இப்பவாச்சும் சொல்லுங்க மாமா ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லைன்னு சொல்றேன்லடி அப்பறம் என்ன என்றான் உதயச்சந்திரன். ஹும் நீங்க ரொம்ப மோசம் என்றவளிடம் ஆமாம் மோசம் தான் இப்போ என்ன பண்ணலாம் அதற்கு என்றான் உதய்.
அவள்அவனை முறைத்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். வெரோனிகா என்று அவன் அழைத்திட அவள் திரும்பவே இல்லை. ஏய் உன்னைத் தான் என்றவனிடம் என்னை ரோனின்னு கூப்பிட்டால் மட்டும் தான் திரும்புவேன் என்றவளைப் பார்த்து சிரித்தவன் சரிங்க ரோனி மேடம் கொஞ்சம் திரும்புங்க என்றிட அவனை பார்த்தவள் என்ன என்றாள்.
எங்கே போகலாம் என்றவனிடம் பீச்சுக்கு போகலாமா மாமா என்றாள் வெரோனிகா. ஏன் பீச் என்றவனிடம் எனக்கு தெரிஞ்சு நம்ம கல்யாணம் முடிஞ்சு இத்தனை நாளில் நீங்க ஒருமுறை கூட பீச்சுக்கு கூட்டிட்டு போனதில்லை என்றாள்.
அட ஆமாம்ல சரி எந்த பீச் போகலாம் மெரினாவா, இல்லை பெசன்ட்நகர் பீச்சா என்றவனிடம் மெரினா தான் மாமா என்றாள் வெரோனிகா. சரி என்றவன் அவளை பீச்சிற்கு அழைத்து வந்தான்.
என்ன மாமா இவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருக்கு. நான் ஏதோ கடல் பக்கத்தில் இருக்கும்னு நினைச்சேன் என்று அப்பாவியாக சொன்னவளைப் பார்த்து சிரித்தவன் நான் வேண்டும் என்றால் உன்னைத் தூக்கிக் கொள்ளவா ரோனி என்றான் உதயச்சந்திரன்.
ஐய்யோ, பப்ளிக் ப்ளேஸ்லையா வேண்டாம் மாமா என்றவளைப் பார்த்து சிரித்தவன் சரி வா என்று அவளுடன் சென்றான். மாமா எனக்கு பானிபூரி என்றிட சரி இரு வாங்கிட்டு வரேன் என்றவன் அவளுக்கு பானிபூரி வாங்கிக் கொடுத்தான்.
அவனுக்கு அவள் ஊட்டி விட வர வேண்டாம் ரோனி நீ சாப்பிடு என்றான். அவனை அவள் முறைத்திட சரி ஊட்டி விடு என்றான். என் செல்ல மாமா என்றவள் அவனுக்கு ஊட்டி விட்டாள். மாமா ஐஸ்கிரீம் என்றவளிடம் சளி பிடிக்கும் வேண்டாம் என்றான். அதெல்லாம் சுக்கு காபி சாப்பிட்டுக்குவேன் என்றவளை முறைத்தவன் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திட உங்களுக்கும் வாங்கிக்கோங்க என்றாள். சரியென்று அவனும் ஒன்று வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.
மாமா என்றவளிடம் என்ன என்றான். இன்னைக்கு என்ன விசேசம் என்னை வெளியில் எல்லாம் அழைச்சுட்டு வந்துருக்கிங்க என்றவளிடம் ஏன் உனக்கு பிடிக்கவில்லையா என்றான் உதய். ஐயோ மாமா எனக்கு ரொம்ப , ரொம்ப பிடிச்சுருக்கு என்றவள் மாமா கொஞ்சம் அங்கே பாருங்க என்று அவள் கை காட்டிய திசையில் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.
