நீ ஆசைப்பட்ட்படி உன் பிறந்தநாள் அன்னைக்கே உனக்கு ப்ரப்போஸ் பண்ணிட்டேன் இப்போ சந்தோசம் தானே என்றவனைக் கட்டிக் கொண்டவள் ரொம்ப , ரொம்ப சந்தோசம் மாமா என்றிட அவளைத் துக்கி சுற்றினான்.
சரி கிளம்பு என்றவனிடம் எங்கே மாமா என்றாள் வெரோனிகா. உன் அம்மா வீட்டுக்குத் தான் என்றவனிடம் ஏன் என்றாள். நீ தானே சொன்னே உங்களை விட்டுட்டு என் அம்மா வீட்டுக்கு போகிறேன்னு என்றவன் அவளை சீண்டிட நான் எப்படி போவதாம் நான் விட்டுட்டு போனாள் என் சந்துரு மாமா செத்துருவேன்னு சொல்லிட்டாரே என்றவள் அவர் இல்லாமல் நான் ஒருநாளும் என் அம்மா வீட்டுக்கு போக மாட்டேன் என்றவள் இந்த நிமிசம் நான் செத்துப் போனாள் சந்தோசமா செத்துப் போவேன் மாமா என்றாள்.
அப்படி எல்லாம் உன்னை சாக விட மாட்டேன். நீயும், நானும் ரொம்ப தூரம் டிராவல் பண்ணனும். முதலில் நீ காலேஜ் முடிக்கனும். அப்பறம் நிறைய லவ் பண்ணனும். உன்னை மாதிரி ஒரு குட்டியான க்யூட்டான பொண்ணு பெத்துக்கனும் என்றவனை வெட்கமாக அவள் பார்த்திட இப்போ என்ன வெட்கம். அதற்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு வெட்கத்தை பத்திரமா சேர்த்து வச்சுக்கோ என்றான்.
போங்க மாமா என்று அவள் அவனது மார்பில் சாய்ந்திட அடப் பாவமே என்றான் உதயச்சந்திரன். என்ன மாமா என்றவளிடம் நீ பண்ணின சேட்டையால பிரகாஷ்னு ஒருத்தனை நான் மறந்தே போயிட்டேன். பாவம் என் தம்பி தனியா அலங்காரம் பண்ணிட்டு இருப்பான் என்றவன் சரி ,சரி நான் கிளம்புறேன் என்று எழுந்திருக்க எங்கே போறிங்க மாமா என்றாள் வெரோனிகா.
இன்னைக்கு என் செல்லப் பொண்டாட்டியோட பிறந்தநாள். அதனால அவளுக்கு நிறைய சர்ப்பரைஸ் கொடுக்கலாம்னு எவ்வளவோ ப்ளான் பண்ணினேன். குட்டிச்சாத்தான் எல்லாத்தையும் இந்த கண்ணீரை வச்சே கரைச்சுட்டாள் என்றான் உதயச்சந்திரன்.
சரி நீ இந்த டிரஸ் போட்டு ரெடியாகு என்றவனிடம் நீங்களே போட்டு விடுங்க என்றாள். ஏன்டி நானா நான் எப்படிடி என்றவனிடம் அன்னைக்கு போட்டு விட்டிங்க கை உடைஞ்சு இருந்தப்போ என்றவளிடம் அப்போ நீ குழந்தை , இப்போ என் பொண்டாட்டி இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு என்றவனை அவள் முறைத்தபடி அப்பவும் நான் உங்க பொண்டாட்டி தான் என்றாள்.
அப்போ எனக்கு நீ குழந்தை தான். இப்பவும் குழந்தை தான் ஆனால் இப்போ என் மனசுல உள்ள உணர்வுகள் வேற. நீ ஒரு டிகிரியாவது முடிக்கனும் அதற்குப் பிறகு ஆசை தீர காதலிக்கலாம், இந்தக் குழந்தைக்கு விளையாட குட்டி ரோனி பெத்துக்கலாம் அதுவரை உன் மாமா நல்லபிள்ளையா இருக்கனும் அதனால போ நீயே ரெடியாகு என்றவன் சென்று விட்டான்.
