ஒரு வழியாக தேவ்க்கு ஒன்றும் இல்லை அவன் பிழைத்து விட்டான் கான்சியஸ் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று மருத்துவர் கூறிட அப்பாடா என்று இருந்தது மொத்தக் குடும்பத்திற்கும். கண்ணீரும், கம்பலையுமாக இருந்த குடும்பத்தினர் சற்று தெளிச்சி அடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் இருக்க முடியாதல்லவா அதனால் உதய், ஸ்ரீஜா இருவரும் மருத்துவமனையில் தங்கினர். மலர்கொடியும் மருத்துவமனையிலே தங்கினார்.
என்ன ரோனி நீ ஏன் சாப்பிடாமல் இருக்க என்ற அர்ச்சனாவிடம் பசி இல்லை அண்ணி என்றவள் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி அண்ணன் இன்னும் போன் பண்ணவில்லையா என்ற அர்ச்சனாவிடம் ஆமாம் அண்ணி மாமா இன்னும் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை அதான் என்ற வெரோனிகா நீங்க போயி சாப்பிடுங்க அண்ணி என்று அர்ச்சனாவை அனுப்பி வைத்தாள்.
மாமா வந்துட்டிங்களா என்றவளிடம் சாப்பிட்டியா ரோனி என்றான் உதய். பசிக்கவில்லை மாமா என்றவளை முறைத்தவன் எத்தனை தடவை சொல்றது உனக்கு நான் வரும் வரை பசியோட இருக்க கூடாதுன்னு என்றவனிடம் நல்லா சொல்லு உதய் நான் சொன்னால் எங்கே கேட்கிறாள் என்ற சுசீலா கூறிட அத்தை நீங்களுமா என்றாள் வெரோனிகா.
என்னடி நீங்களுமா ஒழுங்கா சாப்பிடுகிறாயா அவன் யாரைத் தான் பார்ப்பான். அங்கே அக்காவும் சாப்பிடாமல் , கொள்ளாமல் கடவுளே தேவ் சீக்கிரம் எழுந்து வீட்டுக்கு வரனும் அப்பதான் எல்லோருக்கும் நிம்மதி என்றிட சித்தி அவன் சீக்கிரம் எழுந்திருவான். நாளைக்கு காலையில் எப்படியும் கண்ணு முழிச்சுருவான். கவலையை விடுங்க என்ற உதயச்சந்திரன் ரோனி வா சாப்பிடலாம் என்று அவளுடன் சாப்பிட்டான்.
உதய் நீ இரு பிரகாஷ் இன்னைக்கு ஹாஸ்பிடல் போகட்டும். நீ நேற்றும் தூங்கவில்லை என்றிட அட பரவாயில்லை சித்தி அம்மா அங்கே ஸ்ரீஜா கூட சண்டை ஏதும் போடாமல் இருக்கனும் அதற்கு நான் கூட இருந்தால் தான் சரியா வரும் என்றவன் சாப்பிட்டதும் கிளம்ப ஆரம்பித்தான்.
வாசல் வரை வந்தவளிடம் என்னடி என்றான் உதய். மிஸ் யூ மாமா என்றவளிடம் என்னம்மா இது நான் என்ன வெளியூருக்கா போகிறேன். காலையில் திரும்பவும் வீட்டுக்கு வரத் தான் போகிறேன். அதனால ரொம்ப எல்லாம் நீ பீல் பண்ண வேண்டாம் என்றவன் சிரித்திட அவளும் சிரித்து விட்டு பாய் மாமா என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றாள்.
என்னடி வந்து கட்டிப் பிடிச்சுட்டு நிற்கிற என்ற சுசீலாவிடம் என் மாமியார் பாவம் தனியா வேலை பார்க்கிறாங்களே அதான் ஏதாச்சும் உதவி வேண்டுமானு என்றவளிடம் இல்லைடா அத்தை வேலை எல்லாம் முடிச்சுட்டேன் நீ போயி தூங்கு என்றவர் ஏன்டி தனியா தூங்கிருவ தானே இல்லை ஊர்மிளா கூட சேர்ந்து தூங்குறியா என்றார் சுசீலா.
அதெல்லாம் தனியா தூங்கிருவேன் அத்தை என்றவள் தன்னறைக்கு சென்றாள். அவன் இல்லாமல் உறங்க ஒரு மாதிரியாகத் தான் இருந்தது அவளுக்கு . அதனால் அவனது அலமாரியில் இருந்த புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
அம்மா சாப்பிடுங்க என்ற உதயச்சந்திரனிடம் இல்லைப்பா எனக்கு பசி இல்லை அவளை சாப்பிட சொல்லு என்றார் மலர்கொடி. ஸ்ரீஜா என்று அவன் அழைத்ததும் அமைதியாக நிமிர்ந்தாள் ஸ்ரீஜா. சாப்பிடு என்று கூறியவன் தன் அன்னையையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.
