விடு ரோனி நானே வரேன் என்றவனை முறைத்தவள் நான் இழுத்துட்டு தான் போவேன் நீங்க என் கூடவே தான் வரணும் என்றவளது தலையில் செல்லமாக கொட்டியவன் நீ இருக்கியே வாயாடி என்றான் உதயச்சந்திரன்.
மாமா என்றவளிடம் என்ன என்றான் உதயச்சந்திரன். நீங்க ஒரு வாரம் லீவு போட்டு என் கூட ஊருக்கு வர முடியுமா என்றவளிடம் என்னாச்சு திடீர்னு என்றான் உதயச்சந்திரன்.
மாமா எனக்கு என்னம்மோ பயமா இருக்கு அந்த ஸ்ரீஜா அக்காவுக்கு ஏனோ என்னை பிடிக்கவே இல்லைனு எனக்கு தோணுது. அவங்க ஒருவேளை நம்ம கல்யாணம் பத்தி போலீஸ் கம்ப்ளையண்ட் என்றவளிடம் என்ன மேடம் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ரொம்ப மெச்சுருட்டியோட பேசுனிங்க என்றான்.
மாமா அது வேற அது அவங்க பேசின விசயம் என்னை காயப் படுத்தவில்லை. அதற்கு காரணம் நான் உங்க மேல வச்சுருக்கிற நம்பிக்கை. ஆனால் அவங்க நம்ம கல்யாணம் பற்றி போலீஸ்ல சொல்லிட்டாள் நம்மளோட கல்யாணம் செல்லாமல் போயி நாம பிரிஞ்சு போயிட்டோம்னா அதை என்னால தாங்கிக்கவே முடியாது மாமா.
எனக்கு பதினெட்டு வயசு ஆக இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு பேசாமல் நாம அதுவரைக்கும் ஊருக்கு போயிருவோமா. பதினெட்டு வயசுக்கு பிறகு நம்ம கல்யாணம் பற்றி இவங்க என்ன சொன்னாலும் பிரச்சனை இல்லை. நான் மேஜர் என்றவளது தலையில் கை வைத்தவன் வெரோனிகா அவள் இல்லை அந்த கடவுளே வந்தாலும் உன்னோட விருப்பம் இல்லாமல் என்னை நீ பிரியவே முடியாது சரியா என்றவன் நீ கவலைப் படாதே.
உனக்கு ஊருக்குப் போகனும்னா சொல்லு நம்ம கல்யாணநாள் அன்னைக்கு போகலாம் என்றவனிடம் சரிங்க மாமா என்றாள்.
சாப்பிட போகலாம்னு இழுத்த அப்பறம் உன் குட்டி மூளையில் தேவை இல்லாத சந்தேகம் எல்லாம் வந்து பசி மறந்து போச்சா என்றவனிடம் ஐயோ ஸாரி மாமா என்றவள் அவனுடன் உணவு மேஜைக்கு சென்றாள்.
என்னடி ஸாரி மாமா பூரி மாமா என்ற சுசீலாவிடம் அதுவா அத்தை மாமாகிட்ட எனக்கு பூரி கேட்டேன். அவரு ஸாரி சொன்னால் தான் பூரி வாங்கித் தருவேன்னு சொல்லிட்டாரு என்றவளது காதை திருகிய சுசீலா சரியான வாயாடிக் கழுதைடி நீ என்றார்.
அச்சச்சோ அப்போ உங்க மகனுக்கு கழுதையைவா நீங்க கல்யாணம் பண்ணி வச்சிங்க என்ற வெரோனிகாவிடம் ஆமாடி கழுதை என்று அவளது கொமட்டில் இடித்த சுசீலா பேப்பர் சாப்பிடுறியாடி கழுதை என்றார். பேப்பர் ரோஸ்ட் அத்தை என்றவளிடம் சரி என்று அவளுக்கு தோசையை வைத்தார் சுசீலா.
தேவ் மாமா நீங்களும் சாப்பிட வாங்க என்ற வெரோனிகாவிடம் இருக்கட்டும் அண்ணி நீங்க சாப்பிடுங்க என்றான் தேவ். அட நீங்க எப்போ சாப்பிடுறது வாங்க என்றவள் அவனை வம்பு செய்திட சுசீலாவும் வா தேவ் அதான் அண்ணி கூப்பிடுறாளே வந்து சாப்பிடு என்றிட சரிங்க சித்தி என்று அவனும் அமர்ந்தான்.
மலர்கொடி கோபமாக நின்றிருக்க அத்தை என்று அவரது கையைப் பிடித்தவள் ப்ளீஸ் என்றிட மருமகளின் கெஞ்சலான முகத்தைக் கண்டவர் அவளைப் பார்த்து தலையாட்டி விட்டு சென்று விட்டார்.
அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் அறைக்கு சென்றனர். உதய் என்று அழைத்த நெடுமாறனிடம் என்னங்கப்பா என்றான் உதயச்சந்திரன். உன் கிட்ட கொஞ்சம் பேசனும் மாடிக்கு வா என்றதும் சரிங்கப்பா என்றவன் ரோனி நீ போ நான் வரேன் என்றவன் தன் தந்தையுடன் சென்றான்.