எதற்காக அவள் உன் சட்டையைப் பிடித்தால் என்ற ஸ்ரீஜாவிடம் உன்னோட வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு தான் என்றவன் அண்ணிக்கு நம்ம கல்யாணம் எப்படி நடந்துச்சுனு தெரிஞ்சுருச்சு போல அதான் அண்ணன் காதலிச்ச உன்னை அண்ணியா பார்க்காமல் நான் தப்பு பண்ணிட்டேன்னு என் சட்டையைப் பிடிச்சாங்க என்றான் தேவ்.
இப்பவாச்சும் நீ பண்ணின அசிங்கத்தை உணர்ந்துட்டியா ஒரு சின்னப் பொண்ணு கூட உன்னை காரி துப்புற அளவுக்கு தான் நீ பண்ணின கேடு கெட்ட காரியம் என்ற ஸ்ரீஜா கோபமாக சென்று விட அவன் தான் அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தான்.
அப்பா என்று வந்த உதயநிலா அவனது கண்களைத் துடைத்து விட அன்பு மகளை ஆசையாக அள்ளிக் கொண்டவன் அப்பா பண்ணினது பெரிய தப்பு தான்டா ஆனால் எனக்கு அன்னைக்கு சூழ்நிலையில் என்ன பண்ணுறதுன்னு தெரியலை. அன்னைக்கு நிலைமைக்கு எனக்கு உன் அம்மாவை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும் அது மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. அவளை நான் எனக்கு சொந்தமாக்கிட்டால் அவளே என்னை கல்யாணம் பண்ணிக்குவாள்னு தான் அப்படி பண்ணினேன். என் எண்ணம் போல தான் எல்லாமே நடந்துச்சு ஆனால் அன்னையில் இருந்து உன் அம்மா மட்டும் இல்லை என்னோட அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்களே.
என்கிட்ட அண்ணி மட்டும் தான் பேசிட்டு இருத்தாங்க இப்போ அவங்களும் பேசுவாங்களா , இல்லையான்னு தெரியலையே என்று அழுதவனின் கண்களைத் தன் பிஞ்சு விரல்களால் துடைத்து விட்டாள் உதயநிலா.
அவன் தன் மகளுடன் பேசிக் கொண்டிருந்த்தை எதார்த்தமாக கேட்ட வெரோனிகா அந்த அறையின் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தாள்.
அண்ணி என்றவனிடம் உங்க மேல எனக்கு இன்னும் கோபம் போகவில்லை. போகவும் போகாது அதற்காக உங்க கூட பேசாமல் இருக்க மாட்டேன். நான் எப்பவுமே ஒருத்தவங்க மேல அன்போ, பாசமோ வச்சா கடைசி வரைக்கும் மாற மாட்டேன். அது மட்டும் இல்லை உங்க முகம் நான் வெறுக்க முடியாத என் சந்துரு மாமாவோட முகம் ஆனால் நமக்குள்ள பழைய நட்பு எப்பவுமே இருக்காது மாமா என்றவள் நிலாக்குட்டி நாம கீழே போகலாமா என்றிட குழந்தை அவளுடன் சென்றாள்.
அண்ணி என்றவனிடம் நீங்க எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம் நீங்களும் கீழே வாங்க என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள்.
வாவ் ரோனி நீ ரொம்ப அழகா இருக்கடி இந்த புடவையில் என்ற மலர்கொடியிடம் இது என் சந்துரு மாமா செலக்சன் அப்போ அழகா தானே இருப்பேன் அத்தை என்றாள் வெரோனிகா. அவளைப் பார்த்து புன்னகைத்த மலர்கொடி எங்கே உன் சந்துரு மாமா அவனை உன்னை கோயிலுக்கு அழைசசுட்டு போகச் சொன்னேன்.
