி பட்டவர் கூட ஒரு பொண்ணு பேசுறானா அவ மட்டும் நல்ல பொண்ணாவா இருப்பா என்று மஞ்சு கூற மீனாட்சி இருக்கும் இடம் கருதி அமைதியாக தன் கணவன் பின்னே சென்றார். மஞ்சு தனது மொபைலை எடுத்து தேவாவை போட்டோ எடுத்து அதை இந்துமதி அவள் கணவன் கார்த்திக். ராகவ், இனியா, சூர்யா என் அனைவருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியபடியே கீழே இறங்கி சென்றாள்…
எனக்கு ஒரு டவுட் என்றான் தியா வை பார்த்து அவள் என்ன என்று கேட்க, நீ பொறந்ததில் இருந்தே இப்படி தானா இல்லை இடையில் மண்டையில் அடிபட்டாதால் இப்படி மாறிட்டாயா?
தியா அவனை முறைத்து என்னை பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதா? என கேட்க,
பார்த்தா ஒன்னும் தெரியலை ஆனா நீ வாயை திறந்து பேச ஆரம்பிச்சா இரண்டு செகண்ட்ல கண்டு பிடிச்சிரலாம் என்றான் தேவா நக்கலாக,
தியா அதற்கு எதுவும் கூறவில்லை..
தேவாவே அடுத்தும் பேசினான் என்ன படிக்குற ப்ளஸ் ஓன்னா ப்ளஸ் டூவா என்று கேட்க.
இல்ல நேத்து தான் எங்க அம்மா என்னை ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டாங்க. என்னை பார்த்தா உங்களுக்கு ஸ்கூல் பாப்பா மாதிரியா தெரியுது… நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன் அதுவும் ஜெர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் என்றாள் கெத்தாக இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு,
ஓ… ஜெர்னலிசமா அதான் அடுத்தவங்க பர்சனல்க்குள்ள இப்புடி மூக்கை நுழைக்கற போல் என்று தேவா கூறியதும். ஈஈஈஈ என்று சிரித்து சமாளித்த தியா தேவா சாப்பிட்டால் இருப்பதை பார்த்து நீங்க சாப்பிடலையா? என்று கேட்டாள்…
எனக்கு எதுவும் வேண்டாம் நீயே எல்லாத்தையும் கொட்டிட்டு கிளம்பு, இனி என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா என்று அங்கிருந்து எழ,
அவனின் கை பிடித்து தடுத்தவள் நம்ம டீல் இன்னும் முடியலை பாவா நான் கேட்கிற கொஸ்டினுக்கு நீங்க பதில் சொல்லனும் அதுக்கு முன்னாடி எழுந்து போனா எப்படி உட்காருங்க உட்காருங்க பாவா என்றாள்…
ஏய் பர்ஸ்ட் என் கையை விடு நான் எப்ப உங்கிட்ட டீல் போட்டேன். நீ யார் எனக்கு நான் எதுக்கு நீ கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லனும். சின்ன பொண்ணா இருக்கியே பாவம் சொல்லி தான் பார்க்கிற நேரம் எல்லாம் நீ பண்ற பைத்தியகார தனதுக்கு பேசமா அமைதியா இருக்கேன். வீணா என் பொறுமையை சோதிக்காத பாப்பா அவ்வளோ தான் என்று விரல் நீட்டி எச்சரித்தவன் டேபிளில் இருந்து எழுந்து நகர பார்க்க,
இப்பவும் அவன் கையை விடாத தியா பாவா நீங்க இப்ப பதில் சொல்லிட்டீங்கனா. நான் உங்களை இனிமே தொந்தரவு பண்ணவே மாட்டேன். ப்ராமிஸ்ஸா இல்லைன்னு வைங்க பார்க்கிற இடத்தில் எல்லாம் உங்கிட்ட வந்து பேசி உங்களை டிஸ்டர்ப் பண்ணுவேன். அதுவும் பாவா பாவா அப்படின்னு கூப்டுவேன் பரவாயில்லையா உங்களுக்கு என்று தியாவும் அவனை சீண்ட,
ஏய் பொடி டப்பா சைஸ்ல இருந்துட்டு என்னையேவே மிரட்டுறீயா என்று கேட்க,
ஆமாம் என்பது போல் தியா தலை அசைத்தாள்.
தேவா தியாவை தீயாய் முறைத்து விட்டு கேளு கேட்டு தொலை இன்னையோட உன் தொல்லை முடியட்டும் என்று கடுப்புடன் சொல்லி விட்டு அமர்ந்தான். குரலில் கடுமையும் முகத்தில் பிடிக்காத பாவனை இருந்தாலும் தேவாவிற்கு தியா பேசுவதும் அவளுடன் அமர்ந்து பேசுவதும் ஒரு இலகு தன்மையை தான் கொடுத்தது.. அதனால் தான் அவளிடம் இவ்வளவு நேரம் பேசி கொண்டு இருந்தான்.
ஆனால் இது நீட்டிக்க கூடாது என்றும் அவள் தன்னோடு அமர்ந்து பேசுவதை மற்றவர்கள் பார்த்தால் அவளை தவறாக எண்ண வாய்ப்பு அதிகம்.. அடுத்த தடவை அவனை பார்த்தால் அவள் தெறித்து ஓட வேண்டும்.. ஓட வைக்க வேண்டும் என்பதால் அமர்ந்தான்..
உங்க வீட்டில் ஏன் நீங்க தங்கிறது இல்லை.. உங்க வீட்டு ஆளுங்க ஏன் உங்ககிட்ட பேச மாட்டேங்கிறாங்க.. உங்க தம்பிக்கு மேரேஜ் ஆகிருச்சு.. ஆனா நீங்க ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கல… உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா? அதான் பண்ணிக்கலையா..
ஏய் பொடி டப்பா ஒருத்தன் வாழ்க்கையில் கல்யாணம் பண்ணிக்காமா இருந்தா அதற்கு காரணம் லவ் பெயிலிரா மட்டும் தான் இருக்கனுமா. வேற எதுவும் இருக்க கூடாது…
இருக்கலாமே! அப்படி வேற என்ன காரணம் சொல்லுங்க சொல்லுங்க என்றாள் ஆர்வமாக,
சொல்லுவேன் ஆனா நீ வருத்தப்பட கூடாது என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு அவனின் குரலில் கூட ஒரு சோகம் இருந்தது.. தியா வருத்தப்பட மாட்டேன் என்பது போல் தலை அசைத்தாள்.. இருந்தும் நொடியில் அவன் முக வேதனையாய் மாறி இருக்க. அதை பார்த்தவளுக்கு ஏதோ கேட்க கூடாததை கேட்டு அவனை சங்கடபடுத்தி விட்டோமோ என்று கவலையாக இருந்தது..
பெரிசா ஒன்னும் இல்லை எனக்கு ஹச்.ஐ. வி பாசிட்டிவ் அதான் காரணம் என்றான்..
அதை கேட்டு தியாவிற்கு தான் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. தனது இதயமே துடிப்பதை நிறுத்தியது போன்று உணர்ந்தாள். சத்தியமாக இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று அவள் நினைத்து பார்க்கவே இல்லை. கண்களில் கூட அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது..