என்ன அண்ணா இது ரோனி என்ற ஊர்மிளாவிடம் அதான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு அண்ணியோட ஸ்கோர் பாரு மத்த எல்லா சப்ஜெக்டிலும் எவ்வளவு மார்க் பாரு மேத்ஸ் மட்டும் இவ்வளவு மோசமான மார்க் என்ற பிரகாஷிடம் நல்லவேளை பெயில் ஆகவில்லை என்றாள் ஊர்மிளா.
என்ன ரோனி இது இவ்வளவு பூவரா மார்க் எடுத்திருக்க என்ற உதயச்சந்திரனிடம் மாமா அந்த டைம் என்றவளது கண்கள் கலங்கிட சரி விடு அதான் நீ பாஸ் பண்ணிட்டியே என்றவன் வீட்டுக்கு போகலாம் வா என்றான். ஷாப்பிங் என்றவளிடம் நீ வாங்கி இருக்கிற மார்க்குக்கு பெரிய கிப்ட் கொடுக்கனுமா என்றான் உதய். அவள் மௌனமாக அவனுடன் சென்றாள்.
வீட்டிற்கு வந்த வெரோனிகா அமைதியாக அமர்ந்திருக்க என்னாச்சு ரோனி ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்க என்றார் சுசீலா. எக்ஸாம்ல மார்க் ரொம்ப கம்மி அத்தை அதனால மாமா என்கிட்ட பேசவில்லை என்றவளிடம் அவ்வளவு தானா நான் கூட என்னம்மோ ஏதோன்னு நினைச்சுட்டேன். வா வந்து இந்த ஜூஸை உன் சந்துரு மாமா கிட்ட போயி கொடு என்றார் சுசீலா.
இப்போ நான் போனால் என்னை திட்டுவாரு என்றவள் ஊர்மி ப்ளீஸ் நீ போயி கொடுத்துட்டு வா என்றாள் வெரோனிகா. என்ன ரோனி நீ அதெல்லாம் அண்ணன் ஒன்றும் சொல்ல மாட்டாரு நீயே போயி கொடு என்றாள் ஊர்மிளா. ஏன்டி இரண்டு பேரும் நீ போ, நான் போனு போட்டி போடுறிங்க. யாராச்சும் ஒருத்தி போயி கொடுத்துட்டு வாங்கடி என்று சுசீலா கூறிட வெரோனிகா தன்னறைக்கு சென்றாள்.
மாமா என்றவளிடம் என்ன என்றான் உதய். ஜூஸ் என்றவளிடம் வச்சுட்டு போ என்றவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றவள் சென்று விட அவன் அமைதியாக தன் வேலையை கவனித்தான்.
என்னாச்சு என்ற ஊர்மியிடம் ஒன்றும் இல்லை என்றவள் இன்னும் நான்கு நாட்களில் கல்யாணநாள் ஆனால் அவர் என் மேல கோபமா இருக்கிறார். என்னால அந்த டைம்ல அவர்கிட்ட பேசாததால டவுட் கேட்கவில்லை. அதோட பலன் எக்ஸாம்ல மார்க் கம்மி என்றவள் சோகமாக முகத்தை வைத்துக் கொள்ள விடுங்க அண்ணி அதெல்லாம் ஒரு இரண்டு நாளில் அண்ணா சரியாகிருவாரு என்றான் பிரகாஷ்.
சரிங்க மாமா என்றவள் தன்னறைக்கு சென்றாள். அவன் இவளை கண்டு கொள்ளாமல் இருக்கவும் பால்கணிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அவளை பார்த்தவன் அமைதியாக எழுந்து வெளியே சென்று விட்டான்.
என்னாச்சு உதய் ஏன் அவள் கிட்ட பேச மாட்டேங்கிற அவள் பாவம்பா என்ற மலர்கொடியிடம் எனக்கும் தெரியும் அம்மா. அந்த நேரத்தில் தானே தேவ்வை பார்த்துட்டு நான்னு நினைச்சு அவள் ஒழுங்கா படிக்காமல் என்னால புரிஞ்சுக்க முடியுது இன்னைக்கு ஒரு நாள் அவள் பீல் பண்ணட்டும் விடுங்க என்றவன் கிளம்பி சென்று விட்டான்.
