அவள் கன்னத்தைப் பிடித்தபடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனது திடீர் முத்தம். அதுவும் முதல் முத்தம். காமம் இல்லாத முத்தம் தான் அதிலே அவள் அசந்து போயிருக்க அப்பொழுது தான் அவனே உணர்ந்தான்.
அட நாம இப்போ என்ன பண்ணிட்டோம் என்று நினைத்தவன் அவளை எதிர்கொள்ள முடியாமல் பார்த்திட அவளோ வெட்கம் கலந்த கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.
ஸாரி ரோனி என்றவனிடம் பரவாயில்லை மாமா என்றவள் அவனுடன் அமைதியாக சென்றாள். அவளுக்கு பிடித்த உடைகளை அவனே செலக்ட் செய்து வாங்கிக் கொடுத்து அவளுடன் வீட்டிற்கு வந்தான்.
வீட்டிற்கு வந்த பிறகும் வெரோனிகா ஏதோ மந்திரித்து விட்டது போல் சுற்றிக் கொண்டிருந்தாள். ரோனி, ரோனி என்று இரண்டு முறை கூப்பிட்டும் அவள் திரும்பாமல் இருக்க அவளது தலையில் கொட்டு வைத்தார் சுசீலா.
அச் ஆஆ என்று தலையை தேய்த்துக் கொண்டவள் என்னங்க அத்தை என்றிட ஏன்டி பகல் கனவா எத்தனை தடவை கூப்பிடுறது என்றிட கூப்பிட்டிங்களா அத்தை என்றாள் அப்பாவியாக.
என்னடி இது மந்திரிச்சு விட்டவ கணக்கா உட்கார்ந்திருக்க என்று சுசீலா கேட்டிட அவளுக்கு தன் கணவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்து விட வெட்கம் கொண்டவள் போங்க அத்தை என்று தன்னறைக்கு ஓடி விட்டாள்.
என்ன ரோனி இப்படி ஓடி வருகிறாய் என்ற உதயச்சந்திரனின் மார்பில் சாய்ந்தவள் போங்க மாமா என்று அவனது சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றாள்.
என்னாச்சுடா என்றவனிடம் ஏன் மாமா அப்படி பண்ணுனிங்க என்னால வெட்கத்தை கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை அத்தை கூப்பிட்டும் நான் என்னனு கேட்காமல் இருக்கவும் என்னை என்ன என்னனு கேட்கிறாங்க என்றவள் கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.
ரோனி என்ன இது இதுக்குப் போயி இவ்வளவு ரியாக்ட் பண்ணனுமா சத்தியமா நான் வேண்டும் என்று பண்ணவில்லை . அந்த நேரத்தில் நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கு தெரியலை என்றான் . மாமா அது பரவாயில்லை என்றவள் எனக்கு நீங்க அப்படி நடந்துக்கிட்டது தான் பிடிச்சுருக்கு என்றவள் ஐ லவ் யூ மாமா என்றாள்.
அவன் அவளது தலை கோதி விட நீங்களும் ஐ லவ் யூ தானே மாமா என்றவளை கண்களில் குறும்புடன் பார்த்தவன் நீ தான் ஐ லவ் யூ நான் இல்லைப்பா என்றிட அவள் அவனை முறைத்து விட்டு போங்க மாமா என்றாள்.
எங்கே போக என்றவனிடம் ஸ்கூலுக்கு என்றவள் நீங்க மட்டும் என் பர்த்டே அன்னைக்கு எனக்கு ஐ லவ் யூ சொல்லவில்லைனா நான் கோவிச்சுட்டு என் அம்மா வீட்டுக்கு போயிருவேன் என்றாள்.
நிஜமாவா என்றவனிடம் நிஜமா தான் என்றவள் கீழே சென்றிட உதயநிலா இந்திரஜாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஓய் குட்டி என் கிட்ட வா என்று குழந்தையை தூக்கி கொஞ்சியவள் ஒரு கேட்பரீஸ் சாக்லேட்டை அவளிடம் கொடுத்திட குழந்தை அதை வாங்கி சாப்பிட்டாள்.
நிலாக் குட்டி உனக்கு சாக்லேட் பிடிக்குமா என்ற வெரோனிகாவிடம் ஹும் பிய்க்கும் என்றாள் நிலா. பிய்க்குமா சரி சரி என்றவள் பெரியம்மா உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு என்ற வெரோனிகா ஒரு அழகான யானை பொம்மையை பரிசாக கொடுத்திட ஐஐஐ ஆனை ஆனை என்றாள் நிலா. யானை பாப்புக்குட்டிக்கு பிடிக்குமா தங்கம் என்றவள் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருந்தாள்.
வாங்க என்று ஸ்ரீஜாவைப் பார்த்து கூறிய வெரோனிகா பாப்பாக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கானு பாருங்களேன் என்று ஒரு அழகான ப்ராக்கை ஸ்ரீஜாவிடம் கொடுத்தாள். இது எதற்கு அவளுக்கு என்ன டிரஸ்க்கு பஞ்சமா என்றாள் ஸ்ரீஜா.