என்னடி ஏன் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கிற இந்த காபி ஷாப்பிற்கு வரச் சொன்ன என்ற பிரகாஷிடம் எனக்கு காபி குடிக்கனும்னு ஆசை. அதான் வந்தேன் ஆனால் காபி குடிக்க கையில் காசு இல்லை அதான் உன்னை வரச் சொன்னேன் என்றாள் இந்திரஜா. லூசு காபி வேண்டும் என்றால் வீட்டிலே போட்டு குடிக்க வேண்டியது தானே என்ற பிரகாஷிடம் அட மக்கு பிளாஸ்டரு நீயெல்லாம் ஒரு ஆளுனு உன்னைப் போயி லவ் பண்ணினேன் பாரு.
இந்த லட்சணத்தில் சன்னி லியோன் கூட கனவுல மிதப்பாரு வெண்ணெய். அவள் கூடவாச்சும் ரொமான்ஸ் பண்ணுவியா இல்லை வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டு ஓடி வந்துருவியா மண்ணு என்றாள் இந்திரஜா.
ஏன்டி ஏன் இப்படி கேப் விடாமல் திட்டுற அதுவும் ஒரு பர்த்டே பாயை என்றான் பிரகாஷ். அட குரங்கே இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் ஆச்சே உன்னோட இந்த பிறந்தநாளை ஸ்பெஷலாக்கலாம்னு நான் நினைத்தால் நீ சரியான சாமியாருடா லூசு என்றாள் இந்திரஜா.
என்ன சாமியாரா என்றவனிடம் பின்னே வீட்டில் எனக்கு காபி போடத் தெரியாமல் தானே உன் கூட இப்படி காபி ஷாப்பிற்கு வந்துருக்கேன் என்றவளிடம் சரிடி ஸாரி சொல்லு எங்கே போகலாம் என்றான் பிரகாஷ்.
முதலில் சினிமாவுக்கு போயிட்டு இல்லை வேண்டாம் முதலில் பீச்சுக்கு போகலாம். என்ற இந்திரஜாவிடம் சரி வா பைக்ல உட்காரு என்றான். மாம்ஸ் சிச்சுவேசன் ஸாங் சொல்லு என்றவளிடம்
பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே
ஓர் அலையாய் வந்து என்னை அடித்தாய்
என்று பாடியவனிடம் உன் மண்டை நான் தல பேன் மேன் அந்தப் பாட்டை பாடுவியா என்றவளைப் பார்த்து சிரித்தவன் நான் கமல் பேன் அதான்டி என்றான்.
என்னோட மைண்ட்ல உள்ள பாட்டு என்ன தெரியுமா என்ற இந்திரஜாவிடம் தெரியுமே என்றவன்
விழியில் உன் விழியில் வந்து
விழுந்தேன் இந்த நொடியில் என்
எதிர்காலம் நீதான் என்று நிழல்
சொன்னது …
அந்தப் பாட்டு தானே என்றான் பிரகாஷ். அடப் பாருடா என் மாம்ஸ்க்கு மூளை எல்லாம் வேலை செய்யுது என்ற இந்திரஜாவிடம் அடியேய் நான் எம்.பி.ஏ படிச்சவன்டி என்றான் பிரகாஷ். ஆமாம் பெரிய எம்.பி.ஏ நீ மரமண்டை தான் என்றவள் மெரினாவுக்கு வண்டியை விடு மாம்ஸ் என்றாள்.
அவனும் பீச்சுக்கு வண்டியை விட்டான். இருவரும் கை கோர்த்து , ஒருவர் தோளில் மற்றவர் சாய்ந்து அழகாக நடை போட்டுக் கொண்டு வந்தனர். பிரகாஷ் சுண்டல் வாங்கி கொடு என்றவளிடம் சரிடி என்றவன் சுண்டல் வாங்கி வந்தான். அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவள் பிரகாஷ் அங்கே பாரு என்று கையை நீட்டிட அவர்களை முறைத்தபடி இடுப்பில் கையை வைத்தபடி நின்றிருந்தாள் வெரோனிகா.