என்ன பிள்ளைகளோ என்ற மலர்கொடி சுசீலாவின் அருகில் வந்தார். என்னக்கா தேவ் என்ன பண்ணுறான் அவனுக்கு சூப் வச்சுருக்கேன் ரோனி வீட்டில் இருந்து ஆட்டுக்கால் எல்லாம் கொடுத்து விட்டிருந்தாங்களே உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். பிரபு நேற்று வந்தாப்புல அவரும், வினோதாவும் வந்தாங்க. அவங்க கிட்ட சம்மந்தி வீட்டில் கொடுத்து விட்டாங்களாம் என்றிட அவங்க ரொம்ப வெள்ளந்தியான மனுசங்க சுசீலா. அதுவும் ரோனியோட பெரியப்பா ரொம்ப பாசக்காரரு என்ற மலர்கொடி சரி இரு நான் தேவ்க்கு கொடுத்துட்டு வரேன் என்ற மலர்கொடி மகனுக்கு ஆட்டுக்கால் சூப் எடுத்துச் சென்றார்.
என்ன தேவ் படுக்க வேண்டியது தானே ஏன் எழுந்து உட்கார்ந்திருக்க என்ற மலர்கொடியிடம் இல்லைம்மா இருக்கட்டும். பொழுதோட படுத்திருந்தால் உடம்பு ஒரு மாதிரி சோம்பேறியாகிரும் என்றவன் என்ன இது என்றான். இது ஆட்டுக்கால் சூப் சித்தி உனக்காக தான் வச்சுருக்காள் என்று மகனுக்கு சூப் ஊட்டி விட்டார் மலர்கொடி.
ஆட்டுக்கால் ஏதும்மா என்றவனிடம் உனக்கு ஆக்சிடென்ட் ஆன விசயம் கேள்விப் பட்டு ரோனியோட வீட்டில் இருந்து கொடுத்து விட்டாங்க. அவங்க உன்னை வந்தே பார்த்திருப்பாங்க. உதய் தான் வேண்டாம்னு சொல்லிட்டான் உன் பொண்டாட்டி ரோனியை காயப் படுத்துறது போல அவங்களையும் ஏதாச்சும் சொல்லி காயப் படுத்திட்டாள்னா எல்லோருக்கும் சங்கடமாச்சே என்றார் மலர்கொடி.
அம்மா என்றவனிடம் என்ன தேவ் என்றார் மலர்கொடி. என்னை மன்னிச்சுட்டிங்களா அம்மா என்றான் தேவ். உன்னை மன்னிக்கிறதா மன்னிக்க கூடிய தப்பா தேவ் நீ பண்ணினது என்ற மலர்கொடி மேலும் தொடர்ந்தார். உன்னை நான் பத்து மாதம் சுமந்து பெத்தவள் தேவ் உனக்கு ஒன்று என்றால் எனக்கு துடிக்கும். என்னோட பிள்ளை நீ உன்னை வெறுக்க முடியாது ஆனால் அதே நேரத்தில் நீ பண்ணின தப்பை மன்னிக்கவும் முடியாது.
உனக்கு ஸ்ரீஜா தான் வேண்டும்னு நீ கேட்டிருந்தாலே உதய் உனக்காக விட்டுக் கொடுத்திருப்பான். உன் மனசை சொல்லி புரிய வைத்திருந்தால் ஒருவேளை ஸ்ரீஜா கூட உன்னை ஏத்துட்டு இருந்திருப்பாள். ஆனால் நீ பண்ணினது பச்சை துரோகம். அவள் உன் கூட இருந்த அந்த ராத்திரி உன்னை உதய்னு நினைச்சு தான் இருந்திருக்கிறாள். அதை விட ஒரு அவமானம் உனக்கு இருக்குமா தேவ். அவளோட மனசு சில விசயங்களை ஏத்துக்க முடியாத காரணத்தால் தான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டாள்.