அவளுக்கு டிரஸ் பஞ்சம்னு நான் டிரஸ் எடுக்கவில்லை. அவள் இந்த வீட்டுக்கு முதல் தடவையா வந்திருக்கிறாள் இல்லையா அதனால தான் பாப்புக்கு கவுன் எடுத்தேன் என்றாள் வெரோனிகா. இது பெரியப்பாவோட கிப்ட் என் செல்ல உதயநிலா குட்டிக்கு என்றாள் வெரோனிகா.
டிரஸ் சூப்பரா இருக்கே ரோனி என்று வந்த அர்ச்சனாவிடம் என் சந்துரு மாமா செலக்சன் ஆச்சே எப்படி சூப்பர் இல்லாமல் போகும் என்றாள் வெரோனிகா. அவள் அவ்வாறு கூறிட ஸ்ரீஜாவிற்கு தான் மனம் ரணமாக வலித்தது.
அவள் வாழ வேண்டிய ஆசைப்பட்ட வாழ்க்கை இன்று எவளோ வாழ்ந்து கொண்டிருக்கிறாள். என்னோட தயா மாமாவை இவள் உரிமை கொண்டாடிட்டு இருக்கிறாள் என்று நினைத்த ஸ்ரீஜாவின் கண்கள் கலங்கினாலும் அதை வெளிக் காட்டாமல் அந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டாள்.
எங்கே போறிங்க இருங்க என்ற வெரோனிகாவிடம் எதற்கு இருக்கனும் என்றாள் ஸ்ரீஜா. எதற்கு இருக்கனும்னா எனக்கு புரியலை நாம ஒன்றாக உட்கார்ந்து பேசினால் தானே நமக்குள்ள உறவு சுமூகமா இருக்கும் என்ற வெரோனிகாவை முறைத்தவள் நமக்குள்ள என்ன உறவு இருக்கு அதை சுமூகமா வளர்த்துக் கொள்ள என்றாள் ஸ்ரீஜா.
நீங்களும், நானும் ஓரகத்திகள் இல்லையா என்ற வெரோனிகாவைப் பார்த்து கலகலவென சிரித்தாள் ஸ்ரீஜா. ஓரகத்திகளா மை காட் ஏம்மா வெரோனிகா உனக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகவில்லை. அதனால உனக்கும், தயா மாமாவுக்கு நடந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது அப்படி இருக்கும் பொழுது நீ எப்படி எனக்கு ஓரகத்தி ஆக முடியும் என்று சிரித்தவள் போலீஸ்ல ஒரு சின்ன கம்ப்ளையண்ட் கொடுத்தாலே போதும் உன் கல்யாணம் பூஜ்ஜியம் தான் என்றாள் ஸ்ரீஜா.
ஏன் இப்படி பேசுறிங்க என்ற வெரோனிகாவிடம் நானா வந்து உன்கிட்ட பேசினேன். நீயா தானே வந்து வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிற இப்போ தான் இந்த அம்மா எனக்கு ஓரகத்தியாம் என்று சிலாகித்து விட்டு கிளம்பினாள் ஸ்ரீஜா.
அமைதியாக அனைத்தையும் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன். தேவ் கூட அதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெரோனிகாவின் முகம் வாடிவிட என்ன அண்ணி ஏன் ஒரு மாதிரி டல்லடிக்கிறிங்க என்று வந்தான் பிரகாஷ். ஒன்றும் இல்லையே என்றவளிடம் அர்ச்சு, ஊர்மி அண்ணி முகத்தில் என்ன தெரிகிறதுனு சரியா சொன்னால் ஆளுக்கு ஒரு சாக்லேட் என்றான் பிரகாஷ்.
அவள் முகத்தில் என்ன தெரியுது அண்ணா என்ற தங்கைகள் இருவரிடமும் மேக்கப் கம்மியா தெரிகிறது என்றான் பிரகாஷ். மாமா உங்களை என்ற வெரோனிகா அவனது தலையில் கொட்டிட ஆஆ அம்மா ஆஆ வலிக்குது அண்ணி என்றான் பிரகாஷ்.
வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும் என் முகத்தில் மேக்கப் போடவே மாட்டேன் என்னைப் பார்த்து மேக்கப் கம்மினு வேற கமெண்ட் பண்ணுறிங்க என்றாள் வெரோனிகா. மேக்கப் போட மாட்டிங்களா நம்ப முடியவில்லையே என்ற பிரகாஷ் தன் தங்கைகளை பார்க்க அவர்கள் ரெடி ஜூட் ஒன் , டூ , த்ரீ என்று கூறிவிட்டு வெரோனிகாவின் முகத்தை தேய் தேயென்று தேய்த்து விட்டு இருஙரும் அவன் முன்பு கைகளை நீட்டினர்.
அப்போ இது என்னவாம் என்ற பிரகாஷிடம் அது ஜஸ்ட பவுடர் என்றாள் வெரோனிகா. பவுடர் போட்டாலும் மேக்கப் மேக்கப் தான்பா என்ற பிரகாஷை முறைத்தாள் வெரோனிகா. போங்க மாமா நான் இனிமேல் உங்க கூட டுக்கா என்றவள் எழுந்து செல்ல அச்சச்சோ அண்ணி கோவிச்சுட்டிங்களா என்றான்.