ஐய்யோ அரக்கி ச்சீச்சீ அண்ணி என்ற பிரகாஷ் இந்திரஜா பின்னால் ஒழிந்து கொள்ள பார்க்க அச்சோ உதய் மாமா என்ற இந்திரஜா அவன் பின்னே ஒளிய அதான் மாட்டிக்கிட்டிங்களே அப்பறம் என்ன நடிக்கிறிங்க என்றாள் வெரோனிகா.
எத்தனை நாளா நடக்குது என்றவளிடம் இன்னைக்குத் தான் அண்ணி பர்ஸ்ட் டைம் என்றவனிடம் இனிமேல் தினம் , தினம் வாங்க என்றாள் வெரோனிகா. அண்ணி என்றவனிடம் ஆமாம் இனி தினம், தினம் அம்மா, சித்திகிட்ட சொல்லிட்டே நீங்க வரலாம் என்ற உதயச்சந்திரன் அப்பாவும், அத்தையும் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி உன் கிட்ட என்னை பேச சொன்னாங்க. ஆனால் அதற்கு அவசியமே இல்லை போல என்றான் உதயச்சந்திரன்.
என்ன அண்ணா நிஜமாகவா பெரியப்பா உன்கிட்ட பேச சொன்னாரா என்றவனிடம் நான் என்ன பொய்யா சொல்கிறேன் என்ற உதயச்சந்திரன் உங்க இரண்டு பேருக்கும் சம்மதம் தானே என்றான் உதய்.
சம்மதம் மாமா என்ற இந்திரஜா பிரகாஷை பார்க்க எனக்கும் சம்மதம் அண்ணா என்றான் பிரகாஷ். சரி, சரி அப்போ சீக்கிரமே கெட்டிமேளம் கொட்டிட வேண்டியது தான் என்றதும் சிரித்தனர் இந்திரஜா, பிரகாஷ் இருவரும்.
சரி நாம எல்லோரும் ஒன்றாகவே வெளியே போகலாமா என்ற வெரோனிகாவிடம் நாங்க பைக்ல வந்தோம் அண்ணி என்றான் பிரகாஷ். பைக்ல வந்தால் என்ன அடுத்து போகிற இடம் ஒரே இடமா இருக்க கூடாதா என்ற வெரோனிகாவிடம் இருக்கலாம் அண்ணி என்றான் பிரகாஷ். அது என்றவள் அப்பறம் இந்து அக்கா இனி நீங்க என்னை அக்கானு தான் கூப்பிடனும் என்றாள் வெரோனிகா.
ஏன் என்ற இந்திரஜாவிடம் நான் தானே மூத்த மருமகள் அப்போ நீங்க என்னை அக்கானு தான் கூப்பிடனும் என்ற வெரோனிகாவின் காதைத் திருகியவள் சரிங்க பெரிய அக்கா என்று சிரித்திட ஆஆ காதை விட்டுட்டே அக்கான்னு சொல்லலாம் என்றாள் வெரோனிகா.
அடுத்து எங்கே போகலாம் என்ற வெரோனிகாவிடம் சினிமா போகலாமா அண்ணி என்றான் பிரகாஷ். அவள் உதயச்சந்திரனை பார்த்திட அவன் சரியென்று தலையசைத்திட உதய், ரோனி; பிரகாஷ், இந்து நால்வரும் சினிமா தியேட்டருக்கு சென்றனர்.
என்ன மாமா சந்தோசம் தானே என்ற வெரோனிகாவிடம் சந்தோசம் தான் ரோனி எங்கே பிரகாஷ் மறுத்துருவானோன்னு பயந்தேன் ஆனால் அவங்க ஏற்கனவே லவ் பண்ணிட்டு இருக்கிறார்கள் என்றவனிடம் நாம எப்போ மாமா லவ் பண்ணுறது என்றாள் வெரோனிகா.