சரி விடு தேவ் பழைய விசயங்களை பேச வேண்டாம். நீ சாப்பிடு என்ற மலர்கொடி ஊட்டிய சூப்பை குடித்தான் தேவச்சந்திரன்.
என்னக்கா ரோனி இன்னும் சாப்பிட வரவில்லை என்ற சுசீலாவிடம் எக்ஸாம்ல மார்க் குறைஞ்சு போன வருத்தம் வேற, உதய் வேற பேசலைனு கவலையா இருந்தாள். இரு சுசி என்ற மலர்கொடி ஊர்மி என்றிட ஊர்மிளா வந்தாள்.
சொல்லுங்க பெரியம்மா என்ற ஊர்மிளாவிடம் உன் அண்ணி இன்னும் சாப்பிட வராமல் இருக்கிறாள் அவளை அழைச்சுட்டு வா ஊர்மி என்றிட எந்த அண்ணி பெரியம்மா என்றாள் ஊர்மிளா. ரோனி தான்டி போ போயி கூட்டிட்டு வா என்றார் சுசீலா. சரிம்மா என்ற ஊர்மிளா கிளம்பிட அந்த நேரம் உதய் வந்து விட்டான்.
நீ இரு ஊர்மி என்ற மலர்கொடி உதய் ரோனி இன்னும் சாப்பிட வரவில்லை என்றிட நான் பார்க்கிறேன் அம்மா என்றவன் தன்னறைக்கு சென்றான். அவள் அறையில் இல்லாமல் இருக்கவும் அவன் சென்று பால்கணியில் பார்த்திட ஊஞ்சலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டவன் அவளது அருகில் சென்றான். அவளை கைகளில் ஏந்தி வந்து மெத்தையில் படுக்க வைத்தான். அவளது வாடிய முகமே சொன்னது அவள் அழுதிருப்பாள் என்று.
அடுத்து வந்த மூன்று நாட்களிலுமே அவன் அவளிடம் சரியாக பேசவில்லை. அவன் எங்கே பேசுவது அவள் தான் அவனது கண்களிலே படுவதில்லையே. அவன் அவளை ஏதாவது திட்டி விடுவானோ என்ற பயத்திலே அவள் ஒளிந்து கொண்டே சுற்றினாள்.
ஊர்மிளா ஐஐடி என்ட்ரன்ஸ் எக்ஸாமிலும் தேர்வாகி இருந்தாள். அவளுக்கு கவுன்சிலிங் அது , இது என்று அடுத்தடுத்து அவள் பிஸியாக சுற்றினாள்.
வெரோனிகா அவள் ஆசைப் பட்டபடி தமிழ் லிட்ரேச்சர் படிப்பதற்காக உதய் கல்லூரிகளில் அப்ளிகேசன் போட்டு வைத்திருந்தான்.
அன்று காலை எழுந்தவளுக்கு ஏனோ மனம் எல்லாம் பாரமாக இருந்தது. இந்த நான்கு நாட.களாக அவளது கணவன் அவளிடம் பேசவில்லை. இன்று அவர்களது முதல் திருமணநாள். இன்று அவன் அறையில் இல்லை. இவ்வளஙு சீக்கிரம் எங்கே போனார்.
முன்பு ஒரு முறை சொன்னாரே எனக்கு நீ நல்லா படித்தால் தான் உன்னை பிடிக்கும்னு ஒரு வேளை நான் மார்க் கம்மி ஆனதால என்னை பிடிக்காமல் போயிருச்சோ என்று வருந்தியவள் குளியலறைக்குள் சென்றாள்.
குளித்து முடித்து வந்தவளுக்கு ஏனோ அறையை ஙிட்டு வெளியே செல்ல மனமே இல்லை. அவன் வரும் வரை இங்கேயே இருக்கலாம் என்று அமர்ந்திருந்தாள்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே எழுந்து சென்றாள் வெரோனிகா. என்ன ரோனி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க மணியை பாரு என்ற அர்ச்சனாவிடம் எங்கே அண்ணி என்றாள் வெரோனிகா.