தயா மாமா என்றவளிடம் என்ன என்பதைப் போல பார்த்தான் உதயச்சந்திரன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றவளிடம் நமக்குள்ள பேச என்ன இருக்கு என்றான் உதய். எதுவுமே இல்லையா என்றவளிடம் என்ன இருக்கு என்றான் உதய். அவள் ஏதோ சொல்ல வர அவனது மொபைல் போன் ஒலித்திட ஒரு நிமிசம் என்றவன் அதை அட்டன் செய்தவன் சொல்லு ரோனி என்றிட மாமா அத்தை சாப்பிட்டாங்களா என்றாள் வெரோனிகா.
அம்மா சாப்பிட்டாங்க என்றவன் நீ இன்னும் தூங்கவில்லையா என்றிட அதற்குள்ள எப்படி தூங்குவேன் மணி ஒன்பது தான மாமா ஆகுது. டீவி பார்க்கவும் பிடிக்கவில்லை அதான் ரூம்க்கு வந்துட்டேன். புக் எடுத்து படிக்கலாம்னா அதுவும் பிடிக்கவில்லை அதான் சரி அத்தை என்ன பண்ணுறாங்க, தேவ் மாமாவுக்கு எப்படி இருக்கு என்ன ஏதுன்னு கேட்கலாம்னு தான் போன் பண்ணினேன் என்றாள் வெரோனிகா.
அம்மா சாப்பிட்டாங்க ரோனி நீ தூங்கு என்றவனிடம் பேசாமல் நீங்க என்னையும் அழைச்சுட்டு போயிருக்கலாம் எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு மாமா என்றவளிடம் என்ன ரோனி நீ உனக்கே உடம்பு சரியில்லை. அப்பறம் ஹாஸ்பிடலில் இரண்டு பேர் தங்குறதே கஷ்டம் ஏற்கனவே மூன்று பேர் இருக்கிறோம் நீயும் எப்படி தங்க முடியும் சொல்லு என்றவன் நீ தூங்கு என்றான் . அத்தைகிட்ட போனை கொடுங்க மாமா கொஞ்சம் பேசிட்டு தூங்குகிறேன் என்றாள் வெரோனிகா. சரி இரு என்றவன் தன் அன்னையின் அருகே சென்று அம்மா ரோனி உங்க கிட்ட பேசணுமாம் என்று போனைக் கொடுத்தான்.
அவள் கிட்ட பேச மட்டும் நேரம் இருக்கா தயா மாமா உங்களுக்கு என்ற ஸ்ரீஜாவிடம் நீ என்ன லூசா அவள் என்னோட மனைவி அவள் கிட்ட பேச எனக்கு ஆயிரம் விசயம் இருக்கும். ஏன் ஒரு விசயமும் இல்லைனா கூட அவள் கிட்ட மணிக் கணக்கில் பேசுவேன் என்றவனை ஆற்றாமையுடன் பார்த்தவள் என்னை சுத்தமா மறந்துட்டிங்க அப்படித் தானே என்றாள்.
நீ என்ன பேசிட்டு இருக்கிறாய்னு புரிஞ்சு தான் பேசுறியா நீ தேவச்சந்திரனுடைய மனைவி என்னோட தம்பி மனைவி என்றான். நான் மறுக்கலை ஆனால் நான் நீங்க நேசிச்ச பொண்ணு என்றாள். நீ தானே நான் வேண்டாம்னு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட நானா உன்னை வேண்டாம்னு சொன்னேன் என்றவனிடம் நான் ஏன் அப்படி பண்ணினேன்னு உங்களுக்கு தெரியாதா என்றாள் ஸ்ரீஜா.
என்ன காரணம் என் தம்பி என்னைப் போல வேசம் போட்டு ஏமாற்றி உன் கூட ஒரு நாள் வாழ்ந்துட்டான்னு சொல்லுவியா என்றவனை கண்ணீர் மல்க பார்த்தவளிடம் நான் ஒரு பொண்ணை நேசிக்கிறேன்னா அவளோட மனசை மட்டும் தானே தவிர உடம்பை இல்லை. ஒரு பொண்ணோட கற்பு நிச்சயம் அவளோட உடம்புல இல்லை மனசுல தான் இருக்குன்னு நம்புறவன் நான். நீ அவன் கிட்ட உன்னை இழந்திருந்தாலும் நான் உன்னை ஏத்துட்டு இருந்திருப்பேன் நீ தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டு போன உன்னை நான் மட்டும் எப்படி நினைச்சுட்டு இருப்பேன் சொல்லு என்றான் உதய்.