என்ன ரோனி தனியா நின்னுட்டு இருக்க என்ற அர்ச்சனாவிடம் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன் அண்ணி என்றாள் வெரோனிகா. எனக்காகவா என்ற அர்ச்சனாவிடம் ஆமாம் உங்களுக்காகத் தான் எங்கே பிரகாஷ் மாமா, ஊர்மி, இந்து அக்கா எல்லோரும் என்றவளிடம் நாங்களும் இங்கே தான் இருக்கிறோம் அண்ணி் என்றான் பிரகாஷ்.
என் கூட வாங்க என்றவள் அவர்கள் நால்வரையும் அழைத்துச் செல்வதைக் கண்ட ஸ்ரீஜா தானும் அவர்களை பின் தொடர்ந்தாள். பார்த்திங்களா ஊஞ்சல் என் சந்துரு மாமா எனக்காக வாங்கி வந்த ஊஞ்சல் என்று கூறிட ஏய் சூப்பர் ரோனி என்ற அர்ச்சனாவும், ஊர்மிளாவும் ஊஞ்சலில் ஆடினர்.
இது என்ன புது ஊஞ்சல் ஏன் என்ற ஊர்மிளாவிடம் மொட்டை மாடியில் இருக்கே ஊஞ்சல் அதில் ஆடனும்னு நான் கேட்டேன். அந்த ஊஞ்சல் உனக்கு வேண்டாம் ரோனின்னு சொன்னாங்க நானும் சோகமாக ஒரு ஆக்டிங் போட்டு படுத்துட்டேன். அதான் மாமா எனக்கு இந்த ஊஞ்சலை வாங்கிட்டு வந்தாங்க என்றாள் வெரோனிகா.
ஸ்ரீஜாவின் மனம் ரணமாக வலித்தது. அந்த மொட்டை மாடி ஊஞ்சலின் நினைவுகள் கூட வரக் கூடாதுன்னு தான் இவளுக்கு புது ஊஞ்சல் வாங்கி கொடுத்திருக்கிங்களா தயா மாமா என்று மனம் வறுந்தியவள் யாரும் பார்க்காதபடி அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.
சரி அண்ணி நாங்க கிளம்புறோம் என்று பிரகாஷ் கூறிட அவனுடனே மற்ற மூவரும் சென்று விட்டனர்.
என்னங்கப்பா என்ற உதயச்சந்திரனிடம் இல்லை உதய் உன் அத்தை நம்ம இந்திரஜாவை , பிரகாஷ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப் படுது அதான் நீ பிரகாஷ்கிட்ட கொஞ்சம் பேசிப் பாரு. அவனோட மனசுல இந்து இருந்தால் சந்தோசமா கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாம்.
அப்பறம் நம்ம அர்ச்சனா விரும்புற பையனோட அப்பாவை பார்த்து சித்தப்பா பேசிட்டாரு அவங்க வீட்டில் இருந்து இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல நாள் பார்த்து பொண்ணு கேட்டு வருகிறார்களாம் என்றார் நெடுமாறன். நானும் அந்த விவேக் பற்றி விசாரிச்சேன் அப்பா. பையனும் நல்ல பையன் தான். குடும்பமும் நல்ல குடும்பம் தான்.
நம்ம அர்ச்சனா சந்தோசமா இருப்பாள் என்றவனிடம் சரிப்பா சந்தோசம் என்ற நெடுமாறன் உதய் அப்பறம் என்றவர் தயங்கிட என்னப்பா சொல்லுங்க என்றான். ஸ்ரீஜா ரோனிகிட்ட நடந்துகிட்ட முறை சரியில்லைனு அம்மா சொல்லி புலம்பினாள் என்ன நடந்துச்சு என்றிட அப்பா ரோனி எல்லாம் சமாளிச்சுப்பாப்பா நீங்க கவலைப் பட வேண்டாம். ரோனிக்கு எப்பவும் சப்போர்ட்டா நான் இருப்பேன் அப்பா என்றான் உதயச்சந்திரன். சந்தோசம் உதய் என்றவர் சரிப்பா நேரம் ஆச்சு போயி தூங்கு என்ற நெடுமாறன் கிளம்பிட உதயச்சந்திரன் சிறிது நேரம் அங்கு நின்றிருந்தான்.
என்ன தயா மாமா ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல என்ற குரலில் பின்னே நிற்பவளை அறிந்தவன் மௌனமாக நின்றிருந்தான். பதில் சொல்லக் கூட வருத்தமா என்றவளிடம் என்ன பதில் சொல்லனும் ஸ்ரீஜா என்றான் உதய்.
ஆமாம் எனக்கு என்ன பதில் சொல்லனும். அதற்கான எந்த அவசியமும் தான் இல்லையே என்ற ஸ்ரீஜா ஏதோ கூற வர மாமா என்று வந்தாள் வெரோனிகா.