ஆமாம் கோவிச்சுட்டேன் என்றவளிடம் கோவிச்சுக்கோங்க கோவிச்சுக்கோங்க நல்லா கோவிச்சுக்கோங்க என்று பிரகாஷ் கூறிட அர்ச்சனா, ஊர்மிளா இருவரும் சிரித்தனர். அதில் மேலும் கடுப்பானவள் உங்க மூன்று பேர் கூடவும் டுக்கா நான் போயி சந்துரு மாமாகிட்ட சொல்லுறேன் போங்க என்று சென்று விட அண்ணி நான் சும்மா விளையாடினேன் வாங்க என்று அவளை உட்காரச் சொன்னான் பிரகாஷ்.
சரி சரி ஷாப்பிங் போனிங்களே பாப்பாவுக்கு மட்டும் தான் டிரஸ்ஸா எங்களுக்கு எல்லாம் எதுவும் இல்லையா என்ன என்றான் பிரகாஷ். உங்களுக்கு இல்லாமலா மாமா என்றவள் அவனிடம் ஒரு கர்சீப்பைக் கொடுத்தாள்.
என்னது இது என்ற பிரகாஷிடம் கர்சீப் என்றாள் வெரோனிகா. எனக்கு என்ன மூக்கு ஒழுகிட்டு இருக்கிறதா இந்த கர்சீப் வச்சு துடைச்சுக்கிற அண்ணினா அம்மா மாதிரினு சொன்னாங்க இங்கே அரக்கியாவுல வந்து வாச்சுருக்கு அண்ணி என்று வராத கண்ணீரை சுண்டி விட்டவனிடம் நான் அரக்கியா சரி கொடுங்க இந்த கர்சீப் உங்களுக்கு இல்லை என்றாள் வெரோனிகா.
ஹான் அண்ணி அதெல்லாம் தர முடியாது. அரக்கியோ, அண்ணியோ கொடுத்துட்டிங்க. இந்த பிரகாஷ்கிட்ட ஒரு முறை ஒரு பொருளைக் கொடுத்தால் திரும்பி வாங்கவே கூடாது என்றான் பிரகாஷ். சரி , சரி என்றவள் அவனிடம் ஒரு பார்சலை நீட்டினாள்.
என்ன இது என்றவனிடம் இந்த அரக்கியோட கிப்ட் என்றவள் நாளைக்கு உங்க பர்த்டே ஆச்சே மாமா அதான் டிரஸ். என்னோட செலக்சன் பிடிச்சுருக்கா என்றாள் வெரோனிகா.
என் அண்ணியோட பர்ஸ்ட் கிப்ட் பிடிக்காமல் போகுமா என்ன என்றவன் ரொம்ப பிடிச்சுருக்கு என்றான்.
என்ன பிரகாஷ் பார்சல் என்று வந்த சுசீலாவிடம் அண்ணியோட கிப்ட் என்றான் பிரகாஷ். பாருடா ரோனி அவனுக்கு மட்டும் தான் கிப்ட்டா எனக்கு இல்லையா என்ற சுசீலாவிடம் உங்களுக்கு தான் நான் இருக்கேனே அத்தை. என்னை விட ஒரு பெரிய கிப்ட். ஒன்று உண்டா என்றவளிடம் நல்லாவே ஐஸ் வைக்கிறடி நீ என்றவர் சரி , சரி எல்லோரும் சாப்பிட வாங்க என்றார் சுசீலா.
நான் போயி சந்துரு மாமாவை கூட்டிட்டு வரேன் அத்தை என்றவள் தன்னறைக்கு சென்றாள்.
என்ன ரோனி வருத்தமா என்ற உதயச்சந்திரனிடம் எதற்கு மாமா என்றாள் வெரோனிகா. ஸ்ரீஜா பேசினதுக்கு என்றவனைப் பார்த்து சிரித்தவள் அவங்க பேசினதை நான் ஒரு பொருட்டாவே எடுத்துக்கல மாமா. சட்டப்படி நான் உங்க மனைவியா இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு தெரியும் என் சந்துரு மாமாவோட வாழ்க்கையில் நான் தான் அவரோட ஒரே மனைவின்னு அதனால அவங்க சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்க மாட்டேன் மாமா என்றவளை பார்த்தவன் உன்னைத் தவிர என் வாழ்க்கையில் யாருமே மனைவியா வர முடியாது ரோனி என்று நினைத்தவன் அவள் கிட்ட நீ பேச்சை குறைத்துக் கொள் என்றான்.
அது எப்படி மாமா வீட்டில் அத்தை இரண்டு பேரும் அவங்க கிட்ட சரியா பேசுறது இல்லை. நானும் பேசலைனா தப்பா போயிரும் இப்போ வினோ அக்கா திட்டினால் ,கோபம் பட்டால் நான் பொறுத்துக்க மாட்டேனா என்ன அது போல தான் என்ற வெரோனிகா சரி வாங்க சாப்பிடலாம் என்று அவனை இழுத்துச் சென்றாள்.
…..தொடரும்….