தயா மாமா என்றவளை முறைத்தவன் உன் தயா மாமா செத்துப் போயி ரொம்ப வருசம் ஆச்சு ஸ்ரீஜா நான் இப்போ என் ரோனியோட சந்துரு மாமா அவ்வளவு தான். நீ என்னை மறக்கலை, மறக்க முடியலை இப்படி எல்லாம் தேவ்கிட்ட சொல்லிட்டு இருக்கிறாய்னு எனக்கு தெரியும். தயவு செய்து இனிமேல் என்னை நினைச்சுட்டு இருக்கேன்னு சொல்லாதே நான் இன்னொருத்தியோட புருசன். நானும் உன்னை ஒரு காலத்தில் விரும்பினேன் தான் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் நாம சேர முடியாமல் போச்சு. உன்னால தேவ் பண்ணின துரோகத்தை மன்னிக்க முடியலை அது உன்னோட தனிப்பட்ட பிரச்சனை. அதில் நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால் தேவ் தான் உனக்கு புருசனா வரணும்னு சொல்லி அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டது நீ தான். அப்போ உன்னால முடிந்தால் அவனுக்கு உண்மையா இரு. என்னை மறந்துட்டு உன்னோட வாழ்க்கையை நிம்மதியா வாழ முயற்சி பண்ணு இப்பவும் சொல்கிறேன் நான் உன்னை தப்பா நினைக்கவில்லை.
தேவ் கூட உன்னை எப்பவும் தப்பா நினைக்க மாட்டான். நீ மாறனும் ஸ்ரீஜா மாற்றங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை எல்லா மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள பழகிக்கோ என்றவன் சென்று விட அவள் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் ஒன்றும் அவன் வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் மனதில் ஏன் தன் மீது இருந்த அந்த பழைய காதல் இல்லாமல் போனது. அவளுடைய மனது மற்றும் ஏன் மாற மாட்டேன் என்கிறது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அந்த வெரோனிகா மீது தனக்கு ஏன் இத்தனை வன்மம் . அவள் ஒருமுறை கூட என் மீது கோபமாக நடந்து கொண்டதில்லையே இவ்வளவுக்கும் தேவ் செய்த தவறால் தான் நானும், தயா மாமாவும் சேராமல் போயிட்டோம்னு தெரிந்த உடன் அவள் தேவ் மீது தானே கோபம் பட்டாள். அவள் எனக்காக தேவ் கூட சண்டை போட்டாள். ஏன் எனக்கு அவள் மேல இவ்வளவு வன்மம்.
தேவ் பண்ணினது தப்பு தான் அவன் அதற்காக தினம், தினம் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். ஏன் நான் அவனை மன்னிக்க முடியாமல் இருக்கிறேன் என்று அவள் அமைதியாக யோசித்தாள்.
என்னம்மா பேசிட்டிங்களா என்ன சொன்னாள் என்றான் உதய். என்ன சொல்லப் போகிறாள் கவலைப் படாதிங்க அத்தை தேவ் மாமாவுக்கு ஒன்றும் ஆகாது. அவர் பிழைச்சுப்பாரு, காலையில் கண் விழிச்சுருவாருன்னு தான் சொன்னாள் என்ற மலர்கொடி உதய் தலை வலிக்குது நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா என்றிட தூங்குங்கம்மா என்றவன் எழுந்து சென்றான்.
என்னப்பா நீங்க ஏன் என்ற உதயச்சந்திரனிடம் இல்லைப்பா எனக்கு வீட்டில் இருக்க முடியலை அவன் கண் விழித்தால் தான் எனக்கு கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும் என்ற நெடுமாறன் மகன் அருகில் அமர்ந்து கொண்டார். அவனை பார்க்க முடியுமா உதய் என்றவரிடம் இல்லைப்பா இப்போ அலௌவ் பண்ண மாட்டாங்க என்றிட சரிப்பா அம்மா எங்கே என்றார் நெடுமாறன்.
அம்மா தூங்குறாங்க என்றவன் தன் தந்தைக்கு காபி வாங்கி வந்து கொடுத்தான். உனக்கு எதுவும் வேண்டுமா ஸ்ரீஜா என்றவனிடம் எதுவும் வேண்டாம் என்றாள் ஸ்ரீஜா.
உறக்கம் வராமல் தவித்தவள் எழுந்து கல்யாணிதேவியின் அறைக்கு சென்றாள். என்ன ரோனி தூங்கலையா என்ற கல்யாணிதேவியிடம் இல்லை ஆச்சி தூக்கம் வரவில்லை. நீங்க ஏன் ஆச்சி தூங்காமல் இருக்கிங்க உங்க அறையில் விளக்கு எறியவும் தான் வந்தேன் என்றவளை தன்னருகில் அமர வைத்தவர் மனசுல நிம்மதி இருந்தால் தானம்மா தூக்கம் வரும் என்றார் கல்யாணிதேவி.
தேவ் மாமாவுக்கு ஒன்றும் ஆகாது ஆச்சி அவர் நாளைக்கு கண் விழிச்சுருவாரு என்றாள் வெரோனிகா. உன் வாய் முகூர்த்தம் பழிக்கட்டும் என்றார் கல்யாணிதேவி. அதெல்லம் பழிக்கும் என்றவள் அவரது காலில் தைலத்தை தேய்த்து விட ஆரம்பித்தாள்.
…..தொடரும்….
Awesome https://rb.gy/4gq2o4