அண்ணனும் , தம்பியும் அவுட் ஹவுஸுக்கு போனானுங்க இன்னும் காணோம் என்ற மலர்கொடி இந்த இந்திரஜாவையும் காணோம் என்றார். ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்றாள் வெரோனிகா.
என்னடி சொன்ன என்ற மலர்கொடியிடம் பிரகாஷ் மாமா இருக்கிற இடத்தில் தான் இந்து அக்கா இருப்பாங்க என்ற வெரோனிகா சிரித்திட நீ மட்டும் என்னவாம் உன் சந்துரு மாமாவை சுற்றி சுற்றி வருகிறாய் என்றார் மலர்கொடி.
என்னம்மா ரோனியை என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்கிங்க என்று வந்த உதயச்சந்திரனிடம் என் மருமகள் நான் கிண்டல் பண்ணுகிறேன் உனக்கு என்னப்பா என்றார் மலர்கொடி. நான் ஒன்றும் சொல்லவில்லை தாயே நீங்களாச்சு, உங்க மருமகளாச்சு ஏதோ சந்துரு மாமானு என் பெயர் அடி பட்டுச்சே அதான் என்னனு கேட்டேன் என்றான் உதயச்சந்திரன்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா என்றவள் பாப்பாவுக்கு சாக்லேட் கொடுங்க என்றாள். ஒரேதா சாக்லேட் சாப்பிட்டால் பாப்பாவுக்கு பூச்சி கடிக்கும் என்றவனிடம் அதெல்லாம் ஒரு சாக்லேட் சாப்பிடுறதால ஒன்றும் ஆகாது கொடுங்க மாமா என்றாள் வெரோனிகா.
நிலாப் பாப்பா நீங்க கேட்பரீஸ் சாப்பிடுறிங்களா என்று குழந்தைக்கு சாக்லேட் ஊட்டி விட்டாள் வெரோனிகா. அவளுக்கு எதற்கு இப்போ சாக்லேட் கொடுக்கிற என்றாள் ஸ்ரீஜா. என்னோட பர்த்டே அதான் என்றவளை முறைத்த ஸ்ரீஜா உன்னோட பர்த்டேனா நீ சாப்பிடு என் பிள்ளைக்கு முட்டாயைக் கொடுத்து அவளுக்கு எதுவும் ஆகிருச்சுனா நீயா எனக்கு பிள்ளை தருவ உன்கிட்ட நான் அன்னைக்கே சொன்னேன் என் குழந்தைக்கு எல்லாமே கொடுக்க அம்மா நான் இருக்கேன். சும்மா டிரஸ் எடுத்துட்டு வருவது, சாக்லேட் ஊட்டி விடுறது, சாப்பாடு ஊட்டி விடுறது இந்த வேலை எல்லாம் வச்சுக்காதே என்றாள் ஸ்ரீஜா கோபமாக.
ஏய் இப்போ அவள் என்னடி தப்பு பண்ணினாள். இந்த குதி குதிக்கிற என்ற மலர்கொடியிடம் ஆமாம் உங்க ஆசை மருமகள் என்ன தப்பு பண்ணவில்லை. காலையில் என் புருசன் சட்டையைப் பிடிச்சாளே என்ன ஏதுன்னு நீங்க யாராவது கண்டிச்சிங்களா.
இந்த வீட்டில் இவர் மட்டும் தான் உங்களுக்கு மகனா , தேவச்சந்திரன்னு ஒருத்தனையும் நீங்க தானே பெத்திங்க எப்போ பாரு உதய் , ரோனி; உதய், ரோனி எல்லாத்துக்கும் அவங்க தான் வந்து நிற்கனும்.
இப்போ இவளுக்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாடவில்லைனு யார் அழுதாங்க இந்த மகாராணிக்கு பிறந்தநாள் கொண்டாட ஆளாளுக்கு வேலை பார்த்துக்கிட்டு என்ற ஸ்ரீஜா கோபமாக அடுத்து ஏதோ சொல்ல வர நீங்க சொன்னாலும் , சொல்லாவிட்டலும் அவள் மகாராணி தான் என்றான் உதயச்சந்திரன்.