என்ன லவ்வா என்றவனிடம் ஆமாம் அர்ச்சனா அண்ணி லவ் பண்ணுறாங்க, பிரகாஷ் மாமா கூட லவ் பண்ணுறாரு நீங்க மட்டும் கல்யாணம் முடிஞ்சும் லவ் பண்ண மாட்டேன்னு விரைப்பா சுத்திட்டு இருந்தால் என்ன அர்த்தம் என்றவளை முறைத்தவன் எனக்கு லவ் பண்ணுற ஐடியா இப்போதைக்கு இல்லைம்மா என்றான் உதய்.
ஏன் என்றவளிடம் நீ தான் இன்னும் படிச்சு முடிக்கவில்லையே. அதான் முதலில் ஒரு டிகிரியாவது முடி அப்பறம் லவ் பண்ணுறதைப் பற்றி யோசிக்கலாம் என்றவனை ஏக்கமாக பார்த்தவள் நீங்க என்னை லவ் பண்ண அப்போ வெயிட் பண்ணுறிங்களா என்றாள். டியூப்லைட் எரிஞ்சுருச்சு என்று சிரித்தவன் நாமலும் லவ் பண்ணலாம் இப்போ வேண்டாம். நீ முதலில் ஒரு டிகிரியாவது முடி அப்பறம் ஆசை தீர லவ் பண்ணலாம் என்றான்.
அப்போ இப்ப பண்ணுறதுக்கு பெயர் என்னவாம் என்றவளிடம் லவ் பண்ணுறதுக்கு ஒத்திகை என்றவன் போடி லூசு என்றிட அச்சச்சோ என்ன மாமா உங்களுக்கும் வெட்கம் எல்லாம் வருதே என்றவள் அப்போ ஓகே என்று சிரித்தாள்.
மாமா என்ற வெரோனிகாவிடம் என்ன ரோனி என்றான் உதயச்சந்திரன். நாம சினிமாவுக்கு போக வேண்டாமே என்றாள் வெரோனிகா. ஏன் என்றவனிடம் அவங்க இரண்டு பேரும் தனியா சந்தோசமா இருக்கனும்னு தான் சினிமா போறாங்க நாம ஏன் நடுவுல நந்தி மாதிரி நாம வேற எங்கேயாவது போகலாம் என்றாள் வெரோனிகா. சரி ரோனி என்றவன் நாம ஷாப்பிங் போகலாம் என்றான். சரிங்க மாமா என்றவள் அவனைப் பார்த்து சிரித்து விட்டு பிரகாஷிற்கு போன் செய்தாள்.
என்ன மாம்ஸ் உன் அண்ணனும், அண்ணியும் இன்னும் வரவில்லை என்ற இந்திரஜாவிடம் தெரியலையே இரு நான் அண்ணனுக்கு போன் பண்ணுகிறேன் என்றவன் போனை எடுத்திட ரோனியிடம் இருந்து போன் வந்தது.
அண்ணி தான் போன் பண்ணுறாங்க என்ற பிரகாஷ் அதை அட்டன் செய்து சொல்லுங்க அண்ணி என்றிட மாமா நாங்கள் சினிமாவுக்கு வரவில்லை என் அக்கா வினோதாவோட பாப்பாவை பார்க்க போகிறோம் அதனால நீங்களும், இந்து அக்காவும் சினிமா போயிட்டு வாங்க ஸாரி மாமா என்றவளிடம் பரவாயில்லை அண்ணி என்ற பிரகாஷ் போனை வைத்து விட்டான்.
என்னாச்சு பிரகாஷ் என்றவளிடம் அவங்க அண்ணியோட அக்கா வினோதா வீட்டுக்கு போறாங்களாம் நம்மளை சினிமா பார்த்துட்டு வரச் சொன்னாங்க என்றவன் அவளுடன் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தான்.
…..தொடரும்….