எங்கேயா கோவிலுக்குத் தான் என்றவள் என்னடி டிரஸ் இது என்ற அர்ச்சனா அவளுக்கு ஒரு புதுப் புடவையை கட்டி விட்டு நகை எல்லாம் போட்டு அலங்காரம் செய்தாள். நான் என்ன கல்யாணப் பொண்ணா அண்ணி இவ்வளவு மேக்கப் என்றவளிடம் என்ன ரோனி நீ வா என்று அவளை அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.
எங்கே வீட்டில் யாருமே இல்லை என்ற வெரோனிகாவிடம் எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க நீ எழுந்ததும் உன்னை அழைச்சுட்டு வரச் சொன்னாங்க என்ற அர்ச்சனா அவளை தன் பைக்கில் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள்.
கோவிலில் அவளது மொத்தக் குடும்பமும் இருப்பதைக் கண்டவள் அம்மா, அப்பா என்று அவர்களது அருகில் ஓடிச் சென்றாள். அவர்களிடம் எப்போ வந்திங்க என்றிட நைட்டே வந்துட்டோம் ரோனி என்ற பூங்கொடி சரி, சரி வா சாமி கும்பிடலாம் என்றிட என்ன இது. கல்யாணநாளைக்கு சாமி கும்பிட மொத்த குடும்பமும் வந்திருக்கு வர வேண்டிய சந்துரு மாமாவை இன்னும் காணோம் என்று நினைத்தவள் கண்ணை மூடி கடவுள் சன்னிதானத்தில் சாமி கும்பிட அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் அவளது கணவன்.
கண்ணைத் திறந்தவளது தலையில் அச்சதை தூவிட அவள் தன் கணவனை பார்த்தாள். என்ன அப்படி பார்க்கிற நீ தானே திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா மாமானு கேட்ட அதான் நம்ம கல்யாணம் எல்லோருக்கும் தெரியட்டும் என்றவனை கண்கள் கலங்கிட அவள் பார்த்திட ஹாப்பி அனிவர்சரி வெரோனிகா என்றவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
ரோனி உன்னோட பழைய தாலியை கோவில் உண்டியலில் போடும்மா என்றதும் அவளும் அப்படியே செய்தாள்.
நல்லவேளை சம்மந்தி அந்த ஜோசியர் சொன்னதில் இருந்து மனசே பட படனு இருந்துச்சு. இப்போ தான் நிம்மதியா இருக்கு இவங்களுக்கு திரும்பவும் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம் என்ற கல்யாணிதேவியிடம் ஆமாங்க அம்மா என்றார் பூங்கொடி.
என்ன மாமா நடக்குது இங்கே என்றவளிடம் நமக்கு கல்யாணம் என்றான் உதய். அவனை கோபமாக பார்த்தவளிடம் ஸாரி ரோனி நான் உன்கிட்ட பேசாமல் இருந்தது தப்பு தான் என்று கூற வந்தவனிடம் இல்லை மாமா என் மேல தானே தப்பு. நான் தானே ஒழுங்கா படிக்காமல் என்றவளின் வாயில் விரலை வைத்தவன் என்னோட தப்பு தான் ரோனி.
உனக்கு ஏற்கனவே தேவ் பற்றி சொல்லி இருக்கனும். உன்னோட மனநிலை அப்போ எப்படி இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது எக்ஸாம் நேரத்தில் என் மேல கோவிச்சுக்கிட்டு தான் நீ எக்ஸாம்ல சரியா பண்ணவில்லை. சரி அதை விடு இன்னைக்கு நமக்கு திரும்பவும் கல்யாணம் நடந்திருக்கு இந்த பீலிங்ஸ் எப்படி இருக்குனு சொல்லு என்றான் உதய்.
…..தொடரும்….