என்னோட மகாராணி அவள். அவளுக்காக பிறந்தநாள் இல்லை அவள் என் கூட இருக்கிற ஒவ்வொரு நாளையும் கொண்டாடுவேன். என் வீட்டு ஆளுங்களையும் கொண்டாட வைப்பேன். உங்க புருசனோட சட்டையை அவள் ஏன் பிடிச்சாள்னு இந்நேரம் உன் புருசனே உங்ககிட்ட சொல்லிருப்பான். ஒருவேளை அவள் பண்ணினது தப்பா இருந்தால் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
உங்களுஊளக்கு என் வெரோனிகாவை பிடிக்கிறது, பிடிக்கவில்லை அது வேற பெரியவங்களுக்குள்ள ஆயிரம் மனஸ்தாபங்கள் இருக்கும் அதை குழந்தைக்குள்ளேயும் விதைக்காதிங்க நிலா இந்த வீட்டோட வாரிசு. நீங்க அவளை பெத்துருக்கலாம் அதற்காக இந்த வீட்டில் உள்ளவங்களுக்கு குழந்தை மேல உரிமை இல்லைன்னு உங்களால சொல்ல முடியாது.
வெரோனிகா உதயநிலாவோட பெரியம்மா அவள் குழந்தையை தொடக்கூடாது, தூக்க கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது என்றவன் அம்மா ,அப்பாவை அழைச்சுட்டு அவுட் ஹவுஸ் வந்திருங்கள் என்ற உதயச்சந்திரன் நிலாக்குட்டி பெரியப்பாகிட்ட வாங்க என்று குழந்தையை தூக்கிக் கொண்டான்.
அவமானத்தில் முகம் சிவந்து போயி நின்ற ஸ்ரீஜாவின் கையைத் தொட்டாள் வெரோனிகா. அக்கா உங்களோட மனநிலைமை எனக்கு நல்லாவே புரியுது. உங்களுக்கு என் மேல கோபம் இருந்தால் என்னை நான்கு அடி கூட அடிச்சிக்கோங்க ஆனால் பாப்பாவை நான் தூக்குவதையோ, கொஞ்சுறதையோ தடுக்காதிங்க ப்ளீஸ் என்றாள்.
ஏன்டி உன்னை நான் அடிக்கனும். அதை நீ தயா மாமாகிட்ட சொல்லுவ அப்பறம் அவர் என்னை திட்டனும் இது தானே உன்னோட ஆசை என்றவள் உன்னை சின்னப் பொண்ணுனு நினைச்சேன். பலே ஆளுடி நீ மொத்தக் குடும்பத்தையும் உன் கைக்குள்ள வச்சுருக்க என்ற ஸ்ரீஜா பார்க்கிறேன் இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி நல்லவள் மாதிரி நடிச்சு, நடிச்சு எல்லோரையும் ஏமாத்துவன்னு என்று கோபமாக சென்று விட்டாள்.
இவங்க ஏன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க என்று நினைத்தவள் அமைதியாக அவுட்ஹவுஸிற்கு சென்றாள்.
அங்கு அந்த வீடு முழுக்க அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. அவள் வீட்டிற்குள் நுழையும் போதே மலர்களை அவள் மீது தூவியபடி ஒரு டிரோன் பறந்து செல்ல அவள் புன்னகையுடன் எதிரில் பார்க்க ஹாப்பி பர்த் டே ரோனி என்று அவளது அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணி, பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அத்தான் , அண்ணன் மகன், அக்கா மகன் என அனைவரும் இருக்க அவர்களைக் கண்டவள் அம்மா என்று ஓடிச் சென்று தன் அன்னையைக் கட்டிக் கொண்டாள்.
…..தொடரும்….