நீங்க இங்கே தான் இருக்கிங்களா உங்களை தேவ் மாமா தேடிட்டு இருந்தாங்க என்றவள் மாமா போன் அப்பா பேசுறாங்க அதான் கொண்டு வந்தேன். டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றவளிடம் அதெல்லாம் இல்லை ரோனி என்றவன் போனை வாங்கிக் கொண்டு தனியாக சென்று பேசினான்.
அக்கா என்றவளை அமைதியாக பார்த்தாள் ஸ்ரீஜா. ஸாரி நீங்க மாமாகிட்ட ஏதோ முக்கியமான விசயம் பேசிட்டு இருக்கும் பொழுது தொந்தரவு பண்ணிட்டேனா என்றாள். ஸ்ரீஜா மௌனமாக இருந்தாள். அவளுக்கு ஏனோ வெரோனிகாவிடம் பேசவோ, பழகவோ பிடிக்கவில்லை.
அமைதியாக அவள் சென்று விட இப்போ நான் என்ன தப்பா கேட்டுட்டேன். இவங்க ஏன் இப்படி இருக்கிறார்கள். நானும் காலையில் இருந்து பார்க்கிறேன் உம்முனே இருக்காங்க சரியான உம்முனா மூஞ்சி என்று நினைத்தவள் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
என்ன மாமா பேசிட்டிங்களா என்றவளிடம் பேசிட்டேன். ஏதோ கோவில் கும்பாபிசேகமாமே வரச் சொல்லுறாங்க. குடும்பத்தோட அதான் என்றவனிடம் எல்லோரும் ஒருமுறை போயிட்டு வருவோமே மாமா என்றவளிடம் சரி அப்பாகிட்ட பேசிட்டு போகலாம் என்றவன் நேரம் ஆச்சு வா தூங்கலாம் என்றான் உதய்.
என்ன தூங்கவா மாமா நாளைக்கு பிரகாஷ் மாமாவோட பர்த்டே பனிரெண்டு மணிக்கு அவரை எழுப்பி கேக் கட் பண்ண வேண்டாமா வாங்க நாம இரண்டு பேரும் சேர்ந்து வீட்டை டெக்கரேட் பண்ணலாம் என்றாள் வெரோனிகா.
ரோனி நாம இரண்டு பேர் மட்டும் எப்படி என்றவனிடம் நம்ம கூட இந்து அக்கா, அர்ச்சனா அண்ணி, ஊர்மி இவங்களும் வராங்க வாங்க என்றவளுடன் சென்றான் உதயச்சந்திரன்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவைக் கண்ட தேவ் என்னாச்சு ஸ்ரீஜா என்றிட என்ன ஆகனும். உன்னால என் வாழ்க்கையே போச்சு. என் சந்தோசம் போச்சு. எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா. ஒரு நாளே இந்த வீட்டில் எனக்கு நரகம் போல இருக்குடா இனி ஒவ்வொரு நாளும் அந்த வெரோனிகாவை பார்த்து பார்த்து நான் நொந்தே செத்துருவேன் போல.
என்னை ஏன்டா இங்கே கூட்டிட்டு வந்த உன் அண்ணனும், அவரு பொண்டாட்டியும் அடிக்கிற கூத்தை எல்லாம் பார்த்து நான் வயிறு எறிஞ்சு சாகவா என்றவளின் தோளில் கை வைத்தான் தேவ். அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்தவள் உன் கிட்ட பலமுறை சொல்லிருக்கேன் உன் கை என் மேல பட்டுச்சு அவ்வளவு தான் என்ற ஸ்ரீஜா சென்று படுத்துக் கொண்டாள்.
அவன் தான் நொந்து போனான். அவனுக்கு இதெல்லாம் பழகிப் போன விசயம் தான் இருந்தாலும் மனம் வலிக்கத் தான் செய்கிறது. உறங்கும் தன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட தேவச்சந்திரன் அறையை விட்டு வெளியே வர வெரோனிகா, உதயச்சந்திரன், அர்ச்சனா, ஊர்மிளா, இந்திரஜா ஐவரும் வீடு முழுக்க அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அமைதியாக சென்று தோட்டத்தில் அமர்ந்து கொண்டான். தேவ் இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுற என்ற நெடுஞ்செழியனிடம் ஒன்றும் இல்லை மாமா சும்மா காற்றோட்டமா என்றவனிடம் பொய் சொல்லாதே மாப்பிள்ளை என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது என்ற நெடுஞ்செழியன் மருமகனுக்காக இரக்கம் கொண்டார்.
தன் மகளின் மனம் மாறும் என்ற நம்பிக்கை சிறிதும் அவருக்கு இல்லை என்றாலும் வருத்தமாக இருக்கும் மருமகனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கடமை அவருடையாதாயிற்றே. அந்த வீட்டில் தான் யாருமே அவனுடன் பேசுவதில்லையே. மனம் வருத்தத்தில் இருந்த தேவ் இடம் பேசி பேசி அவனை கொஞ்சம் சகஜமாக்கிய நெடுஞ்செழியன் அவனை உறங்க சொல்லி விட்டு தானும் உறங்க சென்றார்.
…..தொடரும்…